"அழுகாதீங்க அண்ணி.பார்க்குல எல்லோரும் நம்மையே பாக்கறாங்க" என்றான் வாசு.
அண்ணி அழுகையை நிறுத்தினார்."என்னை அண்ணின்னு கூப்பிடாதே வாசு.என்னவோ மாதிரி இருக்கு. சுஜாதான்னே கூப்பிடு" என்றார்.
"சுஜாதா..சுஜாதா" என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டான் வாசு.
"வீட்டுக்கு போகலாம்.அண்ணன் தேடும்" என்றான்.
"இனி எந்த முகத்தோட வீட்டுக்கு போறது?" என்றார் அண்ணி.
"சிங்காநல்லூர்ல என் கிளாஸ்மேட் பொண்ணுக தங்கற ரூம் இருக்கு.உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா இன்னும் கொஞ்சம் நாளுக்கு அங்கே தங்குங்க.அம்மா,அப்பா,அண்ணன் அசந்த நேரத்தில் நகை,பனத்தை சுருட்டிகிட்டு வர்ரேன்.மும்பைக்கு ரயிலேறிடலாம்.அப்புறம் கடவுள் விட்ட வழி" என்றான் வாசு.
"உன் கிளாஸ் பொண்ணுக இதுக்கு ஒத்துக்குவாங்களா?" என்றார் அண்ணி.
**
"ஏன் ஒத்துக்க மாட்டோம்?வாசு எல்லா விவரமும் சொல்லிட்டான்.உள்ளே வாங்க" என்றாள் கவிதா.
சுஜாதா தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார்.அறைமூலையில் மேலும் இரு பெண்கள் அவரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது.
"பயப்படாதீங்க..அவங்க கிராமம்.அவங்களுக்கு இதெல்லாம் புதுசு.ஆனால் நீங்க இங்கே தங்குவதில் எங்க யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை." என்றாள் கவிதா.
"ரொம்ப தேங்க்ஸ் கவிதா" என்றான் வாசு.அழுகிறார் போல் ஆகிவிட்டான்."அண்ணி..சாரி சுஜாதா மேல எனக்கு உயிரே இருக்கு.துரும்பு பட்டாலும் தாங்கிக்க மாட்டேன்.உங்களை அதிகமா தொந்தரவு பண்னமாட்டேன்.இன்னும் இரண்டு நாள்.பணத்தை புரட்டிட்டு வந்துடறேன்."
வாசு மெதுவாக கீழிறங்கினான்.சுஜாதா ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.வாசு திரும்பி,திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தான்.
****
அண்ணி காணாமல் போனதை பற்றி அண்ணன் அலட்டிக்கொள்ளவே இல்லை."ஓடுகாலி கழுதை, எங்கேயோ போய்த்தொலையட்டும்" என உறுமினார்."போலிஸில் சொல்லலாம்" என சொன்ன அம்மாவை பார்த்து முறைத்தார்.கப் சிப்..அத்துடன் பேச்சு நின்றது.
இரவு வாசு மெல்ல எழுந்தான்.லாக்கரை திறந்து பனத்தையும், நகையை எடுத்தான்.தனது சர்ட்டிபிகேட்டுகளை எடுத்துக்கொண்டான்.மெல்ல கேட்டை திறந்து வெளியேறினான்.
பின்னால் அவனுக்கே தெரியாமல் அவன் அப்பா செண்பகராமன் அவனை பின் தொடர்ந்தார்.
ஏதோ வீட்டு கதவை நள்ளிரவில் வாசு தட்டுவது தெரிந்தது.ஒரு பெண் வெளியே வந்தாள்.யார் அது?எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே?இதென்ன வாசுவை அனைத்துக்கொள்கிறாள்??அட கடவுளே...அவளா இவள்?இருக்க முடியாது...
செண்பகராமன் அதிர்ச்சியில் உறைந்தார்.
"மும்பை போயிட்டா உடனே வீடு பாக்கணும்" சொல்லிக்கொண்டு படி இறங்கிய வாசு முகத்தில் டார்சு வெளிச்சம் விழுந்தது..அப்பா..
"இது என்ன கோலம்டா சங்கரு?உன்னை இப்படி பாக்கவா உசுரை வெச்சிருந்தேன்?"
செண்பகராமன் அழுதார்.
