மதிசூடி துதிபாடி - 17

538 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 22, 2024, 9:58:14 AM3/22/24
to santhavasantham

மதிசூடி துதிபாடி - 17

Starting a new thread with a higher sequence number.

(The total message count in the earlier thread is in the high 600s as of now.

The prior thread is - மதிசூடி துதிபாடி - 16 : 

https://groups.google.com/g/santhavasantham/c/rgybradQdQ4?hl=en

===============

2017-12-25

பேரூர்

-----------

(நாலடித் தரவு கொச்சகக்கலிப்பா)


1)

திருமலியும் தமிழ்பாடிச் சேவித்தார் இடர்தீர்ப்பான்

அருமறையின் பொருள்விரிக்க ஆலநிழல் அமர்ந்தபிரான்

கருமுகிலின் வண்ணத்தைக் கண்டத்திற் காட்டுமரன்

பெருமதில்சூழ்ந் தழகாரும் பேரூரெம் பெருமானே.


2)

போதையடி இட்டுமிகப் போற்றிடுவார் இடர்தீர்ப்பான்

வாதையுறு வானவர்கள் வாழவிடம் உண்டபிரான்

சீதமலி கங்கைநதித் திரைமோது செஞ்சடையான்

பேதையொரு பங்கமரும் பேரூரெம் பெருமானே.


போது - பூ;

வாதை - துன்பம்;

உறுதல் - அனுபவித்தல்;

சீதம் - குளிர்ச்சி;

திரை - அலை;

பேதை - பெண் - உமை;


3)

அரியதமிழ் பாடியடி அடைந்தார்தம் இடர்தீர்ப்பான்

திரியரணம் மூன்றெய்யச் சிலையாக மலைவளைத்தான்

வரியரவ அரைநாணன் வார்சடைமேல் மதிசூடி

பெரியவிடை ஒன்றேறும் பேரூரெம் பெருமானே.


V. Subramanian

Siva Siva

unread,
Mar 23, 2024, 9:03:51 PM3/23/24
to santhavasantham

4)

பன்னியிரு பாதமலர் பணிவார்தம் இடர்தீர்ப்பான்

மின்னலென முப்புரிநூல் மிளிர்மார்பில் வெண்ணீற்றன்

தன்னிகரில் தலைவன்முன் தக்கன்செய் வேள்விசெற்றான்

பின்னுசடைப் பிறைசூடி பேரூரெம் பெருமானே.


பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்;


5)

மறவாது நாள்தோறும் வழிபடுவார் இடர்தீர்ப்பான்

இறவாது மார்க்கண்டர் இருக்கநமன் தனையுதைத்தான்

மறையோது திருநாவன் மலைமங்கை மணவாளன்

பிறவாத பெருமையினான் பேரூரெம் பெருமானே.


6)

கடிமலரிட் டடிவாழ்த்தும் காதலர்தம் இடர்தீர்ப்பான்

துடிபறைகள் பலவார்க்கச் சுடலைதனில் நடமாடி

கடியவிடை ஊர்தியினான் காமனைக்காய் கண்ணுதலான்

பிடிநடையாள் ஒருபங்கன் பேரூரெம் பெருமானே.


(ஆர்த்தல் - ஒலித்தல்);

(கடி - விரைவு);

(காய்தல் - கோபித்தல்; எரித்தல்);

(பிடி - பெண்யானை);


V. Subramanian

Siva Siva

unread,
Mar 27, 2024, 9:40:40 AM3/27/24
to santhavasantham

7)

அறைகழலை அனுதினமும் அருச்சிப்பார் இடர்தீர்ப்பான்

மறைமுதல்வன் அந்தகனை மாய்த்ததிரி சூலத்தன்

கறையொளிரும் கண்டத்தன் களிற்றுரிவை போர்த்தபிரான்

பிறைமதியைச் சடைக்கணிந்த பேரூரெம் பெருமானே.


8)

நித்த(ம்)மலர் தூவியடி நினைவார்தம் இடர்தீர்ப்பான்

பத்துமுடி அரக்கனையோர் பாதவிரல் இட்டடர்த்தான்

மத்த(ம்)மதி திகழ்முடிமேல் வாளரவும் வைத்துகந்த

பித்தனெனும் பேருடையான் பேரூரெம் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


9)

கண்ணிபல புனைந்தேத்திக் கைதொழுவார் இடர்தீர்ப்பான்

மண்ணிடந்த மாயவனும் வானிலுயர் மலரோனும்

நண்ணலரும் சோதியினான் நால்வேதப் பொருளானான்

பெண்ணிடமாம் பெற்றியினான் பேரூரெம் பெருமானே.


V. Subramanian


On Sat, Mar 23, 2024 at 9:03 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Mar 28, 2024, 10:12:30 AM3/28/24
to santhavasantham

Final 2 songs of this padhigam:


10)

நெற்றிமிசை நீறணிந்து நினைவார்தம் இடர்தீர்ப்பான்

குற்ற(ம்)மிகு மொழிபேசிக் கூட்டஞ்சேர் கொள்கையினார்

சற்றுமறி யாத்தலைவன் தண்மதிசேர் தாழ்சடையன்

பெற்றமிவர் பெருமையினான் பேரூரெம் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

(பெற்றம் - எருது); (இவர்தல் - ஏறுதல்);


11)

பண்தங்கு பாடலினால் பரவிடுவார் இடர்தீர்த்து

விண்தங்கு வாழ்வளிப்பான் விரிசடைமேல் வெண்பிறையன்

கண்தங்கு நெற்றியினாற் காமனைமுன் காய்ந்தபிரான்

பெண்தங்கு மேனியினான் பேரூரெம் பெருமானே.


V. Subramanian


On Wed, Mar 27, 2024 at 9:40 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 29, 2024, 3:30:59 AM3/29/24
to சந்தவசந்தம்
ஓம் நமசிவாய 🙏
பேரூரெம் பெருமானே சரணம் 🙏

On Thursday, March 28, 2024 at 7:42:30 PM UTC+5:30 Siva Siva wrote:

பண்தங்கு பாடலினால் பரவிடுவார் இடர்தீர்த்து

விண்தங்கு வாழ்வளிப்பான் விரிசடைமேல் வெண்பிறையன்

கண்தங்கு நெற்றியினாற் காமனைமுன் காய்ந்தபிரான்

பெண்தங்கு மேனியினான் பேரூரெம் பெருமானே.


V. Subramanian


On Wed, Mar 27, 2024 at 9:40 AM 

9)

Siva Siva

unread,
Mar 30, 2024, 10:00:04 AM3/30/24
to santhav...@googlegroups.com

2018-02-25

மாடம்பாக்கம்

-----------

(கலிவிருத்தம் - "விளம் விளம் மா கூவிளம்" என்ற வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - சொற்றுணை வேதியன்)


1)

தாமரை மலர்தனைச் சரமெ னத்தொடு

காமனைக் கண்ணுதல் காட்டிக் காய்ந்தவன்

தூமதிக் கண்ணியைச் சூடி மேயது

மாமதில் சூழ்தரு மாடம் பாக்கமே.


2)

திண்புயம் எட்டுடைச் செய்ய மேனியன்

தண்புனற் கங்கையைத் தாங்கு வேணிமேல்

வெண்பிறை சூடிய வேந்தன் மேயது

வண்புனற் கயமணி மாடம் பாக்கமே.


வண் புனற் கயம் அணி - வளம் மிக்க நீர் நிறைந்த குளம் திகழும்;


3)

அண்டிய அன்பருக் கருளும் அங்கணன்

பண்டெயில் மூன்றெரி பற்ற எய்தவன்

தெண்டிரைச் செஞ்சடைச் செல்வன் மேயது

வண்டறை பொழிலணி மாடம் பாக்கமே.


V. Subramanian


On Fri, Mar 29, 2024 at 3:31 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 1, 2024, 8:46:33 AM4/1/24
to santhav...@googlegroups.com

4)

கண(ம்)முழ வார்த்திடக் கானில் ஆடுவான்

உணவிலி பலிமகிழ் ஒருவன் செந்தழல்

வணன்நரை விடையமர் மன்னன் மேயது

மணமலர்ப் பொழிலணி மாடம் பாக்கமே.


5)

பொதுவினில் அருநடம் புரியும் பொற்பினன்

முதுமையும் அந்தமும் முதலும் அற்றவன்

மதிலொரு மூன்றெரி மைந்தன் மேயது

மதுமலர்ப் பொழிலணி மாடம் பாக்கமே.


6)

போர்விடை ஊர்தியன் போற்றி வான்தொழக்

கார்விடம் உண்டிருள் கண்டத் தெம்மிறை

ஏர்மலி வெண்பிறை இண்டை போல்திகழ்

வார்சடை யானிடம் மாடம் பாக்கமே.


V. Subramanian


On Sat, Mar 30, 2024 at 9:59 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Apr 2, 2024, 9:28:39 AM4/2/24
to santhav...@googlegroups.com

7)

நறைகமழ் கொன்றையன் நாகக் கச்சினன்

கறைமிட றுடையவன் காலன் மாய்ந்திட

அறைகழல் வீசிய அண்ணல் ஆல்நிழல்

மறைவிரித் தானிடம் மாடம் பாக்கமே.


8)

மால்கொடு மலையெறி வாள ரக்கனைக்

கால்விரல் வைத்தடர் கருணை மிக்கவன்

சேல்விழித் தேனுகை சேர்ந்த மேனியன்

வால்விடை யானிடம் மாடம் பாக்கமே.


* தேனுகாம்பாள் - மாடம்பாக்கத்தில் இறைவி திருநாமம்;

(வால் - வெண்மை);


9)

செழுமல ரானரி தேடி வாடிட

அழலென ஓங்கிய அண்ணல் வண்டமர்

குழலுமை பங்கினன் கொன்றைத் தாரினன்

மழவிடை யானிடம் மாடம் பாக்கமே.


V. Subramanian


On Mon, Apr 1, 2024 at 8:46 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Apr 3, 2024, 10:00:56 AM4/3/24
to santhav...@googlegroups.com

Final 2 songs of this padhigam:


10)

பலபல பொய்யுரை பதகர் சொல்கொளேல்

இலைமலர் கொடுதொழ இன்பம் நல்குவான்

அலைகடல் உமிழ்விடம் அமுது செய்தவன்

மலைமகள் கோனிடம் மாடம் பாக்கமே.


11)

நித(ம்)மன மகிழ்வொடு நெற்றி நீற்றராய்ப்

பதமலர் போற்றிடு பத்தர்க் கன்பினன்

மதகரி உரிசெய வல்ல மைந்தனூர்

மதுகரம் அறைபொழில் மாடம் பாக்கமே.


பிற்குறிப்பு :

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/new.php?id=34


V. Subramanian



On Tue, Apr 2, 2024 at 9:28 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
Apr 4, 2024, 8:30:00 AM4/4/24
to santhav...@googlegroups.com

2018-02-25

அவிநாசி (தேவாரத்தில் "புக்கொளியூர் அவிநாசி")

-----------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

(அப்பர் தேவாரம் - 5.90.1 - மாசில் வீணையும் மாலை மதியமும் )


1)

உதவி டாயென் றொருதொண்டர் வேண்டவும்

முதலை உண்டஅப் பாலனைத் தந்தவன்

முதலி லாதவன் முன்னெதிர் ஆனையின்

அதளைப் போர்த்த அவிநாசி அப்பனே.


"உதவிடாய்" என்று ஒரு தொண்டர் வேண்டவும் முதலை உண்ட அப் பாலனைத் தந்தவன் -

முதல் இலாதவன் -

முன் எதிர் ஆனையின் அதளைப் போர்த்த அவிநாசி அப்பனே -


2)

வந்து வன்றொண்டர் வாழ்த்த முதலையுண்

அந்த ணச்சிறு வன்தனைத் தந்தவன்

வெந்த வெண்பொடி பூசிய வித்தகன்

அந்தி வண்ணன் அவிநாசி அப்பனே.


