நடிகை சுஜாதா-சில நினைவுகள்!

731 views
Skip to first unread message

நாஞ்சில் வேணு

unread,
Apr 13, 2011, 12:09:18 PM4/13/11
to தமிழ்த்தென்றல், பண்புடன்
Sujatha.jpg

எப்போதோ எழுதியிருக்க வேண்டும். இப்போதுதான் முடிந்தது. (தேர்தல்-ஏப்ரல் 14 முன்னிட்டு விடுமுறை என்பதால்!)

சில படங்கள் வெளிவருவதற்கு முன்னர், அந்தப் படங்களின் பாடல்கள் பிரபலமாகி இயல்பைக் காட்டிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துவதுண்டு. "பச்சைக்கிளி முத்துச்சரம்," "ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல்", "நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று," போன்றவை அந்தந்தப் படங்கள் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே வானொலிகளில் அல்லது இசைத்தட்டுகளில், கிட்டத்தட்ட சலிப்புறும்வரையில் அன்றாடம் கேட்ட பாடல்களின் உதாரணங்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க பாடல் தான் "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!". எனக்குத் தெரிந்து எஸ்.பாலசந்தரின் இசையில் "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை," என்ற பாடலுக்குப் பிறகு, கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப்பிறகு பாடிய பாடல் "தெய்வம் தந்த வீடு," என்று நினைக்கிறேன். ஜேசுதாஸ் நடித்த விக்ஸ் மாத்திரை விளம்பரத்தில் கூட அந்தப் பாடல் பாடுவது போல வருமளவுக்கு, அவரை அந்தப் பாடல் தமிழ்த்திரையுலகில் மீண்டும் மிகப் பிரபலமாக்கியது. அந்தப் பாட்டுக்காகவே "அவள் ஒரு தொடர்கதை" படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். (மற்றபடி கே.பி. படங்கள் என்றால் எனக்கு கொஞ்சம் அலர்ஜீ தான்.)

கதாநாயகி சுஜாதாவைப் பார்த்தபோது, நியூ சரஸ்வதி திரையரங்கில் பார்த்த "புனர்ஜென்மம்" மலையாளப்பபடத்தில் வேலைக்காரியாக கொஞ்சம் எசகுபிசகாக நடித்தவர் என்பதை உடனே அடையாளம் காண முடிந்தது. அ.ஒ.தொ. படம் பிடித்துப்போனதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் -எம்.எஸ்.வியின் இசை மற்றும் பலகுரல் மன்னனாக கமல்ஹாசன் பண்ணிய அமர்க்களம்! அந்தப் படத்தில் அறிமுகமான சுஜாதா, ஜெய்கணேஷ், படாபட் ஜெயலட்சுமி எல்லாருமே ஒரு பெரிய ரவுண்டு வந்தார்கள் என்றாலும் சுஜாதா எட்டிய உயரம் மிக அதிகம். எல்லாராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிற ஒரு துணிச்சல்காரப் பெண்ணாக அவர் அபாரமாக நடித்திருந்தார்.

ஆனால், நிஜமான ஆச்சரியம் அதைத் தொடர்ந்து வெளியான "மயங்குகிறாள் ஒரு மாது," படத்தைப் பார்த்தபோதுதான் ஏற்பட்டது.

"அ.ஒ.தொ"வில் மிகவும் கட்டுப்பாடான பெண்ணாக சுஜாதாவும், எதையும் சகஜமாக ஏற்றுக்கொண்டு செல்லும் பெண்ணாக படாபட் ஜெயலட்சுமியும் நடித்திருந்தனர். "ம.ஒ.மாது" படத்தில் இருவருக்கும் நேர் எதிரான கதாபாத்திரங்கள். அனேகமாக, சுஜாதாவை பிழியப் பிழிய அழவைக்கிற முன்னுதாரணத்தை அந்தப் படத்தில்தான் ஏற்படுத்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்தியில் சஞ்சீவ்குமார்-ஜெயாபாதுரி நடித்த "கோஷிஷ்" படத்தை தமிழில் கமல்-சுஜாதாவை வைத்து "உயர்ந்தவர்கள்" என்று எடுத்தார்கள். அதில் இருவருமே அற்புதமாக நடித்திருந்தும் படம் ஓடவில்லை. பிறகு, புஷ்பா தங்கதுரை தினமணிகதிரில் எழுதிய "ஓரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது" நாவலைப் படமாக்கியபோதும் அதே ஜோடி! சுஜாதாவின் கணவராக நடிப்பென்றால் கிலோ என்னவிலை என்று கேட்கிற  விஜயகுமார் நடித்திருந்ததாலோ என்னவோ, கமலின் நடிப்பு அப்போதே படுதூக்கலாக இருந்தது. ஆனால், அந்தப் படம் சுஜாதாவுக்கு இன்னொரு மைல்கல் என்று தைரியமாகச் சொல்லலாம். (சுஜாதாவின் தம்பியாக கமலும், ஜோடியாக ஜெமினியும், கமலுக்கு ஜோடியாக சுமித்ராவும் நடித்து ஒரு வண்ணப்படத்தை வலம்புரி சோமநாதன் எடுத்து கமல்-சுஜாதா ஜோடிக்கு திருஷ்டி கழித்தார். பெயர் மறந்துவிட்டது. படம் பார்த்ததையும் மறந்து தொலைத்திருக்கலாம்.)

"அவர்கள்" படத்தின் அனுவை மறக்க முடியாது. படத்தில் முதல்பாதியில் பின்னணியில் ரயில் சத்தம் சம்பந்தாசம்பந்தமில்லாமல் இம்சை பண்ணினாலும் (பாலசந்தர் டச்சாம்!) ரஜினி, கமல், சுஜாதா ஆகியோரின் நடிப்பாலும், (மீண்டும்) எம்.எஸ்.வியின் இசையாலும் உட்கார்ந்து பார்க்க முடிந்த ஒரு படம். ஆனால், அந்தப் படத்தில் கமலுக்குப் பதிலாக வேறு யார் நடித்திருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு தியேட்டர் காலியாகியிருக்கும்.

சிவகுமார், முத்துராமன், விஜயகுமார், ஜெய்சங்கர் என்று பலருடன் ஜோடிசேர்ந்து பல படங்களில் சுஜாதா கலக்கினார் என்றாலும் "தீபம்" படத்தில் சிவாஜியோடு இணைந்து நடித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மலையாளத்தில் ஸ்ரீவித்யா ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அனாயசமாக ஏற்று நடித்திருந்தார் சுஜாதா. சிவாஜி மீது வெறுப்பை உமிழும் காட்சிகளில் சிவாஜி பக்தனான எனக்கு கோபமே வந்தது. "அந்தமான் காதலி" படத்தில் சில இடங்களில் சிவாஜியைத் தூக்கிச்சாப்பிட்ட நடிப்பு. அதைத் தொடர்ந்து சிவாஜியோடு பல படங்களில் நடித்திருந்தாலும், தீபம், அந்தமான் காதலி, வா கண்ணா வா -இவை மூன்றும் சிவாஜி-பத்மினி சகாப்தத்தை நினைவூட்டுவதுபோல அமைந்த படங்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமாக இருந்தபோது, இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் மலையாளத்தில் "பிரஷ்டு" என்ற ஒரு படத்தில் ஒரு ஏடாகூடமான கதாபாத்திரத்தில் நடித்தது சற்றே நெருடலாக இருந்தது. அதே போல "அண்ணன் ஒரு கோவில்" படத்தில் வரும் "நாலுபக்கம் வேடருண்டு" பாட்டிற்காக பல பத்திரிகைகளிடம் சிவாஜியும் சுஜாதாவும் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.

ஹோசூரில் இருந்தபோது அவர் நடித்த சில தெலுங்குப்படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றாலும், சுஜாதாவை தமிழ் சினிமா சரியாகக் கையாண்டதுபோல, பிறமொழிகளில் கையாளவில்லையோ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சுஜாதாவை கதாநாயகியாக வைத்து இயக்கிய "அடுக்குமல்லி" என்ற கருப்பு வெள்ளைப்படம் அப்போது வெளிவந்த ரஜினி, கமல், சிவாஜியின் வண்ணப்படங்களைப் பின்னுக்குத்தள்ளி வசூலில் சக்கைபோடு போட்டதும் ஞாபகத்துக்கு வருகிறது.

