புரந்தரதாசர் துதிக்கும் தமிழகத் திருப்பதிகள்

57 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 4, 2021, 10:31:27 AM12/4/21
to Santhavasantham

புரந்தரதாசர் துதிக்கும் தமிழகத் திருப்பதிகள்
---------------------------------

சந்தவசந்தத்தில் கவிமாமாணி இலந்தையும், சிவசிவா சுப்பிரமணியன் அவர்களும், புரந்தரதாசர் தமிழ்நாட்டில் பழைய ஒரு திருப்பதி ஆகிய அழகர்மலைப் பெருமாளைப் போற்றும் ‘தேவர நாமா’வைத் தமிழில் தந்தனர். கன்னடப் பாட்டுக்கு அழகான தமிழாக்கங்கள் இவை. தேவரநாமாக்கள் கீர்த்தனைகள் உருவாதற்கு முன்பான வடிவம் என விளக்குவார் மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மாயூரம்). தல்லப்பாகை அன்னமாச்சார்யர், புரந்தரதாசர், கனகதாசர், ... பாடியவை தேவரநாமாக்கள்.

இன்றைய இந்திய அரசியலில் ஆட்சி செய்யும் ஹிந்து சித்தாந்தம் முளைக்கத் தொடங்கியது விஜயநகர சாம்ராஜ்ஜியம் ஸ்தாபனம் ஆனபோது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சிருங்கேரியில் மாதவ வித்யாரண்யர் ஹரிஹரர், புக்கர் என்னும் ராசாக்களுக்கு ராஜகுரு ஆக விளங்கினார். நான்கு சங்கர மடங்கள் நான்கு திசைகளிலும் பாரத தேசத்தில். விஜயநகர ஸ்தாபன மஹாராஜாக்கள் மதுரையில் ஏற்பட்ட தில்லி சுல்தான்கள் ஆட்சியை வீழ்த்தினர். சுல்தான் என்னும் சொல்லுக்கு இணையாக வடமொழியில் சுரதான என்ற சொல்லை உருவாக்கினர். தமிழ்ப் பத்திரிகைகளில் (விகடன், குமுதம் போன்றவற்றில் ...) ஹிந்து/இந்து என்ற சொல்லாட்சியே இல்லை. 19-ம் நூற்றாண்டில் என அடிக்கடி பிரச்சாரம் நடக்கும். இது தவறு, விஜயநகர ஆட்சியிலேயே, ஹிந்து சுரதான சாம்ராஜ்யம் எனக் கல்வெட்டுகளில் வந்துவிட்டது என முன்பே குறிப்பிட்டுள்ளேன். வடமொழியில் காவியமாக, கங்காதேவி என்னும் விஜயநகரப் பேரரசி ‘மதுராவிஜயம்’ என்ற காவியம் செய்துள்ளார். இது மதுரையைப் பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜயநகர் தன் இறையாண்மைக்கு கீழே கொண்டுவந்த நிகழ்வைக் கூறுவது. அத்துடன் தமிழ் மன்னர்களின் ஆட்சி - மூவேந்தர் ஆட்சி - தமிழ்நாட்டில் முடிந்துவிடுகிறது.
https://en.wikipedia.org/wiki/Gangadevi தெலுங்குநாட்டில் இருந்து பம்பி/ஹம்பி தலைநகருக்கு இளவரசியாக மணம்பூண்டவள். குமார கம்பண உடையாரின் தேவி.
மதுராவிஜயம் (அ) வீர கம்பராய சரிதம், https://en.wikipedia.org/wiki/Madhura_Vijayam
https://archive.org/details/madhuravijaya-of-gangadevi-thiruvenkatachari-mula-and-translation/mode/2up

In Architecture, when we look at Arches, the Keystone is very important. In USA history, Pennsylvania is called the Keystone state. For modern India, due to its historical and cultural significance, Tamil Nadu is the Keystone state of India.

