சவடால் என்றால் என்ன?

98 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 5, 2014, 6:13:46 AM4/5/14
to mintamil, Nagarajan Vadivel
வணக்கம்.

சவடால் என்றால் என்ன?

Inline images 1

சவடால் = டாம்பீகம் என்று உள்ளதே!

அன்பன்
கி.காளைராசன்

Geetha Sambasivam

unread,
Apr 5, 2014, 7:50:16 AM4/5/14
to மின்தமிழ்
பொதுவாக இஷ்டத்துக்கு அடிச்சு விடறவங்களை சவுடால்னு சொல்வாங்க.  உண்மையான பொருளைப் பேராசிரியர் தான் வந்து சொல்லணும். ஜில்ஜில் ரமாமணியும் அவரே, சவுடால் வைத்தியும் அவரே, சிக்கலும் அவரே, மோகனாங்கியும் அவரே. :))))))

N. Ganesan

unread,
Apr 5, 2014, 8:34:49 AM4/5/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Saturday, April 5, 2014 3:13:46 AM UTC-7, kalai wrote:
வணக்கம்.

நல்ல புஸ்தகமாகத் தெரிகிறது.
நூலின் பெயர் என்ன? தட்டச்சத் தகுந்தது.

அன்புடன்,
நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 5, 2014, 11:47:35 PM4/5/14
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.

On 5 April 2014 18:04, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நல்ல புஸ்தகமாகத் தெரிகிறது.
நூலின் பெயர் என்ன? தட்டச்சத் தகுந்தது.

TAMILNADU DISTRICT GAZETTEERS
RAMANATHAPURAM 
1972
Inline images 1

Innamburan S.Soundararajan

unread,
Apr 5, 2014, 11:52:07 PM4/5/14
to vall...@googlegroups.com, mintamil
மோகனாங்கியும் அவரே. :))))))
ஆமேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Apr 6, 2014, 3:17:38 PM4/6/14
to mintamil, thamizayam, தமிழ் மன்றம், வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org, Raji M
அன்புள்ள மடலாடருக்கு 

சவுடல் என்றால் டாம்பீகம் என்பதுதான் பொருளாக வேண்டும் என நினைக்கின்றேன் 
ஏனெனில் மயிலை கபாலீசுவரர கோயில் திருவிழாவில் 5ம்  நாள் காலை  வரும் சப்பரத்திற்கு 
சவுடல் விமானம் என்பது பெயர் 

இதனில் நான்கு கால்களில் எதோ ஒரு பூ அச்ச டடித் த துணியைத்தான் விதானமாகத் கட்டியிருப்பார்கள் 

அதாவது எளியமுறையில் ஓர்  சிறப்பு செய்ய  தலைக்கு மேலே குடை பிடிப்பதுபோல் ஓர் துணியினால் 
அமைந்த விதானமாக தாங்கிச் செல்லப்படுகின்றது 

திரைப்படத்தில் ஓர் நடிகர் (வடிவேலு ) கிராமத் தெருவில் நடந்து வருவர் அவருக்குத் துணை யென வாரும் 
நபர் தலைவருக்கு குடைபிடித்து வரும் படி செய்திருப்பார் இங்கு ஓர் டாம்பீகமே காட்டப்படும் பொருள் 

அக்காலத்து மன்னர்கள் தன தலைக்கு மேல் குடை பிடித்து வர செல்வார்கள் அனால் அந்த நாட்டில் 
வேறு எவரும் தம் தலைக்கு மேல் குடை பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்
இக்காலத்தில் இதற்கு இணையாக  காரில் கொண்டை சிவப்பு விளக்கு என ஒன்று 
வைத்துக்கொள்ள அரசு அதிகாரிகள் தவிர மற்ற எவரும் அனுமதிக்ல்கப்படாதது போல் 

