வண்ணப் பாடல் - 3

1,266 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 19, 2024, 8:30:25 PM3/19/24
to santhavasantham
Starting a new thread - as the earlier thread -  "வண்ணப் பாடல் - 2" ( https://groups.google.com/g/santhavasantham/c/tQ9a4yTKZDQ?hl=en  ) - has more than 800 posts.
====

2024-03-19

புன்கூர் (திருப்புன்கூர்

(வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள தலம்)

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தனதன தனதன

தந்தான தந்த .. தனதான)

(கரையற வுருகுதல் - திருப்புகழ் - திருச்செங்கோடு)


நெடிதுயர் மலையென விதவித நசையெழு

.. .. நெஞ்சாகி இந்த .. நில(ம்)மீது

.. நிரையென வருபல பிறவிகள் அவையற

.. .. நின்சீர்மொ ழிந்த .. தமிழ்பாடி

அடிமலர் இணைதனை அனுதினம் வழிபடும்

.. .. அன்பேபி றங்க .. அருளாயே

.. அமரர்கள் இடரற அரணவை பொடிபட

.. .. அன்றோர்வி லங்கல் .. வளைவீரா

வடியுடை மழுவின பிணமெரி சுடலையை

.. .. மன்றாம கிழ்ந்த .. நடமாடீ

.. வளர்மதி படமணி இளவர வலைநதி

.. .. வம்பார்க ரந்தை .. புனைவோனே

பொடியணி அழகின உனதடி தொழுதெழு

.. .. பொங்கார்வ அன்பர் .. அவர்காணப்

.. பொருவிடை அதுதனை விலகென அருளிய

.. .. புன்கூர மர்ந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

நெடிது-உயர் மலை என விதவித நசை எழு-

.. .. நெஞ்சாகி, இந்த .. நில(ம்)மீது

.. நிரை-என வரு-பல பிறவிகள் அவை அற,

.. .. நின் சீர் மொழிந்த .. தமிழ் பாடி,

அடிமலர் இணைதனை அனுதினம் வழிபடும்

.. .. அன்பே பிறங்க .. அருளாயே;

.. அமரர்கள் இடர் அற, அரணவை பொடிபட,

.. .. அன்று ஓர் விலங்கல் .. வளை-வீரா;

வடியுடை மழுவின; பிணம் எரி- சுடலையை

.. .. மன்றா மகிழ்ந்த .. நடம்-ஆடீ;

.. வளர்-மதி, படம் அணி இள-அரவு, அலை-நதி,

.. .. வம்பு ஆர்-கரந்தை .. புனைவோனே;

பொடி அணி அழகின; உனது அடி தொழுதெழு

.. .. பொங்கு-ஆர்வ அன்பர் .. அவர் காணப்,

.. பொரு-விடை அதுதனை விலகு-என அருளிய,

.. .. புன்கூர் அமர்ந்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


நெடிது-உயர் மலை என விதவித நசை எழு-நெஞ்சாகி, இந்த நில(ம்)மீது நிரை-என வரு-பல பிறவிகள் அவை அற - (நசை - ஆசை); (நெஞ்சு - மனம்); (நிரை - வரிசை);

நின் சீர் மொழிந்த தமிழ் பாடி, அடிமலர் இணைதனை அனுதினம் வழிபடும் அன்பே பிறங்க அருளாயே - (பிறங்குதல் - விளங்குதல்; மிகுதல்);

அமரர்கள் இடர் அற, அரணவை பொடிபட, அன்று ஓர் விலங்கல் வளை-வீரா - (அரண் - மதில்); (பொடிபடுதல் - அழிதல்); (விலங்கல் - மலை);

வடியுடை மழுவின - (வடி - கூர்மை);

பிணம் எரி- சுடலையை மன்றா மகிழ்ந்த நடம்-ஆடீ - (மன்றா - மன்றாக - அரங்காக); (மகிழ்தல் - விரும்புதல்); (ஆடீ - ஆடுபவனே);

வளர்-மதி, படம் அணி இள-அரவு, அலை-நதி, வம்பு ஆர்-கரந்தை புனைவோனே - (அலை - திரை; அலைத்தல் - அலைமோதுதல்); (வம்பு - வாசனை); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (கரந்தை - திருநீற்றுப்பச்சை / சிவகரந்தை);

பொடி அணி அழகின -

உனது அடி தொழுதெழு பொங்கு-ஆர்வ அன்பர் அவர் காணப் - (ஆர்வம் - பக்தி);

பொரு-விடை அதுதனை விலகு-என அருளிய, புன்கூர் அமர்ந்த பெருமானே - (பொருதல் - போர்செய்தல்);


V. Subramanian

GOPAL Vis

unread,
Mar 19, 2024, 9:59:36 PM3/19/24
to santhav...@googlegroups.com
ஆஹா! சந்தம் பிரவாஹமாக இருக்கிறது. 
கோபால். 

 . . . . . . . . . . . . . . . . .

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 19, 2024, 10:53:43 PM3/19/24
to santhav...@googlegroups.com
அருமை. குரைகட லுலகினில்.. என்ற திருப்புகழ் பாடல் சந்தம். https://kaumaram.com/thiru/nnt0753_u.html

.

Siva Siva

unread,
Mar 19, 2024, 11:04:50 PM3/19/24
to santhav...@googlegroups.com
/ அருமை. குரைகட லுலகினில்.. என்ற திருப்புகழ் பாடல் சந்தம் /

Thanks.

Were you commenting on the following song that I had posted on 3-Mar-2024 ?

***

2024-03-03

ஆப்பாடி (இக்காலத்தில் திருவாய்ப்பாடி) (திருப்பனந்தாள் அருகுள்ள தலம்)

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தனதன தாந்த

தாத்தான தந்த .. தனதான)

(குரைகடல் உலகினில் திருப்புகழ் வேப்பூர்)


கொடியன தருவினை பலபிணி சூழ்ந்து

.. .. கூற்றாரும் வந்து .. நலியாமுன்

***


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 20, 2024, 4:46:20 PM3/20/24
to santhav...@googlegroups.com

அன்புள்ள சிவசிவா,


உங்கள் திருப்புன்கூர்த் திருத்தலப் பாடலை, திருப்புகழ் குரைகடல் உலகினில் என்ற பாடலுக்குக் குருஜி ராகவன் அமைத்த மெட்டில் பாடி அதன் ஒலிப்பதிவைக் கீழே இணைத்துள்ளேன். குறைகளிருப்பின் சுட்டவும்.

 

அனந்த்

20-3-2024 


அடிமலர் இணைதனை அனுதினம் வழிபடும்

.. .. அன்பேபி றங்க .. அருளாயே

.. அமரர்கள் இடரற அரணவை பொடிபட

.. .. அன்றோர்வி லங்கல் .. வளைவீரா

வடியுடை மழுவின பிணமெரி சுடலையை

.. .. மன்றாம கிழ்ந்த .. நடமாடீ

.. வளர்மதி படமணி இளவர வலைநதி

.. .. வம்பார்க ரந்தை .. புனைவோனே

பொடியணி அழகின உனதடி தொழுதெழு

.. .. பொங்கார்வ அன்பர் .. அவர்காணப்

.. பொருவிடை அதுதனை விலகென அருளிய

.. .. புன்கூர மர்ந்த .. பெருமானே.

--
நெடிதுயர்.. -திருப்புன்கூர்-சிவசிவா பாடல் 20-3-2024.m4a

Siva Siva

unread,
Mar 20, 2024, 5:01:27 PM3/20/24
to santhav...@googlegroups.com
Thanks.
Sounds nice.

Even though the sandham is slightly different, I guess it is in the same thALam as the thiruppugazh you mentioned.

The கரையற உருகுதல் song - is on - https://kaumaram.com/thiru/nnt0588_u.html 
and YouTube has a clip by the SGTS group of Salem: கரையற உருகுதல் - https://youtu.be/4qj4sJZqJqQ?t=458

V. Subramanian


VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 20, 2024, 7:18:37 PM3/20/24
to santhav...@googlegroups.com
Thanks. As you said, the difference in the chandham pattern got absorbed in the thALam while singing. 

ananth 

Siva Siva

unread,
Mar 20, 2024, 8:00:59 PM3/20/24
to santhav...@googlegroups.com
Thanks.

2024-03-20

பறியலூர் (திருப்பறியலூர்) (இக்காலத்தில் பரசலூர்)

----------------

(வண்ணவிருத்தம்;

தனதனா தத்த தனதனா தத்த

தனதனா தத்த .. தனதான)

(மருவறா வெற்றி - திருப்புகழ் - கதிர்காமம்)

(கருதியே மெத்த - திருப்புகழ் - பொது)


நரிபுறா நத்தை கரிகரா தத்தை

.. .. நரனரா மற்றும் .. உளவாகி

.. நலிதல்வீ டற்கு நினதுபா தத்தை

.. .. நணுகுஞா னத்தை .. அருளாயே

பரிவிலா மத்த மதியன்நே ரற்ற

.. .. படியிலோர் குற்ற .. மகமேசெய்

.. பழியதார் தக்கன் முடியைவீழ் வித்த

.. .. பறியல்வீ ரட்டம் .. உறைவோனே

விரியுமா லத்தை அமுதமா நச்சி

.. .. மிடறுகார் உற்ற .. அருளாளா

.. விரவலார் உற்ற எயிலெலாம் அட்ட

.. .. விறலினாய் வெற்றி .. விடையானே

உரியையே சுற்றி அரையில்நாண் ஒக்க

.. .. உரகமே கட்டு .. திருவாளா

.. உமையுன்வா மத்தில் உறையவே ணிக்கண்

.. .. உலவநீர் வைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

நரி புறா நத்தை கரி கரா தத்தை

.. .. நரன் அரா மற்றும் .. உள ஆகி

.. நலிதல் வீடற்கு நினது பாதத்தை

.. .. நணுகு-ஞானத்தை .. அருளாயே;

பரிவு-இலா மத்த மதியன், நேர்-அற்ற

.. .. படியில் ஓர் குற்ற .. மகமே செய்

.. பழியது ஆர் தக்கன் முடியை வீழ்வித்த

.. .. பறியல் வீரட்டம் .. உறைவோனே;

விரியும் ஆலத்தை அமுதமா நச்சி

.. .. மிடறு கார் உற்ற .. அருளாளா;

.. விரவலார் உற்ற எயில்-எலாம் அட்ட

.. .. விறலினாய்; வெற்றி .. விடையானே;

உரியையே சுற்றி அரையில் நாண் ஒக்க

.. .. உரகமே கட்டு .. திருவாளா;

.. உமை உன் வாமத்தில் உறைய, வேணிக்கண்

.. .. உலவ நீர் வைத்த .. பெருமானே.


நரி புறா நத்தை கரி கரா தத்தை நரன் அரா மற்றும் உள ஆகி நலிதல் வீடற்கு - (கரி - யானை); (கரா - முதலை); (தத்தை - கிளி); (நரன் - மனிதன்); (அரா - பாம்பு); (மற்றும் - மேலும்); (நலிதல் - வருந்துதல்); (வீடுதல் - ஒழிதல்; நீங்குதல்);

நினது பாதத்தை நணுகு-ஞானத்தை அருளாயே - (நணுகுதல் - அணுகுதல்; அடைதல்);

பரிவு-இலா மத்த மதியன், நேர்-அற்ற படியில் ஓர் குற்ற மகமே செய் பழியது ஆர் தக்கன் முடியை வீழ்வித்த பறியல் வீரட்டம் உறைவோனே - (பரிவு - அன்பு); (மத்தம் - செருக்கு; மயக்கம்); (நேர் - செவ்வை; நீதி); (படி - விதம்); (மகம் - யாகம்);

விரியும் ஆலத்தை அமுதமா நச்சி மிடறு கார் உற்ற அருளாளா - (நச்சுதல் - விரும்புதல்); (அமுதமா - அமுதமாக); (கார் - கருமை);

விரவலார் உற்ற எயில்-எலாம் அட்ட விறலினாய் - (விரவலார் - பகைவர்); (எயில் - மதில்); (அடுதல் - அழித்தல்); (விறல் -வீரம்; வெற்றி);

வெற்றி விடையானே -

உரியையே சுற்றி அரையில் நாண் ஒக்க உரகமே கட்டு திருவாளா - (உரி - தோல்); (உரகம் - பாம்பு);

உமை உன் வாமத்தில் உறைய, வேணிக்கண் உலவ நீர் வைத்த பெருமானே - (வாமம் - இடப்பக்கம்); (வேணி - சடை); (கண் - ஏழாம்வேற்றுமை உருபு);


V. Subramanian


On Tue, Mar 19, 2024 at 9:59 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
ஆஹா! 

Siva Siva

unread,
Mar 21, 2024, 8:30:32 PM3/21/24
to santhav...@googlegroups.com

2024-03-21

ஒற்றியூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தனதன தனதன

தத்தத் தத்தன தத்தத் தத்தன .. தந்ததான)

(படிதனில் உறவெனும் - திருப்புகழ் - (பொது)


அனலென எரிநசை பலபல மனமெழ

.. .. அத்தத் துக்கென எய்ப்புற் றுத்தின(ம்) .. நொந்திடாதே

.. அருவினை அறவென தகமதில் அறுபகை

.. .. அற்றுச் சொற்றமிழ் இட்டுப் பற்றிடும் .. அன்புதாராய்

கனைகழல் ஒலிசெய நடமிடும் அழகின

.. .. கச்சுக் குப்பணி கட்டிப் பிச்சையி .. ரந்ததேவா

.. கடிமலி கணைமதன் உடலெரி முனிவின

.. .. கட்டற் றுத்திகழ் பெற்றித் தத்துவ .. மங்கைபாகா

மினலன ஒளிமணி முடியணி தசமுகன்

.. .. வெற்பைப் பற்றிய துட்டக் கொற்றவன் .. அஞ்சுமாறு

.. விரலது கொடுபுய(ம்) நெரிதிரு வடியின

.. .. மெச்சிப் பற்பல செப்பக் கட்கமி .. ரங்கியீவாய்

உனதடி சுரர்தொழ அசுரர்கள் திரிபுரம்

.. .. ஒற்றைப் பொற்சிலை தொட்டுச் செற்றிடு .. வென்றிவீரா

.. உலகினர் பசிதவிர் கருமுகில் அணிபொழில்

.. .. உச்சிப் பட்டிடும் ஒற்றிப் புற்றுறை .. எம்பிரானே.


பதம் பிரித்து:

அனல் என எரி-நசை பலபல மனம் எழ,

.. .. அத்தத்துக்கு என எய்ப்புற்றுத் தின(ம்) .. நொந்திடாதே,

.. அருவினை அற, எனது அகமதில் அறுபகை

.. .. அற்றுச், சொற்றமிழ் இட்டுப் பற்றிடும் .. அன்பு தாராய்;

கனைகழல் ஒலிசெய நடமிடும் அழகின;

.. .. கச்சுக்குப் பணி கட்டிப் பிச்சை இரந்த தேவா;

.. கடி மலி- கணை மதன் உடல்-எரி முனிவின;

.. .. கட்டு அற்றுத் திகழ் பெற்றித் தத்துவ; .. மங்கைபாகா;

மினல் அன ஒளி-மணி முடி அணி- தசமுகன்,

.. .. வெற்பைப் பற்றிய துட்டக் கொற்றவன் .. அஞ்சுமாறு,

.. விரலதுகொடு புய(ம்) நெரி- திருவடியின;

.. .. மெச்சிப் பற்பல செப்பக், கட்கம் இரங்கி ஈவாய்;

உனது அடி சுரர் தொழ அசுரர்கள் திரிபுரம்

.. .. ஒற்றைப் பொற்சிலை தொட்டுச் செற்றிடு .. வென்றி-வீரா;

.. உலகினர் பசி தவிர் கருமுகில் அணி-பொழில்

.. .. உச்சிப் பட்டிடும் ஒற்றிப்-புற்று உறை .. எம்பிரானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


அனல் என எரி-நசை பலபல மனம் எழ, அத்தத்துக்கு என எய்ப்புற்றுத் தின(ம்) நொந்திடாதே - (நசை - ஆசை); (அத்தம் - அர்த்தம் - செல்வம்; பொருள்); (எய்ப்பு - இளைப்பு; மெய்வருந்துதல்);

அருவினை அற, எனது அகமதில் அறுபகை அற்றுச், சொற்றமிழ் இட்டுப் பற்றிடும் அன்பு தாராய் - (அகம் - மனம்); (சொற்றமிழ் - சிறந்த சொற்கள் நிறைந்த பாமாலை);

கனைகழல் ஒலிசெய நடமிடும் அழகின - (கனைதல் / கனைத்தல் - ஒலித்தல்);

கச்சுக்குப் பணி கட்டிப் பிச்சை இரந்த தேவா - (கச்சு - அரையில் கட்டும் பட்டிகை); (பணி - பாம்பு); (இரத்தல் - யாசித்தல்);

கடி மலி- கணை மதன் உடல்-எரி முனிவின - (கடி - வாசனை); (முனிவு - கோபம்);

கட்டு அற்றுத் திகழ் பெற்றித் தத்துவ - (கட்டு - பந்தம்; மும்மலக்கட்டு); (பெற்றி - பெருமை; தன்மை); (தத்துவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன்);

மங்கைபாகா -

மினல் அன ஒளி-மணி முடி அணி- தசமுகன், வெற்பைப் பற்றிய துட்டக் கொற்றவன் அஞ்சுமாறு, விரலதுகொடு புய(ம்) நெரி- திருவடியின - (மினல் - மின்னல்); (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (கொற்றவன் - அரசன்); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (புயம் - புஜம் - தோள்); (நெரித்தல் - நசுக்குதல்);

மெச்சிப் பற்பல செப்பக், கட்கம் இரங்கி ஈவாய் - (கட்கம் - வாள்);

உனது அடி சுரர் தொழ அசுரர்கள் திரிபுரம் ஒற்றைப் பொற்சிலை தொட்டுச் செற்றிடு வென்றி-வீரா - (ஒற்றை - ஒப்பற்ற); (பொன் - அழகு); (சிலை - வில்; மலை); (செறுதல் - அழித்தல்); (வென்றி - வெற்றி);

உலகினர் பசி தவிர் கருமுகில் அணி-பொழில் உச்சிப் பட்டிடும் ஒற்றிப்-புற்று உறை எம்பிரானே - (படுதல் - தீண்டுதல்);


V. Subramanian


On Wed, Mar 20, 2024 at 8:00 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-03-20

GOPAL Vis

unread,
Mar 21, 2024, 10:35:56 PM3/21/24
to santhav...@googlegroups.com
Excellent! 
No more words! 
gopal.

On Fri, Mar 22, 2024 at 6:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-03-21

ஒற்றியூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தனதன தனதன

தத்தத் தத்தன தத்தத் தத்தன .. தந்ததான)

(படிதனில் உறவெனும் - திருப்புகழ் - (பொது)


அனலென எரிநசை பலபல மனமெழ

.. .. அத்தத் துக்கென எய்ப்புற் றுத்தின(ம்) .. நொந்திடாதே

.. அருவினை அறவென தகமதில் அறுபகை

.. .. அற்றுச் சொற்றமிழ் இட்டுப் பற்றிடும் .. அன்புதாராய்

கனைகழல் ஒலிசெய நடமிடும் அழகின

.. .. கச்சுக் குப்பணி கட்டிப் பிச்சையி .. ரந்ததேவா

.. கடிமலி கணைமதன் உடலெரி முனிவின

.. .. கட்டற் றுத்திகழ் பெற்றித் தத்துவ .. மங்கைபாகா

மினலன ஒளிமணி முடியணி தசமுகன்

.. .. வெற்பைப் பற்றிய துட்டக் கொற்றவன் .. அஞ்சுமாறு

.. விரலது கொடுபுய(ம்) நெரிதிரு வடியின

.. .. மெச்சிப் பற்பல செப்பக் கட்கமி .. ரங்கியீவாய்

உனதடி சுரர்தொழ அசுரர்கள் திரிபுரம்

.. .. ஒற்றைப் பொற்சிலை தொட்டுச் செற்றிடு .. வென்றிவீரா

.. உலகினர் பசிதவிர் கருமுகில் அணிபொழில்

.. .. உச்சிப் பட்டிடும் ஒற்றிப் புற்றுறை .. எம்பிரானே.


Ram Ramakrishnan

unread,
Mar 21, 2024, 10:54:08 PM3/21/24
to santhav...@googlegroups.com
மிக அருமை.

மிகக் கடினமான வண்ணவிருத்தம் உங்கள் கைவிளையாட்டில் அனாயாசமாய் உருப்பெற்று மின்னுகின்றது. 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 21, 2024, at 20:30, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOaHUXy0AZ_QG7UNeydZfLTHN1hgY_9R8uNHktuX-Fv_w%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 21, 2024, 11:00:33 PM3/21/24
to santhav...@googlegroups.com
Thank you both.

V. Subramanian

On Thu, Mar 21, 2024 at 10:54 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மிக அருமை.

மிகக் கடினமான வண்ணவிருத்தம் உங்கள் கைவிளையாட்டில் அனாயாசமாய் உருப்பெற்று மின்னுகின்றது. 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
---
On Thu, Mar 21, 2024 at 10:35 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
Excellent! 
No more words! 
gopal.
---

Siva Siva

unread,
Mar 22, 2024, 9:34:53 PM3/22/24
to santhav...@googlegroups.com

2024-03-21

ஆவடுதுறை

----------------

(வண்ணவிருத்தம்;

தானன தனன தானன தனன

தானன தனன .. தனதான)

(தோரண கனக - திருப்புகழ் - பொது)


சேவமர் பரம தீயன உருவ

.. .. சீறிடும் அரவை .. அணிமார்பா

.. தீவினை அழிய நாவினில் உனது

.. .. சீரணி பரிசை .. அருளாயே

மூவரண் அவுணர் ஓர்நொடி அளவில்

.. .. மூளெரி முழுக .. அமராடீ

.. மோதக(ம்) மகிழும் வாயுடை மகனை

.. .. மூவிரு முகனை .. அருள்தாதாய்

ஆவதன் உருவில் மாதுமை தொழுத

.. .. ஆவடு துறையில் .. உறைவோனே

.. ஆவென அழுது மாமுலை அமுதை

.. .. ஆர்தமிழ் விரகர் .. அவர்பாடத்

தாழ்வறு கனகம் ஆயிரம் அருள்செய்

.. .. சால்பின பணியும் .. அடியார்தம்

.. தாவற வினைகள் தீரொரு தலைவ

.. .. தாயினும் இனிய .. பெருமானே.