V. Subramanian


On Wed, Apr 3, 2024 at 10:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

11)

Siva Siva

unread,
Apr 5, 2024, 8:18:20 AM4/5/24
to santhav...@googlegroups.com

3)

அம்பை எய்ம்மதன் ஆகம் எரித்தவன்

செம்பொன் மேனியன் தெண்டிரை வேணியன்

என்பும் பூண்டவன் இன்தமிழ் பாடிடும்

அன்பர்க் கன்பன் அவிநாசி அப்பனே.


4)

ஊறும் அன்பால் உருகும் அடியவர்

கூறும் யாவையும் ஏற்றருள் கொள்கையன்

நீறு பூசிய நெற்றியிற் கண்ணினன்

ஆறு சூடி அவிநாசி அப்பனே.


V. Subramanian


On Thu, Apr 4, 2024 at 8:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Apr 6, 2024, 9:59:36 AM4/6/24
to santhav...@googlegroups.com

5)

பல்லில் சென்று பலிதேர் பெருமையன்

அல்லல் செய்த அரண்பட மாமலை

வில்லிற் பாம்பினை வீக்கிய வித்தகன்

அல்லில் ஆடி அவிநாசி அப்பனே.


6)

தொண்டர் கட்குத் துணையென நிற்பவன்

அண்டி உம்பர் அடிதொழ நஞ்சினை

உண்ட கண்டன்பல் லூழிகள் கண்டவன்

அண்டர் அண்டன் அவிநாசி அப்பனே.


V. Subramanian


On Fri, Apr 5, 2024 at 8:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Apr 7, 2024, 7:48:40 AM4/7/24
to santhav...@googlegroups.com

7)

உச்சி மேலர வொண்மதி சூடிய

பிச்சன் ஆயிரம் பேருடைப் பிஞ்ஞகன்

நச்சி நாளும் நறுமலர் தூவினார்

அச்சம் தீர்க்கும் அவிநாசி அப்பனே.


8)

தானஞ் சாது தடவெற் பிடந்தவன்

கானஞ் செய்யக் கழல்விரல் ஊன்றினான்

வானஞ் செல்லும் மதியம் புனைந்தவன்

ஆனஞ் சாடும் அவிநாசி அப்பனே.


V. Subramanian


On Sat, Apr 6, 2024 at 9:59 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Apr 8, 2024, 6:45:50 PM4/8/24
to santhav...@googlegroups.com

இப்பதிகம் இம்மூன்று பாடல்களோடு நிறைவுறுகின்றது.


9)

பாரும் விண்ணும் பறந்தகழ்ந் தார்மயல்

தீரும் வண்ணம் திகழெரி ஆனவன்

ஊரும் பாம்பே ஒருபெருந் தாரென

ஆரும் மார்பன் அவிநாசி அப்பனே.


10)

வெஞ்சொல் பேசிடும் வீணர்க் கருளிலான்

செஞ்சொல் மாலைகள் செப்பி அனுதினம்

நெஞ்சில் அன்பால் நினையும் அடியரை

அஞ்சல் என்பான் அவிநாசி அப்பனே.


11)

துணிவெண் திங்களைச் சூடிறை கண்டத்தில்

மணியன் வண்தமிழ் மாலைகள் கொண்டடி

பணியும் அன்பர் பழவினை தீர்த்தவர்க்

கணியன் ஆவன் அவிநாசி அப்பனே.


துணி வெண் திங்களைச் சூடு-இறை -

கண்டத்தில் மணியன் -

வண்-தமிழ் மாலைகள் கொண்டு அடி பணியும் அன்பர் பழவினை தீர்த்து -

அவர்க்கு அணியன் ஆவன் அவிநாசி அப்பனே -


V. Subramanian


On Sun, Apr 7, 2024 at 7:48 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Apr 11, 2024, 9:22:20 AM4/11/24
to santhav...@googlegroups.com

2018-02-28

நணா (இக்காலத்தில் - பவானி)

----------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு; திருநேரிசை அமைப்பு )

(அப்பர் தேவாரம் - 4.49.1 - "ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்")


1)

விற்படை ஏந்திச் சென்று விசயனுக் கருள்செய் வேடர்

கற்சிலை கையில் ஏந்திக் கடியரண் மூன்றும் எய்தார்

பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் புலியின் தோலர்

நற்புனற் பொன்னிப் பாங்கர் நணாவுறை நாத னாரே.


(கல் - மலை); (சிலை - வில்); (கடி - கவல்);


2)

குறும்புசெய் நெஞ்ச னாகிக் குறுகிய மதன தாகம்

வெறும்பொடி ஆகு மாறு விழித்தருள் நெற்றிக் கண்ணர்

உறும்பிணி நீக்கி அன்பர்க் குறுதுணை ஆகி நிற்பார்

நறும்பொழில் புடைய ணிந்த நணாவுறை நாத னாரே.


(வெறுமை - Quality of being unmixed or pure; கலப்பின்மை);


3)

புதியவர் ஆயின் சாலப் புராதனர் மலர்கள் தூவித்

துதிசெயும் அன்பர்க் கன்பர் சுடலையில் ஆடும் பாதர்

மதியுடன் நாகப் பாம்பு வாழ்சடை உடையார் பொன்னி

நதியுடன் பவானி கூடும் நணாவுறை நாத னாரே.


V. Subramanian


On Mon, Apr 8, 2024 at 6:45 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Apr 12, 2024, 8:01:34 AM4/12/24
to santhav...@googlegroups.com

4)

ஆரியம் தமிழ்கொண் டேத்தி அடியிணை போற்றி னார்கள்

கோரிய வரங்க ளெல்லாம் கொடுத்தருள் செய்யும் வள்ளல்

ஏரியல் ஆலின் கீழே இருந்தறம் சொன்ன மூர்த்தி

நாரியைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


(ஏர் - அழகு; எழுச்சி);


5)

அஞ்செழுத் தோது மாணி ஆருயிர் தன்னைக் காத்து

வெஞ்சினக் கூற்று தைத்த விரைகமழ் கமல பாதர்

அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அவர்க்க ளித்து

நஞ்சினை உண்ட கண்டர் நணாவுறை நாத னாரே.


V. Subramanian


On Thu, Apr 11, 2024 at 9:22 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Apr 14, 2024, 8:30:21 PM4/14/24
to santhav...@googlegroups.com

6)

தரையினில் ஆழி கீறிச் சலந்தரன் தனைத்த டிந்தார்

அரையினில் அரவ நாணர் அழகிய திங்கள் கொன்றை

திரைமத மத்தம் நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர்

நரைவிடைப் பாகர் நன்னீர் நணாவுறை நாத னாரே.


(திரை - அலை; நதி);


7)

செங்கையில் ஓடொன் றேந்திச் சில்பலிக் குழலும் செல்வர்

கங்குலிற் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர்

சங்கரர் சீறும் பாம்பைத் தாரெனப் பூண்ட மார்பர்

நங்கையைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.


8)

முக்கணர் மலையைப் பத்து முடியுடை அரக்கன் பேர்த்த

அக்கணம் விரலொன் றூன்றி அடர்த்தழ வைத்த ஈசர்

மிக்கிகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர்

நக்கெயில் மூன்றெ ரித்து நணாவுறை நாத னாரே.


(மிகுதல் - செருக்குறுதல்);


V. Subramanian


On Fri, Apr 12, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Apr 16, 2024, 9:16:15 AM4/16/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:


9)

ஆனிரை மேய்த்தான் பூமேல் அயனிவர் மண்ண கழ்ந்தும்

வானிலு யர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி

மானிகர் நோக்கி பங்கர் மார்பினில் நூலர் என்றும்

ஞானியர் நெஞ்சை நீங்கார் நணாவுறை நாத னாரே.


(ஆனிரை - ஆன் நிரை - பசுக்கூட்டம்);


10)

புன்னெறி யாளர் சொல்லும் பொய்களில் மதிம யங்கேல்

முன்னறி வாளர் சென்று முத்திய டைந்த அந்தச்

செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார் கட்கு

நன்னெறி காட்டும் நம்பர் நணாவுறை நாத னாரே.


(அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே");


11)

பெண்ணினார் ஒருபால் போற்றிப் பெருந்துயர் தீரீ ரென்ற

விண்ணினார்க் கிரங்கி அன்று வியன்புரம் மூன்றை நாசம்

பண்ணினார் உள்நெ கிழ்ந்து பண்ணினார் தமிழ்கள் பாடி

நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நணாவுறை நாத னாரே.


(வியன் - பெருமை);


V. Subramanian


On Sun, Apr 14, 2024 at 8:30 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Apr 18, 2024, 11:20:54 AM4/18/24
to santhav...@googlegroups.com

2018-02-28

செங்கோடு (தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)

----------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு; திருநேரிசை அமைப்பு )

(அப்பர் தேவாரம் - 4.49.1 - "ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்")


1)

பூவினால் நற்றூ பத்தால் .. புனலினால் புரைதீர் செஞ்சொற்

பாவினால் போற்றும் அன்பர் .. பழவினை தீர்க்கும் பண்பன்

ஏவினால் முப்பு ரங்கள் .. எய்தவன் ஏற தேறி

தேவியோர் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(ஏ – அம்பு );

(சேண் - உயரம்; ஆகாயம்);


2)

கல்வியின் பயன றிந்து .. கற்றவர் போற்றும் ஈசன்

சொல்விர வின்ற மிழ்ப்பாச் .. சொல்லிய தொண்டர் தம்மை

வல்வினை தொடரா வண்ணம் .. மகிழ்ந்தருள் செய்ம்மா தேவன்

செல்வியோர் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


3)

வாயினில் நூலைக் கொண்டு .. வலையொரு சிலந்தி பின்ன

மாயிரு ஞாலம் ஆளும் .. மன்னவன் ஆக்கும் எந்தை

தாயினும் நல்லன் கையில் .. தழல்மழு சூலம் ஏந்தி

சேயிழை பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


V. Subramanian


On Tue, Apr 16, 2024 at 9:16 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Apr 20, 2024, 9:30:40 AM4/20/24
to santhav...@googlegroups.com

4)

வருந்திய வானோர் வந்து .. மலரடி வாழ்த்த நஞ்சை

அருந்திய கண்டன் நால்வர்க் .. கருமறை விரிக்க ஆல்கீழ்

இருந்தவன் ஓடொன் றேந்தி .. இரந்தவன் இமவான் பெற்ற

திருந்திழை பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


5)

மலைதனை ஒருவில் லாக்கி .. மாற்றலர் புரமூன் றெய்தான்

தலைமலி மாலை தன்னைத் .. தலைக்கணி தலைவன் ஆர்க்கும்

அலைமலி கங்கை தன்னை .. அஞ்சடை அடைத்த அண்ணல்

சிலைமகள் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(மாற்றலர் - பகைவர்);

(ஆர்த்தல் - ஒலித்தல்); (அம் - அழகு);

(சிலை - மலை);


6)

வாவியார் பங்க யம்போல் .. மலர்விழி மாலிட் டேத்த

ஓவிலா வென்றி ஆழி .. உகந்தருள் பெம்மான் கொக்கின்

தூவியார் சென்னித் தூயன் .. சுரும்பினம் அமரும் ஓதித்

தேவியோர் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(ஓவு - நீங்குதல்; முடிதல்); (வென்றி - வெற்றி);

(தூவி - இறகு);

(ஓதி - பெண்களின் கூந்தல்);


V. Subramanian


On Thu, Apr 18, 2024 at 11:20 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Apr 21, 2024, 10:42:57 AM4/21/24
to santhav...@googlegroups.com

