27 எழுத்து இலக்கணம் யா.கலம் காலத்தில் தான் வந்தது.
வடமொழித் தாக்கம் என்பர்.
(ஏன் 27? 27 எழுத்தடி = பாடலில் 108 எழுத்துகள் என்பதால் என்பது என் கருத்து )
அப்பர் காலம் அதற்கு 3-4 நூற்றாண்டுகளுக்கு முன். . அவற்றில் அடி எழுத்துகள் 27-க்கு குறைந்தும், மிக்கும் வருகின்றன. அதனால் அப்பரின்
‘திருத்தாண்டகம்’ வடமொழித் தாண்டகத்திலிருந்து வேறுபட்டது.
/ வடமொழியில் தண்டகம் என்பது ஒருவகை செய்யுள் யாப்பு. அதனடியாகப் பிறந்தது தமிழில் தாண்டகம் என்னும் யாப்பு வடிவம். இது ஒரு சிற்றிலக்கிய வகையும் ஆகும். /I do not think this is correct.I believe this is a native Tamil meter and has no connection to the Dandakam of Sanskrit.



http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm
தாண்டக விளக்கம்:
இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.
யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.
பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையிலிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், 'அறுசீரேனும்', 'எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யுளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.
இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.
"மூவிரண் டேனும் இருநான் கேனும்
சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"
என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)
"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்
கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே"
என்பது பல்காயனார் வாக்கு.
"மங்கல மரபின் மானிடர் கடவுளர்
தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"
"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"
என்பன மாபூதனார் நூற்பாக்கள்.
"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி
நேரடி வருவது தாண்டகம் ஆகும்"
என்பர் சீத்தலையார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.
அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகரமும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவினைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.
ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்த யாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.
எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும்.1
தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள்ளார். கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.
https://mohanawritings.blogspot.com/2011/07/blog-post.html
செவ்வாய், 5 ஜூலை, 2011
மோகனா - (முனைவர்ப் பட்ட ஆய்வாளர் - தமிழிலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)
=======

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMSOOD5cmR%3D%2BO1ZLSAWYJKWB_CQX8AVr0QZ-p0R7_UiPQ%40mail.gmail.com.
தேடியதில்
கண்ட ஒரு
பாடல்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60400&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
அப்பர்
தேவாரம் - 6.40.1
அலையடுத்த
பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு
..
அமரர்கள்தந்
தலைகாத்த ஐயர் செம்பொன்
சிலையெடுத்து
மாநாகம் நெருப்புக் கோத்துத்
..
திரிபுரங்கள்
தீயிட்ட செல்வர் போலும்
நிலையடுத்த
பசும்பொன்னால் முத்தால்
நீண்ட
.. நிரைவயிரப்
பலகையாற் குவையார்த்
துற்ற
மலையடுத்த
மழபாடி வயிரத் தூணே
..
யென்றென்றே
நானரற்றி நைகின் றேனே.
Letter counts:
Line-1 = 15+13
= 28
Line-2 = 12+12 = 24
Line-3 = 13+14 = 27
Line-4 = 14+11 = 25
அப்பர் தேவாரம் - 6.1.1
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
.. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
.. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
.. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
அடிகளில் எழுத்தெண்ணிக்கை:
12+14 = 26
12+13 = 25
13+15 = 28
13+11 = 24
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvALAj0iDx%2BPPX_kLkr1BwN08vNZKpRWTCojfwrvAG_gdUg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMiNDS8tSoUALVCBB1sL4jToBHyBqZG8cGpjXwntiEGUQ%40mail.gmail.com.
வணக்கம். அறிஞர்கள் விளக்கக் கோருகிறேன்.யாப்பருங்கல விருத்தியுரை தரும் தாண்டக இலக்கணம் கீழ்க்கண்டவாறு:• 27 முதலாக உயர்ந்த எழுத்தடிகள்
• எழுத்தும் குருலகுவும் ஒத்து வருவன அளவியற் தாண்டகம்.
• எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம்.அளவியற் தாண்டவச் சான்றாகக் காணும் பாடல்:வானிலவி முகிலார்ப்ப மருவி மாண்பால்
. மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்
தேனுலவு நறுமுல்லை முறுவல் ஈனத்
. திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக்
கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்
. கவினியவாய்ச் சார்ந்துகார் கலந்து கண்ணார்
மானிலவு மடநோக்கின் நெடிய வாட்கண்
. வனமுலையாய்! மற்றுமனம் வருந்தல் நீயே.இப்பாடலில் அடிக்கு 27 எழுத்துகள் வந்தபோதிலும் குருவும் லகுவும் எண்ணிக்கையில் ஒத்து வரவில்லையே? குரு-லகு ஒத்துவரும் தானதனா தானதனா தான தன்ன போன்ற சந்தங்களில் அரையடிக்குப் பன்னிரண்டு, அடிக்கு 24 எழுத்துகளே வருகின்றனவே?அன்புடன்,ரமணி
--