சோனக ஆசிரியர்கள் கூறும் மதுரைத் தெய்வங்கள் திருமணம்
---------------------------------------------
இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கிய சித்ரா பௌர்ணமி! மாசி மாதம் நடைபெற்றுக்
கொண்டிருந்த சோமசுந்தரர் - மீனாட்சி திருக்கலியாண விழாவைச் சித்திரைக்கு
மாற்றியவர் திருமலை நாயக்கர் (fl. 1623 - 1659) ஆவார். கிரேக்க
யவனாசிரியர்கள் நூலில், பாண்டிய மன்னனின் திருமகளாக மீனாட்சி
கூறப்பட்டுள்ளாள். ஹெராகில்ஸ் என்னும் கிரேக்கக் கடவுள், அவர் மகள்
பாண்டையா என்பது கிரேக்கர்கள் கூற்று:
https://en.wikipedia.org/wiki/Pandaie கிரேக்கர்கள் பாண்டையே
திருமணத்தைக் கூறுவது முக்கியமானது. மதுரைத் திருக்கலியாண விழா 2300
ஆண்டு முன்பே உலகம் முழுக்க அறிந்துள்ளார்கள் என்பது அதிசயமானது. சோமன்
(சந்திரன்) - ரோஹிணி (மீனாக்ஷி) வானியல் திருமணம் இது. ஆண்டுதோறும்
வேளாண்மை, செல்வம் பெருக நிகழ்த்தப்படும் சாறு/விழா.
https://youtu.be/TWTRu4e6CdA
சோமசுந்தரர் - மீனாட்சி திருமணத்தை, பிரஜாபதி திருமணம் என்னும் வேத
இலக்கியத் திருமணமாகச் சொல்லியுளர் கிரேக்க சோனகாச்சார்யர்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது. சீனாவில் யின் - யாங் என்னும் இருமைக் கோட்பாடு
மிகப் பழமையானது. இருளும் ஒளியும், பகலும் இரவும், ஆணும் பெண்ணும், ...
போல Duality principle இயற்கையில் பல வழிகளாக இயங்குகிறது. ரோகிணி -
ஜேஷ்டை என்பது இந்தியாவின் 4500 ஆண்டுகால இருமைக் கோட்பாட்டு வானியல்.
இதனால், தமிழின் திசைப்பெயர் ஆகிய தெற்கு (தெல்- < தேலு/தேள்), தில
(எள்ளின் பெயர்) வெளிச்சம் அடைகின்றன. மேலும், ஆராய அண்மையில் கிடைத்த
"Scorpion Harpoon" பற்றி விரிவாக எழுதியுள்ளேன்:
https://x.com/naa_ganesan/status/1915722469303857514
https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology பாரதத்தில், இந்த
Duality Principle பற்றி யாரும் எழுதவில்லை. நான் குறிப்பிட்ட போது
குருநாதர், ஆஸ்கோ பார்ப்போலா வாழ்த்தினார்: "Dear Ganesan, Many thanks
for your posts. Jyeṣṭhā/Mukaṭi is very probably an originally Harappan
divinity. I have not yet gone through all the lists of my
publications, but here is the list I have now compiled. I have
uploaded to
academia.edu the World Archaeology paper (1986), those of
Sāvitrī and SAA 2001 were already there. Thanks also for the new
datings of the Copper Hoards based on soil samples. I appreciate your
contributions. Best wishes, Asokan" (May 8, 2025)
கேட்டை (< கேடு) என்னும் மோடி (> முகடி) பற்றி வள்ளுவர் மூன்று
திருக்குறளில் பாடினார். இது பாரதத்தின் Cosmological Duality கோட்பாடு
பிரபலமாக இருந்ததைக் காட்டும் சான்று.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:167)
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்
(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:617)
அகடாரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியால் மூடப்பட் டார்
(அதிகாரம்:சூது குறள் எண்:936)
மோடி > முகடி என்றாகும். யால்/ஆல் (Cf. யானை) > அகல் என்றாதல் போல. mOTaa
(மோட்டா) பருமை, வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சொல். மோட்டெருமை,
மோட்டிறா. மோடி - பருத்த வயிறுடையாள் என்பது பொருள். காக்கைக் கொடியாள்,
கலதி, கெடல் அணங்கு, தூமவதி, கழுதைவாகினி, ... இதேபோல, மெசப்படாமியாவில்,
எரிஷ்கிகல் - இனன்னா என்னும் ஜோடி சகோதரியர் உண்டு. கி.பி. 5-6
நூற்றாண்டுகளில் முதலில் வரும் கேட்டை சிற்பங்களில், ஒலக்கூர்,
சூணாம்பேடு சேட்டை, மோடி என்னும் சேட்டை அருகில் இந்த வாள் ஏந்தி மகன்
மனித முகத்துடன் இருக்கிறான். அடுத்த நூற்றாண்டில் இருந்து மாந்தன்
மாட்டு முகம் பெறுகிறான். கேட்டை என்பவள் காடுகாள் (அ) காடுகிழாள்
என்னும் வனதேவதை. இன்றும் காடுகளில், நீர்நிலை அருகே தான்
நூற்றுக்கணக்கான சிற்பங்கள் கிடைக்கின்றன. பெரும்பாணாற்றுப்படை வடுகன்
கடற்கரையில் காலனைத் தடிந்த கதை வருகிறது. இங்கே, மூதணங்கு = சேட்டை.
