Re: [வல்லமை] Re: நெல்லுச் சோறு- சுடுசோறும் பழைய சோறும்

58 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 16, 2023, 9:52:02 PM10/16/23
to vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com
SK> > கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.

கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
---------------------------------

சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/

இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25

--------------------

கொக்குக்கும் நெல்லம் பயிருக்கும் நீண்ட தொடர்புண்டு. விளைந்து கிடக்கும் நெல்வயல்களில் கொக்குக்கள் ஏராளமாகப் பார்க்கலாம். வயல்களின் அருகே தாழம் புதரில் கொக்குகள் அமர்ந்துள்ள காட்சி சங்க நூல்களில் மிகுதி. There is a famous poem by MaanguDi Kizaar, a kind of anti-establishment poem. Due to immigration from the North, often called as VeLir varukai, the four varNa aashrama was getting established. This poem takes 4 things in different categories, each of the 4 things are common and ordinary stuff well known to the people. The poet declares what was old Tamil religion, and talks of 4 things at the bottom that forms the basis.

அடலகுந் துப்பின்................
    [மருதம் தாழை]  குருந்தே முல்லையென்று
         இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
   கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
   சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு              
         இந்நான் கல்லது உணாவும் இல்லை;
   துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
        இந்நான் கல்லது குடியும் இல்லை;
  ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
  ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்          
  கல்லே பரவின் அல்லது
       *நெல்உகுத்துப்* பரவும் கடவுளும் இலவே.

நெல் எல்லா வழிபாட்டிலும் இருந்தமை தெரிகிறது. நெல் உகுத்தல், இன்று அக்‌ஷதை ஆகிவிட்டது.

வேளிர் வருகையால், ஆற்றங்கரைகளில் நெல் வேளாண்மை பெருகிற்று. பொருந்தில் என்னும் பழனிக்கு அருகே உள்ள மருதத்திணை ஊரில் நெல் உள்ள மட்சாடியால் கிடைத்த தமிழ் பிராமி முக்கியமானது. மிகப் பழையது. பயிர-/வயிர- என்னும் சொல்விளையாட்டைக் காட்டும் எழுத்து. பகு-/வகு-, பழுதி/வழுதி, பாசவல்/வாசவல், பால்/வால், ... போல பண்டுதொட்டு நிகழும் ப்-/வ்- மாறுபாடு. நெல்லைக் கார்பன் டேட்டிங் செய்ய முடிகிறது. கி.கு. 490 எனக் கிடைத்தது.

தமிழ்நாட்டில் கிடைத்த பொதுவூழிக்கு முந்தைய சிற்பங்களில் மிக முக்கியமானது, வேளிர் ஒருவன் இறந்தபோது உடைத்த கலயத்தில் உள்ள பானையோடு.  Secondary Burial என்று எலும்புகளை முதுமக்கள் தாழியில் இந்தக் கலயம், அணிகளுடன் புதைத்துள்ளனர். தமிழர் கலையின் உச்சம்: கி.மு 6 அல்லது 5-ம் நூற்றாண்டு எனலாம். மகரவிடங்கர், துடி போன்ற உடல் உடைய கொற்றவையை நோக்கி வரும் காட்சி. கொற்றி என அடையாளம் காட்ட அருகே, கலைமான் நிற்கிறது. வேளிரின் கொடையாகிய நெல் மணிகள் சிதறிக் கிடைக்கின்றன. கொக்கு ஒன்று தாழைப் புதரில் அமர்ந்துள்ளது. வேளிர் அமைத்த சிறப்பு வெள்ளாமையைக் காட்டும் அற்புதமான காட்சி:
See Figure 5. Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai inside Burial Urn, Adichanallur
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Ancient Pandya kings, such as *pal yaakam vETTa mutukuTumip paruvazuti* does Vedic yajnas on the banks of tanks, rivers to this couple:
http://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html
Makara Vidangar's name as Father deity (Thai) is the only Tamil name retained while all other 11 month names in Tamil are in Prakrit showing Hellenistic calender ultimately coming from Babylon. In Indian calenders, only Makara Vidangar crocodile name and symbol is retained in the month names of an year while the rest of 11 months' symbols originate from Babylon. This fact in Indian calenders shows the strength and vitality of Vidangar-KoRRavai worship from the Indus Bronze civilization to the Sangam Pandya kings including Peruvazhuthi. Evidence for the Vidangar (Crocodile) identification is given from the latest Tamil Brahmi inscription found on the bed of a Water Tank in a temple in Tirupparangunram near Madurai, and also the beautiful pottery art in Adichanallur showing KoRRavai with her husband, Vidangar crocodile. To identify as KoRRavai, her black buck (kRSNa-mRgam/kalaimaan) vaahana is also shown in Adichanallur. In it, the ripe paddy field with an egret (kokku) giving the rice for the mortuary ritual is important as also seen from excavations from 4th century BCE Porunthal has shown. Carburized  Paddy (2400 years old!) from Porunthal site has been used by Archaeology prof. K. Rajan to determine the origins and dates of Tamil writing in Tamil country.

