Re: ஐ என்பதன் பொருள்கள்

632 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 8, 2009, 7:57:07 AM6/8/09
to தமிழ் மன்றம், மின்தமிழ், Santhavasantham
On Jun 7, 9:44 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
> நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
> எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
> பசலை உணீஇயர் வேண்டும்
> திதலை அல்குல் என் மாமைக் கவினே
>
> ஐ எனில் அம்மா?
>

ஐ என்றால் பாடல் தலைவியின் ஐயன் = காதலன் (தலைவன்).

பயன்படாமல் வீணாகும் ஆவின் பாலைப் போல்
என் பெண்மை எனக்கோ, அன்றி என் காதலனுக்கோ இன்றி
என் பொலிவு குறைகிறது என்கிறாள் தலைவி.

தமிழ் சினிமாவில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது:
சேட்டுப் பெண் போல :)
http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

விஜயநகர மன்னர்கள் தாபித்த பம்பை (கன்னடத்து ஹம்பி நகரம்)
காணலாம்.
பம்பை = மெதுவாய்ப் பம்பிச் செல்லும் ஆறு.
(தமிழ்நாட்டிலும் பம்பை என்னும் வேறோர் ஆறு உள்ளது)
விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டுக் கலைவடிவுகளை
(உ-ம்: ராஜகோபுரம். திருமங்கை ஆழ்வாருக்குக் கோவில், ...)
அமைத்தமை பம்பைநாதர் விரூபாக்‌ஷர் கோயிலில் காண்க.

இந்த ”ஐ” - பெரியார்வாதிகள் எழுதும் “அய்” உடன் சமானம் அன்று.
ஐ > அய் ஆகாது. இரண்டும் வேறான சொற்கள், ஒலிப்புகள்.
ஐ > அய், ஔ > ஔ என்றெழுதுதல் தமிழின் தொல்காப்பியத்தின்
இரண்டு உயிர் எழுத்தையே நீக்குதல். அது கூடாது.

மேலும் ஒன்று, சீர்மையாளர் சொல்லும் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம்
வேறுபட்டது. அது காலம் காலமாக மாறும் தமிழ் *வடிவத்தை*
மாத்திரம் அறிவியல் அமைப்பாக்குவதாகும். எழுத்தையே
நீக்குவதல்ல. உ-ம்: நாம் பயன்படுத்தும் எம்ஜிஆர் எழுத்து.
சாதாரணர்களுக்காக ஏன் எளிய மாற்றம்
எழுத்தில் வேண்டும் என்கிறார் அறிஞர்
வா. செ. குழந்தைசாமி.
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274
எம்ஜிஆர் எழுத்தாலோ, உயிர்மெய் (உ/ஊ) உடைப்பாலோ
தமிழ் எழுத்தின் ஒலிகள் பிசகுவதில்லை.

நா. கணேசன்

விரூபாக்‌ஷர் சிவன் கோயில் பழனி மலைகளிலும் உண்டு.
அவ்விடத்தில் விளையும் வாழைப் பழம் விருப்பாச்சிப்
பழம் - இப்போது அழிந்தே விட்டது என்கின்றனர்.
விரூபாக்‌ஷன் (முக்கண்ணன்) = விருப்பாச்சன்.
ராஜபக்‌ஷன் = இராயபக்கன்/இராயபட்சன்/இராயபச்சன் (தமிழில்).


> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

SUBBAIER RAMASAMI

unread,
Jun 8, 2009, 9:13:33 AM6/8/09
to santhav...@googlegroups.com
ஐ என்பது என்னென்ன பொருள்களில் வருமென்று நான் ஐயப்பன் மேல் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் - 40வருடங்களுக்கு முன்.
 
முழுக் கவிதை நினைவில்லை
 
ஐயென்றால் வியப்பாகும் ஐயப்பா நீவியப்பா அறிவிப்பாயா?
ஐயென்றால் தலைவனென்பார் ஐயப்பா நீதலைவன் ஐயமில்லை
 என்பதாகத் தொடங்கும்.
 
இலந்தை

nahupoliyan

unread,
Jun 9, 2009, 11:16:45 AM6/9/09
to சந்தவசந்தம்
ஐ -க்கு இத்தனை அர்த்தங்களா, ஐ!

நகுபோலியன்

On Jun 8, 6:13 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> ஐ என்பது என்னென்ன பொருள்களில் வருமென்று நான் ஐயப்பன் மேல் ஒரு கவிதை
> எழுதியிருக்கிறேன் - 40வருடங்களுக்கு முன்.
>
> முழுக் கவிதை நினைவில்லை
>
> ஐயென்றால் வியப்பாகும் ஐயப்பா நீவியப்பா அறிவிப்பாயா?
> ஐயென்றால் தலைவனென்பார் ஐயப்பா நீதலைவன் ஐயமில்லை
>  என்பதாகத் தொடங்கும்.
>
> இலந்தை
>

> > > ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”- Hide quoted text -
>
> - Show quoted text -

செல்வா

unread,
Jun 9, 2009, 4:53:58 PM6/9/09
to சந்தவசந்தம்
ஐ என்பதன் பொருள்கள் (வெறும் அகராதிபொருள்
என்று நினைக்கவேண்டாம். இவற்றை விரித்துக் கூற
இயலும்- தமிழில் நெடுக ஊடுருவி நிற்கும்
ஒரு சொல்)- கீழுள்ள பொருள்களைத்
தருவது கழகத் தமிழ் அகராதி. நன்றி.

1 அரசன்
2 அழகு
3 இருமல்
3 ஒரு சாரியை
4 ஒரு தொழிற் பெயர் விகுதி
5 ஒரு பண்புப்பெயர் விகுதி
6 கடவுள்
7 கடுகு
8 கருவிப்பொருளில் வரும் ஒரு பெயர் விகுதி
9 குரு
10 கோழை
11 தலைவன்
12 சர்க்கரை
13 சவ்வீரம்
14 சிவன்
15 தண்ணீர் முட்டான் கிழங்கு
16 சிலேட்டுமம்
17 செயப்படுபொருளிலே வரும் ஒரு பெயர் விகுதி
18 ஒரு பெயர் விகுதி
19 தும்பை
20 துர்கை
21 நுண்மை
22 பருந்து
23 தந்தை
24 பெருநோய்
25 யானையைப் பாகன் அதட்டும் ஓசை
26 வினைமுதற் பெயரிலே வரும் ஒரு பெயர் விகுதி
27 வெண்ணெய்
28 வியப்பு
29 ஐந்து
30 ஐயம்
31 ஓர் இடைச்சொல்
32 கணவன்
33 மருந்து

அனைவருக்கும் தெரிந்தை இரண்டாம் வேற்றுமை ஐ இதில் விடுபட்டுள்ளது.
இதனை (ஐ!) தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில் இட்டிருந்தேன்:
http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/b2a210c23cef0f2f#

ஐயன் என்றால் தந்தை, தலைவன், அரசன், உயர்தவன் என்பது போல ஐயை என்றால்
தலைவி. பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயை என்று ஒரு சிறு காப்பியம்
இயற்றினார்.

அன்புடன்
செல்வா

> > - Show quoted text -- Hide quoted text -

nahupoliyan

unread,
Jun 11, 2009, 2:47:09 PM6/11/09
to சந்தவசந்தம்
ஐயோவுக்கும் ஐதான் மூலமோ?

> இதனை (ஐ!) தமிழ் மன்றம் கூகுள் குழுமத்தில் இட்டிருந்தேன்:http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/b2a21...

Pas Pasupathy

unread,
Jun 11, 2009, 7:25:46 PM6/11/09
to santhav...@googlegroups.com


2009/6/11 nahupoliyan <n.balasu...@gmail.com>

ஐயோவுக்கும் ஐதான் மூலமோ?
 
:-))
 
ஐயோவிற்கு 'ஐ' மூலம் என்பது நல்ல கருத்தாய்த் தோன்றுகிறது.
'குய்யோ' ( முறையோ) வின் மூலம் என்ன?
 
பசுபதி

செல்வா

unread,
Jun 11, 2009, 8:58:01 PM6/11/09
to சந்தவசந்தம்
ஐ என்றால் பெருநோய் என்றும் பொருள். ஓ என்றால் ஒழிவு, இழிவு, இரக்கம்
முதலானவற்றைக் காட்டும் ஓர் இடைநிலை. எனவே. ஐயோ எனில் பேரிழப்பின் ஓலம்
எனக் கொள்ளலாம்.
பெரிய புராணத்தில் இயற்பகையார் பற்றிய கதையில் ஓலம் என்று மீண்டும்
மீண்டும் வரும்
பாடல் ஒன்று உண்டு. ஆகவே ஓ, ஓலம் என்பது இழப்பைக் குறிக்கும். ஐ+ஓ ஐயோ
ஆகியது.

குய்யோ முறையோ என்பதில் முறையோ என்பது விளங்குகின்றது குய்யோ என்றால்
ஓங்கி அழைத்தலைக் குறிக்குமா? குயிறல், குயிலல் என்றால் அழைத்தல் என்று
பொருள் உண்டு. வாங்கோ, பாருங்கோ, அடிக்கிறாங்கோ என்று கூறுவதுபோல ஆ ஊ
என்று கூச்சல்
இட்டு அழைத்து முறையிடுதலைக் குறிக்கும் என நினைக்கிறேன்.
சென்னையில் "நாந்தான் கூவறேனே
ஒரு குரல் குடுக்ககூடாதா" என்று கூறக்கேட்டு இருக்கின்றேன். கிராமத்திலே,
நான் "குயில்றேன், வந்தாத்தானே" என்றும் கேட்டு இருக்கேன். (கி.வா.சா'
ஊராகிய மோகனூர் அருகே). [தொடர்பில்லாவிட்டாலும் இன்னொன்றையும் கூற
வேண்டும், இதே ஊர்பகுதியில் ஒரு சில குழுவினர் தங்கள் தந்தையை ஆஞா என்று
அழைக்கின்றனர்]. குயிலு என்றால் கூப்பிடு, அழை. குய்யோ முறையோ என்பது
கூக்குரலிட்டு முறையிடுவதைக் குறிக்கும். குய்யோ என்பது அழைப்பு
(பாருங்கோ, வாங்கோ என்பது போல்) என்று நினைக்கிறேன்.

அன்புடன்
செல்வா

On Jun 11, 7:25 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 2009/6/11 nahupoliyan <n.balasubraman...@gmail.com>

RAJAGOPALAN APPAN

unread,
Jun 15, 2009, 1:13:34 AM6/15/09
to santhav...@googlegroups.com

'குய்' என்ற சொல்லுக்குத் தாளிப்பு என்று பொருள் உண்டு. கடுகு தாளிக்கும் போது அது வெடித்துச் சிதறும். 'குய்யோ' என்பது வுணர்வுபூர்வமாக வெடிப்பதையும், குதிப்பதையும் சுட்டும். 'இது முறையா'? என்று கேட்கிற போது, குதிப்பதும் வெடிப்பதும் இயல்பு தானே? 'குய்யோ' தனிச் சொல்லாகப் பயின்றுவருவது காணப்படவில்லை.
அ.ரா.


visit arajagopalan.blogspot.com.