மகாரா ஷ்டி ரா வில் கிராமத்தில் மிக எளிய முறையில் ஒர்  திருமணம் நடைபெற்றா ல் மணமகனை உலா வாக த 
தெருவினில் ஊர்வலம் அழைத்துச் செல்லும்போது ஒர் துணியைத்தான்  குடைபோல் ஒர்  குச்சியில் தானங் கிப்ப்டித்து
அழைத்துச் செல்கின்றனர் இங்கு ஒர் சிறப்பு செய்ய குடை பிடிக்கப்படுகின்றது 

ஆக
 தலைக்குமேல் குடை பிடிப்பது சில நே ரங்ககளில் தகுதி இல்லாதவரும் போலியாக சிறப்பிபினை உள்ளவராகக்
காட்டப்படுப்டும் பொது சவுடால் (டாம்பீகம்) எனப்படுகின்றது இஃது சிறிது வேறு பாடடைந்த நிலை எனலாம் 

அன்புடன் 

நூ த லோ சு 

2014-04-06 13:11 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

சவுடால்னா என்னான்னு கேக்குறாரு ஒருத்தரு.

சவுடால்னா என்னான்னு சொல்லத் தெரியாதுங்க எனக்கு.  ஆனா சவுடால் அடிக்கிற பேர்வழி ஒருத்தரெத் தெரியுங்க எனக்கு.  இங்கெ பாருங்க அவுரெ.

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு.  அவுரெ இன்ஃப்ளூயென்சா பாலிடிஸியானாங்கெற வியாதி தாக்கீடீச்சீடுன்னு சொல்லுவாங்க.  அவரெ சுளுவா நீங்க அடையாளம் கண்டு புடிச்சுக்கலாங்க.

அவரு பேச்சே இந்த மாதிரி தாங்க இருக்கும்.

“சாதிச் சான்றிதழ் தானே சார் வோணூம்.  தாசில்தாரு கிட்டேந்து வாங்கித் தரணுமா இல்லே எம்.எல்.ஏ.வா. எம்.பி. யா?  யாரு கிட்டேந்து சார் வோணும்.  மூணு பேருமே எனக்கு ரொம்ப க்ளோசு சார்.”

“ரேஷன் கார்டுதானே சார் வோணும் உங்களுக்கு?  எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பரு இருக்காரு ரேஷன் ஆபீசுலெ..  அவரு கிட்டெ சொன்னா போதும் சார்.  ஒங்க வீட்டெத் தேடி வரும் சார் ரேஷன் கார்டு.  என்ன ஒண்ணு கொஞ்சம் சில்லெறெயெ எறியணும் சார்.” 

“மெடிகல் சீட்டுதானே வோணும் ஒங்க பொண்ணுக்கு?  பிச்சாத்து சமாசாரம் சார் அது.  எங்கிட்ட ஆளுங்க இருக்காங்க சார் அதுக்கு.  என்ன ஒண்ணு கொஞ்சம் காசு அதிகமா செலவாகும் அதுக்கு,” என்பார்கள் அவர்கள்.

ஒருக்கா சவுடால்னா இதுதானோ?

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

N. Ganesan

unread,
Apr 6, 2014, 6:19:08 PM4/6/14
to mint...@googlegroups.com, mintamil, வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org, Raji M

On Sunday, April 6, 2014 12:17:38 PM UTC-7, selvi...@gmail.com wrote:
அன்புள்ள மடலாடருக்கு 

சவுடல் என்றால் டாம்பீகம் என்பதுதான் பொருளாக வேண்டும் என நினைக்கின்றேன் 
ஏனெனில் மயிலை கபாலீசுவரர கோயில் திருவிழாவில் 5ம்  நாள் காலை  வரும் சப்பரத்திற்கு 
சவுடல் விமானம் என்பது பெயர் 

இதனில் நான்கு கால்களில் எதோ ஒரு பூ அச்ச டடித் த துணியைத்தான் விதானமாகத் கட்டியிருப்பார்கள் 

அதாவது எளியமுறையில் ஓர்  சிறப்பு செய்ய  தலைக்கு மேலே குடை பிடிப்பதுபோல் ஓர் துணியினால் 
அமைந்த விதானமாக தாங்கிச் செல்லப்படுகின்றது 