7)

வில்விச யனுக்கு நல்க .. வேடனாய்ச் சென்ற வேந்தன்

வெல்விடை யான்வன் தொண்டர் .. வேண்டவும் ஆரூர் தன்னில்

நெல்விசும் பணாவத் தந்த .. நீர்மையன் மலையான் பெற்ற

செல்வியோர் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (நீர்மை - தன்மை; சௌலப்பியம்);


8)

போயிரு வரையி டந்தான் .. பொன்முடி பத்த டர்த்து

வாயிரும் புகழைப் பாட .. வாளொடு நாள ளித்தான்

ஆயிரம் பெயர்கள் உள்ளான் .. அரையினிற் புலியின் தோலன்

சேயிழை பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(இருமை - பெருமை); (இடத்தல் - பெயர்த்தல்);


9)

பெருந்தொடர் வாது செய்த .. பிரமனும் மாலும் நேட

அருந்தழல் ஆனான் போற்றி .. அடைமணி வாச கர்க்குக்

குருந்தமர் குரவன் ஆனான் .. கொடியன மென்ம ருங்குல்

திருந்திழை பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(குரவன் - குரு);

(அன – அன்ன – ஒத்த); (மருங்குல் - இடை);


V. Subramanian


On Sat, Apr 20, 2024 at 9:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Apr 22, 2024, 9:53:11 AM4/22/24
to santhav...@googlegroups.com

Final 2 songs of this padhigam:


10)

பலபல பொய்கள் சொல்லிப் .. பண்டைய நெறிநீங் கென்னும்

கலதிகட் கெட்டா எந்தை .. கண்ணுதல் கழலை வாழ்த்தி

வலம்வரும் அன்பர்க் கின்பம் .. மல்கிட அருளும் வள்ளல்

சிலைமகள் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(கலதி - தீக்குணம் உடையவன்);

(சிலை - மலை);


11)

நாவினால் அஞ்செ ழுத்தை .. நாள்தொறும் நவிற்றி னார்தம்

தீவினை ஆன தீர்த்துத் .. திருவருள் செய்யும் தேவன்

சேவினை விரும்பி ஏறி .. செங்கயல் அன்ன கண்ணி

தேவியோர் பங்க னூராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


(ஏறி - ஏறுபவன்);


V. Subramanian


On Sun, Apr 21, 2024 at 10:42 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
Apr 23, 2024, 8:01:54 AM4/23/24
to santhav...@googlegroups.com

2018-03-05

நாவலூர்

----------------------

(கலிவிருத்தம் - "மாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம்";

கட்டளை அடிகள். திருக்குறுந்தொகை போல் 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து")


1)

மல்லாரெண் தோளனை மேரு மலையென்னும்

வில்லானைத் தாள்தொழு பத்தர் வினைதீர்க்கும்

நல்லானை நான்மறை நாவனை நாவலூர்

வல்லானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே.


(மல் - வலிமை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்);


2)

மறையாரும் நாவனை நஞ்சை மகிழ்ந்துண்டு

கறையாரும் கண்டனைக் கண்ணிற் கனலானை

நறையாரும் கொன்றையந் தாரனை நாவலூர்

உறைவானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே.


V. Subramanian


On Mon, Apr 22, 2024 at 9:52 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Apr 24, 2024, 9:52:18 AM4/24/24
to santhav...@googlegroups.com

3)

இடமாது பங்கெனக் காட்டும் எழிலானைப்

படமாடு பாம்பணி கோனைப் படுகாட்டில்

நடமாடு செம்பொற் கழலனை நாவலூர்

இடமாக நின்றானை எண்ணு மடநெஞ்சே.


(படுகாடு - சுடுகாடு);


4)

எரியோர்கை ஏந்தியைப் பிச்சை இடுமென்று

திரிவானை முப்புரம் செற்ற சிலையானை

நரியாரும் காட்டினிற் கூத்தனை நாவலூர்

பிரியாத ஈசனைப் பேணு மடநெஞ்சே.


5)

ஆரூரர் தம்மையொர் ஆவணத் தாலாண்டு

பேரூர்முன் பித்தன் எனச்சொல் பெருமானை

நாரூறும் நெஞ்சினர்க் கன்பனை நாவலூர்க்

காரூரும் கண்டனைக் காதல்செய் நன்னெஞ்சே.


ஆரூரர்தம்மை ஒர் ஆவணத்தால் ஆண்டு -

பேர் ஊர்முன் பித்தன் எனச் சொல் பெருமானை -

நார் ஊறும் நெஞ்சினர்க்கு அன்பனை - (நார் - அன்பு);

நாவலூர்க் கார் ஊரும் கண்டனைக் காதல்செய் நன்னெஞ்சே -


V. Subramanian


On Tue, Apr 23, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Apr 25, 2024, 9:58:13 AM4/25/24
to santhav...@googlegroups.com

6)

மேகத்தின் வண்ணம் மிடற்றில் உடையானை

ஆகத்தில் நீறணி ஆரழல் அன்னானை

நாகத்தார் மார்பனை நாவலூர் நாதனைப்

பாகத்தோர் மாதுடை யானைப் பணிநெஞ்சே.


7)

வஞ்சஞ்செய் ஐம்புலன் வென்றவர் மார்க்கண்டர்

அஞ்சும்போ தாருயிர் காத்தருள் அண்ணலை

நஞ்சுண்ட கண்டனை நாவலூர் நாதனைத்

தஞ்சென்று சார்ந்து தமியறு நன்னெஞ்சே.


8)

வரைவீச வந்தவன் வாய்கள் அழவூன்று

விரலானை ஆனை உரித்த விறலானை

நரையாரும் ஏற்றனை நாவலூர் நாதனைத்

திரையாரும் ஆற்றனைச் சிந்தி மடநெஞ்சே.


V. Subramanian


On Wed, Apr 24, 2024 at 9:52 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 25, 2024, 10:30:56 AM4/25/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
அனைத்துப் பாடல்களும் அருமை
ஓர் ஐயம் குருவே 
மோனை சில பாடல்களில் இறுதி அடியில் 1,4 சீருக்குப் 
பதில் 1,3 வந்துள்ளதே?

On Thursday, April 25, 2024 at 7:28:13 PM UTC+5:30 Siva Siva wrote:

6)


தஞ்சென்று சார்ந்து தமியறு நன்னெஞ்சே.


8)


திரையாரும் ஆற்றனைச் சிந்தி மடநெஞ்சே.


V. Subramanian

Siva Siva

unread,
Apr 25, 2024, 10:42:09 AM4/25/24
to santhav...@googlegroups.com
Good question.

இப்பாடல்களில் 4-ஆம் சீரில்தான் மோனை வரவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.

By the way, in song-2 line-4 of this padhigam, I left it without mOnai (even though I could have used உன்னு instead of வாழ்த்து) so that it is similar to song-1 ending.

உறைவானை நாள்தொறும் வாழ்த்து மடநெஞ்சே /

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 25, 2024, 11:08:01 AM4/25/24
to சந்தவசந்தம்
நன்றி குருவே 🙏

/கலிவிருத்தம் - "மாங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம்";

கட்டளை அடிகள். திருக்குறுந்தொகை போல் 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்./

திருக்குறுந்தொகை என்பதால் , வெண்டளை வருவதால் மோனை இல்லாமல் இருக்கலாமா?

Siva Siva

unread,
Apr 25, 2024, 11:59:14 AM4/25/24
to santhav...@googlegroups.com
அப்படிக் கருத முடியாது.

திருக்குறுந்தொகையில் பதம் பிரித்து நோக்கும்பொழுது அடிகளில் உள்ள மோனை புலப்படும்.
ஆனால், ஒரோவழி மோனை இல்லாத அடிகளும் வரும்.

அப்பர் தேவாரம் - 5.1.3
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

அடி-3-இல்  மோனை இன்மையைக் காணலாம்.
அடி-2-இல் - எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் - என்று பிரித்து நோக்கில் மோனை புலப்படும்.

V. Subramanian


Ram Ramakrishnan

unread,
Apr 25, 2024, 12:02:05 PM4/25/24
to santhav...@googlegroups.com
சிறு ஐயம், திரு. சிவா.

கட்டளை அடிகளில் ஒற்று நீக்கிய எழுத்தெண்ணிக்கை முக்கியம் அல்லவா?

அவ்வாறெனின், மாச் சீரோ மாங்காய்ச்சீரோ விளச் சீருக்கு மாற்றாக வருமாயின் எழுத் தெண்ணிக்கை மாறாதா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 23, 2024, at 17:31, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP6cQQuRT54LR4FS4oyCbZK-zG_40tYq%3DtMf4yku0QrrQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Apr 25, 2024, 12:18:07 PM4/25/24
to santhav...@googlegroups.com
Good question.
One does need to pay attention to the last seer in a line in this case - to ensure letter count.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Apr 25, 2024, 12:20:47 PM4/25/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 25, 2024, at 21:48, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 27, 2024, 9:28:32 AM4/27/24
to santhav...@googlegroups.com

This padhigam concludes with these 3 songs.


9)

அக்காலம் மாலயன் நேட அழலாகி

மிக்கானை மேவலர் முப்புரம் வெந்திட

நக்கானை ஆவணத் தோடணி நாவலூர்ப்

புக்கானை நாள்தொறும் போற்றிப் புகழ்நெஞ்சே.


(நேடுதல் - தேடுதல்); (அழல் - தீ);

(மேவலர் - பகைவர்); (நகுதல் - சிரித்தல்);

(ஆவணம் - உரிமைப்பத்திரம்);


10)

அஞ்சாது பொய்யுரை அற்பர்க் கருளானைப்

பஞ்சாரும் மெல்லடிப் பாவையோர் பங்கனை

நஞ்சாரும் கண்டனை நாவலூர் நாதனைத்

துஞ்சாத சோதியை நித்தல் துதிநெஞ்சே.


(ஆர்தல் - ஒத்தல்);

(ஆர்தல் - உண்ணுதல்);


11)

கண்ணாரும் நெற்றிக் கடவுளைக் கார்க்குழற்

பெண்ணாரும் பாகனைப் பேணிற் பெருந்துன்பம்

நண்ணாமை தந்தருள் நாவலூர் நாதனைப்

பண்ணாரும் நற்றமிழ் பாடிப் பணிநெஞ்சே.


