Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email. | Know More > |
True!!!!!
--
பொம்மை என்ற வார இதழில் வந்த நாகேஷின்நகைச்சுவை பதில்:கே: நீங்கள் முருகனாகவும், கே ஆர் விஜயா வள்ளியாகவும்சாவித்திரி தெய்வானை யாகவும் நடித்தால்?...ப: மயில் செத்துப் போகும்!
==============================================நகைச்சுவைக் கலை==============================================செய்யுளாகவும் உரைநடையாகவும் இலக்கியத்திலும் இணையத்திலும் காணும்நகைச்சுவைப் பிரயோகங்களை இந்த இழையில் சேகரிப்போம்.
மன்னிக்க வேண்டும் ரசனையைக் கீழே தள்ளாதநகைச்சுவைகள்; எவரையும் புண்படுத்தாமல்சிரித்து மகிழச் செய்யும் நகைச்சுவைகள் மிகமிகக் குறைவே!ஓணாண்டிப் புலவர் என்பதன் பொருள் புலவரைஉயர்ந்தவராக்குமா? தாழ்த்துமா?அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
ஏசுநாதர் ஏன் வரவில்லை? பாரதிதாசன் |
தலை, காது, மூக்கு, கழுத்துக், கை, மார்பு, விரல். தாள், என்ற எட்டுறுப்பும் தங்கநகை, வெள்ளிநகை, ரத்தினமிழைத்தநகை, தையலர்கள் அணியாமலும், விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர வேண்டுமென்றே பாதிரி விடுத்த ஓரு சேதியால் விஷமென்று கோயிலை வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்! நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப்பே யன்றி நீள்இமைகள், உதடு, நாக்கு நிறைய நகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க நிலைக்கண்ணா டியும்உண்டென இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள் எல்லாரும் வந்துசேர்ந்தார்; ஏசுநாதர்மட்டும் அங்குவர வில்லையே, இனிய பாரததேசமே! |
--
--
நாரணன் - பழைய சோறு சிலேடைமுக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்படித்துக் கொண்டிருந்திருக்கும் போது, அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருப்பதைப் படித்தேன்.அதன் பொருள் மட்டும் கூறியிருக்கிறார். மூலப் பாடல் யாரிடம் இருக்கிறதோ தெரியாது.
இவர் கட்டுச்சோற்றை நாய் கவர்ந்த போது, இவர் கூறிய கட்டளைக்கலித்துறை.
சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கவ்வி நாரா யணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம் பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே
முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.ரமணி
On Saturday, January 24, 2015 at 7:36:37 PM UTC-8, ramaNi wrote:முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.
On Saturday, January 24, 2015 at 7:36:37 PM UTC-8, ramaNi wrote:முக்கூராரின் பழைய சாத வருணனை இங்குள்ளது. ஆயின், கவிதை பற்றிய குறிப்பு இல்லை.இங்கே பயன்பட்டுள்ளது,பகவானும் பழைய சாதமும்: சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு "நீராகாரம் என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். "பழையதும் பகவானும் ஒண்ணு தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை "நாராயணன் என்கிறோம்.நாளப்பன்/நாளணன் > நாரணன். நள்/நாள்- ‘கருமை, இருள்’ என்னும் தாதுவேர்.
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது.எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்துஅமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த'வெண்பா பாடுவதில் புலி' என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, 'வேம்புக்கு இங்கு இடமில்லை' என்றாராம்.'வேம்பு' என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும்,வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்துமன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு,'வேம்பு அரசோடுதான் இருக்கும்' என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னைமன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும்,வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும்இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.*****
எழுதியவர்: உ.வே.சாமிநாதய்யர்
தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்
சிலருக்குச் சிலவகையான ஆற்றல்கள் எளிதில் அமைந்து விடுகின்றன. அத்தகைய ஆற்றல்கள் வேறு சிலருக்கு மிக முயன்றும் சிறிதும் வரமாட்டா. செய்யுளியற்றும் ஆற்றலும் அவ்வகையானதே. சிலர் யாப்பிலக்கணம் முதலியவற்றை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தாலும், இனிய ஓசையுடைய செய்யுட்களைப் பிழையின்றி இயற்றுவதில் தடுமாறுகிறார்கள். பிறர் செய்யுட்களிலுள்ள பிழைகளை எடுத்துக்காட்டும் இயல்புடைய சிலர் பிழையற்ற சில பாடல்களையேனும் இயற்றும் ஆற்றலை அடைந்திலர். வேறு சிலரோ இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை ஆராயாவிடினும் மனத்தில் தோற்றிய கருத்துக்களை அழகுபெற அமைத்துச் செய்யுள் செய்துவிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தம்முடைய மனக்கருத்தைச் செய்யுளில் அமைத்து விரைவில் வெளியிடும் ஆற்றல் வாய்ந்த பல புலவர்கள் இருந்து புகழ் பெற்று விளங்கியதுண்டு. காளமேகத்தைப் போன்ற ஆசுகவிகள் பலர் இவ்வகையில் தலைசிறந்து விளங்கியவர் ஆவர். அவர்களுடைய செயல்களும், பலவகையான செய்யுட்களிற் பாடிய வரலாறுகளும் யாவராலும் விருப்பத்துடன் கேட்டு இன்புறற்குரியன. அத்தகைய தனிப்பாடல்களும் அவற்றைப் பற்றிய வரலாறுகளும் நாட்டில் அங்கங்கே கர்ணபரம்பரையாக வழங்கிவருதல் அறிஞர்கள் அறிந்ததே.
