மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
பூமணம் கொண்டவள் வான்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனை பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
படம் : காஞ்சித் தலைவன்
பாடியவர் : டி.எம்.எஸ்
இசை : கே.வி.மகாதேவன்
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக என்சுகத்தை கொடுக்கின்றேனம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்
உன்சிரிப்பிருக்கும் காட்ச்சியிலே மனதை தேற்றுவேன்
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ
இதை மறந்துட்டிங்களே
--
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது - எழில்
பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது - மங்கல
குங்குமம் சிரிக்கின்றதுகச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா - உனைக்
கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு
சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!(பூமழை)
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!(பூமழை)
கால்பட்ட இடமெல்லாம் மலராக கைபட்ட
பொருளெல்லாம் பொன்னாகணும் - உன்
கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்தக்
கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் விதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!
பாடலாசிரியர்களாக இருப்பதுதான் எத்தனை சிரமம்?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
தேங்ஸ் ஆசிப் :-)
*
நன்றி: தமிழோவியம்
கட்டுரை:
தமிழில்.
திரைப்படம்: நினத்ததை முடிப்பவன்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்: எம்.ஜி.ஆர்.
இந்தியில்.
திரைப்படம்: சச்சா ஜூட்டா
பாடலாசிரியர்: இந்தீவர்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி
பாடியவர்: கிஷோர் குமார்
திரையில்: ராஜேஷ் கன்னா
சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையின் தென்புறமாக ஒரு குறுகிய சாலை
பிரியும். எல்லீஸ் சாலை என்பது அதன் பெயர். அதில் திருமண ஊர்வல பேண்ட்
(Band) கோஷ்டிகளின் கடைகள் வரிசையாக இருக்கும். ஸ்டார் பேண்ட், குலாப்
பேண்ட், பஞ்சாப் குலாப் பேண்ட் என கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
விளம்பரப் பலகை எழுதிவைத்திருப்பார்கள். அழுத்தமான வண்ணத்தில் அவர்கள்
அணியும் சீருடைகள் திரைப்படங்களில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்களை
நினைவுபடுத்தும். மாப்பிள்ளை ஊர்வலத்தில் வாசிக்கும் பாடல்கள்
பெரும்பாலும் பிரபலமான இந்திப் பாடல்களாகவே இருக்கும்.
அந்த வாத்தியக் கோஷ்டிகளுக்கு வரப்பிரசாதமாக ஓர் இந்திப் பாடல்
வந்ததென்றால் அது 'மேரி ப்யாரி பெஹனியா பனேகி துல்ஹனியா'தான். இந்தப்
பாடல் வெளியான நாள்முதலாக இன்றுவரையில் எல்லா மாப்பிள்ளை ஊர்வலங்களிலும்
இதனை வாசிப்பதை சம்பிரதாயமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள்.
அதற்கு முக்கியமான காரணங்கள், பாடலின் இசையமைப்பும் பின்னணியும்.
திரைப்படத்தில் பாடலின் இசை வடக்கே 'பாராத்' என்றழைக்கப்படும் திருமண
ஊர்வலங்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது.
க்ளாரினெட் பிரதானமான வாத்தியமாக உபயோகிக்கப்பட்டு, உடன்வரும் பின்னணி
இசையில் கெட்டில் ட்ரம்மின் (kettle drum) ஒலி கூடுதலாக இருக்கும்.
பாடலின் மெட்டையே அவர்கள் வாசித்தபோதும் கேட்போர் மனதில் தானாக வரிகள்
ஓடுகின்ற அளவிற்கு பாடல் பிரபலமாகி இருந்தது.
தங்கையின் திருமணச் செலவுகளுக்காகப் பணம் சேர்க்க தனது ஊரைவிட்டு
பட்டணத்திற்கு பிழைப்புக்காக வருகிரான் அண்ணன். அண்ணனுக்குத்
தெரிந்ததெல்லாம் திருமண ஊர்வலத்தில் இசைக்கருவி வாசிப்பதுதான்.
பட்டணத்திற்கு வந்து நாள்களாகியும் எங்கும் வேலை கிடைக்காமல்
சுற்றியலைகிறான். அந்த வேளையில் திருமண ஊர்வலம் ஒன்றைப் பார்க்கிறான்.
மணமகனும் மணமகளும் அருகருகே அமர்ந்திருக்க ஊர்வலம் அவனைக் கடந்து
போகின்றது.
எப்பொழுதும் தங்கையின் திருமணத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு
ஊர்வலத்தில் மணமகளாக அமர்ந்திருக்கும் பெண்ணைத் தன் தங்கையாக நினைத்துப்
பார்க்கத் தோன்றுகிறது. ஒரு நிமிடம் தங்கையின் மணக்கோலம் கற்பனையில்
தோன்ற, ஊர்வலத்தில் தான் பாடத்துவங்குகின்றான்.
