Re: [muththamiz] Re: [NilaRaseegan Kavithaigal] நிலாரசிகன் கவிதைகள்...

189 views
Skip to first unread message

NilaRaseegan

unread,
Oct 22, 2007, 6:16:08 AM10/22/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

உயிரிலே கலந்தவன் ...

அதிகாலை எழ எத்தனிக்கும்
என்னை உனக்குள் இழுத்து
உயிர்மலர செய்வாயே
அதைவிடவும் ...

அரைநாள் தொலைபேசியில்
பேசிவிட்டு வைத்த மறுநொடி
மீண்டும் அழைத்து
குரல்ரசிக்கும் அழைப்பிது
என்று செல்லமாய் துண்டிப்பாயே
அதைவிடவும் ...
 
பெண்மையின் வலியுணரும்
நாட்களில் எனக்கு
முன்விழித்து சூடான
தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
அதைவிடவும் ...
 
குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே ..
அன்றுதான் உணர்ந்தேன்
தாயுமானவன் நீ என்று.

 - நிலாரசிகன்.



On 10/22/07, Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com> wrote:
வைரமுத்துவை பிரதிபலிக்கும் உதிரா உதிரப்பூ.

On 10/19/07, NilaRaseegan < nilara...@gmail.com> wrote:
உதிரா உதிரப்பூ
 
மெதுவாய் மிக மெதுவாய்
அங்குமாய் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....
 
புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?
 
மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?
 
மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?
 
விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!
 
-நிலாரசிகன்

 
On 10/19/07, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com > wrote:
இருதலை ராகம் இது ஒரு தலை ராகமாய்





--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/




http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

pandii durai

unread,
Oct 22, 2007, 6:21:08 AM10/22/07
to panb...@googlegroups.com

மீரான் எல்லாம் நீங்க கொடுத்த தைரியம் நிலா கிளப்பிட்டாரு
 
\\\\பெண்மையின் வலியுணரும்
நாட்களில் எனக்கு
முன்விழித்து சூடான
தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
அதைவிடவும் ...\\\
 
 

நிலா அண்ணி ரொம்பவே குடுத்துவச்சவங்க (அட ஆமா கல்யாணம் ஆகிடுச்சா?)

நன்றாக உள்ளது உங்களின் கவிதை

பாண்டித்துரை

Devarpiran Krishnan

unread,
Oct 22, 2007, 6:25:16 AM10/22/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
On 22/10/2007, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:

உயிரிலே கலந்தவன் ...

அதிகாலை எழ எத்தனிக்கும்
என்னை உனக்குள் இழுத்து
உயிர்மலர செய்வாயே
அதைவிடவும் ...

அரைநாள் தொலைபேசியில்
பேசிவிட்டு வைத்த மறுநொடி
மீண்டும் அழைத்து
குரல்ரசிக்கும் அழைப்பிது
என்று செல்லமாய் துண்டிப்பாயே
அதைவிடவும் ...
 
அருமையான வரிகள்...ரசித்து எழுதிய வார்த்தைகள்....

 
பெண்மையின் வலியுணரும்
நாட்களில் எனக்கு
முன்விழித்து சூடான
தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
அதைவிடவும் ...
 
குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே ..
 
ம்..எங்கயோ போய்டீங்க.....

--
தேவர்பிரான் கிருட்டினன்...
கற்றது ஒன்னுமில்லை..!!

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

நந்தா

unread,
Oct 22, 2007, 7:13:45 AM10/22/07
to பண்புடன்
நிலா காதலை அழகா அள்ளித் தெளிச்சிருக்கீங்க கவிதை பூராவும்.. கலக்கலா
வந்திருக்கு.

மேற்கோள் காட்டறதுக்கெல்லாம் ஒண்ணுமில்லை. முழுசாவே மேற்கோள் காட்டணும்
அப்படி பார்த்தா.


நட்புடன்,
நந்தா.

அருட்பெருங்கோ

unread,
Oct 22, 2007, 10:31:58 AM10/22/07
to panb...@googlegroups.com

குழந்தை பிறந்தவுடன்

வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே ..
அன்றுதான் உணர்ந்தேன்
தாயுமானவன் நீ என்று.

 - நிலாரசிகன்.

கவிதையும் ( உங்க காதலும் ) நல்லாருக்குங்க நிலா.

( எப்போ கல்யாணம்? :) )

 

 

Asif Meeran AJ

unread,
Oct 22, 2007, 1:07:09 PM10/22/07
to panb...@googlegroups.com
நல்லா இருக்கு நிலா
இனிமே இப்படியே எழுதிடுறேன்
மறைமுகமா பாராட்டுனா நமக்கு 'டின்'னு கட்டிடுவாங்க போல இருக்கே
நம்ம பாண்டி அண்ணாச்சியைச் சொல்றேன் :-)

Sil Vandu

unread,
Oct 23, 2007, 7:19:42 AM10/23/07
to panb...@googlegroups.com
மிக அருமையான கவிதை நிலா...

On 10/22/07, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:



--
ரீங்காரத்துடன்
சில்வண்டு...
www.silvandu.blogspot.com

Naresh Kumar

unread,
Oct 23, 2007, 9:05:18 AM10/23/07
to பண்புடன்

கவிதை மிக அருமை. எனக்கும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்குங்க!

On Oct 22, 3:16 pm, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> *உயிரிலே** **கலந்தவன்**...*


> அதிகாலை எழ எத்தனிக்கும்
> என்னை உனக்குள் இழுத்து
> உயிர்மலர செய்வாயே
> அதைவிடவும்...
>
> அரைநாள் தொலைபேசியில்
> பேசிவிட்டு வைத்த மறுநொடி
> மீண்டும் அழைத்து
> குரல்ரசிக்கும் அழைப்பிது
> என்று செல்லமாய் துண்டிப்பாயே
> அதைவிடவும்...
>
> பெண்மையின் வலியுணரும்
> நாட்களில் எனக்கு
> முன்விழித்து சூடான
> தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
> அதைவிடவும்...
>
> குழந்தை பிறந்தவுடன்
> வெளியூரிலிருந்து ஓடிவந்து
> குழந்தை பார்க்காமல்
> என் கன்னம்தொட்டு ஒரு
> நேசப்பார்வை பார்த்தாயே..
> அன்றுதான் உணர்ந்தேன்
> தாயுமானவன் நீ என்று.
>

>  -நிலாரசிகன்.


>
> On 10/22/07, Lavanya Sundararajan <lavanya.sundarara...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > வைரமுத்துவை பிரதிபலிக்கும் உதிரா உதிரப்பூ.
>

> > On 10/19/07, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
>
> > > *உதிரா உதிரப்பூ*


>
> > > மெதுவாய் மிக மெதுவாய்
> > > அங்குமாய் இங்குமாய்
> > > அசைந்தபடி காற்றில் மிதந்து
> > > பூமி நோக்கி வருகிறது காய்ந்த
> > > பூவொன்று....
>
> > > புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
> > > கற்பை பறித்தது எண்ணி
> > > வீழ்கிறதா இந்தப் பூ?
>
> > > மகரந்தம் முழுவதையும்
> > > கந்தகம் மறைத்துக்கொண்ட
> > > சோகம் எண்ணி
> > > வீழ்கிறதா இந்தப் பூ?
>
> > > மரணத்தை அழைப்பிதழாக
> > > அனுப்பிய இந்த பூமியை
> > > பழித்துக்கொண்டே
> > > வீழ்கிறதா இந்தப் பூ?
>
> > > விழுந்தாலும் புன்னகை
> > > செய்துகொண்டே வீழ்கின்ற
> > > பூ சொல்லிற்று உலகிற்கு
> > > ஓர் செய்தி..
> > > விழுவது நானாகிலும்
> > > எழுவது ஈழமென்று!
>
> > > -நிலாரசிகன்
>

> > > On 10/19/07, மஞ்சூர் ராசா <manjoorr...@gmail.com > wrote:
>
> > > > இருதலை ராகம் இது ஒரு தலை ராகமாய்
>
> > > --
> > > அள்ளித்தர நட்புடன்,
> > > நிலாரசிகன்.
> > > "தமிழுக்கு நிலவென்று பேர்"
> > > குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
> > > கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> > > சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> > > மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
>
> --
> அள்ளித்தர நட்புடன்,
> நிலாரசிகன்.
> "தமிழுக்கு நிலவென்று பேர்"
> குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
> கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/

> மழலைகளுக்காக -->http://www.helptolive.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

பாமகன்

unread,
Oct 23, 2007, 10:51:25 AM10/23/07
to panb...@googlegroups.com

// கவிதை மிக அருமை. எனக்கும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்குங்க! //
 
 

வூட சொல்லியாச்சா?????????



--
இயற்கை என‌து நன்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி

Na. Anandha Kumar

unread,
Oct 23, 2007, 1:15:35 PM10/23/07
to panb...@googlegroups.com
குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே ..
அன்றுதான் உணர்ந்தேன்
தாயுமானவன் நீ என்று
 
அருமையான வரிகள் நிலாரசிகன்!! பாராட்டுக்கள்!

அன்புடன்,
நா.ஆனந்த குமார்

Asif Meeran AJ

unread,
Oct 23, 2007, 1:18:22 PM10/23/07
to panb...@googlegroups.com
டேமேஜர்

உங்க தமிழும் ரொம்ப 'டேமேஜால்ல' இருக்கு?
(அதுமட்டுமான்னு கழுகார் கேட்கப் போறார்:-)


// கவிதை மிக அருமை. எனக்கும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்குங்க! //
 
 வூட சொல்லியாச்சா?????????

வூட்டுல சொல்லியாச்சான்னு எழுதுற  ஒரு வாரத்தையையாவது ஒழுங்கா எழுதக்கூடாதா அண்ணாச்சி? :-)


lucky shajahan

unread,
Oct 23, 2007, 10:16:31 PM10/23/07
to panb...@googlegroups.com
 
அன்பு நிலா ரசிகன்... இப்போதுதான் இந்த பதிவைப் பார்க்கிறேன் நல்ல கவிதை
விழுதுகள் பற்றியதல்ல என் கவலை..
வேர்களைப் பற்றித்தான் என்பதை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்...
 
உதிரப்பூக்களின் மலர்வை
பார்க்கத்தான்
ஓடோடி வந்தேன்..
உயிர்ப்பூவே
சொல் முதலில்
நீ நலமா...?

 



லக்கி ஷாஜஹான்.

Naresh Kumar

unread,
Oct 24, 2007, 6:37:46 AM10/24/07
to பண்புடன்
வூட்டுல சொல்லியாச்சான்னு கேக்கறதுக்கும், வூட்டுல சொல்லிட்டு
வந்துட்டியான்னு கேக்கறதுக்கும் அதிக வித்தியாசம் இல்லாத மாதிரி இருக்கே?

காதல்னா அவ்ளோ கஷ்டமா? (நான் ரொம்ப அப்பாவிங்கோ!!!!)

பிரேம்குமார் சண்முகமணி

unread,
Oct 24, 2007, 6:40:53 AM10/24/07
to panb...@googlegroups.com
பின்ன? விளைவுகள் ஒரே மாதிரிதானே இருக்கும் நரேஷ் :)

பாமகன்

unread,
Oct 24, 2007, 10:07:18 AM10/24/07
to panb...@googlegroups.com

வூட்டுல சொல்லியாச்சான்னு கேட்டா அது வூட்டுல வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியான்னு கேட்டா அது வெளியில வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,

ஆனா என்னமோ பிரேம் சொன்னமாதிரி விளைவு ஒன்னுதான் (வாங்கிக்கட்றது)

பிரேம் ரொம்ப அணுபவிச்சாப்புல இருக்கு.

Asif Meeran AJ

unread,
Oct 25, 2007, 1:31:19 AM10/25/07
to panb...@googlegroups.com
ஆஹா! ரெண்டு விசயம் நல்லா இருக்குய்யா பாமகன்

வூட்டுல சொல்லியாச்சான்னு கேட்டா அது வூட்டுல வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியான்னு கேட்டா அது வெளியில வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,

ஆனா என்னமோ பிரேம் சொன்னமாதிரி விளைவு ஒன்னுதான் (வாங்கிக்கட்றது)

பிரேம் ரொம்ப அணுபவிச்சாப்புல இருக்கு.


ரொம்ப தட்டச்சு பிழை இல்லாமல் எழுதுனது ஒண்ணு
இந்த ஊட்ல சொல்லியாச்சா வெவகாரத்தை (வேலை வெட்டி இல்லாம) அலசி ஆராய்ஞ்சதும் அழகுதான் ஆனா பிரேம் அனுபவிச்சா மாதிரின்னு கேட்டீரு பாரும்.அதுதான் ரொம்ப முக்கியமான  விசயம்




பிரேம்குமார் சண்முகமணி

unread,
Oct 25, 2007, 2:15:05 AM10/25/07
to panb...@googlegroups.com


ரொம்ப தட்டச்சு பிழை இல்லாமல் எழுதுனது ஒண்ணு
இந்த ஊட்ல சொல்லியாச்சா வெவகாரத்தை (வேலை வெட்டி இல்லாம) அலசி ஆராய்ஞ்சதும் அழகுதான் ஆனா பிரேம் அனுபவிச்சா மாதிரின்னு கேட்டீரு பாரும்.அதுதான் ரொம்ப முக்கியமான  விசயம்

எந்த ராசா எந்தப் பட்டணம் போனாலும் சரி, அண்ணாச்சிக்கு என்னைய கலாய்ச்சிடனும். இல்லைன்னா தூக்கும் வராதே. இருக்கட்டும் இருக்கட்டும்!

