சாதி, தீண்டாமையின் மூல வரலாறு

1,415 views
Skip to first unread message

Suba.T.

unread,
Apr 11, 2015, 4:02:18 AM4/11/15
to மின்தமிழ், Subashini Tremmel

கட்டுரை ஆசிரியரின் சம்மத்துடன் மறுபதிப்பு செய்யப்படுகின்றது! கட்டுரை ஆசிரியரும் குழுவில் புதிய  உறுப்பினராக இணைந்துள்ளார். 

-சுபா

கௌதம சன்னா

ந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும்.

நம் காலத்திற்குப் பிறகு வரும் எத்தனையோ காலங்களுக்குப் பிறகு நாம் வாழும் இந்த பூமி அடையப் போகும் அழிவிற்கு இப்போது மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டது உலகின் மனித இனம். சூரியன் அணைந்து அதிலுள்ள நெருப்பாற்றல் அத்தனையும் தீர்ந்துபோய், ஒரு மாபெரும் சிவப்பு நெருப்புக்கங்கு கோளமாக தன்னைத் தானே பெரிதாக்கிக் கொள்ளும் காலத்திற்கு சுமார் நானூறு கோடி ஆண்டுகள் பிடிக்கலாம், அப்போது பெரிதாகும் சூரியக் கோளம் நாம் வாழும் இந்த பூமியை சாம்பலாக்கி விழுங்கிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் மனிதக்குலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் உங்களை தொற்றிக் கொள்வது புரிகிறது. நிச்சயம் மனிதக்குலம் தழைக்கும்.

உலகம் அழியத் தொடங்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வளித்த இந்த பூமிப் பந்தை விட்டு மனிதர்கள் தப்பிவிடு வார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதாவது ஓரிடத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு கோளத் தினைக் கண்டுபிடித்து குடியேறி விடுவார்கள். அதற்கான தொழில் நுட்பத்தை அவர்கள் விரைவில் அடைந்தும் விடுவார்கள். புதிதாக குடியேறிய கோளத்திலிருந்து பூமியை அவர்கள் நன்றி யோடு பார்ப்பார்களா…?

தூரத்தில் ஒரு சிறு ஒளிப் புள்ளியாய் தெரியப் போகும் இப்புவியை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களால் யோசிக்க முடியுமானால் உங்களுக்கு உலகத்தின் மீது ஒரு பாசம் பிறப்பதை உணர முடியும். ஆனால் அன்றைய மனித குலம் தப்பிப் போகும்போது அவர்கள் தம்முடன் எதைக் கொண்டு போவார்கள்.

பைபிளில் வரும் ஒரு கதையில், நீரினால் உலகம் அழியப் போகிறது என்று கடவுள் நோவாவுக்குச் சொல்கிறார். பின்பு கடவுளின் கட்டளையின்படி உலகம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். எனவே நோவா ஒரு கப்பலை கட்டி, அதில் உலகத்தின் அனைத்து உயிரினங்களையும் இணைகளாக கொண்டு போய் சேர்த்து காப்பாற்றிய கதை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் உயிரினங்களோடு அவருக்குத் தெரிந்த யூதர்களை மட்டும் தனது பேழையில் கொண்டுப் போனாரென்றால் பிற மக்களெல்லாம் என்ன ஆகியிருப்பார்கள்..? இந்த கேள்வி அநாவசிய மாகப் படலாம், ஆனால் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படி மனிதர்கள் தப்பிப் போகும்போது அந்த விண்கலத்தில் தமிழர்கள் இருப்பார்களா…? அப்படி இருந்தால் அவர்களின் சாதி அப்போது இருக்குமா…? தலித்துகள் இருப்பார்களா..? பார்ப்பனர்கள் இருப்பார்களா..,? என்று கேள்வி களை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

downloadஇப்படி உலகம் எப்படியோ வளர்ந்து.. எதை யெதையோ யோசித்துக்கொண்டிக்கும் நிலையில் தமிழர்கள் எதை யோசித்துக் கொண்டிருக் கிறார்கள்.. என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்…? ஆனால் நிச்சயம் உங்களால் கற்பனை செய்ய முடியாது…? அது சற்று கடினமான வேலையாகத் தெரியும்…? ஏனென்றால் உங்கள் கற்பனையை நமது சமகாலத் தமிழர்கள் திருடிவிட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால், கூளிங்கிளாஸ் போட்டால் என்ன என்கிற மிக அவசியமான கேள்விகளால் நொந்துப் போயிருப் பீர்கள்; அல்லது நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வற்கான நாளினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பீர்கள்; அல்லது நடிகைகளின் கிசுகிசுக்களை சலிக்காமல் பகிர்ந்துக் கொண்டிருப் பீர்கள்; அல்லது கிரிக்கெட்டில் இந்தியா எப்படி தோற்றுப் போனது என்பதைப் பற்றியும் அது எப்படி வென்றிருக்கலாம் என்பதைப் பற்றியும், ஆத்திரம் தீரும் வரையில் போகும் இடமெல்லாம் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்; அல்லது தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த சேனலைப் பார்க்கலம் என்று ஓயாமல் தொலைச் சுட்டுக் கருவியை அழுத்திக் கொண்டிருப்பீர்கள்; அப்படி எதுவும் இல்லையென்றால் நம்மைவிட இந்த உலகத்தில் எவன் உயர்ந்தவனாய் இருக்கிறான்.. யாரும் இருக்க முடியாதே..! நாங்கள் தான் நெருப்பில் பிறந்தோமே! அல்லது வானத்திலிருந்து தேவராய் குதித்தோமே! என்று பலவாறாய் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

இதுதான் இன்றையத் தமிழகம். கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழன் அந்தக் காலத்தினை விட்டு முன்னேறி விட்டானா.. முன்னேறி இருந்தால் நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது அல்லது விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவன் உங்களை பற்றி இவன் எந்த சாதிக்காரனாக இருப்பான் என்று யோசிக்காமல் இருப்பானா..? அல்லது இவனைத் தொட்டால் எதாவது தீட்டு ஒட்டிக்கொள்ளுமா என்று நினைப்பானா..? அல்லது டாஸ்மாக் கடையில் போதை யேற்றிக்கொண்டு முதுக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் துருபிடித்தக் கத்தியை வைத்து இன்றைக்கு எவன் தலையை அறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப் பானா..? இப்படியெல்லாம் யோசிக்க மாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

தேசிய குற்றவியல் புள்ளியல் துறை வெளியிட்ட ஒரு புள்ளி விவரப்படி; இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5 தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள். இது வாரக்கணக்கு என்றால்; நாள் கணக்குபடி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 27 வன்கொடுமைகள் நடக்கின்றன. 3 தலித் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். 11 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். சுருக்கிச் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் தலித்துகளுக்கு எதிரான குற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி…?

Caste1-aaநீங்கள் தமிழகத்திற்குள் அல்லது இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானால் போய் பாருங்கள்; வலைப் பின்னல் போல கிராமங்களைப் பார்க்க முடியும், ஒவ்வொரு கிராமமும் இரண்டாகப் பிரிந்து இருப்பதை உங்களால் பார்க்க முடியும், அது கிராமம் என்றும் சேரி என்றும் பிரிந்து இருப்பதை பார்க்கலாம். இவை எப்படி உருவாயின..?

சேரிக்குள் எப்படி தலித்துகள் மட்டும் அடைக்கப்பட்டார்கள், ஊருக்குள் எப்படி சாதி இந்துக்கள் வந்தார்கள்..? மலைகளில் எப்படி பழங்குடி மக்கள் குடியேறினார்கள்..? ஊருக்குள் இருப்பவன் சேரிக்காரனை தொட மறுக்கிறானே ஏன்..? அவன் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் தலையை எடுக்கிறானே ஏன்..? அல்லது தற்கொலை செய்துக் கொள்கிறானே ஏன்..? நான் உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்கிறானே ஏன்..? நீங்களெல்லாம் தாழ்ந்த சாதிக்காரன் என்று ஒரு கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறானே ஏன்…?

திருடுவதற்கு என்று ஒரு கூட்டமும், அதை நியாயப்படுத்த ஒரு கூட்டமும் இருக்கிறதே ஏன்..? எதுவும் கிடைக்காமல் வயிற்றில் ஈரத் துணியோடு நிலத்தில் இறங்கி உழைத்துக் கொண்டிருக்கிறதே ஒரு கூட்டம் அதற்கு மட்டும் அப்படி ஒரு சாபம் ஏன்..? இதற்கெல்லாம் எது காரணம்…? இவனை சேரியில் அடக்கினால் அடங்கி போவான் என்று ஒரு கூட்டம் நினைத்தால், அப்படியல்ல நானும் ஒரு கூட்டத்தை என்னை விட கீழான மற்றொரு சேரியில் அடக்கி வைப்பேன் என்று நடந்துக் கொள்கிறதே ஒரு கூட்டம்.. எப்படி..?

துணி வெளுக்க ஒரு கூட்டம். முடித்திருத்த ஒரு கூட்டம், செறுப்புத் தைக்க ஒரு கூட்டம், மலசலங் களை வாரியெடுக்க ஒரு கூட்டம், கடவுளோடு பேச ஒரு கூட்டம், கடவுளை எம் மீதே இறக்கி ஆடுவேன் என்று ஒரு கூட்டம், பணத்தை சேமிக்க ஒரு கூட்டம், செலவழிக்க ஒரு கூட்டம், இல்லை நாங்கள் ஆட்சி மட்டும்தான் செய்வோம் எங்களுக்கு வேறு வேலை தெரியாது என்று சொல்லிக்கொள்ள ஒரு கூட்டம், கூட்டிக் கொடுக்க ஒரு கூட்டம், கூடிக் குலவ ஒரு கூட்டம். எதையும் மாற்ற விடமாட்டோம் எல்லாம் சனாதனத்தின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு கூட்டம்.. ஏன் இப்படி..?

எதிர்த்து பேசி விட்டாலே வாயில் மலத்தினை திணிக்கவும், மூத்திரத்தை பெய்யவும் மனம் வருகிறதே ஏன். அதை செய்யக்கூடிய ஒரு மனிதத் தன்மையற்ற மனநிலையை தந்தது எது? ஏன் இப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்; நீங்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன்? அவர்களுக்கு அந்த உயர்ந்த தகுதியைக் கொடுத்தது எது.. யார்..?

அழகு சென்னையின் நாள்தோறும் குவியும் குப்பைகளை அள்ள மட்டும் ஒரு கூட்டம், மனிதக் கழிவுகள் அடைத்துக்கொண்டால் மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்குவதற்கு ஒரு கூட்டம். அதை பார்த்துக்கொண்டு மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டுபோகும் ஒரு கூட்டம். இப்படி எல்லாக் கூட்டத்தின் செயல்களுக்கும் நியாயத்தினை கற்பிப்பது எது. அவர்கள் குற்ற உணர்வின்றி செயல்படுதற்கான ஆற்றலை எங்கிருந்து பெறு கிறார்கள். அதற்கான மூலம் எது..?

நகர் புற குடிசைப் பகுதிகளில், சாலையோரங் களில், கூவத்தின் நாற்றம் மிகுந்த சந்தடிகளில், கேட்பாரற்று ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்படும் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் அவர்களது விதியா? அதை மாற்றும் வல்லமை அரசக்கு இருந்தும் எந்த விதமான அக்கறையும் இல்லாமல் புறக்கணிக்கிறதே ஏன்..? அவர்கள் ஸ்லம் மக்கள், குப்பத்து மக்கள், சேரி மக்கள் என்று உதாசீனப்படுகிறார்களே ஏன்..?
நாகரிகம் பெருத்த பெரு சிறு நகரங்களில் கார்களில், துள்ளுந்துகளில் போகும் படித்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் முந்திச் சென்று போக்குவரத்து விதிகளையெல்லாம் அடித்து நொறுக்கி தனது சுயநலத்தை நிலை நிறுத்துகிறார்களே ஏன்..? வரிசையில் போக மனமில்லாமல் ஒருவர் மீது ஏறிப் போகும் மனநிலையை கொடுத்தது எது..?

நம் கண்ணெதிரிலேயே பார்க்கும் எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணமாக.. கொலை, கொள்ளை, தீ வைப்பு, திருட்டு, கற்பழிப்பு, அடிதடி, கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்புணர்வு, அவமானம், அசிங்கம், வறட்டு கௌரவம், முறையற்ற உறவுகள் என எல்லா வகையான தீமைகளும் எந்தவிதமான கூச்சமும் இன்றி நடந்துகொண்டிருக்கிறதே.. அச்சப்படும் மக்களும் அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் யார் மீதாவது பழியைப் போட்டு விட்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அமைதியாக இருக்கிறார்களே அதற்கு மூலம் என்ன..?

உறவுக்குள் மட்டும் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் எப்போது வந்தது. அதற்கும் இதுவரை பேசி வந்த தீமைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா..? கோடிக்கணக்கான தெய்வங்கள், ஆயிரக் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான ஞாநிகள், முனிவர்கள், அருளுரையாளர்கள், தெருவிற்குத் தெரு கோயில்கள் என எல்லாம் இருந்தும் எதற்காக இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள், கடவுள்கள் தடுத்தாலும் தமது பெருமையை கடவுளுக்கும் ஏற்றி அவரை தமது கைப்பாவையாக மாற்றிக் கொள்கிறார்களே ஏன்..?

இந்திய சமுகத்தில் சரிபாதியாய் இருக்க வேண்டியப் பெண்கள் 1000 ஆண்களுக்கு வெறும் 908 பேர் மட்டுமே இருக்கிறார்களே ஏன்..? தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 995 பேர் மட்டும் இருக்கிறார்கள் என்றால் கோளாறு எங்கிருக்கிறது..? பெண்கள் மட்டும் ஏன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும்..? யார் இதைத் தீர்மானித்தது, அல்லது எது தீர்மானித்தது..? பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை தீர்மானித்தது எது..? பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொல்லும் கொடுந்துணிவை அளித்தது எது..?

download (1)இப்படி எல்லாத் தீமைகளுக்கும் மூலமாக இருப்பது எது..? என்கிற கேள்விக்கு பல பதில்களை நம்மால் பெற முடியும்.. ஆனால் நமது சமூகத்தில் பல பதில்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதற்கெல்லாம் ஒரே பதில் தான். அதுதான் சாதி.. சாதிதான்.. சாதியேதான்…!

இந்த சாதி என்று சொல்கிறார்களே அது எப்படி இருக்கும், அதற்கான உருவம், மணம், குணம் என்ன..? யார் அதை படைத்தது.. அதற்கும் தீண்டாமைக்கும் உள்ளத் தொடர்ப்பு என்ன.. தீண்டாமை எப்படி உருவானது அல்லது யார் உருவாக்கியது.. இன்னும் ஏன் இவைகள் அழியாமல் இருக்கின்றன. யாராவது உலகத்தின் மேலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறார் களா..? அவற்றை செயல்படுத்துகிறார்களா…? இவற் றிற்கான விடைகளைத் தெரிந்துகொண்டால் பிரச்சினைகளின் வேர்களைக் கண்டுபிடிக்கலாம் அல்லவா?

படிக்காதப் பாமர மக்களிடம் புரையோடியிருந்த சாதி இப்போது கற்றுத் தெளிந்த மக்களையும் முட்டாளாக்கி கொடூரமாக வளர்ந்து கொண்டிருக் கிறது. எங்கும் சாதியின் வன்முறை வெறியாட்டம் தலை விரித்தாடுகிறது. அது தனக்கான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எல்லா இயற்கை அறத்தையும் அது குழித் தோண்டி புதைத்துக் கொண்டுள்ளது. அதன் கோரத்தைப் பற்றி புரிந்துக் கொள்ளாதவர்களால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் அப்படி கருத்துச் சொல்லப் போய் தன் சாதியைப் பற்றி பேச நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கிப் போகிறார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் சாதி மக்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு இருக்குமா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஒரு மாபெரும் பிரச்சினையின் மூலத்தை அறிந்துக் கொள்ளாமல் இனி எதையும்.. சனநாயகத்தை, முதலாளித்துவத்தை, உண்மையான மதத்தன்¬மையை, மனிதத் தன்மை உள்ளிட்ட எதைப் பற்றியும் நாம் பேச முடியாத நிலைக்கு வந்துள்ளோம்.

எனவே, சாதியைப் பற்றி புரிந்துகொள்ள அதன் மூலம், வளச்சி இயக்கம் மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றை குறித்த பரந்த அறிவை நாம் பெற வேண்டும். அதற்கு இன்றைக்கு உருவாகியுள்ள புதிய கண்ணோட்டத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள சாத்தியங்களுடன் அவற்றின் மூலத்தை பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குத் தான் இந்த தொடர்.

புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த இந்த அற்புதமான காலத்தில் இந்த துறையின் ஆதி மூலவராக நான் அவரையே பார்க்கிறேன். சாதியின் அத்தனை நுட்பங்களையும் அவர் ஆராய்ந்திருக்கிறார். அதன் இருளான பக்கங்களின் மீது பெரும் ஒளியினை பாய்ச்சி அதை யாரும் புரிந்துகொள்ள முடியும் என்று வழிகாட்டி இருக்கிறார். அவரின் அறிவியல் பார்வையின் ஒளியில் சாதியின் மூலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும், ஆற்றல்களையும், அதை அழிக்கும் வழிகளையும் இனி பார்க்கப் போகிறோம்.

ஆர்வமுள்ளவர்கள் அவரின் ஒளியை தொடர்ந்து வரலாம். உங்களை அறிவின் ஒளி பொருந்தியவர்களாக மாற்றிக்கொள்ளலாம். யாராவது நான் இந்த சாதிக்காரன் என்று தோளை தூக்கும்போது அவர்களை பரிதாபமாக பார்க்கலாம்.. அவர்களின் அறியாமையை நினைத்து கோபத்துடன் சிரிக்கலாம்.. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து அவர்கள் தலைகுனியலாம்.. நீங்கள் தயாராக இருந்தால்… வரலாற்றின் இருண்ட பக்கங்களை தேடி செல்லும் நெடும்பயணத்தில் ஒளியோடு பயணிக்க வாருங்கள்…!

அடிப்படை யிலிருந்து தொடங்குவோம்..!

dr.ponmudi

unread,
Apr 17, 2015, 2:49:08 AM4/17/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
அருமையானதொடக்கம்! தொடருங்கள்! இதுபோன்ற கட்டுரை சாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்போருக்கு ஒரு மனமாற்றத்தை தரும். இது அவர்களுக்கு ஒரு மருந்தாக அமையட்டும்.

சாதியை ஒழிக்கமுடியுமா?
'மேல் கீழ்' என்னும் சாதியேற்றத்தாழ்வு நம்மிடமிருந்து அகலுமா?
*************************************************************************************

சாதிகளில் ஏற்றத்தாழ்வென்பது பல்லாண்டுகாலமாயிருந்துவருவது. அதை திடீரென்று தூக்கிப்போட்டுவிடுவதென்பது நடக்கமுடியாதது. திடீரென்றென்பதைவிடவும் இனி அதை மாற்றவேமுடியாதென்பதுதான் உண்மை!

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ்செய்வர் சிறப்பு

(குறள் 752) என்னும் திருவள்ளுவர்கூற்றுப்படி, தாழ்த்தப்பட்டோர் இல்லாதவராயிருந்ததால் அவ்வாறு கீழாகநடத்தப்பட்டனராவென்றால் அதுவுமில்லை. இல்லாதவராயிருந்தாலும் மேற்சாதியிற்பிறந்தவர்கள் அவர்களது சாதிக்காகவே மதிக்கப்பட்டனர். கீழ்ச்சாதியிற்பிறந்தவர்களோ அவர்களது சாதிக்காகவே பழிக்கப்பட்டனர்.

இந்த எண்ணம் கல்விமேம்பாட்டினால் சற்றே மாறியிருக்கதென்றுவேண்டுமானாற்சொல்லலாமேயன்றி, எவர்மனத்திலிருந்தும் அந்த சாதியென்பது அவர்களது அடிமனத்திலிருந்து முற்றிலும் அகன்றுவிட்டதாய் சொல்லமுடியாது! அது ஓர் அணைக்கமுடியாத தீ!

திருவள்ளுவரேகூட,

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

(குறள் 959) என்றகுறளில் குலத்தின்படியே ஒருவரது பேச்சுவழக்குமிருக்குமென்றும்,

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்கண் ஐயப் படும்

(குறள் 958) என்றகுறளில் ஒருவருடைய குணமுங்கூட குலத்தின்படியேயமையுமென்றுங்கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

இதேயெண்ணத்தாலேதான் மேற்சாதியிற்பிறந்தவனை திட்டும்போதுகூட அவனை கீழ்ச்சாதிப்பெயரைக்கொண்டுதிட்டுவதும் கீழ்ச்சாதிக்காரனை அவனது சாதியைச்சொல்லித்திட்டுவதும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

அரசு இதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தாலும், ஒவ்வொருவருடைய அடிமனத்திலும் வேரூன்றியிருக்கும் 'மேல் கீழ்' என்னும் எண்ணம் மறைந்துவிடுமென்பதை நம்பமுடியாது.

கல்வியறிவால், 'அவர் மேற்சாதிக்காரர்!' என்னும் அச்சம் கீழ்ச்சாதிக்காரர்களின்மந்த்திலிருந்தும் 
'இவன் கீழ்ச்சாதிக்காரன்!' என்னும் இளக்காரம் மேற்சாதிக்காரர்களின்மனத்திலிருந்தும் ஒருகாலத்திலிருந்ததைக்காட்டிலும் இன்று குறைந்திருக்கிறதென்பதை மறுக்கமுடியாது.

ஆனால் அதற்காக இந்த சாதிவேற்றுமையென்பது முற்றிலுமாய் ஒழிந்துவிடுமென்பதைமட்டும் நம்புவதற்கில்லை!

கல்விமேம்பாட்டினாலும் பொருளாதாரச்சமன்பாட்டினாலும் ஒருவேளை அதை சாதிகமுடியலாம்.

ஆனால் அதெல்லாம் நடக்குமாவென்பதையும் எப்போதுநடக்குமென்பதையும் இப்போதுசொல்லமுடியாது!

அரசியலே இன்று சாதியினடிப்படையில்வந்துவிட்டபிறகு இதெல்லாம் நடக்குமா?

Suba.T.

unread,
Apr 17, 2015, 6:54:14 AM4/17/15
to dr.ponmudi, மின்தமிழ், Subashini Tremmel
2015-04-17 8:49 GMT+02:00 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
அருமையானதொடக்கம்! தொடருங்கள்! இதுபோன்ற கட்டுரை சாதியை தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்போருக்கு ஒரு மனமாற்றத்தை தரும். இது அவர்களுக்கு ஒரு மருந்தாக அமையட்டும்.

சாதியை ஒழிக்கமுடியுமா?
'மேல் கீழ்' என்னும் சாதியேற்றத்தாழ்வு நம்மிடமிருந்து அகலுமா?
*************************************************************************************

சாதிகளில் ஏற்றத்தாழ்வென்பது பல்லாண்டுகாலமாயிருந்துவருவது. அதை திடீரென்று தூக்கிப்போட்டுவிடுவதென்பது நடக்கமுடியாதது. திடீரென்றென்பதைவிடவும் இனி அதை மாற்றவேமுடியாதென்பதுதான் உண்மை!

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ்செய்வர் சிறப்பு

(குறள் 752) என்னும் திருவள்ளுவர்கூற்றுப்படி, தாழ்த்தப்பட்டோர் இல்லாதவராயிருந்ததால் அவ்வாறு கீழாகநடத்தப்பட்டனராவென்றால் அதுவுமில்லை. இல்லாதவராயிருந்தாலும் மேற்சாதியிற்பிறந்தவர்கள் அவர்களது சாதிக்காகவே மதிக்கப்பட்டனர். கீழ்ச்சாதியிற்பிறந்தவர்களோ அவர்களது சாதிக்காகவே பழிக்கப்பட்டனர்.

இந்த எண்ணம் கல்விமேம்பாட்டினால் சற்றே மாறியிருக்கதென்றுவேண்டுமானாற்சொல்லலாமேயன்றி, எவர்மனத்திலிருந்தும் அந்த சாதியென்பது அவர்களது அடிமனத்திலிருந்து முற்றிலும் அகன்றுவிட்டதாய் சொல்லமுடியாது! அது ஓர் அணைக்கமுடியாத தீ!

திருவள்ளுவரேகூட,

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

(குறள் 959) என்றகுறளில் குலத்தின்படியே ஒருவரது பேச்சுவழக்குமிருக்குமென்றும்,

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை
குலத்தின்கண் ஐயப் படும்

(குறள் 958) என்றகுறளில் ஒருவருடைய குணமுங்கூட குலத்தின்படியேயமையுமென்றுங்கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

இதேயெண்ணத்தாலேதான் மேற்சாதியிற்பிறந்தவனை திட்டும்போதுகூட அவனை கீழ்ச்சாதிப்பெயரைக்கொண்டுதிட்டுவதும் கீழ்ச்சாதிக்காரனை அவனது சாதியைச்சொல்லித்திட்டுவதும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

அரசு இதெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தாலும், ஒவ்வொருவருடைய அடிமனத்திலும் வேரூன்றியிருக்கும் 'மேல் கீழ்' என்னும் எண்ணம் மறைந்துவிடுமென்பதை நம்பமுடியாது.

கல்வியறிவால், 'அவர் மேற்சாதிக்காரர்!' என்னும் அச்சம் கீழ்ச்சாதிக்காரர்களின்மந்த்திலிருந்தும் 
'இவன் கீழ்ச்சாதிக்காரன்!' என்னும் இளக்காரம் மேற்சாதிக்காரர்களின்மனத்திலிருந்தும் ஒருகாலத்திலிருந்ததைக்காட்டிலும் இன்று குறைந்திருக்கிறதென்பதை மறுக்கமுடியாது.

ஆனால் அதற்காக இந்த சாதிவேற்றுமையென்பது முற்றிலுமாய் ஒழிந்துவிடுமென்பதைமட்டும் நம்புவதற்கில்லை!

கல்விமேம்பாட்டினாலும் பொருளாதாரச்சமன்பாட்டினாலும் ஒருவேளை அதை சாதிகமுடியலாம்.

​தமிழகம், இலங்கை தவிர்த்த உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த சாதி என்ற ஒன்றில்லாமல் தான் வாழ்கின்றனர். மனித குல ​குழு வேறுபாடுகளின் தனித்துவம் என்பது மொழி, சில பண்பாட்டுக் கூறுகள் என்பதன் அடிப்படையில் விளங்குவது ஒரு சிறப்பு அம்சம். ஆனால் இதனை தமிழகத்திலும் இலங்கையிலும் இருப்பது போல சாதி வேறுபாட்டில் வைத்து உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனச் சொல்வதும் பிரித்துப் பார்த்து நடைமுறையில் இருப்பதுவும் ஒரு கொடுமை.

சமன்பாட்டை பிறர் சாதிப்பர்.. கல்வி மேம்பாடு பொருளாதாரம் சாதிக்கும் எனச் சொல்வதை விட தனி மனிதர் ஒவ்வொருவரும் இந்த சமூக இழிவை களைய என்ன நடவடிக்கை தாம் மேற்கொள்ளலாம் என சிந்திப்பதும் நடைமுறைப்படுத்துவதும் தேவை.

சுபா

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
N. Ganesan

unread,
Apr 17, 2015, 9:54:04 AM4/17/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

On Friday, April 17, 2015 at 3:54:14 AM UTC-7, Suba.T. wrote:

​தமிழகம், இலங்கை தவிர்த்த உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த சாதி என்ற ஒன்றில்லாமல் தான் வாழ்கின்றனர். மனித குல ​குழு வேறுபாடுகளின் தனித்துவம் என்பது மொழி, சில பண்பாட்டுக் கூறுகள் என்பதன் அடிப்படையில் விளங்குவது ஒரு சிறப்பு அம்சம். ஆனால் இதனை தமிழகத்திலும் இலங்கையிலும் இருப்பது போல சாதி வேறுபாட்டில் வைத்து உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனச் சொல்வதும் பிரித்துப் பார்த்து நடைமுறையில் இருப்பதுவும் ஒரு கொடுமை.

ஜாதி, தீண்டாமை என்பன தமிழர் சமுதாயத்தில் மட்டுமில்லை. ஜாதி வரலாறு, அதனைப் பயன்படுத்தும் வருணாசிரம முறை,
ஜாதி அழிப்பின் நீண்ட வரலாற்றில் முயற்சிகள் இந்திய உபகண்டம் முழுவதும் பார்க்கவேண்டும். இந்தியாவின் செம்மொழிகளில்
பல குறிப்புகள் இருக்கின்றன. செம்மொழி இலக்கியங்களை ஒப்பிட்டு ஜாதியின் ஆதி வரலாறுகளை ஆராய்தல் அவசியம்.
இந்தியாவில் ஜாதி அமைப்பு ஆழமானது. அதனால் தான் இன்னும் அகற்றமுடியவில்லை. காந்தி, பாரதி, அம்பேத்கார், பெரியார், ...
இப்பொழுதும் பலர் முயன்றுகொண்டுள்ளனர். 

நா. கணேசன்

G Sannah

unread,
Apr 17, 2015, 1:07:45 PM4/17/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
உங்கள் பதில்களுக்கு நன்றி.
தொடரை விரிவாகவே எழுத உள்ளேன்.சாதியை பற்றி இதுவரை இருந்த பல பிம்பங்களை ஆராய உள்ளேன். எனவே தொடர்ந்து மின்னிதழில் மட்டுமின்றி, என் முகநூல் பக்கத்திலும் wordpress பக்கத்திலும் உங்களது கேள்விகளை விமர்சனங்களை பதித்தால் முகநூல் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேற்கண்ட பக்கங்களில் விவாதங்களை தொடர்வது எப்படி என்று அவர்களுக்கு பாதை காட்டியது போல் ஆகும் என நினைக்கிறேன்.
நன்றி
அன்புடன்
சன்னா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Apr 18, 2015, 2:25:53 AM4/18/15
to mintamil
வணக்கம் சன்னா. நல்வரவு

உங்களைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தால் பலருக்கும் உங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

G Sannah

unread,
Apr 19, 2015, 6:59:39 AM4/19/15
to mint...@googlegroups.com
pls see this link.
my interview and detail

uns
sanna

On 18 April 2015 at 11:55, செல்வன் <hol...@gmail.com> wrote:
வணக்கம் சன்னா. நல்வரவு

உங்களைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தால் பலருக்கும் உங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

G Sannah

unread,
Apr 19, 2015, 7:01:02 AM4/19/15
to mint...@googlegroups.com

Singanenjam Sambandam

unread,
Apr 19, 2015, 7:15:40 AM4/19/15
to mint...@googlegroups.com
இன்றைக்கு வெகுவாக அதிகரித்துள்ள காதல் திருமணங்களால் , சென்னை போன்ற பெருநகர்ப் பகுதிகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஓரளவேணும் குறைந்துள்ளன என்றுதான் தோன்றுகிறது. கொல்கத்தாவிலும் காதல் திருமணங்களால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறைந்துள்ளன என்று வங்க நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு.

செல்வன்

unread,
Apr 19, 2015, 12:59:53 PM4/19/15
to mintamil
நன்றி சன்னா...பேட்டியை முழுக்க படித்தேன். தலித் இயக்கங்கள், அதன் வரலாறு, அதன் முன் உள்ள பணிகள் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். நீங்கள் மின் தமிழில் இணைந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.

G Sannah

unread,
Apr 20, 2015, 12:07:54 AM4/20/15
to mint...@googlegroups.com
அது வரலாறு தொடர்பான பேட்டி. அதை எடின்பர்க் பல்கலை வெளியிட்ட அந்த பேட்டி விரைவில் தமிழில் வர உள்ளது. முடிந்தால் அதைப் பற்றின அறிமுகத்தை மின்தமிழில் எழுதுங்கள்.
நன்றி

2015-04-19 22:29 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நன்றி சன்னா...பேட்டியை முழுக்க படித்தேன். தலித் இயக்கங்கள், அதன் வரலாறு, அதன் முன் உள்ள பணிகள் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். நீங்கள் மின் தமிழில் இணைந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி.

செல்வன்

unread,
Apr 20, 2015, 12:14:25 AM4/20/15
to mintamil
நன்றி. கட்டாயம் நேரம் கிடைக்கையில் அதை மொழிபெயர்த்து எழுதுகிறேன். தலித் இயக்க வரலாறு குறித்தும், தற்கால சவால்கள் குறித்தும் மிகுந்த பயனுள்ள தகவல்கள் உள்ள பேட்டி என்பதால் பலருக்கும் பலனளிக்கும்

G Sannah

unread,
Apr 21, 2015, 2:19:55 PM4/21/15
to mint...@googlegroups.com
விரைவில்  செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.அப்படி முழுதும் மொழி பெயர்த்து விட்டால் அதை நூலாக்கம் செய்வது எளிதாக இருக்கும்,  விரைவில்  வெளியிடலாம். உங்கள் தன்னலமற்ற ஆர்வத்திற்கும் உதவிக்கும் நன்றி

செல்வன்

unread,
Apr 22, 2015, 2:05:15 AM4/22/15
to mintamil, g.sa...@gmail.com
கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே

கேள்வி: தலித்துகளின் தற்போதைய நிலை என்ன? அது மட்டுமல்ல. இது திராவிட மண். இங்கே அரசியல்வாதிகள் ஜாதி ஒழிப்பைப்பற்றி பெரியார் காலத்திலிருந்து பேசி வருகிறார்கள். இந்த (திராவிட) மண்ணில் தலித் இயக்கங்கள் அவசியம் தானா?

