கட்டுரை ஆசிரியரின் சம்மத்துடன் மறுபதிப்பு செய்யப்படுகின்றது! கட்டுரை ஆசிரியரும் குழுவில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்.
-சுபா
கௌதம சன்னா
இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும்.
நம் காலத்திற்குப் பிறகு வரும் எத்தனையோ காலங்களுக்குப் பிறகு நாம் வாழும் இந்த பூமி அடையப் போகும் அழிவிற்கு இப்போது மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டது உலகின் மனித இனம். சூரியன் அணைந்து அதிலுள்ள நெருப்பாற்றல் அத்தனையும் தீர்ந்துபோய், ஒரு மாபெரும் சிவப்பு நெருப்புக்கங்கு கோளமாக தன்னைத் தானே பெரிதாக்கிக் கொள்ளும் காலத்திற்கு சுமார் நானூறு கோடி ஆண்டுகள் பிடிக்கலாம், அப்போது பெரிதாகும் சூரியக் கோளம் நாம் வாழும் இந்த பூமியை சாம்பலாக்கி விழுங்கிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் மனிதக்குலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் உங்களை தொற்றிக் கொள்வது புரிகிறது. நிச்சயம் மனிதக்குலம் தழைக்கும்.
உலகம் அழியத் தொடங்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வளித்த இந்த பூமிப் பந்தை விட்டு மனிதர்கள் தப்பிவிடு வார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதாவது ஓரிடத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு கோளத் தினைக் கண்டுபிடித்து குடியேறி விடுவார்கள். அதற்கான தொழில் நுட்பத்தை அவர்கள் விரைவில் அடைந்தும் விடுவார்கள். புதிதாக குடியேறிய கோளத்திலிருந்து பூமியை அவர்கள் நன்றி யோடு பார்ப்பார்களா…?
தூரத்தில் ஒரு சிறு ஒளிப் புள்ளியாய் தெரியப் போகும் இப்புவியை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களால் யோசிக்க முடியுமானால் உங்களுக்கு உலகத்தின் மீது ஒரு பாசம் பிறப்பதை உணர முடியும். ஆனால் அன்றைய மனித குலம் தப்பிப் போகும்போது அவர்கள் தம்முடன் எதைக் கொண்டு போவார்கள்.
பைபிளில் வரும் ஒரு கதையில், நீரினால் உலகம் அழியப் போகிறது என்று கடவுள் நோவாவுக்குச் சொல்கிறார். பின்பு கடவுளின் கட்டளையின்படி உலகம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். எனவே நோவா ஒரு கப்பலை கட்டி, அதில் உலகத்தின் அனைத்து உயிரினங்களையும் இணைகளாக கொண்டு போய் சேர்த்து காப்பாற்றிய கதை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் உயிரினங்களோடு அவருக்குத் தெரிந்த யூதர்களை மட்டும் தனது பேழையில் கொண்டுப் போனாரென்றால் பிற மக்களெல்லாம் என்ன ஆகியிருப்பார்கள்..? இந்த கேள்வி அநாவசிய மாகப் படலாம், ஆனால் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படி மனிதர்கள் தப்பிப் போகும்போது அந்த விண்கலத்தில் தமிழர்கள் இருப்பார்களா…? அப்படி இருந்தால் அவர்களின் சாதி அப்போது இருக்குமா…? தலித்துகள் இருப்பார்களா..? பார்ப்பனர்கள் இருப்பார்களா..,? என்று கேள்வி களை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
இப்படி உலகம் எப்படியோ வளர்ந்து.. எதை யெதையோ யோசித்துக்கொண்டிக்கும் நிலையில் தமிழர்கள் எதை யோசித்துக் கொண்டிருக் கிறார்கள்.. என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்…? ஆனால் நிச்சயம் உங்களால் கற்பனை செய்ய முடியாது…? அது சற்று கடினமான வேலையாகத் தெரியும்…? ஏனென்றால் உங்கள் கற்பனையை நமது சமகாலத் தமிழர்கள் திருடிவிட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால், கூளிங்கிளாஸ் போட்டால் என்ன என்கிற மிக அவசியமான கேள்விகளால் நொந்துப் போயிருப் பீர்கள்; அல்லது நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வற்கான நாளினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பீர்கள்; அல்லது நடிகைகளின் கிசுகிசுக்களை சலிக்காமல் பகிர்ந்துக் கொண்டிருப் பீர்கள்; அல்லது கிரிக்கெட்டில் இந்தியா எப்படி தோற்றுப் போனது என்பதைப் பற்றியும் அது எப்படி வென்றிருக்கலாம் என்பதைப் பற்றியும், ஆத்திரம் தீரும் வரையில் போகும் இடமெல்லாம் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்; அல்லது தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த சேனலைப் பார்க்கலம் என்று ஓயாமல் தொலைச் சுட்டுக் கருவியை அழுத்திக் கொண்டிருப்பீர்கள்; அப்படி எதுவும் இல்லையென்றால் நம்மைவிட இந்த உலகத்தில் எவன் உயர்ந்தவனாய் இருக்கிறான்.. யாரும் இருக்க முடியாதே..! நாங்கள் தான் நெருப்பில் பிறந்தோமே! அல்லது வானத்திலிருந்து தேவராய் குதித்தோமே! என்று பலவாறாய் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
இதுதான் இன்றையத் தமிழகம். கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழன் அந்தக் காலத்தினை விட்டு முன்னேறி விட்டானா.. முன்னேறி இருந்தால் நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது அல்லது விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவன் உங்களை பற்றி இவன் எந்த சாதிக்காரனாக இருப்பான் என்று யோசிக்காமல் இருப்பானா..? அல்லது இவனைத் தொட்டால் எதாவது தீட்டு ஒட்டிக்கொள்ளுமா என்று நினைப்பானா..? அல்லது டாஸ்மாக் கடையில் போதை யேற்றிக்கொண்டு முதுக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் துருபிடித்தக் கத்தியை வைத்து இன்றைக்கு எவன் தலையை அறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப் பானா..? இப்படியெல்லாம் யோசிக்க மாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
தேசிய குற்றவியல் புள்ளியல் துறை வெளியிட்ட ஒரு புள்ளி விவரப்படி; இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5 தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள். இது வாரக்கணக்கு என்றால்; நாள் கணக்குபடி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 27 வன்கொடுமைகள் நடக்கின்றன. 3 தலித் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். 11 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். சுருக்கிச் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் தலித்துகளுக்கு எதிரான குற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி…?
நீங்கள் தமிழகத்திற்குள் அல்லது இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானால் போய் பாருங்கள்; வலைப் பின்னல் போல கிராமங்களைப் பார்க்க முடியும், ஒவ்வொரு கிராமமும் இரண்டாகப் பிரிந்து இருப்பதை உங்களால் பார்க்க முடியும், அது கிராமம் என்றும் சேரி என்றும் பிரிந்து இருப்பதை பார்க்கலாம். இவை எப்படி உருவாயின..?
சேரிக்குள் எப்படி தலித்துகள் மட்டும் அடைக்கப்பட்டார்கள், ஊருக்குள் எப்படி சாதி இந்துக்கள் வந்தார்கள்..? மலைகளில் எப்படி பழங்குடி மக்கள் குடியேறினார்கள்..? ஊருக்குள் இருப்பவன் சேரிக்காரனை தொட மறுக்கிறானே ஏன்..? அவன் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் தலையை எடுக்கிறானே ஏன்..? அல்லது தற்கொலை செய்துக் கொள்கிறானே ஏன்..? நான் உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்கிறானே ஏன்..? நீங்களெல்லாம் தாழ்ந்த சாதிக்காரன் என்று ஒரு கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறானே ஏன்…?
திருடுவதற்கு என்று ஒரு கூட்டமும், அதை நியாயப்படுத்த ஒரு கூட்டமும் இருக்கிறதே ஏன்..? எதுவும் கிடைக்காமல் வயிற்றில் ஈரத் துணியோடு நிலத்தில் இறங்கி உழைத்துக் கொண்டிருக்கிறதே ஒரு கூட்டம் அதற்கு மட்டும் அப்படி ஒரு சாபம் ஏன்..? இதற்கெல்லாம் எது காரணம்…? இவனை சேரியில் அடக்கினால் அடங்கி போவான் என்று ஒரு கூட்டம் நினைத்தால், அப்படியல்ல நானும் ஒரு கூட்டத்தை என்னை விட கீழான மற்றொரு சேரியில் அடக்கி வைப்பேன் என்று நடந்துக் கொள்கிறதே ஒரு கூட்டம்.. எப்படி..?
துணி வெளுக்க ஒரு கூட்டம். முடித்திருத்த ஒரு கூட்டம், செறுப்புத் தைக்க ஒரு கூட்டம், மலசலங் களை வாரியெடுக்க ஒரு கூட்டம், கடவுளோடு பேச ஒரு கூட்டம், கடவுளை எம் மீதே இறக்கி ஆடுவேன் என்று ஒரு கூட்டம், பணத்தை சேமிக்க ஒரு கூட்டம், செலவழிக்க ஒரு கூட்டம், இல்லை நாங்கள் ஆட்சி மட்டும்தான் செய்வோம் எங்களுக்கு வேறு வேலை தெரியாது என்று சொல்லிக்கொள்ள ஒரு கூட்டம், கூட்டிக் கொடுக்க ஒரு கூட்டம், கூடிக் குலவ ஒரு கூட்டம். எதையும் மாற்ற விடமாட்டோம் எல்லாம் சனாதனத்தின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு கூட்டம்.. ஏன் இப்படி..?
எதிர்த்து பேசி விட்டாலே வாயில் மலத்தினை திணிக்கவும், மூத்திரத்தை பெய்யவும் மனம் வருகிறதே ஏன். அதை செய்யக்கூடிய ஒரு மனிதத் தன்மையற்ற மனநிலையை தந்தது எது? ஏன் இப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்; நீங்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன்? அவர்களுக்கு அந்த உயர்ந்த தகுதியைக் கொடுத்தது எது.. யார்..?
அழகு சென்னையின் நாள்தோறும் குவியும் குப்பைகளை அள்ள மட்டும் ஒரு கூட்டம், மனிதக் கழிவுகள் அடைத்துக்கொண்டால் மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்குவதற்கு ஒரு கூட்டம். அதை பார்த்துக்கொண்டு மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டுபோகும் ஒரு கூட்டம். இப்படி எல்லாக் கூட்டத்தின் செயல்களுக்கும் நியாயத்தினை கற்பிப்பது எது. அவர்கள் குற்ற உணர்வின்றி செயல்படுதற்கான ஆற்றலை எங்கிருந்து பெறு கிறார்கள். அதற்கான மூலம் எது..?
நகர் புற குடிசைப் பகுதிகளில், சாலையோரங் களில், கூவத்தின் நாற்றம் மிகுந்த சந்தடிகளில், கேட்பாரற்று ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்படும் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் அவர்களது விதியா? அதை மாற்றும் வல்லமை அரசக்கு இருந்தும் எந்த விதமான அக்கறையும் இல்லாமல் புறக்கணிக்கிறதே ஏன்..? அவர்கள் ஸ்லம் மக்கள், குப்பத்து மக்கள், சேரி மக்கள் என்று உதாசீனப்படுகிறார்களே ஏன்..?
நாகரிகம் பெருத்த பெரு சிறு நகரங்களில் கார்களில், துள்ளுந்துகளில் போகும் படித்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் முந்திச் சென்று போக்குவரத்து விதிகளையெல்லாம் அடித்து நொறுக்கி தனது சுயநலத்தை நிலை நிறுத்துகிறார்களே ஏன்..? வரிசையில் போக மனமில்லாமல் ஒருவர் மீது ஏறிப் போகும் மனநிலையை கொடுத்தது எது..?
நம் கண்ணெதிரிலேயே பார்க்கும் எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணமாக.. கொலை, கொள்ளை, தீ வைப்பு, திருட்டு, கற்பழிப்பு, அடிதடி, கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்புணர்வு, அவமானம், அசிங்கம், வறட்டு கௌரவம், முறையற்ற உறவுகள் என எல்லா வகையான தீமைகளும் எந்தவிதமான கூச்சமும் இன்றி நடந்துகொண்டிருக்கிறதே.. அச்சப்படும் மக்களும் அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் யார் மீதாவது பழியைப் போட்டு விட்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அமைதியாக இருக்கிறார்களே அதற்கு மூலம் என்ன..?
உறவுக்குள் மட்டும் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் எப்போது வந்தது. அதற்கும் இதுவரை பேசி வந்த தீமைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா..? கோடிக்கணக்கான தெய்வங்கள், ஆயிரக் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான ஞாநிகள், முனிவர்கள், அருளுரையாளர்கள், தெருவிற்குத் தெரு கோயில்கள் என எல்லாம் இருந்தும் எதற்காக இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள், கடவுள்கள் தடுத்தாலும் தமது பெருமையை கடவுளுக்கும் ஏற்றி அவரை தமது கைப்பாவையாக மாற்றிக் கொள்கிறார்களே ஏன்..?
இந்திய சமுகத்தில் சரிபாதியாய் இருக்க வேண்டியப் பெண்கள் 1000 ஆண்களுக்கு வெறும் 908 பேர் மட்டுமே இருக்கிறார்களே ஏன்..? தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 995 பேர் மட்டும் இருக்கிறார்கள் என்றால் கோளாறு எங்கிருக்கிறது..? பெண்கள் மட்டும் ஏன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும்..? யார் இதைத் தீர்மானித்தது, அல்லது எது தீர்மானித்தது..? பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை தீர்மானித்தது எது..? பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொல்லும் கொடுந்துணிவை அளித்தது எது..?
இப்படி எல்லாத் தீமைகளுக்கும் மூலமாக இருப்பது எது..? என்கிற கேள்விக்கு பல பதில்களை நம்மால் பெற முடியும்.. ஆனால் நமது சமூகத்தில் பல பதில்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதற்கெல்லாம் ஒரே பதில் தான். அதுதான் சாதி.. சாதிதான்.. சாதியேதான்…!
இந்த சாதி என்று சொல்கிறார்களே அது எப்படி இருக்கும், அதற்கான உருவம், மணம், குணம் என்ன..? யார் அதை படைத்தது.. அதற்கும் தீண்டாமைக்கும் உள்ளத் தொடர்ப்பு என்ன.. தீண்டாமை எப்படி உருவானது அல்லது யார் உருவாக்கியது.. இன்னும் ஏன் இவைகள் அழியாமல் இருக்கின்றன. யாராவது உலகத்தின் மேலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறார் களா..? அவற்றை செயல்படுத்துகிறார்களா…? இவற் றிற்கான விடைகளைத் தெரிந்துகொண்டால் பிரச்சினைகளின் வேர்களைக் கண்டுபிடிக்கலாம் அல்லவா?
படிக்காதப் பாமர மக்களிடம் புரையோடியிருந்த சாதி இப்போது கற்றுத் தெளிந்த மக்களையும் முட்டாளாக்கி கொடூரமாக வளர்ந்து கொண்டிருக் கிறது. எங்கும் சாதியின் வன்முறை வெறியாட்டம் தலை விரித்தாடுகிறது. அது தனக்கான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எல்லா இயற்கை அறத்தையும் அது குழித் தோண்டி புதைத்துக் கொண்டுள்ளது. அதன் கோரத்தைப் பற்றி புரிந்துக் கொள்ளாதவர்களால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் அப்படி கருத்துச் சொல்லப் போய் தன் சாதியைப் பற்றி பேச நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கிப் போகிறார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் சாதி மக்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு இருக்குமா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஒரு மாபெரும் பிரச்சினையின் மூலத்தை அறிந்துக் கொள்ளாமல் இனி எதையும்.. சனநாயகத்தை, முதலாளித்துவத்தை, உண்மையான மதத்தன்¬மையை, மனிதத் தன்மை உள்ளிட்ட எதைப் பற்றியும் நாம் பேச முடியாத நிலைக்கு வந்துள்ளோம்.
எனவே, சாதியைப் பற்றி புரிந்துகொள்ள அதன் மூலம், வளச்சி இயக்கம் மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றை குறித்த பரந்த அறிவை நாம் பெற வேண்டும். அதற்கு இன்றைக்கு உருவாகியுள்ள புதிய கண்ணோட்டத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள சாத்தியங்களுடன் அவற்றின் மூலத்தை பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குத் தான் இந்த தொடர்.
புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த இந்த அற்புதமான காலத்தில் இந்த துறையின் ஆதி மூலவராக நான் அவரையே பார்க்கிறேன். சாதியின் அத்தனை நுட்பங்களையும் அவர் ஆராய்ந்திருக்கிறார். அதன் இருளான பக்கங்களின் மீது பெரும் ஒளியினை பாய்ச்சி அதை யாரும் புரிந்துகொள்ள முடியும் என்று வழிகாட்டி இருக்கிறார். அவரின் அறிவியல் பார்வையின் ஒளியில் சாதியின் மூலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும், ஆற்றல்களையும், அதை அழிக்கும் வழிகளையும் இனி பார்க்கப் போகிறோம்.
ஆர்வமுள்ளவர்கள் அவரின் ஒளியை தொடர்ந்து வரலாம். உங்களை அறிவின் ஒளி பொருந்தியவர்களாக மாற்றிக்கொள்ளலாம். யாராவது நான் இந்த சாதிக்காரன் என்று தோளை தூக்கும்போது அவர்களை பரிதாபமாக பார்க்கலாம்.. அவர்களின் அறியாமையை நினைத்து கோபத்துடன் சிரிக்கலாம்.. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து அவர்கள் தலைகுனியலாம்.. நீங்கள் தயாராக இருந்தால்… வரலாற்றின் இருண்ட பக்கங்களை தேடி செல்லும் நெடும்பயணத்தில் ஒளியோடு பயணிக்க வாருங்கள்…!
அடிப்படை யிலிருந்து தொடங்குவோம்..!
சாதியை ஒழிக்கமுடியுமா?
'மேல் கீழ்' என்னும் சாதியேற்றத்தாழ்வு நம்மிடமிருந்து அகலுமா?
*************************************************************************************
சாதிகளில் ஏற்றத்தாழ்வென்பது பல்லாண்டுகாலமாயிருந்துவருவது. அதை திடீரென்று தூக்கிப்போட்டுவிடுவதென்பது நடக்கமுடியாதது. திடீரென்றென்பதைவிடவும் இனி அதை மாற்றவேமுடியாதென்பதுதான் உண்மை!
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ்செய்வர் சிறப்பு
(குறள் 752) என்னும் திருவள்ளுவர்கூற்றுப்படி, தாழ்த்தப்பட்டோர் இல்லாதவராயிருந்ததால் அவ்வாறு கீழாகநடத்தப்பட்டனராவென்றால் அதுவுமில்லை. இல்லாதவராயிருந்தாலும் மேற்சாதியிற்பிறந்தவர்கள் அவர்களது சாதிக்காகவே மதிக்கப்பட்டனர். கீழ்ச்சாதியிற்பிறந்தவர்களோ அவர்களது சாதிக்காகவே பழிக்கப்பட்டனர்.
இந்த எண்ணம் கல்விமேம்பாட்டினால் சற்றே மாறியிருக்கதென்றுவேண்டுமானாற்சொல்லலாமேயன்றி, எவர்மனத்திலிருந்தும் அந்த சாதியென்பது அவர்களது அடிமனத்திலிருந்து முற்றிலும் அகன்றுவிட்டதாய் சொல்லமுடியாது! அது ஓர் அணைக்கமுடியாத தீ!
திருவள்ளுவரேகூட,
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
(குறள் 959) என்றகுறளில் குலத்தின்படியே ஒருவரது பேச்சுவழக்குமிருக்குமென்றும்,
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்கண் ஐயப் படும்
(குறள் 958) என்றகுறளில் ஒருவருடைய குணமுங்கூட குலத்தின்படியேயமையுமென்றுங்கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இதேயெண்ணத்தாலேதான் மேற்சாதியிற்பிறந்தவனை திட்டும்போதுகூட அவனை கீழ்ச்சாதிப்பெயரைக்கொண்டுதிட்டுவதும் கீழ்ச்சாதிக்காரனை அவனது சாதியைச்சொல்லித்திட்டுவதும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
அரசு இதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தாலும், ஒவ்வொருவருடைய அடிமனத்திலும் வேரூன்றியிருக்கும் 'மேல் கீழ்' என்னும் எண்ணம் மறைந்துவிடுமென்பதை நம்பமுடியாது.
கல்வியறிவால், 'அவர் மேற்சாதிக்காரர்!' என்னும் அச்சம் கீழ்ச்சாதிக்காரர்களின்மந்த்திலிருந்தும்
'இவன் கீழ்ச்சாதிக்காரன்!' என்னும் இளக்காரம் மேற்சாதிக்காரர்களின்மனத்திலிருந்தும் ஒருகாலத்திலிருந்ததைக்காட்டிலும் இன்று குறைந்திருக்கிறதென்பதை மறுக்கமுடியாது.
ஆனால் அதற்காக இந்த சாதிவேற்றுமையென்பது முற்றிலுமாய் ஒழிந்துவிடுமென்பதைமட்டும் நம்புவதற்கில்லை!
கல்விமேம்பாட்டினாலும் பொருளாதாரச்சமன்பாட்டினாலும் ஒருவேளை அதை சாதிகமுடியலாம்.
ஆனால் அதெல்லாம் நடக்குமாவென்பதையும் எப்போதுநடக்குமென்பதையும் இப்போதுசொல்லமுடியாது!
அரசியலே இன்று சாதியினடிப்படையில்வந்துவிட்டபிறகு இதெல்லாம் நடக்குமா?
அருமையானதொடக்கம்! தொடருங்கள்! இதுபோன்ற கட்டுரை சாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்போருக்கு ஒரு மனமாற்றத்தை தரும். இது அவர்களுக்கு ஒரு மருந்தாக அமையட்டும்.சாதியை ஒழிக்கமுடியுமா?
'மேல் கீழ்' என்னும் சாதியேற்றத்தாழ்வு நம்மிடமிருந்து அகலுமா?
*************************************************************************************சாதிகளில் ஏற்றத்தாழ்வென்பது பல்லாண்டுகாலமாயிருந்துவருவது. அதை திடீரென்று தூக்கிப்போட்டுவிடுவதென்பது நடக்கமுடியாதது. திடீரென்றென்பதைவிடவும் இனி அதை மாற்றவேமுடியாதென்பதுதான் உண்மை!
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ்செய்வர் சிறப்பு(குறள் 752) என்னும் திருவள்ளுவர்கூற்றுப்படி, தாழ்த்தப்பட்டோர் இல்லாதவராயிருந்ததால் அவ்வாறு கீழாகநடத்தப்பட்டனராவென்றால் அதுவுமில்லை. இல்லாதவராயிருந்தாலும் மேற்சாதியிற்பிறந்தவர்கள் அவர்களது சாதிக்காகவே மதிக்கப்பட்டனர். கீழ்ச்சாதியிற்பிறந்தவர்களோ அவர்களது சாதிக்காகவே பழிக்கப்பட்டனர்.
இந்த எண்ணம் கல்விமேம்பாட்டினால் சற்றே மாறியிருக்கதென்றுவேண்டுமானாற்சொல்லலாமேயன்றி, எவர்மனத்திலிருந்தும் அந்த சாதியென்பது அவர்களது அடிமனத்திலிருந்து முற்றிலும் அகன்றுவிட்டதாய் சொல்லமுடியாது! அது ஓர் அணைக்கமுடியாத தீ!
திருவள்ளுவரேகூட,
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்(குறள் 959) என்றகுறளில் குலத்தின்படியே ஒருவரது பேச்சுவழக்குமிருக்குமென்றும்,
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்கண் ஐயப் படும்(குறள் 958) என்றகுறளில் ஒருவருடைய குணமுங்கூட குலத்தின்படியேயமையுமென்றுங்கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இதேயெண்ணத்தாலேதான் மேற்சாதியிற்பிறந்தவனை திட்டும்போதுகூட அவனை கீழ்ச்சாதிப்பெயரைக்கொண்டுதிட்டுவதும் கீழ்ச்சாதிக்காரனை அவனது சாதியைச்சொல்லித்திட்டுவதும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
அரசு இதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தாலும், ஒவ்வொருவருடைய அடிமனத்திலும் வேரூன்றியிருக்கும் 'மேல் கீழ்' என்னும் எண்ணம் மறைந்துவிடுமென்பதை நம்பமுடியாது.
கல்வியறிவால், 'அவர் மேற்சாதிக்காரர்!' என்னும் அச்சம் கீழ்ச்சாதிக்காரர்களின்மந்த்திலிருந்தும்
'இவன் கீழ்ச்சாதிக்காரன்!' என்னும் இளக்காரம் மேற்சாதிக்காரர்களின்மனத்திலிருந்தும் ஒருகாலத்திலிருந்ததைக்காட்டிலும் இன்று குறைந்திருக்கிறதென்பதை மறுக்கமுடியாது.ஆனால் அதற்காக இந்த சாதிவேற்றுமையென்பது முற்றிலுமாய் ஒழிந்துவிடுமென்பதைமட்டும் நம்புவதற்கில்லை!
கல்விமேம்பாட்டினாலும் பொருளாதாரச்சமன்பாட்டினாலும் ஒருவேளை அதை சாதிகமுடியலாம்.
தமிழகம், இலங்கை தவிர்த்த உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த சாதி என்ற ஒன்றில்லாமல் தான் வாழ்கின்றனர். மனித குல குழு வேறுபாடுகளின் தனித்துவம் என்பது மொழி, சில பண்பாட்டுக் கூறுகள் என்பதன் அடிப்படையில் விளங்குவது ஒரு சிறப்பு அம்சம். ஆனால் இதனை தமிழகத்திலும் இலங்கையிலும் இருப்பது போல சாதி வேறுபாட்டில் வைத்து உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனச் சொல்வதும் பிரித்துப் பார்த்து நடைமுறையில் இருப்பதுவும் ஒரு கொடுமை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி சன்னா...பேட்டியை முழுக்க படித்தேன். தலித் இயக்கங்கள், அதன் வரலாறு, அதன் முன் உள்ள பணிகள் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். நீங்கள் மின் தமிழில் இணைந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.

1910களின் துவக்க வருடங்களில் கே அப்பாதுரை, புலவர் பெரியசாமி, ஆர் வீரய்யன் முதலானோர் முதன்மையாகவும், 1920ல் எம் சி ராஜா இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலித் தலைவராகவும் இருந்தார்கள். 1930ல் ஸ்வாமி சகஜானந்தர், பி.எம். வேலாயுதபாணி, வி.ஐ முனுசாமிப்பிள்ளை, என். சிவராஜ், அன்னை மீனாம்பாள் (இந்தியாவின் முதல் தலித் பெண் தலைவர்), ஜோதி வெங்கிட செல்லம் மற்றும் பி. பரமேஸ்வரன் ஆகியோர் தலித்துகளுக்காக அம்பேத்கரால் உந்தபட்டு பணியாற்றினார்கள். ஆக தமிழ்நாட்டில் தலித் எழுச்சிக்கு செறிவான ஒரு வரலாறு இருக்கிறது
அன்புள்ள சுபாஎன்னுடைய வலைப்பூவில் பண்டிதரின் ஆய்வுகள் சிலவற்றை பதித்துள்ளேன். பாருங்கள். முடிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
பேட்டியின் முதல் பகுதி இது என நினைக்கின்றேன்.இதனை மின் தமிழ் மேடையில் பதிந்து வைக்க பரிந்துரைக்கின்றேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அம்பேத்கர் தாம் எழுதிய ‘மறைவிலிருந்து வெளிப்படும் பண்டைய இந்தியா’ என்ற கட்டுரையில் புத்தர் வாழ்ந்தபோது தேவர்கள் அடிக்கடி வந்து அவரைச் சந்திக்கின்றனர். எனவே, அவர்கள் வாழ்ந்த மனிதர்களாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்திய வரலாற்றின் பல பக்கங்களை இப்படி மறைவிலிருந்து வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று எழுதினார். இந்தக் கட்டுரையினை எழுதத் தொடங்கியபோது நினைவில் ஓடிய அம்பேத்கரின் இந்த வார்த்தைகள் பல யோசனைகளைக் கிளர்த்தி விட்டது. பண்டைய வரலாறு மட்டுமல்ல, நவீன வரலாற்றிலும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவரும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நாம்தான் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்தபடி இருந்தது. குறிப்பாக, தமிழ்ச் சமூகமும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது, அதிலும் குறிப்பாக, அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பில்.
தமிழின் வரலாற்றினை அறிந்த யாவரும் தமிழ் மொழியின் எழுத்துக்கள் எப்படி மாற்றம் பெற்று வளர்ந்து வந்துள்ளன என்பதைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது. இன்றைக்கு நாம் எழுதவும் அச்சிடவும் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்கள் இன்றைக்கு இருந்தது போலவே எப்போதும் இருந்தது கிடையாது. நம்ப முடியாத அளவிற்கு அது பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. பண்டைய கால எழுத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய சமூகத்தினரால் அதனைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. ஆயினும் எழுத்துக்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய தமிழின் எழுத்து வடிவம் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஆயினும், அதில் தொடர்ந்து நீடித்த சிக்கல் என்னவென்றால் நெடில் எழுத்துக்களைப் பிரித்துப் பார்க்கவோ வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளியோ கிடையாது. மேலும், ஓலைச் சுவடிகளில் எழுதும் போது எந்த மெய் எழுத்துக்களின் மீதும் புள்ளி வைக்க முடியாது. குறிப்பாக, உயிரெழுத்துக்களில் ஓர் உதாரணத்தைப் பார்த்தால் ‘எ’ என்பதற்கான நெடில் ‘எ’ என்றுதான் இருந்தது, ‘ஏ’ என்று இல்லை. பிற்பாடுதான் இதில் மாற்றம் வந்தது. எனவே, அன்றைய தமிழ் எழுத்துக்களைப் புரிந்து படிக்க வேண்டுமென்றால் நிச்சயம் இலக்கணமும், வார்த்தையின் ஓசைகளில் தெளிவான புரிதலும் இருக்க வேண்டும். தொடர்ந்து நீடித்த இந்தச் சிக்கலில் மாற்றம் கொண்டு வந்தது அச்சுக்கலைதான்.
அதிலும் உடனே நிகழ்ந்துவிடவில்லை, ஓலைச் சுவடிகளில் எப்படி இருந்ததோ அப்படியே எழுத்துக்களை அச்சில் வடிவமைத்தார்கள் கிறித்தவ மிசனெரிகள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ் நவீனமாகியிருக்காது. கிறித்தவ பைபிளை அச்சடிக்க அவர்கள் தமிழ் எழுத்துக்களை வார்ப்புச் செய்யும்போது ஓலைச்சுவடி எழுத்துக்களை அப்படியே வார்ப்பிட்டார்கள். அதனால், தமிழின் மெய் எழுத்துக்களின் மீது புள்ளிகள் இல்லாமலும், நெடில்களில் மாற்றங்கள் இல்லாமலும் அச்சிட்டார்கள். எனினும் இந்தத் தொழில்நுட்ப மாற்றம் தமிழ் எழுத்துகளின் வரலாற்றில் மாபெரும் பாய்ச்சலாகும். ஆனால், பிரச்சனை என்னவென்றால் இலக்கணம் தெரியாத சாமானிய மக்களால் அதை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், மெய் யெழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களாக மாறும் போது கடுமையான குழப்பங்கள் உருவாயின.
உதாரணத்திற்கு சில எளிய வார்த்தைகளைப் பார்ப்போம். அம்மா என்பதில் ‘அ’ எனும் உயிர் எழுத்து ‘ம்’ என்ற மெய்யெழுத்து ‘மா’ என்ற உயிர்மெய் எழுத்து என மூன்றும் இருக்கின்றன. இவற்றை இணைத்துப் பழைய முறையில் எழுதும்போது ‘அமமா’ என்று வரும். இலக்கண ஓசை தெரியாதவர்கள் ‘அமமா’ என்பதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. இது உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள பிரச்சனை என்றால், மெய்யெழுத்துக்களில் உள்ள பிரச்சனை இன்னும் மோசம். உதாரணத்திற்கு ‘ஏற்று’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ‘ஏ’ என்ற உயிர் நெடில், ‘ற்’ என்ற மெய்யெழுத்து, ‘று’ என்ற உயிர்மெய் எழுத்து சேர்ந்தது ‘ஏற்று’, அதை ‘எறறு’ என்றுதான் அன்றைக்கு எழுத முடியும். இந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு அன்றைக்கு இருந்த வழி மெய் யெழுத்துக்களின் மீது புள்ளி வைத்தார்கள். எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் எழுதும்போது மெய்யெழுத்துக்களின்மீது புள்ளி வைப்பது சிரமமான செயல். கொஞ்சம் அழுத்திப் புள்ளி வைத்தால் ஓலை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, புள்ளி வைப்பதைத் தவிர்த்தார்கள். இதே காரணத்தினால்தான் வாக்கியங்கள் முற்றுப்பெறும்போது புள்ளி வைப்பதற்குப் பதில் சுழித்து வைத்தார்கள். எனவே, குழப்பங்கள் தொடர்ந்தன. தமிழின் முதல் நூலில் கூட இதே முறைதான் பின்பற்றப்பட்டது. அதனால், எளிய மக்கள் சுவடிகளைப் படிக்கும் வாய்ப்பின்றி இருந்தார்கள். எனவே, எழுத்துத் தமிழ் மக்கள்மயமாகவில்லை. நீண்ட காலம் நீடித்த இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் இத்தாலி நாட்டவரான பெஸ்கி என்ற வீரமாமுனிவர் (1680-1746) ஆவார்.