 

பாமகன்

unread,
Oct 25, 2007, 2:16:24 AM10/25/07
to panb...@googlegroups.com
ரொம்ப சரி

NilaRaseegan

unread,
Oct 25, 2007, 2:18:16 AM10/25/07
to panb...@googlegroups.com
அய்யா என் இழைய விட்டுருங்களேன்!! :))

பாமகன்

unread,
Oct 25, 2007, 2:23:11 AM10/25/07
to panb...@googlegroups.com

// அய்யா என் இழைய விட்டுருங்களேன்!! :))//

அண்ணாச்சி என்ன சொல்றீங்க‌

NilaRaseegan

unread,
Oct 25, 2007, 4:21:48 AM10/25/07
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com
துளிகள்...
 
1.உன்னில் தொலைந்துபோகவே
தேடிக்களைக்கிறேன்
என்னை.
 
2.தீபமேற்ற உன்னை
அழைக்கிறேன்
திரியாக நான் மாறியதை
மறந்து.
 
3.இரண்டுமணி நேரம்
பேசிவிட்டு புறப்படும்
தருணத்தில் விரல்பற்றி
விழிநோக்கி ஏதும்சொல்லாமல்
செல்கிறாய் நீ
காதலுற்றதை.
 
-நிலாரசிகன்.


On 10/25/07, பாமகன் <benjamin.d....@gmail.com> wrote:

NilaRaseegan

unread,
Oct 26, 2007, 7:43:38 AM10/26/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
சக்களத்தி மக...
 
 
பொன்னாத்தாவுக்கு
கிறுக்கு முத்திப்போச்சு..
 
தெருவுல யாரக்கண்டாலும்
வெத்தலவாயால வையுது...
 
பொட்டிக்கட கந்தசாமி
 சம்சாரம்தான்  பொன்னாத்தா.
 
ரெண்டுநாளா உள்ளுக்குள்ள
பொகஞ்சது இன்னைக்கு
ஊரெல்லாம் பொகையுது..
 
ஊரெல்லாம் பஞ்சத்துல
தவிச்சப்போ வெளியூருக்கு
வேலைக்கு போனாரு
கந்தசாமி
 
போன இடத்துல பொன்னாத்தாவுக்கு
தெரியாம சோடிசேர்ந்து
வாழ்ந்துபுட்டாரு
 
பதினாறு வருசத்துக்கு
முன்னால நடந்த கத அது!
 
சக்களத்தி வீட்டு நாயிக்கு
இங்கென்ன வேலன்னு
வையுறா பொன்னாத்தா
 
குடியிருக்க குடுச இல்ல
அரவயித்துக்கு கஞ்சியும் இல்ல
 
ஆளுசரத்துக்கு வந்து
நிக்கா சக்களத்தி மக.
 
கால்ல விழுந்து பாத்தாரு
கையப்புடிச்சி கதறி பாத்தாரு
 
நல்லபாம்ப மிதிச்சு கொல்லற
பொன்னாத்தாவுக்கு
கோழிவந்தாலும் ஒதுங்கி போற
புள்ளபூச்சி கந்தசாமி எம்மாத்திரம்?
 
நாளைக்கு காலையில
பஞ்சாயத்து;
 
கால்சட்ட போடாத சிறுசும்
வரும்
கோவணத்தோட பெருசும்
வரும்
சாகப்போற கிழடுகளும்
வரும்
 
பஞ்சாயத்த நெனச்சுக்கிட்டே
பஞ்சாரத்து கோழிக்குஞ்சு
மாதிரி அடஞ்சு கெடக்கா
சக்களத்தி மக.
 
ஆயிரந்தான் இருந்தாலும்
அப்பன கேவலபடுறத
பார்க்க பிடிக்கல அவளுக்கு.
 
விடியக்கால ரெயில
புடிச்சி வடக்க போயிட்டா.
 
அவ சாயல்ல ஒருத்திய
பம்பாயில
படுக்கையில பார்த்ததா
தெக்குத்தெரு முனியசாமி
சொல்லிட்டு போறான்.
 
தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?
 
-நிலாரசிகன்


On 10/25/07, Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com> wrote:


On 10/25/07, NilaRaseegan < nilara...@gmail.com> wrote:
துளிகள்...
 
1.உன்னில் தொலைந்துபோகவே
தேடிக்களைக்கிறேன்
என்னை.
 
2.தீபமேற்ற உன்னை
அழைக்கிறேன்
திரியாக நான் மாறியதை
மறந்து.
 
3.இரண்டுமணி நேரம்
பேசிவிட்டு புறப்படும்
தருணத்தில் விரல்பற்றி
விழிநோக்கி ஏதும்சொல்லாமல்
செல்கிறாய் நீ
காதலுற்றதை.
 
கண்ணும் கண்ணும் பேசுவது மனம் உணருமல்லவா?

 
-நிலாரசிகன்.


On 10/25/07, பாமகன் < benjamin.d....@gmail.com > wrote:

// அய்யா என் இழைய விட்டுருங்களேன்!! :))//

அண்ணாச்சி என்ன சொல்றீங்க‌

 
 
 
--
இயற்கை என‌து நன்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி

http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"

Tthamizth Tthenee

unread,
Oct 27, 2007, 8:00:22 AM10/27/07
to panb...@googlegroups.com
தாயுமானவன் உயிரிலே கலந்தவன்
நிலாரசிகன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 10/22/07, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:

NilaRaseegan

unread,
Oct 30, 2007, 2:33:22 AM10/30/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
முன்பாடல் சுருக்கம்:
 
காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....
 
 
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
 
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
 
 
உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்
 
சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ
 
என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையாய் நீ
 
உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..
 
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
 
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
 
 
காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை
 
சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை
 
வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?
 
வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?
 
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
 
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
 
என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...
 
கனவில் கூட நீ என்னை பிரிவதேன்? கவிதையில் கண்ணீராய நான்
கரைவதேன்?
 
ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..

-நிலாரசிகன்.


On 10/28/07, GEETHA SAMBASIVAM <siva...@gmail.com> wrote:
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?????????????????


On 10/28/07, Raveendran Krishnasamy <rishira...@gmail.com > wrote:
இது ஆண்களுக்காக....(கவிசிட்டுரை =  கவிதை+சின்னக்கட்டுரை)

ஆண் எப்படி பெண்ணாக முடியும்....?
ஆனால் இன்று நீ ஆனாயே...

நான் சோகமானாள்
தோள் கொடுத்து என்னை
ஆதரவாய் அணைக்கின்றாயே...?
என் முடிவருடி தலைகளைக்கும்பொழுது
உன் அன்பின் வெளிப்பாடு புரிகின்றது...

என் கண்ணில் நீர் வழிந்தால்....
உன் நெஞ்சில் குருதி வழிகின்றதே...

நான் தூங்கும்வரை என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கின்றாயே....
நான் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் சமையல் கட்டில் நீ செய்கின்றாயே....?

என் கால்கள் நோ கண்டிட்டவேளையில் இதமாய் வெந்நீர் தடவி நீவிடுகின்றாயே...?

நான் ஆடும் ருத்ரத்திற்கெல்லாம்
அமைதியாய் செவிசாய்க்கின்றாயே...

குழந்தைகளைக் குளிப்பாட்டி சோறூட்டி பாடசாலைக்கு அழைத்துச்செல்கின்றாயே...?

நீ ஒரு தந்தை மட்டுமல்ல....
தாயுமானவன்...


நீயும் எனக்கொரு அம்மாவே...!

                    அன்புடன்
         ஏழேழு ஜென்மத்திற்கும் நீயே என் கணவனாக வரவிரும்பும் உன் அன்பு மனைவி



On 10/23/07, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:
தம்பி தேகியின் வேண்டுகோளுக்காக அவசரமாட் ஒரு கவிதை
 
உயிரிலே கலந்தவளே!
 
அதிகாலை எனை எழுப்ப
எனக்குப் பிடித்த பாடலை
காதோரம் பாடியபடி
என் தலைகோதுவாயே
அதைவிடவும்...
 
பிறந்தநாள் பரிசு
என்னவென்று ஆர்வமுடன்
நீ என்விழி நோக்க,
உன் நெற்றியில் ஒற்றைமுத்தம்தந்து
நான் உன்விழி நோக்க,
வெட்கத்தில் என் மார்பில்
புதைந்துகொண்டாயே
அதைவிடவும்...
 
என் உயிரை நீ
சுமந்தபோது இந்தப்பாதங்கள்
நடக்கவேண்டியது மண்மீது
அல்ல மலர்கள் மீது என்று
அறைமுழுவதும் மல்லிகைப்பூக்களை
பரப்பியிருந்ததைக் கண்டு
ஆனந்த அதிர்ச்சியில் அழுது
என் தோள்சேர்ந்தாயே
அதைவிடவும்...
 
பலநாட்கள் நம்மை
பிரித்த வெளிநாடு
பயணம் முடிந்து
வீடு வந்தவுடன் ஓடிவந்து
அணைத்துக்கொள்ளாமல்
உன்
மடிசாய்த்து தாலாட்டு பாடினாயே
அன்றுதான் உணர்ந்தேன்
என் தாயுமானவள் நீ என்று.
 
-நிலாரசிகன்.


 
On 10/23/07, தேவர்பிரான் கிருட்டினன் < devarpirank...@gmail.com> wrote:


On 23/10/2007, மஞ்சூர் ராசா < manjo...@gmail.com > wrote:
//மிக அற்புதம்!! இப்படி ஒரு துணை பெண்களுக்கு வாய்த்துவிட்டால்!! வாழ்வே சொர்க்கம்..//


ஆண்களை பத்தி யாராவது யோசிங்கப்பா!
 
நிலா ரசிகனிடமே நாம் கோரிக்கையை வைப்போம்...திரைப்படத் துறையில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பாடல் எழுதச் சொல்வார்கள்... இப்போதே ஆரம்பிக்கட்டும் அவர்... நம்ம (பரிதாப) சூழ்நிலைக்கு அவர் ஒரு கவிதை அனுப்பட்டும்.... என்ன சொல்றீங்க மத்த ஆண்கள் எல்லாம்...????????



--
தேவர்பிரான் கிருட்டினன்...
கற்றது ஒன்னுமில்லை..!!




--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/




--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

www.rishiraveendran.com
www.rishiraveendran.tk

"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



NilaRaseegan

unread,
Nov 1, 2007, 10:57:45 AM11/1/07
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, panb...@googlegroups.com
நடைபோடும் நதியாக...
 
சலசலப்பால் புலம்பியபடி
ஓடுகின்ற இந்த ஆறு
என்னை எனக்கு அறிமுகம்
செய்கிறது.
 
ஆற்றுக்குள் உருளுகின்ற
கூழாங்கற்கள் எனக்குள்
வசிக்கும் சிற்பத்தை
நினைவுபடுத்துகிறது...
 
நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க
ஆற்றைக் கடந்து
செல்கிறேன்.
 
எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.
 
-நிலாரசிகன்


On 11/1/07, சகாராத்தென்றல் <saharat...@gmail.com> wrote:

அப்ப சரியா நீங்களே சொல்லிடுங்களேன்

கவிதைகளுடன்,
சகாரா.

"வித்தியாசமாய் வித்தியாசப்படு"
வலைப்பூ : http://saharathendral.blogspot.com/
கதைகள்  : http://saharathendral-kathaigal.blogspot.com/




On Oct 31, 11:28pm, "gnaniyar rasikow" <rasi...@gmail.com> wrote:
> > //@ ர‌சிக‌வ் :
> > இது ச‌ரியா அண்ணா. இத தான நீங்க சொன்னீங்க.//
>
> பாதி சரி பாதி தவறு கலந்து செய்த விளக்கம் இது :)

பாண்டித்துரை

unread,
Nov 1, 2007, 8:31:47 PM11/1/07
to பண்புடன்

///நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க //
என்னை தொட்டுச்சென்ற வரிகள்

Asif Meeran AJ

unread,
Nov 2, 2007, 3:11:54 AM11/2/07
to panb...@googlegroups.com
நிலாவின் வரிகள் இறுக்கவே செய்கின்றன
இறுக்கமான வரிகளால் கவிதை வாசிக்க நெகிழ்வாக இருக்கிறது

NilaRaseegan

unread,
Nov 4, 2007, 1:48:22 AM11/4/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...
 
1.கறுப்புவெள்ளை மாலையொன்றினை
சிறகடிப்பால்
வர்ணமடித்துச் செல்கின்றன
ஒரு ஜோடி தேன்சிட்டுகள்.
 
