சிற்றிலக்கிய இலக்குகள்: திருத்தாண்டகம்

423 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
Jan 5, 2022, 9:46:17 AM1/5/22
to சந்தவசந்தம்
#சிற்றி_திருத்தாண்டகம்
சிற்றிலக்கிய இலக்கணம்
சிற்.011. திருத்தாண்டகம்
நூற்பாக்கள்
பன்னிரு பாட்டியல் 110
மூவிரண் டேனும் இருநான் கேனும்
சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
அறுசீர் குறியது நெடியதெண் சீராம்.
.
பல்காயனார்
அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்
கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே.
.
மாபூதனார்
மங்கல மரபின் மானிடர் கடவுளர்
தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே
தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே.
.
சீத்தலையார்
அடிவரை நான்கும் எழுத்தெண்ணி
நேரடி வருவது தாண்டகம் ஆகும்.
.
★★★★★
வடமொழியில் தண்டகம் என்பது ஒருவகை செய்யுள் யாப்பு. அதனடியாகப் பிறந்தது தமிழில் தாண்டகம் என்னும் யாப்பு வடிவம். இது ஒரு சிற்றிலக்கிய வகையும் ஆகும்.
.
வடமொழியில்
• நான்கு அடிகளில் பயிலும் செய்யுள்கள் அனைத்தும் விருத்தம் என்ற பொதுப்பெயர் பெறும்.
• ஒன்று முதல் 26 வரை எழுத்துகள் பயிலும் அடி சந்த விருத்தம்
• 27, 30, 33, ... 999 வரை எழுத்துகள் பயிலும் அடி தண்டக விருத்தம்.
• காளிதாசனின் புகழ்பெற்ற சியாமளா தண்டகம், தண்டக யாப்பில் அமைந்ததாகும்.
.
தாண்டகம்
தமிழ் மொழியில் தாண்டகம் யாப்பு மூன்று வகைகளில் அமையும். இவற்றுள் ஒருவகை யாப்பில் 10, 20 அல்லது 30 செய்யுள்களாகப் பாடும் நூல் தாண்டகம் என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.
.
தாண்டகம்: திருக்குறுந்தாண்டகம் வகை
• அறுசீர் விருத்தம்
• விளம் மா தேமா இரட்டித்து
• ஏகார முடிவு
• அப்பர் பெருமானின் திருவதிகை வீரட்டப் பதிகம்
இரும்புகொப் பளித்த யானை
. ஈர்உரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொல்
. காரிகை பாகம் ஆகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத்
. துவலைநீர் சடையில் ஏற்ற
அரும்புகொப் பளித்த சென்னி
. அதிகைவீ ரட்ட னாரே.
.
• திருமங்கையாழ்வார் அருளிய திருக்குறுந்தாண்டகம்
நிதியினைப் பவளத் தூணை
. நெறிமையால் சினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
. கண்டுமுன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
. வணங்கிஎன் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
. தொண்டனேன் விடுகி லேனே.
.
தாண்டகம்: திருநெடுந்தாண்டகம் வகை
• எண்சீர் விருத்தம்
• காய் காய் மா தேமா இரட்டித்து
• ஏகார முடிவு
• அப்பர் பெருமானின் தில்லை நாயகன் துதி
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
.
• திருமங்கையாழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகம்
மின்னுருவாய் முன்னுருவாய் வேதம் நான்கில்
. விளங்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
. பிறப்பிலியாய் இறப்பதற்கை எண்ணா(து) எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
. புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் சின்ற எந்தை
. தளிர்புரையும் திருவடிஎன் தலைமே லவ்வே.
.
தாண்டகம்: கட்டளைக் கலிப்பா வகை
• எண்சீர் அடிகள் நான்கு
• நாற்சீர் அரையடி இரட்டித்து வரும்
• அரையடி முதற்சீர் தேமா அல்லது புளிமா
• அதன் இரண்டாம் சீர் நேரசை (எனவே நே.ஒ.ஆ.தளை)
• 2,3,4 சீர்களிடை வெண்டளை
• அடிமுதலசை நேரெனில்
அரையடிக்குப் 11 எழுத்துகள்
• அடிமுதலசை நிரையெனில்
அரையடிக்குப் 12 எழுத்துகள்
• பொதுவாக ஈரசைச் சீர்கள்
• மாங்காய்ச்சீர் விளத்திற்கு மாற்றாக அரிதாக
• விளங்காய்ச்சீர் கூடாது
• அப்பர் பெருமானின் திருக்கைலாயத் துதி
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
. ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
. பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி
. தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலில் ஒளியாய முத்தே போற்றி
. கயிலை மலையானே போற்றி போற்றி
.
அப்பர் பெருமான் தாண்டகங்கள்
தாண்டக வேந்தர், தாண்டகச் சதுரர் என்றெல்லாம் அழைப்படும் அப்பர் பெருமானின் தாண்டகங்கள் பற்றி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியுள்ள ஆசியுரையை கீழுள்ள சுட்டியிற் காணலாம்.
.
மேற்குறித்த வாய்பாட்டில் அமையும் அறுசீர்/எண்சீர் விருத்தங்கள் அனைத்தும் தாண்டகம் வகை ஆகா! அங்ஙனமாயின் தாண்டக மரபுதான் என்ன?
.
தாண்டக மரபு
• இறைத்துதி
• காப்பு, கடைக்காப்புச் செய்யுள்கள் போகப்
பொதுவாகப் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகம்.
• அடிகளில் பொருள் முடியாது எச்சங்களாகத் தொடர்வது.
• ஈற்றடியில் ஏகார முடிவாக, முன்வந்த தொடர்களின்
முத்தாய்ப்பாகப் பொருள் முடிவது.
.
தாண்டகம்: யாப்பருங்கல இலக்கணம்
வடமொழி இலக்கணத்தை யொட்டி யாப்பருங்கலம் தாண்டக இலக்கணத்தை வரையறுக்கிறது.
• 27 முதலாக உயர்ந்த எழுத்தடிகள்
• எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியற் தாண்டகம்.
• எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம்.
.
லகு, குரு ஆவன:
• லகு ஆவது: குற்றெழுத்து ஒற்று அடாது வந்தது.
• குரு ஆவது:
• குற்றெழுத்து ஒற்றடுத்து வந்தது
• நெட்டெழுத்து ஒற்றடுத்து வந்தது
• நெட்டெழுத்து தனித்து வந்தது
• அடியீற்றில் வந்த லகு, குருவாகக் கருதப்படாலாம்.
