#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்
ஐ001. வேட்கைப் பத்து: பகுதி 1
ஐங்குறுநூறு 001, ஓரம்போகியார்
(திணை: மருதம்: தோழி தலைவனிடம் சொன்னது)
நூல் அறிமுகம்: ஐங்குறுநூறு
• 3-6 அடிகளில் அகவற் பாவால் பாடப்பட்டது.
• மூன்றடிச் செய்யுட்களும் அமைந்து மருதம் முதல் திணையாகக் கொண்ட நூல்.
• திணை நிரல்: மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை.
• பாடியோர் முறையே: ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார்.
• திணைக்கு 100 பாடல்கள், மொத்தம் 500 (129,130 கிடைக்கவில்லை).
• பாடல்களைத் தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
• தொகுப்பித்தவர்: யானைக்கட்சேய் மாந்தரஞ்ச்சேரல் இரும்பொறை.
• கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார்
• பொழிப்புரை தேவையில்லாத எளிய சொற்கள், இனிய ஓசையுடன்.
• சிறிய சொற்களில் இயற்கை வருணனை, தமிழர் வாழ்வியல், மனப் போக்குகள்.
• சங்க இலக்கியம் பயிலத் தொடங்கும் மாணவர்களுக்கு முதல் நூலாகலாம்.
தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்றான். பின்னர் அது தீய ஒழுக்கம் என்று தெளிந்து மீண்டு தன்னில்லம் நுழைகிறான். ஊடல் கொள்ளாது தலைவி அவனை ஏற்றுக் கொள்கிறாள்.
தோழியிடம் தலைவன் தான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள் என்று கேட்கத் தலைவியும், தோழியர்கள் நாங்களும் என்னவெல்லாம் விழைந்திருந்தோம் என்று தோழி சொல்வதை ஓரம்போகியார் பத்துப் பாடல்களில் பாடுவதாலும், ஒவ்வொரு பாடலிலும் வேட்கை என்னும் சொல் வருவதாலும் இப்பதிகம் வேட்கைப் பத்து என்று அழைக்கப் படுகிறது.
• பாடல்கள் யாவையும் சிறியனவாகையால் ஐந்தைந்தாக ஒரு வெண்பாவில் தொகுத்து.
• ஐந்து மூலப் பாடல்கள் ஒரே கலிவெண்பா யாப்பில்.
• வெண்பாக்கள் பொருள், உள்ளுறை உவம விளக்கம் பொதிந்தவை.
• மூலத்தில் ஓரிரு அடிகள் கொண்ட தலைவியின் வேட்கைகளைத் தொகுத்து முதலாவதாக.
• தோழியர்கள் வேட்டன தொகுத்து அடுத்ததாக.
• மூலப் பாடல்களுக்கு அருஞ்சொற் பொருள் மட்டும்.
மருதம்: வேட்கைப் பத்து (1-5)
தீதற நாட்டைத் தெரிந்தே புரந்தருள
ஆதனும் வாழ்க அவினியும் வாழ்க!
விருந்தினர் ஓம்ப விளைகநெற் செய்யே!
இரவலர்க் கீய நிறைகபொற் காசு! (1)
வரத்துநீர் ஆர்ந்து வயல்கள் விளைந்து ... 5
இரவலர் யாருமே இல்லாது போமே! (2)
சிசுவும் விருந்தும் சிறந்தே பொலியப்
பசுவும் பகடும் பலவாய்ப் பெருகுக! (3)
ஆர்த்தபகை வர்புல் லரிசியை உண்ணுக
பார்ப்பனர் வேதம் பரவி ஒலிக்க! (4) ... 10
செறுபசி யின்றிச் சிறக்கமனை வாழ்வே
உறுபிணி யாவையும் ஓடுக தூரம்!
இறைஞ்சிவேட் டாளிவை இல்லத் தலைவியே! (5)
தேன்மலர்க் காஞ்சி திகழும் குலமகள்
மீன்புலால் போல விளங்கும் விலைமகள் ... 15
வேணுமெனும் வாழ்வை விழையூரன் வாழ்கவே
பாணன் தலைவனைப் பாடுவன் வாழ்கவே! (1)
பல்லிதழ் நீலமாய்ப் பார்க்கும் குலமகள்
புல்லிய நெய்தலைப் போன்ற விலைமகள்
கொண்டொழுகும் ஊரில் குடியிருப்போன் நட்பது ... 20
வண்டுபோல் ஆயின் வழிவழிச் சீர்மிக! (2)
வித்துழவர் பானல் விளைநெல் குலமகள்
கொத்துமலர் வாசனை கூடும் விலைமகள்
நெல்லுடன் பூக்கள் நிறைந்தவூர் வாழ்வோனின்
இல்லற வாழ்க்கை சிறந்தே பொலிக! (3) ... 25
பயன்படாக் கன்னற்பூ வாகும் பரத்தை
பயன்மிகக் காய்நெற் பயிராம் குலமகள்
ஆர்ந்தவூர் வாழும் தலைவனின் மார்பது
நீர்வய லாம்பொதுமை நேரா திருக்க! (4)
முதலையின் போத்தாய் முகிழ்த்த இளைஞர் ... 30
பொதுமகளாம் முற்றிய மீன்கள் புசித்துமகிழ்
தண்துறை ஊரானைத் தாங்குகின்ற தேரெங்கள்
முன்கடை நின்றவன் மூழ்குக இல்லறம்
என்பனவாய் எங்கள் விழைவு. (5)
(1) ஆதன்: தந்தை, அவினி: மகன்; செய்: வயல்; பாணன்: தலைவனின் தூதனாம் பாடகன்.
(2) நீலம், நெய்தல்: மலர்கள்
(3) பகடு: எருமை; பானல்: வயல்
(4) கன்னற்பூ: பூத்தாலும் காய்க்காத கரும்பின் பூ
(5) செறுபசி: வருத்தும் பசி; உறுபிணி: உடலுக்கு வரும் நோய்கள்; முதலையின் போத்து: முதலைக் குட்டி; முன்கடை: வீட்டின் தலைவாயில்.
ஐங்குறுநூறு 001, ஓரம்போகியார்
மருதம்: வேட்கைப் பத்து (1-5)
நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
பாணனும் வாழ்க எனவேட் டேமே. ... 1
பல்இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
வழிவழிச் சிறக்க என வேட்டேமே. ... 2
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
வாழ்க்கை பொலிக எனவேட் டேமே. ... 3
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
பழனம் ஆகற்க எனவேட் டேமே. ... 4
பசிஇல் ஆகுக பிணிசேண் நீங்குக
முதலைப் போத்து முழுமீன் ஆரும்
முன்கடை நிற்க எனவேட் டேமே. ... 5
(1) யாயே: கற்புக்கடம் பூண்ட தலைவி என்பதால் தாய்; யாமே: நானும் பிற தோழியரும்; நனைய: அரும்புகள் நிறைந்த; யாணர்: செல்வர்; பாணன்: தலைவனின் தூதனாம் பாடகன்.
(3) பகடு: எருமை; வித்திய: விளைச்சல் எதிர்நோக்கி வித்துக்களை இட்ட; பூக்கஞல்: மலர்கள் மிக்கு மணம் பரப்பும்;
(4) புல்லார்க: புல்லரிசிச் சோற்றை உண்க; பூத்த கரும்பு: பூத்தாலும் காய்க்காத கரும்பின் பூ; கழனி, பழனம்: வயல்.
(5) சேண்: தொலைவில்; முதலைப் போத்து: முதலைக் குட்டி; முன்கடை: வீட்டின் தலைவாயில்.