மதிசூடி துதிபாடி - 16

682 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jul 11, 2022, 11:19:11 AM7/11/22
to santhavasantham

மதிசூடி துதிபாடி - 16

Starting a new thread with a higher sequence number.

(The total message count in the earlier thread is almost 800 as of now.

The prior thread is - மதிசூடி துதிபாடி - 15 :

https://groups.google.com/g/santhavasantham/c/8jD1kRHaDVk )


V. Subramanian

GOPAL Vis

unread,
Jul 12, 2022, 5:04:18 AM7/12/22
to santhav...@googlegroups.com
மதிசூடி போற்றும் பதிகங்கள் காணப்  
பதினாறும் கிட்டுமே பேறு!
கோபால்.

Siva Siva

unread,
Jul 12, 2022, 9:51:02 AM7/12/22
to santhavasantham

2019-06-27

சேத்திரக்கோவை

------------------------

(கலிவிருத்தம் - "மா மா மா மா" என்ற வாய்பாடு; சில பாடல்களில் முதற்சீர் விளம் / மாங்காய்;)

(சுந்தரர் தேவாரம் - 7.91.1 - "பாட்டும் பாடிப் பரவித் திரிவார்")


1)

ஓடம் மல்கும் ஒற்றி யூரும்

மாடம் மல்கும் மயிலாப் பூரும்

வாடல் தீர்க்கும் வான்மி யூரும்

ஆடல் வல்லான் அமரும் பதியே.


* திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவான்மியூர் ;


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jul 13, 2022, 9:37:26 AM7/13/22
to santhavasantham

2)

வாவி திகழும் மாடம் பாக்கம்

பூவிற் பொலியும் மதுவுண் டளிகள்

காவிற் பாடும் கழுக்குன் றம்கண்

பாவும் நெற்றிக் கடவுள் பதியே.


* மாடம்பாக்கம், திருக்கழுக்குன்றம்;


வி. சுப்பிரமணியன்


On Tue, Jul 12, 2022 at 9:50 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Siva Siva

unread,
Jul 14, 2022, 7:59:18 AM7/14/22
to santhavasantham

3)

எட்டுத் திக்கில் இலிங்கம் இலங்க

மட்டில் இன்பம் வழங்கும் இடமாம்

சுட்ட நீறு துதையப் பூசும்

அட்ட மூர்த்தி அண்ணா மலையே


* திருவண்ணாமலை


வி. சுப்பிரமணியன்


On Wed, Jul 13, 2022 at 9:37 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Jul 15, 2022, 7:52:25 AM7/15/22
to santhavasantham

4)

பொல்லா மனிதர் மனத்தைப் போலக்

கல்லாய் மரங்கள் காண அயலே

கல்லால் நிழலாய் காவென் றேத்திச்

செல்வார்க் கருளும் திருவக் கரையே.


* திருவக்கரை;


வி. சுப்பிரமணியன்


On Thu, Jul 14, 2022 at 7:59 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Jul 16, 2022, 9:50:10 AM7/16/22
to santhavasantham

Next 2 songs:

5)

அறையணி நல்லூர் அடியார் தங்கள்

குறையறு கோவல் வீரட் டம்தேன்

நிறைமலர்ச் சோலை நிலவும் இடையா

றறைகடல் நஞ்சுண் அடிகள் பதியே.


* அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்), கோவல் வீரட்டம் (திருக்கோயிலூர்), திரு-இடையாறு;


6)

பித்தன் நாமம் பெற்று கந்த

அத்தன் வெண்ணெய் நல்லூர் அனாதி

முத்தன் முண்டீச் சரமா மாத்தூர்

மத்தம் அணிந்தான் மகிழும் பதியே.


* திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஆமாத்தூர்;


வி. சுப்பிரமணியன்


On Fri, Jul 15, 2022 at 7:52 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 17, 2022, 10:23:43 PM7/17/22
to சந்தவசந்தம்
’சேத்திரக் கோவை’ செய்யுட் பயணம் சிறப்பாகச் செல்கிறது.

அனந்த்

Siva Siva

unread,
Jul 18, 2022, 9:12:30 AM7/18/22
to santhavasantham
Thanks.

Siva Siva

unread,
Jul 18, 2022, 9:15:26 AM7/18/22
to santhavasantham

Next 2 songs:

7)

நம்பியா ரூரர் நாவ லூர்தண்

அம்பொழில் சூழ்ந்த ஆமூர் எதிர்த்த

கம்பமா உரித்தான் கச்சூர் தேவர்

தம்பிரான் செம்பொற் சடையன் பதியே.


* திருநாவலூர், திருவாமூர், திருக்கச்சூர்;


8)

பத்தணி முடியும் பாற எய்த

அத்திரத் தான்செய் இராமேச் சுரம்தென்

உத்தர கோச மங்கை ஓம்பும்

பத்தரைக் காக்கும் பரமன் பதியே.


* இராமேச்சுரம் (ராமேஸ்வரம்), உத்தரகோசமங்கை ;


V. Subramanian


On Sat, Jul 16, 2022 at 9:50 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Jul 19, 2022, 8:45:44 AM7/19/22
to santhavasantham

9)

சேணார் சோலைத் திருவா டானை

தூணார் சிற்பம் துலங்கும் பேரூர்

பேணா திருவர் பெரிதும் நேடிக்

காணா ஒருவன் கருதும் பதியே.


* திருவாடானை, பேரூர் (கோயம்புத்தூர் அருகே உள்ல தலம்);


V. Subramanian


On Mon, Jul 18, 2022 at 9:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Jul 20, 2022, 8:12:28 AM7/20/22
to santhavasantham

This padhigam concludes with these 2 songs:

10)

அவிநாசி அழகார் முருகன் பூண்டி

புவிபோற்றும் பொன்னி பாய்ந ணாகை

குவியாத குற்ற நெஞ்சர்க் கில்லான்

அவிர்வேணி அண்ணல் அமரும் பதியே.


* அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருநணா (பவானி);


11)

செடியறு திருச்செங் கோடு சீரார்

குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி

தடவரை நீங்கித் தவழ்ந்து வளையும்

கொடுமுடி முக்கட் குழகன் பதியே.