பதில்: இந்த மாநிலம் மட்டுமில்லை. இந்தியா முழுக்க தலித் இயக்கங்களுக்கான அழுத்தமான தேவை இருக்கிறது. ஏன் என கேட்டால் இது ஈவேரா பூமியெனினும் தலித் எழுச்சி வரலாறு 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது. 1777ல் சென்னையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்று அதைப்பற்றி இரட்டைமலை சீனிவாசன் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அப்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தலித் ஒருவரின் மரணத்துக்காக ஒரு விசாரணை நடைபெற்று, அதன்பின் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தலித் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. அன்றில் இருந்து தொடர்போராட்டங்கள் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கபடாதது மாற்றம் வருவதற்கான வாய்ப்பை தடுத்துவிட்டது. 1840ல் ஆதிதிராவிடன் எனும் வார்த்தை "பூர்வகுடி திராவிடன்" எனும் பொருள் தரும் வகையில் அறிமுகம் ஆகிறது. 1880ல் ஆதி திராவிடர் மகாஜன சபையும், 1890ல் பறையர் மகாஜன சபையும், 1891ல் திராவிடர் மகாஜன சபையும் உருவாகின்றன. ஆக 1880ல் இருந்து 1891க்குள் மூன்று முக்கிய இயக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றைய தலித் இயக்கங்கள் எல்லாமே இவற்றின் வாரிசுகள் தான். இன்றைய இயக்கங்கள் எழுப்பும் கோரிக்கை அன்றைய இந்த மூன்று இயக்கங்களும் எழுப்பிய கோரிக்கைகளே. பெரியார் முதலான தலைவர்கள் இந்த காலக்ட்டங்களின் மத்தியில் வந்து போன தலைவர்களே. பெரியாருடன் நின்றுவிடாமல் நாம் இன்னமும் கூட பல பெயர்களைக்குறிப்பிடவேண்டும்

1845ல் இருந்து 1880 வரை தலித்துகளுக்காக உழைத்த ஏராளமான தலைவர்கள் இருந்தார்கள். வி அயோத்திதாச பண்டிதர் (இவர் கே அயோத்திதாச பண்டிதரின் ஆசிரியர்), புலவர் வைரக்கண் வேலாயுதம், வெங்கிடசாமி பண்டிதர், ஆரண்யகதாச பண்டிதர், மைலியா சின்னதம்பி, புலவர் மற்றும் நாவலாசிரியர் பி.ஏ.ஏ ராஜேந்திரம் பிள்ளை மற்றும் சாங்கு சித்த சிவலிங்க நாயனார். இந்த தலைவர்கள் தலித் மக்களை சமூக நீரோட்டத்தில் கலக்க வைத்து எதிர்காலத்துக்கு வித்திட்டார்கள். சுபிக்ஷார சங்கம், பூர்வதமிழ் அபிமான சங்கம், பஞ்சமர் கல்வி சங்கம், மற்றும் ஆதூலர் அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் காலக்ட்டத்திலும் தலித் மக்களை திரட்டும் முயற்சி நடைபெற்றது

இந்த தலைவர்களின் முயற்சி இவர்களது நோக்கங்களை முன்னெடுக்கும் பின்னாளைய தலைவர்கள் உருவாக வழிவகுத்தது. முக்கிய தலைவர்களாக அயோத்திதாசர் (தென்னாட்டின் முதல் சமூகசீர்திருத்தவாதியான இவர் சாதியற்ற திராவிடர்களின் இயக்கத்தைத்துவக்கினார்) மற்றும் இவரது நண்பர் டி. ஜான் ரத்தினம் (இவர் முதல்முதலாக திராவிடர் கழகத்தை துவக்கி திராவிட பாண்டியன் இதழையும் 1887ல் நடத்தினார். இதன் பின்னரே ஈவேரா தனது திராவிடர் கழகத்தை துவக்கினார்) ஆகியோரைக்கூறலாம்.

இக்காலகட்டத்தைசேர்ந்த மற்ற தலைவர்களாக பி.எம் மதுரா பிள்ளை, பி. வெங்கடாசல சுப்பிரமணியம், மயிலை சின்னதம்பி, ஸ்வாமி அரண்கைய தாசர் (மூன்றாவது தலித் பத்திரிக்கையான சுகிர்த வாசினியின் ஆசிரியர்), ஓ. பழனிசாமி, ஓம்பிரகாச ஸ்வாமி, வி சி வாசுதேவ பிள்ளை, ஸ்வாமி தேசிகானந்தா,  எம்.சி மதுரா பிள்ளை, வி தர்மலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தையும், எல்.சி குருசாமி, எச்.எம் ஜெகன்னாதன் ஆகியோர் அருந்ததியரையும் இவ்வியக்கத்தில் பிரதிநிதிப்படுத்தினார்கள்.

1910களின் துவக்க வருடங்களில் கே அப்பாதுரை, புலவர் பெரியசாமி, ஆர் வீரய்யன் முதலானோர் முதன்மையாகவும், 1920ல் எம் சி ராஜா இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலித் தலைவராகவும் இருந்தார்கள். 1930ல் ஸ்வாமி சகஜானந்தர், பி.எம். வேலாயுதபாணி, வி.ஐ முனுசாமிப்பிள்ளை, என். சிவராஜ், அன்னை மீனாம்பாள் (இந்தியாவின் முதல் தலித் பெண் தலைவர்), ஜோதி வெங்கிட செல்லம் மற்றும் பி. பரமேஸ்வரன் ஆகியோர் தலித்துகளுக்காக அம்பேத்கரால் உந்தபட்டு பணியாற்றினார்கள். ஆக தமிழ்நாட்டில் தலித் எழுச்சிக்கு செறிவான ஒரு வரலாறு இருக்கிறது

இவர்களில் கொள்கைரீதியான அடிப்படையில் தலித் எழுச்சியை முன்னெடுத்தவராக அயோத்திதாசரைக்கூறலாம். அவர் ஜாதியை மறுத்தவர்களையே தமிழராகவும், திராவிடராகவும் கருதினார். ஜாதி இருக்கிறது என்றவர்களை அவர் தமிழராக ஏற்கவில்லை. அவர் சமூகத்தில் "ஜாதி இருக்கிறது என்பவர்கள்- இல்லை என்பவர்கள்" என இரு பிரிவாக பிரித்தார். தலித்- தலித் அல்லாதவர் என்ற இருபிரிவாக கூட அவர் பிரிக்கவில்லை. ஆக தென்னாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாசரே. ஆக தமிழ்நாட்டில் மட்டும் இன்றி இந்தியா முழுக்க தலித் இயக்கங்கள் தம் முயற்சியை முன்னெடுக்க வேண்டி உள்ளன. இக்கோரிக்கைக்ள் 1880களில் இருந்து எழுப்பபட்டு வருகின்றன. அயோத்திடகசை 1891ல்லேயே முதல் பெட்டிசனை போடுகிறார். இக்கோரிக்கைகள் அன்றுபோலவே இன்றும் முக்கியமானவையாக உள்ளன. ஆக தலித் இயக்கங்களின் அவசியம் இன்றும் உள்ளது.

N. Ganesan

unread,
Apr 22, 2015, 8:26:07 AM4/22/15
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, April 21, 2015 at 11:05:15 PM UTC-7, செல்வன் wrote:
கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே

You can read Hugo Gorringe's papers here,

N. Ganesan

Suba.T.

unread,
Apr 24, 2015, 5:40:24 PM4/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
​அருமை.
பேட்டியின் முதல் பகுதி இது என நினைக்கின்றேன். 
இதனை மின் தமிழ் மேடையில் பதிந்து வைக்க பரிந்துரைக்கின்றேன்.

சுபா​
 
Suba.T.

unread,
Apr 24, 2015, 5:42:03 PM4/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-22 8:04 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
​..

1910களின் துவக்க வருடங்களில் கே அப்பாதுரை, புலவர் பெரியசாமி, ஆர் வீரய்யன் முதலானோர் முதன்மையாகவும், 1920ல் எம் சி ராஜா இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலித் தலைவராகவும் இருந்தார்கள். 1930ல் ஸ்வாமி சகஜானந்தர், பி.எம். வேலாயுதபாணி, வி.ஐ முனுசாமிப்பிள்ளை, என். சிவராஜ், அன்னை மீனாம்பாள் (இந்தியாவின் முதல் தலித் பெண் தலைவர்), ஜோதி வெங்கிட செல்லம் மற்றும் பி. பரமேஸ்வரன் ஆகியோர் தலித்துகளுக்காக அம்பேத்கரால் உந்தபட்டு பணியாற்றினார்கள். ஆக தமிழ்நாட்டில் தலித் எழுச்சிக்கு செறிவான ஒரு வரலாறு இருக்கிறது

​அன்புள்ள சன்னா,

தாங்கள் அன்னை மீனாம்பாள் பற்றியும் அயோத்திதாசர் பற்றியும் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளேன்.

சுபா

G Sannah

unread,
Apr 24, 2015, 10:17:23 PM4/24/15
to mint...@googlegroups.com
அன்புள்ள சுபா

என்னுடைய வலைப்பூவில் பண்டிதரின் ஆய்வுகள் சிலவற்றை பதித்துள்ளேன். பாருங்கள். முடிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள். 

அன்புடன்
சன்னா

Suba.T.

unread,
Apr 25, 2015, 4:54:50 AM4/25/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-25 4:17 GMT+02:00 G Sannah <g.sa...@gmail.com>:
அன்புள்ள சுபா

என்னுடைய வலைப்பூவில் பண்டிதரின் ஆய்வுகள் சிலவற்றை பதித்துள்ளேன். பாருங்கள். முடிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள். 

​நன்றி. பார்த்தேன். இதன் யூனிகோட் தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தினை முடிந்தால் எனக்கு அனுப்பவும்.

அன்புடன்
சுபா

தேமொழி

unread,
Apr 25, 2015, 5:44:43 AM4/25/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

On Friday, April 24, 2015 at 2:40:24 PM UTC-7, Suba.T. wrote:
2015-04-22 8:04 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே

பேட்டியின் முதல் பகுதி இது என நினைக்கின்றேன். 
இதனை மின் தமிழ் மேடையில் பதிந்து வைக்க பரிந்துரைக்கின்றேன்.

April 25, 2015
கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல்  - செல்வன்
பதிவர்: தேமொழி 

செல்வன்

unread,
Apr 25, 2015, 9:51:31 PM4/25/15
to mintamil, G Sannah
பாகம் இரண்டு

கேள்வி: பெரியாரிய இயக்கங்களும் நடுவே வந்த இயக்கங்களும் முந்தைய இயக்கங்களின் வரலாற்றை மறைத்துவிட்டனவா? நாம் அயோத்திதாசரையும் பிற தலைவர்களைப்பற்றியும் பேசுவதில்லை. பெரியார் மேலேயே கவனம் செலுத்துகிறோம். எங்கே பார்த்தாலும் பெரியார் சிலைகளும், படங்களுமே இருக்கிறதே ஒழிய இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் ஆகியோரது சிலைகளும், படங்களும் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன

பதில்: ஆம்

கேள்வி: திராவிட இயக்கங்களின் வரவால் பழைய தலித் இயக்கஙக்ளை நாம் மறந்துவிட்டோமா?

பதில்: இதை நாம் திராவிட இயக்கத்தின் நன்மைகள், தீமைகள் என்ற இருவிதங்களாக பிரித்துப்பார்த்து புரிந்துகொள்ளலாம். சற்று விரிவாக பேசவேண்டிய விஷயம் இது. திராவிட இயக்கம் 1917ல் துவங்கியது என ஏன் அனைவரும் கூறுகிறார்கள்? 1912ல் சென்னையின் மேல்சாதி வியாபாரிகளும், நிலக்கிழார்களும் கைகோர்த்து தென்னிந்திய வணிகர் சங்கம் எனும் அமைப்பை துவக்கினார்கள். அது 1916ல் தென்னிந்திய நல உரிமைச்சங்கமாக 1916ல் மாறுகிறது. இது பின்னாளில் நீதிக்கட்சியாக மாறுகிறது. திராவிட இயக்கத்தின் வரலாறு இதுதான். அவர்களின் தொடக்ககாலக்குறிக்கோள் என்னவென கேட்டால் அது தலித் விடுதலையாக இல்லை. அதற்காக அவர்கள் இயக்கத்தில் சேரவும் இல்லை. முதல்முதலாக நீதிக்கட்சி வெளியிட்ட சாசனத்திலும் பிந்தங்கிய மக்களின் அடிப்படைதேவைகள் பூர்த்தி செய்யபடவேண்டும் எனத்தான் உள்ளதே ஒழிய , உரிமைகளைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆக அவர்களின் அடிப்படை நோக்கம் என்னவெனப்பார்த்தால் பிராமணர்கள் வெள்ளையருடன் (ப்ரிட்டிஷ் அரசு) கூட்டு சேர்ந்து அரசியல் அதிகாரத்தில் ஒரு பங்கை அடைந்துவிட்டார்கள். அந்த அதிகாரத்தில் ஒரு பங்கை அடையவே பார்ப்பனரல்லாதோர் இயக்கம் துவக்கபட்டது. அவர்கள் விரும்பியது அதிகாரமும், அதிகாரத்தை அடைவதற்கான ஒரு அடிப்படையுமே

தங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அதிகாரம் மறுக்கப்பட்டதாகவும், அதை அடைய சமூகநீதி எனும் காரணத்தை முன்வைத்து அதிகாரத்தில் தமக்கான உரிமைகளை அவர்கள் கோரினார்கள். இந்த அடிப்படையில் அவர்கள் திரண்டதாலேயே நீதிக்கட்சிக்கு அன்று அடையாளம் கிடைத்தது. ஆனால் இது உருவான விதத்தை வைத்துப்பார்த்தாலே தமக்கும் கீழ் இருக்கும் தலித் மக்களை உயர்த்த அவர்கள் முன்வருவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு பொதுவான சமூகநீதியில் துளியேனும் ஆர்வம் இருந்திருந்தால் 1921ல் வந்த கோயில் நுழைவு மசோதாவை தோற்கடித்திருக்கமாட்டார்கள். ஆனால் அன்று அந்த கோயிலில் நுழையும் மசோதாவை தோற்கடித்தது அவர்களே.

கோயில் நுழைவு மசோதாவுக்கு எதிராக ஒன்றாக திரண்டு அது தோற்பதை உறுதி செய்தார்கள். பின்னாளில் (தலித் தலைவர்களான) இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகியோரின் இடைவிடாத அழுத்தம் காரணமாகவே அந்த மசோதா நிறைவேறியது.  அடித்தட்டு மக்களை முன்னேற்ற அன்று தொழிலாளர் கமிஷன் ஒரு நிதியை உருவாக்கச்சொல்லி வலியுறுத்தியது. பதவிக்கு வந்ததும் இவர்கள் செய்த முதல் வேலை அந்த நிதிக்கான ஒதுகீட்டைக்குறைத்ததுதான். அந்த நிதியை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்து, அதை சுத்தமாக காலி செய்து அடித்தட்டு மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகளை சுத்தமாக ஒழித்தார்கள்.

இவர்கள் சமூகத்தை மூன்று பிரிவாக பிரித்ததைக்காண்கிறோம். பார்ப்பனர், பார்ப்பனர் அலலதோர், தலித். இத்தகைய பிரிவினையால் அன்றும், இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டோரே.

பெரியாரிய இயக்கம் ஒடுக்கப்பட்டோருக்கு எதாவது உருப்படியான நன்மையைச் செய்தது எனும் கண்ணோட்டமே போலியானது. அதன்பின் பெரியார் திராவிட இயக்கத்தில் சேர்ந்து சுயமரியாதை இயக்கத்தைத்துவக்கி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைக்க முயன்றார். அதில் சிறிதளவு அவர் வெற்றி பெற்றாலும் சமூகம் அன்று இயங்கிய பழைய மாடலிலேயே அவர் இயங்கி அதற்கே உண்மையானவராக இருந்தார். அதைத்தாண்டி அவரால் செல்ல முடியாதற்கு காரணம் அன்று ஒடுக்கபட்ட மக்களுக்கு தலைவர்கள் இருந்ததால் அவர்களைத்தாண்டி இவரை அவர்களால் ஏற்க முடியவில்லை.

திராவிட இயக்கம் தலித் அல்லாதோரை மையமாக வைத்தே உருவானதால் ஒடுக்கப்பட்டோரை அதில் சேர்க்க சமூகரீதியான தடைகள் அவர்களுக்கு இருந்தன. அவர்களது விருப்பம் என்னவாக இருந்திருந்தாலும், ஒடுக்கபட்டோருக்கும், பார்ப்பனரல்லாதோருக்கும் இடையே உள்ள சமூகத்தடைகள் ஒடுக்கப்பட்டோரை இவ்வியக்கத்தில் சேர்க்க தடையாக இருந்தன. அதன்பின் திராவிட இயக்கம் வலுவான அரசியல் சக்தியாக மாறுகிறது. 1939ல் திராவிடர் கழகம் பிறக்கிறது. 1949ல் திமுக பிறக்கிறது.

1939ல் இருந்து 1949ல் அரசியலில் நுழைந்து அதிகாரத்தைப்பிடிக்க அவர்கள் முனைந்த இந்தப்பத்தாண்டு காலத்தில் அதிகாரத்தைப்பிடிக்க திராவிட அடையாளத்தை முன்வைத்தே அவர்கள் மக்களைத்திரட்டினார்கள். இந்த நிலையிலும் ஒடுக்கப்பட்டோரின் அடையாளத்தை அவர்கள் வெளிவரவிடாமல் மறைத்தே வந்தார்கள். ஒடுக்கப்பட்டோரின் அடையாளம் அவர்களுக்கு அன்று அவசியமானதாக இல்லை. ஒடுக்கபட்டோர் தம் அடையாளத்தை ஒட்டுவங்கியாக மாற்றாவிடில் அவர்களுடன் ஒன்றிணைய திராவிட இயக்கங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. 

ஆக பார்ப்பனரல்லாதோர் இயக்கம் அன்று தலித் அடையாளத்துடன் நேருக்கு நேர் மோதி அதை ஒடுக்கும் நோக்கிலேயே சென்றது. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், ரிபப்ளிக்கன் கட்சி என அந்த இயக்கத்தின் எந்த வடிவிலும், எந்த வகையிலும் அவர்கள் ஒடுக்கட்டோரை ஆதரிக்கவோ, அவர்களுக்காக பாடுபடவோ முனையவே இல்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் அக்காலத்தில் வெளிவந்த காண்டீபம் எனும் பத்திரிக்கையை நான் படிக்கையில் "வடநாட்டவரான அம்பேத்காரை தென்னாட்டுக்கு ஏன் அழைக்க வேண்டும்?" என எழுதப்பட்டிருந்ததை படித்தேன். ஆக இப்படித்தான் அவர்கள் அன்று பேசிவந்தார்கள். இந்த வகையில் அம்பேத்கரின் அடையாளத்தை மறைக்கவும் அவர்கள் முயன்றார்கள். பெரியாருக்கு அம்மாதிரி நோக்கம் இல்லையெனினும் திராவிட இயக்கத்தால் ஜாதியின் பிடியை விட்டு வெளியே வரமுடிந்ததில்லை. ஆக தெரிந்தோ, தெரியாமலோ திராவிட இயக்கம் தலித்துகளின் அடையாளத்தையும், அரசியலையும், சமூக வரலாற்றையும் ஒடுக்குவதில் மிகமுக்கியமான பங்கை வகித்தது. 

Seshadri Sridharan

unread,
Apr 25, 2015, 10:05:16 PM4/25/15
to mintamil
நல்ல ஆய்வு.

கைத்தொழுவான் 

Oru Arizonan

unread,
Apr 26, 2015, 2:43:40 PM4/26/15
to mintamil
தொடர்ந்து பதியுங்கள்.  சொல்லப்படாத பல விஷயங்களைச்  சொல்லும் கட்டுரை. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

G Sannah

unread,
Apr 27, 2015, 12:06:40 AM4/27/15
to 10th...@gamil.com, Aganazhigai Pon Vasudevan, Aloor Shanavas, Amaithi Arasu, ambedkar in, Anbu Chezian, Anbu Selvam, anbuche...@gmail.com, ann...@googlegroups.com, antibribe...@yahoogroups.com, aprrn_...@googlegroups.com, Aranga Mallika, Arivu Amudhan, ARONSAMUVEL A, ashok raj, Ashok Ramaraj, aslam basha, Athirvu Athirvu, Bakiyaraj Poongavanam, bala aravazhi, Bala J, balaji subramani, balamurugan k, barathi thambi, bas...@yahoo.in, Bodhini Valavan, chandru g, che.v...@gmail.com, che...@justdial.com, chhattis...@yahoogroups.com, childrensr...@googlegroups.com, chithra bala, Christudas Gandhi, colo...@conectas.org, Dag Erik Berg, Dalit Students Federation, Dalits Media Watch, day...@cpcl.co.in, Dhana paul, dhanap...@gmail.com, dhilli babu, Dickens Leonard M., dilip kumar, DURAIRAJ G, elan cheziyan, Elango Viduthalai, ela...@yahoo.co.in, Elumalai Marimuthu, Eramasamy Kittu, ezhil zoom, fio...@yahoo.co.in, G Sannah, g_sa...@yahoo.com, Gana Pathy, gnana thilagar, GORRINGE Hugo, Gowthama meena, Guna Sekar, h.gor...@ed.ac.uk, humanright...@googlegroups.com, icyo-to-...@googlegroups.com, International Commission for Dalit Rights, Jagannath G, Jay Seelan, Jaya Rani, Jeevamani B, jkdn...@yahoogroups.com, john jayaharan, junction sathish, Kani Amuthan, Kannan M, kannan_...@yahoo.co.in, Karan Karki, karthik guevara, karuna prasad, Kavin Malar, Kavitha Muralidharan, kavithas...@gmail.com, Keetru Nandhan, Kiruba Munusamy, kmsbaalaji, krubagm...@gmail.com, ks.pav...@yahoo.co.in, Kumarappa K, kumarar...@yahoo.co.in, Kurumpakara Majeed, lokdhar solutions, loksatta_...@yahoogroups.com, M C Raj Casimir, M Lakshman, M.saravana, m.vijay baskar, Mani vannan, MC Rajan, Michael Collins, mint...@googlegroups.com, murugan murugan, nalan...@gmail.com, natsv...@yahoo.co.in, ncprimai...@yahoogroups.com, ncpriworki...@yahoogroups.com, Neerai Mahe, Nilavan Nilavan, palani gopal, Paulraj Dayanandan, Pavendhan Govindan, political...@yahoogroups.com, Poo Vizhian, press....@kslmedia.in, Rupa Viswanath, sakya...@yahoogroups.com, Saratha Pugalenthi, sathiya chelliyan, selva raj, Sibi Chander, sma barathi, soupaavendhan soupaa, Sridhar Kannan, Subashini Tremmel, Sumitra Kamalanathan, Surya Amirtham, Tamilpavai pavai, tamizh vanan, Thamaraivannan T, Theodore tony george, uyirmmai *, vadalurs...@gmail.com, VADU....@hotmail.fr, VADU....@hotmail.com, vadu....@hotmail.fr, Valluvan Isaac, VCK senthamizh, Veerapandian, Veerapandian A, Vignesh V, writer samas, Yaazh Dhileeban, Yakkan Yakkan, Yazhan Aathi, செல்வன், திருமா சஜன்
தோழர்களுக்கு வணக்கம்.

பேராசிரியர்.டாக்டர்,யூகோ கொரிஞ் அவர்கள் தலித் அரசியல் மற்றும் சமூக வரலாறு குறித்து என்னிடம் எடுத்த பேட்டி மின்தமிழ் என்கிற இணைய வட்டம் மூலம் திரு.செல்வன் அவர்கள் மொழி பெயர்த்து தொடராக வெளியிட்டு வருகிறார். ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறன். கீழே இணைப்பு உள்ளது.
நன்றி 
சன்னா.

G Sannah

unread,
Apr 27, 2015, 12:07:15 AM4/27/15

Apr 27, 2015, 12:35:22 AM4/27/15
to mint...@googlegroups.com

---------- Forwarded message ----------
From: sannah sannah <g_sa...@yahoo.com>
Date: 2015-04-27 10:00 GMT+05:30
Subject: Fw: [MinTamil] Re: சாதி, தீண்டாமையின் மூல வரலாறு
To: g <g.sa...@gmail.com>

தேமொழி

unread,
Apr 27, 2015, 12:39:25 AM4/27/15
to mint...@googlegroups.com, g.sa...@gmail.com
செல்வனுக்குப் பாராட்டுகள்... அருமையான மொழியாக்கங்கள் 

எல்லோரும் செல்வனுக்கு ஒரு ஓ போடுங்க 

..... தேமொழி   

G Sannah

unread,
Apr 27, 2015, 12:49:42 AM4/27/15
to தேமொழி, mint...@googlegroups.com
தொடர்ந்து வரும்..திரு செல்வன் அவர்களுக்கு பாராட்டுக்கள்
அன்புடன்
சன்னா

செல்வன்

unread,
Apr 27, 2015, 12:54:02 AM4/27/15
to mintamil
நன்றி சன்னா அவர்களே. நன்றி தேமொழி, சுபா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அனைத்தும் இப்படிப்பட்ட சிறப்பான தலித் வரலாற்றுபதிவை வழங்கிய சன்னா அவர்களையும், பேட்டி எடுத்த பேராசிரியர் கொரிஞ் அவர்களையுமே சாரும். மின் தமிழில் இதை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

G Sannah

unread,
Apr 27, 2015, 2:24:33 AM4/27/15
to mint...@googlegroups.com, K Selvan
முந்தைய பதிவுகள் அனைத்தும் எதிர்பாராத விதமாக நான் spam சொடுக்கிவிட்டதால் அனைத்தும் அழிந்துவிட்டன. முடிந்தால் அவற்றை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
அன்புடன் 
சன்னா

தேமொழி

unread,
Apr 27, 2015, 4:40:06 AM4/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
இங்கு காணலாம்  திரு. சன்னா

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் 1
கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 2 
- செல்வன்

..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 27, 2015, 4:47:21 AM4/27/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
இதுவரை நீங்கள் பங்கேற்றவை  கீழ்காணும் மூன்று இழைகளில் உள்ளது. 

சுட்டிகளைச் சொடுக்கினால் இணையம் வழியே படிக்க இயலும்.

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு

சென்னையில் முதியவர்களை தாக்கி பூணூல்களை அறுத்ததாக 6 பேர் அதிரடி கைது

பஞ்சமரபு நூல் பல்வேறு எண்ணிம வடிவில்

...... தேமொழி 

On Sunday, April 26, 2015 at 11:24:33 PM UTC-7, Gowthama Sanna wrote:
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ராம் காமேஸ்வரன்

unread,
Apr 27, 2015, 1:39:07 PM4/27/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
பிடிஃஎப் வடிவில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை யூனிகோட் வடிவிற்கு மாற்ற பொங்குதமிழ் என்ற வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி கௌதம் சன்னாவின் முழுக் கட்டுரையையும் மீண்டும் தட்டச்சு செய்யாமல் (சிறு திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது) மாற்றினேன். ஆசிரியர் கோவித்துக் கொல மாட்டார் என்ற நம்பிக்கையில்.
- ராம் காமேஸ்வரன்.
 
தற்காலத் தமிழ் எழுத்துரு மாற்றத்தின் மூலவர் பண்டிதர் அயோத்திதாசர்

கௌதம சன்னா

அம்பேத்கர் தாம் எழுதிய மறைவிலிருந்து வெளிப்படும் பண்டைய இந்தியாஎன்ற கட்டுரையில் புத்தர் வாழ்ந்தபோது தேவர்கள் அடிக்கடி வந்து அவரைச் சந்திக்கின்றனர். எனவே, அவர்கள் வாழ்ந்த மனிதர்களாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்திய வரலாற்றின் பல பக்கங்களை இப்படி மறைவிலிருந்து வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று எழுதினார். இந்தக் கட்டுரையினை எழுதத் தொடங்கியபோது நினைவில் ஓடிய அம்பேத்கரின் இந்த வார்த்தைகள் பல யோசனைகளைக் கிளர்த்தி விட்டது. பண்டைய வரலாறு மட்டுமல்ல, நவீன வரலாற்றிலும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவரும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நாம்தான் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்தபடி இருந்தது. குறிப்பாக, தமிழ்ச் சமூகமும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது, அதிலும் குறிப்பாக, அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பில்.

தமிழின் வரலாற்றினை அறிந்த யாவரும் தமிழ் மொழியின் எழுத்துக்கள் எப்படி மாற்றம் பெற்று வளர்ந்து வந்துள்ளன என்பதைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது. இன்றைக்கு நாம் எழுதவும் அச்சிடவும் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்கள் இன்றைக்கு இருந்தது போலவே எப்போதும் இருந்தது கிடையாது. நம்ப முடியாத அளவிற்கு அது பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. பண்டைய கால எழுத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய சமூகத்தினரால் அதனைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. ஆயினும் எழுத்துக்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறக்குறைய தமிழின் எழுத்து வடிவம் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஆயினும், அதில் தொடர்ந்து  நீடித்த சிக்கல் என்னவென்றால் நெடில் எழுத்துக்களைப் பிரித்துப் பார்க்கவோ வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளியோ கிடையாது. மேலும், ஓலைச் சுவடிகளில் எழுதும் போது எந்த மெய் எழுத்துக்களின் மீதும் புள்ளி வைக்க முடியாது. குறிப்பாக, உயிரெழுத்துக்களில் ஓர் உதாரணத்தைப் பார்த்தால் என்பதற்கான நெடில் என்றுதான் இருந்தது, ‘என்று இல்லை. பிற்பாடுதான் இதில் மாற்றம் வந்தது. எனவே, அன்றைய தமிழ் எழுத்துக்களைப் புரிந்து படிக்க வேண்டுமென்றால் நிச்சயம் இலக்கணமும், வார்த்தையின் ஓசைகளில் தெளிவான புரிதலும் இருக்க வேண்டும். தொடர்ந்து நீடித்த இந்தச் சிக்கலில் மாற்றம் கொண்டு வந்தது அச்சுக்கலைதான்.

அதிலும் உடனே நிகழ்ந்துவிடவில்லை, ஓலைச் சுவடிகளில் எப்படி இருந்ததோ அப்படியே எழுத்துக்களை அச்சில் வடிவமைத்தார்கள் கிறித்தவ மிசனெரிகள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ் நவீனமாகியிருக்காது. கிறித்தவ பைபிளை அச்சடிக்க அவர்கள் தமிழ் எழுத்துக்களை வார்ப்புச் செய்யும்போது ஓலைச்சுவடி எழுத்துக்களை அப்படியே வார்ப்பிட்டார்கள். அதனால், தமிழின் மெய் எழுத்துக்களின் மீது புள்ளிகள் இல்லாமலும், நெடில்களில் மாற்றங்கள் இல்லாமலும் அச்சிட்டார்கள். எனினும் இந்தத் தொழில்நுட்ப மாற்றம் தமிழ் எழுத்துகளின் வரலாற்றில் மாபெரும் பாய்ச்சலாகும். ஆனால், பிரச்சனை என்னவென்றால் இலக்கணம் தெரியாத சாமானிய மக்களால் அதை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், மெய் யெழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களாக மாறும் போது கடுமையான குழப்பங்கள் உருவாயின.

உதாரணத்திற்கு சில எளிய வார்த்தைகளைப் பார்ப்போம். அம்மா என்பதில் எனும் உயிர் எழுத்து ம்என்ற மெய்யெழுத்து மாஎன்ற உயிர்மெய் எழுத்து என மூன்றும் இருக்கின்றன. இவற்றை இணைத்துப் பழைய முறையில் எழுதும்போது அமமாஎன்று வரும். இலக்கண ஓசை தெரியாதவர்கள் அமமாஎன்பதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாது. இது உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள பிரச்சனை என்றால், மெய்யெழுத்துக்களில் உள்ள பிரச்சனை இன்னும் மோசம். உதாரணத்திற்கு ஏற்றுஎன்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். என்ற உயிர் நெடில், ‘ற்என்ற மெய்யெழுத்து, ‘றுஎன்ற உயிர்மெய் எழுத்து சேர்ந்தது ஏற்று’, அதை எறறுஎன்றுதான் அன்றைக்கு எழுத முடியும். இந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு அன்றைக்கு இருந்த வழி மெய் யெழுத்துக்களின் மீது புள்ளி வைத்தார்கள். எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் எழுதும்போது மெய்யெழுத்துக்களின்மீது புள்ளி வைப்பது சிரமமான செயல். கொஞ்சம் அழுத்திப் புள்ளி வைத்தால் ஓலை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, புள்ளி வைப்பதைத் தவிர்த்தார்கள். இதே காரணத்தினால்தான் வாக்கியங்கள் முற்றுப்பெறும்போது புள்ளி வைப்பதற்குப் பதில் சுழித்து வைத்தார்கள். எனவே, குழப்பங்கள் தொடர்ந்தன. தமிழின் முதல் நூலில் கூட இதே முறைதான் பின்பற்றப்பட்டது. அதனால், எளிய மக்கள் சுவடிகளைப் படிக்கும் வாய்ப்பின்றி இருந்தார்கள். எனவே, எழுத்துத் தமிழ் மக்கள்மயமாகவில்லை. நீண்ட காலம் நீடித்த இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் இத்தாலி நாட்டவரான பெஸ்கி என்ற வீரமாமுனிவர் (1680-1746) ஆவார்.

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் உருமாற்றம் அடைய பெஸ்கி அளித்தப் பங்களிப்பு அசாத்தியமானது. 1710 இல் தமிழகம் வந்த பெஸ்கி தமிழின் வளமான இலக்கியச் செல்வங்களையும், மரபுகளையும் உள்வாங்கிப் பெரும் மேதையாகப் பரிணமித்தார். பல நூல் களை எழுதினார். அதன் தொடர்ச்சியாக தமிழின் இலக்கண மரபு பிசகாமல் எழுத்துருக்களில் மாற்றத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய மாற்றம் அதுவரை நிலவிவந்தத் தடைகளை உடைத்து தமிழின் போக்கை மாற்றியமைத்தது. அவர் எதில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்பதைப் பார்ப்போம்.