• லகு ஒரு மாத்திரை, குரு இரண்டு மாத்திரை ஒலியளவு.
.
யாப்பருங்கலச் சான்றுகள்
அளவியற் தாண்டகம்
(எண்சீர் விருத்தம்: காய் காய் மா தேமா இரட்டித்து;
அடிக்கு 27 எழுத்துகள்)
.
வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்
. மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்
தேனுலவு நறுமுல்லை முறுவல் ஈனத்
. திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக்
கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்
. கவினியவாய்ச் சார்ந்துகார் கலந்து கண்ணார்
மானிலவு மடநோக்கின் நெடிய வாட்கண்
. வனமுலையாய்! மற்றுமனம் வருந்தல் நீயே.
.
அளவியற் தாண்டகம்
(ஒன்பதின்சீர் விருத்தம்: விளம்x8 காய்;
அடிக்கு 37 எழுத்துகள்)
.
கருநிறப் பொறிமுகக் கடதடத் தமிழ்செவிக் கழைமருப் புறுவலிக்
. கவினுடைக் கரிகளைக் கனவரைக்கட்
சுருணிறத் தெரியுளைச் சுரிமுகத் தொளியுகிர்ச் சுடரெயிற் றிடிகுரற்
. றுறுமயிர்த் துனிசினத் தரிசுழற்றும்’
இருளுடைச் சிறுநெறிக் கவலையுட் டனிவரற் கினிவரத் தகுவதன்
. றிரவினிற் பகலினிற் பெரிதுநன்றால்
திருநிறப் புரிவளைச் சிறுநுதற் பெரியகட் சிகழிகைப் புனைகுழற்
. றுவரிதழ்த் திகழொளிக் கலையிவட்கே.
.
அளவழித் தாண்டகம்
(எண்சீர் விருத்தம்: காய் காய் காய் தேமா இரட்டித்து)
.
மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண
. முழுதுலக மூடியெழில் முளைவயிர நாற்றித்
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
. சுடரோய்!உன் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்
. சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப்
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து?
. புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே.
.
இஃது எழுத்தும் இலகுவும் ஒவ்வாது வந்த அளவழித்தாண்டகம்.
.
★★★
திருத்தாண்டகம் வகையில்
• காப்பு, கடைக்காப்பு தவிர்த்தே
• இறைத்துதியாக
• மேற்சொன்ன அறுசீர் விருத்தக் குறுந்தாண்டகமும்
• எண்சீர் விருத்த நெடுந்தாண்டகமும்
• கட்டளைக் கலிப்பா வகையில் நெடுந்தாண்டகமும்
• புனையலாம்.
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jan 5, 2022, 9:49:53 AM1/5/22
to சந்தவசந்தம்
#ரமணிசிற்_திருத்தாண்டகம்
சிற்றிலக்கிய இலக்குகள்
சிற்.011. திருத்தாண்டகம்
தாண்.01. ஈசரைப் போலே யாரே!
(குருநாதன் ரமணி)
.
காப்பு
முதலில் நினைக்க மொழிப்பெருக் கால்கண்
ணுதலை வழுத்தும் நுவல்நயம் தந்தாய்
கரிமுக னேயுன் கடைவிழிப் பார்வை
உரிமையுடன் கொண்டேன் உளம்.
.
நூல்
(திருக்குறுந்தாண்டகம்)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா இரட்டித்து)
.
பாற்கடல் நஞ்சை யுண்டார்
. பார்த்தனின் அம்பை யேற்றார்
கூற்றுவன் காலு தைத்தார்
. கூத்தனாய்க் காண வைத்தார்
ஆற்றுநீர் சடைமேற் கொண்டார்
. ஆலடிக் குருவாய் ஆனார்
வீற்றிருந் தேயென் னுள்ளம்
. மேவுயிர்க் கருள்வார் உய்வே. ... 1
.
முத்தமிழ்ச் சங்கம் வந்தே
. மூர்க்கமாய் வாதம் செய்தார்
பித்தராய் ஈமக் காட்டில்
. பேயுடன் ஆடு கின்றார்
சத்தியை மேனி சேர்த்தே
. சகலமும் ஆளும் வேந்தர்
உத்தம நெறியி ருத்தி
. உள்ளொளி பெருக்கு வாரே. ... 2
.
முழுமுத லாக நிற்கும்
. முப்புரம் செற்ற ஈசர்
எழுமுனி வர்கள் போற்றும்
. விழுப்பொரு ளான தேவர்
குழுமுவார் காளி யோடே
. கூளிகள் ஆடும் காட்டில்
வழுவினை குன்றச் செய்தே
. வாழ்வினில் தருவார் காப்பே. ... 3
.
பிட்டுண மண்சு மந்தார்
. பிரம்படி பெற்றுத் தந்தார்
கட்டுடல் போர்வை யாகக்
. கரியினை உரித்த ணிந்தார்
மட்டுவார் குழலா ளோடு
. மலைமிசை மேவும் ஈசர்
விட்டுடல் உயிர்போம் நாளில்
. வியனுல கருள்வார் சேர்த்தே. ... 4
.
வானுல காளும் தேவர்
. மண்ணுல காளும் தெய்வம்
ஆனனம் ஐந்தைக் கொண்டார்
. ஆடுவார் ஐந்த மிழ்ந்தே
ஏனம ருப்ப ணிந்தே
. ஏந்துவார் மானைக் கையில்
மோனமாய் உள்நி றைவார்
. மூடனம் குன்றச் செய்தே. ... 5
.
அங்கயற் கண்ணி யாளை
. ஆணழ கனாகக் கொண்டார்
அங்கசன் நெற்றிக் கண்ணால்
. ஆகம ழித்துக் கொண்டார்
கங்கையைச் சடையில் தாங்கி
. காசினி சுமைகு றைத்தார்
தங்குவார் பத்தர் உள்ளம்
. சன்மவி னைகு றைத்தே. ... 6
.
ஏமநா தன்செ ருக்கை
. விறகினைச் சுமந்தே கொண்டார்
வாமனன் பிறவி கொண்டே
. மாலினை விடுவித் தாரே
நாமகள் கமலை யாகும்
. நாயகி இடத்தில் கொண்டே
ஈமவ னத்தில் ஆடும்
. ஈசரைப் போல யாரே! ... 7
.
தசமுகன் மலைபெ யர்க்கத்
. தலைகரம் தரையில் வீழ்த்தி
அசைவறச் செய்தே பின்னர்
. அருள்மிக வாளும் நாளும்
இசையொலி துதியைக் கேட்டே
. இசைவுடன் தந்தார் தம்மை
நசையறும் உள்ளம் வேட்டே
. நான்கழல் பற்று வேனே. ... 8
.
மாலயன் பாதம் சென்னி
. மாய்வுறத் தேடச் செய்தார்
மாலயன் மகளாய் வந்த
. மங்கையைக் கரம்பி டித்தார்
காலதே சங்க டந்தார்
. காத்தருள் தெய்வ மாக
ஆலயம் எங்கும் கண்டே
. அடியவர் துதிசெய் வாரே. ... 9
[மாலயன் மகளாய்: இமாலயன் (இமவான்) மகளாய்]
.
மாயையாம் நெறிகள் யாவும்
. மனத்தினைக் கொள்ளும் காலம்
சாயையே ஒளியின் மாற்றாய்
. தனங்களை வேட்கும் கோலம்
சேயெனச் சிவனைச் சார்ந்தால்
. செய்வினை தீர்த்தே ஈசர்
தாயெனக் காத்த ருள்வார்
. தாமதம் இன்றி இன்றே! ... 10
.
கடைக்காப்பு
தேவரும் போற்றும் தெய்வம்
. திருவருள் செய்யும் தெய்வம்
மூவரில் மூத்த தெய்வம்
. மோனமாய் நிற்கும் தெய்வம்
நால்வரும் துதிகள் பாடி
. நாடியே கொண்ட தெய்வம்
யாவரும் போற்றும் தெய்வம்
. ஈசரைப் போலே யாரே!
.
★★★★★

