அண்ணா மலைதீப மாம்

35 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Dec 12, 2024, 11:19:07 PM12/12/24
to சந்தவசந்தம்
அண்ணாமலை  தீபம் 

விண்தழுவு    மாமலையின்  வேத   விளக்கேதான் 
அண்ணா மலைதீப  மாம்.
  
கண்கொள்ளாக் காட்சியினைக் காணத் தருகின்ற
அண்ணாமலை தீப மாம்.

நன்னெய்சேர்  கொப்பரையில் நாட்டு  திருவிளக்கே 
அண்ணா மலைதீப  மாம்

எண்ணிறந்த சித்தர் இலங்குதிரு மாமலையில்
அண்ணாமலை தீப மாம்

எண்ணிறந்தார்  சுற்றிவரும்    ஈசனுறை  மாமலையில் 
அண்ணா  மலைதீப மாம். 

பெண்சுமந்த     பாகத்தன்      பிஞ்ஞகனின் பேரொளிசேர் 
அண்ணா  மலைதீப  மாம். 

தண்ணார்ந்த    கங்கை              தலைசூடிப்  பெம்மானின்  
அண்ணா  மலைதீப  மாம்.

விண்ணார்         மதியின்            பிறைசூடும்   பெம்மானின் 
அண்ணா            மலைதீப            மாம்

மண்முதலாம்    பூதத்தான்        விண்முதலாம் அண்டத்தான் 
அண்ணா  மலைதீப   மாம்

பெம்மான்     திருமுருகைப்  பேசுதிருக்      கார்த்திகையில் 
அண்ணா  மலைதீப  மாம்  

எண்ணத்திற்  கொண்டார்க்கும் கண்நிறையக் கண்டார்க்கும் 
அண்ணா  மலைதீப  மாம்

 அண்ணல் ரமணர் அடங்கு     திருத்தலத்தே 
 அண்ணா மலைதீப  மாம். 

அண்ணலவர்  யோகிராம் அன்றெழுந்த நல்லூரில்
அண்ணா   மலைதீப மாம்

 நண்ணாமல் பேரிடர்கள் நன்னெய்ச் சுடர்போக்கும்
அண்ணா   மலைதீப மாம்

இந்நாள் வளர்கொடுமை இல்லாமற் செய்யவரும் 
அண்ணா மலைதீப மாம் 

மீள்
அரசி.பழனியப்பன்
13.12.2024

இமயவரம்பன்

unread,
Dec 12, 2024, 11:22:51 PM12/12/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை!

On Dec 12, 2024, at 11:19 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbxqvibwe3kKTjutwW9hLJnt3D3rPRed2HKfxr%3DRX6vBQ%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Dec 12, 2024, 11:39:15 PM12/12/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு இமய வரம்பரே!

Siva Siva

unread,
Dec 12, 2024, 11:50:48 PM12/12/24
to santhav...@googlegroups.com
திருவண்ணாமலையின் சிறப்புகளைக் கூறும் பாடல்.
குறள்வெண்பாக்களா?

சில பாடல்களில் இனவெதுகைபோல்.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 12:09:44 AM12/13/24
to சந்தவசந்தம்
வணக்கம்.

ஆம் ஞானத் திரளே! 

இனவெதுகை வரலாம் தானே!

நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
Dec 13, 2024, 2:33:46 AM12/13/24
to சந்தவசந்தம்
அருமை.
ரமணி

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 4:09:35 AM12/13/24
to சந்தவசந்தம்
நன்றி அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

RNachi

unread,
Dec 13, 2024, 8:58:14 AM12/13/24
to சந்தவசந்தம்
அருமை அண்ணன் 

On Friday, December 13, 2024 at 12:19:07 PM UTC+8 Arasi Palaniappan wrote:
அண்ணாமலை  தீபம் 

விண்தழுவு    மாமலையின்  வேத   விளக்கேதான் 
அண்ணா மலைதீப  மாம்.
 
Siva Siva

unread,
Dec 13, 2024, 9:48:39 AM12/13/24
to santhav...@googlegroups.com
/ இனவெதுகை வரலாம் தானே! /

Yes, இனவெதுகை is one of the permitted types of edhugai.
So, it is a poet's choice to use it. 
In this set, 3 out 15 verses have it - about 20% frequency.
Books do not define how frequently it can be used.