சற்றேறக்குறைய இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் வேம்பத்தூரில் இருந்து விளங்கிய சிலேடைப்புலி பிச்சுவையரென்னும் வித்துவானைப் பலர் அறிந்திருத்தல் கூடும். அவர் மிக்க புகழ் பெற்ற கவிராசபண்டிதருடைய பரம்பரையில் தோன்றியவர்; விரைவிற் செய்யுளியற்றும் வன்மையுடையவர்;
*இராமநாதபுர மன்னராக இருந்து விளங்கிய ஸ்ரீபாஸ்கரஸேதுபதியவர்கள் விருப்பத்தின்படி ஒரு மணிநேரத்தில் பன்னிரண்டு சிலேடைகளைப் பாடி அம்மன்னரால் வழங்கப் பட்ட ஐயாயிரம் ரூபாய் ஸம்மானத்தைப் பெற்றவர். அவருடைய குமாரர்களுள் மூத்தவர் மகாதேவபாரதி என்பவர்; அவரும் விரைவிற் செய்யுள் இயற்றுவார். இப்பொழுது மதுரையில் இவர் செளக்கியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய வரலாறு ஒன்று வருமாறு:-
காலஞ்சென்ற ஸ்ரீ பா. ராஜராஜேசுவர ஸேதுபதிமன்னரவர்கள் ஏறக்குறைய 22 வருஷங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் மிகவும் சிறப்பாக நவராத்திரிவிழாவை நடத்தினார்கள். அவர்களுடைய குலதெய்வமாகிய ஸ்ரீராஜராஜேசுவரிக்கு நித்திய நைமித்தியங்கள் அலங்காரங்கள் முதலியன மிக மேன்மையாக நடைபெற்றன. மன்னரவர்கள் விருப்பத்தின்படி இந்நாட்டின் பல பாகங்களிலிருந்த ஸம்ஸ்கிருத பண்டிதர்களும் தென்மொழிப்புலவர்களும் ஸங்கீத வித்துவான்களும் வந்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். நாள்தோறும் தமிழ்வித்துவான்கள் அம்பிகை விஷயமாகப்பல செய்யுட்களை இயற்றிக் கூறிச் செவிக்குணவை அளித்தார்கள். வடமொழி வித்துவான்கள் தேவிவிஷயமாகவுள்ள வடமொழி ஸ்தோத்திரங்களையும் வேறு சுலோகங்களையும் எடுத்துச் சொல்லிப்பிரசங்கம் செய்தார்கள். வாய்ப்பாட்டிலும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களிலும் வல்ல ஸங்கீத வித்துவான்கள் ஊக்கத்தோடு தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி யாவரையும் மகிழ்வித்து வந்தார்கள்.
அந்த விழாநாட்களிலெல்லாம் வித்துவான்களுடைய பேச்சுக்களையும் பாட்டுக்களையும் இனிய ஸங்கீதத்தையும் கேட்பதிலேயே மற்ற ஜனங்களுக்குப் பொழுதுபோயிற்று. மன்னரவர்களும் அவ்வித்துவான்களுக்கு ஏற்ற வசதிகளை அமைத்து ஆதரித்து வந்தனர்.
அப்போது ஒருநாள் பாஸ்கரஸேதுபதியவர்களின் மாப்பிள்ளையவர்களது மாளிகையில் பல வித்துவான்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் இருந்தேன். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அநுபவத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினர். அப்பொழுது காலை 9 மணியிருக்கும். இயல்பாகக் காற்று இல்லாமையால் வெப்பமாக இருந்தது. அம்மாளிகையில் பெரிய பங்காக்கள் இருந்ததைக் கண்ட நான், "பங்கா இழுப்பவன் இல்லையோ?" என்ரு கேட்டேன். உடனே அக்கூட்டத்திலிருந்த மகாதேவ பாரதியார் திடீரென்றெழுந்து அங்கிருந்த பங்காவின் கயிறுகட்டியிருந்த நிலைக்கு அப்புறம் விரைந்து சென்றார். நிலையின் மேலுள்ள துவாரத்தின் வழியாக வெளியில் விடப்பட்டிருந்த கயிறு முடியப் பட்டிருந்தது. சென்ற பாரதியார் எழும்பி அந்த முடிச்சை எட்டிப் பிடித்துக் கொண்டார். பங்காக்காற்றை அநுபவிக்க, அறிந்த அவர் அதனை இழுக்கும் முறையை அறியாமல், எப்படியாவது பங்காவை இழுத்து விரைவில் வெப்பத்தைப் போக்கவேண்டுமென்பதை எண்ணி அவசரமாக அந்தக் கயிற்று முடிச்சைக் கையில் பிடித்து இழுத்தார். அது கீழே வந்தது; பின்பு மேலே போயிற்று. அதைப் பிடித்துக்கொண்டிருந்த பாரதியார் அதைவிட்டுவிட்டால், மறுபடியும் பிடித்து இழுக்க நேரமாகுமென்றெண்ணி அது மேலே போகும்பொழுது அதைப் பிடித்துத் தொங்கிக் க்கொண்டே தாமும் மேலே எழும்பிப் போனார். நிலை உயரமானது; அவரோ மெல்லிய தேகத்தையுடையவர். இப்படிக் கீழே வருகையில் இழுத்தும் மேலே போகையில் உடன் மேலே சென்றும் தம்மையே மறந்து பங்காவை இழுத்துக்கொண்டிருந்த அவரது நிலைமையை யாவரும் கண்டு வியப்புற்றனர். உடனே பங்காக்காரன் வந்துவிட்டான். அவன் கயிற்றை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு வழக்கம்போல முடிச்சை அவிழ்த்துக் கயிற்றை நெடுகவிட்டு இழுக்க ஆரம்பித்தான். மகாதேவபாரதியார் அவனுடைய செயலைச் சிறிதுநேரம் கூர்ந்து கவனித்துவிட்டு எங்களை நோக்கிவந்தார்; "உயர்குலத் தோன்றலும் கவிஞருமாகிய நீர் இப்படிச் செய்யலாமா? உமக்கு முன்பு பழக்கம் இல்லையே!" என்று சொன்னேன். அவர் உற்சாகத்தோடும் உவகையோடும், "பங்கா இழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே" என்று பாட்டாக விடையளித்தார். அது ஒரு கட்டளைக்கலித்துறையின் ஈற்றடியாவதற்கு ஏற்றதாக இருத்தலை யறிந்து, "பாட்டைமுடித்துச் சொல்லவேண்டும்" என்றேன். உடனே அவர் சற்றும் தயங்காமல்,
"கொங்கார் பொழில்புடை சூழ்முகவாபுரிக்கொற்றவனாம்
மங்காத கீர்த்தி வளர்பாற் கரமுகில் மாப்பிளையின்
சிங்கார மாளிகையிற்புல வோர்க்குச் சிரத்தையுடன்
பங்கா விழுப்பதென் முன்னோர்கள் செய்திட்ட பாக்கியமே"
என்ற கட்டளைக்கலித்துறையைச் சொல்லித் தமது பரம்பரைப் பெருமையை விளக்கினார். அங்கிருந்த யாவரும் அவருடைய ஆற்றலையும் வித்துவான்களிடத்தில் அவருக்கிருந்த அன்பையும், வியந்து பாராட்டினார்கள். அன்று மாலை ஸ்ரீராஜராஜேசுவர ஸேதுபதியவர்கள் வீற்றிருந்த சபையில் இந்த நிகழ்ச்சியை நான் தெரிவித்தபோது அவர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். மகாதேவ பாரதியார் பங்கா இழுக்கும்பொழுது கீழே வருவதும் கயிறு மேலே செல்கையில் தாமும் மேலே செல்வதுமாகிய அந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிற்கின்றது.