Linga Worship transitioning from Varuṇa to Śiva:
https://nganesan.blogspot.com/2020/07/ekamukha-linga-with-tamil-brahmi.html

நா. கணேசன்

On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர்.
>
> அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர்
> "பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
> பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"
> மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.
>
> பழஞ்சோற்றுப் பெரும்புகவு = பழைய சோறு என்று ஐயமின்றித் தெளியலாம்.
>
> கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.
> (தொடரும்)
> சக
>
>
>
> On Sun, 15 Oct 2023, 6:51 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
>>
>>                                                                          "சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
>>                                                                            யாறுபோலப் பரந்தொழுகி" (பட்டி.44-45)
>> என்ற அடிகள் காவிரிப்பூம் பட்டினத்து அட்டிற்சாலையில் நெல்லு(அரிசி)ச்சோறு ஆக்கி வடித்த வளத்தைப் பேசுகின்றன.
>>
>> நெல்லரிசியால் அன்றாடம் ஆக்கிய சுடுசோற்றைத் தொகைப்பாடல்கள் 'நாட்சோறு' என்கின்றன.
>>
>> முதல்நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் உண்ணும் போது அது 'பொம்மல்' என்று அழைக்கப்பட்டதை நற்றிணை (பா-60) மூலம் அறிகிறோம்.
>>
>> "தண்புலர் விடியல்
>>
>> கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
>>
>> புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
>>
>> கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார்.
>>
>> மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:
>>
>>
>>                                                                                                         http://ulagatamil.in/நற்றிணை-உழவன்-உண்ட-சத்து/
>>
>> இங்கு பழைய சோற்றுக்குச் சொட்டானமாக வரால் மீன் குழம்பு அமைகிறது.  
>>
>> (தொடரும்)
>>
>> சக
>

N. Ganesan

unread,
Oct 16, 2023, 11:11:27 PM10/16/23
to vall...@googlegroups.com


On Mon, Oct 16, 2023 at 9:44 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
என் ஐயம் வேறு. 
'பொம்மல்' பழைய சோற்றைக் குறிப்பது போல; 'நிமிரல்' பழைய சோற்றைக் குறிக்கிறதோ என....
சக 

பொருமல்/பொம்மல் (cf. பெருமான்/பெம்மான்; செருமான்/செம்மான் ‘leather-worker', ...) - இது பழைய சோறு. நீரை உள்வாங்கி உப்பி விடுஞ் சாதம் பழைய சாதம். சங்க நூல்களில் “பழஞ்சோறு”.

ஆனால், நிமிரல்/ஞிமிரல் அப்போது தான் ஆக்கிய சுடுசோறு. உலையில் தளபுள என ஒலி எழுப்பி ஆகும் சோறு. https://youtu.be/F-reCW5VLvM
உலை குதிக்கும் தழல் ஊறிய கானலை உன்னிச் சென்று,
கலை குதிக்கும்படி போல் இழைத்தேன் - கழிச் சேல் வெகுண்டு
வலை குதிக்கும் செம் கழுநீர் உடைந்து வழிந்த செம் தேன்
அலை குதிக்கும் தடம் சூழ் மதுராபுரி அம்பிகையே!         27.

நிமிர்தலால் ஞிமிறு (வண்டு, அளி). ஞிமிர்சிட்டு https://groups.google.com/g/santhavasantham/c/ElInO9skheU/m/nXhAhrh7b3UJ 
இந்தியாவில் இல்லாத, அமெரிக்கக் கண்டங்களில் வாழ் ஹம்மிங் பறவை.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdxdigfdpq2O6XqhhTSob9e58Tv4EpyiQgqQLWdz8Mg8w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctxMFryx4HxWQE%2B%2BOMYad%3DxgKrM%3DQdnYHEcoDYM%3D-ttiA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 17, 2023, 12:26:32 AM10/17/23
to vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com
On Mon, Oct 16, 2023 at 8:51 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
SK> > கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.

கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
------------------------------
---

சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/

இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25

வனமுல்லைப் பூப் போலவும், கொக்கின் நகம் போலவும் உள்ள நீண்ட அரிசிச் சோறு என்கிறது சீவக சிந்தாமணி:

கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே.

   (இ - ள்.) மோட்டு இளமுல்லை முகையின் மொய்கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு - உயர்ந்த இளமை பொருந்திய முல்லையரும்பைப் போலத் திரட்சி கொண்ட, கொக்கின் நகம் போன்ற நீண்ட வெண்சோறும்;

வாசமதி போன்ற நெல்வகை சங்க காலத்தில் பயிரிட்டனர் எனத் தெரிகிறது. நீண்ட வெண்சோற்றுக்குக் கொக்குகிரும், காட்டு முல்லையும் ( Jasminum  angustifolium ) உவமை.

N. Ganesan

unread,
Oct 17, 2023, 8:24:37 AM10/17/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham
ஞிமிர்தல்/நிமிர்தல் “ஞிமிறு” என அளிகளில் ஒருவகைக்குப் பெயர்தரும் வினைச்சொல். எனவே, ஞிமிறு ஒரு தொழிற்பெயர்.
எத்தனையோ சொன்முதல் மெய் அழிபட்டுச் சொற்கள் உருவாதலைப் பட்டியலிட்டு ஓரிழையில் கொடுத்துள்ளேன்.
அவ்வகையில், நிமிர்தல் > இமிர்தல் என்றாவதும் பார்த்தோம். இமிர்வண்டு .... நிமை-த்தல் > இமைத்தல். நிமி பற்றிய புராணக்கதையும், நிமிழம் > நிமிஷம் என வடமொழியில் வருவதும் சொல்லினேன்.

நிமிரல் என்பது தளபுள என உலையில் கொதித்து உருவாகும் சுடுசோறு. பழஞ்சோறு இரவில் நீரில் ஊறி, உப்பும் பொருமல்/பொம்மல் என்பதற்கு நேர்மாறு.

நிமிரல் ‘சுடுசோறு’ போலவே, ஒலியால் உண்டாகும் இன்னொரு உணவும் சங்க இலக்கியத்தில் அழகாகப் பாடியுள்ளனர்.

பிற பின்,
நா. கணேசன்



N. Ganesan

unread,
Oct 19, 2023, 2:16:03 PM10/19/23
to vall...@googlegroups.com
SK >> நெல்லரிசியால் அன்றாடம் ஆக்கிய சுடுசோற்றைத் தொகைப்பாடல்கள் 'நாட்சோறு' என்கின்றன.

நாட்சோறு என்றால் சுடுசோறு எனப் பொருள் இல்லை. 
நாட்சோறு = breakfast, breakfast at the wedding.

சுடுசோறு என்பதற்கு சங்க இலக்கியமும், பின்னர் காப்பியங்களிலும்
ஓர் ஒலிக்குறிப்புச் சொல் இருக்கிறது: நிமிரல்.
நிமிரல் என்னும் சொல்லின் தாதுவியல்:

உண்டிவகைகளில் இன்னொரு ஒலிக்குறிப்புச்சொல் இருக்கிறது. அதுபற்றிப் பின்னர் பார்ப்போம்.

NG


Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 22, 2023, 6:16:02 AM10/22/23
to Santhavasantham, housto...@googlegroups.com
கொக்குகிர் நிமிரல் பழஞ்சோறு என்பதால் தான் இங்கும் அச்சோற்றுக்குரிய மிதவை (குழம்பு) பற்றிய குறிப்பே இல்லை. 

சேரமான் பெருஞ்சோறு அளித்தான் எனக் காட்டும் தொடர்: பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். குழம்பும் சேர்த்துத் தான் அளித்தான் என்பது பொருள். சாந்தி காப்பி (coffee) குடித்தாள் என்கையில் கோப்பியொடு பால், சர்க்கரை, தண்ணீர் எல்லாம் சேர்ந்தே குடித்தாள். இது எல்லா மொழிகளிலும் உள்ள மரபு தான். உபலட்சணம் என்பது பெயர். இனங்குறித்தல் எனத் தமிழாக்கம் செய்தவர் பவணந்தி முனிவர் ஆவார். ஆங்கிலத்தில், https://en.wikipedia.org/wiki/Synecdoche
upalakṣaṇa (उपलक्षण).—n (S) Synecdoche (of a part for the whole, of an individual for the species, of a species for the genus, of a quality or accident for the subject); elliptical or metaphorical expression gen.
------------