Siva Siva

unread,
Jan 5, 2022, 10:01:05 AM1/5/22
to santhavasantham
/ வடமொழியில் தண்டகம் என்பது ஒருவகை செய்யுள் யாப்பு. அதனடியாகப் பிறந்தது தமிழில் தாண்டகம் என்னும் யாப்பு வடிவம். இது ஒரு சிற்றிலக்கிய வகையும் ஆகும்.  /
I do not think this is correct. 
I believe this is a native Tamil meter and has no connection to the Dandakam of Sanskrit.

Pas Pasupathy

unread,
Jan 5, 2022, 10:30:50 AM1/5/22
to Santhavasantham
I agree. We have talked about this before here. ( This part should be rewritten in my book.)

27 எழுத்து இலக்கணம் யா.கலம் காலத்தில் தான் வந்தது.

வடமொழித்  தாக்கம் என்பர்.  

 

(ஏன் 27? 27 எழுத்தடி =  பாடலில் 108 எழுத்துகள் என்பதால் என்பது என் கருத்து )

 

அப்பர் காலம் அதற்கு 3-4 நூற்றாண்டுகளுக்கு முன். . அவற்றில் அடி எழுத்துகள்  27-க்கு குறைந்தும், மிக்கும் வருகின்றன.  அதனால் அப்பரின்

திருத்தாண்டகம்’   வடமொழித் தாண்டகத்திலிருந்து வேறுபட்டது.  

 


On Wed, 5 Jan 2022 at 10:01, Siva Siva <naya...@gmail.com> wrote:
/ வடமொழியில் தண்டகம் என்பது ஒருவகை செய்யுள் யாப்பு. அதனடியாகப் பிறந்தது தமிழில் தாண்டகம் என்னும் யாப்பு வடிவம். இது ஒரு சிற்றிலக்கிய வகையும் ஆகும்.  /
I do not think this is correct. 
I believe this is a native Tamil meter and has no connection to the Dandakam of Sanskrit.



Siva Siva

unread,
Jan 5, 2022, 11:33:18 AM1/5/22
to santhavasantham
panniru thirumuRai varalARu - by VellaivAraNan - Volume-1 - Page 703 states
image.png
Page 420:
image.png
Page 421:
image.png


http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm

தாண்டக விளக்கம்:

இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.


யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.


பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையிலிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், 'அறுசீரேனும்', 'எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யுளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.


இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.

"மூவிரண் டேனும் இருநான் கேனும்

சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்

கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்

அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"

என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)

"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்

கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி

குறியது நெடிய திருநாற் சீரே"

என்பது பல்காயனார் வாக்கு.

"மங்கல மரபின் மானிடர் கடவுளர்

தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"

"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"

என்பன மாபூதனார் நூற்பாக்கள்.

"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி

நேரடி வருவது தாண்டகம் ஆகும்"

என்பர் சீத்தலையார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.


அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகரமும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவினைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.

ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்த யாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.


எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும்.1


தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள்ளார். கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.