அப்புறம் "விதி" படம்! என்ன சொல்ல...? முழுமையான நடிப்பு...!

சுஜாதாவைப் பற்றி நிறைய எழுதலாம் தான்! நீளம் கருதி அவருக்கு எனது அஞ்சலிகளுடன் நிறைவு செய்கிறேன்.


--
நாஞ்சில் வேணு
Sujatha.jpg

Swathi Swamy

unread,
Apr 13, 2011, 12:24:14 PM4/13/11
to thamizh...@googlegroups.com, நாஞ்சில் வேணு, பண்புடன்


13 ஏப்ரல், 2011 12:09 pm அன்று, நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com> எழுதியது:
Sujatha.jpg


(சுஜாதாவின் தம்பியாக கமலும், ஜோடியாக ஜெமினியும், கமலுக்கு ஜோடியாக சுமித்ராவும் நடித்து ஒரு வண்ணப்படத்தை வலம்புரி சோமநாதன் எடுத்து கமல்-சுஜாதா ஜோடிக்கு திருஷ்டி கழித்தார். பெயர் மறந்துவிட்டது. படம் பார்த்ததையும் மறந்து தொலைத்திருக்கலாம்.)

லலிதா!
இந்தப் படத்தில் வாணியெயராம் பாடிய கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் என்ற பாடல் அந்த நட்களில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களை விரல் விட்டு எண்ணலாம்.


Sujatha.jpg

நாஞ்சில் வேணு

unread,
Apr 13, 2011, 12:27:53 PM4/13/11
to Swathi Swamy, thamizh...@googlegroups.com, பண்புடன்

2011/4/13 Swathi Swamy <mswat...@gmail.com>

லலிதா!
இந்தப் படத்தில் வாணியெயராம் பாடிய கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் என்ற பாடல் அந்த நட்களில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களை விரல் விட்டு எண்ணலாம்.

ஆ...ஞாபகம் வருதே! அதே படத்தில் கமல் பியானோ வாசித்தபடி "சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது..." என்று பாடுகிற பாடலும் மிக பிரபலம்.

 



--

முகிலன் .

unread,
Apr 13, 2011, 12:33:27 PM4/13/11
to panb...@googlegroups.com
எச்சூஸ்மி.. வயசானவங்களா பேசிட்டு இருக்கீங்க. நான் ஒதுங்கிக்கிறேன்.

2011/4/13 நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Swathi Swamy

unread,
Apr 13, 2011, 12:45:27 PM4/13/11
to நாஞ்சில் வேணு, thamizh...@googlegroups.com, பண்புடன்
அந்தப் படத்தில் தான் தமிழில் கல்யாண மந்திரம் ஓதவேண்டுமென்ற ஒரு சமிக்ஞை ”.ஒரடி கடவுட்காக.” .என்ற பாடல் மூலம் விடப்பட்டது. அந்தப் பாடல் வந்த பின் எங்களூர் கல்யாண வீடியோக்களில் எல்லாம் மணமகனும், மணப் பெண்ணும்  தீ வலம் வந்து அம்மி மிதித்து மெட்டி போடும் காட்சிகளை இந்தப் பாடல் தான் பின்னணியில் நிரப்பும். இப்ப மெட்டில் ஒலி பாடல்..நிரப்புகிறது.  :)):)

13 ஏப்ரல், 2011 12:27 pm அன்று, நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com> எழுதியது:



--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.

http://groups.google.com/group/Piravakam



Swathi Swamy

unread,
Apr 13, 2011, 1:02:55 PM4/13/11
to panb...@googlegroups.com, முகிலன் .


13 ஏப்ரல், 2011 12:33 pm அன்று, முகிலன் . <muk...@pithatralkal.com> எழுதியது:

எச்சூஸ்மி.. வயசானவங்களா பேசிட்டு இருக்கீங்க. நான் ஒதுங்கிக்கிறேன்.

ஆகா...இனி இந்த இழையில் தங்களையும் வயசானவங்கன்னு நினைச்சிடுவாங்கன்னு பயந்து ஆசிப் அண்ணாவோ ஜீவ்ஸோ ஷைலஜாவோ வந்து எதுவும் எழுதமாட்டாங்கன்னு நினைச்சீங்களா முகிலன்?? நோ வே, :):):):)

 

Swathi Swamy

unread,
Apr 13, 2011, 1:15:52 PM4/13/11
to thamizh...@googlegroups.com, நாஞ்சில் வேணு, பண்புடன்
13 ஏப்ரல், 2011 12:09 pm அன்று, நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com> எழுதியது:
Sujatha.jpg

அவள் ஒரு தொடர்கதையைப் பார்க்கிலும் ”அவர்கள்” படம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதில் ஈட்டியாய் குத்தும் ரஜனியின் வார்த்தைகளை தாங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜனி முகத்தில் கரி பூசும் சுஜாதாவின் நடிப்பு சூப்பர்.

கடைசிக் காட்சிகளில் தான் தோற்றுப் போனதை தன் கண்ணீர் காட்டிக் கொடுத்துவிடும் என்று வைராக்கியமாக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் ,
 தன்னுடைய அழுகையைப் பார்த்து சந்தோசப்பட நினைக்கும் கணவனுக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்காமல் இருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டே,   தன்னுடைய ஏமாற்றம், ஆற்றாமை என்று அத்தனையையும்
மறைத்துக் கொண்டு ரஜனியின் ஈட்டி வார்த்தைகளை சிரித்துக் கொண்டே எதிர்கொள்ளும் இடத்திலும், அவ்வளாவு நேரமும் அழாமல் வெற்றி பெற்றுவிட்டு மாமியாரின் அன்பில் அத்தனையும் உடைய கேவி கேவி அழும் காட்சியில் சுஜாதா சுஜாதா தான்...!

Sujatha.jpg

Gokul Kumaran

unread,
Apr 13, 2011, 2:43:20 PM4/13/11
to panb...@googlegroups.com
இவ்வளவு எழுதிட்டு, அன்னக்கிளி “மச்சானைப் பார்த்தீங்களா?” -வை ஒரு வரி கூட எழுதாம விட்டுட்டீங்களே :)


--
Gokul Kumaran

Ahamed Zubair A

unread,
Apr 13, 2011, 2:47:47 PM4/13/11
to panb...@googlegroups.com, Gokul Kumaran


2011/4/13 Gokul Kumaran <gokul...@gmail.com>

இவ்வளவு எழுதிட்டு, அன்னக்கிளி “மச்சானைப் பார்த்தீங்களா?” -வை ஒரு வரி கூட எழுதாம விட்டுட்டீங்களே :)

:))))))))))))))

வில்லன் .

unread,
Apr 13, 2011, 3:10:04 PM4/13/11
to thamizh...@googlegroups.com, பண்புடன்
அன்னகிளி பற்றி ஒரு பாரா போட்டிங்கனா கட்டுரை முழுமை அடைஞ்சிடும் வேணு ஜி.

On 4/13/11, நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com> wrote:
> [image: Sujatha.jpg]
>
> *எப்போதோ எழுதியிருக்க வேண்டும். இப்போதுதான் முடிந்தது. (தேர்தல்-ஏப்ரல் 14


> முன்னிட்டு விடுமுறை என்பதால்!)

