மதிரை அருகே மணலூரில் (= கீழடி) பெருஞ்சமயம்

19 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 8, 2021, 7:07:29 AM3/8/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, panbudan
மதிரை அருகே மணலூரில் (= கீழடி) பெருஞ்சமயம்:
----------------------------------------------

பேரா. கு. ஞானசம்பந்தன் நாடறிந்த தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர் சுஜாதா, பேரா. தொ.ப. அவர்களின் நண்பர். தொ.ப. அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினவர் இவரே. கமலகாசன் திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் வருபவர். தொலைக்காட்சி பட்டிமன்றுகளில் தலைவராக வீற்றிருப்பவர். அவரது யுட்யூப் ஓடையில் 2.5 லட்சம் தமிழர்கள் கண்டுமகிழ்கின்றனர். தற்போது பல்வேறு வகைப்பட்ட அறிஞர்களைப் பேட்டி எடுத்துவருகிறார். பேரா. கு. ஞா. தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம் அவர்களைக் கீழடி பற்றி நீண்ட செவ்வி செய்துள்ளார். 2 பகுதிகளாக இருப்பதை எனக்கு வாட்ஸப் செய்து என் கருத்தைக் கேட்டிருந்தார். முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் கீழடிப் பேட்டி:
கீழடி உண்மை வரலாறு | Discussion With Archaeologist Dr.Vedachalam
https://www.youtube.com/watch?v=rjza_UGYrO4
https://www.youtube.com/watch?v=xLJR8jrjzgY

மணலூர் என்று மகாபாரத காலத்திலேயே (மு. இராகவையங்கார், செந்தமிழ், 1910 - அருச்சுனனும், தமிழ்நாட்டு மரபுகளும்) அழைக்கப்பட்ட “கீழடி”யில் பெருஞ்சமயம் இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்கிறார் திரு. வேதாசலம். ஆனால், மூன்று பானை ஓடுகளில் வேத காலப் பெருந்தெய்வம் வருணன், அவனது சிந்துவெளிச் சின்னமாகிய மகரம் (லிங்க வழிபாடு) இருத்தலைக் கண்டேன். ஹூஸ்டனில் தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு நடந்தபோது என் பொழிவைக் கேட்டதைக் குறிப்பிட்டார் கு.ஞா. வி.ஜி. சந்தோஷம் என்னிடம் எடுத்த பேட்டியின் காணொளி வலைக்கண் அனுப்பினேன். முசுவாக (Busy என்பதற்கான தமிழ்ச்சொல். இன்றும் கொங்குநாட்டில் வாழுஞ்சொல் இஃது.) இருக்கும் பேரா. கு.ஞா. நேரம் ஒதுக்கி, முழுக்கப் பார்த்துப் பாராட்டி, மணலூரில் (கீழடி) பெருஞ்சமயம் எனப் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். யாரும் பேசாத துறையிது, நீங்கள் செய்யுங்கள் என்றார். வருங்கால ஆய்வுகளுக்கு உதவும் வகையில் ஒரு சிறு அறிமுகம் பேரா. கு.ஞா. காணொளி ஓடையில் செய்ய உத்தேசம். குந்திகை - நாற்படையும் தங்குமிடம், ரத, கஜ, துரக, பதாதிகள்; இப்படைகளை மதுரை நகர மத்தியிலே நிறுத்த முடியாது அல்லவா? எனவே, குந்திகை > கொந்தகை (Cf.Ane-Kundhi, in Vijayanagara.) மேலும், அழகன்குளம் போன்ற துறைமுகங்களில் இருந்து வரும் வணிகப்பொருளை மதுரைக்கும் அனுப்பும் சுங்கச் சாவடி, இந்தியாவின் பல்வேறு கலைகள், தொழில்நுட்பம் சங்கமிக்கும் இடமாக மணலூர் சங்க காலத்தில் விளங்கியமை வெள்ளிடைமலை. மகரவிடங்கர் - சக்தி (ஸ்ரீ கொல்லி/கொற்றி - வருணன்) தம்பதியரின் பரன் குன்றத் தமிழிக் கல்வெட்டு, அதன் முக்கியத்துவம் - கல்வெட்டு மூத்த தெய்வங்கள் என்கிறது; முதலைக்குளம் தமிழ் பிராமி, ஆங்கே பாண்டிய மஹாராஜாக்கள் விடங்கருக்கு அசுவமேத யக்நம் செய்து காசுகள் வெளியிட்டமை போன்றவை பற்றியும், கொங்குதேசத்தை முதலில் வந்தடைந்த பிராமி எழுத்து, கிண்ணிமங்கலம் அருகே கொங்கர் புளியங்குளம் வந்துசேர்தலும், பின்னர் மதிரையைச் சுற்றி எழுத்து தோன்றுதலும் பற்றியும், குடிமல்லத்தில் - இந்தியாவின் முதல் லிங்கம் - வருண விடங்கர், கிண்ணிமங்கலம் பள்ளிப்படைக் காலத்தில் சிவ லிங்கமாக பரிணாம வளர்ச்சியும் சொல்லலாம்.