முழு மூடன் ஒருவனை கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஒரு பெரும் வித்வானாக ஆக்கிய நிகழ்வு ஒன்று அவரின் வாழ்வில் நடந்துள்ளது. இதனைக் கண்டு சோழ மன்னன் பரவசமடைந்து இத்தகைய தர்மத்தை தங்களிடம்தான் கண்டோம் என்று கூறி மகிழ்ந்தான். அதுபற்றி இங்கு பார்ப்போம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த காலத்தில் ஒரு விறகு வெட்டியும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தனர்.
அக்காலத்தில் கவிஞர்கள் சோழ மன்னர் மீது கவிபாடிப் பரிசில்கள் பெறுவதை அந்த விறகு வெட்டியின் மனைவி பார்த்து “இவர்களெல்லாம் கஷ்டப்பட்டு எந்த வேலையும் செய்யாமல் பாட்டுப்பாடி பணம் சம்பாதித்து சுகமாக வாழ்கிறார்களே, நம் கணவன் மட்டும் காட்டுக்குள்ளே போய் காலில் கடும் முள் தைக்க கஷ்டப்பட்டு விறகு வெட்டி மாடாக உழைத்துக் கூட அரை வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே. இவ்வளவு காலமும் இது எனக்குத் தெரியாமல் போயிற்றே” என்று தனக்குள்ளேயே சிந்தித்து கவிபாடுவது இலகுவான காரியம் என்று நினைத்து கணவன் வந்ததும் அவரிடம் “நீங்கள் இனிமேல் காட்டுக்கு விறகு வெட்டப் போக வேண்டாம். அரசரிடம் போய் பாட்டுப்பாடுங்கள். நமக்கு பெருந் தொகைப்பணம் கிடைக்கும். கஷ்டப்படாமல் சந்தோஷமாக வாழலாம் என்று கூறினாள்.
அதைக்கேட்டு முழு மூடனான அந்த விறகு வெட்டி “எனக்குப் பாட்டுத் தெரியாது. இருந்தாலும் சீக்கிரமே கற்றுக்கொள்வேன். இப்பொழுதே போய் பாட்டு கற்றுக் கொண்டு வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டான்.
அவன் வீதியில் இறங்கிச் செல்லம் போது ஓரிடத்தில் சில பிள்ளைகள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு ‘மண்ணுண்ணி மாப்பிள்ளையே’ என்று சொல்லக் கேட்டு அதை மனதில் பாடம் செய்து கொண்டான். அங்கிருந்து தொடர்ந்து செல்லும் போது ஒரு காகம் ‘கா’ என்று கரைவதைக் கேட்டு ‘காவிறையே’ என்றும் ஒரு சோலையில் குயில் கூவுவதைக் கேட்டு ‘கூவிறையே’ என்றும் மனனம் செய்துகொண்டான். மேலும் தொடர்ந்து செல்கையில் ஒரு பிள்ளையார் கோவில் அருகில் பெருச்சாளியொன்று ஓடுவதைக் கண்டு அதைக் கல்லால் அடிக்கப் போய் “உங்கப்பன் கோவில் பெருச்சாளி’ என்று கூறி அதையும் பாடம் செய்து கொண்டான். பின்னர் திரும்பி வரும் போது அவனுடைய நண்பர் ஒருவர் கண்டு “எங்கே போய் வருகிறாய்?’ என்று கேட்க விறகுவெட்டி “பாட்டுக் கற்றுக்கொண்டு வரப் போனேன். நீயும் எனக்குக் கொஞ்சம் பாட்டு கற்பித்துவிட்டுப் போ’ என்று கூறினான். அதற்கு நண்பன் அலட்சியமாக ‘இதென்ன பெரிய வேலையா? கன்னா, பின்னா, மன்னா, தென்னா, என்று பாட வேண்டியதுதானே என்று கூறிவிட்டுப் போக இவன் அதையும் பாட்டென்று நினைத்து முன்பு மனனம் செய்ததோடு சேர்த்து மனனம் செய்து கொண்டான். பின்னர் ‘இவ்வளவும் போதும் என்று நினைத்து வீட்டுக்குப் போய் மனைவியிடம் தான் கற்ற பாடலைச் சொல்ல அவள் இவனை விட சிறிது புத்திசாலியாகையால் இதில் சோழ மன்னனின் பெயர் இல்லை. அது அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்ல ‘சோழங்கப் பெருமானே’ என்ற சொல்லையும் தான் ஏற்கனவே மனனம் செய்து வைத்திருந்த பாடலோடு சேர்த்துக் கொண்டான். பின்னர் சிறிதும் அச்சமின்றி அரச சபைக்குச் சென்றான். அங்கு கம்பரைக் கண்டு வணக்கம் தெரிவிக்க அவர் அவனை யார் என்று கேட்க அவன் ‘நான் அரசர் மீது பாட்டுப்பாட வந்திருக்கிறேன்’ என்று கூற கம்பர் இவன் விறகுவெட்டி என்னைப் பற்றி யாரோ சொல்லக் கேட்டு வந்திருக்கிறான். நம்பி வந்தவனைக் கைவிடலாமா? என்று நினைத்து அவனுக்கு அரசனைக் காட்டி ‘கும்பிடு’ என்ற கூறினார்.