V. Subramanian


On Thu, Apr 25, 2024 at 9:57 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Apr 28, 2024, 8:00:29 AM4/28/24
to santhav...@googlegroups.com

2018-03-31

வக்கரை (திருவக்கரை)

-------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தான)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")


1)

வந்தன நரைதிரை வந்தன பிணிகளும் வலிமை குன்றிச்

சந்ததம் கவலையில் நொந்தனை; தீர்வழி சிந்தை செய்யாய்;

முந்தெயில் மூன்றெரி மூட்டிய மொய்ம்பனை மும்மு கத்து

மைந்தனை வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


* சந்திரமவுலீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்;


(திரை - தோற்சுருக்கம்);

(மொய்ம்பன் - வீரன்; மொய்ம்பு - வலிமை);

மும்முகத்து மைந்தனை - (திருவக்கரையில் சிவலிங்கத்தில் மூன்று முகங்கள் காணலாம்);


2)

நண்புடை யார்பலர் நானிலம் விட்டனர் நம்பு லன்கள்

பண்புகள் குன்றியோர் பாடையே றாமுனம் பற்ற தாகும்

வெண்பொடிப் பூசியை விண்ணவர் நாதனை மேகம் ஆரும்

வண்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


(நண்பு - அன்பு; சினேகம்; உறவு); (நானிலம் - பூமி);

(பற்று - பற்றுக்கோடு - ஆதாரம்; தஞ்சம்);


V. Subramanian


On Sat, Apr 27, 2024 at 9:28 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Apr 29, 2024, 9:03:40 AM4/29/24
to santhav...@googlegroups.com

3)

பார்மிசை வந்தபின் நாள்பல சென்றன பகட தேறிக்

கூர்மலி வேலொடு கூற்றடை யாமுனம் குஞ்சி மேலே

ஏர்மலி கொன்றையைச் சூடிய ஏந்தலை ஈடி லானை

வார்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


(பகடு - எருமைக்கடா; அது - பகுதிப்பொருள் விகுதி);

(குஞ்சி - தலை); (ஏர் - அழகு); (மலிதல் - மிகுதல்);


4)

குயிலன குஞ்சியும் கொக்கென ஆனது கூர்மை மிக்க

அயிலுடைத் தூதுவர் ஆவிகொல் லாமுனம் அண்டர் கோனை

மயிலன சாயலாள் மலைமகள் பங்கனை மழுவி னானை

வயலணி வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


(அன - அன்ன - போல);


V. Subramanian


On Sun, Apr 28, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
May 1, 2024, 10:28:45 AM5/1/24
to santhav...@googlegroups.com

5)

உரமலி தோள்களும் உறுதசை வற்றின உதற லோடு

சுரமலி நோய்களும் உடலடை யாமுனம் துரிசி லானைச்

சிரமலி மாலையைச் சென்னியிற் சூடிய தேவ தேவை

மரமலி வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


6)

மளமளென் றோடின மண்மிசை நாள்பல வயதும் ஏறித்

தளர்வடை யாமுனம் தண்புனல் தாங்கிய சடையி னானை

இளவிடை ஏறியை இருள்திகழ் கண்டனை ஈறி லானை

வளவயல் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


7)

புன்புலாற் குடிலெரிப் புக்கழி யாமுனம் புற்ற ராவை

என்பினை ஆரமா ஏற்றருள் ஈசனை எம்பி ரானை

வன்புலித் தோலனை மாமலை வில்லியை மாசி லானை

மன்புகழ் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


V. Subramanian


On Mon, Apr 29, 2024 at 9:03 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
May 3, 2024, 8:00:33 AM5/3/24
to santhav...@googlegroups.com

8)

திண்பொலி தேகமும் தேய்ந்துகோல் பற்றியே சென்றி டாமுன்

வெண்பொடிப் பூசியைத் தசமுகன் தனையடர் விரலி னானைக்

கண்பொலி நெற்றியாற் காமனை நீறெழக் காய்ந்த தேவை

மண்புகழ் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


9)

திரமிலா வாழ்க்கையில் தினமிடர் உற்றனை சிந்தி நன்றே

பிரமனும் மாயனும் நேடிய சோதியைப் பெரிய மூன்று

புரமெரி செய்யவோர் பொன்மலைச் சிலைதரி பொற்பி னானை

வரமருள் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


V. Subramanian


On Wed, May 1, 2024 at 10:28 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
May 4, 2024, 10:11:56 AM5/4/24
to santhav...@googlegroups.com

இப்பதிகம் இவ்விரு பாடல்களோடு நிறைவுறுகின்றது.


10)

நிலைப்பிலா உடலிது தீப்புகா முனம்நினை நீடு வாழ்வாய்

பலப்பல பொய்யுரை பதகருக் கருளிலாப் பரனை என்றும்

உலப்பிலா ஒருவனை உமையவள் பங்கனை உம்ப ரானை

மலர்ப்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


11)

அஞ்சிய வல்வினை ஆயின தீர்ந்துவான் அடைய வேண்டில்

செஞ்சுடர் வண்ணனைச் சேயிழை பங்கனைத் தேவர் உய்ய

நஞ்சினை உண்டிருள் கண்டனை நாணென நாகம் ஆர்த்த

மஞ்சனை வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


V. Subramanian


On Fri, May 3, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
May 6, 2024, 10:28:01 AM5/6/24
to santhav...@googlegroups.com

2018-04-04

வக்கரை (திருவக்கரை)

-------------------

(கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா")

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்")

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானே")


1)

பொடியாடிய பெருமானருள் புரியாயெனும் உம்பர்

மிடிநீங்கிட மதில்மூன்றெரி மேருச்சிலை யானை

வடிவாம்பிகை மணவாளனை மணிவக்கரை யானைக்

கடிமாமலர் தூவித்தொழக் கழலும்வினை தானே.


(பொடி - நீறு); (உம்பர் - தேவர்); (மிடி - துன்பம்); (சிலை - வில்);

(* வடிவாம்பிகை - திருவக்கரையில் இறைவி திருநாமம்);

(மணி - அழகு);


2)

படமாரர விளவெண்பிறை பயிலுஞ்சடை யானை

அடலேறமர் பெருமான்றனை அணிவக்கரை யானை

மடமானன வடிவாம்பிகை மணவாளனைக் கானில்

நடமாடியை நம்பித்தொழ நலியாவினை தானே.


(அடல் - வலிமை); (அமர்தல் - விரும்புதல்);

(நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);


V. Subramanian


On Sat, May 4, 2024 at 10:11 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

11)

Siva Siva

unread,
May 7, 2024, 9:36:08 AM5/7/24
to santhav...@googlegroups.com

3)

அண்டாமணி கண்டாபுலி அதளாய்அரு நஞ்சை

உண்டாயெனும் மார்க்கண்டரின் உயிர்காத்தபி ரானை

வண்டார்குழல் வடிவாம்பிகை மணவாளனை மல்லார்

எண்டோளனைத் தொழுவார்தமை எய்தாவினை தானே.


(மல் - வலிமை);


4)

பிணமாரிடு கானிற்பெரு நடமாடிடு பெற்றிக்

கணநாதனை மழுவாளனைக் கண்ணார்நுத லானை

மணமார்குழல் வடிவாம்பிகை மணவாளனைச் செந்தீ

வணவாகனை வாழ்த்தித்தொழ வல்லார்வினை விடுமே.


(பெற்றி - பெருமை; தன்மை);

(வாகன் - அழகுள்ளவன்); (ஆகம் - மேனி; மார்பு);


V. Subramanian


On Mon, May 6, 2024 at 10:27 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
May 8, 2024, 8:31:26 PM5/8/24
to santhav...@googlegroups.com

5)

முளைமாமதி புனையீசனை முனிவர்க்குயர் இன்பம்

விளைசேவடி கொடுகூற்றினை விழுமாறுதை தேவை

வளையாரிறை வடிவாம்பிகை மணவாளனை அலகில்

விளையாடியை வழிபட்டவர் வினையாயின விடுமே.


(இறை - முன்கை);


6)

வானோர்சொல வந்தம்பெறி மதியில்மதன் நீறு

தானாகிடப் பார்த்தான்றனைச் சடைமேற்பிறை யானை

மானேர்விழி வடிவாம்பிகை மணவாளனைக் கையில்

ஊனார்தலை ஒன்றேந்தியை ஓதக்கெடும் வினையே.


(ஏர்தல் - ஒத்தல்);


7)

இன்பால்தயிர் நெய்யாடியை இளவெள்விடை யானைப்

பொன்போலொளிர் சடையான்தனைப் பொழில்வக்கரை யானை

வம்பார்குழல் வடிவாம்பிகை மணவாளனை நாளும்

நம்பாவென அன்பால்தொழ நலியாவினை தானே.


(வம்பு - வாசனை);


V. Subramanian


On Tue, May 7, 2024 at 9:35 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Subbaraman NV

unread,
May 8, 2024, 8:40:45 PM5/8/24
to santhav...@googlegroups.com
Good morning. 09/05/2024: Wishing a tremendous Thursday, with the grace of the Lord of Learning, Padi  Guru Sthalam Guru Bhagawan, today there is" 09/05/2024:The WHIP of NEMESIS!" in https://nvsr.wordpress.com for your kind read and response. Thanks.dR. n v sUBBARAMAN, cHENNAI,600101

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Siva Siva

unread,
May 9, 2024, 8:31:34 PM5/9/24
to santhav...@googlegroups.com

8)

முனமாமலை பேர்த்தானவன் முடிபத்திறக் கமலம்

அனதாள்விரல் இட்டான்றனை அணிவக்கரை யானை

வனமாமுலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித்

தினமாமலர் இடுவார்தமைச் சேராவினை தானே.


9)

ஏரார்மலர் மேலானரி இவர்நேடியும் மேல்கீழ்

தேராவெரி ஆனான்றனைத் திருவக்கரை யானை

வாரார்முலை வடிவாம்பிகை மணவாளனைக் கண்ணில்

நீரார்தர நினைவார்வினை நில்லாதறும் உடனே.


(தேர்தல் - அறிதல்);

(ஆர்தல் - நிறைதல்) (தருதல் - ஒரு துணைவினை);


V. Subramanian

Siva Siva

unread,
May 11, 2024, 12:31:24 PM5/11/24
to santhav...@googlegroups.com

Final 2 songs of this padhigam.

10)

நெஞ்சிற்கிறி மிக்குற்றவர் நீற்றைப்புனைந் துய்யார்

வெஞ்சொற்களை விடுமின்பொழில் விரிவக்கரை யானை

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச்

செஞ்சொற்றொடை இடுவார்தமைத் தீண்டாவினை தானே.


11)

இலையார்நுனை சூலப்படை ஏந்தும்பெரு மானைச்

சிலையாவொரு வரையேந்தியைத் திருவக்கரை யானை

மலையான்மகள் வடிவாம்பிகை மணவாளனைக் கங்கை

அலையார்சடை உடையான்றனை அடைவார்வினை அறுமே.


V. Subramanian


On Thu, May 9, 2024 at 8:31 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
May 13, 2024, 8:00:53 AM5/13/24
to santhav...@googlegroups.com

2018-04-07

ஆமூர் (திருவாமூர்)

-------------------

(வஞ்சித்துறை. "மா மாங்காய்" - "தானா தனதான" - திருவிருக்குக்குறள் அமைப்பு )

(சம்பந்தர் தேவாரம் - 1.91.1 - "சித்தந் தெளிவீர்காள்")


1)

நீரார் சடையானைச்

சீரார் திருவாமூர்

பேராப் பெரியானை

ஓராய் மடநெஞ்சே.


2)

சிறைவண் டறையோவா நறையார் பொழிலாமூர்

இறைவன் கழலேத்தப் பறையும் வினைதானே.


3)

கானை இடமாக்கொள் மானை மணியாமூர்த்

தேனை வழிபட்டு வானைப் பெறலாமே.


கான் - சுடுகாடு; மான் - தலைவன்;


4)

துணிவெண் பிறைசூடி அணிகொள் திருவாமூர்த்

துணைவன் கழலேத்தப் பிணிவல் வினைவீடே.


V. Subramanian


On Sat, May 11, 2024 at 12:31 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

11)

Siva Siva

unread,
May 14, 2024, 9:57:40 AM5/14/24
to santhav...@googlegroups.com

5)

சடையன் தனிவெள்ளை விடையன் திருவாமூர்

அடையும் அடியாரை அடையா வினைதானே.


6)

மையம் பொழிலாமூர் ஐயன் அரவாரும்

மெய்யன் அடிபோற்ற வெய்ய வினைவீடே.


7)

நீல மணிகண்டன் ஆலன் அணியாமூர்ச்

சூலன் துதிபாட மேலை வினைவீடே


8)

பொருப்பைப் பெயர்மூடன் செருக்கை அழியண்ணல்

தருக்கள் மலியாமூர்க் கருத்தன் கழல்காப்பே.


(பொருப்பு - மலை);

(கருத்தன் - கர்த்தன் - கர்த்தா - கடவுள்; தலைவன்);


V. Subramanian

Siva Siva

unread,
May 15, 2024, 8:01:25 AM5/15/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam.