இந்தியாவின் வானியல் மிகப் பழையது. அண்மையில் பிஞ்சோர் எனும் ராஜஸ்தான் ஊரின் அருகே கொடுமணல் போல, ஒரு இண்டஸ்ட்ரியல் ஸைட்டில் தாயத்துகளில் காணும் 4700 ஆண்டுகால வானியல் பற்றி விளக்கினேன்:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

பின்னர், அக்கொம்பு சூடி இருப்பவள் கொல்லிப் பாவை. பாவை வழிபாடு சங்க இலக்கியத்தில் உள்ள இரண்டேயிரண்டு கலியாணப் பாடல்களில் பேசப்படுகிறது. பின்னர், ஸ்ரீவைஷ்ணவம், சைவம், சமணம் இளம்பெண்டிர் திருமணம் வேண்டிக் காத்யாயனி (கொல்லி) வழிபாடு இயற்றுவது பாவைப் பாட்டாக மலர்கிறது. திருப்பாவையிலே, ‘ஆழிமழைக் கண்ணன்’ என சிந்துவெளி தெய்வம் வருணன் (கொல்லி கணவன்) வருகிறான். இந்தியாவின் வழக்கங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருபவை.
பாலை, நெய்தல் திணைத் தெய்வதங்கள் (தொல்காப்பியம்) தம்பதியராக, வேள் ஒருவனின் முதுமக்கட்டாழியில் “Appliqueware" ஆக, கிடைக்கின்றனர்.
(1) Śaka Clans, Pallava Royals, Śākya Nāyanār and Bodhidharma
https://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html
(2) Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.     https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC
(3)    http://nganesan.blogspot.com/2021/02/kinnimangalam-linga-changes.html

இலிங்க வழிபாடு விடங்கர் (கடியால் முதலை) சிந்துவெளியில், போஸ்ட்-ஹரப்பன் காலத்தில் வருணன் எனும் மழுவாள் நெடியோன், பின்னர் சிவலிங்கம் என 100+ கோடி மக்களால் தினந்தோறும் திகழ்கிறது. அதேபோல, இன்னொன்றும் சொல்லலாம். முல்லை நிலத்தில் ஓர் இளைஞன் காதலியை மணக்காமல் காலந்தாழ்த்துகிறான். இப்படிச் செய்தாய் ஆனால், வேறு மாப்பிள்ளை பார்த்து விரைவில் அவள் கலியாணம் மூய்த்துவிடுவர் என்று அறிவுறுத்துகின்றனர். (மூய்த்தல் - முடித்தல், முல்லைத் திணை கொங்கில் இன்னமும் உயிரோடிருக்கும் சங்கச்சொல். ) இந்த அரிய பாடல், ஸ்ரீ கொல்லிப் பாவையின் சின்னமாக எருமைப் பேட்டின் கொம்பு கலியாணச் சீர்களில் இடம்பெற்றிருப்பதைப் பாடுகிறது. இந்தியாவிலே, பஞ்ச திராவிட தேசங்களில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் திராவிட உறவின்முறை (Dravidian Kinship. See publications by Emeneau, Trautmann, ...) இது போன்ற எருமைக் கொம்புகளை கொற்றி கோவிலிலும் நாலாயிரம் ஆண்டு முன்னரே அளித்து மக்கள் திருமணம் நிகழ வேண்டினர் போலும். மண்ணால் ஆன எருமைக் கொம்புகள் 'பிர்ரானா' போன்ற சிந்துவெளி ஊர் அகழாய்வுகளில் கிடைக்கின்றன:

கலித்தொகையில், அருமையான முல்லைக்கலிப் பாடல். கலியாணச் சீர்களில் பாவை (காத்யாயனி வழிபாடு - ஸ்ரீமத் பாகவதம்; காத்யாயனி கோவில் ஐஐடி, மெட்ராஸில் உண்டு.) குறியீடாக அவள் தலையணி எருமைப் பெடையின் கொம்பு வைத்து மணவறையில் வழிபடும் செய்தி உள்ள பாடல். விளக்கியவர்: உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விரிவாகப் பேசியுள்ளேன். இதுவும் சங்ககாலத்தின் பெருந்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சிக் கூறுகளில் ஒன்றாகும்.
சங்க காலத்தில் வருணனில் இருந்து சிவபிரானுக்கு மாறும் இலிங்க வழிபாடு:
https://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

பேரா. கு,ஞா. - என் பேட்டி நாள் தெரிந்ததும் சொல்கிறேன். ஏப்ரலில் இருக்கலாம்.
நா. கணேசன்
முல்லைக்கலி - கலியாணச் சீரில் ஸ்ரீகொற்றவையின் எருமைக்கோடு,
https://sangamtranslationsbyvaidehi.com/தமிழ்-உரை-கலித்தொகை/
கலித்தொகை 114, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி:

வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ?
“புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை” என்று அகல நக்கு வந்தீயாய் நீ 5
தோழி, அவன் உழைச் சென்று

தோழி:

சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி

தலைவி:

சொல் அறியாப் பேதை, மடவை, மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய் அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு,
தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும், ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ? அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே!

தலைவி:  வாரி முடித்துத் புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன் அழுதான் என்று கூறுகின்றனரோ?  அவ்வாறு கூறுவார்களாயின், நீ அவனிடம் சென்று, “புதிய மலர்களைக் கட்டி அவளுடைய உறவினர்கள் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே” என்று நன்றாக எள்ளி நகைத்து விட்டு வா தோழி.

தோழி:  அவனிடம் சென்று சொல்வதை அறிவேன்.  இனி வேறு என்ன சொல்ல வேண்டும்?

தலைவி:  மடவாய்!  “நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத மடப்பம் உடையவன்.  அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும்.  நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து  விடும்.  அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று” என்று அவனிடம் கூறு.  நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறு.

புதுமணல் பெய்து, மனைக்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பை நட்டி, கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம் அவனில்லாமல் நிகழும்.  திட்டுத் திட்டாக உள்ள மணலையுடையத் துறையில் சிற்றில் கட்டி விளையாடிய அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் தான் புணர்ந்ததை அவன் அறிவான்.  அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருக்க வேண்டுமா?  நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே!