> *


> சில படங்கள் வெளிவருவதற்கு முன்னர், அந்தப் படங்களின் பாடல்கள் பிரபலமாகி

> இயல்பைக் காட்டிலும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துவதுண்டு. "*பச்சைக்கிளி


> முத்துச்சரம்," "ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல்", "நான் படித்தேன் காஞ்சியிலே

> நேற்று,*" போன்றவை அந்தந்தப் படங்கள் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே


> வானொலிகளில் அல்லது இசைத்தட்டுகளில், கிட்டத்தட்ட சலிப்புறும்வரையில் அன்றாடம்
> கேட்ட பாடல்களின் உதாரணங்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க பாடல் தான்

> "*தெய்வம்
> தந்த வீடு வீதியிருக்கு!*". எனக்குத் தெரிந்து எஸ்.பாலசந்தரின் இசையில்
> *"நீயும்
> பொம்மை நானும் பொம்மை நினைச்சுப்பார்த்தா எல்லாம் பொம்மை,*" என்ற பாடலுக்குப்


> பிறகு, கே.ஜே.ஜேசுதாஸ் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப்பிறகு பாடிய பாடல்
> "தெய்வம் தந்த வீடு," என்று நினைக்கிறேன். ஜேசுதாஸ் நடித்த விக்ஸ் மாத்திரை
> விளம்பரத்தில் கூட அந்தப் பாடல் பாடுவது போல வருமளவுக்கு, அவரை அந்தப் பாடல்
> தமிழ்த்திரையுலகில் மீண்டும் மிகப் பிரபலமாக்கியது. அந்தப் பாட்டுக்காகவே

> "*அவள்
> ஒரு தொடர்கதை"* படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். (மற்றபடி கே.பி. படங்கள்


> என்றால் எனக்கு கொஞ்சம் அலர்ஜீ தான்.)
>

> கதாநாயகி சுஜாதாவைப் பார்த்தபோது, நியூ சரஸ்வதி திரையரங்கில் பார்த்த "*
> புனர்ஜென்மம்*" மலையாளப்பபடத்தில் வேலைக்காரியாக கொஞ்சம் எசகுபிசகாக நடித்தவர்
> என்பதை உடனே அடையாளம் காண முடிந்தது. *அ.ஒ.தொ. *படம் பிடித்துப்போனதற்கு இரண்டு


> முக்கியமான காரணங்கள் -எம்.எஸ்.வியின் இசை மற்றும் பலகுரல் மன்னனாக கமல்ஹாசன்
> பண்ணிய அமர்க்களம்! அந்தப் படத்தில் அறிமுகமான சுஜாதா, ஜெய்கணேஷ், படாபட்
> ஜெயலட்சுமி எல்லாருமே ஒரு பெரிய ரவுண்டு வந்தார்கள் என்றாலும் சுஜாதா எட்டிய
> உயரம் மிக அதிகம். எல்லாராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிற ஒரு
> துணிச்சல்காரப் பெண்ணாக அவர் அபாரமாக நடித்திருந்தார்.
>

> ஆனால், நிஜமான ஆச்சரியம் அதைத் தொடர்ந்து வெளியான *"மயங்குகிறாள் ஒரு மாது,*"


> படத்தைப் பார்த்தபோதுதான் ஏற்பட்டது.
>
> "அ.ஒ.தொ"வில் மிகவும் கட்டுப்பாடான பெண்ணாக சுஜாதாவும், எதையும் சகஜமாக
> ஏற்றுக்கொண்டு செல்லும் பெண்ணாக படாபட் ஜெயலட்சுமியும் நடித்திருந்தனர்.
> "ம.ஒ.மாது" படத்தில் இருவருக்கும் நேர் எதிரான கதாபாத்திரங்கள். அனேகமாக,
> சுஜாதாவை பிழியப் பிழிய அழவைக்கிற முன்னுதாரணத்தை அந்தப் படத்தில்தான்
> ஏற்படுத்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.
>

> இந்தியில் சஞ்சீவ்குமார்-ஜெயாபாதுரி நடித்த *"கோஷிஷ்"* படத்தை தமிழில்


> கமல்-சுஜாதாவை வைத்து "உயர்ந்தவர்கள்" என்று எடுத்தார்கள். அதில் இருவருமே
> அற்புதமாக நடித்திருந்தும் படம் ஓடவில்லை. பிறகு, புஷ்பா தங்கதுரை

> தினமணிகதிரில் எழுதிய *"ஓரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது"* நாவலைப்


> படமாக்கியபோதும் அதே ஜோடி! சுஜாதாவின் கணவராக நடிப்பென்றால் கிலோ என்னவிலை
> என்று கேட்கிற விஜயகுமார் நடித்திருந்ததாலோ என்னவோ, கமலின் நடிப்பு அப்போதே
> படுதூக்கலாக இருந்தது. ஆனால், அந்தப் படம் சுஜாதாவுக்கு இன்னொரு மைல்கல் என்று

> தைரியமாகச் சொல்லலாம். (*சுஜாதாவின் தம்பியாக கமலும், ஜோடியாக ஜெமினியும்,


> கமலுக்கு ஜோடியாக சுமித்ராவும் நடித்து ஒரு வண்ணப்படத்தை வலம்புரி சோமநாதன்
> எடுத்து கமல்-சுஜாதா ஜோடிக்கு திருஷ்டி கழித்தார். பெயர் மறந்துவிட்டது. படம்

> பார்த்ததையும் மறந்து தொலைத்திருக்கலாம்.*)
>
> "*அவர்கள்*" படத்தின் அனுவை மறக்க முடியாது. படத்தில் முதல்பாதியில்


> பின்னணியில் ரயில் சத்தம் சம்பந்தாசம்பந்தமில்லாமல் இம்சை பண்ணினாலும்

> (பாலசந்தர் *டச்*சாம்!) ரஜினி, கமல், சுஜாதா ஆகியோரின் நடிப்பாலும், (மீண்டும்)


> எம்.எஸ்.வியின் இசையாலும் உட்கார்ந்து பார்க்க முடிந்த ஒரு படம். ஆனால், அந்தப்
> படத்தில் கமலுக்குப் பதிலாக வேறு யார் நடித்திருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு
> தியேட்டர் காலியாகியிருக்கும்.
>
> சிவகுமார், முத்துராமன், விஜயகுமார், ஜெய்சங்கர் என்று பலருடன் ஜோடிசேர்ந்து பல

> படங்களில் சுஜாதா கலக்கினார் என்றாலும் *"தீபம்"* படத்தில் சிவாஜியோடு இணைந்து


> நடித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மலையாளத்தில் ஸ்ரீவித்யா ஏற்று
> நடித்த கதாபாத்திரத்தை அனாயசமாக ஏற்று நடித்திருந்தார் சுஜாதா. சிவாஜி மீது
> வெறுப்பை உமிழும் காட்சிகளில் சிவாஜி பக்தனான எனக்கு கோபமே வந்தது. "அந்தமான்
> காதலி" படத்தில் சில இடங்களில் சிவாஜியைத் தூக்கிச்சாப்பிட்ட நடிப்பு. அதைத்
> தொடர்ந்து சிவாஜியோடு பல படங்களில் நடித்திருந்தாலும், தீபம், அந்தமான் காதலி,
> வா கண்ணா வா -இவை மூன்றும் சிவாஜி-பத்மினி சகாப்தத்தை நினைவூட்டுவதுபோல அமைந்த
> படங்கள்.
>
> தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமாக இருந்தபோது, இமேஜைப் பற்றிக்

> கவலைப்படாமல் மலையாளத்தில் *"பிரஷ்டு"* என்ற ஒரு படத்தில் ஒரு ஏடாகூடமான
> கதாபாத்திரத்தில் நடித்தது சற்றே நெருடலாக இருந்தது. அதே போல *"அண்ணன் ஒரு
> கோவில்" *படத்தில் வரும் *"நாலுபக்கம் வேடருண்டு"* பாட்டிற்காக பல


> பத்திரிகைகளிடம் சிவாஜியும் சுஜாதாவும் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.
>
> ஹோசூரில் இருந்தபோது அவர் நடித்த சில தெலுங்குப்படங்களையும் பார்த்திருக்கிறேன்
> என்றாலும், சுஜாதாவை தமிழ் சினிமா சரியாகக் கையாண்டதுபோல, பிறமொழிகளில்
> கையாளவில்லையோ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
>
> கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சுஜாதாவை கதாநாயகியாக வைத்து இயக்கிய

> *"அடுக்குமல்லி"*என்ற கருப்பு வெள்ளைப்படம் அப்போது வெளிவந்த ரஜினி,


> கமல், சிவாஜியின்
> வண்ணப்படங்களைப் பின்னுக்குத்தள்ளி வசூலில் சக்கைபோடு போட்டதும் ஞாபகத்துக்கு
> வருகிறது.
>

> அப்புறம் *"விதி"* படம்! என்ன சொல்ல...? முழுமையான நடிப்பு...!


>
> சுஜாதாவைப் பற்றி நிறைய எழுதலாம் தான்! நீளம் கருதி அவருக்கு எனது அஞ்சலிகளுடன்
> நிறைவு செய்கிறேன்.
>
>
> --

> *நாஞ்சில் வேணு*
>
> --
> "தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
> கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
>


--
இப்படிக்கு

"ஸ்ரீ"

"கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும்,
புதுமையான தமிழகம் உருவாக வாக்களிப்பீர்
முரசு சின்னத்திற்க்கு"

Balaji Ramanujam

unread,
Apr 13, 2011, 7:02:52 PM4/13/11
to panb...@googlegroups.com
அருமையான பாட்டு

2011/4/13 Swathi Swamy <mswat...@gmail.com>


லலிதா!
இந்தப் படத்தில் வாணியெயராம் பாடிய கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் என்ற பாடல் அந்த நட்களில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களை விரல் விட்டு எண்ணலாம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--

பாலாஜி

"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர், மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும் பொழுது சொற்களாவது இனிய மணம் உடையதாக வெளிப்படட்டும்"

புத்தர்.