பின்னர் கம்பர், அரசர் முதலானவர்களைப் பார்த்து ‘பெரியோர்கள் இப்படித்தான் நீறுபூத்த நெருப்பைப் போல் இருப்பார்கள். அவர்களை யாரால் ஆராய முடியும்? என்று கூறி சட்டென்று எழுந்து தான் இருந்த ஆசனத்தில் அவனை அமரச் செய்து உபசரித்தார். பின்னர் அவனிடம் ‘எங்கே நீ பாடிய பாடலைக் கூறு” என்றார். அவன் சிறிதும் அச்சமின்றி தைரியத்துடன் பாடலானான். அது இப்படி அமைந்தது.
“மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே, கூவிறையே,
உங்கப்பன் கோவிற் பெருச்சாளி,
கன்னா, பின்னா, மன்னா, தென்னா,
சோழங்கப் பெருமானே’
என்று பாட சபையோர் அவனைப் பார்த்துக் கேவலமாகச், சிரித்தார்கள்.
கம்பர் சபையிலிருந்த ஒட்டக் கூத்தர் முதலான வித்வான்களைப் பார்த்து,
“இது வெண்பா முதலிய பாக்களிலாவது, பாவினங்களிலாவது எதனோடு சம்பந்தப்பட்டது? இதன் பொருள் என்னவென்று ஆராய்ந்து சொல்வதல்லவே வித்வான்களின் சாமர்த்தியம். அதைவிட்டு நகைப்பதா?
பாடியவரைக் கேட்டால் நிமிடத்துக்குள் பொருள் சொல்லிவிடுவார். ஆனாலும் பாடியவரே பொருள் சொல்வது சம்பிரதாயம் அல்லவே. அதைப் பற்றி இவரைச் சொல்லச் சொல்வது நியாயமும் அல்லவே. அது மட்டுமல்லாமல் நாம் வித்வான்களாக இருந்துகொண்டு பிறரைப் பொருள் சொல்லக் கேட்டால் அதில் நமக்கு என்ன பெருமை இருக்கிறது? நம்மில் ஒருவர் பொருள் சொல்வதுதானே நடைமுறை என்றார்.
கம்பர் இப்படிக் கூறியதும் சபையிலிருந்த ஏனைய வித்வான்கள் “அவன் யாரோ பைத்தியக்காரன் வாயில் வந்தபடி எதையோ தாறுமாறாகக் குளறினால் அதைப் பாடலென்றும் அதற்குப் பொருள் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறாரே. அவனைவிட இவர் அல்லவா பைத்தியக்காரனாக இருக்கிறார். பொருள் சொல்லுங்கள் என்று சோதனை செய்வதுபோல் நம்மிடம் ஏன் கேட்க வேண்டும். சொல்லக் கூடியதாக இருந்தால் இவரே சொல்ல வேண்டியதுதானே என்று நினைத்து ‘தாங்களே சொல்லலாம்’ என்று கூறினார்கள். அதற்குக் கம்பர் ‘உங்களுக்குள் நானும் ஒருவனாகையால் நான் சொல்வது நீங்கள் சொல்வதுதான்’ என்று சொல்லி பொருள் கூறத் தொடங்கினார். இப்பாடல் இடையிடையே சில சீர் குறைந்தியல்வதனால் இது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் இதன் பொருள்.
மண்- பூமியை, உண்ணி- உண்டவனே
மா- இலக்குமியின், பிள்ளையே- புதல்வனே
கா- கற்பகத்திற்கு, இறையே தலைவனே
கூ- பூமிக்கு, இறையே, அரசனே
உங்கப்பன்- உங்கள் தந்தை
கோ- இராஜன், வில்- விற்போரில்
பெரிசு- பெரிதாகிய,
ஆளி- சிங்கம் போல்வாய்.
கன்னா- கன்னனே, பின்னா- தர்மனே,
மன்னா- நிலை பெற்றவனே
தென்னா- பாண்டியனை ஒத்தவனே
சோழங்கம்- சோழதேசமாகிய அங்கத்தையுடைய
பெருமானே- பெருமையுடையானே
என்று பொருள்படுகிறது.