===========

V. Subramanian

Siva Siva

unread,
Jan 5, 2022, 11:38:56 AM1/5/22
to santhavasantham

https://mohanawritings.blogspot.com/2011/07/blog-post.html

செவ்வாய், 5 ஜூலை, 2011

தாண்டக வேந்தரின் தனித்த கொடை

மோகனா - (முனைவர்ப் பட்ட ஆய்வாளர் - தமிழிலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)

=======

Siva Siva

unread,
Jan 5, 2022, 12:57:25 PM1/5/22
to santhavasantham
T.V. Gopal Iyer - in Tevaram - volume-3 - Page 92
image.png

Pas Pasupathy

unread,
Jan 5, 2022, 8:09:00 PM1/5/22
to Santhavasantham
Thanks. I was under the impression that some of Appar's  lines had more than 27 letters.( mainly due to what I read in S.N.Kandhasami's book) .  According to these , it seems to be wrong. Is that right?  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMSOOD5cmR%3D%2BO1ZLSAWYJKWB_CQX8AVr0QZ-p0R7_UiPQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jan 5, 2022, 9:48:09 PM1/5/22
to santhavasantham
As I may have mentioned in an SV post in 2010 on this topic regarding maximum number of letters per line in thiruththANdagam:
===

தேடியதில் கண்ட ஒரு பாடல்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60400&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.40.1

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
.. அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
.. திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
.. நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே
.. யென்றென்றே நானரற்றி நைகின் றேனே.

Letter counts:
Line-1 = 15+13 = 28
Line-2 = 12+12 = 24
Line-3 = 13+14 = 27
Line-4 = 14+11 = 25  

===

Another song I checked today is:

அப்பர் தேவாரம் - 6.1.1

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

.. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

.. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

.. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


அடிகளில் எழுத்தெண்ணிக்கை:

12+14 = 26

12+13 = 25

13+15 = 28

13+11 = 24

===
V. Subramanian


sai...@gmail.com

unread,
Jan 6, 2022, 2:39:48 AM1/6/22
to சந்தவசந்தம்
அறிஞர்கள் கருத்துக் கேற்ப, என் இலக்கணக் குறிப்பில் காணும் இந்த வரிகளை


வடமொழியில் தண்டகம் என்பது ஒருவகை செய்யுள் யாப்பு. அதனடியாகப் பிறந்தது தமிழில் தாண்டகம் என்னும் யாப்பு வடிவம்.   இது ஒரு சிற்றிலக்கிய வகையும் ஆகும்.

இவ்விதம் மாற்றிக் கொள்கிறேன்.

வடமொழியில் தண்டகம் என்பது ஒருவகை செய்யுள் யாப்பு. அந்த விதிகளை அப்படியே தமிழில் ஏற்றுத் தாண்டகம் என்னும் யாப்பு வடிவத்தை யாப்பருங்கலம் நூல் தருகிறது. இது ஒரு சிற்றிலக்கிய வகையும் ஆகும்.

அதற்கு முன்னரே, வடமொழித் தண்டக யாப்பினின்று வேறுபட்டு, அறுசீர், எண்சீர் விருத்தங்களைக் குறித்த வாய்பாட்டில் பயன்படுத்தி, அப்பர் சுவாமிகள் திருத்தாண்டகம் என்னும் புதிய தமிழ் யாப்பில் 99 பதிகங்களைச் செய்திருக்கிறார். இவற்றை ஆறாம் திருமுறையில் காணலாம். திருக்குறுந்தாண்டகம் (அறுசீர் விருத்தம்) என்றும் திருநெடுந்தாண்டகம் (எண்சீர் விருத்தம்) என்றும் முதன்முதலில் தமிழில் தாண்டக யாப்பு வடிவம் படைத்த அப்பர் பெருமான் தாண்டக வேந்து, தாண்டகச் சதுரர் என்றெல்லாம் புகழப் படுகிறார்.

*****
சில சுவையான வினாக்கள் எழுகின்றன.
1. அப்பர் சுவாமிகள் தாம் புதிதாகப் படைத்த யாப்பு வடிவைத் தாண்டகம் என்று பெயரிட்டு அழைத்திருப்பாரா? அல்லது திருமுறைகள் தொகுக்கப்பெற்ற போது அவற்றின் தனித்த யாப்பு வடிவங்கள் பெயரிடப்பட்டனவா?

2. அப்பர் சுவாமிகள் வடமொழியிலும் சதுரராக இருந்திருப்பார் என்றும், அவர் காளிதாசனின் சியாமளா தண்டகம் படித்திருப்பார் என்றும் கொள்ள இடமுண்டு அல்லவா?

3. வடமொழித் தண்டகம் என்னும் பெயர் தமிழில் தாண்டகம் ஆனது பற்றிச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி சொல்லும் விளக்கம் இது:
  தாண்டு ➝ தாண்டகம் = 24 எழுத்து ஆகிய அளவைத் தாண்டிச் செல்லும் அடிகளைக் கொண்ட செய்யுள் (மு.தா.52).
மு.தா. என்பது என்ன நூற்பெயர்க் குறுக்கம் என்று தெரியவில்லை.

*****

Siva Siva

unread,
Jan 6, 2022, 9:54:54 AM1/6/22
to santhavasantham
I do not know if I had mentioned this SV thread before: https://groups.google.com/g/santhavasantham/c/DUHAvEvpM_g
You may have already seen it.

/அறுசீர், எண்சீர் விருத்தங்களைக் குறித்த வாய்பாட்டில் பயன்படுத்தி, அப்பர் சுவாமிகள் திருத்தாண்டகம் என்னும் புதிய தமிழ் யாப்பில் 99 பதிகங்களைச் செய்திருக்கிறார்./
அப்பர் அருளிய திருத்தாண்டகம் = no அறுசீர். Only எண்சீர்.

/திருக்குறுந்தாண்டகம் (அறுசீர் விருத்தம்) என்றும் திருநெடுந்தாண்டகம் (எண்சீர் விருத்தம்) என்றும் முதன்முதலில் தமிழில் தாண்டக யாப்பு வடிவம் படைத்த அப்பர் பெருமான் தாண்டக வேந்து, தாண்டகச் சதுரர் என்றெல்லாம் புகழப் படுகிறார்./

அப்பர் அருளிய திருநேரிசை (அறுசீர் விருத்தம்) (4-ஆம் திருமுறை) ---- குறுந்தாண்டகம் என்று திருமுறைகளில்   சுட்டப்பெறா. 