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் உருமாற்றம் அடைய பெஸ்கி அளித்தப் பங்களிப்பு அசாத்தியமானது. 1710 இல் தமிழகம் வந்த பெஸ்கி தமிழின் வளமான இலக்கியச் செல்வங்களையும், மரபுகளையும் உள்வாங்கிப் பெரும் மேதையாகப் பரிணமித்தார். பல நூல் களை எழுதினார். அதன் தொடர்ச்சியாக தமிழின் இலக்கண மரபு பிசகாமல் எழுத்துருக்களில் மாற்றத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய மாற்றம் அதுவரை நிலவிவந்தத் தடைகளை உடைத்து தமிழின் போக்கை மாற்றியமைத்தது. அவர் எதில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்பதைப் பார்ப்போம்.
பெஸ்கி காலத்தில் ‘எ’ எனும் உயிர் நெடிலுக்கு ‘எ’ என இருந்து வந்தது. அதை ‘ஏ’ என மாற்றினார். ‘ஒ’ நெடிலுக்கு ‘ஒ’ என இருந்ததை ‘ஓ’ என மாற்றினார். இந்த மாற்றங்கள் சிறியதுதான், ஆனால் ஓலைச்சுவடிகளின் வாழ்நாளைக் காப்பாற்றியது. ஆயினும், பெஸ்கியின் மாற்றங்கள் தமிழ் எழுத்து வரிசையில் எவ்விதமான குறைப்பையும் கோரவில்லை, மாறாக எழுத்துக்களின் தோற்றத்தை மட்டுமே மாற்றியமைத்த முயற்சிகளாகும். எனவே, உயிர் எழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து 1 என அத்தனை எழுத்துக்களும் அப்படியே இருந்தன. எனவே, எப்படிப் பார்த்தாலும் நவீன தமிழின் எழுத்து மாற்றத்தைத் தொடங்கி வைத்தவர் இத்தாலி நாட்டவரான பெஸ்கி என்ற வீரமாமுனிவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வரலாறு அத்தோடு நிற்கவில்லை, வீரமாமுனிவருக்குப் பிறகு தொடரத்தான் செய்தது. ஆனால், அது யாரையெல்லாம் ஒதுக்கிவிட்டது என்பதுதான் மறைக்கப்பட்ட பக்கங்களில் காணவேண்டிய செய்திகளாகும்.
தமிழ் எழுத்து மாற்றங்களின் வரலாற்றை ஆராய்ந்த தமிழ் வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் ஒரு பட்டியலைத் தருகிறார்கள். அதன்படி தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தியவர்களில் முதன்மை யானவர் பெஸ்கி என்ற வீரமாமுனிவர். அவர் தமிழர் அல்லர்; இத்தாலி நாட்டைச் சேர்த்தவர். அவருக்குப் பிறகு 1930களில் நடத்தப்பட்ட ‘குமரன்’ என்ற இதழ் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தொடங்கியது. 4.9.1930 நாளிட்ட குமரன் இதழில் அந்தச் சீர்திருத்தத்தைக் காணலாம். எனவே, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தொடங்கிய முதல் தமிழ் இதழ் குமரன். இதன் தொடர்ச்சியாக முருகய்யா என்பவர் 1 9 3 0 ஆம் ஆண்டும், 1 9 3 3 இல் அ.சி.சுப்பைய்யா என்பவரும் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை வளர்த்தனர். இறுதியில் 1934 இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள்தான் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். (மேலும் விவரங்களுக்கு: திரு. இரா.பாலசுந்தரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். ப.25)
இன்றைய காலக்கட்டத்தில் நாம் பெரிதும் பயன்படுத்துவது பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தின் தாக்கம்தான் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அது உண்மை என்றாலும், அது முற்றிலும் உண்மை யல்ல என்பது தமிழின் உண்மை வரலாற்றினை ஆராய்பவர்களுக்குத் தெரியும். ஒற்றெழுத்துக்களில் உயிர்மெய் எழுத்தின் மீது போடப்படும் தலைச்சுழியும், ஆய்த எழுத்தும் நீக்கப்பட்டது உட்பட பல மாற்றங்கள். எனினும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தில் இன்றைக்கு எஞ்சி நிற்பவை எவை.
உயிரெழுத்தில் உள்ள ‘ஐ’ எனும் உயிரெழுத்து, மெய்யெழுத்தோடு சேரும்போது அது ‘ை’ என ஒற்றாக மாறி இணைந்து உயிர் மெய்யாக ஒலிக்கிறது. அதற்கு கை, பை, மை போன்ற வார்த்தைகளையும், ணை, சை, டை போன்ற உயிர்மெய் உட்பட பல எழுத்துக்களையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எனவே ‘ஐ’ என்ற உயிரெழுத்து நீக்கப்பட்டால் ‘ை’ எனும் ஒற்றுடன் தொடங்கும் அத்தனை உயிர்மெய் எழுத்துக் களையும் நீக்க முடியும். அதற்குப் பதில் ‘கை’ என்பதை ‘கய்’ என்றும் ‘பை’ என்பதை ‘பய்’ என்றும் ‘மை’ என்பதை ‘மய்’ என்றும் மாற்றிக் கொள்ள முடியும்.
அதேபோல. ‘ஒள’ என்ற உயிர் எழுத்தோடு மெய்யெழுத்துக்கள் இணைந்தால் உருவாகும் எழுத்து ‘ெ-ள’ என்பதாகும், அதுதான் ‘கௌ’ எனத் தொடங்கி ‘னௌ’ என முடியும் வரிசை. எனவே இதில் மாற்றம் செய்த பெரியார் ‘ஒள’ என்ற ஒலிக்கு மாற்றாக ‘அவ்’ என்பதை முன் வைத்தார். அதனால் உயிர்மெய் எழுத்தில் கவ், ஙவ்... (உதாரணத்திற்கு பௌத்தம் என்பதை பவுத்தம் என்பது) என உயிர்மெய் மற்றும் மெய்யெழுத்துக்கள் கலந்த எழுத்துக்கள் உருவாயின. எனவே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தில் இன்றைக்கு எஞ்சியிருப்பவை இவைதான். ‘ஐ’ முற்றிலும் நீக்கியதுடன் அதன் உயிர்மெய் ஒற்றான ‘ை’ நீக்கியது, அதற்குப் பதில் ‘ய்’ பொருத்தியதாகும். என்றாலும் அது எல்லா எழுத்துக்களுக்கும் பொறுத்த முடியவில்லை. தொடர்ந்து தமிழ் நெடுங்கணக்கில் ‘ெ-ள’ எனும் எழுத்துருவிற்குத் தேவையின்றிப் போனது. எனவே பெரியார் அவர்கள் தொடங்கிய எழுத்து மாற்றம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக் குறைப்பை உருவாக்கியது என்பதில் ஐயமில்லை. அதில் தற்போது வழக்கத்தில் உள்ளவை மட்டும் நீடித்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கும்?
பெரியார் உருவாக்கிய மாற்றங்கள் தொழில் நுட்பம் சார்ந்த மாற்றங்கள், புதிய சமூக வளர்ச்சியின் மறுபலிப்பின் தேவைகள் மட்டுமே என்று குறுக்க முடியாது. ஆயினும் அதற்கான பண்பாட்டுப் பின்புலத்தினை ஆராய வேண்டுமானால் அதை பண்டிதர் அயோத்திதாசர் அவர்களிடத்திலிருந்துதான் தொடங்க முடியும் என்பது ஆச்சர்யமான உண்மை.
தமிழ் மொழி பற்றிய அயோத்திதாசப் பண்டிதரின் பார்வை அவர் பௌத்தம் ஏற்றது (1890) முதல் பெரிதும் மாறுதல் அடையத் தொடங்கியிருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு அவர் தீவிர அத்வைதியாக இருந்தவர். பௌத்தக் கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்ட பிறகு தமிழின் இலக்கியம், தத்துவம், இலக்கணம், மருத்துவம் முதலானவற்றை மறு வாசிப்பும், பௌத்த நோக்கில் மறு ஆய்வு செய்யத் தொடங்கினார். அவரது தொடக்கக் கால எழுத்துக்கள் நமக்குக் கிடைக்காமையால், அவரது மொழி ஆளுமை பற்றிய பார்வை நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. எனினும் , ஒப்பிட்டு ஆய்வதற்கு நமக்குக் கிடைத்த அவரது முதல் பௌத்த நூலான ‘புத்தரெனும் இரவு பகலற்ற ஒளி’ சிறந்த ஓர் ஆவணம், இலங்கையிலிருந்து திரும்பியவுடன் 1899 வாக்கில் இதை எழுதினார். இந்த நூலில் அவர் ஏற்கனவே கையாண்டு வந்த மொழிநடையையே கையாண்டார் எனத் தெரிகிறது. ஆனால், அவரது தொடர்ச்சியான ஆய்வுகளில் வார்த்தைக் கட்டுமானத்திலும், எழுத்துக்களைப் பயன்படுத்துவதிலும் மாறுதல் தெரிந்தது. இந்த மாற்றம் அடுத்த 8ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிப்படத் தொடங்கியது. ஜூன் மாதம் 1907இல் அவர் தொடங்கிய ‘தமிழன்’ இதழில் இந்தப்போக்கு வெளிப்பட்டது. அதன் விளைவாக, தமிழின் நெடுங்கணக்கில் முதல் மாற்றத்தைப் பண்டிதர் தொடங்கி வைத்தார். அதற்காக அவர் அளிக்கும் தத்துவப் பின்புலத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரது எழுத்துச் சீர்திருத்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, அதை விரிவாகப் பார்க்க வேண்டும்.
“பண்டிதர் தமிழ் மொழி எழுத்துக்களை நஞ்செழுத்தென்றும் அமுதவெழுத்து என்றும் இரு வகைகளாகப் பிரிக்கிறார், தீராவிடமென்னும் மொழியே குறுக்கல் விகாரத்தால் தீராவிடம், திராவிடமென” வழங்கலாயிற்று எனக் கூறுகிறார். திராவிடம் என்பது தமிழுக்குரியப் பெயர்களில் ஒன்று, தென்மொழி என்பதே தமிழின் ஆதிப்பெயர். புத்தபிரான் வகுத்தளித்த தமிழ் அட்சரங்கள் அகத்தியர் மூலமே தென்னாடு பரவியதென்றும்” பண்டிதர் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் “தமிழ் எழுத்துக்களைத் தென்னாட்டில் பரப்பியதில் பெரும்பங்கு வகித்தவர் சரஸ்வதி என வழங்கப்பட்ட அம்பிகையம்மனான அவ்வையார். எனவே, அகத்தியர் மற்றும் அவ்வை ஆகியோர் உழைப்பில்தான் தமிழின் வரிவடிவம் பரவியது என்று தமிழ் மொழி எழுத்துக்களின் பரவல் குறித்த வரலாற்றை விளக்கிய பண்டிதர், தமிழின் இரு பெரும் எழுத்துப் பிரிவுகளைப் பண்டைய இலக்கிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார். அவை, “(1) யாப்பிலக்கணம் கூறும் முதல் மொழி ஐந்தெழுத் துக்கள் யா, யோ, ரா, ரோ,லோ என்னும் மூலொற்றெழுத்தும், (2) இரட்டைப்படை மகரக் குறுக்கமும் ஆயுதமும் நஞ்செழுத்துக்கள் அமைந்துள்ளதால் தென்மொழியை திராவிட பாஷையென்றும், அ, உ, எ, க, ச, த, ந, ப, ம,வ என்னும் அமுத வெழுத்துக்கள் உள்ளதால் தென்மொழியைத் தமிழென்றும் இரு பெயரால் அழைத்து வந்தார்கள். இவற்றுள் திராவிடம் எனும் பெயர் வடநாட்டவராலும், தமிழென்னும் பெயர் தென்னாட்டவராலும் பெரும்பாலும் வழங்கப் பட்டது” என பண்டிதர் விளக்குகிறார்.
அதுவுமின்றி, தமிழை முத்தமிழ் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார், அவை; மலையாளுவாசிகள் வழங்கும் கொடுந்தமிழ், மண்ணாளுவாசிகளுள் தென்மேற்குவாசிகள் வழங்குவது கருந்தமிழ், தென்கிழக்குவாசிகள் வழங்குவது செந்தமிழ் ஆகியன ஆகும். இந்தப் பிரிவுகள் தற்போது வழக்கத்தில் உள்ள இயல்,இசை, நாடகத் தமிழின் பிரிவுகளல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பண்டிதர் கூறுவது நாட்டில் நிலவும் பேச்சு வழக்கு மொழிப் பிரிவுகளாகும். இந்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான் பண்டிதர் தமது எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைக்கிறார். பண்டிதரின் கருத்துக்கள் ஒரு புதிய திசையை அறிமுகப் படுத்தி 1907லிருந்து அவரது மறைவு வரை வளம் பெற்று வளர்ந்தது. எனில், பண்டிதரின் எழுத்துச் சீர்திருத்தம் எப்படிப்பட்டது என்பதைப் பார்க்கவேண்டும்.
பண்டிதர் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தை அவர் முன்பே கூறிய நஞ்செழுத்தில் தொடங்கினார். அதன்படி “மை” என்ற உயிர்மெய் மகர ஐகாரம் மெய் என்ற மகர ஏகாரமாக மாற்றினார். இதனால் மை என முடியும் வார்த்தைகள் மெய், மெ என முடிந்தன. முற்று வாக்கியமானால் மெய்-யும் தொடர் வாக்கியமானால் மெ-வும் பயன்படுத்தினார். இதனால்“மை”க்கு ‘ன’ என்னும் ஐகார ஒற்றினை நீக்கினார். இதைத் தமிழன் தொடக்க இதழிலிருந்து காண முடியும்.
மேலும், எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அவரது ஆர்வத்திற்கு வலுச் சேர்ப்பது போல 1907 அக்டோபர் வாக்கில் தமிழன் இதழில் ஒரு செய்தியைக் கூறுகிறார் பண்டிதர். “இப்போது சென்னைப் பட்டணத்தில் ஒரு ஆங்கிலேய வித்வான் தமிழ் பாஷையிலுள்ள 240 எழுத்துக்களுக்கு பதிலாக 17 எழுத்துக்கள் புதிதாகக் கண்டுபிடித்து இருக்கிறாராம். இந்த 17 எழுத்துக்களைக் கொண்டே தமிழ் பாஷையை பூராவும் எழுதலாம், இந்த எழுத்துக்களை இங்கிலீஷ் படித்த தமிழர்கள் சீக்கிரம் ஒப்புக்கொள்வார்கள், என்ற போதிலும் மற்ற தமிழ் ஜனங்கள் ஒப்புக் கொள்ள பின்வாங்குவார்களோ என்னமோவென்று அதைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் வருத்தப்படுகின்றாராம்.” பண்டிதர் குறிப்பிட்ட ஆங்கிலேயர் யாரெனத் தெரியவில்லை, பண்டிதரும் கேள்விப்பட்ட செய்தியைத்தான் தமிழனில் பதிவு செய்திருக்கிறார். இதற்கும் முன்பே அவரது எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி இருப்பினும், அவரது சீர்திருத்தத்திற்கான தத்துவப் பின்புலத்தைத் தமிழனில் அவர் கீழ்வருமாறு எழுதினார்:
“உடலுயிரென்னும் உண்மெய், புறமெய் இவற்றினைக் கண்டடைவதற்கே வரி வடிவாம் அட்சரங்களை வகுத்து உயிரெழுத்தென்றும், மெய்யெழுத்தென்றும், ஆவியென்றும், உடலென்றும் நஞ்செழுத்தென்றும் அமுதெழுத்தென்றும், இவ் வெழுத்துக்களுக்கெல்லாம் ஆதி எழுத்தாயது அகார பேருயிரென்றும் வகுத்து, அவ்வட்சரங்களை வாசித்துணர்ந்து கலைநூல் தெரிந்த பின்னர் தனது உடலுயிரினது பாகுபாடுகளைக் கண்டு தனக்குள்ள நஞ்சாகும் ராகதுவேச மோகங்களை சேராவிடா தகற்றி, தனக்குள்ளே அமுதாகும் சாந்தத்தைப் பெருக்கி, அகராட் சரமாகியப் பேருயிராம் அண்ணாவினால் உண்ணாவின் அமுதுண்டு அழியா பாக்கியத்தனாகி புறமெய் அகற்றி, உண்மெய்யில் நிலைத்து, நன்மெயாம் தன்மகாய ததாகனாகின்றான்...”