2.  இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.
 
3. மழையில் குளித்த
சிறுவனின் முகச்சுழிப்பில்
வற்றத்துவங்குகிறது சேறு.
 
4.நகருக்கு வெளியே
மலையென குவிந்திருக்கும்
குப்பையிலும் மலர்ந்திருக்கின்றன
பூக்கள்.
 
5. விரித்த குடையை
மடக்கும் போது கையில்
குத்திவிட்டது.
யாருக்குத்தான் மழை
பிடிக்காது?
 
6. ஓடிச்சென்று வாசல்
மூடுவதற்குள் உள்வந்து
தேனீர் கேட்கிறான் மழைவிருந்தாளி.
 
-நிலாரசிகன்.


On 11/2/07, gnaniyar rasikow <ras...@gmail.com> wrote:
// 
தனிதனியாக நலல் வரிகள் என்றாலும் ஒன்றாக கோத்தலில் ஒரு குறைபாடு தெரிகிறது//
 
குறைபாட்டினையும் சொல்லிவிட்டால் நிலா திருத்திக் கொள்வதற்கு அல்லது விளக்கமளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வேந்தா

Ganesh kumar

unread,
Nov 4, 2007, 5:51:09 AM11/4/07
to panb...@googlegroups.com
முதல் இரண்டு கவிதைகள் நன்றாக உள்ளன.

gnaniyar rasikow

unread,
Nov 4, 2007, 9:47:15 AM11/4/07
to panb...@googlegroups.com
//
5. விரித்த குடையை
மடக்கும் போது கையில்
குத்திவிட்டது.
யாருக்குத்தான் மழை
பிடிக்காது?///
 
 
 
நான்  திரும்ப திரும்ப ரசித்துப் படித்த வரிகள் இது நிலாரசிகா...வித்தியாசமாக இருக்கின்றது...உங்கள் கவிதைகள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றன..பாராட்டுக்கள்...

 

தஞ்சை-மீரான்

unread,
Nov 4, 2007, 9:58:46 AM11/4/07
to panb...@googlegroups.com
எத்தனை முறை குடை மடக்கும் போது
அந்த குடை கம்பி நம்மை கிள்ளி
இருக்கிறது,
 
நான் படித்துவிட்டு யோசித்தேன், அன்றைய நாளை.

 

NilaRaseegan

unread,
Nov 15, 2007, 1:43:12 AM11/15/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
அவளுக்கு தேவதை என்று பெயர்...
 
1. உணவருந்தும் முன்
ஒரு நிமிடம்
கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.
ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.
 
2.ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.
ஆற்றுமீன்கள் எல்லாம்
துள்ளிவிழுந்து மரிக்கின்றன..
பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..
 
3. உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!
 
4. படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.
படபடக்கும் உன்
விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.
பட்டாம்பூச்சிக்கு பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.
 
5. தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..
பன்னீர்பூ மரத்திற்கு
யார் சொன்னது உன் வருகையை?
 
-நிலாரசிகன்.

 



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/

NilaRaseegan

unread,
Nov 20, 2007, 6:40:23 AM11/20/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
காதலுக்கும் வலிக்கும் காதலர்களே!
 
பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக...
 
மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக...
 
கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களாக...
 
தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணீராக...
 
வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதியதாய்
பிறக்கத்தான் செய்கின்றன
காதல், காதலாக..
 
-நிலாரசிகன்.



On 11/20/07, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.
 
மஞ்சூர் அண்ணா,
 
//நிலா ரசிகனின் முதல் தொகுப்பு விரைவில் வெளிவரும். //
 
முதல் தொகுப்பு 2002ம் ஆண்டு வெளிவந்தது.
 
இனி வரப்போவது(!!)  இரண்டாம் தொகுப்பு.
 

 
On 11/20/07, மஞ்சூரார் <manjo...@gmail.com > wrote:
நிலா ரசிகனின் முதல் தொகுப்பு விரைவில் வெளிவரும்.







--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/

Swathi Swamy

unread,
Nov 20, 2007, 6:57:54 AM11/20/07
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com

மென்மையான வார்த்தைகளைக் கொண்டே மனதில் மிகவும் வலிமையான வலிகளை அறைந்துவிடுகிறீர்கள் நிலா!

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அப்பட்டமான உண்மை.

அதுவும்

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக...
 
என்ற வரிகள் அப்பட்டமான உண்மை.
 
எனக்கு தெரிந்த எங்கள் பள்ளித் தோழர் ஒருவர் தன்னுடைய பழைய காதலியின் பிறந்த திகதியை வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் அட்டையின் கடவு இலக்கங்களாக வைத்திருக்கிறார், (அவருடைய அப்பாவி மனைவிக்கு இதுவும் தெரியாது )
 
அருமையான கவிதை நிலா! வாழ்த்துக்கள்!!
 
அன்புடன்
சுவாதி
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

pandii durai

unread,
Nov 20, 2007, 8:55:22 PM11/20/07
to panb...@googlegroups.com
////மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன////
 
 
உங்களின் 2-ம் தொகுப்பு வெளிவர வாழ்த்துக்கள்
 

NilaRaseegan

unread,
Nov 21, 2007, 1:14:54 PM11/21/07
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, panb...@googlegroups.com
நெஞ்சுல மிதிச்சாலும் மகதான்..
 
துறுதுறுன்னு இருப்பாக
குறுகுறு பார்வ பாப்பாக...
 
நீ பொறந்த சேதிகேட்டு,
வெளியூரு போனவுக ஓடோடி
வந்தாக...
 
புள்ள உன் மொகத்த
பார்த்து என் காதுல
"எனக்கு பொறந்தது
பொண்ணு இல்ல பஞ்சுல
செஞ்ச செல"ன்னு  சொல்லி
பூப்பூவா சிரிச்சாவுக...
 
கறைவேட்டியில தொட்டில
கட்டி நீ தூங்கற சொகத்த
விடிய விடிய பார்ப்பாவுக...
 
பொட்டபுள்ள உன்ன வள(ர்)க்க
படாதபாடு பட்டாவுக..
 
காலேசுக்கு நீ போக
கட்டவிரலு தேய தேய
சைக்கிள் மிதிச்சாவுக.....
 
ஒத்தப்புள்ள உன்ன
கண்ணுக்குள்ள வச்சு
வளத்தாக....
 
பெத்தபுள்ள கேட்டதெல்லாம்
சலிக்காம வாங்கி
தந்தாவுக...
 
கட்சி கட்சின்னு அலைஞ்சாக
பட்டி தொட்டியெல்லாம் போனாவுக..
 
காலேசுல நீ பட்டம்
வாங்கறத பார்க்க
ஆசைப்பட்டு வந்தவுகள
வார்த்தையால சாகடிச்சுபுட்டியே!
 
"எங்கப்பன் அமைச்சரோட எடுபிடின்னு
எப்படி சொல்லன்னு" கேட்டுபுட்டு
வெட்கப்படாம நிக்குறியே...
 
சிங்கம்போல வந்தவுக
செதஞ்சுபோயி நிக்காவுக
 
செதஞ்சுபோயி நின்னாலும்
காலேசுக்கு உன்ன கொண்டுவிட
சைக்கிள் எடுக்க போறாவுக...
 
வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்?
 
-நிலாரசிகன்.


On 11/21/07, விஜி சுதன் <vselva...@gmail.com> wrote:

                        நீல வானில் ஒரு நிலா....<<<
 
ஆஹா!!! நெஞ்சு இப்போதே சில்லிட்டு சிலிர்க்கின்றதே..தலைப்பே அற்புதமாய் இருக்கிறது ரிஷி அண்ணா. !! சபாஷ்!!!!


அரங்கின் மேட்டில் , "சாகித்ய அகாடமி விருது...2008" எனப் பொறிக்கப்பட்டிருந்தது. <<<
வாவ்!!



2008 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா...

விருதினை அப்துல் கலாம் ஐயா அவர்களின் கைகளால் வாங்கிட எழுத்தாளர்கள் ஆசைப்பட்டதனால் கலாம் சிறப்பு விருந்தினராகியிருந்தார். <<<
 
மிக நன்று!!!

இறுதியில் தமிழ் மொழி....<<
 
இறுதியில் என்பதை விட நிறைவாக" என்ற சொல் பயன்படுத்துவது சிறந்தது அண்ணா!! :))




அந்தக் குளிரிலும் சிலருக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது....

கலாம் ஒரு புன் முறுவலோடு, "நிலா ரசிகன்...." என்றார்.<<<
 
இந்தக் தைதட்டல்கள்..((.:)) என் நிலவனுக்கும் இதை எழுதிய ரிஷி அண்ணாவுக்கும் சேர்த்து!!(( :))


அரங்கின் கடைசி வரிசையில் கடைசி மூலையில் ஒரு சிறுவன் ங்ஏ என விழித்தபடியே உட்கார்ந்திருந்தார்.

பக்கத்திலிருந்த மஞ்சூரார், "போ...போ..." என மேடைக்கு விரட்டினார் அன்பினால்... <<<
அடேங்கப்பா....அப்படியே நடந்தமாதிரியே சொல்றீங்களே!! மஞ்சூர்(சுந்தர்) அண்ணாவைப்பற்றிய சரியான கணிப்பு :)))



ஒல்லியான பூஞ்சையான உடம்பு; கருப்பு நிறம்; கையில் ஒரு மஞ்சள் பை; கிராம மணம் மாறாத ஒரு வெள்ளந்தித் தனம்;  இப்படி ஒரு கலவையில் நிலா இருந்தார்.<<<
என் தோழனை நேரில் கண்டிருக்கீங்களா?...ஒல்லிதான் ஆனால் பூஞ்சை என்று சொல்வதற்கில்லை....மற்றவை எல்லாம் ஓரளவு சரி :))
 

அப்துல் கலாம் அவர்களின் முகத்தில் ஒரு காந்தப் புன்னகை....

இந்த இனிய கணத்தினில் நிலா அரங்கினைப் பார்க்கின்றார்....

அங்கே தன் பெற்றோர்கள்....உற்றார் உறவினர்... சீத்தாலஷ்மியம்மாள், விசாலம் அம்மா, நாயன்மார்,வேந்தன்,டாக்டர், த.தேனீ, ராமா, ஐஐடி டாக்டர் சிவா, ஷைலஜா, விஜி. லாவண்யா, மற்றும் எல்லா முத்தமிழ் குழும உறுப்பினரும்....<<<
 
பின்னே!! என் தோழனின் விழாவில் நான் இல்லாமலா?! :))



நிலா, தான் சாகித்ய அகாடமி விருது வாங்கியதைவிட அப்துல் கலாம், பெற்றோர் ஆகியோரிடம் ஆசி வாங்கியதும் முத்தமிழ் உறுப்பினர்களின் அன்பே தன்னுடைய மன நிறைவு என்றும் கூற.... அந்தப் பேட்டி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அன்றைய சூடான செய்தியாக வெளியிடப்பட்டது.... <<
 
நிலவா!! கனவு மெய்ப்படும்!!.....மிக மிக விரைவில் அந்நாள் வரட்டும் இந்த முறை தங்கள் பிறந்த நாளுக்கான என் வாழ்த்து அதுவே.....நவம்பர் 23 2007! :))
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"

நந்தா

unread,
Nov 22, 2007, 1:09:14 AM11/22/07
to பண்புடன்
//வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்? //

பொளீர்னு மூஞ்சில அடிச்ச மாதிரு இருந்துச்சு. என்னதான் படிமங்கள்,
வர்ணனைகள், சொல்லாடல்கள், அந்த இயல், எந்த இயல்னு சொன்னலும் இந்த
வெள்ளந்தி மனசின் கிராமிய வார்த்தைகளில் இருக்கும் வலிமை, அப்பப்பாஆஆஆஆ.

வாழ்த்துக்கள் நிலாரசிகன்.

அருட்பெருங்கோ

unread,
Nov 22, 2007, 8:15:47 AM11/22/07
to panb...@googlegroups.com

இந்த அப்பனுங்களுக்கு பொட்ட புள்ள மேலயும் ஆத்தாங்களுக்கு பையனுங்க மேலயும் கொஞ்சம் அதிகமாத்தான் பாசம் இருக்குமோ?

வாழ்த்துகள் நிலா!


 
செதஞ்சுபோயி நின்னாலும்
காலேசுக்கு உன்ன கொண்டுவிட
சைக்கிள் எடுக்க போறாவுக...
 
வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்?
 
-நிலாரசிகன்.


--
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
________________________________________
arutp...@arutperungo.com  | http://blog.arutperungo.com/  
"நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை எந்த சலனமுமின்றி எடுத்தெறிந்து விட்டு
வேறு பூவைச் சூடிக்கொள்ள எப்படி முடிகிறது இந்த பெண்களால்?" – தபூ சங்கர்.
________________________________________

NilaRaseegan

unread,
Nov 26, 2007, 7:04:00 AM11/26/07
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, panb...@googlegroups.com
முகமூடி களைந்து
இவ்வுலகைக் கண்டேன்
முகமற்று மனிதர்கள்.