மதுரையை விஜயநகர் மீட்ட நாளில் இருந்து, தக்காணத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய உறவுகள் மலர்ந்தன. மதுரையில் இருந்து மகாமண்டலேஸ்வரர் சபையில், கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற இயற்பெயர் கொண்ட புரந்தரதாசர் (1484 - 1565) பலமுறை தங்கினார். தமிழகம் முழுதும் ஸ்தல யாத்திரை செய்தவர். கொங்குநாட்டு நாமக்கல் பெருமாளுக்குத் தனியாக ஒரு பாடலே இயற்றினார்.  அழகர்மலை, அழககிரி ஆகி, வியவஹாரம் > விவகாரம், உதாஹரணம் > உதாரணம், ... போல, அழககிரி > அழகிரி எனக் கன்னட, தெலுங்கு பாஷைகளில் மாறுகிறது. தமிழின் சிறப்பு ழகரம் அங்கே இல்லாததால், அளகிரி என்று அழகர்சாமியை 3 பாடல்களில் துதிக்கிறார் புரந்தரர். பரிபாடல் காலத்திலேயே பெருமாள் இங்கே நிற்பதால், அழகர்மலையில் (அளகிரி) இருந்து புறப்பட்டு திருப்பதி மலைக்கு வந்து நின்றதாகவும் ஒருபாடலில் குறிப்பிட்டுப் பாடி உள்ளார். அழகர்மலையின் புராதனம் காட்டும் வாசகம் புரந்தரதாசர் வாக்கில் இருப்பது சிறப்பு. மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கள்ளழகர் அளகிரியில் இருந்து இறங்கி தங்கை மீனாட்சியைப் பார்ப்பதற்காக மதுரை வரும் திருவிழாவை ஆண்டுதோறும் கண்டு களிக்கின்றனர். புரந்தரதாசர் அளகிரி (அழகர்மலை) பாடும் 3 தேவர நாமாக்களையும் பார்ப்போம், கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் இவர். மதுரை பாண்டியர்கள், சோழர்கள் வளர்த்த இசை நுணுக்கங்களைக் கற்றுப் பாடல்கள் இயற்ற அவரது தமிணாட்டு விஜயங்கள் பெரிதும் உதவியுள்ளன.

‘க்ஷீராப்தி கன்னிகே’ - மகராஜபுரம்
https://www.youtube.com/watch?v=rpdYWv-Y4Ns

‘க்ஷீராப்தி கன்னிகே’ - சாகேதராமன்
https://www.youtube.com/watch?v=AnLcteIKTOU

‘க்ஷீராப்தி கன்னிகே’ - பத்மஜா
https://www.youtube.com/watch?v=29JPtswKKi0

பரதத்தில் ‘க்ஷீராப்தி கன்னிகே’ புரந்தரர்:
https://www.youtube.com/watch?v=E-io-M891nE

‘க்ஷீராப்தி கன்னிகே’ பாடலில் மகாலக்குமி யாருக்கு மணப்பெண் ஆகிறாள் எனக் கேட்கிறார் புரந்தரதாசர்.
இதில் வரும் பெருமாள் திருப்பதிகள் வரிக்கு ஒன்றாய் வருகின்றன. யாராகிலும் அத் திருப்பதிகளை
விளக்கி எழுதியுளரா என அறிய ஆவல். நான் அறிந்த வரையில் இல்லை. J. Music Academy (Madras)
போன்றவற்றைப் பார்க்கணும்.

http://translationsofsomesongsofcarnticmusic.blogspot.com/2012/10/ksheerabdhi-kannike.html

Ksheerabdhi  Kannike, Sri Mahalakshmi
By
Sage Purandara dasa

 Ragam :Ragamalika
Talam: aadi

Pallavi (Kurinji)
Ksheerabadhi  Kannike  Sri Mahalakshmi,
yaarige Vadhuvaaguve  Neenu

Charanam
1. Sharadhi Bandhana   Ramachandra Morrthigo,
Paramathma anantha  Padmanabhanigo,
Sarasijanaabha sri  Janaardana  moorthigo,
Ubhaya  Kaveri ranga pattaNadarasgo

2. Cheluva  Mooruthi Belura chennigarayanigo, (Yaman Kalyani)
GeLathi  hELu Sri   Udupi Sri Krishna rayanigo,
 ILeyoLu  Panduranga   vittala    Rayanigo,
Nalinaakshi hELamma Badari Narayananigo

3. Malayaja gandhee  bindu Madhava Rayanigo, (DArbari Kanada)i)
Sulabha devaru Purushottamanigo,
Phala   daaayaka nithya mangala daayakago,
Cheluve naachade hELu  Sri Venkateshanigo.