அதாவது:-
மகாவிஷ்ணு பிரிதிவிபதி என்றபடி உலகாள்பவனாதலால், நீ விஷ்ணு அம்சம் பெற்றாய் என்பதாக மண்ணுண்ணி என்றும்,
குறைவற்ற செல்வமுடையாய் என்பதாக மிக்க செல்வமுடையவர்களை இலட்சுமி புத்திரனென்பது உலக வழக்கு என்பதால் மாப்பிள்ளையே என்றும்,
போகத்தால் சுரேந்திரனை, ஒப்பாய் என்பதாக காவிறையே என்றும்,
மக்களாய்ப் பிறந்தவர்களில் மிகச் சிறந்தோனாதலால் நரேந்திரனே என்பதாக கூவிறையே” என்றும்,
நீயேயன்றி உனது தந்தை முதலியோரும் அரசாளப் பெற்றவர்கள்தான் என்பதாக உங்களப்பன் கோ என்றும்
விற்போரில் சிங்கம் போல புறங்கொடாது பகைவரை வெல்வாய் என்பதாக
விற்பெருச்சாளி என்றும்,
பெருங்கொடை வள்ளலே என்பதாக
“கன்னா என்றும்,
பொறுமையில் கன்னனுக்குப் பின்னோனாகிய தருமனே என்பதாக பின்னா என்றும் நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாய் என்பதாக ‘மன்னா’ என்றும்,
தமிழ்ப்புலமையில் பாண்டியராஜனைப் போல்வாய் என்பதாக ‘தென்னா’ என்றும், மலை, கடல், நாடு தசாங்கத்தில் ஒன்றாகிய நாட்டில் பெரியோய் என்பதாக சோழங்கப் பெருமானே’ என்றும், கூறினார்.
கம்பர் இப்படி விளக்கமளித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
குலோத்துங்க சோழராஜன் விறகு வெட்டியின் பாடல் எப்படியிருந்தபோதிலும் கம்பர் அதற்கு இவ்வாறாக நுட்பித்து பொருள் சொல்,லியதால் அவனுக்காக இல்லாவிட்டாலும் கம்பருக்காகவாவது அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று எண்ணங்கொண்டார்.
பின்னர் அவனுக்கு சகல வெகுமதிகளும் கொடுத்தும் அவனை கெளரவித்தும் அனுப்பினார்.
அது கண்டு கம்பர் நாம் முழு மூடனை சபையில் மகாவித்துவானென்று சொல்லி அவன் குளறலையும் பாடலென்று பிரசங்கித்து அவனுக்கு வெகுமதிகள் கிடைக்கச் செய்துள்ளோம். அரசன் இதற்குப் பின்னரும் அவனது வாக்கைக் கேட்க வேண்டும் என்று என்றாவது ஒருநாள் அவனை வரவழைத்துவிட்டால் அச்சமயம் அவனைப்பற்றித் தெரிந்துவிடும். அதனால் நம் கெளரவத்துக்கும் குறைவாகும் என்று எண்ணி அவனை வரவழைத்து அன்று முதல் அவனுக்கு இலக்கண, இலக்கியத்துடன் கல்வி பயிற்றலானார். அதிசீக்கிரத்திலேயே அவனும் ஒரு மகா சமர்த்தனாக வித்வானாக உருவானான்.
அதன் பின்னர் அவனை ஒருநாள் சோழ மன்னனின் சபைக்கு வரவழைத்து அவன் வாயினாலேயே பாடவைத்தார். அவன் வாக்கைக் கேட்டு மன்னன் பூரித்துப் போனான். அதையடுத்துத்தான் சோழமன்னன் கம்பரிடம்” இந்த தர்மத்தை தங்களிடம்தான் கண்டோம்” என்று பரவசத்துடன் கூறினான்.
அதுமட்டுமன்றி கம்பருக்கு அதுநாள் வரை இருந்து வந்த கெளரவத்தைவிட மேலும் கெளரவமளித்துப் பாராட்டினான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://www.dinamani.com/specials/kannottam/article723100.ece
Byபுலவர் சு.சுப்புராமன்
First Published : 17 April 2011 02:42 AM IST
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில், தமிழ்ப் புலவர்கள் அமிழ்தினும் இனிய கவிதைகளை இயற்றியுள்ளனர். கவிச்சக்ரவர்த்தி கம்பர், குலோத்துங்க சோழனது அவைப் புலவராய் இருந்து பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றார். அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்த ஒருவன், தானும் அதுபோன்ற கவிதைகளை எழுதிப் பரிசுபெற விரும்பினான்.
தன் கருத்தை மனைவியிடம் தெரிவித்தான். பல நாள்களாக முயன்றும் கவிதை ஒன்றும் அவன் மனதில் உதயமாகவில்லை. மனைவியோ, ""வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்காமல் சோலை, ஆறு, கடல் என்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தால்தானே கவிதை வரும்'' எனக் கூறிக் கணவனை அனுப்பி வைத்தாள்.
கையில் சில ஏடுகளையும், எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டான். வீடு கட்டுவதற்காக தெருவில் மணலைக் குவித்திருந்தனர். அங்கு ஆணும் பெண்ணுமாகச் சிறுவர்கள் சிறு வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனையும் சிறுமியையும் சேர உட்காரவைத்து இலை, பூ, தழைகளாலான மாலைகளை இருவர்க்கும் அணிவித்து ஒரு திருமணத்தையே நடத்திவிட்டார்கள். சிரட்டையில் ஈரமணலைச் சேர்த்து குழிப்பணியாரங்களைச் செய்து மணமக்களுக்கு விருந்தாகப் படைத்தார்கள். மணமக்களாக இருந்த சிறுவர்களும் எடுத்து உண்பதுபோல பாவனை செய்தனர். கூடியிருந்த சிறுவர்கள் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே! மண்ணுண்ணி மாப்பிள்ளையே!' என்று கேலிக்குரல் எழுப்பினர்.
கவிதை எழுதச் சென்றவனுக்கு இது காதில் விழுந்தது. "ஆகா! அருமையான வரிகளாக இருக்கிறதே!' என்று அதையே கவிதைக்கு முதல் வரியாக எழுதிக் கொண்டான். தொடர்ந்து சிந்தித்த வண்ணம் ஊரை அடுத்துள்ள சோலையை அடைந்து, அங்கிருந்த பழைய கோயிலருகே அமர்ந்தான்.