பெஸ்கி காலத்தில் எனும் உயிர் நெடிலுக்கு என இருந்து வந்தது. அதைஎன மாற்றினார். நெடிலுக்கு என இருந்ததை என மாற்றினார். இந்த மாற்றங்கள்  சிறியதுதான், ஆனால் ஓலைச்சுவடிகளின் வாழ்நாளைக் காப்பாற்றியது. ஆயினும், பெஸ்கியின் மாற்றங்கள் தமிழ் எழுத்து வரிசையில் எவ்விதமான குறைப்பையும் கோரவில்லை, மாறாக எழுத்துக்களின் தோற்றத்தை மட்டுமே மாற்றியமைத்த முயற்சிகளாகும். எனவே, உயிர் எழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து 1 என அத்தனை எழுத்துக்களும் அப்படியே இருந்தன. எனவே, எப்படிப் பார்த்தாலும் நவீன தமிழின் எழுத்து மாற்றத்தைத் தொடங்கி வைத்தவர் இத்தாலி நாட்டவரான பெஸ்கி என்ற வீரமாமுனிவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வரலாறு அத்தோடு நிற்கவில்லை, வீரமாமுனிவருக்குப் பிறகு தொடரத்தான் செய்தது. ஆனால், அது யாரையெல்லாம் ஒதுக்கிவிட்டது என்பதுதான் மறைக்கப்பட்ட பக்கங்களில் காணவேண்டிய செய்திகளாகும்.

தமிழ் எழுத்து மாற்றங்களின் வரலாற்றை ஆராய்ந்த தமிழ் வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் ஒரு பட்டியலைத் தருகிறார்கள். அதன்படி தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தியவர்களில் முதன்மை யானவர் பெஸ்கி என்ற வீரமாமுனிவர். அவர் தமிழர் அல்லர்; இத்தாலி நாட்டைச் சேர்த்தவர். அவருக்குப் பிறகு 1930களில் நடத்தப்பட்டகுமரன்என்ற இதழ் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தொடங்கியது. 4.9.1930 நாளிட்ட குமரன் இதழில் அந்தச் சீர்திருத்தத்தைக் காணலாம். எனவே, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தொடங்கிய முதல் தமிழ் இதழ் குமரன். இதன் தொடர்ச்சியாக முருகய்யா என்பவர் 1 9 3 0 ஆம் ஆண்டும், 1 9 3 3 இல் அ.சி.சுப்பைய்யா என்பவரும் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை வளர்த்தனர். இறுதியில் 1934 இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள்தான் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். (மேலும் விவரங்களுக்கு: திரு. இரா.பாலசுந்தரம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். ப.25)

இன்றைய காலக்கட்டத்தில் நாம் பெரிதும் பயன்படுத்துவது பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தின் தாக்கம்தான் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அது உண்மை என்றாலும், அது முற்றிலும் உண்மை யல்ல என்பது தமிழின் உண்மை வரலாற்றினை ஆராய்பவர்களுக்குத் தெரியும். ஒற்றெழுத்துக்களில் உயிர்மெய் எழுத்தின் மீது போடப்படும் தலைச்சுழியும், ஆய்த எழுத்தும் நீக்கப்பட்டது உட்பட பல மாற்றங்கள். எனினும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தில் இன்றைக்கு எஞ்சி நிற்பவை எவை.

உயிரெழுத்தில் உள்ள எனும் உயிரெழுத்து, மெய்யெழுத்தோடு சேரும்போது அது என ஒற்றாக மாறி இணைந்து உயிர் மெய்யாக ஒலிக்கிறது. அதற்கு கை, பை, மை போன்ற வார்த்தைகளையும், ணை, சை, டை போன்ற உயிர்மெய் உட்பட பல எழுத்துக்களையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எனவே என்ற உயிரெழுத்து நீக்கப்பட்டால் எனும் ஒற்றுடன் தொடங்கும் அத்தனை உயிர்மெய் எழுத்துக் களையும் நீக்க முடியும். அதற்குப் பதில் கைஎன்பதை கய்என்றும் பைஎன்பதை பய்என்றும் மைஎன்பதை மய்என்றும் மாற்றிக் கொள்ள முடியும்.

அதேபோல. ஒளஎன்ற உயிர் எழுத்தோடு மெய்யெழுத்துக்கள் இணைந்தால் உருவாகும் எழுத்து -என்பதாகும், அதுதான் கௌஎனத் தொடங்கி னௌஎன முடியும் வரிசை. எனவே இதில் மாற்றம் செய்த பெரியார் ஒளஎன்ற ஒலிக்கு மாற்றாக அவ்என்பதை முன் வைத்தார். அதனால் உயிர்மெய் எழுத்தில் கவ், ஙவ்... (உதாரணத்திற்கு பௌத்தம் என்பதை பவுத்தம் என்பது) என உயிர்மெய் மற்றும் மெய்யெழுத்துக்கள் கலந்த எழுத்துக்கள் உருவாயின. எனவே பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தில் இன்றைக்கு எஞ்சியிருப்பவை இவைதான். முற்றிலும் நீக்கியதுடன் அதன் உயிர்மெய் ஒற்றான நீக்கியது, அதற்குப் பதில் ய்பொருத்தியதாகும். என்றாலும் அது எல்லா எழுத்துக்களுக்கும் பொறுத்த முடியவில்லை. தொடர்ந்து தமிழ் நெடுங்கணக்கில்- எனும் எழுத்துருவிற்குத் தேவையின்றிப் போனது. எனவே பெரியார் அவர்கள் தொடங்கிய எழுத்து மாற்றம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக் குறைப்பை உருவாக்கியது என்பதில் ஐயமில்லை. அதில் தற்போது வழக்கத்தில் உள்ளவை மட்டும் நீடித்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கும்?

பெரியார் உருவாக்கிய மாற்றங்கள் தொழில் நுட்பம் சார்ந்த மாற்றங்கள், புதிய சமூக வளர்ச்சியின் மறுபலிப்பின் தேவைகள் மட்டுமே என்று குறுக்க முடியாது. ஆயினும் அதற்கான பண்பாட்டுப் பின்புலத்தினை ஆராய வேண்டுமானால் அதை பண்டிதர் அயோத்திதாசர் அவர்களிடத்திலிருந்துதான் தொடங்க முடியும் என்பது ஆச்சர்யமான உண்மை.

தமிழ் மொழி பற்றிய அயோத்திதாசப் பண்டிதரின் பார்வை அவர் பௌத்தம் ஏற்றது (1890) முதல் பெரிதும் மாறுதல் அடையத் தொடங்கியிருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு அவர் தீவிர அத்வைதியாக இருந்தவர். பௌத்தக் கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்ட பிறகு தமிழின் இலக்கியம், தத்துவம், இலக்கணம், மருத்துவம் முதலானவற்றை மறு வாசிப்பும், பௌத்த நோக்கில் மறு ஆய்வு செய்யத் தொடங்கினார். அவரது தொடக்கக் கால எழுத்துக்கள் நமக்குக் கிடைக்காமையால், அவரது மொழி ஆளுமை பற்றிய பார்வை நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. எனினும் , ஒப்பிட்டு ஆய்வதற்கு நமக்குக் கிடைத்த அவரது முதல் பௌத்த நூலானபுத்தரெனும் இரவு பகலற்ற ஒளிசிறந்த ஓர் ஆவணம், இலங்கையிலிருந்து திரும்பியவுடன் 1899 வாக்கில் இதை எழுதினார். இந்த நூலில் அவர் ஏற்கனவே கையாண்டு வந்த மொழிநடையையே கையாண்டார் எனத் தெரிகிறது. ஆனால், அவரது தொடர்ச்சியான ஆய்வுகளில் வார்த்தைக் கட்டுமானத்திலும், எழுத்துக்களைப் பயன்படுத்துவதிலும் மாறுதல் தெரிந்தது. இந்த மாற்றம் அடுத்த 8ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிப்படத் தொடங்கியது. ஜூன் மாதம் 1907இல் அவர் தொடங்கிய தமிழன்இதழில் இந்தப்போக்கு வெளிப்பட்டது. அதன் விளைவாக, தமிழின் நெடுங்கணக்கில் முதல் மாற்றத்தைப் பண்டிதர் தொடங்கி வைத்தார். அதற்காக அவர் அளிக்கும் தத்துவப் பின்புலத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரது எழுத்துச் சீர்திருத்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, அதை விரிவாகப் பார்க்க வேண்டும்.

பண்டிதர் தமிழ் மொழி எழுத்துக்களை நஞ்செழுத்தென்றும் அமுதவெழுத்து என்றும் இரு வகைகளாகப் பிரிக்கிறார், தீராவிடமென்னும் மொழியே குறுக்கல் விகாரத்தால் தீராவிடம், திராவிடமெனவழங்கலாயிற்று எனக் கூறுகிறார். திராவிடம் என்பது தமிழுக்குரியப் பெயர்களில் ஒன்று, தென்மொழி என்பதே தமிழின் ஆதிப்பெயர். புத்தபிரான் வகுத்தளித்த தமிழ் அட்சரங்கள் அகத்தியர் மூலமே தென்னாடு பரவியதென்றும்பண்டிதர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழ் எழுத்துக்களைத் தென்னாட்டில் பரப்பியதில் பெரும்பங்கு வகித்தவர் சரஸ்வதி என வழங்கப்பட்ட அம்பிகையம்மனான அவ்வையார். எனவே, அகத்தியர் மற்றும் அவ்வை ஆகியோர் உழைப்பில்தான் தமிழின் வரிவடிவம் பரவியது என்று தமிழ் மொழி எழுத்துக்களின் பரவல் குறித்த வரலாற்றை விளக்கிய பண்டிதர், தமிழின் இரு பெரும் எழுத்துப் பிரிவுகளைப் பண்டைய இலக்கிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார். அவை, “(1) யாப்பிலக்கணம் கூறும் முதல் மொழி ஐந்தெழுத் துக்கள் யா, யோ, ரா, ரோ,லோ என்னும் மூலொற்றெழுத்தும், (2) இரட்டைப்படை மகரக் குறுக்கமும் ஆயுதமும் நஞ்செழுத்துக்கள் அமைந்துள்ளதால் தென்மொழியை திராவிட பாஷையென்றும், , , , , , , , , ,வ என்னும் அமுத வெழுத்துக்கள் உள்ளதால் தென்மொழியைத் தமிழென்றும் இரு பெயரால் அழைத்து வந்தார்கள். இவற்றுள் திராவிடம் எனும் பெயர் வடநாட்டவராலும், தமிழென்னும் பெயர் தென்னாட்டவராலும் பெரும்பாலும் வழங்கப் பட்டதுஎன பண்டிதர் விளக்குகிறார்.

அதுவுமின்றி, தமிழை முத்தமிழ் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார், அவை; மலையாளுவாசிகள் வழங்கும் கொடுந்தமிழ், மண்ணாளுவாசிகளுள் தென்மேற்குவாசிகள் வழங்குவது கருந்தமிழ், தென்கிழக்குவாசிகள் வழங்குவது செந்தமிழ் ஆகியன ஆகும். இந்தப் பிரிவுகள் தற்போது வழக்கத்தில் உள்ள இயல்,இசை, நாடகத் தமிழின் பிரிவுகளல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பண்டிதர் கூறுவது நாட்டில் நிலவும் பேச்சு வழக்கு மொழிப் பிரிவுகளாகும். இந்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான் பண்டிதர் தமது எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைக்கிறார். பண்டிதரின் கருத்துக்கள் ஒரு புதிய திசையை அறிமுகப் படுத்தி 1907லிருந்து அவரது மறைவு வரை வளம் பெற்று வளர்ந்தது. எனில், பண்டிதரின் எழுத்துச் சீர்திருத்தம் எப்படிப்பட்டது என்பதைப் பார்க்கவேண்டும்.

பண்டிதர் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தை அவர் முன்பே கூறிய நஞ்செழுத்தில் தொடங்கினார். அதன்படி மைஎன்ற உயிர்மெய் மகர ஐகாரம் மெய் என்ற மகர ஏகாரமாக மாற்றினார். இதனால் மை என முடியும் வார்த்தைகள் மெய், மெ என முடிந்தன. முற்று வாக்கியமானால் மெய்-யும் தொடர் வாக்கியமானால் மெ-வும் பயன்படுத்தினார். இதனால்மைக்கு என்னும் ஐகார ஒற்றினை நீக்கினார். இதைத் தமிழன் தொடக்க இதழிலிருந்து காண முடியும்.

மேலும், எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அவரது ஆர்வத்திற்கு வலுச் சேர்ப்பது போல 1907 அக்டோபர் வாக்கில் தமிழன் இதழில் ஒரு செய்தியைக் கூறுகிறார் பண்டிதர். இப்போது சென்னைப் பட்டணத்தில் ஒரு ஆங்கிலேய வித்வான் தமிழ் பாஷையிலுள்ள 240 எழுத்துக்களுக்கு பதிலாக 17 எழுத்துக்கள் புதிதாகக் கண்டுபிடித்து இருக்கிறாராம். இந்த 17 எழுத்துக்களைக் கொண்டே தமிழ் பாஷையை பூராவும் எழுதலாம், இந்த எழுத்துக்களை இங்கிலீஷ் படித்த தமிழர்கள் சீக்கிரம் ஒப்புக்கொள்வார்கள், என்ற போதிலும் மற்ற தமிழ் ஜனங்கள் ஒப்புக் கொள்ள பின்வாங்குவார்களோ என்னமோவென்று அதைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் வருத்தப்படுகின்றாராம்.பண்டிதர் குறிப்பிட்ட ஆங்கிலேயர் யாரெனத் தெரியவில்லை, பண்டிதரும் கேள்விப்பட்ட செய்தியைத்தான் தமிழனில் பதிவு செய்திருக்கிறார். இதற்கும் முன்பே அவரது எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி இருப்பினும், அவரது சீர்திருத்தத்திற்கான தத்துவப் பின்புலத்தைத் தமிழனில் அவர் கீழ்வருமாறு எழுதினார்:

உடலுயிரென்னும் உண்மெய், புறமெய் இவற்றினைக் கண்டடைவதற்கே வரி வடிவாம் அட்சரங்களை வகுத்து உயிரெழுத்தென்றும், மெய்யெழுத்தென்றும், ஆவியென்றும், உடலென்றும் நஞ்செழுத்தென்றும் அமுதெழுத்தென்றும், இவ் வெழுத்துக்களுக்கெல்லாம் ஆதி எழுத்தாயது அகார பேருயிரென்றும் வகுத்து, அவ்வட்சரங்களை வாசித்துணர்ந்து கலைநூல் தெரிந்த பின்னர் தனது உடலுயிரினது பாகுபாடுகளைக் கண்டு தனக்குள்ள நஞ்சாகும் ராகதுவேச மோகங்களை சேராவிடா தகற்றி, தனக்குள்ளே அமுதாகும் சாந்தத்தைப் பெருக்கி, அகராட் சரமாகியப் பேருயிராம் அண்ணாவினால் உண்ணாவின் அமுதுண்டு அழியா பாக்கியத்தனாகி புறமெய் அகற்றி, உண்மெய்யில் நிலைத்து, நன்மெயாம் தன்மகாய ததாகனாகின்றான்...

சீவபிராணிகளை துன்பம் செய்யா மெய், எக்காலும் பொய் சொல்லா மெய், அன்னியர் பொருளை அபகரிக்கா மெய், அன்னியரது தாரத்தை இச்சிக்கா மெய், மயக்கமுள்ள மது பானங்களையருந்தா மெய் (புத்தரின்பஞ்ச சீலக் கொள்கை) ஆகியசுத்ததேசிகளாய் வாழும்படி வகுத்து வைத்திருக்கிறார்கள். சுத்ததேசியாய் வாழ்க்கைப் பெயரே நன்மெய்ப் பெயரென்னப்படும்”.

இவற்றுள் அட்சர மெய்யையும், உடலையும், அட்சர உயிரையும், உண்மெய்யையும், அட்சர எண்பகுப்பையும், எண் குணத்தையும் அட்சர உடலுயிர் முப்பணினையும் உடலுயிரனது குணம் முப்பத்திரண்டையும், அட்சர புணர்ச்சி விகாரங்களையும், உடலுயிர் புணர்ச்சியின் கேடுபாடுகளையும், அகரவட்சர பேருயிரின் குறிப்பையும், நாவினது நால் வாய் மெய் சிறப்பினையும் ஆய்ந்துணருவோருக்கே உண்மெய், புறமெய் என்பதன் விகற்பங்களும் நன்மெய், தீமெயென்னும் பேதாபேதங்களும் நன்கு விளங்கும்.

புத்த தன்ம இலக்கியங்களையும், புத்த தன்ம இலக்கணங்களையும் உணர்ந்தவர்களுக்கே இவ்வட்சர பேதங்கள் நன்கு விளங்குமேயன்றி ஏனையோருக்கு விளங்காவாம்”.

மேலும் அதற்கு உதாரணங்களாக அவர் காட்டும் வாக்கியங்கள் நான்காகும், அவை..

 நல் - நோக்கம் - நன்னோக்கம் என்பது நற்காட்சியைப் பொருந்தியதாகும்.

நல் - முயற்சி - நன்முயற்சி என்பது நல்லூக்கத்தைப் பொருந்தியதாகும்.

 நல் - நூல் - நன்னூலென்பது நல்லறிவை விருத்தி செய்யுங் கலை நூலில் ஒன்றாகும்.

நல் - மெய் - நன்மெய்யென்பது களங்கமற்ற உண்மெயாம் தன்மகாயங்களில் ஒன்றாகும்.

இத்தகைய சிறந்த ஞானார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய பகுபத மொழியை நன்மையென வரைவதாயின் நல்லஞ்சனம், நல்கருப்பு, நல் லாடு எனும் பொருளைத் தருமெ யன்றி, “கடவுளே முநிநன் மெய்ப்பே ரென்னும் ஞானார்த்தம் தருமோ? ஒருகாலும் தராவாம்

இதுதான் மை காரம் - மெ(ய்)காரமாக மாறியதற்கு பண்டிதர் தரும் விளக்கம். சுருங்கச் சொல்வதெனில் மை எனும் எழுத்து மெய் எனும் தம்மத்தின் அடிப்படையில் மனித வாழக்கையை நெறிபடுத்துவதாகும். எனவே மனித நடவடிக்கையின் பேதங்களில் எழக்கூடிய முரண்களை மாற்றியமைத்து நேர்ப்படுத்துவதாகும். அதுதான் எழுத்திலும் பிரதிபலிக்க முடியும்.

பண்டிதரின் இந்த வரையறுப்பிற்கு புத்த தம்மம் ஆழ்ந்த பின்புலத்தை அளிக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனவே இதை எளிமையாகப் புரிந்துகொள்ள மையென முடியும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

நன்மை = நன்மெய், நன்மெ

தீமை = தீமெய், தீமெ

பொம்மை = பொய்மெய் (போலி + உடல்)

தன்மை = தன்மெய், தன்மெ (ஓருண்மெய்)

பன்மை = பன்மெய் (பல மெய்) பன்மெ

உண்மை = உண்மெய், உண்மெ

பொய்மை = பொய்மெய், பொய்மெ

வன்மை = வன்மெய், வன்மெ

கடைமை = கடைமெய், கடைமெ,

கடைபிடிக்கும்மெய் (இறுதி உண்மை)

இப்படி நன்மெ - தீமெ யோடு தொடர்புடைய

மை என முடியும் எழுத்துக்களை மாற்றியதோடு இன்னும் சில எழுத்துக்களை மாற்றினார். அது நஞ்செழுத்தான லகரத்தில் சேர்ந்த ஐகாரத்தில் உள்ளதாகும். அதாவது அரையன்’ (அரசன்) என்பதை அரயன் என்று மாற்றினார்.

இவைதான் பண்டிதரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடிப்படைகளாகும். எனவே தாம் உருவாக்கிய அடிப்படைகளைத் தன் இறுதிக் காலம் வரை கையாண்டார்.

அதுவுமின்றி அவரது பின்னடியார்கள் அதைத் தொடர்ந்துகொண்டுச் சென்றார்கள். இவற்றின் விளைவாக, தமிழின் வார்த்தைகள் புது விளக்கம் பெறலாயின. புதிய வரலாற்றுப் போக்கிற்கு வித்திடப்பட்டது.

பண்டிதரின் இந்த வரலாற்றுப் பங்களிப்பை எப்படிப் பார்ப்பது என்பது மிக முக்கியமானது, ஏனெனில் இதுவரை இந்தப் பக்கங்களை யாரும் பார்க்கவில்லை என்பதால் அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது வரலாற்று ஆய்வாளரின் கடமை. அந்த வகையில் பார்க்கும்போது மிக நீண்ட இடைவெளியில் வீரமாமுனிவருக்குப் பிறகு தமிழ் எழுத்தைச் சீர்திருத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர் மட்டுமே.

பண்டிதர் உருவாக்கிய எழுத்துச் சீரமைப்பிற்கும் மற்றவர்கள் உருவாக்கிய சீரமைப்பிற்கும் உள்ள வேறுபாடு தெளிவானது. பண்டிதரைத் தவிர மற்றவர்கள் உருவாக்கிய எழுத்துச் சீரமைப்பின் தேவை தொழில்நுட்பம் மற்றும் அதன் வளர்ச்சியினைச் சார்ந்ததாகும். ஆனால் பண்டிதரின் சீரமைப்பிற்கு பௌத்தமே அடிப்படை. எது எப்படி இருந்தாலும் பண்டிதரின் பணியே இத்துறையில் முதல் முயற்சி. அதுவும் முன்னோடி முயற்சி. எனவே பெஸ்கிக்குப் பிறகு தமிழ் எழுத்தைச் சீர்திருத்திய முதல் தமிழர் பண்டிதர்தான். வேறுவகையில் பார்த்தால் தமிழ் நெடுங்கணக்கை நவீனப் போக்கிற்கு ஏற்றாற் போல் சீரமைத்த முதல் தமிழரும் பண்டிதர் தான். ஆனால் இந்த வரலாற்றுச் செய்தி ஏன் மறக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது?

தமிழின் மொழி வரலாற்றுக் கட்டமைப்பினை ஆய்வு செய்கிறவர்கள் எதனால் இதைத்தவறவிட்டார்கள்? என்பதை வாசகர்களின் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

எனினும்,  இந்த வரலாற்றுக் கட்டமைப்பைப் பார்க்கும்போது தத்துவஞானி பிக்டேவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது, அவர் சொன்னார் மனிதன் எப்படி இருக்கிறானோ அப்படித்தான் அவனது தத்துவஞானமும் இருக்கும்என்று. நம் சூழலுக்கு இதைப் பொறுத்திப் பார்த்தால் தமிழ்ச் சாதி எப்படி இருக்கின்றதோ அப்படித்தான் தமிழ் வரலாறும் இருக்கும் என்பதை யார்தான் மறுக்க முடியும்.

Suba.T.

unread,
Apr 27, 2015, 3:08:23 PM4/27/15
to ராம் காமேஸ்வரன், மின்தமிழ், Subashini Tremmel
2015-04-27 19:39 GMT+02:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
பிடிஃஎப் வடிவில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை யூனிகோட் வடிவிற்கு மாற்ற பொங்குதமிழ் என்ற வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி கௌதம் சன்னாவின் முழுக் கட்டுரையையும் மீண்டும் தட்டச்சு செய்யாமல் (சிறு திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது) மாற்றினேன். ஆசிரியர் கோவித்துக் கொல மாட்டார் என்ற நம்பிக்கையில்.

​மகிழ்ச்சி.
இப்படி ஒரு வழி இருப்பதை இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. மிக்க நன்றி திரு.ராம்.

கட்டுரையை முழுதாக வாசித்து பின்னர் என் கருத்தையும் பதிகின்றேன்.

G Sannah

unread,
Apr 28, 2015, 9:13:03 AM4/28/15
to mint...@googlegroups.com
நன்றி..  அருமையான முயற்சி.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சன்னா

G Sannah

unread,
Apr 28, 2015, 9:42:37 AM4/28/15
to mint...@googlegroups.com
நன்றி திரு.ராம்.காமேசுவரன் அவர்களே.. இக்கட்டுரையில் பெஸ்கியின் எழுத்து சீர்திருத்தம் பற்றின பத்தியை படிக்கும்போது எ என்பதின் நெடிலுக்கு எ என பதிவாகியிருக்கிறது. இந்த நெடிலின் மீது புள்ளி வைத்தது பழைய முறை, அதை ஏ நெடிலாக மாற்றியதுதான் பெஸ்கியின் முறை. அதே போ ஒ நெடிலுக்கும். கணிணியின் ஒருங்கெழுத்தில் இந்த வசதி இல்லாததால் இருக்கும் வசதிபடியே பதிவாகியுள்ளது. வாசகர்கள் திருத்திப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
சன்னா

G Sannah

unread,
Apr 28, 2015, 9:45:36 AM4/28/15
to mint...@googlegroups.com
அன்புள்ள சுபா

பண்டிதர் பற்றின கட்டுரையை மின்தமிழில் தனியா தலைப்பிட்டு வெளியிட வேண்டுகிறேன். சாதி தீண்டாமையோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்

சன்னா 

Suba.T.

unread,
Apr 28, 2015, 9:50:36 AM4/28/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-28 15:45 GMT+02:00 G Sannah <g.sa...@gmail.com>:
அன்புள்ள சுபா

பண்டிதர் பற்றின கட்டுரையை மின்தமிழில் தனியா தலைப்பிட்டு வெளியிட வேண்டுகிறேன். சாதி தீண்டாமையோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்

​தாராளமாக.
நீங்களே​ புது இழை தொடங்கி பகுதி பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வழங்கலாம்.

சுபா

செல்வன்

unread,
May 8, 2015, 12:46:51 AM5/8/15
to mintamil, G Sannah
பேரா யூகோ: இதிலிருந்து இரு கேள்விகள் எழுகின்றன. நீங்கள் இரு விஷயங்களைக்குறிப்பிட்டீர்கள். முதலாவதாக, துவக்கத்திலேயே அயோத்திதாசர் ஜாதியை முன்நிறுத்தாது தமிழர் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் குரல் கொடுத்தார்

சன்னா: தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார் என்பதை விட தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தி ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளுக்கும் அவர்களின் சுதந்திரத்துக்கும் இவ்வகையில் போராடினார்

பேரா யூகோ: சரி. அதே சமயம் இரட்டைமலை சீனிவாசன் ஜாதியை வைத்தே மக்களை திரட்டினார் . இப்படி இதில் இரு வித சிந்தனைகள் இருக்கையில் தலித் கோட்பாடு தமிழ்நாட்டில் வேர் விட்டுள்ளதா? அல்லது, இன்னமும் ஜாதிதான் தலித் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறதா?

சன்னா: நீங்கள் தலித் உட்சாதி பிரிவுகள் பற்றிய விவாதங்களைக் குறிக்கிறீர்களா?

பேரா யூகோ: ஆம்

சன்னா: நீங்கள் சொல்லுவது உண்மை. தலித் எனும் அடையாளம் 1972க்கு பின்புதான் பரவலானது. 1972ல் இந்திய தலித் சிறுத்தைகள் அமைப்பு முதல்முதலாக தலித் எனும் வார்த்தையை தம்மைக்குறிக்க பயன்படுத்தியது. 1972விலேயே அது மராட்டியத்தில் பரவலானாலும் தமிழகத்தில் அச்சொல் அங்கீகாரம் பெற 1990 வரை ஆனது. 1990க்கு பிறகு இந்த ஒற்றைச்சொல்ல் மாத்திரமே தலித்களை ஒன்றுபடுத்தி எழுச்சியை உருவாக்கியதாக நாம் கூற முடியாது. விழுப்புணர்வு அதிகமாகி இச்சொல்லை வைத்து அமைப்புகள் உருவாகின. இவ்வார்த்தை அரசியலில் பயன்படுத்தப்பட்டு பல்வேறு பறையர், பள்ளர். சக்கிலியர்/அருந்ததியரை பொதுவான ஒரு தளத்தில் ஒன்றுபடுத்தி தமிழக/ இந்திய அளவில் அரசியலுக்கு கொண்டுவந்தன. சமூக அளவிலும் இவவர்த்தையால் இதே விளைவுகள் உருவாகின எனக்கூற முடியாது. சமூக அளவில் பேசுவதானால் இது இன்னமும் நடைபெறவில்லை. ஆக பொதுவான ஒரு தலித் அடையாளத்தை உருவாக்குவதில் பெரிய முன்னேற்றம் காணும் நிலை இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் தலித் அடையாளத்தை முழுமையாக தழுவியதாகவும் கூற முடியாது. அதை அரசியல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் நீங்கள் சொல்லும் உட்சாதி உணர்வுகள்- பள்ளர், பறையர், சக்கிலியர் அடையாளங்கள்- இவை 6- 7 ஆண்டுகளுக்கு முன்பு முக்கியமானதாக இல்லை. ஆனால், இப்போது திராவிட கட்சிகளால் தூண்டிவிடபட்டு, இந்த உட்சாதி விவகாரங்கள் சமூகநீதி எனும் போர்வையில் பேசபட்டும், பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றன. இத்தகைய உட்சாதி உணர்வுகளை தூண்டிவிடுவதில் திராவிட கட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன

பேரா. யூகோ: திராவிட கட்சிகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டு கட்சிகளும் கூடத்தானே?

சன்னா: ஆமாம். நாம் கம்யூனிஸ்டுகளையும் அதில் சேர்க்கலாம். இதில் வரலாற்றுரீதியாக செயல்படுவதாக அவர்கள் கூறினாலும், அவர்களின் செயல்பாட்டில் அத்தகைய வரலாற்று புரிதல் எதையும் அவர்கள் காட்டவில்லை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் இன்னமும் மக்கள் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்து கிடப்பதை புரிந்துகொள்ள முடியாமலேயே இருக்கிறார்கள். இதை முதலில் புரிந்துகொண்டால் தான் அவர்கள் இதற்கான தீர்வுகளை சிந்திக்க ஆரம்பிபபர்கள். நீங்கள் வரலாற்றைபுரிந்துகொள்ளாமல் பிரச்சனைகளை மட்டுமே பிரச்சாரம் செய்துவந்தால், எங்கிருந்து இப்பிரச்சனைகள் வந்தன என்பதை எப்படி அறிவது? அருந்ததியர்களுக்கு ஒரு விதமான பிரச்சனைகள் உள்ளன. பள்ளர்களுக்கு வேறு விதமான பிரச்சனைகள் உள்ளன. பறையர்களுக்கு இன்னொருவிதமான பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு உட்சாதி பிரிவுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. இதில் ஒரே ஒரு தனிபட்ட பிரச்சனையை அரசியல் நோக்கில் கையில் எடுக்கையில் அடுத்த உட்சாதியை நீங்கள் கைவிட்டு விடுகிறீர்கள். இதன்பின் சாதி அடையாளங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அழிக்க நினைத்த நடைமுறைகள் இவ்வகையில் வலுப்பெறுகின்றன. இடைநிலை சாதிகளுக்கு இது பெருத்த அனுகூலமாக இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் தலித் வரலாறு பற்றிய புரிதல் இல்லாததே

பேரா யூகோ: நீங்கள் இன்னொரு விஷயத்தைக் குறிப்பீட்டிர்கள். அயோத்திதாசரின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை

சன்னா: ஆம். அவை இன்னமும் நிறைவேற்றபடவில்லை

பேரா யூகோ: ஆக, அப்படியானால் தமிழ்நாட்டில் இன்னமும் தீண்டாமை நிலவுகிறதா? இன்னமும் கொடுமைகள் நடக்கிறதா? இம்மாதிரி விஷயங்கள் இன்னமும் நிகழ்கிறதா?

சன்னா: தீண்டாமையா? அதாவது ஒவ்வொரு கிராமமும் ஊர் என்றும் சேரி என்றும் பிளவுபட்டு கிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களை ஏன் சேரிகளில் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் தீண்டதகாதவர்கள் என்பதால் தான். உலகெங்கும் கெட்டோக்கள் உள்ளன. கெட்டோ இல்லாத உலகநாடு எதுவுமே கிடையாது. சுற்றுபுற சீர்கேடு, மதசீர்கேடு என ஏதோ ஒரு சீர்கேட்டை காரணம் காட்டி இத்தகைய கெட்டோக்கள் உருவாக்கபடுகின்றன. சமூகம் முன்னேறமடைய, அடைய இந்த கெட்டோக்கள் இல்லாதொழிந்துள்ளன. இன்று கருப்பின அமெரிக்கர்களுக்கு கெட்டோக்கள் உள்ளன, ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கான கெட்டோக்கள் உள்ளன ஆனால் ஊர் என்றும் சேரி என்றும் திட்டமிடப்பட்ட பிரிவினையை எங்கேயும் காண இயலாது. ஆக ஊரும், சேரியும் இருக்கும்வரை தீண்டாமை தொடர்ந்துகொண்டே இருக்கும். இதை நேருக்கு நேர் காண இயலுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இத்தனை பகிரங்கமாக இனப்பாகுபாடு இருப்பதைக்காண இயலாது. ஆக தமிழகத்திலும் இந்தியாவிலும் இத்தகைய சூழல் இருக்கையில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாக நாம் எப்படிக்கூற இயலும்? தீண்டாமை அனைத்து வடிவங்களிலும் 100% தொடர்கிறது. இதுவே உண்மை

Seshadri Sridharan

unread,
May 8, 2015, 3:27:51 AM5/8/15
to mintamil
சன்னா: தீண்டாமையா? அதாவது ஒவ்வொரு கிராமமும் ஊர் என்றும் சேரி என்றும் பிளவுபட்டு கிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களை ஏன் சேரிகளில் வைத்திருக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் தீண்டதகாதவர்கள் என்பதால் தான். உலகெங்கும் கெட்டோக்கள் உள்ளன. கெட்டோ இல்லாத உலகநாடு எதுவுமே கிடையாது. சுற்றுபுற சீர்கேடு, மதசீர்கேடு என ஏதோ ஒரு சீர்கேட்டை காரணம் காட்டி இத்தகைய கெட்டோக்கள் உருவாக்கபடுகின்றன. சமூகம் முன்னேறமடைய, அடைய இந்த கெட்டோக்கள் இல்லாதொழிந்துள்ளன. இன்று கருப்பின அமெரிக்கர்களுக்கு கெட்டோக்கள் உள்ளன, ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கான கெட்டோக்கள் உள்ளன 

 பண்டு சேரி என்பது ஒரே  தொழில் புரிவார் கூடி வாழும் பகுதியாக இருந்தது. ஆயினும் இற்றைச்சேரிகள் நிலக்கிழார்கள் தம் கூலிகளுக்காக ஒதுக்கிய நிலப்பகுதிகள் ஆகும். இங்கே மக்கள் போதிய வாழ்வாதாரம் இல்லாமல் வாழக் காரணம் மிகச சிறு பகுதியில் பேரெண்ணிக்கையில் வாழ்வதே. இவர்கள் பண்ணை அடிமைகள்  என்பதால் பிறர் இவரோடு எளிதில் கலந்து பேசமுடியாது என்ற நிலை. 