"அப்பா...நான் பல வருடம் மறைச்சு,மறைச்சு பார்த்தேன்.முடியலை.ஆணா நடிக்க தான் முடிந்ததே ஒழிய வாழ முடியலை.தம்பி வாசு தான் தைரியம் சொல்லி மும்பைக்கு கூட்டிபோய் ஆபரேஷன் பண்ணி என்னை பொண்ணா மாத்தறதா சொன்னான்.அரவாணிக்கெல்லாம் தலையெழுத்து இதுதானே?எனக்கு வேற வழி தெரியலை..மன்னிசிருங்கப்பா" என்றாள் சுஜாதா.
"சங்கரு..இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.ஊட்டுக்கு வா.எம்பொண்னாவே இரு.ஊர் என்ன சொன்னாலும் கவலை இல்லை.எங்கேயோ போயி நீ துடிப்பதை என் கண்னால் பார்க்க முடியாது.அரவாணின்னா என்ன கேவலமாடா?அதுவும் மனுச பொறப்புதானே?வா கண்ணு" என்றார் செண்பகராமன்.
"அண்ணி..அப்பா சொல்றதுதான் சரி.வாங்க வீட்டுக்கு போகலாம்.அப்பா கிட்ட சொல்லி இங்கே நல்ல டாக்டரா பாத்து ஆபரேஷன் பண்ணிக்கலாம்" என்றான் வாசு.
"ஏன்டா...அண்னன் பொண்ணானா அண்ணின்னு கூப்பிடணும்னு எவன்டா சொல்லிக்கொடுத்தது?முட்டாபய மவனே" என்றார் செண்பகராமன்.
கல கலவென சிரித்தாள் சுஜாதா.
மூவரும் ஆட்டோ பிடித்து வீட்டை நோக்கி விரைந்தனர்.
--
செல்வன்
www.holyox.tk
"Beer is proof that God loves us and wants us to be happy"- Benjamin Franklin
அண்ணாச்சி,
இந்த தபா நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.மக்களே ஆடிக்கட்டும்:-)
நான் வேணும்னா ஆரம்பிக்கட்டா....
வேற ஒன்னும் இல்லை... செல்வன் நிறைய மசாலாப்படங்கள் பார்ப்பார் போல. அதான் நல்ல கருத்து சொல்லனும்னாலும் கிளுகிளுப்பு தலைப்பும் கதையோட்டமும் வேணும்னு நினைச்சிட்டார் போல
பிரேம்,
கருத்து சொல்றதுக்கெல்லாம் கதை எழுதறதில்லை.சுவாரசியத்துக்கு தான் எழுதுகிறேன்.
தலைப்பு வைப்பதெல்லாம் சும்மா ஜாலிக்கு.
ராசா.... நீங்க என்ன ஆரம்பிச்சாலும் கடைசில கும்மில கும்மப்படும் பருப்பொருள் நீங்க தான் என்பதை அடிக்கடி நான் தான் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேணுமோ? --
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
நானும் ஆஜர்.தானைத்தலைவர் பிரேம் வாழ்க..
//தானைத்தலைவர் பிரேம் வாழ்க..//
வழிமொழிகிறேன்.
வாழ்க பிரேம்.வளர்க அவரது புகழ்
வழிமொழிகிறேன்.வாழ்க பிரேம்.வளர்க அவரது புகழ்
என் இதயக்கனிக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பார்த்து புளகாங்கிதமடைகிறேன்.
வாழ்க பிரேம்!
ஓங்குக அவர் புகழ்!
ஆனல், இதுக்கெல்லாம் பயந்து பிரேம் சீரியஸா எழுதுவதை விட்டு விட மாட்டார் என்பதையும் இப்போது உயிரோசையில் எழுதும் என் கவிவாரிசு ஞானபீடத்துக்கான கவிதைப்பரிசு வாங்குனம் வரை ஓய மாட்டார் என்பதையும் எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
(இதுவும் செல்வன் கதை மாதிரிதான்..கிகிகி. சும்மா சுவாரஸ்யத்துக்காக)
அதானே பார்த்தேன்..... என்னடா இன்னிக்கு பனி மழை கொட்டிடுமோன்னு பயந்துட்டேன் ஒரு வினாடி...
வழிமொழிகிறேன்.வாழ்க பிரேம்.வளர்க அவரது புகழ்
அது சரி... ஒருத்தன் சிக்கினா கூடி கும்மியடிச்சுருவீங்களே :)செல்வன்...... u too???? :))))))))))))))))))அண்ணாச்சி.... இது விட அதிரடியா என்னை கும்ம முடியாது!!!!! அவ்வ்வ்வ்வ் :)