வி. சுப்பிரமணியன்

sai...@gmail.com

unread,
Jan 6, 2022, 10:31:20 AM1/6/22
to சந்தவசந்தம்
Thank you for the clarification.
ramaNi

Pas Pasupathy

unread,
Jan 6, 2022, 10:48:14 AM1/6/22
to Santhavasantham
அரியானை ---சோ.ந.கந்தசாமியும் குறித்துள்ளார்.   
இதனால், " அப்பரின் தாண்டகப் பாடல் அடிகள் மிக்கும் குறைந்தும் வரும் எழுத்துக்கள்  பயின்ற அடிகளினால் பாடப் பெற்றவை" என்று எழுதியுள்ளார். ( வெள்ளைவாரணாரும் மற்றோரும் இந்த 27-க்கு  " மிக்கு"விஷயத்தைக் கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது.) 

sai...@gmail.com

unread,
Jan 14, 2022, 8:05:35 PM1/14/22
to சந்தவசந்தம்
#ரமணிசிற்_திருத்தாண்டகம்
#ரமணி_பிரதோஷம்
சிற்றிலக்கிய இலக்குகள்
சிற்.011. திருத்தாண்டகம்

பிரதோஷத் துதி
தாண்.02. ஈருயிராய் ஓருடலில்!
(குருநாதன் ரமணி)

காப்பு
(நேரிசை வெண்பா)
துங்கக் கரிமுகனே சொற்பொருள் தந்தருள்வாய்
சங்கரன் போற்றுமோர் தாண்டகம் — பொங்கியெழ!
அஞ்செழுத்து மந்திரம் அச்சம்தீர் ஆறுதலாய்
நெஞ்சுள் கலிக்கட்டும் நின்று.

நூல்
(திருநெடுந்தாண்டகம்)
(எண்சீர் விருத்தம்: காய் காய் மா தேமா இரட்டித்து)

ஈருயிராய் ஓருடலில் இயக்கம் கொண்டே
. இறைவரென இறைவியென ஏத்தக் கண்டே
பாரினிலே தென்னாட்டைக் கொண்ட போதும்
. பரம்பொருளாய்க் காண்பதற்கே எந்நாட் டார்க்கும்
வேரறமே சிவநெறியாய்ப் பேணு வோர்க்கு
. வினையகலும் சாதனையில் மேன்மை சேர்க்கும்
பேரருளின் பெம்மானின் தாள்ப ணிந்தே
. பேச்சினிலே மூச்சினிலே கொள்வாய் நெஞ்சே! ... 1

முக்கண்ணன் மூவுலகும் நாடும் ஈசர்
. முழுமுதலாய் நான்மறையும் கண்டே பேசும்
தக்கணனாய் சனகாதி முனிவர் காணச்
. சங்கரராய் அடியார்கள் குருவாய்ப் பேண
நக்கனென நாற்றிசையும் ஆடை யாக
. நான்முகனின் ஓடேந்திப் பிச்சை போகும்
கொக்கிறகர் கொன்றைமலர் சூடும் மஞ்சன்
. கூத்தரவர் தாளிணையைக் கொள்வாய் நெஞ்சே! ... 2

[நக்கன்: ஆடையில்லாதவன்; மஞ்சன்: மைந்தனின் திரிபு;
மைந்து: வலிமை, மைந்தன்: வலைமை உடையவன்]

செஞ்சடையில் கங்கைநதி பிறையைக் கொள்ளும்
. செம்பவள மேனியினர் வெண்ணீற் றீசர்
நஞ்சுண்டே மூவுலகும் காத்த தேவர்
. நடனத்தில் ஐந்தொழிலும் ஆற்றும் நேசர்
அஞ்சனக்கண் உமையாளை வாமம் கொண்டே
. அகிலத்தைக் காத்தருளும் அம்மை யப்பர்
அஞ்செழுத்தை எப்பொழுதும் உச்ச ரித்தே
. ஆருயிருக் கொளிசேர்ப்பாய் ஆசை நெஞ்சே! ... 3

விண்ணவரும் மண்ணவரும் போற்றும் லிங்கம்
. வேறெந்த தெய்வதிற் கிதுபோல் துங்கம்
பண்ணிசைத்தே திருமறைகள் பாடும் லிங்கம்
. பாழியிலே தான்தோன்றி யாகும் லிங்கம்
ஒண்மையிலே ஒப்பில்லா தாகும் லிங்கம்
. உள்ளதுவும் இல்லதுவும் ஆகும் லிங்கம்
கண்ணொளிரும் வெண்ணீற்றைச் சூடும் லிங்கம்
. கட்டுடலின் சன்மமறக் கொள்வாய் நெஞ்சே! ... 4

சூலத்தைத் திருக்கரத்தில் ஏந்தும் தோற்றம்
. துடியொலியில் அணுவசையத் தோன்றும் மாற்றம்
ஆலத்தைக் கண்டத்தில் மணியாய்க் கொண்டே
. ஆனந்தக் கூத்தாடி அருளும் மன்றின்
கோலத்தைச் சீலத்தை ஞாலம் எங்கும்
. கொண்டாடி மகிழ்வுடனே கொள்சத் சங்கம்
காலத்தே கழல்பணிந்து கொள்வாய் தஞ்சம்
. கட்டவிழா துயிர்போகும் முன்னே நெஞ்சே! ... 5

கணபதியே முழுமுதலாம் காண பத்யம்
. கனகவேலன் முழுமுதலாய்க் காண்கௌ மாரம்
மணியிரவி முழுமுதலாய்க் காணும் சௌரம்
. மாலவனே எல்லாமாம் வைண வர்கள்
மணிவல்லி உமைமுதலாய்க் காணும் சாக்தர்
. வாழ்முதலாய் ஈசனருள் நாடும் சைவர்
அணவுவரே வேதநெறி பொதுவாய்க் கொண்டே
. ஆரணத்தின் காரணனை அறிவாய் நெஞ்சே! ... 6

ஆற்றுவெள்ளத் தண்மையெனக் குளிரும் அத்தன்
. ஆதவனின் வெம்மையெனக் கனலும் பித்தன்
ஊற்றெடுக்கும் உண்மையெனக் காணும் சித்தன்
. உள்ளத்தில் ஞானவொளி அருளும் நித்தன்
கூற்றுதைத்து பாலகனைக் காத்த முத்தன்
. கூத்தனெனும் பேர்கொண்டே ஆடும் மத்தன்
ஈற்றினிலே அருவமெனக் காணும் சத்தன்
. ஈசனருள் வேள்மோனம் பயில்வாய் நெஞ்சே! ... 7