“சீவபிராணிகளை துன்பம் செய்யா மெய், எக்காலும் பொய் சொல்லா மெய், அன்னியர் பொருளை அபகரிக்கா மெய், அன்னியரது தாரத்தை இச்சிக்கா மெய், மயக்கமுள்ள மது பானங்களையருந்தா மெய் (புத்தரின்பஞ்ச சீலக் கொள்கை) ஆகியசுத்ததேசிகளாய் வாழும்படி வகுத்து வைத்திருக்கிறார்கள். சுத்ததேசியாய் வாழ்க்கைப் பெயரே நன்மெய்ப் பெயரென்னப்படும்”.
“இவற்றுள் அட்சர மெய்யையும், உடலையும், அட்சர உயிரையும், உண்மெய்யையும், அட்சர எண்பகுப்பையும், எண் குணத்தையும் அட்சர உடலுயிர் முப்பணினையும் உடலுயிரனது குணம் முப்பத்திரண்டையும், அட்சர புணர்ச்சி விகாரங்களையும், உடலுயிர் புணர்ச்சியின் கேடுபாடுகளையும், அகரவட்சர பேருயிரின் குறிப்பையும், நாவினது நால் வாய் மெய் சிறப்பினையும் ஆய்ந்துணருவோருக்கே உண்மெய், புறமெய் என்பதன் விகற்பங்களும் நன்மெய், தீமெயென்னும் பேதாபேதங்களும் நன்கு விளங்கும்.”
“புத்த தன்ம இலக்கியங்களையும், புத்த தன்ம இலக்கணங்களையும் உணர்ந்தவர்களுக்கே இவ்வட்சர பேதங்கள் நன்கு விளங்குமேயன்றி ஏனையோருக்கு விளங்காவாம்”.
மேலும் அதற்கு உதாரணங்களாக அவர் காட்டும் வாக்கியங்கள் நான்காகும், அவை..
நல் - நோக்கம் - நன்னோக்கம் என்பது நற்காட்சியைப் பொருந்தியதாகும்.
நல் - முயற்சி - நன்முயற்சி என்பது நல்லூக்கத்தைப் பொருந்தியதாகும்.
நல் - நூல் - நன்னூலென்பது நல்லறிவை விருத்தி செய்யுங் கலை நூலில் ஒன்றாகும்.
நல் - மெய் - நன்மெய்யென்பது களங்கமற்ற உண்மெயாம் தன்மகாயங்களில் ஒன்றாகும்.
இத்தகைய சிறந்த ஞானார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய பகுபத மொழியை நன்மையென வரைவதாயின் நல்லஞ்சனம், நல்கருப்பு, நல் லாடு எனும் பொருளைத் தருமெ யன்றி, “கடவுளே முநிநன் மெய்ப்பே ரென்னும் ஞானார்த்தம் தருமோ? ஒருகாலும் தராவாம்”
இதுதான் மை காரம் - மெ(ய்)காரமாக மாறியதற்கு பண்டிதர் தரும் விளக்கம். சுருங்கச் சொல்வதெனில் மை எனும் எழுத்து மெய் எனும் தம்மத்தின் அடிப்படையில் மனித வாழக்கையை நெறிபடுத்துவதாகும். எனவே மனித நடவடிக்கையின் பேதங்களில் எழக்கூடிய முரண்களை மாற்றியமைத்து நேர்ப்படுத்துவதாகும். அதுதான் எழுத்திலும் பிரதிபலிக்க முடியும்.
பண்டிதரின் இந்த வரையறுப்பிற்கு புத்த தம்மம் ஆழ்ந்த பின்புலத்தை அளிக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே இதை எளிமையாகப் புரிந்துகொள்ள ‘மை’யென முடியும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
நன்மை = நன்மெய், நன்மெ
தீமை = தீமெய், தீமெ
பொம்மை = பொய்மெய் (போலி + உடல்)
தன்மை = தன்மெய், தன்மெ (ஓருண்மெய்)
பன்மை = பன்மெய் (பல மெய்) பன்மெ
உண்மை = உண்மெய், உண்மெ
பொய்மை = பொய்மெய், பொய்மெ
வன்மை = வன்மெய், வன்மெ
கடைமை = கடைமெய், கடைமெ,
கடைபிடிக்கும்மெய் (இறுதி உண்மை)
இப்படி நன்மெ - தீமெ யோடு தொடர்புடைய
மை என முடியும் எழுத்துக்களை மாற்றியதோடு இன்னும் சில எழுத்துக்களை மாற்றினார். அது நஞ்செழுத்தான லகரத்தில் சேர்ந்த ஐகாரத்தில் உள்ளதாகும். அதாவது ‘அரையன்’ (அரசன்) என்பதை அரயன் என்று மாற்றினார்.
இவைதான் பண்டிதரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடிப்படைகளாகும். எனவே தாம் உருவாக்கிய அடிப்படைகளைத் தன் இறுதிக் காலம் வரை கையாண்டார்.
அதுவுமின்றி அவரது பின்னடியார்கள் அதைத் தொடர்ந்துகொண்டுச் சென்றார்கள். இவற்றின் விளைவாக, தமிழின் வார்த்தைகள் புது விளக்கம் பெறலாயின. புதிய வரலாற்றுப் போக்கிற்கு வித்திடப்பட்டது.
பண்டிதரின் இந்த வரலாற்றுப் பங்களிப்பை எப்படிப் பார்ப்பது என்பது மிக முக்கியமானது, ஏனெனில் இதுவரை இந்தப் பக்கங்களை யாரும் பார்க்கவில்லை என்பதால் அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது வரலாற்று ஆய்வாளரின் கடமை. அந்த வகையில் பார்க்கும்போது மிக நீண்ட இடைவெளியில் வீரமாமுனிவருக்குப் பிறகு தமிழ் எழுத்தைச் சீர்திருத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர் மட்டுமே.
பண்டிதர் உருவாக்கிய எழுத்துச் சீரமைப்பிற்கும் மற்றவர்கள் உருவாக்கிய சீரமைப்பிற்கும் உள்ள வேறுபாடு தெளிவானது. பண்டிதரைத் தவிர மற்றவர்கள் உருவாக்கிய எழுத்துச் சீரமைப்பின் தேவை தொழில்நுட்பம் மற்றும் அதன் வளர்ச்சியினைச் சார்ந்ததாகும். ஆனால் பண்டிதரின் சீரமைப்பிற்கு பௌத்தமே அடிப்படை. எது எப்படி இருந்தாலும் பண்டிதரின் பணியே இத்துறையில் முதல் முயற்சி. அதுவும் முன்னோடி முயற்சி. எனவே பெஸ்கிக்குப் பிறகு தமிழ் எழுத்தைச் சீர்திருத்திய முதல் தமிழர் பண்டிதர்தான். வேறுவகையில் பார்த்தால் தமிழ் நெடுங்கணக்கை நவீனப் போக்கிற்கு ஏற்றாற் போல் சீரமைத்த முதல் தமிழரும் பண்டிதர் தான். ஆனால் இந்த வரலாற்றுச் செய்தி ஏன் மறக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது?
தமிழின் மொழி வரலாற்றுக் கட்டமைப்பினை ஆய்வு செய்கிறவர்கள் எதனால் இதைத்தவறவிட்டார்கள்? என்பதை வாசகர்களின் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன்.
எனினும், இந்த வரலாற்றுக் கட்டமைப்பைப் பார்க்கும்போது தத்துவஞானி பிக்டேவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது, அவர் சொன்னார் ‘மனிதன் எப்படி இருக்கிறானோ அப்படித்தான் அவனது தத்துவஞானமும் இருக்கும்’ என்று. நம் சூழலுக்கு இதைப் பொறுத்திப் பார்த்தால் தமிழ்ச் சாதி எப்படி இருக்கின்றதோ அப்படித்தான் தமிழ் வரலாறும் இருக்கும் என்பதை யார்தான் மறுக்க முடியும்.
பிடிஃஎப் வடிவில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை யூனிகோட் வடிவிற்கு மாற்ற பொங்குதமிழ் என்ற வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி கௌதம் சன்னாவின் முழுக் கட்டுரையையும் மீண்டும் தட்டச்சு செய்யாமல் (சிறு திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது) மாற்றினேன். ஆசிரியர் கோவித்துக் கொல மாட்டார் என்ற நம்பிக்கையில்.
அன்புள்ள சுபா
பண்டிதர் பற்றின கட்டுரையை மின்தமிழில் தனியா தலைப்பிட்டு வெளியிட வேண்டுகிறேன். சாதி தீண்டாமையோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்
சன்னா: தீண்டாமையா? அதாவது ஒவ்வொரு கிராமமும் ஊர் என்றும் சேரி என்றும் பிளவுபட்டு கிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களை ஏன் சேரிகளில் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் தீண்டதகாதவர்கள் என்பதால் தான். உலகெங்கும் கெட்டோக்கள் உள்ளன. கெட்டோ இல்லாத உலகநாடு எதுவுமே கிடையாது. சுற்றுபுற சீர்கேடு, மதசீர்கேடு என ஏதோ ஒரு சீர்கேட்டை காரணம் காட்டி இத்தகைய கெட்டோக்கள் உருவாக்கபடுகின்றன. சமூகம் முன்னேறமடைய, அடைய இந்த கெட்டோக்கள் இல்லாதொழிந்துள்ளன. இன்று கருப்பின அமெரிக்கர்களுக்கு கெட்டோக்கள் உள்ளன, ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கான கெட்டோக்கள் உள்ளன
இதில் தலித்துகள் சேரி என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் பார்க்கும் வேலை
மனித பிறப்பெடுத்த தொண்மங்கள்
உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் படைப்புகளைப் பற்றிய தொண்மக் பல கதைகள் உள்ளன. அவை சாதி பற்றின புரிதலை உண்டாக்க அவசியமானவை.
எனவே சாதியின் தோற்றத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ளும் முன் மனிதக்குலப் படைப்பை பற்றினத் தொண்மங்களைத் தெரிந்துக்கொண்டால் இப்பிரச்சினையை சுலுவாக புரிந்துக்கொள்ள முடியும். ஏனெனில் கடவுள் மனிதனை படைக்கும்போது சாதி போன்ற ஒருவித அமைப்பினை படைத்திருக்கிறாரா? அச்சான்றுகளை கடவுளிடம் கேட்டால் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பதைவிட உலகின் சில பழங்குடிகளின் தொண்மக் கதைகளில் அதற்கான சான்றுகளைத் தேடமுடியும். அந்தச் சான்றுகளோடு இந்து சமூகத்தின் சாதி அல்லது மனிதப் படைப்பின் கதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும் எனவே. உலகின் மிக முக்கியமான மதங்கள் மற்றும் பழங்குடிகளின் படைப்புக் கொள்கைகளைப் பார்ப்போம்.
கிறித்துவ படைப்புக் கொள்கைப் படி ஆதியிலே தேவன் உலகத்தைப் படைத்து அதில் வானம், நிலம், கடல் நிலா உள்ளிட்ட இயற்கை பொருட்களைப் படைத்து இறுதியாக பூமி வெறுமையாக இருப்பதைக் கண்டு பூமியில் மண்ணெடுத்து அதில் முதல் மனிதனை தன் சாயலாகப் படைத்தார். அந்த படைப்பின் நாசியில் ஊதி உயிர் தந்தார். உயிர்பெற்ற அந்த மனிதனுக்கு ஆதாம் என்று பெயரிட்டார். பின்பு அவனது விலாயில் ஒரு எலும்பை உருவி அதில் ஒரு பெண்ணைப் படைத்து அதற்கு ஏவாள் என்று பெயரிட்டார். அவர்கள் பல்கிப் பெருகி பூமியை நிறைத்தார்கள் என்று பைபிளின் ஆதியாமகம் விவரிக்கின்றது. கடவுள் படைத்த ஒரு தம்பதிக்குப் பிறந்தவர்கள் பிற்பாடு தமக்குள் கலந்து சந்ததிகளைத் தோற்றுவித்தார்கள்.
இது கிறித்தவ படைப்புக் கொள்கை மட்டுமல்ல, அடிப்படையில் இதுவே யூத மதத்தின் படைப்புக் கொள்கை. யெகோவா என்ற யூத கடவுள் படைத்த ஆதாம் ஏவாள் என்ற இணையிலிருந்து பிற்பாடு பன¢னிரெண்டு சாதியாக பிரிந்தார்கள், அதில் விலக்கப்பட்ட சாதியாக சமாரியர்கள் இருந்தார்கள் என்பதை விவிலியம் பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த யூத வேதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட கிறித்துவம் அதை தனக்குள் உள்வாங்க சில மாற்றங்களைச் ஏற்றுக்கொண்டது. அதன்படி; கடவுள் அதற்குப் பிறகு இரண்டாவது மனிதனாக ஆதாம், அதன் தொடர்ச்சியாக 72வது வாரிசாக ஏசு கிறித்து என்று அந்தப் பரம்பரையை அவர்கள் வடிவமைத்துக்கொண்டார்கள் என்பது வேறுகதை. ஆனால் இதில் குறித்து பார்க்க வேண்டிய அம்சம் கிறித்துவம் யூதமதப் படைப்புக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டது என்பதுதான்.
அதேபோல இசுலாமும் அந்தப் படைப்புக் கொள்கையை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டது. ஆதாமையும் அவ்வாவையும் படைத்த அல்லா அவர்கள் மூலமாகஆபில், காபில் மற்றும் இரட்டைச் சகோதரிகளைப் படைத்து மக்கள் தொகையைப் பெருகப் பன்னினார் என்கிறக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. யூத சமுகத்தைப் போலவே பல சாதிப் பிரிவுகள் அராபியர்களுக்கு இடையில் அன்று உருவாகி இருந்தன.
எனினும் இந்த மூன்று மதங்களின் படைப்புப் கொள்கைகளும் அசலானவை அல்ல என்பதை தற்போது வரலாற்று ஆய்வார்கள் உறுதி செய்துள்ளார்கள். யூப்ரடிஸ் டைக்ரிஸ் ஆறுகளுக்கிடையே இருந்த நிலப்பரப்பில் நிலவியது மெசபடோமியன் நாகரிகம். அந்த நாகரீகத்தின் பழங்குடிகளிடையே நிலவியத் தொண்மக் கதையைத்தான் இந்த மேற்கண்ட மதங்களை உள்வாங்கிக் கொண்டன என்றும், மெசபடோமியன் நாகரிகம் அழிந்தபோது இவைகள் மறக்கப்பட்டன என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள். தற்போது ஈராக்கின் பாக்தாத் நகர்தான் அக்காலத்தின் மெசபடோமிய நாகரீகத்தின் மையம். மெசபடோமியர்கள் தாங்கள் வாழ்ந்தக் காலத்தில் தமக்குள் அசரியா, சுமேரியா, ஊரின் சிகூர்க், பாபிலோனியா, சாலடியா, மெசபடோமியா என பல தொகுதிகளாகவும் மேலும் பற்பல பிரிவுகளாகவே இருந்திருக்கிறார்கள். இந்தப் பிரிவுகளில் பல நான்குவிதமான படைப்புக் கொள்கைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்றின்படி:
மெசபடோமியர்களின் மூலக்கடவுள் நம்மு என்கிற பெண் தெய்வம். இதனது படைப்பில் அன் என்கிற ஆண் தெய்வமும், கி என்கிற பெண் தெய்வமும் தோன்றுகின்றன. இவற்றில் கி என்லில் என்ற தெய்வத்துடன் இணைந்து இன்கி என்ற தெய்வத்தின் உதவியுடன் காய்கறிகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை படைப்புகளை மேற்கொள்கிறார்கள். பிறகு இன்கி தெய்வம் மாமி என்கிற தெய்வத்தின் முன் களி மண்ணை வைக்கிறது. மாமி அதை 14 துண்டுகளாக்கி அதில் ஆறு ஆண்களையும் ஆறு பெண்களையும் படைக்கிறது. இது அந்த தெய்வங்கள் ஏழு தலைமுறைகளாகின்றன. இதில் ஏழாவது தலைமுறையிலிருந்து தற்போதைய மனித இனம் படைக்கப்பட்டதாக மெசபடோமியர்களின் படைப்புக் கதை கூறுகிறது.