பதம் பிரித்து:

சே அமர் பரம; தீ அன உருவ;

.. .. சீறிடும் அரவை .. அணி-மார்பா;

.. தீவினை அழிய நாவினில் உனது

.. .. சீர் அணி பரிசை .. அருளாயே;

மூ-அரண் அவுணர் ஓர் நொடி அளவில்

.. .. மூள்-எரி முழுக .. அமர்-ஆடீ;

.. மோதக(ம்) மகிழும் வாயுடை மகனை,

.. .. மூவிரு முகனை, .. அருள்-தாதாய்;

ஆவதன் உருவில் மாதுமை தொழுத

.. .. ஆவடு துறையில் .. உறைவோனே;

.. ஆவென அழுது மாமுலை அமுதை

.. .. ஆர்-தமிழ் விரகர் .. அவர் பாடத்,

தாழ்வு-அறு கனகம் ஆயிரம் அருள்செய்

.. .. சால்பின; பணியும் .. அடியார்தம்

.. தாவற வினைகள் தீர்-ஒரு தலைவ;

.. .. தாயினும் இனிய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


சே அமர் பரம - (சே - எருது); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

தீ அன உருவ - (அன - அன்ன - போன்ற);

சீறிடும் அரவை அணி-மார்பா -

தீவினை அழிய நாவினில் உனது சீர் அணி பரிசை அருளாயே - (சீர் - புகழ்); (பரிசு - குணம்);

மூ-அரண் அவுணர் ஓர் நொடி அளவில் மூள்-எரி முழுக அமர்-ஆடீ - (அரண் - மதில்); (அவுணர் - அசுரர்); (எரி - தீ); (அமர் - போர்); (ஆடீ - ஆடியவனே - செய்தவனே);

மோதக(ம்) மகிழும் வாயுடை மகனை, மூவிரு முகனை, அருள்-தாதாய் - (தாதை - தந்தை);

ஆவதன் உருவில் மாதுமை தொழுத ஆவடுதுறையில் உறைவோனே - (- பசு); (மாதுமை - அழகிய உமை);

ஆவென அழுது மாமுலை அமுதை ஆர்-தமிழ் விரகர் அவர் பாடத், தாழ்வு-அறு கனகம் ஆயிரம் அருள்செய் சால்பின - (ஆர்தல் - உண்தல்); (தமிழ்விரகர் - திருஞான சம்பந்தர்); (தாழ்வு - வறுமை; குற்றம்); (அறுத்தல் - நீக்குதல்; அறுதல் - இல்லாமற்போதல்); (சால்பு - தன்மை; மேன்மை);

பணியும் அடியார்தம் தாவற வினைகள் தீர்-ஒரு தலைவ - (தா / தாவு - கேடு; வருத்தம்); (ஒரு - ஒப்பற்ற);

தாயினும் இனிய பெருமானே -


V. Subramanian

Akila Guru

unread,
Mar 23, 2024, 8:08:59 AM3/23/24
to santhav...@googlegroups.com
அருமையான பதிவு🙏🏾🙏🏾

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 24, 2024, 8:31:08 PM3/24/24
to santhav...@googlegroups.com
Thanks.


2024-03-24

வேட்களம்

----------------

(வண்ணவிருத்தம்;

தானன தந்தன தாத்த தத்தன

தானன தந்தன தாத்த தத்தன

தானன தந்தன தாத்த தத்தன .. தனதான)

(வாசனை மங்கையர் - திருப்புகழ் - திருப்பராய்த்துறை)


ஏலம ணிந்திடு கார்த்த பொற்குழல்

.. .. .. மாதினை மைந்தரை வீட்டை மெச்சினை

.. .. ஏறுத னந்தனை நோக்கி எய்ப்பினில் .. அமிழாதே

.. ஏர்மலி செந்தமிழ் நாக்கில் வைத்துனை

.. .. .. நாடொறும் அன்பொடு வாழ்த்தி உத்தம

.. .. ஏமம டைந்திடு பாக்கி யத்தினை .. அருளாயே

மாலணி நெஞ்சொடு போட்டி இட்டயன்

.. .. .. ஓரனம் என்றுரு ஏற்ற லப்புற

.. .. மாலொரு பன்றிய தாய்த்தி கைத்திட .. உயர்சோதீ

.. மாமலை ஒன்றுறு தோற்றம் உற்றிடு

.. .. .. வாரணம் வென்றுரி போர்த்த வெற்றிய

.. .. வாரணி கொங்கையி னாட்கி டத்தினை .. உடையானே

ஆலம ரந்தனை ஓத்து ரைத்திட

.. .. .. நாடுப ரம்பர ஏற்றி னைப்பரி

.. .. ஆரவி ரும்பிய கூத்த மட்டுறு .. மலர்வாளி

.. ஆனம தன்றனு வீட்ட முக்கண

.. .. .. மாசுணம் அம்புலி சேர்த்த பொற்சடை

.. .. ஆறது தங்கிட ஏற்ற அற்புத .. உருவானே

பாலன வெண்பொடி ஆட்டி நித்தலும்

.. .. .. நாம(ம்)மொ ழிந்துனை ஏத்து நற்றவர்

.. .. பாலடை அந்தக னார்க்கு மைத்திடு .. கழலானே

.. பாத(ம்)நி னைந்தடர் காட்டி டைத்தவ(ம்)

.. .. .. நீடுபு ரிந்திடு பார்த்த னுக்கொரு

.. .. பாசுப தந்தரு வேட்க ளத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

ஏலம் அணிந்திடு கார்த்த பொற்குழல்

.. .. .. மாதினை, மைந்தரை, வீட்டை, மெச்சினை,

.. .. ஏறு-தனந்தனை நோக்கி எய்ப்பினில் .. அமிழாதே,

.. ஏர் மலி செந்தமிழ் நாக்கில் வைத்து, உனை

.. .. .. நாள்தொறும் அன்பொடு வாழ்த்தி, உத்தம

.. .. ஏமம் அடைந்திடு பாக்கியத்தினை .. அருளாயே;

மால் அணி- நெஞ்சொடு போட்டி இட்டு, அயன்

.. .. .. ஓர் அனம் என்று உரு ஏற்று அலப்புற,

.. .. மால் ஒரு பன்றியதாய்த் திகைத்திட .. உயர்-சோதீ;

.. மா-மலை ஒன்று உறு தோற்றம் உற்றிடு

.. .. .. வாரணம் வென்று, உரி போர்த்த வெற்றிய;

.. .. வார் அணி- கொங்கையினாட்கு இடத்தினை .. உடையானே;

ஆலமரந்தனை ஓத்து உரைத்திட

.. .. .. நாடு-பரம்பர; ஏற்றினைப் பரி

.. .. ஆர விரும்பிய கூத்த; மட்டு-உறு .. மலர் வாளி

.. ஆன மதன்-தனு வீட்ட முக்கண;

.. .. .. மாசுணம் அம்புலி சேர்த்த பொற்சடை

.. .. ஆறது தங்கிட ஏற்ற அற்புத .. உருவானே;

பால் அன வெண்பொடி ஆட்டி நித்தலும்

.. .. .. நாம(ம்) மொழிந்து உனை ஏத்து நற்றவர்

.. .. பால் அடை- அந்தகனார்க் குமைத்திடு .. கழலானே;

.. பாத(ம்) நினைந்து அடர் காட்டிடைத் தவ(ம்)

.. .. .. நீடு-புரிந்திடு பார்த்தனுக்கு ஒரு

.. .. பாசுபதந் தரு- வேட்களத்து-உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


ஏலம் அணிந்திடு கார்த்த பொற்குழல் மாதினை, மைந்தரை, வீட்டை, மெச்சினை, ஏறு-தனந்தனை நோக்கி எய்ப்பினில் அமிழாதே - (ஏலம் - பெண்கள் அணியும் மயிர்ச்சாந்து); (கார்த்த - கரிய); (மெச்சு - புகழ்); (தனம் - செல்வம்); (நோக்குதல் - கருதுதல்); (எய்ப்பு - இளைப்பு; வருத்தம்);

ஏர் மலி செந்தமிழ் நாக்கில் வைத்து, உனை நாள்தொறும் அன்பொடு வாழ்த்தி - (ஏர் - அழகு; நன்மை);

உத்தம ஏமம் அடைந்திடு பாக்கியத்தினை அருளாயே - (ஏமம் - இன்பம் / காவல் (க்ஷேமம்); பொன் (ஹேமம்));

மால் அணி- நெஞ்சொடு போட்டி இட்டு, அயன் ஓர் அனம் என்று உரு ஏற்று அலப்புற, மால் ஒரு பன்றியதாய்த் திகைத்திட உயர்-சோதீ - (மால் - மயக்கம்; அறியாமை); (அயன் - பிரமன்); (அனம் - அன்னம்); (அலப்பு - மனக்கலக்கம்); (திகைத்தல் - மயங்குதல்; சோர்தல்);

மா-மலை ஒன்று உறு தோற்றம் உற்றிடு வாரணம் வென்று, உரி போர்த்த வெற்றிய - (உறுதல் - ஒத்தல்); (வாரணம் - யானை); (உரி - தோல்);

வார் அணி- கொங்கையினாட்கு இடத்தினை உடையானே - (வார் - முலைக்கச்சு); (கொங்கை - முலை); (இடம் - இடப்பக்கம்);

ஆலமரந்தனை ஓத்து உரைத்திட நாடு-பரம்பர - (ஓத்து - வேதம்); (பரம்பரன் - மேலோர்க்கும் மேலானவன்);

ஏற்றினைப் பரி ஆர விரும்பிய கூத்த - (ஏறு - எருது); (பரி - குதிரை); (ஆர்தல் - ஒத்தல்);

மட்டு-உறு மலர் வாளி ஆன மதன்-தனு வீட்ட முக்கண - (மட்டு - தேன்; வாசனை); (உறுதல் - இருத்தல்; மிகுதல்); (வாளி - அம்பு); (தனு - உடல்); (வீட்டுதல் - அழித்தல்);

மாசுணம் அம்புலி சேர்த்த பொற்சடை ஆறது தங்கிட ஏற்ற அற்புத உருவானே - (மாசுணம் - பாம்பு); (உருவான் - உரு உடையவன்);

பால் அன வெண்பொடி ஆட்டி நித்தலும் நாம(ம்) மொழிந்து உனை ஏத்து நற்றவர் பால் அடை- அந்தகனார்க் குமைத்திடு கழலானே - (அன - அன்ன - போன்ற); (ஆட்டுதல் - அபிஷேகம் செய்தல்); (பால் - பக்கம்; இடம்); (குமைத்தல் - அழித்தல்);

பாத(ம்) நினைந்து அடர் காட்டிடைத் தவ(ம்) நீடு-புரிந்திடு பார்த்தனுக்கு ஒரு பாசுபதம் தரு -

வேட்களத்து-உறை பெருமானே -


V. Subramanian


Siva Siva

unread,
Mar 29, 2024, 8:30:20 PM3/29/24
to santhav...@googlegroups.com

2024-03-29

பைஞ்ஞீலி

----------------

(வண்ணவிருத்தம்;

தன்னான தந்த தந்த .. தன்னான தந்த தந்த

தன்னாதந்த தந்த .. தனதான)

(இச்சந்த அமைப்பைக் கீழ்க்கண்டவாறும் நோக்கலாம்.

தன்னா தனந்த தந்த .. தன்னா தனந்த தந்த

தன்னா தனந்த தந்த .. தனதான)

(மின்னார் பயந்த மைந்தர் - திருப்புகழ் - முள்வாய்)


உன்னாத சிந்தை மண்டு .. பொன்னாசை மங்கை இன்பம்

.. .. உண்ணாசை தந்த துன்பில் .. அமிழாதே

.. உண்ணேய(ம்) நின்றி லங்க .. என்னாவில் என்றும் உன்றன்

.. .. ஒண்நாமம் ஒன்று தங்க .. அருளாயே

இன்னா அடைந்து நொந்த .. விண்ணோர் இரந்து கெஞ்ச

.. .. எண்ணார் புரங்கள் வென்ற .. சிலைவீரா

.. என்னீர்மை சிந்தி என்ற .. அம்மால் விரிஞ்சன் அஞ்சி

.. .. எம்மீச என்றி றைஞ்ச .. எழுசோதீ

தன்னேர் இறந்தி லங்கு(ம்) .. மன்னே அலம்பு கின்ற

.. .. தண்ணாறு கொன்றை இண்டை .. மதிசூடீ

.. தண்ணாறு சந்த தென்று .. வெண்ணீறு நெஞ்ச ணிந்த

.. .. அண்ணா மடந்தை பங்கு .. மகிழ்வோனே

பன்னூ றிடம்ப ணிந்து .. சொன்மாலை கொண்ட ணிந்த

.. .. பைந்நாவர் உண்ட ரந்தை .. அதுதீரப்

.. பண்ணூண் அவண்கொ ணர்ந்து .. முன்னீயும் அன்பர் அன்ப

.. .. பைஞ்ஞீலி அங்க மர்ந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

உன்னாத சிந்தை மண்டு .. பொன்னாசை, மங்கை இன்பம்

.. .. உண்-ஆசை தந்த துன்பில் .. அமிழாதே,

.. உண்ணேய(ம்) நின்று இலங்க, .. என்-நாவில் என்றும் உன்றன்

.. .. ஒண்-நாமம் ஒன்று தங்க .. அருளாயே;

இன்னா அடைந்து நொந்த .. விண்ணோர் இரந்து கெஞ்ச,

.. .. எண்ணார் புரங்கள் வென்ற .. சிலை-வீரா;

.. "என் நீர்மை சிந்தி" என்ற .. அம்-மால் விரிஞ்சன் அஞ்சி

.. .. "எம் ஈச" என்று இறைஞ்ச .. எழு-சோதீ;

தன்-நேர் இறந்து இலங்கு(ம்) .. மன்னே; அலம்புகின்ற

.. .. தண்-ஆறு கொன்றை இண்டை .. மதிசூடீ;

.. தண்-நாறு சந்தது என்று .. வெண்ணீறு நெஞ்சு அணிந்த

.. .. அண்ணா; மடந்தை பங்கு .. மகிழ்வோனே;

பன்னூறு இடம் பணிந்து .. சொன்மாலை கொண்டு அணிந்த

.. .. பைந்-நாவர் உண்டு அரந்தை .. அது தீரப்

.. பண்ணு-ஊண் அவண் கொணர்ந்து .. முன்-ஈயும் அன்பர் அன்ப;

.. .. பைஞ்ஞீலி அங்கு அமர்ந்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


உன்னாத சிந்தை மண்டு பொன்னாசை, மங்கை இன்பம் உண்-ஆசை தந்த துன்பில் அமிழாதே - (உன்னுதல் - எண்ணுதல்); (சிந்தை - மனம்); (மண்டு - மூடன்); (மண்டுதல் - அதிகமாதல்); (உண்தல் - அனுபவித்தல்); (துன்பு - துன்பம்);

ள் நே(ம்) நின்று இலங்க, என்-நாவில் என்றும் உன்றன் ஒண்-நாமம் ஒன்று தங்க அருளாயே -

இன்னா அடைந்து நொந்த விண்ணோர் இரந்து கெஞ்ச, எண்ணார் புரங்கள் வென்ற சிலை-வீரா - (எண்ணார் - பகைவர்); (சிலை - வில்);

"என் நீர்மை சிந்தி" என்ற அம்-மால் விரிஞ்சன் அஞ்சி "எம் ஈச" என்று இறைஞ்ச எழு-சோதீ - (நீர்மை - தன்மை); (விரிஞ்சன் - பிரமன்); (சோதீ - ஜோதியே);

தன்-நேர் இறந்து இலங்கு(ம்) மன்னே - (நேர் - ஒப்பு); (இறத்தல் - கடத்தல்); (மன் - அரசன்);

அலம்புகின்ற தண்-ஆறு கொன்றை இண்டை மதிசூடீ - (அலம்புதல் - ஒலித்தல்); (தண் - குளிர்ந்த); (ஆறு - கங்கை); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

தண்-நாறு சந்தது என்று வெண்ணீறு நெஞ்சு அணிந்த அண்ணா - (நாறுதல் - மணம் கமழ்தல்); (சந்து - சந்தனம்; அது - பகுதிப்பொருள்விகுதி); (நெஞ்சு - மார்பு);

மடந்தை பங்கு மகிழ்வோனே -

பன்னூறு இடம் பணிந்து சொன்மாலை கொண்டு அணிந்த பைந்-நாவர் உண்டு அரந்தை அது தீரப் பண்ணு-ஊண் அவண் கொணர்ந்து முன்-ஈயும் அன்பர் அன்ப - (சொன்மாலை = பாமாலை); (பை - அழகு); (அரந்தை - துன்பம்); (ஊண் - உணவு); (அவண் - அவ்விடம்); (கொணர்தல் - கொண்டுவருதல்); (முன் - முன்பு);

(* திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் திருநாவுக்கரசருக்கு ஈசன் பொதிசோறு அளித்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

பைஞ்ஞீலி அங்கு அமர்ந்த பெருமானே - (அங்கு - அசை);


V. Subramanian


On Sun, Mar 24, 2024 at 8:30 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-03-24

குருநாதன் ரமணி

unread,
Mar 31, 2024, 12:18:40 AM3/31/24
to சந்தவசந்தம்
அருணகிரி நாதரின் முள்வாய் வண்ணப் பாடலில்
  வெவ்வே, பொய்யார், பொய்யார், முள்வாய்
என்று தய்யாய் சந்தங்கள் விரவி உள்ளனவே?!

ரமணி

GOPAL Vis

unread,
Mar 31, 2024, 3:49:14 AM3/31/24
to santhav...@googlegroups.com
அருமை. 
உன்னாத சிந்தை மண்டு - மண்டு என்பதற்கு மிகுந்து மலிகின்ற என்ற பொருளும் பொருந்துமோ?
கோபால். 

Siva Siva

unread,
Mar 31, 2024, 8:17:04 AM3/31/24
to santhav...@googlegroups.com
Such an aspect was briefly discussed in the following thread 
- தய்ய வண்ணச் சந்தம் பற்றியோர் ஐயம்! - 
in July 2019.

In some songs in thiruppugazh - both தன்ன and தய்ய - are treated interchangeably.

V. Subramanian

Siva Siva

unread,
Mar 31, 2024, 8:19:14 AM3/31/24
to santhav...@googlegroups.com
Yes.

உன்னாத சிந்தை மண்டு பொன்னாசைமங்கை இன்பம் உண்-ஆசை தந்த துன்பில் அமிழாதே - (விளைவுகளை உன்னை வழிபடஎண்ணாத மனத்தில் மிகுந்த பொருளாசையும் பெண்ணாசையும் தந்த துன்பத்தில் முழுகி அழியாது; (உன்னாத சிந்தை மண்டு = "எண்ணுதல் செய்யாத மனத்தை உடைய மூடனான நான்என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (உன்னுதல் எண்ணுதல்); (சிந்தை மனம்); (மண்டு மூடன்); (மண்டுதல் அதிகமாதல்); (உண்தல் அனுபவித்தல்); (துன்பு துன்பம்);

V. Subramanian

Siva Siva

unread,
Apr 2, 2024, 8:31:38 PM4/2/24
to santhav...@googlegroups.com

2024-04-02

பழனம்

----------------

(வண்ணவிருத்தம்;

தாத்தந் தந்தத் தந்தத் தனனத் .. தனதான)

(நாட்டந் தங்கிக் - திருப்புகழ் - வேப்பஞ்சந்தி)


நாற்றஞ் சிந்தக் கொன்றைப் பிணையற் .. சடையானே

.. நாட்டங் கொண்டக் கந்தக் கணையற் .. சுடுவோனே

மாற்றந் துஞ்சக் குன்றைக் குனிவித் .. தமராடீ

.. வாழ்த்துந் தொண்டர்க் கின்பச் சுனையொத் .. தக(ம்)மேயாய்

கூற்றும் பொன்றத் தண்டித் தடியர்க் .. கரணானாய்

.. கோக்குஞ் சந்தச் செஞ்சொற் கருளைப் .. பொழிவோனே

ஏற்றந் தங்கத் திங்கட் டுணியைப் .. புனைவாயால்

.. ஏற்குங் கண்டத் தண்பொற் பழனப் .. பெருமானே.


பதம் பிரித்து:

நாற்றம் சிந்து-அக்-கொன்றைப் பிணையற் .. சடையானே;

.. நாட்டங் கொண்டு அக்- கந்தக் கணையற் .. சுடுவோனே;

மாற்றம் துஞ்சக் குன்றைக் குனிவித்து அமர்-ஆடீ;

.. வாழ்த்தும் தொண்டர்க்கு இன்பச் சுனை-ஒத்து .. அக(ம்) மேயாய்;

கூற்றும் பொன்றத் தண்டித்து அடியர்க்கு .. அரண் ஆனாய்;

.. கோக்கும் சந்தச் செஞ்சொற்கு அருளைப் .. பொழிவோனே;

ஏற்றம் தங்கத் திங்கட்டுணியைப் .. புனைவாய்; ஆல்

.. ஏற்கும் கண்டத், தண்-பொற் பழனப் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

* குறிப்பு: "போற்றி" என்று ஒரு சொல்லை வருவித்துப் பொருள்கொள்க;


நாற்றம் சிந்து-அக்-கொன்றைப் பிணையல் சடையானே - (பிணையல் - மாலை);

நாட்டம் கொண்டு அக்- கந்தக் கணையற் சுடுவோனே - (நாட்டம் - கண்); (கணையற் சுடுவோனே - கணையனைச் சுடுவோனே);

மாற்றம் துஞ்சக் குன்றைக் குனிவித்து அமர்-ஆடீ - (மாற்றம் - பகை); (துஞ்சுதல் - சாதல்; அழிதல்); (குனிவித்தல் - வளைத்தல்); (அமர் - போர்);

வாழ்த்தும் தொண்டர்க்கு இன்பச் சுனை-ஒத்து அக(ம்) மேயாய் -

கூற்றும் பொன்றத் தண்டித்து அடியர்க்கு அரண் ஆனாய் - (கூற்று - காலன்); (பொன்றுதல் - சாதல்);

கோக்கும் சந்தச் செஞ்சொற்கு அருளைப் பொழிவோனே - (கோத்தல் - தொடுத்தல்); (சந்தம் - அழகு; செய்யுளின் வண்ணம்);

ஏற்றம் தங்கத் திங்கள்-துணியைப் புனைவாய் - (துணி - துண்டம்);

ஆல் ஏற்கும் கண்டத், தண்-பொற் பழனப் பெருமானே - (ஆல் - விடம்); (தண் - குளிர்ந்த); (பொன் - அழகு);


V. Subramanian


On Sun, Mar 31, 2024 at 8:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Apr 2, 2024, 9:42:24 PM4/2/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. சிவசிவா.

தொர்ந்து உங்கள் சொற்சுவையை அனுபவித்த வண்ணம் வண்ணப் பாடல்களில் என் எண்ணம் பண்ணிசைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 3, 2024, at 06:01, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Apr 2, 2024, 10:02:08 PM4/2/24
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும். கைப்பேசி “தொடர்ந்து” என்று எழுதியதை மாற்றிவிட்டது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 3, 2024, at 07:12, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அருமை, திரு. சிவசிவா.

Siva Siva

unread,
Apr 3, 2024, 9:57:44 AM4/3/24
to santhav...@googlegroups.com
Thanks.


On Tue, Apr 2, 2024 at 9:42 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, திரு. சிவசிவா.

தொடர்ந்து உங்கள் சொற்சுவையை அனுபவித்த வண்ணம் வண்ணப் பாடல்களில் என் எண்ணம் பண்ணிசைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

குருநாதன் ரமணி

unread,
Apr 8, 2024, 11:25:56 AM4/8/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
வண்ணப் பாடல்
திருப்065. 0278. தனத்த தத்தனத் —— தனதான
ஶ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் துதி - 1

திருப்ப ருப்பதத் —— துறைவீரே
. சிரிக்க முப்புரத் —— தழிவாமே
விரித்த செச்சையிற் —— சடைகொள்வீர்
. விரற்கி டப்புறத் —— தலைவாடும்
கருப்பு டற்கொளத் —— துணைகீதம்
. கனற்று நெற்றியிற் —— கனிதாரை
விரக்தி யுற்றிளைத் —— தவனானேன்
. விரித்த ருட்செயத் —— தெளிவேனே.