மேரி ப்யாரி பெஹனியா பனேகி துல்ஹனியா
சஜ்கே ஆயேகா தூலே ராஜா
பையா ராஜா பஜாயேகா பாஜா
அன்புத் தங்கை இப்போது மணப்பெண்ணாகும் நேரம்
ஒரு ராஜாதி ராஜன் வரும் நேரம்
அண்ணன் பாடும் சங்கீதத்தில் பாசம்
அண்ணன் தங்க பாசத்தில் பிறந்த திரைப்பாடல்கள் நம்மிடையே பல உண்டு.
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாளில் (பாசமலர்) துவங்கி, கல்யாண சாப்பாடு
போடவா (மேஜர் சந்திரகாந்த்) வந்து, பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலியைச்
சொல்லி (நெஞ்சிருக்கும் வரை), ஒரு தங்கரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு (தர்ம
யுத்தம்) வழியாக, கிழக்குச் சீமை வரையில் பல பாடல்களை உதாரணமாகக்
காட்டலாம்.
புலமைப்பித்தனின் வரிகளில், டி.எம்.எஸ்சின் குரலில், எம்.எஸ்.வியின்
இசையமைப்பில் கல்யாண ஊர்வலத்தை நடத்திக் காட்டும் இந்தப் பாடலின்
இசையமைப்பும் இந்தியைப் போலவே பாராத்தில் (ஊர்வலத்தில்) ஒலிக்கும் இசைக்
கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்தியிலிருந்து தமிழுக்கு
மாற்றப்பட்ட போதும் தன்மை மாறாமல் ஒலித்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் பெரும்பாலும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும்
வெளியே சென்று அவரது பொதுவாழ்வை உரத்து ஒலிக்கும் வரிகளாக அமையும்.
அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கன்று.
'என் அண்ணாவை ஒரு நாளும்' என்ற வரிகளை மட்டும் இரண்டுமுறை
பாடவைத்திருப்பார்கள். மற்ற சரணங்களில் இதற்கு இணையான வரிகளான 'தோழி
அத்தானைப் பாரென்று', 'ஒரு பதினாறும்தான் பெற்று' ஆகிய இரண்டும்
ஒருமுறைதான் பாடப்படும்.
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது - எழில்
பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது - மங்கல
குங்குமம் சிரிக்கின்றது
கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா - உனைக்
கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு
சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!
(பூமழை)
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!
(பூமழை)
கால்பட்ட இடமெல்லாம் மலராக கைபட்ட
பொருளெல்லாம் பொன்னாகணும் - உன்
கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்தக்
கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!
இந்திப் பதிப்பில் இருப்பதைப் போலவே தமிழிலும் பாடல் வரிகளில்
மணப்பெண்ணின் அலங்காரத்தையும் அண்ணனின் பாசத்தையும் பாடும். ஆனால்
இந்தியில் கூடுதலாக அண்ணனின் உழைப்பைச் சொல்லி, மாப்பிள்ளை இலட்சத்தில்
ஒருவரென்று புகழ்ந்து முதல் சரணம் அமைந்திருக்கும்.
அப்னே பசீனேகோ மோத்தி கர்தூங்கா
மோத்தியோன்ஸே பெஹனாகி மாங் பர்தூங்கா
ஆயேகி பாராத் தேக்கேகி சாரி துனியா
ஹோங்கே லாக்கோன்மே ஏக் தூலே ராஜா
பையா ராஜா பஜாயேகா பாஜா
வேர்வைத் துளியால் நான் முத்து சேர்த்து வைப்பேன்
சேர்த்து வைத்த முத்துக்களால் மணமாலை தொடுப்பேன்
ஊரெல்லாம் வியக்க ஊர்வலம் நடக்கும்
கோடியிலே ஒன்றாக ராஜன் வரும் நேரம்
அண்ணன் பாடும் சங்கீதத்தில் பாசம்!
பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக
பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.
*
பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக
பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.
பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக
பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.
*
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூட வா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா
காமாட்சி மீனாட்சி பெரியம்மா நீங்க
கட்டாயம் வரவேண்டும் தெரியுமா…
அம்மா காமாட்சி மீனாட்சி பெரியம்மா
நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா
பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
நான் தேடி வந்த மாப்பிள்ளை
சீர் கொடுப்பேன் சிறை எடுப்பேன்
என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்
………கல்யாண சாப்பாடு போடவா…………
வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்
வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்
காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
ஊர் பேசும் பேச்சா இருக்கணும்
புது மனையில் குடி வைப்பேன்
முதல் இரவு முடிய விழித்திருப்பேன்
………..கல்யாண சாப்பாடு போடவா…………….