2009/6/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

செல்வா

unread,
Jun 15, 2009, 9:30:42 AM6/15/09
to சந்தவசந்தம்
அன்புள்ள அ.ரா,

உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

அன்புடன்
செல்வா

On Jun 15, 1:13 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> 'குய்' என்ற சொல்லுக்குத் தாளிப்பு என்று பொருள் உண்டு. கடுகு தாளிக்கும் போது
> அது வெடித்துச் சிதறும். 'குய்யோ' என்பது வுணர்வுபூர்வமாக வெடிப்பதையும்,
> குதிப்பதையும் சுட்டும். 'இது முறையா'? என்று கேட்கிற போது, குதிப்பதும்
> வெடிப்பதும் இயல்பு தானே? 'குய்யோ' தனிச் சொல்லாகப் பயின்றுவருவது
> காணப்படவில்லை.
> அ.ரா.
>
> visit arajagopalan.blogspot.com.
>

> 2009/6/12 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
>
>
>
>
> > 2009/6/11 nahupoliyan <n.balasubraman...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -

Siva Siva

unread,
Jun 15, 2009, 9:46:25 AM6/15/09
to santhav...@googlegroups.com
கூகிள் காட்டிய வழியில் கண்ட ஒன்று.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20710&padhi=071&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் குறும்பலாவே.

குறிப்புரையில்:
'குய்விளியாக்' 'கூய் விளியாக்' என்று பாடாந்தரம் உண்டு. (சுவாமிநாத பண்டிதர் தலமுறைப் பதிப்பு. பக்கம்.911 பார்க்க). வேடர்கள் 'குய்' என விளித்தல் உண்டு. கை மறிக்கும் :- கைகவிக்கும் 'தக்கார் போற் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே' (சிந்தா.1227).

கைம்மறி-த்தல் - , v. tr. < id. +. 1. To check or resist with the fore-arm; கையால் தடுத்தல். 2. To wave the open hand as a sign of disapproval; கைகவித்து விலக்குதல். கைம்மறித்த காந்த ளந்தோ தகாதெனவே (சீவக. 1227).



2009/6/15 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

'குய்' என்ற சொல்லுக்குத் தாளிப்பு என்று பொருள் உண்டு. கடுகு தாளிக்கும் போது அது வெடித்துச் சிதறும். 'குய்யோ' என்பது வுணர்வுபூர்வமாக வெடிப்பதையும், குதிப்பதையும் சுட்டும். 'இது முறையா'? என்று கேட்கிற போது, குதிப்பதும் வெடிப்பதும் இயல்பு தானே? 'குய்யோ' தனிச் சொல்லாகப் பயின்றுவருவது காணப்படவில்லை.
அ.ரா.


visit arajagopalan.blogspot.com.

2009/6/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



2009/6/11 nahupoliyan <n.balasu...@gmail.com>

ஐயோவுக்கும் ஐதான் மூலமோ?
 
:-))
 
ஐயோவிற்கு 'ஐ' மூலம் என்பது நல்ல கருத்தாய்த் தோன்றுகிறது.
'குய்யோ' ( முறையோ) வின் மூலம் என்ன?
 
பசுபதி
 

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Jun 15, 2009, 11:25:35 AM6/15/09
to santhav...@googlegroups.com
தமிழில் 'சொற்பிறப்பு' அகராதிகளைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.
 
ஞானப்பிரகாசரின் அகராதி ( முற்றுப் பெறவில்லை என்ற நினைவு?) ,
அருளி ( தஞ்சைப் பல்கலைக் கழகம்?) , தேவநேயப் பாவாணரின் முயற்சிகள்...
இன்னும் ஆய்வுகள் நடந்து, நிறைய அகராதிகள் வெளிவந்து, இணையத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் பரவலாகப் பயன்படுத்தினால், நமக்கும் புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் உள்ளவை போல் பல அகராதிகள் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
 
பல்கலைக் கழகங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளில் இதுவும் ஒன்றே.
 
பசுபதி
15-6-09
 

 
2009/6/15 Siva Siva <naya...@gmail.com>

செல்வா

unread,
Jun 15, 2009, 5:09:14 PM6/15/09
to சந்தவசந்தம்
மிக அருமையான குறிப்பு வி.சு அவர்களே!

"குய்விளியா" என்னும் சொல்லாட்சியும்


"'குய்விளியாக்' 'கூய் விளியாக்' என்று பாடாந்தரம் உண்டு. (சுவாமிநாத
பண்டிதர்
தலமுறைப் பதிப்பு. பக்கம்.911 பார்க்க)"

என்னும் குறிப்பும் மிக அருமை.
கூ, கூவு, குயிலு என்பதும் இதனுடன்
தொடர்புடையதாக இருக்ககூடும் என நான் எண்ணியது
சரியானதாக இருக்கும் என்பது வலுப்படுகின்றது.

எவ்வளவோ சொல்லாட்சிகள் அழிந்து வருவது வருத்தமளிக்கின்றது.
இது இயல்புதான், இயற்கைதான், எல்லா மொழிகளிலும்
நிகழ்வதுதான் என்று அறிந்திருந்தாலும், இழப்புணர்வு உள்ளது.

அண்மையில் உண்மடி என்று ஒரு சொல்லைக் கண்டேன்.
நாம் ஆங்கிலத்தில் couch potato என்கிறோமே. அதேதான்.
மடிமை என்றால் சோபல். உண்டு உண்டு சோம்பி இருப்பவனுக்கு
உண்மடி என்று பெயர். இது பற்றி ஒரு கட்டுரையைத் தமிழ்
விக்கிப்பீடியாவில் எழுத எண்ணியுள்ளேன் (சுருக்கமாகவேனும்).
உண்மடியால் தொந்தி பெருகும்
பண்பாடாய் வளர்ந்து நம் வாழ்க்கைக்கு
கணினி தொலைக்காட்சி தானுந்துகள்
பெரும் துணை. இன்று
அமெரிக்கக் கூட்டுநாடுகளில் 32% மக்கள்
உடற் பருமன் கூடியவர்களாம்,
இந்தியாவில் 5% மக்களும்,
தமிழ்நாட்டில் 22% மக்களும் உடற்பருமன் கூடியவர்களாம்.
தமிழ்நாடில் குண்டர்கள், உண்மடிகள் கூடுதல் போலும் :)

(உண்மடி என்றால் உண்ணும் போது அணியும் ஆடை என்றும்
வேறு ஒரு பொருள் உண்டு. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்
bib போன்றவற்றுக்கும், ஆச்சாரமாய் அணியும் ஆடைக்கும்
பொருந்தும் என நினைக்கிறேன்).


அன்புடன்
செல்வா

On Jun 15, 9:46 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> கூகிள் காட்டிய வழியில் கண்ட ஒன்று.
>

> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idFie...


>
> மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு
> காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
> நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக்
> கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் குறும்பலாவே.
>
> குறிப்புரையில்:
> 'குய்விளியாக்' 'கூய் விளியாக்' என்று பாடாந்தரம் உண்டு. (சுவாமிநாத பண்டிதர்
> தலமுறைப் பதிப்பு. பக்கம்.911 பார்க்க). வேடர்கள் 'குய்' என விளித்தல் உண்டு.
> கை மறிக்கும் :- கைகவிக்கும் 'தக்கார் போற் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது
> எனவே' (சிந்தா.1227).
>
> கைம்மறி-த்தல் - , v. tr. < id. +. 1. To check or resist with the
> fore-arm; கையால்
> தடுத்தல். 2. To wave the open hand as a sign of disapproval; கைகவித்து
> விலக்குதல். கைம்மறித்த காந்த ளந்தோ தகாதெனவே (சீவக. 1227).
>

> 2009/6/15 RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>


>
>
>
>
>
> > 'குய்' என்ற சொல்லுக்குத் தாளிப்பு என்று பொருள் உண்டு. கடுகு தாளிக்கும் போது
> > அது வெடித்துச் சிதறும். 'குய்யோ' என்பது வுணர்வுபூர்வமாக வெடிப்பதையும்,
> > குதிப்பதையும் சுட்டும். 'இது முறையா'? என்று கேட்கிற போது, குதிப்பதும்
> > வெடிப்பதும் இயல்பு தானே? 'குய்யோ' தனிச் சொல்லாகப் பயின்றுவருவது
> > காணப்படவில்லை.
> > அ.ரா.
>
> > visit arajagopalan.blogspot.com.
>

> > 2009/6/12 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >> 2009/6/11 nahupoliyan <n.balasubraman...@gmail.com>


>
> >>> ஐயோவுக்கும் ஐதான் மூலமோ?
>
> >> :-))
>
> >> ஐயோவிற்கு 'ஐ' மூலம் என்பது நல்ல கருத்தாய்த் தோன்றுகிறது.
> >> 'குய்யோ' ( முறையோ) வின் மூலம் என்ன?
>
> >> பசுபதி
>

> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

செல்வா

unread,
Jun 15, 2009, 6:42:13 PM6/15/09
to சந்தவசந்தம்
> (உண்மடி என்றால் உண்ணும் போது அணியும் ஆடை என்றும்
> வேறு ஒரு பொருள் உண்டு. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்
> bib போன்றவற்றுக்கும், ஆச்சாரமாய் அணியும் ஆடைக்கும்
> பொருந்தும் என நினைக்கிறேன்).

மேற்கு நாடுகளில் (இந்தியாவிலும்தான்)
உணவுண்ணும் பொழுது ஆடையின் மேல்
உணவுத் துகள்கள் விழுந்தால் ஆடை அழுக்காகமல்
இருக்கவும், வாயையும் கையையும் துடைத்துக்கொள்ளவும்
பயன்படுத்தப்படும் நாப்கின் (நேப்கின், napkin)
அல்லது செர்வியெட் (serviette) என்பதற்கும்
உண்மடி என்பதைப் பயன்படுத்தலாம்.

அன்புடன்
செல்வா

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Hari Krishnan

unread,
Jun 16, 2009, 8:43:57 AM6/16/09
to santhav...@googlegroups.com


2009/6/16 செல்வா <c.r.sel...@gmail.com>



அண்மையில் உண்மடி என்று ஒரு சொல்லைக் கண்டேன்.
நாம் ஆங்கிலத்தில் couch potato என்கிறோமே. அதேதான்.
மடிமை என்றால் சோபல். உண்டு உண்டு சோம்பி இருப்பவனுக்கு
உண்மடி என்று பெயர். 

உங்களுடைய பல இடுகைகள் வியப்பையே அளிக்கின்றன.  மடி என்ற சொல்லுக்குச் சோம்பல் என்றும் பொருள் உண்டு; சுத்தமாக இருப்பது (மடியாக இருப்பது) என்றும் பொருள் உண்டு; மடித்து வைத்தல் என்றும் பொருள் உண்டு.  இவற்றில் கடைசிப் பொருளில்தான் உண்மடி என்பது வழங்கி வந்திருக்கிறது.  வின்ஸ்லோ அகராதி இவ்வாறு சொல்கிறது:

பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி

பின்மடி என்னும்போது பால்சுரக்கும் மடியையும், உண்மடி என்னும்போது, ஆடையின் உள்ளுக்குள் மடித்துவைத்துக் கொள்ளக்கூடிய பொருளையும் குறிக்கிறது.  உள்ளுக்குள் மடித்து வைத்திருக்கும் பொருள் எதுவோ அது உண்மடி.  ஆகுபெயர்.   உள்மடி என்பதே உண்மடி என்று புணர்கிறது.  தாங்கள் சொல்லும் சோம்பேறி என்ற பொருளில் இலக்கிய ஆட்சி ஏதும் இருப்பின் சுட்டிக் காட்டினால் நன்றி உள்ளவனாவேன்.  

களிமடி மானி கள்வன் என்ற நன்னூல் சூத்திரத்தை அறிவேன். அது இங்கே பொருந்தாது.
--
அன்புடன்,
ஹரிகி.

Rajagopalan

unread,
Jun 17, 2009, 2:12:51 AM6/17/09
to சந்தவசந்தம்
'குய்'- தாளிப்பு என்கிற பொருளில் வரும் எணிச்சேரி முடமோசியார் பாடிய
புறநானூற்றுப் பாடல்.