4. Vaasavaarchitha Kanchi Varadarajanigo, (Sindhu Bhairavi)
Aa Sri Mushnadali  aadi varaahanigo,
Sesha  shaayiyaada Shriman Narayananigo,
Saasira naamada deva  Alagireeshanigo

5. SharaNaagatha Rakshaka   SaarangapaNigo, (Manirangu)
VaragaLa neeDuva Srinivaasanigo,
Kuru kulaanthaka   Rajagopala  moorthigo,
Sthiravaagi Purandara  vittala   rayanigo.
(need to put this Kannada, Tamil and Roman (ISO 15919) scripts.)

இந்தத் தேவரநாமாவளியில், புரந்தரர் பாடும் திருப்பதிகள்:
(1) Sharadhi Bandhana   Ramachandra Morrthigo,
இது ராமேசுவரம். இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சேது பந்தனம் செய்த ராமச்சந்திரன்.

(2) Paramathma anantha  Padmanabhanigo,
திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப ஸ்வாமி

(3) Sarasijanaabha sri  Janaardana  moorthigo,
வற்கலை ஸ்ரீ ஜனார்த்தன ஸ்வாமி:
https://en.wikipedia.org/wiki/Janardanaswamy_Temple

(4) Ubhaya  Kaveri ranga pattaNadarasgo
தழைக்காட்டுப் பகுதியில் காவேரி பிறக்கிறது. அங்கே ஸ்ரீரங்கப்பட்டினம்.
https://en.wikipedia.org/wiki/Srirangapatna

(5) Cheluva  Mooruthi Belura chennigarayanigo,
 வேளூர் (பேளுர்) - பழவீடு (ஹளபீடு) அருகே செலுவக்கேசவராயன்

(6) GeLathi  hELu Sri   Udupi Sri Krishna rayanigo,
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன்

(7) ILeyoLu  Panduranga   vittala    Rayanigo,
பண்டரிபுரத்தில் உள்ள விட்டலராயர், பம்பை நதி பாயும் பம்பி (ஹம்பி) யிலும் விட்டலராயர் உண்டு.
https://www.karnataka.com/hampi/vittala-temple/ (this temple has been desecrated)

(8) Nalinaakshi hELamma Badari Narayananigo
 வதரி நாராயணப் பெருமாள்:
https://en.wikipedia.org/wiki/Badrinath_Temple

(9)  Malayaja gandhee vindu Madhava Rayanigo,
மலயமலையில் விந்துமாதவப் பெருமாள்:
https://yomaps.net/en/IN/karnataka/shree-bindu-madhava-temple-belur-linbLKcIv.html
மலைப்பிரதேசத்தில் உள்ள வனக்கோயில். அண்மையில் புதுக்கட்டடம் எழுப்பியுளர்.
கன்னட தேசம் ஆகையினாலே, தர்பாரி கன்னட/கானட ராகத்தில் பாடுகின்றனர்.
https://yomaps.net/en/IN/karnataka/shree-bindu-madhava-temple-belur-linbLKcIv.html

பழய பதிப்புகளிலே விந்துமாதவ எனப் புரந்தரர் பாடியமை கொடுக்கப்பட்டுள்ளது.
இதை இதுவரை அறியேன். ஆனால், விந்து என்ற தமிழ்ச்சொல் பிந்து என வடக்கே
மாறியுள்ளது என ஆய்வுக்கட்டுரைகளில் முன்னரே கொடுத்துள்ளேன்.
புரந்தரதாசர் தரும் சான்று அருமை. விந்துமதி/பிந்துமதி வெண்பா.
விந்து > இந்து (வேத இலக்கியத்தில்) விடங்கர் > இடங்கர் எனச் சங்க இலக்கியத்தில் வருவது போலே.

காசியிலே அழிவுற்ற விந்துமாதவப் பெருமாள் கோவில், தமிழ் நாட்டில் துதிப்பேடு (ஆம்பூர் அருகே)
பெரிய பழைய விந்துமாதவப் பெருமாள் கோவில் உள்ளது.