படம் : மேஜர் சந்த்ரகாந்த்
பாடியவ : டி.எம்.எஸ்
பாடல்: | அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ |
குரல்: | எஸ் பி பாலசுப்ரமணியம் |
வரிகள்: | கண்ணதாசன் |
ரஜினியோட பேவரிட் முள்ளும் மலரும்ல எந்த பாட்டும் இல்லையா. அப்புறம் அவரோட முதல் கதாநாயகனா நடிச்ச படத்துல வர ... நண்டூறுது நரியூறுது இதெல்லாம் விட்டுட்டு ஏன் போட்ட பாட்டியே ரிப்பிட்டறிங்க
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kandavel Rajan
Sent: Tuesday, June 15, 2010 4:38 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re: தங்கைகளுக்கான திரைப்படப் பாடல்களின் தொகுப்பு.
ரஜினியோட பேவரிட் முள்ளும் மலரும்ல எந்த பாட்டும் இல்லையா. அப்புறம் அவரோட முதல் கதாநாயகனா நடிச்ச படத்துல வர ... நண்டூறுது நரியூறுது இதெல்லாம் விட்டுட்டு ஏன் போட்ட பாட்டியே ரிப்பிட்டறிங்க
--
கண்டவேல் ஐயா உங்க பாசப்பாட்டு என் கண்ணுல தண்ணிய வரவச்சிடுச்சுரொம்ப நன்றிஒரு ஜிஃப் படம் போடுவீங்கலே எங்கே அது உச்சியில இருந்து கைகூப்பி பெருசா வணக்கம் போடுர மாதிரி ஒன்னு
--
Movie : Annan orru kOvil
Music : M S Visvanathan
Lyric : Kannnadasan
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
பொன் வண்ண ரதமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பத்துணை தேடி நான் தருவேன்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
கன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவள் ஆவி
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்
தோகை மீனாள் பூவையானாள்
சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளிவீச நின்றாள்
தென்றல் தொட்டு ஆட
கண் சங்கத்தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட
காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை
மாலை சூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும்
பிரியாத சீதை
ராமநாமம் தந்த ராகம் நவனாக குகனாக
ஒரு வான கீதம்
மாமன் என்று சொல்ல ஒர் அண்ணண் இல்லை அங்கே
அந்த அண்ணண் உண்டு இங்கே அள்ளி வழங்க
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
டிராஜேந்தர்படத்துப்பாட்டா என்ன?:
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன்
கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா தங்கை
வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த
பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த
பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் நீ
சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அக்கா, தங்கைகளை திட்டுற மாதிரி எதும் பாட்டு இருக்கா.....
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Gokul Kumaran
Sent: Tuesday, June 15, 2010 6:30 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re: தங்கைகளுக்கான திரைப்படப் பாடல்களின் தொகுப்பு.
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன
வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாயென்ன
மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன
படம்: அவள் ஒரு தொடர் கதை
பாடல்: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
பாடியவர்கள்:அண்ணன் பாலுஜி, தங்கை சைலஜா
படம்: தங்கைக்கு ஒரு தாலாட்டு
isai: sankar ganesh
lyrics kaaLithaasan
உலலலாய்ய்ய்யி ஆராரிரோ ஆராரிரோ லாஆஅயி
உலலலாய்ய்ய்யி ஆராரிரோ ஆராரிரோ
ஆடிப்பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு
ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு
எந்தன் கண்ணில் ஒளி நீயென்று உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்லுவேன்
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்
ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு
கல்யாண எழில் மேடை நீ காணவே
இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன்
தாயாக நீ மாறும் திருநாளிலே
இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்
ஆசைகளோ இசைப்பாடுமே
ஆசைகளோஓஓ இசைப்பாடுமே
அழியாத உன் வாழ்க்கை கலைகாவியம் எழில் ஓவியம்
ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு
நீதானே நான் கண்ட திருசன்னதி
அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி
உன் அன்பு வற்றாத தலைக்காவிரி
என்றும் உனைப்போலே ஒரு சொந்தம் வருமோ இனி
மறு ஜென்மங்கள்.. உண்மையென்றால்
மறு ஜென்மங்கள்ள்ள்.. உண்மையென்றால்
உன் தங்கை நானாக வரவேண்டுமே.. வரம் வேண்டுமே
ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு
எந்தன் கண்ணில் ஒளி நீயென்று உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்லுவேன்
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அண்ணாச்சி அது 2006ல சொன்ன அடுத்த வாரமுல்ல. இப்ப எளுதியிருந்தா இப்படியா
எளுதியிருப்பேன்? இன்னும் அதிகமால்ல எளுதியிருப்பேன். அடுத்த வாரத்தில்
யே மாலிக் தேரே மந்தே ஹம்மையும் ஒன்றே குலமென்றுவையும் தமிழோவியத்துல
அப்பவே பாத்துட்டமே...இப்ப என்னா பண்றது இங்கன அண்ணாச்சி கேட்ட அடுத்த
வாரத்துக்கு? பாக்கலாம் வேற எதுனாச்சியும்..