சோலையில் காகங்கள் கரைந்தன; குயில்கள் கூவின. இதனைக் கவிதையின் இரண்டாவது அடியாக "கா இறையே, கூ இறையே' என்று சேர்த்தான். அந்நேரத்தில், கோயிலருகே ஒரு பெருச்சாளி ஓடியதைக் கண்டான். உடனே, "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்றான். அதையும் கவிதையில் மூன்றாம் வரியாக எழுதிக்கொண்டான். அதன்பின் வெகுநேரம் சிந்தித்தும் ஒன்றுமே தோன்றவில்லை. வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் ஒருவன் எதிரே வந்தான். அவனை நிறுத்தித் தன் கவிதையை வாசித்துக் காட்டி, ""எப்படி என் கவிதை?'' என்று கேட்டான்.
""என்ன கவிதை எழுதியிருக்கிறாய்? கன்னா பின்னா மன்னா தென்னா என்று'' என அவன் பதில் சொல்லிப்போனான்.
"ஆகா! இதுவும் நன்றாக இருக்கிறதே' என்று அதனையும் நான்காம் அடியாக இணைத்தான். வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் கவிதையைப் படித்துக் காட்டினான். கேட்டவள் முகத்தில் மலர்ச்சி இல்லை. ""இவ்வளவு எழுதியும் சோழ மன்னனைப் பற்றி ஒரு வரிகூட இல்லையே'' என்று சலித்துக்கொண்டாள். இருவரும் வெகுநேரம் யோசனை செய்து "சோழங்கப் பெருமாளே' என்று இறுதி அடியாகச் சேர்த்தார்கள்.
புதிய கவிஞன், கவிதை எழுதிய ஓலையைக் கையில் ஏந்தி ஏறுநடை போட்டு அரண்மனையை நோக்கி விரைந்தான். பரிசுடன் திரும்புமாறு மனைவி அனுப்பி வைத்தாள்.
புதிய கவிஞனின் வருகையை வாயில் காவலன் அரசனுக்குத் தெரிவிக்க அழைப்பும் வந்தது. அவையில் கம்பர் முதலான புலவர் பலர் இருந்தனர். புதிய கவிஞரை வரவேற்ற அரசன், கவிதையை வாசிக்குமாறு கூறினான். கவிதையைக் கேட்டதும் சபையினர் சிரித்தனர். கம்பர் மட்டும் அமைதியாக இருந்தார்.
கம்பரை நோக்கிய மன்னன், ""கம்பரே! தங்களுக்கு இந்தப் பாடல் புரிகிறதா?'' என்று கேட்டான்.
புதிதாகக் கவிதை எழுதியவரின் முயற்சியைப் பாராட்ட எண்ணிய கம்பர், அக்கவிதைக்குச் சிறப்பான பொருளையும் விளக்கினார்.
கண்ணன், மண்ணை உண்டபோது அசோதை (யசோதை) வாயைத் திறந்து காட்டுமாறு கேட்க, "உலகமே கண்ணனது வாயில் தெரிந்தது' என்பது புராணக்கதை. "அந்தக் கண்ணனாகிய திருமாலைப்போல மக்களைக் காப்பவன் அரசன்' என்ற பொருளை முதல்வரி காட்டுகிறது.
"கா இறையே' என்பது சோலைகளுக்குத் தலைவன்; "கூ இறையே' என்பது நிலவுலகுக்குத் தலைவன் என்று பொருள்படும். "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்றால், "உங்கள் தந்தை இந்த அரண்மனையில் இருந்து ஆண்ட பெரிய சிங்கம் போன்றவர். நீயும் சிங்கக்குட்டி போன்றவர். "கன்னா! பின்னா! மன்னா! தென்னா!' என்பவை கொடையில் கர்ணனே! அவனையடுத்த தர்மனே! மன்னவனே! தென்னவனே! சோழநாட்டுக்குத் தலைவனே! என்று புகழ்ந்து பாடியுள்ளார். இக்கவிதை மூலம் மன்னன் மக்களைக் காக்கும் திறனையும், நாட்டு வளத்தையும், வீர மரபில் தோன்றிய மாவீரன் என்பதையும், கொடையில் சிறந்தவன் என்பதையும் இப்புலவர் தெளிவாக்குகிறார்'' என்று கம்பர் எடுத்துரைத்தார்.
கம்பர் கூறிய பொருளைக் கேட்டவுடன் மன்னன் மகிழ்ந்து, அப்புதிய கவிஞனுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினான். பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியவில்லை. கம்பரின் பெருமையை விளக்க இப்படியொரு கவிதை தனிப்பாடலாக நமக்குக் கிடைத்துள்ளது. பாடல் இதுதான்.
""மண்ணுண்ணி மாப்பிள்ளையே
மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
கா விறையே கூ விறையே!
உங்கப்பன் கோயில் பெருச்சாளி,
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமாளே''
(தனிப்பாடல்)
Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email. | Know More > |
இன்றைய இலக்கிய வழக்கில் ஒரு நகைச்சுவைக் கதை.புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதைசொ.ஞானசம்பந்தன்
திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் ஆறாம் பட்டம் மகா சன்னிதானமாக இருந்தவர் திருஞான சம்பந்த தேசிக சுவாமிகள். அவருடைய திருவருளையும் குருவருளையும் பெற, சிறு வயதிலேயே அங்கு வந்து சேர்ந்தார் ஒர் அன்பர். அவர், திருமடத்தில் உள்ள அடியார்களுக்குத் தொண்டு செய்வதையே பெரும் புண்ணியமாகக் கருதி வந்தார். அவரது பிறப்பு, தாய் - தந்தை, ஊர் முதலான விவரங்களை அறியமுடியவில்லைதி ஆதீனத்தில் உள்ள அடியார்கள் இடும் பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வந்தார் அவர். அந்த ஆதினத்தில் இருந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவரிடம் இவர் இலக்கண - இலக்கிய நூல்களையும் சித்தாந்தங்களை சித்தாந்தங்களைம் கற்றுத் தேர்ந்தார்.