9)

அரியும் அயன்நேடும் எரியன் எழிலாமூர்ப்

பெரியன் புகழ்பாடப் பிரியும் வினைதானே.


(அயன் - அயனும்; உம்மைத்தொகை);


10)

பொய்யர்க் கருளாத ஐயன் அணியாமூர்ச்

செய்யன் கழல்போற்றி செய்ய நலமாமே


11)

அலைவன் புரமெய்த

சிலையன் திருவாமூர்

நிலையன் அடியாரை

விலகும் வினைதானே.


(வன்மை - வலிமை; கொடுமை); (சிலை - வில்; மலை);


V. Subramanian


On Tue, May 14, 2024 at 9:57 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
May 16, 2024, 9:48:13 AM5/16/24
to santhav...@googlegroups.com

2018-04-12

முருகன்பூண்டி (திருமுருகன்பூண்டி)

-----------

(கலிவிருத்தம் - "விளம் விளம் மா கூவிளம்")

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")


1)

மத்தனை வானவர் வாழ நஞ்சையுண்

பித்தனைப் பிடிநடைப் பேதை பங்கமர்

முத்தனை அழகிய முருகன் பூண்டியில்

அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே.


2)

ஆர்த்தடை கூற்றுதைத் தன்று மாணியைக்

காத்தபி ரான்றனைக் கயிலை வெற்புறை

மூர்த்தியை அழகிய முருகன் பூண்டியில்

பூத்திரள் கொடுதொழப் புன்மை தீருமே.


3)

ஆவினில் அஞ்சுகந் தாடும் அண்ணலை

நாவினில் வேதனை நாக நாணனை

மூவிலை வேலனை முருகன் பூண்டியில்

தேவினை வாழ்த்திடத் தீரும் பாவமே.


V. Subramanian


On Wed, May 15, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
May 17, 2024, 10:05:30 AM5/17/24
to santhav...@googlegroups.com

4)

பொடியணி மார்பினில் புரிவெண் ணூலனை

வடியுடை மழுவனை மழவெள் ளேற்றனை

முடிமிசைப் பிறையனை முருகன் பூண்டியில்

அடிகளை அடிதொழ அல்லல் இல்லையே.


(வடி - கூர்மை);


5)

கூடிய கணம்பறை கொட்டக் கானிடை

ஆடியைப் போர்புரி ஆனைத் தோலது

மூடிய மார்பனை முருகன் பூண்டியில்

நாடிய அன்பரை நன்மை நண்ணுமே.


V. Subramanian


On Thu, May 16, 2024 at 9:47 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
May 19, 2024, 8:01:25 AM5/19/24
to santhav...@googlegroups.com

6)

ஐம்மலர்க் கணையினன் அழியச் சீறியை

அம்மையும் அப்பனும் ஆன ஈசனை

மும்மலம் இல்லியை முருகன் பூண்டியில்

செம்மலை அடிதொழச் செல்வம் மல்குமே.


7)

அன்பனை இன்பனை அங்கி வாயுமால்

அம்பெனக் கொண்டெயில் அன்றெ ரித்தருள்

மொய்ம்பனை அழகிய முருகன் பூண்டியில்

நம்பனை அடிதொழ நடலை இல்லையே.


(மொய்ம்பன் - வீரன்);

(நடலை - துன்பம்);


8)

மலையெறி அரக்கனை வாட ஊன்றிய

தலைவனைச் சங்கரன் தன்னை வாரணி

முலையினள் பங்கனை முருகன் பூண்டியில்

நிலையனைத் தொழுதெழ நீங்கும் பாவமே.


V. Subramanian


On Fri, May 17, 2024 at 10:05 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
May 20, 2024, 9:09:53 AM5/20/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:

9)

முளரியின் மேலுறை முனிவன் கன்றினால்

விளவெறி மால்தொழ வீங்கு சோதியை

முளைமதிச் சடையனை முருகன் பூண்டியில்

இளவெரு தேறியை ஏத்தல் இன்பமே.


(முளரி - தாமரை); (முனிவன் - இங்கே, பிரமன்);

(வீங்குதல் - வளர்தல்);


10)

நிந்தனை செய்துழல் நீசர் சொல்கொளேல்

கந்தனைத் தந்தருள் நெற்றிக் கண்ணனை

முந்திய முதல்வனை முருகன் பூண்டியில்

எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே.


11)

அப்பெரு முனிவர்கட் காலின் கீழறம்

செப்பிய ஐயனைத் தேவ தேவனை

முப்புரி நூலனை முருகன் பூண்டியில்

அப்பனை அடிதொழும் அன்பர்க் கின்பமே.


V. Subramanian


On Sun, May 19, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
May 22, 2024, 9:16:39 AM5/22/24
to santhav...@googlegroups.com

2018-04-14

முண்டீச்சரம் (இக்கால வழக்கில் - "கிராமம்")

-------------------

(கலிவிருத்தம். "மா மாங்காய் மா மாங்காய்" என்ற அமைப்பு )

(சம்பந்தர் தேவாரம் - 1.90.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")


1)

அக்கைப் புனைவானை அமரர் இடர்தீர

நக்குப் புரமூன்றை நாசம் செயவல்ல

முக்கட் பெருமானை முண்டீச் சரமேய

செக்கர்ச் சடையானைச் சிந்தித் தெழுநெஞ்சே.


(அக்கு - எலும்பு);

(நகுதல் - சிரித்தல்);

(செக்கர் - சிவப்பு);


2)

வளையல் அணிமாதை வாமம் மகிழ்வானை

அளவில் புகழானை ஆற்றுச் சடைமீது

முளைவெண் பிறையானை முண்டீச் சரமேய

இளவெள் விடையானை ஏத்தி எழுநெஞ்சே.


V. Subramanian


On Mon, May 20, 2024 at 9:09 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Swaminathan Sankaran

unread,
May 22, 2024, 10:56:33 AM5/22/24
to santhav...@googlegroups.com
வெறும் 'கிராமம்' என்ற பெயரிலே ஒரு ஊர் இருக்கிறதா!
இது எங்கே இருக்கிறது?

சங்கரன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
May 22, 2024, 1:01:41 PM5/22/24
to santhav...@googlegroups.com

திருமுண்டீச்சரம் - Gramam - Google map: https://www.google.com/maps/place/Gramam,+Tamil+Nadu,+India/@11.8496028,79.4018022,1232m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3a54aaeb34a8a8f5:0xcce9de2372c8a36f!8m2!3d11.8466306!4d79.4056784

முண்டீச்சரம் - சிவலோகநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=149

blog: https://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/sivaloganathar-temple-gramam.html


Another blogpost by someone - 
.... we took the right turn at Arasur crossing and proceeded further on the road leading to Thiruvennainallur enroute to Tirukoilur. After passing through the railway level crossing, we reached our first destination, the village Gramam and parked our vehicle before Sri Sivaloganathar temple.

Gramam (கிராமம்) is a village in Thiruvennainallur taluk (திருவெண்ணெய்நல்லூர் வட்டம்), Villupuram district (விழுப்புரம் மாவட்டம்), Tamil Nadu, India. The village is located on the southern bank of the river Malattaar (மலட்டாறு). Malattar is said to be the old bed of Thenpennai river. The historical Tirumundeeswaram (Mouli Gramam) village is described to have been located on the southern bank of the Thenpennai river. The  Thenpennai River (aka Dakshina Pinakini in Kannada) covers 105 km in Villupuram district. It is the main source for irrigating over 25000 acres in Villupuram district. The Gramam village is at the geographic coordinates of 13.093 N latitude and 80.292 W longitude. The rural village is part of Gramam village panchayat and as per census 2011 it has a population of 3,048 people and 68.43 % literacy rate. The main occupation of the area is agriculture and allied activities. It is located 16 km towards South from District head quarters Viluppuram, 3 km from Arasur, 5 km from Thiruvennainallur, 21 km from Thirukovilur and 190 km from State capital Chennai......

 =========

Swaminathan Sankaran

unread,
May 22, 2024, 1:09:07 PM5/22/24
to santhav...@googlegroups.com
நன்றி.
மெலிகிராமம் என்பது உச்சரிக்கக் கடினமாக இருக்கிறது என்று கருதி சுற்றுவட்டாரத்தார் 
'கிராமம்' என்று  சுருக்கி விட்டார்கள் போலும்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
May 23, 2024, 8:00:41 AM5/23/24
to santhav...@googlegroups.com

3)

ஐயம் புடையான்றன் ஆகம் பொடிசெய்த

ஐயன் உமைபங்கன் ஆர்த்துச் சிறைவண்டு

மொய்யம் பொழில்சூழ்ந்த முண்டீச் சரமேய

செய்யன் திருநாமம் சிந்தித் தெழுநெஞ்சே.


4)

தக்கன் புரிவேள்வி தகர்த்த தழல்வண்ணன்

மைக்கண் ணுமைகேள்வன் வண்டு மதுவுண்டு

மொய்க்கும் பொழில்சூழ்ந்த முண்டீச் சரமேய

நக்கன் கழல்வாழ்த்தி நாளும் மகிழ்நெஞ்சே.


V. Subramanian


On Wed, May 22, 2024 at 1:09 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
நன்றி.

Siva Siva

unread,
May 24, 2024, 9:06:27 AM5/24/24
to santhav...@googlegroups.com

5)

துன்னும் சடையானைத் தூய மறைபாடி

உன்னும் ஒருமாணி உய்ய நமனாரை

முன்னம் உதைசெய்த முண்டீச் சரமேய

மன்னன் கழல்தன்னை வாழ்த்தி மகிழ்நெஞ்சே.


(துன்னுதல் - செறிதல்);


6)

அந்தன் அகலத்தில் அயில்மூ விலைவேலால்

கொந்தும் பெருவீரன் குழகன் அனைவர்க்கும்

முந்தும் உளதேவன் முண்டீச் சரமேய

எந்தம் பெருமான்றாள் ஏத்தி எழுநெஞ்சே.


(அந்தன் - அந்தகாசுரன்); (அயில் - கூர்மை); (கொந்துதல் - குத்துதல்);


V. Subramanian


On Thu, May 23, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
May 26, 2024, 8:55:02 AM5/26/24
to santhav...@googlegroups.com

7)

பிரமன் தலையேந்திப் பிச்சைக் குழல்பெம்மான்

அரவ அரைநாணன் அளிகள் சுரமேழும்

முரலும் பொழில்சூழ்ந்த முண்டீச் சரமேய

அரையன் அடிவாழ்த்தி அல்லல் அறுநெஞ்சே.


(அளி - வண்டு); (முரல்தல் - ஒலித்தல்);


8)

கதுமென் றருவெற்பைக் கையால் எறிவான்வாய்

துதிகள் சொலவூன்றிச் சுடர்வாள் தருவானை

முதுகா டுறைவானை முண்டீச் சரமேய

மதிசேர் சடையானை வாழ்த்தி மகிழ்நெஞ்சே.


(கதுமெனல் - விரைவுக்குறிப்பு);

(முதுகாடு - சுடுகாடு);


9)

வன்கைம் மதமாவை உரிசெய் மணிகண்டன்

செங்கண் அரிவேதன் தேட உயர்சோதி

முன்கை வளையாள்கோன் முண்டீச் சரமேய

அங்கை மழுவாளன் அடியை அடைநெஞ்சே.


V. Subramanian


On Fri, May 24, 2024 at 9:06 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
May 27, 2024, 8:51:55 AM5/27/24
to santhav...@googlegroups.com

Final 2 songs of this padhigam:

10)

புனையார் திருநீற்றைப் புகல்பொய் கருதேன்மின்

கனைமா கடல்வண்ணன் கருதித் தொழவாழி

முனைநாள் அருளண்ணல் முண்டீச் சரமேய

சினமா விடையான்சீர் செப்ப நலமாமே.