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிர்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
வீகை யரிய விழையணி மகளிரொடு
சாயின் றென்ப வாஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
யரைசா லோங்குபுக ழொரீஇய
முரசுகெழு செல்வர் நகர்போ லாதே

அ.ரா.

visit arajagopalan.blogspot.com

> > >> > > > > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »

Pas Pasupathy

unread,
Jun 17, 2009, 10:34:21 AM6/17/09
to santhav...@googlegroups.com


2009/6/16 Hari Krishnan <hari.har...@gmail.com>
அன்புள்ள ஹரி,
 
உண்மடி - உண்ணும்போது அணியும் ஆடை; உண்ணுஞ் சோம்பேறி
...என்ற பொருள்கள் கழக அகராதியில் இருக்கிறது.
 
எந்த இலக்கிய ஆட்சியை வைத்து, இப்படி எழுதி உள்ளார்கள் என்பது
தெரியவில்லை.
 
 
 

களிமடி மானி கள்வன் என்ற நன்னூல் சூத்திரத்தை அறிவேன். அது இங்கே பொருந்தாது.
--
அன்புடன்,
ஹரிகி.

NATARAJAN SRINIVASAN

unread,
Jun 20, 2009, 1:17:37 PM6/20/09
to santhav...@googlegroups.com

குய் என்பதற்கு தாளித்தகறி, தாளிதம் என்று அகராதி கூறுகிறது. இந்த சொல் இதே பொருளில் இன்றும் வழக்கில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதற்கு ஆதாரமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கொய்மோர் காய்ச்சுதல் என்ற வழக்கத்தைக் கருதலாம். சிறுவர்கள் எதைக் கண்டோ மிரண்டோ அல்லது பயந்தோ போய் சற்று பேதலித்து இருப்பார்களானால் ஒரு சிறு துண்டு இரும்பை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி சொம்பில் வைத்திருக்கும் மோரில் போடுவார்கள். அது சொய்ங்ங் என்ற பெரும் சத்தத்தை திடீரென கிளப்பி வைக்கும். பெரிய அளவிலான தாளிக்கும் ஓசையைப் போலொலிக்கும் அச்சத்தம் கேட்ட சிறாரின் பயம் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

 

நடராஜன்.



2009/6/17 Rajagopalan <appan.ra...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jun 20, 2009, 4:07:55 PM6/20/09
to santhav...@googlegroups.com

அதைக் கொழு மோர் என்று சொல்வ்த்Hஊ  எங்கள் பக்கத்து வழக்கம்

 
இலந்தை

nahupoliyan

unread,
Jun 21, 2009, 5:14:44 AM6/21/09
to சந்தவசந்தம்

அது 'கொழி'யாயிருக்குமோ? கொழித்தல் ...

*******************************************
On Jun 21, 1:07 am, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> அதைக் கொழு மோர் என்று சொல்வ்த்Hஊ  எங்கள் பக்கத்து வழக்கம்...
>
> read more »
>
> இலந்தை


> On 6/20/09, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
>
>
>
> > குய் என்பதற்கு தாளித்தகறி, தாளிதம் என்று அகராதி கூறுகிறது. இந்த சொல் இதே
> > பொருளில் இன்றும் வழக்கில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதற்கு ஆதாரமாக தஞ்சை
> > மாவட்டத்தில் இருக்கும் கொய்மோர் காய்ச்சுதல் என்ற வழக்கத்தைக் கருதலாம்.
> > சிறுவர்கள் எதைக் கண்டோ மிரண்டோ அல்லது பயந்தோ போய் சற்று பேதலித்து
> > இருப்பார்களானால் ஒரு சிறு துண்டு இரும்பை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி
> > சொம்பில் வைத்திருக்கும் மோரில் போடுவார்கள். அது சொய்ங்ங் என்ற பெரும்
> > சத்தத்தை திடீரென கிளப்பி வைக்கும். பெரிய அளவிலான தாளிக்கும் ஓசையைப்
> > போலொலிக்கும் அச்சத்தம் கேட்ட சிறாரின் பயம் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
>
> > நடராஜன்.
>

> > 2009/6/17 Rajagopalan <appan.rajagopa...@gmail.com>

> >> > > >> > > > > > திதலை அல்குல் என் மாமைக்- Hide quoted text -

Pas Pasupathy

unread,
Jun 21, 2009, 7:48:37 AM6/21/09
to santhav...@googlegroups.com
'கொழு'மோர் என்றுதான் க்ரியா அகராதியில் உள்ளது.


 
2009/6/21 nahupoliyan <n.balasu...@gmail.com>

செல்வா

unread,
Jun 22, 2009, 2:07:25 PM6/22/09
to சந்தவசந்தம்
உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

உண்மடி என்பதற்கு இலக்கிய சான்றுகள் ஏதும் இருப்பதை நான் அறியேன்.
எல்லாச் சொற்களும் இலக்கியத்தில் இடம் பெறுவதில்லை. இடையர்கள்
இலைகளையும், பிற பண்டங்களையும் வைத்துக்கொள்ள, துணியில் வளைத்துக்
கட்டியிருப்பார்கள் ஒரு "மடி", அதனை கொடுமடி என்பார்கள். அது போல
உணவை வைத்துக்கொள்ளும் மடியையிம் உண்மடி எனலாம். ஆனால்
உண்மடி என்பது உண்டு உண்டு மடிமையுடன் சோம்பி இருக்கும் ஒருவனையும்
குறிக்கும் சொல்.

நீங்கள் மடி என்றால் சுத்தமாக இருப்பது என்று பொருள் உள்ளதாகக்
கூறினீர்கள்
//சுத்தமாக இருப்பது (மடியாக இருப்பது) என்றும் பொருள்
உண்டு//. மடியாய் இருப்பது, மடிசார், மடி என்பது பொதுவாக **பணிவாய்**
இருப்பது
என்று பொருள் படும் என நினைக்கிறேன்.. இறைவனுக்கு **பணி**விடை செய்யும்
பொழுது
இருக்கும் உள்-வெளி நிலைகளைக் கூறிக்க மடி என்னும் சொல் பயன்படுகின்றது.
மடி என்றால் அடங்கல், அடக்கம் என்பன கருப்பொருள்களுள் சில. மடியாய்
இருத்தல் என்றால்
உள்ளும் புறமும் அடக்க உணர்வுடன் ஒழுக்கத்துடன் பணிவிடை செய்யும்
நிலையில்
இருத்தல் என்று பொருள். மடி என்னும் பொருள்களுள் இறத்தல் என்பதும் இரு
வேறு பொருளில்
பொருந்துவது. உடல் மடிவது (தலை சாய்தல்), மூச்சு அடங்குவது. எனவே மடி,
மடியாய்
இருப்பது பணிவிடைக்கான மனப்பக்குவத்தில், அடக்க ஒடுக்கமாய், நான் என்னும்
உணர்வு
தலைதூக்காமல், "கேள்வி"யே உள்பக்குவமாய் இருந்து பணியாற்றுவது. தூய்மை,
தீட்டுப்
படாமல் இருப்பது என்பதில் எது தீட்டு, எது தூய்மைக்கேடு என்று அறிவதில்
உள்ளது.

உண்மடி பற்றி இலக்கிய சான்றுகள் எனக்குத் தெரியாததால், இங்கே இப்போதைக்கு
ஒரு
அரைகுறை பாட்டு. இங்குள்ள நல்லறிஞர்கள் இன்னும் சிறப்பான பல பாடல்கள்
இயற்றிக் கலக்கலாம்.

அறிவாய்ச் செறிவாய்ப் புதிதாய்ப் பலவாய்
பொறிசார்ந் துலவும்நாம் இங்கே- உறிஞ்சும்
உழைப்பை விலக்கிநாளும் ஆற்றும் மடிமை
இழைக்கும் நிலையுண் மடி

அன்புடன்
செல்வா


On Jun 16, 8:43 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/6/16 செல்வா <c.r.selvaku...@gmail.com>


>
>
>
> > அண்மையில் உண்மடி என்று ஒரு சொல்லைக் கண்டேன்.
> > நாம் ஆங்கிலத்தில் couch potato என்கிறோமே. அதேதான்.
> > மடிமை என்றால் சோபல். உண்டு உண்டு சோம்பி இருப்பவனுக்கு
> > உண்மடி என்று பெயர்.
>
> உங்களுடைய பல இடுகைகள் வியப்பையே அளிக்கின்றன.  மடி என்ற சொல்லுக்குச் சோம்பல்
> என்றும் பொருள் உண்டு; சுத்தமாக இருப்பது (மடியாக இருப்பது) என்றும் பொருள்
> உண்டு; மடித்து வைத்தல் என்றும் பொருள் உண்டு.  இவற்றில் கடைசிப் பொருளில்தான்
> உண்மடி என்பது வழங்கி வந்திருக்கிறது.  வின்ஸ்லோ அகராதி இவ்வாறு சொல்கிறது:
>

> பின்மடி, *s.* The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied

செல்வா

unread,
Jun 22, 2009, 2:19:03 PM6/22/09
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அ.ரா அவர்களே! "குய்யுடை அடிசில்" நல்ல எடுத்துக்காட்டு

குய் என்பது தாளிப்பது என்பது இன்னும் சில இடங்களில் இருந்தும்'அறியலாம்.
மேலும் சில எடுத்துக்காட்டுகளை
"சங்க காலத் தமிழர் உணவு" என்னும் கட்டுரையில் வெ.பெருமாள்சாமி
குறிப்பிட்டுள்ளார்
(பார்க்க:http://www.keetru.com/literature/essays/perumalsamy_12.php)

"குய்யுடை"
---------
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்ச+டு
மணிக்கல நிறைத்த மணநாறு தேறல்”

என்று நெய்யை மிகுதியாகச் சொரிந்து பொரித்த தாளிதத்தையுடைய
சூட்டிறைச்சியையும் மணியிழைத்த வள்ளத்தில் நிறையைப் பெய்த மணங்கமழும்
கட்டெளிவையும் ஆண்டைகள் தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு மிகுதியாக
வழங்கியது குறித்துப் புறநானூறு பேசுகிறது.
-----------

அதே கட்டுரையில் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு:
"குய்ப்புகை"
--------------------------
களந்தோறுங்கள்ளரிப்ப
மரந்தோறும் மை வீழ்ப்ப
நிணவூன் சுட்டுருக்கமைய
நெய் கனிந்து வறையார்ப்பக்
குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற்
பரந்து தோன்றா வியனகர்

(இடங்கள் தோறும் கள்ளையரிப்ப, மரத்தடிகள் தோறும் செம்மறியாட்டுக்
கிடாயைப் படுப்ப, நிணத்தையுடைய தசைகள் சுடுதலாலே அந்நிணம் உருகுதல்
பொருந்த நெய் நிறையப் பெய்து பொரிக்கறிகள் ஆரவாரிப்ப, தாளிப்புப்புகை
மேகம் போல் பரந்த அகன்ற வீடுகளையுடைய நகர்) என்று, தசைத்துண்டங்களை
நெய்யிற்பெய்து பொரித்துச் செல்வர்கள் உண்டதனை மதுரைக் காஞ்சி (753-58)
கூறுகிறது. மனிதன் கணசமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில்
-----------------


அன்புடன்
செல்வா

> > > >> > > > > இரண்டு உயிர் எழுத்தையே- Hide quoted text -

செல்வா

unread,
Jun 22, 2009, 4:17:42 PM6/22/09
to சந்தவசந்தம்
எழுத்துப்பிழைகளை மன்னிக்கவும். சில:

..மடியையும்

..ஒருவரையும் குறிக்கும் சொல்
.."கூறிக்க" அல்ல குறிக்க.
..ஓர் அரைகுறையான பாட்டு

அன்புடன்
செல்வா

> > ஹரிகி.- Hide quoted text -

N. Ganesan

unread,
Jun 22, 2009, 6:48:07 PM6/22/09
to சந்தவசந்தம், tamil...@googlegroups.com, மின்தமிழ்

செல்வா எழுதினார்:

>அண்மையில் உண்மடி என்று ஒரு சொல்லைக் கண்டேன்.
>நாம் ஆங்கிலத்தில் couch potato என்கிறோமே. அதேதான்.