நாஞ்சில் வேணு

unread,
Apr 13, 2011, 11:45:40 PM4/13/11
to panb...@googlegroups.com, தமிழ்த்தென்றல்
"அன்னக்கிளி" படத்தின் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள் தேவராஜ்-மோகன் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் இளையராஜா. என்னைப் பொறுத்தவரையில் அது சுஜாதாவின் நடிப்புத்திறமைக்காகப் பேசப்பட்ட ஒரு படமல்ல. முழுக்க முழுக்க கிராமத்துப்பின்னணியில் ஒரு காதல் கதை!

"மச்சானைப் பார்த்தீங்களா?" பாட்டு ஏற்படுத்திய அசாத்தியமான எதிர்பார்ப்பு கூட அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். இது குறித்து இளையராஜா பற்றி எழுதியபோது குறிப்பிட்டதாக ஞாபகம். சுஜாதாவுக்கு அந்த கிராமத்துப் பெண் வேடமோ, குத்தாட்டமோ சற்றும் பொருந்தவில்லை. "மச்சானைப் பார்த்தீங்களா?" பாட்டுக்கு அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் தெரியும்; எவ்வளவு கஷ்டப்பட்டு அல்லது கஷ்டப்படுத்தப்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்தியிருக்கிறார் என்று!

அந்தப் படத்தில் டூரிங் டாக்கீஸ் முதலாளியாக வந்த தேங்காய் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், சில வசனங்களும் பார்வையாளர்களை சற்றே நெளிய வைத்தவை. அடுத்தடுத்து பல ஆக்சன் படங்கள் வந்து கொண்டிருக்க, கிராமீய இசையோடு, கிராமப்பின்னணியில் வந்த ’அன்னக்கிளி" சக்கைபோடு போட்டது என்பதுதான் உண்மை. மற்றபடி படத்தின் கதை பல்லாண்டு காலமாக தமிழ்சினிமாவில் அரைத்த மாவுதான்.

எனவே "அன்னக்கிளி" படம் இளையராஜாவின் படம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


--

துரை.ந.உ

unread,
Apr 14, 2011, 12:31:39 AM4/14/11
to thamizh...@googlegroups.com, நாஞ்சில் வேணு, panb...@googlegroups.com
எனக்கு இதுல ‘விதி’மட்டும்தான் தெரியுது :((

 வெகுளித்தனமான/அழுத்தமான அம்மாவுக்கு மிகப் பொருத்தமானவர் ........
--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Asif Meeran AJ

unread,
Apr 14, 2011, 2:10:09 AM4/14/11
to panb...@googlegroups.com
வேணுஜி வேணும்ஜின்னு சொல்றதுக்குக் காரணம் இப்பவாவதுமக்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் :-)

லலிதா - கமலின் பழைய காலப் படங்களின் ( லலிதா, உயர்ந்தவர்கள், மீண்டும் கோகிலா, உல்லாசப் பறவைகள், நாம் பிறந்த மண்) டிவிடி கிடைத்தது. கமலின் ஆரம்பகாலப் படங்களைப் பார்த்ததில்லை என்பதற்காக வாங்கி வைத்து லலிதா பார்க்கத் துவங்கினேன். ஜெமினி நாயகன். கமல் சுஜாதாவின் தம்பியாக சீர்திருத்த இளைஞனாக சில காட்சிகளில் மட்டும். ஜெமினிக்கும் சுஜாதாவுக்கும் இடையிலான ஈகோ தொடர்பான கதை. பல இடங்களில் அன்றே பெண்களுக்கான குரலை உயர்த்திப் பேசியிருந்த வசனங்கள் ஆச்சரியமளித்தாலும் மெகா மொக்கை படம். இருந்தாலும் விடாப்பிடியாக பார்த்து ரசித்தேன் என்றால் அது ஜெமினியின் முகபாவங்களுக்காகத்தான் :-) ஸ்வாதி சொன்ன கல்யாணமே பாடல் மிகப் பெரும் உதாரணம். கோபம் கொண்ட கணவனை குஷிப்படுத்துவதற்காக மனைவி பாடுவதைப் போன்ற காட்சி. சுஜாதா வழிய வழிய பாடியும் ஜெமினி விறைப்பாக இருக்கும் காமெடி காட்சிக்கு உங்களால் சிரிக்க முடியாவிட்டால் நிச்சயம் நீங்கள் நரசிம்மராவ் குடும்ப வாரிசாகத்தான் இருக்க வேண்டும்

புனர்ஜென்மம் படம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் :-)



Asif Meeran AJ

unread,
Apr 14, 2011, 2:13:10 AM4/14/11
to panb...@googlegroups.com
மிகச்சரி வேணுஜி
அது நிச்சயம் இளையராஜாவின் படம்தான்


ஆனால் சுஜாதாவின் நினைவலைகளில் கமல் கொஞ்சம் அதிகமாகவே சிலாகிக்கப்பட்டது தற்செயல்தானென எண்ணுகிறேன்

கமலும் சுஜாதாவும் இணைந்து நடித்த கடல்மீன்களைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள்
மிகப்பெரும் சிவாஜி ரசிகரான என் தாயாருக்கு அந்தமான் காதலி பார்த்த பிறகு சுஜாதா மேல் தனி பிரியம் வந்து விட்டது :-)

நாஞ்சில் வேணு

unread,
Apr 14, 2011, 2:33:13 AM4/14/11
to Swathi Swamy, thamizh...@googlegroups.com, பண்புடன்
2011/4/13 Swathi Swamy <mswat...@gmail.com>

அவள் ஒரு தொடர்கதையைப் பார்க்கிலும் ”அவர்கள்” படம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதில் ஈட்டியாய் குத்தும் ரஜனியின் வார்த்தைகளை தாங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜனி முகத்தில் கரி பூசும் சுஜாதாவின் நடிப்பு சூப்பர்.

ஆம்! அதிலும் இறுதிக் காட்சியில் "மிஸ்டர் ராமநாதன்," என்று அவர் ரஜினியைப் பெயர் சொல்லி அழைக்கும் காட்சியில் திரையரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

அதே போல கமல் தன்னை ஒருதலையாகக் காதலித்ததை சொன்னதும் "என்னையே அழ வைச்சிருவீங்க போலிருக்கே," என்று உருகும் காட்சி இன்னொரு உதாரணம்.
 
தன்னுடைய அழுகையைப் பார்த்து சந்தோசப்பட நினைக்கும் கணவனுக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்காமல் இருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டே,   தன்னுடைய ஏமாற்றம், ஆற்றாமை என்று அத்தனையையும்
மறைத்துக் கொண்டு ரஜனியின் ஈட்டி வார்த்தைகளை சிரித்துக் கொண்டே எதிர்கொள்ளும் இடத்திலும், அவ்வளாவு நேரமும் அழாமல் வெற்றி பெற்றுவிட்டு மாமியாரின் அன்பில் அத்தனையும் உடைய கேவி கேவி அழும் காட்சியில் சுஜாதா சுஜாதா தான்...!

உண்மை..!
 


--

நாஞ்சில் வேணு

unread,
Apr 14, 2011, 2:35:15 AM4/14/11
to துரை.ந.உ, thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com
2011/4/14 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

எனக்கு இதுல ‘விதி’மட்டும்தான் தெரியுது :((

 வெகுளித்தனமான/அழுத்தமான அம்மாவுக்கு மிகப் பொருத்தமானவர் ........

ஆமாம்! அநேகமாக சாவித்ரிக்குப் பிறகு கதாநாயகர்களுக்கு சமமாகப் போட்டி போட்டு நடித்த நடிகை இவர்தான்.