திரைப்படத்தில் ஓர் நடிகர் (வடிவேலு ) கிராமத் தெருவில் நடந்து வருவர் அவருக்குத் துணை யென வாரும் 
நபர் தலைவருக்கு குடைபிடித்து வரும் படி செய்திருப்பார் இங்கு ஓர் டாம்பீகமே காட்டப்படும் பொருள் 

அக்காலத்து மன்னர்கள் தன தலைக்கு மேல் குடை பிடித்து வர செல்வார்கள் அனால் அந்த நாட்டில் 
வேறு எவரும் தம் தலைக்கு மேல் குடை பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்
இக்காலத்தில் இதற்கு இணையாக  காரில் கொண்டை சிவப்பு விளக்கு என ஒன்று 
வைத்துக்கொள்ள அரசு அதிகாரிகள் தவிர மற்ற எவரும் அனுமதிக்ல்கப்படாதது போல் 

மகாரா ஷ்டி ரா வில் கிராமத்தில் மிக எளிய முறையில் ஒர்  திருமணம் நடைபெற்றா ல் மணமகனை உலா வாக த 
தெருவினில் ஊர்வலம் அழைத்துச் செல்லும்போது ஒர் துணியைத்தான்  குடைபோல் ஒர்  குச்சியில் தானங் கிப்ப்டித்து
அழைத்துச் செல்கின்றனர் இங்கு ஒர் சிறப்பு செய்ய குடை பிடிக்கப்படுகின்றது 

ஆக
 தலைக்குமேல் குடை பிடிப்பது சில நே ரங்ககளில் தகுதி இல்லாதவரும் போலியாக சிறப்பிபினை உள்ளவராகக்
காட்டப்படுப்டும் பொது சவுடால் (டாம்பீகம்) எனப்படுகின்றது இஃது சிறிது வேறு பாடடைந்த நிலை எனலாம் 

அன்புடன் 

நூ த லோ சு 

நல்ல விளக்கம். நன்றி.

உர்துச் சொல் என்கிறது லெக்சிகன்.

சௌடால் cauṭāl

n. < U. cautāl. Ostentation, stylishness. See சவடால். (W.)

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 6, 2014, 7:30:50 PM4/6/14
to mintamil, thamizayam, தமிழ் மன்றம், வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org, Raji M
வணக்கம் ஐயா.

அருமையான கருத்து.

2014-04-07 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள மடலாடருக்கு 

சவுடல் என்றால் டாம்பீகம் என்பதுதான் பொருளாக வேண்டும் என நினைக்கின்றேன் 
ஏனெனில் மயிலை கபாலீசுவரர கோயில் திருவிழாவில் 5ம்  நாள் காலை  வரும் சப்பரத்திற்கு 
சவுடல் விமானம் என்பது பெயர் 
நாங்களும் பார்த்துப் பயனடையும் வகையில் ஒருமுறை முடிந்தால் படம் எடுத்துப் போட வேண்டுகிறேன்.

சீனுத்தாத்தா

unread,
Apr 6, 2014, 10:02:47 PM4/6/14
to mint...@googlegroups.com, thamizayam, தமிழ் மன்றம், வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org, Raji M, kalair...@gmail.com

’தமிழ் அகராதியில் கொடுக்கப் பட்ட பொருள்கள் கீழ்க்கண்டவாறு உளன.
சவுடால் [ cavuṭāl ] , . foppery , pomp , சவடால் , டம்பம் .
சௌடால் [ cauṭāl ] , foppery , சவுடால் 

Nagarajan Vadivel

unread,
Apr 6, 2014, 10:31:35 PM4/6/14
to மின்தமிழ்
சிவகாமிப் பாட்டிக்கு ப்ழம்பெருமை பேசினால் புடிக்காது

டேய் பேரா ஒங்க தாத்தன் யானையேறி யானியேறி புட்டம் கருத்துப்போச்சுன்னு வாய்ச் சவடால் அடிக்கிறயே மொதல்ல ஒன் நிலைமையை யோசின்னு எனக்கு வாய்ச் சவடால்னு நாமகரணம் சூட்டினார்

சவடால்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 7, 2014, 12:03:09 AM4/7/14
to Minthamil
அடுத்த அவதாரம் "ப்ளேக் பாட்டம் பேராண்டி" யோ?