>மடிமை என்றால் சோம்பல். உண்டு உண்டு சோம்பி இருப்பவனுக்கு


>உண்மடி என்று பெயர். இது பற்றி ஒரு கட்டுரையைத் தமிழ்
>விக்கிப்பீடியாவில் எழுத எண்ணியுள்ளேன் (சுருக்கமாகவேனும்).

நல்ல சொல்! நன்கு எழுதுங்கள்.

அகராதிப் பொருள்: ”உண்மடி - உண்ணுஞ் சோம்பேறி”
http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t8825.html

இப்பொழுதுதான் நன்னூலின் ஒருசொல் விளங்குகிறது.
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0152.html
” மாணாக்கராகாதார் இலக்கணம்
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறன்இன் னோர்க்குப் பகரார் நூலே 39 ”

(வீணே) களியாட்டங்களில் ஈடுபட்டுப்
பணிமுடிக்காச் சோம்பேறி = களிமடி
என்று பொருள் கொண்டால் சிறக்கும்.
உண்மடி = உண்ணுஞ் சோம்பேறி,
அதுபோல், களிமடி = களிக்கும்/களியாடும் சோம்பேறி.
கள்ளுண்டு சோம்பிக் கிடப்பவன் எனலும் தகும்.

மடி என்னும் பெயர்ச்சொல் அடையாக
களி என்று கொள்ளும் நன்னூல் உரைகள்
உளவா? என்று பார்க்கவேண்டும்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 22, 2009, 11:56:33 PM6/22/09
to santhav...@googlegroups.com


2009/6/23 N. Ganesan <naa.g...@gmail.com>

களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

அது களி கமா மடி.  விளையாட்டு புத்தி உடையவன், சோம்பேறி, மானம் பார்ப்பவன், திருடன்.......இவர்களுக்கெல்லாம் கற்பிக்காதே என்று சூத்திரம் பேசுகிறது.  இந்தச் சூத்திரம் உண்மடியை ஒத்ததாகப் படவில்லை.  

செல்வா அவர்களுக்கு:

//உண்மடி என்பதற்கு இலக்கிய சான்றுகள் ஏதும் இருப்பதை நான் அறியேன்.
எல்லாச் சொற்களும் இலக்கியத்தில் இடம் பெறுவதில்லை//

அறிவேன்.  ஆட்சியில் ஆவணத்தில் மற்றயலார் தங்கள் காட்சியில் என்பது போலோ, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்பது போலோ எந்த ஆட்சியின் அடிப்படையில் இவ்வாறு பொருள் சொல்லப்படுகிறது என்பதையே அறிய விரும்பினேன்.  உண்ணும்போது யாரும் அதற்கென்று தனியாக ஒரு மடித்துணியை அணிந்துகொள்வதாக எனக்குத் தெரியவில்லை.  சமைக்கும்போது அதற்கென்று ஓர் அங்கியை மேல்நாடுகளில் அணிந்துகொள்வதுபோல், உண்ணும்போது மடித்துணியை யாராவது அணிந்துகொள்ளும் வழக்கம் இருக்கிறதா?  தின்று திரியும் சோம்பேறியை உண்மடி என்று அழைக்கும் வழக்கம் எங்காகிலும் இருக்கிறதா?  வின்ஸ்லோவின் பொருளும் ஏதோ ஒரு வட்டார வழக்குதான்.  

ஆகவே, எந்த அடிப்படையில் இவற்றுக்குப் பொருள் சொல்லப்படுகிறது என்பதையே அறிய விரும்பினேன்.  தங்களுடைய மறுமொழிக்கு மிக்க நன்றி.

N. Ganesan

unread,
Jun 23, 2009, 12:49:56 AM6/23/09
to சந்தவசந்தம்

On Jun 22, 10:56 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/6/23 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > களிமடி மானி காமி கள்வன்
> > பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
>
> அது களி கமா மடி.  விளையாட்டு புத்தி உடையவன், சோம்பேறி, மானம் பார்ப்பவன்,
> திருடன்.......இவர்களுக்கெல்லாம் கற்பிக்காதே என்று சூத்திரம் பேசுகிறது.
>  இந்தச் சூத்திரம் உண்மடியை ஒத்ததாகப் படவில்லை.

ஹரி,

நீங்கள் சொல்வது சரியே.

“கமா” நாம் போடுவதுதானே. உண்மடி ஆட்சி உண்டானால், களிமடி = drunkard
என்பதற்குப்
பொருந்துமே என்று யோசிக்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

’உண்மடி’ வின்ஸ்லோவில் காணோமே. எந்த அகராதியில் உள்ளது?

Hari Krishnan

unread,
Jun 23, 2009, 1:15:39 AM6/23/09
to santhav...@googlegroups.com


2009/6/23 N. Ganesan <naa.g...@gmail.com>

’உண்மடி’ வின்ஸ்லோவில் காணோமே. எந்த அகராதியில் உள்ளது?

அன்புள்ள கணேசன்,

உண்மடி என்ற தலைச்சொல்லைத் தேடினால் கிடைக்காது.  அது பின்மடி என்ற சொல்லுக்கு விளக்கமாக இடம்பெறும் சொற்களில் ஒன்றாக உள்ளது.  வின்ஸ்லோ அகராதியின் இந்தத் தேடல்முடிவைப் பார்க்கவும்:


இதில் பின்மடிக்குப் பின்வரும் பொருள் தரப்பட்டுள்ளது:

பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி.

ஆகவே, பின்மடி என்ற சொல்லுக்கு விளக்கங்களில் ஒன்று உண்மடி.  பின்னால் முடிந்து வைத்துக்கொள்ளப்படுவதால் பின்மடி; பின்னாலோ அல்லது ஆடையின் உட்புறமாகவோ மடித்துக் கட்டப்படுவதால் உண்மடி.  வேட்டி கட்டுபவர்கள், பணத்தையோ அல்லது வேறு சிறு பொருளையோ முன்மடியாக வைத்துக் கட்டுவதில்லையா?  நானே அப்படிக் கட்டுவது உண்டு.  அப்படி இது உள்ளே பொதிந்து வைத்துக் கட்டப்படுவதால் உண்மடி என்ற பொருள்தான் வின்ஸ்லோவில் இருக்கிறது.  கழக அகராதியில் தின்று திரியும் சோம்பேறி என்றும், உண்ணும்போது அணியும் ஆடை என்றும் பொருள் சொல்லப்பட்டுள்ளது.  பேரா பசுபதியும் இதைக் குறிப்பிட்டுள்ளார்.  

உண்ணும்போது அணியும் மடி ஆடை என்றால், அப்படி யாராவது உண்ணும்போது மடி அணிந்து உண்ணும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குரிய ஒன்று.  பூஜைக்கு மடி உடுத்துவார்கள்; பிதிர் காரியங்களுக்கு மடி உடுத்துவார்கள் .  கொடிமடி என்று அப்படிப்பட்ட மடி ஆடையைச் சொல்வதுண்டு.  ‘ஆமாமா.. கட்டிக்கறதே வண்ணான் மடியாம்...என்னவோ கொடிமடி கட்டினது மாதிரி இல்ல பேச்சு பொளக்கறது’ என்று கேலியாகச் சொல்வதுண்டு.  

அப்படி பூஜைக்கோ, இன்ன பிற ஓமாதி காரியங்களுக்கோ மடி உடுத்துவதைப்போல் யாராவது உண்பதற்காக மட்டும் தனியாக மடி அணிகிறார்களா என்ற விளக்கம் கிட்டினால் அது கழக அகராதிப் பொருளாகவே இருந்தாலும் ‘பொருத்தம்தான்’ என்று கொள்ள ஏதுவாக இருக்கும்.  உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.... உண்ணும்போது என்று மடி அணிவது யார் வீட்டிலாவது வழக்கமாக இருக்கிறதா?

N. Ganesan

unread,
Jun 23, 2009, 1:44:14 AM6/23/09
to சந்தவசந்தம்

On Jun 23, 12:15 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:


> உண்ணும்போது அணியும் மடி ஆடை என்றால், அப்படி யாராவது உண்ணும்போது மடி அணிந்து
> உண்ணும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குரிய ஒன்று.

ஆமாம்.

bib கட்டி உண்பது மிகப் பின்னீடாக -
19,20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரால் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.

நா. கணேசன்

>  பூஜைக்கு மடி உடுத்துவார்கள்; பிதிர் காரியங்களுக்கு மடி உடுத்துவார்கள் .

Pas Pasupathy

unread,
Jun 23, 2009, 8:35:49 AM6/23/09
to santhav...@googlegroups.com

செல்வா

unread,
Jun 23, 2009, 3:47:36 PM6/23/09
to சந்தவசந்தம்
//உண்மடி என்ற தலைச்சொல்லைத் தேடினால் கிடைக்காது.//

தலைச்சொல்லைத் தேடினால் கழகத் தமிழ் அகராதியில் கிடைக்கும்.

இது போல பல நூற்றுக்கணக்கான சொற்களை வெவ்வேறு அகராதிகளில்
சுட்டிக்காட்ட இயலும்.

எடுத்துக்காட்டாக மைக்கா நாள் என்னும் சொல்லை எடுத்துகொண்டால், வின்சுலோ
அகராதியோ, வ'ப்ரிசியசு அகராதியோ, "கதிர்வேலு பிள்ளை" அகராதியோ,
மக்கால்வி'ன்
அகராதியோ தலைச்சொல்லாக தருவதில்லை. ஆனால் தமிழ் லெக்ஃசிக்கன் தருகின்றது.
கழகத் தமிழ் அகராதி தருகின்றது. என் பாட்டியும் என் அம்மாவும் மைக்கா
நாள்
(= மறுநாள்) என்று பயன்படுத்துவார்கள். மிகப்பலரும் கரூர், திருச்சிப்
பகுதிகளில்
பயன்படுத்துவர் (1970 வரையிலும் கேட்டிருக்கின்றேன்).
இன்னும் 20-50 ஆண்டுகள் சென்றால் யாருமே மைக்கா நாள் என்னும்
சொல்லைப் பயன்படுத்துவதை அறியாமல் இருக்கலாம். அதனால் மைக்கா நாள் என்பது
தமிழ்ச்சொல்லாக இல்லாமல் போகுமா?

"தற்கால அகராதி" என்று கூறும் "க்ரியா" வில் மறுமொழி, நெடுங்கணக்கு,
கொடுக்காப்புளி
போன்ற பல நூற்றுக்கணக்கான மிக எளிய சொற்கள் கூட பதிவாகவில்லை. கழகத்
தமிழ் அகராதியில்
கொழு மோர் போன்ற சொற்கள் பதிவாகவில்லை. விலத்தி என்னும் சொல்
நெருக்கமில்லாமல் இருப்பதைக் குறிக்கப் பயன்படும், ஆனால் அது
வின்சுலோவில் இல்லை (தமிழ் லெக்ஃசிக்கனிலும்,
கழகத்தமிழ் அகராதியிலும், பேச்சுப் பழக்கத்திலும் உள்ளது. Sparse matrix
என்பதற்கு
விலத்தி அணி என்று கலைச்சொல்லாகக் கூறலாம் என்பது தனி கருத்து).

உண்மடி என்பது பயன்பாட்டில் இருந்த சொல், அகராதியில் இடம் பெற்ற சொல்.
பயன்பாட்டில் இருந்து,
இன்று வழக்கு அருகியோ அற்றோ போய்விட்ட சொற்கள் அகராதியிலும் இடம்பெறாமல்
போன
சொற்கள் எத்தனையோ? அழிந்த நூல்களில் தொலைந்த சொற்கள் எத்தனையோ!