* திருச்செங்கோடு, கொடுமுடி;


V. Subramanian


PS: This padhigam mentions the temples I visited in 2017 Dec.



On Tue, Jul 19, 2022 at 8:45 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Saranya Gurumurthy

unread,
Jul 20, 2022, 8:57:26 AM7/20/22
to சந்தவசந்தம்
Very nice pathigam‌ sir. 

Saranya.

Subbaier Ramasami

unread,
Jul 20, 2022, 9:03:20 AM7/20/22
to santhavasantham

சீரார்

குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி

தடவரை நீங்கித் தவழ்ந்து வளையும்

செடியறு திருச்செங் கோடுகொடுமுடி முக்கட் குழகன் பதியே.  என்று கொண்டு கூட்ட வேண்டுமோ?



On Wed, Jul 20, 2022 at 8:12 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

This padhigam concludes with these 2 songs:

10)


Siva Siva

unread,
Jul 20, 2022, 9:24:23 AM7/20/22
to santhavasantham
My thinking was:

செடியறு திருச்செங் கோடு சீரார்

குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி

தடவரை நீங்கித் தவழ்ந்து வளையும்

கொடுமுடி முக்கட் குழகன் பதியே.


செடி அறு திருச்செங்கோடு - துன்பத்தையும் பாவத்தையும் தீர்க்கும் திருச்செங்கோடு;

சீர் ஆர் குடகினில் உதித்த குளிர்ந்த பொன்னி - அழகும் பெருமையும் உடைய குடகுமலையில் தோன்றிய குளிர்ச்சி பொருந்திய காவிரி;

தட வரை நீங்கித் தவழ்ந்து வளையும் கொடுமுடி - பெரிய மலையை நீங்கித் தரையில் தவழ்ந்து தெற்கிலிருந்து கிழக்குநோக்கி வளைகின்ற இடமான கொடுமுடி;

முக்கட் குழகன் பதியே - இவையெல்லாம் முக்கண்ணனும் இளமையும் அழகும் உடையவனுமான சிவபெருமான் உறைகின்ற தலங்கள்;


V. Subramanian

Siva Siva

unread,
Jul 21, 2022, 10:39:13 AM7/21/22
to santhavasantham

2016-08-18

திருக்கன்றாப்பூர் - (இக்கால வழக்கில் - "கோயில் கண்ணாப்பூர்")

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 4.76.2 - "மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்")


1)

உம்பனை முப்பு ரங்கள் ஒருங்கெரி வீழ ஒற்றை

அம்பினை ஏவி னானை அணிதிகழ் கொன்றை சூடும்

நம்பனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வம்பவிழ் மலர்கொண் டேத்த வல்வினை மாயு மன்றே.


வி. சுப்பிரமணியன்



On Wed, Jul 20, 2022 at 9:24 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jul 22, 2022, 9:17:05 AM7/22/22
to santhavasantham

2)

வேதனைத் தேவர் போற்றும் விமலனைத் தோடி லங்கு

காதனைச் சடையின் மீது கதிர்மதி அரவம் சூடும்

நாதனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

காதலால் ஏத்து வார்தம் கடுவினை கழலு மன்றே.


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Jul 23, 2022, 9:44:10 AM7/23/22
to santhavasantham

3)

வானவர் தமக்கி ரங்கி வார்கடல் நஞ்சு தன்னைப்

போனகம் செய்த கோனைப் புனிதனை ஆல நீழல்

ஞானனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தேனலர் தூவி வாழ்த்தத் தீவினை தீரு மன்றே.


வி. சுப்பிரமணியன்



On Fri, Jul 22, 2022 at 9:17 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Jul 24, 2022, 7:51:55 AM7/24/22
to santhavasantham

4)

மட்டினை யுடையம் பெய்த மதனுடல் நீறு செய்த

சிட்டனை ஊணி ரக்கும் செல்வனை இருளில் ஆடும்

நட்டனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

இட்டமாய் ஏத்து வார்தம் இருவினை மாயு மன்றே.


வி. சுப்பிரமணியன்



On Sat, Jul 23, 2022 at 9:43 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Jul 25, 2022, 8:35:28 AM7/25/22
to santhavasantham

5)

தக்கனைத் தலைய ரிந்த தலைவனை ஆல வாயிற்

சொக்கனை அக்க ணிந்த தூயனைப் பலிதி ரிந்த

நக்கனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தக்கநன் மலரிட் டேத்தித் தாழ்பவர் தாழ்வி லாரே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Jul 24, 2022 at 7:51 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Ramamoorthy Ramachandran

unread,
Jul 25, 2022, 8:59:55 AM7/25/22
to Santhavasantham
கன்றாப்பூர் நடுதறியைப்பற்றிய ஐந்து பாடல்கள் படித்துப் பயன்பெற்றேன்; அடுத்த ஐந்தும் காண ஆவல்!
- புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM75ZfE2%2BFosN8%3DhwDsOTzqDGkhHJqPnz2ybmqp_J1qDQ%40mail.gmail.com.

Anand Ramanujam

unread,
Jul 25, 2022, 9:24:36 AM7/25/22
to santhav...@googlegroups.com
‘தாழ்பவர் தாழ்விலாரே’ - அருமையான பொருள்செறிந்த சொற்கள்! பாடி மகிழ்ந்தேன்! 

நன்றி!

- ஆனந்த்

--

Siva Siva

unread,
Jul 26, 2022, 10:10:08 AM7/26/22
to santhavasantham
Thank you both.

Siva Siva

unread,
Jul 26, 2022, 10:12:45 AM7/26/22
to santhavasantham

6)

வில்லென மலையை ஏந்தி மேவலர் எயில்கள் எய்ய

வல்லனை அடிய வர்க்கா வன்னமன் தனையு தைத்த

நல்லனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைச்

சொல்லிநை கின்ற அன்பர் தொல்வினை தொலையு மன்றே.