-நிலாரசிகன்.

On 11/24/07, விஜி சுதன் <vselva...@gmail.com> wrote:


On 11/22/07, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:
புல்லாங்குழல் கவிதைகள்.
 
1.துளைகொண்ட மூங்கிலின்
வலிமிகுந்த ராகத்தை
ரசிக்கிறோம் இசை என்கிற
பெயரால்.<<<
 
தோழனே நிலவா! நான் இப்படி நினைத்தேன்..துளை கொண்ட வலி சுமந்தும் இசை தருகின்றது புல்லாங்குழல்!! எத்தனை மேன்மை அது!!
 
தேய்க்கத் தேய்க்க நல் வாசமே தரும் சந்தணம் போலும்!!!
 

 
 
2.புல்லாங்குழலின் ராகத்தில்
உன்னை மறந்து
கண்கள்மூடி ரசித்துக்கொண்டிருந்தாய்..
உன்பின் வந்தணைத்து
கன்னம் உரசி
சாய்ந்தாடிக்கொண்டே
புல்லாங்குழல் ரசிக்கிறேன்
நான்.
இசையாகிறோம் நாம்.<<<
 
அவங்களைத்தான் இரசிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்..:)))!! நீ இரசிக்கும் அழகை இரசிப்பதாகத்தானே எழுதுவது வழக்கம் ? :)))

 
 
3. புல்லாங்குழல் விற்கும்
பார்வையற்றவனிடம்
பேரம் பேசி குறைத்து
வாங்கிவிட்டேன்.
அழுதுகொண்டே என்வீடு
வருகிறது புல்லாங்குழல்.<<<
 
பேரத்துக்கும் நமக்கும் ரொம்ப தூ..ர...ம்.......!! இதுவரை அப்படி எப்போதும் பண்ணியதில்லை என் தோழி ஒருவருடன் புடவைக்கடைக்குச் சென்ற போது அவர் பேரம் பேசுவதைப் பார்த்து அன்றோடு அவரோடு கடைக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டேன்!

 
 
-நிலாரசிகன்.
 
 

 

தோழா,,,தேவதையைத் தாண்டியும் இருக்கின்ற தேவைகளைக் காட்டி இருக்கின்றன கவித்துளிகள்...வாழ்த்துகின்றேன்...தோழனே!
 
 

 





--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"

NilaRaseegan

unread,
Nov 26, 2007, 7:27:30 AM11/26/07
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, panb...@googlegroups.com
2.முகவரி தேடிய
பயணத்தில் இழக்கிறேன்
என் சுயத்தை.
முகவரி கிடைத்த தருணத்தில்
மலட்டுவிதையாக நான்.

-நிலாரசிகன்.

pandii durai

unread,
Nov 26, 2007, 8:36:06 AM11/26/07
to panb...@googlegroups.com
\\\\\\\முகவரி கிடைத்த தருணத்தில்
மலட்டுவிதையாக நான்.
\\\\\

பெரும்பான்மையோர் அப்படித்தானோ என்று என்னத் தோன்றுகிறது நிலா.

 

NilaRaseegan

unread,
Nov 27, 2007, 8:21:43 AM11/27/07
to mutht...@googlegroups.com, Pira...@googlegroups.com, panb...@googlegroups.com
மெளனத்தின் சப்தங்கள்...
 
நிச்சயமற்ற ஒரு நேசத்தை
உனக்குப் பரிசாய் தந்து
தனிமைச் சிறைக்குள்
வாழ விரும்பும்
மழைமேகமாக...
 
இதயக்கல்வெட்டில் நீ
எழுதுகின்ற நேசமொழிகளை
இதயமின்றி வெட்டிவீசுகின்ற
வார்த்தைக்கோடரியாக...
 
உனக்குள் ஒரு உலகை
உருவாக்கி உன்னைவிட்டு
வெகுதூரம் பறந்துவிடத்துடிக்கும்
ஊனப்பறவையாக...
 
உன்னைப் பிரிந்துசெல்ல
தினம் தினம் என்னை
நானே செதுக்குகிறேன்
புதுப்புது உருவங்களாக...

-நிலாரசிகன்.


NilaRaseegan

unread,
Dec 6, 2007, 2:00:16 AM12/6/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
நிசப்த அலையென வந்தவன்...
 
 
முரட்டுக்கரங்களால் என்
மெல்லுடலை
உனக்குள் இழுத்துச் செல்கிறாய்...
 
ஒலியிழந்து வலுவிழந்து
காற்றில்கலக்கிறது என்
முனகல் சத்தம்..
 
வேட்டைநாயிடம் சிக்கிய
முயல்குட்டியென மருண்டு
உன் நெஞ்சுக்குள் புதைகிறேன்...
 
துன்பமெது இன்பமெது
என்று புரியாமல் பற்றி
எரியத்துவங்குகிறேன்...
 
எல்லாம் நடந்தபின்,
எதுவும் நடந்துவிடவில்லை
என்பதுபோல் நிம்மதியாய்
உறக்கத்தில் ஆள்கிறாய்...
 
காதலைச் சொல்ல நான்கு
வருடம் தயங்கி
நிசப்த அலையாய் என்னுள்
வந்தவன் இன்று
ஆர்பரிக்கும் அலையாய்
என்னுள் பரவியது கண்டு
குறுநகையுடன் உன்
தோள் சாய்கிறேன்
நான்...

-நிலாரசிகன்.



On 12/6/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


On Dec 5, 2007 8:12 AM, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:
வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.. இதோ என்னுடைய பழைய கவிதை ஒன்று.
 

மகிழம்பூவாய் ஒரு காதல்...

 

ஜன்னலோர மழை

போல ஜில்லென்று

என் உயிர் நனைக்கும்

உன் பார்வை.

 

பூக்களென்று

தேனீக்களை ஏமாறச்செய்யும்

உன் செவ்விதழ்கள்.

 

வேகமாய் வீசினால்

கலைந்து விடுமே

என்று புயலையும்

தென்றலாய் மாறச்செய்யும்

உன் கூந்தல்.

 

எனக்கு மட்டுமே

புரிகின்ற

கண்களுக்குள் வெட்கப்படும்

உன் பெண்மை.

 

இவையெதுவும் இன்று

என்வசமில்லை..

காய்ந்த பிறகு வாசம்

வீசும் மகிழம்பூவைப்போல்

நீ பிரிந்த பிறகும்

நேசம் வீசும் உன்

நினைவைத் தவிர!

-நிலாரசிகன்.


 
 
என்றுமே திகட்டாதது உம் கவிதைகள்
 
 

NilaRaseegan

unread,
Dec 7, 2007, 4:19:48 AM12/7/07
to Pira...@googlegroups.com, முத்தமிழ், panb...@googlegroups.com

நான் மறைந்த பின்னாலும்...

ரத்த பந்தங்களின்
பிரிவுக்கண்ணீர் சுவடுகளின்றி
மறைந்துபோகலாம்...

நட்பு நெஞ்சங்களின்
நினைவில் எப்பொழுதாவது
பூத்து வாடிப்போகலாம்...

காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...

எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,
காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.

-நிலாரசிகன்.



On 12/7/07, Swathi <MSwat...@gmail.com> wrote:
:) காதலர்களின் பௌதீக சேர்க்கைக்கு இப்படியொரு அழகான கவிதையை அற்புதமாகப்
பொருத்தி ஒரு பக்க சிறு கதை போல் தந்திருக்கிறீர்கள் நிலா!
அன்புடன்
சுவாதி

On Dec 6, 2:00am, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> *நிசப்த அலையென வந்தவன்...*
> On 12/6/07, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

>
>
>
>
>
>
>
> > On Dec 5, 2007 8:12 AM, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
>
> > > வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.. இதோ என்னுடைய பழைய கவிதை ஒன்று.
>
> > > *மகிழம்பூவாய் ஒரு காதல்...*
> --
> அள்ளித்தர நட்புடன்,
> நிலாரசிகன்.
> "தமிழுக்கு நிலவென்று பேர்"
> கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> மழலைகளுக்காக -->http://www.helptolive.org/- Hide quoted text -
>
> - Show quoted text -


--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"

NilaRaseegan

unread,
Dec 7, 2007, 4:21:25 AM12/7/07
to Pira...@googlegroups.com, முத்தமிழ், panb...@googlegroups.com
திருத்தம் : காலமாற்றம்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/

Shylaja N

unread,
Dec 7, 2007, 4:28:03 AM12/7/07
to panb...@googlegroups.com
On Dec 7, 2007 2:49 PM, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:

நான் மறைந்த பின்னாலும்...

ரத்த பந்தங்களின்
பிரிவுக்கண்ணீர் சுவடுகளின்றி
மறைந்துபோகலாம்...

நட்பு நெஞ்சங்களின்
நினைவில் எப்பொழுதாவது
பூத்து வாடிப்போகலாம்...

காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...

எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,
காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.

-நிலாரசிகன்.

>>>>>கடைசி பாரா காவியம்!!!

NilaRaseegan

unread,
Dec 7, 2007, 4:29:05 AM12/7/07
to panb...@googlegroups.com
நன்றி ஷைலஜா :)

sree Koushi

unread,
Dec 7, 2007, 4:40:17 AM12/7/07
to panb...@googlegroups.com
எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,
காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.
 
அருமையான  வரிகள்...........
கௌசல்யா..
 



 

On 12/7/07, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:

தேகி

unread,
Dec 7, 2007, 6:36:25 AM12/7/07
to panb...@googlegroups.com, முத்தமிழ்
//
காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...
 
எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,
காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.
//
நல்லா இருக்கு..!!! கடைசி இரண்டு பத்தியும் டச்சிங்...!!!

Kasali Mohammed

unread,
Dec 7, 2007, 1:35:37 PM12/7/07
to panb...@googlegroups.com
நிச்சலனமாய் இருக்கும் மனக் குளத்துக்குள் கவிதைக் கல்லெறிகிறாய் நிலா!
நினைவுகளை அலைபாய வைத்து விட்டாயே....நல்லா இரும்!.

அன்புடன்
கஸ்ஸாலி

On Dec 6, 2007 12:30 PM, NilaRaseegan < nilara...@gmail.com> wrote:
நிசப்த அலையென வந்தவன்...
 
 
ஒலியிழந்து வலுவிழந்து
காற்றில்கலக்கிறது என்
முனகல் சத்தம்..
 

Kasali Mohammed

unread,
Dec 7, 2007, 1:37:21 PM12/7/07
to panb...@googlegroups.com
'தன்னை நேசி'த்தலின் பூர்வாங்கமோ இக்கவிதை?

On Dec 7, 2007 2:49 PM, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:

பிரேம்குமார்

unread,
Dec 8, 2007, 1:55:45 AM12/8/07
to panb...@googlegroups.com
இப்போதெல்லாம் நிலா பயங்கர ஃபார்ம்ல இருக்குற மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள் நிலா

NilaRaseegan

unread,
Dec 13, 2007, 2:14:11 AM12/13/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
கருவறை யுத்தமடா என் காதல்!

1.தன்
கூடு சுமந்து
நகரும் நத்தைபோல்
உன்
காதல் சுமந்து
நகரும் தத்தை
நான்.

2. உன் காதல்
பருகி உயிர்வாழும்
சக்கரவாகம்
நான்.

3.நீ முத்தமிட்டு
பரிசளித்த கொலுசுகள்,
இசைக்க மறந்து
சிணுக்கிவிடுமே
என்றுதான் சொல்லாமல்
வைத்திருக்கிறேன்

உன் பிரிவை.

4.நான் குள்ளம்
என்று  கவலைப்படும்
அம்மாவிடம்  என்ன
சொல்லி புரியவைப்பது
உன் நெஞ்சில்
இதழ் பதியும் உயரம்தான்
நான் விரும்புவதென்று!
 
5.வயிற்றில் சுமந்தபோது
அதிகம் மிதித்தேன்
என்று அம்மா அடிக்கடி
சொல்வாள்.
உன்னைப் சந்திக்க
கருவறையிலேயே துவங்கிவிட்டதோ
என் யுத்தம்?

6.விரைவில்
உன்னைச் சேர
ஆறு மாதங்களாய்
பிரகாரம் சுற்றுகிறேன்.
காதலுக்குத்தான் இரக்கமில்லை
கடவுளுக்குமா?

7. சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
புறப்படுகிறாய் நீ.

8. இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.

9. காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய்.
கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என்
இரவு.

10. பூவொன்றை கொய்வதுகூட
சாத்தியமற்றுப்போகலாம்
பூச்சூட நீ வருகின்ற
வரையில்.


-நிலாரசிகன்.


On Dec 8, 2007 3:36 PM, மஞ்சூரார் <manjo...@gmail.com> wrote:

நான் மறைந்த பின்னாலும்...

ரத்த பந்தங்களின்
பிரிவுக்கண்ணீர் சுவடுகளின்றி
மறைந்துபோகலாம்...

நட்பு நெஞ்சங்களின்
நினைவில் எப்பொழுதாவது
பூத்து வாடிப்போகலாம்...

காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...

எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,
காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.

-நிலாரசிகன்.



அன்பு நிலா மிகவும் பிடித்திருக்கிறது இந்த கவிதை.





Asif Meeran AJ

unread,
Dec 13, 2007, 3:35:36 AM12/13/07
to panb...@googlegroups.com
சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
புறப்படுகிறாய் நீ.

மற்றக் கவிதைகளை விட இந்தக் கவிதைகள் வெகு இயல்பாய் இருப்பதாகப் படுகிறதெனக்கு
மற்ற கவிதைகளின் மிகை இல்லாத இயல்பினாலேயே இது என்னை சுலபமாக ஈர்த்தது நிலா.
வாழ்த்துகள்!

NilaRaseegan

unread,
Dec 13, 2007, 3:59:03 AM12/13/07
to panb...@googlegroups.com
நன்றி அண்ணாச்சி.:)

Kasali Mohammed

unread,
Dec 13, 2007, 6:34:52 AM12/13/07
to panb...@googlegroups.com
நினைவுகளைக் கிளறிவிடுகிறாய் நிலா. நீ நில்லாமல் ஓடி வா.


அன்புடன்
கஸ்ஸாலி

NilaRaseegan

unread,
Dec 14, 2007, 7:47:29 AM12/14/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
தொட்டாச்சிணுங்கி ஒருத்தியின் நாட்குறிப்பு: பாகம் 1

1.கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமா டா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?

2. ஆரத்தி எடுக்காமல்
ஆச்சரியப் பார்வை
பார்க்கின்ற உன்
அம்மாவிடம் சொல்லிவை
இவள் தோழி அல்ல என்
மனைவியாக போகிறவள்
என்று!

3. உன்னைச் சீண்டி
வம்பிழுத்து முத்தங்களால்
உயிர் கொத்தும்
பூநாகம் நான்.

4. உனக்குள் ஒளிந்திருக்கும்
பெண்மை ஒளிர்கின்ற
போதெல்லாம் எனக்குள்
ஒளிந்திருக்கும் ஆண்மை
அர்த்தமுள்ளதாகிறது.

5.ஒரு மலையென
குவிந்துகிடக்கும்
உன்மீதான கோபங்களை
மண்துகளாய் சிதறச்செய்துவிடுகிறது
உன் கெஞ்சல் பார்வை!

-தொடரும்-


-நிலாரசிகன்.

On Dec 14, 2007 5:28 PM, rajupandian raju <nambika...@gmail.com> wrote:

7. சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
புறப்படுகிறாய் நீ.
 
8. இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.
சிறந்தவைகளில் சிறந்தது!
 
On 12/14/07, Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com> wrote:
நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்

Kasali Mohammed

unread,
Dec 14, 2007, 8:17:58 AM12/14/07
to panb...@googlegroups.com


On Dec 14, 2007 6:17 PM, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
தொட்டாச்சிணுங்கி ஒருத்தியின் நாட்குறிப்பு: பாகம் 1

1.கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமா டா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?

அடடா...அசத்துறீங்க நிலா.

kavithai kuyil

unread,
Dec 14, 2007, 9:41:59 AM12/14/07
to panb...@googlegroups.com
நல்ல கவிதை வாழ்த்துக்கள்

...ப்ரியன்...

unread,
Dec 14, 2007, 1:01:47 PM12/14/07
to panb...@googlegroups.com
ஐந்தும் அருமை நிலா...அதிலும்
 
1.கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமா டா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?
 
இது மிகவும் அருமை
 
 

pandii durai

unread,
Dec 14, 2007, 8:32:11 PM12/14/07
to panb...@googlegroups.com
//எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,////
 
மிகவும் அற்புதமான வரிகள் நிலா
 

பாமகன்

unread,
Dec 15, 2007, 1:15:17 AM12/15/07
to panb...@googlegroups.com
யாவும் மிக அருமையாக இருக்கிறது நிலா, தொடருங்கள்

NilaRaseegan

unread,
Dec 31, 2007, 3:55:45 AM12/31/07
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, namb...@googlegroups.com, il...@googlegroups.com, Pira...@googlegroups.com

           அப்பாவிகளுக்காய் ஒரு குரல்..

 

ஈழ மண்ணில்

பிறந்த ஒரே காரணத்திற்காக‌

வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு

அகதிகளாய் அவதிப்படும்

மக்கள்...

 

யார் மீது தவறென்றே

அறியாமல் வெடிகுண்டுகளுக்கு

என்று பலியாவோம் என‌

துடிக்கும் ஈராக் மக்கள்...

 

ரோஜாக்களுக்கு நடுவில்

வசித்தும் தீவிரவாத‌

முட்களால் தினம்தினம்

அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...

 

ஒட்டகத்தின் சிறுநீரை

தண்ணீராகவும் தோல்பைகளை

உணவாகவும் உட்கொண்டு

மரணத்தோடு போராடும்

சோமாலிய மக்கள்...

 

இவர்களைப்போல் உலகெங்கும்

வாடுகின்ற அப்பாவிகளுக்கு

என்று விடியல் பிறக்கிறதோ

அன்று நானும் கட்டாயம்

சொல்வேன்

"புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று.

-நிலாரசிகன்.

 



On Dec 17, 2007 6:22 PM, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
என்ன கொடுமை இது மஞ்சூரார்?
குழும நிர்வாகின்னா இப்படிக் கவுஜையால கொல்லணும்னு சட்டம் ஏதாவது இருக்குதா? :-)
நல்லா இருங்கடே!!!


இரண்டு நாட்களாக
நெஞ்சை வலிக்க செய்யும்
இருமல் என்றேன்
நிலாவின் கவிதை என்னும்
தேன் துளிகளை சாப்பிடு
சரியாகும் என்றாய்
தேடி ஓடி வந்தேன்
அதற்குள் அனைவரும்
தேனை ருசித்து விட்டனர்
நான் மட்டும் இருமலுடன்
இன்னும் காத்திருக்கிறேன்



NilaRaseegan

unread,
Jan 6, 2008, 1:15:51 AM1/6/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com, il...@googlegroups.com

1.கொசுவலை...

பின்னிரவொன்றில் என்
படுக்கையை சூழ்ந்திருக்கும்
கொசு வலைமீது தாவிச்செல்கிறதென்
பார்வை...

சிறுசிறு துவாரங்களில்
மிளிர்கிறது
பின்னப்பட்ட வலையின்
நேர்த்தி..

வலைக்குள் வந்துவிட
முட்டிமோதி தோற்கின்றன
சில கொசுக்கள்..

எவ்வழியோ உள்வந்து
வெளிசெல்ல இயலாமல்
தவிக்கின்றன
சில கொசுக்கள்...

வலைமீதான பார்வையில்
எனைத் தொலைக்கையில்
நானறியாமல்
என் ரத்தம் சுவைக்க துடிக்கின்றன
சில கொசுக்கள்...

இக்கொசுவலை மீதான
என் பதிவுகளை
உணர்ந்து
அழுத்துவங்குகிறாள் திருமணமான
என் தோழி ஒருத்தி.

-------------------------------------------------------------------------------------


2.அழைப்புகள்...

நீள்கின்ற உரையாடல்களின்
சலிப்பை உணர்த்த
முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறது
இத்தொலைபேசி...

இதமற்ற மறுமொழியிலும்
பசையற்ற வார்த்தைகளிலும்
உணர்த்திவிட முயற்சிக்கையில்
தோன்றவில்லை

பின்னாளில் என்றாவது
நீளப்போகின்ற என் உரையாடல்
கேட்கப்படாமலே போகலாமென்று.

---------------------------------------------------------------------------------------
 
3.லாவகம்...

தாய்க்குரங்கின் நெஞ்சுத்தூளியில்
இறுகப்பற்றியிருக்கும்
குட்டிக்குரங்கின் லாவகம்
உனக்கில்லை என்னைக்
காதலிக்க!
 
----------------------------------------------------------------------------

 4.கவிதை...

இந்தக் கவிதையை
நான் எழுதிவிட
நினைக்கையில்
மற்றொரு கவிதை
உதயமாகலாமென்று
எதுவும் எழுதாமல்
சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன்
நாட்கள் நகர்த்தும் சொல்லாத
காதலென.

 
-நிலாரசிகன்.





NilaRaseegan

unread,
Jan 6, 2008, 1:39:36 AM1/6/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com, il...@googlegroups.com
திருத்தம்:
 
//அழுத்துவங்குகிறாள் திருமணமான
என் தோழி ஒருத்தி.//
 
அழத்துவங்குகிறாள்

 

NilaRaseegan

unread,
Jan 8, 2008, 12:10:27 AM1/8/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, il...@googlegroups.com, Pira...@googlegroups.com
பூக்களில் உறங்கும் மெளனங்கள்...

உன்னிடம் மென்மை
எதிர்பார்த்து ஏமாந்து
முள்ளில் விழுந்த பூவென
நான் துடிக்கும் தருணங்களில்

தட்டானின் சிறகுகளை
பிய்தெரியும் ஒரு சிறுவனைப்போல்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
எனை ஆட்கொள்கிறாய் நீ.

ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
ஊமையாகிறது என் பெண்மை.

ஆயுதமற்ற போர்க்களத்தின்
தினம் தினம் பூக்கள் சுமந்து
வந்து சருகாகித் திரும்புகிறேன்.

கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
இயலாமல் விடியலுக்காக
காயங்களுடன் காத்திருக்கிறேன்
பூக்களில் உறங்கும் மெளனமாய்.


-நிலாரசிகன்.

On Jan 8, 2008 5:25 AM, சார்லசு <charles...@gmail.com> wrote:
அருமையான கவிதைகள் நிலா... முதல் கவிதையின் கடைசி வரிகள் அருமை.... மூன்றாவது கவிதை மிக அருமை....
 
 
--
நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.


NilaRaseegan

unread,
Jan 9, 2008, 4:37:55 AM1/9/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
தவிர்த்தலும் தவித்தலும்

1. கையேந்தும்
அநாதைச் சிறுமியிடம்
பிச்சையிட்டு, மீண்டும்
புத்தகத்தினுள் தொலைந்துபோகும்
ஒரு ரயில் பயணியென
வெகு இயல்பாக மறுத்துச்செல்கிறாய்
என் நேசத்தை.

2. சிசுக்கொலை பாவம்
என்பது தெரிந்தும்
ஒரு அலட்சிய பார்வையால்
கொன்றுவிடுகிறாய் குழந்தையென
வளர்த்துவந்த என் காதலை.

3. சுட்டெரிக்கும் வெயிலுடன்
போராடித் தளராமல்
சுள்ளி பொறுக்கும் வயதான
மூதாட்டி போல்
சுட்டெரிக்கும் உன் விழிகளுடன்
தளராமல் போராடுகிறது
என் இதயம்..


-நிலாரசிகன்.



பிரேம்குமார்

unread,
Jan 9, 2008, 5:48:19 AM1/9/08
to panb...@googlegroups.com
On 09/01/2008, NilaRaseegan <nilara...@gmail.com> wrote:
தவிர்த்தலும் தவித்தலும்

1. கையேந்தும்
அநாதைச் சிறுமியிடம்
பிச்சையிட்டு, மீண்டும்
புத்தகத்தினுள் தொலைந்துபோகும்
ஒரு ரயில் பயணியென
வெகு இயல்பாக மறுத்துச்செல்கிறாய்
என் நேசத்தை.
 
இது ரொம்ப அழகா இருக்குப்பா. 'அநாதைச் சிறுமியிடம் பிச்சையிட்டு'....இதில் ஏதோ கோர்வைப்பிழை இருக்குற தோணுது :(

2. சிசுக்கொலை பாவம்
என்பது தெரிந்தும்
ஒரு அலட்சிய பார்வையால்
கொன்றுவிடுகிறாய் குழந்தையென
வளர்த்துவந்த என் காதலை.
 
அருமையோ அருமை

3. சுட்டெரிக்கும் வெயிலுடன்
போராடித் தளராமல்
சுள்ளி பொறுக்கும் வயதான
மூதாட்டி போல்
சுட்டெரிக்கும் உன் விழிகளுடன்
தளராமல் போராடுகிறது
என் இதயம்..

-நிலாரசிகன்.
 
:)

சீக்கிரமே அடுத்த புத்தகமும் வெளிவரத் தயாராகிடும் போல ;-)
வாழ்த்துக்கள் நிலா :)

NilaRaseegan

unread,
Jan 9, 2008, 5:52:53 AM1/9/08
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கு நன்றி மக்களே! :)
//அநாதைச் சிறுமியிடம் பிச்சையிட்டு'....இதில் ஏதோ கோர்வைப்பிழை இருக்குற தோணுது :(
//
சரி செய்துவிடுகிறேன் நண்பா. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

NilaRaseegan

unread,
Jan 10, 2008, 12:47:16 AM1/10/08
to Pira...@googlegroups.com, panb...@googlegroups.com, முத்தமிழ்
என்னுடைய "பூக்களில் உறங்கும் மெளனங்கள்" கவிதைக்கு வந்த ஒரு மடலை குழும நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
(ஆங்கிலத்தில் இருக்கிறது)

I have forwarded this kavithai to my friend…
Who is disappointed and got hurted by her husband…very badly..
She said that this kavithai reflected all her inner mind..
It is like her kavithai…
She forwarded this to her husband and while reading this kavithai her husband felt so bad
That how much he has spoiled and hurted her…..
That guy may or maynot change his character,…..but atleast he got to know how much she is hurted.She will read this kavithai often itseems…she asked me to convey her thanks to you
Thanks ……


என் தாய்த்தமிழுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப்படுத்தும் இணைய/இதய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


-நிலாரசிகன்.


