மகேந்திரனின் இசைப் பக்கங்கள் - இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!!!

217 views
Skip to first unread message

Naresh Kumar

unread,
Dec 16, 2009, 10:19:36 PM12/16/09
to பண்புடன்
நன்றி: மகேந்திரன், சரவணகுமரன்


மகேந்திரனிடமிருந்து...

எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்கள் சிலவுண்டு. அவற்றை தொகுத்துப்பார்க்கும்போது பல படங்கள் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியதாக இருக்கும். எந்த தொழில்நுட்ப பயமுறுத்தல்களும், ஆடம்பரங்களுமில்லாத எளிமையான படங்கள் அவருடையது.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் எளிமையாக, ரசிக்கும்படியாக இருக்கும். அவரே ஒரு நல்ல இசை ரசிகராக இருந்ததால் அவர் படங்களின் பாடல்களும் குறிப்பிடும்படியானவை. அவரின் இன்னொரு சாதனை ராஜாவையும் எம்.எஸ்.வியையும் இணைத்து இசையமைக்க வைத்தது. இவர்கள் இணைந்து இசையமைத்த ’மெல்லத்திறந்தது கதவு’ பாடல்கள் இனிமையின் உச்சம்.

என்னைக்கவர்ந்த அவரின் படங்களில் ஒன்று 1984 ல் வெளியாகி வெள்ளி விழா கண்ட "வைதேகி காத்திருந்தாள்". கதை, இசை, நகைச்சுவை அனைத்துமே தேர்ந்தெடுத்து செய்தவையாக இருக்கும். இன்றும் தமிழ் நாட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜனை அறியாதவர்கள் இருக்க முடியாது. "இந்த பெட்ரோமாக்ஸ் லைட் எப்படிண்ணே எரியுது?" வரலாறு படைத்த நகைச்சுவை. கவுண்டமணியின் ஆகப்பொருத்தமான ஜோடியாக கோவை சரளா (கோயம்புத்தூரில் வசித்த, கொங்கு தமிழில் கலக்கும் இவர் ஒரு மலையாளி). அவரைவிட கவுண்டமணிக்கு மிகப்பொருத்தமான ஜோடியாக செந்தில். (அண்ணே அந்த வ்விலாசம்.. வ்விலாசம்..)



நாயகன் விஜயகாத்தின் ஜோடியாக வந்து பாதியில் இறந்து போவது பிரேமின் தோஷி என்றொரு வங்காள நடிகை. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. (அதற்கு நேர்மாறான அவர் மகள் இப்போது "கிருஷ்ணலீலை" என்றொரு படத்தில் நடிகர் ஜீவனுடன் நடித்து வருகிறார்). "வெள்ளிக்கிழமை ராமசாமி" போன்ற கிளிஷேக்களை தவிர மிகவும் இயல்பான அழகான படம் இது. இனி பாடல்களைப்பற்றி..

ராஜாவின் படம் என்றால் எஸ்.பி.பி & ஜானகியே தான் பாட வேண்டுமா?. யாருக்கு மாற்றம் தேவைப்பட்டதோ தெரியவில்லை. தமிழில் வெகு நாட்களாக உரிய அங்கீகாரமின்றி, கவனிக்கப்படாமலே இருந்த ஜெயச்சந்திரனை ராஜா முழுமையாக பயன்படுத்திக்கொண்டார். விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் வெவ்வேறு குரல்களில் இடம்பெற்றன.

யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.

கேட்ட நிமிஷத்தில் மனதை கனப்படுத்தும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி.." இடையில் வரும் ஒரு "ஆரிராரோ..ஆரிராரோ..", விஜயகாந்த்தின் பிரமையில் வரும் பிரேமின் தோஷி கேட்கும் "காலெல்லாம் வலிக்குதா மாமா?" எல்லாம் கேட்கையில் எனக்கு கண்ணோரம் துளிர்க்கும். இதே பாடலின் இடையில் வரும் "வாடா கருப்பா இறங்கி வாடா.." ஒரு அற்புதமான குறியீடு. இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ரணப்பட்டு நிற்கும் நாயகன் பாடுகையில், யாருக்கோ பேயோட்டும் பாடலை இடையில் திணித்திருப்பது மிகுந்த அர்த்தம் பொதிந்ததாயிருக்கும். இயக்குனர் நினைப்பதையெல்லாம் இசையில் வெளிப்படுத்த ராஜாவை விட்டால் வேறு யார்?