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Jul 27, 2022, 7:52:48 AM7/27/22
to santhavasantham

7)

பதியென உம்பர் போற்றும் பரமனை ஈறி லாத

நிதியனைத் தோளில் தூய நீற்றனைச் சென்னி மீது

நதியனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

துதிசெயும் அன்பர் தங்கள் தொல்வினை தொலையு மன்றே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Jul 26, 2022 at 10:12 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Jul 28, 2022, 9:28:25 AM7/28/22
to santhavasantham

8)

தூயனை இகழ்ந்து வெற்பைத் தூக்கினான் தனைநெ ரித்த

தேயனை அந்தி வான்போற் செய்யனைத் தேவர் கட்கு

நாயனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தூயநன் மலர்கொண் டேத்தத் தொல்வினை தொலையு மன்றே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Jul 27, 2022 at 7:52 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Jul 29, 2022, 7:45:43 AM7/29/22
to santhavasantham

9)

அம்புய னோடு மாலும் அடிமுடி நேடி வாடி

எம்பிரான் என்று போற்ற எல்லையில் எரிய தான

நம்பியைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

கும்பிடும் அன்பர் தங்கள் கொடுவினை தீரு மன்றே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Jul 28, 2022 at 9:28 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Jul 30, 2022, 9:49:59 AM7/30/22
to santhavasantham

இப்பதிகம் இவ்விரு பாடல்களோடு நிறைவுறுகின்றது.

10)

நெஞ்சினில் இருளை வைத்த நீசர்சொல் உரைகொள் ளேன்மின்

வெஞ்சின ஏற தேறும் விமலனை மிடறு தன்னில்

நஞ்சனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வஞ்சனை இன்றி வாழ்த்த வல்வினை மாயு மன்றே.


11)

வாசனை மிக்க கொன்றை மலரணி சடையி னானைத்

தேசனைத் ஈசன் தன்னைச் செருக்குடைத் தக்கன் வேள்வி

நாசனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைப்

பூசனை செய்வார்க் கில்லை புவிமிசைப் பிறவி தானே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Jul 29, 2022 at 7:45 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
Aug 2, 2022, 10:32:03 AM8/2/22
to santhavasantham

2016-09-21

ஆனைக்கா

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் கூவிளம் தேமா" - அரையடி அமைப்பு;

அரையடியினுள் வெண்டளை அமையும். 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை தேவை இல்லை.

அரையடி ஈற்றுச்சீர் மாச்சீர்.

விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு")

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்")


1)

நீரார் சடையுடை யானை நெற்றியிற் கண்ணுடை யானைக்

காரார் மிடறுடை யானைக் காரிகை பங்குடை யானைக்

கூரார் மழுவுடை யானைக் கோணல் மதியணிந் தானைச்

சீரார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Jul 30, 2022 at 9:49 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Aug 3, 2022, 10:08:00 AM8/3/22
to santhavasantham

2)

சொல்ல அரும்புக ழானைச் சொல்லி வழிபடு வார்க்கு

நல்ல கதியருள் வானை நக்கு மதிலெரித் தானை

அல்லிற் கணம்புடை சூழ ஆடி மகிழ்பெரு மானைச்

செல்வத் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Aug 2, 2022 at 10:31 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Siva Siva

unread,
Aug 4, 2022, 9:54:47 AM8/4/22
to santhavasantham

3)

வெங்கா னிடைநடம் ஆடும் விகிர்தனைத் தேவர்கள் எல்லாம்

எங்கோன் எனஅடி போற்றும் இறைவனை ஏந்திழை யாளைப்

பங்கா உடைய பரனைப் பால்மதி தன்னை அணாவும்

தெங்கார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்



On Wed, Aug 3, 2022 at 10:07 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Aug 5, 2022, 8:36:48 AM8/5/22
to santhavasantham

4)

வெண்பொடி மேனியி னானை வெள்விடை ஊர்தியி னானைப்

பண்பொலி பாடல்கள் பாடிப் பாத இணைதொழு வார்க்கு

விண்பொலி வாழ்வருள் வானை வெண்ணாவற் கீழிருந் தானைத்

தெண்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Aug 4, 2022 at 9:54 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Subbaier Ramasami

unread,
Aug 5, 2022, 9:51:00 AM8/5/22
to santhavasantham
தெண்புனல் சூழ்பவன் தெண்புனல் சூழானை என்றாகிவிடுவது வியப்புத்தான்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 5, 2022, 10:11:03 AM8/5/22
to santhavasantham
Good observation! Thanks.

Siva Siva

unread,
Aug 7, 2022, 7:03:31 AM8/7/22
to santhavasantham

5)

தரையினிற் சக்கரம் இட்டுச் சலந்தர னைத்தடிந் தானை

அரையினிற் கச்சென நாகம் ஆர்த்த பெருமையி னானை

விரைகமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனைத்

திரைபுனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்



On Fri, Aug 5, 2022 at 8:35 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Subbaier Ramasami

unread,
Aug 7, 2022, 9:32:24 AM8/7/22
to santhavasantham
அருமை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Aug 7, 2022, 11:43:56 AM8/7/22
to santhav...@googlegroups.com
🙏🙏

Sent from my iPhone

On 7 Aug 2022, at 19:02, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Aug 8, 2022, 11:21:13 AM8/8/22
to santhavasantham

Thank you both.


6)

எழும்பொழு தீசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும்

தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை மைம்மிடற் றானை

விழும்புனற் கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள் வானைச்

செழும்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Aug 9, 2022, 8:35:22 AM8/9/22
to santhavasantham

7)

கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடு வார்க்கருள் வானைப்

பூணா அரவணிந் தானைப் பொருப்பைச் சிலையா வளைத்து

நாணா அரவினைக் கட்டி நள்ளார் புரமெரித் தானைச்

சேணார் மதிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்



On Mon, Aug 8, 2022 at 11:21 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Aug 11, 2022, 7:59:44 AM8/11/22
to santhavasantham

8)

இகழும் மொழிகளைச் சொல்லி இருங்கயி லாயம் எடுத்த

தகவில் தசமுகன் கத்தத் தாள்விரல் இட்ட பிரானைப்

புகழும் அடியவர் தங்கள் பொல்லா வினையறுப் பானைத்

திகழும் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வி. சுப்பிரமணியன்



On Tue, Aug 9, 2022 at 8:35 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Saranya Gurumurthy

unread,
Aug 11, 2022, 10:45:23 AM8/11/22
to சந்தவசந்தம்
அருமை. ஆனைக்கா என்பதால் ஆனை/யானை என்ற பிரயோகம் நிறைய அமைந்துள்ளது போலும். 😊

சரண்யா 

Siva Siva

unread,
Aug 11, 2022, 1:10:18 PM8/11/22
to santhavasantham
Thanks. Good perspective!