இவரது பக்தி, கல்வியறிவு, ஒழுக்கம், தொண்டு மனப்பான்மை ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தார் மகா சன்னிதானம். அவரிடம் அந்த அன்பரும் ஞானோபதேசம் பெற்று நிஷ்டை புரிந்து ஒழுகினார்.தம்முடைய ஞானாசார்யரிடம் இணையற்ற அன்பும் பக்தியும் பூண்டதால் அந்த அன்பரின் திருநாமம் சம்பந்த சரணாலயர்என்றாகியது. புலமை, ஒழுக்கம், ஞானம், தவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சம்பந்த சரணாலயரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மைசூர் முதலிய பிரதேசங்களுக்கும் பரவியது. பல இடங்களில் இருந்தும் தருமபுரம் மகா சன்னிதானத்தைத் தரிசிக்க வருவோர் அனைவரும் சம்பந்ந சரணாலயரின் பெருமையையும் உணர்ந்து, அவரை பாராட்டிச் சென்றார். அப்படிச் சென்று வந்த ஒருவர் வாயிலாக சம்பந்த சரணாலயரை உடனே தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார் மைசூர் மன்னராக இருந்த பெட்ட தசாமராலு உடையார். தமிழ் நூல்களில் ஆர்வமும் அறிவும் பெற்றிருந்த இவர், தமது விருப்பத்தை சுவாமிகளுக்குத் தக்கார் வாயிலாக தெரிவித்தார்.
மைசூர் மன்னரின் விருப்பத்தை அறிந்த சம்பந்த சரணாலயர் அவரைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தார். தமது ஞானாசார்யரிடம் விடைபெற்று மைசூர் வந்தார். மன்னர் பெட்ட தசாமராலு உடையாரைச் சந்தித்தார். இருவரும் நிறைய விஷயங்கøளிப் பகிர்ந்து கொண்டார்கள். சுவாமிகளின் துறவு மற்றும் ஒழுக்கத்தில் மன்னரின் உள்ளம் மிகவும் ஈடுபாடு கொண்டது. எனினும் அவருடைய கரிய திருமேனியைப் பார்த்த மன்னர், அண்டங்காக்கை போல் உள்ளீரே ... என்று வேடிக்கையாகக் கூறினார். உடனே சம்பந்த சரணாலயர் புன்னகையுடன், தாங்களே அண்டங்காக்கைக்குப் பிறந்தவர்தானே...! எனச் சாதுர்யமாகக் கூறினார்.
சம்பந்த சரணாலாயரிடம் இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத மன்னர் சற்று திகைத்துத்தான் போனார். அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சம்பந்த சரணாலயர், அண்டம் என்றால் உலகம்காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள். அதனால் தான் அப்படிச் சொன்னேன்! என்று விளக்கம் தர... அவரின் சொல்நயத்தையும் பொருள் நயத்தையும் உணர்ந்து மகிழ்ந்தார் மன்னர்.
சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் , அவரை தெய்வமாகப் போற்றினார். அவரைச் சிலகாலம் தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். மன்னரின் விருப்பப்படி சம்பந்த சரணாலயரும் அங்கே தங்கினார். அவ்வாறு இருந்த காலத்தில், தமக்கென்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தினமும் பிச்சை எடுத்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவரது வைராக்கியம் மன்னருக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
அங்கே ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்தனர். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்குமுன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டபோது அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்றெண்ணினேன்; 'திருவாவடுதுறை
மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமா? எதற்காக வந்தீர்?' என்று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரை மணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை.
நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்; "நான் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்து வருகிறேன். தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கியிருக்கிறேன். இப்பொழுது பதிப்பிப்பதற்காகப் பத்துப்பாட்டு என்னும் சங்க நூலொன்றை ஸித்தம் செய்துகொண்டிருக்கிறேன். அதில் இடையிலே ஒரு பாகம் சிதைவாக இருக்கிறது. பல இடங்களில் தேடித் தொகுத்த சுவடிகளில் அந்தப் பாகம் காணப்படவில்லை. இந்த ஆதீனத்தின் பெருமையை நான் நன்றாக உணர்ந்தவன். இந்த ஆதீன வித்துவானாக இருந்த சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கத்தைப் படித்து இன்புற்றிருக்கிறேன். கவிதா சார்வபௌமராகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகளுடைய ஆசிரியர் இந்த மடத்தில் இருந்த வெள்ளியம்பலவாண முனிவரென்பரே. இன்னும் பல வித்துவான்கள் இந்த மடத்தின் ஆதரவு பெற்றுச் சிறந்த நிலையில் இருந்தார்கள்; பல நூல்களை இயற்றியிருக்கின்றார்கள்; ஆதலால் இங்கே பழங்காலந் தொடங்கிப் பல அருமையான ஏட்டுச் சுவடிகள் இருக்கும். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற அவா எனக்கு நெடுநாட்களாக இருந்தது. இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த இடத்திற்கு வந்தால் சிதைந்த பாகம் கிடைக்குமென்று எண்ணி வந்தேன். ஸந்நிதானம் கட்டளையிட்டால் நான் வந்த காரியத்தைக் கவனித்துக்கொண்டு செல்வேன்.
மடத்துக் காரியஸ்தர்கள் சிலரும் உடன் இருந்தால் நான் விரைவில் ஏட்டுச் சுவடிகளைப் பார்க்க அனுகூலமாக இருக்கும். இந்த உபகாரத்தினால் தமிழுக்கும் பெரிய சிறப்பு ஏற்படும். ஸந்நிதானத்தின் நன்றியை என்றும் மறவாமல் இருப்பேன்" என்று சொன்னேன்.