08 ஏப். 2024

[திருப்பருப்பதம்: ஸ்ரீசைலத்திற்கு நாயன்மார்கள் தந்த பெயர்; கிடப்பு: இங்கு காற்பெரு விரல் இயல்பாய்க் கிடப்பது போல் அழுத்தியது: தலைவாடும்: கைலாய மலை தூக்க வந்த இராவணன் தலைகள்; துணைகீதம்: மனையாள் வண்டுரு; தாரை: கண், கண்மணி ]

★★★
0278.  திருத்தணிகை திருப்புகழ்
தனத்த தத்தனத் —— தனதான

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

★★★★★
 

குருநாதன் ரமணி

unread,
Apr 9, 2024, 2:01:44 AM4/9/24
to சந்தவசந்தம்
திருப்066. 0345. தனன தத்தன | தனன தத்தன |
. தனன தத்தன —— தனதான
ஶ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் துதி - 2

பிரம ரத்துரு குமரி பெற்றனள்
. . பெரும னுக்குரு —— ஒருபூவாம்
. பெரிய கட்டளை வரவு மிக்கது
. . பெறுவ தித்தலம் —— எனவாமே

உருவ மற்றவர் அருவி லக்கணம்
. . உறுப ருப்பதம் —— இதுவாமே
. ஒருவி ரற்கிடை தலைய ழுத்தினர்
. . உறுது ணைக்குடல் —— அளியாக

அரவு சுற்றுடல் நுதலில் அக்கினி
. . அடிய வர்க்கொரு —— துணையாவான்
. அரும றைப்பொருள் திருவ ருட்செயல்
. . அமுத ளிப்பவன் —— சிவனாமே

மரண மச்சமு முடலின் வற்றலும்
. . மனவ ருத்தமும் —— எனவானேன்
. மயல ழித்தருள் உயர்வ ளித்தருள்
. . மரக தப்பரை —— மணவாளா!

09 ஏப். 2024

[பிரமரம்: வண்டு; குமரி: பார்வதி ஒருபூ: இங்கு மல்லிகை; கட்டளை: கோவிலுக்குச் செய்யும் தருமம்; பருப்பதம்: ஸ்ரீசைலத்திற்கு நாயன்மார்கள் தந்த பெயர்; தலையழுத்தினர்: இராவணன் தலைகள்; உறுதுணை: துணையாக உற்ற பார்வதி; பரை: பார்வதி; அளி: கொடை]

★★★
திருப்புகழ் 345 படிறொழுக்கமும்  (காஞ்சீபுரம்)
தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ——தனதான

படிறொ ழுக்கமு மடம னத்துள
     படிப ரித்துட ...... னொடிபேசும்
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
     பலகொ டுத்தற ...... உயிர்வாடா

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
     விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
     வினைய றப்பத ...... மருள்வாயே

கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
     குமர கச்சியி ...... லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
     குவளை முற்றணி ...... திருமார்பா

பொடிப டப்பட நெடிய விற்கொடு
     புரமெ ரித்தவர் ...... குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
     பொருது ழக்கிய ...... பெருமாளே.

★★★★★
 

GOPAL Vis

unread,
Apr 9, 2024, 3:45:57 AM4/9/24
to santhav...@googlegroups.com
அருமை!
கோபால்.

குருநாதன் ரமணி

unread,
Apr 9, 2024, 9:13:01 AM4/9/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, கோபால்ஜி.
ரமணி

Siva Siva

unread,
Apr 9, 2024, 10:01:32 AM4/9/24
to santhav...@googlegroups.com
Nice.

/ மரண மச்சமு முடலின் வற்றலும் /
Typo?
மரண வச்சமு ... ?

/ ஒருவி ரற்கிடை தலைய ழுத்தினர் /

விரற்கிடை = ?

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
Apr 10, 2024, 12:38:25 AM4/10/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. திருத்திய பாடல்:

திருப்066. 0345. தனன தத்தன | தனன தத்தன |
. தனன தத்தன —— தனதான
ஶ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் துதி - 2

பிரம ரத்துரு குமரி பெற்றனள்
. . பெரும னுக்குரு —— ஒருபூவாம்
. பெரிய கட்டளை வரவு மிக்கது
. . பெறுவ தித்தலம் —— எனவாமே

உருவ மற்றவர் அருவி லக்கணம்
. . உறுப ருப்பதம் —— இதுவாமே
. ஒருவி ரற்கடி தலைய ழுத்தினர்

. . உறுது ணைக்குடல் —— அளியாக

அரவு சுற்றுடல் நுதலில் அக்கினி
. . அடிய வர்க்கொரு —— துணையாவான்
. அரும றைப்பொருள் திருவ ருட்செயல்
. . அமுத ளிப்பவன் —— சிவனாமே

மரண வச்சமு முடலின் வற்றலும்
. . மனவ ருத்தமும் —— எனவானேன்
. மயல ழித்தருள் உயர்வ ளித்தருள்
. . மரக தப்பரை —— மணவாளா!

09 ஏப். 2024

[பிரமரம்: வண்டு; குமரி: பார்வதி ஒருபூ: இங்கு மல்லிகை; கட்டளை: கோவிலுக்குச் செய்யும் தருமம்; பருப்பதம்: ஸ்ரீசைலத்திற்கு நாயன்மார்கள் தந்த பெயர்; தலையழுத்தினர்: இராவணன் தலைகள்; உறுதுணை: துணையாக உற்ற பார்வதி; பரை: பார்வதி; அளி: கொடை]

★★★

குருநாதன் ரமணி

unread,
Apr 10, 2024, 3:38:21 AM4/10/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
திருப்067. 0344. தத்ததன தந்த | தத்ததன தந்த |
தத்ததன தந்த —— தனதான
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் துதி - 3
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

சத்ரபதி கொண்ட அச்சவுரு வஞ்சம்
. . சத்ருவழி யென்று —— தருவாளே
. சக்கிரிய ணிந்த அத்தனுரு சங்கர்
. . சத்தமிகு உந்தி —— மிகுபாடல்

   [வஞ்சம்: வாள் (பிங்.); சத்ருவழி: எதிர்களை அழி; சக்கிரி: பாம்பு; சங்கர்: சங்கரர்: சத்தமிகு...பாடல்: ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி]

உற்றசுமை நந்தி பக்கமிழி கின்ற
. . உற்றமலை யென்று —— புகழ்வாரே
. உக்ரவிழி யுந்த சித்தனுரு கொண்ட
. . உச்சியணி கங்கை —— இவர்தானே.

   [சுமை: சுமக்கை, வாகனமாக உற்றமலை என்று அன்வயித்துக் கொள்க; சித்தன்: மன்மதன்]

சுற்றுமொரு வண்டு தற்பரையு வந்து
. . சுப்பிரமை கொண்ட —— தலமீதே
. சுத்தசிவ மங்கை இப்பெருமை கொண்டு
. . சுத்திநிலை தங்கு —— தலமாமே.

   [வண்டு: வண்டுருவை; தற்பரை: பார்வதி; சுப்பிரமை: சுத்த மாயை; சுத்தசிவம்: நிட்களபரசிவம்; சுத்திநிலை: பத்தர் பாவம் நீக்கும் நிலை;]

சர்ச்சைதனில் நின்று சிக்கலையு வந்த
. . சக்கையுள மென்ற —— நிலைதானே
. சத்தபுவ னங்கள் அத்தனுரு என்ற
. . சத்தியக ணங்கள் —— அருள்வீரே.

10 ஏப். 2024

★★★
திருப்புகழ் 344 நச்சு அரவம் என்று  (காஞ்சீபுரம்)
தத்ததன தந்த தத்ததன தந்த
 தத்ததன தந்த —— தனதான

நச்சரவ மென்று நச்சரவ மென்று
. . நச்சுமிழ்க ளங்க —— மதியாலும்
. நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
. . நத்திரைவ ழங்கு —— கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
. . இச்சிறுமி நொந்து —— மெலியாதே
. எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
. . இத்தனையி லஞ்ச —— லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
. . பச்சைமலை யெங்கு —— முறைவோனே
. பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
. . பத்திரம ணிந்த —— கழலோனே

கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
. . கச்சியில மர்ந்த —— கதிர்வேலா
. கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
. . கைத்தளைக ளைந்த —— பெருமாளே.

★★★★★

GOPAL Vis

unread,
Apr 10, 2024, 5:30:21 AM4/10/24
to santhav...@googlegroups.com
சத்ரபதி கொண்ட அச்சவுரு வஞ்சம்   தந்த சந்தம்

. . சத்ருவழி

சித்தனுரு கொண்ட உருக் கொண்ட?

கோபால்.

On Wed, Apr 10, 2024 at 1:08 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_திருப்புகழ்
திருப்067. 0344. தத்ததன தந்த | தத்ததன தந்த |
தத்ததன தந்த —— தனதான
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் துதி - 3
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

சத்ரபதி கொண்ட அச்சவுரு வஞ்சம்
. . சத்ருவழி யென்று —— தருவாளே
. சக்கிரிய ணிந்த அத்தனுரு சங்கர்
. . சத்தமிகு உந்தி —— மிகுபாடல்

   [வஞ்சம்: வாள் (பிங்.); சத்ருவழி: எதிர்களை அழி; சக்கிரி: பாம்பு; சங்கர்: சங்கரர்: சத்தமிகு...பாடல்: ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி]

உற்றசுமை நந்தி பக்கமிழி கின்ற
. . உற்றமலை யென்று —— புகழ்வாரே
. உக்ரவிழி யுந்த சித்தனுரு கொண்ட
. . உச்சியணி கங்கை —— இவர்தானே.

Siva Siva

unread,
Apr 10, 2024, 8:01:23 AM4/10/24
to santhav...@googlegroups.com

2024-04-09

குடமூக்கு (கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்)

----------------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தாத்தன தனத்தன தாத்தன

தனத்தன தாத்தன .. தனதான)


இரைப்புறு மூச்சற இலத்தினர் ஆர்த்தழ

.. .. எரித்திடு காட்டினை .. அடையாமுன்

.. இடர்க்கடல் மாய்த்திடு மொழித்தொடை யாற்கமழ்

.. .. இணைக்கழல் வாழ்த்திட .. அருளாயே

நரைச்சின ஏற்றின கொலைத்தொழில் ஆற்றிடு

.. .. நமற்கொரு கூற்றுவன் .. எனவானாய்

.. நரிக்குலம் ஆர்த்திடு வனத்தினில் நாட்டிய(ம்)

.. .. நடித்திடு தாட்புகழ் .. தனைவானோர்

உரைத்திட ஏத்தொட வரைச்சிலை தூக்கிய

.. .. உரத்தின கோட்டைகள் .. அவைவேவ

.. ஒளித்தழல் வீழ்த்திய சிரிப்பின வாட்கணி

.. .. உமைக்கிடம் ஆக்கிய .. மணவாளா

திரைச்சடை மேற்பிறை நிலைத்திட ஏற்றிய

.. .. சிறப்பின தோத்திர(ம்) .. மொழிவாராய்ச்

.. செகத்தினர் போற்றிட வினைப்பகை தீர்த்தருள்

.. .. திருக்குட மூக்குறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இரைப்பு-உறு மூச்சு அற, இலத்தினர் ஆர்த்து அழ,

.. .. எரித்திடு காட்டினை .. அடையாமுன்,

.. இடர்க்கடல் மாய்த்திடு மொழித்தொடையாற் கமழ்-

.. .. இணைக்கழல் வாழ்த்திட .. அருளாயே;

நரைச்-சின- ஏற்றின; கொலைத்தொழில் ஆற்றிடு

.. .. நமற்கு ஒரு கூற்றுவன் .. என ஆனாய்;

.. நரிக்குலம் ஆர்த்திடு வனத்தினில் நாட்டிய(ம்)

.. .. நடித்திடு தாட்புகழ்-தனை வானோர்

உரைத்திட, ஏத்-தொட வரைச்-சிலை தூக்கிய

.. .. உரத்தின; கோட்டைகள் .. அவை வேவ

.. ஒளித்-தழல் வீழ்த்திய சிரிப்பின; வாட்-கணி

.. .. உமைக்கு இடம் ஆக்கிய .. மணவாளா;

திரைச்-சடைமேற் பிறை நிலைத்திட ஏற்றிய

.. .. சிறப்பின; தோத்திர(ம்) .. மொழிவாராய்ச்

.. செகத்தினர் போற்றிட வினைப்பகை தீர்த்தருள்,

.. .. திருக்குடமூக்கு உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


இரைப்பு-உறு மூச்சு அற, இலத்தினர் ஆர்த்து அழ, எரித்திடு காட்டினை அடையாமுன் -

இடர்க்கடல் மாய்த்திடு மொழித்தொடையால் கமழ்- இணைக்கழல் வாழ்த்திட அருளாயே -

நரைச்-சின- ஏற்றின -

கொலைத்தொழில் ஆற்றிடு நமற்கு ஒரு கூற்றுவன் என ஆனாய் -

நரிக்குலம் ஆர்த்திடு வனத்தினில் நாட்டிய(ம்) நடித்திடு தாட்புகழ்-தனை வானோர் உரைத்திட -

ஏத்-தொட வரைச்-சிலை தூக்கிய உரத்தின - (- அம்பு); (தொடுதல் - பாணம் பிரயோகித்தல்; அம்பு செலுத்துதல்); (வரை - மலை); (சிலை - வில்); (உரம் - வலிமை);

கோட்டைகள் அவை வேவ ஒளித்-தழல் வீழ்த்திய சிரிப்பின -

வாட்-கணி உமைக்கு இடம் ஆக்கிய மணவாளா - (வாள் - ஒளி); (கணி - கண்ணி - இடைக்குறை விகாரம்);

திரைச்-சடைமேற் பிறை நிலைத்திட ஏற்றிய சிறப்பின - (திரை - அலை; நதி);

தோத்திர(ம்) மொழிவாராய்ச் செகத்தினர் போற்றிட வினைப்பகை தீர்த்தருள் -

திருக்குடமூக்கு உறை பெருமானே - (குடமூக்கு - கும்பகோணம்);


V. Subramanian


On Tue, Apr 9, 2024 at 2:01 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

குருநாதன் ரமணி

unread,
Apr 10, 2024, 9:35:15 AM4/10/24
to சந்தவசந்தம்
திருத்தங்களுக்கு நன்றி. 

#ரமணி_திருப்புகழ்
திருப்067. 0344. தத்ததன தந்த | தத்ததன தந்த |
தத்ததன தந்த —— தனதான
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் துதி - 3
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

சத்ரபதி வஞ்சம் அச்சவுரு கொண்டு
. . சத்ருவழி யென்று —— தருவாளே
. சக்கிரிய ணிந்த அத்தனுரு சங்கர்
. . சத்தமிகு உந்தி —— மிகுபாடல்

   [வஞ்சம்: வாள் (பிங்.); சத்ருவழி: எதிர்களை அழி; சக்கிரி: பாம்பு; சங்கர்: சங்கரர்: சத்தமிகு...பாடல்: ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி]

உற்றசுமை நந்தி பக்கமிழி கின்ற
. . உற்றமலை யென்று —— புகழ்வாரே
. உக்ரவிழி யுந்த சித்தனுரு வென்ற

. . உச்சியணி கங்கை —— இவர்தானே.

   [சுமை: சுமக்கை, வாகனமாக உற்றமலை என்று அன்வயித்துக் கொள்க; சித்தன்: மன்மதன்]

சுற்றுமொரு வண்டு தற்பரையு வந்து
. . சுப்பிரமை கொண்ட —— தலமீதே
. சுத்தசிவ மங்கை இப்பெருமை கொண்டு
. . சுத்திநிலை தங்கு —— தலமாமே.

   [வண்டு: வண்டுருவை; தற்பரை: பார்வதி; சுப்பிரமை: சுத்த மாயை; சுத்தசிவம்: நிட்களபரசிவம்; சுத்திநிலை: பத்தர் பாவம் நீக்கும் நிலை;]

சர்ச்சைதனில் நின்று சிக்கலையு வந்த
. . சக்கையுள மென்ற —— நிலைதானே
. சத்தபுவ னங்கள் அத்தனுரு என்ற
. . சத்தியக ணங்கள் —— அருள்வீரே.

10 ஏப். 2024

★★★

குருநாதன் ரமணி

unread,
Apr 12, 2024, 1:30:27 AM4/12/24
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணம்
மாலை உறவுகள்!
(வண்ணப் பாடல்)
(குருநாதன் ரமணி)

சொந்த.01. தத்த தத்த தந்த தந்த —— தனதானா
(இந்த வண்ணம் அடியேன் அமைத்தது)

வட்ட மிட்ட வண்டு நின்று —— மலரேறும்
. மத்த கத்தில் வந்து நின்ற —— கவியாகும்
சிட்டு கொத்து கின்ற தண்டில் —— நறைவீழும்
. திட்ட மிட்ட சந்தி கண்டு —— மகிழ்வேனே
விட்டு விட்டு வந்து தென்றல் —— உறவாடும்
. வித்தை யிட்ட தொண்டி லின்று —— மரமாகும்
பட்டம் தொட்டு நின்று கொன்றை —— மரம்வீழும்
. பக்கம் நிற்கும் நந்த னின்று ——  துயிலானே.

[நந்தன்: புத்திரன்]

12 ஏப். 2024

★★★★★

Ram Ramakrishnan

unread,
Apr 12, 2024, 4:02:22 AM4/12/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. ரமணி.

படிக்கும் போதே தாளமிடச் செய்யும் புது வண்ணம்.
மிகவும் ரசித்தேன்.

அன்பன்
ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 12-Apr-2024, at 11:00 AM, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

#ரமணி_வண்ணம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
Apr 12, 2024, 4:26:16 AM4/12/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, ராம்கிராம் அவர்களே.
ரமணி

Kaviyogi Vedham

unread,
Apr 12, 2024, 11:33:49 AM4/12/24
to santhav...@googlegroups.com
aha  azagu ramani
yogiyar


Siva Siva

unread,
Apr 12, 2024, 3:57:53 PM4/12/24
to santhav...@googlegroups.com
Nice rhythm.

/ பட்டம் தொட்டு /

This place may need tweaking since - டம் தொ - changes the sound pattern followed in this song.

By the way, I subsequently wrote a song today using the components of this pattern.
I will post it in a few hours.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 12, 2024, 8:30:07 PM4/12/24
to santhav...@googlegroups.com

2024-04-12

பொது

--------------------------

(வண்ணவிருத்தம்;

தத்த தத்த தந்த தந்த

தத்த தத்த தந்த தந்த

தத்த தத்த தந்த தந்த .. தனதான)


இச்சகத்தில் வந்தடைந்த .. இப்பிறப்பில் என்று(ம்)நெஞ்சில்

.. .. இச்சைமிக்கு நன்றதொன்று(ம்) .. நினையாதே

.. இட்டுவக்கும் அன்புமின்றி .. அச்சுறுத்தும் அந்தகன்றன்

.. .. எய்ப்புமிக்க கும்பியென்ற .. இடம்வீழும்

பொச்சமற்று வம்புசிந்து .. சொற்சரத்தை நின்சிவந்த

.. .. பொற்பதத்த ணிந்துநின்று .. மகிழ்வேனோ

.. புத்தியற்ற மிண்டர்வெஞ்சொல் .. விட்டருத்தி கொண்டடைந்த

.. .. பொற்பினர்க்கு வஞ்சமின்றி .. அருள்வோனே;

கச்சதுற்ற கொங்கைமங்கை .. இட்டமுற்ற பங்குதந்து

.. .. கத்துமப்ப ணிந்ததிங்கள் .. முடியானே

.. கட்டுகட்டம் ஒன்றுமின்றி .. நிற்குமத்த மண்டையொன்று

.. .. கைத்தலத்தி லங்கமுன்றில் .. அடைவோனே;

அச்சமுற்ற உம்பர்இன்பு .. துய்க்கமுப்பு ரங்கள்வென்ற

.. .. அத்தினத்தில் அம்பதொன்று(ம்) .. மிகையாகும்

.. அற்புதத்தி றம்பிறங்கு(ம்) .. முக்கணத்த விண்டுகஞ்சன்

.. .. அக்கினைப்பு னைந்துகந்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


இச்சகத்தில் வந்தடைந்த இப்பிறப்பில், என்று(ம்) நெஞ்சில் இச்சை மிக்கு நன்றது ஒன்று(ம்) நினையாதே - (சகம் - ஜகம்/ஜகத் - உலகம்); (நன்றது - நன்று - நல்லது; அறம்; அது - பகுதிப்பொருள் விகுதி);

இட்டு உவக்கும் அன்பும் இன்றி -

அச்சுறுத்தும் அந்தகன்றன் எய்ப்பு மிக்க கும்பி என்ற இடம் வீழும் பொச்சம் அற்று - (அந்தகன் - இயமன்); (எய்ப்பு - இளைப்பு; மெய்வருத்தம்); (கும்பி - நரகம்); (பொச்சம் - குற்றம்);

வம்பு சிந்து சொற்சரத்தை நின் சிவந்த பொற்பதத்து அணிந்து-நின்று மகிழ்வேனோ - (வம்பு - வாசனை); (சிந்துதல் - பரப்புதல்); (சொற்சரம் - பாமாலை); (பதம் - பாதம்); (அணிதல் - சூட்டுதல்);

புத்தியற்ற மிண்டர் வெஞ்சொல் விட்டு, அருத்தி கொண்டு அடைந்த பொற்பினர்க்கு வஞ்சம் இன்றி அருள்வோனே - (மிண்டர் - கல்நெஞ்சர்); (விடுதல் - நீங்குதல்); (அருத்தி - அன்பு); (பொற்பு - அழகு; தன்மை); (அடைதல் - சரண்புகுதல்);

கச்சது உற்ற கொங்கை-மங்கை இட்டமுற்ற பங்கு தந்து, கத்தும் அப்பு அணிந்த திங்கள் முடியானே - (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (கத்துதல் - ஒலித்தல்; முழங்குதல்); (அப்பு - நீர் - கங்கை);

கட்டு கட்டம் ஒன்றுமின்றி நிற்கு(ம்) மத்த - (கட்டு - பந்தம்; மும்மலக்கட்டு); (கட்டம் - கஷ்டம்); (மத்தன் - ஊமத்தமலரை அணிந்தவன்);

மண்டை ஒன்று கைத்தலத்து இலங்க முன்றில் அடைவோனே - (மண்டை - மண்டையோடு); (கைத்தலம் - கை); (முன்றில் - வீட்டின் முன்னிடம்);

அச்சமுற்ற உம்பர் இன்பு துய்க்க, முப்புரங்கள் வென்ற அத்-தினத்தில் அம்பது-ஒன்று(ம்) மிகை ஆகும் அற்புதத்-திறம் பிறங்கு(ம்) முக்கண் அத்த - (உம்பர் - தேவர்); (இன்பு - இன்பம்); (துய்த்தல் - அனுபவித்தல்); (மிகை - அனாவசியம்); (திறம் - வலிமை; மேன்மை); (பிறங்குதல் - விளங்குதல்); (அத்தன் - தந்தை);

விண்டு கஞ்சன் அக்கினைப் புனைந்து-உகந்த பெருமானே - (விண்டு - விஷ்ணு); (கஞ்சன் - பிரமன்); (அக்கு - எலும்பு);


V. Subramanian


On Fri, Apr 12, 2024 at 1:30 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணம்

M. Viswanathan

unread,
Apr 12, 2024, 9:24:58 PM4/12/24
to Santhavasantham
அருமை..அருமை

அன்பன்
மீ.விசுவநாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Apr 12, 2024, 11:03:09 PM4/12/24
to santhav...@googlegroups.com
அருமையோ அருமை.