திருத்தக்கதேவர் வெளிப்படையாகவே, குழம்பு பற்றிச் சொல்கிறார். கறி என்றால் மிளகு மாத்திரம் சங்க நூல்களில். ஆனால், தேவர் காலத்தில் உபலட்சணமாக, இனங்குறித்து கூட்டு, பொரியல், குழம்பு என இன்று நாம் சொல்லும் எல்லாக் கறிவகைகளையும் *கறி* என்றே கூறிவந்துள்ளனர். இன்றும் சைவர்கள், சமணர்கள் இல்லங்களில் “கறி கொதிக்கிறது” என்றால் “குழம்பு கொதிக்கிறது” எனக் காண்கிறோம். சான்று தருகிறேன். மஹாராஷ்ட்ரம் போன்ற பஞ்ச த்ராவிட தேசங்களில், கறில் என்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வண்டில். தமிழ்நாட்டில் வண்டி என்கிறோம். அதுபோல, குழம்புக்கு கறி/கறில் எனும் த்ராவிட வார்த்தைகள் ஐரோப்பிய மொழிகளில் புகுந்தன. இன்றும், போர்ச்சுகீசிய மொழியில் “கறில்” தான்.

தேவர் “கொக்குகிர் நிமிரல் வெண்சோறு ஊட்டுறு கறி” = அப்போது வடித்த நிமிரல் (1) வனமுல்லை போன்ற நீளமான அரிசியால் ஆனது. (2) கொக்கின் நகம் கருமை, ஆனால், அதன் வளைவு போல நிமிரல் வளைந்தது. வாசமதி (Basmati) அரிசி அவ்வாறே ஆதலைக் காண்கிறோம். நிமிரல் சுடுசோற்றில் ஊட்டுறு (= இட்டு நன்கு பிசைந்து உண்ணும்) மரக்கறிக் குழம்பு.

சிந்தாமணிப் பாடலை எவ்வாறு பிரித்தால் பொருள் புரியும் என, உவேசா குறிப்பிட்டுள்ளார்கள்:
கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) நற். 258 : 6.”

ஊட்டுறுதல் - உள்ளே உறுத்துதல் - இங்கே, குழம்பைச் சுடுசோற்றில் இட்டு நன்கு பிசைதல். ஊட்டுறு- என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் பொருள் காண்க. ஐரோப்பிய மொழிகளில் கறி என்ற சொல் 16-ம் நூற்றாண்டில் குழம்பு என்ற பொருளில் நுழைந்து நிலைத்தது (Hobson-Jobson dictionary citation). தமிழில் நல்ல சான்று, சிந்தாமணியில் கிடைக்கிறது. இன்றும், சைவ வெள்ளாளர் வீடுகளில் கறி என்பது மரக்கறிக் குழம்பு. 

நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்

***************************************************

தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே  இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.

இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம். 

”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி). 

"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’  என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.

அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.

சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).


நா. கணேசன்

'கருனை' பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளத் தனி இழை தொடங்கி இருக்கிறேன். அங்கே பேசலாம். 

கருங்கண் கருனை, பசுங்கண் கருனை, புலிக்கண் கருனை - ஒரே பொருளன.
கருனைக் கிழங்கின் பொரிக்கறி.


Virus-free.www.avg.com

Anand Ramanujam

unread,
Oct 22, 2023, 10:32:45 AM10/22/23
to santhav...@googlegroups.com
“அமணசாமி”யைத் தொழுகின்ற ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ பற்றிய குறிப்புகள் மூலமாகவும், ராமர் கதையைச் சொல்லும் அருணாசலக் கவிராயர் மூலமாகவும் சமய சமரசத்தை எடுத்துக்காட்டிய விதம் மிக அருமை!
    
நன்றி, திரு. கணேசன்!
..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdKrjD_Qg4am9pAHT8Ktk_jFtNTr8ytHiRKHwLe4%2BT16w%40mail.gmail.com.

