பிள்ளையார் பட்டிக் கற்பக விநாயகர் துதி

18 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 3:43:46 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
திருவாளர் வேட்டை அனந்த் அவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க, விநாயகர் 
சதுர்த்தி  அன்று எழுதிய  மூன்று அந்தாதி வெண்பாக்களைத் தொடர்ந்து எழுதிய
                                        வெண்பா அந்தாதிப் பதிகம் 

கண்ணுதலான்        பெற்ற                              கணநாதன்,       சக்தியெனும்    
பெண்ணுமையாள் பெற்றெடுத்த                பிள்ளையவன் - நண்ணுகின்ற    
அன்பர்க்(கு)              அருள்பொழியும்           ஐந்துகரத்(து)     ஆனைமுகன்     
முன்பெழுந்த            மூல                                  முதல்
     
முதலாகி           நிற்பான்,நம்  முன்வினைகள் சேர்ந்து 
சிதலாய்           அரிக்காமற்    செய்வான்-         கதலி
கடலை,பொரி காதலன்,         கைதொழுவோர் பாவக்
கடலைவிட்டு   மீட்கும்            கலம்! 
            
கலமாகி,             அன்(று)இன்றாம்  காலத்தை      வென்று     
வலம்புரியாய்த் திக்கு                       வடக்கில் -      நலம்புரியப்     
பிள்ளையார்      பட்டியின்கண்       பேரருள்பெய் கற்பகத்தை    
உள்ளத்திற்         கொண்டார்க்(கு)  உயர்வு!
    
உயர்வருளும்       தெய்வம்;           உணர்ந்தோருக்(கு) எல்லாம்
மயர்வறுக்கும்     ஞான                  மதலை-                     கயமுகத்தே
ஓங்கும்                  துதிக்கையன்; உள்ளித்           துதிக்கையிலே
தீங்(கு)அகற்றும் தெய்வத்           திரு!

திருவும்நற்          செல்வமும்           சேர        அருள்வான்
வெருவும்            வினைபோக்கும் வேழம்-   உருவிற்
பெரியன்,          அணுகுதற்குப்      பிள்ளை, உணர
அரியன்             கணபதியா           வான்

வான                    இளம்பிறைபோல் வாய்த்த             எயிறுடையன்
பானை                நிகர்த்த                   வயிறுடையன்- ஞானத்
தமிழ்மூன்றும்   ஒளவைக்குத்         தந்த                     பெருமான்
இமிழ்திரைசூழ் ஞாலத்(து)              இறை 

இறையாய்      உணர்வோர்க்(கு) இறைவன்,    உளத்தே 
நிறைவை       அருளும்                  நிமலன் -       மறையான
பாரதத்தைக் கொம்பால்             வரைந்தான் வியாசர்சொல,
வாரணமாம்  மூலப்                       பரம் 

பரம்பொருள், சித்திபுத்தி பக்கத்திற்         கொண்டும்
கரம்ஐந்து,       நால்வாய்,  மதம்மூன்(று) - இரண்டுசெவி
துந்திக்கை      கொண்டும் துலங்கு            விநாயகனை
வந்திக்க வந்திக்க வாழ்வு!

வாழ்வு          புவியில்         வரமென்று                நன்குணர்ந்து
தாழ்வின்றி வாழத்           தலைப்படுவோம்! - வாழ்வினையே
தும்பிக்கை காக்கும்        துயரேதும்                 சூழாமல்
நம்பிக்கை கூப்புவோம் நாம்

நாமே                        நிலைத்தோங்கும்  'நான்'மறைந்து  போயொழியும் 
ஓமென்னும்             மந்திரத்தை              உச்சரிக்கப்  -    பார்முழுதும் 
ஒன்றிணையும்      கற்பகத்தை             ஓர்ந்துதொழப்  பிள்ளையார்
கன்றுவளர்             பட்டியதன்                கண்.

அரசி .பழனியப்பன் 

Lalitha & Suryanarayanan

unread,
Sep 2, 2025, 4:26:28 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
மிக மிக அருமை! பாராட்டுகள்.

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 2, 2025, 4:30:25 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
அற்புதமான அந்தாதி 

       — தில்லைவேந்தன்.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 5:14:45 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
மிக்க நன்றி 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNOQ9R8a3M2dE5g388cCMGYSSm2ubaJbu%2B7Lwd1sBp1ZBw%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 5:15:28 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணா 

On Tue, 2 Sept 2025, 2:00 pm NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:
அற்புதமான அந்தாதி 

       — தில்லைவேந்தன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 2, 2025, 8:18:17 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
மிக அருமையான அந்தாதி வெண்பாக்கள், திரு. பழனியப்பன்.

வாழ்க உங்கள் கவிவளம், சரளநடை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 2, 2025, at 04:26, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 8:24:57 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
தங்களின் மனம்திறந்த பாராட்டுக்கு எளியேனின் மனமார்ந்த நன்றி 🙏

Siva Siva

unread,
Sep 2, 2025, 9:10:20 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
இனிய அந்தாதி. வாழ்க!

1. It may be a good idea to number the songs when writing as a set.

2. Noticed that one or two lines did not have mOnai.
/ பாரதத்தைக் கொம்பால் வரைந்தான் வியாசர்சொல,
வாரணமாம்  மூலப் பரம்  /

V. Subramanian

On Tue, Sep 2, 2025 at 3:43 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
திருவாளர் வேட்டை அனந்த் அவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க, விநாயகர் 
சதுர்த்தி  அன்று எழுதிய  மூன்று அந்தாதி வெண்பாக்களைத் தொடர்ந்து எழுதிய
                                        வெண்பா அந்தாதிப் பதிகம் 

கண்ணுதலான்        பெற்ற                              கணநாதன்,       சக்தியெனும்    
பெண்ணுமையாள் பெற்றெடுத்த                பிள்ளையவன் - நண்ணுகின்ற    
அன்பர்க்(கு)              அருள்பொழியும்           ஐந்துகரத்(து)     ஆனைமுகன்     
முன்பெழுந்த            மூல                                  முதல்
     
...

இமயவரம்பன்

unread,
Sep 2, 2025, 9:23:33 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
செப்பலோசை சிறந்து தித்திக்கும் அந்தாதி!  

Siva Siva

unread,
Sep 2, 2025, 9:25:36 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
A set of vaNNam songs on Pillaiyarpatti Vinayaka - shared in SV in 2022:

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Sep 2, 2025, 9:51:41 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
சிறப்பான பதிகம்

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 9:54:05 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு சிவ சிவா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 9:54:52 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி இமய வரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 9:55:52 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
மிக்க நன்றி. எப்போதும் தங்கள் பின்னூட்டம் எனக்கு ஊட்டம் தரும் 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 10:02:26 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
சிறப்பு 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Sep 2, 2025, 11:09:22 AM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
அருமையான அந்தாதி!

சங்கரன் 

--
 Swaminathan Sankaran

Arasi Palaniappan

unread,
Sep 2, 2025, 11:21:28 AM (4 days ago) Sep 2
to சந்தவசந்தம்
Reply all
Reply to author
Forward
0 new messages