நாஞ்சில் வேணு

unread,
Apr 14, 2011, 2:47:16 AM4/14/11
to panb...@googlegroups.com
2011/4/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>

ஆனால் சுஜாதாவின் நினைவலைகளில் கமல் கொஞ்சம் அதிகமாகவே சிலாகிக்கப்பட்டது தற்செயல்தானென எண்ணுகிறேன்

உண்மை அண்ணாச்சி! அபூர்வ ராகங்கள் படத்துக்குப் பிறகு கமலின் நடிப்பில் தென்பட்ட முதிர்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி போன்றவர்கள் எல்லாரும் கமலுடன் இணைந்து நடித்தாலும் கமலுக்குத் தண்ணி காட்டிய நடிகைகள் சுஜாதாவும் ஸ்ரீதேவியும் தான். 

கமலும் சுஜாதாவும் இணைந்து நடித்த கடல்மீன்களைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள்

ஹிஹி.! கமல் முதல் முதலாக அப்பா வேடத்தில் நடித்து வயிற்றில் தலையணை கட்டிக் கொண்டு வந்த படம். அந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு எத்தனை சண்டைக் காட்சிகள் என்று சரியாக சொல்லுபவர்களுக்கு ஒரு பரிசே கொடுக்கலாம். அதிலும் இறுதி அரை மணி நேரத்தில் யார் சொத்தை யார் எழுதி வாங்குகிறார்கள் என்று கோர்வையாக ஞாபகம் வைத்திருந்தால் அவர்கள் அதி புத்திசாலிகள்.

இருந்தும் அந்தப் படத்தை நான் இரண்டு முறை பார்த்தேன். காரணம் ஓன்று: அம்பிகா. காரணம் இரண்டு: "மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே.." பாட்டு.
 
மிகப்பெரும் சிவாஜி ரசிகரான என் தாயாருக்கு அந்தமான் காதலி பார்த்த பிறகு சுஜாதா மேல் தனி பிரியம் வந்து விட்டது :-)

வியப்பில்லை அண்ணாச்சி! சிவாஜிக்கு சரிநிகர் சமமாக, சில காட்சிகளில் சிவாஜியையே சற்று பின்னுக்குத் தள்ளி திறமையாக நடித்திருந்தார் சுஜாதா. 


"அன்னக்கிளி" படத்தின் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள் தேவராஜ்-மோகன் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் இளையராஜா.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Sankar Kumar

unread,
Apr 14, 2011, 8:04:53 AM4/14/11
to panb...@googlegroups.com


2011/4/13 நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com>
அது இளையராஜாவைப் பத்தி எழுதறப்பவும் சொல்லுங்க! :))
ஆனால், சுஜாதா எனும்போது, அன்னக்கிளி பற்றிய குறிப்பு இல்லாமல் கட்டுரை முழுமை பெறாது எனவே கருதுகிறேன்.
 

நாஞ்சில் வேணு

unread,
Apr 14, 2011, 8:13:31 AM4/14/11
to panb...@googlegroups.com, Sankar Kumar

2011/4/14 Sankar Kumar <ommur...@gmail.com>

2011/4/13 நாஞ்சில் வேணு
அது இளையராஜாவைப் பத்தி எழுதறப்பவும் சொல்லுங்க! :))
ஆனால், சுஜாதா எனும்போது, அன்னக்கிளி பற்றிய குறிப்பு இல்லாமல் கட்டுரை முழுமை பெறாது எனவே கருதுகிறேன்.


என்னைப் பொறுத்தவரையில் அன்னக்கிளியை விடவும் சுஜாதாவின் பேர் சொன்ன பல படங்கள் இருக்கின்றன. இதே தேவராஜ்-மோகன் இயக்கத்தில் சுஜாதா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராக நடித்த "உறவுசொல்ல ஒருவன்" படத்தில் கூட அன்னக்கிளி படத்தை விடவும் அருமையாக நடித்திருந்தார். என்னைப் பொறுத்தவரை அன்னக்கிளி படம் இளையராஜா படம் மட்டுமே!

--

முகிலன் .

unread,
Apr 14, 2011, 8:37:49 AM4/14/11
to panb...@googlegroups.com
நான் சொல்லல, வயசானவங்களுக்கான இழைன்னு..


Ganesh kumar

unread,
Apr 14, 2011, 11:10:08 PM4/14/11
to panb...@googlegroups.com
பல இடங்களில் அன்றே பெண்களுக்கான குரலை உயர்த்திப் பேசியிருந்த வசனங்கள் ஆச்சரியமளித்தாலும் மெகா மொக்கை படம். இருந்தாலும் விடாப்பிடியாக பார்த்து ரசித்தேன் என்றால் அது ஜெமினியின் முகபாவங்களுக்காகத்தான் :-)
 
மனைவிங்குறவ சரிபாதிங்க .. மிச்சம் மீதி இல்லை.
 
ஜெமினி தனது பதவி உயர்வைக் கொண்டாட உறவுக்கு அழைப்பார். அதற்கு சுஜாதா மசியாத பொழுது
ஈகோ முற்றிவிடும்.கடைசி காட்சில ஜெமினியும் சுஜாதாவும் ரயில்வே ஸ்டேஷன்ல சந்திச்சுக்குவாங்க.
சந்திப்பு முடிஞ்சதும் ஜெமினி "நான் கிளம்புறேன்"னு சொல்லுவாரு. உடனே சுஜாதா " நமக்குள்ள அவ்வளவுதானாங்க" னு கேட்டு கதறும் காட்சி  உருக்கமாக இருக்கும்,
 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ganesh kumar

unread,
Apr 14, 2011, 11:21:23 PM4/14/11
to panb...@googlegroups.com
 அதே போல "அண்ணன் ஒரு கோவில்" படத்தில் வரும் "நாலுபக்கம் வேடருண்டு" பாட்டிற்காக பல பத்திரிகைகளிடம் சிவாஜியும் சுஜாதாவும் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.

 
பெருமூச்சு இழைல இந்தப் பாட்ட பத்தி நான் எழுதியிருந்தேன்.. நாலுபக்கம் வேடருண்டு நடுவிலே மானிரண்டு இந்தப் பாட்டு முழுக்க சிவாஜி , சுஜாதவை மோப்பம் பிடிச்சிட்டே இருப்பாரு :P

ஸ் பெ

unread,
Apr 21, 2011, 2:49:07 AM4/21/11
to panb...@googlegroups.com

சுஜாதா என்னும் கவிதா எங்கே போனாள்..?

19-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 6-ம் தேதி புதன்கிழமை, மதியவாக்கில் நடிகை சுஜாதா மரணம் என்ற செய்தி திரையுலகத்தில் பரவியபோது பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள் உச்சரித்த வார்த்தை ஒன்றுதான். ஆனால் அதனை நான் இங்கே குறிப்பிடவே முடியாது..!



நடிகை என்பவளுக்கு தனி இமேஜூம், தனி வாழ்க்கை முறையும், தனியான ஆசைகளும் இருந்து வந்து கொண்டிருக்கிறது என்பது பத்திரிகைகள் அவர்கள் மீது திணித்து வைத்திருக்கும் ஒரு பிம்பம்தான். ஆனால் குளத்தில் கல்லெறிந்து உருவாக்கும் அலைகளைப் போல அவர்களது வாழ்க்கையும் அலைக்கழிக்கிற வாழ்க்கைதான் என்பதை மட்டும் மீடியாக்கள் வெளிச்சம் போடுவதில்லை.

சுஜாதா என்ற இந்த நடிகையின் திரையுலக வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்திருந்த திரையுலகம், மறு பக்கத்தை கடைசிவரையில் பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு இரும்புக் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டிருந்த புள்ளிமானாக இருந்தவர் சுஜாதா..!




சினிமா பத்திரிகையாளர்களுக்குள் போட்டி என்று ஒன்று வைத்தால் அதில் முதலிடத்தில் சுஜாதாவிடம் யார் பேட்டி கண்டு வருவது என்கிற ஆப்ஷன்தான் முதலிடத்தில் இருக்கும். அந்த அளவுக்கு தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தானே சிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுஜாதா..!

கடந்த 5 ஆண்டு காலமாக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அவர் அலைந்திருந்தபோதிலும் அது பற்றிய விஷயங்கள்கூட மீடியாக்களுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டனர் அவரது குடும்பத்தினர்..!




அவருடைய நீண்ட நாள் மேக்கப்மேனான சுந்தரமூர்த்தியின் நட்பு மட்டுமே, அந்த வீட்டுக்கும் திரையுலகத்துக்கும் இருந்த ஒரேயொரு தொடர்பு என்கிறது கோடம்பாக்கம்..!