[முத்தன்: இயல்பாகவே பாசங்கள் நீங்கிய சிவபிரான்;
சத்தன்: அருவத் திருமேனி கொண்ட சிவன்]

இலங்கைக்கோ வாளரக்கன் கயிலை வெற்பை
. இருபதுகை பதின்தலையால் சற்றே பேர்க்க
மலைமகளும் அச்சமுற்று நோக்க ஈசர்
. வட்டாடல் விளையாட்டை நிறுத்தி விட்டு
நலமுறவே கால்விரலால் நையச் செய்தே
. நாள்நீட்டி வாள்தந்தார் துதியைக் கேட்டே
கலங்காது வினைப்பயனை வாழ்வில் துய்க்கக்
. கறைமிடற்றோன் கழல்பணிந்தே உய்வாய் நெஞ்சே! ... 8

[வட்டாடல்: இராவணன் கயிலை மலை பேர்க்க முயன்றபோது சிவனும் உமையும்
வட்டாடல் விளையாட்டில் லயித்திருந்திருந்தர் என்று முனைவர் நா.கணேசன் கண்டறிந்தார்:
https://groups.google.com/g/minTamil/c/sc0GQEsf-zo/m/ZR04OY50FksJ]

படைப்பவனா காப்பவனா மேலோன் என்றே
. பலமாக மாலயனும் வாதம் செய்ய
நெடுந்தணலே தூணாக ஈசர் நிற்க
. நிழலடியை திருமுடியை இவர்கள் தேடி
அடையாதே பிறப்பிலியின் உண்மை காண
. அருள்செய்தே ஆட்கொண்ட அண்ணா வெற்பர்
கடலலையாய் மீள்பிறவி களைவ தற்கே
. கண்ணுதலார் தாள்பணிந்தே கனிவாய் நெஞ்சே! ... 9

மேனாட்டார் நெறிகளிலே சென்று வீழ்வோர்
. விடுதலையை ஒருபிறப்பில் கொள்வ தில்லை
தானாக வருவதிலை தீதும் நன்றும்
. தன்வினையால் வருவதெனும் உண்மை சுட்டும்
மீனாட்சி சுந்தரரின் வேத தர்மம்
. வீடுபெற விழைவோர்க்கே ஏற்ற தாகும்
நானாளும் அகந்தைதனை நீக்கு தற்காம்
. ஞானத்தை ஈசரிடம் தெளிவாய் நெஞ்சே! ... 10

கடைக்காப்பு
பிரதோஷத் திருநாளில் ஈசன் காணல்
. பிறவிகளை வேரறுக்கும் காட்சி ஆகும்
பிரகாரம் உலவிவர விடைமேற் காணல்
. பேணுகின்ற நன்மைகளை வாழ்வில் சேர்க்கும்
வருவினைகள் இம்மையிலே வலிமை குன்றி
. மாய்வதற்கு வரம்வேண்டி அம்மை யப்பர்
உருவத்தை உள்வைத்தே தினமும் போற்ற
. உய்வதற்காம் வழிபிறக்கக் காண்பாய் நெஞ்சே!

★★★★★

sai...@gmail.com

unread,
Jan 17, 2022, 12:45:12 AM1/17/22
to சந்தவசந்தம்
இந்நூலில் தாண்டக யாப்பு பற்றிப் பல தகவல்கள் கண்டேன்.
https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU1jZQy/TVA_BOK_0006797_தமிழிசைப்_பேரகராதி_djvu.txt


On Thursday, January 6, 2022 at 9:18:14 PM UTC+5:30 பசுபதி wrote:

sai...@gmail.com

unread,
Jan 17, 2022, 8:07:36 AM1/17/22
to சந்தவசந்தம்
வணக்கம். அறிஞர்கள் விளக்கக் கோருகிறேன்.

யாப்பருங்கல விருத்தியுரை தரும் தாண்டக இலக்கணம் கீழ்க்கண்டவாறு:
• 27 முதலாக உயர்ந்த எழுத்தடிகள்
• எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியற் தாண்டகம்.
• எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம்.

அளவியற் தாண்டவச் சான்றாகக் காணும் பாடல்:

வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்
. மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்
தேனுலவு நறுமுல்லை முறுவல் ஈனத்
. திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக்
கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்
. கவினியவாய்ச் சார்ந்துகார் கலந்து கண்ணார்
மானிலவு மடநோக்கின் நெடிய வாட்கண்
. வனமுலையாய்! மற்றுமனம் வருந்தல் நீயே.

இப்பாடலில் அடிக்கு 27 எழுத்துகள் வந்தபோதிலும் குருவும் லகுவும் எண்ணிக்கையில் ஒத்து வரவில்லையே?  குரு-லகு ஒத்துவரும் தானதனா தானதனா தான தன்ன போன்ற சந்தங்களில் அரையடிக்குப் பன்னிரண்டு, அடிக்கு 24 எழுத்துகளே வருகின்றனவே? 

அன்புடன்,
ரமணி

Pas Pasupathy

unread,
Jan 17, 2022, 8:26:16 AM1/17/22
to Santhavasantham
என் நூலில் ப.291 -இல் இது உள்ளது.

கூவிளங்காய் புளிமாங்காய் புளிமா தேமா
  கருவிளங்காய் கூவிளங்காய் புளிமா தேமா   ( ப.187) 
என்ற வாய்பாடு. 

எல்லா அடிகளும்  எழுத்திலும், சீர்வாய்பாட்டிலும், குரு-லகு எண்ணிக்கையிலும்   ஒத்து வருகின்றனவே? நீங்கள் சொல்வது புரியவில்லை. 

On Mon, 17 Jan 2022 at 08:07, sai...@gmail.com <sai...@gmail.com> wrote:
வணக்கம். அறிஞர்கள் விளக்கக் கோருகிறேன்.