நிலங்கள் பண்டு அதிஅரைசர் பட்டம் வழங்கப்பட்ட கிராமத்தலைவர்களிடம் இருந்தன. அவர்களது  கடமை போர்க் காலங்களில் மன்னருக்கும் வேந்தருக்கும் படை அனுப்பவேண்டும், நிலத்தில் விளைவித்து அதில் ஒரு பகுதியை கப்பமாகவும்  செலுத்தவேண்டும். பண்டு பண்ட மாற்றம் நிலவியதால் இந்த அதிரைசர்களால் படை வீரர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்பது மட்டும் அல்ல. எல்லா காலத்தில் போ ரும் நிகழாது. அதனால் நிலையாக படையை பேண  மு டியாத நிலை, க ட்டாயம் கப் பமும் கட்டவேண்டும். ஆகவே  தம் சொந்த நிலங்களிலேயே  உழவுக் கூலிகளாக இவர்களை அமர்த்திக் கொண்டார்கள். நடுகல் வீரர்களை பெரும்பாலும்  தாழ்த்தப்ப்பட்ட மக்களே வணக்கினது இதற்கு  பெரும் சான்று. இந்த படை வீர ர்களின் பிறங்கடைகள் தாம் தீண்டாமை க்கும்  உட்படுத்தப்பட்டு சேரிகளில் குடிவைக்கப்பட்ட்டோர். மதம் இவர்களை தீண்டாமைக்கு உட்படுத்தியது என்பதை விட நிலக் கிழமை தீண்டாமையால்இவர்களைச்  சுரண்டியது என்பதே சரி.  

(என் பா ட்டனுகுப் பாட்டன்   நெ ல்லூர் வெங்கடகிரி அரசரால் வழ  ங்கப்ப ட்ட  1,200 ஏக்கர் நிலத்தை பயிர் செய்து 40% வரி செலுத்த பொ ட்டால் காடாக இருந்த இடத்தை சீர் செய்து உழவு செய்ய அயல் இடங்களில் இருந்து தலித்து மக்களை அழைத்து வந்து அந்த 1,200 ஏக்கர் பகுதியின்  ஒரு இடத்தில் நிலம்  ஒ துக்கி வாழ வைத்தார். அங்கு  ஒரு சேரி உருவானது.)

Seshadri Sridharan

unread,
May 9, 2015, 4:45:13 AM5/9/15
to mintamil
எனக்கு இன்னும் ஒரு ஐயம், மொத்த குமுகமுமே தம்மை ஒதுக்கி சேரிக்கு தள்ளியதாக சொல்லுகிறார்களே தலித்திய ஆதரவாளர்கள் அப்படியானால் தொல் நகரங்களான வேலூர், காஞ்சி.  குடந்தை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய தொல் நகரங்களில் ஏன் தனியே சேரி என்ற பகுதி இருந்ததில்லை? அங்கும் சில உழைப்புக் கூலி வேலைகள் இருக்கத்தானே வேண்டும். இன்று நகரங்கள் விரியும்போது அண்டையில் உள்ள கிராமத்து சேரிகளை விழுங்கி அவை  தமக்கே உரித்தான பண்புகளோடு நகரங்களில் தனித்தே இன்றும் இருக்கின்றன. அப்படி தொல் நகரங்களில் சேரிகள் இல்லா நிலை தீண்டாமைச்சேரிகள் வேளாண் பண்ணைகளின் தனி உருவாக்கமே என்பதை உறுதி செய்வதாக அல்லவா இருக்கின்றது?     

கைத்தொழுவான் 

வலையானந்த வாரியார்

unread,
May 9, 2015, 4:59:37 AM5/9/15
to mint...@googlegroups.com
சேரி என்பது தொழில் சார்ந்த குடும்பங்கள் அருகருகே வாழும் இடம்.  அந்தணர் சேரி முதல் பரத்தையர் சேரி என்று எல்லாம் சேரிகள்தான்.  இதில் தலித்துகள் சேரி என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் பார்க்கும் வேலை
வலையானந்த வாரியார்

Seshadri Sridharan

unread,
May 9, 2015, 5:24:45 AM5/9/15
to mintamil
2015-05-09 14:29 GMT+05:30 வலையானந்த வாரியார் <radius.co...@gmail.com>:
இதில் தலித்துகள் சேரி என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் பார்க்கும் வேலை

தொல் நகரங்களில் தீண்டாமைச்  சேரிகள் இல்லையென்பது கிராம தலித்து சேரிகளில் தீண்டாமை மிக பிற்காலத்தில் தான் புகுத்தப்பட்டது என்பதற்கு ஒரு தெளிந்த சான்று வலையானந்தரே!! 

Suba.T.

unread,
Jun 20, 2015, 4:33:25 PM6/20/15
to மின்தமிழ், Subashini Tremmel, G Sannah

கௌதம சன்னாவின் இத்தொடரின் 2ம் பாகம்.

சுபா

சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

மனித பிறப்பெடுத்த தொண்மங்கள்

உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் படைப்புகளைப் பற்றிய தொண்மக் பல கதைகள் உள்ளன. அவை சாதி பற்றின புரிதலை உண்டாக்க அவசியமானவை.

எனவே சாதியின் தோற்றத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ளும் முன் மனிதக்குலப் படைப்பை பற்றினத் தொண்மங்களைத் தெரிந்துக்கொண்டால் இப்பிரச்சினையை சுலுவாக புரிந்துக்கொள்ள முடியும். ஏனெனில் கடவுள் மனிதனை படைக்கும்போது சாதி போன்ற ஒருவித அமைப்பினை படைத்திருக்கிறாரா? அச்சான்றுகளை கடவுளிடம் கேட்டால் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பதைவிட உலகின் சில பழங்குடிகளின் தொண்மக் கதைகளில் அதற்கான சான்றுகளைத் தேடமுடியும். அந்தச் சான்றுகளோடு இந்து சமூகத்தின் சாதி அல்லது மனிதப் படைப்பின் கதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும் எனவே. உலகின் மிக முக்கியமான மதங்கள் மற்றும் பழங்குடிகளின் படைப்புக் கொள்கைகளைப் பார்ப்போம்.

கிறித்துவ படைப்புக் கொள்கைப் படி ஆதியிலே தேவன் உலகத்தைப் படைத்து அதில் வானம், நிலம், கடல் நிலா உள்ளிட்ட இயற்கை பொருட்களைப் படைத்து இறுதியாக பூமி வெறுமையாக இருப்பதைக் கண்டு பூமியில் மண்ணெடுத்து அதில் முதல் மனிதனை தன் சாயலாகப் படைத்தார். அந்த படைப்பின் நாசியில் ஊதி உயிர் தந்தார். உயிர்பெற்ற அந்த மனிதனுக்கு ஆதாம் என்று பெயரிட்டார். பின்பு அவனது விலாயில் ஒரு எலும்பை உருவி அதில் ஒரு பெண்ணைப் படைத்து அதற்கு ஏவாள் என்று பெயரிட்டார். அவர்கள் பல்கிப் பெருகி பூமியை நிறைத்தார்கள் என்று பைபிளின் ஆதியாமகம் விவரிக்கின்றது. கடவுள் படைத்த ஒரு தம்பதிக்குப் பிறந்தவர்கள் பிற்பாடு தமக்குள் கலந்து சந்ததிகளைத் தோற்றுவித்தார்கள்.

இது கிறித்தவ படைப்புக் கொள்கை மட்டுமல்ல, அடிப்படையில் இதுவே யூத மதத்தின் படைப்புக் கொள்கை. யெகோவா என்ற யூத கடவுள் படைத்த ஆதாம் ஏவாள் என்ற இணையிலிருந்து பிற்பாடு பன¢னிரெண்டு சாதியாக பிரிந்தார்கள், அதில் விலக்கப்பட்ட சாதியாக சமாரியர்கள் இருந்தார்கள் என்பதை விவிலியம் பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த யூத வேதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட கிறித்துவம் அதை தனக்குள் உள்வாங்க சில மாற்றங்களைச் ஏற்றுக்கொண்டது. அதன்படி; கடவுள் அதற்குப் பிறகு இரண்டாவது மனிதனாக ஆதாம், அதன் தொடர்ச்சியாக 72வது வாரிசாக ஏசு கிறித்து என்று அந்தப் பரம்பரையை அவர்கள் வடிவமைத்துக்கொண்டார்கள் என்பது வேறுகதை. ஆனால் இதில் குறித்து பார்க்க வேண்டிய அம்சம் கிறித்துவம் யூதமதப் படைப்புக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டது என்பதுதான்.

அதேபோல இசுலாமும் அந்தப் படைப்புக் கொள்கையை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டது. ஆதாமையும் அவ்வாவையும் படைத்த அல்லா அவர்கள் மூலமாகஆபில், காபில் மற்றும் இரட்டைச் சகோதரிகளைப் படைத்து மக்கள் தொகையைப் பெருகப் பன்னினார் என்கிறக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. யூத சமுகத்தைப் போலவே பல சாதிப் பிரிவுகள் அராபியர்களுக்கு இடையில் அன்று உருவாகி இருந்தன.

எனினும் இந்த மூன்று மதங்களின் படைப்புப் கொள்கைகளும் அசலானவை அல்ல என்பதை தற்போது வரலாற்று ஆய்வார்கள் உறுதி செய்துள்ளார்கள். யூப்ரடிஸ் டைக்ரிஸ் ஆறுகளுக்கிடையே இருந்த நிலப்பரப்பில் நிலவியது மெசபடோமியன் நாகரிகம். அந்த நாகரீகத்தின் பழங்குடிகளிடையே நிலவியத் தொண்மக் கதையைத்தான் இந்த மேற்கண்ட மதங்களை உள்வாங்கிக் கொண்டன என்றும், மெசபடோமியன் நாகரிகம் அழிந்தபோது இவைகள் மறக்கப்பட்டன என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள். தற்போது ஈராக்கின் பாக்தாத் நகர்தான் அக்காலத்தின் மெசபடோமிய நாகரீகத்தின் மையம். மெசபடோமியர்கள் தாங்கள் வாழ்ந்தக் காலத்தில் தமக்குள் அசரியா, சுமேரியா, ஊரின் சிகூர்க், பாபிலோனியா, சாலடியா, மெசபடோமியா என பல தொகுதிகளாகவும் மேலும் பற்பல பிரிவுகளாகவே இருந்திருக்கிறார்கள். இந்தப் பிரிவுகளில் பல நான்குவிதமான படைப்புக் கொள்கைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்றின்படி:

மெசபடோமியர்களின் மூலக்கடவுள் நம்மு என்கிற பெண் தெய்வம். இதனது படைப்பில் அன் என்கிற ஆண் தெய்வமும், கி என்கிற பெண் தெய்வமும் தோன்றுகின்றன. இவற்றில் கி என்லில் என்ற தெய்வத்துடன் இணைந்து இன்கி என்ற தெய்வத்தின் உதவியுடன் காய்கறிகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை படைப்புகளை மேற்கொள்கிறார்கள். பிறகு இன்கி தெய்வம் மாமி என்கிற தெய்வத்தின் முன் களி மண்ணை வைக்கிறது. மாமி அதை 14 துண்டுகளாக்கி அதில் ஆறு ஆண்களையும் ஆறு பெண்களையும் படைக்கிறது. இது அந்த தெய்வங்கள் ஏழு தலைமுறைகளாகின்றன. இதில் ஏழாவது தலைமுறையிலிருந்து தற்போதைய மனித இனம் படைக்கப்பட்டதாக மெசபடோமியர்களின் படைப்புக் கதை கூறுகிறது.

சுமேரிய படைப்புக் கதைபடி : மலைகளிலும்,காடுகளிலும், கடலிலும், பயங்கர ராட்சஸ மனித விலங்குகள் வாழ்ந்தன. அவை மலையில் வாழ்ந்த வீரர்களுடன் பகைமை கொண்டிருந்தால் அவர்களின் மன்னன் இயா மனிதர்களின் விரோதிகளான இவ்விலங்குக் கூட்டத்தின் மீது படையெடுத்துச் சென்று அவற்றின் தலைவனான அப்ஸவையும் அவன் மகளான மும்முவையும் கொன்றுவிடுகிறான். இருந்தாலும் ஆதிகடவுளான தியாமத் என்னும் ‘உலகமாதா’ இன்னும் உயிரோடு இருந்தாள். தனது உறவினர்களைக் கொன்ற இயா மற்றும் வீரர்களை அவள் பழிவாங்கத் துடித்தாள். எனவே இயா தியாமத்தோடு போரிடத் தயாரானான். சாதாரண ஆயுதங்களால் அவளைக் கொல்ல முடியாது ஏனெனில் அத்தெய்வத்தின் உயிர் அவளது கல்லீரலில் இருந்தது எனவே அவளை அழிக்க இயா, தன் மகன் மொரோடாக்கை அனுப்பி அவளைக் கொல்கிறான். அவள் மரணித்தப் பின்புதான் உலகம் படைக்கப்பட்டது.

இதிலிருந்து அதிகம் வேறுபடாமல் பாபிலோனின் படைப்புக் கதை உள்ளது, அதன்படி: இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் கடல் மட்டுமே இருந்தது. வானத்திற்கும், கீழே இருக்கும் பூமிக்கும் பெயர்களிடப்படவில்லை. அவற்றின் தந்தை அப்ஸ, தாய் தியாமத். அப்போது கடலில் ஓர் அசைவு உண்டாகி பல தெய்வங்கள் அதிலிருந்து வெளிவந்தன. லக்மூ என்ற ஆண் தெய்வமும், லச்சாமு என்ற பெண் தெய்வமும் தோன்றினார்கள். அப்படி தோன்றிய பல தெய்வங்களில் இயா என்பவன் எல்லாத் தெய்வங்களை விடவும் அறிவுவும் வலிமையும் உடையவனாக இருந்தான். இவனுடைய மகன் மொரோடாக் என்ற தெய்வம்.

அப்ஸமும் தியாமத்வும் இருளான கடலில் குழப்பத்தினுள் வாழ்ந்துக்கொண்டிருந்த போது. அவர்களின் வழித்தோன்றகள் பிரபஞ்சத்தைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள். அதைப் பார்த்த கவலையடைந்த தியாமத் புயலைத் தோற்றுவித்தாள். அப்ஸ தாங்கள் உருவாக்கிய தமது வாரிசுகளான தெய்வங்களை அழிக்க முயற்சி செய்கிறார். இதனை அறிந்த இயா தனது மகன் மொரோடாகை ஏவி அப்ஸவையும் அவன் மகன் மும்முவையும் அழித்துவிடுகிறான்.

இதனால் கோபம் கொண்ட தியாமத் பழிவாங்கப் புறப்படுகிறாள். ஆயினும் இயாவின் மகன் மொரோடாக் வீரத்துடன் எதிர்த்து தியாமத்தை வீழ்த்துகிறான். அவளது உடலை இரண்டாக வெட்டி ஒருபகுதியை பூமியாகவும் மற்றொரு பகுதியை வானமாகவும் படைத்தான். சூரியன், சந்திரன், கோள்கள் போன்றவை படைத்தான். பின்பு மனிதர்களையும் படைத்தான் என்பது பாபிலோனிய படைப்புக்கதை.

மெசபடோமியாவிற்கு அருகில் உருவான எகிப்து நாகரீகத்தின் படைப்புக் கொள்கைப்படி. ரீ என்கிற கடவுள் தன்னைத் தானே புணர்ந்து ஒரு புனித மகனையும் புனித மகளையும் படைத்தார். அவர்கள் இரண்டு இனங்களின் தெய்வங்களாக ஆனார்கள். பின்புதான் ரீ மனிதனைப் படைத்தார்.

பால்டிக் பழங்குடிகளின் படைப்புக் கதைப்படி. உருகும் பனிபாறையின் துளியிலிருந்து ஒய்மிர் என்ற பெரிய மனிதன் உருவாகி, பின் அவனது புஜத்திலிருந்து அவனைப் போலவே ஆணும் பெண்ணும் உருவானார்கள்.
மத்திய ஆசியாவில் இந்த கதைகள் என்றால் மேற்கு ஆசியாவின் கதைகள் எளிமையானவை. சீனா, ஜப்பான் போன்ற மங்ககோலிய இனங்களின் கதைகள் பழங்குடிகளின் அரசியலை பின்னணியாகக் கொண்டவை, மங்கோலியர்களின் படைப்புக் கடவுள் தனது மகன் உவானை பூமிக்கு அனுப்பி ஓர் அரசை உருவாக்குகிறார். பின்பு மூவாயிரம் பேரைப் படைத்து, அதன்பிறகு மனிதர்களைப் படைத்தார் என்று சொல்கிறது.

ஜப்பான் படைப்புக் கதைப்படி ஜெல்லி மீன் போன்ற ஒரு வடிவத்தில் முதலில் எட்டுத் தலைமுறை கொண்ட சகோதர சகோதரிகள் என்ற தெய்வங்கள் உருவானார்கள். அவர்களிலிருந்து உலகமும், உயிரனங்களும், பேரரசும், பிறகு மக்களும் படைக்கப்பட்டார்கள்.

இவை ஒருபுறம் இருந்தாலும் ஐரோப்பிய ஆய்வாளர்களைப் பெரிதும் கவர்ந்தது கிரேக்கத் தொண்மக் கதைகள்தான். கிரேக்க படைப்புக் கதைகள் நான்கு உள்ளன. அவற்றுள் முக்கியமானது டைட்டன்களோடு தொடங்குவது. ஆதியில் தோன்றிய பன்னிரண்டு டைட்டன்களே ஆதி தெய்வங்கள். அதாவது ஜீயே மற்றும் யுரேனஸ் ஆகிய தெய்வங்கள் இணைந்த ஆறு ஆண் தெய்வங்களையும் ஆறு பெண் தெய்வங்களையும் உருவாக்கினர். இந்த பன்னிரண்டு தெய்வங்களுக்கும் தனித்தனிப் பெயர்களும், பணிகளும் உண்டு. இதில் முத்த தெய்வம் ஓஷியானஸ், இவன் தனது கடைசி தங்கையான திதைசை மணந்து 3000 குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் கடல் அலைகளாகவும் இருக்க, கடலின் மேற்குமுடிவில் தீதைஸ் வாழ்க்கிறாள்.. இப்படி ஏராளமான கிளைக்கதைகளுடன் கிரேக்க தொண்மக் கதைகள் போகின்றன.
அதேபோல அதிகம் கவனத்தினை ஈர்த்தது மாயன்களின் மனிதப் படைப்புக் கதைகள். மாயன்களின் நாகரீகம் பரந்து விரிந்தது. அதில் ஏராளமான குழுக்களும் அவற்றிற்கு அரசுகளும் இருந்தன. அவை ஒவ்வொன்றையும் விவரிப்பது பெரிய புத்தகத்தை எழுத வைத்துவிடும் என்பதால் இரண்டு சான்றுகளை மட்டும் பார்ப்போம். அதில் ஒன்று பழமையானது. செலன் எனும் குழுவின் தொண்மக் கதைபடி; படைப்பின் கடவுள் முதலில் தாவரங்களையும் விலங்குகளையும் படைக்கிறார். அவற்றிற்கு பெயர்களையும் வைக்கிறார். பின்பு அவைகளை சுவனத்திலேயே விட்டுவிட்டு பன்னிரண்டு பவுர்ணமிகள் கழித்து திரும்பி வருகிறார். அப்போது சில மிருகங்கள் கடவுள் தங்களுக்கு வைத்த பெயர் சரியாக இல்லை என்றும் அதை மாற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன. இதனால் கடவுளுக்கு கோபம் வந்து நான் போட்ட சட்டதிட்டங்களையே நீங்கள் மீறப் பார்க்கிறீர்களே. இனி உங்களை கட்டுப்படுத்த வேறு ஒரு படைப்பை உருவாக்குவேன் என்று சொல்லி மனிதனையும் அவனது சகோதரர்களையும் படைக்கிறார். இவர்களிலிருந்து சந்ததிகள் பெருகுகின்றன.

மற்றொரு படைப்புக் கதை மாயன்களின் ஒரு பிரிவான அமெரிக்க செவ்விந்திகர்களின் கதை. அது மிக பிற்காலத்தில் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. அதன்படி: கடவுள் மனிதனைப் படைக்க விரும்பினார்.அதற்காக தரமான மாவு எடுத்து பிசைந்து, மூன்று மனித போம்மைகளைச் செய்தார். அந்த மூன்றையும் ஒரு பானையில் போட்டு வேகவைத்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு ஆர்வம் அதிகமாகி ஒரு பொம்மையை வெளியே எடுக்க அது வெந்தும் வேகாமல் வெளுத்திருந்தது. அதற்கு உயிர் உண்டாக்கினார், அதுதான் வெள்ளைக்காரர்கள். சலிப்புற்ற கடவுள் கொஞ்சம் காத்திருந்து பதமாக வெந்திருந்த இரண்டாம் பொம்மையை எடுத்தார். அது நல்ல நிறத்துடன் அழகாக இருந்தது. அதற்கு உயிர் கொடுத்து பார்த்தார். அதன் அழகில் அவர் மயங்கிய கடவுள் அதையே பார்த்துக் கொண்டிருந்ததால் நேரம் போனதே அவருக்குத் தெரியவில்லை. பிறகு அவர் சுதாரித்துக்கொண்டு கடைசியாக இருந்த பொம்மையினை எடுத்தார், அது கருகி தீய்ந்துப் போயிருந்தது. இருந்தும் அதற்கும் அவர் உயிர் கொடுத்தார். அதுதான் கருப்பர்கள். அந்த அழகான படைப்பாய் இருந்ததே அதுதான் செவ்விந்தியர்கள. இப்படி நிற வேற்றுமைக்கதையோடு படைப்பு முடிகிறது.

இவைத் தவிர உலகம் முழுதும் உள்ள மக்களிடம் ஏராளமான மனித படைப்பு தொண்மங்கள் உள்ளன. இந்தியாவில் உலகத்தின் பிற மக்களோடு ஒப்பிடும் அளவிற்கு ஏராளமான படைப்புத் தொண்மக் கதைகள் உள்ளன. இருந்தும், இந்து மதத்தில் இருப்பவை மட்டுமே பொதுவாக ஆய்வாளர்களின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்தின் தோடர்களிடையே நிலவும் தொண்மத்திற்கும் செலன் மாயன்களின் படைப்புத் தொண்மத்திற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. அதே நேரத்தில் தமிழர்களுக்கென்று பொதுவான படைப்புக் கதையே இல்லை என்று சொன்னால் ஆச்சரியாமாக இருக்கும். அப்படியென்றால் அவர்களின் படைப்பு கதைதான் என்ன..?

இருந்தாலும் அவற்றை பின்னொரு தருணத்தில் விரிவாக ஆராய்வோம். எனினும் இதுவரை பார்த்த படைப்புக் கதைளுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு என்று தோன்றலாம். அதற்கு காரணங்கள் வலுவான காரணங்கள் உண்டு. அந்த காரணங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று மானுடவியல் ஆய்வு தொடர்பானது. இரண்டாவது தர்க்கம் தொடர்பானது.

முதலில் மானுடவியல் தொடர்பை பார்ப்போம்.

இதுவரை பார்த்தக் கதைகளில் மெசபடோமியன்களின் படைப்புக் கதையில் மட்டுமே முதல் படைப்புத் தெய்வம் பெண்ணாக இருக்கிறது.
அதே பெண் தெய்வத்தை பாபிலோனின் மற்றும் சுமேரியன் கதையில் கொன்றுவிட்டபிறகு ஆண் தெய்வம் மனிதர்களைப் படைக்கிறது.
மற்றக் கதைகளில் ஆண்தான் ஆதி படைப்புக் கடவுளாக இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றையும் படைக்கிறார்.. ஏன்..?

மனிதர்களை படைக்கும் கடவுள் பூமியில் உள்ள மண்ணிலிருந்தே படைக்கிறார். சில இடங்களில் மாவு, சில இடங்களில் நீர்.. ஏன் இப்படி நடந்தது..?

அவர் படைக்கும் போது ஒரு முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அதன்படி முதலில் ஆண், பிறகு பெண், இவர்களுக்கு ஆண் பெண் பிள்ளைகள். அதாவது சகோதர சகோதரிகள். இவர்களுக்குள்ளே முதலில் கலப்பு நடந்து அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கின்றன. அதாவது குடும்பத்திற்குள், ரத்த உறவுக்குள் திருமணங்கள் நடந்து அதன் மூலமாக சந்ததிப் பெருகுகிறது.

இந்த கேள்விகளும் குறிப்புகள் மிக அவசியமானவை. ஏனெனில் இந்த கதைகள் உருவான காலத்தில் மக்கள் என்னவிதமான சமுக அமைப்பில் இருந்தார்களோ அதை அடிப்படையாக வைத்தே அவர்கள் தமது படைப்புக் கதைகளை உருவாக்கினார்கள். படைப்பிற்கான காரணங்களை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதபோது அதை கடவுள்தான் படைத்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தமது நம்பிக்கைகளை அவர்கள் உறுதிப் படுத்திக்கொண்டார்கள். அதற்குத்தான் பல சடங்குகளை உருவாக்கினார்கள். என்பது தனித்தனிக் கதைகள்.

ஆயினும் இதில நான் முக்கியமாக பார்ப்பது. இந்த படைப்புக் கதைகள் ஒரு விசயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன்படி படைப்பின் அடிப்படை ஒரு குடும்பம், சகோதர சகோதரிகளுக்கிடையே திருமணம், அதைத் தொடரும் சமுக அமைப்பு. இந்த சமுக அமைப்பிற்குப் பெயர்தான் அகமண முறை என்பது.

இனி இரண்டாவது அம்சமான தர்க்கத்தைப் பார்ப்போம்:

உலகம் முழுதும் உள்ளவர்கள், உலகத்தை கடவுள் படைத்தார், அவரே உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அப்படி நம்பும்போது தற்போது நிலவும் வேறுபாடுகளையும் கடவுள்தான் படைத்தார் என்பதை நிறுவி தம்மை சமாதானம் செய்துக்கொள்ள முயல்கிறார்கள். அப்படித்தான் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.
சாதியை உறுதியாக நம்பும் யாரைப் பார்த்தும் நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள்.

நீங்கள் நம்பும் சாதி உண்மையாக இருந்தால் அதைப் படைத்தது யார்..?
மனிதன் படைக்கப்பட்டபோது அது இருந்ததா..?

படைப்புக் கதை என்று ஏதாவது ஆதாரம் உங்களிடம் உள்ளதா..? என்று கேட்டுப் பாருங்கள். அவர் திணறுவதை உங்களால் பார்க்க முடியும். ஏன் அப்படி. அதற்கு காரணம் இருக்கிறது. சாதியை நம்பும் யாரும் தன்னுடைய மதத்தைப் போலவே நம்புகிறார். அதனால் சாதியானது இந்துக் கடவுளின் படைப்பு என்பது ஒவ்வொரு சாதி இந்துவின் நம்பிக்கை. எனவே சாதியை மறுப்பது ஒரு வகையில் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதால் தன்னுடைய நம்பிக்கையை எந்தவிதத்திலும் அவர் கேள்விக் கேட்டுக்கொள்வது இல்லை. கடவுள் உலகத்தைப் படைத்து சாதியைப் படைத்திருந்தால் உலகம் முழுதும் சாதி என்கிற அமைப்பு நிலவ வேண்டும். ஆனால் ஏன் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் இந்துக்களின் நம்பிக்கைப்படி மனிதன் எப்படி உருவாக்கப்பட்டான். அதற்கு ஒரே கதைதான் இருக்க முடியாமா..? அந்த கதைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள்…!

எனினும் உலகம் முழுதும் இந்த கதைகள் உருவான காலத்தில் இந்த நம்பிக்கைளை கேள்விக்கேட்டு மனிதன் இப்படியா படைக்கப்பட்டிருப்பான். இவனுக்குள் இருந்த பிரிவினைகளை அந்தக் கடவுளா படைத்திருப்பார் என்று கேள்விக் கேட்டு, மனிதனின் படைப்பைப் பற்றி அறிவியில் அடிப்படையில் சிந்தித்த பெரும் அறிஞர்களின் ஆய்வுக்கள் அதே காலகட்டத்தில் நடந்திருந்தன. அவர்கள் மனித படைப்பிற்கு எவ்வாறு காரணம் கண்டார்கள் என்பதை இனி பார்போம்.

2015-04-11 10:02 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:

கட்டுரை ஆசிரியரின் சம்மத்துடன் மறுபதிப்பு செய்யப்படுகின்றது! கட்டுரை ஆசிரியரும் குழுவில் புதிய  உறுப்பினராக இணைந்துள்ளார். 

-சுபா

கௌதம சன்னா

ந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும்.

நம் காலத்திற்குப் பிறகு வரும் எத்தனையோ காலங்களுக்குப் பிறகு நாம் வாழும் இந்த பூமி அடையப் போகும் அழிவிற்கு இப்போது மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டது உலகின் மனித இனம். சூரியன் அணைந்து அதிலுள்ள நெருப்பாற்றல் அத்தனையும் தீர்ந்துபோய், ஒரு மாபெரும் சிவப்பு நெருப்புக்கங்கு கோளமாக தன்னைத் தானே பெரிதாக்கிக் கொள்ளும் காலத்திற்கு சுமார் நானூறு கோடி ஆண்டுகள் பிடிக்கலாம், அப்போது பெரிதாகும் சூரியக் கோளம் நாம் வாழும் இந்த பூமியை சாம்பலாக்கி விழுங்கிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் மனிதக்குலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் உங்களை தொற்றிக் கொள்வது புரிகிறது. நிச்சயம் மனிதக்குலம் தழைக்கும்.

உலகம் அழியத் தொடங்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வளித்த இந்த பூமிப் பந்தை விட்டு மனிதர்கள் தப்பிவிடு வார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதாவது ஓரிடத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு கோளத் தினைக் கண்டுபிடித்து குடியேறி விடுவார்கள். அதற்கான தொழில் நுட்பத்தை அவர்கள் விரைவில் அடைந்தும் விடுவார்கள். புதிதாக குடியேறிய கோளத்திலிருந்து பூமியை அவர்கள் நன்றி யோடு பார்ப்பார்களா…?

தூரத்தில் ஒரு சிறு ஒ

Suba.T.

unread,
Aug 3, 2015, 10:51:12 AM8/3/15
to மின்தமிழ், Subashini Tremmel, G Sannah

கௌதம சன்னாவின் இத்தொடரின் மூன்றாம் பகுதியை பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

Posted on July29, 2015
 
1 Vote

மானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்...
1
லகம் எப்படி படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு விடை காண மனித சமூகம் 3000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விரிவாக பேசத் தொடங்கியிருந்தது. இந்த கேள்விதான் தத்துவ கேள்வியாக மாறி சமுகத்தை இரண்டுத் தரப்பாக பிரித்துவிட்டது. இதில் உலகத்தையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று நம்பியவர்கள் கருத்து முதல்வாதிகளாக ஆனார்கள். இவர்கள்தான் மனித பிறப்பு பற்றின தொண்மக் கதைகள் உருவாகக் காரணமானார்கள், அதைத்தான் கடந்த இதழில் பார்த்தோம்.
ஆனால், இவர்களின் கருத்தை மறுத்து, கடவுள் உலகத்தை படைக்கவில்லை. உலகமும், பிரபஞ்சமும் படைக்கப்படாமல் எப்போதும் இருந்து வருகிறது. அதில் உள்ள பொருட்களின் மாறுபாடுகளினால் உலகின் உயிர்கள் உருவாகியிருக்கின்றன என்று ஒரு சாரார் வாதிட்டனர். இவர்கள் பொருள் முதல்வாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அறிஞர்களின் எண்ணிக்கை ஏடறிந்த வரலாற்றின் காலம்தொட்டு குறைவாகவே இருந்தது. கிடைத்துள்ள குறிப்புகளின்படி கிரேக்கம், அரேபியா, சீனா மற்றும் இந்தியாவிலும்தான் இக்கருத்தின் மூலவர்கள் இருந்தார்கள். எனினும் இந்த இரு தரப்பினருக்கும் மேற்கு நாடுகளில் தத்துவாதிகள் என்று பெயர். இந்தியாவில் ரிஷிகள், முனிவர்கள் மற்றும் குரு என்று அழைக்கப்பட்டனர்.