கதையின் இன்னொரு பகுதியில் வரும் ரேவதியின் திருமணப்பாடலை ராஜாவே பாடியிருப்பார். உமா ரமணனுடன் அவர் பாடிய "மேகங்கருக்கையில புள்ள தேகங்குளிருதடி.. ஆத்த கடந்திடலாம் புள்ள ஆசைய என்ன செய்ய?.." ஒரு வியக்கவைக்கும் நாட்டுப்புற மெட்டு. இடையில் சேர்ந்திசைக்குரல்களில் வரும் "ஹொய்யா ஹோ.. ஹொய்யா ஹோ.." கேட்கையில் நிஜமாக நாமே பரிசலில் போவது போல இருக்கும்.

"ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்?
ஆளுக்கோர் ஆசைய ஏன் கொடுத்தான்?..
இல்லன்ன உலகமே இல்ல புள்ள, இதுகூட தெரியல என்ன புள்ள?"
என ராஜா கேட்கையில் சிலிர்ப்பாயிருக்கும்.

எம்.எஸ்.வியின் தீவிர ரசிகரான ராஜாவுக்கு, அவர் இசையமைத்த பாடல்களில் மிகவும் பிடித்தது "பாக்யலட்சுமி" படத்திலிடம் பெற்ற "மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்..". பல மேடைகளில் இதை ராஜா பலமுறை சிலாகித்து சொல்லியிருக்கிறார். ஒரு விதவையின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த இந்த பாடல் "சந்திரகவுன்ஸ்" என்ற ஹிந்துஸ்தானி ராகத்திலமைந்தது.



இதே போன்று ஒரு பாடலை அமைக்க ராஜா தகுந்த வாய்ப்பை எதிபார்த்து காத்திருந்தார். எனவே இப்படத்தில் விதவையாக வரும் ரேவதி பாடுவதான ஒரு சூழலுக்கு, அதே ராகத்தில் ராஜா அமைத்த பாடல் ஜானகியின் குரலில் ஒலித்த "அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.. சிலம்பொலியும் புலம்புவதை கேள்". என் பள்ளி நாட்களில், கலை நிகழ்ச்சிகளில் பெண்வேடமிட்டு சிறுவர்கள் நாட்டியம் என்ற பெயரில் ஆட தேர்ந்தெடுக்கும் முதல் பாடலாக இது இருந்தது. பாடலின் இறுதியில் ரேவதியின் தந்தையாக வந்து உக்கிரதொணியில் ஜதி சொல்லும் ட்டி.எஸ்.ராகவேந்தர், நிஜமாகவே ஒரு பாடகர். தற்போது அவர் மகள் கல்பனா நிறைய பாடி வருகிறார் ( கடவுள் தந்த அழகிய வாழ்வு, இன்னும் நிறைய).

இப்போது எனக்கான பாடல்...



என் விருப்ப எண்களில் ஒன்றாக இருக்கும் இந்த பாடல் ஜெயச்சந்திரன், வாணிஜெயராம் பாடிய "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..இன்பத்திலாடுது என் மனமே.." ஆபோகி என்ற ராகத்தில் ராஜா அமைத்த இந்த பாடல் அப்பட்டமாக மன குதூகலத்தை பிரதிபலிக்கும் ஒன்று. கங்கை அமரன் எழுதிய பாடல்களில் இது குறிப்பிட்டு சொல்லும்படியான ஒன்று. பாடல் இசை துவங்குவதற்கு முன்பாக ஒரு நீண்ட ஆலாபனையுடன் தொடங்கும். பாடல் முழுக்க வீணை அற்புதமாக கையாளப்பட்டிருக்கும். வாணிக்காகவே அமைத்தது போன்ற வேகமான ஸ்வரவரிசைகள் வேறு பாடலை பிரமாதப்படுத்தியிருக்கும்.

என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா? அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது..

"ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ" என்ற வரிகள் நிஜமாகவே கங்கை அமரனே எதிர்பாராமல் வந்து விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கேட்கும் போதெல்லாம் வாணி எங்கே போனார் என்று ஆதங்கமாயிருக்கும். இதை எழுதும்போதே எனக்கு இப்பாடலை மீண்டும் கேட்க மிகுந்த ஆவலாயிருக்கிறது.. நீங்களும் கேளுங்கள்..

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
இன்பத்திலாடுது என் மனமே..
கனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ?..