நீங்கள் பின்படி உள்மடி-> உண்மடி என்று கூறுவது ஒரு பொருள். அந்த மடி
வேறு. மடி-மடிப்பு என்னும்
பொருளில் வருவது. குழந்தையை மடியில் வைத்திருக்கிறாள் என்பதில் வருவது
போன்று மேல் கால் இடுப்பெலும்பில் இருந்து மடிவதால் அப்பகுதி மடி
எனப்படும். பால் தரும்
உறுப்பாகிய ஆவின்மடி அதுபோன்ற பகுதியில் இருப்பதால் ஏற்பட்ட பெயர். இன்று
நாம் laptop (லாப்டாப்)
என்பது மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் மடிக்கணி என்கிறோம், ஆனால்,
திரையை மடித்து
மூடுவதாலும் மடிக்கணி என்று இருபொருளில் வழங்குவது.

அடுத்து உண்மடி என்பது உண்ணும்போது அணியும் ஆடை என்பது வேறுபொருளில்
(ம்டிமை என்னும்
கருத்தில் இருந்து வேறு பொருளில்) வரும் சொல்.
எங்கள் வீடுகளில் குழந்தைக்கு உணவு கொடுக்கும்பொழுது ஒரு துணியை
சட்டையில் கழுத்தருகே சொருகி விடுவார்கள். இது ஐரோப்பிய பழக்கமா என
அறியேன். சில சொற்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னும் தோன்றி
இருக்ககூடும் (இது அப்படி என்று கூறவில்லை). கும்பினி, கும்பினியார்,
தோட்டா, துப்பாக்கி போன்ற சொற்களைக் காட்டலாம். உண்மடி = சேம்பேறி என்பது
பழஞ்சொல்லாக இருக்க வேண்டும்.

பொதுவாக எத்தனையோ சொற்கள் இலக்கியத்தில் இல்லாமலும், பலர் இன்று அறியாமல்
சிறுவழக்காக உள்ளனவாகவும் (சில வழக்கொழிந்ததாகவும்) உள்ளன. அகராதியில்
பதிவாகி இருப்பதே ஒரு
பெரும் சான்று.

சிறு குழந்தைகளுகு உணவு ஊட்டும் பொழுதும், அகவை நிரம்பிய முதியவர்கள்
உணவுண்ணும்
பொழுதும் துணி அணிவிப்பது உண்டு. ஆனால் உண்மடி என்று இவற்றை நான்
சொல்லக் கேட்டதில்லை.

மைக்கா நாள் என்று சொல்லக் கேட்டுள்ளேன் (ஏராளமான ம்முரைகள்), ஆனால் பல
அகராதிகளில்
இச்சொல் இல்லை (சிலவற்றில் உள்ளன).

அன்புடன்
செல்வா


On Jun 23, 1:15 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/6/23 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > ’உண்மடி’ வின்ஸ்லோவில் காணோமே. எந்த அகராதியில் உள்ளது?
>
> அன்புள்ள கணேசன்,
> உண்மடி என்ற தலைச்சொல்லைத் தேடினால் கிடைக்காது.  அது பின்மடி என்ற சொல்லுக்கு
> விளக்கமாக இடம்பெறும் சொற்களில் ஒன்றாக உள்ளது.  வின்ஸ்லோ அகராதியின் இந்தத்
> தேடல்முடிவைப் பார்க்கவும்:
>

>  http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=பின்மடி&table=winslow<http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AA%E0%AE%BF...>


>
> இதில் பின்மடிக்குப் பின்வரும் பொருள் தரப்பட்டுள்ளது:
>

> பின்மடி, *s.* The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied

N. Ganesan

unread,
Jun 23, 2009, 7:41:23 PM6/23/09
to சந்தவசந்தம்

On Jun 23, 2:47 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:

> எடுத்துக்காட்டாக மைக்கா நாள் என்னும் சொல்லை எடுத்துகொண்டால், வின்சுலோ
> அகராதியோ, வ'ப்ரிசியசு அகராதியோ, "கதிர்வேலு பிள்ளை" அகராதியோ,
> மக்கால்வி'ன்
> அகராதியோ தலைச்சொல்லாக தருவதில்லை. ஆனால் தமிழ் லெக்ஃசிக்கன் தருகின்றது.
> கழகத் தமிழ் அகராதி தருகின்றது. என் பாட்டியும் என் அம்மாவும் மைக்கா
> நாள்
> (= மறுநாள்) என்று பயன்படுத்துவார்கள். மிகப்பலரும் கரூர், திருச்சிப்
> பகுதிகளில்
> பயன்படுத்துவர் (1970 வரையிலும் கேட்டிருக்கின்றேன்).
> இன்னும் 20-50 ஆண்டுகள் சென்றால் யாருமே மைக்கா நாள் என்னும்
> சொல்லைப் பயன்படுத்துவதை அறியாமல் இருக்கலாம். அதனால் மைக்கா நாள் என்பது
> தமிழ்ச்சொல்லாக இல்லாமல் போகுமா?
>


மக்கா நாள்/ மைக்கா நாள் கோவை மாவட்டத்தில்
தினந்தோறும் புழங்கும் சொல்.
சுருக்கு > சுக்கு. அதுபோல், மறு(க்)கால் > மக்கா(ல்)
என்றானது.

ஈழத்து மட்டக்களப்பிலும் -கா என்று முடியும்
சொற்கள் வழங்குகின்றன:
http://eelamlife.blogspot.com/2009/06/blog-post_2616.html

செல்வா

unread,
Jun 23, 2009, 8:43:39 PM6/23/09
to சந்தவசந்தம்
அன்புள்ள கணேசன்

என் அம்மாவும் பாட்டியும் மைக்கா நாள் என்றே கூறுவர்.
ஒரு சில சமயம் வேன்டுமானால் மய்க்கா நாள் என்பது போல
ஒலிக்கும்.
மக்கா நாள் என்று கூறக்கேட்டதில்லை. கோவையில் என் உறவினர்
யாரும் இப்படிச் சொல்லி கேட்ட நினைவில்லை, ஆனால் பிறர்
கூறுவார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.


மைக்கா நாள் என்பது இருளுக்குப் பின் வரும் நாள்,
இரவு கழிந்து மறுநாள் என்று பொருள். மை = இருள்.

அன்புடன்
செல்வா

N. Ganesan

unread,
Jun 23, 2009, 9:33:32 PM6/23/09
to சந்தவசந்தம், மின்தமிழ்

On Jun 23, 7:43 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> அன்புள்ள கணேசன்
>
> என் அம்மாவும் பாட்டியும் மைக்கா நாள் என்றே கூறுவர்.
> ஒரு சில சமயம் வேன்டுமானால் மய்க்கா நாள் என்பது போல
> ஒலிக்கும்.
>  மக்கா நாள் என்று கூறக்கேட்டதில்லை. கோவையில் என் உறவினர்
> யாரும் இப்படிச் சொல்லி கேட்ட நினைவில்லை, ஆனால் பிறர்
> கூறுவார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.
>

மக்கா நாள் என்று பரவலாகப் பதியப் படுகிறது.
இன்னோர் உதாரணம் தருகிறேன்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10611093&format=html&edition_id=20061109


> மைக்கா நாள் என்பது இருளுக்குப் பின் வரும் நாள்,
> இரவு கழிந்து மறுநாள் என்று பொருள். மை = இருள்.
>

எனக்கு இதில் ஐயப்பாடுகள் எழுகின்றன.

(அ) மத்யம் > மய்யம் > மையம்.
பவ்வம் (உ-ம்: பவ்வத்தில் விளைகிற பவழம்) > பௌவம்
கப்பல்கள் கடலில் திரியப் புறப்படும் துறைமுகத்திற்குப் பவ்வத்திரி/
பௌவத்திரி என்று பெயர்.
ஸ்ரீஹரிகோட்டை அருகே இன்றும் பல்லவர் கோயில்கள் கொண்ட பட்டினம் உண்டு.

அதுபோல், மறுக்கால் நாள் > மக்கா நாள் > மைக்கா நாள் என்று கருத
இடமுண்டு.

(ஆ) நாள் என்றால் இருள், கருமை என்ற பொருள் பல இடங்களில் சங்க
இலக்கியங்களில்
வருகிறது. ஆகுபெயராய் நள்ளிரவில் ஜொலிக்கும் நக்‌ஷத்திரங்களுக்கு நாள்
என்பது தமிழ்வழக்கம்.
திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன (தொல். எழுத். 286).
நாள் என் செயும்? ... கோள் என் செயும்? - அருணகிரி.

நாளகிரி - இருட்டுமலை போன்ற யானை (பெருங்கதை. புத்தசரிதம், ...)
தெலுங்கில் ளகரம் இல்லை, லகரமாக மெலியும்.
நள்ளமலை (கருமலை) நல்லமலை ஆகிவிட்டது [1]
கருமலையில் பிறக்கும் கரும்பெண்ணை நதி பிராகிருத்தத்தில் கண்ஹபெண்ணா
என்றாகிறது.
வடமொழியில் கிருஷ்ணவேணி ஆகும் இன்றைய ஆந்திரப் பெருநதி கிருஷ்ணா ஆறு.
நல்லமலையில் உள்ள சிவபெருமானுக்கு சாதவாகனர் கல்வெட்டு: நாளகிரீஸ்வரர்/
நாடகிரீஸ்வரர்
என்கிறது. (தெலுங்கில் நாடு = நாள்).

மை = இருள்/கருமை அதேபொருளுடைய நாள் (இரவு)முன் ஏன் வருகிறது?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 23, 2009, 9:37:01 PM6/23/09
to சந்தவசந்தம், மின்தமிழ்

On Jun 23, 8:33 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jun 23, 7:43 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
>
> > அன்புள்ள கணேசன்
>
> > என் அம்மாவும் பாட்டியும் மைக்கா நாள் என்றே கூறுவர்.
> > ஒரு சில சமயம் வேன்டுமானால் மய்க்கா நாள் என்பது போல
> > ஒலிக்கும்.
> >  மக்கா நாள் என்று கூறக்கேட்டதில்லை. கோவையில் என் உறவினர்
> > யாரும் இப்படிச் சொல்லி கேட்ட நினைவில்லை, ஆனால் பிறர்
> > கூறுவார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.
>
> மக்கா நாள் என்று பரவலாகப் பதியப் படுகிறது.

> இன்னோர் உதாரணம் தருகிறேன்:http://www.thinnai.com/?module=displaystory&story_id=10611093&format=...

[1] http://nambikkai-tamila.blogspot.com/2009/03/nambikkai_07.html

”தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த
என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள்
அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச்
சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு
மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம்
எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது.”

செல்வா

unread,
Jun 23, 2009, 10:17:27 PM6/23/09
to சந்தவசந்தம்
//மை = இருள்/கருமை அதேபொருளுடைய நாள் (இரவு)முன் ஏன் வருகிறது? //

நாள் என்பது இரவு-பகல் இரண்டும் சேர்ந்த முழுநாள் என்பது ஒரு பொருள்.
ஆனால் பொதுவாக நாள் என்பது பகலை,
ஒளியைக் குறிக்கும். நாளங்காடி என்றால் பகல் அங்காடி. பகலில்
மலர்வதால் தாமரைக்கு நாளிகம் என்றும் கூறுவர். பொதுவாக நாள் என்பது
பகல், ஒளி முதலான பொருள்களில் வழங்கும். நாணிழல் (நாள்+நிழல்) என்றால்,
காலை நிழல் (இது மேற்கு நோக்கி விழுவது). நாட்கூறு என்பது முற்பகல்.
எனவே நாள் என்பது பகல் என்னும் பொருளில் வழங்குது. நாளைக்கு என்பதும்,
மறுநாள் என்பதும்கூட இதே பொருளில்தான் (மறுநாள் என்பது மறு இரவு அல்ல).