Siva Siva

unread,
Aug 13, 2022, 9:36:39 AM8/13/22
to santhavasantham

Next 2 songs:

9)

கோனார் எனவாது செய்த குளிர்மல ரானரி காணா

வானார் கனலுரு வானை மணிதிகழ் மாமிடற் றானை

மானார் கரமுடை யானை மார்பில்வெண் ணூலணிந் தானைத்

தேனார் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


10)

ஒருவழி தன்னை உணரார் உளறிடும் பொய்களை எல்லாம்

பொருளென எண்ணி மயங்கேல் பூதப் படையுடை எம்மான்

அருளெனப் போற்றி வணங்கில் அல்லற் கடல்கடப் பிப்பான்

திருமலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Aug 11, 2022 at 10:45 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Aug 14, 2022, 8:15:37 AM8/14/22
to santhavasantham

Final song of this padhigam:

11)

நீர்மலி செஞ்சடை யானே நீள்சடை மேற்பிறை யானே

கார்மலி கண்டத்தி னானே கல்லால் நிழலினாய் என்று

பேர்பல சொல்லி வணங்கிற் பெருந்துணை ஆகிப் புரப்பான்

சீர்மலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Aug 13, 2022 at 9:36 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

10)

Siva Siva

unread,
Aug 16, 2022, 8:22:01 AM8/16/22
to santhavasantham

2016-09-24

வான்மியூர்

---------------------------------

(அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா" - அரையடி அமைப்பு;

தான என்பது தனன என்றும், தானனா என்பது தனதனா என்றும் வரலாம்;

(சம்பந்தர் தேவாரம் - 2.52.1 - "வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்")


1)

ஏக மாகி நின்றவன் ஏலம் நாறும் ஓதியாள்

பாக மாய பண்பினான் பாலும் நெய்யும் ஆடினான்

வாக னங்கள் மல்கிய வான்மி யூரில் மேயவன்

நாக நாண னைத்தொழ நன்மை நம்மை நண்ணுமே.


(ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - பெண்களின் கூந்தல்);


வி. சுப்பிரமணியன்


On Sun, Aug 14, 2022 at 8:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Aug 17, 2022, 7:30:36 AM8/17/22
to santhavasantham

2)

மானை ஏந்து கையனை மார்பில் நீறு பூசியைத்

தேனெய் ஆடும் ஈசனைச் சேவ தேறு செல்வனை

வானை எட்டு கட்டடம் மல்கு வான்மி யூர்தனிற்

கோனை நாளும் வாழ்த்தினால் குற்ற மற்ற இன்பமே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Aug 16, 2022 at 8:21 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Siva Siva

unread,
Aug 18, 2022, 8:09:19 AM8/18/22
to santhavasantham

3)

வேலை நஞ்சு கண்டுவான் வேண்டி நிற்க உண்டருள்

நீல கண்டன் எம்பிரான் நெற்றி மேலொர் கண்ணினான்

மாலை வான்நி றத்தினான் வான்மி யூரில் மேயவன்

சூல பாணி தாள்தொழும் தொண்டர் துன்பம் நீங்குமே.


வி. சுப்பிரமணியன்



On Wed, Aug 17, 2022 at 7:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Aug 19, 2022, 7:49:26 AM8/19/22
to santhavasantham

4)

வெங்க ளிற்றைப் போரினில் வென்று தோலு ரித்தவன்

பொங்க ராவை மாலையாப் பூணு கின்ற மார்பினான்

வங்கம் ஆர்க டற்கரை வான்மி யூரில் மேயவன்

அங்க ணன்ப தந்தொழும் அன்பர் அல்லல் தீருமே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Aug 18, 2022 at 8:09 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Anand Ramanujam

unread,
Aug 19, 2022, 9:22:36 PM8/19/22
to santhav...@googlegroups.com
‘மாலை வான் நிறத்தினான்’ -  சொல்லழகு மிக்க வார்த்தைகள்! 

அருமை!

- இரா. ஆனந்த் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 20, 2022, 8:14:55 AM8/20/22
to santhavasantham
படித்து ஆதரிக்கும் அன்பர்கள் எல்லார்க்கும் வணக்கம்.

Siva Siva

unread,
Aug 20, 2022, 8:16:03 AM8/20/22
to santhavasantham

5)

மண்டு காத லாலொரு மங்கை பங்கன் ஆயினான்

அண்டர் போற்றும் ஓரிறை அண்டி னார்க்கு நற்றுணை

வண்டி மல்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்

தொண்டர் தங்கள் வாழ்வினில் துன்பம் என்ப தில்லையே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Aug 19, 2022 at 7:49 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Aug 21, 2022, 7:31:35 AM8/21/22
to santhavasantham

6)

ஆட வல்ல நாயகன் அங்கொர் ஓட்டில் உண்பலி

நாட வல்ல நம்பிரான் நக்க ரண்கள் சுட்டவன்

மாடம் ஓங்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்

ஆட கப்ப தந்தொழும் அன்பர் பீடை நீங்குமே.


வி. சுப்பிரமணியன்



On Sat, Aug 20, 2022 at 8:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Aug 22, 2022, 10:59:46 AM8/22/22
to santhavasantham

7)

கோடி நாமம் உள்ளவன் கூற்று தைத்த தாளினான்

ஈடி லாத பெற்றியான் ஈரம் மிக்க வேணியான்

மாடி வீடு மல்கிய வான்மி யூரில் மேயவன்

தோடி லங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே.