கைவந்த கலைவண்ணத்தில் ஐயநின் வண்ணப் பாட்டு ஒய்யார நடைபோடுகின்றது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 13, 2024, at 06:00, Siva Siva <naya...@gmail.com> wrote:



குருநாதன் ரமணி

unread,
Apr 12, 2024, 11:16:41 PM4/12/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, யோகியாரே.
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Apr 12, 2024, 11:25:17 PM4/12/24
to சந்தவசந்தம்
ஆம். திருத்திய பாடல்:

#ரமணி_வண்ணம்
மாலை உறவுகள்!
(வண்ணப் பாடல்)
(குருநாதன் ரமணி)

சொந்த.01. தத்த தத்த தந்த தந்த —— தனதானா
(இந்த வண்ணம் அடியேன் அமைத்தது)

வட்ட மிட்ட வண்டு நின்று —— மலரேறும்
. மத்த கத்தில் வந்து நின்ற —— கவியாகும்
சிட்டு கொத்து கின்ற தண்டில் —— நறைவீழும்
. திட்ட மிட்ட சந்தி கண்டு —— மகிழ்வேனே
விட்டு விட்டு வந்து தென்றல் —— உறவாடும்
. வித்தை யிட்ட தொண்டி லின்று —— மரமாகும்
பட்டம் அற்று நின்று கொன்றை —— மரம்வீழும்

. பக்கம் நிற்கும் நந்த னின்று ——  துயிலானே.

[நந்தன்: புத்திரன்; தண்டு: பூவிதழ்]

12 ஏப். 2024

★★★★★

குருநாதன் ரமணி

unread,
Apr 12, 2024, 11:27:51 PM4/12/24
to சந்தவசந்தம்
அருமை, அழகு.
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Apr 13, 2024, 12:11:55 AM4/13/24
to சந்தவசந்தம்
#ரமணி_வண்ணம்
காலை உறவுகள்!

(வண்ணப் பாடல்)
(குருநாதன் ரமணி)

(முன்னர் இட்ட சந்தத்தைச் சற்றே மாற்றி)
தத்த தந்த தத்த தந்த —— தனதானா

கட்ட விழ்ந்து முட்டு கன்று —— மடியூறும்
. கக்கி நின்று விட்ட கன்று —— மகிழ்வாகும்
சுட்டு மங்கு லிக்கு ழந்தை —— விழிகாணும்
. சுற்றி நின்ற மற்ற வொன்று —— தடுமாறும்
மட்ட விழ்ந்து விட்ட தென்றல் —— உறவாடும்
. மட்டை நின்று கத்து கின்ற —— குயிலோடும்
கட்ட றுந்த பட்ட மொன்று —— மரம்வீழும்
. கத்து கின்ற சிட்டு நின்று —— புழுதேடும்.

[அங்குலி: விரல்; மட்டு: எல்லை]

13 ஏப். 2024

★★★★★

Siva Siva

unread,
Apr 13, 2024, 9:58:19 AM4/13/24
to santhav...@googlegroups.com
"Thank you" to all those who have been following this thread.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 13, 2024, 3:48:56 PM4/13/24
to santhav...@googlegroups.com
Pattern conformance looks fine.

Wrote a song on a similar syllabic pattern.
I will post in a few hours.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 13, 2024, 8:31:05 PM4/13/24
to santhav...@googlegroups.com

2024-04-13

அம்பர் (இக்காலத்தில் - அம்பல்);

--------------------------

(வண்ணவிருத்தம்;

தத்த தந்த தத்த தந்த

தத்த தந்த தத்த தந்த

தத்த தந்த தத்த தந்த .. தனதான)


அத்தம் என்று(ம்) மக்கள் என்று(ம்) .. நித்தல் இந்த மித்தை முங்கி

.. .. அச்ச மன்கை உற்ற ழிந்து .. பொடியா(ம்)முன்

.. அத்த நின்ற னைப்ப ணிந்து .. கட்டு பந்தம் அற்ற ரந்தை

.. .. அச்சம் வென்றி ருக்க அன்பை .. அருளாயே

பொய்த்த வங்கள் நச்சு கின்ற .. பிட்டர் வந்து செப்பு கின்ற

.. .. எத்து மண்டு சொற்கள் விண்டு .. மலராரும்

.. பொற்ப தங்கள் மெச்சு தொண்டர் .. வைப்ப தென்று நிற்கும் அன்ப

.. .. பொற்பி லங்கு வெற்பு மங்கை .. ஒருபாகா

கைத்த நஞ்சு மிக்கெ ழுந்த .. அற்றை உண்டொ ளித்த கண்ட

.. .. கத்தி வந்து வெற்பி டந்த .. பெருமூடன்

.. கற்பு யங்கள் இற்றி றைஞ்ச .. வைத்த கண்ட வென்றி மிக்க

.. .. கட்கம் ஒன்ற ளித்த பண்ப .. கயிலாயா

மைத்த வண்டு சுற்றி வந்து .. தெத்தெ னெந்த தெத்தெ வென்று

.. .. மட்டை உண்டி சைக்கும் அம்பர் .. உறைவோனே

.. வற்றல் வெண்ட லைக்க லன்கை .. வைத்த லைந்தி ரக்கும் இன்ப

.. .. மற்பு யங்கள் எட்டி லங்கு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


அத்தம் என்று(ம்), மக்கள் என்று(ம்), நித்தல் இந்த மித்தை முங்கி - (அத்தம் - அர்த்தம் - பொருள்); (நித்தல் - எந்நாளும்); (மித்தை - மாயை); (முங்குதல் - மூழ்குதல்);

அச்-சமன் கை உற்று அழிந்து பொடி ஆ(ம்)முன் - (சமன் - இயமன்); (உறுதல் - படுதல்); (பொடி - சாம்பல்);

அத்த, நின்றனைப் பணிந்து, கட்டு- பந்தம் அற்று, அரந்தை அச்சம் வென்று இருக்க, அன்பை அருளாயே - (அரந்தை - துன்பம்);

பொய்த்தவங்கள் நச்சுகின்ற பிட்டர் வந்து செப்புகின்ற எத்து மண்டு- சொற்கள் விண்டு - (பொய்த்தவங்கள் - 1. பொய்த்து அவங்கள்; 2. பொய்த்-தவங்கள்); (நச்சுதல் - விரும்புதல்); (பிட்டன் - பிரஷ்டன் - நெறியினின்று வழுவியவன்); (எத்து - வஞ்சகம்); (மண்டுதல் - மிகுதல்); (விள்தல் - நீங்குதல்);

மலர் ஆரும் பொற்பதங்கள் மெச்சு- தொண்டர் வைப்பது என்று நிற்கும் அன்ப - (ஆர்தல் - ஒத்தல்); (வைப்பு - வைப்புநிதி - சேமநிதி);

பொற்பு இலங்கு வெற்பு மங்கை ஒருபாகா - (பொற்பு - அழகு); (வெற்பு - மலை);

கைத்த நஞ்சு மிக்கு எழுந்த அற்றை உண்டு ஒளித்த கண்ட - (கைத்தல் - கசத்தல்); (அற்றை - அன்று); (கண்டன் - 1. கண்டம் உடையவன்; 2. வீரன்);

கத்தி வந்து வெற்பு இடந்த பெரு-மூடன் கற்-புயங்கள் இற்று இறைஞ்ச வைத்த கண்ட - (கல் - மலை); (இறுதல் - அழிதல்);

வென்றி மிக்க கட்கம் ஒன்று அளித்த பண்ப - (வென்றி - வெற்றி); (கட்கம் - வாள்);

கயிலாயா -

மைத்த வண்டு சுற்றி வந்து "தெத்-தெனெந்த தெத்தெ" என்று மட்டை உண்டு இசைக்கும் அம்பர் உறைவோனே - (மைத்த - கருமையுடைய); (மட்டு - தேன்);

வற்றல் வெண்டலைக்-கலன் கை வைத்து, அலைந்து இரக்கும் இன்ப -

மற்-புயங்கள் எட்டு இலங்கு பெருமானே - (மல் - வலிமை); (புயம் - புஜம் - தோள்);


V. Subramanian


On Sat, Apr 13, 2024 at 12:11 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_வண்ணம்

குருநாதன் ரமணி

unread,
Apr 15, 2024, 11:13:01 PM4/15/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
திருப்114. 0946. தத்தன தானான | தத்தன தானான | தத்தன தானான —— தனதான

தற்பரை மேலேற உச்சியில் நீரோடு
. . சத்திய மேஞானி —— உருவாவீர்
. தக்கண ரூபேசர் சித்தரின் யோகீசர்
. . தக்கனை வேரோடு —— களைவீரே
[மேலேற: உடம்பில் ஏறி ஆக்கிரமித்துக் கொள்ள; தக்கணன்: தட்சிணாமூர்த்தி; தக்கன்: தட்சன்]

நற்குண மேகாணும் அற்புத மேநாடும்
. . நற்கதி யேதேடும் —— அடியார்கள்
. நற்றுணை ஆரூரர் பித்தனை யேபாட
. . நட்பினை யேநாடி —— வருவாரே
[அற்புதமே நாடும்: மறுபிறப்பில்லாத அற்புதம்; ஆரூரர்: சுந்தரர்]

பற்றுகள் வேரோடும் இற்றவை போகாது
. . பக்தியி லைதேவ —— விழலானேன்
. பக்குவ மாயீச அற்பனென் வாணாளில்
. . பட்டது மீளாது —— அருள்வீரே.

கற்றது வீணாக வுற்றது போதாது
. . கற்பனை வானாக —— உளைவேனே
. கற்றளி வேராக நெற்றியி லேசோதி
. . கட்செவி மேலாடி —— அருள்வீரே.
[கற்றளி: கற்கோவில்; கட்செவி: பாம்பு]

16 ஏப். 2024

★★★
திருப்புகழ் 946 பக்குவ ஆசார  (திருப்புக்கொளியூர்)
தத்தன தானான தத்தன தானான
     தத்தன தானான ...... தனதான

பக்குவ வாசார லட்சண சாகாதி
     பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
     பற்றுநி ராதார ...... நிலையாக

அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
     அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
     னற்புத சீர்பாத ...... மறவேனே

உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
     வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
     யுற்பல ராசீவ ...... வயலூரா

பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
     புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.

★★★★★

Siva Siva

unread,
Apr 16, 2024, 9:19:21 AM4/16/24
to santhav...@googlegroups.com
Some comments below.

On Mon, Apr 15, 2024 at 11:13 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_திருப்புகழ்
திருப்114. 0946. தத்தன தானான | தத்தன தானான | தத்தன தானான —— தனதான

தற்பரை மேலேற உச்சியில் நீரோடு
. . சத்திய மேஞானி —— உருவாவீர்
. தக்கண ரூபேசர் சித்தரின் யோகீசர்
. . தக்கனை வேரோடு —— களைவீரே
[மேலேற: உடம்பில் ஏறி ஆக்கிரமித்துக் கொள்ள; தக்கணன்: தட்சிணாமூர்த்தி; தக்கன்: தட்சன்]

நற்குண மேகாணும் அற்புத மேநாடும்
. . நற்கதி யேதேடும் —— அடியார்கள்
. நற்றுணை ஆரூரர் பித்தனை யேபாட
. . நட்பினை யேநாடி —— வருவாரே
[அற்புதமே நாடும்: மறுபிறப்பில்லாத அற்புதம்; ஆரூரர்: சுந்தரர்]

பற்றுகள் வேரோடும் இற்றவை போகாது
. . பக்தியி லைதேவ —— விழலானேன்
. பக்குவ மாயீச அற்பனென் வாணாளில்
. . பட்டது மீளாது —— அருள்வீரே.

--> / லைதேவ / 
Check pattern.

--> / மீளாது —— அருள்வீரே /
Check sandhi.

Siva Siva

unread,
Apr 17, 2024, 8:01:09 AM4/17/24
to santhav...@googlegroups.com

2024-04-16

பனந்தாள் (திருப்பனந்தாள்)

----------------

(வண்ணவிருத்தம்;

தனந்தா தனந்தா தனந்தா தனந்தா

தனந்தா தனந்த .. தனதான)

(பெருங்காரியம் போல் - திருப்புகழ் - பொது)


தனந்தா மணந்தா மகன்தா இடந்தா

.. .. சலந்தா மிகுந்த .. புகழாரும்

.. தரந்தா எனும்பார் சுகஞ்சேர் விசும்பே

.. .. தருந்தாள் வணங்க .. மறவாத

மனந்தான் இரந்தேன் இளஞ்சூ ரியன்போல்

.. .. வணஞ்சேர் விடங்க .. அருளாயே

.. வலந்தான் நினைந்தே இடந்தான் நசுங்கா

.. .. மலங்கா இறைஞ்ச .. நெரிபாதா

முனந்தே வரின்தேர் இறுங்கால் நினைந்தே

.. .. முரண்பேர் அரண்கள் .. எரிவீரா

.. முயன்றே நெருங்கா அயன்கார் வணன்சீர்

.. .. மொழிந்தே வணங்க .. எழுசோதீ

பனந்தாள் இருந்தாய் புறங்கா டமர்ந்தாய்

.. .. பழம்போல் நயந்து .. விட(ம்)மேவிப்

.. பணிந்தார் பயந்தீர் களஞ்சேர் கரும்பே

.. .. பரிந்தே வளைந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

"தனம் தா; மணம் தா; மகன் தா; இடம் தா;

.. .. சலம் தா; மிகுந்த .. புகழ் ஆரும்

.. தரம் தா" எனும் பார்; சுகம் சேர் விசும்பே

.. .. தரும் தாள் வணங்க .. மறவாத

மனந்தான் இரந்தேன்; இளம் சூரியன்போல்

.. .. வணம் சேர் விடங்க, .. அருளாயே;

.. வலந்தான் நினைந்தே இடந்தான் நசுங்கா

.. .. மலங்கா இறைஞ்ச .. நெரி-பாதா;

முனம் தேவரின் தேர் இறுங்கால், நினைந்தே

.. .. முரண்-பேர் அரண்கள் .. எரி-வீரா;

.. முயன்றே நெருங்கா அயன் கார்வணன் சீர்

.. .. மொழிந்தே வணங்க .. எழு-சோதீ;

பனந்தாள் இருந்தாய்; புறங்கா டமர்ந்தாய்;

.. .. பழம்போல் நயந்து .. விட(ம்) மேவிப்

.. பணிந்தார் பயம் தீர்- களம் சேர்- கரும்பே;

.. .. பரிந்தே வளைந்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


"தனம் தா; மணம் தா; மகன் தா; இடம் தா; சலம் தா; மிகுந்த புகழ் ஆரும் தரம் தா" எனும் பார் - (தனம் - பொன்); (மணம் - திருமணம்; கல்யாணம்); (இடம் - மனை; வீடு); (சலம் - ஜலம் - நீர்); (தரம் - தகுதி); (பார் - உலகு; உலகோர்);

சுகம் சேர் விசும்பே தரும் தாள் வணங்க மறவாத மனந்தான் இரந்தேன் - (விசும்பு - சிவலோகம்);

இளம் சூரியன்போல் வணம் சேர் விடங்க, அருளாயே - (வணம் - வண்ணம்); (விடங்கன் - அழகன்);

வலந்தான் நினைந்தே இடந்தான் நசுங்கா மலங்கா இறைஞ்ச நெரி-பாதா - (வலம் - வலிமை); (இடத்தல் - பேர்த்தல்); (மலங்குதல் - மனம்கலங்குதல்); (நசுங்கா மலங்கா - நசுங்கி மலங்கி); (செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் - செய்து என்று பொருள்); (நெரித்தல் - நசுக்குதல்);

முனம் தேவரின் தேர் இறுங்கால், நினைந்தே முரண்-பேர் அரண்கள் எரி-வீரா - (முனம் - முன்னம்); (இறுதல் - முறிதல்); (கால் - பொழுது; சமயம்); (முரண்தல் - பகைத்தல்); (பேர்தல் - போதல்; அசைதல்); (பேர் - பெரிய); (அரண் - கோட்டை);

முயன்றே நெருங்கா அயன் கார்வணன் சீர் மொழிந்தே வணங்க எழு-சோதீ - (கார்வணன் - திருமால்); (சோதீ - ஜோதியே);

பனந்தாள் இருந்தாய் -

புறங்காடு அமர்ந்தாய் - (புறங்காடு - சுடுகாடு); (அமர்தல் - விரும்புதல்);

பழம்போல் நயந்து விட(ம்) மேவிப் பணிந்தார் பயம் தீர்- களம் சேர்- கரும்பே - (நயத்தல் - விரும்புதல்); (மேவுதல் - விரும்புதல்; உண்தல்); (களம் - கண்டம்); (கரும்பு - கரும்பு போல் இனிமை பயப்பவன்);

பரிந்தே வளைந்த பெருமானே - இரங்கி வளைந்த பெருமானே;


V. Subramanian


On Mon, Apr 15, 2024 at 11:13 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

குருநாதன் ரமணி

unread,
Apr 17, 2024, 10:53:04 PM4/17/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. திருத்திய பாடல்:
// லைதேவ: வண்ணத்தில் ஐகாரம் சீர் முதலில் வந்தால் முற்றும் ஒலிக்காதோ? 

#ரமணி_திருப்புகழ்
திருப்115. 0946. தத்தன தானான | தத்தன தானான | தத்தன தானான —— தனதான


தற்பரை மேலேற உச்சியில் நீரோடு
. . சத்திய மேஞானி —— உருவாவீர்
. தக்கண ரூபேசர் சித்தரின் யோகீசர்
. . தக்கனை வேரோடு —— களைவீரே
[மேலேற: உடம்பில் ஏறி ஆக்கிரமித்துக் கொள்ள; தக்கணன்: தட்சிணாமூர்த்தி; தக்கன்: தட்சன்]

நற்குண மேகாணும் அற்புத மேநாடும்
. . நற்கதி யேதேடும் —— அடியார்கள்
. நற்றுணை ஆரூரர் பித்தனை யேபாட
. . நட்பினை யேநாடி —— வருவாரே
[அற்புதமே நாடும்: மறுபிறப்பில்லாத அற்புதம்; ஆரூரர்: சுந்தரர்]

பற்றுகள் வேரோடும் இற்றவை போகாது
. . பக்தியெ தோதேவ —— விழலானேன்

. பக்குவ மாயீச அற்பனென் வாணாளில்
. . பட்டது மீளாது —— விலகாதோ?


கற்றது வீணாக வுற்றது போதாது
. . கற்பனை வானாக —— உளைவேனே
. கற்றளி வேராக நெற்றியி லேசோதி
. . கட்செவி மேலாடி —— அருள்வீரே.
[கற்றளி: கற்கோவில்; கட்செவி: பாம்பு]

16 ஏப். 2024

★★★

Siva Siva

unread,
Apr 19, 2024, 8:00:37 AM4/19/24
to santhav...@googlegroups.com

2024-04-17

பனந்தாள் (திருப்பனந்தாள்)

----------------

(வண்ணவிருத்தம்;

தனன தத்த தனந்தா

தனன தத்த தனந்தா

தனன தத்த தனந்தா .. தனதான)


மிடிய றுக்க நினைந்தே

.. .. .. படுகு ழிக்கண் விழுந்தே

.. .. மிகவி டுக்கண் அடைந்தே .. உழலாதே

.. விரைமி குத்த நலஞ்சேர்

.. .. .. தமிழு ரைத்து வருந்தா

.. .. விதமி ருக்க மனந்தா .. மறைநாவா

கொடியை ஒத்து நுடங்கோர்

.. .. .. இடைய துற்ற அணங்கார்

.. .. குழக பெற்ற(ம்) மகிழ்ந்தூர் .. திருவாளா

.. குவிக ரத்தொ டடைந்தார்

.. .. .. வினைய ழித்து விசும்பே

.. .. குலவு பெற்றி தருஞ்சீர் .. உடையானே

மடிதி னத்தை நினைந்தே

.. .. .. கயிறு பற்று நமன்றான்

.. .. மரிய எற்றி உகந்தாய் .. அருளாளா

.. மதிய டுத்து விடஞ்சேர்

.. .. .. அரவு வைத்து மணஞ்சேர்

.. .. மலர்த ரித்த விடங்கார் .. சடையானே

அடிய வட்கு வளைந்தாய்

.. .. .. கலய ருக்கு நிமிர்ந்தாய்

.. .. அழகு மிக்க பனந்தாள் .. உறைவோனே

.. அலையில் அற்றை விடந்தான்

.. .. .. எழமி டற்றில் அணிந்தே

.. .. அமரர் உற்ற பயந்தீர் .. பெருமானே.