இந்தத் தத்துவாதிகள் தமது அறிவுத் திறத்தால் உலகின் மர்மங்களுக்கு விடைக்காண முயன்றார்கள். அதனால், ஏறக்குறைய கி.மு.2000 முதல் கிபி.18ம் நூற்றாண்டு வரை தத்துவவாதிகள் அனைத்திற்கும் விடையளிப்பவர்கள் என்று உலகம் நம்பியது. எனவே அவர்களிடமே எல்லா கருத்துக்களையும் எதிர்பார்த்தது. 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு தத்துவாதிகளின் இடத்தினை மதவாதிகள் கைப்பற்றிக்கொள்ள, துறைவாரியான அறிவியலுக்கு அறிவியலாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால்தான் காலம் பற்றின புதிர்களை விடுவித்த ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ என்ற முன்னணி அறிவியல் அறிஞர்  ‘‘தத்துவாதிகளின் காலம் முடிந்துவிட்டது’’ என்று அறிவித்தார்.
எனவே அறிதல் முறை என்பது முழுக்க அறிவியல் அடிப்படையில் மாறியப் பிறகும் மனிதன் படைப்புப் பற்றின ஆய்வுகள் காலம்தோரும் மாறி மாறி அறிவியல் புதிர்களாகவே தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும் சாதி பற்றின மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்கு இந்த வரலாற்றைத் தெரிந்துக்கொள்வது அவசியம். எனவே மானுடப் பிறப்பின் அறிவியல் வரலாற்று முடிவுகளின் சுருக்கத்தைப் பார்ப்போம்..
இன்றைய மேற்கத்திய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படைகளை வகுத்தது பண்டைய கிரேக்கம்தான். கிரேக்கத்தின் தத்துவ வளர்ச்சி மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியே இல்லை என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட கிரேக்கத்தின் தத்துவ சிந்தனை மில்டஸ் என்ற நகரத்தில் கி.மு.600ல் தோன்றியது. தீலஸ் என்பவர் தான் ‘எல்லா பொருள்களுக்கும் தண்ணீர்தான் அடிப்படை’ என்று தமது ஆய்வினை அறிவித்து கிரேக்கத் தத்துவ மரபைத் தொடங்கி வைத்தார். இவருக்கு பிறகு அனாக்சிமான்டர் என்பவர் ‘உலகம் அபெய்ரோன் என்பதிலிருந்து தோன்றியது. அதாவது திட்டவட்டமில்லாத மண், நெருப்பு, நீர் போன்ற பொருட்களின் மூலம், அதன் மாறுபட்டத் தன்மைகளால் பருபொருள்கள் (விணீttமீக்ஷீ) தோன்றின என்று பொருள் முதல்வாத அடிப்படையினை அமைத்தார். அதை கி.மு.430-370 ல் வாழ்ந்த டெமாக்ரடஸ் அதை வளர்த்துக் சென்று விரிவுபடுத்தினார். ஐரோப்பிய அறிவுலகத்திற்கு அணு கொள்கைகளை அளித்தவர் இவரே. உலகம் அணுக்களின் சேர்ப்பினால் உண்டாகி இயங்குகிறது என்றும் மனிதனின் உடம்பும் ஆன்மாவும் அணுக்களால் ஆனது, மனிதன் இறக்கும்போது இரண்டும் பிரிந்துவிடுகின்றன  என்றும் அவர் கூறினார்.
இந்த போக்கினை எதிர்த்து கருத்து முதல்வாத தத்துவாதிகள் வாதம் புரிந்தார்கள். சாக்ரடீஸ் மற்றும் அவரது மாணவர்கள் அதில் முன்னணியில் இருந்தனர். பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் அதில் உச்சத்தை தொட்டவர்கள். இதில் அரிஸ்டாட்டில் எழுதிய உயிரினங்களின் உறுப்புகள் என்ற நூல்தான் உயிரியல் துறையின் முன்னோடி. உயிரினங்கள் மற்றும் அதன் அங்களுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கின்றது. அவற்றை நிறைவேற்றவே அவை இயங்குகின்றன என்று அவர் அவதானித்தார். இவர் தமது ஆய்வில் மனிதனின் பரிணாமம் பற்றின கோட்பாடுகளுக்கு நெருக்கமாக வந்தாலும் அதை தமது கருத்தினாலே புறக்கணித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உயிரினமும் அதன் உயிரமைப்புகளும் வாழ்வதற்கான போராட்டதில் நிலைக்கவே இயங்குகின்றன என்று கூறிய எம்பிடாக்ளசின் கருத்துக்களை மறுத்தார். ஒருவேளை எம்பிடாக்ளசின் கருத்துக்களை அரிஸ்டாட்டில் ஏற்றுக்கொண்டிருந்தால் பரிணமா வளர்ச்சிக் கோட்பாட்டை முதலில் கண்டுபிடித்தவர் என்று ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தமது கடவுள் பற்றின கோட்பாட்டை கைவிட வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும் அவர் இடையிலே நின்றார். கிரேக்கத் தத்துவ மரபு அத்தோடு வீழத்தொடங்கியது. மட்டுமின்றி, அந்த தத்துவவாதிகள் உருவாக்கிய கருத்துக்கள் அடுத்த 1700 ஆண்டுகள் அதிக மாற்றமின்றி ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்தின. எனினும் அந்த தத்துவாதிகள் மனித பிறப்பின் மூல அம்சங்களைக்  கண்டுபிடித்தாலும் மனிதன் எப்படி உருவானான் என்பதைப் பற்றி அறிய முடியாமல் போனது.
இந்தியாவில் மேற்கண்ட விவாதங்களைத் தொடங்கி வைத்தவர் பிரகஸ்பதி. இவர் மூலமாகவே உலகாயவாதம் அல்லது சார்வாகம் என்ற கருத்தாக்கம் உருபெற்றது. மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் மற்றும் சடப்பொருள்களுக்கு மூலமாக இருப்பது நீர், காற்று, நெருப்பு மற்றும் நிலம் ஆகிய நான்கு பூதங்களே என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. அவர்கள் ஆகாயத்தை ஒரு பூதமாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதை உயிரியல் அடிப்படையில் முதன்முதலில் விளக்கியவர் உத்தாலகர் என்ற பௌதிகவாத அறிஞர். பௌதிக பொருட்களுக்கு உயிர் மற்றும் உணர்வு குறித்த தொடர்ப்பை விளக்கியவரும் இவர்தான். இவரைத் தொடர்ந்து இக்கருத்துக்களை வளப்படுத்தியவர்களில் சாங்கியத்தை தோற்றுவித்த கபிலர், புத்தர், மகாவீரர், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆசீவகத்தை தோற்றுவித்த மற்கலி கோசர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதில் புத்தர் மனிதனின் படைப்பு பற்றி துல்லியமாக பேசாவிட்டாலும், மனித படைப்பின் அடிப்படையை வகுத்திருக்கிறார். மறுபிறப்பைப் பற்றி பேசும்போது.. ஒரு விளக்கிலிருந்து ஒளி அடுத்த விளக்கிற்கு கடத்தப்படுவது போல பிறப்பானது கடத்தப்படுகிறது என்றும், படைப்பின் அடிப்படை கூறுகளான நான்கு பூதங்களும் தமது கட்டுக்களை இழக்கும்போது உடல் அல்லது பொருளின் தோற்றம் சிதைந்து அந்த நான்கு பூதங்களும் தத்தமது மூலகங்களுடன் இணைந்துக் கொள்கின்றன. மேலும், அவை மறுபடி இணைந்து புதிய பிறப்பிற்கு வழி கோளுகின்றன என்று புத்தர் உரைத்தார். இது பரிணாமக் கோட்பாடான இயற்கைத் தேற்விற்கு நெருக்கமாக அமைந்ததுதான்.
மிகச் சுருக்கமான இக்கருத்துக்களைப் போலவே சீனா, பாபிலோன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் பண்டை காலத்தில் உருவாகியிருந்தன. எனவே, மிக விரிந்து பரந்த அக்கருத்துக்களை விவாதிப்பதை இத்தோடு நிறுத்திக்கொண்டு, அடிப்படையான அம்சத்தை மட்டும் பார்ப்போம்.
எனவே.. உலகப்படைப்புப் பற்றின கேள்விகள் மட்டுமின்றி.. மனிதன் தோற்றத்தைப் பற்றி இரண்டு கேள்விகள் பிரதானமாய் இருந்தன. ஒன்று மனிதன் ஏன் படைக்கப்பட்டான்.. இரண்டு மனிதன் எப்படிப் படைக்கப்பட்டான். இதில் முதல் கேள்விக்கு கடவுளை நம்பியவர்கள் விடைகாண முயன்றார்கள், இரண்டாம் கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் விடைக்காண முயன்றார்கள். ஆனால் இருவருமே போதிய அளவில் விடைக்காண வில்லை, அதற்கான வசதிகளும் அவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் காரணம். அவையெல்லாம் பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மனிதன் சமூகமாக வாழ்வதன் நோக்கத்தை இரு தரப்பினருமே ஆராய்ந்து வந்துள்ளனர். இதனால் தத்துவம் பலதுறைகளாக வளர்ந்தது. தத்துவவாதிகள் உருவாக்கிய அத்தனை வாய்ப்புகளையும் மதவாதிகள் தமது நலத்திற்குள் கொண்டுவரும் போக்கும் தொடர்ந்து வந்தன. ஏறக்குறைய மத்திய காலம் வரையில் இந்த போராட்டம் தொடர்ந்தது.
எனவே மனித இனத்தின் தோற்றம், அதன் சமூக அமைப்பின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றின அறிவியல் அடிப்படையிலான் ஆய்வுக்கு மனித இனம் வந்து சேர்ந்தது ஐரோப்பாவில் உருவான மறுமலர்ச்சிக் காலத்திலேதான். அக்காலத்தில்தான் எல்லாவற்றையும் பற்றின கேள்விகள் உருவாயின. அவற்றின் மிக முக்கியமானது மானுடவியல் ஆய்வுகள். அந்த ஆய்வுத் துறைதான் மனிதன் தோற்றத்தைப் பற்றின புதிர்களை விடுவிக்க அடித்தளம் அமைத்தது. எனினும் அதற்கான அடிப்படைகளுக்கு பண்டைய கிரேக்கத் தத்துவவாதிகளே மூலமாக இருந்தார்கள் என்பதுதான் வரலாற்றின் விசித்திரம். அதே காலகட்டத்தில் நமது இந்தியா மதப் போராட்டங்களில் மூழ்கி சிந்தனையில் தேங்கிப் போயிருந்தது.
2
மானுடவியல் ஆய்வுகள் பற்றி பண்டைய கிரேக்கத்தில் ஹெராடோடஸ் அவர்களால் தொடங்கப்பட்டது போலவே, இந்தியாவில் வியாசர், வால்மீகி மற்றம் பல சங்க இலக்கிய புலவர்கள் சிலராலும்  தொடங்கப்பட்டிருக்கிறது. பிற சமூகங்களைப் பற்றின வர்ணனையாக அது அமைந்தது, ஆனால் அவை வளராமல் தேங்கிப் போயிவிட்டன. எனினும் மானுடவியல் ஒரு ஆய்வுத் துறையாக 17ம் நூற்றாண்டி டேனிஷ் மன்னர் மூன்றம் பிரடெரிக் அவர்களால் 1650 ஆம் ஆண்டு டென்மார்க்கில் தொடங்கப்பட்டது. அவர் நிறுவிய அருங்காட்சியகத்திற்குத் தேவையான படிமங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றின சான்றுகளை சேகரிப்பதிலிருந்து தொடங்கியது. பின் அது எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டன. அருங்காட்சியகத்திற்கு தேவையான படிமங்களைத் தேடி பணியாளர்களும், அறிஞர்களும் காடுகளுக்கும் பிற தூர தேசங்களுக்கும் போனார்கள், ஏராளமானவற்றைச் சேரித்தார்கள். அதிலிருந்து மானுடவியல் ஓர் அறிவியலாக பரிணமித்தது. .
இந்நிலையில் 18ம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் மாபெரும் அறிவு எழுச்சித் தொடங்கியது. பிரான்சு புரட்சியின் பாதிப்புகள், ஜெர்மனியின் அறிவார்ந்த முயற்சிகள், இங்கிலாந்தின் முதலாளித்துவ எழுச்சி ஆகியன அந்த போக்குகளை உருவாக்க முக்கியக் காரணிகளாக இருந்தாலும், வாட்டிகனிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கத்தோலிக்க கிறித்துவமும் மூல காரணமாக விளங்கியது.
ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகளால் உருவான மானிட இனம் பூலவுகு எங்கும் நிறைந்திருக்கிறது என்கிற கருத்து பன்னெடுங்காலமாக நிலை நிறுத்தப்பட்டிருந்தாலும், உலகில் எங்கு பார்த்தாலும் எராளமான இனங்களும், அவர்களுக்குள் உயர்வு தாழ்வுகளும் எப்படி உருவாயின என்பதற்கும், மக்கள் ஏன் சமூகமாக வாழத் துடிக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இதைப்பற்றி பேசுவதை அன்றைய ரோமானியத் திருச்சபை அனுமதிக்கவில்லை. எனவே எங்கு பார்த்தாலும் அடக்குமுறைகள். அறிவுத் தளத்தில் கடும் கொந்தளிப்புகள் உருவாயின. இந்நிலையில் தான் மனிதன், விலங்குகள், தாவங்ரங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை படைப்புகள்  மற்றும் மனித இனங்களைப் பற்றின அறிவியல் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகள் முக்கியம் பெறத் தொடங்கின. இந்த ஆய்வுகளின் நோக்கம்:
– மனித இனம் எப்படி தோன்றியது..?
– எப்படி சமூகமாக ஆனது..?
– எவ்வாறு உலகம் முழுதும் பரவியது..?
– ஏன் இவ்வளவு இனங்களாக பெருகியது..?
– சில இனங்கள் தங்களை உயர்ந்த இனமாக கருதிக்கொள்ள, சில இனங்களை தாழ்ந்த இனமாக நசுக்கப்படுகிறதே ஏன்..?
என்பன போன்ற கேள்விகளுக்கு விடைக்காணத் துடித்தது.
இந்நிலையில் 1856ஆம் ஆண்டு ஜெர்மனில் உள்ள நியாண்டர்தால் என்கிற இடத்தின் பள்ளத்தாக்கில்  ஓரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுகளில்படி அந்த எலும்புக்கூட்டிற்கு உரிய மனிதன் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்த யூஜின் தூபுவா என்பரால் 1891ஆம் ஆண்டு, ஜாவா தீவின் பென்காவி ஆற்றின் கரையோரம் ஒரு மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு பித்திக்காந்திரோப்பஸ் என்று பெயரிடப்பட்டது. அந்த மண்டையோட்டிற்கு உரிய மனித உயிரி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கணக்கிடப்பட்டது.
இந்த ஆய்வுகளெல்லாம் மதவாதிகள் மத்தியில் ஒரு கிலியை உண்டாக்கியது. ஏனெனில் அவர்களின் கருத்துப்படி கடவுள் மனிதனை படைத்து வெறும் 5 ஆயிரம் ஆண்டுகளே ஆகியிருந்தது. ஆனால் கடவுளின் படைப்பினை விட லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் தோன்றியிருக்கிறான் என்பதால்தான்.
மனிதன் பிறப்பு இப்படி இருந்தாலும் அவன் எப்படி பிறந்தான் என்பதற்கான விடையை முதன்முதலில் விடுவித்தவர் ழான் லெமார்க். ஜெர்மனியை சேர்ந்த லெமார்க் மனிதனை ஒத்த ஒரு  குரங்கைப் போன்ற உயிரியிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்று தமது கருதுகோளை வெளியிட்டார். எல்லோரும் ஆடிப்போய்விட்டார்கள். எனினும் அது விரிவாக விளக்கப்படாததால்  அதை அறிவியல் அடிப்படையில் நிறுவிய பெருமை டார்வின் அவர்களையே சாரும்.  சார்லஸ் டார்வின் தமது பீகிங் கப்பலில் உலகின் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, பல மனித மாதிரிகளையும், மிருகம் மற்றும் தாவரங்களின் மாதிரிகளையும் சேகரித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். விளைவாக 1871ஆம் ஆண்டு தான் எழுதிய மனிதர்களின் முன்னோர்  ஆய்வு நூலை வெளியிட்டு அதில் மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றான் என்பதை நிருபித்தார்.
அதைத் தொடர்ந்து முதல் மனிதன் ஆப்பிரிக்காவின் ஜாவா என்னுமிடத்தில் பரிணாமம் அடைந்து, பிறகு உலகம் முழுதும் பரவினான் என்பதை முன்வைத்தனர் அறிவியலாளர்கள். அப்படி பரவும் போதுதான் கால, இட, தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு ஏற்ப மனித இனம் பல இனங்களாக பரிணமித்து உலகம் முழுதும் வியாபித்துள்ளனர் என்பதை உறுதிசெய்தனர். அதன்படி உலகம் முழுதும் வியாபித்த மனித இனம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது, அவை
1) நீக்ரோ -ஆஸ்திரேலிய வகை அல்லது ஆப்பிரிக்க-ஓஷானிய வகை அல்லது நிலநடுக்கோட்டு வகை.
2) ஐரோப்பிய வகை அல்லது ஐரோபிய -ஆகிய வகை,
3) மங்கோலிய வகை அல்லது ஆசிய -அமெரிக்க வகை. வகைகள்
races migration
இப்படி இருந்தாலும் இவை அத்தனையும் ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்கள் என்பதை அறிஞர்கள் நம்பினார்கள். மட்டுமின்றி, ரஷ்யாவில் 1800களில் வாழ்ந்த மிகயில் வசீலியெவிச் மனோசா என்பவர் தமது ஆய்வுகளில் மானுட இனத்தில் உயர்வு தாழ்வு என்கிற கோட்பாடு கற்பனை என்றும், அது ஆதிக்கவாதிகளால் கற்பிக்கப்பட்டது என்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவினார்
இந்த நிலையில் மனிதன் எப்படி ஒரு சமூகமாக மாறினான் என்பதற்கான கேள்விக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் என்பவர், அமெரிக்க பழங்குடிகளிடையே விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, மனித சமூகம் ஆதியில் ஒரு பொதுவுடைமை சமுகமாக இருந்தது என்றும், அப்போது அதற்குள் எந்த வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என்பதையும் கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து முதல் சமூகம் தாய் தலைமை ஏற்ற சமூகமாக இருந்து, பின்னர் ஆண் தலைமையிலான சமூகமாக பரிணமித்தது என்றும், அதற்குப் பிறகு அடிமைச் சமூகம், உடைமைச் சமூகம், முதலாளித்துவ சமுகம் என சமூகங்கள் பரிணமித்தன என்று ஏங்கல்ஸ் நிறுவினார். ஆனால் அது ஏங்கல்ஸ் சொன்னதுபோல நடக்கவில்லை என்று 20ம் நூற்றாண்டு அறிஞர்களான சசூர், லெவிஸ்ட்ராஸ் போன்றோர் மறுத்து தமது ஆய்வுகளை முன்வைத்தனர். எனினும் இந்த வாதங்கள் தொடர்கின்றன.
நம் காலத்தில் மானுடவியல் ஆய்வுகள் விரிவான அளவில் பலதுறைகளைச் சேர்த்து ஆராயப்படுகின்றன. அவற்றை விவரிப்பது கடினம். ஆயினும் இந்த ஆய்வுகள் ஒன்றை தெளிவாக நிறுவியுள்ளன. மனித சமூகம் உருவானபோது அது சாதியாக உருவாகவில்லை என்றும், படைத்ததாகக் கருதப்படும் கடவுள்கூட இடையிலேதான் வந்தவர் என்பதை அறுதியாக கூறியுள்ளன. இது ஒருவகையான அறிவியல் என்றால், மற்றொரு அறிவியல்துறை மனிதனின் தோற்றத்தைப் பற்றி துல்லியப்படுத்த தற்போது பயன்படுகின்றது. அந்த துறையை உருவாக்கியர் கிரிகார் மெண்டல் என்கிற பாதிரியார். இவர் தொடங்கியது எப்படி தற்போது பிரமாண்டமாக வளர்ந்து நமது கேள்விகளுக்கு எவ்வாறு விடை தருகின்றன என்று பார்ப்போம்.
3
ஆஸ்த்திரிய மடாலய கத்தோலிக்க பாதிரியாரான கிரிகார் மெண்டல் என்கிற தாவரவியல் விஞ்ஞானி  பட்டாணி விதைகளில் மரபுக்கூறுகள் எவ்வாறு தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றது என்கிற ஆய்வை 1856 முதல் 1865வரை மேற்கொண்டார். ஏழு விதைகளைக் கொண்டு அவற்றின் பண்புக்கூறுகள் எவ்வாறு அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்து ணிஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீts ஷீஸீ றிறீணீஸீt பிஹ்தீக்ஷீவீபீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்ற நூல் மூலம் வெளியிட்டார். இதுதான் மரபியல் ஆய்வுகளுக்கான அடிப்படையாக அமைந்தது. அதற்குப் பிறகு அகஸ்ட் வெய்ஸ்மான் என்பவர் மெண்டலின் அடிப்படைகளை பின்பற்றி மனித மரபுக்கூறு கடத்தப்படும் விதத்தை கண்டறிந்தார். அவர்தான் குரோம்சோம்களின் செயல்பாட்டை முதன்முதலில் விளக்கியர். மாபெரும் இந்த இரு கண்டுபிடிப்புகள்தான் பிற்காலத்தில் கணிணியின் துணைகொண்டு மரபியல் கணிப்புகளில் துல்லியத்தை எட்டியது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமெடுத்த ஆய்வுகள் 2001ம் ஆண்டு முதன்முதல்  உச்சத்தினை எட்டத் தொடங்கி அங்கிருந்து வளர்ந்துக்கொண்டிருக்கிறது.
மனிதனின் உடலில் உள்ள ஏதாவது ஒரு பொருளை உதாரணத்திற்கு முடி, எச்சில் உள்ளிட்ட எதுவானாலும் அவற்றைக் கொண்டு மரபுக்கூறு பகுப்பாய்வின் (ஞிழிகி கிஸீணீறீஹ்sவீs)  மூலம் அந்த மனிதனின் மூதாதையரின் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியும். மனித மரபியல் தொகுப்பாக்கம் (நிமீஸீவீtவீநீ சிஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ) என்கிற மாபெரும் உலகலாவியத் திட்டம் அதை சாத்தியமாக்கியுள்ளது. இத்துறை விஞ்ஞானிகளின் ஆய்வுபடி மனித தோற்றத்தின் மூலம் மானுடவியல் ஆய்வாளர்கள் ஏற்கெனவே நிறுவியிருந்த அடிப்படைகள் பலவற்றை உறுதி செய்தது மட்டுமின்றி, பல முடிவுகளை மாற்றியமைத்தது. அதன்படி மனிதன் தோன்றிய ஆண்டு மேலும் முன்னேறியது.
70-60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் லெமூர் என்கிற குரங்கைப் போன்ற அமைப்புள்ள ஒரு உயிரினம்தான் மனிதனுக்கு முன்னோடி என்றும், அது படிநிலையெய்தி, டார்சியர், புத்துலகின் குரங்கு, பழையஉலகின் குரங்கு, கிப்பன், உராங்வுட்டான், கொரில்லா, சிம்பன்சி என  குரங்கினங்களாக படிமாற்றம் அடைந்து 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமினிஸ் என்கிற ஆதி மனித இனம் உருவானதாக மரபியல் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். மேலும் ஆப்பிரிகாவில் கண்டெடுக்கப்பட்ட மனித இனத்தின் முதாதையர்கள் எனக் கருதப்படும் ஹோமோஎரக்டஸ் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்தோன்றியது. இதிலிருந்துதான் 2லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் தோன்றினான் என்பது மரபியல் ஆய்வின் முடிவு.
இவ்வாறு தோன்றிய ஆதிமனிதன் யார் என்பது ஒரு ஆர்வமூட்டக்கூடிய கேள்வி..?  இதைப்பற்றி விரிவாக ஆய்ந்து தொகுத்துள்ள விஞ்ஞானி டாக்டர்.பா.தயானந்தன் அவர்களின் கருத்துக்களை சுருக்கமாகப் பார்த்தால் புரிந்துக்கொள்ள முடியும்.
‘‘சுமார் 5000ம் தலைமுறைகளுக்கு முன்பு அதாவது 140ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு மனிதனின் ஒய் குரோம்சோம்களின் வாரிசுகள்தான் இன்று ஆண்களாக உலகம் முழுதும் உள்ளவர்கள். அதேபோல, உலகத்தில் உள்ள 700 கோடி பேருக்கும் ஒரே எக்ஸ் குரோம்சோம் கொண்ட  தாயின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு ஆப்பிரிக்கன் ஏவாள் என்று பெயரிடப்பட்டது. இப்படி தோன்றியவர்களில் ஒரு குழு 70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை வெளியேறியது. அப்படி வெளியேறிய குழுக்கள் 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலே அல்லது அரேபியாவிலோ கலந்தனர். இவர்களே உலகம் முழுதும் பரவினர். இந்தியாவையும் சேர்த்து என்பதை இங்கு அழுத்தமாக கூறவேண்டும். இக்கருத்துக்கள் இப்போது மரபியல் ஆய்வாளர்களால் உறுதிபட நிறுவப்பட்டடுள்ளது’’.
இப்படி பரவின ஆதி மக்களின் தோலின் நிறம் கருப்பு. உலகம் முழுதும் பரவும்போது, தட்பவெப்பத்திற்கு ஏற்ப அவர்களின் தோலின் நிறமும், உடல் அமைப்பும் மாற்றம் பெற்றன. அதுவுமின்றி உலகம் முழுதும் பரவிய மனிதர்கள் இடைவிடாமல் தமக்குள் கலந்து, கலந்து புதுவித இனங்களை உருவாக காரணமாக அமைந்தனர். இந்த வேறுபாடுகள் பண்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதும், உடல் அமைப்பில் மட்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
எனவே ரத்தக்கலப்பு முடிந்து தூய மனித இனம் ஒன்று இல்லை என்ற நிலை உருவானப் பிறகுதான், மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பண்பாட்டு மாறுபாடுகள் உருவாயின, அதற்கான வரலாறு மிகக்குறுகிய காலம் கொண்டது. அது வெறும் 3000 ஆண்டுகள்தான். இங்கு விவாதிக்கப்பட்டவை அத்தனையும் அந்த ஆய்வுகளின் முடிவுகளே. அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது மரபியல் அடிப்படையிலும், மானுடவியல் அடிப்படையிலும், ஆதி சிந்தனையாளர்களின் ஆய்வுகளின் அடிப்படையிலும் தொடக்கம் முதலே சாதி என்பது உருவாகவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந் நிலையில் சாதியின் மூலத்தை எப்படி நிர்மாணிப்பது…?

senguttuvan k

unread,
Aug 3, 2015, 11:17:02 AM8/3/15
to mint...@googlegroups.com
தத்தும், சாதி உள்ளிட்டவை தொடர்பான நல்ல பதிவு. விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் இவை. ஆய்வாளர் கோ.கேசவன் அவர்களின் சாதியும் வர்க்கமும் நூல் இத்தருணத்தில் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

3 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 8:21 பிற்பகல் அன்று, Suba.T. <ksuba...@gmail.com> எழுதியது:

--

Suba.T.

unread,
Aug 3, 2015, 3:03:06 PM8/3/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-03 16:51 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:

கௌதம சன்னாவின் இத்தொடரின் மூன்றாம் பகுதியை பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

Posted on July29, 2015
 
1 Vote

மானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்...
1
​..
அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது மரபியல் அடிப்படையிலும், மானுடவியல் அடிப்படையிலும், ஆதி சிந்தனையாளர்களின் ஆய்வுகளின் அடிப்படையிலும் தொடக்கம் முதலே சாதி என்பது உருவாகவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந் நிலையில் சாதியின் மூலத்தை எப்படி நிர்மாணிப்பது…?

​மிக நன்றாக தர்க்க ரீதியாக இக்கருத்தை முன்வைக்கின்றீர்கள். அருமை.

சுபா​

Suba.T.

unread,
Aug 3, 2015, 3:04:45 PM8/3/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-03 17:16 GMT+02:00 senguttuvan k <ko.seng...@gmail.com>:
தத்தும், சாதி உள்ளிட்டவை தொடர்பான நல்ல பதிவு. விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் இவை.

ஆய்வாளர் கோ.கேசவன் அவர்களின் சாதியும் வர்க்கமும் நூல் இத்தருணத்தில் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

​தகவலுக்கு நன்றி. 
அடுத்த முறை தமிழகம் வரும் போது வாங்கிக் கொள்கின்றேன்.​
 
இன்னூலைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. நேரம் கிடைக்கும் போது சிறு விமர்சனமாக எழுதி வழங்குங்கள். உதவும். 

சுபா

ko.senguttuvan

unread,
Aug 4, 2015, 1:01:53 AM8/4/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
எனக்குப் புரியாத விசயம். 
தமிழர்களுக்கு கல்வியைப் புகட்டியவர்கள், ஏன் எழுத்தை அறிமுகப்படுத்தியதே சமண, பௌத்தர்கள்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது. 
இதற்கு நடன.காசிநாதன் போன்ற ஆய்வாளர்கள் பலமுறை விளக்கங்கள் அளித்துவிட்டனர். 
நிற்க. 
அதுபோல் மேற்காணும் பேட்டியில் காணப்படும் ”கிறித்தவ மிசனெரிகள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ் நவீனமாகியிருக்காது” எனும் வரிகளும், கிறித்துவ மிசனரிகளைத் தூக்கிப் பிடிப்பதுபோல் இருக்கிறது. 
எல்லாமே வெளியில் இருந்து வந்தது அல்லது வெளியில் இருப்பவர்களால் ஏற்பட்டது என்றால் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், இந்த மண்ணுக்கு உரியவர்களுக்கு எந்த அறிவும் கிடையாதா? தமிழாய்ந்த அறிஞர் பெருமக்கள் இந்த விவாதத்தைத் தொடர வேண்டும்.
தொழும் இடங்களில் தடுப்புகளை கட்டி வைத்தது, தனித்தனி கல்லறைத் தோட்டங்களை வைத்தது, இதனால் சாதிக் கலவரங்களை ஏற்படுத்தியது போன்ற கிறித்துவ மிசினரிகளால் ஏற்படுத்தப்பட்டத் தாக்கங்கள் குறித்தும்கூட நாம் விரிவாக விவாதிக்க வேண்டும்.

Oru Arizonan

unread,
Aug 4, 2015, 1:39:50 AM8/4/15
to mintamil
2015-08-03 22:01 GMT-07:00 ko.senguttuvan <ko.seng...@gmail.com>:
//எல்லாமே வெளியில் இருந்து வந்தது அல்லது வெளியில் இருப்பவர்களால் ஏற்பட்டது என்றால் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், இந்த மண்ணுக்கு உரியவர்களுக்கு எந்த அறிவும் கிடையாதா? தமிழாய்ந்த அறிஞர் பெருமக்கள் இந்த விவாதத்தைத் தொடர வேண்டும்.//

சரியான கேள்வி.  தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
ஒரு அரிசோனந  

Suba.T.

unread,
Aug 13, 2015, 2:03:42 PM8/13/15
to மின்தமிழ், Subashini Tremmel
கௌதம சன்னா எழுதும் இத்தொடரின் 4ம் பகுதி..

துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்

1
இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து பெறவேண்டுமானால் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாய் இருக்கின்றன. ஏனெனில் இவை மட்டுமே மிகப்பழமையானவை. எனவே இலக்கியங்களிலிருந்துத் தொடங்க வேண்டும் என்பது நிலைத்து நிற்கிற ஒரு வரலாற்று விதி.. அந்த விதியை இப்போது பின் தொடர்வோம்…K8936

இந்தியாவில் வடமொழி இலக்கியங்கள் இந்து மதத்தின் அடிப்படைகளை தாங்கி நிற்கின்றன என்பது ஏற்கெனவே ஏற்றக்கொள்ளப்பட்ட ஒன்று, என்றாலும் அவற்றில் ஒரு படைப்புக் கதையினை மட்டும் நாம் பார்க்க முடியாது, பல கதைகள் அவற்றில் இருக்கின்றன, மட்டுமின்றி அவை உண்மையானவை என்றும் நம்பப்படுகின்றன. இந்நிலையில் அதை எங்கிருந்து தொடங்குவது என்பது என்கிற வரையறையை நாம் வகுத்துக்கொண்டால் விடை பெறுவது எளிது. எல்லாவற்றிகுமான விடைகளை நான்கு வேதங்களும் தருகின்றன என்று தொடர்ந்து இந்துக்கள் சொல்லி வருகிறார்கள் அல்லவா..! அந்த வேதங்களின் முதன்மையான ரிக் வேதம் மனிதன் படைப்பை எப்படி காட்சிப் படுத்துகிறது என்பதிலிருந்துத் தொடங்கினால் பொருத்தமாக இருக்கும். (பின்வரும் மேற்கோளை டாக்டர்.அம்பேத்கர் எழுதிய சூத்திரர்கள் யார் என்கிற நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுத்தாளப்பட்டது)

ரிக் வேதம். பத்தாவது மண்டலத்தின் தொண்ணூறாவது பாடல்:
1. புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரம் கால்களும் உள்ளவன், அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.
2. புருடனே இதுவரை இருந்து வந்துள்ள இனி இருக்கப் போகும் இந்த முழுப் பிரபஞ்சமும் ஆவான். அவன் அரீயமையைத் தரும் தலைவன், அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான்.
……
4. புருடனுடைய முக்கால் பாகம் மேலே ஏறிற்று, இந்த உலகத்தில் மிகுதியாக கால் பாகம் அடிக்கடி இயங்குகின்றது. அது பல வடிவங்களில் உயிருள்ளவறிற்கும் உயிரற்ற பொருள்களுக்கும் சென்றது.
5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான். விராஜனிடமிருந்து புருடன் பிறந்தான்,. அவன் பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருத்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான்.
6. தேவர்கள் புருடனைப் பலிப் பொருளாக்கி யக்ஞத்தை நடத்தியபோது, வசந்தம் அதற்கு நெய்யாயிற்று. கோடை அதற்கு விறகாயிற்று. சரத் காலம் அதன் அவிப் பொருளாயிற்று.
……
8. ஸர்வாத்மாவான புருடனைப் பலியிட்டு நடத்திய யக்ஞத்திலிருந்து தயிரும் நெய்யும் தோன்றின. அவை வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வனவிலங்குகளையும் உருவாக்கின.
9. எங்கும் வியாபித்த இந்த யக்ஞத்திலிருந்து ரிக் மற்றும் சாம வேதங்கள் தோன்றின. அந்த யக்ஞசத்திலிருந்து சந்தங்கள் பிறந்தன. பின்பு யசூர் வேதம் தோன்றியது.
…….
11. தேவர்கள் புருடனைக் கூறுபோட்டபோது எத்தனை விதமாக கூறுபோட்டார்கள்? எது அவனுடைய முகமானது? எவை கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆயின..?
12. பிராமணன் அவனது வாயானான், ராஜஸ்யன் (சத்திரியன்) அவனது கைகளானான், அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று, அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.