On Jan 9, 2008 9:38 PM, Swathi <MSwat...@gmail.com> wrote:


On Jan 8, 12:10am, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> *பூக்களில் உறங்கும் மெளனங்கள்...*

>
> உன்னிடம் மென்மை
> எதிர்பார்த்து ஏமாந்து
> முள்ளில் விழுந்த பூவென
> நான் துடிக்கும் தருணங்களில்
>
> தட்டானின் சிறகுகளை
> பிய்தெரியும் ஒரு சிறுவனைப்போல்
> எவ்வித குற்றவுணர்வுமின்றி
> எனை ஆட்கொள்கிறாய் நீ.

அதில் ஒரு ஒரு குரூரமான திருப்தி அவனுக்கு!
>
> ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
> நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
> ஊமையாகிறது என் பெண்மை.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகும் போது தானிச்சையாகவே மனமும் உணர்வும்
மரத்துப் போய் ஊமையாகிவிடுவது இயல்பு தான் நிலவா!

>
> ஆயுதமற்ற போர்க்களத்தின்
> தினம் தினம் பூக்கள் சுமந்து
> வந்து சருகாகித் திரும்புகிறேன்.

களம் என்று ஆனபின் காயங்கள் ஆயுதங்களால் தான் வருமென்றில்லை போலும்.
இந்தக் களத்தின் ஆயுதங்கள் வார்த்தை வீச்சுக்களா?

புதிய கற்பனை! அருமையாக இருக்கிறது.



>
> கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
> இயலாமல் விடியலுக்காக
> காயங்களுடன் காத்திருக்கிறேன்
> பூக்களில் உறங்கும் மெளனமாய்.

கானல் நீரில்ல் நீச்சலடிக்கக் கூடாது என்று தெரியாதவளை என்ன சொல்வது?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?


அன்புடன்
சுவாதி
>
> -நிலாரசிகன்.
>
> On Jan 8, 2008 5:25 AM, சார்லசு <charles.chr...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > அருமையான கவிதைகள் நிலா... முதல் கவிதையின் கடைசி வரிகள் அருமை.... மூன்றாவது
> > கவிதை மிக அருமை....
>
> > --
> > நட்புடன்
>
> > மழைக்காதலன் - சார்லஸ்
> > 98410-55202
> > http://charlesantony.blogspot.com/
> >http://charlessmiles.blogspot.com/
>
> > Creation of a casteless and peaceful society is indeed the first step
> > towards just, egalitarian, and harmonious society. A society of equals,
> > neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender,
> > race, etc. Otherwise it would lead to social oppression, political
> > exploitation, economic deprivation, cultural domination, gender
> > discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a
> > society beyond this.
>
> --
> அள்ளித்தர நட்புடன்,
> நிலாரசிகன்.
> "தமிழுக்கு நிலவென்று பேர்"
> குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
> கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> மழலைகளுக்காக -->http://www.helptolive.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

J K

unread,
Jan 10, 2008, 1:17:39 AM1/10/08
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள்...

sree Koushi

unread,
Jan 10, 2008, 1:33:10 AM1/10/08
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள்  நிலா...
மயிலிறகாய் ஒரு  காதல்
நேற்றே  வாங்கி படித்து  விட்டேன்...
கவிதைகள்  ஒவ்வொன்றும் மென்மை... காதலை போலவே...
அதிலும் விஜி  முன்னுரை மிகவும்  அழகு.....
என்றும்  அன்புடன்
கௌசல்யா

 

NilaRaseegan

unread,
Jan 10, 2008, 1:41:49 AM1/10/08
to panb...@googlegroups.com
நன்றி கெளசல்யா மிக்க மகிழ்ச்சி :)

Gnaniyar

unread,
Jan 10, 2008, 2:05:26 AM1/10/08
to panb...@googlegroups.com
அருமையான கவிதை நண்பா..


பூக்களில் உறங்கும் மௌனங்கள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் காதல் பற்றி எழுதுவாய் என நினைத்தேன்..ஆனால் பெண்ணின் வலியை அழகாக எடுத்துரைத்திருக்கின்றாய் நிலவா..வாழ்த்துக்கள்...

ரசிகவ் ஞானியார்

NilaRaseegan

unread,
Jan 10, 2008, 7:31:51 AM1/10/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
முன்பு எப்பொழுதோ எழுதிய வெண்பா, தவறிருப்பின் சுட்டிக்காடுங்கள்.

1.கண்கொண்டு மடலெழுதி கவிதைபோல் காதல்
சொன்ன பெண்மையின் இலக்கணமே-மண்
கொண்டு போகும் உடலுக்குள்ளே பார்வையால்
மாற்றங்கள் செய்தாயோ? சொல்!

2.மல் லிகை போன்ற மெல்லிய மனம்
கொண்ட சிறுமலரே உந்தன் ,குறுநகை
கண்ட பின்னால் உடலுக்குள்  ஒடுவது சிவப்பு
ரத்தமல்ல இனிப்பு செந்தேன்;


-நிலாரசிகன்.

On Jan 10, 2008 3:20 PM, சார்லசு < charles...@gmail.com> wrote:
வாழ்த்துக்கள் தோழா.......
 

--

நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.


NilaRaseegan

unread,
Jan 11, 2008, 5:12:43 AM1/11/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
காதல் பொங்கல்!

1.உன் வீட்டில் பொங்கல்
கொண்டாடுவதில்லையென்று
வருந்துகிறாள் உன்
இளைய சகோதரி.
சர்க்கரைப்பொங்கலின் தங்கையடி
நீ என்று சொல்ல நினைத்து
முடியாமல் தவிக்கிறேன்
நான்.

2.கட்டிக் கரும்பு
நீ எனக்கு என்கிறேன்.
எப்படி என்று வினவுகிறாய்
விழிகளால்.
இழுத்தணைத்துக்கொள்கிறேன்.
கட்டிக் குறும்பு நீ
எனக்கு என்று காதோரோம்
முணுமுணுக்கிறாய்
நீ.

3.காளையை அடக்கியதால்
வீரன் என்று சொல்கிறது
இந்த உலகம்.
கன்னுக்குட்டி உன் அழகை
என் கண்ணுக்குள் அடக்க
தெரியாமல் விழிக்கிறேன்
நான்.

4.பொங்கலை கையில்
வைத்துக்கொண்டு கா கா என்று
காக்கைகளை அழைக்கிறாய்.
இதென்ன குயில்
கரைகிறதே என்று வியக்கின்றன
காகங்கள்.


-நிலாரசிகன்.

(நண்பர் அருட்பெருங்கோவின் பொங்கல் கவிதைகளை படித்துவிட்டு பொங்கியது :)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:)



2008/1/10 Lakshmanaraja Kannan < nanum...@gmail.com>:
//ஆயுதமற்ற போர்க்களத்தின்

தினம் தினம் பூக்கள் சுமந்து
வந்து சருகாகித் திரும்புகிறேன்.//

 

அருமை.



 
On 1/10/08, விஜி சுதன் <vselva...@gmail.com> wrote:


On 1/10/08, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:
முன்பு எப்பொழுதோ எழுதிய வெண்பா, தவறிருப்பின் சுட்டிக்காடுங்கள்.

1.கண்கொண்டு மடலெழுதி கவிதைபோல் காதல்
சொன்ன பெண்மையின் இலக்கணமே-மண்
கொண்டு போகும் உடலுக்குள்ளே பார்வையால்
மாற்றங்கள் செய்தாயோ? சொல்!

2.மல் லிகை போன்ற மெல்லிய மனம்
கொண்ட சிறுமலரே உந்தன் ,குறுநகை
கண்ட பின்னால் உடலுக்குள்  ஓடுவது சிவப்பு

ரத்தமல்ல இனிப்பு செந்தேன்;<<
 
 
வாசித்த நினைவுகள் மீண்டும் வாசித்தாலும் இனிக்கிறது....தேவதை நாயகனே :))

-நிலாரசிகன்.

On Jan 10, 2008 3:20 PM, சார்லசு < charles...@gmail.com> wrote:
வாழ்த்துக்கள் தோழா.......
 
 

--

நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.


 



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->   http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/





--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"


Help Ever Hurt Never
Love All Serve All




பிரேம்குமார்

unread,
Jan 11, 2008, 5:29:09 AM1/11/08
to panb...@googlegroups.com
ஆகா, போட்டிப் போட்டுக்கிட்டு பொங்குறாங்கய்யா :)
நல்லா இருக்கு நிலா

 

J K

unread,
Jan 11, 2008, 5:37:28 AM1/11/08
to panb...@googlegroups.com
முதலில் "கோ" பொங்குனாரு, அடுத்து "நிலா" பொங்குனாரு.
 
பிரேமு நீ மட்டும் என்ன சும்மா...
 
நீயும் பொங்குயா....

2008/1/11 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>:

அருட்பெருங்கோ

unread,
Jan 11, 2008, 5:45:54 AM1/11/08
to panb...@googlegroups.com

@நிலா – ம்ம்ம் என்றால் கவிதை பொங்கற ஆளாங்க நீங்க? எப்படிங்க? எப்படி???

@பிரேமு – இது இளைஞர்கள் இழை என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்…

@ஜேகே – இப்போ ஆசிப் வந்து மொத்தமா எல்லாரையும் பொங்கப் போறாரு :)




--
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
________________________________________
arutp...@arutperungo.com | http://blog.arutperungo.com/
"நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை எந்த சலனமுமின்றி எடுத்தெறிந்து விட்டு
வேறு பூவைச் சூடிக்கொள்ள எப்படி முடிகிறது இந்த பெண்களால்?" – தபூ சங்கர்.
________________________________________

NilaRaseegan

unread,
Jan 17, 2008, 2:39:37 AM1/17/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com, namb...@googlegroups.com, il...@googlegroups.com
அன்புள்ள அம்மாவுக்கு...

(உலகில் உள்ள அத்தனை தாய்மாருக்கும் இந்தக்கவிதைகள் சமர்ப்பணம்)


1.மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.

2. எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.

3. எப்பொழுதும் திட்டாத அம்மா
அடிக்கவும் செய்தாள்
அப்பாவை நான் திட்டியதற்காக.

4.கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".

5.நான் சுற்றுலா செல்ல
தான் சிறுக சிறுக
சேமித்த பணத்தையெல்லாம்
ஒன்றுசேர்த்து என் கையில்
திணித்து வழியனுப்புகிறாள்.
அவளறியாமல்,
காயத்துப்போன அவள்
கைகளில் விழுந்து தெறிக்கிறது
என்
ஒற்றைத்துளி கண்ணீர்.

6.நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.

7. நிலவைக் காண்பித்து
நீ ஊட்டிய சோற்றின் சுவையை
எந்த உணவிலும் உணரவில்லை
உள்நாக்கு.

8. தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.

9. வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?

10.தோட்டத்து செடிகள்
எல்லாம் நீ வந்தவுடன்
இலையசைக்கின்றன...
செடிகளுக்கும் நீ
அன்னையானது எப்போது?

11. நம் வீட்டுக்குள்
மட்டுமே சிறகடித்துப் பறக்கிறாய்
நீ..
உன் சிறகடிப்பு கண்டு வளர்ந்ததால்
இவ்வுலகையே வலம்
வருகிறேன் நான்.

12. சொந்தங்கள் வார்த்தை ஆணிகளால்
உன்னை மெளனச் சிலுவையில்
அறையும் பொழுதெல்லாம்
நீ சிந்துவது ரத்தக்கண்ணீர் அல்ல.
வறுமைகண்டு மனம்தளரா
தன்னம்பிக்கை விதைகள்.

13.வீடு நிறைய செல்வம்
வந்தபின்பும் நீ
மாறிவிடவில்லை.
அதே பழையச்சோறும்
எலுமிச்சை ஊறுகாயுமே
உன் சிற்றுண்டி.

14.அன்று
 கிடைக்காத வேலையும்
தொலைந்த நட்புமாய்
நான் தவித்த பொழுதெல்லாம்
ஆலமரமாய் நிழல்
தந்தவள் நீ.
இன்று விழுதாக மாறி
நிற்கிறேன் நான்.

15. கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.?

(தொடரும்)


-நிலாரசிகன்.




