பாடல்: சென்னிகுல நகர் வாசன்
வரிகள்: அண்ணாமலை ரெட்டியார்
ராகம்: காவடிச் சிந்து
தாளம்: ஆதி
சென்னிகுல நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அணணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்புனை
தீரன் அயில் வீரன்
வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்வர
வாதே சொல்வன் மாதே
சன்னிதியில் துஜஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்
கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி
காண்பார் இன்பம் பூண்பார்.
மேதகையாரின் பாடலில், முடுகியலில் வல்லின வண்ணம் பயின்று வருவதாலும்,
நான் மெல்லின இடையின வண்ணம் வர தொடுத்ததாலும் உச்சரிப்பில் வேறுபாடு
தெரிகிறதேயன்றி, சந்தக்குறை இருப்பதாகத் தெரியவில்லை ஐயா!
பெரியோர்கள்தாம் ஆய்ந்துரைக்க வேண்டும்!
On 10/27/15, N. Ganesan <
naa.g...@gmail.com> wrote:
>
>
> On Tuesday, October 27, 2015 at 7:16:08 AM UTC-7, Trichy Pulavar
> Ramamoorthy wrote:
>>
>> ஓரடி குறைகிறதே!
>>
>
> இரண்டிரண்டு அடிகளுக்கு ஒரே எதுகையை அண்ணாமாலி ரெட்டியாரின் பாடலில்
> காண்கிறேன்.
>
> நா. கணேசன்
>
>
>> தன்னத் தனதனத் தானா- தன
>> தான தனத்தனத் தானா - தன
>> தனனானன தனனானன தனனானன தனனானன
>> தானத் தனத்தனத் தானா - தன
>> தந்தனத் தானனத் தானா.
>> என்பது சந்தக் குழிப்பு.
>> நாட்டு நலந்தனைக் காத்தார்!;- அவர்
>> நல்லவர் கூட்டத்தைச் சேர்த்தார் - இனி
>> நடவாதவர் படையாடல்கள் நடவாதவர் தடைவேலைகள்
>> நம்மவரே இங்கு வாரீர்! -என்ற
>> நல்லவர் பக்கமே சேரீர் !
>>
>> என்று அமைந்தால் நல்லது!
>> பிழையிருந்தால் பொறுத்தேற்க!
>> அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
>>
>> 2015-10-27 13:56 GMT+05:30 Bharathi Pitthan <
bharath...@gmail.com
>> <javascript:>>:
>>> email to
santhavasanth...@googlegroups.com <javascript:>.
>>> <javascript:>.