வி. சுப்பிரமணியன்



On Sun, Aug 21, 2022 at 7:31 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

Siva Siva

unread,
Aug 23, 2022, 8:18:24 AM8/23/22
to santhavasantham

8)

ஈசர் வெற்பெ டுத்தவன் ஏழி ரண்டொ டாறுதோள்

நாசம் ஆக ஓர்விரல் நாகம் மீது வைத்தவர்

வாசக் கொன்றை சூடினார் வான்மி யூரில் மேயவர்

தேச னார்ப தந்தனைச் சிந்தை செய்ய நன்மையே.


வி. சுப்பிரமணியன்


On Mon, Aug 22, 2022 at 10:59 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Aug 24, 2022, 9:14:07 AM8/24/22
to santhavasantham

9)

அம்பு யத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே

எம்பி ரானெ மக்கருள் என்ன நின்ற சோதியான்

வம்பு நாறு கொன்றையான் வான்மி யூரில் மேயவன்

அம்பொ னார்ப தந்தொழும் அன்பர் இன்பர் ஆவரே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Aug 23, 2022 at 8:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Aug 25, 2022, 9:10:03 AM8/25/22
to santhavasantham

10)

மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்பு றேன்மினீர்

இண்டை யாக வெண்மதி ஏறு கின்ற சென்னிமேல்

வண்ட மர்ந்த கொன்றையான் வான்மி யூரில் மேயவன்

தொண்ட மர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Aug 24, 2022 at 9:14 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Siva Siva

unread,
Aug 26, 2022, 11:27:52 AM8/26/22
to santhavasantham

இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:

11)

காண லற்ற தன்மையைக் காம னுக்க ளித்தவன்

பூண லாஅ ராக்களைப் பூண்க ளாக ஏற்றவன்

வாணி லாவ ணிந்தவன் வான்மி யூரில் மேயவன்

தாணி லாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே.


வி. சுப்பிரமணியன்



On Thu, Aug 25, 2022 at 9:09 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

10)

Siva Siva

unread,
Aug 27, 2022, 9:41:35 AM8/27/22
to santhavasantham

2016-09-30

ஞீலி (திருப்பைஞ்ஞீலி)

---------------------------------

(வஞ்சித்துறை - "மா கூவிளம்" - என்ற வாய்பாடு;

(சம்பந்தர் தேவாரம் - 1.90.1 - "அரனை யுள்குவீர், பிரம னூருளெம்")


1)

புயலார் கண்டனை

வயலார் ஞீலியில்

அயரா தேத்தினால்

துயர்போய் இன்பமே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Aug 26, 2022 at 11:27 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Aug 29, 2022, 10:13:50 AM8/29/22
to santhavasantham

2)

மழையார் கண்டனே

அழகார் ஞீலியிற்

குழகா என்றடி

தொழலே இன்பமே.


வி. சுப்பிரமணியன்



On Sat, Aug 27, 2022 at 9:41 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Siva Siva

unread,
Aug 30, 2022, 9:23:38 AM8/30/22
to santhavasantham

3)

மையார் கண்டனே

செய்யார் ஞீலியில்

ஐயா என்பவர்

எய்யார் என்றுமே.


வி. சுப்பிரமணியன்



On Mon, Aug 29, 2022 at 10:13 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Sep 1, 2022, 7:43:20 AM9/1/22
to santhavasantham

Next 4 songs:

4)

செவியோர் தோடனே

கவினார் ஞீலியிற்

சிவனே என்பவர்

தவியார் மண்ணிலே.


5)

நீரார் வேணியான்

ஏரார் ஞீலியான்

சீரே செப்பினால்

தீரா இன்பமே.


6)

எழுதா ஓத்தினார்

உழவார் ஞீலியார்

மழுவார் தாளிணை

தொழுவார் தொண்டரே.


ஓத்து - வேதம்;


7)

மானை ஏந்திய

கோனை ஞீலியெம்

மானை வாழ்த்தினார்

வானை ஆள்வரே.


வி. சுப்பிரமணியன்



On Tue, Aug 30, 2022 at 9:23 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Sep 2, 2022, 8:32:15 AM9/2/22
to santhavasantham

This padhigam concludes with these 4 songs:

8)

பத்துச் சென்னியான்

கத்த ஊன்றினார்

நித்தர் ஞீலியார்

பத்தர் வாழ்வரே.


9)

அரிவே தன்தொழும்

எரியே ஞீலியாய்

பெரியாய் என்பவர்

பிரியார் இன்பமே.


10)

பொய்யர் சொல்விடும்

ஐயன் ஞீலியிற்

செய்யன் தாள்தொழல்

உய்யும் மார்க்கமே.


11)

மணியார் கண்டனை

அணியார் ஞீலியில்

பணியார் மார்பனைப்

பணிவார் நல்லரே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Sep 1, 2022 at 7:43 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Vivek Bharathi

unread,
Sep 2, 2022, 8:47:18 PM9/2/22
to santhav...@googlegroups.com
நன்று ஐயா. இதில் வரும் பணியார் மார்பன் எதைக் குறிக்கிறது? 
"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 2, 2022, 9:02:35 PM9/2/22
to santhavasantham

பணி ஆர் மார்பனைப் - மார்பில் பாம்பை (மாலையாக) அணிந்தவனை;


Vivek Bharathi

unread,
Sep 2, 2022, 9:38:39 PM9/2/22
to santhav...@googlegroups.com
பணி என்றால் பாம்பு என்பதை இன்று அறிந்துகொண்டேன் ஐயா. நன்றி

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 3, 2022, 11:11:58 AM9/3/22
to santhavasantham

2016-10-15

கோயில் (சிதம்பரம்)

---------------------------------

(எண்சீர்ச் சந்த விருத்தம் - "தனன தானா தனன தானா" - என்ற அரையடிச் சந்தம்;

"தனன" என்பது "தான" என்றும் வரலாம்)

(சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்")


1)

அங்கை கூப்பி அடியை வாழ்த்தும்

.. அடிய னேனை அஞ்சல் என்னாய்

பொங்க ராவைப் பூணும் மார்பா

.. பொருத ஆனை தனையு ரித்தாய்

செங்க ணேறு தனையு கந்த

.. தேவ தேவா பாவ நாசா

மங்கை காண வையம் பேண

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Sep 2, 2022 at 8:32 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Swaminathan Sankaran

unread,
Sep 3, 2022, 1:35:24 PM9/3/22
to santhav...@googlegroups.com
' பொங்க ராவைப்' என்பதை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும்?
பொருள் புரிகிறது, ஆனால் புணர்ச்சி புரிபடவில்லை.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Pas Pasupathy

unread,
Sep 3, 2022, 1:39:02 PM9/3/22
to Santhavasantham
பொங்கு +அரா(பாம்பு) 

On Sat, 3 Sept 2022 at 13:35, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
' பொங்க ராவைப்' என்பதை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும்?
பொருள் புரிகிறது, ஆனால் புணர்ச்சி புரிபடவில்லை.

சங்கரன் 

Swaminathan Sankaran

unread,
Sep 3, 2022, 4:07:45 PM9/3/22
to santhav...@googlegroups.com
'பொங்கு' என்றால் 'பொங்கும்' அதாவது 'சீறும்' என்று கொள்ள வேண்டுமா?

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Sep 3, 2022, 5:38:09 PM9/3/22
to santhavasantham
Yes.

திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
= திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர்

V. Subramanian

Swaminathan Sankaran

unread,
Sep 3, 2022, 5:43:00 PM9/3/22
to santhav...@googlegroups.com
நன்றி.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Anand Ramanujam

unread,
Sep 4, 2022, 6:42:11 AM9/4/22
to santhav...@googlegroups.com
நட்டம் என்பது ‘நடம்’ என்னும் சொல்லின் திரிபு என்று கொள்ளலாமா?

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 4, 2022, 7:19:15 AM9/4/22
to santhavasantham
According to Tamil Lexicon:
நட்டம்¹ naṭṭam , n. Pkt. naṭṭa. Dance, dancing; நடனம். நட்டம்பயின் றாடுநாதனே (திருவாச. 1, 89).
நடம் naṭam , n. naṭa. Dance; கூத்து. இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ. 57).


Siva Siva

unread,
Sep 4, 2022, 7:22:13 AM9/4/22
to santhavasantham

2)

போது தூவிப் பொற்ப தத்தைப்

.. போற்றி னேனை அஞ்சல் என்னாய்

ஓது கின்ற ஓத்தில் உள்ளாய்

.. உனைய டைந்த மாணி ஆவி

பாது காத்துக் கூற்று தைத்தாய்

.. பாய்பு லித்தோல் ஆடை யானே

மாது காண வையம் பேண

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்



On Sat, Sep 3, 2022 at 11:11 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Anand Ramanujam

unread,
Sep 4, 2022, 8:14:45 AM9/4/22
to santhav...@googlegroups.com
நன்றி!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 5, 2022, 8:45:42 AM9/5/22
to santhavasantham

3)

எண்ணி நாளும் அடிவ ணங்கும்

.. எளிய னேனை அஞ்சல் என்னாய்

வெண்ணி லாவும் சீற ராவும்

.. வேணி மீது வாழ வைத்தாய்

கண்ணி லாவும் நெற்றி காட்டிக்

.. காம வேளை நீறு செய்தாய்

மண்ணும் விண்ணும் வாழ்த்தி ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Sep 4, 2022 at 7:22 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Siva Siva

unread,
Sep 6, 2022, 8:40:28 AM9/6/22
to santhavasantham

4)

துதிகள் பாடி அடிவ ணங்கும்

.. தொண்ட னேனை அஞ்சல் என்னாய்

மதியம் மத்தம் கொன்றை சூடீ

.. வார ணத்தின் உரிவை போர்த்தாய்

எதிரி லாதாய் தலைகை ஏந்தி

.. இல்ப லிக்குத் திரியும் ஈசா

மதிலி லங்கும் அணிகொள் தில்லை

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Mon, Sep 5, 2022 at 8:45 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Siva Siva

unread,
Sep 7, 2022, 11:53:16 AM9/7/22
to santhavasantham

5)

கானி லங்கு பூக்கள் தூவிக்

.. கழல்ப ணிந்தேன் அஞ்சல் என்னாய்

தேனி லங்கு கொன்றை சூடீ

.. செக்கர் வானம் போல்நி றத்தாய்

மானும் வையார் மழுவும் ஏந்தீ

.. மாசு ணத்தை அரையில் ஆர்த்தாய்

வானும் மண்ணும் வாழ்த்தி ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Tue, Sep 6, 2022 at 8:40 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Sep 8, 2022, 8:34:23 AM9/8/22
to santhavasantham

Next 2 songs:

6)

இறைவ என்று நித்தல் வாழ்த்தும்

.. எளிய னேனை அஞ்சல் என்னாய்

குறையி ரந்த இமைய வர்க்காக்

.. கொடுவி டத்தை அமுது செய்து

கறைய ணிந்த திருமி டற்றாய்

.. காத லாளர் தமிழ்கள் பாட

மறைப யின்றோர் போற்றி செய்ய

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


7)

ஐய உன்றன் அடியை வாழ்த்தும்

.. அடிய னேனை அஞ்சல் என்னாய்

நெய்யும் பாலும் ஆடும் நம்பா

.. நீறி லங்கு மார்பில் நூலா

மைய ணிந்த கண்ணி பங்கா

.. மறைசொல் நாவா தேவ தேவா

வைய கத்தோர் சுரர்கள் ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Sep 7, 2022 at 11:53 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Vivek Bharathi

unread,
Sep 8, 2022, 8:50:23 AM9/8/22
to santhav...@googlegroups.com
சிறப்பு ஐயா 

தமிழ்கள் என்ற பயன்பாட்டைக் விளக்க முடியுமா? 

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 8, 2022, 9:01:53 AM9/8/22
to santhav...@googlegroups.com
தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள்;

சம்பந்தர் தேவாரம் - 2.59.11

ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர்செல்வக்

காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்

தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்

வாழி நீங்கா வானோர் உலகின் மகிழ்வாரே.