சொற்பொருள்:  வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் – வாரி முடித்துத் புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன், அழுதனன் என்பவோ – அழுதான் என்று கூறுகின்றனரோ, புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா ஏழையை – புதிய மலர்கள் கட்டி என்னுடைய உறவினர்கள் எனக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே – என்று – என்று, அகல நக்கு வந்தீயாய் நீ – அவனை நன்றாக எள்ளி நகைத்து விட்டு வருக, தோழி – தோழி, அவன் உழைச் சென்று – அவனருகில் சென்று,

சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – அவனிடம் சென்று சொல்வதை அறிவேன். இனி என்ன சொல்ல வேண்டும்?

மடவை – மடவாய், சொல் அறியாப் பேதை – நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத பேதைமை உடையவன், மற்று எல்லா நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் – அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும், நீடு இன்று – நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து விடும், நினக்கு வருவதாக் காண்பாய் – அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு – நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறுவாயாக,
கலியாணச் சீர் வண்ணனை:
தருமணல் தாழப் பெய்து – புதுமணல் பெய்து, இல் பூவல் ஊட்டி – மனைக்குச் செம்மண் பூசி, எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெரு மணம் எல்லாம் – பெண் எருமையின் கொம்பை நட்டி கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம், தனித்தே ஒழிய – அவனில்லாமல் நிகழ,
வரி மணல் முன்துறை – திட்டுத் திட்டாக உள்ள மணலில் துறையில், சிற்றில் புனைந்த – சிற்றில் கட்டி விளையாடிய, திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் – அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் புணர்ந்ததை அவன் அறிவான், ஆயின் எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ – அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருப்பேனா, அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், அரு நெறி ஆயர் மகளிர்க்கு – ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே


N. Ganesan

unread,
Mar 9, 2021, 11:02:44 PM3/9/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, panbudan
ஹெர்மன் தியக்கன் சங்க இலக்கியம் 9-ம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டது என நூல் எழுதியவர். ஆனால், தினமலர் அமார் கிருஷ்ணமூர்த்தியின் சங்ககால நாணயவியல் ஆய்வுகள் ஐயந்திரிபற சங்க காலம் கி.மு. 3 - கி.பி. 3-ம் நூற்றாண்டு எனக் காட்டுகின்றன. கொடுமணல், பொருந்தில், தாதப்பட்டி, கொங்கர் புளியங்குளம், கொங்கபட்டி (உசிலம்பட்டி அருகே) ... கிடைக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் தினமலர் அறிஞர் வாக்கை மெய்ப்பிக்கின்றன. ஊர்ப்பெயர்கள் பிராமி எழுத்து வடக்கே தொடங்கிச் சேர நாட்டின் தலைநகர் கொங்குநாட்டை அடைந்து, பாண்டிநாட்டுக்கு வருவதை அறிவிக்கின்றன. இந்தியாவிலேயே, பிராமி வட்டம், சதுரம் கொண்டு அமைத்த எழுத்துகள் எனக் காட்டும் சின்னங்கள் திகழ்கின்றன. சங்க காலத்தில் பெருந்தெய்வம் வருணன் - தொல்காப்பியர் வருணனை நெய்தல் திணைக்குத் தெய்வம் என்கிறார். நெய்தற் பறை = சாப்பறை. இதுபற்றின திருக்குறள் உண்டு. வருணன் - கொற்றி தம்பதியர்க்குத் தான் முறையே சுறாவின் கோடு, எருமையின் கொம்பு வைத்து வழிபாடு சங்க காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று : https://groups.google.com/g/houstontamil/c/2a5YRcOAKZg/m/ZSqhpCT-AAAJ
After I mention about the female horn ritual in the wedding, see discussion in the indology list by H. Tieken, JLC ...
ஸ்ரீ கொல்லி/கொற்றி எருமையின் கொம்பும், அவள் கணவன் வருணன் என்னும் பெருந்தெய்வம் சுறவின் கொம்பினாலும் வழிபடப்பட்டனர். இந்த இரண்டு பெருந்தெய்வங்கள் தவிர, வேறெந்த தெய்வதத்திற்கும் இச் சிறப்புகள் சங்க காலத்தில் இல்லை.