– இவற்றைப் பார்க்கும்போது மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ரிக் வேதம் ஏதும் கூறவில்லை. மாறாக நேரடியாகவே மனிதர்கள் நான்கு வர்ணங்களாகப் படைக்கப்பட்டனர் என்று தெளிவாக்குகிறது. ஆனால் இந்தப் படைப்புக் கதை ரிக் வேதத்தில் இடைச் செறுகலாக பிற்காலத்தில் சேர்க்கப்£ட்டது என்று டாக்டர். அம்பேத்கர் நிறுவியிருக்கிறார். ஆயினும் அக்கதைக்கூறும் கோட்பாடுகள் பிற்காலத்தில் உருவான மனுதர்மத்தில் நிலைநிறுத்தப்பட்டது. கி.பி400ல் எழுதப்பட்டதாகக் கருத்தப்படும் மனுதர்ம சாத்திரத்தில் படைப்புக் கதை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மனு தர்ம சாஸ்த்திரம். பிருகு சம்ஹிதையின் முதலத்தியாயம்:

ச. மஹானுபாவாளான மஹா ருஷிகளுக்கும் சந்தேகந் தெளிவிக்கத்தக்க ஞானதேஜசை யுடைத்தான, அந்த மநுப் பிரஜாபதியானவர், இவ்வண்ணமாக அந்த ருஷிகளாலே கேட்கப்பட்டு, அவர்களைப் பூஜித்து, கேழ்ப்பீராகவென்று சொல்லத் தொடங்கினார்.

ரு. வருணாசிரம தருமத்தைக்கேட்ட, ருஷிகளுக்கு பிரளயக்கால முதல் வருணாசிரம முண்டானதால் முதல் பிரளயக் காலத்தைச் சொல்லத் தொடங்கினார். இந்த உலகமானது பிரளயக் காலத்தில் மூலப் பிரகிரதியில் ஐக்கியமாய் இருளில் மறைந்த பதார்த்தம்போல் கண்ணுக்குத் தோற்றாததாயும், அடையாளமில்லாததாயும், சப்தத்தா லறியப்படாததாயும், தர்க்க சாஸ்திர யுக்தியை கொண்டு நிச்சயிக்கத் தகாததாயும் யாவும் உறக்கினதுபோலும் யிருந்தது.

சு, இவ்வாறு பிரளய கால முடிந்தபின்பு சீவாத்மாக்களைப்போல் கர்மத்தினாலே தேகமெடுக்காமல், தன்னிச்சையினாலே தேகமெடுக்கத்தக்க சுயம்புவான பகவானானவர், கண்முதலான புறவிந்திரியங்களாலேயே கிரகிக்கப்படாதவராயும், ஒருவராலுந் தடுக்கப்படாத சிருஷ்டி முதலிய முத்தொழிலையுடையவராயும், ஆகாய முதலிய பஞ்சமாஹா பூதங்களைப் பிரகாசப் படுத்துகிறவராயும், பிரரதிப் பிரேரகராயும் பிரகாசித்தார்.

அ. அந்தப் பரமாத்வானவர் சகல வுயிர்களுக்கும் இருப்பிடமான தன் சரீரத்தினின்றும் நானவிதமான பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்த, பிரமாண்ட சிருஷ்டிக்கு முன்னம் ஜலத்தையுண்டு பண்ணி, அதில் தன் சக்திரூபமான ஒரு விதையை விதைத்தார்.

கூ. அந்த வித்தானது சர்வேஸ்வருடைய இச்சையினாலே தங்க நிறமான ஒரு அண்டமாயிற்று, அவ்வண்டத்தில் முன் ஜனனத்தில் பிரம்மப் பட்டத்திற்குதக்க தவசு பண்ணின ஒரு ஜீவனை பிரம்மாவாக சிருஷ்டித்து அவருக்குள் அந்தரீயாமியாய் பிரவேசித்தார். அந்தப் பிரமனுக்கு சர்வலோக பிதாமகனென்று பெயர்,

கஉ. முன்சொன்ன அந்த வண்டத்தில், அந்தப் பிரம்மாவனவர், மேற்சொல்லும் கணக்கையுடைய ஒருபிரம்மவருஷம் வசித்து, தன் மனதினாலேயே இந்த வண்டம் இரண்டாகப்போகும்படி நினைத்து, அதை இரண்டு கண்டமாக்கினார்.

கங. அவ்விரண்டு கண்டத்தினுள் மேற்கண்டத்தினாலே சுவர்கத்தையும், கீழ்க்கண்டத்தினாலே பூமியையும், நடுவில் ஆகாசத்தையும், எட்டுத் திக்குகளையும், சமுத்திரத்தையும் சிருஷ்டித்தார்.
(பிறகு உணர்வுகள், சுக துக்கங்கள், தர்மங்கள், விலங்குகள் மற்றும் குணாதிசியங்களைப் படைக்கிறார் பிரம்மன்)

ஙக. உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும், பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டுப் பண்ணினார்.

ஙஉ. அந்தப் பிரம்மாவனவர் தன்னுடைய தேகத்தை இரண்டு கண்டமாக்கி, ஒன்று ஸ்திரியாகவும், ஒன்று புருஷனாகவுமாகி அந்த ஸ்திரியினிடத்தில் அந்த புருஷனாகிய தானே புணர்ந்து விராட்புருஷனை யுண்டு பண்ணினார். (மநுதரும சாத்திரம். இராமாநுஜாசாரியார் மொழிப் பெயர்ப்பு, 1889ஆம் ஆண்டு பதிப்பு)

இவர் மூலமாக உலகின் உயிர்கள் மற்றும் பொருட்கள் படைக்கப்பட்டன என போகிறது மனுவின் படைப்புக் கதை.

இந்தப் படைப்புக் கதையை ஒட்டியும் வெட்டியும் ஏராளமான கதைகள் வடமொழி இலக்கியங்களில் நிரவிக் கிடக்கின்றன. மேலும் அவை எல்லாவற்றையும் விவரிப்பது இங்கே சாத்தியமில்லை. (என்பதால் டாக்டர்.அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் என்று நூலில் உள்ள இரண்டாம் பகுதியை படிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.)

இங்கே இயல்பாக எழும் கேள்வி உண்டு. இந்து மதத்தின் மூலக் கடவுள்கள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா அல்லவா? வேதங்களிலும் சாத்திரங்களிலும் இவர்கள் உலகைப் படைத்ததாக குறிப்பிடப் படவில்லையே என்று கேட்டால் விடை கிடைப்பது கடினம்தான். ஏனெனில் வேதங்களுக்கு பிறகு எழுதப்பட்ட வேதாந்தங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் பிரம்மாதான் உலகையும் உயிர்களையும் படைத்தார் என்று எழுதப்பட்டுள்ளது. இருந்தும் இப்போது பிரம்மாவை யாரும் மதிப்பதில்லை. வேதங்களில் குறிக்கப்படும் பரமாத்மா தானே தன்னைப் புணர்ந்து படைப்புத் தொழிலை செய்தார் என்கிற குறிப்பை பிற்காலத்தில் பிற கடவுள்கள் தமக்கானதாக மாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் விந்தையின் விந்தை. அவை புராணங்களாக பிற்காலத்தில் எழுதப்பட்டன.

மேலும், மேற்கண்ட இரண்டு குறிப்புகளிலும் உலகம் படைக்கப்பட்ட காலம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அது மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது (சாந்தி பர்வம் 348,51-52) அதன்படி திரேதா யுகத்தில் உலகம் படைக்கப்பட்டது. அக்காலத்தில்தான் மனிதர்களும் படைக்கப்பட்டார்கள் என்பது மகா£பாரதத்தின் வாதம். அதன்படி திரேதா யுகத்தின் மொத்த ஆயுள் 12 லட்சம் ஆண்டுகள், அதற்கு அடுத்து துவாபர யுகம், அது 8 லட்சம் ஆண்டுகள் இருந்தது. அதைத் தொடர்ந்துதான் கலியுகம், அதன் மொத்த ஆண்டுகள் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். ஆக மொத்தம் உலகம் மனிதர்களோடு கடந்த 20 லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. மீதமுள்ள கலிகாலம் இனிதான் முடிய வேண்டும்.

இந்த கணக்கை குறிப்பிட காரணம் இருக்கிறது. உலகத்தைப் படைத்தவர் யார் என்பதில் இந்துக்களுக்கு இன்னும் உடன்பாடு வரவில்லை. திரேதா யுகத்தில்தான் கிருஷ்ணர் உலகைப் படைத்தார் என்பது பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார்.. அவர் எப்படி படைத்தார் என்பதையும் அவரே சொல்கிறார்…

மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன (பகவத் கீதை 4:3)
எதிரிகளை தவிக்கச் செய்பவனே, தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையின் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேறுபடுத்தப் படுகின்றனர் (பகவத் கீதை 18:42)

கிருஷ்ணர் சொல்வது போல அவர் உலகைப் படைக்கும்போது மனிதர்களில் நான்கு பிரிவுகளோடு படைத்தார். அதாவது வர்ணங்கள் என்படும் பிரிவுகளோடு படைத்தார். காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரம்தான் கிருஷ்ணன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. இந்த காக்கும் கடவுள் எப்படி படைக்கும் கடவுள் ஆனார் என்பது கடவுள்களுக்குள் இருந்த வரலாற்றை திரிக்கும் செயல்பாடுகள்தான் காரணம்.

கெடுவாய்ப்பாக, கிருஷ்ணரின் இந்தப் படைப்புக் கதையை மற்ற கடவுள்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சிவபுராணத்தில் வேறு கதை நமக்குக் கிடைக்கிறது. சிவன் அழிக்கும் கடவுள் என்று அறியப்பட்டாலும் அவர் படைப்புக் கடவுளாக எப்படி இருக்கிறார் என்பதை சிவபுராணத்தின் மூலம் அறியலாம். வழக்கமாக அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவன் எல்லாவற்றிற்கும் மூலக்கடவுளாக சைவ இலக்கியங்களால் முன்னிருத்தப்படுகிறார். அதன்படி

shiva_vishnu_bramhaசிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அவர் முன்னம் பின்னும் அற்றவர். பல கோடி கல்ப ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் தான் மட்டுமே சுயம்புவாக அதாவது தான்தோன்றியாக இருந்தார். தன் தனிமையை உணர்ந்த அவர் தேவைக்கருதி தன்னுடைய ஒரு பாதியை பிரித்து சக்தியை படைத்தார். சக்தி அவர் மனைவியாக ஆனார். பின்பு படைப்புகளை உருவாக்கும் பொருட்டு இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசங்களைத் படைத்தனர். அதில் ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பணிக¬ள்ச செய்ய முறையே படைத்தலுக்காகப் பிரம்மாவையும், காத்தலுக்காகத் திருமாலையும், அழித்தலுக்காக ருத்திரனையும் படைத்தார். எஞ்சிய மறைத்தல், அருளல் ஆகிய பணிகளை தன்னிடமே வைத்துக்கொண்டார் சிவன். பின்பு தான் படைத்த மும்மூர்த்திகளால் பதினான்கு உலகங்களைக் கொண்ட அகிலாண்டம் உருவாக்கப்பட்டது.

இந்த மும்மூர்த்திகளில் முதல்வரான பிரம்மா படைப்புத் தொழிலை மேற்கொண்டு மனிதர்களையும், மிருக வர்க்கங்களையும் மற்ற உயிர் உயிரல்லாதப் பொருட்களையும் படைத்தார்.
இந்த படைப்புக் கதை மிகுந்த கற்பனை மிக்கது என்று எடுத்துக்கொண்டாலும், இதில் பிரம்மன் மனிதர்களை எப்படிப் படைத்தார் என்று விளக்கப்படவில்லை. ஆனால் சிவனை வேதநாயகன் என்று சைவர்கள் சொல்வதால வேதங்களின்படி அவரும் நான்கு வர்ணத்தைப் படைத்தவர் ஆகிறார். எனவேதான் பிற்காலத்தில் உருவான சைவ இலக்கியங்கள் மனிதனை வர்ணத்தோடும் சாதியோடும்தான் சிவனால் படைக்கப்பட்டன என்ற நிறுவின.

இப்படி வேதங்களும், ஸ்மிருதிகளும், மூன்றுக் கடவுள்களும் மனிதன் படைக்கப்பட்ட விதத்தில் முரண்பட்டும் போட்டிப் போட்டுக்கொண்டும் நிற்கின்றன என்பதில் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை. அதே நேரத்தில் இந்த படைப்புக் கதைகள் முடிவற்ற தொடர்கதைப் போல இந்து மதத்தின் பிரிவுகளுக்குள் பெருகத் தொடங்கின. தமது கடவுள்தான் உயர்ந்தக் கடவுள் என்று நிறுவ எத்தனித்தவர்கள் உயர்வு தாழ்வு என்னும் நோயால் தாம் பீடிக்கப்பட்டதைப் போலவே தமது கடவுள்களையும் பீடிக்கச் செய்தார்கள். சிறு தெய்வங்களும் துணைத் தெய்வங்கள்கூட படைப்புத் தொழிலில் தம்மை இணைத்துக் கொள்ள போட்டியிட்டன. பல கதைகள் இருந்தாலும் இதற்கு ஓர் மட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்

தேவி மகாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஏழாவது காண்டத்தில் ஒரு படைப்புக் கதை உள்ளது. அதன்படி:

ஒரு யுகத்தில் மகாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. எனவே பிரளயத்திற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த உயிரினங்களும், தாவரங்களும் காணப்படவில்லை. எங்கும் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் மகாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.
அவர் ‘நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்று தன்னுள் யோசித்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூலசக்தி ‘மகாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கைகளில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, சுவேதா, சிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியர் காட்சி தந்தனர். அப்போது மகாதேவி குழந்தையான விஷ்ணுவிடம்.

‘மகாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்சமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் படைப்பான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, சம்காரம் எனும் அழிக்கும் தொழிலைச் செய்வான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்கும் சக்தியாக நானும் என் அம்சங்களான தேவிகளும் செயலாற்றுவோம்’ என்று அருளினாள் தேவி.

பின்பு, விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மன் தோன்றினார். தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மகாதேவி மற்றும் மகாவிஷ்ணுவின் அனுக்ரகத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்சர், வசிட்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு ரிசிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என படைப்புத் தொடர்ந்தது.

இப்படி படைப்புக் கதைகள் தொடர்ந்தன. பிற்காலத்தில் உருவான ஏராளமான புராணக் கதைகளில் விதவிதமான படைப்புக் கதைகள் இருக்கின்றன என்பது ஒரு புறமிருந்தால். இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய பல அரசுகளும் அதன் அரசர்களும் இக்கதைகளை தமக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது இன்னும் சுவாரசியமானது.

2
பௌத்த, சமண மற்றும் ஆசீவக அரசர்களைத் தவிர மற்ற அரசர்கள் எல்லோரும் தம்மை கடவுளின் வாரிசுகளாகவே அறிவித்துக்கொண்டனர் என்றால் மிகையில்லை. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல சாசனங்களில் இது பற்றின குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் முன்னர் ஆண்டு வந்த சேர, சோழ ,பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள்கூட இதற்கு விதிவிலக்கில்லை.fbd6b249fa06af774278c6b1b2687005

தஞ்சைக்கு அருகில் உள்ள அம்மாப்பேட்டையை ஒட்டிய புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு கிணற்றில் கிடைத்த செப்பேடுகள் சோழர்களின் பரம்பரையை விளக்குகின்ற ஒரு பகுதிகயை சான்றாகப் பார்ப்போம்,. அதில்:
….
1.திருமகளின் பருத்த இரு திருமுலைத் தடங்களின் குங்கமக் குழம்பினால் அடையாளமிடப்பட்டனவும், (பாற்கடல் னடைந்த ஞான்று) சுழன்று கொன்டிருக்கிற மந்தரமலையினடைய உயர்ந்த குடுமிகளில் உராய்வதனால் மிக்கு ஒளிபெற்ற பொன்னலான தோள்ளைகளை உடையனவும், மூவுலகத்¬யும் காப்பனவும், சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தாங்கித் திகழுகின்றவுமான இந்திர நீலக்கல் போன்ற திருமேனியை உடைய திருமாலின் புயங்கள் உங்களுக்கு வேண்டிய அளவு செல்வத்தைக் கொழிக்கச் செய்வதாக.

3. உலகங்கள் அனைத்திற்கும் ஒரு கண்ணாக விளங்கும் கதிரவனிடமிருந்து அரசர்களுக்கெல்லாம் முதல்வனான “மனு” தோன்றினான். அரசர்களின் மணிமுடி வரிகையினால் தழுவப் பெற்ற பாதபீடத்தை உடையவனான இட்சுவாகு என்னும் அரசன் அவனுடைய (மனுவின்) புதல்வனாகத் தோன்றினான். அவனது மரபில் லோகாலோக (சக்கரவாள) மலைவரை நெறி வழுவாத இந்நிலவுகைக் காப்பாற்றியவனும், நான்முகனை ஒத்தவனும், நற்குணங்கட்கு இருப்பிடமானவனுமாகிய மாந்தாதா என்னும் வேந்தன் தோன்றினான்.

… இப்படி தொடர்ச்கியா அரச மரபு விளக்கப்படுகிறது சோழ மரபு. இது போலத்தான் மன்னர்களின் பரம்பரை விளக்கப்படுன்றது. பாண்டியர்கள் பொருத்தவரையில் அவர்கள் சிவனின் வழித் தோன்றல்கள். சேரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் விஷ்ணுவின் பின்னடியார்கள். பல்லவர்கள் சைவர்கள் சிலர் வைணவர்கள். இப்படி இவர்கள் தம்மை கடவுகள்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள காரணமிருந்தது. அவர்கள் காலத்தில் நிலவிய சாதி அடுக்குமுறைகளை கடவுள் படைத்தார் என்று நம்ப வைக்கப்பட்டிருந்ததால் அதை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சமூக அமைப்பை அப்படியே பாதுகாத்தார்கள். அதனால்தான் அவர்கள் தமக்கான படைப்புக் கதைகளை உருவாக்கிக்கொண்டு அதை செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்தார்கள். இவைதான் அக்காலச் சூழல்களைப் பற்றி நமக்கு விளக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.

இது போன்றக் கதைகள் முடிவு பெறாமல் சாதிகளுக்கான கதைகளாக அல்லது தொன்மங்களாக இன்றைக்கும் புனையப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகம். இக்கதைகளை நம்புவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் பதில் கிடைப்பது கடினம். ஆனால் இக்கதைகள் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கேட்டால் இந்து மதத்தை நம்பும் 99.99 சதவிகிதம் பேருக்கு இவை தெரியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இனி, இப்போது நாம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வருவோம். உலகின் தொண்மையாக நாகரீகம் கொண்டுள்ள தமிழர்கள் பண்டையக் காலத்தில் தமக்கான படைப்புத் தொண்மங்களை கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி எழும்.. அதற்கான விடை..

3
தமிழர்களுக்கு உலகப் படைப்புக் பற்றின தொண்மக் கதை ஏதும் இல்லை, அல்லது அதற்கான சான்றுகளும் இல்லை. இருக்கின்ற தொன்மங்கள் எல்லாம் இந்து புராணத் தொன்மங்களே. அதைத் தவிர சிறு தெய்வங்களின் தொன்மங்கள்தான் இருக்கின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கியமான தொல்காப்பியத்தில் பார்த்தால் படைப்புப் பற்றின கோட்பாடு மட்டும் உள்ளது,அது தத்துவார்த்தமான கோட்பாடு.

தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் உள்ள 1589ஆம் சூத்திரத்தில்
நிலம், தீ. நீர், வளி, விசம்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
இருதிணை ஐம்பால் இயல்நெறி வா£ அமைத்,
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்…

என்று சொல்வது அடிப்படையான பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உலகம் உண்டாகியுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் மனித பிரிவுகளைப் பற்றிப் பேசும்போது இதே மரபியல் பகுதியில் சமூகத்தில் அந்தணர், அரசர், வணிகர் மற்றும் வேளாளர் என்கிற பிரிவினை சுட்டிக் காட்டுகிறது. தொல்காப்பியம் சுட்டுவதற்கும் வடநூல்கள் சுட்டிக் காட்டும் வர்ண அமைப்பிற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. தொல்காப்பியம் சுட்டும் வர்ண அமைப்பிற்குமான ஒற்றுமெய்களையும் சாதி வேறுபாடுகள் உருவாக தொல்காப்பியம் எப்படி வழிவகுத்தது என்பதை பிறகு பார்ப்போம்,

தொகுப்பாக, இந்த தரவுகள் எல்லாம் ஒரு செய்தியை தொடர்ந்து சுட்டிக் காட்டுவதை வாசகர்கள் கவனிக்க முடியும். இந்திய மற்றும் தமிழ் தொண்மக் கதைகள் கூறும் படைப்புக் கோட்பாடுகள்படி. உலகத்தைப் படைத்த கடவுள் ஆதியில் சாதியை படைக்கவில்லை. அவர் வர்ணங்களை அல்லது நான்கு பிரிவுகளை மட்டுமே படைத்தார் என்பதை உறுதி செய்கின்றன. சொல்லப் போனால் சாதி என்பது இந்தியத் தொண்மங்களுக்கு எதிரானது என்கிற கருத்துக்கு நாம் வந்துவிடலாம். ஆனால் தாம் உருவாக்காத சாதியை பின்னாளில் அதே இந்தியத் தொண்மங்கள்தான் ஆதரித்து நின்றன என்பது வரலாற்று உண்மை.

அதனால்தான் காந்தி மற்றும் ஆரிய சமாஜிகள் சாதி முறைக்கு எதிராக நின்று அதற்கு பதிலாக வர்ண அமைப்புக்கு இந்திய சமூகம் திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இந்திய தொண்மத்தின் ஆதாரம் வர்ணங்கள் என்றால். சாதியின் ஆதாரம் வர்ணங்கள்தான் என்பதை டாக்டர்.அம்பேத்கர் பின்னாளில் நிறுவினார்.

எனவே இவ்வளவு முரண்பாடுகள் உடைய இந்திய படைப்புத் தொண்மங்களை நம்பி தமது சாதியை முன்னிருத்தும் யாரும் எப்படிப் பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேள்விக் கேட்கலாம். அறிவிற்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டு ஒரு சமூகம் உலகில் இருக்கிறது என்றால் அது சாதியை நம்பும் சமூகம்தான்.

இனி உண்மையான அறிவியல் வரலாற்றிற்குள் நுழைவோம்..

--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்

rajam

unread,
Aug 13, 2015, 10:53:13 PM8/13/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
ஒரு மூலையில் கிடக்கும் எனக்கு அண்மையில்தான் கௌதம சன்னா அவர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரியவந்தது, மிகவும் மகிழ்ந்தேன். பிறகு இங்கே மின்தமிழில் வந்து அவருடைய பதிவுகளைப் படிக்கத்தொடங்கினேன். அருமை, அருமை. 

மிக்க நன்றி, கௌதம சன்னா அவர்களே!

வணக்கத்துடன்,
ராஜம்
...

தேமொழி

unread,
Aug 14, 2015, 1:36:47 AM8/14/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
இத்தகைய கற்பனை வளம் கொண்ட முன்னோர்களை நாம் பெற்றது ... நாம் பெற்ற பெரும் பேறு என்றே தோன்றுகிறது. 

பகிர்வுக்கு நன்றி. 

..... தேமொழி

On Thursday, August 13, 2015 at 11:03:42 AM UTC-7, Suba.T. wrote:
...

Malarvizhi Mangay

unread,
Aug 14, 2015, 2:27:27 AM8/14/15
to mint...@googlegroups.com

கட்டுரை ஆழமான ஆய்வு.தொன்மம் என்று குறிப்பிடுவதே சரி.  Myth என்ற சொல்லின் சரியான நிகரனாக தொன்மம்
என்பதே கையாளப் படுகிறது.பேராசிரியர் கதிர்மகாதேவன்
தொன்மம் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
நம் கணேசனார் இதுபற்றிக் கருத்துரைப்பார் என்றே
நம்புகிறேன்.

--

rajam

unread,
Aug 14, 2015, 12:43:31 PM8/14/15
to mintamil, ra...@earthlink.net
On Aug 13, 2015, at 10:36 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

இத்தகைய கற்பனை வளம் கொண்ட முன்னோர்களை நாம் பெற்றது ... நாம் பெற்ற பெரும் பேறு என்றே தோன்றுகிறது. 

பகிர்வுக்கு நன்றி. 

..... தேமொழி

கற்பனை வளமா!! நம் பேறா?! மேற்கு நாட்டாரின் பேறு என்று சொல்வேன். இவையின்றேல் … மேற்கு நாடுகளில் ‘இந்தாலஜி’ என்ற துறை உருவாகித்தழைத்திருக்குமா என்பது ஐயமே! பல்கலைக்கழகங்களில் எத்தனை எத்தனை மாந்தருக்கு வேலை! கல்வியுலகிலிருந்து வேத வேதாந்த புராண இதிகாசங்களை அகற்றிவிட்டால் ‘இந்தாலஜி’த் துறையே ஆட்டங்கண்டுவிடுமில்லெ! (நான் பென்சில்வேனியாவில் இருந்தபோது சில சக-ஆசிரியர்களின் அறையில் இந்த ‘புருடன்’ படத்தைப் பார்த்தபோது ‘இதென்ன’ என்று கேட்டிருக்கிறேன். கொஞ்சம் அருவருப்பும் உண்டாச்சு என்பதை ஒத்துக்கொள்கிறேன்.)

ஆனால், அதே துறையினர் தமிழகத்துப்பக்கம் எட்டிப்பார்த்தாலே … ‘முச்சங்கம்’ ஒரு ‘மித்து;’ ‘அகத்தியர்’ ஒரு ‘மித்து’ என்று மொத்துவார்கள். 'எல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல்’-ஆகி, ‘சங்கப்பலகை’ போன்ற விரிமனம் படைத்த நம் தமிழரும் அவருக்குச் செவியும் தலையும் சாய்த்து ‘ஆமாமா’ போடுவோம்.

‘மித்து’களைப் புறந்தள்ளிவிட்டாலும் தமிழில் படிக்கக்கொள்ளச் சரக்கு இருக்கு. அந்தப் பெருமையே தமிழுக்குப் போதும்.

கௌதம சன்னாவின் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

நன்றியுடன்,
ராஜம்

On Thursday, August 13, 2015 at 11:03:42 AM UTC-7, Suba.T. wrote:
கௌதம சன்னா எழுதும் இத்தொடரின் 4ம் பகுதி..

துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்

1
இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து பெறவேண்டுமானால் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாய் இருக்கின்றன. ஏனெனில் இவை மட்டுமே மிகப்பழமையானவை. எனவே இலக்கியங்களிலிருந்துத் தொடங்க வேண்டும் என்பது நிலைத்து நிற்கிற ஒரு வரலாற்று விதி.. அந்த விதியை இப்போது பின் தொடர்வோம்…K8936

<...deleted for space...> 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zvAiXOunpOM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Aug 14, 2015, 5:16:00 PM8/14/15
to மின்தமிழ், Subashini Tremmel
இத்தொடர் படிப்படியாக கட்டுரையின் முக்கிய நோக்கத்தை நோக்கி பயணிப்பதை உணர முடிகின்றது. சாதி என்ற சமூக அவலம், அது கற்ற ஆய்வாளர்கள் பலர் மனதிலும் கூட நிலைத்து விட்ட  நிலையை நோக்கும் போது இத்தகைய சீரிய பணி  தெளிவான  பார்வையைத் தர உதவும் என்றே கருதுகிறேன்.
​​

2015-08-13 20:03 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
கௌதம சன்னா எழுதும் இத்தொடரின் 4ம் பகுதி..

​-​
துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்

​.....​

இப்படி வேதங்களும், ஸ்மிருதிகளும், மூன்றுக் கடவுள்களும் மனிதன் படைக்கப்பட்ட விதத்தில் முரண்பட்டும் போட்டிப் போட்டுக்கொண்டும் நிற்கின்றன என்பதில் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை.

​நாம் விரும்புகின்றோமோ இல்லையே இந்த நிலை இருப்பதை மறுக்க முடியாது. 
​உதாரணமாக சிவனின் அடிமுடி தேடிய கதை போன்றவை மூவரில் யார் பெரியவர் என்னும் கருத்தை நிலைனாட்ட எழுந்தமையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒரே கதை இன்றுகும் மேற்பட்ட வடிவத்தில் மாற்றப்பட்டு புராணக் கதையில் இடம்பெறுவதையும் காண்கிறோம்.

fbd6b249fa06af774278c6b1b2687005

தஞ்சைக்கு அருகில் உள்ள அம்மாப்பேட்டையை ஒட்டிய புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு கிணற்றில் கிடைத்த செப்பேடுகள் சோழர்களின் பரம்பரையை விளக்குகின்ற ஒரு பகுதிகயை சான்றாகப் பார்ப்போம்,. அதில்:
….
1.திருமகளின் பருத்த இரு திருமுலைத் தடங்களின் குங்கமக் குழம்பினால் அடையாளமிடப்பட்டனவும், (பாற்கடல் னடைந்த ஞான்று) சுழன்று கொன்டிருக்கிற மந்தரமலையினடைய உயர்ந்த குடுமிகளில் உராய்வதனால் மிக்கு ஒளிபெற்ற பொன்னலான தோள்ளைகளை உடையனவும், மூவுலகத்¬யும் காப்பனவும், சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தாங்கித் திகழுகின்றவுமான இந்திர நீலக்கல் போன்ற திருமேனியை உடைய திருமாலின் புயங்கள் உங்களுக்கு வேண்டிய அளவு செல்வத்தைக் கொழிக்கச் செய்வதாக.

3. உலகங்கள் அனைத்திற்கும் ஒரு கண்ணாக விளங்கும் கதிரவனிடமிருந்து அரசர்களுக்கெல்லாம் முதல்வனான “மனு” தோன்றினான். அரசர்களின் மணிமுடி வரிகையினால் தழுவப் பெற்ற பாதபீடத்தை உடையவனான இட்சுவாகு என்னும் அரசன் அவனுடைய (மனுவின்) புதல்வனாகத் தோன்றினான். அவனது மரபில் லோகாலோக (சக்கரவாள) மலைவரை நெறி வழுவாத இந்நிலவுகைக் காப்பாற்றியவனும், நான்முகனை ஒத்தவனும், நற்குணங்கட்கு இருப்பிடமானவனுமாகிய மாந்தாதா என்னும் வேந்தன் தோன்றினான்.

… இப்படி தொடர்ச்கியா அரச மரபு விளக்கப்படுகிறது சோழ மரபு. இது போலத்தான் மன்னர்களின் பரம்பரை விளக்கப்படுன்றது. பாண்டியர்கள் பொருத்தவரையில் அவர்கள் சிவனின் வழித் தோன்றல்கள். சேரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் விஷ்ணுவின் பின்னடியார்கள். பல்லவர்கள் சைவர்கள் சிலர் வைணவர்கள். இப்படி இவர்கள் தம்மை கடவுகள்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள காரணமிருந்தது. அவர்கள் காலத்தில் நிலவிய சாதி அடுக்குமுறைகளை கடவுள் படைத்தார் என்று நம்ப வைக்கப்பட்டிருந்ததால் அதை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சமூக அமைப்பை அப்படியே பாதுகாத்தார்கள்.

​எகிப்திய பண்டைய சிந்தனை​யும் இதனை ஒத்ததே.மன்னனே இறைவனின் பிரதினிதி என்ற கருத்டு மிக முக்கியபப்டுத்தப்பட்டது. 
 
அதனால்தான் அவர்கள் தமக்கான படைப்புக் கதைகளை உருவாக்கிக்கொண்டு அதை செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்தார்கள். இவைதான் அக்காலச் சூழல்களைப் பற்றி நமக்கு விளக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.

இது போன்றக் கதைகள் முடிவு பெறாமல் சாதிகளுக்கான கதைகளாக அல்லது தொன்மங்களாக இன்றைக்கும் புனையப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகம். இக்கதைகளை நம்புவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் பதில் கிடைப்பது கடினம்.

​உண்மை என்னவென்றால் இவ்விதமான கதைகளை நம்புகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கல் எனப்தோடு இவையே உண்மை என போராடுபவர்களாகவும் இருக்கின்றனர். 
 
ஆனால் இக்கதைகள் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கேட்டால் இந்து மதத்தை நம்பும் 99.99 சதவிகிதம் பேருக்கு இவை தெரியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

​ஆம். 