சுமேரிய படைப்புக் கதைபடி : மலைகளிலும்,காடுகளிலும், கடலிலும், பயங்கர ராட்சஸ மனித விலங்குகள் வாழ்ந்தன. அவை மலையில் வாழ்ந்த வீரர்களுடன் பகைமை கொண்டிருந்தால் அவர்களின் மன்னன் இயா மனிதர்களின் விரோதிகளான இவ்விலங்குக் கூட்டத்தின் மீது படையெடுத்துச் சென்று அவற்றின் தலைவனான அப்ஸவையும் அவன் மகளான மும்முவையும் கொன்றுவிடுகிறான். இருந்தாலும் ஆதிகடவுளான தியாமத் என்னும் ‘உலகமாதா’ இன்னும் உயிரோடு இருந்தாள். தனது உறவினர்களைக் கொன்ற இயா மற்றும் வீரர்களை அவள் பழிவாங்கத் துடித்தாள். எனவே இயா தியாமத்தோடு போரிடத் தயாரானான். சாதாரண ஆயுதங்களால் அவளைக் கொல்ல முடியாது ஏனெனில் அத்தெய்வத்தின் உயிர் அவளது கல்லீரலில் இருந்தது எனவே அவளை அழிக்க இயா, தன் மகன் மொரோடாக்கை அனுப்பி அவளைக் கொல்கிறான். அவள் மரணித்தப் பின்புதான் உலகம் படைக்கப்பட்டது.
இதிலிருந்து அதிகம் வேறுபடாமல் பாபிலோனின் படைப்புக் கதை உள்ளது, அதன்படி: இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் கடல் மட்டுமே இருந்தது. வானத்திற்கும், கீழே இருக்கும் பூமிக்கும் பெயர்களிடப்படவில்லை. அவற்றின் தந்தை அப்ஸ, தாய் தியாமத். அப்போது கடலில் ஓர் அசைவு உண்டாகி பல தெய்வங்கள் அதிலிருந்து வெளிவந்தன. லக்மூ என்ற ஆண் தெய்வமும், லச்சாமு என்ற பெண் தெய்வமும் தோன்றினார்கள். அப்படி தோன்றிய பல தெய்வங்களில் இயா என்பவன் எல்லாத் தெய்வங்களை விடவும் அறிவுவும் வலிமையும் உடையவனாக இருந்தான். இவனுடைய மகன் மொரோடாக் என்ற தெய்வம்.
அப்ஸமும் தியாமத்வும் இருளான கடலில் குழப்பத்தினுள் வாழ்ந்துக்கொண்டிருந்த போது. அவர்களின் வழித்தோன்றகள் பிரபஞ்சத்தைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள். அதைப் பார்த்த கவலையடைந்த தியாமத் புயலைத் தோற்றுவித்தாள். அப்ஸ தாங்கள் உருவாக்கிய தமது வாரிசுகளான தெய்வங்களை அழிக்க முயற்சி செய்கிறார். இதனை அறிந்த இயா தனது மகன் மொரோடாகை ஏவி அப்ஸவையும் அவன் மகன் மும்முவையும் அழித்துவிடுகிறான்.
இதனால் கோபம் கொண்ட தியாமத் பழிவாங்கப் புறப்படுகிறாள். ஆயினும் இயாவின் மகன் மொரோடாக் வீரத்துடன் எதிர்த்து தியாமத்தை வீழ்த்துகிறான். அவளது உடலை இரண்டாக வெட்டி ஒருபகுதியை பூமியாகவும் மற்றொரு பகுதியை வானமாகவும் படைத்தான். சூரியன், சந்திரன், கோள்கள் போன்றவை படைத்தான். பின்பு மனிதர்களையும் படைத்தான் என்பது பாபிலோனிய படைப்புக்கதை.
மெசபடோமியாவிற்கு அருகில் உருவான எகிப்து நாகரீகத்தின் படைப்புக் கொள்கைப்படி. ரீ என்கிற கடவுள் தன்னைத் தானே புணர்ந்து ஒரு புனித மகனையும் புனித மகளையும் படைத்தார். அவர்கள் இரண்டு இனங்களின் தெய்வங்களாக ஆனார்கள். பின்புதான் ரீ மனிதனைப் படைத்தார்.
பால்டிக் பழங்குடிகளின் படைப்புக் கதைப்படி. உருகும் பனிபாறையின் துளியிலிருந்து ஒய்மிர் என்ற பெரிய மனிதன் உருவாகி, பின் அவனது புஜத்திலிருந்து அவனைப் போலவே ஆணும் பெண்ணும் உருவானார்கள்.
மத்திய ஆசியாவில் இந்த கதைகள் என்றால் மேற்கு ஆசியாவின் கதைகள் எளிமையானவை. சீனா, ஜப்பான் போன்ற மங்ககோலிய இனங்களின் கதைகள் பழங்குடிகளின் அரசியலை பின்னணியாகக் கொண்டவை, மங்கோலியர்களின் படைப்புக் கடவுள் தனது மகன் உவானை பூமிக்கு அனுப்பி ஓர் அரசை உருவாக்குகிறார். பின்பு மூவாயிரம் பேரைப் படைத்து, அதன்பிறகு மனிதர்களைப் படைத்தார் என்று சொல்கிறது.
ஜப்பான் படைப்புக் கதைப்படி ஜெல்லி மீன் போன்ற ஒரு வடிவத்தில் முதலில் எட்டுத் தலைமுறை கொண்ட சகோதர சகோதரிகள் என்ற தெய்வங்கள் உருவானார்கள். அவர்களிலிருந்து உலகமும், உயிரனங்களும், பேரரசும், பிறகு மக்களும் படைக்கப்பட்டார்கள்.
இவை ஒருபுறம் இருந்தாலும் ஐரோப்பிய ஆய்வாளர்களைப் பெரிதும் கவர்ந்தது கிரேக்கத் தொண்மக் கதைகள்தான். கிரேக்க படைப்புக் கதைகள் நான்கு உள்ளன. அவற்றுள் முக்கியமானது டைட்டன்களோடு தொடங்குவது. ஆதியில் தோன்றிய பன்னிரண்டு டைட்டன்களே ஆதி தெய்வங்கள். அதாவது ஜீயே மற்றும் யுரேனஸ் ஆகிய தெய்வங்கள் இணைந்த ஆறு ஆண் தெய்வங்களையும் ஆறு பெண் தெய்வங்களையும் உருவாக்கினர். இந்த பன்னிரண்டு தெய்வங்களுக்கும் தனித்தனிப் பெயர்களும், பணிகளும் உண்டு. இதில் முத்த தெய்வம் ஓஷியானஸ், இவன் தனது கடைசி தங்கையான திதைசை மணந்து 3000 குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் கடல் அலைகளாகவும் இருக்க, கடலின் மேற்குமுடிவில் தீதைஸ் வாழ்க்கிறாள்.. இப்படி ஏராளமான கிளைக்கதைகளுடன் கிரேக்க தொண்மக் கதைகள் போகின்றன.
அதேபோல அதிகம் கவனத்தினை ஈர்த்தது மாயன்களின் மனிதப் படைப்புக் கதைகள். மாயன்களின் நாகரீகம் பரந்து விரிந்தது. அதில் ஏராளமான குழுக்களும் அவற்றிற்கு அரசுகளும் இருந்தன. அவை ஒவ்வொன்றையும் விவரிப்பது பெரிய புத்தகத்தை எழுத வைத்துவிடும் என்பதால் இரண்டு சான்றுகளை மட்டும் பார்ப்போம். அதில் ஒன்று பழமையானது. செலன் எனும் குழுவின் தொண்மக் கதைபடி; படைப்பின் கடவுள் முதலில் தாவரங்களையும் விலங்குகளையும் படைக்கிறார். அவற்றிற்கு பெயர்களையும் வைக்கிறார். பின்பு அவைகளை சுவனத்திலேயே விட்டுவிட்டு பன்னிரண்டு பவுர்ணமிகள் கழித்து திரும்பி வருகிறார். அப்போது சில மிருகங்கள் கடவுள் தங்களுக்கு வைத்த பெயர் சரியாக இல்லை என்றும் அதை மாற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன. இதனால் கடவுளுக்கு கோபம் வந்து நான் போட்ட சட்டதிட்டங்களையே நீங்கள் மீறப் பார்க்கிறீர்களே. இனி உங்களை கட்டுப்படுத்த வேறு ஒரு படைப்பை உருவாக்குவேன் என்று சொல்லி மனிதனையும் அவனது சகோதரர்களையும் படைக்கிறார். இவர்களிலிருந்து சந்ததிகள் பெருகுகின்றன.
மற்றொரு படைப்புக் கதை மாயன்களின் ஒரு பிரிவான அமெரிக்க செவ்விந்திகர்களின் கதை. அது மிக பிற்காலத்தில் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. அதன்படி: கடவுள் மனிதனைப் படைக்க விரும்பினார்.அதற்காக தரமான மாவு எடுத்து பிசைந்து, மூன்று மனித போம்மைகளைச் செய்தார். அந்த மூன்றையும் ஒரு பானையில் போட்டு வேகவைத்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு ஆர்வம் அதிகமாகி ஒரு பொம்மையை வெளியே எடுக்க அது வெந்தும் வேகாமல் வெளுத்திருந்தது. அதற்கு உயிர் உண்டாக்கினார், அதுதான் வெள்ளைக்காரர்கள். சலிப்புற்ற கடவுள் கொஞ்சம் காத்திருந்து பதமாக வெந்திருந்த இரண்டாம் பொம்மையை எடுத்தார். அது நல்ல நிறத்துடன் அழகாக இருந்தது. அதற்கு உயிர் கொடுத்து பார்த்தார். அதன் அழகில் அவர் மயங்கிய கடவுள் அதையே பார்த்துக் கொண்டிருந்ததால் நேரம் போனதே அவருக்குத் தெரியவில்லை. பிறகு அவர் சுதாரித்துக்கொண்டு கடைசியாக இருந்த பொம்மையினை எடுத்தார், அது கருகி தீய்ந்துப் போயிருந்தது. இருந்தும் அதற்கும் அவர் உயிர் கொடுத்தார். அதுதான் கருப்பர்கள். அந்த அழகான படைப்பாய் இருந்ததே அதுதான் செவ்விந்தியர்கள. இப்படி நிற வேற்றுமைக்கதையோடு படைப்பு முடிகிறது.
இவைத் தவிர உலகம் முழுதும் உள்ள மக்களிடம் ஏராளமான மனித படைப்பு தொண்மங்கள் உள்ளன. இந்தியாவில் உலகத்தின் பிற மக்களோடு ஒப்பிடும் அளவிற்கு ஏராளமான படைப்புத் தொண்மக் கதைகள் உள்ளன. இருந்தும், இந்து மதத்தில் இருப்பவை மட்டுமே பொதுவாக ஆய்வாளர்களின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்தின் தோடர்களிடையே நிலவும் தொண்மத்திற்கும் செலன் மாயன்களின் படைப்புத் தொண்மத்திற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. அதே நேரத்தில் தமிழர்களுக்கென்று பொதுவான படைப்புக் கதையே இல்லை என்று சொன்னால் ஆச்சரியாமாக இருக்கும். அப்படியென்றால் அவர்களின் படைப்பு கதைதான் என்ன..?
இருந்தாலும் அவற்றை பின்னொரு தருணத்தில் விரிவாக ஆராய்வோம். எனினும் இதுவரை பார்த்த படைப்புக் கதைளுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு என்று தோன்றலாம். அதற்கு காரணங்கள் வலுவான காரணங்கள் உண்டு. அந்த காரணங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று மானுடவியல் ஆய்வு தொடர்பானது. இரண்டாவது தர்க்கம் தொடர்பானது.
முதலில் மானுடவியல் தொடர்பை பார்ப்போம்.
இதுவரை பார்த்தக் கதைகளில் மெசபடோமியன்களின் படைப்புக் கதையில் மட்டுமே முதல் படைப்புத் தெய்வம் பெண்ணாக இருக்கிறது.
அதே பெண் தெய்வத்தை பாபிலோனின் மற்றும் சுமேரியன் கதையில் கொன்றுவிட்டபிறகு ஆண் தெய்வம் மனிதர்களைப் படைக்கிறது.
மற்றக் கதைகளில் ஆண்தான் ஆதி படைப்புக் கடவுளாக இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றையும் படைக்கிறார்.. ஏன்..?
மனிதர்களை படைக்கும் கடவுள் பூமியில் உள்ள மண்ணிலிருந்தே படைக்கிறார். சில இடங்களில் மாவு, சில இடங்களில் நீர்.. ஏன் இப்படி நடந்தது..?
அவர் படைக்கும் போது ஒரு முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அதன்படி முதலில் ஆண், பிறகு பெண், இவர்களுக்கு ஆண் பெண் பிள்ளைகள். அதாவது சகோதர சகோதரிகள். இவர்களுக்குள்ளே முதலில் கலப்பு நடந்து அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கின்றன. அதாவது குடும்பத்திற்குள், ரத்த உறவுக்குள் திருமணங்கள் நடந்து அதன் மூலமாக சந்ததிப் பெருகுகிறது.
இந்த கேள்விகளும் குறிப்புகள் மிக அவசியமானவை. ஏனெனில் இந்த கதைகள் உருவான காலத்தில் மக்கள் என்னவிதமான சமுக அமைப்பில் இருந்தார்களோ அதை அடிப்படையாக வைத்தே அவர்கள் தமது படைப்புக் கதைகளை உருவாக்கினார்கள். படைப்பிற்கான காரணங்களை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதபோது அதை கடவுள்தான் படைத்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தமது நம்பிக்கைகளை அவர்கள் உறுதிப் படுத்திக்கொண்டார்கள். அதற்குத்தான் பல சடங்குகளை உருவாக்கினார்கள். என்பது தனித்தனிக் கதைகள்.
ஆயினும் இதில நான் முக்கியமாக பார்ப்பது. இந்த படைப்புக் கதைகள் ஒரு விசயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன்படி படைப்பின் அடிப்படை ஒரு குடும்பம், சகோதர சகோதரிகளுக்கிடையே திருமணம், அதைத் தொடரும் சமுக அமைப்பு. இந்த சமுக அமைப்பிற்குப் பெயர்தான் அகமண முறை என்பது.
இனி இரண்டாவது அம்சமான தர்க்கத்தைப் பார்ப்போம்:
உலகம் முழுதும் உள்ளவர்கள், உலகத்தை கடவுள் படைத்தார், அவரே உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அப்படி நம்பும்போது தற்போது நிலவும் வேறுபாடுகளையும் கடவுள்தான் படைத்தார் என்பதை நிறுவி தம்மை சமாதானம் செய்துக்கொள்ள முயல்கிறார்கள். அப்படித்தான் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.
சாதியை உறுதியாக நம்பும் யாரைப் பார்த்தும் நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள்.
நீங்கள் நம்பும் சாதி உண்மையாக இருந்தால் அதைப் படைத்தது யார்..?
மனிதன் படைக்கப்பட்டபோது அது இருந்ததா..?
படைப்புக் கதை என்று ஏதாவது ஆதாரம் உங்களிடம் உள்ளதா..? என்று கேட்டுப் பாருங்கள். அவர் திணறுவதை உங்களால் பார்க்க முடியும். ஏன் அப்படி. அதற்கு காரணம் இருக்கிறது. சாதியை நம்பும் யாரும் தன்னுடைய மதத்தைப் போலவே நம்புகிறார். அதனால் சாதியானது இந்துக் கடவுளின் படைப்பு என்பது ஒவ்வொரு சாதி இந்துவின் நம்பிக்கை. எனவே சாதியை மறுப்பது ஒரு வகையில் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதால் தன்னுடைய நம்பிக்கையை எந்தவிதத்திலும் அவர் கேள்விக் கேட்டுக்கொள்வது இல்லை. கடவுள் உலகத்தைப் படைத்து சாதியைப் படைத்திருந்தால் உலகம் முழுதும் சாதி என்கிற அமைப்பு நிலவ வேண்டும். ஆனால் ஏன் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் இந்துக்களின் நம்பிக்கைப்படி மனிதன் எப்படி உருவாக்கப்பட்டான். அதற்கு ஒரே கதைதான் இருக்க முடியாமா..? அந்த கதைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள்…!