V, Subramanian


Vivek Bharathi

unread,
Sep 8, 2022, 9:04:06 AM9/8/22
to santhav...@googlegroups.com
புதிய பதத்தைக் கற்றுக் கொண்டேன். நன்றி ஐயா

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 9, 2022, 9:01:37 AM9/9/22
to santhavasantham

8)

தினமும் உன்றன் சீரை ஓதும்

.. சிந்தை யேனை அஞ்சல் என்னாய்

முனம லைக்கீழ் வல்ல ரக்கன்

.. முடிகள் பத்தை அடர்வு செய்தாய்

வனம டைந்து பார்த்த னுக்கு

.. வரம ளித்த கயிலை நாதா

மனம கிழ்ந்து பத்தர் ஏத்த

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Thu, Sep 8, 2022 at 8:34 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7)

Siva Siva

unread,
Sep 10, 2022, 8:34:08 AM9/10/22
to santhavasantham

9)

உன்னி நாளும் உன்றன் நாமம்

.. ஓதி னேனை அஞ்சல் என்னாய்

அன்னம் ஏனம் ஆகி முன்னம்

.. அயனும் மாலும் நேட நின்றாய்

சென்னி மீது திங்கள் சூடி

.. மின்னி லங்கு சடைகள் தாழ

வன்னி தன்னைக் கையில் ஏந்தி

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Sep 9, 2022 at 9:01 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

8)

Siva Siva

unread,
Sep 10, 2022, 11:35:15 PM9/10/22
to santhavasantham

This padhigam concludes with these 2 songs:

10)

நலத்தை நண்ணா வீணர் பேசும்

.. ஞானம் அற்ற வார்த்தை பேணேல்

நிலத்தை உற்றுத் தனைவ ணங்கும்

.. நேயர் தம்மை அஞ்சல் என்பான்

கலக்கம் உற்ற திங்கள் தன்னைக்

.. காத்த அண்ணல் கரிய கண்டன்

வலக்கை தன்னில் துடியை ஏந்தி

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


11)

பணியும் அன்பர் பாவ மெல்லாம்

.. பறையு மாறு நல்கும் ஈசன்

பிணியும் நோயும் சாவும் இல்லான்

.. பெற்றம் ஏறும் பெரிய தேவன்

அணியும் ஆரம் நாகம் ஆக

.. அயன்சி ரத்தில் ஊணி ரப்பான்

மணியி லங்கு மிடறன் அம்பொன்

.. மன்றில் நட்டம் ஆடும் மன்னே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Sep 10, 2022 at 8:34 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

9)

Saranya Gurumurthy

unread,
Sep 16, 2022, 10:21:01 PM9/16/22
to சந்தவசந்தம்
இன்று தான் பதிகத்தைப் படித்தேன்.

சிறு ஐயம்.

அரையடியின் இரண்டாம் சீர் - தானா என்று குறிக்கப்பட்டுள்ளது.

நண்ணா என்பது தானா (4 மாத்திரை). ஆனால் அற்ற என்பது தான எனும் 3 மாத்திரை தானே? 

மற்ற பாடல்களிலும் பெரும்பாலும் இரண்டாம் சீர் தான என்பது போல் தான் எனக்குப் படுகிறது. சில இடங்களில் தானா வருகிறது. 

தான என்று வரும் இடங்களில் தானா என்று நீட்டிப் படிக்க வேண்டுமா?

சரண்யா.

Siva Siva

unread,
Sep 17, 2022, 2:02:37 AM9/17/22
to santhav...@googlegroups.com
இழித்து கந்தீர் முன்னை வேடம்
    இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
    வுயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
    அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
    வேலை சூழ்வெண் காட னீரே

Ramamoorthy Ramachandran

unread,
Sep 17, 2022, 8:06:40 AM9/17/22
to santhav...@googlegroups.com
அவனு  டைய  தாதை- அவனைப் பெற்ற  தாதை ?
- இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 2, 2022, 8:32:23 AM10/2/22
to santhavasantham
Posting in this thread too - for ease of access.
==========
The song I shared in the SV meet on 1-Oct-2022.

2022-09-26

சந்தவசந்தச் சந்திப்புக் கவியரங்கம் - 2022-10-01

வளைவிலும் உண்டு வனப்பு

--------------------------------------

(வெண்பா)

(பதிகத்தின் எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

பிறப்புமூப் பில்லாப் பெருமான் இளமைச்

சிறப்பென்றும் நீங்காத சீர்மை - மறைத்துத்

தளர்வோடா ரூரர்த் தடுத்தாட்கொள் கோல

வளைவிலும் உண்டு வனப்பு.

சீர்மை - புகழ்; சிறப்பு;

ஆரூரர்த் தடுத்தாட்கொள் - சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட;


2)

சேமம் உறவிது செய்யென்ற தேவர்க்கா

மாமலரம் பெய்த மதியிலாக் - காமன்

களையாகம் நீறுசெய் கண்ணுதல் காட்டும்

வளைவிலும் உண்டு வனப்பு.

களை ஆகம் - அழகிய உடல்;


3)

வந்தடை சாபத்தால் வாடி ஒளிமழுங்கிக்

கந்த மலர்க்கழலைக் கைதொழு - தெந்தத்

தளையுமிலான் தாழ்சடைமேல் தங்கிமகிழ் திங்கள்

வளைவிலும் உண்டு வனப்பு.


4)

பேரா யிரமுடைய பெம்மான் திருமேனி

பேரா திருக்கும் பெருமையினாள் - ஏரார்

வளையணிந்த முன்கை மலைமா திடையின்

வளைவிலும் உண்டு வனப்பு.


5)

அடிமேல் மனம்வைத்த அன்பரிடர் தீர்ப்பான்

கொடிமேல் எருதுடைய கூத்தன் - முடிமேல்

இளமதியைச் சுற்றி இருக்கும் அரவின்

வளைவிலும் உண்டு வனப்பு.


6)

நேசத்தால் நாளும் நினைவார்தம் வல்வினை

மாசைக் களைந்தருளும் மன்றாடி - வாசக்

களபமார் நீற்றன் கழல்காட்டும் கையின்

வளைவிலும் உண்டு வனப்பு.