தேமொழி

unread,
Apr 7, 2014, 1:41:58 AM4/7/14
to mint...@googlegroups.com, வல்லமை
///நாங்களும் பார்த்துப் பயனடையும் வகையில் ஒருமுறை முடிந்தால் படம் எடுத்துப் போட வேண்டுகிறேன்.///

..... தேமொழி 

மவுசு

unread,
Apr 7, 2014, 5:48:16 AM4/7/14
to mintamil
வணக்கம் ஐயா.

2014-04-07 9:33 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அடுத்த அவதாரம் "ப்ளேக் பாட்டம் பேராண்டி" யோ?  

பேராசிரியர் அடுத்த அவதாரம் எடுப்பதற்கு முன் 
நான் எனது பெயரை “மவுசு“ என்று மாற்றிக் கொண்டு விட்டேன்.

பேராசிரியரின் மாணவன்
மவுசு

N. Ganesan

unread,
Apr 7, 2014, 8:59:56 AM4/7/14
to mint...@googlegroups.com, வல்லமை

On Sunday, April 6, 2014 10:41:58 PM UTC-7, தேமொழி wrote:
///நாங்களும் பார்த்துப் பயனடையும் வகையில் ஒருமுறை முடிந்தால் படம் எடுத்துப் போட வேண்டுகிறேன்.///

சௌடால் என்னும் உர்து வார்த்தை சவுடல் என்றாகி இருக்கிறது. இரண்டு சீர்கொண்ட தமிழ்ச் சொற்களில்
-டால் என்று நெடில் வருதல் தமிழாக ஒலிப்பதில்லை. எனவே இம் மாறுதல் போலும்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 7, 2014, 9:46:24 AM4/7/14
to Minthamil
தமிழ் மவுசா ஆங்கில மவுசா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Apr 7, 2014, 12:33:31 PM4/7/14
to mintamil
இங்கே யாருக்கும் தொந்தமிழ் புரியவில்லை.
சவுடால் என்றால் பேர்மாத்தி என்று பொருள்.
காளைராஜன் சங்கத மவுசூ.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 8, 2014, 10:36:32 AM4/8/14
to mintamil, வல்லமை
வணக்கம்.

உடனடியாகப் படத்தைப் பதிவு செய்ததற்கு நன்றியுடையேன்.
மிக்க நன்றி.

ஆற்றங்கரைகளில் உள்ள மண்பகுதியை “சவடு“ என்பார்கள்.
சவுடல், சவடு 
இரண்டிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ?

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

மவுசு

unread,
Apr 8, 2014, 10:56:25 AM4/8/14
to mintamil
வணக்கம் ஐயா.

2014-04-07 19:16 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
தமிழ் மவுசா ஆங்கில மவுசா?

இரண்டுந்தான்

Vanakkam Subbu

unread,
Apr 9, 2014, 8:48:50 AM4/9/14
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
சவடால் என்பதற்கு இடம்பம், பகட்டு என்று பொருள்,

வாய் சவடால் பேர்வழி  இங்கு இடம்பப் பேர்வழி என்று பெறப் படுகிறது.

சவடால் பொடிமட்டை தட்டி விட்டா வெறு மட்டை  = பகட்டான பொடி மட்டை எனக் கொளலாம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
N. Ganesan

unread,
Apr 9, 2014, 9:09:01 AM4/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, April 9, 2014 5:48:50 AM UTC-7, Subbs shan wrote:
சவடால் என்பதற்கு இடம்பம், பகட்டு என்று பொருள்,

வாய் சவடால் பேர்வழி  இங்கு இடம்பப் பேர்வழி என்று பெறப் படுகிறது.