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத்தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே..
நாயகன் கைதொடவும் கொண்ட நாணத்தை பென்விடவும்..
மஞ்சத்திலே கொஞ்சக்கொஞ்ச மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்..

மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ?
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ?
காதலின் பல்லவியோ.. அதில் நான் அனுபல்லவியோ..
மஞ்சத்திலே எழுச்வரம்.. இன்பத்திலே நூறுவரம்..
இணைந்து மகிழ்ந்து மிதந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..
இன்பத்திலாடுது என் மனமே..
கனவுகளின் சுயம்வரமோ.. கண்திறந்தால் சுகம் வருமோ?..


-மகேந்திரன்

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

தமிழன் வேணு

unread,
Dec 16, 2009, 10:26:39 PM12/16/09
to panb...@googlegroups.com
ஆர்.சுந்தர் ராஜன் "பயணங்கள் முடிவதில்லை," படத்திற்குப் பிறகு, ஓரிரு படங்களில் கே.வி.மகாதேவனை வைத்து இசையமைத்தார். "நீ அழைப்பது போல் ஒரு ஞாபகம்.," என்ற எஸ்.பி.பி.பாடுகிற பாட்டு "தூங்காத கண்ணின்று ஒன்று," படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெறும். அதன் பிறகு எம்.எஸ்.வியை வைத்து "சரணாலயம்," என்று ஒரு படம் எடுத்தார். "பயணங்கள் முடிவதில்லை," படத்திற்குப் பிறகு, "வைதேகி காத்திருந்தால்," தான் ஆர்.சுந்தர் ராஜன் மீண்டும் வெற்றி கண்ட படம். காரணம் -இளையராஜா!

தமிழன் வேணு

Naresh Kumar

unread,
Dec 17, 2009, 7:11:15 AM12/17/09
to panb...@googlegroups.com
தகவல்களுக்கு நன்றி வேணுஜி!!!
 
இந்தப்பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்...
 
எனது பால்ய பருவத்தில், மென்மையான காதல் நாவல்கள் (ரமணிசந்திரன் நாவல் டைப் காதல் அல்ல) மனதை வருடிய பொழுது, எனக்கு மிகப் பிடித்தமான ஒரு நாவலின் நாயகி, திருமணத்திற்கும் முன்பே தன் மனதில் இன்னொருவர்பால் ஏற்பட்ட இனக்கவர்ச்சிக்கும், திருமணத்திற்குப் பின்பு, தன் மனதை மிகவும் புரிந்து கொண்ட, அச்சப்படுகின்ற தன்னுடைய மனதின் படபடப்பு அடங்கும் வரை பொறுமையாக காத்திருக்க தயாராக இருக்கின்ற தன் அன்பான கணவனிடம், தன் அன்பையெல்லாம் முழு மனதுடன் கொட்டித் தீர்க்க தன்னை தயார்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் இறுதியாக வென்று, தன் அன்பை வெளிப்படுத்த கணவனின் வருகைக்காக மிக ஆவலாகக் காத்திருக்கும் போது, அவளையறியாமல் அவள் முணுமுணுக்கும் பாடலாக வருவது இந்த “இன்றைக்கு ஏனிந்த ஆணந்தமே” பாடல் வரிகளாக இருக்கும்...
 
ஏறக்குறைய அதே உணர்வுகளை என்னுள் ஏற்படுத்தியது நண்பர் மகேந்திரனின் இந்த வரிகள் “என்றேனும் நீங்கள், வெகுநாட்கள் எதிர்நோக்கியிருந்த விஷயம் கைகூடப்பெற்று ஆனால் உடனடியாக பகிர்ந்துகொள்ள அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறதா? அப்போது தவிப்பு கலந்த குதூகலத்தின் உச்சமாய் உங்களுக்குள் ஒரு இசை நிகழுமே.. அதுதான் இது..”    
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Ganesh kumar

unread,
Dec 17, 2009, 11:30:37 AM12/17/09
to panb...@googlegroups.com
யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.
 
சுசிலா அல்ல.. ஜானகி

Naresh Kumar

unread,
Dec 17, 2009, 11:37:26 AM12/17/09
to panb...@googlegroups.com
நன்றி கணேஷ்!!!