யாப்பருங்கல விருத்தியுரை தரும் தாண்டக இலக்கணம் கீழ்க்கண்டவாறு:
• 27 முதலாக உயர்ந்த எழுத்தடிகள்
• எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியற் தாண்டகம்.
• எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம்.

அளவியற் தாண்டவச் சான்றாகக் காணும் பாடல்:

வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்
. மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்
தேனுலவு நறுமுல்லை முறுவல் ஈனத்
. திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக்
கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்
. கவினியவாய்ச் சார்ந்துகார் கலந்து கண்ணார்
மானிலவு மடநோக்கின் நெடிய வாட்கண்
. வனமுலையாய்! மற்றுமனம் வருந்தல் நீயே.

இப்பாடலில் அடிக்கு 27 எழுத்துகள் வந்தபோதிலும் குருவும் லகுவும் எண்ணிக்கையில் ஒத்து வரவில்லையே?  குரு-லகு ஒத்துவரும் தானதனா தானதனா தான தன்ன போன்ற சந்தங்களில் அரையடிக்குப் பன்னிரண்டு, அடிக்கு 24 எழுத்துகளே வருகின்றனவே? 

அன்புடன்,
ரமணி



sai...@gmail.com

unread,
Jan 17, 2022, 8:46:33 AM1/17/22
to சந்தவசந்தம்
அரையடி எழுத்துகளை லகு, குரு என்று அலகிட்டேன், இதுபோல். தவறோ? மாத்திரை அளவில் ஒத்து வருமோ?


வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்
குலலல லலகுல லலல குகு

. மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்
. லலலலகு குலலகு லகுல குகு

Siva Siva

unread,
Jan 17, 2022, 12:11:43 PM1/17/22
to santhavasantham
In that book:
Page 345 has the entry for "panjamam".
Traditionally it is sung in Ahiri ragam - but the entry lists some other ragam(s)!




Pas Pasupathy

unread,
Jan 17, 2022, 4:14:18 PM1/17/22
to Santhavasantham
சொற்புணர்ச்சி+ ஐகாரக் குறுக்கம் ( = இதில் குறில்/லகு )
இவற்றின் பின் :

வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால் = 13 எழுத்து

குலலல      லலகுல          லலல  குகு
. மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத் = 14 எழுத்து
. லலலலகு          குலலகு       லகுல   குகு
தேனுலவு நறுமுல்லை முறுவ லீனத்

குலலல     லலகுல          லலல  குகு
. திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக்
 லலலலகு               குலலகு        லகுல    குகு
கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்
 குலலல     லலகுல              லலல குகு
. கவினியவாய்ச் சார்ந்துகார் கலந்து கண்ணார்
 லலலலகு              குலலகு         லகுல   குகு
மானிலவு மடநோக்கி நெடிய வாட்கண்

குலலல     லலகுல        லலல    குகு
. வனமுலையாய்! மற்றுமனம் வருந்த னீயே

  லலலலகு                குலலகு        லகுல  குகு

 இது அளவியல் தாண்டகம் தானே?   இதில் தவறிருந்தால் சுட்டவும்.

--

sai...@gmail.com

unread,
Jan 17, 2022, 10:44:04 PM1/17/22
to சந்தவசந்தம்

இப்போது புரிந்துகொண்டேன், பசுபதி ஸார். ஒவ்வோர் அடியிலும் 17-லகு, 10-குரு என்று அளவொத்து வருகிறது, எனவே அளவியற் றாண்டகம்.
ஒவ்வோர் அடியிலும் குருவும் லகுகும் தம்முள் எண்ணிக்கை அல்லது மாத்திரை அளவில் ஒத்து வர வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டது தவறு.