சவடால் பொடிமட்டை தட்டி விட்டா வெறு மட்டை  = பகட்டான பொடி மட்டை எனக் கொளலாம்

சௌடால் என்பது உர்துப் பெயர். பூம்பட்டால் அலங்கரிக்கும் சப்பரத்துக்கு சவுடல் என ஆகி வருவதை நூதலோசு சொன்னார்.

கோவை மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு: “பழனி முருகனுக்கு பழத்தில், பஞ்சாமிருதத்தில் அபிஷேகம் செய்யணும்.
வெறும் வாயபிஷேகம் பத்தாது” என. வாயலங்காரம், வாய்ப்பந்தல் இடுதல், ... இவற்றுக்கு உர்துச்சொல் சேர்ந்து
வாய்ச்சவடால் ஆகியிருக்கிறது. உள்ளீடு இல்லாத வெறும் பேச்சு - வாய்ப்பந்தல், வாயபிஷேகம், வாய்ச்சவடால்.
ஆழமில்லா வாய்ச்சவடால்களாக தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கையை, அரசியலை - திராவிடம் என்னும் பெயரை
வைத்துள்ள கட்சிகளும், மற்றனவும் 50, 60 ஆண்டுகளாய் மாற்றிவிட்டன. இப்போது வாய்ச்சவடால் வீரராக சீமான்
தமிழ்நாட்டில் வளர்ந்துவருவதாக தெரிகிறது:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 13, 2014, 11:03:27 AM4/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

ஆறகழூர் பொன். வெங்கடேசனுக்காக ஆறை வாணர்கள் பற்றிய பாடல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ~125 வருடத்துக்கு முந்தைய சிலேடைவெண்பாவில்  ”வாய்ச்சவடால்” என்னும் மரபுச்சொலவடையின் இலக்கிய ஆட்சி கிடைத்தது. இவ் வெண்பாவுடன்
பாரதியார் பாடிய மறவன் பாட்டுப் பொருளையும் சிந்திக்கலாம். மைலாப்பூர் லாபி என்று புகழ்பெற்ற வக்கீல்கள் சென்னை ராஜதானியை ஆளுமை கொண்ட காலம் அது. அதன் எதிர்வினையாக திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்தது தமிழ்நாட்டு அரசியல் வரலாறு, பாரதியார் போலீஸ், லாயர் எல்லா பணிகளையும் ஆக்கிரமிப்பைச் சொல்லியுள்ளார். 

வேங்கடரமண ஐயங்கார்

[கொங்குவள நாட்டில் விசயமங்கலத்திற்கு அண்மையில் உள்ள நடுப்பட்டி என்னும் சீனிவாசபுரத்தில் வைணவ அந்தணர் குலத்தில் 1865ஆம் ஆண்டிற் பிறந்தவர். இவர் சதகம் பதிகம் முதலிய பல சிறு நூல்கள் பாடியுள்ளார். வேடிக்கையாகவுஞ் சிலேடையாகவும் பாடுவதில் வல்லவர்.]

நாய்க்கும் வக்கீலுக்கும் சிலேடையாகப் பாடியது

எச்சிக் கலையும் எடுத்துப்பீ சாப்பிடலால்
இச்சித் துலாவோ டிருத்தலால் - மெச்சுதுரை
மக்கள்பாற் சென்று வாய்ச்சவடால் ஆடலால்
குக்கலும்வக் கீலெனவே கொள்.

வக்கீல்:
பீசாப் பிடுதலால், இச்சித்து லாவோடு இருத்தலால்,
வெள்ளையரிடம் வாய்ச்சவடால் ஆடலால்.

நாய் நாக்கைச் சவட்டுதல் (< சவள்-; வளைத்து)
- வாய்ச்சவடால் ஆடல். 

இவ் வெண்பாவின் கருப்பொருளைப் பாரதியார் மறவன்
பாட்டில் விரித்துப் பாடியுள்ளார்.

சோதிட அறிவால் தம்முடைய இறுதிநாளை
அறிவித்தது.