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Ganesh kumar

unread,
Dec 17, 2009, 11:47:13 AM12/17/09
to panb...@googlegroups.com


2009/12/17 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

ஆர்.சுந்தர் ராஜன் "பயணங்கள் முடிவதில்லை," படத்திற்குப் பிறகு, ஓரிரு படங்களில் கே.வி.மகாதேவனை வைத்து இசையமைத்தார். "நீ அழைப்பது போல் ஒரு ஞாபகம்.," என்ற எஸ்.பி.பி.பாடுகிற பாட்டு "தூங்காத கண்ணின்று ஒன்று," படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெறும். அதன் பிறகு எம்.எஸ்.வியை வைத்து "சரணாலயம்," என்று ஒரு படம் எடுத்தார். "
 
சரணாலயம் படத்தில் வரும்
 
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியாள் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
 
என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த வர்ணனைப் பாடல்
 
மலேசியா வாசுதேவன் பாடியதில் மற்றும் இரண்டு வர்ணணைப் பாடல்கள்
 
ஒரு ஊரில் ஒரு மகாராணி
அவள் உல்லாச கலையில் கலைவாணி
சிலை கோவில் மலர் போலே
நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி
- கர்ஜனை
 
 
பூவே இளைய பூவே வரந்தரும் வசந்தமே
 

Ganesh kumar

unread,
Dec 17, 2009, 11:48:35 AM12/17/09
to panb...@googlegroups.com
 

வண்ண இரு விழியாள் இந்த பூங்கோதை
 
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

தமிழன் வேணு

unread,
Dec 17, 2009, 11:52:02 AM12/17/09
to panb...@googlegroups.com
இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.
 
சுசிலா அல்ல.. ஜானகி

மன்னிக்கவும்! சுசீலாவே தான்! :-))

தமிழன் வேணு

Ganesh kumar

unread,
Dec 17, 2009, 11:56:34 AM12/17/09
to panb...@googlegroups.com
நல்ல பல உபரித்தகவல்களுடன் எழுதுறிங்க நரேஷ்
நன்றி

2009/12/17 Naresh Kumar <meet...@gmail.com>


--
நரேஷ்
www.nareshin.wordpress.com

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ganesh kumar

unread,
Dec 17, 2009, 12:12:19 PM12/17/09
to panb...@googlegroups.com
2009/12/17 தமிழன் வேணு <venugopal...@gmail.com>
இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.
 
சுசிலா அல்ல.. ஜானகி
மன்னிக்கவும்! சுசீலாவே தான்! :-))

 
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதய்யா - இந்தப் பாட்டு ஞாபகத்துல எழுதிட்டேன்
 
நன்றி வேணு

Swathi Swamy

unread,
Dec 17, 2009, 1:01:10 PM12/17/09
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=CKn_rRY9Yr4

17 டிசம்பர், 2009 11:30 am அன்று, Ganesh kumar <mara...@gmail.com> எழுதியது:

யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.
 
சுசிலா அல்ல.. ஜானகி


இல்லை அது பி.சுசீலா தான். இதில் இணைப்பு உள்ளது. 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

M.RISHAN SHAREEF

unread,
Dec 17, 2009, 2:01:31 PM12/17/09
to panb...@googlegroups.com


2009/12/17 Ganesh kumar <mara...@gmail.com>

யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.
 
சுசிலா அல்ல.. ஜானகி


Swathi Swamy

unread,
Dec 17, 2009, 4:43:34 PM12/17/09
to panb...@googlegroups.com


17 டிசம்பர், 2009 2:01 pm அன்று, M.RISHAN SHAREEF <mrishan...@gmail.com> எழுதியது:



2009/12/17 Ganesh kumar <mara...@gmail.com>

யாரையுமே தாளம் போட வைக்கும் "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.." (அரை கிலோமீட்டருக்கு அந்தாண்ட வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டான்.. இனி புள்ள தூங்கிடும்..!!). இதே பாடலின் பெண்குரல் பதிவு "ராசாவே உன்ன காணாத நெஞ்சு" என்று சுசீலா பாடியிருப்பார். அதுவும் இனிமை.
 
சுசிலா அல்ல.. ஜானகி


இல்லைங்க..சுசீலா தான்.