பெருமணம் என்றால் கலியாணம் (Wedding). பெருமணம் பண்ணி அறத்தினிற்கொண்ட (கலித். 96, 36. ) சங்க இலக்கியத்தில் கலியாணத்தை விரிவாக விவரிக்கும் பாடல்கள் இரண்டு.  இவை அகநானூறு 86(நல்லாவூர் கிழார்), அக நானூறு 136 (விற்றூற்று மூதெயினனார்) . முக்கியமான இந்த இரண்டு பாடல்களிலும், கொல்லி/கொற்றியின் ரோகிணி (< ரோஹிணீ ) நக்ஷத்திரம் பற்றிய வானியற் சேதிகள் வருகின்றன. அதன் காரணம், 4700 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்திய வானியல். பழைய இந்த வானியல் பற்றி நான் எழுதிய ஆய்வுக் குறிப்பு இங்கே படித்தறியலாம்:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

சிந்துவெளியில் கொற்றவையைக் குறிக்க எருமைக்கோட்டைத் தான் காட்டியுள்ளனர். பிர்ராணா அகழாய்வுகளில், சுடுமண் பொம்மைகளாக, எருமைக் கொம்புகளை வைத்து வழிபாடு செய்தமை கிடைக்கின்றது. “ தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி, எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய,” (கலித்தொகை). இது முகூர்த்த காலத்தே நிகழும் கலியாணச் சீர்களைச் சொல்லும் பாடல். புதுமணலை ஆற்றங் கரையில் எடுத்துவந்து மணவறையில் பரப்புகிறார்கள். அதன் மேல் விளக்கு ஏற்றுகிறார்கள் (இன்றும் நடப்பது. சங்க கால திருமணப் பாட்டிலும் வருவது). எருமையின் கொம்பை கொற்றவையின் சின்னமாக வைத்து வழிபடுகிறார்கள். கலித்தொகையில் கலியாணச் சீர் வர்ணனை முதலாகுபெயருக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கொற்றவைக்கு விசேடம் எருமை ஆதலால், எருமைக் கொம்பு வைத்து மணவறை வழிபாடு கலியானத்தின்போது நிகழ்கிறது. அதனால் தான், பசுமாட்டுக் கொம்பை ஆயர்கள் மணவறையில் வைப்பதில்லை. அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் கலியாணத்தை, “கல்லூர்ப் பெருமணம்” என்கிறார் திருஞான சம்பந்தரும். முல்லைத்திணை ஆகிய கொங்குநாட்டில் பெண் கலியாணம் ஆகி மணமகன் வீடு சென்றபின்னர் பசுமாடு போகும். “பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்” அனுப்புவது பற்றி, கவிராயர்கள் பாடும் கலியாண வாழ்த்தில் கேட்கலாம். வெங்கல தாம்பாளத்தில் பாலும், பழமும் பிசைந்து உண்டு, தூக்கிக் குடித்தபின் நாட்டுக்கவிராயர்கள் பாடுவது கலியாணவாழ்த்து.

கொல்லிக்கும், மயிடனுக்கும் உள்ள சிந்து முத்திரைகளை ‘ஜல்லிகட்டு’ எனக் குறித்துவிட்டார் ஐராவதம் மகாதேவன் அவர்கள். அப்போதே, அது தவறு என அவரிடம் சொன்னேன். கொற்றிக்கும், எருமைக்கும் பழைய தொடர்பு சங்ககால கலியாணத்தில் வழிபாடாக இருக்கிறது பாரத நாட்டின் பண்பாட்டுத் தொடர்ச்சியின் சிறப்புகளில் ஒன்று:

ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

வேந்தன் அரசு

unread,
Mar 10, 2021, 8:26:57 PM3/10/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, panbudan
<எருமைப் பெடையோடு >பெடை என்றால் பெட்டை. நீங்கள்மட்டும் கொம்பு எனப் பொருள்கொண்டது சிறப்பு.