சுஜாதா தமிழில் அறிமுகமான அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவுக்கு மேக்கப் போட்டவர் சுந்தரமூர்த்தியின் அப்பாதான். அதன் பின்பு சுந்தரமூர்த்தி அத்தொழிலைக் கையில் எடுத்தபோது பாபாவரையிலும் ரஜினிக்கும், சுஜாதாவுக்கும் ஆஸ்தான மேக்கப்மேன் இவரே..! சுஜாதாவின் அஞ்சலியில் அவரது பெண் திவ்யாவின் கண்ணீருக்குப் பின்பு இந்த சுந்தரமூர்த்தியின் கதறல்தான் அதிகமாக இருந்தது..!




சுஜாதா மலையாள தேசத்தில் இருந்து இறக்குமதி ஆனவர். ஆனால் இலங்கையில் பிறந்தவர். அவர் 1952-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் இலங்கை நெல்லித்தீவில் பிறந்துள்ளார். இந்த வலைத்தளத்தில்(http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=113:2011-04-14-23-22-57&catid=26:2011-03-06-20-34-42&Itemid=48)  உறுதியான ஆதாரத்துடன் இந்தத் தகவல் எழுதப்பட்டுள்ளது. இவருடைய தந்தை மேனன், கேரளாவில் இருந்து இலங்கைக்கு விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றவர். நெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேனன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சுஜாதாவும் ஆரம்பக் கல்வியை அங்கேயே முடித்திருக்கிறார். 1966-ம் ஆண்டில்தான் கேரளாவுக்கே அவரது குடும்பம் திரும்பியிருக்கிறது..!

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி.வரை மட்டுமே படித்து முடித்த சுஜாதா தனது 16-வது வயதிலேயே மலையாள நாடகங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். இது அவரது குடும்பத்தினரின் தூண்டுதலினால்தான் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.




தமிழ்நாட்டை போலவே கேரளாவில் அப்போது நாடகக் கலை வளர்ந்திருந்த நேரத்தில் சுஜாதாவின் கண்ணை ஈர்க்கும் முக அழகும், இயல்பாகவே அவருக்கிருந்த நடிப்பும் அவரை நடிப்புத் துறையிலேயே கொண்டு வந்துவிட்டிருக்கிறது..!

போலீஸ் ஸ்டேஷன் என்ற நாடகம்தான் அவர் முதன் முதலில் நடித்த நாடகம் என்கிறார்கள். இந்த நாடகம் அப்போது தமிழகத்தில்கூட பிரபலமாகப் பேசப்பட்டதாம்.

இதற்கிடையில் 1968-ல் டூ கல்யாண் என்ற இந்திப் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரக்கூடிய அளவுக்குத் தலையைக் காட்டியிருக்கிறார் சுஜாதா..!

அதே 1968-ல் மலையாளத்தில் தபஷ்வனி என்கிற திரைப்படத்தில் ஜோஸ் பிரகாஷ் என்னும் இயக்குநர்தான் சுஜாதாவை மலையாளத் திரையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதன் பின்பு பல மலையாளப் படங்களில் சிற்சில வேடங்களிலும், குரூப் டான்ஸிலும் வந்து முகத்தைக்  காட்டியிருக்கிறார் சுஜாதா. 

1971-ம் ஆண்டு எர்ணாகுளம் ஜங்ஷன் என்னும் திரைப்படத்தில்தான் சுஜாதா என்ற தனித்த நடிகை மலையாளத் திரையுலகத்தினருக்குத் தெரிந்திருக்கிறது.  காரணம், இத்திரைப்படத்தில்தான் மலையாளத்தில் அப்போதைய காலக்கட்டத்தில் வேறு எந்த புதுமுக நடிகையும் துணிந்து நடிக்க முன் வராத அளவுக்கு டூ பீஸ் உடையில் சுஜாதா நடித்திருந்தது மலையாள திரையுலகத்துக்கே அதிர்ச்சி..!

இந்தத் திரைப்படத்தின் பெயரும், புகழும் இதே காரணத்துக்காகவே சுஜாதாவின் பெயரை கேரளா தாண்டி இங்கேயும் கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸார் அறிமுகப்படுத்திய டூ பீஸ் உடை அழகிகள் பட்டியலில் இன்னொருவராக இவரை அறிமுகப்படுத்திவிடலாம் என்று நினைத்து கோடம்பாக்கத்துக்கு சுஜாதாவை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.




ஆனால் இங்கே அவர் எதிர்பார்த்தது என்னவோ கேரக்டர் ரோல்ஸ்.. மலையாளத்தில் தன்னுடன் நடித்திருந்த பத்ரகாளி படத்தின் ஹீரோயின் ராணிசந்திராவின் உதவியோடுதான் தமிழ்த் திரையுலகத்துக்குள் காலெடுத்து வைத்திருக்கிறார் சுஜாதா..!

1973-ல் அவள் ஒரு தொடர்கதை படத்திற்காக புதுமுகம் தேடிக் கொண்டிருந்த கே.பாலசந்தரிடம் வழக்கமான புதுமுகமாகத்தான் சுஜாதா அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். நெடு நெடு என்ற உயரமும், அக்கா போன்ற தோற்றமும் கேரக்டருக்கு ஏற்றாற்போல் கிடைத்துவிட அவர்தான் அந்தக் கவிதா என்று முடிவு செய்துவிட்டார் கே.பி.




இந்த ஒரு படத்தின் வெற்றி அவருக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், 1976-ல் வெளிவந்த அன்னக்கிளிதான் அவரை தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது..!

இளையராஜாவின் புதுமையான இசை.. கிராமந்தோறும் காதுகளில் கிசுகிசுக்கப்படும் செய்திகளின் தொகுப்பாக அன்னம் என்ற அந்த அபலையின் கதையை உரக்கச் சொன்ன அன்னக்கிளி, சுஜாதா என்றொரு பண்பட்ட நடிகையை தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அடையாளம் காட்டியது..

இடையில் மீண்டும் தன் தாய்வீட்டுப் பக்கம் கவனத்தைத் திருப்பினாலும் தமிழ் திரைப்பட உலகம் அவருக்குக் காட்டிய வரவேற்பினால் இங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது சுஜாதாவின் குடும்பம்.

திரையுலகில் வெற்றி பெற்ற நடிகைகளின் பின்புலத்திலெல்லாம் யாரோ ஒருவரின் ஆசையும், வெறியும் கலந்திருக்கும் என்பது கோடம்பாக்கத்து விதி. இது சுஜாதாவுக்கும் பொருந்தும். தன்னை மேலும், மேலும் நடிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க வேண்டி வழக்கமாக எல்லா நடிகைகளும் செய்த அதே தவறைத்தான் சுஜாதாவும் செய்தார்.

மவுண்ட்ரோட்டில் பழைய ராஜகுமாரி தியேட்டர் அருகில் குடியிருந்த சுஜாதாவின் வீட்டு மாடியில் ஒண்டுக் குடித்தனத்தில் தங்கியிருந்தவர் ஜெயகர் என்பவர். சுஜாதாவின் வருத்தங்களுக்கும், சோகங்களுக்கும் ஆறுதல் சொல்ல படியிறங்கியவர் சுஜாதாவின் மனதுக்குள்ளும் புகுந்துவிட்டார். வழக்கம்போல தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஜெயகரை திருமணம் செய்து கொண்டு தனது அடுத்தக் கட்ட வாழ்க்கையைத் துவக்கினார் சுஜாதா. இதுவரையில்தான் அவரது சினிமாவின் பொற்காலம் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.




இதுவெல்லாம் பிற்காலத்தில் நடக்கப் போகிறது என்பது தெரியாமலேயே இயக்குநர் சிகரத்தின் அவர்கள் படத்தில் 1976-ல் நடித்து முடித்தார் சுஜாதா. ஒரு பக்கம் தேளாகக் கொட்டிய கணவன்.. மறுபக்கம்  தன்னை விரும்பும் இரண்டு நல்ல நண்பர்கள் என்று கே.பி. காட்டிய அந்தத் திரைக்காவியத்தில் முதல் வரி  கதை, சுஜாதாவின் நிஜ வாழ்க்கையில் அப்படியே நிகழ்ந்துவிட்டது அவரது துரதிருஷ்டம்தான்..!