(மின் - முன்னிலை ஏவற்பன்மை விகுதி);

(கனைதல் / கனைத்தல் - ஒலித்தல்);


11)

தோன்று புவனங்கள் தோன்றும் உயிரெல்லாம்

ஈன்ற ஒருதாயாம் எந்தை எருதேறி

மூன்று நயனத்தன் முண்டீச் சரமேய

தோன்றல் சிவலோகன் தொண்டர் கவலாரே.


(கவல்தல் - கவலைப்படுதல்; மனம்வருந்துதல்);

(* சிவலோகநாதன் - இத்தலத்து ஈசன் திருநாமம்);


V. Subramanian


On Sun, May 26, 2024 at 8:54 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
May 29, 2024, 5:01:57 PM5/29/24
to santhav...@googlegroups.com

2018-04-19

ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)

-------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு; விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம். திருநேரிசை அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 4.66.1 - "கச்சைசேர் அரவர் போலும்")


1)

ஓர்மழ விடையி லேறி ஊர்ப்பலிக் குழலும் செல்வர்

ஆர்கழல் போற்றி நின்ற அடியவன் பகீர தற்கா

நீரழற் சடையி லேற்ற நின்மலர் நீற ணிந்த

ஆரழல் மேனி ஐயர் ஆமாத்தூர் அழக னாரே.


* அழகியநாதர் / அபிராமேஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்;


2)

மெல்லியல் மாது தன்னை மேனியில் வாம பாகம்

புல்லிய நாதர் சாம்பற் பூச்சினர் தவம்பு ரிந்த

வில்வல விசய னுக்கு விரும்பிய படைய ளித்த

அல்லன மேனி வேடர் ஆமாத்தூர் அழக னாரே.


3)

இருவரை மத்த தாக எறிகடல் கடைந்த போது

கருவிடம் தோன்றக் கண்டு கலங்கிய உம்பர் ஏத்தத்

திருமிடற் றிட்ட வள்ளல் செஞ்சுடர் வண்ணர் அங்கம்

அருமறை ஓது நாவர் ஆமாத்தூர் அழக னாரே.


(இருமை - பெருமை); (வரை - மலை);


4)

எண்ணிரு குருடர் நாளும் இன்றமிழ்ப் பதிக மாலை

பண்ணொடு பாடிப் பாதம் பரவிட நின்ற ஈசர்

விண்ணவர் போற்று முக்கண் விகிர்தனார் விடைய தேறும்

அண்ணலார் மதிலி லங்கும் ஆமாத்தூர் அழக னாரே.


V. Subramanian


On Mon, May 27, 2024 at 8:51 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
May 31, 2024, 9:48:25 PM5/31/24
to santhav...@googlegroups.com

5)

நித்தியர் சுடலை நீற்றர் நீள்மதி யோடு பாம்பை

வைத்தவர் மலரம் பெய்த மாரனைச் சுட்ட கண்ணர்

முத்தன நகையாள் பாகர் மூவிலை வேலர் போர்செய்

அத்தியின் உரிவை போர்த்த ஆமாத்தூர் அழக னாரே.


* முத்தாம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்;


6)

சக்கரம் தரைமேற் கீறிச் சலந்தரன் தனைய ழித்தார்

அக்கடல் வண்ணன் வேண்ட ஆழியை அவனுக் கீந்தார்

கொக்கிற கேறு கோலக் குஞ்சியர் ஆர மாக

அக்கினைப் பூணு கின்ற ஆமாத்தூர் அழக னாரே.


7)

துணிமதி குரவம் கொன்றை சூடிய சடையின் மீது

பணியையும் வாழ வைத்தார் பாய்புலித் தோலர் நீல

மணிதிகழ் கண்டர் அன்பர் வல்வினை தீர்க்கும் நல்லர்

அணிவயல் புடைய ணிந்த ஆமாத்தூர் அழக னாரே.


8)

வெற்பெறி இலங்கை வேந்தை விரல்நுதி இட்ட டர்த்துப்

பற்பல கீதம் கேட்டுப் பரிந்தொரு வாளும் ஈந்த

பொற்பினர் பூத நாதர் போனக மாக நஞ்சுண்

அற்புதர் கழனி சூழ்ந்த ஆமாத்தூர் அழக னாரே.


V. Subramanian

Siva Siva

unread,
Jun 2, 2024, 1:07:09 PM6/2/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:

9)

துடியிடை மங்கை பங்கர் தோற்றமும் முடிவும் இல்லார்

முடியடி நேடிச் சென்ற முராரியும் அயனும் காணா

நெடியதோர் சோதி ஆனார் நித்தலும் மறவா தேத்தும்

அடியவர்க் கினியர் தேனார் ஆமாத்தூர் அழக னாரே.


(நேடுதல் - தேடுதல்); (முராரி - திருமால்);

(ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

வம்பர்கள் விரிக்கும் மாய வலையினிற் சிக்கி டாதீர்

உம்பர்கள் தமக்கு நாதர் உள்கசி அன்பர்க் கெல்லாம்

இம்பரில் நல்கி ஈறில் இன்பமும் புரக்கும் ஈசர்

அம்பொழில் புடைய ணிந்த ஆமாத்தூர் அழக னாரே.


11)

வேகமார் கங்கை தன்னை விரிசடைத் தரிக்க வல்லார்

மேகமார் நீல கண்டர் வெண்மழு சூலம் ஏந்தி

நாகமும் அரையில் ஆர்க்கும் நாணென ஆகும் நம்பர்

ஆகமம் அருளிச் செய்த ஆமாத்தூர் அழக னாரே.


(ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

(ஆர்தல் - ஒத்தல்);


V. Subramanian


On Fri, May 31, 2024 at 9:48 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Jun 3, 2024, 9:12:57 PM6/3/24
to santhav...@googlegroups.com

2018-04-20

ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)

----------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(அந்தாதி)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

பண்டையநாள் பார்வையற்ற பதினறுவர் தமிழ்பாடித்

தொண்டுபுரி ஆமாத்தூர்ச் சுந்தரனே தூமதியை

இண்டையென எழில்திகழ இருஞ்சடைமேற் புனைந்தவனே

வண்டறையும் கொன்றையனே வல்வினைதீர்த் தருளாயே.


(* அழகிய நாதர் - திருவாமாத்தூர் இறைவன் திருநாமம்);

(இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (இருமை - பெருமை);


2)

அருளாயென் றுனையடைந்த அருமுனியைக் காத்தவனே

இருளாரும் மேதிமிசை ஏறிவரு கூற்றுதைத்தாய்

கருளாரும் கண்டத்தாய் கார்வயல்சூழ் ஆமாத்தூர்ப்

பெருமானே எனும்நாவைப் பெற்றாரின் புற்றாரே.


(இருள் - கறுப்பு ); (மேதி - எருமை);

(கருள் - கறுப்பு );

(கார் - கருமை; நீர்; பசுமை);


V. Subramanian


On Sun, Jun 2, 2024 at 1:06 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

11)

Siva Siva

unread,
Jun 5, 2024, 10:04:36 AM6/5/24
to santhav...@googlegroups.com

3)

உற்றாரும் புத்திரரும் உறுதுணையென் றெண்ணாத

கற்றோர்கள் காவலெனக் கருதியடை கண்ணுதலாய்

வற்றாத அருட்கடலே வளவயல்சூழ் ஆமாத்தூர்

நற்றேவா என்றேத்தும் நாவுடையார் நல்லோரே.


4)

நல்லணியா நாகத்தை நயந்தவனே நற்றமிழைச்

சொல்லடியார் துணையாகித் துயர்தீர்ப்பாய் மேருமலை

வில்லுடையாய் நெல்கரும்பு விளைவயல்சூழ் ஆமாத்தூர்

இல்லுடையாய் என்பாரை இருவினைகள் எய்தாவே.


5)

எய்திமலர் அம்பொன்றை எய்தமதன் உடல்நீறு

செய்தநுதற் கண்ணினனே செம்மலரான் சிரமொன்றைக்

கொய்தவனே கொக்கிரைதேர் குளிர்வயல்சூழ் ஆமாத்தூர்

மைதிகழ்கண் டாவென்று வாழ்த்தியவர் வாழ்வாரே.


V. Subramanian

Siva Siva

unread,
Jun 7, 2024, 8:01:13 AM6/7/24
to santhav...@googlegroups.com

6)

வாணாளில் மலரடியை வாழ்த்தாத நாளெல்லாம்

வீணாளென் றுணர்ந்துதொழு விருப்பினர்தம் கருத்தினனே

பூணாகப் பாம்பணிந்தாய் பொழில்சூழ்ந்த ஆமாத்தூர்க்

கோணாத தேவவெனக் கும்பிட்டார் கவலாரே.


7)

கவலைமிகு மனத்தினராய்க் கைதொழுத வானவர்கள்

உவகையுற ஒருகணையால் ஒன்னலர்முப் புரமெய்தாய்

புவனமெலாம் படைத்தவனே பொழில்சூழ்ந்த ஆமாத்தூர்ச்

சிவபெருமான் என்றுதொழத் தீவினைபோய்த் திருவாமே


(ஒன்னலர் - பகைவர்);


8)

திருவாரும் மலைதன்னைச் சினந்தெடுத்த இலங்கைக்கோன்

வெருவார மலர்ப்பாத விரலூன்றி நெரித்தவனே

அருளாளா நெல்லாரும் அணிவயல்சூழ் ஆமாத்தூர்ப்

பெருமானே என்றுதொழும் பெற்றியினோர் பெரியோரே.


(வெரு - அச்சம்);


V. Subramanian

Siva Siva

unread,
Jun 9, 2024, 10:29:34 AM6/9/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:

9)

பெரியனெவன் எனமிகவும் பிணங்கயன்மால் அறியாத

எரியெனவன் றுயர்ந்தவனே எருதேறும் இறையவனே

கரியமிட றுடையவனே கார்வயல்சூழ் ஆமாத்தூர்

விரிசடையாய் என்றேத்த வெவ்வினைகள் மேவாவே.


10)

மேவாது வெற்றுரைசொல் மிண்டர்களுக் கருளில்லாய்

சாவாத மூவாத தன்மையனே சங்கரனே

பூவாரும் பொன்னடியாய் பொழிலாரும் ஆமாத்தூர்த்

தேவாவென் றுள்கசிவார் செல்வமெலாம் பெறுவாரே.


11)

பெற்றமிவர் பெருமையினாய் பிறையணிந்த பிஞ்ஞகனே

முற்றுமுணர் முக்கணனே முத்தம்மை நாதாவோர்

பற்றுமிலாய் பம்பைநதிப் பாங்கரணி ஆமாத்தூர்க்

கொற்றவனே என்றரன்சீர் கூறவறும் கொடுவினையே.


(பெற்றம் - எருது); (இவர்தல் - ஏறுதல்);

(* முத்தம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

(பம்பை - திருவாமாத்தூரில் ஓடும் நதியின் பெயர்); (பாங்கர் - பக்கம்);


V. Subramanian

Siva Siva

unread,
Jun 10, 2024, 8:00:53 AM6/10/24
to santhav...@googlegroups.com

2018-04-21

வக்கரை

------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா ;

சில பாடல்களில் முதற்சீர் தானா என்றும் வரும்)

(சம்பந்தர் தேவாரம் - 2.18 - "சடையாய் எனுமால்")


1)

எழுமா லமிகச் சுடவே இமையோர்

தொழுதேத் திடவுண் டருளும் துணைவன்

மழுவாள் இறைவன் மகிழும் பதியாம்

செழுமா வயலார் திருவக் கரையே.


2)

பொறியார் அரவும் புனலும் பிறையும்

வெறியார் மலரும் விரவும் சடையன்

மறியேந் திறைவன் மகிழும் பதியாம்

செறிவான் பொழில்சூழ் திருவக் கரையே.