அன்புடன்,
ரமணி

sai...@gmail.com

unread,
Jan 20, 2022, 9:57:50 AM1/20/22
to சந்தவசந்தம்
#ரமணிசிற்_அளவழித்தாண்டகம்
#ரமணி_தைப்பூசம்
சிற்றிலக்கிய இலக்குகள்
சிற்.012. அளவழித் தாண்டகம்
தைப்பூசத் துதி
தாண்.03. முருகாவென்றால் வருவாய்!
(குருநாதன் ரமணி)
.
காப்பு
(நேரிசை வெண்பா)
கரியின் உருவெடுத்துக் கன்னி வெருளத்
திருமணம் தம்பிக்குச் செய்தாய் — முருகன்
துதியாய்நான் தாண்டகம் சொல்லமுக் கண்ணா
பதம்தந் தருள்வாய் பயன்.
.
நூல்
(அளவழித் தாண்டகம்)
(எண்சீர் விருத்தம்: காய் காய் மா தேமா இரட்டித்து:
. அடிக்கு 27 எழுத்துகள், குரு-லகு ஒவ்வாது)
.
சீரழிந்த அக்கனியும் சிவனார் விந்தை
. திறமையுடன் தாங்குவதற் கிலையா மென்று
நீரருளாய் வினைகளெலாம் கொள்ளும் கங்கை
. நிறைவிலங்கக் காப்பதற்குக் கொடுத்த போதில்
தாரகையில் கங்கையவள் பலநாள் தாங்கி
. சரவணத்துப் பொய்கையிலே விழச்செய் தாளே
பேரழகன் சுப்ரமணிப் பெயரைக் கொண்டே
. பெருமானின் மகனெனவே பிறந்தாய் போற்றி! ... 1
.
சூரியனை விஞ்சுகின்ற சுடராய் நின்ற
. சுப்ரமணி குரலெடுத்து அழுகை காட்ட
வாரியணைத் தெடுகிருத்தி கைமீன் பெண்டிர்
. வனமுலையின் அமுதூட்டி வளர்த்தே வந்தார்
ஆரணனும் அக்கினிக்குத் தகவல் சொல்ல
. அவன்முடுகிச் செலும்-ஆட்டில் இவர்ந்தே வந்தான்!
காரிருளை நீக்கவந்த குழந்தை யென்று
. கார்த்திகேயன் எனும்பெயரில் களித்தாய் போற்றி! ... 2
.
அக்கினியும் வானதியும் திருமால் சேர
. அருவுருவன் உமையவளும் வந்து காண
இக்குழந்தை நம்மனைவர்க் குரிய தென்றே
. இளம்பிறையர் எடுத்துரைக்க ஆறு பேராம்
அக்கினிக்கு பாவகியாம் குமரன் கங்கை
. அலைமகளுக் கொருபெயராய்க் கந்தன் என்றும்
எக்கணமும் சரவணனாய்க் கார்த்தி கேயன்
. ஈசனுக்குக் குகனெனவாம் மகனே போற்றி! ... 3
.
தாரகன்றன் தவத்தாலே வரம்பெற் றானே
. தானவனின் மரணமொரு குழந்தை யாலே
காரணனின் திருமகனாம் கந்த னால்-அக்
. காரியமும் நிறைவுபெறக் குழந்தை தன்னை
ஆரணனும் மாலவனும் விடையோன் சேர
. அறுமுகனை தேவர்படைத் தலைவ னாக்கச்
சூரனைக்கொன் றழிக்கவரும் பிள்ளை யாகச்
. சுடர்வேல வனாயெழுந்தாய் குகனே போற்றி! ... 4
.
பிரமதக ணச்சேனை குகனுக் கென்றே
. பிரம்மனுடன் பெருமாளும் அரியும் தந்தார்
கருடன்தன் மகனான மயிலைத் தந்தான்
. கதிரவன்தன் மகனெனவே சேவல் தந்தான்
எரிகடவுள் மூவிலையாம் வேலைத் தந்தான்
. தேவகுல குருவருளின் பரிசாய்த் தண்டம்
கரகத்தைக் கங்கையன்னை உமையாள் ஆடை
. கறைமிடற்றர் ஒருபதக்கம் தந்தார் போற்றி! ... 5
.
வானவரும் தானவரை அழைத்தார் போர்க்கண்
. வரையளவாய் வளர்படைகள் ஆர்ப்ப ரிக்க
தானவரின் சேனையிலே மகிடன் பாணன்
. தாரகனும் உடன்பிறந்தார் குமாரர் என்றே
வானுலகம் மண்ணுலகம் அறியாப் போரில்
. வரர்பகைவர் யாவருமே மடிந்தார் வீழ்ந்தே
ஞானியரும் மானிடரும் விடிவு கண்டார்
. ஞானகுரு முருகனேவுன் கழல்கள் போற்றி! ... 6
.
மாங்கனியேன் தரவில்லை எனவோர் லீலை
. மலைப்பழனி மிசையமர்ந்த ஆண்டிக் கோலம்
தாங்கவொணாத் துயர்விளைத்த சூரன் போன்ற
. தயித்தியரின் குலமழித்த செந்தூர் வேலன்
ஓங்குபரங் கிரிமனையாள் தெய்வ யானை
. உயர்தணிகை மலையமர்ந்த வள்ளி கேள்வன்
ஓங்காரப் பொருளுரைத்த சுவாமி நாதன்
. ஔவையையாட் கொளுமலையின் அழகா போற்றி! ... 7
.
வேலவனின் வேற்பெருமை நவின்றால் வீர
. வேலதுவாம் அழித்ததுவே பகையை வெற்றி
வேலதுவாம் சமர்களிலே கொண்ட தீர
. வேலதுவாம் எளியவரைப் புரக்கும் சக்தி
வேலதுவாய் உமையன்னை கொடுத்தாள் வஜ்ர
. வேலதுவாம் மனவலிமை தருமே ஞான
வேலதுவாம் சாதனையின் ஒளியாம் காக்கும்
. வேலதுவாம் குமரகுரு கழல்கள் போற்றி! ... 8
.
மயிலவனின் மயில்பற்றிச் சொன்னால் ஊர்தி
. மயிலெனவே கருடனிந்த்ரன் தந்தார் சூரன்
மயிலெனவே ஆட்கொண்டான் குமரன் தோகை
. மயிலெனவே உலகமெலாம் ஊர்ந்தான் காக்கும்
மயிலெனவே எமனச்சம் நீக்கும் பொன்னின்
. மயிலெனவே கரிமுகனும் தந்தான் ஞான
மயிலெனவே ஓங்காரம் விளக்கும் நாத
. மயலெனவே ரசமணியாய் நோய்கொள் போற்றி! ... 9
.
சரவணனே சண்முகனே காப்பாய் போற்றி
. சக்தியுமை மடிதவழும் குமரா போற்றி
குருபரனே ஞானவொளி சேர்ப்பாய் போற்றி
. குகனமுதா சிவகுருவே ஆட்கொள் போற்றி
இருமனையாள் உடன்காணும் கந்தா போற்றி
. இகப்பிறப்பின் வேரறுத்தே அருள்வாய் போற்றி
முருகாவென் றேயழைக்க வருவாய் போற்றி
. முழுமுதலே பரம்பொருளே போற்றி போற்றி! ... 10
.
18-20 ஜன. 2022
தகவல் உதவி
purANic Encyclopaedia: vettam maNi
கந்த சஷ்டி சொற்பொழிவுகள்
வேலின் சிறப்பு
https://www.mail-archive.com/search?l=thatha...@googlegroups.com&q=subject:"வேல்+வழிபாடு%5C%21"&o=newest&f=1
மயிலின் சிறப்பு

★★★★★
 

Pas Pasupathy

unread,
Jan 20, 2022, 10:18:46 AM1/20/22
to Santhavasantham
>>ஒவ்வோர் அடியிலும் 17-லகு, 10-குரு என்று அளவொத்து வருகிறது, எனவே அளவியற் >>றாண்டகம்.

யா. -இன் இந்த எடுத்துக் காட்டைப் பார்த்தால்,  அடிதோறும் அதே லகு-குரு வாய்பாடு வந்தால்,  அதுவே அளவொத்து வருதல், அதனால்  பாடல் அளவியல் தாண்டகம்  ஆகிறது என்று தோன்றுகிறது. விருத்தத்தில் சீர் வாய்பாட்டை நாம் பார்ப்பது போல். 


Reply all
Reply to author
Forward
0 new messages