1977-ல் நடந்த அவரது திருமணத்திற்குப் பிறகும், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் அவரது திடீர் சினிமா பிரவேசங்களும், திடீர் தலைமறைவுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பத்திரிகைகள் விரட்டிப் பிடித்துதான் அவரைப் பேச வேண்டிய கட்டாயம்..! எதையும் வெளிப்படையாகப் பேசும் சுஜாதாவுக்கு தனது கணவர் கட்டியிருந்த இரும்புக் கோட்டைக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம்..!




இன்றுவரையிலும் அவருடன் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் அவரது நிலைமை நன்கு தெரியும். அத்தனை பேரிடமும் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இதற்காக தான் இந்தத் திருமணப் பந்தத்தை மீறப் போவதி்ல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதுதான் பலராலும் ஏற்க முடியாமல் போயிருந்தது.

சுஜாதாவின் இறப்புச் செய்தி கேட்டவுடன் அவருடன் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சொன்ன வார்த்தைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை என்கிறார் அவருக்குத் தகவல் கொடுத்த சினிமா பத்திரிகையாளர்..!

இடையில் தனது நடிப்பு கேரியரில் எந்தப் பங்கமும் வைக்காமல் நடிப்பு வேட்டையைத் தொடர்ந்துதான் வந்திருக்கிறார் சுஜாதா.  அவர்கள் படத்தில் கே.பி.யின் இயக்குதல் பசிக்கு சுஜாதா நிறைய தீனி போட்டிருந்தாலும் சுஜாதாவுக்கே தன்னைப் பிடித்திருந்தது நூல்வேலியில்தான்..! இதையும்விட எனக்குப் பிடித்திருந்தது அவள் ஒரு தொடர்கதையின் நாயகி கவிதாதான்..!

இப்படியொரு சகோதரி வீட்டுக்கு வீடு இருக்கிறார்களே.. இவர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை என்றெல்லாம் யோசிக்க வைத்தது இத்திரைப்படம். இதில் இவர் காட்டியிருந்த நடிப்பு நிச்சயம் ஒரு புதுமுகம் என்றே சொல்ல முடியவில்லை. வசன உச்சரிப்பில் சுஜாதா ஒரு ஸ்டைலிஸ்ட் என்றே சொல்ல வேண்டும்..!

“சம்பாத்தியத்துக்கு ஒரு தங்கச்சி.. சமைச்சுப் போட ஒரு அம்மா.. படுக்கைக்கு ஒரு பொண்டாட்டி.. த்தூ.. வெட்கங்கெட்ட ஜென்மம்..” என்று ஜெய்கணேஷை பார்த்து பொறுமித் தள்ளும் சுஜாதாவின் வசன உச்சரிப்பை கவனித்துக் கேட்டுப் பாருங்கள். நம்மையும் சேர்த்தே சொல்லியிருப்பார். அல்லது சொல்ல வைத்திருப்பார்..




இதே போன்றதுதான் அந்தமான் காதலி படத்தின் இறுதிக் காட்சி.. சிவாஜி எரிமலையை நோக்கி போய்க் கொண்டிருக்க தாங்க மாட்டாத அளவுக்கு பொறுமை காத்துவிட்டு பின்பு அதனையும் இழந்து.. “அவர்தாண்டா உங்கப்பா...” என்று வெடித்து சிதறுகின்ற காட்சியை எத்தனை முறை இலங்கை வானொலியில் கேட்டும் சலிக்கவில்லை.. படத்தை பார்க்காமலேயே குரலிலேயே தனது நடிப்பை செதுக்கியிருந்தார்..!

இதற்குப் பிறகு சுஜாதாவின் பெயரை ஊரெல்லாம் கொண்டு போய் சேர்த்தது விதி திரைப்படம்தான்.. தன்னை கெடுத்து, பிள்ளையையும் கொடுத்தது “இதோ இந்த டைகர் தயாநிதிதான்..” என்று கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும் ஜெய்சங்கரை பார்த்து கையை நீட்டிச் சொல்கின்ற அந்தக் காட்சி.. மறக்க முடியுமா..? அதிலும் அந்த நீதிமன்றக் காட்சிகளின்போது அவ்வப்போது, “டைகர் தயாநிதி..” என்று அவர் உச்சரிக்கும்போதெல்லாம் வரும் வெறித்தனம், அந்த கேரக்டராகவே அவர் மாறியிருந்ததைக் காட்டியது.




பட்டிதொட்டியெங்கும் விதி படத்தின் ஆடியோ கேஸட்டுகள் பட்டையைக் கிளப்பியபோது சுஜாதாவின் அனல் தெறித்த வசனக் காட்சிகளே படத்திற்கு மீண்டும், மீண்டும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு வந்தது..!




இதன் பின்பு ஹீரோயின்களாக இளையவர்களும், எதற்கும் துணிந்தவர்களுமாக அறிமுகமானவுடன் தன்னுடன் அறிமுகமான கமல், ரஜினிக்கே அம்மா வேடம் போடவும் சுஜாதா தயங்கவில்லை.

தமிழ்ச் சினிமா தவிர்த்து தெலுங்கு, கன்னட உலகத்திலும் சுஜாதாவின் நடிப்புலகம் விரிந்தது.. தெலுங்கில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு என்ற மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் ஆடி முடித்தார் சுஜாதா.. தமிழைவிட தெலுங்கில்தான் மிக அதிகப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சுஜாதா என்கிறார்கள் தெலுங்குக்காரர்கள்..! இதன் பின்பு இன்றுவரையிலும் தெலுங்கு ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் அம்மாவாக வேடம் போட்டு ஓய்ந்துவிட்டார்.

இதனால்தான் இவருடைய மரணத்திற்கு தமி்ழ்த் திரைப்படத் துறையின் வருத்தப்பட்டதைவிடவும், தெலுங்கு திரையுலகமும், ஆந்திராவும் அதிகமாகவே அஞ்சலி தெரிவித்தன.

நீலாங்கரை வீட்டில் முதல் நாளில் இருந்து மறுநாள் அவருடைய உடல் சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்லப்படும்வரையிலும் இருந்தது தெலுங்கு சேனல்காரர்கள்தான். ஆந்திராவில் மிக அவசர செய்தியாகவே சுஜாதாவி்ன் மரணச் செய்தி அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.



“சுஜாதா மிக மிக ஒழுக்கமான பெண்மணி..” என்று கூறியிருக்கிறார் ராமாநாயுடு..! “நடிப்பு ஒன்றைத் தவிர சுஜாதாவுக்கு வேற ஒண்ணுமே தெரியாது. எப்படிப்பட்ட கஷ்டம் என்றாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார்..” என்று சொல்லியிருக்கிறார் நாகேஸ்வரராவ்..! ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியே சுஜாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

தெலுங்கு சேனல்களில் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பல நடிகர், நடிகைகள் தங்களது சோகத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்..!  ஆனால், தமிழ்ச் சேனல்கள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததினாலும் நீலாங்கரைவரைக்கும் போய் படம் எடு்க்க வேண்டுமா என்கிற சோம்பேறித்தனத்தினாலும் ஒரேயொரு முறை கடமைக்கு வந்து எடுத்துக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். அதையும்கூட சரிவர காட்டவில்லை. ஆனால் தெலுங்கு சேனல்கள் அனைத்திலும் அத்தனை செய்தி நேரங்களிலும் குறைந்தபட்சம் 3 நிமிடங்களாவது சுஜாதாவுக்காக ஒதுக்கியிருந்தார்கள்..!




தெலுங்கில் அவருக்குக் கிடைத்த அமைதி.. பத்திரிகையாளர்களின் விரட்டுதல் இல்லாத தனிமை.. இது சுஜாதாவுக்கு மிகவும் பிடித்துப் போக கடைசி சில வருடங்களில் அவர் அதிகம் நடித்தது தெலுங்கு படங்கள்தான்.. இவர் கடைசியாக நடித்ததுகூட தெலுங்கில் நாகார்ஜூனாவின் படமான 2006-ல் வெளி வந்த ஸ்ரீராமதாசுதான். ஆனால் இதற்கு முன்பே 2004-ம் ஆண்டே வரலாறு என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து முடித்து தனது தமிழ்த் திரையுலக வரலாற்றை முடித்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா..!




தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருக்கும் சுஜாதாவை திரைப்பட விழாக்களில் பார்த்ததாக யாராவது சொல்லியிருந்தாலே அது மிகப் பெரிய விஷயம்..!