பிரேம்குமார்

unread,
Jan 17, 2008, 3:28:57 AM1/17/08
to panb...@googlegroups.com
என்ன குழந்தைக்கு அம்மா நினைவு வந்துருச்சோ? நல்ல கவிதைகள் நிலா! அம்மா படிச்சா ரொம்ப சந்தோசப்படுவாங்கன்னு நினைக்கிறேன் :)
 
அம்மாவின் அன்பையும் சில நிதர்சனங்களையும் அழகாய் சொல்லும் கவிதைகள் :)
 
//4.கால்சட்டைப் பருவத்தில்

சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".
//
 
இது எனக்கு ரொம்ப பிடிச்சது:)
'கோ'வுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். ஏன்னு கேக்கக் கூடாது ;-)
நடுவில் இருந்த இரண்டு வரிகள் தேவைப்படாது என்று நினைக்கிறேன் ;-))
 
சரி சரி அம்மாவுக்கு ஒரு ஃபோனப் போடனும்... நான் ஜீட் ;-)))
 

NilaRaseegan

unread,
Jan 22, 2008, 1:07:38 AM1/22/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
நீ
நான்
காதல்...

(குறுந்தொடர்)

1.பார்வைக்காலம்:

அவன்:

 
உன்னை முதன்முதலில்
சந்தித்தது நம் கல்லூரியின்
வேப்பமரத்தடியில்..
காற்றில் பறந்துவந்து என்
நெஞ்சில்மோதி விழுந்தது
சில வேப்பம்பூக்கள்.
நெஞ்சுக்குள் பவித்திரமாய் மலர்ந்தது
காதல்பூக்கள்.
 
அவள்:
 
தலைகவிழ்வதே வெட்கம்
என்று தவறுதலாக
எண்ணிவிட்டேன் உன்னை
சந்திக்கும் வரையில்..
இமைக்க மறப்பதே வெட்கம்
என்றுணர்ந்தேன்
உன்னை சந்தித்த முதல்நொடியில்!
 
 
அவன்:
 
தினம் தினம் சுமந்துவருகிறேன்
உன்னிடம் காதல் சொல்ல,
அழகழகான வார்த்தைகளை.
கண்சிமிட்டும் சிலை உன்னைக்
கண்டவுடன் மொழியற்று
ஊமையாகித் திரும்புகிறேன்.
 
 
அவள்:
 
இதழ் திறந்து என் செவிக்குள்
தேனூற்றிச் செல்வாய் என்று
காத்திருந்தேன்.
இதழ்பேசா உன் மெளனத்தால்
சிலையாகி நின்றுவிட்டேன்.
 
அவன்:
 
என் நீண்ட இரவுகளை
கடிதமாக்கி உன் முன்
சமர்ப்பிக்கிறேன்.
ஒரு அலட்சிய பார்வை தந்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ.
முள்ளில் விழுந்த பறவையென
துடிதுடிக்கிறேன் நான்.
 
அவள்:
 
புல்லாங்குழலின் இசை கேட்கவே
உன்னிடம் வந்தேன்.
மூங்கிலை மட்டுமே எனக்கு
பரிசளிக்கிறாய் நீ.
கடிதத்தை தூர எறிந்துவிட்டு
என் காதோரம்
இதழ் திறந்து சொல்வாயா
உன் காதலை?

அவன்:

நிலவின் செளந்தர்யத்தை
உன் பூமுகத்தில் உணர்கிறேன்.
நிலவைப்போல் கடைசிவரையில்
எட்டாமல் போய்விடுவாயோ
என்றெண்ணியும்  பரிதவிக்கிறேன்.

அவள்:

உன் வானில்
சிறகடித்து பறக்க விரும்பும்
சிறு பட்டாம்பூச்சி
நான்.
வானமாக
நீ மட்டுமே வேண்டும்
பெண்ணிலவும்
நான்.

அவன்:

பார்வைகளை பரிமாறிக்கொண்டே
வாழ்ந்துவிடுவேனா
காலம் முழுவதும்?
தேவதை உன் விழிக்குள்
என் முகம் பார்த்து
நாளை சொல்கிறேன் என்
காதலை.
இரவே கரைந்துவிடு
சீக்கிரம்.

அவள்:

நெஞ்சுக்குள் சுமந்து
திரியும் காதலை
நாளை உன்னிடம்
சொல்லப்போகிறேன்.
காதல் சொல்லத் தயங்கியவன்

சம்மதம் சொல்ல
தயங்கிவிடாதே!
வாடிப்போகும் இந்த
தாவணிமல்லி!

காதல்காலம்:


(தொடரும்)

-நிலாரசிகன்.


2008/1/17 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>:
அனைவருக்குமே அன்னை ஒரு தெய்வம் தான்1

2008/1/17 si...@tamilpayani.com <si...@tamilpayani.com>:

    தாயை போற்றுதல் முடிய கூடியதா என்ன நிலாஇரசிகரே...
நம் இறுதி மூச்சு இருக்கும் வரை ஈடுசெய்ய இயலாதவள் அல்லவா..


    அன்புடன்,

    சிவா@தமிழ்பயணி

Umanath Selvan

unread,
Jan 22, 2008, 1:39:29 AM1/22/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
ஆஹா நிலா, கலக்கல்.

Kasali Mohammed

unread,
Jan 22, 2008, 10:02:01 AM1/22/08
to panb...@googlegroups.com
Nila...

Your writing is something special. Keep it up!

Anbudan
Kasali

2008/1/22 NilaRaseegan <nilara...@gmail.com>:

NilaRaseegan

unread,
Jan 22, 2008, 10:51:49 PM1/22/08
to panb...@googlegroups.com
நன்றி கஸாலி....

என்ன ஆங்கிலத்தில்?

2008/1/22 Kasali Mohammed <kasal...@gmail.com>:
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் -->http://nilaraseegansirukathaigal.blogspot.com/

NilaRaseegan

unread,
Jan 23, 2008, 3:39:22 AM1/23/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், Pira...@googlegroups.com
நீ
நான்
காதல்...

(குறுந்தொடர்)

2.காதல்காலம்:


அவன்:

அதிகாலை பனித்துளியில்
குளித்த ரோஜாவொன்றை
உனக்குத் தந்து "விரும்புகிறேன்"
என்று சொல்லிவிட்டு
வேகமாய் வந்துவிட்டேன்.
கண்மணி!
அந்த சிறுரோஜாவுக்குள் புதைந்து
இருப்பது சொல்ல முடியாமல்
தவித்த என் காதலும்,
சிதையிலிட்டாலும் மாறிவிடாத
என் நேசமும்.

அவள்:

இதயத்தின் நான்கு
அறைகளிலும் ஒலிக்கிறது
நீ சொன்ன காதல்வார்த்தை.
ஒரு தேவதையை போன்ற
மிடுக்குடன் என் வீடு செல்கிறேன்
நீ தந்த ரோஜாவுடனும்
உனக்கென நான் வாங்கி வந்த
ரோஜாவுடனும்!

அவன்:

என்னை மறந்து
வான்பார்த்து புன்னகைத்துக்
கொண்டிருந்தேன்..
தன்னைப் பார்த்து
புன்னகை செய்வதாக
எண்ணிச் சிரிக்கிறது
அந்த வான் நிலா..
பகல்நிலவு உனக்கு மட்டும்தானடி
என் புன்னகை சொந்தம்
என்று எப்படி புரியவைப்பேன்?

அவள்:

எதிர்வீட்டு குழந்தைக்கு
அதிகமாய் இன்று
நான் முத்தமிட்டதை
சந்தேகத்துடன் பார்த்துச் செல்கிறாள்
அம்மா.
குழந்தையென உன்னை
எண்ணி நான் தருகின்ற
முத்தங்கள் உன்னைச் சேர்கின்ற
நாளுக்காக காதலுடன் காத்திருக்கிறேன்.

அவன்:

கடற்கரையில்
கடல்ரசித்து அமர்ந்திருந்தோம்.
உன் பொன்விரல்களால்
மணலில் கோலமிட்டுக்கொண்டு
தலைகவிழ்ந்திருந்தாய்..
உன் விரல்பற்றிக்கொள்ள
நினைத்து இயலாமல்
அலைரசிக்கிறேன் நான்.

அவள்:

ஏதேதோ பேசிவிட எண்ணி
எதுவும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன்.
ஊமையாக வாழவும் சம்மதம்
நாளெல்லாம் காதல்மொழி
நீ பேசினால்.

அவன்:

தினமும் சந்திக்கிறோம்.
ஒன்றாக உணவருந்துகிறோம்.
ஒரே பேருந்தில் பயணிக்கிறோம்.
இந்த பிறப்பு முழுவதும் பேசினாலும்
தீராத காதலை நெஞ்சுக்குள்
சுமந்துகொண்டு
திருக்குறளென இருவரிகள்
மட்டும் பேசுகிறோம்.

அவள்:

உன்னிடம் பேச
நினைத்ததையெல்லாம்
என் வீட்டு செவ்வந்திச் செடியிடமும்
என் ப்ரிய நாய்குட்டியிடமும்
பேசித் திரிகிறேன்.
எனக்கென்று ஒரு தனியுலமே
உருவாக்கித் தந்தவன் நீ.
மழையைத் தாங்கும் மண்ணைப் போல்
காத்திருப்பேன் வாழ்வெல்லாம்
உனக்காக.

அவன்:

உன் விரலோடு விரல்
கோர்த்து வெகுதூரம்
நடக்க வேண்டும்.
நீ களைத்தால்
கையில் உன்னை ஏந்தி
நம் பயணம் தொடர வேண்டும்.
நான் வேண்டும் வரமெல்லாம்
வண்ணமயில் நீ மட்டும்தான்.

அவள்:


நிலவாக,மலராக,தேன்சிட்டாக,
பட்டாம்பூச்சியாக
மனம் நிறைந்த கன்னியாக
ஒரே ஒரு வாழ்க்கையில்
பல முறை விதவிதமாக
வாழ்கிறேன் நீ தந்த
காதல் வரத்தால்.

பிரிவுக்காலம்:

(தொடரும்)


-நிலாரசிகன்.









--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் -->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/

2008/1/23 NilaRaseegan <nilara...@gmail.com>:

NilaRaseegan

unread,
Jan 25, 2008, 5:38:31 AM1/25/08
to namb...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
ஒரு பூவின் முனகல்..

ஏழ்மையின் தவிப்புகளை
கூரைபிய்க்கும் அடைமழையிடம்
புரியவைக்க போராடுகிறது
சேரிச் சிறுமியின் முனகல்
சப்தம்..

அழிக்கப் பிறந்த மழைத்துளிகள்
வெள்ளமென பெருக்கெடுத்து
அழித்துப்போனது அவளின் ஓட்டுவீடு
கனவுகளை...

விடியலில் முள்செடியொன்றில்
காய்ந்துகொண்டிருந்தது அச்சிறுமியின்
சடலம்.

சொல்லமுடியாத வலிகளை
காற்றில் எழுதிப் பறக்கிறது
ஒற்றைக்குயிலொன்று.

இலையுதிர்காலத்தின்
கடைசி இலை சத்தமின்றி
மெதுவாய் உதிர்கிறது
சேரிச் சிறுமியின் கேட்கப்படாத
முனகலென.


-நிலாரசிகன்.

2008/1/24 விஜி சுதன் <vselva...@gmail.com>:
நிலவா நிஜமாக அழுதுவிட்டேன்....அப்படியே என் அன்னையை பிரதிபலித்தன ஒவ்வொரு வரிகளும்...
 
'

2008/1/17 NilaRaseegan <nilara...@gmail.com>:
நிதர்சனம்...கண் கூடாக நான் கண்ட என் தெய்வம் அம்மா அம்மா அம்மா...
இப்படியோர் அற்புத வரிகளுக்காக வணங்குகின்றேன் தோழா....


--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

நமனை அஞ்சோம்"


Help Ever Hurt Never
Love All Serve All



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் -->http://nilaraseegansirukathaigal.blogspot.com/

kavithai kuyil

unread,
Jan 25, 2008, 5:42:28 AM1/25/08
to panb...@googlegroups.com
என் தாயை என் முன் றிறுத்தியது உங்கள் கவிதை நிலா.

அன்புடன்... கவிதைக்குயில்.. ராகினி...
ஜெர்மனி.
http://rahini.blogspot.com/
http://thiraviyam.blogspot.com/
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/

NilaRaseegan

unread,
Jan 28, 2008, 3:17:32 AM1/28/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
நீ,
நான்,
காதல்...

(குறுந்தொடர்)

3.ஊடல்காலம்:

அவன்:


வண்ணம்கொண்ட மேகமே!
நீ கோபம் கொண்ட
காரணத்தால்,
வானவில்கூட
கறுப்புவெள்ளையாகிப் போனதடி!

அவள்:

சில்லென்ற மழையால்
என்னுள்ளம் நனைத்தவன்
சொல்லொன்று தவறியதால்
சில்லுச் சில்லாய்போனதடா என்
இதயம்.

அவன்:

பார்த்தும் பார்க்காமல்
விறுவிறுவென்று என்னைக்
கடந்து போய்விட்டாய்..
தவிப்பைக் கற்றுத்தந்த
காதல் இன்று
தவிர்த்தலையும்
கற்றுத் தந்ததடி!