திங்., 8 மார்., 2021, பிற்பகல் 5:37 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfK%3DALkBGkae49m9%2Bs0tnix5RNo0P66Am50sa6%2BWD%2BT-g%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 12, 2021, 3:41:16 AM3/12/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, CTa...@googlegroups.com, panbudan
முல்லைக்கலிப் பாட்டில் முதலாகுபெயர்கள்:
--------------------------------------
 முதற்பொருளின் பெயர் அதன் சினைப் பொருளுக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும். இது முதலாகு பெயர் என்றும் வழங்கப்பெறும். (எ.கா) முல்லை மணம் வீசியது. இதில் முல்லை என்பது முல்லைக் கொடியின் பெயர். இங்கே மணம் வீசியது என்னும் குறிப்பால் இது சினைப் பொருளாகிய முல்லைப் பூவுக்கு ஆகி வந்துள்ளது.
”அரவு ஏர் அல்குலாளை யொர்பாகம் அமர்ந்து
மரவங் கமழ் மாமறைக் காடதன் தென்பால்” - சம்பந்தர் தேவாரம்
அரவு = அரவின் படத்துக்கு ஆகிவருதலால், முதலாகுபெயர்.
”மான்கொண்ட கண்ணியர் மையலற் றே
[...]
கான்கொண்ட கொன்றையர் கச்சியை யெய்திற் கலியறுமே. ”      
- கச்சிக் கலம்பகம். இங்கே, ‘மான்’ என்பது அதன் கண்ணிற்கு வருவதால் முதலாகுபெயர்.      
வீட்டுக்கு வெள்ளையடித்தான் - இங்கே, வீடு என்பது வீட்டின் சுவர். எனவே, வீடு - முதலாகுபெயர்.
(கூரைக்கோ, தளத்துக்கோ வெள்ளை அடிக்க மாட்டார்கள்.)
குடிமல்லத்தில் வருணன் லிங்கத்தில் நிற்கையில் தாழை சூடியுள்ளான்.
இது நெய்தல் தெய்வம் ஆதலால், இங்கே தாழை என்பது தாழம்பூ என்பதற்கு முதலாலுபெயர் (பொருளாகுபெயர்),
அதனால்தான், மாங்குடி கிழார் பாடிய 4 வருணாசிரம எதிர்பாட்டில் கிடைக்காமல் போன இருபூக்களில்
சாதாரணமாகக் கிடைக்கும் தாழை ஒரு பூவாக இருக்கலாம்.
அதே போல, கலித்தொகை முல்லைக்கலி:


கலியாணச் சீர் வண்ணனை:
தருமணல் தாழப் பெய்து – புதுமணல் பெய்து, இல் பூவல் ஊட்டி – மனைக்குச் செம்மண் பூசி, எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெரு மணம் எல்லாம் – பெண் எருமையின் கொம்பை நட்டி கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம், தனித்தே ஒழிய – அவனில்லாமல் நிகழ,

இங்கே, இல் = வீட்டில் திருமணம் நிகழும் மணவறையின் சுவர்கள். முதலாகுபெயர். சிவப்பு, போர்த்தெய்வம் கொற்றவைக்கு விருப்பமானது. அவளது பெயரே ரோஹிணி (ரோஹு = சிவப்பு). எனவே, மணவறைச் சுவர்கள் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பெற்றன. தரையைச் சாணத்தால் மெழுகி, அதன்மேல் புதுமணல் பரப்பி விளக்கு ஏற்றுவதை அகநானூற்றில் வரும் திருமணப்பாடல்களால் காணலாம். ரோஹிணி நக்ஷத்ரம் சந்திரன் உடன் சேரும் காலத்தில் முகூர்த்தம். எருமையின் கொம்பை வைத்து, கொல்லி/ஸ்ரீ கொற்றவைக்கு வழிபாடு இயற்றி திருமணங்கள் நிகழ்ந்தன. எருமைக் கொம்பை கொற்றவையின் சின்னமாக வைத்தல் பல ஆயிரம் ஆண்டுகளாக நிகவது தான். கோடு (=கொம்பு) என்ற திராவிடச்சொல் கௌரி என்று பெயர் அமையக் காரணம்.