பதம் பிரித்து:

மிடி அறுக்க நினைந்தே

.. .. .. படுகுழிக்கண் விழுந்தே

.. .. மிக இடுக்கண் அடைந்தே .. உழலாதே,

.. விரை மிகுத்த, நலஞ்-சேர்

.. .. .. தமிழ் உரைத்து, வருந்தா

.. .. விதம் இருக்க மனம் தா, .. மறைநாவா;

கொடியை ஒத்து நுடங்கு-ஓர்

.. .. .. இடையது உற்ற அணங்கு ஆர்

.. .. குழக; பெற்ற(ம்) மகிழ்ந்து ஊர் .. திருவாளா;

.. குவி-கரத்தொடு அடைந்தார்

.. .. .. வினை அழித்து, விசும்பே

.. .. குலவு பெற்றி தரும் சீர் .. உடையானே;

மடி-தினத்தை நினைந்தே

.. .. .. கயிறு பற்று நமன்-தான்

.. .. மரிய எற்றி உகந்தாய்; .. அருளாளா;

.. மதி அடுத்து விடஞ்-சேர்

.. .. .. அரவு வைத்து மணஞ்-சேர்

.. .. மலர் தரித்த, விடங்கு-ஆர் .. சடையானே;

அடியவட்கு வளைந்தாய்;

.. .. .. கலயருக்கு நிமிர்ந்தாய்;

.. .. அழகு மிக்க பனந்தாள் .. உறைவோனே;

.. அலையில் அற்றை விடந்தான்

.. .. .. எழ, மிடற்றில் அணிந்தே

.. .. அமரர் உற்ற பயந்-தீர் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


மிடி அறுக்க நினைந்தே படுகுழிக்கண் விழுந்தே மிக இடுக்கண் அடைந்தே உழலாதே - (மிடி - வறுமை); (அறுத்தல் - இல்லாமற்செய்தல்); (படுகுழி - கொடிய வினைக்குழி); (இடுக்கண் - துன்பம்);

விரை மிகுத்த, நலம் சேர் தமிழ் உரைத்து, வருந்தா விதம் இருக்க மனம் தா, மறைநாவா - (விரை - வாசனை); (மிகுத்தல் - மிகுதல்);

கொடியை ஒத்து நுடங்கு-ஓர் இடையது உற்ற அணங்கு ஆர் குழக - (நுடங்குதல் - துவள்தல்); (ஓர் - ஒப்பற்ற); (உறுதல் - இருத்தல்); (அணங்கு - பெண்); (ஆர்தல் - பொருந்துதல்); (குழகன் - இளையோன்; அழகன்);

பெற்ற(ம்) மகிழ்ந்து ஊர் திருவாளா - (பெற்றம் - எருது); (ஊர்தல் - ஏறுதல்);

குவி-கரத்தொடு அடைந்தார் வினை அழித்து, விசும்பே குலவு பெற்றி தரும் சீர் உடையானே - (விசும்பு - வானுலகு); (குலவுதல் - தங்குதல்); (பெற்றி - தன்மை; பெருமை); (சீர் - நன்மை; புகழ்; தன்மை);

மடி-தினத்தை நினைந்தே கயிறு பற்று நமன்தான் மரிய எற்றி உகந்தாய் - (மடிதல் - சாதல்; மடித்தல் - அழித்தல்); (கயிறு - பாசம்); (மரிதல் - இறத்தல்); (எற்றுதல் - உதைத்தல்); (உகத்தல் - மகிழ்தல்);

அருளாளா -

மதி அடுத்து விடம் சேர் அரவு வைத்து மணம் சேர் மலர் தரித்த, விடங்கு ஆர் சடையானே - (அடுத்தல் - சமீபமாதல்); (விடங்கு - அழகு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

அடியவட்கு வளைந்தாய் - தாடகை என்ற அடியவளுக்காகத் தாழ்ந்தவனே;

கலயருக்கு நிமிர்ந்தாய் - குங்கிலியக் கலயர் இழுக்க நிமிர்ந்தவனே;

அழகு மிக்க பனந்தாள் உறைவோனே -

அலையில் அற்றை விடந்தான் எழ, மிடற்றில் அணிந்தே அமரர் உற்ற பயம் தீர் பெருமானே - (அலை - கடல்); (அற்றை - அன்று); (மிடறு - கண்டம்);


V. Subramanian


On Wed, Apr 17, 2024 at 10:53 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 22, 2024, 10:40:33 PM4/22/24
to santhav...@googlegroups.com

2024-04-22

வீழிமிழலை

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தாந்த தான .. தனதன தாந்த தான

தனதன தாந்த தான .. தனதான)

(தினமணி சார்ங்க பாணி - திருப்புகழ் - சீகாழி)


நசையலை ஆழ்ந்து சால .. இடரினில் வீழ்ந்து காலன்

.. .. நணுகிட மாய்ந்து கானம் .. அடையாமுன்

.. நறுமலர் ஆய்ந்து தூவி .. உனதளி சூழ்ந்து நாளு(ம்)

.. .. நலமது சேர்ந்து வாழ .. நினைவேனோ

இசையது தாங்கு நாவர் .. அவர்தொழ ஆங்கு வாசி

.. .. இலையெனும் ஓங்கு காசு .. தருவோனே

.. இடுபலி தேர்ந்து லாவு .. திருவின கோங்கு போலும்

.. .. இளமுலை தாங்கு மார்பள் .. ஒருபாகா

திசையவை பூண்ட ஆடை .. எனமகிழ் வேந்த வாடு

.. .. சிறுமதி நீண்டு வாழ .. அணிவோனே

.. செழுமலர் போன்ற தாளை .. அடைசுரர் வேண்ட வீறு

.. .. திகழ்மயில் ஊர்ந்த பாலன் .. அருள்வோனே

விசையொடு பாய்ந்த வான .. நதியது தேங்கு மாறு

.. .. விரிசடை ஏந்து நாத .. அளிபாடும்

.. விரைமலர் ஆர்ந்த சோலை .. அதுபுடை சூழ்ந்த வீழி

.. .. மிழலையை நீங்கி டாத .. பெருமானே.


பதம் பிரித்து:

நசை-அலை ஆழ்ந்து, சால .. இடரினில் வீழ்ந்து, காலன்

.. .. நணுகிட மாய்ந்து, கானம் .. அடையாமுன்,

.. நறுமலர் ஆய்ந்து தூவி, .. உன தளி சூழ்ந்து நாளு(ம்)

.. .. நலமது சேர்ந்து வாழ .. நினைவேனோ;

இசையது தாங்கு நாவர் .. அவர் தொழ ஆங்கு வாசி

.. .. இலை எனும் ஓங்கு காசு .. தருவோனே;

.. இடுபலி தேர்ந்து உலாவு .. திருவின; கோங்கு போலும்

.. .. இளமுலை தாங்கு மார்பள் .. ஒருபாகா;

திசையவை பூண்ட ஆடை .. என மகிழ் வேந்த; வாடு

.. .. சிறுமதி நீண்டு வாழ .. அணிவோனே;

.. செழுமலர் போன்ற தாளை .. அடை-சுரர் வேண்ட, வீறு

.. .. திகழ்-மயில் ஊர்ந்த பாலன் .. அருள்வோனே;

விசையொடு பாய்ந்த வான .. நதியது தேங்குமாறு

.. .. விரி-சடை ஏந்து நாத; .. அளி பாடும்

.. விரை-மலர் ஆர்ந்த சோலை .. அது புடை சூழ்ந்த வீழி-

.. .. மிழலையை நீங்கிடாத .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

நசை-அலை ஆழ்ந்து, சால இடரினில் வீழ்ந்து, காலன் நணுகிட மாய்ந்து, கானம் அடையாமுன் -(நசை - ஆசை); (இடர் - துன்பம்); (நணுகுதல் - நெருங்குதல்); (கானம் - காடு - சுடுகாடு);

நறுமலர் ஆய்ந்து தூவி, உன தளி சூழ்ந்து நாளு(ம்) நலமது சேர்ந்து வாழ நினைவேனோ - (உன - உனது); (தளி - கோயில்); (சூழ்தல் - சுற்றிவருதல்);

இசையது தாங்கு நாவர் அவர் தொழ ஆங்கு வாசி இலை எனும் ஓங்கு காசு தருவோனே - (இசை - புகழ்; இசை பொருந்திய பாமாலை); (வாசி - நாணயவட்டம்; discount when changing money);

இடுபலி தேர்ந்து உலாவு திருவின - (பலி - பிச்சை);

கோங்கு போலும் இளமுலை தாங்கு மார்பள் ஒரு பாகா - (கோங்கு - கோங்கின் அரும்பு);

திசையவை பூண்ட ஆடை என மகிழ் வேந்த -

வாடு சிறுமதி நீண்டு வாழ அணிவோனே -

செழுமலர் போன்ற தாளை அடை-சுரர் வேண்ட, வீறு திகழ்-மயில் ஊர்ந்த பாலன் அருள்வோனே - (ஊர்தல் - ஏறுதல்);

விசையொடு பாய்ந்த வான நதியது தேங்குமாறு விரி-சடை ஏந்து நாத -

அளி பாடும் விரை-மலர் ஆர்ந்த சோலை அது புடை சூழ்ந்த வீழி-மிழலையை நீங்கிடாத பெருமானே - (அளி - வண்டு); (விரை - வாசனை);


V. Subramanian


On Fri, Apr 19, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-04-17

Siva Siva

unread,
Apr 24, 2024, 8:30:41 PM4/24/24
to santhav...@googlegroups.com

2024-04-24

ஆரூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தத்தத்த .. தனதனன தத்தத்த

தனதனன தத்தத்.. தனதான)


கரியமயிர் கொக்கொத்து .. முதுகுவளை யக்குச்சி

.. .. கரமுறநி லத்துற்ற .. தினமாகிக்

.. கழியு(ம்)முனம் இக்கட்டு .. விடமிகுசி றப்புற்ற

.. .. கழலிணைதொ ழப்புத்தி .. அருளாயே

அரியயனும் அச்சுற்று .. வழிபடும ளப்பற்ற

.. .. அழலுருவ திக்கெட்டும் .. உடையானாய்

.. அடியிணைம னத்திட்ட .. அடியவர்த மைக்கட்டும்

.. .. அருவினைய றுத்துக்கை .. தருவோனே

வரியளிகள் தெத்தெத்தெ .. தெனனவென மட்டுற்ற

.. .. மலரில்மது வைத்துய்த்து .. முரலாரூர்

.. மகிபபள கர்க்குக்கண் .. மறையஒரு பத்தர்க்கு

.. .. மலர்விழிய ளித்தற்றை .. அருள்வோனே

பிரியவுமை மைப்புற்ற .. ஒளிநயனி இட்டத்த

.. .. பிணமெரிய எத்திக்கும் .. அதிர்வாகப்

.. பெருமுழவொ லிப்புற்ற .. சுடலைதனில் நட்டத்த

.. .. பிறவிறவு கட்டற்ற .. பெருமானே.


பதம் பிரித்து:

கரிய மயிர் கொக்கு ஒத்து, .. முதுகு வளையக், குச்சி

.. .. கரம் உற, நிலத்து உற்ற .. தினம் ஆகிக்

.. கழியு(ம்) முனம், இக்கட்டு .. விட, மிகு-சிறப்புற்ற

.. .. கழலிணை தொழப் புத்தி .. அருளாயே;

அரி-அயனும் அச்சுற்று .. வழிபடும் அளப்பு-அற்ற

.. .. அழல்-உருவ; திக்கு-எட்டும் .. உடை ஆனாய்;

.. அடியிணை மனத்து இட்ட .. அடியவர்தமைக் கட்டும்

.. .. அருவினை அறுத்துக் கை-தருவோனே;

வரி-அளிகள் "தெத்தெத்தெ .. தெனன" என மட்டு-உற்ற

.. .. மலரில் மதுவைத் துய்த்து .. முரல்-ஆரூர்

.. மகிப; பளகர்க்குக் கண் .. மறைய, ஒரு பத்தர்க்கு

.. .. மலர்விழி அளித்து அற்றை .. அருள்வோனே;

பிரிய-உமை மைப்பு-உற்ற .. ஒளி-நயனி இட்டத்த;

.. .. பிணம் எரிய எத்-திக்கும் .. அதிர்வு-ஆகப்

.. பெரு-முழவு ஒலிப்பு உற்ற .. சுடலைதனில் நட்டத்த;

.. .. பிறவு இறவு கட்டு அற்ற .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

கரிய மயிர் கொக்கு ஒத்து, முதுகு வளையக், குச்சி கரம் உற, நிலத்து உற்ற தினம் ஆகிக் கழியு(ம்) முனம் - (உறுதல் - இருத்தல்; மிகுதல்); (ஆதல் - சம்பவித்தல்; முடிதல்);

இக்கட்டு விட, மிகு-சிறப்புற்ற கழலிணை தொழப் புத்தி அருளாயே - (இக்கட்டு - 1. இந்தப் பந்தம்; 2. இடுக்கண்; துன்பம்);

அரி-அயனும் அச்சுற்று வழிபடும் அளப்பு-அற்ற அழல்-உருவ - (அளப்பு - அளத்தல்; எல்லை); (அழல் - தீ);

திக்கு-எட்டும் உடை ஆனாய் - திகம்பரனே;

அடியிணை மனத்து இட்ட அடியவர்தமைக் கட்டும் அருவினை அறுத்துக் கை-தருவோனே - (கைதருதல் - வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்);

வரி-அளிகள் "தெத்தெத்தெ தெனன" என மட்டு-உற்ற மலரில் மதுவைத் துய்த்து முரல்-ஆரூர் மகிப - (அளி - வண்டு); (மட்டு - வாசனை; தேன்); (துய்த்தல் - உண்தல்); (முரல்தல் - ஒலித்தல்); (மகிபன் - அரசன்);

பளகர்க்குக் கண் மறைய, ஒரு பத்தர்க்கு மலர்விழி அளித்து அற்றை அருள்வோனே - (பளகர் - பாவிகள்; மூடர்கள்); (ஒரு - ஒப்பற்ற); (அற்றை - அன்று); (* தண்டியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

பிரிய-உமை மைப்பு-உற்ற ஒளி-நயனி இட்டத்த - (மைப்பு - கறுப்பு); (நயனம் - கண்); (இட்டம் - விருப்பம்);

பிணம் எரிய எத்-திக்கும் அதிர்வு-ஆகப் பெரு-முழவு ஒலிப்பு உற்ற சுடலைதனில் நட்டத்த - (ஒலிப்பு - பெருஞ்சத்தம்); (நட்டம் - கூத்து);

பிறவு இறவு கட்டு அற்ற பெருமானே - (பிறவு - பிறப்பு); (இறவு - இறப்பு); (கட்டு - பந்தம்; மும்மலக்கட்டு);


V. Subramanian


On Mon, Apr 22, 2024 at 10:40 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-04-22

குருநாதன் ரமணி

unread,
Apr 25, 2024, 11:37:13 AM4/25/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
மகிழ்வேனே! (காலைக் காட்சிகள்)
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

0110. தனதனன தான தந்த | தனதனன தான தந்த  
 தனதனன தான தந்த —— தனதான

கடலவிழும் ஓசை யுந்த வலையவிழும் ஓட மொன்று
. . கரையில்விழு காலை வந்து —— கதிரேறும்
. ககனமுறும் ஆசை வந்த பறவைபல வான மொன்று
. . கருவிழியில் நாணு மங்கை —— மனைவாசல்

[கதிர்: சூரியன்; ககனம்: ஆகாயம்; பறவைபல வான மொன்று: முரண் காண்க]

மடலவிழு சோலை யொன்றில் விழிவருடி ஓடு தென்றல்
. . மணமவிழ நானு கந்து —— வருவேனே
. மயிலவிழும் மாழை கண்டு குயிலவிழும் ஓசை கண்டு
. . மனமதிர்வு ஏது மின்றி —— மகிழ்வேனே

[மாழை: அழகு; ஓசை கண்டு: குயிலைக் கண் பார்க்க
அதன் ஓசை கேட்டு]

விடையெதுவும் நாட லின்றி உடைமைகளில் ஆசை யின்றி
. . வியல்வெளியில் நாசி யுந்தி —— யிருநேரம்
. வினையெதுவும் ஓட லின்றி அசைவுகளின் ஓசை கண்டு
. . விழைவெதுவும் ஓர்த லின்றி —— மகிழ்வேனே

[வியல்வெளி: அகன்ற, பெருமை மிக்க வான்வெளி;
 நாசி உந்தி: முகத்தைல் மேலே தூக்கி; ஓர்தல்:
 எண்ணுதல், ஆராய்தல்]

முடிவெதுவும் நாட லின்றி உவகையுறும் நேர மென்று
. . முகமெதுவும் ஆட லின்றி —— நடையோடும்
. முனைமுறியும் ஆணி யின்றி மொழிவிளையு பாடல் ஒன்று
. . முகடுபட ஓயும் மங்குல் —— எனவாமே.

[முகமெதுவும்: மனித முகம் எதுவும்; நடையோடும்: நடை செல்லும் (நடை-யோடும் முரண் காண்க. மங்கும்: மேகப் பெயலாய் நின்று முடிவுறும்.]

★★★
திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி)

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து – இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து – பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து – துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற – னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த – மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க – வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த – கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த – பெருமாளே.

★★★★★
 

Ram Ramakrishnan

unread,
Apr 25, 2024, 11:51:46 AM4/25/24
to santhav...@googlegroups.com
அருமையான வண்ணப்பாடல்.

காட்சிதனைக் கண்முன் நிறுத்திக் களிக்க வைத்தமைக்குத் தனிப் பாராட்டுகள், திரு. ரமணி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 25, 2024, at 21:07, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

#ரமணி_திருப்புகழ்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 25, 2024, 12:07:38 PM4/25/24
to santhav...@googlegroups.com
/  மனமதிர்வு ஏது  /

குருநாதன் ரமணி

unread,
Apr 25, 2024, 11:02:49 PM4/25/24
to சந்தவசந்தம்
நன்றி. திருத்திய பாடல்:

#ரமணி_திருப்புகழ்
திருப்005. மகிழ்வேனே! (காலைக் காட்சிகள்)

(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

0110. தனதனன தான தந்த | தனதனன தான தந்த  
 தனதனன தான தந்த —— தனதான

கடலவிழும் ஓசை யுந்த வலையவிழும் ஓட மொன்று
. . கரையில்விழு காலை வந்து —— கதிரேறும்
. ககனமுறும் ஆசை வந்த பறவைபல வான மொன்று
. . கருவிழியில் நாணு மங்கை —— மனைவாசல்

[கதிர்: சூரியன்; ககனம்: ஆகாயம்; பறவைபல வான மொன்று: முரண் காண்க]

மடலவிழு சோலை யொன்றில் விழிவருடி ஓடு தென்றல்
. . மணமவிழ நானு கந்து —— வருவேனே
. மயிலவிழும் மாழை கண்டு குயிலவிழும் ஓசை கண்டு
. . மனமதிர்வி லாது நின்று —— மகிழ்வேனே


[மாழை: அழகு; ஓசை கண்டு: குயிலைக் கண் பார்க்க
அதன் ஓசை கேட்டு]

விடையெதுவும் நாட லின்றி உடைமைகளில் ஆசை யின்றி
. . வியல்வெளியில் நாசி யுந்தி —— யிருநேரம்
. வினையெதுவும் ஓட லின்றி அசைவுகளின் ஓசை கண்டு
. . விழைவெதுவும் ஓர்த லின்றி —— மகிழ்வேனே

[வியல்வெளி: அகன்ற, பெருமை மிக்க வான்வெளி;
 நாசி உந்தி: முகத்தைல் மேலே தூக்கி; ஓர்தல்:
 எண்ணுதல், ஆராய்தல்]

முடிவெதுவும் நாட லின்றி உவகையுறும் நேர மென்று
. . முகமெதுவும் ஆட லின்றி —— நடையோடும்
. முனைமுறியும் ஆணி யின்றி மொழிவிளையு பாடல் ஒன்று
. . முகடுபட ஓயும் மங்குல் —— எனவாமே.

[முகமெதுவும்: மனித முகம் எதுவும்; நடையோடும்: நடை செல்லும் (நடை-யோடும் முரண் காண்க. மங்கும்: மேகப் பெயலாய் நின்று முடிவுறும்.]

★★★

Siva Siva

unread,
Apr 26, 2024, 8:01:42 AM4/26/24
to santhav...@googlegroups.com

This could be a bit of a challenging pattern.


2024-04-25

பாம்புரம்

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தானாந்தன .. தனதன தானாந்தன

தனதன தானாந்தன .. தனதான)

(கமலரு சோகாம்பர - திருப்புகழ் - காஞ்சீபுரம்)


தினமெரி போல்மூண்டெழு .. நசைகளி னால்வான்துயர்

.. .. செறிகடல் நானாழ்ந்துள(ம்) .. மறுகாதே

.. திகழ்பெயர் நாவார்ந்தவர் .. குழுவுற வா(ம்)மாண்பொடு

.. .. சிறுமைகள் தீர்பூங்கழல் .. தொழுவேனோ

முனமொரு தேர்சாய்ந்திட .. முரணெயில் ஓர்மூன்றற

.. .. முகிழ்நகை யேதாங்கிய .. விறலானே

.. முலைநகை மாசாம்பவி .. இறையவ நீரேந்திய

.. .. முடிமிசை ஏரார்ந்திடு .. மதிசூடீ

கனைகடல் மேலோங்கிய .. அருவிட மேயார்ந்தொரு

.. .. கருநிறம் ஆர்பூண்புனை .. மிடறானே

.. கயலொடு சேல்பாய்ந்திடு .. வயலளி தேன்மாந்திடு

.. .. கடிபொழில் சூழ்பாம்புரம் .. உறைவோனே

இனமலர் தூவான்துதி .. செயமனம் ஓரான்சினம்

.. .. எழமதி தானீங்கிய .. மிகுகேடன்

.. இருபது தோளான்திரு .. மலையெறி நாளாங்கழ

.. .. எழிலுறு தாளூன்றிய .. பெருமானே.


பதம் பிரித்து:

தினம் எரி போல் மூண்டு எழு .. நசைகளினால் வான்-துயர்

.. .. செறி-கடல் நான் ஆழ்ந்து உள(ம்) .. மறுகாதே,

.. திகழ்-பெயர் நா ஆர்ந்தவர் .. குழு உறவு ஆ(ம்) மாண்பொடு

.. .. சிறுமைகள் தீர்-பூங்கழல் .. தொழுவேனோ?

முனம் ஒரு தேர் சாய்ந்திட, .. முரண்-எயில் ஓர்-மூன்று அற

.. .. முகிழ்நகையே தாங்கிய .. விறலானே;

.. முலை-நகை மா-சாம்பவி .. இறையவ; நீர் ஏந்திய

.. .. முடிமிசை ஏர் ஆர்ந்திடு .. மதிசூடீ;

கனைகடல்மேல் ஓங்கிய .. அருவிடமே ஆர்ந்து ஒரு

.. .. கருநிறம் ஆர்-பூண் புனை .. மிடறானே;

.. கயலொடு சேல் பாய்ந்திடு .. வயல், அளி தேன் மாந்திடு

.. .. கடிபொழில், சூழ் பாம்புரம் .. உறைவோனே;

இனமலர் தூவான், துதி .. செய மனம் ஓரான், சினம்

.. .. எழ மதிதான் நீங்கிய .. மிகு-கேடன்,

.. இருபது தோளான் திரு- .. மலை எறி- நாள் ஆங்கு அழ

.. .. எழிலுறு தாள் ஊன்றிய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

தினம் எரி போல் மூண்டு எழு நசைகளினால் வான்-துயர் செறி-கடல் நான் ஆழ்ந்து உள(ம்) மறுகாதே - (நசை - ஆசை); (வான் துயர் - மிக்க துன்பம்; பெருந்துன்பம்);

திகழ்-பெயர் நா ஆர்ந்தவர் குழு உறவு ஆ(ம்) மாண்பொடு சிறுமைகள் தீர்-பூங்கழல் தொழுவேனோ -

முனம் ஒரு தேர் சாய்ந்திட, முரண்-எயில் ஓர்-மூன்று அற முகிழ்நகையே தாங்கிய விறலானே - (சாய்தல் - முறிதல்); (முரண்தல் - பகைத்தல்); (எயில் - மதில்; கோட்டை); (அறுதல் - அழிதல்); (முகிழ்நகை - புன்சிரிப்பு); (விறல் - வெற்றி);

முலை-நகை மா-சாம்பவி இறையவ - (நகை - பல்); (சாம்பவி - பார்வதி); (இறையவன் - இறைவன் - கணவன்);

நீர் ஏந்திய முடிமிசை ஏர் ஆர்ந்திடு மதிசூடீ - (ஏர் - அழகு); (ஆர்தல் - நிறைதல்);

கனைகடல்மேல் ஓங்கிய அருவிடமே ஆர்ந்து ஒரு கருநிறம் ஆர்-பூண் புனை மிடறானே - (ஆர்தல் - 1. உண்தல்; 2. பொருந்துதல்); (பூண் - அணி; ஆபரணம்);

கயலொடு சேல் பாய்ந்திடு வயல், அளி தேன் மாந்திடு கடிபொழில், சூழ் பாம்புரம் உறைவோனே - (அளி - வண்டு); (மாந்துதல் - உண்தல்); (கடி - வாசனை);

இனமலர் தூவான், துதி செய மனம் ஓரான், சினம் எழ மதிதான் நீங்கிய மிகு-கேடன் - (ஓர்தல் - எண்ணுதல்); (மதி - அறிவு);

இருபது தோளான் திருமலை எறி- நாள் ஆங்கு அழ எழிலுறு தாள் ஊன்றிய பெருமானே -


V. Subramanian


On Thu, Apr 25, 2024 at 11:37 AM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

குருநாதன் ரமணி

unread,
Apr 26, 2024, 11:21:20 AM4/26/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்_தனிப்பாடல்
பாங்குற எழு பாடல்!
திருப்005. 0338. தனதன தானாந்தன | தனதன தானாந்தன |
தனதன தானாந்தன —— தனதான

மலைவிழு நீரூன்றிய நிலைபெறு ஆறாங்கரை
. . மததியின் வீணாவொலி —— எனவாமே
. மரகத ஏராம்பல இலைமிகு மேமாந்தளிர்
. . மகிபதி வானேறிய —— சிலைவானில்
 [மததி: நாரதர்; மரகத ஏர்: மரகதப் பச்சை அழகு;
  மகிபதி: இந்திரன்; சுட்டுவது இந்திர தனுசு
  என்னும் வானவில்]

அலைமிகு நீரோங்கலில் வலைவிழ மீனின்கணம்
. . அடிபட மேலோங்கிய —— உயிர்போமே
. அறநெறி வேரோங்கிய பிறவுயிர் போலின்றிலை
. . அயல்நெறி கோள்மாந்தரை —— அறிவோமே

மலைவுற வேமாந்திய பலவண மேலாங்குடில்
. . மயலுற நான்வீங்குவன் —— மனதாலே
. மகுடியி னாலோங்கிய தலையெழு பாம்பாம்நிலை
. . மறையொலி யேதாங்கிய —— தவயோகம்
 [மலைவு: பிரமிப்பு; குடில்: ஆகாசம் (திவா.)