அதத் தானே நானும் சொன்னேன்?? :)
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Naresh Kumar

unread,
Dec 17, 2009, 8:26:09 PM12/17/09
to panb...@googlegroups.com
//அதத் தானே நானும் சொன்னேன்?? :)//
 
அதைத்தான் அவரே சொல்லிபுட்டாரே!!! அவரே, வேற ஞாபகத்துல எழுதுனேன் சொன்னதை பாக்காம மாத்தி மாத்தி சொல்லிட்டிருக்கீங்க :))))))))
 
//நல்ல பல உபரித்தகவல்களுடன் எழுதுறிங்க நரேஷ்
நன்றி//
 
பாராட்டுகளுக்கு நன்றி கணேஷ்!!! பாராட்டுகள் அனைத்தும் நண்பர் மகேந்திரனுக்கே!!!
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Swathi Swamy

unread,
Dec 17, 2009, 9:48:44 PM12/17/09
to panb...@googlegroups.com


17 டிசம்பர், 2009 8:26 pm அன்று, Naresh Kumar <meet...@gmail.com> எழுதியது:

//அதத் தானே நானும் சொன்னேன்?? :)//
 
அதைத்தான் அவரே சொல்லிபுட்டாரே!!! அவரே, வேற ஞாபகத்துல எழுதுனேன் சொன்னதை பாக்காம மாத்தி மாத்தி சொல்லிட்டிருக்கீங்க :))))))))
 
ஆனா நான் மடல் அனுப்பிய போது கணேஷோட அந்த மடல் இருக்கலையே...??நான் சரியா கவனிக்கலையோ??  அதானே பார்த்தேன்..கணேஷாவது தப்பா சொல்றாதாவது  அதுவும் சினிமா துணுக்குகளில்.....   Sorry Ganesh!

அன்புடன்
சுவாதி
 
//நல்ல பல உபரித்தகவல்களுடன் எழுதுறிங்க நரேஷ்
நன்றி//
 
பாராட்டுகளுக்கு நன்றி கணேஷ்!!! பாராட்டுகள் அனைத்தும் நண்பர் மகேந்திரனுக்கே!!!
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

M.RISHAN SHAREEF

unread,
Dec 18, 2009, 12:48:02 AM12/18/09
to panb...@googlegroups.com


2009/12/18 Naresh Kumar <meet...@gmail.com>

//அதத் தானே நானும் சொன்னேன்?? :)//
 
அதைத்தான் அவரே சொல்லிபுட்டாரே!!! அவரே, வேற ஞாபகத்துல எழுதுனேன் சொன்னதை பாக்காம மாத்தி மாத்தி சொல்லிட்டிருக்கீங்க :))))))))
 

எனக்கு அந்த மடல் லேட்டாத்தான் வந்துச்சு நரேஷ் :(

Naresh Kumar

unread,
Dec 18, 2009, 12:51:34 AM12/18/09
to panb...@googlegroups.com
//எனக்கு அந்த மடல் லேட்டாத்தான் வந்துச்சு நரேஷ் :( //
 
பார்றா இதுக்கும் விளக்கமா???
 
இதெல்லாம் லூசில விடுங்க பாஸ்...

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

M.RISHAN SHAREEF

unread,
Dec 18, 2009, 12:54:25 AM12/18/09
to panb...@googlegroups.com


2009/12/18 Naresh Kumar <meet...@gmail.com>

//எனக்கு அந்த மடல் லேட்டாத்தான் வந்துச்சு நரேஷ் :( //
 
பார்றா இதுக்கும் விளக்கமா???
 
இதெல்லாம் லூசில விடுங்க பாஸ்...

ம்ம்..லூசிக்கிட்டே சொல்லிப் பார்த்தேன்.
அவ பண்புடன்ல சேர மாட்டேங்குறா..நான் என்ன பண்றது நரேஷ்ணா :((

Asif Meeran AJ

unread,
Dec 20, 2009, 2:09:36 PM12/20/09
to panb...@googlegroups.com
வண்ண இரு விழியாள் இந்த பூங்கோதை
 
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

தமிழ்தான் எத்தனை சிறப்பான மொழி
தவறாக எழுதினாலும் தவறாமல் பொருள் தருகிறதே!! :-))

Naresh Kumar

unread,
Dec 21, 2009, 2:14:09 AM12/21/09
to panb...@googlegroups.com
//தமிழ்தான் எத்தனை சிறப்பான மொழி
தவறாக எழுதினாலும் தவறாமல் பொருள் தருகிறதே!!//
 
உண்மைதான் அண்ணாச்சி!!!

--
நரேஷ்
www.nareshin.wordpress.com
Reply all
Reply to author
Forward
0 new messages