தமிழர்களுக்கு உலகப் படைப்புக் பற்றின தொண்மக் கதை ஏதும் இல்லை, அல்லது அதற்கான சான்றுகளும் இல்லை. இருக்கின்ற தொன்மங்கள் எல்லாம் இந்து புராணத் தொன்மங்களே. அதைத் தவிர சிறு தெய்வங்களின் தொன்மங்கள்தான் இருக்கின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கியமான தொல்காப்பியத்தில் பார்த்தால் படைப்புப் பற்றின கோட்பாடு மட்டும் உள்ளது,அது தத்துவார்த்தமான கோட்பாடு.

​இதனை முக்கியக் கருத்தாகக் காண்கின்றேன். தமிழர் சமூஅக்வியல் ஆய்வு என வரும் போது இந்து மதம் சார்ந்த கருத்துக்கள்  தமிழர் பண்பாட்டின் மேல் வலிந்து சார்த்தப்பட்டிருப்பதாகவே நான் உணர்கின்றேன். ஆக அடிப்படையில் தமிழர் வாழ்வியல் கூறுகளை அலச இந்து மதம் சார்ந்த கருத்துக்களைப் பிரித்து வைத்து தமிழர் சமூக அடிப்படையில் அலசுவதே இவ்வகை ஆய்வுகளில் உதவும். உங்கள் ஆய்வு முறை எனக்கும் உடன்பாடான ஒன்றாகவே உள்ளது. 

தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் உள்ள 1589ஆம் சூத்திரத்தில்
நிலம், தீ. நீர், வளி, விசம்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
இருதிணை ஐம்பால் இயல்நெறி வா£ அமைத்,
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்…

என்று சொல்வது அடிப்படையான பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உலகம் உண்டாகியுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் மனித பிரிவுகளைப் பற்றிப் பேசும்போது இதே மரபியல் பகுதியில் சமூகத்தில் அந்தணர், அரசர், வணிகர் மற்றும் வேளாளர் என்கிற பிரிவினை சுட்டிக் காட்டுகிறது. தொல்காப்பியம் சுட்டுவதற்கும் வடநூல்கள் சுட்டிக் காட்டும் வர்ண அமைப்பிற்கும் வேறுபாடு அதிகம் இல்லை.

தொல்காப்பியம் சுட்டும் வர்ண அமைப்பிற்குமான ஒற்றுமெய்களையும் சாதி வேறுபாடுகள் உருவாக தொல்காப்பியம் எப்படி வழிவகுத்தது என்பதை பிறகு பார்ப்போம்,

இதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

எனவே இவ்வளவு முரண்பாடுகள் உடைய இந்திய படைப்புத் தொண்மங்களை நம்பி தமது சாதியை முன்னிருத்தும் யாரும் எப்படிப் பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேள்விக் கேட்கலாம். அறிவிற்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டு ஒரு சமூகம் உலகில் இருக்கிறது என்றால் அது சாதியை நம்பும் சமூகம்தான்.

இனி உண்மையான அறிவியல் வரலாற்றிற்குள் நுழைவோம்..

​நல்ல தொடர்.
தொடர்க!
சுபா​
 
G Sannah

unread,
Aug 15, 2015, 2:26:27 AM8/15/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel

உங்களது எதிர் வினைகள் தொடரின் போக்கிற்கு பெரிதும் உதவி புரியும். நன்றி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Jan 31, 2016, 3:46:14 AM1/31/16
to மின்தமிழ், G Sannah, Subashini Tremmel
கட்டுரை ஆசிரியர் சன்னா அனுப்பிய கட்டுரையின் 5ம் பதி இன்று வெளியிடப்படுகின்றது.
-சுபா

சேரி.. சாதி.. தீண்டாமை..- மூலவரலாறு - 5

மனித இனம் சமூகமாதலின் காலவரிசை
கௌதம சன்னா

இருபத்தியோராம் நூற்றாண்டு பல்வேறு ஆய்வுத் துறையில் பல புதிய திறப்புகளை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமானது வரலாற்றுத் துறை. வரலாறு என்பது பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு பரந்துப் பட்ட பெருந்துறை, அதை பல காலம் கலைப்புலத்திலே வைத்திருந்தார்கள். ஆனால், தற்காலத்தில் மேற்கத்திய கல்வி நிறுவனங்களில் வரலாற்றுத்துறை என்பது பரந்துப்பட்ட சமூக அறிவியல் துறையாக ஏற்கப்பட்டுள்ளது. வரலாற்றாய்வாளர்கள் சமூக அறிவியல் அறிஞர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே வரலாற்று ஆய்வு என்பது இன்றைக்கு ஓர் அறிவியல் துறை. இத்துறையின் முன்னோடிகளின் ஆய்வு முறையினைப் பின்பற்றி அல்லது புதுவிதமான ஆய்வு முறையை முன்னெடுத்துத்தான் கடந்த காலத்தின் புதிர்களுக்கு விடைகளைத் தேடவேண்டியுள்ளது. 

அந்த அடிப்படையில்தான் சாதி பற்றின் புதிர்களை விடுவிக்க கடந்தக் காலங்களை நோக்கிப் போக வேண்டும். புதுக்காலத்தின் அறிவியல் கருவிகளின் துணைக்கொண்டு மனித இனத்தின் தோற்றத்தினையும் அதன் பன்முக பரிணாம வளர்ச்சியை துல்லியப்படுத்தி அறிவது போல, சமுக அமைப்பின் கடந்தக்காலத்தினை ஆராய வேண்டும்.  இருள் நிறைந்த ஒரு நெடுங்குகையுள் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் அறிவியல் ஆய்வாளனைப் போல, குறைந்த வசதி வாய்ப்புகளைக் கொண்டு வெளியுலகோடு குகைக்கான தொடர்பை உண்டாக்கும் பணியைப் போன்றதுதான் வரலாற்று ஆய்வும். திடீரெனத் தெரியும் சிறு ஒளிக் கீற்றைக் கொண்டு ஒட்டுமொத்த குகையின் அமைப்பையும் கணிக்க முயல்பவனைப் போல கடந்தக் காலத்திற்குள் நுழைய வேண்டும். இடையிடையே வரும் ஆபத்துக்களைப் போல வரலாற்று ஆய்வுகளிலும் தோன்றும் கருதுகோள்களின் தாக்கங்களையும் தாக்குதல்களையும் தாங்கி நடுநிலையான ஆய்வு முடிவுகளை அடைய வேண்டியது சமூக அறிவியல் ஆராய்ச்சியாளனின் கடமை. இந்த கடமையை தமது வாழ்நாள் பணியாக மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பினால்தான் மனித சமுக பரிணாம வரலாற்றின் பரிமாணங்கள் நமக்குக்  காணக் கிடைக்கின்றன. எனவே அந்த மனித சமூக பரிணாம வளர்ச்சியின் உலகளாவிய கட்டங்களைப் பார்த்தால் சேரி, சாதி, தீண்டாமையின் மூலத்தின் காலத்தினை கண்டடைய வசதியாக இருக்கும். எனவே அந்த கட்டங்களைப் பார்ப்போம்.

மனித சமுக வரலாற்றின் பரிணாமத்தினை ஆராய்ச்சியாளர்கள் பின்வரும் காலகட்டங்களாகவும், அதற்கான கால நிர்ணயத்தோடும் பிரித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வரையறைகள் ஒரே காலத்தில் நிகழ்ந்தவை அல்ல. மேலும் அது கால இட வேறுபாடுகளுக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக பல நாடுகளில் நிகழ்ந்துள்ளன. சில நாடுகளில் அடர்ந்தக் காடுகளில் அதன் எச்சங்கள் மிச்சமுள்ள சமுகங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாக மனித இனம் தோன்றிய நிலப்பகுதி கோண்டுவா என்கிற மறைந்த லெமூரிய கண்டத்தில்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. கண்டங்கள் பிரிந்து ஒன்றிலிருந்து ஒன்று விலகும் போது அதில் இருந்த ஆதி மக்கள் கண்டங்ளோடு பிரிந்துப் போனார்கள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆதி மக்கள் என்று அழைப்பதைவிட அவர்கள் ஆதி மந்தி மாந்தர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். அவர்களிடம் கூட்டமாக வாழும் இயல்பைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பொது தொடர்ப்பு மொழி என்பது உருவாகவில்லை. உழைப்பினை அவர்கள் உணராக காலம். காட்டில் கிடைத்தவைகளையும், இறந்த விலங்குகளையும், சிலபோது தன் இனத்திலேயே பலவீனமானவர்களை கொன்று உன்னும் பழக்கத்தோடு இருந்தார்கள். அதற்கான ஆதாரங்களை அன்மையில் மனிதக்குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாக தெரியவந்தது. ஆப்பிரிக்க காடுகளில் உள்ள மனிதக் குரங்குகள் சமூக அமைப்பின் தலைமை போட்டியில் சொந்த சகோதரனைக் கொன்றுத் தின்ற மனிதக் குரங்கின் நடவடிக்கைகளை பதிவு செய்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிறிய வகைக் குரங்குகளை அவை தம் உணவாக்கிக் கொள்ள நிகழ்த்தும் வேட்டைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே ஆதியில் மனிதன் தன்னின உண்ணியாக இருந்தான் என்பதற்கு போதுமாக ஆதாரங்கள் உள்ளன. எனவே சமூகமாக வாழ்வது மட்டும் அன்றைய கால வாழ்க்கை. சொல்லப்போனால் ஏறக்குறைய எல்லா மிருக இனங்களும் சமூகமாக வாழக் கற்றுக்கொண்டு வாழ்ந்தன. அதற்கு காரணம் அவை தம்மை தற்காத்துக்             கொள்வதற்குத்தான். இதெல்லாம் நடந்தது நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்பது ஒரு கருதுகோள். இதற்குப் பிறகு நிலையில்லாத சுற்றுச்சூழல், உணவின் பற்றாக்குறை, வேட்டைக்கான விலங்குகளின் இடப்பெயர்வுகள் ஆகிய காரணங்களால் அன்றைய ஆதிமந்தி மாந்த இனமும் இடம்பெயர்ந்தன, மரத்திலிருந்து சமவெளிகளில் பயணம் மேற்கொண்டது உடலை நிமிர்ந்து நடக்க நிர்பந்தித்தது. நிமிர்ந்த உடன் கைகள் சுதந்திரம் பெற்றன. சேமிக்கப்பட்ட பலத்தோடு இருந்த கைகள் தான் குரங்கிலிருந்து மனிதன் மனிதனாக மாறியதற்கான முதல் ஆயுதம். கைகள் விடுதலைப் பெற்றவுடன் மற்ற விலங்குகளிடமிருந்து தனித்து நின்றதுடன்., மற்ற மிருக்ஙகளை ஆளவும், அவைகளை வேட்டையாடவும் முடிந்தது. தேவைப்படும் நேரத்தில் நான்கு கால்களில் பாயவும் முடிந்ததால் இடம் விட்டு இடம் பெயர்தல் என்பது எளிதாக இருந்தது. இந்த நிலையில் அந்த ஆதிமந்தி மாந்த இனம் மனிதனாக பரிணமிப்பதற்கு பல கோடி ஆண்டுகள் இருந்தது. இப்படி உருவான பரவல்தான் உலகின் பல பாகங்களுக்கு சென்று மாந்த இனம் பரிணமித்தது. எனவே நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித வெறும் குரங்ககாகவே இருந்த போது சாதி என்பது இருந்திருக்கும் என்பதற்கு எங்கிருந்து சான்றுகளைத் தேடமுடியுமா..?

இதற்குப் பிறகு மனித இனத்தின் சமூக வளர்ச்சியை அறிஞர்கள் பின்வரும் பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்போம்.

பழைய கற்காலம்... கிமு 5,00,000 முதல் கிமு10,000வரை

பழைய கற்கால மக்கள் பெரிதும் கரடுமுரடானவர்கள். ஆயுதங்களை செய்யும் திறமையற்றவர்கள். இயற்கையாக கிடைத்திருக்கும் கற்களைக் கொண்டு வேட்டையாடினர். நாள்பட நாள்பட ஆறுகளில் ஊறி இருந்த குவாட்ஸ் கூழாங்கற்களை உடைத்து கைக் கோடறிகளையும், கறிகளை அறுக்கத் தேவையான சிறிய கல் கத்திகளையும் உருவாக்கினார்கள். இவர்களுக்கு மிருகங்களின் பின் அலைவதே தொழிலாக இருந்தது. குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டைகளின்போது தமது கல்லாயுதங்களைக் கொண்டு தமக்குள் தாக்கிக்கொண்டு இறந்தவர்களை உண்ணும் வழக்கத்துடன் இருந்தனர். குழுவாக எப்போதும் சுற்றினாலும் நீர்நிலைகளை தமது வேட்டைக் களங்களாக பயன்படுத்திக் கொண்டனர். அதனால்தான் பழையக் கற்கால கருவிகள் பெரும்பாலும் ஆற்றின் கரையோரமே கிடைத்துள்ளன. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள குடியம் மற்றும் கொற்றலையாறு நெடுகிலும் உள்ள காட்டுப் பகுதிகளிலும், கரைகளிலும் ஏராளமான கல்லாயுதங்களை இன்றும் காணமுடியும். இக்கால மக்களுக்கு குடியிறுப்புகள் ஏதும் கிடையாது. மொழி கிடையாது. அவர்கள் பெரும்பாலும் குகைகளிலேதான் வாழ்ந்தனர். தேவைப்பட்ட போதுதான் மரவுறி அணிந்தனர். இவர்கள் அனைவரும் நீக்ராய்ட் என்கிற கருப்பின வழிதோன்றல்கள். மரபியல் ஆய்வுகளின்படி கொற்றலையாற்றில் தங்கியிருந்தவர்கள் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள். ஆனால் அவர்களின் இருப்பு சட்டென மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனிலும் இக்கால கட்டத்தில்தான் மக்கள் பல இடங்களுக்கு குடிப்பெயர்ந்து உலகம் முழுதும் பரவினார்கள்.

புதிய கற்காலம் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு

நாடோடிகளாக இருந்த நிலை திரிந்து வேளாண் தொழில் மேற்கொண்டு நிலையான இருப்பிடம் அமைத்துக்கொண்டது வரையுள்ள காலம். புதிய கற்கால மனிதன் தங்களது இனம் அழிந்துகொண்டே சென்றதாலும், வேட்டைக்குச் சென்று உணவு தேடுபவர்கள் பெரும்பாலும் கூட்டத்திற்குத் திரும்புவதில்லை என்ற காரணத்தினாலும், அதனால் உண்டான பாதுகாப்பின்மையினாலும் மனிதன் நிலையான ஓர் இருப்பிடத்தில் வாழத் தொடங்கினான். அக்காலத்தில்தான் மனிதன் மீன் பிடிக்கவும், விவசாயம் செய்யவும் கற்றுக்கொண்டான். கால்நடை வளர்ப்பில் முன்னேறினான். பல நேர்வுகளில் கால் நடைகளை வளர்த்தவர்கள் அவை மேய்ச்சலுக்கு இடம் பெயரும் போது அவற்றைப் பின்பற்றி புதிய இடங்களில் சென்று தமது குடியிறுப்புகளை உருவாக்கிக் கொண்டனர்.
மேலும் புதிய கற்கால மக்கள் வாழ்வில் மட்கலன்கள் ஒரு தனியிடம் பெருகின்றன. இக்காலத்தில சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலமாக மண்பாட்டம் செய்யும் தொழில் வளரத்தொடங்கியிருந்தது. இக்கால மனிதன் நேர்ததியில்லாதவன். அதே நேரத்தில் அவநம்பிக்கை மிக்கவனாக இருந்தான். ஏனெனில் நிலையமர்ந்த குடிகளுக்கு மூன்று விதமான எதிரிகள் இருந்தார்கள். ஒன்று நாடோடிகளாக அலைந்துக் கொண்டிருக்கும் பழங்கற்கால குழுக்கள். இரண்டாவது, மேய்ச்சலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் குழு. இதற்கு உணவும் உருவாக்கப்பட்ட தங்குமிடமும் தேவைப்பட்டது. மூன்றாவதாக இருந்தக் குழு நிலையாக தங்கியிருந்தாலும் கால்நடைகளையும், உணவுகளையும் தமது குடியிறுப்புக்கு கொள்ளையிடும் குழுவாக இருந்தது. இப்படியான ஆபத்துக்கள் குடியேற்றத்தை உருவாக்கிக் கொண்ட எல்லா குழுவுக்கும் இருந்தன. இந்த குடியிறுப்புகள்தான் சேரிகள். அதாவது வாழிடங்கள். எனவே இந்த சித்தரிப்பு உண்மையென்றாலும் அவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக நிகழவில்லை. அதன் காலகட்டம் எவ்வாறு வேறுபட்டு இருந்து என்பதை டாக்டர்........... அவர்கள் தந்த அட்டவணைப்படி பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானின் கர்-இ-மார் கி.மு.7000, தாய்லாந்துப் பகுதியில் சுமார் கி.மு.9000, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கி.மு. 8000, ஆப்கானிஸ்தான் கி.மு. 7000, ஐரோப்பாவில் கி.மு. 5500, எகிப்தில் கி.மு. 6000, சீனாவில் கி.மு.5000, இந்தியாவில் இதன் காலம் பொ.ஆ.மு. 10,000 முதல் 4000வரை எனக் கருதப்படுகிறது. இக்காலக் கணிப்பு, இடத்துக்கு இடம் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் அடிப்படையில் சற்று மாறுபடுகின்றன. இருப்பினும், நுண் கற்காலத்தைத் தொடர்ந்து புதிய கற்காலம் துவங்கியது.

இந்தியாவில் சீவாலிக் நிலப்பரப்புப் பகுதிகளிலும் விந்திய நிலப்பரப்புப் பகுதிகளிலும், கங்கையின் கழிமுகப் பகுதிகளிலும் இப்பண்பாடு பரந்து காணப்படுகிறது. பங்களாதேஷ் மற்றும் பிகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் மேற்பரப்பு ஆய்வுகளில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரி கிளிப்பான் மரத்தைக் கிழிக்கப் பயன்படுத்தும் கருவியான உழி போன்ற கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குப் பகுதியான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா போன்ற பகுதிகளில் பதிய கற்காலப் பண்பாடு பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் திருப்பத்தூர், சேலம், வடஆற்காடு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இக்காலத்தில்தான் மொழி உருவானது. தொடர்பு மொழிகளாக பல உருவாகி கலக்கத் தொடங்கியிருந்தன.
சேர்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள பையம்பள்ளி என்கிற இடத்தில் கிடைத்திருக்கிற சான்றுகள்  புதிய கற்காலத்தினை இன்னும் குறைத்துக் காட்டக்கூடியவனவாக உள்ளன. அவை கி.மு.1300க்கும் 1200க்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. வடநாட்டில் அது கி.மு.2300க்கும் 1050க்கு இடைப்பட்ட காலத்தோடு இருக்கிறது என்று பேராசிரியர் தங்கவேல் குறித்திருக்கிறார்.

எனவே இக்காலகட்டங்களைப் பார்க்கும்போது பண்டைக் கால மக்கள் எவ்வளவு நாகரீகத்தோடு பண்பட்டிருப்பார்கள் என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடியும். இந்திய துணைக் கண்டத்தில் இக்காத்தில்தான் பல இடங்களில் மொழிகள் கலந்தது திரியத் தொடங்கியிருந்தது. தொடர்புக் உருவாகியிருந்தன. உலகின் சில பகுதிகளில் சில இடங்களில் நகர அமைபோடு வாழத்தொடங்கியிருந்தனர்.  செறிந்த மொழி கட்டமைப்புகள் பெரும்பாலும் உருவாகத் தொடங்கியிருந்தது என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.
இதுவரை விவாதித்தவை முழுமையானவை அல்ல என்பதை வாசகர்களுக்கு வலியுறுத்திக்கூறு விரும்புகிறேன். இவை அனைத்தும் ஒரு முன்னுரையே. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும். இக்காலகட்டத்தில் குடியிறுப்புகள் உருவாகிவிட்டன. சில இடங்களில் உயர்ந்த நாகரீக சமூகங்கள் உருவாகியிருந்தன. அரப்பா மொகஞ்சதாரோவில் அவை நிலவியது போலவே, பொருணையாற்று நாகரீகமும், தற்கால ஆய்வில் வெளிவந்துள்ள மதுரை நாகரீகமும் இக்காலகட்டத்தின் ஒரு பகுதிதான். அதே நேரத்தில் மேற்காசியாவிலும், வட அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் சமூக கட்டமைப்புகள் கொண்ட நாகரீக சமூகங்கள் உருவாகியிருந்தன. உலகின் இந்த பரந்துபட்ட பரிணாமத்தையொட்டியே அல்லது இந்திய துணைக் கண்டத்தின் நாகரீக பங்களிப்பை ஒட்டியே முன்னும் பின்னதுமான சமூக கட்டமைப்புகளை காணமுடியும்.

 இந்த புதிய கற்காலத்தின் பிற்காலத்தில்தான் ஏற்றத்ததாழ்வுகள் கொண்ட சமூக அமைப்புகளும் உருவாகத் தொடங்கின என்பது வரலாற்றின் கதிப்போக்காக அமைந்தது. ஏனெனில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகமல் போயிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கென்பது மறைந்துப் போயிருக்கும். எனினும் இன்னும் சில நாகரீக அமைப்புகள் இக்காலத்தினைத் தொடர்ந்து உருவாயின. அவற்றைப் புரிந்துக் கொண்டால் இப்போது உருவாகியுள்ள புதிய கற்கால சேரிகளின் பின்புலத்தினை புரிந்துக்கொள்ள முடியும். எனவே அவற்றைத் தொடர்ந்து அடுத்த இதழில்பார்க்கலாம். அதுவரை இக்காலகட்டத்தில் சாதி என்கிற ஒன்று உருவாகவில்லை என்பத¬ மட்டும் உறுதியாக கூறுலாம்.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings

Parvathy ramanathan

unread,
Jan 31, 2016, 11:20:41 PM1/31/16
to mint...@googlegroups.com
1. சேரிகள்= சேர்ந்து வாழுமிடம். சேர் - என்பது ஆணிவேர்.
யார் சேர்ந்து வாழ்ந்தாலும் சேரிதான். காரணப்பெயர்.
உம். வெளச்சேரி, கூடுவான் சேரி இன்னும் பல.

2. சாதி பற்றி ஆராய்பவர்கள் மனு சாத்திரத்தை அடிப்படையாக வைத்து சிறிது ஆராய்ந்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும். ஆனால் வெளியில் சொல்ல பயப்படுவார்கள்.

31 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:46 அன்று, Suba <ksuba...@gmail.com> எழுதியது:

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2016, 12:11:44 AM2/1/16
to mintamil
​பாண்டிச் சேரி, புதுச்சேரி​  ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சி. ஜெயபாரதன்

Rajendran Ramasamy

unread,
Feb 1, 2016, 1:47:05 AM2/1/16
to mint...@googlegroups.com
தொல்காப்பியம் மரபியல் கட்டும் முறை இனக் குழுக்களை நான்கு பிரிவுகளாக அறிவின் பாகுபாட்டுடன் தொடங்கி வைப்பதை, மரபியலில் முன்பிருந்ததாகக் காட்டும் பொதுப்பெயர்,வினைப்பாகுபாடுகள் ,புள்ளியிட்டு எழுதும் விதிமுறைகள் தமிழின் எண்கள்,பெயரிட்டு சார்பு எழுத்துக்கள் அறிமுகப்படுத்தல்,எழுத்து அகரவரிசைப்படுத்தல் எனப்பலப்பல கூறுகளுடன் இணைத்துக்காண வாய்ப்புள்ளது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 1, 2016, 2:42:59 AM2/1/16
to mintamil

கற்பனையை முதலாகக் கொண்ட கருத்துகள்.  அறிஞர்கள் (?) ஒத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

G Sannah

unread,
Feb 1, 2016, 4:00:55 AM2/1/16
to மின்தமிழ்
வரலாற்றுக்கு முற்பட்ட சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது தற்கால நவீன நாகரீக உலகத்துடன் தொடர்பில்லாத சமூகங்களை சிலவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றில் எவை மிகவும் காலத்தில் பின்னோக்கிய பண்பாட்டுடன் இருக்கிறதோ அதன் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டுதான் வரலாற்றுக்கு முற்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை பார்க்க முடியும். இந்த பார்வைதான் அறிவியல் பார்வை. இது எல்லா துறைகளுக்கும் அடிப்படை விதியாக இருக்கிறது. எனவே அறிவியல் ஆதாரம் என்பது காணும் பொருளைப் போல மட்டும் அல்ல. matter என்பது பொருள் மட்டும் அல்ல கருத்தும்தான் என்பது அறிவியல். 
அன்புடன்
சன்னா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 1, 2016, 10:14:16 AM2/1/16
to mintamil

வணக்கம்.

On 01-Feb-2016 2:30 pm, "G Sannah" <g.sa...@gmail.com> wrote:
>
> வரலாற்றுக்கு முற்பட்ட சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது தற்கால நவீன நாகரீக உலகத்துடன் தொடர்பில்லாத சமூகங்களை சிலவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றில் எவை மிகவும் காலத்தில் பின்னோக்கிய பண்பாட்டுடன் இருக்கிறதோ அதன் வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டுதான் வரலாற்றுக்கு முற்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை பார்க்க முடியும். இந்த பார்வைதான் அறிவியல் பார்வை. இது எல்லா துறைகளுக்கும் அடிப்படை விதியாக இருக்கிறது. எனவே அறிவியல் ஆதாரம் என்பது காணும் பொருளைப் போல மட்டும் அல்ல. matter என்பது பொருள் மட்டும் அல்ல கருத்தும்தான் என்பது அறிவியல். 

ஒரு பழமையான மண்டையோடு குகையில் கிடைத்தால், அந்தக் குகையில் பழங்காலத்தில் மனிதர் வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்,
அல்லது,
அந்தக் குகையில் ஒரு புலி இருந்து அது ஒரு மனிதனைத் தின்றுள்ளது என்றும் கூறலாம்.
அல்லது,
கற்பனையாக எப்படி      வேண்டுமானாலும்  கூறலாம்.

இக் கட்டுரையில் உள்ள கருத்துகள் கற்பனையானவை என்பதே எனது கருத்து.

Tthamizth Tthenee

unread,
Feb 1, 2016, 10:20:53 AM2/1/16
to mint...@googlegroups.com

2016-02-01 20:44 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
இந்த நிலையில் அந்த ஆதிமந்தி மாந்த இனம் மனிதனாக பரிணமிப்பதற்கு பல கோடி ஆண்டுகள் இருந்தது. இப்படி உருவான பரவல்தான் உலகின் பல பாகங்களுக்கு சென்று மாந்த இனம் பரிணமித்தது. எனவே நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித வெறும் குரங்ககாகவே இருந்த போது சாதி என்பது இருந்திருக்கும் என்பதற்கு எங்கிருந்து சான்றுகளைத் தேடமுடியுமா..?

​மந்தியிலிருந்துதான்   அதாவது  ஆதிமந்தியிலிருந்துதான்  மாந்த ​இனம் மனிதனாகப் பரிணாமித்தது என்றால்  ராமர் காலத்திலேயே  அனுமனும் இருந்தாரே
அதெப்படி ஒரேகாலத்தில்   மந்தியும் மாந்தனும் ?

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2016, 11:20:58 AM2/1/16
to mintamil, vallamai, tamilmantram

​பேசும் மனிதக் குரங்கள் இராமர் காலத்தில் [கி.மு.1000 -2000] இருந்ததற்கு விஞ்ஞானத்திலோ, வரலாற்றலிலோ, டார்வின் கருத்திலோ எந்த ஆதாரங்களும் இல்லை.

சி. ஜெயபாரதன்

G Sannah

unread,
Feb 1, 2016, 12:53:35 PM2/1/16
to மின்தமிழ்
எமது தொடரில் நிறுவப்பட்ட அறிவியல் அடிப்படைகளினால் உருவான கருத்துக்களையும், கருதுகோள்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறோம். ராமர் காலத்து குரங்குகளைப் பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை இதற்கென புதிதாக விஞ்ஞானி அவதாரம் எடுத்து அவர் நிறுவினால் எம்மைப் போன்ற சாதாரண ஆய்வாளர்களுக்கு பேருதவியாய் இருக்கும்

சன்னா

G Sannah

unread,
Feb 1, 2016, 12:55:48 PM2/1/16
to மின்தமிழ்
மேலும் மண்டையோடுகள் கிடைத்த வரலாற்றினை நான் ஏற்கெனவே கடந்த அத்தியாயங்களில் விவரித்திருக்கிறேன். முதலில் ஆப்பிரிக்காவில் கிடைத்த மண்டையோடு முதல்..

சன்னா

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2016, 4:03:30 PM2/1/16
to mintamil, vallamai, tamilmantram
இராமர் காலத்தில் பேசும் குரங்குகள் மட்டுமல்ல, நாடு விட்டு நாடு கடந்த பறக்கும் குரங்களும் இருந்தனவாம்.  இவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Feb 1, 2016, 4:30:24 PM2/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
கொடுக்கப்பட்ட ஒரு தகவலில் / செய்தியில்/ கதையில் .....
எது இயற்கையில் நிகழ்ந்திருக்கக் கூடும் அல்லது எது நிகழ்ந்திருக்காது என்பதைப்  பிரித்தறிந்து புரிந்து கொள்வது சிலரால் இயலவில்லை என்பது எனக்கு எப்பொழுதும் வியப்பைத் தருவது.

நான் ஒரு கற்பனைக் கதை எழுதி, கடலுக்கு அடியில் எந்த வித உபகரணத்தின் உதவியுமின்றி ஒரு வாரம் தங்கியிருந்து, சுற்றுலா சென்று வந்தேன். மீன்களின் படையைத் திரட்டி, அவற்றின் உதவியுடன் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க கடலில் மிதக்கும் குப்பைகளை சுத்தம் செய்தேன் என்று கதை எழுதினால் பிற்காலத்தில் மக்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை. கடலில் வாழும் வரை மெர்மைட் ஆகவும் கரையில் வந்தவுடன் துடுப்புகள் மறைந்து பழையபடி சாலையில் நடப்பேன் என்றும் எழுதி வைக்கலாம் எனத் தோன்றுகிறது.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Parvathy ramanathan

unread,
Feb 1, 2016, 8:55:19 PM2/1/16
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நம் குடும்ப வரலாரே நமக்குத்தெரியாது. நாம் யாரும் நம் பிள்லைகளுக்காக அந்த சொத்தை சேர்த்துவைக்க நினைக்கவில்லை. எல்லவற்ரையும் கொடுத்து ஆளாக்கின என் பெற்றோர் எனக்கு என் தாத்தாவின் அப்பாவை அறிமுகப்படுத்தவில்லை.
நானாக முனைந்துதேடும்போது அந்த விபரம் தெரிந்தவர்கள் இறந்து விட்டனர். நான் எப்படி ஆதார்த்தைத் தேடுவேன் ?"அனுமன் கடல் தாண்டியதற்கு".

2 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:30 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Feb 1, 2016, 10:44:12 PM2/1/16
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
​அப்படியானால்    ராமாயணமும்​  அனுமனை  வாக்சாதுர்யன்  என்று அழைக்கிறது

கண்டேன் சீதையை  என்று  ராமனிடம் சொன்னவன் அனுமன் என்று  வர்ணிக்கிறது

எல்லாமே பொய்யா  

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2016, 11:51:33 PM2/1/16
to mintamil, tamilmantram, vall...@googlegroups.com, Oru Arizonan, vannan vannan
அனுமன் பேசியது வடமொழியோ, தமிழ்மொழியோ, சைகை அசைப்போ தெரியாது.  ஏதோ ஒரு மொழியில் அனுமன் பேசினான் என்பதிலிருந்து, அவன் வானரம் இல்லை மானுடன் என்பது என் கருத்து, யூகிப்பு, 

சி. ஜெயபாரதன்

Tthamizth Tthenee

unread,
Feb 2, 2016, 12:04:37 AM2/2/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram, Oru Arizonan, vannan vannan
நண்பரே  உயர் திரு  ஜெயபரதன் அவர்களே  நான் உங்களுடன்  வாதாடவேண்டும் எனும் நோக்கில் இங்கே  எழுதவில்லை  என்னுடைய  அல்லது  இத்துணைநாட்கள்  ராமாயணம்  மஹா பாரதம் போன்றவைகளை  நம்பிக்கொண்டிருக்கும் என் போன்ற  நண்பர்களின் மனத்  தெளிவுக்காக  எழுதுகிறேன்

அனுமன் பேசினான் என்பதிலிருந்து, அவன் வானரம் இல்லை மானுடன் என்பது என் கருத்து, யூகிப்பு, 

அப்படியானால்  ராமாயணத்தில்  வானர சேனை  என்று வர்ணிக்கப்பட்டிருப்பது  பொய்யா?

அப்படியானால்  கண்டேன் சீதையை  என்று அனுமன் ராமனிடம் சொன்னது பொய்யா?
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 2, 2016, 12:16:22 AM2/2/16
to vallamai, mintamil, tamilmantram, Oru Arizonan, vannan vannan
///அப்படியானால்  ராமாயணத்தில்  வானர சேனை  என்று வர்ணிக்கப்பட்டிருப்பது  பொய்யா?
அப்படியானால்  கண்டேன் சீதையை  என்று அனுமன் ராமனிடம் சொன்னது பொய்யா?////

வானர சேனை என்று திரிக்கப்பட்டது, மெய்யாக மானிட சேனை என்பது என் விளக்கம்.
சி. ஜெயபாரதன்

Tthamizth Tthenee

unread,
Feb 2, 2016, 1:11:31 AM2/2/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram, Oru Arizonan, vannan vannan
திரிக்கப்பட்டது  என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் அளிக்க முடியுமா  நண்பரே

தேமொழி

unread,
Feb 2, 2016, 2:02:54 AM2/2/16
to மின்தமிழ்
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Nagarajan Vadivel

unread,
Feb 2, 2016, 2:12:06 AM2/2/16
to மின்தமிழ்
இராமாயணத்திலும் தீண்டாமை இருந்ததே
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவன் அந்தணன் என்ற நிலையில் சூத்திரப் பிரிவாகக் கருதப்படும் (நால்வகை வர்ணத்திலும் பெண் சூத்திரப் பிரிவே) சீதையைத் தொடாமல் இலங்கைக்கு  தாவணன் எடுத்துச் சென்ற முறையிலும் தீண்டாமை உள்ளதே

இணைய தருமி 2016

On Tue, Feb 2, 2016 at 12:32 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

--

தேமொழி

unread,
Feb 2, 2016, 2:32:28 AM2/2/16
to மின்தமிழ்
பெரும்பாலும் பெண்ணின் மீது மையல் கொண்டு கடத்துபவர்கள் பெண்ணின் பின்புலம் பற்றிக் கவலைப் படுவதில்லை.
இதற்கு சமீபத்திய மரபணு ஆய்வும் சான்று... 