V. Subramanian


On Sun, Jun 9, 2024 at 10:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Jun 11, 2024, 9:12:25 AM6/11/24
to santhav...@googlegroups.com

3)

இகழ்தக் கனவன் புரிவேள் விதகர்

பகவன் படர்செஞ் சடையன் பழியில்

புகழன் சுடுவெண் பொடியன் பதியாம்

திகழும் பொழில்சூழ் திருவக் கரையே.


4)

அறையார் கடல்நஞ் சமுதுண் டதனால்

கறையார் மிடறன் கயிலைக் கிறைவன்

மறையின் பொருளான் மகிழும் பதியாம்

சிறைவண் டறையும் திருவக் கரையே.


V. Subramanian


On Mon, Jun 10, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Jun 12, 2024, 8:01:15 AM6/12/24
to santhav...@googlegroups.com

5)

வானோர் தொழமும் மதிலைச் சுடவே

மேனாள் ஒருவெங் கணைதொட் டபிரான்

ஆனே றுடையான் அமரும் பதியாம்

தேனார் பொழில்சூழ் திருவக் கரையே.


6)

எண்ணா தலரம் பெறிமன் மதனைக்

கண்ணார் நுதலால் பொடிசெய் கடவுள்

பெண்ணாண் அலியாம் பெருமான் பதியாம்

திண்ணார் மதில்சூழ் திருவக் கரையே.


V. Subramanian


On Tue, Jun 11, 2024 at 9:12 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Jun 13, 2024, 8:31:16 PM6/13/24
to santhav...@googlegroups.com

7)

சேவற் கொடியோன் தனையீன் றசிவன்

மாவன் னமனைச் செறுவார் கழலான்

ஆவின் பொருளைந் தினிலா டிமகிழ்

தேவன் பதியாம் திருவக் கரையே.


8)

வரைதூக் கியவன் வலியைச் செறவோர்

விரலூன் றிநெரித் திசைகேள் விமலன்

இரவைப் புரிவான் இடமாம் அடியார்

திரளாய் அடையும் திருவக் கரையே.


(இரவு - இரத்தல் - யாசித்தல்); (புரிதல் - விரும்புதல்; செய்தல்);


V. Subramanian


On Wed, Jun 12, 2024 at 8:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

இமயவரம்பன்

unread,
Jun 13, 2024, 8:45:07 PM6/13/24
to santhav...@googlegroups.com

Very nice!

“ ஆவின் பொருளைந் தினிலா டிமகிழ்” - Could you explain the meaning of this phrase?

Thanks

Siva Siva

unread,
Jun 13, 2024, 9:16:39 PM6/13/24
to santhav...@googlegroups.com
பஞ்சகவ்ய அபிஷேகம்.

3.102.2
தீவினை யாயின தீர்க்க நின்றான் றிருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை சூழப் பலபூதம்
ஆவினி லைந்துங்கொண் டாட்டு கந்தா னடங்கார் மதின்மூன்றும்
ஏவினை யெய் தழித்தான் கழலே பரவா வெழுவோமே.

இமயவரம்பன்

unread,
Jun 14, 2024, 9:25:41 PM6/14/24
to santhav...@googlegroups.com

மேற்கோளுடன் விளக்கியமைக்கு மிக்க நன்றி!

….

On Jun 13, 2024, at 9:16 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 15, 2024, 9:31:54 AM6/15/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:


9)

அலைமேல் துயில்மால் அயனார் அறியார்

தலைமேல் பிறையான் தழலாய் நிமிர்வான்

அலைமூ வரணார் அழிவெங் கணைசேர்

சிலையான் பதியாம் திருவக் கரையே.


10)

தெய்வம் தெளியார் தினமும் பகரும்

பொய்யைத் தவிர்மின் புகழ்வார்க் கருள்செய்

ஐயன் சடைமேல் அரவன் தழல்போல்

செய்யன் பதியாம் திருவக் கரையே.


11)

வெல்லும் விடையான் விரிசெஞ் சடையான்

பல்லில் பலிதேர் பரமன் புகழைச்

சொல்லிப் பணிவார் துயர்தீர்த் தருளும்

செல்வன் பதியாம் திருவக் கரையே.


V. Subramanian


On Fri, Jun 14, 2024 at 9:25 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jun 17, 2024, 10:08:40 AM6/17/24
to santhav...@googlegroups.com

2018-05-22

தலமாலை - (பொது)

--------------------

(குறள் வெண்பா)

(அடிதோறும் முதற்சீரில் மடக்கு அமைந்தவை)


1) -- திருவாடானை --

ஆடானை ஆடவைக்கும் பாடானைப் பாடவைக்கும்

ஆடானை ஐயன் அருள்.


2) -- திருவாலங்காடு --

ஆலங்காட் டீசன் அழகிய கண்டத்தில்

ஆலங்காட் டன்பார் அரன்.


3) -- திருநல்லம் (கோனேரிராஜபுரம்) --

நல்ல நிலைபெறலாம் நானிலத்தில் நெஞ்சமே

நல்ல நகரானை நாடு.


("நல்லம் + நகர் = நல்லநகர்" என்று மகர ஒற்றுக் கெட்டுப் புணரும்);


V. Subramanian


On Sat, Jun 15, 2024 at 9:31 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

11)

Siva Siva

unread,
Jun 18, 2024, 8:54:45 AM6/18/24
to santhav...@googlegroups.com

4) -- திருவலிதாயம் (பாடி) --

வலிதாய பண்டைவினை மாய மனமே

வலிதாய மேயானை வாழ்த்து.


5) -- திருக்கானூர் --

கானூர் பெரும்பாம்பு கங்கை மதிபுனைந்த

கானூர் அரனைக் கருது.


6) -- சிக்கல் (திருச்சிக்கல்) --

சிக்கலில் மேன்மைபெறச் சிந்தி நிதம்நெஞ்சே

சிக்கலில் மேயசிவன் சீர்.


V. Subramanian


On Mon, Jun 17, 2024 at 10:08 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3) 

Siva Siva

unread,
Jun 19, 2024, 8:36:50 AM6/19/24
to santhav...@googlegroups.com

7) -- திங்களூர் --

திங்களூர் பாம்பு திகழ்முடிமேற் சேர்த்தவன்

திங்களூர் ஈசனெனச் செப்பு.


8) -- அண்ணாமலை --

அண்ணா கமியென் றழுதசமு கற்குமுண்டே

அண்ணா மலையான் அருள்.


V. Subramanian


On Tue, Jun 18, 2024 at 8:54 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6) 

Siva Siva

unread,
Jun 20, 2024, 9:06:02 AM6/20/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:


9) -- ஆனைக்கா (திருவானைக்காவல்) --

ஆனைக்கா ஓர்முதலை செற்றான் அயனறியார்

ஆனைக்கா அண்ணல் அடி.


(ஆனைக்கா - 1. யானைக்காக; 2. திருவானைக்கா என்ற தலம்); (செறுதல் - அழித்தல்);


10) -- அன்பில் ஆலந்துறை --

அன்பிலா வம்பர்க் கருளிலான் ஆற்றனிடம்

அன்பிலா லந்துறை ஆம்.


(ஆறு - 1. நதி; 2. நெறி);


11) -- பேரூர் --

பேரூர் உரைத்தல் பெறவேண்டில் நாவேநீ

பேரூர் அரன்புகழே பேசு.


V. Subramanian


On Wed, Jun 19, 2024 at 8:36 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

sankara dass nagoji

unread,
Jun 20, 2024, 12:22:01 PM6/20/24
to சந்தவசந்தம்
ஆஹா! மிக அருமை!

மடக்கினிற் கண்டோம் மிடுக்கு.

-- sdn

Siva Siva

unread,
Jun 21, 2024, 12:56:10 PM6/21/24
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Jun 21, 2024, 8:31:50 PM6/21/24
to santhav...@googlegroups.com

2024-06-21

காழி (சீகாழி)

-----------------

(குறள்வெண் செந்துறை? தாழிசை?

(தானதனா தானதனா தானனா)

(Ghazal-like approach)


1)

பெண்ணிடமா னார்பிரியார் காழியே

கண்ணுதலார் ஊர்பொழிலார் காழியே.


2)

வேலவனைத் தந்தநுதற் கண்ணரூர்

சோலைமலர்த் தென்றலதார் காழியே.


3)

பாய்ந்தடியார்க் கொல்லவரும் காலனைக்

காய்ந்தவரூர் வண்பொழிலார் காழியே.


(அடியார்க் கொல்ல - அடியாரைக் கொல்ல);


4)

திங்களரா சேர்முடிமேல் தெண்டிரைக்

கங்கையினார் ஊரளியார் காழியே.


(அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


V. Subramanian

Siva Siva

unread,
Jun 22, 2024, 9:55:16 PM6/22/24
to santhav...@googlegroups.com

5)

நண்ணடியார்க் கன்புடையார் நெற்றியில்

கண்ணுடையார் ஊர்வளமார் காழியே.


6)

ஆரணமால் நீழலிலே ஓதினார்

காரணரூர் தேனினமார் காழியே.


7)

ஓதவிடம் தெள்ளமுதா உண்டருள்

நாதரிடம் தண்பொழிலார் காழியே.


V. Subramanian

Siva Siva

unread,
Jun 23, 2024, 11:17:53 AM6/23/24
to santhav...@googlegroups.com

Final 4 songs of this padhigam:

8)

ஐயிருவா யானழுமா றூன்றியூர்

மொய்யளிபூ வார்மதுவார் காழியே.


ஐயிரு-வாயான் அழுமாறு ஊன்றி ஊர் -

மொய்-அளி பூ வார் மது ஆர் காழியே -


9)

மாலயனார் காண்பரியார் தங்குமூர்

சேலவைபாய் வண்வயலார் காழியே.


10)

மெய்யுணரார் பொய்விடுமின் போற்றுவீர்

செய்யவரூர் பூம்பொழிலார் காழியே.


(செய் - சிவப்பு); (அப்பர் தேவாரம் - 4.29.2 - "செய்யவர் கரிய கண்டர்");


11)

சேவடிவாழ்த் தன்பரைவான் சேர்த்திடும்

காவலரூர் வண்டினமார் காழியே.


V. Subramanian


On Sat, Jun 22, 2024 at 9:55 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Jun 24, 2024, 8:56:20 PM6/24/24
to santhav...@googlegroups.com

2018-05-23

பேரூர்

-------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா )

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்")

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")


1)

அலையார்நதி மதிகூவிளம் அணிசெஞ்சடை அடிகள்

மலையான்மகள் ஒருபங்கென மகிழும்பரன் எண்ணில்

பலபேரினன் பேரூருறை பட்டீசனைக் கண்டு

நலமார்தரு தமிழ்மாலைகள் நவில்வார்வினை அறுமே.


எண் இல் பல பேரினன் - எண்ணற்ற பல திருநாமங்களை உடையவன்;


2)

ஆரார்புரம் அவைவெந்திட அன்றோர்கணை தொட்டான்

நீரார்சடை மேல்வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான்

பாரோர்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீரார்தமிழ் சொல்வாரவர் தீராவினை அறுமே.


(ஆரார் - பகைவர்);


V. Subramanian


On Sun, Jun 23, 2024 at 11:17 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Jun 25, 2024, 10:54:11 PM6/25/24
to santhav...@googlegroups.com

3)

ஓதந்தனில் எழுநஞ்சினை உண்டன்றருள் கண்டன்

வேதந்தனை ஆலின்புடை விரிசெய்தவன் அடியார்

பாதந்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீதந்திகழ் தமிழ்மாலைகள் செப்பக்கெடும் வினையே.