(10) Sulabha devaru Purushottamanigo,
திருநாங்கூர் ஸ்ரீ வண் புருஷோத்தமப் பெரு,மாள்
https://thirunangoorseventemples.com/thiru-van-purushotama-perumal-temple/

(11) Phala daaayaka nithya mangala daayakago,
திருவிடவெந்தை நித்தியகலியாணப் பெருமாள்
https://en.wikipedia.org/wiki/Thiruvidandai
https://temple.dinamalar.com/en/new_en.php?id=263

(12) Cheluve naachade hELu  Sri Venkateshanigo.
திருமலை வேங்கடேசன்

(13) Vaasavaarchitha Kanchi Varadarajanigo,
காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள்

(14) Aa Sri Mushnadali  aadi varaahanigo,
திருமுட்டம் பூவராகப் பெருமாள்

(15) Sesha  shaayiyaada Shriman Narayananigo,
சீரங்கத்தில் ஆதிசேடனில் துயில்கொள்ளும் ஸ்ரீமன் நாராயணன்

(16) Saasira naamada deva  Alagireeshanigo
ஸஹஸ்ரம் > ஸாசிரம் > ஆயிரம் (தமிழ்).
ஆயிரம் திருநாமங்கள் பெற்ற அளகிரி ஈசன் என்னும் அழகர்மலைச்சாமி.

(17) SharaNaagatha Rakshaka   SaarangapaNigo, (Manirangu)
குடந்தை சாரங்கபாணி

(18) VaragaLa neeDuva Srinivaasanigo,
நாச்சியார்கோவில் (திருநறையூர்) சீனிவாசப் பெருமாள்:

(19) Kuru kulaanthaka   Rajagopala  moorthigo,
பாரதப் போரில் பாண்டவர் கௌரவரை அழிக்க உதவின
மன்னார்குடி ராஜகோபால மூர்த்தி

(20) Sthiravaagi Purandara  vittala   rayanigo.
புரந்தரதாசர் என்றும் நிலையாய்த் தொழுகிற
ஹம்பியில் வாழும் விட்டலராய சுவாமி.

-------

Enjoy your weekend!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
அமெரிக்காவின் மதுரை, ஹூஸ்டனில் இருந்து.

N. Ganesan

unread,
Dec 5, 2021, 4:23:11 PM12/5/21
to Santhavasantham

புரந்தரதாசர் மராட்டி நாட்டிலே பிறந்தவர் என்பார்கள். மராட்டிய தேசத்தின் பல பகுதிகள் கன்னடத்தைக் கைவிட்டுவிட்டு மராத்திய மொழிக்கு மாறிவிட்டது எனப் பல மொழியியல் ஆய்வுகள் காட்டிவருகின்றன. ஈழத்தீவிலே, இது போல, தமிழ் மொழியைக் கைவிட்டு சிங்கள பாஷைக்கு மாறியதும் மொழியியல் நிபுணர்கள் ஆய்வுகளால் தெளிவாகிறது. புரந்தரதாசர் இன்றைய ஸ்டேட் எல்லைக்குள் பிறந்தார் எனவும் புது ஆராய்ச்சிகளில் முயற்சிகளும் காண்கிறோம்.

புரந்தரர் கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று 20-ம் நூற்றாண்டில் சென்னை சபாக்களிலே ஆரம்பம் ஆகியது. புரந்தரர் பெருமையை தமிழகத்தில் பரப்பியவர்களில் முக்கியமானவர் மெட்ராஸ் லலிதாங்கி, அவரது மகளார், எம். எல். வசந்தகுமாரி இருவரும் முன்னிலை இடம் வகிப்பவர்கள். அவரது மகள் ஸ்ரீவித்யா அருமையான சினிமாப் படங்களில் நடித்தார். புரந்தரர் 20 க்ஷேத்திரங்களைப் பாடிய பாடலுக்கு உயிரூட்டியவர் மகராஜபுரம் சந்தானம். ஆனால், பாடும் சொற்கள் சில பிழை என கன்னடர்கள் கூறக் கேட்டுள்ளேன். கன்னடிகர் பாடுவதில் சுத்தமான சாகித்தியம் இருக்கிறது. காணொளிகளைக் கேட்டு எழுதி ஒப்பிடலாம்.