நலமிக வேதோன்றிய பலவித மாலம்புதம்
. . நவமணி யாம்சேந்தினை —— மகிழ்வேனே
. நடையென வேநான்கொளும் மகிழ்வினில் மேலோங்கிய
. . நளியினில் ஓர்பாங்குற —— எழுபாடல்!
 [மாலாம்புதம்: மயக்கம் தரும் மேகம்; சேந்து: சிவப்பு;
  நளி: செறிவு]

★★★
திருப்புகழ் 338 கமலரு சோகாம்பர  (காஞ்சீபுரம்)

தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான

கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கணை
     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
     அதுலன நீலாம்பர ...... மறியாத
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.

★★★★★

Siva Siva

unread,
Apr 26, 2024, 11:41:15 AM4/26/24
to santhav...@googlegroups.com
Some places need review for pattern conformance. Please see the highlighted parts below.

V. Subramanian 

குருநாதன் ரமணி

unread,
Apr 26, 2024, 11:05:45 PM4/26/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. திருத்திய பாடல் கீழே.

#ரமணி_திருப்புகழ்_தனிப்பாடல்
பாங்குற எழு பாடல்!
திருப்005. 0338. தனதன தானாந்தன | தனதன தானாந்தன |
தனதன தானாந்தன —— தனதான

மலைவிழு நீரூன்றிய நிலைபெறும் ஆறாங்கரை
. . மததியின் வீணாங்கனம் —— எனவாமே

. மரகத ஏராம்பல இலைமிகு மேமாந்தளிர்
. . மகிபதி வான்போகிய —— சிலைவானில்
 [மததி: நாரதர்; வீணாங்கனம்: வீணையில் ஒலிக்கும்
  இராகங்களின் தொகுதி; மரகத ஏர்: மரகதப் பச்சை அழகு;
  மகிபதி: இந்திரன்; வான்போகிய: வானில்
  பரந்திருக்கும்; சுட்டுவது இந்திர தனுசு என்னும் வானவில்]

அலைமிகு நீரோங்கலில் வலைவிழ மீனாம்கணம்
. . அடிபட மேலோங்கிய —— உயிர்போமே
. அறநெறி வேரோங்கிய பிறவுயிர் போலீங்கிலை

. . அயல்நெறி கோள்மாந்தரை —— அறிவோமே

மலைவுற வேமாந்திய பலவண மேலாங்குடில்
. . மயலுற நான்வீங்குவன் —— மனதாலே
. மயலற ஏதாங்கதி உணர்வினில் மேலோங்கலில்
. . மறையொலி யேதாங்கிய —— வெளிவானே
 [மலைவு: பிரமிப்பு; குடில்: ஆகாசம் (திவா.) என் மயல் தீர ஏது வழியாகும் என்றென் உணர்வினில் மேலோங்கல்-இல்லை]

நலமிக வேதோன்றிய பலவித மாலாம்புதம்
. . நயமிக வேசேந்தலை —— மகிழ்வேனே

. நடையென வேநான்கொளும் மகிழ்வினில் மேலோங்கிய
. . நளியினில் ஓர்பாங்குற —— எழுபாடல்!
 [மாலாம்புதம்: மாலம்புதம் என்பதன் நீட்டல்: மயக்கம் தரும்
  மேகம்; சேந்து: சிவப்பு; நளி: செறிவு]

★★★

Siva Siva

unread,
Apr 27, 2024, 9:40:49 AM4/27/24
to santhav...@googlegroups.com
Please check the highlighted place below.

Siva Siva

unread,
Apr 27, 2024, 8:31:04 PM4/27/24
to santhav...@googlegroups.com

2024-04-27

பொது

----------------

(வண்ணவிருத்தம்;

தனன தானன தத்த .. தனன தானன தத்த

தனன தானன தத்த .. தனதான)

(தனதனா தனதத்த x 3 .. தனதான)

(அறமிலா நிலைகற்று - திருப்புகழ் - பழநி)


இமைகள் மூடும் உறக்கம் .. உலக ஆசை மயக்கம்

.. .. இயம தூதர் நெருக்கல் .. எனவோயா

.. இடரில் ஆழ்வது கெட்டு .. நினது தாளை வழுத்தி

.. .. இனிது வாழ அருத்தி .. அருளாயே

சமணர் ஏவு களிற்றை .. அவர்கள் வாட விரட்டு

.. .. தமிழை ஓதிய அப்பர் .. தொழுதேவா

.. தழல தார்கணை தொட்டு .. வலிய மூவெயில் அட்ட

.. .. தலைவ தீயுடை நெற்றி .. விழியானே

அமரர் தாளிணை பற்றி .. அழுத நாளில் விடத்தை

.. .. அமுது போல மடுத்து .. மணிபோல

.. அணியு(ம்) நீல மிடற்ற .. அரவு தாரினை ஒக்க

.. .. அசையு(ம்) மார்மிசை அக்கும் .. உடையானே

அமலை வாமம் இருக்க .. நதியை வேணியில் வைத்த

.. .. அழக வேதம் உரைத்த .. திருநாவா

.. அரிய மாணியை உற்ற .. கொடிய காலனை அற்றை

.. .. அடியை வீசிய ழித்த .. பெருமானே.


பதம் பிரித்து:

இமைகள் மூடும் உறக்கம், .. உலக ஆசை மயக்கம்,

.. .. இயம தூதர் நெருக்கல், .. என ஓயா

.. இடரில் ஆழ்வது கெட்டு, .. நினது தாளை வழுத்தி

.. .. இனிது வாழ அருத்தி .. அருளாயே;

சமணர் ஏவு-களிற்றை .. அவர்கள் வாட விரட்டு-

.. .. தமிழை ஓதிய அப்பர் .. தொழு-தேவா;

.. தழலது ஆர்-கணை தொட்டு .. வலிய மூவெயில் அட்ட

.. .. தலைவ; தீயுடை நெற்றி .. விழியானே;

அமரர் தாளிணை பற்றி .. அழுத நாளில், விடத்தை

.. .. அமுது போல மடுத்து, .. மணி போல

.. அணியு(ம்) நீல-மிடற்ற; .. அரவு தாரினை ஒக்க

.. .. அசையு(ம்) மார்மிசை அக்கும் .. உடையானே;

அமலை வாமம் இருக்க .. நதியை வேணியில் வைத்த

.. .. அழக; வேதம் உரைத்த .. திருநாவா;

.. அரிய மாணியை உற்ற .. கொடிய காலனை அற்றை

.. .. அடியை வீசி அழித்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

இமைகள் மூடும் உறக்கம், உலக ஆசை மயக்கம், இயம தூதர் நெருக்கல் என ஓயா இடரில் ஆழ்வது கெட்டு - (நெருக்குதல் - வருத்துதல்); (இடர் - துன்பம்); (கெடுதல் - அழிதல்);

நினது தாளை வழுத்தி இனிது வாழ அருத்தி அருளாயே - (வழுத்துதல் - துதித்தல்); (அருத்தி - அன்பு);

சமணர் ஏவு-களிற்றை அவர்கள் வாட விரட்டு-தமிழை ஓதிய அப்பர் தொழு-தேவா - (அப்பர் - இங்கே, திருநாவுக்கரசர்);

தழலது ஆர்-கணை தொட்டு வலிய மூவெயில் அட்ட தலைவ - (தழல் - நெருப்பு); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);

தீயுடை நெற்றி விழியானே -

அமரர் தாளிணை பற்றி அழுத நாளில், விடத்தை அமுது போல மடுத்து, மணி போல அணியு(ம்) நீல-மிடற்ற - (மடுத்தல் - உண்தல்); (மிடறு - கண்டம்);

அரவு தாரினை ஒக்க அசையு(ம்) மார்மிசை அக்கும் உடையானே - (தார் - மாலை); (அக்கு - எலும்பு);

அமலை வாமம் இருக்க நதியை வேணியில் வைத்த அழக - (அமலை - உமாதேவி); (வாமம் - இடப்பக்கம்); (வேணி - சடை);

வேதம் உரைத்த திருநாவா -

அரிய மாணியை உற்ற கொடிய காலனை அற்றை அடியை வீசி அழித்த பெருமானே - (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (அற்றை - அன்று);


V. Subramanian


On Fri, Apr 26, 2024 at 11:05 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 30, 2024, 8:00:34 AM4/30/24
to santhav...@googlegroups.com

2024-04-29

ஆரூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தாந்ததன தான தாந்ததன தான

தாந்ததன தான .. தனதான)

(மாந்தளிர்கள் போல - திருப்புகழ் - பூம்பறை)


சாந்துணையு(ம்) மாயை ஆழ்ந்துநில(ம்) மீது

.. .. தாங்கரிய வாதை .. உழலாதே

.. தாழ்ந்தநிலை வீட ஆன்றவர்க ளோடு

.. .. சார்ந்துனது சீரை .. மொழிவேனே

மாய்ந்தவர்கள் நீறு சாந்தமென ஆகு(ம்)

.. .. மாண்புடைய ஈச .. அலையாழி

.. வான்கடையு(ம்) நாளில் ஈண்டிவரும் ஆல(ம்)

.. .. மாந்திமணி சேரு(ம்) .. மிடறானே

பாந்தளணி மார்ப ஓங்குபடை நாடு

.. .. பாண்டுமக னோடு .. பொருவேடா

.. பாய்ந்தநதி வேணி ஏந்துமலை மாது

.. .. பாங்கஒரு தோழர் .. தொழவாரூர்

ஏந்துதெரு மீது பூஞ்சரணம் ஆர

.. .. ஏய்ந்தபடி தூது .. பகர்நாதா

.. ஈன்றவளின் நேய வேண்டுவன யாவும்

.. .. ஈந்துவிடை யேறு .. பெருமானே.


பதம் பிரித்து:

சாந்துணையு(ம்) மாயை ஆழ்ந்து, நில(ம்) மீது

.. .. தாங்கரிய வாதை .. உழலாதே,

.. தாழ்ந்த-நிலை வீட, ஆன்றவர்களோடு

.. .. சார்ந்து, உனது சீரை .. மொழிவேனே;

மாய்ந்தவர்கள் நீறு சாந்தம் என ஆகு(ம்)

.. .. மாண்புடைய ஈச; .. அலை-ஆழி

.. வான் கடையு(ம்) நாளில் ஈண்டிவரும் ஆல(ம்)

.. .. மாந்தி, மணி சேரு(ம்) .. மிடறானே;

பாந்தள் அணி மார்ப; ஓங்கு-படை நாடு

.. .. பாண்டுமகனோடு .. பொரு-வேடா;

.. பாய்ந்த நதி வேணி ஏந்து- மலைமாது

.. .. பாங்க; ஒரு தோழர் .. தொழ, ஆரூர்

ஏந்து-தெரு மீது பூஞ்சரணம் ஆர

.. .. ஏய்ந்தபடி தூது .. பகர்-நாதா;

.. ஈன்றவளின் நேய; வேண்டுவன யாவும்

.. .. ஈந்து, விடை-ஏறு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

சாம் துணையு(ம்) மாயை ஆழ்ந்து, நில(ம்) மீது தாங்கரிய வாதை உழலாதே - (சாம் - சாகும்); (துணை - வரை);

தாழ்ந்த-நிலை வீட, ஆன்றவர்களோடு சார்ந்து, உனது சீரை மொழிவேனே -

மாய்ந்தவர்கள் நீறு சாந்தம் என ஆகு(ம்) மாண்புடைய ஈச - (சாந்தம் - சந்தனம்);

அலை-ஆழி வான் கடையு(ம்) நாளில் ஈண்டிவரும் ஆலம் மாந்தி, மணி சேரு(ம்) மிடறானே - (ஆழி - கடல்); (வான் - தேவர்); (ஈண்டுதல் - செறிதல்; மிகுதல்); (மாந்துதல் - உண்தல்); (மிடறு - கண்டம்);

பாந்தள் அணி மார்ப - (பாந்தள் - பாம்பு);

ஓங்கு-படை நாடு பாண்டுமகனோடு பொரு-வேடா - (படை - ஆயுதம்); (பாண்டுமகன் - அர்ஜுனன்); (பொருதல் - போர்செய்தல்);

பாய்ந்த நதி வேணி ஏந்து- மலைமாது பாங்க - (வேணி - சடை); (ஏந்துதல் - தரித்தல்; தாங்குதல்); (பாங்கன் - கணவன்);

ஒரு தோழர் தொழ, ஆரூர் ஏந்து-தெரு மீது பூஞ்சரணம் ஆர ஏய்ந்தபடி தூது பகர்-நாதா - (ஏந்துதல் - சிறத்தல்); (சரணம் - திருவடி); (ஆர்தல் - பொருந்துதல்); (ஏய்தல் - தகுதல்); (பகர்தல் - சொல்தல்);

ஈன்றவளின் நேய - (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

வேண்டுவன யாவும் ஈந்து, விடை-ஏறு பெருமானே -


V. Subramanian


On Sat, Apr 27, 2024 at 8:30 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-04-27

குருநாதன் ரமணி

unread,
Apr 30, 2024, 11:55:57 AM4/30/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்_சிவத்துதி
திருப்117. 0620. தாந்ததன தான | தாந்ததன தான |
 தாந்ததன தான —— தனதான

ஆண்டவனை நாளும் மூன்றுபொழு தேனு(ம்)
. . ஆன்றலொடு தேவர் —— தொழுவாரே
. ஆங்குடலின் மீது பாம்பணைய நீரை
. . ஆண்டுடலில் நீறு —— அணிவீரே
[ஆன்றல்: மாட்சிமை]

பூண்டமணி காளம் வீங்குகறை மேடு
. . பூம்பரையும் வாமம் —— உறைவாளே
. பூம்புகையின் வாசம் ஆங்குறையும் வாசி
. . பூங்கொடியின் மேனி —— தளிராமே
[பூம்பரை: பூப்போன்ற தற்பரை (பார்வதி)]

தாண்டவனின் ரூபம் ஊன்றுவழி தீர்வு
. . தாங்குமெழு லோகம் —— எனவாமே
. தாந்தனவன் வேதன் ஆன்றவருள் மீது
. . தான்றியெது வாகும் —— உரையீரோ?
[தாந்தன்: ஐம்பொறிகளை வென்றவன்; ஆன்ற: பரந்த;
 தான்றி: எல்லை]

வேண்டுவது யாது வேண்டலிலை யேது
. . வேகுமுடல் சாம்பர் —— எனவாக
. வேண்டியது தாரும் மீந்தவுயிர் ஏகி
. . மீண்டுமொரு மேனி —— தரியாதே!

30 ஏப். 2024

★★★
0620. தாந்ததன தான  தாந்ததன தான  தாந்ததன தான —— தனதான
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக – முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி – உறவாடி

ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட – விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலைமாதர் – உறவாமோ

பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ – எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் – மருகோனே

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி – திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையின் மேவு – பெருமாளே.

★★★★★

Siva Siva

unread,
Apr 30, 2024, 12:01:07 PM4/30/24
to santhav...@googlegroups.com
Impressive perseverance.

See the highlighted place below - that needs change.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Apr 30, 2024, 12:26:27 PM4/30/24
to santhav...@googlegroups.com
வியக்க வைக்கும் வண்ணப் பாட்டு.

மிக அருமையான படைப்பு. உணர்ந்து பணித்து ரசித்தேன், திரு. ரமணி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 30, 2024, at 21:26, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

#ரமணி_திருப்புகழ்_சிவத்துதி
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
Apr 30, 2024, 1:39:53 PM4/30/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்.
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Apr 30, 2024, 1:44:57 PM4/30/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா.
திருத்திய பாடல்:

#ரமணி_திருப்புகழ்_சிவத்துதி
திருப்117. 0620. தாந்ததன தான | தாந்ததன தான |
 தாந்ததன தான —— தனதான

ஆண்டவனை நாளும் மூன்றுபொழு தேனு(ம்)
. . ஆன்றலொடு தேவர் —— தொழுவாரே
. ஆங்குடலின் மீது பாம்பணைய நீரை
. . ஆண்டுடலில் நீறு —— அணிவீரே
[ஆன்றல்: மாட்சிமை]

பூண்டமணி காளம் வீங்குகறை மேடு
. . பூம்பரையும் வாமம் —— உறைவாளே
. பூம்புகையின் வாசம் ஆங்குறையும் வாசி
. . பூங்கொடியின் மேனி —— தளிராமே
[பூம்பரை: பூப்போன்ற தற்பரை (பார்வதி)]

தாண்டவனின் ரூபம் ஊன்றுவழி தீர்வு
. . தாங்குமெழு லோகம் —— எனவாமே
. தாந்தனவன் வேதன் ஆன்றவருள் மீது
. . தான்றியெது வாகும் —— உரையீரோ?
[தாந்தன்: ஐம்பொறிகளை வென்றவன்; ஆன்ற: பரந்த;
 தான்றி: எல்லை]

வேண்டுவது யாது வேண்டலிலை யேது
. . வீங்குமுடல் சாம்பர் —— எனவாக

. வேண்டியது தாரும் மீந்தவுயிர் ஏகி
. . மீண்டுமொரு மேனி —— தரியாதே!
[வீங்குதல்: விறைப்பாய் நிற்றல்]

30 ஏப். 2024

★★★

Siva Siva

unread,
May 1, 2024, 8:01:19 AM5/1/24
to santhav...@googlegroups.com

2021-02-22 (updated 2024-04-30)

சண்பை (சீகாழி)

----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தந்த தான

தனத்தன தந்த தான

தனத்தன தந்த தான .. தனதான)

(கிட்டத்தட்ட இவ்வமைப்பை உடையது -

வரைத்தடங் கொங்கை யாலும் - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


கனைத்தலை வந்து மோது .. வினைக்கடல் முங்கி டாது

.. .. கழற்புணை கொண்டு வாழும் .. அடியார்கள்

.. களிப்பது கண்டு நானு(ம்) .. மலர்ச்சர ணம்ப ராவு

.. .. கருத்துற அன்பு கூர .. அருளாயே

நினைத்தினம் அன்பி னோடு .. நினைத்துள(ம்) நைந்த மாணி

.. .. நிலைத்திட முன்பு மேதி .. அமர்காலன்

.. நிலத்தினில் வீழ்ந்து மாள .. உதைத்திடு கந்த பாத

.. .. நெருப்பெரி கின்ற கானில் .. நடமாடீ

உனைத்தொழும் உம்பர் கூடி .. அமைத்தசி றந்த தேரின்

.. .. உருக்கெட அன்ற தேறி .. நகையாலே

.. உரப்புரம் வென்ற வீர .. மலர்க்கணை ஐந்து வீசும்

.. .. ஒருத்தனின் அங்க(ம்) மாய .. முனிவோனே

அனைத்திலும் நின்ற ஈச .. திருத்தமிழ் தந்த பாலர்

.. .. அவர்க்குமை நங்கை பாலை .. அருள்வோனே

.. அவற்றைமொ ழிந்த நேயர் .. நினைத்தவ ரங்கள் யாவும்

.. .. அளித்திடு சண்பை மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

கனைத்து அலை வந்து மோது .. வினைக்கடல் முங்கிடாது

.. .. கழற்புணை கொண்டு வாழும் .. அடியார்கள்

.. களிப்பது கண்டு, நானு(ம்) .. மலர்ச்-சரணம் பராவு

.. .. கருத்து உற, அன்பு கூர, .. அருளாயே;

நினைத் தினம் அன்பினோடு .. நினைத்து உள(ம்) நைந்த மாணி

.. .. நிலைத்திட, முன்பு மேதி .. அமர்-காலன்

.. நிலத்தினில் வீழ்ந்து மாள .. உதைத்திடு கந்த-பாத;

.. .. நெருப்பு எரிகின்ற கானில் .. நடமாடீ;

உனைத் தொழும் உம்பர் கூடி .. அமைத்த சிறந்த தேரின்

.. .. உருக் கெட அன்றது ஏறி, .. நகையாலே

.. உரப்-புரம் வென்ற வீர; .. மலர்க்கணை ஐந்து வீசும்

.. .. ஒருத்தனின் அங்க(ம்) மாய .. முனிவோனே;

அனைத்திலும் நின்ற ஈச; .. திருத்தமிழ் தந்த பாலர்

.. .. அவர்க்கு உமை-நங்கை பாலை .. அருள்வோனே;

.. அவற்றை மொழிந்த நேயர் .. நினைத்த வரங்கள் யாவும்

.. .. அளித்திடு சண்பை மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

கனைத்து அலை வந்து மோது வினைக்கடல் முங்கிடாது கழற்புணை கொண்டு வாழும் அடியார்கள் களிப்பது கண்டு - (புணை - தெப்பம்);

நானு(ம்) மலர்ச்-சரணம் பராவு கருத்து உற, அன்பு கூர, அருளாயே - (பராவுதல் - துதித்தல்);

நினைத் தினம் அன்பினோடு நினைத்து உள(ம்) நைந்த மாணி நிலைத்திட - (மாணி - மார்க்கண்டேயர்);

முன்பு மேதி அமர்-காலன் நிலத்தினில் வீழ்ந்து மாள உதைத்திடு கந்த-பாத - (மேதி - எருமை);

நெருப்பு எரிகின்ற கானில் நடமாடீ - (கான் - காடு - சுடுகாடு);

உனைத் தொழும் உம்பர் கூடி அமைத்த சிறந்த தேரின் உருக் கெட அன்றது ஏறி, நகையாலே உரப்-புரம் வென்ற வீர - (உம்பர் - தேவர்); (உரு - வடிவம்; அழகு); (கெடுதல் - அழிதல்); (நகை - சிரிப்பு); (உரம் - வலிமை);

மலர்க்கணை ஐந்து வீசும் ஒருத்தனின் அங்க(ம்) மாய முனிவோனே - (அங்கம் - உடல்); (மாய்தல் - அழிதல்); (முனிதல் - கோபித்தல்);

அனைத்திலும் நின்ற ஈச -

திருத்தமிழ் தந்த பாலர் அவர்க்கு உமை-நங்கை பாலை அருள்வோனே - (பாலர் - இங்கே, திருஞான சம்பந்தர்);

அவற்றை மொழிந்த நேயர் நினைத்த வரங்கள் யாவும் அளித்திடு சண்பை மேய பெருமானே - (சண்பை - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);


V. Subramanian


On Tue, Apr 30, 2024 at 1:44 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

Siva Siva

unread,
May 1, 2024, 9:22:27 AM5/1/24
to santhav...@googlegroups.com
There was an issue in one place  - that has been corrected now.

நிலத்தினில் வீழ்ந்து மாள ==> நிலத்தில்வி ழுந்து மாள

V. Subramanian

On Wed, May 1, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-02-22 (updated 2024-04-30)

சண்பை (சீகாழி)

----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தந்த தான

தனத்தன தந்த தான

தனத்தன தந்த தான .. தனதான)

(கிட்டத்தட்ட இவ்வமைப்பை உடையது -

வரைத்தடங் கொங்கை யாலும் - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


கனைத்தலை வந்து மோது .. வினைக்கடல் முங்கி டாது

.. .. கழற்புணை கொண்டு வாழும் .. அடியார்கள்

.. களிப்பது கண்டு நானு(ம்) .. மலர்ச்சர ணம்ப ராவு

.. .. கருத்துற அன்பு கூர .. அருளாயே

நினைத்தினம் அன்பி னோடு .. நினைத்துள(ம்) நைந்த மாணி

.. .. நிலைத்திட முன்பு மேதி .. அமர்காலன்

.. நிலத்தில்வி ழுந்து மாள .. உதைத்திடு கந்த பாத

.. .. நெருப்பெரி கின்ற கானில் .. நடமாடீ

உனைத்தொழும் உம்பர் கூடி .. அமைத்தசி றந்த தேரின்

.. .. உருக்கெட அன்ற தேறி .. நகையாலே

.. உரப்புரம் வென்ற வீர .. மலர்க்கணை ஐந்து வீசும்

.. .. ஒருத்தனின் அங்க(ம்) மாய .. முனிவோனே

அனைத்திலும் நின்ற ஈச .. திருத்தமிழ் தந்த பாலர்

.. .. அவர்க்குமை நங்கை பாலை .. அருள்வோனே

.. அவற்றைமொ ழிந்த நேயர் .. நினைத்தவ ரங்கள் யாவும்

.. .. அளித்திடு சண்பை மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

கனைத்து அலை வந்து மோது .. வினைக்கடல் முங்கிடாது

.. .. கழற்புணை கொண்டு வாழும் .. அடியார்கள்

.. களிப்பது கண்டு, நானு(ம்) .. மலர்ச்-சரணம் பராவு

.. .. கருத்து உற, அன்பு கூர, .. அருளாயே;

நினைத் தினம் அன்பினோடு .. நினைத்து உள(ம்) நைந்த மாணி

.. .. நிலைத்திட, முன்பு மேதி .. அமர்-காலன்

.. நிலத்தில் விழுந்து மாள .. உதைத்திடு கந்த-பாத;

.. .. நெருப்பு எரிகின்ற கானில் .. நடமாடீ;

உனைத் தொழும் உம்பர் கூடி .. அமைத்த சிறந்த தேரின்

.. .. உருக் கெட அன்றது ஏறி, .. நகையாலே

.. உரப்-புரம் வென்ற வீர; .. மலர்க்கணை ஐந்து வீசும்

.. .. ஒருத்தனின் அங்க(ம்) மாய .. முனிவோனே;

அனைத்திலும் நின்ற ஈச; .. திருத்தமிழ் தந்த பாலர்

.. .. அவர்க்கு உமை-நங்கை பாலை .. அருள்வோனே;

.. அவற்றை மொழிந்த நேயர் .. நினைத்த வரங்கள் யாவும்

.. .. அளித்திடு சண்பை மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

கனைத்து அலை வந்து மோது வினைக்கடல் முங்கிடாது கழற்புணை கொண்டு வாழும் அடியார்கள் களிப்பது கண்டு - (புணை - தெப்பம்);

நானு(ம்) மலர்ச்-சரணம் பராவு கருத்து உற, அன்பு கூர, அருளாயே - (பராவுதல் - துதித்தல்);

நினைத் தினம் அன்பினோடு நினைத்து உள(ம்) நைந்த மாணி நிலைத்திட - (மாணி - மார்க்கண்டேயர்);

முன்பு மேதி அமர்-காலன் நிலத்தில் விழுந்து மாள உதைத்திடு கந்த-பாத - (மேதி - எருமை);

குருநாதன் ரமணி

unread,
May 1, 2024, 12:45:53 PM5/1/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்_சிவத்துதி
திருப்118. 0020. கலைத்திறன் கொண்டு நாளும் புகழ்வேனே!
  தனத்தனந் தந்த தான | தனத்தனந் தந்த தான
    தனத்தனந் தந்த தான —— தனதான

உவப்புடன் தந்த மேனி சமத்திறன் கொண்ட காளி
. . உருத்திரன் கொண்ட பாதி —— இடமாமே
. உருக்குலைந் தங்கு நீறு வனப்புறம் கொண்டு மாளும்
. . உயிர்ப்பதம் கொண்ட பாவம் —— நிலையாமை
 [உயிர்ப்பதம் கொண்ட பாவம்: உயிரில் மேலும் சேர்ந்த கர்மா]

தவத்திறன் கொண்ட யோகி மனப்பதங் கொண்டு வாழ
. . தனித்திறன் கண்டு காண —— அருள்வீரே
. சடைப்புறம் கொண்ட நீரும் உடற்புறம் கொண்ட போகி
. . சமத்திறன் கொண்டு வாழ —— விடுவீரே
 [நீரும்: நீர் உம்; போகி: பாம்பு]

பவத்திறன் கொண்ட மாதர் உடற்றிறன் கொண்டு சேர்வர்
. . படுக்கையின் வந்த லோகம் —— இதுதானே
. பணத்திறன் கொண்ட சோரர், வயிற்றுறும் கஞ்சி ஏழை
. . படைத்திறன் கொண்ட நேர்வு —— மறையாதோ?
 [பவத்திறன்: பிறைப்பைக் கொடுக்கும்; சோரர்: கள்வர்; நேர்வு: நிகழ்வு]

கவித்திறன் வந்த போது மனத்திறன் கொண்டு தேவ
. . கலைத்திறன் கொண்டு நாளும் —— புகழ்வேனே
. கவித்திறன் நின்ற போது சலிப்புறும் சிந்தை யாறு
. . கடைக்கணின் சிந்தும் பார்வை —— தருவீரே.
 [ஆறு: வழி; கடைக்கணின்: இடைக்குறை]

01 மே 2024

★★★
திருப்புகழ் 20 வரைத்தடங் கொங்கை  (திருப்பரங்குன்றம்)
தனத்தனந் தந்த தான தனத்தனந் தந்த தான
 தனத்தனந் தந்த தான ...... தனதான

வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும்
  மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும்
 வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும்
  மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி

எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும்
  இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற
 இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும்
  இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன் இளக்ரவுஞ் சந்த னோடு
  துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்
 துரத்தியன் றிந்த்ர லோகம் அழித்தவன் பொன்று மாறு
  சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே

செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு
  தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே
 தினைப்புனஞ் சென்று லாவு குறத்தியின் பம்ப ராவு
  திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.

★★★★★

Siva Siva

unread,
May 1, 2024, 1:33:28 PM5/1/24
to santhav...@googlegroups.com
See the highlighted places for potential tweaks.

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
May 1, 2024, 10:00:03 PM5/1/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. திருத்திய பாடல் கீழே.

#ரமணி_திருப்புகழ்_சிவத்துதி
திருப்118. 0020. கலைத்திறன் கொண்டு நாளும் புகழ்வேனே
  தனத்தனந் தந்த தான | தனத்தனந் தந்த தான
    தனத்தனந் தந்த தான —— தனதான

உவப்புடன் தந்த மேனி சமத்திறன் கொண்ட காளி
. . உருத்திரன் கொண்ட பாதி —— இடமாமே
. உருக்குலைந் தங்கு நீறு வனப்புறம் கொண்டு மாளும்
. . உயிர்ப்பதம் கொண்ட பாவம் —— நிலையாமை
 [உயிர்ப்பதம் கொண்ட பாவம்: உயிரில் மேலும் சேர்ந்த கர்மா]

தவத்திறன் கொண்ட யோகி மனப்பதங் கொண்டு வாழ்வர்
. . தனித்திறன் கண்டு நீரும் —— அருள்வீரே

. சடைப்புறம் கொண்ட நீரும் உடற்புறம் கொண்ட போகி
. . சமத்திறன் கொண்டு வாழ —— விடுவீரே
 [நீரும்: நீர் உம்; போகி: பாம்பு]

பவத்திறன் கொண்ட மாதர் உடற்றிறன் கொண்டு சேர்வர்
. . படுக்கையின் தொந்த லோகம் —— இதுதானே

. பணத்திறன் கொண்ட சோரர், வயிற்றுறும் கஞ்சி ஏழை
. . படைத்திறன் கொண்ட நேர்வு —— மறையாதோ?
 [பவத்திறன்: பிறைப்பைக் கொடுக்கும்; சோரர்: கள்வர்; நேர்வு: நிகழ்வு]

கவித்திறன் கொண்ட போது மனத்திறன் கொண்டு தேவ
. . கலைத்திறன் கொண்டு நாளும் —— இசையேனோ?
. கவித்திறன் குன்று நேரம் சலிப்புறும் சிந்தை யாறு
. . கடைக்கணின் சிந்து பார்வை —— தருவீரே.

 [ஆறு: வழி; கடைக்கணின்: இடைக்குறை]

01 மே 2024

★★★

Siva Siva

unread,
May 1, 2024, 11:17:25 PM5/1/24
to santhav...@googlegroups.com

The first part of this pattern could be somewhat challenging.


2024-04-30

கழுமலம் (சீகாழி)

----------------

(வண்ணவிருத்தம்;

தந்தம் தந்தம் தந்தம் தந்தம்

தனதன தனதன தனதன தனதன .. தனதான)

(இது கீழ்க்காணும் திருப்புகழ் அமைப்பைப் பெரும்பாலும் ஒத்தது)

(குன்றுங் குன்றும் - திருப்புகழ் - பழநி)


வஞ்சம் கொண்டிங் கென்றும் துன்பம்

.. .. வருவழி தனிலுகை பழவினை அவையுற .. அழியாதே

.. மண்தங் கம்பண் டம்பந் தம்பெண்

.. .. மயலற உனதடி அனுதின(ம்) நினைமனம் .. அருளாயே

அஞ்சும் பண்பென் றொன்றென் றும்கொண்

.. .. டறிகிலன் வலிநினை தசமுகன் அருமலை .. எறிமூடன்

.. அங்கம் புண்கண் டம்பண் கொண்டன்

.. .. றடியிணை தொழுதழ ஒருவிரல் நுதிகொடு .. நெரிபாதா

தஞ்சம் தஞ்சம் என்றன் றுன்றன்

.. .. தனிமலர் அடிசுரர் தொழவரு விடமுணும் .. அருளாளா

.. சந்தம் கொஞ்சும் சம்பந் தன்செந்

.. .. தமிழது தழலையும் அமணையும் வெலவருள் .. புரிவோனே

கஞ்சம் தங்கும் பண்பன் குன்றம்

.. .. கரமுயர் குடையென உடையவன் இவர்தொழ .. வளர்சோதீ

.. கந்தம் சிந்தும் தண்தங் கும்தென்

.. .. கழுமல நகரினில் உமையொடும் இனிதுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

வஞ்சம் கொண்டு இங்கு என்றும் துன்பம்

.. .. வரு-வழிதனில் உகை- பழவினை அவை உற .. அழியாதே,

.. மண் தங்கம் பண்டம் பந்தம் பெண்

.. .. மயல் அற, உனது அடி அனுதின(ம்) நினை-மனம் .. அருளாயே;

அஞ்சும் பண்பு என்றொன்று என்றும் கொண்டு

.. .. அறிகிலன், வலி நினை- தசமுகன் அருமலை .. எறி-மூடன்,

.. அங்கம் புண்-கண்டு, அம்-பண் கொண்டு அன்று

.. .. அடியிணை தொழுது அழ, ஒருவிரல் நுதிகொடு .. நெரி-பாதா;

தஞ்சம் தஞ்சம் என்று அன்று உன்றன்

.. .. தனி மலர்-அடி சுரர் தொழ, அருவிடம் உணும் .. அருளாளா;

.. சந்தம் கொஞ்சும் சம்பந்தன் செந்

.. .. தமிழது தழலையும் அமணையும் வெல அருள் .. புரிவோனே;

கஞ்சம் தங்கும் பண்பன், குன்றம்

.. .. கரம் உயர்- குடை என உடையவன், இவர் தொழ .. வளர்-சோதீ;

.. கந்தம் சிந்தும், தண் தங்கும், தென்

.. .. கழுமல நகரினில் உமையொடும் இனிதுறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


V. Subramanian


On Wed, May 1, 2024 at 10:00 PM குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

Siva Siva

unread,
May 3, 2024, 8:30:27 PM5/3/24
to santhav...@googlegroups.com

2024-05-03

மருகல்

----------------

(வண்ணவிருத்தம்;

தனந்த தனதன தனந்த தனதன

தனந்த தனதன .. தனதான)

(கரம் கமலம் மின் அதரம் பவளம் - திருப்புகழ் - இலஞ்சி)


பிறந்து தின(ம்)மிக வருந்தி உயிரது

.. .. பிரிந்து மறுபடி .. பிறவாதே

.. பிணங்கு மனமது திருந்தி மிகுநறை

.. .. பிறங்கு திருவடி .. மறவாதே

சிறந்த தமிழ்நிறை அலங்கல் மணமது

.. .. செறிந்த மலர்கொடு .. பணிவேனோ

.. சிவந்த சடைமிசை வளைந்த இளமதி

.. .. சிரங்கள் இணைசரம் .. அணிவோனே

பறந்த மலரவன் அகழ்ந்த அரியிவர்

.. .. பணிந்து துதிசெய .. உயர்சோதீ

.. பரந்த கடலது கடைந்த இமையவர்

.. .. பயந்த விடமுணும் .. அருளாளா

இறந்த வணிகனின் உடம்பில் உயிர்வர

.. .. இறைஞ்சு கவுணியர் .. தமிழ்கேளா

.. இருண்ட பொழில்வயல் அணிந்த மருகலில்

.. .. இரங்கி அருளிய .. பெருமானே.


பதம் பிரித்து:

பிறந்து, தின(ம்) மிக வருந்தி, உயிரது

.. .. பிரிந்து, மறுபடி .. பிறவாதே,

.. பிணங்கு மனமது திருந்தி, மிகு-நறை

.. .. பிறங்கு திருவடி .. மறவாதே,

சிறந்த தமிழ் நிறை அலங்கல் மணமது

.. .. செறிந்த மலர்கொடு .. பணிவேனோ?

.. சிவந்த சடைமிசை வளைந்த இளமதி,

.. .. சிரங்கள் இணைசரம் .. அணிவோனே;

பறந்த மலரவன் அகழ்ந்த அரி-இவர்

.. .. பணிந்து துதிசெய .. உயர்-சோதீ;

.. பரந்த கடலது கடைந்த இமையவர்

.. .. பயந்த விடம் உணும் .. அருளாளா;

இறந்த வணிகனின் உடம்பில் உயிர் வர

.. .. இறைஞ்சு கவுணியர் .. தமிழ் கேளா,

.. இருண்ட பொழில் வயல் அணிந்த மருகலில்

.. .. இரங்கி அருளிய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


V. Subramanian


On Wed, May 1, 2024 at 11:17 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-04-30

Siva Siva

unread,
May 4, 2024, 8:31:02 PM5/4/24
to santhav...@googlegroups.com

An old song with significant update:


2016-03-08

8.2.187 - பெற்றாய் பெற்றூர் - (கச்சூர் - திருக்கச்சூர்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தத்தா .. தனதான)

(இவ்வமைப்பு இந்தத் திருப்புகழ் அமைப்பைப் பெரும்பாலும் ஒத்தது -

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் - திருப்புகழ் - திருத்தணிகை)


பெற்றாய் இப்பார் பெற்றூர் சிட்டா

.. .. பித்தா பட்டார் .. பொடிபூசீ

.. நற்றா ளிற்போ திட்டார் கட்கே

.. .. அற்றாய் நக்கா .. உமைபாகா

மற்றார் பற்றா உற்றேன் வற்றா

.. .. வைப்பே முற்றா .. மதிசூடீ

.. கற்றோர் சித்தா நித்தா முத்தா

.. .. கச்சூர் அத்தா .. அருளாயே

சொற்போர் இட்டார் எய்ப்பே உற்றே

.. .. தொக்கோ தத்தீ .. எனநீள்வாய்

.. துட்டே மிக்கான் மற்றோள் இற்றே

.. .. சுத்தா சொக்கா .. எனவேதான்

வெற்போர் பொற்றாள் வைத்தாய் பற்றார்

.. .. பொற்பூர் சுட்டாய் .. நகையாலே

.. வித்தே முத்தே அக்கா னத்தா

.. .. னைத்தோ லைப்போர் .. பெருமானே.


விளக்கம் இங்கே: https://madhisudi.blogspot.com/2024/05/0802187.html


V. Subramanian


On Fri, May 3, 2024 at 8:30 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-05-03

Siva Siva

unread,
May 5, 2024, 6:20:49 PM5/5/24
to santhav...@googlegroups.com

Hot off the keyboard!

2024-05-05

முதுகுன்றம்

----------------

(வண்ணவிருத்தம்;

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்

தனதனனந் தத்தத் .. தனதான)

(கலைஞரெணுங் கற்புக் - திருப்புகழ் - கொடும்பை)


பொருவினைவந் துற்றுத் துயர்தரநொந் தெய்த்துப்

.. .. புவியுழலுந் துக்கத் .. தொடர்மாயப்

.. புதுமலரும் பத்தித் தமிழ்மலருங் கட்டிப்

.. .. புகழடிநெஞ் சிட்டுப் .. பணிவேனோ

பருவரையொன் றிட்டுக் கடைகடல்நஞ் சத்தைப்

.. .. பருகியகண் டத்திற் .. கறையானே

.. பரையிடமொன் றப்பொற் சடையில்முழங் கப்புப்

.. .. பரவநறும் புட்பத் .. தொடைசூடீ

கருவ(ம்)மிகுந் துட்டத் தசமுகனின் பத்துக்

.. .. கதிர்முடியுங் கெட்டுப் .. பலநாளும்

.. கதறிவருந் திப்பற் பலதுதியுஞ் செப்பிக்

.. .. கழலைவணங் கச்சற் .. றடர்பாதா

திருவடிவந் தித்துப் பரவியதொண் டர்க்குத்

.. .. திரள்நிதிதந் தற்றைப் .. பரிவோனே

.. திரைநதியின் பக்கத் தினில்மிகவும் பொற்புத்

.. .. திகழ்முதுகுன் றத்துப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொரு-வினை வந்து-உற்றுத் துயர் தர, நொந்து எய்த்துப்,

.. .. புவி உழலும் துக்கத் .. தொடர் மாயப்,

.. புதுமலரும் பத்தித் தமிழ்மலரும் கட்டிப்

.. .. புகழடி நெஞ்சு இட்டுப் .. பணிவேனோ?

பரு-வரை ஒன்று இட்டுக் கடை-கடல்-நஞ்சத்தைப்

.. .. பருகிய கண்டத்திற் .. கறையானே;

.. பரை இடம் ஒன்றப், பொற்சடையில் முழங்கு-அப்புப்

.. .. பரவ, நறும்-புட்பத் .. தொடை சூடீ;

கருவ(ம்) மிகும் துட்டத் தசமுகனின் பத்துக்

.. .. கதிர்-முடியும் கெட்டுப், .. பலநாளும்

.. கதறி வருந்திப், பற்பல துதியும் செப்பிக்,

.. .. கழலை வணங்கச், சற்று அடர்-பாதா;

திருவடி வந்தித்துப் பரவிய தொண்டர்க்குத்

.. .. திரள்-நிதி தந்து அற்றைப் .. பரிவோனே;

.. திரை-நதியின் பக்கத்தினில் மிகவும் பொற்புத்

.. .. திகழ்- முதுகுன்றத்துப் .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

பொரு-வினை வந்து-உற்றுத் துயர் தர, நொந்து எய்த்துப், புவி உழலும் துக்கத் தொடர் மாயப் - (பொருதல் - போர்செய்தல்); (உறுதல் - அடைதல்); (நோதல் - வருந்துதல்; எய்த்தல் - வருந்துதல்; நொந்தெய்த்து - ஒருபொருட்பன்மொழி); (துக்கம் - துன்பம்); (தொடர் - தொடர்ச்சி; சங்கிலி);

புதுமலரும் பத்தித் தமிழ்மலரும் கட்டிப் புகழடி நெஞ்சு இட்டுப் பணிவேனோ - (பத்தி - பக்தி; வரிசை);

பரு-வரை ஒன்று இட்டுக் கடை-கடல்-நஞ்சத்தைப் பருகிய கண்டத்திற் கறையானே - (பரு வரை - பெரிய மலை);

பரை இடம் ஒன்றப், பொற்சடையில் முழங்கு-அப்புப் பரவ, நறும்-புட்பத் தொடை சூடீ - (பரை - உமாதேவி); (ஒன்றுதல் - ஒன்றாகச்சேர்தல்); (அப்பு - நீர்); (புட்பம் - புஷ்பம்); (தொடை - மாலை);

கருவ(ம்) மிகும் துட்டத் தசமுகனின் பத்துக் கதிர்-முடியும் கெட்டுப், பலநாளும் கதறி வருந்திப், பற்பல துதியும் செப்பிக், கழலை வணங்கச், சற்று அடர்-பாதா - (கருவம் - கர்வம்); (துட்ட - துஷ்ட); (கதிர் - கிரணம்; கதிர்த்தல் - பிரகாசித்தல்); (முடி - கிரீடம்; தலை); (அடர்த்தல் - நசுக்குதல்);

திருவடி வந்தித்துப் பரவிய தொண்டர்க்குத் திரள்-நிதி தந்து அற்றைப் பரிவோனே - (தொண்டர் - இங்கே, வன்தொண்டர் - ஒருபுடைப்பெயர்); (அற்றை - அன்று); (பரிதல் - இரங்குதல்);

திரை-நதியின் பக்கத்தினில் மிகவும் பொற்புத் திகழ்- முதுகுன்றத்துப் பெருமானே - (திரைநதி - அலைக்கும் ஆறு / அலையையுடைய ஆறு); (பொற்பு - அழகு);


V. Subramanian


On Sat, May 4, 2024 at 8:30 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2016-03-08

Anand Ramanujam

unread,
May 6, 2024, 8:07:10 PM5/6/24
to santhav...@googlegroups.com
2024-05-06

திருமால் துதி

----------------

(வண்ணவிருத்தம்;

தனந்த தனதன தனந்த தனதன

தனந்த தனதன .. தனதான)

(கரம் கமலம் மின் அதரம் பவளம் -திருப்புகழ் - இலஞ்சி)


அருந்தும் உணவொடு விரும்பு பொருளினை

.. .. அடைந்து சுகமுற - அலையாதே 

.. அடர்ந்த இருளற அகண்ட உலகினை 

.. .. அளந்த திருவடி - மறவாதே


வருந்து கரியழ விரைந்து வருமொரு

.. .. வரம்பில் அருள்நலம் - மொழிவேனோ

.. மறங்கொள் இரணியன் நொறுங்க வருவிறல்

.. .. மடங்கல் அழகினில் -  மகிழ்வேனோ  


சரங்க ளெனுமழை பொழிந்து தலைபல

.. .. சரிந்து விழவளை - சிலையாலே

.. சலங்கொ ளொருவன துடம்பு கெடவரு

.. .. தழைந்த புகழுடை - முதலோனே


தரங்க மிசையெழில் இலங்கும் அணையிலொர்

.. .. தடங்க ணறிதுயில் - வளர்வோனே

.. தளிர்ந்த மலரொடு பணிந்து தொழவினை

.. .. தவிர்ந்த நலமருள் - பெருமாளே!


(சலம் = வஞ்சம்; தரங்கம் = அலை -இங்கே கடலுக்கு ஆகுபெயராகி வருகிறது; பாற்கடல்)

  • இமயவரம்பன்


Siva Siva

unread,
May 6, 2024, 9:33:25 PM5/6/24
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Anand Ramanujam

unread,
May 6, 2024, 9:44:00 PM5/6/24
to santhav...@googlegroups.com
Thank you!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
May 6, 2024, 10:54:53 PM5/6/24
to சந்தவசந்தம்

பாடல் அருமை! வண்ணம் இமயம் என்றால் உமக்கு அதுவும் வரம்பல்ல, இமயவரம்பரே!
ரமணி

Ram Ramakrishnan

unread,
May 6, 2024, 10:55:16 PM5/6/24
to santhav...@googlegroups.com
தங்கள் கைவண்ணத்தில் மெருகேறிப் பளபளக்கும் அருமையான வண்ணப்பா, திரு. இமயவரம்பன்.

வாழ்க வளமுடன்.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 7, 2024, at 05:37, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

2024-05-06
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 6, 2024, 11:08:29 PM5/6/24
to santhav...@googlegroups.com
அன்பான பாராட்டுக்கு  மிக்க நன்றி, திரு. ரமணி. 

….

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
May 6, 2024, 11:09:56 PM5/6/24
to santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு. ராம்கிராம்!
.

குருநாதன் ரமணி

unread,
May 7, 2024, 2:15:25 AM5/7/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
திருப்120. 0349, காஞ்சீபுரம், 0510. சிதம்பரம்
தத்த தத்த தாத்த  தத்த தத்த தாத்த  தத்த தத்த தாத்த —— தனதான

பெற்ற முற்ற ராட்டம் பெற்ற வொட்டு மூர்த்தம்
. . பிச்சை கிட்ட நாட்டம் —— எனவாமே
. பிட்டு கிட்டு வேட்கை கட்ட விழ்த்த வுச்சி
. . பிப்ப லத்து வீழ்ச்சி —— நவிராமே
  [பெற்றம் உற்றர்: காளை உடையவர்; ஒட்டு மூர்த்தம்: பிரம்ம
   கபாலம்; பிப்பலம்: நீர்; நவிர்: ஆண்மயிர்]

நெற்றி யக்க நீட்டம் சித்த சற்கு வாட்டம்
. . நெட்டு யிர்த்த லாட்டி —— மகிழ்வாளே
. நெட்டை குட்டை யேற்ற அச்சு தற்கு வேட்பை
. . நெக்கு றுத்த லேற்பில் —— அருள்வாரே.
  [நெற்றியக்கம்: நெற்றிக்கண்; சித்தசன்:  மன்மதன்; வாட்டம்: அழிவு;
   நெட்டுயிர்த்தல்: பெருமூச்சு விடுதல்; ஆட்டி: மனையாட்டி;
   நெட்டை, குட்டை: நெடுமால், வாமனன்; வேட்பை: விருப்பமாகிய
   சங்கு சக்கரத்தை; நெக்குறுத்தல் ஏற்பில்: அவர் நெக்குருகி
   ஏற்றுக் கொண்ட நிலையில்]

அற்பு தத்தில் நாட்டம் முப்பு ரத்தை வீட்டல்
. . அத்த னுக்கு வேட்கை —— யுறுமாடல்
. அட்ட சித்தி யேற்ற மர்க்க டத்தின் ஆட்டம்
. . அற்பு தத்தின் கூத்து —— எனவாமே
  [மர்க்கடம்: குரங்கு, இங்கு ஆஞ்சநேயர்]

இற்று விட்ட யாக்கை பக்தி யற்ற போக்கில்
. . இத்து மத்தில் வாட்டும் —— எரிவாமே
. இப்பி றப்பின் ஓட்டம் முற்றி விட்ட மூச்சில்
. . இட்ட முற்ற வீட்டை —— அருள்வீரே.
  [இத்துமம்: விறகு]

07 மே 2024

★★★
திருப்புகழ் 349. முத்து ரத்ந சூத்ர (காஞ்சீபுரம்)
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த – தனதான

முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
  முற்செ மத்து மூர்க்கர் – வெகுபாவர்
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
  முச்சர் மெத்த சூட்சர் – நகையாலே

எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
  இட்ட முற்ற கூட்டர் – விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
  இப்ப டிக்கு மார்க்கம் – உழல்வேனோ

தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
  சிற்று டுக்கை சேட்டை – தவில்பேரி
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
  செக்க டற்கு ளாழ்த்து – விடும்வேலா

கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
  கத்தர் பித்தர் கூத்தர் – குருநாதா
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
  கச்சி நத்தி நாட்கொள் – பெருமாளே.

★★★★★

Siva Siva

unread,
May 7, 2024, 9:20:05 AM5/7/24
to santhav...@googlegroups.com
Challenging pattern.

See highlighted places.

/ நெக்குறுத்தல் /
Is this a new coinage?
Here உறுத்தல் = ?

V. Subramanian

Siva Siva

unread,
May 7, 2024, 8:31:20 PM5/7/24
to santhav...@googlegroups.com

2024-05-06

இராமேச்சுரம்

----------------

(வண்ணவிருத்தம்;

தானாதன தானன தானன

தானாதன தானன தானன

தானாதன தானன தானன .. தனதான)

(இந்த அமைப்புக் கீழ்க்காணும் திருப்புகழைப் பெரும்பாலும் ஒத்தது;

பூமாதுர மேயணி மான்மறை - திருப்புகழ் - சீகாழி)


தீராவினை யால்மிகு வாதைகள் .. ஓயாதுற ஆயுளு மாயெரி

.. .. சேராமுனம் ஆர்கழ லேதொழும் .. அறிவாகிச்

.. சேவேறிய சேவக னேபுரி .. நூலார்திரு மார்பின நீறணி

.. .. தேவாவென நாடொறும் ஓதிட .. அருளாயே

வாராரிள மாமுலை மாதொரு .. கூறாகிய மேனிய காவென

.. .. வாயாலுனை ஓதிய மாணியை .. அடைகாலன்

.. மாளாவிழு மாறவன் மார்புதை .. பாதாஒளி வீசிடும் ஓர்மழு

.. .. வாளாஅதள் ஆடையை யேமகிழ் .. திருவாளா

நீரார்சடை மேலணி கூவிளம் .. ஆர்மாலைகு ராமலர் மாசுண(ம்)

.. .. நீள்மாமதி சூடிய நாயக .. இமையோர்கள்

.. நீயேதுணை மூவெயி லார்துயர் .. தாளோமென ஓர்கணை யாலவை

.. .. நீறாகிட வேயம ராடிய .. பெருவீரா

ஏரார்முடி ஆறொடு நாலுடை .. மாமூடனை மாய்சிலை மாயவன்

.. .. ஏடார்மல ரால்வழி பாடுசெய் .. ஒருநாதா

.. ஈறாதியி லாயணி கோபுரம் .. வானார்மதி யேதொட நீளுமி

.. .. ராமேசுர மேயிட மாகிய .. பெருமானே.


பதம் பிரித்து:

தீரா-வினையால் மிகு வாதைகள் .. ஓயாது உற, ஆயுளும் ஆய், எரி

.. .. சேராமுனம், ஆர்-கழலே தொழும் .. அறிவு ஆகிச்,

.. "சேவேறிய சேவகனே; புரி- .. நூல் ஆர் திரு மார்பின; நீறு-அணி

.. .. தேவா" என நாள்தொறும் ஓதிட .. அருளாயே;

"வார் ஆர் இள- மா-முலை மாது ஒரு .. கூறு ஆகிய மேனிய; கா" என

.. .. வாயால் உனை ஓதிய மாணியை .. அடை-காலன்

.. மாளா-விழுமாறு அவன் மார்பு உதை .. பாதா; ஒளி வீசிடும் ஓர் மழு-

.. .. வாளா; அதள்-ஆடையையே மகிழ் .. திருவாளா;

நீர் ஆர் சடைமேல் அணி கூவிளம் .. ஆர் மாலை, குராமலர், மாசுண(ம்),

.. .. நீள்-மா-மதி சூடிய நாயக; .. இமையோர்கள்

.. "நீயே துணை; மூவெயிலார் துயர் .. தாளோம்" என, ஓர் கணையால் அவை

.. .. நீறு ஆகிடவே அமராடிய .. பெருவீரா;

ஏர் ஆர் முடி ஆறொடு நாலுடை .. மா-மூடனை மாய்-சிலை மாயவன்

.. .. ஏடு ஆர் மலரால் வழிபாடு செய் .. ஒரு நாதா;

.. ஈறு ஆதி இலாய்; அணி கோபுரம் .. வான் ஆர் மதியே தொட நீளும்

.. .. இராமேசுரமே இடம் ஆகிய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

(வாதை - துன்பம்); (எரி - தீ); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆய் - ஆகி; ஆதல் - முடிதல்; உண்டாதல்);

(சே - எருது); (சேககன் - வீரன்);

(வார் - முலைக்கச்சு); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (மாளா - மாண்டு; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்);

(அதள் - தோல்); (மகிழ்தல் - விரும்புதல்);

(அணி - அழகு); (கூவிளம் - வில்வம்); (மாசுணம் - பாம்பு);

(எயில் - மதில்); (துயர் - துன்பம்); (தாளுதல் - பொறுத்தல்); (அமர் - போர்);

(ஏர் - அழகு); (ஆர் - நிறைதல்; பொருந்துதல்); (மாய்த்தல் - கொல்தல்); (சிலை - வில்); (மாயவன் - திருமால் - இங்கே இராமன்); (ஏடு - பூவிதழ்); (ஒரு - ஒப்பற்ற);


V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
May 7, 2024, 11:40:37 PM5/7/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. இறுதி வடிவம்:
#ரமணி_திருப்புகழ்
திருப்120. 0349, காஞ்சீபுரம், 0510. சிதம்பரம்
தத்த தத்த தாத்த  தத்த தத்த தாத்த  தத்த தத்த தாத்த —— தனதான

பெற்ற முற்ற ராட்டம் ஒட்டி விட்ட ஊச்சி

. . பிச்சை கிட்ட நாட்டம் —— எனவாமே
. பிட்டு கிட்டு வேட்கை கட்ட விழ்த்த வுச்சி
. . பிப்ப லத்து வீழ்ச்சி —— நவிராமே
  [பெற்றம் உற்றர்: காளை உடையவர்; ஒட்டு ஊச்சி: உச்சி
   என்பதன் நீட்டல்; விகாரம்; பிரம்ம கபாலம்; பிப்பலம்: நீர்;
   நவிர்: ஆண்மயிர்]

நெற்றி யக்க நீட்டு சித்த சற்கு வாட்டம்
. . நெட்டு யிர்த்த லாட்டி —— மகிழ்வாளே
. நெட்டை குட்டை யேற்ற அச்சு தற்கு வேட்பை
. . நெக்கு றுத்த லேற்பில் —— அருள்வாரே.
  [நெற்றியக்கம்: நெற்றிக்கண்; சித்தசன்:  மன்மதன்; வாட்டம்: அழிவு;
   நெட்டுயிர்த்தல்: பெருமூச்சு விடுதல்; ஆட்டி: மனையாட்டி;
   நெட்டை, குட்டை: நெடுமால், வாமனன்; வேட்பை: விருப்பமாகிய
   சங்கு சக்கரத்தை; நெக்குறுத்தல் ஏற்பில்: அவர் நெக்குருகி
   ஏற்றுக் கொண்ட நிலையில்]

அற்பு தத்தில் நாட்டம் முப்பு ரத்தை வீட்டல்
. . அத்த னுக்கு வேட்கை —— யுறுமாடல்
. அட்ட சித்தி யேற்ற மர்க்க டத்தின் ஆட்டம்
. . அற்பு தத்தின் கூத்து —— எனவாமே
  [மர்க்கடம்: குரங்கு, இங்கு ஆஞ்சநேயர்]

இற்று விட்ட யாக்கை பக்தி யற்ற போக்கில்
. . இத்து மத்தில் வாட்டும் —— எரிவாமே
. இப்பி றப்பின் ஓட்டம் முற்றி விட்ட மூச்சில்
. . இட்ட முற்ற வீட்டை —— அருள்வீரே.
  [இத்துமம்: விறகு]

07 மே 2024

★★★★★

Siva Siva

unread,
May 7, 2024, 11:48:28 PM5/7/24
to santhav...@googlegroups.com
Sorry I did not notice these issues before.

/  கட்ட விழ்த்த வுச்சி   /

/ கூத்து —— னவாமே /

V. Subramanian

lns2...@gmail.com

unread,
May 8, 2024, 5:44:03 AM5/8/24
to சந்தவசந்தம்
Very nice,

Srini

குருநாதன் ரமணி

unread,
May 8, 2024, 9:32:45 AM5/8/24
to சந்தவசந்தம்
#ரமணி_திருப்புகழ்
திருப்121. 0775. பூமாது உரமேயணி  (சீகாழி)
நாடகம், அந்தமேதோ?
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)


தானாதன தானன தானன | தானாதன தானன தானன
தானாதன தானன தானன —— தந்ததான

வானோர்பதி யானவர் ஈடிலி மேலோரர வோடவும் நீறணி
. . மானோர்கர மீதுயர் ஆடலர் —— நின்றமேனி
. மாறாதவர் கோவண மேனியர் சேனாபதி தேவர் சேயளி
. . மாதோர்புற மானவர் ஆலமர் —— கின்றகோலம்

  [நின்ற, ஆலமர்கின்ற: ஆடும்போது நின்றகோலம், ஆலடியில்
   அமர்ந்த கோலம்; சேயளி: சேயைக் கொடையாகத் தந்தவர்]

கூனார்பிறை சூடுவர் வானதி மேலாய்விழு ஆரண ரானவர்
. . கூடேறுமெரி பூமியில் ஆடுவர் —— கந்தலாடை
. கூராரிலை வேடுவ ரானவர் சாமானிய ரானவர் சாதுவர்
. . கூவார்கடல் மீனவ ரானவர் ——  கொண்டகோலம்

  [கூராரிலை: கூரான, மூவிலைச் சூலம்; சாதுவர்: ஐம்புலன் அடக்கிய
   நல்லவர்; கூவார்கடல்: கூ: பூமி]

தேனார்மலர் தாள்களில் வீழ்வுற ஆராதனை யோடு வாழ்பவர்
. . தேகாதன யோகியு மானவர் ——  சிந்தையாள்வர்
. தேசோமய மானவர் தேய்விலி தீயானவர் சோதி வானுயர்
. . தேசாதிபதி யாவரும் நாடுமுன் —— நந்திதேவர்

   [தேகாதனம்: கையின்மேற் கை மலரவிரியவும் கண்கள்
    நுனிமூக்கைப் பார்க்கவும் அமையும் யோகாசனவகை
    (தத்துவப். 107,உரை.) தேசாதிபதி: நாடாள்வோர்;
    நாடுமுன்: நாடுவதற்கு முன்னால் நிற்பவர் நந்திதேவர்]

நானார்மனம் வீழ்வுற நாடுவன் மாலைமலர் கோவிலில் ஓர்புறம்
. . நாவார்கவி நால்வரும் மேலுற —— உந்துவேனே
. நாகாதிபன் வானவர் காவலர் சோணாசல தேவரை ஓர்முறை
. . நாடாரெவர் வாழ்வுறும் நாடகம் —— அந்தமேதோ?

   [மாலைமலர்: மாலை மலரும், மாலையும் மலரும் சூடும்;
    நாவார்கவி நால்வர்: நாயன்மார்கள் நால்வர்; உந்துவேன்:     மேலெழும்புவேன், பொருந்துவேன்; நாகாதிபன்: சுவர்க்கத்தின்
    அரசன்: இந்திரன்; அந்தம்: முடிவு]

★★★
திருப்புகழ் 775 பூமாது உரமேயணி  (சீகாழி)

தானாதன தானன தானன
  தானாதன தானன தானன
  தானாதன தானன தானன ...... தந்ததான


பூமாதுர மேயணி மான்மறை
  வாய்நாலுடை யோன்மலி வானவர்
  கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம்

பூராயம தாய்மொழி நூல்களும்
   ஆராய்வதி லாதட லாசுரர்
   போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி

நீமாறரு ளாயென ஈசனை
   பாமாலைக ளால்தொழு தேதிரு
   நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு

நீரேர்தரு சானவி மாமதி
   காகோதர மாதுளை கூவிளை
   நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே

போமாறினி வேறெது வோதென
   வேயாரரு ளாலவ ரீதரு
   போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு

பூலோகமொ டேயறு லோகமு
   நேரோர் நொடி யேவரு வோய்சுர
   சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்

காமாவறு சோமச மானன
   தாமாமண மார்தரு நீபசு
   தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக்

காவாயடி நாளசு ரேசரை
   யேசாடிய கூர்வடி வேலவ
   காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.

★★★★★

குருநாதன் ரமணி

unread,
May 8, 2024, 9:38:02 AM5/8/24
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. 
. . அற்பு தத்தின் கூத்து —— வருமாடல் என்று திருத்திக்கொண்டேன்.
ரமணி

Siva Siva

unread,
May 8, 2024, 9:43:26 AM5/8/24
to santhav...@googlegroups.com
I think there are some places where pattern conformance corrections are needed.

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
May 8, 2024, 10:12:07 AM5/8/24
to சந்தவசந்தம்
(கண்ணில் விளக்கெண்ணெய் கொண்டு) திருத்திய பாடல் கீழே.

#ரமணி_திருப்புகழ்
திருப்121. 0775. பூமாது உரமேயணி  (சீகாழி)
நாடகம், அந்தமேதோ?
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

தானாதன தானன தானன | தானாதன தானன தானன
தானாதன தானன தானன —— தந்ததான

வானோர்பதி யானவர் ஈடிலி மேலோரர வோடவும் நீறணி
. . மானோர்கர மீதுயர் ஆடலர் —— நின்றமேனி
. மாறாதவர், கோவண மேனியர் சேனாபதி தேவர் சேயளி

. . மாதோர்புற மானவர் ஆலமர் —— கின்றகோலம்

கூனார்பிறை சூடுவர் வானதி மேலாய்விழு ஆரண ரானவர்
. . கூடேறுமெரி பூமியில் ஆடுவர் —— விந்தையோடு

. கூராரிலை வேடுவ ரானவர் சாமானிய ரானவர் சாதுவர்
. . கூவார்கடல் மீனவ ராயவர் ——  வந்தகோலம்

தேனார்மலர், தாள்களில் வீழ்வுற ஆராதனை யோடு வாழ்பவர்
. . தேகாதன யோகியு மானவர் ——  எந்தையீசர்

. தேசோமய மானவர் தேய்விலி தீயானவர் சோதி வானுயர்
. . தேசாதிபதி யாவரும் நாடுமுன் —— நந்திதேவர்

நானார்மனம் வீழ்வுற நாடுவன் மாலைமலர் கோவிலில் ஓர்புறம்
. . நாவார்கவி நால்வரும் மேலுற —— உந்துவேனே
. நாகாதிபன் வானவர் காவலர் சோணாசல தேவரை ஓர்முறை
. . நாடாரெவர் வாழ்வுறும் நாடகம் —— அந்தமேதோ?

★★★★★

Siva Siva

unread,
May 8, 2024, 10:26:05 AM5/8/24
to santhav...@googlegroups.com
See highlighted places below.

By the way, in your other song, there is one more place needing attention.
/  . அற்பு தத்தின் கூத்து /

V. Subramanian

குருநாதன் ரமணி

unread,
May 8, 2024, 10:43:05 AM5/8/24
to சந்தவசந்தம்
இது சரியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.

#ரமணி_திருப்புகழ்
திருப்121. 0775. பூமாது உரமேயணி  (சீகாழி)
நாடகம், அந்தமேதோ?
(வண்ணப் பாடல்: குருநாதன் ரமணி)

தானாதன தானன தானன | தானாதன தானன தானன
தானாதன தானன தானன —— தந்ததான

வானோர்பதி யானவர் ஈடிலி மேலோரர வோடவும் நீறணி
. . மானோர்கர மீதுயர் ஆடலர் —— நின்றமேனி
. மாறாதவர், கோவண மேனியர் சேனாபதி வானவர் சேயளி

. . மாதோர்புற மானவர் ஆலமர் —— கின்றகோலம்

  [நின்ற, ஆலமர்கின்ற: ஆடும்போது நின்றகோலம், ஆலடியில்
   அமர்ந்த கோலம்; சேயளி: சேயைக் கொடையாகத் தந்தவர்]

கூனார்பிறை சூடுவர் வானதி மேலாய்விழும் ஆரண மூலவர்
. . கூடாயெரி பூமியில் ஆடுவர் —— விந்தையோடு

. கூராரிலை வேடுவ ரானவர் சாமானிய ரானவர் சாதுவர்
. . கூவார்கடல் மீனவ ராயவர் ——  வந்தகோலம்

  [கூராரிலை: கூரான, மூவிலைச் சூலம்; சாதுவர்: ஐம்புலன் அடக்கிய
   நல்லவர்; கூவார்கடல்: கூ: பூமி]

தேனார்மலர், தாள்களில் வீழ்வுற ஆராதனை யோடிவர் வாழ்பவர்

. . தேகாதன யோகியு மானவர் ——  எந்தையீசர்
. தேசோமய மானவர் தேய்விலி தீயானவர் சோதியில் வானுயர்

. . தேசாதிபதி யாவரும் நாடுமுன் —— நந்திதேவர்

   [தேகாதனம்: கையின்மேற் கை மலரவிரியவும் கண்கள்
    நுனிமூக்கைப் பார்க்கவும் அமையும் யோகாசனவகை
    (தத்துவப். 107,உரை.) தேசாதிபதி: நாடாள்வோர்;
    நாடுமுன்: நாடுவதற்கு முன்னால் நிற்பவர் நந்திதேவர்]

நானார்மனம் வீழ்வுற நாடுவன் பூவார்மணம் ஆலயம் ஓர்புறம்

. . நாவார்கவி நால்வரும் மேலுற —— உந்துவேனே
. நாகாதிபன் வானவர் காவலர் சோணாசல தேவரை ஓர்முறை
. . நாடாரெவர் வாழ்வுறும் நாடகம் —— அந்தமேதோ?

   [மாலைமலர்: மாலை மலரும், மாலையும் மலரும் சூடும்;
    நாவார்கவி நால்வர்: நாயன்மார்கள் நால்வர்; உந்துவேன்:     மேலெழும்புவேன், பொருந்துவேன்; நாகாதிபன்: சுவர்க்கத்தின்
    அரசன்: இந்திரன்; அந்தம்: முடிவு]

★★★

It is loading more messages.
0 new messages