மைக்கா நாள் என்பாது இரவு கழிந்து மறு நாள் என்று பொருள்.

அன்புடன்
செல்வா

On Jun 23, 9:33 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jun 23, 7:43 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
>
> > அன்புள்ள கணேசன்
>
> > என் அம்மாவும் பாட்டியும் மைக்கா நாள் என்றே கூறுவர்.
> > ஒரு சில சமயம் வேன்டுமானால் மய்க்கா நாள் என்பது போல
> > ஒலிக்கும்.
> >  மக்கா நாள் என்று கூறக்கேட்டதில்லை. கோவையில் என் உறவினர்
> > யாரும் இப்படிச் சொல்லி கேட்ட நினைவில்லை, ஆனால் பிறர்
> > கூறுவார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி.
>
> மக்கா நாள் என்று பரவலாகப் பதியப் படுகிறது.

> இன்னோர் உதாரணம் தருகிறேன்:http://www.thinnai.com/?module=displaystory&story_id=10611093&format=...

> > > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -

N. Ganesan

unread,
Jun 23, 2009, 10:32:15 PM6/23/09
to சந்தவசந்தம்

On Jun 23, 9:17 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> //மை = இருள்/கருமை அதேபொருளுடைய நாள் (இரவு)முன் ஏன் வருகிறது? //
>
> நாள் என்பது இரவு-பகல் இரண்டும் சேர்ந்த முழுநாள் என்பது ஒரு பொருள்.
> ஆனால் பொதுவாக நாள் என்பது பகலை,
> ஒளியைக் குறிக்கும். நாளங்காடி என்றால் பகல் அங்காடி. பகலில்
> மலர்வதால் தாமரைக்கு நாளிகம் என்றும் கூறுவர்.

தாமரைக்கு நாளிகம் நாள் = பகல் என்பதால் ஏற்பட்டதன்று.
அத் தாவரத்தின் நாளம்/நாளிகையால் உருவானது.
vein = இரத்த நாளம் என்கிறோமே.

> பொதுவாக நாள் என்பது
> பகல், ஒளி முதலான பொருள்களில் வழங்கும்.

சங்க இலக்கியத்தில் ஊன்றிப் பார்த்தீர்களானால் நாள் = பகல் என்று
இருக்காது.
நாள் என்றால் இரவு, இருள், கருமை என்றிருக்கும்.
உ-ம்:
புறநானூறு நக்கீரர் பாடல்:
"தெண்கடல் வளாகம் ஒருவர்க்கும் பொதுமை யின்றி
...
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி ..."

இங்கே, நடுநாள் என்பது நடு இரவு.

நா. கணேசன்

>நாணிழல் (நாள்+நிழல்) என்றால்,

N. Ganesan

unread,
Jun 23, 2009, 10:42:12 PM6/23/09
to சந்தவசந்தம்

On Jun 23, 9:17 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:

> மைக்கா நாள் என்பாது இரவு கழிந்து மறு நாள் என்று பொருள்.


இந்தக் “கழிந்து” என்ற பொருளை எப்படி வருவிப்பது என்றுதான் எனக்கு
விளங்கலை.

தலைக்கா நாள் என்றால் முந்தைய நாள் என்று பொருள்.
மைக்கா நாள் என்றால் கரிய (மழைக்கால) நாள் என்றல்லவா பொருள்படணும்.

லெக்ஸிகன் அதனால் தான், மைக்கா நாள் மறுநாள் என்று பொருள்பட
வேண்டுமாயின் “மற்றை” என்பதை மூலமாக இருக்கும் என்று
குறிப்பிடுகிறதோ?

RAJAGOPALAN APPAN

unread,
Jun 24, 2009, 4:10:44 AM6/24/09
to santhav...@googlegroups.com

நாள் என்பது இரவைக் குறிக்கும் என்பதற்கு இன்னொன்று. 'பகல்' -காரணப் பெயர். இரவை(நாளை)ப் பகுப்பதாலேயே பகலுக்குப் பகல்(பிரிப்பது)என்று பெயர்.

அ.ரா.



 

2009/6/24 N. Ganesan <naa.g...@gmail.com>

செல்வா

unread,
Jun 24, 2009, 10:24:26 AM6/24/09
to சந்தவசந்தம்
அன்புள்ள அ.ரா,

பகல் என்பது *முழுநாளின் ஒளிநிறைந்த பகுதியை, அப் பாதியைக்
குறிப்பது. இரவைப் பகுப்பதால் அல்ல என்பேன். இரவைப் பகுத்தால் இரவுதான்
இருக்கும். இரவும்-பகலும் சேர்ந்த முழுநாளைப் பகுக்கலாம்.
நாள் என்பதற்கு இரவு என்று எப்படிப் பொருள் கொண்டீர்
என்று விளக்க வேண்டுகிறேன்.

நள் என்றால் நடு, நட்ட நடு என்பது போல நடுநள்->நடுநாள் யாமத்து
என்று இருக்கலாம். பகலின் உச்சிப்பொழுதுக்கும், இரவின் நடுவுக்கும்
*நள்* என்று பெயர். நள் என்றால் நடு அவ்வளவுதான்.
நள்->நண்->நட்->நடு ஆகும்.
இந்த நள், நாள் என்று விரியுமா என்பது நோக்கத்தக்கது. நாள்மீன் என்பது
ஒளிவிடும், ஒளிதரும் விண்மீன். கதிரவனும் நாள்மீந்தான்.
நாண்மலர் என்பது அன்றலர்ந்த பூ என்று பொருள் (பொதுவாகப்
பகலில் மலரும் பூவுக்கு வழங்குவது.
இரவில் பூக்கும் பூவுக்கும் கூறியிருந்தால் தெரிவிக்கவும்.
பொதுவாக தாமரையைக் குறிக்க வழங்குவர்.

நாளங்காடி (பகற் கடை), நாட்காலம் (விடியற்காலம்), நாட்கூறு (முற்பகல்),
நாணிழல் (நாள்நிழல் = காலை நிழல், மேற்கு நோக்கி விழும் நிழல்),
நாளிருக்கை, நாளோலக்கம் (பேரவை, பகலில் கூடுவது) என்பதனை எப்படிப்
பொருள் கொள்வீர்?

மறுநாள் என்றால் அடுத்த இரவா?

அன்புடன்
செல்வா


On Jun 24, 4:10 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> நாள் என்பது இரவைக் குறிக்கும் என்பதற்கு இன்னொன்று. 'பகல்' -காரணப் பெயர்.

> இரவை(நாளை)ப் பகுப்பதாலேயே பகலுக்குப் பகல்(பிரிப்பது)என்று பெயர்....
>
> read more »
>
> அ.ரா.
>
> 2009/6/24 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > > > > மக்கா- Hide quoted text -

N. Ganesan

unread,
Jun 24, 2009, 1:19:29 PM6/24/09
to சந்தவசந்தம்

On Jun 24, 3:10 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:


> நாள் என்பது இரவைக் குறிக்கும் என்பதற்கு இன்னொன்று. 'பகல்' -காரணப் பெயர்.
> இரவை(நாளை)ப் பகுப்பதாலேயே பகலுக்குப் பகல்(பிரிப்பது)என்று பெயர்.
>
> அ.ரா.
>

ஆம்.

இரவைக் கிரணங்களால் பகுப்பவன் பகலவன்.
பகல் < பகு‍‍த்தல் என்னும் வினையடிப் பிறந்த பெயர்.

பண்டை இந்தியாவில் இரவுக்கு இருந்த முக்கியத்துவத்தை
இருக்குவேதம் காட்டுகிறது. பாரசீகர்கள் இருக்குவேத‌
ஆரியர்களைக் குறைவாகக் காட்ட இச் செய்தியை
அவெஸ்தாவில் (அவர்களளின் வேதம்) சொல்லியிருக்கிறார்கள்.

நள்‍‍-/நாள்- என்பதற்கு கருப்பு/இரவு என்ற அடிப்படைப் பொருள்
உண்டு. அது சில சமயம் நல்ல‍ என தமிழிலும், தெலுங்கிலும்
ஆகிறது. நல்ல பாம்பு என்பது நள்ளபாம்பு என்பதன் மாற்றம்
என்பார் ஐராவதம் மகாதேவன். வடசொல்லில் கிருஷ்ணசர்ப்பம்
என்பதை அதற்கு ஆதாரம் காட்டுவார். மகாபாரதத்தில் நளன்
என்ற பாத்திரம் சனி பிடித்ததால் கறுத்துப் போனதால் ஏற்பட்டிருக்கலாம் (நள
வெண்பா).
முன்பு தாழ்ந்த சாதியார்களை, பொதுவாகக் கருத்த‌
உடலினர், நளவர் என்று தமிழ் இலக்கியங்களில் குறித்துள்ளது.

அல் = இருட்டு என்பது நல்‍/ நள்‍ என்பதில் உள்ள ந்‍ மறைந்தது.
அலவன் < நளவன், இருட்டில் மேயும் நண்டு.

ளகர லகர மாற்றத்துக்குச் சான்று: அள்ளைக்கை என்பதை
வலைப்பதிவுலகில் பலர் அல்லக்கை என்று எழுதுகிறார்கள்.

நா. கணேசன்

> 2009/6/24 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -

N. Ganesan

unread,
Jun 24, 2009, 2:09:17 PM6/24/09
to சந்தவசந்தம்

On Jun 24, 3:10 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:

> நாள் என்பது இரவைக் குறிக்கும் என்பதற்கு இன்னொன்று. 'பகல்' -காரணப் பெயர்.
> இரவை(நாளை)ப் பகுப்பதாலேயே பகலுக்குப் பகல்(பிரிப்பது)என்று பெயர்.
>
> அ.ரா.
>


நற்றிணை

68

உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே

168

அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்
மை படு சிறு நெறி எ·கு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே

281
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்

319
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடு நாள்

334
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்

338
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
நடு நாள் வேட்டம் போகி வைகறைக்
கடல் மீன் தந்து கானற் குவைஇ

etc. etc.,

N. Ganesan

Hari Krishnan

unread,
Jun 24, 2009, 11:54:51 PM6/24/09
to santhav...@googlegroups.com


2009/6/24 N. Ganesan <naa.g...@gmail.com>

நற்றிணை

68

உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே

அன்புள்ள கணேசன்,

நாள் என்பது, இரவு-பகல் இரண்டையும் கொண்ட முழுமையான காலப் பொழுது.  Day என்ற சொல்லின் இணைச் சொல்.  நாள் என்பது சிலசமயங்களில் இரவுப்பொழுதையும் குறிக்கப் பயன்படுகிறது--அல்லது பயன்பட்டிருக்கிறது.  On the terrific night of that day என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டல்லவா?

‘நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ தறிபடுமோ யார்படுவார்’

என்ற குயில் பாட்டின் அடிகளில் ‘நாள்’ என்பது ஆளப்பட்டிருக்கும் இடத்தையும் சூழலையும் வைத்து, ‘இரவு’ என்ற பொருளையே தருகிறது என்று கொள்ள இயலும்.  ஆனாலும் அதே குயில்பாட்டில், (மேற்சொன்ன அடிகளைத் தொடர்ந்து)

நாளொன்று போயினது, நானு மெனதுயிரும்

நீளச் சிலைகொண்டு நின்றதொரு மன்மதனும்

மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்

சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா

மிஞ்சிநின்றோம். 


என்று சொல்லும்போது ‘நாள்’ என்பது, ‘ஒரு பகல், ஓர் இரவு’ இரண்டையும் உள்ளிட்டதாகப் பேசப்படுகிறது.  