புரந்தரதாசர் 20 தலங்களைப் பாடிய பாடல் பார்த்தோம். தனியாகவும், தமிழ்நாட்டுத் தலங்களைப் பாடியுள்ளார்: (1) நாமக்கல் விஷ்ணு (2) திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) ஆதி வராகர் (3) சிவராஜதானி எனப்படும் காவேரி தீரத்தில் கும்பகோணம் கும்பேசர் (4) மதுரை விஜயநகர் ஆட்சிக்கு உட்பட்டது, ஹிந்து சாம்ராஜ்யம் அமைக்க அஸ்திவாரம் ஆனது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் மதுரை என்ற குறிப்பு தமிழ்ச்சொல்லில் தந்து, 2000 ஆண்டுகளாக பிரபலமாக விளங்கும் அழகர்மலைப் பெருமாளைப் பாடும் ‘பாக்யத பாரம்மா’ என்னும் பாடல். வேறெங்கும் அளகிரி புரந்தரர் காலத்தில் இல்லை. எ-டு: சேலம் பெருமாள் புரந்தரதாசர் வாழ்ந்த அந்நாளில் வேறு தமிழ்ப் பெயருடன் விளங்கி அருள்பாலித்துக் கொண்டிருந்தார். 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதியில் கூட்டமே இருக்காதாம். எனவே, புரந்தரர் காலத்தில் அடர்ந்த வனத்தில், வேய்ங் கடம், செல்லுதற்கு அரியதாய் வேங்கடேசனின் திருமலை இருந்திருக்கிறது. புகழ்பெற்ற, மக்கள் கூட்டம் எப்போதும் சூழந்த அழகர்மலையில் இருந்து திருமலைக்கு வந்து நிற்கிற வேங்கடவா என்றும் துதித்துள்ளார் புரந்தரர். இந்த தேவர்நாமப் பாடல்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

மேலும், தமிழகக் கோவில்களைப் பாடும் புரந்தரர் தேவரநாமாக்கள் இருக்கலாம். தெரிந்தோர் உதவினால் நன்றி.

நா. கணேசன்

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 5, 2021, 9:06:43 PM12/5/21
to santhav...@googlegroups.com
நல்ல ஆராய்ச்சி திரு கணேசன்
Very interesting 
நன்றி

       — தில்லைவேந்தன்


N. Ganesan

unread,
Dec 5, 2021, 9:43:41 PM12/5/21
to Santhavasantham
ஜிஎன்பி, எம்எல்வி - என் பெற்றோர் திருமணத்தின்போது பாடியவர்கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hh6_X47Z%3D66VoXx3duR6D6AEPkhEKNPLAhWeWUi57r0gQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 6, 2021, 7:59:13 PM12/6/21
to Santhavasantham
புரந்தரதாசர் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் தமிழ்நாட்டுக் கோவில்களைத் தெரிசித்துள்ளார். பல தமிழ்நாட்டு சங்கீத முறைகளைக் கற்றிருக்க வேண்டும். மிகப்பெரிய கோவில்களைத் தனித்தனியான பாடல்களில் துதித்திருக்கிறார். அவற்றில் நான்கு பாடல்களைப் பார்ப்போம்: (1) மதுரை அழகர்மலை (3 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்) (2) நாமக்கல் நரசிம்மர் (3) ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் (4) கும்பகோணம் கும்பேசர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கொங்குநாடு வழியாக யாத்திரைகள் செய்துள்ளார் புரந்தரர். அங்கே, அதியமான்களால் நாமக்கல்லில் உருவாக்கிய நரசிம்மரைப் புகழ்ந்து ஒரு பாடல் முழுதும் இயற்றியுள்ளார். அதியேந்திர விஷ்ணுகிரகம் எனப்படுவது. சங்ககால வள்ளல்கள் அதியமான்கள், அவர்கள் குடும்பத்தார் பல்லவன் மகேந்திரவர்மன் காலத்தில் எழுப்பிய குகைக்கோவில். அதியர்கள் சங்க காலச் சேர மன்னர்கள் வஞ்சி மாநகரில் (கரூர்) ஆண்டபோது இருந்த நிலை மாறி, பல்லவ மன்னர்களுக்கு சிற்றரசர்கள் ஆகும் காலம் இது.
(1) Vidya Dehejia, Namakkal Caves, TNSDA
(2) Nr̥siṁha Cave Temple at Nāmakkal: Its Iconographical Significance, V.G. Rajan
East and West, Vol. 49, No. 1/4 (December 1999), pp. 189-194
http://www.cpreecenvis.nic.in/Database/NamakkalCaves_2928.aspx
https://prtraveller.blogspot.com/2010/06/namakkal-narasimha.html
http://www.geocities.ws/kavithagandhi/Namakkal/namakkalcaves.html
http://www.heritageonline.in/adiyamaan-cave-temples-at-namakkal/

நாமக்கல் நரசிம்மர் மீது புரந்தரதாசர் பாடல்:
------------------------------------

பாடலைக் கேட்க: https://youtu.be/bxvgbNTp0WA
https://youtu.be/2OMItqSPBi0
https://youtu.be/F1uKfpyXY7k (M. Balamuralikrishna sigs for 40 minutes reworking  this Purandaradasaru song.)