எனினும் உலகம் முழுதும் இந்த கதைகள் உருவான காலத்தில் இந்த நம்பிக்கைளை கேள்விக்கேட்டு மனிதன் இப்படியா படைக்கப்பட்டிருப்பான். இவனுக்குள் இருந்த பிரிவினைகளை அந்தக் கடவுளா படைத்திருப்பார் என்று கேள்விக் கேட்டு, மனிதனின் படைப்பைப் பற்றி அறிவியில் அடிப்படையில் சிந்தித்த பெரும் அறிஞர்களின் ஆய்வுக்கள் அதே காலகட்டத்தில் நடந்திருந்தன. அவர்கள் மனித படைப்பிற்கு எவ்வாறு காரணம் கண்டார்கள் என்பதை இனி பார்போம்.
கட்டுரை ஆசிரியரின் சம்மத்துடன் மறுபதிப்பு செய்யப்படுகின்றது! கட்டுரை ஆசிரியரும் குழுவில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்.
-சுபா
கௌதம சன்னா
இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும்.
நம் காலத்திற்குப் பிறகு வரும் எத்தனையோ காலங்களுக்குப் பிறகு நாம் வாழும் இந்த பூமி அடையப் போகும் அழிவிற்கு இப்போது மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டது உலகின் மனித இனம். சூரியன் அணைந்து அதிலுள்ள நெருப்பாற்றல் அத்தனையும் தீர்ந்துபோய், ஒரு மாபெரும் சிவப்பு நெருப்புக்கங்கு கோளமாக தன்னைத் தானே பெரிதாக்கிக் கொள்ளும் காலத்திற்கு சுமார் நானூறு கோடி ஆண்டுகள் பிடிக்கலாம், அப்போது பெரிதாகும் சூரியக் கோளம் நாம் வாழும் இந்த பூமியை சாம்பலாக்கி விழுங்கிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் மனிதக்குலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் உங்களை தொற்றிக் கொள்வது புரிகிறது. நிச்சயம் மனிதக்குலம் தழைக்கும்.
உலகம் அழியத் தொடங்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வளித்த இந்த பூமிப் பந்தை விட்டு மனிதர்கள் தப்பிவிடு வார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதாவது ஓரிடத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு கோளத் தினைக் கண்டுபிடித்து குடியேறி விடுவார்கள். அதற்கான தொழில் நுட்பத்தை அவர்கள் விரைவில் அடைந்தும் விடுவார்கள். புதிதாக குடியேறிய கோளத்திலிருந்து பூமியை அவர்கள் நன்றி யோடு பார்ப்பார்களா…?
தூரத்தில் ஒரு சிறு ஒ
--
கௌதம சன்னாவின் இத்தொடரின் மூன்றாம் பகுதியை பகிர்ந்து கொள்கின்றேன்.சுபா
சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3
Posted on July29, 2015
1 Voteமானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்...1
..
அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது மரபியல் அடிப்படையிலும், மானுடவியல் அடிப்படையிலும், ஆதி சிந்தனையாளர்களின் ஆய்வுகளின் அடிப்படையிலும் தொடக்கம் முதலே சாதி என்பது உருவாகவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந் நிலையில் சாதியின் மூலத்தை எப்படி நிர்மாணிப்பது…?
தத்தும், சாதி உள்ளிட்டவை தொடர்பான நல்ல பதிவு. விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் இவை.
ஆய்வாளர் கோ.கேசவன் அவர்களின் சாதியும் வர்க்கமும் நூல் இத்தருணத்தில் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
//எல்லாமே வெளியில் இருந்து வந்தது அல்லது வெளியில் இருப்பவர்களால் ஏற்பட்டது என்றால் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், இந்த மண்ணுக்கு உரியவர்களுக்கு எந்த அறிவும் கிடையாதா? தமிழாய்ந்த அறிஞர் பெருமக்கள் இந்த விவாதத்தைத் தொடர வேண்டும்.//
துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்
1
இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து பெறவேண்டுமானால் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாய் இருக்கின்றன. ஏனெனில் இவை மட்டுமே மிகப்பழமையானவை. எனவே இலக்கியங்களிலிருந்துத் தொடங்க வேண்டும் என்பது நிலைத்து நிற்கிற ஒரு வரலாற்று விதி.. அந்த விதியை இப்போது பின் தொடர்வோம்…
இந்தியாவில் வடமொழி இலக்கியங்கள் இந்து மதத்தின் அடிப்படைகளை தாங்கி நிற்கின்றன என்பது ஏற்கெனவே ஏற்றக்கொள்ளப்பட்ட ஒன்று, என்றாலும் அவற்றில் ஒரு படைப்புக் கதையினை மட்டும் நாம் பார்க்க முடியாது, பல கதைகள் அவற்றில் இருக்கின்றன, மட்டுமின்றி அவை உண்மையானவை என்றும் நம்பப்படுகின்றன. இந்நிலையில் அதை எங்கிருந்து தொடங்குவது என்பது என்கிற வரையறையை நாம் வகுத்துக்கொண்டால் விடை பெறுவது எளிது. எல்லாவற்றிகுமான விடைகளை நான்கு வேதங்களும் தருகின்றன என்று தொடர்ந்து இந்துக்கள் சொல்லி வருகிறார்கள் அல்லவா..! அந்த வேதங்களின் முதன்மையான ரிக் வேதம் மனிதன் படைப்பை எப்படி காட்சிப் படுத்துகிறது என்பதிலிருந்துத் தொடங்கினால் பொருத்தமாக இருக்கும். (பின்வரும் மேற்கோளை டாக்டர்.அம்பேத்கர் எழுதிய சூத்திரர்கள் யார் என்கிற நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுத்தாளப்பட்டது)
ரிக் வேதம். பத்தாவது மண்டலத்தின் தொண்ணூறாவது பாடல்:
1. புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரம் கால்களும் உள்ளவன், அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.
2. புருடனே இதுவரை இருந்து வந்துள்ள இனி இருக்கப் போகும் இந்த முழுப் பிரபஞ்சமும் ஆவான். அவன் அரீயமையைத் தரும் தலைவன், அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான்.
……
4. புருடனுடைய முக்கால் பாகம் மேலே ஏறிற்று, இந்த உலகத்தில் மிகுதியாக கால் பாகம் அடிக்கடி இயங்குகின்றது. அது பல வடிவங்களில் உயிருள்ளவறிற்கும் உயிரற்ற பொருள்களுக்கும் சென்றது.
5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான். விராஜனிடமிருந்து புருடன் பிறந்தான்,. அவன் பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருத்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான்.
6. தேவர்கள் புருடனைப் பலிப் பொருளாக்கி யக்ஞத்தை நடத்தியபோது, வசந்தம் அதற்கு நெய்யாயிற்று. கோடை அதற்கு விறகாயிற்று. சரத் காலம் அதன் அவிப் பொருளாயிற்று.
……
8. ஸர்வாத்மாவான புருடனைப் பலியிட்டு நடத்திய யக்ஞத்திலிருந்து தயிரும் நெய்யும் தோன்றின. அவை வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வனவிலங்குகளையும் உருவாக்கின.
9. எங்கும் வியாபித்த இந்த யக்ஞத்திலிருந்து ரிக் மற்றும் சாம வேதங்கள் தோன்றின. அந்த யக்ஞசத்திலிருந்து சந்தங்கள் பிறந்தன. பின்பு யசூர் வேதம் தோன்றியது.
…….
11. தேவர்கள் புருடனைக் கூறுபோட்டபோது எத்தனை விதமாக கூறுபோட்டார்கள்? எது அவனுடைய முகமானது? எவை கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆயின..?
12. பிராமணன் அவனது வாயானான், ராஜஸ்யன் (சத்திரியன்) அவனது கைகளானான், அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று, அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.
– இவற்றைப் பார்க்கும்போது மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ரிக் வேதம் ஏதும் கூறவில்லை. மாறாக நேரடியாகவே மனிதர்கள் நான்கு வர்ணங்களாகப் படைக்கப்பட்டனர் என்று தெளிவாக்குகிறது. ஆனால் இந்தப் படைப்புக் கதை ரிக் வேதத்தில் இடைச் செறுகலாக பிற்காலத்தில் சேர்க்கப்£ட்டது என்று டாக்டர். அம்பேத்கர் நிறுவியிருக்கிறார். ஆயினும் அக்கதைக்கூறும் கோட்பாடுகள் பிற்காலத்தில் உருவான மனுதர்மத்தில் நிலைநிறுத்தப்பட்டது. கி.பி400ல் எழுதப்பட்டதாகக் கருத்தப்படும் மனுதர்ம சாத்திரத்தில் படைப்புக் கதை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மனு தர்ம சாஸ்த்திரம். பிருகு சம்ஹிதையின் முதலத்தியாயம்:
ச. மஹானுபாவாளான மஹா ருஷிகளுக்கும் சந்தேகந் தெளிவிக்கத்தக்க ஞானதேஜசை யுடைத்தான, அந்த மநுப் பிரஜாபதியானவர், இவ்வண்ணமாக அந்த ருஷிகளாலே கேட்கப்பட்டு, அவர்களைப் பூஜித்து, கேழ்ப்பீராகவென்று சொல்லத் தொடங்கினார்.
ரு. வருணாசிரம தருமத்தைக்கேட்ட, ருஷிகளுக்கு பிரளயக்கால முதல் வருணாசிரம முண்டானதால் முதல் பிரளயக் காலத்தைச் சொல்லத் தொடங்கினார். இந்த உலகமானது பிரளயக் காலத்தில் மூலப் பிரகிரதியில் ஐக்கியமாய் இருளில் மறைந்த பதார்த்தம்போல் கண்ணுக்குத் தோற்றாததாயும், அடையாளமில்லாததாயும், சப்தத்தா லறியப்படாததாயும், தர்க்க சாஸ்திர யுக்தியை கொண்டு நிச்சயிக்கத் தகாததாயும் யாவும் உறக்கினதுபோலும் யிருந்தது.
சு, இவ்வாறு பிரளய கால முடிந்தபின்பு சீவாத்மாக்களைப்போல் கர்மத்தினாலே தேகமெடுக்காமல், தன்னிச்சையினாலே தேகமெடுக்கத்தக்க சுயம்புவான பகவானானவர், கண்முதலான புறவிந்திரியங்களாலேயே கிரகிக்கப்படாதவராயும், ஒருவராலுந் தடுக்கப்படாத சிருஷ்டி முதலிய முத்தொழிலையுடையவராயும், ஆகாய முதலிய பஞ்சமாஹா பூதங்களைப் பிரகாசப் படுத்துகிறவராயும், பிரரதிப் பிரேரகராயும் பிரகாசித்தார்.
அ. அந்தப் பரமாத்வானவர் சகல வுயிர்களுக்கும் இருப்பிடமான தன் சரீரத்தினின்றும் நானவிதமான பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்த, பிரமாண்ட சிருஷ்டிக்கு முன்னம் ஜலத்தையுண்டு பண்ணி, அதில் தன் சக்திரூபமான ஒரு விதையை விதைத்தார்.
கூ. அந்த வித்தானது சர்வேஸ்வருடைய இச்சையினாலே தங்க நிறமான ஒரு அண்டமாயிற்று, அவ்வண்டத்தில் முன் ஜனனத்தில் பிரம்மப் பட்டத்திற்குதக்க தவசு பண்ணின ஒரு ஜீவனை பிரம்மாவாக சிருஷ்டித்து அவருக்குள் அந்தரீயாமியாய் பிரவேசித்தார். அந்தப் பிரமனுக்கு சர்வலோக பிதாமகனென்று பெயர்,
…
கஉ. முன்சொன்ன அந்த வண்டத்தில், அந்தப் பிரம்மாவனவர், மேற்சொல்லும் கணக்கையுடைய ஒருபிரம்மவருஷம் வசித்து, தன் மனதினாலேயே இந்த வண்டம் இரண்டாகப்போகும்படி நினைத்து, அதை இரண்டு கண்டமாக்கினார்.
கங. அவ்விரண்டு கண்டத்தினுள் மேற்கண்டத்தினாலே சுவர்கத்தையும், கீழ்க்கண்டத்தினாலே பூமியையும், நடுவில் ஆகாசத்தையும், எட்டுத் திக்குகளையும், சமுத்திரத்தையும் சிருஷ்டித்தார்.
(பிறகு உணர்வுகள், சுக துக்கங்கள், தர்மங்கள், விலங்குகள் மற்றும் குணாதிசியங்களைப் படைக்கிறார் பிரம்மன்)
ஙக. உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும், பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டுப் பண்ணினார்.
ஙஉ. அந்தப் பிரம்மாவனவர் தன்னுடைய தேகத்தை இரண்டு கண்டமாக்கி, ஒன்று ஸ்திரியாகவும், ஒன்று புருஷனாகவுமாகி அந்த ஸ்திரியினிடத்தில் அந்த புருஷனாகிய தானே புணர்ந்து விராட்புருஷனை யுண்டு பண்ணினார். (மநுதரும சாத்திரம். இராமாநுஜாசாரியார் மொழிப் பெயர்ப்பு, 1889ஆம் ஆண்டு பதிப்பு)
இவர் மூலமாக உலகின் உயிர்கள் மற்றும் பொருட்கள் படைக்கப்பட்டன என போகிறது மனுவின் படைப்புக் கதை.
இந்தப் படைப்புக் கதையை ஒட்டியும் வெட்டியும் ஏராளமான கதைகள் வடமொழி இலக்கியங்களில் நிரவிக் கிடக்கின்றன. மேலும் அவை எல்லாவற்றையும் விவரிப்பது இங்கே சாத்தியமில்லை. (என்பதால் டாக்டர்.அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் என்று நூலில் உள்ள இரண்டாம் பகுதியை படிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.)
இங்கே இயல்பாக எழும் கேள்வி உண்டு. இந்து மதத்தின் மூலக் கடவுள்கள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா அல்லவா? வேதங்களிலும் சாத்திரங்களிலும் இவர்கள் உலகைப் படைத்ததாக குறிப்பிடப் படவில்லையே என்று கேட்டால் விடை கிடைப்பது கடினம்தான். ஏனெனில் வேதங்களுக்கு பிறகு எழுதப்பட்ட வேதாந்தங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் பிரம்மாதான் உலகையும் உயிர்களையும் படைத்தார் என்று எழுதப்பட்டுள்ளது. இருந்தும் இப்போது பிரம்மாவை யாரும் மதிப்பதில்லை. வேதங்களில் குறிக்கப்படும் பரமாத்மா தானே தன்னைப் புணர்ந்து படைப்புத் தொழிலை செய்தார் என்கிற குறிப்பை பிற்காலத்தில் பிற கடவுள்கள் தமக்கானதாக மாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் விந்தையின் விந்தை. அவை புராணங்களாக பிற்காலத்தில் எழுதப்பட்டன.
மேலும், மேற்கண்ட இரண்டு குறிப்புகளிலும் உலகம் படைக்கப்பட்ட காலம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அது மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது (சாந்தி பர்வம் 348,51-52) அதன்படி திரேதா யுகத்தில் உலகம் படைக்கப்பட்டது. அக்காலத்தில்தான் மனிதர்களும் படைக்கப்பட்டார்கள் என்பது மகா£பாரதத்தின் வாதம். அதன்படி திரேதா யுகத்தின் மொத்த ஆயுள் 12 லட்சம் ஆண்டுகள், அதற்கு அடுத்து துவாபர யுகம், அது 8 லட்சம் ஆண்டுகள் இருந்தது. அதைத் தொடர்ந்துதான் கலியுகம், அதன் மொத்த ஆண்டுகள் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். ஆக மொத்தம் உலகம் மனிதர்களோடு கடந்த 20 லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. மீதமுள்ள கலிகாலம் இனிதான் முடிய வேண்டும்.