4)

நாகத்தினை அணிமார்பினன் நரையேற்றினன் எரிபோல்

ஆகத்தினன் மலையான்மகள் பச்சைக்கிளி அன்னாள்

பாகத்தினன் பேரூருறை பட்டீசனை வாழ்த்தச்

சோகத்தினைத் தருவல்வினைத் துரிசோய்வது திடனே.


* இத்தலத்து இறைவி திருநாமம் பச்சைநாயகி;


V. Subramanian


On Mon, Jun 24, 2024 at 8:56 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Jun 26, 2024, 8:51:22 PM6/26/24
to santhav...@googlegroups.com

5)

தோடுங்குழை ஒன்றும்புனை தூயன்சுடு கானில்

ஆடும்புகழ் உடையான்புலி அதளான்மறை நாலும்

பாடும்பரன் பேரூருறை பட்டீசனை அன்பால்

நாடுங்குணம் உடையார்தமை நண்ணாவினை தானே.


(அதள் - தோல்);


6)

மடமாதொரு கூறானவன் மதனைச்சுடு கண்ணான்

சுடர்சோதியை நிகர்மேனியன் தூவெண்மதி திகழும்

படர்வேணியன் பேரூருறை பட்டீசனை நாளும்

உடலால்மனம் வாக்கால்தொழ ஒழியும்பழ வினையே.


V. Subramanian


On Tue, Jun 25, 2024 at 10:53 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Jun 27, 2024, 10:24:54 PM6/27/24
to santhav...@googlegroups.com

7)

சடையான்திரி சூலப்படை தரிசங்கரன் கொடிமேல்

விடையான்கழல் விண்ணோர்தொழ விடமுண்டவன் பூதப்

படையானணி பேரூருறை பட்டீசனைப் போற்றி

அடைவாரவர் அருநோய்கெடும் அடைவாரமர் உலகே.


(அமர்தல் - விரும்புதல்);


8)

வலியேமிக உன்னித்திரு மலைபேர்த்தவன் அழுகை

ஒலியேமிக விரலூன்றிய உமைகோன்அயன் தலையிற்

பலிதேரிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பொலிமாமலர் இடுவாரவர் பொல்லாவினை அறுமே.


(வலி - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்);


V. Subramanian


On Wed, Jun 26, 2024 at 8:51 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Jun 29, 2024, 9:19:04 AM6/29/24
to santhav...@googlegroups.com

Final 3 songs of this padhigam:

9)

சிசுபாலனை மாய்த்தான்அயன் தேடித்தொழு சோதி

சசிசேகரன் புரிநூலணி தடமார்பினில் நீற்றன்

பசுவேறிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிக்

கசிவாரவர் வினையாயின கழலப்பெறு வாரே.


10)

கரவேமலி நெஞ்சத்தினர் கத்தித்திரி பொய்யர்

உரைநீங்கிடும் அடியார்தொழும் உருவேற்றருள் செய்யும்

பரமாபரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிச்

சுரமார்தமிழ் சொல்வாரவர் துயராயின அறுமே.


11)

மணிநீரலை சடையின்மிசை மதிகூவிளம் கொன்றை

அணிநீர்மையன் ஆலின்புடை அறமோதிய ஐயன்

பணிமாலையன் பேரூருறை பட்டீசனைப் போற்றும்

பணியேபுரி அடியார்களைப் பற்றாவினை தானே.


V. Subramanian


On Thu, Jun 27, 2024 at 10:24 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Subbaier Ramasami

unread,
Jun 29, 2024, 3:34:00 PM6/29/24
to santhav...@googlegroups.com
அதிக்ரிணி அருமை

Ram Ramakrishnan

unread,
Jun 29, 2024, 8:20:19 PM6/29/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 29, 2024, at 09:19, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 29, 2024, 8:34:48 PM6/29/24
to santhav...@googlegroups.com
Thank you both.

V. Subramanian

On Sat, Jun 29, 2024 at 8:20 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


On Sat, Jun 29, 2024 at 3:34 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அதிகரிணி அருமை

Siva Siva

unread,
Jul 1, 2024, 8:30:38 PM7/1/24
to santhav...@googlegroups.com

2018-05-26

பேரூர் - (பேரூர்ப் பட்டீச்சரம் - கோயம்புத்தூர் அருகுள்ள தலம்)

------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.15.1 - பற்றற் றார்சேர் பழம்பதியை)

(சுந்தரர் தேவாரம் - 7.77.1 - பரவும் பரிசொன் றறியேன்நான்)


1)

கடிமா மலர்கள் பலதூவிக் .. கையால் தொழுதார்க் கருளண்ணல்

இடிபோல் குரல்வெள் ளேற்றின்மேல் .. ஏறும் ஏந்தல் இளந்திங்கள்

முடிமேல் திகழும் முக்கண்ணன் .. முத்துப் போன்ற வெண்ணகையாள்

பிடிபோல் நடையாள் உமைபங்கன் .. பேரூர் நட்டப் பெருமானே.


(கடி - வாசனை);

(பிடி - பெண்யானை);

(நட்டம் - நடனம்);


2)

போதைத் தூவிப் புகழ்பாடிப் .. போற்றி னார்க்குப் புகலானான்

வாதை தீராய் என்றடைந்த ... வானோர் வாழக் குகனையருள்

தாதை தாழ்செஞ் சடையின்மேல் .. தண்ணார் திங்கள் தாங்கியவன்

பேதை ஓர்பால் மகிழீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


(போது - பூ);


V. Subramanian

Ramamoorthy Ramachandran

unread,
Jul 1, 2024, 9:13:36 PM7/1/24
to santhav...@googlegroups.com

வாடும் மனத்திற் காறுதலாய்;
    வறுமை போக்கும் பேருணவாய்;
தேடும் உயிர்க்குத் திசையுணர்த்தும்
     தெம்பாய்ச் சிறுமை போக்குவதாய்,
ஆடும் நடத்தி லாதரவாய்,
      ஆர்வம் வளர்க்கும் அதிசயமாய்ப்
பாடும் சிவசி வா,பாட்டு
    பலர்க்கும் பக்தி பெருக்குவதே!
- புலவர் இராமமூர்த்தி


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 1, 2024, 10:40:01 PM7/1/24
to santhav...@googlegroups.com
Thank you.

Siva Siva

unread,
Jul 2, 2024, 9:45:39 PM7/2/24
to santhav...@googlegroups.com

3)

தண்ணீர் பூக்கள் இவைகொண்டு .. தாளைத் தொழுவார் துயர்தீர்ப்பான்

விண்ணோர் சொல்கேட் டம்பெய்த .. வேள்தன் அழகார் உடல்வேவக்

கண்ணார் நுதலால் காய்ந்தபிரான் .. கயல்மீன் அன்ன கண்ணுடைய

பெண்ணோர் பாகம் மகிழீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


4)

இறைவா அருளென் றிருபோதும் .. ஏத்தி னார்தம் இடர்தீர்ப்பான்

மறைமா முனிமார்க் கண்டேயர் .. வாழ நமனை உதைசெய்தான்

அறையார் கடலில் எழுநஞ்சை .. அழகார் மணிபோல் அணிகண்டன்

பிறைபோல் நுதலாள் ஒருபங்கன் .. பேரூர் நட்டப் பெருமானே.


V. Subramanian

Siva Siva

unread,
Jul 4, 2024, 9:56:48 AM7/4/24
to santhav...@googlegroups.com

5)

என்றாய் தந்தை நீயென்றே .. இறைஞ்சி னாரைப் பண்டைவினை

துன்றா வண்ணம் காக்கின்ற .. தோன்றாத் துணைவன் வேடுவனாய்ச்

சென்றான் பார்த்தற் கருள்செய்யத் .. தேனார் கொன்றை மலர்மார்பன்

பின்றாழ் சடைமேற் பிறைசூடி .. பேரூர் நட்டப் பெருமானே.


(என்றாய் = என் + தாய்); (துன்றுதல் - நெருங்குதல்; பொருந்துதல்);\

(பின்றாழ் = பின் + தாழ்);


6)

நேசத் தோடு திருநாமம் .. நினைவார்க் கின்ப நிலைதருவான்

பாசத் தோடு மாணியின்மேல் .. பாயும் கூற்றை உதைத்தபிரான்

வாசக் கொன்றை கூவிளம்வெண் .. மதியம் சூடு வார்சடையன்

பேசற் கரிய பெருமையினான் .. பேரூர் நட்டப் பெருமானே.


V. Subramanian


On Tue, Jul 2, 2024 at 9:45 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Jul 5, 2024, 8:30:42 AM7/5/24
to santhav...@googlegroups.com

7)

குற்றம் பொறுப்பான் தொழுவார்தம் .. குறைகள் தீர்ப்பான் அருளாளன்

சுற்றும் திகிரிப் படைவேண்டித் .. தொழுத மாலுக் கிரங்கியவன்

அற்றம் மறைக்க அரவரையில் .. ஆர்த்துப் பிச்சைக் குழல்செல்வன்

பெற்றம் ஊரும் பெற்றியினான் .. பேரூர் நட்டப் பெருமானே.


(ஆர்த்தல் - கட்டுதல்);

(பெற்றம் - எருது);


8)

கரிய இலங்கைக் கோன்தன்னைக் .. கதற வைத்த கால்விரலன்

அரிய மறையின் பொருள்விரிக்க .. ஆல நீழல் அமர்ந்தபிரான்

எரியை ஒத்த செவ்வண்ணன் .. இமையோர் போற்றும் இருள்கண்டன்

பெரிய விடைமேல் வருமீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


V. Subramanian


On Thu, Jul 4, 2024 at 9:56 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Jul 6, 2024, 9:21:21 AM7/6/24
to santhav...@googlegroups.com

9)

ஓரா அயனும் திருமாலும் .. உயர்ந்தும் ஆழ்ந்தும் அறிவரியான்

கூரார் சூலப் படையுடையான் .. கொடியின் மீது விடையுடையான்

காரார் கண்டன் போர்செய்த .. கைம்மா தன்னை உரிசெய்தான்

பேரா யிரத்தான் பெயரில்லான் .. பேரூர் நட்டப் பெருமானே.


10)

உண்மை தன்னை ஒளித்துப்பொய் .. உரைத்துத் திரிவார் சொல்நீங்கும்

வெண்மை திகழும் நீறணிந்து .. விரும்பித் தொழுவார் தமக்கென்றும்

அண்மை யாகிக் காத்துவரம் .. அளிக்கும் வள்ளல் ஆகத்தில்

பெண்மை ஒருபால் காட்டுமிறை .. பேரூர் நட்டப் பெருமானே.


V. Subramanian


On Fri, Jul 5, 2024 at 8:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Nagoji

unread,
Jul 6, 2024, 12:15:32 PM7/6/24
to Santhavasantham
பேராயிரம் பெயரில்லை. அருமை.


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/8op3k3Boy8g/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNGtcYsWOEf-D_7PMNQEj0tDjFdGoQrnhdo5m5gtu1O_w%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 7, 2024, 12:21:51 PM7/7/24
to santhav...@googlegroups.com
Thanks.

Final song of this padhigam:

11)

முன்னை மூன்று புரஞ்சுட்டாய் .. முதல்வா முடிமேல் இளமதியம்

தன்னை வாழ வைத்தவனே .. சடையில் கங்கை தரித்தவனே

உன்னை யன்றித் துணையிங்கார் .. உளரென் றுருகும் அடியார்க்குப்

பின்னை என்னா தருளீசன் .. பேரூர் நட்டப் பெருமானே.


V. Subramanian


On Sat, Jul 6, 2024 at 12:15 PM Nagoji <nag...@gmail.com> wrote:
பேராயிரம் பெயரில்லை. அருமை.


On Sat, 6 Jul 2024, 6:51 pm Siva Siva, <naya...@gmail.com> wrote:

10)

It is loading more messages.
0 new messages