நான்காநாள், என்னை நயவஞ்சனை புரிந்து

வான்காதல் காட்டிவிட்டு மயக்கிச் சதிசெய்த

பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்

என்னும்போதும், இரண்டுமுறையும் ‘நாள்’ என்பது ‘இரவும் பகலும் உள்ளிட்ட ஒரு முழு நாளாகவே’ குறிக்கப்படுகிறது.  கவிஞன் இந்த இடத்தில் விடியலைக் குறிக் கிறான் என்பதனால் நான்காநாள் என்பது, நான்காவது நாள் காலை என்று பொருள் கொள்ளக்கூடியதாக நிற்கிறது.  இனி, வின்ஸ்லோ:

நாள், (p. 664) [ nāḷ, ] s. [Gen. நாளின்acc. நாளைpoet. நாளினை.] A day of twenty-four hours, a natural day, from sun rise to sun rise, இராப்பகல்கொண்டபொழுது. 2. Time in gene ral, காலம். 3. An auspicious day, பெரு நாள். 4. A lunar asterism. See நட்சத்தி ரம்(c.) 5. A lunar or astrological day; the period of the moon's passage through an asterism, சந்திரனாள். 6. The name of a metrical foot of the class. அசைச்சீர். 7. adj. New, as நாட்பூ--Note. In combina tion, the last letter is changed by rule.நாளொருவண்ணமும்பொழுதொருமேனியுமாய்வளர் ந்துவிட்டது. It has grown every day and every hour. நாள்வாய்பெறினும். Even in the early part of the day. (p.)இதுஅதுக்குநாளல்ல. This is not the pro per time or season.

OTL:

1. day of 24 hours; 2. time; 3. lifetime, life; 4. auspicious day; 5. early dawn; 6. forenoon; 7. lunar asterism; 8. lunar day, period of the moon's passage through an asterism; 9. freshness, newness; 10. youth, juvenility, tenderness; 11. newblown flower; 12. a symbolic expression of the last metrical foot of one syllable, in ven2pa1 verse

இவற்றில் எதுவும் ‘இரவு’ என்ற பொருளைக் குறிக்கவில்லை.  சந்திர நாள் என்ற பொருள்கூட, பகற்பொழுதை விடுத்த தனிப்போதில்லை.  

ஆகவே, நாள் என்பது இரவையும் பகலையும் உள்ளிட்ட 24 மணி கொண்ட ஒரு முழுதினத்தைக் குறிப்பதாயினும் பெரும்பாலும் பகற்போதையும்; சில சமயங்களில் (அந்தந்தச் சந்தர்ப்பத்துக்கேற்ப) இரவையும்  குறிக்கிறது என்றல்லவா பொருளாகிறது!  நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் ‘இருள்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால், அங்கே ‘இரவுதான்’ குறிப்பிடப்படுகிறது என்று புரிந்துகொள்ள முடியாதல்லவா?  நாற்றம் என்பது smell என்று பொருள்படுவதைப் போல் நாள் என்பது day என்று பொருள்படுகிறது அல்லவா?  The smell may be good or bad.  There may be a good smell or a bad smell; but 'smell' as such does not stand for either good or bad, though its Tamil equivalent நாற்றம் has come to be associated with that which is bad.  நாள் என்பது அதுபோலவே, இரவு பகல் இரண்டையும் உள்ளிட்ட பொருள்கொண்டது என்றாலும், பெரும்பாலும் பகற்பொழுதைக் குறிக்கப்பயன்பட்டிருக்கிறது. சிற்சில குறிப்புகளைச் சேர்த்தாலொழிய அதற்கு இரவு என்ற பொருளைத் தனித்துத் தரும் shade of meaning எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  மேற்படி அகராதிக் குறிப்புகளும் அவ்வாறு எதையும் சொல்லவில்லை.  

N. Ganesan

unread,
Jun 25, 2009, 12:46:16 AM6/25/09
to சந்தவசந்தம்

On Jun 24, 10:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

> இவற்றில் எதுவும் ‘இரவு’ என்ற பொருளைக் குறிக்கவில்லை.  சந்திர நாள் என்ற


> பொருள்கூட, பகற்பொழுதை விடுத்த தனிப்போதில்லை.
>
> ஆகவே, நாள் என்பது இரவையும் பகலையும் உள்ளிட்ட 24 மணி கொண்ட ஒரு முழுதினத்தைக்
> குறிப்பதாயினும் பெரும்பாலும் பகற்போதையும்; சில சமயங்களில் (அந்தந்தச்
> சந்தர்ப்பத்துக்கேற்ப) இரவையும்  குறிக்கிறது என்றல்லவா பொருளாகிறது!  நீங்கள்
> குறிப்பிட்டுள்ள பாடல்களில் ‘இருள்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால், அங்கே
> ‘இரவுதான்’ குறிப்பிடப்படுகிறது என்று புரிந்துகொள்ள முடியாதல்லவா?  

விரிவான மடலுக்கு நன்றிகள் பல. குயில்பாட்டு உதாரணம் அருமை.
கம்பன் நாள் என்றால் எங்காவது இருள்/கருப்பு என்ற பொருளில்
பாடியிருக்கிறாரா?

--------------
நாள் என்னும் சொல் “இருள்/இரவு” என்னும்
பொருளில் வரும் இடங்களைச் சங்க இலக்கியங்களில்
முழுமையாய்ப் பார்க்க வேண்டும்.
இரவு, யாமம் (< சியாமம்), இருள்/இரா என்று
குறிப்பிடா இடங்களில் இருக்கிறதா என்று நான்
தேடவில்லை. பெரி. சந்திரா சில உதாரணங்கள்
அகத்தியரில் காட்டியதாகவும் ஞாபகம்.

உ-ம்:

(அ)
நற்றிணை 338


திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
நடு நாள் வேட்டம் போகி வைகறைக்
கடல் மீன் தந்து கானற் குவைஇ

மீனவர் மீன்பிடிக்க நடு ராத்திரியில் தீப் பந்தம்
கொளுத்திக் கடலுள் போவதைச் சொல்கிறது.
இச்செய்யுளில் இரவு, இருட்டு சொல் இல்லாமலே அப்பொருள்
காணலாம்.

(ஆ) திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன (தொல். எழுத். 286)
இங்கே நாள் என்றால் இரவில் தோன்றும் விண்மீன்
என்று பொருள்.
வளைந்து செல்லும் மலைகள் மிகுந்த நாட்டுக்கு
கொங்கு நாடு என்கிறோம். மலை/கோடு/கொங்கு
தரும் தேனுக்கு கொங்கு என்று ஆகிவருவது போல்,
இராவில் தோன்றும் விண்மீனுக்கு “நாள்” என்றே
பெயர்குறிக்கிறது தொல்காப்பியம்.

---------

இன்னொன்று: அள்ளைக்கை அல்லக்கை ஆவதுபோல்,
நள்ளம் > நல்லம் > அல்- ”இரவு” வெகுகாலம் முன்
ஆகியிருக்கலாம். நல்லம் > அல்- தொடர்பை
திராவிடமொழிகள் வேர்ச்சொல் அகராதி குறிப்பிடுகிறது.

எள்(ளு) என்ற எண்ணெய் வித்தின் ஆதிப் பெயர் என்ன?
நள்(ளு) ”கருப்பு” பேச்சுவழக்கில் ”நெள்ளு”/”எள்ளு” ஆனதோ?
கடா:கெடா, வலம்/பலம்:பெலம், களை:கெளை, ....
பேச்சுவழக்கில். எள் எண்ணெயை நல்லெண்ணெய்
என்கிறோம். நல்லெண்ணெய் < நள்ளெண்ணெய்?
நல்லபாம்பு:நள்ளபாம்பு, வடமொழியில் கிருஷ்ணசர்ப்பம்.
நல்லமலை - கருமலை என்பதுபோல். கிருஷ்ணா நதி
நல்லமலை/நள்ளமலையில் பிறப்பதே.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 25, 2009, 9:12:02 AM6/25/09
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, housto...@googlegroups.com, nall...@googlegroups.com

அன்பின் கவிஞர் ஹரிகிருஷ்ணன்,

நாள்- எனும் வேர் கொண்ட
உங்கள் முன்னோர் “நாளப்பா”
பற்றி ஏற்கெனவே 2001-ல் பேசியுள்ளோம்:
http://www.treasurehouseofagathiyar.net/13800/13800.htm

காளி/காரி, குளம்பு/குரம், ... அதுபோல் நாளணன்/நாரணன்.
கடல்வண்ணனுக்கு மணிவர்ணன் என்னும் பெயர்,
மணிவர்ணன் என்றாலும் கருநீலவண்ணன்
என்றுதானே பொருள். நாளணன்/நாரணன் ‘கருப்பரையன் (அ)
மால்’ பழைய கருமைப் பொருள் மறைந்து
நாராயணன் ஆகி நீர் என்ற சொல்லில் இருந்து
என்கிறார்கள். ஆனால், நாராயணன் என்ற
சொல்லை நீர்- என்பதிலிருந்து வந்தது
’ஒரு தியாலாஜிக்கல் விளக்கம், அவ்வளவுதான்’ என்று வடமொழிப்
பேராசிரியர்கள் சொல்கிறார்கள்.

நாள்- இராவில் தோன்றும் விண்மீன்கள் (தொல்காப்பியம்),
சங்க இலக்கியத்தில் இரவு/கருமை, ....
வேதங்களில் சோம யாகம் போன்றவை இரவிலே
மாத்திரம் நடக்கும் அதிருத்ரம், சிந்துவெளியில்,
வேதங்களில், தமிழ் இலக்கியங்களில் (தனித் தமிழ்ப்
பெயர்களாய்) சுட்டப்படும் விண்ணியல் ஞானம்,
ஈரானிய அவெஸ்தாவில் இந்தியர்களின் இராக்கால
சடங்குகள் பழிக்கப்பட்டமை, ... பார்க்கும்போது.
நள்-/நாள்- என்பதன் கருமை/இருட்டு என்ற பொருள்கள்
பிற்காலத்தில் சற்றே மறக்கப்பட்டுவிட்டதாகத்
தெரிகிறது.

நாளப்பன்/நாளணன் : நாரணன் பெயர்க்
காரணம் அதையே சுட்டி நிற்கிறது என நினைக்கிறேன்.

Kaviyogi Vedham

unread,
Jun 25, 2009, 11:35:06 AM6/25/09
to santhav...@googlegroups.com, arsvedhammanian
அன்பு கணேசன்,
 நாராயணன் எனும் பெயர் ஸம்ஸ்்க்ருதச் சொல்லிலிருந்து வந்தது என்று அறிவீர்கள்.
 நாரே+அயன:+யஸ்ய ஸ:= நாராயண:
என அதன் விரிவாக்க இலக்கணமாகப் பண்டிதர்கள் சொல்வர்.
எவர் தண்ணீரில் ் படுக்கைகொண்டுளாரோ அவர் என்பது இதன் பொருள்.சரியா ஹரீ!
நாரணன் என்று கவி ஆக்கத்திற்காகச் சுருக்கிக் கொண்டார்கள் என்பதே உண்மை.
 ஆக, எவ்விதத்திலும் நாராயணன் எனும் சொல் தமிழ் வேர்ச்சொல்லில் இல்லை.(சிரமப்படவேண்டாம்!)
மால் என்று ஒரே சிறு சொல்லில் அவரையே (ம்! அக்காலத்தமிழர்கள் ரொம்பக்கெட்டிக்காரர்கள்!)அடக்கிவிட்டார்கள்.
யோகியார்



2009/6/25 N. Ganesan <naa.g...@gmail.com>



--
yogiyaar

RAJAGOPALAN APPAN

unread,
Jun 27, 2009, 8:51:17 AM6/27/09
to santhav...@googlegroups.com

நாராயணன் என்ற சொல்லுக்கு, நீரோடோ, கருமையோடோ எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுமையான வடசொல். வடமொழியில் இரண்டு விதமான சமாசம் அதற்கு உண்டு. நாராணாம் அயந: ஸ: நாராயண: என்றும், நாரா: அயந: யஸ்ய ஸ: நாராயண: என்றும் வரும். நாரா: என்பது அழிவற்ற நித்ய வஸ்துக்களின் கூட்டத்தைக் குறிக்கும். தன்னையொழிந்த எல்லா வஸ்துக்களுக்கும் ஆதாரமாயிருப்பவன் என்று ஒரு பொருளும், அவனே எல்லா வஸ்துக்களையும் தனக்கு ஆதாரமாகக் கொண்டு அவற்றில் மறைந்திருப்பவன் என்று ஒரு பொருளும் நாராயண பதத்துக்கு உண்டு.