இந்த கணக்கை குறிப்பிட காரணம் இருக்கிறது. உலகத்தைப் படைத்தவர் யார் என்பதில் இந்துக்களுக்கு இன்னும் உடன்பாடு வரவில்லை. திரேதா யுகத்தில்தான் கிருஷ்ணர் உலகைப் படைத்தார் என்பது பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார்.. அவர் எப்படி படைத்தார் என்பதையும் அவரே சொல்கிறார்…
மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன (பகவத் கீதை 4:3)
எதிரிகளை தவிக்கச் செய்பவனே, தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையின் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேறுபடுத்தப் படுகின்றனர் (பகவத் கீதை 18:42)
கிருஷ்ணர் சொல்வது போல அவர் உலகைப் படைக்கும்போது மனிதர்களில் நான்கு பிரிவுகளோடு படைத்தார். அதாவது வர்ணங்கள் என்படும் பிரிவுகளோடு படைத்தார். காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரம்தான் கிருஷ்ணன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. இந்த காக்கும் கடவுள் எப்படி படைக்கும் கடவுள் ஆனார் என்பது கடவுள்களுக்குள் இருந்த வரலாற்றை திரிக்கும் செயல்பாடுகள்தான் காரணம்.
கெடுவாய்ப்பாக, கிருஷ்ணரின் இந்தப் படைப்புக் கதையை மற்ற கடவுள்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சிவபுராணத்தில் வேறு கதை நமக்குக் கிடைக்கிறது. சிவன் அழிக்கும் கடவுள் என்று அறியப்பட்டாலும் அவர் படைப்புக் கடவுளாக எப்படி இருக்கிறார் என்பதை சிவபுராணத்தின் மூலம் அறியலாம். வழக்கமாக அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவன் எல்லாவற்றிற்கும் மூலக்கடவுளாக சைவ இலக்கியங்களால் முன்னிருத்தப்படுகிறார். அதன்படி
சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அவர் முன்னம் பின்னும் அற்றவர். பல கோடி கல்ப ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் தான் மட்டுமே சுயம்புவாக அதாவது தான்தோன்றியாக இருந்தார். தன் தனிமையை உணர்ந்த அவர் தேவைக்கருதி தன்னுடைய ஒரு பாதியை பிரித்து சக்தியை படைத்தார். சக்தி அவர் மனைவியாக ஆனார். பின்பு படைப்புகளை உருவாக்கும் பொருட்டு இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசங்களைத் படைத்தனர். அதில் ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பணிக¬ள்ச செய்ய முறையே படைத்தலுக்காகப் பிரம்மாவையும், காத்தலுக்காகத் திருமாலையும், அழித்தலுக்காக ருத்திரனையும் படைத்தார். எஞ்சிய மறைத்தல், அருளல் ஆகிய பணிகளை தன்னிடமே வைத்துக்கொண்டார் சிவன். பின்பு தான் படைத்த மும்மூர்த்திகளால் பதினான்கு உலகங்களைக் கொண்ட அகிலாண்டம் உருவாக்கப்பட்டது.
இந்த மும்மூர்த்திகளில் முதல்வரான பிரம்மா படைப்புத் தொழிலை மேற்கொண்டு மனிதர்களையும், மிருக வர்க்கங்களையும் மற்ற உயிர் உயிரல்லாதப் பொருட்களையும் படைத்தார்.
இந்த படைப்புக் கதை மிகுந்த கற்பனை மிக்கது என்று எடுத்துக்கொண்டாலும், இதில் பிரம்மன் மனிதர்களை எப்படிப் படைத்தார் என்று விளக்கப்படவில்லை. ஆனால் சிவனை வேதநாயகன் என்று சைவர்கள் சொல்வதால வேதங்களின்படி அவரும் நான்கு வர்ணத்தைப் படைத்தவர் ஆகிறார். எனவேதான் பிற்காலத்தில் உருவான சைவ இலக்கியங்கள் மனிதனை வர்ணத்தோடும் சாதியோடும்தான் சிவனால் படைக்கப்பட்டன என்ற நிறுவின.
இப்படி வேதங்களும், ஸ்மிருதிகளும், மூன்றுக் கடவுள்களும் மனிதன் படைக்கப்பட்ட விதத்தில் முரண்பட்டும் போட்டிப் போட்டுக்கொண்டும் நிற்கின்றன என்பதில் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை. அதே நேரத்தில் இந்த படைப்புக் கதைகள் முடிவற்ற தொடர்கதைப் போல இந்து மதத்தின் பிரிவுகளுக்குள் பெருகத் தொடங்கின. தமது கடவுள்தான் உயர்ந்தக் கடவுள் என்று நிறுவ எத்தனித்தவர்கள் உயர்வு தாழ்வு என்னும் நோயால் தாம் பீடிக்கப்பட்டதைப் போலவே தமது கடவுள்களையும் பீடிக்கச் செய்தார்கள். சிறு தெய்வங்களும் துணைத் தெய்வங்கள்கூட படைப்புத் தொழிலில் தம்மை இணைத்துக் கொள்ள போட்டியிட்டன. பல கதைகள் இருந்தாலும் இதற்கு ஓர் மட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்
தேவி மகாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஏழாவது காண்டத்தில் ஒரு படைப்புக் கதை உள்ளது. அதன்படி:
ஒரு யுகத்தில் மகாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. எனவே பிரளயத்திற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த உயிரினங்களும், தாவரங்களும் காணப்படவில்லை. எங்கும் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் மகாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.
அவர் ‘நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்று தன்னுள் யோசித்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூலசக்தி ‘மகாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கைகளில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, சுவேதா, சிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியர் காட்சி தந்தனர். அப்போது மகாதேவி குழந்தையான விஷ்ணுவிடம்.
‘மகாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்சமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் படைப்பான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, சம்காரம் எனும் அழிக்கும் தொழிலைச் செய்வான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்கும் சக்தியாக நானும் என் அம்சங்களான தேவிகளும் செயலாற்றுவோம்’ என்று அருளினாள் தேவி.
பின்பு, விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மன் தோன்றினார். தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மகாதேவி மற்றும் மகாவிஷ்ணுவின் அனுக்ரகத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்சர், வசிட்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு ரிசிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என படைப்புத் தொடர்ந்தது.
இப்படி படைப்புக் கதைகள் தொடர்ந்தன. பிற்காலத்தில் உருவான ஏராளமான புராணக் கதைகளில் விதவிதமான படைப்புக் கதைகள் இருக்கின்றன என்பது ஒரு புறமிருந்தால். இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய பல அரசுகளும் அதன் அரசர்களும் இக்கதைகளை தமக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது இன்னும் சுவாரசியமானது.
2
பௌத்த, சமண மற்றும் ஆசீவக அரசர்களைத் தவிர மற்ற அரசர்கள் எல்லோரும் தம்மை கடவுளின் வாரிசுகளாகவே அறிவித்துக்கொண்டனர் என்றால் மிகையில்லை. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல சாசனங்களில் இது பற்றின குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் முன்னர் ஆண்டு வந்த சேர, சோழ ,பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள்கூட இதற்கு விதிவிலக்கில்லை.
தஞ்சைக்கு அருகில் உள்ள அம்மாப்பேட்டையை ஒட்டிய புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு கிணற்றில் கிடைத்த செப்பேடுகள் சோழர்களின் பரம்பரையை விளக்குகின்ற ஒரு பகுதிகயை சான்றாகப் பார்ப்போம்,. அதில்:
….
1.திருமகளின் பருத்த இரு திருமுலைத் தடங்களின் குங்கமக் குழம்பினால் அடையாளமிடப்பட்டனவும், (பாற்கடல் னடைந்த ஞான்று) சுழன்று கொன்டிருக்கிற மந்தரமலையினடைய உயர்ந்த குடுமிகளில் உராய்வதனால் மிக்கு ஒளிபெற்ற பொன்னலான தோள்ளைகளை உடையனவும், மூவுலகத்¬யும் காப்பனவும், சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தாங்கித் திகழுகின்றவுமான இந்திர நீலக்கல் போன்ற திருமேனியை உடைய திருமாலின் புயங்கள் உங்களுக்கு வேண்டிய அளவு செல்வத்தைக் கொழிக்கச் செய்வதாக.
…
3. உலகங்கள் அனைத்திற்கும் ஒரு கண்ணாக விளங்கும் கதிரவனிடமிருந்து அரசர்களுக்கெல்லாம் முதல்வனான “மனு” தோன்றினான். அரசர்களின் மணிமுடி வரிகையினால் தழுவப் பெற்ற பாதபீடத்தை உடையவனான இட்சுவாகு என்னும் அரசன் அவனுடைய (மனுவின்) புதல்வனாகத் தோன்றினான். அவனது மரபில் லோகாலோக (சக்கரவாள) மலைவரை நெறி வழுவாத இந்நிலவுகைக் காப்பாற்றியவனும், நான்முகனை ஒத்தவனும், நற்குணங்கட்கு இருப்பிடமானவனுமாகிய மாந்தாதா என்னும் வேந்தன் தோன்றினான்.
… இப்படி தொடர்ச்கியா அரச மரபு விளக்கப்படுகிறது சோழ மரபு. இது போலத்தான் மன்னர்களின் பரம்பரை விளக்கப்படுன்றது. பாண்டியர்கள் பொருத்தவரையில் அவர்கள் சிவனின் வழித் தோன்றல்கள். சேரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் விஷ்ணுவின் பின்னடியார்கள். பல்லவர்கள் சைவர்கள் சிலர் வைணவர்கள். இப்படி இவர்கள் தம்மை கடவுகள்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள காரணமிருந்தது. அவர்கள் காலத்தில் நிலவிய சாதி அடுக்குமுறைகளை கடவுள் படைத்தார் என்று நம்ப வைக்கப்பட்டிருந்ததால் அதை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சமூக அமைப்பை அப்படியே பாதுகாத்தார்கள். அதனால்தான் அவர்கள் தமக்கான படைப்புக் கதைகளை உருவாக்கிக்கொண்டு அதை செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்தார்கள். இவைதான் அக்காலச் சூழல்களைப் பற்றி நமக்கு விளக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.
இது போன்றக் கதைகள் முடிவு பெறாமல் சாதிகளுக்கான கதைகளாக அல்லது தொன்மங்களாக இன்றைக்கும் புனையப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகம். இக்கதைகளை நம்புவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் பதில் கிடைப்பது கடினம். ஆனால் இக்கதைகள் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கேட்டால் இந்து மதத்தை நம்பும் 99.99 சதவிகிதம் பேருக்கு இவை தெரியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
இனி, இப்போது நாம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வருவோம். உலகின் தொண்மையாக நாகரீகம் கொண்டுள்ள தமிழர்கள் பண்டையக் காலத்தில் தமக்கான படைப்புத் தொண்மங்களை கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி எழும்.. அதற்கான விடை..
3
தமிழர்களுக்கு உலகப் படைப்புக் பற்றின தொண்மக் கதை ஏதும் இல்லை, அல்லது அதற்கான சான்றுகளும் இல்லை. இருக்கின்ற தொன்மங்கள் எல்லாம் இந்து புராணத் தொன்மங்களே. அதைத் தவிர சிறு தெய்வங்களின் தொன்மங்கள்தான் இருக்கின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கியமான தொல்காப்பியத்தில் பார்த்தால் படைப்புப் பற்றின கோட்பாடு மட்டும் உள்ளது,அது தத்துவார்த்தமான கோட்பாடு.
தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் உள்ள 1589ஆம் சூத்திரத்தில்
நிலம், தீ. நீர், வளி, விசம்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
இருதிணை ஐம்பால் இயல்நெறி வா£ அமைத்,
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்…
என்று சொல்வது அடிப்படையான பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உலகம் உண்டாகியுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் மனித பிரிவுகளைப் பற்றிப் பேசும்போது இதே மரபியல் பகுதியில் சமூகத்தில் அந்தணர், அரசர், வணிகர் மற்றும் வேளாளர் என்கிற பிரிவினை சுட்டிக் காட்டுகிறது. தொல்காப்பியம் சுட்டுவதற்கும் வடநூல்கள் சுட்டிக் காட்டும் வர்ண அமைப்பிற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. தொல்காப்பியம் சுட்டும் வர்ண அமைப்பிற்குமான ஒற்றுமெய்களையும் சாதி வேறுபாடுகள் உருவாக தொல்காப்பியம் எப்படி வழிவகுத்தது என்பதை பிறகு பார்ப்போம்,
தொகுப்பாக, இந்த தரவுகள் எல்லாம் ஒரு செய்தியை தொடர்ந்து சுட்டிக் காட்டுவதை வாசகர்கள் கவனிக்க முடியும். இந்திய மற்றும் தமிழ் தொண்மக் கதைகள் கூறும் படைப்புக் கோட்பாடுகள்படி. உலகத்தைப் படைத்த கடவுள் ஆதியில் சாதியை படைக்கவில்லை. அவர் வர்ணங்களை அல்லது நான்கு பிரிவுகளை மட்டுமே படைத்தார் என்பதை உறுதி செய்கின்றன. சொல்லப் போனால் சாதி என்பது இந்தியத் தொண்மங்களுக்கு எதிரானது என்கிற கருத்துக்கு நாம் வந்துவிடலாம். ஆனால் தாம் உருவாக்காத சாதியை பின்னாளில் அதே இந்தியத் தொண்மங்கள்தான் ஆதரித்து நின்றன என்பது வரலாற்று உண்மை.
அதனால்தான் காந்தி மற்றும் ஆரிய சமாஜிகள் சாதி முறைக்கு எதிராக நின்று அதற்கு பதிலாக வர்ண அமைப்புக்கு இந்திய சமூகம் திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இந்திய தொண்மத்தின் ஆதாரம் வர்ணங்கள் என்றால். சாதியின் ஆதாரம் வர்ணங்கள்தான் என்பதை டாக்டர்.அம்பேத்கர் பின்னாளில் நிறுவினார்.
எனவே இவ்வளவு முரண்பாடுகள் உடைய இந்திய படைப்புத் தொண்மங்களை நம்பி தமது சாதியை முன்னிருத்தும் யாரும் எப்படிப் பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேள்விக் கேட்கலாம். அறிவிற்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டு ஒரு சமூகம் உலகில் இருக்கிறது என்றால் அது சாதியை நம்பும் சமூகம்தான்.
இனி உண்மையான அறிவியல் வரலாற்றிற்குள் நுழைவோம்..
...
...
கட்டுரை ஆழமான ஆய்வு.தொன்மம் என்று குறிப்பிடுவதே சரி. Myth என்ற சொல்லின் சரியான நிகரனாக தொன்மம்
என்பதே கையாளப் படுகிறது.பேராசிரியர் கதிர்மகாதேவன்
தொன்மம் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
நம் கணேசனார் இதுபற்றிக் கருத்துரைப்பார் என்றே
நம்புகிறேன்.
--
On Aug 13, 2015, at 10:36 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:இத்தகைய கற்பனை வளம் கொண்ட முன்னோர்களை நாம் பெற்றது ... நாம் பெற்ற பெரும் பேறு என்றே தோன்றுகிறது.பகிர்வுக்கு நன்றி...... தேமொழி
On Thursday, August 13, 2015 at 11:03:42 AM UTC-7, Suba.T. wrote:
கௌதம சன்னா எழுதும் இத்தொடரின் 4ம் பகுதி..
துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்
1
இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து பெறவேண்டுமானால் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாய் இருக்கின்றன. ஏனெனில் இவை மட்டுமே மிகப்பழமையானவை. எனவே இலக்கியங்களிலிருந்துத் தொடங்க வேண்டும் என்பது நிலைத்து நிற்கிற ஒரு வரலாற்று விதி.. அந்த விதியை இப்போது பின் தொடர்வோம்…
<...deleted for space...>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zvAiXOunpOM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
கௌதம சன்னா எழுதும் இத்தொடரின் 4ம் பகுதி..
-
துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்
இப்படி வேதங்களும், ஸ்மிருதிகளும், மூன்றுக் கடவுள்களும் மனிதன் படைக்கப்பட்ட விதத்தில் முரண்பட்டும் போட்டிப் போட்டுக்கொண்டும் நிற்கின்றன என்பதில் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை.
தஞ்சைக்கு அருகில் உள்ள அம்மாப்பேட்டையை ஒட்டிய புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு கிணற்றில் கிடைத்த செப்பேடுகள் சோழர்களின் பரம்பரையை விளக்குகின்ற ஒரு பகுதிகயை சான்றாகப் பார்ப்போம்,. அதில்:
….