Pages 129-136 in கவி பாடலாம் by கிவாஜ covers this topic.

V. Subramanian 

On Fri, Dec 13, 2024 at 12:09 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
வணக்கம்.
...

On Fri, 13 Dec 2024, 5:50 am Siva Siva, <naya...@gmail.com> wrote:
திருவண்ணாமலையின் சிறப்புகளைக் கூறும் பாடல்.
குறள்வெண்பாக்களா?

சில பாடல்களில் இனவெதுகைபோல்.

V. Subramanian

On Thu, Dec 12, 2024 at 11:19 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அண்ணாமலை  தீபம் 

...
நன்னெய்சேர்  கொப்பரையில் நாட்டு  திருவிளக்கே 
அண்ணா மலைதீப  மாம்

..

பெம்மான்     திருமுருகைப்  பேசுதிருக்      கார்த்திகையில் 
அண்ணா  மலைதீப  மாம்  

..

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 12:40:03 PM12/13/24
to சந்தவசந்தம்
நன்றி நாச்சி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 13, 2024, 12:55:50 PM12/13/24
to santhav...@googlegroups.com
அருவாக அகத்திலொளிர் மெய்ப்பொருளை அறிவதற்கோர்
உருநாடும் அடியவர்முன் உயர்மலையாய் உருத்தரித்துத்
தெருளார்ந்த மாயைவிளை மயக்கிற்குத் தீயூட்டும்
பெருநெருப்பின் வடிவத்தைப் பெறுவதுநம் பேறன்றே! 

அனந்த்
13-12-2024

On Thu, Dec 12, 2024 at 11:19 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அண்ணாமலை  தீபம் 

விண்தழுவு    மாமலையின்  வேத   விளக்கேதான் 
அண்ணா மலைதீப  மாம்.
  
கண்கொள்ளாக் காட்சியினைக் காணத் தருகின்ற
அண்ணாமலை தீப மாம்.

நன்னெய்சேர்  கொப்பரையில் நாட்டு  திருவிளக்கே 
அண்ணா மலைதீப  மாம்

எண்ணிறந்த சித்தர் இலங்குதிரு மாமலையில்
அண்ணாமலை தீப மாம்

எண்ணிறந்தார்  சுற்றிவரும்    ஈசனுறை  மாமலையில் 
அண்ணா  மலைதீப மாம். 

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 1:05:57 PM12/13/24
to சந்தவசந்தம்
Thanks 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 1:07:58 PM12/13/24
to சந்தவசந்தம்
சிறப்பு. நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 13, 2024, 1:15:56 PM12/13/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
 மாயைவிளை மயக்கிற்குத் தீயூட்டும்
பெருநெருப்பு” - மிக அருமை, திரு. அனந்த்! 

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 1:24:33 PM12/13/24
to சந்தவசந்தம்
"அன்பீனும் ஆர்வமும் ஈனும், அதுவீனும் 
நண்பென்னும் நாடாச் சிறப்பு "

இவ்வாறு இனவெதுகை பயின்று வரும் குறட்பாக்கள் பல உள.

"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கொல் எனவேண்டா -நின்று 
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் 
தலையாலே தான்தருத லால்"
                           ஒளவையார் 

தள -தலை இனவெதுகை 

பாடல்களில் எத்தனை விழுக்காடு இனவெதுகை பயின்று வரலாம் என்று வரம்பு  இருப்பதாக அறியேன்.

கி வா ஜ அவர்களே மரபுக்கு மாறாக  ஒற்றைக் குறில் கொண்டு வெண்பாவின் ஈற்றுச் சீர் அமைத்ததாகச் சொல்வர்.

நன்றி 
       
On Fri, 13 Dec 2024, 3:48 pm Siva Siva, <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Dec 13, 2024, 1:28:30 PM12/13/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை.  வாழ்க

🙏
அண்ணா மலையினருட் ஜோதி - திரு
வண்ணா மலையருளும் நீதி!
ஓண்ணா ரமுதின் அனுபூதி! - இரு
கண்ணால் அறியும் சுகசேதி!     
-இன்று (அண்ணா)

பொன்னார் சிவக் குமரன் ரூபம் - விண்
பொலிவார் கார்த்திகையின் தீபம்!
மின்னார் அறுமுக சஞ்சாரம்! - சிகி
மிளிர்வா ஹனன் முருகன் ஆதாரம்!
-இன்று (அண்ணா)

தான்யார் என வியந்த சுவாமி! - தனை
வான்போல் சுமந்து நின்ற பூமி!
தேனார் அருணாச்  சலம் தெய்வம்! - அத்
திசைதானே நமது அருட் செல்வம்!
-இன்று (அண்ணா)

மீ. ரா
12+12=24

Sent from my iPhone

On 13 Dec 2024, at 18:15, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

 மாயைவிளை மயக்கிற்குத் தீயூட்டும்
பெருநெருப்பு” - மிக அருமை, திரு. அனந்த்! 