அண்மைக் காலத்தில், சனாலி என்ற இடத்தில், பெட்டியில் வீரர்கள் மரணம் அடைந்தபோது வைத்து, இருபுறமும் காளைகள் இழுக்கும் தேர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காளை ரதங்கள் இவை. இவற்றைக் குதிரை என்று சொல்ல வட இந்தியாவில் பேரார்வம். இல்லை, அவை, தைமாபாத் போன்றவற்றில் வருவதும், இன்றும் நிகழும் ரேக்ளா ரேஸ் போன்ற காளை இழுக்கும் தேர்கள் எனக் குறிப்பிட்டேன். அந்தத் தலைவன்/வீரர்கள் கொண்ட பெட்டி மேலே எருமைக்கொம்பு கொற்றவையின் சின்னமாக பொறிக்கப்படுகிறது. அதன் நடுவே, கொற்றவை நிற்கும் அரச மரத்தின் இலை உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, கௌரி (< கோடு (=கொம்பு)) என்றால் எருமைக்குப் பெயராக வேதத்தில் வருகிறது.
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

கலித்தொகையில், முதலாகுபெயராய் எருமை எருமைக்கொம்புக்கு பயன்படுவது, அப்பாடல் இயற்றிய காலத்துக்கு முந்தைய 2000 ஆண்டுக் காலக் கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சி ஆகும்.  As in Sanauli zebu-chariot (NOT of horses), see the buffalo horns, likely made for the worship of KoRRavai, in the Harappan site, Bhirrana excavated by archaeologist, late Dr. L. S. Rao: Figure 4 in http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

நா. கணேசன்

On Tue, Mar 9, 2021 at 10:09 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஹெர்மன் தீக்கன் சங்க இலக்கியம் 9-ம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டது என நூல் எழுதியவர். ஆனால், தினமலர் அமார் கிருஷ்ணமூர்த்தியின் சங்ககால நாணயவியல் ஆய்வுகள் ஐயந்திரிபற சங்க காலம் கி.மு. 3 - கி.பி. 3-ம் நூற்றாண்டு எனக் காட்டுகின்றன. கொடுமணல், பொருந்தில், தாதப்பட்டி, கொங்கர் புளியங்குளம், கொங்கபட்டி (உசிலம்பட்டி அருகே) ... கிடைக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் தினமலர் அறிஞர் வாக்கை மெய்ப்பிக்கின்றன. ஊர்ப்பெயர்கள் பிராமி எழுத்து வடக்கே தொடங்கிச் சேர நாட்டின் தலைநகர் கொங்குநாட்டை அடைந்து, பாண்டிநாட்டுக்கு வருவதை அறிவிக்கின்றன. இந்தியாவிலேயே, பிராமி வட்டம், சதுரம் கொண்டு அமைத்த எழுத்துகள் எனக் காட்டும் சின்னங்கள் திகழ்கின்றன. சங்க காலத்தில் பெருந்தெய்வம் வருணன் - தொல்காப்பியர் வருணனை நெய்தல் திணைக்குத் தெய்வம் என்கிறார். நெய்தற் பறை = சாப்பறை. இதுபற்றின திருக்குறள் உண்டு. வருணன் - கொற்றி தம்பதியர்க்குத் தான் முறையே சுறாவின் கோடு, எருமையின் கொம்பு வைத்து வழிபாடு சங்க காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று : https://groups.google.com/g/houstontamil/c/2a5YRcOAKZg/m/ZSqhpCT-AAAJ
Reply all
Reply to author
Forward
0 new messages