சில வருடங்களுக்கு முன்பாக பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..!



அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..! கடைசியாக சுஜாதா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் மரணத்தின்போது..

சிவாஜியின் உடல் தகனம் நடைபெற்ற நாளன்று காலையில் பாண்டிபஜார் அருகே இருந்து தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சிவாஜியின் வீடு நோக்கி நடந்து வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் முன் வரிசையில் மனோரமாவுடன் கைகோர்த்து தலையைக் குனிந்த நிலையிலேயே சுஜாதா வந்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உடலுக்கு மாலை அணிவித்த கையோடு பட்டென்று சிவாஜியின் வீட்டுக்குள் சென்று பதுங்கிவிட்டார் சுஜாதா. அவரிடத்தில் இரங்கல் செய்தி கேட்பதற்காக அனைத்து சேனல்காரர்களும் சிவாஜியின் வீட்டைச் சுற்றிச் சுற்றி தேடியலைந்ததை நேரில் கண்டேன்..!

சில நடிகர், நடிகைகள் லாரியில் சிவாஜியின் உடலுக்குப் பின்னால் சென்றபோதாவது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர் வெளியில் வரவே இல்லை..!

“கண்ணிலே என்னவென்று கண்கள்தான் அறியும்..!

கையிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்..?”

- இப்படி அவள் ஒரு தொடர்கதையில் தனக்கான கேரக்டரில் பாடிய சுஜாதா, நிஜத்திலும் அவர் யார் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சூழலையே உருவாக்கி வைத்திருந்தார்..! ஆனால் இது அத்தனைக்கும் பத்திரிகையாளர்கள் குற்றம் சொல்வது அவரது கணவரைத்தான்.

சுஜாதா நடிக்கின்றவரையிலும் அவரது கால்ஷீட்டை அவரது கணவர் ஜெயகர்தான் கவனித்துக் கொண்டார். ஜெயகரையே போனில் பிடிப்பது மகா கஷ்டம். சுஜாதாதான் நடிக்க வேண்டும் என்றாலே தயாரிப்பு நிர்வாகிகள் அலுத்துக் கொள்வது அவரை நினைத்துத்தான்..!




பத்திரிகைகளுக்கு பேட்டி. அனாவசியமாக அரட்டைகள் என்று எதற்கும் இடம் கொடுக்காமல் சுஜாதாவை அழைத்து வருவது.. கூட்டிச் செல்வதாக இருந்தவர் ஜெயகர். அவரை மீறி பத்திரிகையாளர்கள் நெருங்க முடியாமல் தவித்து பின்பு அதையே குற்றம்சாட்டி பத்திரிகைகளில் பகிரங்கமாக எழுதிய பின்புகூட சுஜாதாவே இதற்கு மறுப்பளிக்கக்கூட மறுத்துவிட்டார்.

மீறி சுஜாதாவைத் தேடி வீட்டிற்குச் சென்றவர்களைக்கூட ஜெயகரே வரவேற்று பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு “மேடம்.. இப்போ தூங்குறாங்க.. போன்ல பேசிட்டு வாங்க..” என்றோ, இல்லையெனில் ஏதாவது ஒரு பொய் சொல்லியோ வாசலிலேயே திருப்பியனுப்பிய கதை தமிழ்த் திரையுலகில் கி்ட்டத்தட்ட அத்தனை சினிமா பத்திரிகையாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது..!

அப்படியிருந்தும் சிற்சில சமயங்களில் தேர்ந்தெடுத்த சில மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்த சுஜாதா தனது கணவர், குழந்தைகள் குடும்பம் பற்றி மட்டும் மூச்சுவிட்டதில்லை.




தற்போது அவருக்கு மாலை போடச் சென்ற சினிமா பிரபலங்கள் அவரது மகள் திவ்யாவை இத்தனை ஆண்டுகள் கழித்துதான் நேரில் பார்த்திருக்கிறார்கள். அத்தோடு கடந்தாண்டுதான் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறதாம். சஜீத் என்ற சுஜாதாவின் மகனையும் அன்றைக்குத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. மாலை போட்ட கையோடு பிரபலங்கள் திகைப்போடு திரும்பி வந்திருக்கிறார்கள்..!



உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டு கடந்த மாதத்தில் சுஜாதாவை பார்க்க விரும்பி நேரில் சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் வாசலில் இருக்கிறார் என்று தெரிந்து இறப்புக்கு முதல் நாள் எப்படியாவது பார்த்துவிடலாம் என்று கடும் முயற்சி செய்த சினிமாவின் மூத்த நிருபர்களுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை..!




அவரது இறுதிக் காலத்திலாவது அவருடன் பணியாற்றியவர்களை பார்க்க அனுமதித்திருந்தால் அவர் கொஞ்சமாவது மனம் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.. கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் என்ற நிலையில் 5 ஆண்டு காலமாக இருந்தவரை கடைசியில் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்பது கொடூரமான விஷயம்..!

அவருடைய இறப்பைக் கேள்விப்பட்டு வேகமாக விரைந்தோடிய சினிமா பத்திரிகையாளர்களுக்கு முதலிலேயே அனுமதி மறுக்கப்பட்டு, “வீட்டில் கரண்ட் இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று பொய் சொல்லி வாசலிலேயே நிறுத்தியிருக்கிறார்கள்..! பின்பு ஒரு மணி நேரம் கழித்துதான் பத்திரிகையாளர்களையே அனுமதித்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்..! சுஜாதாவின் நெஞ்சார்ந்த அன்புக்கும், பண்புக்கும் முதல் பாத்திரமான சினிமா பத்திரிகையாளர்களின் நெஞ்சத்தை கீறியிருக்கிறது இந்தச் சம்பவம்.. ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை..!

ஒரு முறை டயலாக்கை வாசித்துக் காண்பித்துவிட்டாலே போதும்.. அதனை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன், மிகச் சரியான டைமிங்கில் கதாபாத்திரங்களை நோக்கி கை காட்டிப் பேசும்  வித்தைக்காரரான சுஜாதாவுக்கு தனது திரையுலக வாழ்க்கையை தமிழ்த் திரையுலகத்தில் மிகச் சரியான விதத்தில் பதிந்துவைக்க முடியாமல் போனது நமது துரதிருஷ்டம்தான்..!




1979-ல் நூல்வேலியில் நடித்த பின்பு தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரத்தை பல ஆண்டுகளாக சந்திக்கக்கூட விரும்பாமல் ஒதுங்கியே இருந்ததன் காரணம்தான் என்ன என்று தெரியவில்லை..! பாவம் கே.பி.க்கும் இது தெரியவில்லை..! இறுதியில் இந்தக் கோலத்தில்தான் இவரை நான் பார்க்க வேண்டுமா என்கிற தனது ஆதங்கத்தை அவரது சிஷ்யப்பிள்ளை கமலஹாசனுடன் அந்த வீட்டிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கே.பி..!

எனக்கு தமிழ்த் திரையுலகம் மீது ஒரு பிடிப்பையும், ஆர்வத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்திய கேரக்டர் அவள் ஒரு தொடர்கதையின் நாயகியான கவிதாதான். இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா பார்த்திருந்த அம்மாக்கள், அக்காக்களுக்கு ஆதர்ச நாயகி கவிதாதான்.. யாரிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்..!

கே.பி.யை பல்வேறு சந்திப்புகளிலும், பேட்டிகளிலும் அனைத்து பத்திரிகையாளர்களும் கேட்கின்ற கேள்விகளில், “அதுக்குப் பின்னாடி அந்தக் கவிதா என்ன ஸார் ஆனாங்க..? ஏன் அப்படியே அவங்களை நிறுத்திட்டீங்க..? அடுத்த பாகம் வருமா..?” என்ற கேள்வி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்..!

இன்றைக்கும் அதே கேள்விதான் எனக்குள்ளும் தோன்றுகிறது. அந்தக் கவிதா நிஜத்திலும் ஏன் இப்படியிருந்தார்..? ஏன் இப்படியே மறைந்தார்..? யார் சொல்வது..?

தகவல்கள மற்றும் புகைப்படங்கள் : பல்வேறு இணையத்தளங்கள்

Read more: http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_20.html#ixzz1K8bhG349

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.
விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Reply all
Reply to author
Forward
0 new messages