மேலும், திருமுருகில் "பழையோள் குழவி" என்ற தொடருக்கு, பழையோள் இந்த
மூதணங்கு என்ற குறிப்பு உண்டு. ஊரார் எல்லை அம்மன், துர்க்கை அம்மன் என
வழிபடுகின்றனர். உண்மையில், துர்க்கை/கொற்றிக்கு மூத்தாள் இவள்.
பரிபாடலில் ஒரு பாடல் காடுகிழாள் என்னும் ஜேஷ்டைக்கு இருந்துள்ளது.
போகூழால் அழிபட்டது. பெரும்பாணாற்றுப்படையில், விளக்கமான ஒருவரி,
வள்ளுவர் கூறும் தவ்வை, அவள் மகன், (கால) வைரவன் வாள் கொண்டு (காலன்)
சூரனைத் தடிந்த கதை சொல்லப்பட்டுளது. தகடூர் யாத்திரையில் ஒரு பாடல்
ஜேஷ்டை மீது பாடப்பட்டுள்ளது. பிற்காலங்களில் வேத கால வருணன் "மழு வாள்
நெடியோன்" என்னும் மகர விடங்கர் (துருவ நட்சத்திரம்) தன் இலிங்கக்
குறியீடு (குடிமல்லம் வருண லிங்கம்) சிவ பிரான் ஆனது பற்றி
விளக்கியுள்ளேன். அதுபோல, சேட்டைத் தேவி, காளியுடன் சேர்ந்துவிட்டாள்.
காலப்போக்கில் மறக்கப்பட்ட பழைய தெய்வம் இவள்!
ஆரியபட்டர் ரோமகர், பாலீசர் என்னும் சோனக ஆச்சாரியர்களை ஜோதிஷ வானியல்
சாஸ்திர முன்னோடிகளாக குறிப்பிடுகிறார். இந்த யவனாசிரியர்கள் செய்த
விஞ்ஞானத்தையும் சேர்த்து வானியல் சாஸ்திரம் வளர்ந்துள்ளது. உவச்சர்கள்
காளி கோயில் பூஜாரிகள். கம்பன் இக் குலத்தில் அவதரித்த இந்தியாவின் இரு
செம்மொழிகளும் கற்றுத் துறை போகிய நிபுணன். ஆங்கிலத்துக்கு சேக்ஸ்பியர்
போன்றவன் தமிழுக்குக் கம்பன். இவர்கள் எல்லோரும் இரு செம்மொழிகளும்
கற்றுயர்ந்தோர். உவச்சர்/வேளார்களை சோதிடம், நாடகம் போன்ற துறைகளில்
வடமொழி வல்லுநர்கள் ஆனதால், சோனக சாஸ்திர வல்லுநர்கள் ஆனதால் சோனகர் என
தமிழின் பழைய நிகண்டுகள் கூறுகின்றன. சோனகன் என்றால் யவனர்கள் செய்த
வானியல், நாடக நூல்களில் நிபுணர்கள் எனப் பொருள். சிரமண சமயங்கள் (ஜைனம்,
பௌத்தம்) வளர்ச்சியைக் குன்றச் செய்ய இந்த சாஸ்திரங்கள் கல்வி உதவின
என்பர் இந்தியவியல் பேராசிர்ய்ன்மார். கம்பனுக்கு ஒரு நூற்றாண்டு முன்பு
இருந்த உவச்ச மரபினன், "சோனகன் சாவூர் பரஞ்சோதி" திருமந்திர ஓலைநாயகமாக,
நாட்டியாச்சாரியனாக, கல்வெட்டுகளைச் சரிபார்த்து வெளியிடும் அரசாங்கத்
தலைவனாக இருந்துள்ளான். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலக்
கல்வெட்டுகள் இவன் மீதுள்ளவை முழுதும் தொகுக்கப்படல் வேண்டும்.
https://groups.google.com/g/vallamai/c/G-F9OT-ZZkg/m/6LJP-Bb_CgAJ
இந்தியாவின் பண்டை இருமைக் கோட்பாடு (ரோஹிணி-சேட்டை= கொற்றவை - முகடி =
வள்ளுவரின் செய்யவள் - மா முகடி)
https://en.wikipedia.org/wiki/Dualism_in_cosmology இந்தப் பட்டியலில்
ஏறவேண்டும் . இது பற்றிய என் ஆய்வுக் கட்டுரை தருகிறேன்.
சிந்து - வானி நாகரீகத் தொடர்ச்சி மிக அதிகமாகக் கிடைப்பது தமிழ்நாட்டிலே
தான் என்பதற்குச் சாட்சியாக, வள்ளுவர் 3 குறளால் சிறப்பிக்கும், வானியல்
இருமைக் கோட்பாடு சாட்சியாகும். My earlier articles:
https://x.com/naa_ganesan/status/1911919827746431161
Please send comments, after reading, to
naa.g...@gmail.com. Thanks,
நா. கணேசன்
https://en.wikipedia.org/wiki/Duality
https://en.wikipedia.org/wiki/Duality_principle
https://en.wikipedia.org/wiki/List_of_dualities