தராதலத்தில் சிறந்தநடுப் பட்டிவாழ்நா
  ராயணன்மெய்த் தவத்தால் மேவும்
வரோதயனாம் வேங்கட்ட ரமணனவன்
 மாண்புடைய வையம் நீத்து
குரோதனவாண் டைப்பசியில் ஈரொன்றாம்
  நாளில்வரு குருவா ரத்தில்
சிரோதயமாம் வைகுண்டப் பதியவந்தன்
  பொன்னடியைச் சேர்ந்தான் மாதோ!

உசாத்துணை: தனிப்பாடல் திரட்டு, தொகுதி மூன்று,
திருநெல்வேலித் தென்னிந்தியச் சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம். 1964.

நா. கணேசன்

அண்மையில் மறைந்த விழுப்புரம் ரா. அ. பத்மநாபன் முயற்சியால் ஆஷ் துரை கொலைக்கேஸில் மிகவும் பேசப்பட்ட ‘மறவன் பாட்டு’ பாரதியார் பாடலுக்கு முன்மாதிரியாக பல ஆண்டுகள் முன்னால் வேங்கடரமணையங்கார் வெண்பாவில் சொல்லியுள்ளார். ஆனால், பாரதி வேங்கடரமணையங்கார் வெண்பாக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

  16. ஆதாரம்: பாரதி புதையல் 3 -- பக்கம் 8-9 

மறவன்பாட்டு

மண்வெட்டிக் கூலிதின லாச்சே! -- எங்கள் 
   வாள்வலியும் வேல்வலியும் போச்சே! 1
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! -- இந்த 
   மேதினியில் கெட்டபெய ராச்சே.

நாணிலகு வில்லினொடு தூணி -- நல்ல 
    நாதமிகு சங்கொலியும் பேணி,         2
பூணுலகு திண்கதையும் கொண்டு -- நாங்கள் 
   போர்செய்த காலமெல்லாம் பண்டு

தற்கால ஜீவனம் 
கன்னங் கரியவிருள் நேரம் -- அதில் 
   காற்றும் பெருமழையும் சேரும்;         3
சின்னக் கரிய துணியாலே -- இந்தத் 
   தீயவுடல் மூடி நரிபோலே,

மெல்லப் பயந்து மிகப் பதுங்கி -- ஒரு 
  வேற்றுவரும் கண்டபொழு தொதுங்கி         4
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் -- வெறும் 
  சோற்றுக்கோ வந்த திந்தப் பஞ்சம்.

ஏழை எளியவர்கள் வீட்டில் -- இந்த 
   ஈன வயிறுபடும் பாட்டில்                    5
கோழை யெலிகளென்னச் சென்றே-- பொருள் 
  கொண் டிழிவின் வருகிறோம் இன்றே.

அதில் கஷ்டங்கள் 
நாயும் பிழைக்கு இந்தப் பிழைப்பு -- ஐயோ 
  நாளெல்லாம் சுற்றுதிலே உழைப்பு;          6
பாயும் கடிநாய்ப் போலீசுக் -- காரப் 
   பார்ப்பானுக் குண்டிதிலே பிழைப்பு.

பேராசைக் காரனடா பார்ப்பான் -- ஆனால்
    பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்      7
யாரானாலும் கொடுமை இழைப்பான் -- துரை 
    இம்மென்றால் நாய்போலே உழைப்பான்.

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் -- சொல்வார் 
    மூன்று மழை பெய்யுமடா மாதம்;   8
இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் -- இவர் 
    ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்.

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் --  நம்மைப் 
    பிய்த்துப் பணம் கொடெனத் தின்பான்;  9
கொள்ளைக் கேசென்றொரு பொய் மூட்டி -- நம்மைக் 
    கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி.

சோரந் தொழிலாக் கொள்வோமோ? -- முந்தைச் 
    சூரர் பெயரை அழிப்போமோ?     10
வீர மறவர்நாம் அன்றோ? -- இந்த 
    வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?
                                                 
                                      - பாரதியார்
Reply all
Reply to author
Forward
0 new messages