அ.ரா. நாராயணன் என்ற சொல்லுக்கு, நீரோடோ, கருமையோடோ எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுமையான வடசொல். வடமொழியில் இரண்டு விதமான சமாசம் அதற்கு உண்டு. நாராணாம் அயந: ஸ: நாராயண: என்றும், நாரா: அயந: யஸ்ய ஸ: நாராயண: என்றும் வரும். நாரா: என்பது அழிவற்ற நித்ய வஸ்துக்களின் கூட்டத்தைக் குறிக்கும். தன்னையொழிந்த எல்லா வஸ்துக்களுக்கும் ஆதாரமாயிருப்பவன் என்று ஒரு பொருளும், அவனே எல்லா வஸ்துக்களையும் தனக்கு ஆதாரமாகக் கொண்டு அவற்றில் மறைந்திருப்பவன் என்று ஒரு பொருளும் நாராயண பதத்துக்கு உண்டு.

அ.ரா.

2009/6/25 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

srinivasan s

unread,
Jun 27, 2009, 9:56:21 AM6/27/09
to santhav...@googlegroups.com
'நாராயண'  என்கிற வடமொழிச் சொல்லுக்கு தந்த விளக்கம் விசிஷ்டாத்வைத கருத்துக்குப் பொருத்தமுள்ளதாக இருக்கிறது. அதில் ஒரு கேள்வி எழக்கூடும். நார + அயனம் = நாராயண என்ப்தில், 'ன' என்ற எழுத்து 'ண' என்று எப்படி மாறும்? 'நாராயன' என்றல்லவா இருக்கும். இந்தக் கேள்வி முன்காலத்தில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு முற்றுப் புள்ளி வைத்து, வடமொழி இலக்கண மேதை 'நாராயண' என்பதே சரி என்று தீர்ப்புக் கூறிவிட்டார். அதன் பிறகு இந்தப் பிரச்னை தலையெடுக்க வில்லை. இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.    
அன்புடன்
தாஸன்
அன்பில் சீனிவாஸன்

2009/6/25 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 27, 2009, 10:22:45 AM6/27/09
to சந்தவசந்தம்

On Jun 27, 8:56 am, srinivasan s <vasans2...@gmail.com> wrote:
> 'நாராயண'  என்கிற வடமொழிச் சொல்லுக்கு தந்த விளக்கம் விசிஷ்டாத்வைத
> கருத்துக்குப் பொருத்தமுள்ளதாக இருக்கிறது. அதில் ஒரு கேள்வி எழக்கூடும். நார +
> அயனம் = நாராயண என்ப்தில்,
>'ன' என்ற எழுத்து 'ண' என்று எப்படி மாறும்?

(ன > ண):
பர + அயன = பாராயணம்
ராம + அயன = ராமாயணம்.

அதுபோல், ஒரு தியலாஜிக்கல் விளக்கமாகச்
சொல்வதுண்டு (உ-ம்: மனு)
நர + அயன = நாராயணன்.

இங்கு, நர என்னும் பதத்தை நீருக்கோ (மிகப் பழைய மரபு),
மனிதனுக்கோ தொடர்புபடுத்துவதுண்டு.

நாரணன் தமிழ்ச்சொல். இது நாராயணன் என்பதன் குறுக்கம் அல்ல.
பாராயணத்தைப் பாரணம், இராமாயணத்தை ராமணம் என்பதில்லை அல்லவா?

---------

குளம்பு/குரம்பு, காளி/காரி, ஆளத்தி/ஆரத்தி, நாளிகேரம்/நாரிகேரம், ...
என்பதுபோல் (நாளப்பன் =)நாளணன்/நாரணன் என்னும் தமிழ் வேர்ச்சொல்
என்று கருதுகிறேன். நாள் என்றால் இரவு, கருமை என்ற பழைய
தமிழ்ப் பொருள் பலருக்கும் தெரியாது.

நாளணன்/நாரணன் தூய தமிழ்ச் சொல்.

இதிலிருந்து வடசொல் நாராயணன் கிளைத்திருக்கலாம்.
மூல வேர் எதுவும் இல்லாததால், நர = நீர், மனிதன் என்றெல்லாம்
வடமொழியாளர் ஒரு தியலாஜிக்கல் வியாக்கியானம் சொல்வதுண்டு.
அவைகளை, மொழியியல் ஸம்ஸ்க்ருத பேராசிரியன்மார் ஏற்பதில்லை
என்பதையும் அறியத்தருகிறேன்.

பிற பின்.

அடியேன்,
நா. கணேசன்


>'நாராயன'
> என்றல்லவா இருக்கும். இந்தக் கேள்வி முன்காலத்தில் வெகுவாக விவாதிக்கப்பட்டு
> வந்திருக்கிறது. அதற்கு முற்றுப் புள்ளி வைத்து, வடமொழி இலக்கண மேதை 'நாராயண'
> என்பதே சரி என்று தீர்ப்புக் கூறிவிட்டார். அதன் பிறகு இந்தப் பிரச்னை
> தலையெடுக்க வில்லை. இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
> அன்புடன்
> தாஸன்
> அன்பில் சீனிவாஸன்
>

> On 6/27/09, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com> wrote:
>
>
>
> > நாராயணன் என்ற சொல்லுக்கு, நீரோடோ, கருமையோடோ எந்த சம்பந்தமும் இல்லை. அது
> > முழுமையான வடசொல். வடமொழியில் இரண்டு விதமான சமாசம் அதற்கு உண்டு. நாராணாம்
> > அயந: ஸ: நாராயண: என்றும், நாரா: அயந: யஸ்ய ஸ: நாராயண: என்றும் வரும். நாரா:
> > என்பது அழிவற்ற நித்ய வஸ்துக்களின் கூட்டத்தைக் குறிக்கும். தன்னையொழிந்த எல்லா
> > வஸ்துக்களுக்கும் ஆதாரமாயிருப்பவன் என்று ஒரு பொருளும், அவனே எல்லா
> > வஸ்துக்களையும் தனக்கு ஆதாரமாகக் கொண்டு அவற்றில் மறைந்திருப்பவன் என்று ஒரு
> > பொருளும் நாராயண பதத்துக்கு உண்டு.
>
> > அ.ரா. நாராயணன் என்ற சொல்லுக்கு, நீரோடோ, கருமையோடோ எந்த சம்பந்தமும் இல்லை.
> > அது முழுமையான வடசொல். வடமொழியில் இரண்டு விதமான சமாசம் அதற்கு உண்டு. நாராணாம்
> > அயந: ஸ: நாராயண: என்றும், நாரா: அயந: யஸ்ய ஸ: நாராயண: என்றும் வரும். நாரா:
> > என்பது அழிவற்ற நித்ய வஸ்துக்களின் கூட்டத்தைக் குறிக்கும். தன்னையொழிந்த எல்லா
> > வஸ்துக்களுக்கும் ஆதாரமாயிருப்பவன் என்று ஒரு பொருளும், அவனே எல்லா
> > வஸ்துக்களையும் தனக்கு ஆதாரமாகக் கொண்டு அவற்றில் மறைந்திருப்பவன் என்று ஒரு
> > பொருளும் நாராயண பதத்துக்கு உண்டு.
>
> > அ.ரா.

> > 2009/6/25 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>


>
> >> அன்பு கணேசன்,
> >>  நாராயணன் எனும் பெயர் ஸம்ஸ்்க்ருதச் சொல்லிலிருந்து வந்தது என்று
> >> அறிவீர்கள்.
> >>  நாரே+அயன:+யஸ்ய ஸ:= நாராயண:
> >> என அதன் விரிவாக்க இலக்கணமாகப் பண்டிதர்கள் சொல்வர்.
> >> எவர் தண்ணீரில் ் படுக்கைகொண்டுளாரோ அவர் என்பது இதன் பொருள்.சரியா ஹரீ!
> >> நாரணன் என்று கவி ஆக்கத்திற்காகச் சுருக்கிக் கொண்டார்கள் என்பதே உண்மை.
> >>  ஆக, எவ்விதத்திலும் நாராயணன் எனும் சொல் தமிழ் வேர்ச்சொல்லில்
> >> இல்லை.(சிரமப்படவேண்டாம்!)
> >> மால் என்று ஒரே சிறு சொல்லில் அவரையே (ம்! அக்காலத்தமிழர்கள்
> >> ரொம்பக்கெட்டிக்காரர்கள்!)அடக்கிவிட்டார்கள்.
> >> யோகியார்
>

> >> 2009/6/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Jun 27, 2009, 10:24:01 AM6/27/09
to சந்தவசந்தம்

On Jun 27, 9:22 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jun 27, 8:56 am, srinivasan s <vasans2...@gmail.com> wrote:
>
> > 'நாராயண'  என்கிற வடமொழிச் சொல்லுக்கு தந்த விளக்கம் விசிஷ்டாத்வைத
> > கருத்துக்குப் பொருத்தமுள்ளதாக இருக்கிறது. அதில் ஒரு கேள்வி எழக்கூடும். நார +
> > அயனம் = நாராயண என்ப்தில்,
> >'ன' என்ற எழுத்து 'ண' என்று எப்படி மாறும்?
>
> (ன > ண):
> பர + அயன = பாராயணம்
> ராம + அயன = ராமாயணம்.
>

தக்‌ஷிண + அயன = தக்‌ஷிணாயணம்

> ...
>
> read more »

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 27, 2009, 4:08:27 PM6/27/09
to santhav...@googlegroups.com
V.S. Apte's Sanskrit dictionary-யில்
நாராயண:
ஆபோ நாரா இதி ப்ரோக்தா
ஆபோவை நர ஸூனவ:
தா யதஸ்யாயனம் பூர்வே
நாராயண: ஸ்ம்ருத:
(ஆபம்= நீர்; அயனம் அல்லது அயணம்= வாசஸ்தலம்; கழக அகராதியில் காணும் பொருள்களில் சில)
 
என்றும், நார: = water, a multitude or assemblage of men என்றும் காணப்படுகிறது.  
 
(நீர், திரள் ஆகிய) இவை இரண்டையும் இணைத்து, அபிதான சிந்தாமணியில் நாராயணன் என்பதற்கு, ”நாரம் என்றால் சலம். அதனை இடமாகக் கொண்டவர் ஆதலின் திருமாலுக்கு இத்திருநாமம் உண்டாயிற்று” என்றும், “நாரங்களுக்கு அயனமென்றபடி, நாரங்களான நித்திய வஸ்துக்களின்
திரள்” என்றும் குறிக்கப்பட்டுள்ளது. (நாரங்களில், சனகாதியரும், திவ்ய பூஷணங்களும், ஆயுதங்களும் என்று ஒரு நீண்ட பட்டியல்
காணப்படுகிறது). மேலும், அயனம் என்பதற்கு, அ.ரா. சொன்னவாறு, ’இவற்றிற்கு ஆச்ரயம் அல்லது இவை தம்மை ஆச்ரயமாகக் கொண்டவை என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
 
அனந்த்
27-6-2009

 
2009/6/27 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages