வண்ணப் பாடல் - 2

905 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 9, 2020, 10:27:10 PM5/9/20
to santhavasantham
"வண்ணப் பாடல்" இழை 1000 மடல்களைத் தாண்டிவிட்டதை இன்றுதான் கவனித்தேன்!

ஆதலால் இந்தப் புத்திழை!

பழைய இழையில்  இன்று இட்ட பாடலை இங்கேயும் இடுகின்றேன்.

=====================

2020-05-09

உன் பற்று என்று அடைவேன் (பொது)

------------------

தத்தந் தத்தந் தனதான )

(இந்தச் சந்தக்குழிப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


கட்டுண் டெய்க்குந் தமியேனும்

.. கற்றுன் பற்றென் றடைவேனோ

துட்டம் பொக்கம் புரிதீயர்

.. துக்கந் துய்க்கும் பலனீவாய்

கட்டுங் கச்சும் பணியாகும்

.. கட்டங் கத்தொண் படையானே

பிட்டுண் டப்புண் பெறுவோனே

.. பெற்றஞ் சுற்றும் பெருமானே.


கட்டுண்டு எய்க்கும் தமியேனும் கற்று உன் பற்று என்று அடைவேனோ -

துட்டம் பொக்கம் புரி தீயர் துக்கம் துய்க்கும் பலன் ஈவாய் -

கட்டும் கச்சும் பணி ஆகும்கட்டங்கத்து ஒண் படையானே -

பிட்டு உண்டு அப்புண் பெறுவோனே -

பெற்றம் சுற்றும் பெருமானே -


அன்பொடு,

விசுப்பிரமணியன்



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaraman NV

unread,
May 9, 2020, 10:58:51 PM5/9/20
to santhav...@googlegroups.com

அன்னையர் தினம்!

பிரிந்து சென்று ஆண்டுகள்

இருபத்து மூன்று பறந்தன..

இருப்பினும் ஒவ்வொரு நாளும்

அருகிருந்து என்னைக் காக்கும்

அன்பு அன்னையே! அருமைத் தெய்வமே!

பண்பைப் போதித்து நீ வளர்த்தாய்!

பஞ்சைப் போலப் பிடித்துக் கொண்டேன்!

அஞ்சாநெஞ்சம் நீ கொடுத்த கொடை!

வஞ்சம் அற்ற வாழ்வு நீ தந்த வாழ்வு!

தஞ்சம் புகுந்தேன் உன் தாளடியில்!

காத்திடுவாய் என் காவல் தெய்வம் தாயே!

அன்பையும் அறனையும் ஊட்டி வளர்த்த அன்னையே!

பண்பு வழியை வாழும் வரை

காலம் காலம் கடைப்பிடிப்பேன் அம்மா!

முனைவர் என் வி சுப்பராமன்

சென்னை

9840477552

 


--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM7nt9dgJ4bUU%3Dhi4sFObCujfkR%3DKjV5cVakaXRH2%2BZKg%40mail.gmail.com.


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Vis Gop

unread,
May 9, 2020, 11:17:14 PM5/9/20
to santhav...@googlegroups.com

துட்டம் பொக்கம் புரிதீயர்

.. துக்கந் துய்க்கும் பலனீவாய்


இதன் பொருளென்ன? இது பிரார்த்தனையா அல்லது இறைவன் இயல்பைக் குறிக்கும் துதியா?
நல்வாழ்த்துகள் 
கோபால். 
Sent from my iPhone

On 10-May-2020, at 7:56 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
......

Vis Gop

unread,
May 9, 2020, 11:21:21 PM5/9/20
to santhav...@googlegroups.com
அருமை!
Kindly place it in a different thread. 
Humbly,
gopal. 
Sent from my iPhone

Siva Siva

unread,
May 10, 2020, 9:31:48 AM5/10/20
to santhavasantham

கட்டுண்டு எய்க்கும் தமியேனும் கற்று உன் பற்று என்று அடைவேனோ - பிணித்துள்ள வினைகளால் வருத்தமுறும் நானும் உன்னை ஓதக் கற்று உன்மேல் என்று அன்பை அடைவேன்? அருள்வாயாக;

துட்டம் பொக்கம் புரி தீயர் துக்கம் துய்க்கும் பலன் ஈவாய் - தீமைகளையும் வஞ்சனையையும் விரும்பிச் செய்கின்ற தீயவர்கள் துக்கம் அனுபவிக்கும்படி அவர்களுக்கு வினைப்பலனைத் தருபவனே; (புரிதல் - விரும்புதல்; செய்தல்);


Siva Siva

unread,
May 10, 2020, 10:31:05 AM5/10/20
to santhavasantham

2020-05-10

நலம் அருளாய் (அன்னியூர்)

-----------------------------------

( தன்ன தனன தனதான )

(இந்தச் சந்தக்குழிப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


வெம்மை விரவு வினையாலே

.. விம்மு மிடியின் வரவாலே

செம்மை சிறிதும் அறியேனும்

.. திண்ண நலமும் உறுவேனோ

அம்மை எனவும் அருளாரும்

.. அண்ணல் எனவும் வருவோனே

அம்மை திகழு மிடறோனே

.. அன்னி அமரும் இறையோனே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



On Sat, May 9, 2020 at 10:26 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-05-09

உன் பற்று என்று அடைவேன் (பொது)

------------------

தத்தந் தத்தந் தனதான )

--

Vis Gop

unread,
May 10, 2020, 12:00:30 PM5/10/20
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு மிக்க நன்றி. 
கோபால். 
Sent from my iPhone

Vis Gop

unread,
May 10, 2020, 12:08:03 PM5/10/20
to santhav...@googlegroups.com
நீங்களும் இன்று தன்ன தனன தனதான என்ற வண்ணமே எடுத்துள்ளது மகிழ்ச்சியான வியப்பு. 

அம்மை திகழும் ?

அன்னி அமரும் ?


நல்வாழ்த்துகள் 
கோபால். 


Sent from my iPhone

Siva Siva

unread,
May 10, 2020, 12:09:06 PM5/10/20
to santhavasantham
It is because of you! :)

On Sun, May 10, 2020 at 12:08 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
நீங்களும் இன்று தன்ன தனன தனதான என்ற வண்ணமே எடுத்துள்ளது மகிழ்ச்சியான வியப்பு. 

அம்மை திகழும் ?

அன்னி அமரும் ?


நல்வாழ்த்துகள் 
கோபால். 

Vis Gop

unread,
May 10, 2020, 12:12:56 PM5/10/20
to santhav...@googlegroups.com
Oh! But you must be feeling it trivial.
gopal.
Sent from my iPhone

Siva Siva

unread,
May 10, 2020, 12:18:21 PM5/10/20
to santhavasantham
On Sun, May 10, 2020 at 10:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-05-10

நலம் அருளாய் (அன்னியூர்)

-----------------------------------

( தன்ன தனன தனதான )

(இந்தச் சந்தக்குழிப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


வெம்மை விரவு வினையாலே

.. விம்மு மிடியின் வரவாலே

செம்மை சிறிதும் அறியேனும்

.. திண்ண நலமும் உறுவேனோ

அம்மை எனவும் அருளாரும்

.. அண்ணல் எனவும் வருவோனே

அம்மை திகழு மிடறோனே

.. அன்னி அமரும் இறையோனே.


அம் மை திகழும் மிடறோனே - அழகிய கருநிறம் திகழும் கண்டத்தை உடையவனே

அன்னி அமரும் இறையோனே - திரு அன்னியூரில் விரும்பி உறைகின்ற இறைவனே.

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=16 

 


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


Vis Gop

unread,
May 10, 2020, 12:36:28 PM5/10/20
to santhav...@googlegroups.com

அம் மை திகழும் மிடறோனே - அழகிய கருநிறம் திகழும் கண்டத்தை உடையவனே; 

அன்னி அமரும் இறையோனே - திரு அன்னியூரில் விரும்பி உறைகின்ற இறைவனே


ஓ! மிக்க நன்றி. 
கோபால். 

Siva Siva

unread,
May 14, 2020, 9:46:28 PM5/14/20
to santhavasantham

2007-09-21

3.5.54) தமிழ்மாலை இடு நினைவு அருள்வாய் (சிரபுரம் - சீகாழி)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தனதன தனதன .. தனதான" என்ற சந்தக்குழிப்பு )

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)


எழுதரு பிறவிகள் .. தொறுநாளும்

.. எனதுள முனதடி .. மறவாமல்

பழுதறு தமிழ்கொடு .. புனைமாலை

.. பலபல இடுநினை .. வருளாயே

தொழுதெழும் இமையவர் .. துயர்தீரச்

.. சுடுகணை கொடுபுரம் .. எரிவீரா

செழுமலர் மதியணி .. சடையானே

.. சிரபுர நகருறை .. பெருமானே.


For notes: https://madhisudi.blogspot.com/2020/05/0305054.html


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Sun, May 10, 2020 at 10:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-05-10

நலம் அருளாய் (அன்னியூர்)

----------------------------------- 

"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
May 14, 2020, 11:20:04 PM5/14/20
to santhavasantham

2007-09-21

3.5.55) வண்தமிழ் ஓதி வழுத்த அருள் (புறவம் - சீகாழி)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தந்தன தத்தன தான

தந்தன தத்தன தான

தந்தன தத்தன தான .. தனதான " என்ற சந்தக்குழிப்பு )

(இந்தச் சந்தத்தில் திருப்புகழ்ப் பாடல் உள்ளதா என்று அறியேன்).


ஐம்புலன் இச்சைகள் மூட, வஞ்சம னத்தினன் ஆகி,

.... அஞ்சனம் இட்டழ கேறும் .. விழிமாதர்

.. அங்கசு கத்தினை நாடி, வெந்துயர் உற்றிட வாடி,

.... அஞ்சுபி றப்பொரு கோடி .. பெறலாமோ?

வம்புவ னப்புல வாத வண்டமிழ் நித்தலும் ஓதி,

.... மன்றினில் நர்த்தனம் ஆடும் .. உனதாளை,

.. மங்கலம் உற்றிடு மாறு, வெம்பவம் அற்றிடு மாறு,

.... வந்துவ ழுத்திடு மாறு .. வரமீயாய்!

நம்பும வர்க்கெளி தாகி, அன்றிரு வர்க்கரி தான,

.... நம்பம ழுப்படை சூலம் .. உடையானே!

.. நங்கையி டப்புறம் ஆக, அஞ்சடை யிற்புனல் ஓட,

.... நஞ்சுமி டற்றினில் நீல .. மணியாகும்

சம்புவு னைத்தொழு மாணி உய்ந்துயிர் பெற்றிட, வாதை

.... தந்துது ரத்திய கோபம் .. மிகுகாலன்

.. தண்டனை பெற்றுயிர் கால அங்கவ னைச்செறு கால!

.... தண்புற வத்தினில் மேய .. பெருமானே!


For meaning: https://madhisudi.blogspot.com/2020/05/0305055.html


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



On Thu, May 14, 2020 at 9:46 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2007-09-21

3.5.54) தமிழ்மாலை இடு நினைவு அருள்வாய் (சிரபுரம் - சீகாழி)

--------------------------------------------------

--

Vis Gop

unread,
May 15, 2020, 11:12:38 AM5/15/20
to santhav...@googlegroups.com
ஆஹா! அற்புதம்!
கோபால்.

On Fri, May 15, 2020 at 8:50 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2007-09-21

3.5.55) வண்தமிழ் ஓதி வழுத்த அருள் (புறவம் - சீகாழி)

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 15, 2020, 4:15:14 PM5/15/20
to சந்தவசந்தம்
மிக மிக அருமை! திருப்புகழின் சந்தம் மட்டுமன்றி, இருபகுதிகளாய் அமைப்பும் பொருந்திய வண்ணம். 

>> கோபம் .. மிகுகாலன் .. தண்டனை பெற்றுயிர் கால அங்கவ னைச்செறு கால!

காலல் - கக்குதல், வெளிவிடுதல் - நல்ல, அரிய, மடக்கணி அமைந்த பிரயோகம்.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 15, 2020, 8:03:07 PM5/15/20
to santhavasantham
Thank you both for the feedback.
2007-இல் எழுதிய பாடலை நேற்றுச் சில மாற்றங்கள் செய்து இட்டேன்.

Siva Siva

unread,
May 26, 2020, 10:59:50 PM5/26/20
to santhavasantham

முன்பு எழுதிய பாடல் - சில மாற்றங்களோடு:

2008-12-31

3.5.56) உனைத் தொழ அருள்வாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தத்தனத் தனத்தனத் தனதான" என்ற சந்தக்குழிப்பு )

(இந்தச் சந்தத்தில் திருப்புகழ்ப் பாடல் உள்ளதா என்று அறியேன்).


கற்பதைப் புறக்கணித் தறியாமை

.. கப்பிடப் பவத்தினைத் தருபாவம்

வெற்பெனப் பெருக்குமிச் சிறியேனும்

.. மித்தையற் றுனைத்தொழற் கருளாயே

நற்பதத் தினைக்கருத் தினில்நாளும்

.. நச்சிவைத் தவர்க்கினித் திடுநாதா

சொற்பதத் தினுக்ககப் படலாகாய்

.. சுத்தபொற் சடைப்பிறைப் பெருமானே.


பதம் பிரித்து:

கற்பதைப் புறக்கணித்து அறியாமை

.. கப்பிடப் பவத்தினைத் தரு பாவம்

வெற்பு எனப் பெருக்கும் இச் சிறியேனும்

.. மித்தை அற்று உனைத் தொழற்கு அருளாயே;

நற்பதத்தினைக் கருத்தினில் நாளும்

.. நச்சி வைத்தவர்க்கு இனித்திடும் நாதா;

சொற்பதத்தினுக்கு அகப்படல் ஆகாய்;

.. சுத்த; பொற்சடைப்பிறைப் பெருமானே.


For more details: https://madhisudi.blogspot.com/2020/05/0305056.html


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Thu, May 14, 2020 at 11:19 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2007-09-21

3.5.55) வண்தமிழ் ஓதி வழுத்த அருள் (புறவம் - சீகாழி)


Siva Siva

unread,
May 27, 2020, 10:36:35 PM5/27/20
to santhavasantham

இன்னொரு பழைய பாடல் - மாற்றங்களோடு:


2009-01-01

3.5.57) புகழ்தமிழ் கூற அருளாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தனதன தான தனதன தான

.. தனதன தான .. தனதான" என்ற சந்தக்குழிப்பு )

(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


கொடியன வான வினைகெடு மாறு

..... குளிர்திரை சூழும் .. நிலமீது

.. குழுவொடு கூடி அடிமலர் மீது

..... கொழுமலர் தூவும் .. அவர்போல்நான்

பொடியணி மேனி தனிலொரு கூறு

..... புரிகுழ லாளை .. உடையானே

.. புகலென வான உனைமற வாது

..... புகழ்தமிழ் கூற .. அருளாயே

அடியிணை நாடி இசையொடு பாடி

..... அருமல ரோடு .. பலநாளும்

.. அளியொடு பூசை புரிகிற பாலன்

...... அவனுயிர் நாடி .. வருகாலன்

மடிவுறு மாறு நொடியினி லோடி

..... மலரடி மார்பில் .. உறவீசி

.. மறைமுனி வாழ அருளிய ஈச

..... மழவிடை ஏறு .. பெருமானே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



On Tue, May 26, 2020 at 10:59 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

முன்பு எழுதிய பாடல் - சில மாற்றங்களோடு:

2008-12-31

3.5.56) உனைத் தொழ அருள்வாய் (பொது)


Siva Siva

unread,
May 28, 2020, 10:51:33 PM5/28/20
to santhavasantham

2009-01-01

3.5.58) தமிழ்மாலை இட அருளாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தனதன தான தனதன தான

.. தனதன தான .. தனதான" என்ற சந்தக்குழிப்பு )

(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


முடிமிசை நீல மயிர்நரை யாகி

..... முதுமையும் ஏறி .. அதனாலே

.. மொழிதடு மாற நமனது தூதர்

..... முடுகியி ழாமு .. னடியேனும்

கடியுல வாத தமிழ்மலி மாலை

..... கவினுறு தாளில் .. இடுவேனோ

.. கனல்மழு சூலம் மறிதலை யோடு

..... கரதல மேறும் .. அருளாளா

துடியிடை மாதை இணைபிரி யாது

..... துணிமதி சூடி .. வருவோனே

.. துளிநிற மேறு மிடறொளி நீறு

..... துதைதிரு மேனி .. உடையானே

வடிவில தான ஒருபொரு ளாகி

..... வடிவுக ளாகு .. மிறையோனே

.. மணிவண னோடு மலரவ னேட

..... வளரெரி யான .. பெருமானே.


பதம் பிரித்து:

முடிமிசை நீலமயிர் நரையாகி முதுமையும் ஏறி .. அதனாலே

.. மொழி தடுமாற நமனது தூதர் முடுகி இழாமுன் .. அடியேனும்

கடி உலவாத தமிழ்மலி மாலை கவினுறு தாளில் .. இடுவேனோ

.. கனல்மழு சூலம் மறி தலையோடு கரதலம் ஏறும் .. அருளாளா

துடியிடை மாதை இணை பிரியாது துணிமதி சூடி .. வருவோனே

.. துளிநிறம் ஏறு மிடறு, ஒளி நீறு துதை திருமேனி .. உடையானே

வடிவு இலதான ஒரு பொருள் ஆகி வடிவுகள் ஆகும் .. இறையோனே

.. மணிவணனோடு மலரவன் நேட வளர் எரி ஆன .. பெருமானே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



On Wed, May 27, 2020 at 10:36 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

இன்னொரு பழைய பாடல் - மாற்றங்களோடு:


2009-01-01

3.5.57) புகழ்தமிழ் கூற அருளாய் (பொது)



Siva Siva

unread,
May 30, 2020, 12:34:39 PM5/30/20
to santhavasantham

இன்னொரு பழைய பாடல் - புதுப்பொலிவோடு! :)


2009-01-02

3.5.59) கழலிணை நினை மனம் அருளாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தத் தனதன தந்தத் தனதன

தந்தத் தனதன தந்தத் தனதன

தனத்த தனதன தனத்த தனதன

தனத்த தனதன தனத்த தனதன .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(விந்துப் புளகித இன்புற் றுருகிட - திருப்புகழ் - திருவருணை)


இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில்

..... முந்தைப் புரிவினை துன்பத் தொடர்தர

.. இளைத்து மிகுபிணி வருத்த இழிவினை

..... இழைத்து நிதமிக அலுத்து வழிதனை .. அறியாமல்

நொந்தித் துயரற வந்தித் திடுமொரு

..... சிந்தைத் திறனிலி அம்பொற் கழலிணை

.. நுவற்சி தனைநினை மனத்தை அடைகிற

..... வரத்தை அருளிடி னுனக்கு வருகுறை .. உளதோசொல்

பந்தத் திருமண மொன்றைத் தடைசெய

..... அன்றச் சுவடியை முன்பிட் டதுவொரு

.. படிச்சு வடியென வழக்கி லுரைசெய்து

..... தனக்க டிமையென முடித்து மிகவருள் .. புரிவோனே

அந்திப் பிறையொடு கொன்றைச் சரமணி

..... செம்பொற் சடைவிடை வென்றிக் கொடிமிசை

.. அலைக்கு நதிமுடி மலைக்கு மகளுட

..... லருத்த மெரிவிழி இருக்கு மழகிய .. பெருமானே.


பதம் பிரித்து:

இந்தப் புவிதனில் வந்து, இப்பிறவியில்

..... முந்தைப் புரி வினை துன்பத் தொடர் தர

.. இளைத்து, மிகு பிணி வருத்த, இழிவினை

..... இழைத்து நிதம் மிக அலுத்து, வழிதனை .. அறியாமல்

நொந்து, இத்துயர் அற வந்தித்திடும் ஒரு

..... சிந்தைத் திறன் இலி, அம் பொற்கழல் இணை

.. நுவற்சிதனை நினை மனத்தை அடைகிற

..... வரத்தை அருளிடின் நுனக்கு வரு குறை .. உளதோ சொல்!

பந்தத் திருமணம் ஒன்றைத் தடைசெய

..... அன்று அச் சுவடியை முன்பு இட்டு, அது ஒரு

.. படிச் சுவடி என வழக்கில் உரைசெய்து,

..... தனக்கு அடிமை என முடித்து, மிக அருள் .. புரிவோனே!

அந்திப் பிறையொடு கொன்றைச் சரம் அணி

..... செம் பொற்சடை, விடை வென்றிக் கொடிமிசை,

.. அலைக்கும் நதி முடி, மலைக்கு மகள் உடல்

..... அருத்தம், எரி விழி, இருக்கும் அழகிய .. பெருமானே.


விளக்கத்தை இங்கே காண்க: https://madhisudi.blogspot.com/2020/05/0305059.html


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


On Thu, May 28, 2020 at 10:51 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-01

3.5.58) தமிழ்மாலை இட அருளாய் (பொது)

--

Siva Siva

unread,
Jun 27, 2020, 3:57:23 PM6/27/20
to santhavasantham

ஒரு பழம்பாடல் புது மெருகோடு! :)


2009-01-12

3.5.67) உன்னை நினைய அருள் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்த .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(தனனா தனந்த .. தனதான - என்றும் கருதலாமோ)

(வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


மணமேறு கின்ற .. தமிழ்பாடி

.. மணிநீல கண்டம் .. நினைவேனோ

குணசீலர் உண்ப .. தரிதாகிக்

.. குடமாடு முன்றன் .. முடிவீழ

உணர்வேது மின்றி .. நிலம்வீழ

.. உலவாத அன்பர் .. பசிதீரும்

வணநாளு மன்று .. படியீவாய்

.. மதிசூடு கின்ற .. பெருமானே.


விளக்கத்திற்கு: https://madhisudi.blogspot.com/2020/06/0305067.html


வி. சுப்பிரமணீயன்



On Sat, May 30, 2020 at 12:34 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

இன்னொரு பழைய பாடல் - புதுப்பொலிவோடு! :)


2009-01-02

3.5.59) கழலிணை நினை மனம் அருளாய் (பொது)


Pas Pasupathy

unread,
Jun 27, 2020, 8:06:43 PM6/27/20
to Santhavasantham
> தனனா தனந்த .. தனதான என்றும் கருதலாமோ?>

தனதான தந்த .. தனதான என்ற சந்தக்குழிப்புக்கு ஏற்ப எழுதப் பட்ட பாடலை
 தனனா  தனந்த ....    என்று பிரித்தால்,  அதற்கு ஏற்பச்  சீர்கள் பிரியும்போது வேறு வகையில் வகையுளிகள் ஏற்படுவது  ஓசையைக் குறைக்கும் என்று நினைக்கிறேன்.
 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--

Siva Siva

unread,
Jun 27, 2020, 8:31:46 PM6/27/20
to santhavasantham
நீங்கள் சொல்வது ஏற்புடைத்தே. 
எனினும், இத்திருப்புகழ்ப் பாடலைச் சரியாகச் சந்தக்குழிப்புக் குறித்திருக்கின்றனரா?

தனனா தனந்த ...... தனதான

......... பாடல் .........

வரியார் கருங்கண் ...... மடமாதர்

   மகவா சைதொந்த ...... மதுவாகி

இருபோ துநைந்து ...... மெலியாதே

   இருதா ளினன்பு ...... தருவாயே

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே

   பரமே சுரன்ற ...... னருள்பாலா

அரிகே சவன்றன் ...... மருகோனே

   அலைவா யமர்ந்த ...... பெருமாளே.

 

On Sat, Jun 27, 2020 at 8:06 PM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> தனனா தனந்த .. தனதான என்றும் கருதலாமோ?>

தனதான தந்த .. தனதான என்ற சந்தக்குழிப்புக்கு ஏற்ப எழுதப் பட்ட பாடலை
 தனனா  தனந்த ....    என்று பிரித்தால்,  அதற்கு ஏற்பச்  சீர்கள் பிரியும்போது வேறு வகையில் வகையுளிகள் ஏற்படுவது  ஓசையைக் குறைக்கும் என்று நினைக்கிறேன்.
 

On Sat, 27 Jun 2020 at 15:57, Siva Siva <naya...@gmail.com> wrote:

ஒரு பழம்பாடல் புது மெருகோடு! :)


2009-01-12

3.5.67) உன்னை நினைய அருள் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்த .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(தனனா தனந்த .. தனதான - என்றும் கருதலாமோ)

(வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


மணமேறு கின்ற .. தமிழ்பாடி

.. மணிநீல கண்டம் .. நினைவேனோ

குணசீலர் உண்ப .. தரிதாகிக்

.. குடமாடு முன்றன் .. முடிவீழ

உணர்வேது மின்றி .. நிலம்வீழ

.. உலவாத அன்பர் .. பசிதீரும்

வணநாளு மன்று .. படியீவாய்

.. மதிசூடு கின்ற .. பெருமானே.


விளக்கத்திற்கு: https://madhisudi.blogspot.com/2020/06/0305067.html


வி. சுப்பிரமணீயன்


Vis Gop

unread,
Jun 28, 2020, 4:35:05 AM6/28/20
to santhav...@googlegroups.com
கடைசி மூன்று பாடல்களை இப்போது படித்தேன். வகையுளி இன்றியே மிக அருமையாக இயற்றப்பட்ட வண்ணங்கள்.  வாசிக்க வாசிக்கச் சுவை!
நல்வாழ்த்துகள்
கோபால். 


Sent from my iPhone

Siva Siva

unread,
Jun 28, 2020, 5:34:19 PM6/28/20
to santhavasantham

2009-01-12

3.5.70) பேரைப் புகல அருள் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)


பாசத் .. தொடராலே

.. பாரிற் .. படுவேனும்

பேசற் .. கரியாய்நின்

.. பேரைப் .. புகல்வேனோ

தாசர்க் .. கினியானே

.. சாலப் .. பழையானே

வாசக் .. குழலாள்சேர்

.. வாமப் .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Jun 27, 2020 at 3:57 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

ஒரு பழம்பாடல் புது மெருகோடு! :)


2009-01-12

3.5.67) உன்னை நினைய அருள் (பொது)

--

Siva Siva

unread,
Jun 28, 2020, 7:18:26 PM6/28/20
to santhavasantham
Old is gold !  :)

2009-01-13

3.5.72) நாமம் ஓத அருள் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தானன தானன தானன

.. தானன தானன .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(ஏவினை நேர்விழி மாதரை - திருப்புகழ் - திருச்செந்தூர்)


பாடுவ தோவறி யேனுன சீரிரு

..... பாதமி ராவொடு .. பகலாகப்

.. பாடிடு வாரொடு சேரகி லேனிழி

..... பாதையி லேகுழி .. விழுமாறே

ஓடுகி றேனத னாலிட ரானவை

..... ஓய்வில தாய்வர .. உழல்வேனும்

.. ஊனமெ லாமற நாவொடு நாமம

..... தோதிடு மாறருள் .. புரியாயே

நீடுயர் தீயென ஆகிய நாளினி

..... னேடிய மாலய .. னறியாத

.. நீர்மைய னேநதி யோடுநி லாமதி

..... நீள்சடை மேலுற .. வருவோனே

ஆடும ராவரை நாணென வாகிட

..... ஆலமர் மாமிட .. றுடையோனே

.. ஆயிழை கூறுடை யாய்விடை யேறிய

..... ஆரழ காசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

பாடுவதோ அறியேன் உன சீர் இரு

..... பாதம்; இராவொடு .. பகலாகப்

.. பாடிடுவாரொடு சேரகிலேன்; இழி

..... பாதையிலே குழி விழுமாறே

ஓடுகிறேன்; அதனால் இடர் ஆனவை

..... ஓய்வு இலதாய் வர .. உழல்வேனும்,

.. ஊனம் எலாம் அற, நாவொடு நாமமது

..... ஓதிடுமாறு அருள் புரியாயே;

நீடு உயர் தீ என ஆகிய நாளினில்

..... நேடிய மால் அயன் அறியாத

.. நீர்மையனே; நதியோடு நிலாமதி

..... நீள்சடைமேல் உற .. வருவோனே;

ஆடும் அரா அரைநாண் என ஆகிட,

..... ஆல் அமர் மா மிடறு .. உடையோனே;

.. ஆயிழை கூறுடையாய்; விடை ஏறிய

..... ஆரழகா; சிவ பெருமானே.


விளக்கத்திற்கு: https://madhisudi.blogspot.com/2020/06/0305072.html


வி. சுப்பிரமணியன்



On Sun, Jun 28, 2020 at 5:34 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-12

3.5.70) பேரைப் புகல அருள் (பொது)


Pas Pasupathy

unread,
Jun 29, 2020, 8:16:03 AM6/29/20
to Santhavasantham

சில குறிப்புகள்:

1) என்னிடம் உள்ள செங்கல்வராய பிள்ளை நூலில் சந்தக் குழிப்பு இன்றி, 

இப்படிச் சீர் பிரிக்கப் பட்டிருக்கிறது. 


வரியார் கருங்கண் ...... மடமாதர்

   மகவாசை தொந்த ...... மதுவாகி

இருபோது  நைந்து ...... மெலியாதே

   இருதாளி னன்பு ...... தருவாயே

பரிபால னஞ்செய் ...... தருள்வோனே

   பரமேசு ரன்ற ...... னருள்பாலா

அரிகேச வன்றன் ...... மருகோனே

   அலைவா யமர்ந்த ...... பெருமாளே.


2) அவருடைய முதல் பதிப்பில்  சந்தக் குழிப்புகள் உள்ளன என்று யாரோ 

சொல்லிக் கேள்வி. நூலைப் பார்க்கமுடியவில்லை. பல வருடங்களாக எங்கே 

சந்தக் குழிப்புகள் முதன் முதலில் இடப்பட்டன, யார் இட்டது போன்றவற்றைத் தேடி 

வருகிறேன்.  ஓலைச்சுவடிகளிலா?

 ( இப்படி முதல் 100+ பாடல்களைச் சந்தக் குழிப்பு இன்றித்தான்  அவர் 

நூலில் காண்கிறேன்.)


3) வெண்டளை வரும் விருத்தமாக இருப்பதால்,  சீர் வாய்பாட்டின்படி இன்றி, மேல் 

கண்ட வாறும் எழுதலாம் என்று தோன்றுகிறது.


4) எப்படி எழுதினாலும் சந்தம் அதே. 



On Sat, 27 Jun 2020 at 20:31, Siva Siva <naya...@gmail.com> wrote:
நீங்கள் சொல்வது ஏற்புடைத்தே. 
எனினும், இத்திருப்புகழ்ப் பாடலைச் சரியாகச் சந்தக்குழிப்புக் குறித்திருக்கின்றனரா?

தனனா தனந்த ...... தனதான

......... பாடல் .........

வரியார் கருங்கண் ...... மடமாதர்

   மகவா சைதொந்த ...... மதுவாகி

இருபோ துநைந்து ...... மெலியாதே

   இருதா ளினன்பு ...... தருவாயே

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே

   பரமே சுரன்ற ...... னருள்பாலா

அரிகே சவன்றன் ...... மருகோனே

   அலைவா யமர்ந்த ...... பெருமாளே.

 

On Sat, Jun 27, 2020 at 8:06 PM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
> தனனா தனந்த .. தனதான என்றும் கருதலாமோ?>

தனதான தந்த .. தனதான என்ற சந்தக்குழிப்புக்கு ஏற்ப எழுதப் பட்ட பாடலை
 தனனா  தனந்த ....    என்று பிரித்தால்,  அதற்கு ஏற்பச்  சீர்கள் பிரியும்போது வேறு வகையில் வகையுளிகள் ஏற்படுவது  ஓசையைக் குறைக்கும் என்று நினைக்கிறேன்.
 


N. Ganesan

unread,
Jun 29, 2020, 8:44:59 AM6/29/20
to Santhavasantham
On Mon, Jun 29, 2020 at 7:16 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:

சில குறிப்புகள்:

1) என்னிடம் உள்ள செங்கல்வராய பிள்ளை நூலில் சந்தக் குழிப்பு இன்றி, 

இப்படிச் சீர் பிரிக்கப் பட்டிருக்கிறது. 


வரியார் கருங்கண் ...... மடமாதர்

   மகவாசை தொந்த ...... மதுவாகி

இருபோது  நைந்து ...... மெலியாதே

   இருதாளி னன்பு ...... தருவாயே

பரிபால னஞ்செய் ...... தருள்வோனே

   பரமேசு ரன்ற ...... னருள்பாலா

அரிகேச வன்றன் ...... மருகோனே

   அலைவா யமர்ந்த ...... பெருமாளே.


2) அவருடைய முதல் பதிப்பில்  சந்தக் குழிப்புகள் உள்ளன என்று யாரோ 

சொல்லிக் கேள்வி. நூலைப் பார்க்கமுடியவில்லை. பல வருடங்களாக எங்கே 

சந்தக் குழிப்புகள் முதன் முதலில் இடப்பட்டன, யார் இட்டது போன்றவற்றைத் தேடி 

வருகிறேன்.  ஓலைச்சுவடிகளிலா?

 ( இப்படி முதல் 100+ பாடல்களைச் சந்தக் குழிப்பு இன்றித்தான்  அவர் 

நூலில் காண்கிறேன்.)


தணிகைமணியின் மூத்த மகள் ஞானபூரணி மத்வநாத்  4 பெருந்தொகுதிகளாக,
முருகவேள் பன்னிருதிருமுறை அச்சிட்டுள்ளார்கள் அதிலும் சந்தக் குழிப்புகள் காணோம்.
எனவே, சந்தக் குழிப்பு தனீகைமணி இட்டாரா என்பது ஐயமே.

கிருபானந்தவாரியார் திருப்புகழ்ப் பதிப்பில் சந்தக்குழிப்பு உள்ளதா?
இது வாரியார் சுவாமிகளின் சீர்பிரிப்பா? சிவசிவா கொடுத்தபடி உள்ளது:

நா. கணேசன்
(தணிகைமணி இளையமகள் முனைவர் வ. சு. செ. சசிவல்லி தமிழ்ப் பேராசிரியை.
உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் பணிசெய்தவர்.
ஞானபூரணி மத்வநாத்தின் மகன் ஸ்ரீகணேஷிடம் கேட்கிறேன். )

 
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Jun 29, 2020, 9:00:18 AM6/29/20
to Santhavasantham
>> முருகவேள் பன்னிருதிருமுறை அச்சிட்டுள்ளார்கள் அதிலும் சந்தக் குழிப்புகள் காணோம்>>
உண்டு. நான் எழுதியபடி முதல் 100+ க்கு மட்டும் தான் இல்லை. 

Pas Pasupathy

unread,
Jun 29, 2020, 9:02:14 AM6/29/20
to Santhavasantham
>> கிருபானந்தவாரியார் திருப்புகழ்ப் பதிப்பில் சந்தக்குழிப்பு உள்ளதா?>>
இல்லை.

N. Ganesan

unread,
Jun 29, 2020, 9:25:45 AM6/29/20
to Santhavasantham
On Mon, Jun 29, 2020 at 8:00 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
>> முருகவேள் பன்னிருதிருமுறை அச்சிட்டுள்ளார்கள் அதிலும் சந்தக் குழிப்புகள் காணோம்>>
உண்டு. நான் எழுதியபடி முதல் 100+ க்கு மட்டும் தான் இல்லை. 

நன்றி.

 

N. Ganesan

unread,
Jun 29, 2020, 2:37:38 PM6/29/20
to Santhavasantham
On Mon, Jun 29, 2020 at 7:16 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
<<<

2) அவருடைய முதல் பதிப்பில்  சந்தக் குழிப்புகள் உள்ளன என்று யாரோ

சொல்லிக் கேள்வி. நூலைப் பார்க்கமுடியவில்லை. பல வருடங்களாக எங்கே

சந்தக் குழிப்புகள் முதன் முதலில் இடப்பட்டன, யார் இட்டது போன்றவற்றைத் தேடி

வருகிறேன்.  ஓலைச்சுவடிகளிலா?

 ( இப்படி முதல் 100+ பாடல்களைச் சந்தக் குழிப்பு இன்றித்தான்  அவர்

நூலில் காண்கிறேன்.)

>>>

யுரேக்கா.
இப்பாடலுக்கு முதல் சந்தக் குழிப்பு இட்டவர் முகவூர் ரா (ராமசாமிக்கவிராயர்) கந்தசாமிக் கவிராயர் ஆவார்.
1918-ம் ஆண்டு நூலில் காண்க. பக். 74, பாடல் 93.

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9jZQy&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#book1/
திருப்புகழ் முதற் புத்தகம்
ஆசிரியர் : அருணகிரிநாதர்
பதிப்பாளர்: மு. ரா. கந்தசாமிக் கவிராயர், மதுரை : எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை , 1918

நா. கணேசன்
கவிராயர் பாரதியை இனக்கண்டு, தனிமையிரக்கம் என்னும் ஸான்னெட் பாட்டை முதலில் 1904-ல் அச்சுவாகனம் ஏற்றியவர்.
இவரும், சங்கப்பாவு சொல்லியே, பாரதி மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலையை கிழித்தெறிந்தார்.

மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவர் நடத்திவந்த மதுரையிலிருந்து வெளியான "விவேகபாநு' என்கிற இதழில்தான் பாரதியாரின் "தனிமையிரக்கம்' என்கிற கவிதை முதன்முதலில் வெளிவந்தது.

” சிறுவயதிலிருந்தே கவிபுனையும் ஆற்றல் பாரதியைப் போன்று லேகநாத்துக்கும் இருந்தது. இருவரது கவிதையும் முதன்முதலில் அச்சேறிய ஆண்டு 1904. 1897-லிருந்து பல கவிதைகள் புனைந்தும் 1904 ஜூலையில் மதுரையிலிருந்து மு.ரா.கந்தசாமிக் கவிராயர் நடத்திய ‘விவேகபாநு’ என்னும் மாத இதழில்தான் ‘தனிமையிரக்கம்’ என்னும் பாடல் முதன்முதலில் அச்சில் வெளியாகிறது. அதேபோன்று லேகநாத்தின் இருகவிதைகள் முதன்முதலில் 1904-இல் இந்திய நேபாளி இதழான ‘சுந்தரி’யில் வெளிவந்தது. ”


Pas Pasupathy

unread,
Jun 29, 2020, 4:28:50 PM6/29/20
to Santhavasantham
நன்றி, கணேசன்..

இந்த நூல் (1918)  என்னிடம் முன்பே இருந்தது.   சந்தக் குழிப்பு  அமைத்து வந்த முதற்பதிப்பு இதுதான் என்று அங்கயற்கண்ணி " திருப்புகழ்ப்  பாடல்களிற் சந்தக் கூறுகள்" என்ற நூலில் கூறுகிறார்.  

மேலும் , உறுதிப்பட, 1895-இல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை வெளியிட்ட முதல் தொகுப்பில் சந்தக் குழிப்பு இருந்ததா? பின்னர் 1926, 31 -என்று மீண்டும் வந்ததாய்த் தெரிகிறது. அதன் முன்னுரையில் ஏதேனும் ச.கு. பற்றி எழுதி உள்ளாரா?   ஓலைச் சுவடிகளில் இருந்ததா , இல்லையா ? அப்படியானால் யார் இந்தச் "சந்தக் குழிப்பு" என்ற குறியீட்டையும், அதன் வகைகளையும் முதலில் எழுதினார்கள்?  ( கந்தசாமிக் கவிராயர் முன்னுரையில் எழுதுவார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஒன்றும் இல்லை.)  ஒருவேளை, திருப்புகழுக்கு முன்பே,  பட்டினத்தாரின் உடற்கூறு வண்ணத்திற்குச் சந்தக் குழிப்பு இருந்ததோ?   பின்னர், செங்கல்வராய பிள்ளை தன் தொகுப்பின் முதல் பதிப்பில் ச.கு. இட்டாரா?   அதன் முன்னுரையில் ச.கு. பற்றியோ, கந்தசாமிக் கவிராயரின் சகு. பற்றியோ எழுதியிருந்தாரா?  ஏன் பின்னர் உள்ள நூலில் முதல் 112 பாடல்களுக்கு மட்டும் இல்லை?  இந்தச் சந்தக் குழிப்பின் வரலாறே சரியாய் விளங்கவில்லை. எதேனும் பழம் இலக்கண நூலில் இருந்ததா என்றும் தெரியவில்லை 

திருப்புகழ் அன்பர்கள் வெளியிட்ட நூலில் உள்ளவை  செ.பி. யின் முதல் பதிப்பில் இருந்து இட்டவை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இவற்றை எல்லாம் தெளிவுபடுத்த, பிள்ளையவர்களின் குடும்பத்தினரிடம் நீங்கள்  கேட்டறிந்தால் நன்றி உள்ளவனாய் இருப்பேன்.
 
நன்றி. 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 29, 2020, 5:13:30 PM6/29/20
to Santhavasantham
On Mon, Jun 29, 2020 at 3:28 PM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
நன்றி, கணேசன்..

பின்னர் விரிவாக எழுதுகிறேன். சில நாள் முன்னர் ஒரு வாரம் தமிழ்ப் பல்கலையின் எண்ம நூலகம் (தமிழ் டிஜிட்டல் லைப்ரரி) முடங்கியிருந்தது. காலகதி ஆனதோ எனக் கவன்றேன். தொல்பொருள் ஆய்வுத்துறை நூல்கள் எல்லாமும் அவர்கள் இணையத்தளத்தில் ஒரு மாதமே இருந்து காணாமல் போய்விட்டன. அரசு நிர்வாகங்கள் அல்லவா?
சென்னைக்குப் பேசினேன்.  எண்ம நூலகம் உயிர்பிழைத்தது. அதில் உங்கள் கேள்விக்கு விடையிறுக்க முடிந்தது என மகிழ்ச்சி. பேரா. அங்கயற்கண்ணி எழுதியிருப்பது அறிந்தேன். நன்றி.

சந்தக் குழிப்பை யார் முதலில் செய்தது? வண்ணச் சரபம் ஆக இருக்கலாம் என்பது என் யூகம். எதற்கும் அங்கயற்கண்ணியைக் கேளுங்கள். ஜிமெயில் இருக்கிறது. பதில் எழுதுவார்.
பதில் கிடைத்தால் பகிர்க.
தொடர்பு விவரம்:
முகவரி
முனைவர் இ.அங்கயற்கண்ணி, கலையகம்,
203, ஆ, புட்பம் குடியிருப்பு முதல்
தெரு, அருளானந்த நகர், பத்தாம்
குறுக்கு, தஞ்சாவூர் – 613 007.
தொலைபேசி எண் 04362 – 234545
அலைபேசி எண் 94433 12230
மின்னஞ்சல் elamurugana...@gmail.com

பிற பின்,
NG

 

Siva Siva

unread,
Jun 29, 2020, 5:17:32 PM6/29/20
to santhavasantham
Interesting.

image.png

பன்னிரு திருமுறை வரலாறு - வெள்ளைவாரணனார்

மேற்காட்டிய சந்த விகற்பங்களுக்கும் வண்ண விகற்பங்களுக்கும் ஏற்ற சந்தக் குழிப்பு வாய்பாடுகள் பல தேவார காலத்திற்கு முன்பிருந்தே வழங்கி வந்துள்ளன.

‘தென்ன வென்று வரிவண்டிசைசெய் திருவாஞ்சியம்'  2-7-1

'தென்னென வண்டினங்கள் செறியார் பொழில்'  1-106.10 

'தென்னென இசைமுரல் சரிதையர்’  3-85-3 

'தெத்தென இசை முரல் சரிதையர்’ 3-85-3 

'தும்பி தெத்தே யெனமுரல’ 2-72-5


எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத் தொடர்களும்


தேத்தெத்தா வென்னக் கேட்டார்' 4 - 32 - 10 

என வரும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரும், 

‘தென்னாத் தெனாத் தெத்தெனா வென்றுபாடி' 7 – 2 – 6 

என வரும் சுந்தரர் தேவாரத் தொடரும் முறையே தென்ன, தென்னென, தெத்தென, தெத்தே தேத் தெத்தா, தென்னாதெனா, தெத்தெனா என்னும் இசைக் குரிய அசைச் சொற்களே எடுத்து ஆண்டுள்ளன.  

 



Siva Siva

unread,
Jun 30, 2020, 10:44:19 PM6/30/20
to santhavasantham

இன்னொரு பழம்பாடல் - புதுப்பொலிவோடு! :)


2009-01-14

3.5.73) உனை வணங்கித் தொ அருள் - கடவூர் - (திருக்கடையூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனனதன தனன தந்தத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி - திருப்புகழ் - திருச்செந்தூர்)


கொடியவினை மிகம யங்கிக் .. குயில்போலும்

.. குரலியர்கள் தமைவி ரும்பிப் .. புவிமீது

மிடியிலுழ லெனது துன்பத் .. தொடர்மாய

.. விடையமரு முனைவ ணங்கித் .. தொழுவேனோ

அடிதொழுத சிறுவ னஞ்சப் .. பகடேறி

.. அருகடையு மெமனை அங்குச் .. செறுகாலா

முடியின்மிசை மதியி லங்கக் .. கடவூரில்

.. முனிவர்தொழ உறைபு யங்கப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/06/0305073.html


வி. சுப்பிரமணியன்



On Sun, Jun 28, 2020 at 7:18 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Old is gold !  :)
2009-01-13

3.5.72) நாமம் ஓத அருள் (பொது)

--

Siva Siva

unread,
Jul 1, 2020, 9:17:00 PM7/1/20
to santhavasantham

பழம்பாடல் - புதுப்பொலிவோடு:


2009-01-15

3.5.75) புகழ்பாடி வாழ அருள் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத்தத் தனந்த தத்தந் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


ஞாலத்திற் பிறந்து சித்தந் .. தெளியாமல்

.. நாணற்றுப் புரிந்த குற்றஞ் .. சிலவாமோ

மாலற்றுப் பணிந்து நித்தம் .. புகழ்பாடி

.. வாழற்குப் பரிந்து சற்றிங் .. கருளாயே

காலத்தைக் கடந்து நிற்குந் .. தனியானே

.. கானத்திற் கிரங்கி அச்சங் .. களைவோனே

ஆலத்தைத் தெரிந்தெ டுத்துண் .. டுமையாளை

.. ஆகத்திற் கலந்து வக்கும் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305075.html


வி. சுப்பிரமணியன்


On Tue, Jun 30, 2020 at 10:44 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

இன்னொரு பழம்பாடல் - புதுப்பொலிவோடு! :)


2009-01-14

3.5.73) உனை வணங்கித் தொ அருள் - கடவூர் - (திருக்கடையூர்)

--

Siva Siva

unread,
Jul 1, 2020, 10:02:10 PM7/1/20
to santhavasantham

2009-01-15

3.5.76) பணிவார் பாவம் களைவான் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத்தத் தனந்த தத்தந் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


தேர்நிற்கச் சினந்து வெற்புந் .. திடுவோனின்

.. ஓர்பத்துச் சிரங்கு லைக்குங் .. கழல்பாடி

நீர்மிக்குப் பரந்த லைக்குஞ் .. சடைபாடி

.. நீலத்தைப் பெறுங்க ழுத்தின் .. புகழ்பாடிச்

சீர்மிக்குச் சிவந்தி ருக்குந் .. திருமேனித்

.. தீச்சுற்றிப் பொலிந்தி ருக்கும் .. பொடிபாடிப்

பாருற்றுக் கிடந்து நித்தம் .. பணிவோர்தம்

.. பாவத்தைக் களைந்த ளிக்கும் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305076.html


வி. சுப்பிரமணியன்



On Wed, Jul 1, 2020 at 9:16 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

பழம்பாடல் - புதுப்பொலிவோடு:

2009-01-15

3.5.75) புகழ்பாடி வாழ அருள் (பொது)

--

Siva Siva

unread,
Jul 2, 2020, 10:36:16 PM7/2/20
to santhavasantham

2009-01-16

3.5.77) தொழ மறவாத சிந்தை அருள் (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தனதான தந்ததன தனதான தந்ததன

தனதான தந்ததன .. தனதான" - என்ற சந்தக்குழிப்பு )

(சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு - திருப்புகழ் - திருவாவினன்குடி)


தணியாது நெஞ்சிலெழு புலனாசை உந்தவது

..... தரியாம லென்றுமுல .. கிதிலாடித்

.. தனநாடி மங்கையர்கள் தமைநாடி நொந்துநிலை

..... தடுமாறி வெந்துயரில் .. அமிழாமல்

பிணிதீரு கின்றவழி சிவமான அன்புநெறி

..... பிறழாது சந்தமிகு .. தமிழாரும்

.. பெருமாலை கொண்டுதொழ மறவாத சிந்தையது

..... பெறவேயி ரங்கியருள் .. புரியாயே

பணியோடு கொன்றைமலர் அலைவீசு கங்கையணி

..... பதியேம ணங்கமழு .. மலர்தூவிப்

.. பணிதேவர் உய்ந்தமுத முணமாவி டம்பருகு

..... பரமாஅ லங்கலணி .. மணிமார்பா

அணியாக வந்துதொழு மடியார்க ளின்பமுற

..... அரணாகி முந்தைவினை .. களைவானே

.. அழகேறு கின்றவிடை மருதூரில் வஞ்சியிடை

..... அவளோடு நின்றசிவ .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்



On Wed, Jul 1, 2020 at 10:01 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-15

3.5.76) பணிவார் பாவம் களைவான் (பொது)

--

Siva Siva

unread,
Jul 3, 2020, 1:38:15 PM7/3/20
to santhavasantham

2009-01-17

03.05.079) தப்பாமற் கா (மயிலாப்பூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

"தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தனனத் .. தனதான" என்ற சந்தக்குழிப்பு )

(துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் - திருப்புகழ் - திருத்தணிகை)


எப்பா வத்தா லிப்பா ரிற்போய்

..... எய்ப்பா யெனவைத் .. தனையோநீ

.. எத்தே மிக்கே னற்றார் கட்கோர்

..... எட்டா னிடுதற் .. கறியேனான்

இப்பாழ் மெய்ப்பே ணற்கே கெட்டே

..... னிட்டார் பணியைத் .. தினமேவி

.. இப்பா டுற்றே னற்போ தத்தா

..... லெப்போ தடியைத் .. தொழுவேனோ?

அப்பா லுக்கே அப்பா லிப்பா

..... லப்பா அரவைப் .. புனைவானே

.. அத்தே ரிற்றா ளிட்டே றப்போய்

..... அச்சே முரியப் .. புரம்வேவ

வைப்பாய் நக்கே மட்டார் நற்றா

..... மத்தாய் அணிபொற் .. சடையானே

.. வைப்பே மற்றார் உற்றார் தப்பா

..... மற்கா மயிலைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

எப் பாவத்தால் இப் பாரில் போய்

..... எய்ப்பாய் என வைத்தனையோ நீ;

.. எத்தே மிக்கேன்; அற்றார்கட்கு ஓர்

..... எள் தான் இடுதற்கு அறியேன் நான்;

இப் பாழ் மெய்ப் பேணற்கே கெட்டேன்;

..... இட்டார் பணியைத் தினம் மேவி

.. இப் பாடு உற்றேன்; நல் போதத்தால்

..... எப்போது அடியைத் .. தொழுவேனோ?

அப்பாலுக்கே அப்பால், இப்பால்,

..... அப்பா; அரவைப் புனைவானே;

.. அத் தேரில் தாள் இட்டு ஏறப் போய்

..... அச்சே முரியப், .. புரம் வேவ

வைப்பாய் நக்கே; மட்டு ஆர் நல்

..... தாமத்தாய்; அணி பொற் சடையானே;

.. வைப்பே; மற்று ஆர் உற்றார்?

..... தப்பாமல் கா, மயிலைப் பெருமானே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Jul 2, 2020 at 10:36 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-16

3.5.77) தொழ மறவாத சிந்தை அருள் (இடைமருதூர் - திருவிடைமருதூர்)


Siva Siva

unread,
Jul 4, 2020, 11:44:36 AM7/4/20
to santhavasantham

2009-01-21

3.5.87) உனைத் தொழ அருள் (ஒற்றியூர் - திருவொற்றியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தன தத்தன தத்தன தத்தன

தத்தன தத்தன .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(பத்தர்க ணப்ரிய - திருப்புகழ் - திருச்செங்கோடு)


அற்றவ ரைப்புறம் வைத்திழி வைத்தரு

..... மற்பரை உற்றவ .. ரெனநாடி

.. அக்கறை அற்றெழு மிச்சையு கைத்திட

..... அப்படி இப்புவி .. தனிலாடி

மற்றவ ருக்கிழை குற்றமி குத்தழி

..... வைப்பெறு சித்தம .. துடையேனும்

.. வற்றிவி னைத்தொட ரற்றிட நித்தலு

..... மத்தவு னைத்தொழ .. அருளாயே

கற்றவ ருக்குமி கச்சுவை யுற்றிடு

..... கற்பக நற்கனி .. எனவானாய்

.. கைத்தவி டத்தைமி டற்றில டைத்தொரு

..... கச்சென நச்சர .. வணிவானே

எற்றையு முற்றிடு மற்புத முக்கண

..... இட்டிடை உத்தமி .. மணவாளா

.. எற்றுதி ரைக்கரை ஒற்றியி னச்சின

..... ரிட்டம தைத்தரு .. பெருமானே.


பதம் பிரித்து:

அற்றவரைப் புறம் வைத்து, இழிவைத் தரும்

..... அற்பரை உற்றவர் என நாடி,

.. அக்கறை அற்று, எழும் இச்சை உகைத்திட,

..... அப்படி இப் புவிதனில் ஆடி,

மற்றவருக்கு இழை குற்றம் மிகுத்து,

..... அழிவைப் பெறு சித்தமது உடையேனும்,

.. வற்றி வினைத்தொடர் அற்றிட, நித்தலும்

..... மத்த உனைத் தொழ அருளாயே;

கற்றவருக்கு மிகச் சுவையுற்றிடு

..... கற்பக நற்கனி என ஆனாய்;

.. கைத்த விடத்தை மிடற்றில் அடைத்து, ஒரு

..... கச்சு என நச்சுஅரவு அணிவானே;

எற்றையும் உற்றிடும் அற்புத; முக்கண;

..... இட்டிடை உத்தமி .. மணவாளா;

.. எற்று திரைக் கரை ஒற்றியில், நச்சினர்

..... இட்டமதைத் தரு பெருமானே;


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305087.html


வி. சுப்பிரமணியன்



On Fri, Jul 3, 2020 at 1:37 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-17

03.05.079) தப்பாமற் கா (மயிலாப்பூர்)

--

Siva Siva

unread,
Jul 10, 2020, 11:53:01 PM7/10/20
to santhavasantham

2009-01-24

3.5.93) தொண்டனாய்ப் பாட அருள் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனாத் தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(வண்டுபோற் சாரத் தருள்தேடி - திருப்புகழ் - திருவெஞ்சமாக்கூடல்)


அன்பனாய்த் தாளைப் .. பணியாமல்

.. அந்தனாய்ப் பாசக் .. கடல்மூழ்கித்

துன்பனாய்ப் பாரிற் .. றவியாமல்

.. தொண்டனாய்ப் பாடற் .. கருளாயே

முன்புமாற் காழிப் .. படையீவாய்

.. முன்பினாய்ப் பேசற் .. கரியானே

இன்பநாற் சீலர்க் .. கறமோதீ

.. என்பறாக் கோலப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305093.html


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


On Sat, Jul 4, 2020 at 11:44 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-21

3.5.87) உனைத் தொழ அருள் (ஒற்றியூர் - திருவொற்றியூர்)


Siva Siva

unread,
Jul 11, 2020, 11:38:15 PM7/11/20
to santhavasantham

2009-01-24

3.5.94) விந்தையாய்ப் பாடப் புரிவான் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனாத் தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(வண்டுபோற் சாரத் தருள்தேடி - திருப்புகழ் - திருவெஞ்சமாக்கூடல்)


அண்டினார்க் கீதற் .. கறியாமல்

.. அங்கலாய்ப் பேமிக் .. கெழநாளும்

மிண்டனாய்ப் பாரிற் .. றிரிவேனும்

.. விந்தையாய்ப் பாடப் .. புரிவானே

கண்டனாய்த் தேவர்க் .. கமுதீவாய்

.. கங்கைநீர்ச் சாரற் .. சடைமேலோர்

இண்டைபோற் கூனற் .. பிறைசூடீ

.. என்பராப் பூணற் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305094.html


வி. சுப்பிரமணியன்


On Fri, Jul 10, 2020 at 11:52 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-24

3.5.93) தொண்டனாய்ப் பாட அருள் (பொது)

--

Siva Siva

unread,
Jul 12, 2020, 9:15:53 PM7/12/20
to santhavasantham

2009-01-24

3.5.95) அன்பினால் தாளைத் தொழுவேன் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனாத் தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(வண்டுபோற் சாரத் தருள்தேடி - திருப்புகழ் - திருவெஞ்சமாக்கூடல்)


வந்துகேட் பாருக் .. களியாமல்

.. வம்புவாக் காடித் .. தினமோடி

அந்தனாற் றீயுற் .. றழியாமுன்

.. அன்பினாற் றாளைத் .. தொழுவேனோ

கந்தவீத் தூவிப் .. பணிதேவர்

.. கம்பமாய்த் தேவைத் .. தொடுவீரா

தந்தையாய்த் தாவைக் .. களைவானே

.. சங்கமார்த் தார்கைப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305095.html


வி. சுப்பிரமணியன்

On Sat, Jul 11, 2020 at 11:37 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-24

3.5.94) விந்தையாய்ப் பாடப் புரிவான் (பொது)

--

Siva Siva

unread,
Jul 16, 2020, 6:24:56 PM7/16/20
to santhavasantham

2020-06-27

பற்றைச் செற அருள் - சிக்கல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சீபுரம்)


பொத்தற் கட்டிக் .. குடிலாசைப்

.. பொய்யிற் சிக்கிக் .. கழியாமல்

பத்திப் பொற்புற் .. றுனையோதிப்

.. பற்றைச் செற்றுச் .. சுகியேனோ

எத்தர்க் கெட்டற் .. கரியானே

.. இட்டர்க் கிச்சித் .. தனவீவாய்

முத்துப் பற்சத் .. தியொர்கூறா

.. முக்கட் சிக்கற் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொத்தல் கட்டு இக் குடில் ஆசைப்

.. பொய்யில் சிக்கிக் கழியாமல்,

பத்திப் பொற்பு உற்று உனை ஓதிப்

.. பற்றைச் செற்றுச் சுகியேனோ;

எத்தர்க்கு எட்டற்கு அரியானே;

.. இட்டர்க்கு இச்சித்தன ஈவாய்;

முத்துப்பல் சத்தி ஒர் கூறா;

.. முக்கண் சிக்கல் பெருமானே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Jul 12, 2020 at 9:15 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-24

3.5.95) அன்பினால் தாளைத் தொழுவேன் (பொது)

--

Siva Siva

unread,
Jul 16, 2020, 7:22:37 PM7/16/20
to santhavasantham
Fixing an obvious issue in second half or line-1:

 2020-06-27

பற்றைச் செற அருள் - சிக்கல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சீபுரம்)


பொத்தற் கட்டிக் .. குடிலாசைப்

.. பொக்கத் திற்பட் .. டழியாமல்

பத்திப் பொற்புற் .. றுனையோதிப்

.. பற்றைச் செற்றுச் .. சுகியேனோ

எத்தர்க் கெட்டற் .. கரியானே

.. இட்டர்க் கிச்சித் .. தனவீவாய்

முத்துப் பற்சத் .. தியொர்கூறா

.. முக்கட் சிக்கற் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொத்தல் கட்டு இக் குடில் ஆசைப்

.. பொக்கத்தில் பட்டு அழியாமல்

பத்திப் பொற்பு உற்று உனை ஓதிப்

.. பற்றைச் செற்றுச் சுகியேனோ;

எத்தர்க்கு எட்டற்கு அரியானே;

.. இட்டர்க்கு இச்சித்தன ஈவாய்;

முத்துப்பல் சத்தி ஒர் கூறா;

.. முக்கண் சிக்கல் பெருமானே.


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jul 17, 2020, 6:35:33 PM7/17/20
to santhavasantham
Found another issue - but that is not material. ( There is no issue in the verse). The date was incorrect. It should have been yesterday's date..Corrected now.

On Thu, Jul 16, 2020 at 7:22 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Fixing an obvious issue in second half or line-1:

 2020-07-16

பற்றைச் செற அருள் - சிக்கல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சீபுரம்)


பொத்தற் கட்டிக் .. குடிலாசைப்

.. பொக்கத் திற்பட் .. டழியாமல்

பத்திப் பொற்புற் .. றுனையோதிப்

.. பற்றைச் செற்றுச் .. சுகியேனோ

எத்தர்க் கெட்டற் .. கரியானே

.. இட்டர்க் கிச்சித் .. தனவீவாய்

முத்துப் பற்சத் .. தியொர்கூறா

.. முக்கட் சிக்கற் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொத்தல் கட்டு இக் குடில் ஆசைப்

.. பொக்கத்தில் பட்டு அழியாமல்

பத்திப் பொற்பு உற்று உனை ஓதிப்

.. பற்றைச் செற்றுச் சுகியேனோ;

எத்தர்க்கு எட்டற்கு அரியானே;

.. இட்டர்க்கு இச்சித்தன ஈவாய்;

முத்துப்பல் சத்தி ஒர் கூறா;

.. முக்கண் சிக்கல் பெருமானே.

Siva Siva

unread,
Jul 17, 2020, 6:40:58 PM7/17/20
to santhavasantham

2020-07-17

அர்ச்சிக்க அருள் - ஒற்றியூர் (திருவொற்றியூர்)

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தத்தத் .. தனதான)

(முட்டுப் பட்டுக் கதிதோறும் - திருப்புகழ் - கச்சி - காஞ்சீபுரம்)


செற்றக் குற்றக் .. குணனாகித்

.. திட்டித் துக்கித் .. துழலாமல்

அற்றைப் புட்பத் .. தொடுநாளும்

.. அர்ச்சிக் கக்கற் .. றிடுவேனோ

வெற்றுச் சொற்கட் .. டுரைவீணர்

.. விட்டுப் பத்தர்க் .. கருள்நேயா

ஒற்றிச் செக்கர்ச் .. சடையானே

.. ஒற்றைப் பெற்றப் .. பெருமானே.


பதம் பிரித்து:

செற்றக் குற்றக் குணன் ஆகித்

.. திட்டித் துக்கித்து உழலாமல்,

அற்றைப் புட்பத்தொடு நாளும்

.. அர்ச்சிக்கக் கற்றிடுவேனோ;

வெற்றுச்சொற் கட்டுரை வீணர்

.. விட்டுப் பத்தர்க்கு அருள் நேயா;

ஒற்றிச் செக்கர்ச் சடையானே;

.. ஒற்றைப் பெற்றப் பெருமானே.


வி. சுப்பிரமணியன்



On Thu, Jul 16, 2020 at 7:22 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
2020-07-16

பற்றைச் செற அருள் - சிக்கல்

-----------------

Siva Siva

unread,
Jul 18, 2020, 5:10:55 PM7/18/20
to santhavasantham
பழைய பாடல்கள் புதுப்பொலிவோடு!

2009-01-28

3.5.98) பாடப் பணியாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத் தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(கருப்பற் றூறிப் பிறவாதே - திருப்புகழ் - பொது)


தனத்தைத் தேடித் .. தரைமீது

.. தருக்கிப் பேசித் .. திரியாமல்

நினைப்பைப் பாதத் .. துணைமீதே

.. நிறுத்திப் பாடப் .. பணியாயே

உனைப்பற் றார்கட் .. கரியானே

.. உளத்திற் பூசித் .. தெழுபூசல்

மனத்துக் கோயிற் .. பரமாமான்

.. மறிக்கைக் கோலப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305098_18.html


வி. சுப்பிரமணியன்



On Fri, Jul 17, 2020 at 6:40 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-07-17

அர்ச்சிக்க அருள் - ஒற்றியூர் (திருவொற்றியூர்)

--

Siva Siva

unread,
Jul 18, 2020, 5:24:58 PM7/18/20
to santhavasantham
Minor correction to sequence number - and hence update link:

On Sat, Jul 18, 2020 at 5:10 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
பழைய பாடல்கள் புதுப்பொலிவோடு!

2009-01-28

3.5.99) பாடப் பணியாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத் தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(கருப்பற் றூறிப் பிறவாதே - திருப்புகழ் - பொது)


தனத்தைத் தேடித் .. தரைமீது

.. தருக்கிப் பேசித் .. திரியாமல்

நினைப்பைப் பாதத் .. துணைமீதே

.. நிறுத்திப் பாடப் .. பணியாயே

உனைப்பற் றார்கட் .. கரியானே

.. உளத்திற் பூசித் .. தெழுபூசல்

மனத்துக் கோயிற் .. பரமாமான்

.. மறிக்கைக் கோலப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305099.html


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Jul 18, 2020, 10:08:00 PM7/18/20
to santhavasantham

2009-01-29

3.5.100) ஏழையேனுக்கு அருள் - கடவூர் - (திருக்கடையூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே - திருப்புகழ் - பொது)


காசை நாடி மாலாகி மாயக் .. கடன்மூழ்கிக்

.. காய மோயு நாளாகி நோயுற் .. றதனாலே

நேச மான பேராலு மேசப் .. படுவேனோ

.. நீறு பூசி னாயேழை யேனுக் .. கருளாயே

பாசம் வீசி ஓர்மாணி யாரைத் .. தொடர்காலன்

.. பாரில் வீழ ஓர்பாதம் வீசிச் .. செறுகாலா

வாச நாறு பூவேறு சோலைக் .. கடவூரா

.. வாம பாக மாதான மேனிப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305100.html


வி. சுப்பிரமணியன்


On Sat, Jul 18, 2020 at 5:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Minor correction to sequence number - and hence update link:

On Sat, Jul 18, 2020 at 5:10 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
பழைய பாடல்கள் புதுப்பொலிவோடு!

2009-01-28

3.5.99) பாடப் பணியாய் (பொது)

--

N. Ganesan

unread,
Jul 19, 2020, 7:06:36 AM7/19/20
to Santhavasantham

> பாசம் வீசி ஓர்மாணி யாரைத் .. தொடர்காலன்

> .. பாரில் வீழ ஓர்பாதம் வீசிச் .. செறுகாலா

kalasamharamurthy-thirukkad-2.jpg
makala2.jpg

> விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305100.html


முடிந்தால் இவ்விரு ஓவியங்களையும் தங்கள் வலைப்பதிவில் இணைத்திடுங்கள்.

நன்றி, நா. கணேசன்



--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 19, 2020, 9:29:50 AM7/19/20
to santhavasantham
யார் வரைந்த ஓவியங்கள் இவை?
படங்களை இணைக்கும் கலையை இனித்தான் கற்கவேண்டும்! 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 19, 2020, 10:22:39 AM7/19/20
to சந்தவசந்தம்
படங்களைத் தரவிறக்கி வைத்த பின்னர், உங்கள் இடுகையில்,   Insert photo என்னும் குறியை அழுத்தி அவற்றைத் தேவையான இடத்தில் நுழைக்கலாம். (இந்தக் குறி Attach file  குறிக்கு அருகில் உள்ளது)

... அனந்த்

 



--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 19, 2020, 10:33:42 AM7/19/20
to Santhavasantham
On Sun, Jul 19, 2020 at 8:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
யார் வரைந்த ஓவியங்கள் இவை?
படங்களை இணைக்கும் கலையை இனித்தான் கற்கவேண்டும்! 

மேல்படம் புகழ்மிகு சில்பி வரைந்தது. அவர் கையெழுத்தும் உள்ளது.
கீழ்ப்படம் ஆதீன ஓவியர் குடமுழுக்கு மலரில் வரைந்தது.

 

On Sun, Jul 19, 2020 at 7:06 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


முடிந்தால் இவ்விரு ஓவியங்களையும் தங்கள் வலைப்பதிவில் இணைத்திடுங்கள்.

நன்றி, நா. கணேசன்



On Sat, Jul 18, 2020 at 9:08 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-29

3.5.100) ஏழையேனுக்கு அருள் - கடவூர் - (திருக்கடையூர்)

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 19, 2020, 5:16:21 PM7/19/20
to santhavasantham

2020-07-19

உனை ஓதும் பொற்பு அருள் - முட்டம் (கோவையின் மேற்கே 25 கிமீ)

-----------------

(வண்ணவிருத்தம்;

தத்தத்த தான .. தனதான)

(தத்தத் தனான .. தனதான - என்றும் கருதலாம்)

(பட்டுப் படாத மதனாலும் - திருப்புகழ் - பொது)


எப்பற்று மேறி .. வரைமீறும்

.. இச்சைக்கு நாளும் .. உழலாமல்

பொய்ப்பற்று மாறி .. உனையோதும்

.. பொற்புற்று வாழ .. அருளாயே

எய்ப்புற்ற தேவர் .. அமுதார

.. இட்டத்தொ டாலம் .. உணும்நாதா

முப்பத்து மூவர் .. முதலானாய்

.. முட்டத்து மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

எப்பற்றும் ஏறி வரை மீறும்

.. இச்சைக்கு நாளும் உழலாமல்,

பொய்ப்பற்று மாறி, உனை ஓதும்

.. பொற்பு உற்று வாழ அருளாயே;

எய்ப்பு உற்ற தேவர் அமுது ஆர,

.. இட்டத்தொடு ஆலம் உணும் நாதா;

முப்பத்துமூவர் முதல் ஆனாய்;

.. முட்டத்து மேய பெருமானே.


தலக்குறிப்பு:

முட்டம் - முத்துவாளி அம்மன் சமேத நாகேஸ்வரர் கோயில். இத்தலம் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 25 கிமீ தூரத்தில், செம்மேடு என்ற ஊரின் அருகே உள்ளது. வெள்ளியங்கிரிமலை அடிவாரத்தில் இத்தலம் உள்ளது.

https://temple.dinamalar.com/New.php?id=2061 )


வி. சுப்பிரமணியன்



On Sat, Jul 18, 2020 at 10:07 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-29

3.5.100) ஏழையேனுக்கு அருள் - கடவூர் - (திருக்கடையூர்)

--

ramaNi

unread,
Jul 19, 2020, 10:14:45 PM7/19/20
to சந்தவசந்தம்
சொல்லும் பொருளும் அருமை.
ரமணி

Siva Siva

unread,
Jul 20, 2020, 6:56:17 PM7/20/20
to santhavasantham

2009-01-29

3.5.101) தாளைத் தொழ அருள் - வான்மியூர் - (திருவான்மியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே - திருப்புகழ் - பொது)


காடு நாடு நாடோறு மோடிப் .. பணமீது

.. காத லாகி மாவாரி சூழித் .. தரைமீது

கேடு தேடி வீழாது தாளைத் .. தொழுவேனோ

.. கேழி லாத மாசோதி யேபொற் .. சடையானே

தோடு காதில் ஆர்மாதை ஆகத் .. துடையானே

.. சூரன் மீது வேலேவு வேளைத் .. தருவோனே

வீடு நாடி னார்பாடி ஆடிப் .. பணியீசா

.. வேலை யோத மார்வான்மி யூரிற் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305101.html


வி. சுப்பிரமணியன்



On Sun, Jul 19, 2020 at 5:16 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-07-19

உனை ஓதும் பொற்பு அருள் - முட்டம் (கோவையின் மேற்கே 25 கிமீ)

--

Siva Siva

unread,
Jul 21, 2020, 9:52:48 PM7/21/20
to santhavasantham

2009-01-30

3.5.103) பூ இட்டுத் தொழ அருள் (கச்சி ஏகம்பம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் .. தனதான )

(அற்றைக் கிரைதேடி - திருப்புகழ் - காஞ்சீபுரம்)


துட்டர்க் .. குறவாகிச்

.. சுற்றித் .. திரியாமல்

இட்டத் .. தொடுபூவை

.. இட்டுத் .. தொழுவேனோ

சிட்டர்க் .. கருள்தேவா

.. செக்கர்ச் .. சடையானே

கட்டைக் .. களைவோனே

.. கச்சிப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305103.html


வி. சுப்பிரமணியன்



On Mon, Jul 20, 2020 at 6:56 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-29

3.5.101) தாளைத் தொழ அருள் - வான்மியூர் - (திருவான்மியூர்)

--

Siva Siva

unread,
Jul 22, 2020, 7:45:31 PM7/22/20
to santhavasantham

2009-02-01

3.5.104) உன்னைச் செப்பிப் பரவ அருள் (பராய்த்துறை - திருப்பராய்த்துறை)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்த தாத்தன தன்ன தனந்தன

தத்தத் தத்தத் .. தனதான )

(வம்ப றாச்சில - திருப்புகழ் - காஞ்சிபுரம்)


அங்க லாய்த்திடும் எண்ண மிகுந்திட

.. .. அத்தத் திற்குப் .. பலநாளும்

.. அன்ப னாய்ப்படி தன்னி லலைந்திடும்

.. .. அப்பித் தத்தைத் .. தெளியாமல்

மங்கி டாப்பழி தன்னி லழுந்திடு

.. .. மட்டத் துட்டத் .. தமியேனும்

.. வந்து காத்திடும் உன்னை மனந்தனில்

.. .. வைத்துச் செப்பிப் .. பரவேனோ

பங்க னாய்த்திகழ் தென்ன அயன்றலை

.. .. பற்றிப் பிச்சைக் .. குழல்வோனே

.. பண்பி னாற்பொலி செம்மை பொருந்திய

.. .. பத்தர்க் கொப்பற் .. றருள்வோனே

தெங்கு நாற்புற மன்னு தலந்திரை

.. .. தெற்றிச் சுத்தப் .. புனலோடும்

.. தென்ப ராய்த்துறை தன்னை விரும்பிய

.. .. செக்கர்ச் சிட்டப் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305104.html


வி. சுப்பிரமணியன்



On Tue, Jul 21, 2020 at 9:52 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-01-30

3.5.103) பூ இட்டுத் தொழ அருள் (கச்சி ஏகம்பம்)

--

Siva Siva

unread,
Jul 24, 2020, 6:56:00 PM7/24/20
to santhavasantham

2009-02-13

3.5.106) நாவிற் பேரைத் தரிப்பேன் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


நாளைத் தேவைக் .. கெனமாடே

.. நாடித் தீனர்க் .. களியாது

நாளைப் பாழுக் .. கிறையாமல்

.. நாவிற் பேரைத் .. தரியேனோ

தாளைப் பேணித் .. தொழுவார்பால்

.. தாயிற் சாலப் .. பரிவாகி

ஆளப் பாரைத் .. தருவோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/07/0305106.html


வி. சுப்பிரமணியன்



On Wed, Jul 22, 2020 at 7:45 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-02-01

3.5.104) உன்னைச் செப்பிப் பரவ அருள் (பராய்த்துறை - திருப்பராய்த்துறை)

--

Siva Siva

unread,
Jul 29, 2020, 10:18:02 PM7/29/20
to santhavasantham

2020-07-29

இடர் தீர அருள் - அம்பர் (இக்காலத்தில் "அம்பல்")

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்தன தானன .. தனதான )

(அஞ்சன வேல்விழி மடமாதர் - திருப்புகழ் - தஞ்சை )


வெஞ்சம ரேபுரி .. வினையாலே

.. விண்தொடு மாசையின் .. விளைவாலே

அஞ்சிடு வேனென .. திடர்தீர

.. அங்கண னேயருள் .. புரியாயே

நஞ்சணி மாமிட ., றுடையானே

.. நங்கையை ஓர்புற .. மகிழ்வானே

அஞ்சடை மேலிள .. மதிசூடீ

.. அம்பரில் மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

வெம் சமரே புரி வினையாலே,

.. விண் தொடும் ஆசையின் விளைவாலே,

அஞ்சிடுவேன் எனது இடர் தீர,

.. அங்கணனே, அருள் புரியாயே;

நஞ்சு அணி மா மிடறு உடையானே;

.. நங்கையை ஓர் புறம் மகிழ்வானே;

அம் சடைமேல் இள மதிசூடீ;

.. அம்பரில் மேவிய பெருமானே.


வி. சுப்பிரமணியன்



On Fri, Jul 24, 2020 at 6:55 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-02-13

3.5.106) நாவிற் பேரைத் தரிப்பேன் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--

Vis Gop

unread,
Jul 30, 2020, 12:05:42 AM7/30/20
to santhav...@googlegroups.com

விண்தொடு மாசையின் .. விளைவாலே


மாசையின்: இதிலுள்ள ன் அலகு பெறாதென்று இங்கிருந்து அறிகிறேன். திரு ரமணியும் சீரீற்றில் வரும் ன் குழிப்பை மாற்றாது என்று சொல்கிறார். ஆனால் உதாரணம் காணத் 
“தண்டையணி வெண்டையம் ...” பார்த்தேன். அங்குச் சீரீற்று ன் அலகு பெறுகிறது. 
இது விளங்கவில்லை. 
நல்வாழ்த்துகள்
கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Jul 30, 2020, 9:27:09 AM7/30/20
to santhavasantham
View the sandham pattern as one continuous string. Then one can more easily understand.

மெல்லின ஒற்றை அடுத்து மெல்லினம் வரின்: தன்ன போன்ற சந்தம் எனில் அது சந்தத்தில் வரும். தான, தன போன்ற சந்தம் எனில் அந்த மெல்லின ஒற்று ஓசையை மாற்றாது என்று கருதப்படும்.
தன்மை = தன்ன / தன
அரண்மனை = தனதன

மெல்லின ஒற்றை அடுத்து வல்லினம் வரின்: அது சந்தத்தில் வரும். 
வந்து = தந்த
சந்ததம் பந்தத் தொடராலே = சந்ததம்பந்தத்தொடராலே  = தந்தனந்தந்தத்தனதான.

இடையின ஒற்று - தய்ய போன்ற சந்தம் எனின் சந்தத்தில் வரக்கூடும். தான, தன, போன்ற சந்தம் எனில் அந்த இடைன ஒற்று ஓசையை மாற்றாது என்று கருதப்படும்.
பைய = தய்ய
ஊர்தி - தான
ஊர்வது - தானன  

Hope this helps.



Vis Gop

unread,
Jul 30, 2020, 10:38:22 AM7/30/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 


Sent from my iPhone

Siva Siva

unread,
Aug 7, 2020, 7:39:23 PM8/7/20
to santhavasantham

2009-02-13

3.5.107) நாவிற் புகழ்மாலை சூடுவேன் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


ஈனப் பாவப் .. பணிமேவி

.. ஈறுற் றீமத் .. தெரியாமுன்

நானற் றாளைப் .. புகழ்மாலை

.. நாவிற் சூடிப் .. பிழையேனோ

வானத் தேமுப் .. புரநூற

.. வாய்விட் டேநக் .. கவனேயோர்

ஆனைத் தோலைப் .. புனைவானே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


விளக்கம் வேண்டில்: https://madhisudi.blogspot.com/2020/08/0305107.html


வி. சுப்பிரமணியன்


On Wed, Jul 29, 2020 at 10:17 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2020-07-29

இடர் தீர அருள் - அம்பர் (இக்காலத்தில் "அம்பல்")


Siva Siva

unread,
Aug 8, 2020, 8:54:38 AM8/8/20
to santhavasantham

இன்னும் சில பாடல்கள்:

2009-02-13

3.5.108) பாதப் போதைப் பணிவேன் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


தேவைக் காகச் .. சிறியாரைத்

.. தேடிச் சேவித் .. திழியாமல்

பாவைப் பாடிப் .. பரமாநின்

.. பாதப் போதைப் .. பணிவேனே

பாவைக் காகத் .. திடமீவாய்

.. பாசத் தோடப் .. படர்சூழும்

ஆவற் காலத் .. தருள்வோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


2009-02-13

3.5.109) தமிழால் பாடிப் பணிவேன் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


கூலிக் கேநித் .. தலுமாடிக்

.. கூனிச் சீவித் .. தழியாமல்

பாலிப் பாயைத் .. தமிழாலே

.. பாடிப் பாடிப் .. பணிவேனே

போலிப் பூசைக் .. கரியானே

.. போதத் தாருக் .. கெளியானே

ஆலித் தோடிப் .. புனல்சூழும்

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


2009-02-23

3.5.110) தெளிவுதனை அருள் (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


சரிவழியைக் .. கருதாமல்

.. தவறுகளைத் .. தவிராமல்

திரியுமனத் .. தமியேனும்

.. தெளிவுதனைப் .. பெறுவேனோ

தெரிவைதனக் .. கிடமீவாய்

.. சிலைவளைவித் .. தரண்வேவ

எரிகணையைத் .. தொடுவோனே

.. இடைமருதிற் .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Aug 7, 2020 at 7:39 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2009-02-13

3.5.107) நாவிற் புகழ்மாலை சூடுவேன் - ஆனைக்கா - (திருவானைக்கா)


Siva Siva

unread,
Aug 16, 2020, 6:57:13 PM8/16/20
to santhavasantham

2020-08-16

நிதம் பெயர் நினைய அருள் - திலதைப்பதி (இக்காலத்தில் "செதலபதி / சிதலைப்பதி")

-----------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தனதன .. தனதான )

(அயிலொத் தெழுமிரு விழியாலே - திருப்புகழ் - மயிலாப்பூர் )


பரிவற் றடைநமன் .. அணுகாத

.. படிநற் பெயர்நிதம் .. நினைவேனோ

புரிபொற் சடையிடை .. அலையாரும்

.. புனல்வைத் தருளிய .. இறையானே

அரிவைக் கொருபுறம் .. அளிநேயா

.. அடியைத் தொழுசுரர் .. இடர்தீரத்

திரிமுப் புரமெரி .. சிலையானே

.. திலதைப் பதியுறை .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Aug 8, 2020 at 8:54 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Aug 28, 2020, 10:48:38 PM8/28/20
to santhavasantham

2020-08-28

உன் அடி பரவும் மனம் அருள் - (வழுவூர்)

-------------------

(வண்ணவிருத்தம்;

தந்தன தனதனன தாத்தன

தந்தன தனதனன தாத்தன

தந்தன தனதனன தாத்தன .. தனதான )

(சஞ்சல சரிதபர நாட்டர்கள் - திருப்புகழ் - கருவூர் - கரூர்)


நஞ்சென எழுநசைகள் ஆர்த்திள

.. .. நங்கையர் மயலதனில் வீழ்த்திட

.. .. நன்றென உரைசெயல்கள் ஆற்றிட .. நினையாமல்

.. நந்திட விரையுமடி யேற்கணி

.. .. நந்தன வனமலர்க ளாற்றினம்

.. .. நம்பியு னடிபரவி ஏத்திடு .. மனமீயாய்

குஞ்சரம் உரிவலவ பூத்திரள்

.. .. கொண்டுனை வழிபடுநி லாப்புனை

.. .. குஞ்சியின் மிசையரவும் ஏற்றிய .. திரிசூலா

.. கொண்டலின் உயருமுடி காட்டிடு

.. .. குன்றெறி மடையன்வலி தீர்த்தருள்

.. .. கொண்டொரு படைநல்கிய கீர்த்திமை .. உடையானே

அஞ்சிய சுரர்களடி வாழ்த்திட

.. .. அன்றினர் எயில்களெரி மூட்டியொர்

.. .. அன்பரை முடுகியடை கூற்றுதை .. கழலானே

.. அன்றரி அயனிவர்கள் போற்றிட

.. .. அங்கவர் அறியவரி தாய்ச்சுடர்

.. .. அங்கியி னுருவிலெழு மூத்தவ .. மழுவாளா

வஞ்சிநு ணிடையுடைய பார்ப்பதி

.. .. மங்கையை மகிழ்நுதலில் நேத்திர

.. .. வன்புலி அதளரையில் வீக்கிய .. விறலானே

.. மஞ்சடை பொழிலிலிசை ஆர்த்தடை

.. .. வண்டினம் மகிழுமிட மாய்த்திகழ்

.. .. வண்பதி புரிசைவழு வூர்ச்சிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

நஞ்சு என எழு நசைகள் ஆர்த்து இள நங்கையர் மயல் அதனில் வீழ்த்திட -

நன்று என உரை செயல்கள் ஆற்றிட நினையாமல் -

நந்திட விரையும் அடியேற்கு -

அணி நந்தனவன மலர்களால் தினம் நம்பி உன் அடிபரவி ஏத்திடும் மனம் ஈயாய் -

குஞ்சரம் உரி வலவ -

பூத்திரள்கொண்டு உனை வழிபடு நிலாப் புனை குஞ்சியின்மிசை அரவும் ஏற்றிய திரிசூலா -

கொண்டலின் உயரும் முடி காட்டிடு குன்று எறி மடையன் வலி தீர்த்து, அருள்கொண்டு ஒரு படை நல்கிய கீர்த்திமை உடையானே -

அஞ்சிய சுரர்கள் அடி வாழ்த்திட அன்றினர் எயில்கள் எரி மூட்டி -

ஒர் அன்பரை முடுகி அடை கூற்று உதை கழலானே -

அன்று அரி அயன் இவர்கள் போற்றிட, அங்கு அவர் அறிய அரிதாய்ச் சுடர் அங்கியின் உருவில் எழு மூத்தவ -

மழுவாளா -

வஞ்சி நுண் இடையுடைய பார்ப்பதி மங்கையை மகிழ், நுதலில் நேத்திர -

வன் புலி அதள் அரையில் வீக்கிய விறலானே -

மஞ்சு அடை பொழிலில் இசை ஆர்த்து அடை வண்டினம் மகிழும் இடமாய்த் திகழ் வண் பதி புரிசை வழுவூர்ச் சிவபெருமானே -


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Nov 18, 2020, 8:17:20 PM11/18/20
to santhavasantham

2009-08-24

03.05.114 - சுகமுற அருளாய் (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தனதன தத்தத் தனதன

தத்தத் தனதன ...... தனதான )

(கச்சிட் டணிமுலை - திருப்புகழ் - காஞ்சீபுரம்)


இற்றைக் கழல்தொழல் எற்றுக் கெனநிதம்

..... எத்துப் புரிமனம் .. அதனாலே

.. இச்சைக் கடலத னுட்புக் கனுதினம்

..... எய்ப்புற் றுழல்கிற .. அடியேனும்

வெற்றித் திருமகள் வித்தைக் கலைமகள்

..... விட்டுப் பிரிகிலர் .. எனவாக

.. வெப்பத் தொடுவரு வெற்பொத் துளவினை

..... விட்டுச் சுகமுற .. அருளாயே

நெற்றித் தலமெரி கக்கிச் சுடுவிழி

..... நிற்கப் புரம்விழ .. நகுநாதா

.. நிட்டைத் தவசியர் பற்றற் றுளமிக

..... நெக்குத் தொழவுயர் .. கதியீவாய்

குற்றச் செயல்புரி பத்துத் தலையிறை

..... கொச்சைச் சொலனழ .. அடர்பாதா

.. கொக்குச் சிறகணி செக்கர்ச் சடைநதி

..... கொட்டச் சிறைசெய்த .. பெருமானே.


விளக்கத்திற்கு: https://madhisudi.blogspot.com/2020/11/0305114.html

Siva Siva

unread,
Nov 28, 2020, 4:43:12 PM11/28/20
to santhavasantham

சுடச்சுட! கார்த்திகை தீபம் ஸ்பெஷல்!


இருதினங்களுக்குமுன் ஒரு திருப்புகழை யூட்யூபில் கேட்டேன்.

(Sivasri Skandaprasad - singing "அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் - திருப்புகழ்": https://www.youtube.com/watch?v=ba3QFGA5gZs )


2020-11-28

அன்பு என்று பெற்று மகிழ்வேன் - (பொது)

----------------------------

தனதனன தனதனன தந்தந்த தத்ததன

தனதனன தனதனன தந்தந்த தத்ததன

தனதனன தனதனன தந்தந்த தத்ததன ... தத்ததன தான

(தத்ததன தான - இதனைத் - தத்த தனதான - என்றும் நோக்கலாம்போல்)


(அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் - திருப்புகழ் - பொது)


இரவுபகல் துயரமடை யுஞ்சிந்தை யிற்புனித

இணையடியை நினைவதுவு மென்றுன்றி ருப்புகழை

இசையினொடு நிதமுரைசெ யன்பென்று பெற்றுவினை .. அற்று மகிழ்வேனோ


கரையிலொரு முதலைவர முன்கொன்ற வற்றருக

கடுகியருள் எனமொழியும் வன்றொண்டர் சொற்கருள்செய்

கருணைமிகு பரமபகி ரண்டம்ப டைத்தவையொ .. டுக்க வலதேவா


அரையினிலொர் அரவினைய ணிந்திந்து வைச்சடையில்

அழகுபெற உலவிவள ரென்றன்று வைத்துமகிழ்

அரியபுகழ் இறைவசர ணென்றண்டு பத்தரிடர் .. வற்ற அருள்நேயா


பரவியடி தொழுசுரர்கள் வம்புந்து புட்பமொடு

பழுதில்மொழி பலசொலவ ழங்குங்க ருத்தினொடு

படுவிடமும் அமுதமென உண்கண்ட முப்புரமெ .. ரித்த பெருமானே.


பதம் பிரித்து:

இரவு பகல் துயரம் அடையும் சிந்தையில் புனித

இணையடியை நினைவதுவும் என்று, உன் திருப்புகழை

இசையினொடு நிதம் உரைசெய் அன்பு என்று பெற்று வினை அற்று மகிழ்வேனோ?


"கரையில் ஒரு முதலை வர, முன் கொன்றவன் தருக,

கடுகி அருள்" என மொழியும் வன்றொண்டர் சொற்கு அருள்செய்

கருணை மிகு பரம; பகிரண்டம் படைத்து அவை ஒடுக்க வல தேவா;


அரையினில் ஒர் அரவினை அணிந்து இந்துவைச் சடையில்

அழகு பெற உலவி வளர் என்று அன்று வைத்து மகிழ்,

அரிய புகழ் இறைவ; சரண் என்று அண்டு பத்தர் இடர் வற்ற அருள் நேயா;


பரவி அடி தொழு சுரர்கள் வம்பு உந்து புட்பமொடு

பழுது இல் மொழி பல சொல, வழங்கும் கருத்தினொடு

படுவிடமும் அமுதம் என உண் கண்ட; முப்புரம் எரித்த பெருமானே.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 28, 2020, 5:19:04 PM11/28/20
to சந்தவசந்தம்
அருமை!  

... அனந்த்

Siva Siva

unread,
Nov 29, 2020, 10:05:38 AM11/29/20
to santhavasantham
Kripananda Variyar sings this thiruppugazh (agaramudhalena) and describes some aspects here: https://www.youtube.com/watch?v=D2-LK7Draak&t=1590s

Siva Siva

unread,
Jan 17, 2021, 11:37:17 AM1/17/21
to santhavasantham

2021-01-09

பொது

----------------

(வண்ண விருத்தம்;

"தனன தனன தனன தனன தனதனன";

கட்டளைக் கலித்துறை அமைப்பை இரட்டித்த வடிவம்;

அரையடிகள் கட்டளைக் கலித்துறை இலக்கணம் பொருந்திவரப் பெற்றவை;

அரையடிதோறும் முதல், ஈற்றுச் சீர்களில் மோனை)


இரவும் இரவின் எதிரும் உருகி எழில்மிகுதாள்

.. இணையை நினையும் முனிவர் துணைவ எனவுனசீர்

நரகம் அடைய விரையும் நரரும் நவிலுவரேல்

.. நமனும் வெருவி அகல உறுவர் நலமிகவே

விரவி வினைகள் நலிய எரியில் விழுமுனநான்

.. விடையை அமரும் இறைவ கரிய மிடறுடையாய்

உரகம் அசையும் அகலம் உடைய ஒருவவருள்

.. உனது புகழை இனிய தமிழில் உரைசெயவே.


பதம் பிரித்து:

"இரவும் இரவின் எதிரும் உருகி எழில் மிகு தாள்

.. இணையை நினையும் முனிவர் துணைவ" என உன சீர்

நரகம் அடைய விரையும் நரரும் நவிலுவரேல்,

.. நமனும் வெருவி அகல, உறுவர் நலம் மிகவே;

விரவி வினைகள் நலிய எரியில் விழுமுனம் நான்,

.. விடையை அமரும் இறைவ, கரிய மிடறு உடையாய்,

உரகம் அசையும் அகலம் உடைய ஒருவ, அருள்

.. உனது புகழை இனிய தமிழில் உரைசெயவே.


குறிப்பு : அடிகள் 3,4-- "விடையை அமரும் இறைவ; கரிய மிடறு உடையாய்;

உரகம் அசையும் அகலம் உடைய ஒருவ; விரவி வினைகள் நலிய நான் எரியில் விழுமுனம், உனது புகழை இனிய தமிழில் உரைசெய அருள்" என்று இயைத்துப் பொருள்கொள்க;


"இரவும் இரவின் எதிரும் உருகி எழில் மிகு தாள்இணையை நினையும் முனிவர் துணைவ" என சீர் - இரவும் பகலும் மனம் உருகி அழகு மிகுந்த இரு திருவடிகளை நினையும் முனிவரான மார்கண்டேயருக்கு துணைவனே" என்று உனது புகழை;

நரகம் அடைய விரையும் நரரும் நவிலுவரேல் - நரகத்தை அடைய விரைகின்ற தீவினையாளர்களும் சொல்வார்களேயானால்; (சம்பந்தர் தேவாரம் - 3.49.7 - "நரகம் ஏழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயின ராயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்");

நமனும் வெருவி அகல, உறுவர் நலம் மிகவே - காலனும் அவர்களை அணுக அஞ்சி விலக, நலம் மிக அடைவார்கள்;

விரவி வினைகள் நலிய எரியில் விழுமுனம் நான் - வினைகள் என்னைப் பொருந்தி வருத்த வாடி இவ்வுடல் தீயில் புகுந்து நான் அழியாமுன்;

விடையை அமரும் இறைவ, கரிய மிடறு உடையாய் - இடபத்தை வாகனமாக விரும்பும் இறைவனே, நீலகண்டனே;

உரகம் அசையும் அகலம் உடைய ஒரு - பாம்பு மாலைபோல் மார்பில் அசைகின்ற ஒப்பற்றவனே;

ருள் உனது புகழை இனிய தமிழில் உரைசெயவே - உன் புகழை இனிய தமிழினால் பாடுமாறு அருள்வாயாக;

Siva Siva

unread,
Jan 18, 2021, 10:19:01 AM1/18/21
to santhavasantham

2021-01-12

பொது

----------------

(வண்ண விருத்தம்;

"தந்த தனதன தந்த தனதன தந்ததன";

கட்டளைக் கலித்துறை அமைப்பை இரட்டித்த வடிவம்;

அரையடிகள் கட்டளைக் கலித்துறை இலக்கணம் பொருந்திவரப் பெற்றவை;

அரையடிதோறும் முதல், ஈற்றுச் சீர்களில் மோனை)


இந்த உலகினில் வந்த பிறவியில் இன்பமென

.. என்றும் இடருறு கின்ற நிலையற என்றுனைநான்

சந்த மலரொடு கந்த மலிதரு தண்டமிழால்

.. தஞ்சம் அருளென நின்று தொழுவது சங்கரனே

சிந்தை அழிவுற மங்கி மலரடி தெண்டனிடு

.. திங்கள் அதுதனை இண்டை எனவணி செஞ்சடையாய்

அந்தம் முதலிவை இன்றி உளவுனை அண்டரெலாம்

.. அண்டி அழவிடம் உண்ட மிடறுடை அங்கணனே.


பதம் பிரித்து:

இந்த உலகினில் வந்த பிறவியில் இன்பம் என

.. என்றும் இடர் உறுகின்ற நிலை அற என்று உனை நான்

சந்த மலரொடு கந்தம் மலிதரு தண் தமிழால்

.. "தஞ்சம் அருள்" என நின்று தொழுவது சங்கரனே?

சிந்தை அழிவுற மங்கி மலரடி தெண்டனிடு

.. திங்கள் அதுதனை இண்டை என அணி செஞ்சடையாய்;

அந்தம் முதல் இவை இன்றி உள உனை அண்டர்எலாம்

.. அண்டி அழ, விடம் உண்ட மிடறுடை அங்கணனே.



உரைநடை - அடிகள் 1-2 : "சங்கரனே, இந்த உலகினில் .... நிலையற உனை நான் சந்த மலர்கொடு ... தொழுவது என்று?"