களபம் - கலவைச்சாந்து; ஆர்தல் - ஒத்தல்;


7)

அரியயன் இந்திரன் அஞ்சிவந் தேத்த

அரிய அமுதெனநஞ் சார்ந்த - கரிய

களமுடையான் கையில் கனவரை வில்லின்

வளைவிலும் உண்டு வனப்பு.

ஆர்தல் - உண்தல்; களம் கண்டம்; வரை - மலை;


8)

பெருமலை தன்னைப் பெயர்த்த அரக்கன்

இருபது தோள்நசுக்கி எங்கும் - குருதி

அளறுசெய ஊன்றும் அரனார் விரலின்

வளைவிலும் உண்டு வனப்பு.

அளறு - சேறு;


9)

பெரியேன்நான் என்று பிணங்கிவா திட்ட

கரியான் அயன்நேடிக் காணா - எரியாய்

அளவின்றி நீண்டான் அவன்புரி வேணி

வளைவிலும் உண்டு வனப்பு.

புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்;


10)

திருவாக்கும் ஐந்தெழுத்தைச் செப்பாதார்க் கில்லான்;

ஒருபூக்கண் இட்டடி போற்று - திருமாற்

குளமகிழ் வாக உகந்தீந்த ஆழி

வளைவிலும் உண்டு வனப்பு.

* திருமாலுக்குச் சக்கரம் ஈந்தது - திருவீழிமிழலைத் தலவரலாறு;


11)

கனைகடல் நஞ்சணி கண்டன் கழலை

நினைபவர் நெஞ்சினில் நின்று - வினையைக்

களையும் அரன்அருட் கண்மேற் புருவ

வளைவிலும் உண்டு வனப்பு.


V. Subramanian

==========

குருநாதன் ரமணி

unread,
Oct 2, 2022, 9:18:22 AM10/2/22
to சந்தவசந்தம்
ஒவ்வொரு பாடலும் படித்து மகிழ்ந்தேன். மிக அருமை. கவிப்பெருஞ்சுடராகும் உமக்குத் தேவாரத் திருவாளர் என்றொரு விருதும் தரலாம்.
ரமணி

Siva Siva

unread,
Oct 18, 2022, 8:11:13 AM10/18/22
to santhav...@googlegroups.com
Thank you!

Siva Siva

unread,
Oct 18, 2022, 8:16:16 AM10/18/22
to santhav...@googlegroups.com

2016-10-22

பொது

---------------------------------

("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்;

"தானா" என்பது "தனனா" என்றும் வரலாம்;)

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே")


1)

ஓயா துன்பெயரே உரை அன்புடை மாணியவர்

மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே

தூயா செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும்

நேயா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்


Siva Siva

unread,
Oct 19, 2022, 8:12:58 AM10/19/22
to santhav...@googlegroups.com

2)

இமையோர் தாம்பணிய எரி நஞ்சினை உண்டவனே

உமையோர் கூறுடையாய் ஒரு வெள்விடை ஊர்தியினாய்

அமரா அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே

நிமலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்

On Tue, Oct 18, 2022 at 8:16 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2016-10-22

பொது

---------------------------------

("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்;

1)

Siva Siva

unread,
Oct 20, 2022, 7:44:03 AM10/20/22
to santhav...@googlegroups.com

3)

முத்தா முக்கணனே முதல் வாவென வாழ்த்தடியார்

சித்தா செம்பெருமான் திரு நீறணி மேனியினாய்

அத்தா பாம்புதனை அரை நாணென ஆர்த்தவனே

நித்தா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்


On Wed, Oct 19, 2022 at 8:12 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Anand Ramanujam

unread,
Oct 20, 2022, 9:08:20 PM10/20/22
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு அடியிலும் கூழை மோனை அழகுற அமைந்து இன்சுவை தருகிறது.

சுந்தரர் புலித்தோலை அரைக்கு அசைத்த விதத்தைப் பாடுவதையும், தாங்கள் அரவை அரையில் ஆர்த்த அழகினைப் பாடுவதையும்  ஒப்பிட்டுப் பார்த்தால் சிறப்பாக உள்ளது.

மிக அருமை!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 21, 2022, 6:15:36 AM10/21/22
to santhav...@googlegroups.com
Thanks.
படித்துவரும் அன்பர்களெல்லார்க்கும் வணக்கம்.

V. Subramanian

Siva Siva

unread,
Oct 21, 2022, 8:18:13 AM10/21/22
to santhav...@googlegroups.com

4)

சூலா போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும்

சீலா ஈரமிலாச் செறு காலனை அன்றுதைத்த

காலா கண்ணுதலே கடு நஞ்சினை உண்மிடற்றில்

நீலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்

On Thu, Oct 20, 2022 at 9:08 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Oct 22, 2022, 7:37:47 AM10/22/22
to santhav...@googlegroups.com

5)

காற்றோ டொள்ளெரிமால் கணை ஆக வரைச்சிலையால்

மாற்றார் மாமதில்கள் வளர் தீப்புக எய்தவனே

ஏற்றாய் வெண்மழுவாள் இலை மூன்றுடை வேலுடையாய்

நீற்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்


On Fri, Oct 21, 2022 at 8:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

4)

Siva Siva

unread,
Oct 23, 2022, 7:02:14 AM10/23/22
to santhav...@googlegroups.com

6)

பதியே பாய்விடையாய் படர் புன்சடை மேலரவே

மதியே வானதியே மல ரேபுனை பிஞ்ஞகனே

புதியாய் தொன்மையனே புகல் என்றடை வார்க்குலவா

நிதியே நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்


On Sat, Oct 22, 2022 at 7:37 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

5)

Siva Siva

unread,
Oct 24, 2022, 10:48:18 AM10/24/22
to santhav...@googlegroups.com

7)

ஊரூர் உண்பலிதேர் ஒரு வாஉமை யாள்கணவா

காரார் வெற்புநிகர் கரி தன்னை உரித்தவனே

ஏரார் கொன்றையினாய் இள மாமதி சேர்சடையுள்

நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


வி. சுப்பிரமணியன்


On Sun, Oct 23, 2022 at 7:02 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

It is loading more messages.
0 new messages