--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம் உணக்குதல் என்பது காய வைத்துச் சுருக்குதல்என்ற பொருளில் சில பழைய இலக்கியங்களில் வந்துள்ளன.நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டிஇனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ?என்ற பாடலின் இரண்டு வரிகள் பரதவர்களின்நெஞ்சுரத்தைக் காட்டும் உயர்ந்த வரிகள்!இவளே,கானல் நண்ணிய காமர் சிறுகுடிமீனெறி பரதவர் மகளே!நீயேநெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!என்ற பாடலிலும்நம் வீட்டினர் காய்ந்து சுருங்கி விட்டது என்பதைஉணங்கி விட்டது என்ற உலக வழக்கிலும்உணக்கல் உண்டு.உழக்குதல் என்பது மிதித்து நசுக்குதல் என்றபொருளில் வரும்! பண்டுதொட்டுத்திருக்குறளில் அமைந்த சொல்லை மாற்ற வேண்டியஅவசியம் என்ன வந்தது?அருள்கூர்ந்து பயனுடைய விளக்கங்களைத் தருக!பயனில் சொல் பாராட்டாதீர்கள்! இது என் வேண்டுகோள்!பிறகு உங்கள் இஷ்டம்!அன்புடன் புலவர் இராமமூர்த்தி .
Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email. | Know More > |
இது நன்செய்ப் பயிர் பற்றிய குறள் அன்று!புன்செய்ப் பயிர் பற்றியது!பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்பதுஇரண்டாம் அடி!அன்புடன் புலவர் இராமமூர்த்தி
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?
ஹ்ஹா! இல்லை தழை தான் உரம்!
ஆழ்வார் பாடலிலும் உணக்கி என்றே வந்துள்ளது.எங்களை வாடச் செய்து என்பதே அதன் பொருள்.அருள் கூர்ந்து உழக்கி என்ற சொல்லாட்சி வந்தபாடல்களை எடுத்துக் காட்ட வேண்டுகிறேன்.அன்புடன் புலவர் இராமமூர்த்தி
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.
தூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே | - | சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து |
--
மிக்க நன்றி ஒருமுறை மீள் பார்வை பார்த்தது போலாயிற்று.உழக்குதல் சிதைத்தல் என்ற பொருளில் வந்தது. காய வைத்தல்என்ற பொருள் அதில் இல்லை! ஆவாரஞ்செடி தழை உரம் அதனைமிதித்து 'உழக்கி' எருவாக்குவார்கள்! அதன் பின் வேறோர் எருவேண்டுவதில்லை என்று நெல் வயல் வேளாண்மை நடக்குமாயின்ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்புஎன்ற நஞ்சை வேளாண்மைக் குறளுக்குப் பொருளின்றிப் போய்விடும்!புழுதியைக் காய வைத்து உணக்குதல் புன்செய் வேளாண்மை!
வணக்கம் பரிப்பெருமாள் உரைப்படி, பலமுறை உழவு செய்துபலப்புழுதி காற்பலம் ஆகச் செய்வது புன்செய் வேளாண்மையே!தொடிப்புழுதி- புன்செய் நிலம் குறித்தது.ஏரினும் நன்றால் - நன்செய் நிலம் குறித்தது.இரண்டும் நன்செய் வேளாண்மை என்றால் புன்செய்வெள்ளாமை குறித்து வள்ளுவர் ஏதும் கூறவில்லைஎன்றாகி விடுமே? வள்ளுவர் இருவகை நிலம் பற்றியும்எழுதியுள்ளார் என்று சொன்னால் என்ன குறை?வள்ளுவருக்குப் புகழ் சேர்க்கலாமே!மிக்க அன்புடன் புலவர் இராமமூர்த்தி.உங்கள் மேற்கோளில்தொடிப்புழுதி (கைசா) என்று நைசாக புதுச்சொல்ஏற்றியிருக்கிறீர்கள்! பிடித்தெருவும் வேண்டாதுசால என்பதற்கு மாறாக சான்று என்று ஒரு புதுச்சொல் ஏற்றியிருக்கிறீர்கள்! உங்கள் உபயத்தால்திருக்குறள் செம்மை பெற்றால் சரிதான்!அன்புடன் புலவர்
வணக்கம் பரிப்பெருமாள் உரைப்படி, பலமுறை உழவு செய்துபலப்புழுதி காற்பலம் ஆகச் செய்வது புன்செய் வேளாண்மையே!தொடிப்புழுதி- புன்செய் நிலம் குறித்தது.ஏரினும் நன்றால் - நன்செய் நிலம் குறித்தது.இரண்டும் நன்செய் வேளாண்மை என்றால் புன்செய்வெள்ளாமை குறித்து வள்ளுவர் ஏதும் கூறவில்லைஎன்றாகி விடுமே? வள்ளுவர் இருவகை நிலம் பற்றியும்எழுதியுள்ளார் என்று சொன்னால் என்ன குறை?
புன்செய் நிலத்துக்கு அதிக உரம் தேவை. அதனால் பலமுறை உழுதுமண்ணைப் புரட்டுவார்கள். புரளப் புரள மண்கட்டிகள் காய்ந்தது(உணங்கி) உடைந்து புழுதியாகும். அந்தப் புழுதியும் கால் பங்காகமீண்டும் உழுது புரட்டுவார்கள். அதுவும் போதாதென்று ஆடு மாடுகளைகிடை போடுவார்கள்.அவற்றின் எருவும் புஞ்செய்க்குத் தேவை.இந்த உரம் கிட்டாத சூழலில் தொடிப்புழுதியைக் க.:. சாக உணக்குவர்.இவ்வாறு திருக்குறள் வித்தகர் கோயில்பட்டி இராமையா கூறக்கேட்டிருக்கிறேன். இவை எனக்குக் கேள்விதாம். அடியேன் வேளாண்மைஅறியேன். அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
புன்செய் நிலத்துக்கு அதிக உரம் தேவை. அதனால் பலமுறை உழுதுமண்ணைப் புரட்டுவார்கள். புரளப் புரள மண்கட்டிகள் காய்ந்தது(உணங்கி) உடைந்து புழுதியாகும். அந்தப் புழுதியும் கால் பங்காகமீண்டும் உழுது புரட்டுவார்கள். அதுவும் போதாதென்று ஆடு மாடுகளைகிடை போடுவார்கள்.அவற்றின் எருவும் புஞ்செய்க்குத் தேவை.இந்த உரம் கிட்டாத சூழலில் தொடிப்புழுதியைக் க.:. சாக உணக்குவர்.இவ்வாறு திருக்குறள் வித்தகர் கோயில்பட்டி இராமையா கூறக்கேட்டிருக்கிறேன். இவை எனக்குக் கேள்விதாம். அடியேன் வேளாண்மைஅறியேன். அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
On Friday, August 8, 2014 10:04:18 PM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:
வணக்கம்.நல்ல கட்டுரை. சிறுவயது நினைவுகளைத் தூண்டியது. எங்கள் ஊரில் பாறைக்களம் பரந்து
விரிந்து இருக்கும்.சோளம்,உழுந்து, நெல் போன்ற தானியங்கள் சுத்தமாகப் பிரிபடும்.-அரிமா
இளங்கண்ணன்,லாஸ் ஏஞ்சல்ஸ்