அவள்:

உன்னைப் பார்த்துவிட்டு
பார்க்காததுபோல்
கடந்து வந்துவிட்டேன்.
உன்னைக் கடந்தபோது
ஜெயித்த என்  பிடிவாதம்,
கடந்துவிட்டபின் தோற்றுப்
போய் யாருமறியாமல்
விசும்ப ஆரம்பிக்கிறது.

அவன்:

கோபத்தில் சொல்லக்கூடாத
வார்த்தையொன்றை
சொன்னதற்காக என்
கன்னத்தில் நீ அடித்திருக்கலாம்.
காயத்துடன் முடிந்திருக்கும்.
இதயத்தில் அடிக்கிறாய்,
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.

அவள்:

சீதாயணம் பாடிய
இதழ்களால்
ஏன்
சீதையை துளைத்தன
ராமனின் சொல்லம்புகள்?

அவன்:


மரணதண்டனையை
விட கொடியது
காதலி
உன் மெளனதண்டனை.

அவள்:

அழுகின்ற கண்களிடம்
சொல்லிவிட்டேன்
அவனுக்காக அழவேண்டாமென்று.
கண்களின் அழுகை நின்றபின்பும்
கேட்கிறது இதயத்தின்
விசும்பல்சப்தம்...

அவன்:

மன்னித்துவிட்டு மலரென
மலர்ந்துவிடுவாய் என்றெண்ணியே
மலர்கின்றன என் காலைப்பொழுதுகள்.
சுடுகின்ற நிலவின்பார்வையில்
சருகாகி வீழ்கின்றன என்
மாலைப்பொழுதுகள்.

அவள்:

நிலவும் சுடுமென்று
நீயும் உணரவேண்டும்;
சித்திரப்பாவை என்
சுயமும் நீ உணரவேண்டும்;
மன்னித்துவிட்டேன் உன்னை,
மலராகி உன் மடியில்
விழுகிறேன் ஓடோடிவா!

4.பிரிவுக்காலம்


(தொடரும்)

-நிலாரசிகன்.

NilaRaseegan

unread,
Jan 30, 2008, 4:46:17 AM1/30/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com
நீ,
நான்,
காதல்..
(குறுந்தொடர்)

4.பிரிவுக்காலம்


அவன்:

தவறிச்சொன்ன வார்த்தையால்
பிரிந்த நம்மை
காதல் சேர்த்து வைத்தது.
காதலை புரிந்துகொள்ளாத
நம் பெற்றோர்களின் உருவத்தில்
காலம் நம்மை பிரித்து வைத்தது.

அவள்:

உன்னைச் சந்திக்க முடியாமல்
செய்துவிடுவதால்
சனி,ஞாயிறுகளை திட்டித் தீர்ப்பேன்.
இப்பொழுது
சனியாக வந்த பந்தங்களால்
ஞாயிறு உன்னை
வாரம் முழுவதும் சந்திக்க
இயலாமல் துடிதுடிக்கிறேன்.

அவன்:

கண்டேன் சீதையை
என்றுரைக்க அனுமன்

வேண்டாம்.
கண்டேன் தேவதையை
என்றுரைக்க  உன்வீட்டு
உதிர்ந்த  இலையாவது

வேண்டும்.

அவள்:

நடைமறந்த கால்களில்
நீ தந்த
கொலுசுகளின் அழுகைச் சத்தம்.
படைகொண்டு தடுத்தாலும்
ஓயாது என் காதல் யுத்தம்.

அவன்:


சிறகிருந்தால் பறந்து
வந்துவிடலாம்.
பறந்துவந்தால் வதைபடும்
தேவதை உன்னை
கவர்ந்து வந்துவிடலாம்.
பறப்பதற்கும் வழியில்லை,
உன்னை பார்ப்பதற்கும்
வழியில்லை.

அவள்:

உயிரில் கலந்த உன்னை
சந்திக்கவிடாமல் என்னுடலை
தடுக்கிறது பந்தச்சுவர்.
உன்னைச் சந்திக்க
தன்னைத் தாண்டி ஓடுகின்ற
என்னுயிரை வியப்புடன்
பார்க்கிறது வீட்டுச்சுவர்.

அவன்:

சம்யுக்தையே உன்
பிருத்விராஜன் புரவியுடன்
வருவான் என்று காத்திருக்காதே!
பூமாலையுடன் வருவேன்
புயலாகி உன்னைக் கவர்ந்து
வருவேன்.

அவள்:

புயலாக வந்து
பூவை என்னை
கவர்ந்து சென்றுவிடு..
தென்றலாக உன்
தலைகோதுவேன் வாழ்வெல்லாம்.

அவன்:

ஊரறிய கரம் பற்ற
நினைத்திருந்தேன்.
உறவறிய தாலி கட்ட
நினைத்திருந்தேன்.
யாருமறியாமல் நடக்குமோ
நம் காதல்திருமணம்?

அவள்:

ஊரென்ன சொன்னாலும்
உறவுகள் நம்மைக் கொன்றாலும்
உலகறிய என் கழுத்தில்
ஏறவேண்டும் மஞ்சள்கயிறு.
ஓடிப்போய் வாழ்வதற்கு
நீ அழைத்தால்
என் கழுத்தை முத்தமிடும் தாம்புக்கயிறு.

5.நிலாக்காலம்


(தொடரும்)

-நிலாரசிகன்.



2008/1/29 மஞ்சூரார் <manjo...@gmail.com>:
//இதயத்தில் அடிக்கிறாய்,

இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.<//


கலக்கல்



NilaRaseegan

unread,
Jan 31, 2008, 2:10:05 AM1/31/08
to Pira...@googlegroups.com, panb...@googlegroups.com, முத்தமிழ்
மறக்கப்படுதலுக்கான உரையாடல்...

வேலைக்காரிக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தேர்ச்சி பெற்றார்
பாட்டி.

வேலைக்காரனுக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தோல்வி அடைந்தார்
தாத்தா.

அடுக்களை கிடைத்தது
பாட்டிக்கு.
திண்ணை கிடைத்தது
தாத்தாவுக்கு.

மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.


-நிலாரசிகன்.

2008/1/30 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>:
அவள் புத்திசாலி
வார்த்தகள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன
சீதாம்மா

2008/1/30 NilaRaseegan <nilara...@gmail.com>:
--
Seethaalakshmi

pandii durai

unread,
Jan 31, 2008, 2:13:27 AM1/31/08
to panb...@googlegroups.com
/////////மறக்கப்படுதலின் வலியை

மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.///////////
 
என்னிலும் மறைக்க இயலாததாய்
 
நல்லாயிருக்கு நிலா

 

Kasali Mohammed

unread,
Jan 31, 2008, 6:24:23 AM1/31/08
to panb...@googlegroups.com
நான் உங்கள் கவிதைகளின் ரசிகன் என்று சொல்லப்படுவதற்கான அத்தனை காரணங்களோடும் வருகிறது உங்கள் படைப்பு. தொடருங்கள்.

ரசிகன்
கஸாலி

2008/1/31 NilaRaseegan <nilara...@gmail.com>:

NilaRaseegan

unread,
Jan 31, 2008, 6:28:03 AM1/31/08
to panb...@googlegroups.com
நன்றிகள் பல, பாண்டி,கஸாலி :)

2008/1/31 Kasali Mohammed <kasal...@gmail.com>:

NilaRaseegan

unread,
Feb 8, 2008, 4:38:45 AM2/8/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, Pira...@googlegroups.com

என் கறுப்புத்தங்கம்

 

என் பாதையெல்லாம் முட்களாய்

இருந்தபோது என்னோடு பயணித்தவளே...

 

இன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்

கோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....

 

நீ இல்லாமல் போனதால் காவியங்கள் எழுத வேண்டிய

என் பேனா கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருக்கிறது..

 

நம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று

தூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...

 

முட்டை உடைத்து வெளிவரும்

கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து

தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..

 

புல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்

ஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்

வலியுடன் நடமாடுகிறேன்.

 

கண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன

மழைத்துளிகள்..

கண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்

நினைவுத்துளிகள்..

 காதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை
காலத்தால் கரைக்கமுடிவதில்லை.

சிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்
உலர்ந்துவிடுவதில்லை.

புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்
மினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை
சுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.

சுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை
நினைவூட்டுகிறது தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.

தோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக
மாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல் தவித்திருக்கிறேன்..

ஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு மறையும் உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.

பின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும் வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..

பந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்
பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன் சிரிக்க பழகிவிட்டேன்.

எனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.

காலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.

காதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.

ஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.

-நிலாரசிகன்.

 

NilaRaseegan

unread,
Feb 11, 2008, 1:40:01 AM2/11/08
to Pira...@googlegroups.com, panb...@googlegroups.com, முத்தமிழ்
சுயபுராணம்

அவரைத் தெரியுமா
என்றார்கள்.
இவரிடம் பழக்கமுண்டா
என்றார்கள்.
எவரையும் தெரியாதென்றேன்.
பின் எப்படி
வளர்வாய் என்றார்கள்.
சுயம்பு நானென்றேன்.
தோளில் தூக்கிவைத்து
கொண்டாடினார்கள்.
கொண்டாட்டம் முடியும்வரை
வளராமலிருந்தேன் நான்.

Asif Meeran AJ

unread,
Feb 11, 2008, 1:43:24 AM2/11/08
to panb...@googlegroups.com
சபாஷ் நிலாரசிகரே!

கொண்டாடும்போது வளராமலிருப்பதென்பது
சுயம்புவாய் இருப்ப்வர்களுக்கே முடியும் :-)

வாழ்க வளமுடன்!

2008/2/11 NilaRaseegan <nilara...@gmail.com>:

NilaRaseegan

unread,
Feb 13, 2008, 2:49:25 AM2/13/08
to mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, பிராவகம்-Piravakam
குட்டிக் கவிதைகள் -பாகம் 1

1.நகம் பெயர்த்த கல்லில்
விட்டுவந்தேன் என்
ரத்தத்தின் சுவடுகளை.

2.கால்நடைகளின் தடங்களில்
தேங்கி இருந்தது மழைநீர்
வறண்ட ஆற்றின் நடுவில்.

3.செம்மறி ஆடுகளின்
பின்னால் செல்கிறான்
பள்ளிகண்டிராத சிறுவன்.

4. வேர்நனைக்கும் நதிக்கு
பூமுத்தங்களை பரிசளிக்கிறது
நதியோர வேப்பமரம்.

5.அறிமுகமாகாத மனிதர்களுக்கும்
கையசைத்து மகிழ்கின்றனர்
ரயில்நிலைய பைத்தியங்கள்.

6.புழுதிபடர்ந்த பூக்களிலும்
தேனெடுக்க வந்தமர்கின்றன
பட்டாம்பூச்சிகள்.

7.கடற்கரையில் பறக்கின்ற
பட்டங்களுடன் போட்டிபோடுகின்றன
சுண்டல் விற்ற தாள்கள்.

8.அடித்து துவைக்கிறாள்
கைநீட்டிய கணவனின்
சட்டையை.


-நிலாரசிகன்.

2008/2/11 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>:
நச்சென்று இருக்கு

2008/2/11 NilaRaseegan <nilara...@gmail.com>:
சுயபுராணம்

அவரைத் தெரியுமா
என்றார்கள்.
இவரிடம் பழக்கமுண்டா
என்றார்கள்.
எவரையும் தெரியாதென்றேன்.
பின் எப்படி
வளர்வாய் என்றார்கள்.
சுயம்பு நானென்றேன்.
தோில் தூக்கிவைத்து

கொண்டாடினார்கள்.
கொண்டாட்டம் முடியும்வரை
வளராமலிருந்தேன் நான்.

-நிலாரசிகன்.



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
குழுமம்-->  http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் -->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/

N Suresh, Chennai

unread,
Feb 13, 2008, 3:37:31 AM2/13/08
to panb...@googlegroups.com
நிலா,
 
சுயம் என்றான் இலக்குவான்!   இதோ என்றான் சுயம் என்கிறது உன் கவிதைகள்.  வாழ்த்துக்கள் தம்பி
 
குட்டிக்கவிதைகளிள்

 
//அடித்து துவைக்கிறாள்

கைநீட்டிய கணவனின்
சட்டையை//
 
 
இது ரொம்ப நல்லாயிருக்கு. 
 
இப்ப வாஷிங் மிஷின் வந்ததால பாவம் மனைவிகள், அதிலே ரின்சிங் வேகத்தை படு வேகத்தில் அதிகப்ப்படுத்துவார்கள் போலிருக்கிறது. 
 
மக்களே, எல்லோரும் ஜீன்ஸ் பேண்டு வாங்கி வச்சுடுங்க
அது தான் புத்திசாலித்தனம்:-)
 
என்றும் நட்புடன்
என் சுரேஷ்

 

J K

unread,
Feb 13, 2008, 5:01:44 AM2/13/08
to panb...@googlegroups.com
எல்லாமே நல்லாஇருக்கு.

2008/2/13 NilaRaseegan <nilara...@gmail.com>:



--
நட்புடன்,

ஜே கே | J K
It is loading more messages.
0 new messages