On Dec 13, 2024, at 12:55 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

மாயைவிளை மயக்கிற்குத் தீயூட்டும்
பெருநெருப்பின்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Dec 13, 2024, 1:29:55 PM12/13/24
to சந்தவசந்தம்
அருமை. நன்றி 

Siva Siva

unread,
Dec 13, 2024, 1:54:42 PM12/13/24
to santhav...@googlegroups.com
Yes, there are verses with ina-edhugai in literature. Hence, that edhugai classification in grammar.
It is up to the person writing a verse.

V. subramanian

குருநாதன் ரமணி

unread,
Dec 13, 2024, 10:40:26 PM12/13/24
to சந்தவசந்தம்
#ரமணி_மீள்பதிவு
கார்த்திகை தீப தரிசனப் பலன்
(கலித்தாழிசை)

புழுவோ பறவையோ புன்மைக் கொசுவோ
வழுவில் மரம்செடியோ வாழநீர் பூமி
தழுவும் உயிரோ சகலமும் தீபத்
. தரிசனம் காண்பதில் நற்பிறப் பெய்துகவே.

குறிப்பு:
இச்செய்யுள் கீழுள்ள வடமொழி தருமசாத்திர சுலோகத்தின் தமிழாக்கம்

कीटा: पतङ्गा: मशका: च वृक्षाः
जले स्थले ये निवसन्ति जीवाः ।
दृष्ट्वा प्रदीपं न च जन्म भाजा:
सुखिनः भवन्तु श्वपचाः हि विप्रा: ॥

keeTAh patangAh mashakAh cha vrukshAH
jale sthale ye nivasanti jIvAH
drushTvA pradeepam na cha janma bhAjAH
sukhinah bhavantu svapachAh hi viprAH

கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
ஸுகின பவந்து ச்வபசா ஹி விப்ரா

--ரமணி, 23/11/2019

★★★★★
 
Arasi Palaniappan

unread,
Dec 14, 2024, 3:22:24 AM12/14/24
to சந்தவசந்தம்
அருமை அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 14, 2024, 6:08:38 AM12/14/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு.ரமணி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 14, 2024, 7:33:25 AM12/14/24
to சந்தவசந்தம்
அருமை.

2000 ஆண்டு முன், அண்ணாமலைத் தீபம்:

Arasi Palaniappan

unread,
Dec 14, 2024, 7:42:08 AM12/14/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 14, 2024, 7:45:08 AM12/14/24
to santhav...@googlegroups.com
அரசி.பழ. இயற்றிய தீபக் குறள் போல,
காஞ்சி சோணாசல பாரதி (1858 - 1925), கார்த்திகை தீபம் என முடியும் 100 வெண்பாச் செய்துள்ளார்.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0344_02.html

தமிழிலே, அண்ணாமலையார் தீபம் பற்றிய முதல் குறிப்புகள்:
https://x.com/naa_ganesan/status/1867598790112293325

Arasi Palaniappan

unread,
Dec 14, 2024, 8:57:07 AM12/14/24
to சந்தவசந்தம்
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணன். கவிராயர் அவர்கள் கலிவெண்பா யாப்பில் பாடியிருக்கிறார்.

அரசி. பழனியப்பன் 

N. Ganesan

unread,
Dec 14, 2024, 9:31:50 AM12/14/24
to santhav...@googlegroups.com
நூல் (101) செய்யுளும் நேரிசை வெண்பா தானே?
சோணாசல முதலியார் பாட்டைக் கலிவெண்பா என்பது ஏன்?