இவ்வளவையும் கேட்ட பிறகு அவர் தலை நிமிர்ந்தார். 'என்ன சொல்லுவாரோ?' என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர் போலக் காணப்பட்டார். பிறகு, "நாளை வரலாமே" என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. 'பிழைத்தேன்' என்று நான் எண்ணிக்கொண்டேன்; 'இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததே' என்று மகிழ்ந்தேன். "உத்தரவுப்படியே செய்கிறேன்" என்று சொல்லி மறுநாள் வருவதாக விடைபெற்றுக்கொண்டு பொன்னுசாமி செட்டியாருடன் மாயூரம் சென்றேன். தருமபுரம் மாயூரத்திற்கு அருகில் தான் இருக்கிறது.
மாயூரத்தில் அக்காலத்தில் சிறந்த தமிழ் வித்துவானும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கரும் முன்ஸீப் வேலையில் இருந்து உபகாரச் சம்பளம் பெற்றவருமாகிய வேதநாயகம் பிள்ளை இருந்தார். அவர் வீட்டிற்குப் போனேன். அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் மெலிந்திருந்தார். அவரது உடல்நிலை கண்டு வருந்தினேன். அவர், "நான் இப்பொழுது வியாதியோடு சண்டை போடுகிறேன்; என்னோடு அது சண்டை போடுகிறது. யார் ஜயிப்பார்களோ தெரியவில்லை" என்று சொன்னார். வியாதியே ஜயித்ததனால் அதன் பின் சில மாதங்களில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
!10. துடைப்பம்துடைப்பம் எடுக்காதே, தூயதுஎன் அன்பு,உடை,உடல்மேல் காமமில்லை, உண்மை! அடைமழைபோல்உள்பொங்கும் நேசத்தால் உன்முன்னே நான்வந்தேன்கள்ளமில்லாக் காதலிது காண்***என். சொக்கன் …24 03 2014*****
சொக்கனின் வெண்பாக்கள் அருமை!( ஒரு தகவல்: இவர் ” தினமொரு கவிதை” என்ற ஒரு குழு நடத்தி வந்தார்...2010 வரை என்று நினைவு. அதில்தான் இலந்தை “ விருத்தம் எழுத வருத்தம் எதற்கு “ என்ற தொடரை எழுதினார். )
(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)எச்சகமும் புகழ்படைத்த தொன்னூற்று மலைமருதப்...பேந்த்ரன் போற்றும்நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய...லாடு லட்டுவச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக...வருந்தும் வேளைஇச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும்...இயல்பு தானோ.
[இவ்வரலாறு பிச்சுவையரவர்களால் அறிந்தது - உவேசா அவர்கள்]
(முற்றும்)வணக்கம். சுப்பையரவர்கள் செய்த விருத்தத்தின் ஈற்றடியை வைத்து, லாடு-லட்டு சம்பவத்தையொட்டி நானும் ஒரு செய்யுள் முடித்திருக்கின்றேன்.குற்றங்கள், கருத்துகள் தெரிவிக்குமாறு நேயர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.********************குச்சியவர் கைபிடித்தா மேய்ப்பவர்தம் உச்சிமிசைக்...குடையாய்க் குன்றேந்(து)அச்சிறுவற்(கு) இட்டவுயர் உண்டியடக்(கு) இம்மூட்டை...அடியேன் செய்தஎச்சிலென நன்கறிந்தும் எஞ்சியதும் இனியுனக்கே...என்னா(து) இன்னும்இச்சுமையைப் பிச்சுவையா என்றலையில் ஏற்றுவதும்...இயல்பு தானோ. - வெண்பாவிரும்பி, மே-11-2008உச்சியிலே சுமைதூக்கி ஓச்சுகின்ற வெயிலதனில் உளையும் போதுமெச்சவரும் வாசனையா வெறும்வயிற்றின் பசிதீர்க்கும், வேண்டிக் கொஞ்சம்பச்சணத்தை நான் தின்றால், பாட்டுக்குள் சுமையேற்றும் பழக்கத்தாலே
இச்சுமையைப் பிச்சுவையர் என்தலையில் ஏற்றுவதும் இயல்பு தானோ?
கச்சிதமாய் ஊற்றுமலைக் காரரிங்கு தான்கொடுத்த லாடுலட்டென்உச்சியினைத் தானழுத்தி உறுபசியை மேல்தூண்டை ஒருவாய் போட்டால்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆனால் பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள் வீரப் பலகாரங்கள்.இவைகளை வாயில் போட்டதும் “நொறுக்கு நொறுக்கு” என்றும் “கடக்கு முடக்கு”என்றும் பல்லிற்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவைவீரப் பலகாரங்கள்தனே?” என்றார்.
--
பிப்ரவரி 15, 2015 at 12:48 முப
அது மட்டுமா? பாரதியார் அதோடு விடவில்லை.கர்ஜித்தார். என்னவென்று தெரியுமா? “என்னங்காணும், மனிதனை மனிதன் வணங்குவது நமக்கு ஏற்பில்லை. பஜ்ஜி, சொஜ்ஜி என்று ’ஜி’ போட்டு மரியாதையை தொனிக்க வைக்கும் பலகாரம் நாம் வேண்டோம். எம் கவிதைகளிலே யாம் ’டா’ போட்டு எழுதும் அதிகாரத்தொனியில், பக்கோடா, புரோட்டா எனும் பலகாரந்தான் ஏற்பு! ஓம் பராசக்தி!”எனக்கூறி எழும்பிக்குதித்தாராம்!
முன்னேயிணைத்தேன் வேற்றுமைஉருபினை. மூச்சை முட்ட நாறியதே!
பின்புறம் விகுதியாய் இட்டால் ’கெட்ட’ அசிங்கச்சொல்தான் நீள்கிறதே
இத்தகைச்சொற் பெயர்கொண்டோன் யாரென இசைத்திடுவாய் விமரிசையுடனே!