1 அரசன்
2 அழகு
3 இருமல்
3 ஒரு சாரியை
4 ஒரு தொழிற் பெயர் விகுதி
5 ஒரு பண்புப்பெயர் விகுதி
6 கடவுள்
7 கடுகு
8 கருவிப்பொருளில் வரும் ஒரு பெயர் விகுதி
9 குரு
10 கோழை
11 தலைவன்
12 சர்க்கரை
13 சவ்வீரம்
14 சிவன்
15 தண்ணீர் முட்டான் கிழங்கு
16 சிலேட்டுமம்
17 செயப்படுபொருளிலே வரும் ஒரு பெயர் விகுதி
18 ஒரு பெயர் விகுதி
19 தும்பை
20 துர்கை
21 நுண்மை
22 பருந்து
23 தந்தை
24 பெருநோய்
25 யானையைப் பாகன் அதட்டும் ஓசை
26 வினைமுதற் பெயரிலே வரும் ஒரு பெயர் விகுதி
27 வெண்ணெய்
28 வியப்பு
29 ஐந்து
30 ஐயம்
31 ஓர் இடைச்சொல்
32 கணவன்
33 மருந்து
அன்புடன்
செல்வா
ஐ
ஐ
அன்பரே புகாரி,
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
On Jun 6, 10:35 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> ஐ என்பதன் பொருள்கள் (வெறும் அகராதிபொருள்
> என்று நினைக்கவேண்டாம். இவற்றை விரித்துக் கூற
> இயலும்- தமிழில் நெடுக ஊடுருவி நிற்கும்
> ஒரு சொல்)- கீழுள்ள பொருள்களைத்
> தருவது கழகத் தமிழ் அகராதி. நன்றி.
>
சென்னைத் தமிழ்ப் பேரகராதி தரும் பொருள்கள்:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.4379.0.69.tamillex
நா. கணேசன்
ஐ என்றால் பாடல் தலைவியின் ஐயன் = காதலன் (தலைவன்).
பயன்படாமல் வீணாகும் ஆவின் பாலைப் போல்
என் பெண்மை எனக்கோ, அன்றி என் காதலனுக்கோ இன்றி
என் பொலிவு குறைகிறது என்கிறாள் தலைவி.
தமிழ் சினிமாவில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது:
சேட்டுப் பெண் போல :)
http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8
விஜயநகர மன்னர்கள் தாபித்த பம்பை (கன்னடத்து ஹம்பி நகரம்)
காணலாம்.
பம்பை = மெதுவாய்ப் பம்பிச் செல்லும் ஆறு.
(தமிழ்நாட்டிலும் பம்பை என்னும் வேறோர் ஆறு உள்ளது)
விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டுக் கலைவடிவுகளை
(உ-ம்: ராஜகோபுரம். திருமங்கை ஆழ்வாருக்குக் கோவில், ...)
அமைத்தமை பம்பைநாதர் விரூபாக்ஷர் கோயிலில் காண்க.
இந்த ”ஐ” - பெரியார்வாதிகள் எழுதும் “அய்” உடன் சமானம் அன்று.
ஐ > அய் ஆகாது. இரண்டும் வேறான சொற்கள், ஒலிப்புகள்.
ஐ > அய், ஔ > ஔ என்றெழுதுதல் தமிழின் தொல்காப்பியத்தின்
இரண்டு உயிர் எழுத்தையே நீக்குதல். அது கூடாது.
மேலும் ஒன்று, சீர்மையாளர் சொல்லும் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம்
வேறுபட்டது. அது காலம் காலமாக மாறும் தமிழ் *வடிவத்தை*
மாத்திரம் அறிவியல் அமைப்பாக்குவதாகும். எழுத்தையே
நீக்குவதல்ல. உ-ம்: நாம் பயன்படுத்தும் எம்ஜிஆர் எழுத்து.
சாதாரணர்களுக்காக ஏன் எளிய மாற்றம்
எழுத்தில் வேண்டும் என்கிறார் அறிஞர்
வா. செ. குழந்தைசாமி.
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274
எம்ஜிஆர் எழுத்தாலோ, உயிர்மெய் (உ/ஊ) உடைப்பாலோ
தமிழ் எழுத்தின் ஒலிகள் பிசகுவதில்லை.
நா. கணேசன்
விரூபாக்ஷர் சிவன் கோயில் பழனி மலைகளிலும் உண்டு.
அவ்விடத்தில் விளையும் வாழைப் பழம் விருப்பாச்சிப்
பழம் - இப்போது அழிந்தே விட்டது என்கின்றனர்.
விரூபாக்ஷன் (முக்கண்ணன்) = விருப்பாச்சன்.
ராஜபக்ஷன் = இராயபக்கன்/இராயபட்சன்/இராயபச்சன் (தமிழில்).
>அண்மையில் உண்மடி என்று ஒரு சொல்லைக் கண்டேன்.
>நாம் ஆங்கிலத்தில் couch potato என்கிறோமே. அதேதான்.
>மடிமை என்றால் சோம்பல். உண்டு உண்டு சோம்பி இருப்பவனுக்கு
>உண்மடி என்று பெயர். இது பற்றி ஒரு கட்டுரையைத் தமிழ்
>விக்கிப்பீடியாவில் எழுத எண்ணியுள்ளேன் (சுருக்கமாகவேனும்).
நல்ல சொல்! நன்கு எழுதுங்கள்.
அகராதிப் பொருள்: ”உண்மடி - உண்ணுஞ் சோம்பேறி”
http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t8825.html
இப்பொழுதுதான் நன்னூலின் ஒருசொல் விளங்குகிறது.
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0152.html
” மாணாக்கராகாதார் இலக்கணம்
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறன்இன் னோர்க்குப் பகரார் நூலே 39 ”
(வீணே) களியாட்டங்களில் ஈடுபட்டுப்
பணிமுடிக்காச் சோம்பேறி = களிமடி
என்று பொருள் கொண்டால் சிறக்கும்.
உண்மடி = உண்ணுஞ் சோம்பேறி,
அதுபோல், களிமடி = களிக்கும்/களியாடும் சோம்பேறி.
கள்ளுண்டு சோம்பிக் கிடப்பவன் எனலும் தகும்.
மடி என்னும் பெயர்ச்சொல் அடையாக
களி என்று கொள்ளும் நன்னூல் உரைகள்
உளவா? என்று பார்க்கவேண்டும்.
நா. கணேசன்