NG

Mahesh Krishnamurthy

unread,
Dec 14, 2024, 9:43:20 AM12/14/24
to santhav...@googlegroups.com
மிக அருமை..Mahesh

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Dec 14, 2024, 12:17:42 PM12/14/24
to சந்தவசந்தம்
பொறுத்தாற்றுக அண்ணன். நேரிசை வெண்பாக்கள் தாம் 

N. Ganesan

unread,
Dec 15, 2024, 10:41:56 AM12/15/24
to santhav...@googlegroups.com
தீபம் + ஆவளி = தீபாவளி. வம்சம் + ஆவளி = வம்மிசாவளி போல. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் செல்லச் செல்ல, பாரத உபகண்டத்தில் திருவிழா நாள்கள் மாறுவது இயற்கை.

மகாவீரர் மறைவு தினம், ... போன்றனவற்றுடன் வட நாட்டு மரபுகள் சேர்ந்து விஜயநகர காலத்தில் இன்றைய தீபாவளி உருவாகியுள்ளது. சீன நாட்டுத் தொழில்நுட்பம் நம்நாட்டில் நுழையும் காலகட்டம் இஃது. மு. பெ. சத்தியவேல் முருகன் குறிப்புப் பார்க்கவும்:

சங்க காலத்தில் தீபாவளி என்பது கார்த்திகை தீப ஆவளி தான். கொண்டாடிய திருவண்ணாமலை ஸ்தலப் பாடல் சங்கச் சான்றோர் குறிப்புகளைக் காணலாம். Precession காரணமாக, கார்த்திகை முதலாக வைத்த ஆண்டுக்கணிதம் பிற்காலத்தில் சித்திரை முதலாக மாறுகிறது. இதைச் செய்தவன் சங்ககாலச் சேரர் தலைநகர் வஞ்சியில் (இன்றைய கரூர்) அரண்மனையில் இருந்த ஆடு கோட்பாட்டுச் சேரலாதன். ஆடு - மேஷ ராசி. ஓரைச் சக்கரம் - திருத்தக்க தேவர்  Hora circle-ஐக் கனலி வட்டம் எனத் தமிழில் மொழிபெயர்க்கிறார்.  https://groups.google.com/g/vallamai/c/CPL9kbgSFmk/m/7N-wX99RDQAJ

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொணர்ந்த பஞ்சாங்க மாற்றம், நிலையாக்கம் இன்றளவும் தமிழில் நிலைபெற்றது. இது, மதுரை பாண்டிய நாட்டில் சமணர் வளர்த்தெடுத்த வட்டெழுத்து தூக்கப்பட்டு, கிரந்த எழுத்து (ஆந்திராவில் இருந்து வந்த பல்லவர் செய்த லிபி) தமிழுக்குத் தமிழகம் முழுதும் ஆக்கினை செய்த ராஜராஜ சோழன் செயலை ஒத்தது. மிகப் பாரிய மாற்றங்கள் இவை இரண்டும்.

மீனாக்ஷி பாலகணேஷ், சோணாசல பாரதியின் கார்த்திகை தீப வெண்பா நூலில்
சில வெண்பாக்களுக்கு உரை செய்துள்ளார்:

நிரஞ்சன் பாரதி ராசிச் சக்கரத்தில் தநுர் ராசியின் தமிழ்ச் சொல் கேட்டார். ராசிச் சக்கரத்தின் ஸம்ஸ்கிருதச் சொல்லாகிலும், அதன் அண்மைத் தமிழ் ஆக்கங்கள் ஆகிலும் தமிழர்கள் 4000 ஆண்டுப் பழமை கொண்ட  நக்ஷத்திரத்தால் அமைந்த மாதப் பேர்களை மாற்றுகிறது. என்றுமே, ராசிப் பெயர்களால் அமைந்த மாதப் பெயர்கள் சிறுவட்டத்துக்குள் தான் இயங்கும். உ-ம்: நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் கூறும் பருவங்களை விளக்க ஓரைச் சக்கரம் சொல்கிறார். சோழர்கள் ஆட்சியாண்டு தொடக்கம், ஆண்டு எண் சொல்ல ஓரைச் சக்கர ராசி பயன்படுத்துவர்.  ஆனால், மிகப் பழைய - 4000+ ஆண்டு - நக்ஷத்திரப் பேர்கள் 12 மாதப் பெயர்களாய் நிலைத்துள்ளன. இன்னும் இதை விளக்குவேன்.

கனிகாண்டலும் கைந்நீட்டமும்

மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்

Reply all
Reply to author
Forward
0 new messages