Swaminathan Sankaran

unread,
Oct 22, 2023, 11:05:53 AM10/22/23
to santhav...@googlegroups.com, housto...@googlegroups.com
ஆகுபெயரையும்   ஆங்கிலத்தில்  'synecdoche' என்று மொழியாக்கம் செய்வது.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdKrjD_Qg4am9pAHT8Ktk_jFtNTr8ytHiRKHwLe4%2BT16w%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Oct 24, 2023, 8:02:52 AM10/24/23
to Santhavasantham
On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர

அவித்தல், உவித்தல் - வினைச்சொற்கள் ஆராயத்தக்கன. அவியல் அவித்தல் ஆவியில் வேகவைப்பது. இட்டிலி, சந்தகை (இழையப்பம் > இடியப்பம்.) பிட்டு (புட்டு, கேரளம்)  அவித்துச் சமைப்பவை.
இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம்.  Murugan, Agananuru, piRagu, ... 

உவித்தல்  - நீரில் இட்டு   கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு -  humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்:  "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை அவித்துச் செய்யும் கறி (= குழம்பு).  

புல்லி >> பல்லி ஆவது போல, உவியல் > அவியல், ஆவியில் சமைக்கும் முறையுடன் உவியலும் தற்காலத்தில் அவியல் என்கிறோம்!! :-)  ஈழத் தீவில் உவியல் என்ற சொல் இன்றும் புழங்குகிறது.
(1)  கருனை - கருக்குவது ‘to fry' "வறைக் கருனை” என இரு சங்கச் செய்யுளிலும், “(பசும்/கரும்) கண் கருனை" எனக் கருங்கண் கொண்ட கருனைக் கிழங்கின் பொரிக்கறி இருமுறை சங்கச் செய்யுளில் உள்ளது.
(2) சால்-/சார்- சால்பு : சான்றோன் என ஒருபொருளும், தாழ் (பனை, தென்னை) மரங்களில் ஏறும் போது பயன்படும் தளைக்கயிறு, சான்று/சான்றம் (< சால்-) சாணம் என ஆகிறது. சான்றான் எனக் கள்ளிறக்குவோர் கல்வெட்டுகள் பலவற்றில் குறிப்பிடப்படுவர். வரி நீக்கி அறிவிக்கும். இன்றும் கள் இறக்குவதற்குத் தடையோ, வரியோ கூடாது என ஒரு அரசியல் இயக்கம் இருக்கிறது (Cf. Tasmac).

மேலே கொடுத்துள்ள காட்டுகள் போல, ஒரு சொல், இரு வேறுபட்ட பொருள்களைத் தரும் சொற்களைத் தொகுக்கலாம்.
(3) சுப்பு/சப்பு >> சுவை, உப்பு, உப்பளம்/உம்பளம் ... இவை ஒரு தொகுதி.
சூம்பு-/சும்பு- >> உம்- > உவி-தல் 'to boil away', உவியல், உப்பு- உப்புசம், உப்பரி, ...

அவித்தல், உவித்தல் - வேறுபாடு உண்டு. இலங்கை தவிர, வேறுபாடு மறைந்துவருகிறது.


பிற பின்,
நா. கணேசன்
 
>
>
> அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர்
> "பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்

N. Ganesan

unread,
Oct 24, 2023, 8:48:13 AM10/24/23
to Santhavasantham, palaka...@gmail.com, Arumuga Tamilan Karu, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, stalingun...@gmail.com
கோடி, தாழ் :: தாடி, ... போல, தெலுங்கால் சென்னையில் இழையப்பம் > இடியப்பம் ஆகியுள்ளது. இட்டிலி, சந்தகை (இழையப்பம்/இடியப்பம்), பிட்டு (புட்டு, கேரளம்)  அவித்துச் சமைப்பவை. இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம்.  Murugan, Agananuru, piRagu, ... தமிழ் அறிஞர், அரசியல் விமரிசகர் பழ. கருப்பையாவுக்கு எழுதின மடல்:

உவித்தல்  - நீரில் இட்டு   கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு -  humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்:  "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை உவித்துச் செய்யும் கறி (= குழம்பு).  

On Tue, Oct 24, 2023 at 7:02 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர

அவித்தல், உவித்தல் - வினைச்சொற்கள் ஆராயத்தக்கன. அவியல் அவித்தல் ஆவியில் வேகவைப்பது. இட்டிலி, சந்தகை (இழையப்பம் > இடியப்பம்.) பிட்டு (புட்டு, கேரளம்)  அவித்துச் சமைப்பவை.
இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம்.  Murugan, Agananuru, piRagu, ... 

உவித்தல்  - நீரில் இட்டு   கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு -  humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்:  "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை உவித்துச் செய்யும் கறி (= குழம்பு).  
Reply all
Reply to author
Forward
0 new messages