ஸிம்ஹரூபநாத ஶ்ரீ ஹரே ஹே நாமகிரீஶநே
ஒம்மநதிந்த நிம்மநு பஜிஸலு ஸம்மததிந்தலி கா-இவநெந்த ஹரே

தரளநு கரெய ஸ்தம்பவு பிரியெ தும்பா உக்ரவநு தோரிதநு கரளநு
பகெது கொரளொளகிட்டு தரளந ஸலஹித ஶ்ரீ நரஸிம்ஹந

பக்தரெல்ல கூடி பஹு தூர ஓதி பரம ஶாந்தவநு பேடிதரு கரெது
தம் ஸிரியநு தொடெயொளு குளிஸித பரம ஹருஷவநு பொண்டித ஶ்ரீ ஹரி

ஜய ஜய ஜயவெந்து ஹுவ்வநு தந்து ஹரி ஹரி ஹரியெந்து ஸுரரெல்ல ஸுரிஸெ
பய நிவாரண பாக்ய ஸ்வரூபநே பரம புருஷ ஶ்ரீ புரந்தர விட்டலநே

https://pedia.desibantu.com/simharoopanaada/
http://myalltimefavouritesongs.blogspot.com/2014/02/simharupa-nada.html
https://murpriya.blogspot.com/2011/12/simha-roopa-natha-shree-hari-song.html பொருள்
https://www.karnatik.com/c2446.shtml

namakkal-narasimha.jpg

N. Ganesan

unread,
Dec 8, 2021, 1:41:07 PM12/8/21
to Meenakshi Balganesh, Robert Zydenbos, Santhavasantham

Tamil Nadu Kshetrams sung by Purandaradasar
---------------------------------------------

Vanakkam/Namaskaram. I am studying the Saahityams sung by Sri. Purandaardasaru in Kannada. Early repertoire in the classical Carnatic music, and they are called Devaranama-s as Keerthana form was not invented during his times in the Cauvery delta. What are the songs on Kshetrams of Tamil Nadu by Purandarar?
(1) Ksheerabdi Kannike, Mahalakshmi: popularized by Maharajapuram.
This has 20 temples mentioned in each line of thaazisai/kaNNi.
https://groups.google.com/g/santhavasantham/c/RJ-VosxD1M0/m/alynXuDDBgAJ

(2) On Namakkal Narasimhar, an 8th century bas-relief sculpture in Atiyendra Vishnugruhan.  Atiyaman chieftains of Kongu Nadu who ruled until 12th century, parts of Kongunad and Southern Karnataka.
https://groups.google.com/g/santhavasantham/c/RJ-VosxD1M0/m/-ucGNAWABwAJ
Math genius, S. Ramanujan of Erode was born by Namagiri Thayar's grace, his mom firmly believed. Interestingly there is a horse shown in the cave for tying to the Yupasthabha for sacrifice. Pandyas like Peruvazuti issued Ashvamedha sacrifice coins in which Makara-ViTaGkar is shown with Tamil Brahmi letters. Same thing, Atiyaman chieftains did in Sangam era. Here are some Vishnu basrelief sculptures excavated in the Namakkal cave by Atiyaman chieftains (late 7th or early 8th century) https://veludharan.blogspot.com/2017/08/sri-narasimhaswamy-rock-cout-cave.html

There are 3 songs on Azhakarmalai (= aLagiri), 2 on Srimushnam, 1 on Kumbesar of Kumbakonam, ... Is there any other Purandaradasa song about temple/s in Tamil Nadu? Thanks for your help.

Any bibliography of books, articles, theses describing the Kshetras sung by Purandara is welcome. Something like Vadiraja's Theertha Prabandham:
https://archive.org/details/vadirajatheerthaprabandhaanuniquetravelguideof107holykshetras1997/

Thanks,
N. Ganesan
http://nganesan.blogspot.com


Reply all
Reply to author
Forward
0 new messages