1.திருமகளின் பருத்த இரு திருமுலைத் தடங்களின் குங்கமக் குழம்பினால் அடையாளமிடப்பட்டனவும், (பாற்கடல் னடைந்த ஞான்று) சுழன்று கொன்டிருக்கிற மந்தரமலையினடைய உயர்ந்த குடுமிகளில் உராய்வதனால் மிக்கு ஒளிபெற்ற பொன்னலான தோள்ளைகளை உடையனவும், மூவுலகத்¬யும் காப்பனவும், சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தாங்கித் திகழுகின்றவுமான இந்திர நீலக்கல் போன்ற திருமேனியை உடைய திருமாலின் புயங்கள் உங்களுக்கு வேண்டிய அளவு செல்வத்தைக் கொழிக்கச் செய்வதாக.
…
3. உலகங்கள் அனைத்திற்கும் ஒரு கண்ணாக விளங்கும் கதிரவனிடமிருந்து அரசர்களுக்கெல்லாம் முதல்வனான “மனு” தோன்றினான். அரசர்களின் மணிமுடி வரிகையினால் தழுவப் பெற்ற பாதபீடத்தை உடையவனான இட்சுவாகு என்னும் அரசன் அவனுடைய (மனுவின்) புதல்வனாகத் தோன்றினான். அவனது மரபில் லோகாலோக (சக்கரவாள) மலைவரை நெறி வழுவாத இந்நிலவுகைக் காப்பாற்றியவனும், நான்முகனை ஒத்தவனும், நற்குணங்கட்கு இருப்பிடமானவனுமாகிய மாந்தாதா என்னும் வேந்தன் தோன்றினான்.… இப்படி தொடர்ச்கியா அரச மரபு விளக்கப்படுகிறது சோழ மரபு. இது போலத்தான் மன்னர்களின் பரம்பரை விளக்கப்படுன்றது. பாண்டியர்கள் பொருத்தவரையில் அவர்கள் சிவனின் வழித் தோன்றல்கள். சேரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் விஷ்ணுவின் பின்னடியார்கள். பல்லவர்கள் சைவர்கள் சிலர் வைணவர்கள். இப்படி இவர்கள் தம்மை கடவுகள்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள காரணமிருந்தது. அவர்கள் காலத்தில் நிலவிய சாதி அடுக்குமுறைகளை கடவுள் படைத்தார் என்று நம்ப வைக்கப்பட்டிருந்ததால் அதை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சமூக அமைப்பை அப்படியே பாதுகாத்தார்கள்.
அதனால்தான் அவர்கள் தமக்கான படைப்புக் கதைகளை உருவாக்கிக்கொண்டு அதை செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்தார்கள். இவைதான் அக்காலச் சூழல்களைப் பற்றி நமக்கு விளக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.
இது போன்றக் கதைகள் முடிவு பெறாமல் சாதிகளுக்கான கதைகளாக அல்லது தொன்மங்களாக இன்றைக்கும் புனையப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகம். இக்கதைகளை நம்புவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் பதில் கிடைப்பது கடினம்.
ஆனால் இக்கதைகள் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கேட்டால் இந்து மதத்தை நம்பும் 99.99 சதவிகிதம் பேருக்கு இவை தெரியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
தமிழர்களுக்கு உலகப் படைப்புக் பற்றின தொண்மக் கதை ஏதும் இல்லை, அல்லது அதற்கான சான்றுகளும் இல்லை. இருக்கின்ற தொன்மங்கள் எல்லாம் இந்து புராணத் தொன்மங்களே. அதைத் தவிர சிறு தெய்வங்களின் தொன்மங்கள்தான் இருக்கின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கியமான தொல்காப்பியத்தில் பார்த்தால் படைப்புப் பற்றின கோட்பாடு மட்டும் உள்ளது,அது தத்துவார்த்தமான கோட்பாடு.
தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் உள்ள 1589ஆம் சூத்திரத்தில்
நிலம், தீ. நீர், வளி, விசம்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
இருதிணை ஐம்பால் இயல்நெறி வா£ அமைத்,
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்…என்று சொல்வது அடிப்படையான பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உலகம் உண்டாகியுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் மனித பிரிவுகளைப் பற்றிப் பேசும்போது இதே மரபியல் பகுதியில் சமூகத்தில் அந்தணர், அரசர், வணிகர் மற்றும் வேளாளர் என்கிற பிரிவினை சுட்டிக் காட்டுகிறது. தொல்காப்பியம் சுட்டுவதற்கும் வடநூல்கள் சுட்டிக் காட்டும் வர்ண அமைப்பிற்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
தொல்காப்பியம் சுட்டும் வர்ண அமைப்பிற்குமான ஒற்றுமெய்களையும் சாதி வேறுபாடுகள் உருவாக தொல்காப்பியம் எப்படி வழிவகுத்தது என்பதை பிறகு பார்ப்போம்,
எனவே இவ்வளவு முரண்பாடுகள் உடைய இந்திய படைப்புத் தொண்மங்களை நம்பி தமது சாதியை முன்னிருத்தும் யாரும் எப்படிப் பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேள்விக் கேட்கலாம். அறிவிற்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டு ஒரு சமூகம் உலகில் இருக்கிறது என்றால் அது சாதியை நம்பும் சமூகம்தான்.
இனி உண்மையான அறிவியல் வரலாற்றிற்குள் நுழைவோம்..
உங்களது எதிர் வினைகள் தொடரின் போக்கிற்கு பெரிதும் உதவி புரியும். நன்றி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கற்பனையை முதலாகக் கொண்ட கருத்துகள். அறிஞர்கள் (?) ஒத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை.
வணக்கம்.
On 01-Feb-2016 2:30 pm, "G Sannah" <g.sa...@gmail.com> wrote:
>
> வரலாற்றுக்கு முற்பட்ட சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது தற்கால நவீன நாகரீக உலகத்துடன் தொடர்பில்லாத சமூகங்களை சிலவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றில் எவை மிகவும் காலத்தில் பின்னோக்கிய பண்பாட்டுடன் இருக்கிறதோ அதன் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டுதான் வரலாற்றுக்கு முற்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை பார்க்க முடியும். இந்த பார்வைதான் அறிவியல் பார்வை. இது எல்லா துறைகளுக்கும் அடிப்படை விதியாக இருக்கிறது. எனவே அறிவியல் ஆதாரம் என்பது காணும் பொருளைப் போல மட்டும் அல்ல. matter என்பது பொருள் மட்டும் அல்ல கருத்தும்தான் என்பது அறிவியல்.
ஒரு பழமையான மண்டையோடு குகையில் கிடைத்தால், அந்தக் குகையில் பழங்காலத்தில் மனிதர் வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்,
அல்லது,
அந்தக் குகையில் ஒரு புலி இருந்து அது ஒரு மனிதனைத் தின்றுள்ளது என்றும் கூறலாம்.
அல்லது,
கற்பனையாக எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.
இக் கட்டுரையில் உள்ள கருத்துகள் கற்பனையானவை என்பதே எனது கருத்து.
இந்த நிலையில் அந்த ஆதிமந்தி மாந்த இனம் மனிதனாக பரிணமிப்பதற்கு பல கோடி ஆண்டுகள் இருந்தது. இப்படி உருவான பரவல்தான் உலகின் பல பாகங்களுக்கு சென்று மாந்த இனம் பரிணமித்தது. எனவே நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித வெறும் குரங்ககாகவே இருந்த போது சாதி என்பது இருந்திருக்கும் என்பதற்கு எங்கிருந்து சான்றுகளைத் தேடமுடியுமா..?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
--
Mixing of population
However, the researchers have noted that “mixing” of genetic populations continued in an “asymmetric” trickle after this. Upper caste populations continued to give genetic inputs to lower caste and tribal populations — but not vice-versa.
read more at: http://www.pnas.org/content/early/2016/01/20/1513197113.full.pdf
..... தேமொழி
இராமாயணத்திலும் தீண்டாமை இருந்ததேஇராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவன் அந்தணன் என்ற நிலையில் சூத்திரப் பிரிவாகக் கருதப்படும் (நால்வகை வர்ணத்திலும் பெண் சூத்திரப் பிரிவே) சீதையைத் தொடாமல் இலங்கைக்கு தாவணன் எடுத்துச் சென்ற முறையிலும் தீண்டாமை உள்ளதேஇணைய தருமி 2016
On Tue, Feb 2, 2016 at 12:32 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பெரும்பாலும் பெண்ணின் மீது மையல் கொண்டு கடத்துபவர்கள் பெண்ணின் பின்புலம் பற்றிக் கவலைப் படுவதில்லை.இதற்கு சமீபத்திய மரபணு ஆய்வும் சான்று...
Mixing of population
However, the researchers have noted that “mixing” of genetic populations continued in an “asymmetric” trickle after this. Upper caste populations continued to give genetic inputs to lower caste and tribal populations — but not vice-versa.
read more at: http://www.pnas.org/content/early/2016/01/20/1513197113.full.pdf
..... தேமொழி
On Monday, February 1, 2016 at 11:12:06 PM UTC-8, இணைய தருமி 2016 wrote:
இராமாயணத்திலும் தீண்டாமை இருந்ததேஇராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவன் அந்தணன் என்ற நிலையில் சூத்திரப் பிரிவாகக் கருதப்படும் (நால்வகை வர்ணத்திலும் பெண் சூத்திரப் பிரிவே) சீதையைத் தொடாமல் இலங்கைக்கு தாவணன் எடுத்துச் சென்ற முறையிலும் தீண்டாமை உள்ளதேஇணைய தருமி 2016
On Tue, Feb 2, 2016 at 12:32 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தேமொழியாரே நீங்கள் நினைக்கும் கோணத்திலேயே இழை சென்றால்தான் வளர விடுவீர்களா?
எமது தொடரில் நிறுவப்பட்ட அறிவியல் அடிப்படைகளினால் உருவான கருத்துக்களையும், கருதுகோள்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறோம். ராமர் காலத்து குரங்குகளைப் பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை இதற்கென புதிதாக விஞ்ஞானி அவதாரம் எடுத்து அவர் நிறுவினால் எம்மைப் போன்ற சாதாரண ஆய்வாளர்களுக்கு பேருதவியாய் இருக்கும்
Please let him complete his view and findings so that we can add more insights by our queries. Happy to see the effort.
ஆப்கானிஸ்தானின் கர்-இ-மார் கி.மு.7000, தாய்லாந்துப் பகுதியில் சுமார் கி.மு.9000, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கி.மு. 8000, ஆப்கானிஸ்தான் கி.மு. 7000, ஐரோப்பாவில் கி.மு. 5500, எகிப்தில் கி.மு. 6000, சீனாவில் கி.மு.5000, இந்தியாவில் இதன் காலம் பொ.ஆ.மு. 10,000 முதல் 4000வரை எனக் கருதப்படுகிறது. இக்காலக் கணிப்பு, இடத்துக்கு இடம் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் அடிப்படையில் சற்று மாறுபடுகின்றன. இருப்பினும், நுண் கற்காலத்தைத் தொடர்ந்து புதிய கற்காலம் துவங்கியது.இந்தியாவில் சீவாலிக் நிலப்பரப்புப் பகுதிகளிலும் விந்திய நிலப்பரப்புப் பகுதிகளிலும், கங்கையின் கழிமுகப் பகுதிகளிலும் இப்பண்பாடு பரந்து காணப்படுகிறது. பங்களாதேஷ் மற்றும் பிகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் மேற்பரப்பு ஆய்வுகளில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரி கிளிப்பான் மரத்தைக் கிழிக்கப் பயன்படுத்தும் கருவியான உழி போன்ற கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குப் பகுதியான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா போன்ற பகுதிகளில் பதிய கற்காலப் பண்பாடு பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் திருப்பத்தூர், சேலம், வடஆற்காடு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இக்காலத்தில்தான் மொழி உருவானது. தொடர்பு மொழிகளாக பல உருவாகி கலக்கத் தொடங்கியிருந்தன.சேர்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள பையம்பள்ளி என்கிற இடத்தில் கிடைத்திருக்கிற சான்றுகள் புதிய கற்காலத்தினை இன்னும் குறைத்துக் காட்டக்கூடியவனவாக உள்ளன. அவை கி.மு.1300க்கும் 1200க்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. வடநாட்டில் அது கி.மு.2300க்கும் 1050க்கு இடைப்பட்ட காலத்தோடு இருக்கிறது என்று பேராசிரியர் தங்கவேல் குறித்திருக்கிறார்.எனவே இக்காலகட்டங்களைப் பார்க்கும்போது பண்டைக் கால மக்கள் எவ்வளவு நாகரீகத்தோடு பண்பட்டிருப்பார்கள் என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடியும். இந்திய துணைக் கண்டத்தில் இக்காத்தில்தான் பல இடங்களில் மொழிகள் கலந்தது திரியத் தொடங்கியிருந்தது. தொடர்புக் உருவாகியிருந்தன. உலகின் சில பகுதிகளில் சில இடங்களில் நகர அமைபோடு வாழத்தொடங்கியிருந்தனர். செறிந்த மொழி கட்டமைப்புகள் பெரும்பாலும் உருவாகத் தொடங்கியிருந்தது என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.இதுவரை விவாதித்தவை முழுமையானவை அல்ல என்பதை வாசகர்களுக்கு வலியுறுத்திக்கூறு விரும்புகிறேன். இவை அனைத்தும் ஒரு முன்னுரையே. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும். இக்காலகட்டத்தில் குடியிறுப்புகள் உருவாகிவிட்டன. சில இடங்களில் உயர்ந்த நாகரீக சமூகங்கள் உருவாகியிருந்தன. அரப்பா மொகஞ்சதாரோவில் அவை நிலவியது போலவே, பொருணையாற்று நாகரீகமும், தற்கால ஆய்வில் வெளிவந்துள்ள மதுரை நாகரீகமும் இக்காலகட்டத்தின் ஒரு பகுதிதான். அதே நேரத்தில் மேற்காசியாவிலும், வட அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் சமூக கட்டமைப்புகள் கொண்ட நாகரீக சமூகங்கள் உருவாகியிருந்தன. உலகின் இந்த பரந்துபட்ட பரிணாமத்தையொட்டியே அல்லது இந்திய துணைக் கண்டத்தின் நாகரீக பங்களிப்பை ஒட்டியே முன்னும் பின்னதுமான சமூக கட்டமைப்புகளை காணமுடியும்.இந்த புதிய கற்காலத்தின் பிற்காலத்தில்தான் ஏற்றத்ததாழ்வுகள் கொண்ட சமூக அமைப்புகளும் உருவாகத் தொடங்கின என்பது வரலாற்றின் கதிப்போக்காக அமைந்தது. ஏனெனில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகமல் போயிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கென்பது மறைந்துப் போயிருக்கும். எனினும் இன்னும் சில நாகரீக அமைப்புகள் இக்காலத்தினைத் தொடர்ந்து உருவாயின. அவற்றைப் புரிந்துக் கொண்டால் இப்போது உருவாகியுள்ள புதிய கற்கால சேரிகளின் பின்புலத்தினை புரிந்துக்கொள்ள முடியும். எனவே அவற்றைத் தொடர்ந்து அடுத்த இதழில்பார்க்கலாம். அதுவரை இக்காலகட்டத்தில் சாதி என்கிற ஒன்று உருவாகவில்லை என்பத¬ மட்டும் உறுதியாக கூறுலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தென்னிந்திய மக்களின் மனித உடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்ட எம். லூயிஸ் லாப்பிக்யூ என்ற ஆய்வாளர் 1906ல் வெளியிட்ட ஆசிய நீக்ரோக்கள்
(Les Negres d’Asie, et la race ed general, Revne Scientifique VI July 1906) என்ற நூலில் பின்வருமாறு தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
கட்டுரையை மீண்டும் மீள்பதிவு செய்கின்றேன். ஒரு பகுதி விடுபட்டிருந்தது.
--
சாதி என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்பே சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது.
மக்களிடையே மன நிலை மாறுபட்டதோ அப்போது சேரிகள் தோன்றின என்று நினைக்கிறேன்
திரு.கெளதம சன்னா அவர்களின் கருத்துக்களில் பலவற்றுடன் என் அனுபவங்களும், கருத்துக்களும் ஒத்துப்போகின்றன. அவர் நேராக பங்கு கொள்ளமாட்டாரா?இ
கோயில்கள் உருவானப் பிறகுதான் சேரிகள் உருவாகியிருக்கும் என்று ஏசுராசன் அவர்கள் சொன்ன கருத்து பாதி தவறு