ந்த உலகினில் வந்த பிறவியில் இன்பம் எ என்றும் இர் உறுகின்ற நிலை - இந்தப் பூமியில் அடைந்த இப்பிறவியில் இன்பம் என்று (எண்ணி அறியாமையால் தீவினை செய்து) எப்பொழுதும் துன்பப்படுகின்ற நிலை நீங்கும்படி;

ன்றுனை நான் ந்த மலரொடு ந்தம் மலிதரு தண்மிழால் "தஞ்சம் அருள்" ன நின்று தொழுவது சங்கரனே - சங்கரனே, உன்னை நான் அழகிய மலர்களோடு வாசனை கமழும் குளிர்ந்த தமிழ்ப் பாமாலைகளால், "தஞ்சம் அருள்க" என்று நின்று வழிபடுவது எந்நாளோ? (சந்தம் - அழகு);

சிந்தை அழிவுற மங்கி மலரடி தெண்டனிடு திங்கள் அதுதனை இண்டை எனணி செஞ்சடையாய் - மனம் வருந்தி ஒளி குன்றி உன் மலர்த்திருவடியை வணங்கிய சந்திரனை இண்டை மாலைபோல் செஞ்சடையில் அணிந்தவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (அப்பர் தேவாரம் - 4.85.8 - "வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே");

அந்தம் முதல் இவை இன்றி உள உனை அண்டர்எலாம் அண்டி அ, விடம் உண்ட மிடறுடை அங்கணனே - முடிவும் முதலும் இன்றித் திகழும் உன்னைத் தேவர்களெல்லாம் சரணடைந்து அழுது இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகால விடத்தை உண்ட கண்டத்தை உடைய, அருட்கண்ணுடைய சிவபெருமானே;

Siva Siva

unread,
Jan 19, 2021, 12:36:46 PM1/19/21
to santhavasantham

2021-01-04

பொது

----------------

(வண்ண விருத்தம்;

"தானன தானன தானன தானன தானதன";

கட்டளைக் கலித்துறை அமைப்பை இரட்டித்த வடிவம்;

அரையடிகள் கட்டளைக் கலித்துறை இலக்கணம் பொருந்திவரப் பெற்றவை;

அரையடிதோறும் முதல், ஈற்றுச் சீர்களில் மோனை)


1)

நீதியி லாதவ மேபுரி யாதுனை நேயமிக

.. நீரென வேமனம் ஆகிவி ராவிட நீயருளாய்

மேதினி வாழ்விது தீர்தினம் ஈதெனும் மேதியனே

.. வீடிடு மாறுதை தாளின னேபொடி மேனியினாய்

காதினில் ஓர்குழை தோடணி வாய்கரி காடுடையாய்

.. காதலி னாரக மேவிய பூரண காரணனே

ஆதியில் நான்முகன் நாரணன் நேடிய ஆரழலே

.. ஆலதன் நீழலில் ஆரணம் ஓதிய ஆரியனே.


பதம் பிரித்து:

நீதி இலாது அவமே புரியாது உனை நேயம் மிக

.. நீர் எனவே மனம் ஆகி விராவிட நீ அருளாய்;

மேதினி வாழ்வு இது தீர் தினம் ஈது எனும் மேதியனே

.. வீடிடுமாறு உதை தாளினனே; பொடி மேனியினாய்;

காதினில் ஓர் குழை தோடு அணிவாய்; கரிகாடு உடையாய்;

.. காதலினார் அகம் மேவிய பூரண; காரணனே;

ஆதியில் நான்முகன் நாரணன் நேடிய ஆரழலே;

.. ஆலதன் நீழலில் ஆரணம் ஓதிய ஆரியனே.


நீதிலாது அவமே புரியாது, னை நேயம் மிக நீர் எனவே மனம் ஆகி விராவிட நீருளாய் = நீதி இலாது அவமே புரியாது, நேயம் மிக நீர் எனவே மனம் ஆகி உனை விராவிட நீ அருளாய் - நன்னெறியிலிருந்து பிறழ்ந்து இழிசெயல்களே புரிந்து உழலாமல், அன்பு மிக அதனால் என் மனம் நீராய் உருகி உன்னை அடையுமாறு நீ அருள்வாயாக; (விராவுதல் - விரவுதல் - அடைதல்; கலத்தல்);

மேதினி வாழ்வு இது தீர் தினம் ஈது எனும் மேதியனே வீடிடுமாறுதை தாளினனே - (மார்க்கண்டேயரது) இந்த உலக வாழ்வு முடியும் நாள் இது என்று கொல்ல வந்த எருமை வாகனனான காலனே அழியும்படி அவனை உதைத்த திருவடியினனே; (மேதி - எருமை); (வீடுதல் - அழிதல்; சாதல்);

பொடி மேனியினாய் - சாம்பலை மேனியில் பூசியவனே;

காதினில் ஓர் குழை தோடு அணிவாய் - காதில் ஒரு குழையும் தோடும் அணிந்தவனே;

கரிகாடு உடையாய் - சுடுகாட்டில் இருப்பவனே;

காதலினார் அகம் மேவிய பூரண காரணனே - பக்தர்களது நெஞ்சில் விரும்பி உறையும் முழுமுதற்பொருளே;

ஆதியில் நான்முகன் நாரணன் நேடிய ஆழலே - முன்னொரு சமயத்தில் பிரமன் திருமால் இவர்கள் தேடிய அரிய சோதியே;

ஆலதன் நீழலில் ஆரணம் ஓதிய ஆரியனே - கல்லால மரத்தின்கீழ் சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்த குருவே; (ஆரணம் - வேதம்);


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Feb 23, 2021, 6:56:43 PM2/23/21
to santhavasantham

Hot off the keyboard!

Even though I normally do not post immediately, this is one of the exceptions!


2021-02-22 / 23

நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)

-------------------------------

தனத்தனந் தந்த தான

தனத்தனந் தந்த தான

தனத்தனந் தந்த தான .. தனதான

(வரைத்தடங் கொங்கை யாலும் - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


அரித்திடும் பந்த மூழ்கி

.. .. அலப்புறுஞ் சிந்தை யாகி

.. .. அடித்தலஞ் சிந்தி யாமல் .. அழிவேனோ?

.. அலைத்திடுந் துன்ப வாரி

.. .. அழித்திடுங் கஞ்ச பாத

.. .. அடைக்கலந் தந்து காவல் .. அருளாயே


எரித்திடுஞ் செங்க ணாவில்

.. .. எடுத்தொரம் புந்து வேளை

.. .. எலுப்புடம் பின்றி வாழ .. வரமீவாய்

.. இருட்டழிந் திம்பர் வாழ

.. .. எழுப்பிடுஞ் சண்பை யாளி

.. .. இசைத்திடுஞ் சந்த மாலை .. மகிழ்காதா


வரித்தடங் கண்கு லாவு

.. .. மகட்கிடந் தந்த மார்பில்

.. .. மணத்திடுங் கொன்றை மாலை .. புனைவோனே

.. வலைப்படுந் துங்க மீனை

.. .. மலர்ப்பதஞ் சென்று சேர

.. .. மறித்திடுந் தொண்டர் நாகை .. உறைவோனே


நரிக்குலந் துன்று கானில்

.. .. நடித்திடுஞ் சங்க ராமுன்

.. .. நகைத்திடும் பெண்டு காண .. உனதாள்கள்

.. நவிற்றிவன் றொண்டர் பாட

.. .. நயப்புறுந் தங்க மாரும்

.. .. நலத்தையுந் தந்த தேவர் .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்



On Tue, Jan 19, 2021 at 12:36 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-01-04

பொது

Vis Gop

unread,
Feb 23, 2021, 8:12:56 PM2/23/21
to santhav...@googlegroups.com
பொருள் விளக்கம் வேண்டுகிறேன். 
கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Feb 23, 2021, 9:19:55 PM2/23/21
to santhavasantham
As it is a long song, let me know which phrase(s) need explanation.
it contains references to காமனை எரித்தல், சம்பந்தர், அதிபத்தர், & சுந்தரர்.

On Tue, Feb 23, 2021 at 8:12 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
பொருள் விளக்கம் வேண்டுகிறேன். 
கோபால். 

Siva Siva

unread,
Feb 24, 2021, 9:12:18 AM2/24/21
to santhavasantham

அரித்திடும் பந்தம் மூழ்கி, அலப்புறும் சிந்தையாகி, அடித்தலம் சிந்தியாமல் அழிவேனோ -

அலைத்திடும் துன்ப வாரி அழித்திடும் கஞ்ச பாத -

அடைக்கலம் தந்து காவல் அருளாயே -


எரித்திடும் செங்கணா வில் எடுத்து ஒர் அம்பு உந்து வேளை -

வேளை எலுப்புடம்பு இன்றி வாழ அருள்வோனே -

இருட்டு அழிந்து இம்பர் வாழ எழுப்பிடும் சண்பையாளி இசைத்திடும் சந்த மாலை மகிழ் காதா - (சண்பையாளி - திருஞான சம்பந்தர்)


வரித் தடம் கண் குலாவு மகட்கு இம் தந்த மார்பில் மணத்திடும் கொன்றை மாலை புனைவோனே -

வலைப்படுந் துங்க மீனை மலர்ப்பதம் சென்று சேர மறித்து இடும் தொண்டர் நாகை உறைவோனே - (அதிபத்த நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);


நரிக்குலம் துன்று கானில் நடித்திடும் சங்கரா -

முன் நகைத்திடும் பெண்டு காண உன தாள்கள் நவிற்றி வன்தொண்டர் பாட -

நயப்புறும் தங்கம் ஆரும் நலத்தையும் தந்த தேவர் பெருமானே -

(சுந்தரர் தேவாரம் - 7.25.1 - "பொன்செய்த மேனியினீர் .... பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடி யேன்இட் டளங்கெடவே"); 
 


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Mar 2, 2021, 10:13:39 PM3/2/21
to santhavasantham

We interrupt our usual programming to bring you this special program! :)


2021-02-27

புறம்பயம்

-------------------------------

தந்த தந்த தந்த தந்த

தந்த தந்த தந்த தந்த

தந்த தந்த தந்த தந்த .. தனதான

(சந்த னந்தி மிர்ந்த ணைந்து - திருப்புகழ் - எண்கண்)


என்றும் உன்றன் மென்ப தங்கள்

.. .. என்க ரங்கு விந்தி றைஞ்ச,

.. .. இம்ப ருஞ்சு கம்பொ ருந்த .. அருளாயே

.. எந்தை என்றும் அண்டன் என்றும்

.. .. மங்கை பங்கன் என்றும் நம்பன்

.. .. என்றும் அன்பர் சந்த தஞ்சொ .. லருளாளா


கொன்றை தும்பை திங்க ளிண்டை

.. .. கொங்கை நங்கை கங்கை துன்று

.. .. குஞ்சி நஞ்ச ணிந்த கண்டம் .. உடையானே

.. கொண்ட வெஞ்சி னங்கி ளர்ந்து

.. .. குன்றி டந்த மிண்டன் நைந்து

.. .. கும்பி டுஞ்சி லம்பு கின்ற .. கழலானே


அன்ற டைந்த அந்தன் அஞ்ச

.. .. நெஞ்சு டைந்த ழிந்து துஞ்ச

.. .. அம்பு யம்பு ரைந்த நின்றன் .. அடிவீசீ

.. அஞ்சு சந்த அம்பன் அங்கம்

.. .. ஒன்றும் இன்றி வெந்து மங்க

.. .. அங்கி பொங்கு கண்சி வந்த .. நுதலானே


சென்று முன்றில் நின்று ணங்கல்

.. .. இங்கு வந்தி டுங்கள் என்று

.. .. செங்கை மண்டை ஒன்றி லங்க .. உழல்வோனே

.. தென்ற லுந்து கந்தம் வந்து

.. .. சிந்தும் இன்பம் மண்டு கின்ற

.. .. தென்பு றம்ப யம்ப யின்ற .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Mar 4, 2021, 8:11:56 AM3/4/21
to santhavasantham
அருமையான சந்தம்

On Tue, Mar 2, 2021 at 9:13 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

We interrupt our usual programming to bring you this special program! :)

Siva Siva

unread,
Mar 4, 2021, 10:53:25 PM3/4/21
to santhavasantham
Thanks.

I presume you were commenting on the following song (to provide the context for other readers)
2021-02-27

புறம்பயம்

-------------------------------

என்றும் உன்றன் மென்ப தங்கள்

.. .. என்க ரங்கு விந்தி றைஞ்ச,

.. .. இம்ப ருஞ்சு கம்பொ ருந்த .. அருளாயே



V. Subramanian

Siva Siva

unread,
Mar 5, 2021, 9:07:09 AM3/5/21
to santhavasantham
To make it easier for some of the readers - with word separation :

என்றும் உன்றன் மென் பதங்கள் என் கரம் குவிந்து இறைஞ்ச, இம்பரும் சுகம் பொருந்த அருளாயே -

எந்தை என்றும் அண்டன் என்றும் மங்கை பங்கன் என்றும் நம்பன் என்றும் அன்பர் சந்ததம் சொல் ருளாளா -


கொன்றை, தும்பை, திங்கள் இண்டை, கொங்கை ங்கை கங்கை துன்று குஞ்சி, நஞ்சு அணிந்த கண்டம் உடையானே -

கொண்ட வெம் சினம் கிளர்ந்து, குன்று இடந்த மிண்டன் நைந்து கும்பிடும் சிலம்புகின்ற கழலானே -


அன்று அடைந்த அந்தன் அஞ்ச, நெஞ்சு உடைந்து அழிந்து துஞ்ச, அம்புயம் புரைந்த நின்றன் அடி வீசீ -

அஞ்சு ந்த அம்பன் அங்கம் ஒன்றும் இன்றி வெந்து மங்க அங்கி பொங்கு கண்சிவந்த நுதலானே -


சென்று முன்றில் நின்று "ணங்கல் இங்கு வந்து இடுங்கள்" என்று செங்கை மண்டை ஒன்று இலங்க உழல்வோனே -

தென்றல் உந்து கந்தம் வந்து சிந்தும் இன்பம் மண்டுகின்ற தென் புறம்பயம் பயின்ற பெருமானே - 


வி. சுப்பிரமணியன்

--

Siva Siva

unread,
Mar 14, 2021, 8:15:52 AM3/14/21
to santhavasantham

 An old song - with significant update:


2006-08-30

3.5.9) அடி வாழ்த்திட மறவேன் (வெண்காடு)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தாதன தானன தாத்தன

தந்தாதன தானன தாத்தன

தந்தாதன தானன தாத்தன .. தனதான);

(அந்தோமன மேநம தாக்கையை - திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி)


எந்தாயென ஈபவன் ஈட்டிய

.. .. என்தீவினை வேரற மாய்ப்பவன்

.. .. என்பாலொரு மாலையை ஏற்றவன் .. எருதேறி

.. இன்பாலினில் ஆடிடும் மூத்தவன்

.. .. எங்கேயடி யார்தொழு தேத்தினும்

.. .. இந்தாவென ஓர்கரம் நீட்டிடும் .. அருளாளன்


வெந்தீயினில் மூவெயில் ஆழ்த்தரன்

.. .. வெங்கானிடை ஆடிடு கூத்தினன்

.. .. வெண்காடுறை கோனடி வாழ்த்திட .. மறவேனே

.. வெண்டாமரை மேலயன் ஓட்டினில்

.. .. உண்பானிடு வீரென நாட்டினில்

.. .. ஒண்போதணி ஏழையர் வீட்டுமுன் .. வருமீசன்


சிந்தாமணி வானவர் போற்றிடு

.. .. செஞ்சோதிய வாவினை நீத்தவர்

.. .. சிந்தாகுலம் ஆனவை தீர்த்திடு .. மதிசூடி

.. திண்டோள்களி னால்வரை பேர்த்தெறி

.. .. வெங்கோபனை ஓவென வாட்டிய

.. .. செந்தாளினன் ஓர்பெயர் சூட்டிய .. கயிலாயன்


அந்தீயன மேனியில் நீற்றினன்

.. .. அன்பேஉரு ஆகிய வேட்டுவர்

.. .. அம்பாலொரு பூவிழி பேர்த்தடை .. கணநாதன்

.. ஐம்போதினை ஏவிடு போர்த்தொழில்

.. .. அங்காமனை நீறுசெய் நேத்திரன்

.. .. அன்றாலதன் நீழலில் ஓத்துரை .. பெருமானே.


For detailed meaning: https://madhisudi.blogspot.com/2017/11/0305009.html


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Mar 19, 2021, 11:09:51 PM3/19/21
to santhavasantham

Another one - hot off the keyboard! :)


2021-03-19

பொது

-----------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தந்தத் தனனத் தந்தத்

தனனத் தந்தத் .. தனதான)

(புகரப் புங்கப் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


பொருளுக் கென்றிப் புலனுக் கென்றிப்

.. .. புவியிற் றுன்புற் .. றழியாமல்

.. புணையொக் கும்பொற் கழலிற் சந்தப்

.. .. புகழ்செப் பும்பொற் .. புறுவேனோ


பெருவெற் பொன்றைக் குனிவித் தம்பைப்

.. .. பிணைவித் திஞ்சிக் .. கரியானாய்

.. பிழைதக் கன்செற் றயனைப் பொங்கிப்

.. .. பிறரைத் தண்டித் .. தருள்வீரா


கருவெற் பொன்றைப் புரைவைத் தந்தக்

.. .. கரியைப் பொன்றப் .. பொருதோனே

.. கமழக் கொன்றைத் தொடையைக் கங்கைக்

.. .. கலியப் பொன்றப் .. புனைவோனே


அரிவைப் பங்கத் தினில்நற் சங்கத்

.. .. தணிபொற் புந்தத் .. தரியீசா

.. அமரர்க் கன்புற் றிருளைக் கண்டத்

.. .. தணிகட் டங்கப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொருளுக்கு என்று,இப் புலனுக்கு என்று,இப்

.. .. புவியில் துன்புற்று அழியாமல்,

.. புணை ஒக்கும் பொற்கழலில் சந்தப்

.. .. புகழ் செப்பும் பொற்பு உறுவேனோ?


பெருவெற்பு ஒன்றைக் குனிவித்து அம்பைப்

.. .. பிணைவித்து இஞ்சிக்கு .. அரி ஆனாய்;

.. பிழை தக்கன் செற்று அயனைப் பொங்கிப்

.. .. பிறரைத் தண்டித்து அருள் வீரா;


கருவெற்பு ஒன்றைப் புரை, வைத் தந்தக்

.. .. கரியைப் பொன்றப் பொருதோனே;

.. கமழ் அக் கொன்றைத் தொடையைக் கங்கைக்

.. .. கலி-அப்பு ஒன்றப் .. புனைவோனே;


அரிவைப் பங்கத்தினில் நற் சங்கத்து

.. .. அணி பொற்பு உந்தத் தரி ஈசா;

.. அமரர்க்கு அன்புற்று இருளைக் கண்டத்து

.. .. அணி கட்டங்கப் பெருமானே.


வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Mar 20, 2021, 1:23:08 AM3/20/21
to santhavasantham
அருமையோ அருமை

On Fri, Mar 19, 2021 at 10:09 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Another one - hot off the keyboard! :)





"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMO%3DrynhKepq0wFHLB8R0ftG8mm9T%3DKRrqQy%2By7%2BViGOA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 20, 2021, 8:50:02 AM3/20/21
to santhavasantham

Thank you.


One can watch a rendering of that thiruppugazh song - (புகரப் புங்கப் - திருப்புகழ் - திருச்செந்தூர்)- by Bhavya Hari here:

https://youtu.be/enFYDvl3wu0?t=849



On Sat, Mar 20, 2021 at 1:23 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அருமையோ அருமை

Siva Siva

unread,
Mar 20, 2021, 6:24:19 PM3/20/21
to santhavasantham

சுடச்சுட இன்னொன்று!! :)


2021-03-20

பொது

-----------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தந்தத் தனனத் தந்தத்

தனனத் தந்தத் .. தனதான)

(புகரப் புங்கப் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


கலரைச் சென்றுற் றறிவற் றிந்தக்

.. .. கடல்சுற் றிம்பர்ச் .. சுழலாமல்

.. கழலைச் சிந்தித் துருகித் துன்பக்

.. .. கருவற் றின்பைப் .. பெறுவேனோ


சிலைமத் தென்றிட் டரவைக் கொண்டத்

.. .. திரையைப் பொங்கக் .. கடைநாளால்

.. செடியைக் கண்டச் சுறுநர்க் கின்பத்

.. .. தினைவைத் துண்பித் .. துடையானே


புலையிற் கஞ்சித் திலையிற் சென்றப்

.. .. பொதுவைச் சிந்தித் .. திடுவார்சீர்

.. புவனத் தன்பர்க் கறிவித் தும்பர்ப்

.. .. பொலிவிக் குஞ்சிற் .. பரநாதா


தலைபத் தும்பெற் றளியற் றுன்பொற்

.. .. றடவெற் புந்தச் .. செலுமூடன்

.. தனிரத் தங்கொட் டிடவைக் கும்பொற்

.. .. சடையிற் றிங்கட் .. பெருமானே.


பதம் பிரித்து:

கலரைச் சென்று உற்று அறிவு அற்று இந்தக்

.. .. கடல் சுற்று இம்பர்ச் சுழலாமல்,

.. கழலைச் சிந்தித்து உருகித் துன்பக்

.. .. கரு அற்று இன்பைப் பெறுவேனோ?


சிலை மத்து என்று இட்டு அரவைக் கொண்டு அத்

.. .. திரையைப் பொங்கக் கடை-நாள் ஆல்

.. செடியைக் கண்டு அச்சுறுநர்க்கு இன்பத்

.. .. தினை வைத்து உண் பித்து உடையானே;


புலையிற்கு அஞ்சித் திலையிற் சென்று அப்

.. .. பொதுவைச் சிந்தித்திடுவார் சீர்

.. புவனத்து அன்பர்க்கு அறிவித்து உம்பர்ப்

.. .. பொலிவிக்கும் சிற்பர; நாதா;


தலை பத்தும் பெற்று அளி அற்று உன் பொற்

.. .. றடவெற்பு உந்தச் செலும் மூடன்

.. தன்-இரத்தம் கொட்டிடவைக்கும், பொற்

.. .. சடையில் திங்கட் பெருமானே.


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Mar 22, 2021, 10:37:56 PM3/22/21
to santhavasantham

வீட்டுப்பாடல் தொடர்கின்றது! :)


2021-03-22

விரிஞ்சிபுரம் (வேலூர் அருகே உள்ள தலம்)

-----------------

(வண்ணவிருத்தம்;

தானதன தான தந்த .. தனதான)

(காரணம தாக வந்து - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


வாழுமுறை யேய றிந்து .. நடவாமல்

.. வாதைமிக வேய டைந்து .. வினைவாரி

ஆழுநிலை மாற அஞ்சு .. பதமோதி

.. ஆர்கழலை நாடும் அன்பை .. அருளாயே

ஏழுமிரு நாலும் அஞ்சு .. கரமூடன்

.. ஏசியது போய்வ ணங்க .. நெரிபாதா

சூழுமதில் ஆர்வி ரிஞ்சி .. புரமேயாய்

.. தூயதிரு நீற ணிந்த .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Mar 20, 2021 at 6:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Subbaier Ramasami

unread,
Mar 23, 2021, 12:04:11 AM3/23/21
to santhavasantham
arumai

On Mon, Mar 22, 2021 at 9:37 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

வீட்டுப்பாடல் தொடர்கின்றது! :)


2021-03-22

விரிஞ்சிபுரம் (வேலூர் அருகே உள்ள தலம்)



On Sat, Mar 20, 2021 at 6:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 23, 2021, 9:40:41 AM3/23/21
to santhavasantham
Thanks.

Siva Siva

unread,
Mar 25, 2021, 11:55:15 AM3/25/21
to santhavasantham
பழைய பாடல் புது மெருகோடு!

03.05.008 – பொது - பெரிது மோதிடுந் தொடர வாவதன் - (வண்ணம்)


2006-08-24

8) கழலை ஓர் மனம் அருளாய்

----------------------

(வண்ணவிருத்தம்;

தனன தானனந் தனன தானனந்

தனன தானனந் .. தனதான);

(அயில்வி லோசனங் குவிய வாசகம் - திருப்புகழ் - பொது)


பெரிது மோதிடுந் தொடர வாவதன்

.. .. பிடியி லேபடுந் .. துயரோடு

.. பிணிய தாய்வருங் கொடிய பாவமும்

.. .. பிரிய நானிலந் .. தனில்நாளும்


பிரிய மாயிரும் புகழை ஓதிடும்

.. .. பிணைய லாமருந் .. தமிழ்பாடிப்

.. பெரியர் கூடிடுங் கழலை ஓர்மனம்

.. .. பிறைய னேபரிந் .. தருளாயே


எரியும் மாயனுங் கடிய காலுமங்

.. .. கிணையும் ஓர்சரந் .. தொடுவீரா

.. இறைவ னேபெருங் கருணை யாயிரங்

.. .. கினிய னேஎனுஞ் .. சுரர்வாழக்


கரிய மாவிடஞ் சுவைகொள் நாவலின்

.. .. கனிய தேயெனும் .. படிமேவிக்

.. கறையு லாவிடுங் களமு ளாய்மணங்

.. .. கமழும் வேணியெம் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெரிது மோதிடும் தொடர் அவா அதன்

.. .. பிடியிலே படும் .. துயரோடு

.. பிணியதாய் வரும் கொடிய பாவமும்

.. .. பிரிய நானிலந்தனில் நாளும்


பிரியமாய் இரும் புகழை ஓதிடும்

.. .. பிணையல் ஆம் அரும் .. தமிழ் பாடிப்

.. பெரியர் கூடிடும் கழலை ஓர் மனம்,

.. .. பிறையனே, பரிந்து .. அருளாயே;


எரியும் மாயனும் கடிய காலும் அங்கு

.. .. ணையும் ஓர் சரம் .. தொடு வீரா;

.. "இறைவனே; பெரும் கருணையாய்; இரங்கு

.. .. இனியனே" எனும் .. சுரர் வாழக்,


கரிய மா விடம் சுவைகொள் நாவல் இன்

.. .. கனியதே எனும்படி மேவிக்,

.. கறை உலாவிடும் களம் உளாய்; மணம்

.. .. கமழும் வேணி எம் .. பெருமானே.


வி. சுப்பிரமணியன்




On Mon, Mar 22, 2021 at 10:37 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Mar 26, 2021, 9:17:55 AM3/26/21
to santhavasantham

இன்னொரு பழைய பாடல் - மாற்றங்களோடு!


03.05.003

2006-08-19

3.5.3) நாமம் நவிலுகின்ற மதி தாராய் (பொது)

------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த .. தனதான);

(முறுகு காள விடம யின்ற - திருப்புகழ் - சுவாமிமலை)


மயலி னாலும் மதனின் அஞ்சு

.. .. மலர்க ளாலும் மிகமெ லிந்து

.. .. வரையி லாது வினைபு ரிந்து .. தினமோடி

.. வயதும் ஏறி வலுவி ழந்து,

.. .. மறதி கூடி, மகனும் அன்பு

.. .. மனைவி கூட இகழ நொந்து, .. படுநாளில்


இயம தூதர் எனைநெ ருங்கி

.. .. இடர்செ யாமுன், உருகி உன்றன்

.. .. இனிய நாமம் நவிலு கின்ற .. மதிதாராய்;

.. இகலும் மூவர் திரிபு ரங்கள்

.. .. எரியில் வேவ நகைபு ரிந்த

.. .. இறைவ நீலம் இலகு கண்டம் .. உடையானே;


உயர மேறு மலையி டந்த

.. .. உரமு லாவு புயவி லங்கை

.. .. உடைய கோனை மிகவ ருந்த .. நெரிதேவா;

.. ஒருக பாலம் அதனில் உண்ப

.. .. துடைய னாகி உலகி லெங்கும்

.. .. உணவை நாடி உழலு கின்ற .. திருவாளா;


அயிலு லாவு நுனையி லங்கும்

.. .. அரிய வேலும் மழுவும் அங்கை

.. .. அமரும் ஈச பிறைய ணிந்த .. சடையானே;

.. அலையில் நாக அணைமு குந்தன்

.. .. அலரின் மேலன் அவர்வ ணங்க

.. .. அழல தாகி அளவி றந்த .. பெருமானே.

Siva Siva

unread,
Mar 26, 2021, 10:48:54 AM3/26/21
to santhavasantham

Latest!

2021-03-26

நீடூர்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானா தனதன தானா தனதன

தானா தனதன .. தனதான)

(ஆதா ளிகள்புரி கோலா கலவிழி - திருப்புகழ் - பழநி)


ஆறா தெழுநசை யால்நான் அனுதினம்

.. .. ஆகா தனபுரி .. நிலைமாறி

.. ஆவா எனவிடர் மூழ்கா துனதடி

.. .. ஆரா தனைசெய .. அருளாயே


கூறா உமையவள் ஓர்பால் உறமகிழ்

.. .. கோனே அதளுடை .. உடையானே

.. கூரார் முனையணி சூலா மதனெரி

.. .. கோபா குளிர்மலி .. கயிலாயா;


மாறார் அசுரர்கள் வாழ்மூ வெயிலவை

.. .. வாளார் எரியினில் .. விழுமாறே

.. வானோர் இடர்கெட ஓரே மிகையென

.. .. வாயால் ஒருநகை .. புரிவோனே;


நீறார் புயமிரு நாலாய் அலைமலி

.. .. நீரார் முடிமிசை .. அரவோடு

.. நீள்மா மதிபுனை வேடா வயலணி

.. .. நீடூர் தனிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

ஆறாது எழு நசையால் நான் அனுதினம்

.. .. ஆகாதன புரி .. நிலைமாறி

.. ஆவா என இடர் மூழ்காது உனது அடி

.. .. ஆராதனை செய .. அருளாயே;


கூறா உமையவள் ஓர் பால் உற மகிழ்

.. .. கோனே; அதள் உடை .. உடையானே;

.. கூர் ஆர் முனை அணி சூலா; மதன் எரி

.. .. கோபா; குளிர் மலி .. கயிலாயா;


மாறு ஆர் அசுரர்கள் வாழ் மூவெயில் அவை

.. .. வாள் ஆர் எரியினில் .. விழுமாறே

.. வானோர் இடர் கெட ஓர் ஏ மிகை என

.. .. வாயால் ஒரு நகை .. புரிவோனே;


நீறு ஆர் புயம் இரு நாலாய்; அலை மலி

.. .. நீர் ஆர் முடிமிசை .. அரவோடு

.. நீள் மா மதி புனை வேடா; வயல் அணி

.. .. நீடூர்தனில் உறை .. பெருமானே.


V. Subramanian


Siva Siva

unread,
Mar 28, 2021, 6:48:47 PM3/28/21
to santhavasantham

2021-03-28

அம்பர் (இக்காலத்தில் - அம்பல்)

-----------------

(வண்ணவிருத்தம்;

தந்தனந் தந்தத் .. தனதான)

(சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


சங்கடங் குன்றிச் .. சுகவாழ்வு

.. சங்கையொன் றின்றிப் .. பெறுவேனோ

அங்கியொன் றம்பைத் .. தொடுவீரா

.. அன்புறுந் தொண்டர்க் .. கருள்வோனே

மங்கையும் பங்கைப் .. பெறவானீர்

.. வஞ்சியுங் குஞ்சிப் ,, புனைவோனே

மங்கலம் பொங்கத் .. திகழ்வோனே

.. வண்டலம் பம்பர்ப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சங்கடம் குன்றிச் .. சுகவாழ்வு

.. சங்கையொன்று இன்றிப் .. பெறுவேனோ?

அங்கி ஒன்று அம்பைத் .. தொடு வீரா;

.. அன்புறும் தொண்டர்க்கு .. அருள்வோனே;

மங்கையும் பங்கைப் .. பெற, வானீர்

.. வஞ்சியும் குஞ்சிப் ,, புனைவோனே;

மங்கலம் பொங்கத் .. திகழ்வோனே;

.. வண்டு அலம்பு அம்பர்ப் .. பெருமானே.

Subbaier Ramasami

unread,
Mar 28, 2021, 8:09:34 PM3/28/21
to santhavasantham
அருமை.  குஞ்சிப் புனைவோனே;-  விலி மிகுமா?

On Sun, Mar 28, 2021 at 5:48 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2021-03-28


Subbaier Ramasami

unread,
Mar 28, 2021, 8:10:38 PM3/28/21
to santhavasantham
அருமை
குஞ்சிப் ,, புனைவோனே;-  வலி மிகுமா?

இலந்தை

Siva Siva

unread,
Mar 28, 2021, 8:58:06 PM3/28/21
to santhavasantham
ஆம்.

12. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும்.

காட்டிடை+ சென்றான் = காட்டிடைச்சென்றான்.

குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்.


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41050&padhi=105&startLimit=4&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

4.105.4

பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூரரசே

பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப் பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே!



On Sun, Mar 28, 2021 at 8:10 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அருமை
குஞ்சிப் ,, புனைவோனே;-  வலி மிகுமா?

It is loading more messages.
0 new messages