Mixing of population

However, the researchers have noted that “mixing” of genetic populations continued in an “asymmetric” trickle after this. Upper caste populations continued to give genetic inputs to lower caste and tribal populations — but not vice-versa.

read more at: http://www.pnas.org/content/early/2016/01/20/1513197113.full.pdf

..... தேமொழி

On Monday, February 1, 2016 at 11:12:06 PM UTC-8, இணைய தருமி 2016 wrote:
இராமாயணத்திலும் தீண்டாமை இருந்ததே
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவன் அந்தணன் என்ற நிலையில் சூத்திரப் பிரிவாகக் கருதப்படும் (நால்வகை வர்ணத்திலும் பெண் சூத்திரப் பிரிவே) சீதையைத் தொடாமல் இலங்கைக்கு  தாவணன் எடுத்துச் சென்ற முறையிலும் தீண்டாமை உள்ளதே

இணைய தருமி 2016
On Tue, Feb 2, 2016 at 12:32 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Feb 2, 2016, 2:47:34 AM2/2/16
to mint...@googlegroups.com
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

தேமொழியாரே  நீங்கள் நினைக்கும் கோணத்திலேயே  இழை சென்றால்தான் வளர விடுவீர்களா?

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

2016-02-02 13:02 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பெரும்பாலும் பெண்ணின் மீது மையல் கொண்டு கடத்துபவர்கள் பெண்ணின் பின்புலம் பற்றிக் கவலைப் படுவதில்லை.
இதற்கு சமீபத்திய மரபணு ஆய்வும் சான்று... 

Mixing of population

However, the researchers have noted that “mixing” of genetic populations continued in an “asymmetric” trickle after this. Upper caste populations continued to give genetic inputs to lower caste and tribal populations — but not vice-versa.

read more at: http://www.pnas.org/content/early/2016/01/20/1513197113.full.pdf

..... தேமொழி

On Monday, February 1, 2016 at 11:12:06 PM UTC-8, இணைய தருமி 2016 wrote:
இராமாயணத்திலும் தீண்டாமை இருந்ததே
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவன் அந்தணன் என்ற நிலையில் சூத்திரப் பிரிவாகக் கருதப்படும் (நால்வகை வர்ணத்திலும் பெண் சூத்திரப் பிரிவே) சீதையைத் தொடாமல் இலங்கைக்கு  தாவணன் எடுத்துச் சென்ற முறையிலும் தீண்டாமை உள்ளதே

இணைய தருமி 2016
On Tue, Feb 2, 2016 at 12:32 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்தக் கோணத்தில் (இராமாயணம், அனுமன், வானரப்படை) இனி தொடர விரும்பினால் தனி இழை துவக்கிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 2, 2016, 3:02:14 AM2/2/16
to மின்தமிழ்
On Monday, February 1, 2016 at 11:47:34 PM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
தேமொழியாரே  நீங்கள் நினைக்கும் கோணத்திலேயே  இழை சென்றால்தான் வளர விடுவீர்களா?

தமிழ்த்தேனீ ஐயா, 

திரு. கெளதம் சன்னாவின் "சாதி, தீண்டாமையின் மூல வரலாறு" என்ற தலைப்பிற்கு ஏற்ப சாதி, தீண்டாமை எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்ற நோக்கத்தில் சொன்னேன் ஐயா.

அனுமன் தமிழ் பேசினாரா?  அவர் வானரமா?  என்பது வேறுவகை விவாதம் அல்லவா?    அதை அவரும் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளாரே...

On Monday, February 1, 2016 at 9:53:35 AM UTC-8, Gowthama Sanna wrote:
எமது தொடரில் நிறுவப்பட்ட அறிவியல் அடிப்படைகளினால் உருவான கருத்துக்களையும், கருதுகோள்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறோம். ராமர் காலத்து குரங்குகளைப் பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை இதற்கென புதிதாக விஞ்ஞானி அவதாரம் எடுத்து அவர் நிறுவினால் எம்மைப் போன்ற சாதாரண ஆய்வாளர்களுக்கு பேருதவியாய் இருக்கும்

சன்னா 

...... தேமொழி
 
சி. ஜெயபாரதன்

unread,
Feb 2, 2016, 8:43:50 AM2/2/16
to vallamai, mintamil, tamilmantram, Oru Arizonan, vannan vannan
வடக்கே இராமன், பரதன், சீதா வாழ்ந்த நாகரீக காலத்தில் [கி.மு.1000 ?] தென்னகத்தில் சங்கம் வைத்து ஆண்ட பாண்டிய மன்னன் வரலாறு வால்மீகி இராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளது. தென்னகத்திலிருந்து வந்து சீதாவைக் காப்பாற்ற இராமனுக்கு உதவிய அனுமான் போன்ற படைவீரர்கள் எப்படி வானரமாக இருக்க முடியும் ?  இது திரிக்கப் பட்டதில்லையா ?

சி. ஜெயபாரதன்.

++++++++++++++

Rathinam Chandramohan

unread,
Feb 4, 2016, 11:15:36 PM2/4/16
to mint...@googlegroups.com

Please let him complete his  view and  findings so that we can add more insights by our queries. Happy to see the effort.

Suba

unread,
Feb 5, 2016, 2:10:03 PM2/5/16
to மின்தமிழ், Dr.Subashini

ஆப்கானிஸ்தானின் கர்-இ-மார் கி.மு.7000, தாய்லாந்துப் பகுதியில் சுமார் கி.மு.9000, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கி.மு. 8000, ஆப்கானிஸ்தான் கி.மு. 7000, ஐரோப்பாவில் கி.மு. 5500, எகிப்தில் கி.மு. 6000, சீனாவில் கி.மு.5000, இந்தியாவில் இதன் காலம் பொ.ஆ.மு. 10,000 முதல் 4000வரை எனக் கருதப்படுகிறது. இக்காலக் கணிப்பு, இடத்துக்கு இடம் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் அடிப்படையில் சற்று மாறுபடுகின்றன. இருப்பினும், நுண் கற்காலத்தைத் தொடர்ந்து புதிய கற்காலம் துவங்கியது.

இந்தியாவில் சீவாலிக் நிலப்பரப்புப் பகுதிகளிலும் விந்திய நிலப்பரப்புப் பகுதிகளிலும், கங்கையின் கழிமுகப் பகுதிகளிலும் இப்பண்பாடு பரந்து காணப்படுகிறது. பங்களாதேஷ் மற்றும் பிகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் மேற்பரப்பு ஆய்வுகளில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடரி கிளிப்பான் மரத்தைக் கிழிக்கப் பயன்படுத்தும் கருவியான உழி போன்ற கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குப் பகுதியான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா போன்ற பகுதிகளில் பதிய கற்காலப் பண்பாடு பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் திருப்பத்தூர், சேலம், வடஆற்காடு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இக்காலத்தில்தான் மொழி உருவானது. தொடர்பு மொழிகளாக பல உருவாகி கலக்கத் தொடங்கியிருந்தன.
சேர்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள பையம்பள்ளி என்கிற இடத்தில் கிடைத்திருக்கிற சான்றுகள்  புதிய கற்காலத்தினை இன்னும் குறைத்துக் காட்டக்கூடியவனவாக உள்ளன. அவை கி.மு.1300க்கும் 1200க்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. வடநாட்டில் அது கி.மு.2300க்கும் 1050க்கு இடைப்பட்ட காலத்தோடு இருக்கிறது என்று பேராசிரியர் தங்கவேல் குறித்திருக்கிறார்.

எனவே இக்காலகட்டங்களைப் பார்க்கும்போது பண்டைக் கால மக்கள் எவ்வளவு நாகரீகத்தோடு பண்பட்டிருப்பார்கள் என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடியும். இந்திய துணைக் கண்டத்தில் இக்காத்தில்தான் பல இடங்களில் மொழிகள் கலந்தது திரியத் தொடங்கியிருந்தது. தொடர்புக் உருவாகியிருந்தன. உலகின் சில பகுதிகளில் சில இடங்களில் நகர அமைபோடு வாழத்தொடங்கியிருந்தனர்.  செறிந்த மொழி கட்டமைப்புகள் பெரும்பாலும் உருவாகத் தொடங்கியிருந்தது என்பதை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.
இதுவரை விவாதித்தவை முழுமையானவை அல்ல என்பதை வாசகர்களுக்கு வலியுறுத்திக்கூறு விரும்புகிறேன். இவை அனைத்தும் ஒரு முன்னுரையே. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும். இக்காலகட்டத்தில் குடியிறுப்புகள் உருவாகிவிட்டன. சில இடங்களில் உயர்ந்த நாகரீக சமூகங்கள் உருவாகியிருந்தன. அரப்பா மொகஞ்சதாரோவில் அவை நிலவியது போலவே, பொருணையாற்று நாகரீகமும், தற்கால ஆய்வில் வெளிவந்துள்ள மதுரை நாகரீகமும் இக்காலகட்டத்தின் ஒரு பகுதிதான். அதே நேரத்தில் மேற்காசியாவிலும், வட அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் சமூக கட்டமைப்புகள் கொண்ட நாகரீக சமூகங்கள் உருவாகியிருந்தன. உலகின் இந்த பரந்துபட்ட பரிணாமத்தையொட்டியே அல்லது இந்திய துணைக் கண்டத்தின் நாகரீக பங்களிப்பை ஒட்டியே முன்னும் பின்னதுமான சமூக கட்டமைப்புகளை காணமுடியும்.

 இந்த புதிய கற்காலத்தின் பிற்காலத்தில்தான் ஏற்றத்ததாழ்வுகள் கொண்ட சமூக அமைப்புகளும் உருவாகத் தொடங்கின என்பது வரலாற்றின் கதிப்போக்காக அமைந்தது. ஏனெனில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகமல் போயிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கென்பது மறைந்துப் போயிருக்கும். எனினும் இன்னும் சில நாகரீக அமைப்புகள் இக்காலத்தினைத் தொடர்ந்து உருவாயின. அவற்றைப் புரிந்துக் கொண்டால் இப்போது உருவாகியுள்ள புதிய கற்கால சேரிகளின் பின்புலத்தினை புரிந்துக்கொள்ள முடியும். எனவே அவற்றைத் தொடர்ந்து அடுத்த இதழில்பார்க்கலாம். அதுவரை இக்காலகட்டத்தில் சாதி என்கிற ஒன்று உருவாகவில்லை என்பத¬ மட்டும் உறுதியாக கூறுலாம்.

​டிப்படியாக​ மனித இனத்தின் வளர்ச்சியைக் கட்டுரை விளக்கிச்செல்கின்றது. மிக நன்று.
பொதுவாக பலர் நினைப்பது போன்று சாதி அமைப்பு என்பது மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும் என நினைப்பது சமூகவியல் பார்வைக்குப் பொருந்தாத விசயம். இப்படி படிப்படியான மனித இனத்தின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கம் வரும் போது சாதி எச்சூழலில் எவ்வகைக் காரணங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதும் அது எவ்வககையில் சமூகத்தில் நிலைபெற்றது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அவ்வகையான சரியான புரிதல் கிடைக்கும் போது சாதி அமைப்பு அவசியமற்றது என்ற தெளிவின் அடிப்படையில் அதனை சிந்தனையிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கவும் முடியும்.

சுபா

​ 

Suba

unread,
Feb 7, 2016, 5:55:42 PM2/7/16
to மின்தமிழ், G Sannah, Subashini Tremmel
இக்கட்டுரையின் ஆசிரியர் சன்னா அனுப்பிய   6ம் பதி இன்று வெளியிடப்படுகின்றது.
-சுபா

சேரி.. சாதி.. தீண்டாமை..- மூலவரலாறு -6
சேரிகளின் உருவாக்கம்
கௌதம சன்னா

மனித சமுகத்தின் வரலாற்றில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பகுதிக்குள் இப்போது நாம் நுழையப் போகிறோம். குறிப்பாக இந்தியவியல் இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் மட்டுமின்றி தமிழக ஆய்வாளர்களும் கண்டுக்கொள்ளாமல் விட்ட பகுதியது. அதுதான் சேரி.. அது எவ்வாறு உருவானது என்பதுதான். பல வேளை தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிய வரலாற்றுச் சம்வங்களில் இதை முக்கியமாகப் பார்க்கிறேன். தாங்கள் வாழும் இடத்தின் அருகிலேயே எல்லா ஆய்வாளர்களும் பார்த்திருக்கிற சேரி என்பது எவ்வாறு உண்டானது என்ற கேள்வி அவர்கள் மனதில் தோன்றாதது ஏன் ?. அது எதேச்சையானதா அல்லது திட்டமிட்ட மனப்போக்கில் அதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் புறக்கணிக்கப்பட்டதா என்பதே தனி ஆய்வுக்கு உரியது. அதை ஆய்ந்தால் ஆராய்ச்சியளர்களின் நடுவு நிலைமை என்னவென்று புரிந்துக்கொள்ள முடியும். ஆயினும் அது தற்போது உள்ள நமது ஆய்வெல்லைக்கு உட்பட்டதல்ல. எனவே சேரிகள் எப்படி உருவாயின என்பதை மட்டும் இப்போது பார்ப்பது நமது நோக்கத்திற்கு நல்லது.

கடந்த அத்தியாயத்தில் பார்த்தது போல மனித இனங்களின் சமூக உருவாக்கம் பற்றின் குறிப்புகளை  பார்க்கும் போது அது கடந்து வந்த பாதையில் பெரும் பாய்ச்சல்கள் ஏதும் இல்லை என்பது புரியும். இந்த அத்தியாயத்தில் இரண்டு பேரின் ஆய்வுகளையே மிக அடிப்படையாக எடுத்தாள இருக்கிறேன். அதில் சேரி பற்றின் புதிர்களை விடுவித்த டாக்டர். அம்பேத்கர் மற்றும் மனித இனத்தின் சமூக பரிணாமத்தை விளக்கிய அமெரிக்க மானுடவியல் ஆய்வாளர் மார்கன், இவரைப் பின்பற்றிதான் ஏங்கெல்சும் தனது ஆய்வை விரிபடுத்தினார். எனவே இவர்களின் ஆய்வினை சுருக்கமாக பார்ப்போம்.

மனித இனத்தின் ஆரம்பக்கட்ட பிரச்சனையே அது ஓயாமல் அலைந்து திரிந்துக்கொண்டிருந்தது தான். அவர்களின் அலைச்சலை உணவே தீர்மானித்தது என்பது சொல்லாமலே விளங்கும். உணவுக்காக மனித இனம் அப்போது பயணித்துக்கொண்டே இருந்தது. மாமிச உண்ணிகளாக தமது வாழ்வை தொடங்கிய ஆதி மனிதர்கள் இறைச்சிக்காக விலங்குகளை பின்தொடர்ந்தார்கள். விலங்குகள் சூழலின் மாற்றத்திற்கு ஏற்ப இடம் விட்டு இடம் பெயர்பவை. புல் வெளிகள் காய்ந்துப் போனால், நீர் நீலைகள் வற்றிப்போனால் அவை தமக்கான உணவைத்தேடி நீண்ட தூரம் பயணித்தன. எனவே மனிதர்களும் அவற்றைப் பின்தொடர்ந்தார்கள். அப்படி தொடரும்போது நீண்ட மலைகளையும், ஆறுகளையும், காடுகளையும் கடந்துச் செல்வது மட்டுமின்றி இடையில் மனிதர்களை வேட்டையாடும் மிருகங்களுக்கும் அவர்கள் இரையாக வேண்டும். எனவே இந்த ஆபத்துகளிலிருந்து காத்துக்கொள்ள மனிதர்கள் கூட்டமாகவே இருக்க வேண்டும். அதுதான் அவர்கள் சமூதாயமாக மாற முதலில் நிர்பந்தித்த காரணி. ஏற்கெனவே நிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருந்த மனிதனுக்கு வேகமாக பயணிப்பது எளிதானது மட்டுமல்ல, சுற்றுப்புறத்தையும், அதன் ஆபத்துக்களையும் அறிந்துக்கொள்வதில்  தேர்ச்சி உண்டாகியிருந்தது. இந்த போக்கு உலகின் எல்லா பகுதிகளிலும் நடந்தேறியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் மனித பரிமாணமும் பரிணாமமும் ஏறக்குறைய ஒரு தேர்ந்த நிலைக்கு வந்திருந்த காலம் அது.

மனித இன அலைச்சலில் அவர்கள் நிலையாக தங்க வைத்ததில் கால்நடைகள் முக்கியப் பங்காற்றின என்பதற்கு அண்மை காலம் வரை சான்றுகள் கிடைக்கின்றன. கால்நடைகள் பெரிய மந்தையாக பயணிக்கும்போது ஆற்றின் கரையோரம் செழித்து வளர்ந்திருந்த தானியங்கள் மற்றும் நீர் சிறந்த  ஊட்டமளித்தன. கால்நடைகளுக்கு என்று கருதிய தானியத்தை மனித இனம் பயன்படுத்த கற்றுக்கொண்டது. எனவே நீர், பழங்கள், கிழங்குகள், தழைகள், தானியங்கள் மற்றும் இறைச்சி ஆகியன ஒருசேர கிடைத்த ஆற்றங்கரையோரம் அவர்கள் தங்கினார்கள். அது பாதுகாப்பானதாக இருந்தது. எல்லா மிருகங்களையும் கண்காணிக்க முடியும். சுற்றியுள்ள இயற்கை அரண்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். எனவே அவர்கள் தம்மை ஒரு குலக்குழுவாக கட்டமைத்துக்கொள்ள முடிந்தது. தங்களை ஓர் எல்லைக்குள் அடைத்துக்கொண்டது போலவே மேயும் கால்நடைகளையும் பட்டியில் அடைக்கும் பழக்கம் உண்டானது. அதனைத் தொடர்ந்துதான் ஆற்றங்கரை நாகரீகங்கள் உருவாயின. இப்படி நிலையாக ஓரிடத்தில் அமர்ந்த சமூகக்குழு தனக்கான ஒரு குடியிறுப்பை உருவாக்கிக்கொண்டதே அதுதான் முதல் சேரி. சேர்ந்து வாழும் இடம் என்று பொருள் கொண்டதுதான் சேரி. பிற்காலத்தில் உருவான எல்லா மொழிகளிலும் சேர்ந்து வாழ்தல் என்ற பொருளிலேயே குடியிறுப்பு என்ற வார்த்தை உருவானது. தோடர் மொழியில் மந்து என்று குடியிறுப்பு அழைக்கப்படுகிறது, மந்தை என்பதில் திரிபே மந்து. வடமொழியில் கிரக என்ற வீட்டைக்குறிக்கும் சொல்லிலிருந்து கிராமம் என்பது உருவானது. ஹோம் என்ற மூலச்சொல்லிலிருந்த ஹாம்லட் என்ற குடியிறுப்பு சொல் உருவானது. இப்படி எல்லா மொழிகளிலும் குடியிறுப்பு என்ற சொல்லிற்கான பொருளை பார்க்க முடியும்.

எனவே இந்த குடியமர்ந்த அல்லது டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் சொல்படி அது நிலையமர்ந்த குழு. இது மனித இன வரலாற்றில் இது ஒரு மைல்கல்லான நிகழ்வு.  இப்படி நிலையமர்ந்த குழு தனக்கான வாழ்க்கை வரையறைகளை தன்னுடைய பாதுகாப்பின்மை என்ற உளவியல் அடிப்படையிலே அமைத்துக்கொண்டது. ஏனென்றால் இக்குழுவுக்கு இன்னும் பாதுகாப்பு உறுதி படுத்தப்படவில்லை, மிருகங்கள் மட்டும் இன்றி இன்னும் இரண்டு ஆபத்துக்கள் இருந்தன. முதலாவது ஆபத்து ஏற்கெனவே நிலையமர்ந்து மக்கள் தொகையில் பெருவிட்ட அக்குழுவிற்கும் அவர்களின் கால்நடைகளின் உணவு தேடலுக்கு இரையாவது, அதாவது அவர்களின் கொள்ளைக்கு உள்ளாவது. இரண்டாவது ஆபத்து சிதறடிக்கப்பட்டவர்கள் என்ற நாடோடியாக அலையும் குழு.
இவர்கள் பல இடங்களில் சிதறிடிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஏற்கெனவே நிறைய உறுப்பினர்களைக் கொண்டு நிலையமர்ந்த குழுக்களினால் அவர்கள் விரட்டப்பட்டவர்களாகவும், காடுகளுக்குள் துரத்தப்பட்டவர்களாகவும் இருந்தனர். இவர்களுக்கு உணவு எளிதில் கிடைக்க வேண்டுமானால் இவர்களுக்கு இரண்டே வாய்ப்புகள் இருந்தன.
முததலாவது, சிதறடிக்கப்பட்ட குழு ஒரு நிலையமர்ந்த சமூகமாக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு பயிற்சியும், சுற்றுப்புற அறிவும் அவசியம்.

இரண்டாவது, உணவு மற்றும் கால்நடை சேமிப்பில் வளமாக இருக்கும் நிலையமர்ந்த ஒரு குழுவினை கொள்ளையிடுவது.

இந்த சூழல் எவ்வாறு எதிர் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை யூகிப்பது கடினமல்ல. நிச்சயமாய் அதிகம் பாதிப்பை அடையும் குழு நிலையமர்ந்த குழுவாகத்தான் இருக்கும், ஏனெனில் அவர்கள் உழைப்பில் ஈடுபட்டிருப்பதால் போரில் ஈடுபடுவதை அவ்வளவாக விரும்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தம்மை கொள்ளையிட வரும் கூட்டத்தை அவர்கள் விரட்ட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தால் கொள்ளையிட வரும் குழுவினை அவர்கள் விரட்ட முடியும், கெடுவாய்ப்பாய் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அவர்கள் முற்றாக அழிய வேண்டும். இதிலிருந்து அவர்கள் தப்பிக்க பின்வரும் வழிகள் இருந்தன.

1. கொள்ளையிடும் குழுவை எதிர்த்துப் போரிட்டு மடிவது.
2. போரிடும்போது அருகில்  உள்ள ஏதாவது ஒரு நிலையமர்ந்த குழுவின் உதவியை நாடுவது.
3. ஏற்கெனவே சிதறுண்டு திரிந்துக் கொண்டிருக்கும் குழுவிடம் பேசி தமது உதவிக்கு வைத்துக்கொள்வது.
4. கொள்ளையிட வரும் குழுவிடமே சமரசம் செய்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான உணவும் தங்கும் இடமும் கொடுத்து தமக்கு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது.

இதில் எது சாத்தியமானதோ அதுதான் அன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். சமூக அமைதியின் தேவைபடி கடைசி இரண்டு அம்சங்களுக்கு மட்டுமே வாய்ப்பிருக்கிறது. அதுதான் நிரந்தரமனதும் பாதுகாப்பானதும் கூட. 
இந்த முடிவினை எட்டிவிட்டால் இருக்கின்ற ஒரே பிரச்சனை அவர்களை எங்கு தங்க வைப்பது. நிச்சயமாக தமது குழுவினுள் தங்க வைக்க முடியாது. ஏனெனில் ரத்தக் கலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சகோத்ர முறை சீரழிந்துப் போகும். குலத்தின் பாதுகாப்பு நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் போகும். எனவே இருக்கின்ற ஒரே வழி தமது குடியிறுப்புக்கு அப்பால் சற்றுத் தள்ளி ஒரு புது குடியிறுப்பை உருவாக்கி அங்கே அவர்களைத் தங்க வைப்பதின் மூலம் அதற்கான தீர்வினை எட்ட முடியும். அப்படிதான் நடந்தது.

சிதறி அலைந்த குழு தனக்கான ஓர் இடத்தை பெற்ற பிறகு அது கிராமத்தின் ஓர் அங்கமாக, ஆனால் ஒட்டாத அங்கமாக மாறிவிடுகிறது. அது கிராமத்தில் பாதுகாப்பிற்கும், உழைப்புத் தேவைக்கும் பயன்படுத்த எளிதாகிறது. இந்த புதுக்குடியுறுப்புதான் தற்போது சேரி என்று அழைக்கப்படுகிறது. இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் இப்படிப்பட்ட சேரிகள் உருவானதற்கு இவை மட்டுமே காரணமாக சொல்ல முடியுமா..? அல்லது அதற்கு இணையான சான்றுகளை உலகத்தின் வேறு பகுதிகளில் காணமுடியுமா என்ற கேள்வி எழுமானால் அதற்கு ஏராளமான சான்றுகளை டாக்டர்.அம்பேத்கர் தருகிறார். ஐரிஷ் உள்ளிட்ட பல நாடுகளில் அதற்கான சான்றுகளை மட்டுமின்றி அண்மை காலம் வரையில் உருவான சேரி குடியிறுப்புகளின் தோற்றத்தையும் அவர் விளக்கியிருக்கிறார்.
ஆயினும் இந்த சேரி அமைப்பு முறை ஏன் உலகின் மற்ற பகுதிகளில் நிலவ முடியாமல் போனது ஏன்..?
மார்கனின் ஆய்வை பின்பற்றிய மார்க்சியர்கள் உலக மனித சமூக வளர்ச்சியை ஆதிப் பொதுவுடைமை சமூகம், அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்வ சமூகம், முதலாளித்துவ சமூகம் என வளர்ந்ததாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வளர்ச்சி படிநிலைகளை இந்தியாவில் காண முடியவில்லை என்று பலர் கூறியிருக்கிறார்கள். இதுதான் உலகின் மற்ற நாடுகளுக்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகவும் காட்டுகின்றனர். இருந்தும் இதை வேறு கோணத்தில் அணுக வேண்டும் என்பது நமது நிலைபாடு. ஏனெனில் மார்க்சியர்கள் குறிப்பிட்ட சமூக படிநிலை வளர்ச்சி ஐரோப்பாவைத் தவிர்த்த பிற நாடுகளில் காண முடியவில்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் அது நடக்கவே இல்லை. ஐரோப்பாவில் அடிமை முறை தோன்றியபோது ஆப்பிரிக்காவில் குலக்குழு சமூக அமைப்பே நிலவி வந்தது. லத்தீன் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அதே நிலைதான் நீடித்தது. சொல்லப்போனால் இந்த நாடுகள் ஐரோப்பாவில் முதலாளித்துவ சமூக அமைப்புத் தோன்றிய பிறகும்கூட குலக்குழு சமூகங்களாவே  வாழ்ந்து வந்தன. அதனால்தான் மார்கன் போன்ற ஆய்வாளர்கள் ஆதிப்பொதுவுடைமை சமூகத்தை கண்டுபிடிக்க முடிந்தது.

இந்தியாவில் அடிமை முறை உருவாகவில்லை என்று சொல்லப்படுவது குறித்து முழுமையாக அதை இல்லை என் மறுத்துவிட முடியாது. பண்டைய கிரேக்கம், ரோம், எகிப்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளையொத்த அடிமை முறையோ அல்லது மத்திய காலத்தில் ஐரோப்பாவில் உருவான அடிமை வியாபார அமைப்போ இங்கு உருவாகவில்லையா என்றால் அதற்கும் முழுமையாக இல்லை என்று பதில் கூற முடியாது. ஏனெனில் அக்காலகங்களில் அடிமை முறை உருவானதற்கான தேவைகளை ஆராய்ந்தால்தான் இந்திய சூழலில் அது அவ்வாறாக நடக்காமல் போனதற்கான காரணங்களை ஆய முடியும். 

பண்டைய கிரேக்கம், எகிப்து மற்றும் ரோம் அரசுகளைப் பொருத்த மட்டில் அவை முழுமையான நகர அமைப்பாக மாறத் தொடங்கியிருந்தன. அதனால் அதன் கட்டுமானத்திற்கான தொழிலாளர்களைப் பெற வேண்டும். மேலும் இடையறாமல் நடத்தப்பட்ட போர்களில் சிறை பிடிக்கப்பட்டவர்களை கொல்வதற்கு பதில் அவர்களை அடிமைகளாக பயன்படுத்தி அவர்களின் உழைப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுவுமின்றி தேச பொருளாதார விரிவாக்கத்திற்கு இலவச உழைப்பைத் தரும் அடிமைகளைப் பிடிப்பதற்கென்றே போர்கள் நடத்தப்பட்டன. இந்த பாணிதான் மத்திய காலத்தில் அமெரிக்காவிற்கு அடிமைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் நடந்ததற்கு முன்னுதாரணம்.

இப்படி அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கென உருவாக்கப்பட்ட கொட்டடிகளில் வாழ்ந்தனர். அவர்களது குடியிறுப்புகள் தனியாகவே இருந்தன. இந்த குடியிறுப்புகளை நம் வார்த்தையில் சொல்வதானால் சேரி என்றே குறிக்கலாம். இதில் ஏன் இந்திய துணைக்கண்டத்தில் அடிமை முறை பெரிதாக உருவாகவில்லை என்பதற்கு அவ்வளவாக மெனக்கெடத் தேவையில்லை.

அடிமை முறையின் அடிப்படை அம்சமே உழைப்பினை விலையில்லாமல் பெறுவதுதான். உழைப்பை உறிஞ்சும் வரையில் அடிமையை கசக்கிப் பிழிய வேண்டும், அவன் உயிர் வாழ்வதற்கான  தேவையை மட்டும் கொடுத்தாலே போதும் என்கிற அடிப்படைத்தான் அடிமை முறையின் இயங்கியல்.  எனவே இதற்கு உடன்பட மறுப்பவர்களைத்தான் கட்டாயப்படுத்தி அடிமை முறையில் தள்ள முடியும், அதற்குத் தேவை பலாத்காரம். ஆயுத அதிகாரம்.
ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில் இது தலைக்கீழாய் நடந்தது. அதுதான் மற்ற இடங்களிலிருந்து பிரித்துக்காட்டக்கூடிய அம்சமாக இருக்கிறது. சிறறுண்ட சமுகம் நிலையமர்ந்த சமூகத்திடம் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிராமத்தின் வெளியே தனது குடியிறுப்பில் இருந்தபடி அந்த கிராமத்தைப் பாதுகாக்கவும், அதற்கு உழைக்கவும் தயாராக இருக்கிறது. எனவே அடிமை முறைக்கு வாய்ப்பில்லை.  இந்த முறை இந்தியா முழுமைக்கும் ஒரு போக்கு போலவே நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆனால் இதில் கவனிக்கக்கூடிய மிக அடிப்படையான அம்சம் இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையில் உலகின் மற்ற பகுதிகளில் இருந்ததைப் போலவே எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும், தீண்டாமையும் இல்லை. தீட்டு மட்டுமே இருந்தது. இப்போது நாம் காணும் தீண்டாமை என்கிற வடிவம் உருவாவதற்கு இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தன.

மேற்கண்ட கருதுகோள் முழுமையானதாக இருக்குமா என்கிற ஐயம் வாசகருக்கு எழுவது இயல்புதான். சேரிகள் இரண்டு மட்டுமே இருந்துவிட்டால் அது எளிமையான அமைப்பாக இருக்கிறதே என்று சமாதானம் செய்துக்கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு சாதிக்கொரு சேரி இருக்க அவை உருவாதற்கான காரணங்கள் என்னவாக இருந்திருக்கும் என்று கேள்வி எழுவது இயல்புதான். சேரிகளின் உருவாக்கம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி அண்மை காலம் வரை உருவாகிக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.  மட்டுமின்றி அதன் உள்ளடக்கங்கள் மாறவில்லை என்பது இன்னும் ஆச்சர்யமூட்டும் உண்மை. 

தற்போது நாம் வாழும் சூழலில், நகரங்களில் தொழிலாளர்கள் வாழும் சேரிப் பகுதிகளுக்கு என்ன பின்புலத்தை நாம் காட்ட முடியும். அவை நகர கட்டமைப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் தேவைபடும் உழைப்பின் உறைவிடம்தானே. எங்கோ கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து, நாடோடிகளைப் போல அலைந்து, மேட்டுக்குடிகளுக்கு தமது உழைப்பினை விற்க அவர்கள் வாழ அனுமதிக்கப்பட்ட இடம்தானே குடிசைப் பகுதிகள் என்ற சேரிப் பகுதிகள். 
இருப்பினும் இதுவரை கருதுகோள்களை மட்டுமே நாம் விவாதித்திருக்கிறோம். அதை உரசிப் பார்ப்பதற்கான உரைகல் எது..? அதற்கான ஒப்பீட்டுச் சான்றுகளை பண்டைய இலக்கியங்களில் காண முடியமா என்பதை பார்க்க வேண்டும்.

பார்ப்போம்.....!

N. Kannan

unread,
Feb 7, 2016, 11:23:16 PM2/7/16
to மின்தமிழ்
மிக அருமையான தொடர் என அறிகிறேன். வேலைப்பளுவால் இங்கு வரமுடியாததன் இழப்பை இவ்விழை சுட்டுகிறது. எப்படியும் முழுவதையும் படித்துவிடுவேன். இது பற்றிய என் கருத்துகள் அங்கும் இங்குமென பாசுரமடல்களில் வந்திருக்கின்றன. இது பற்றிய விவாதங்கள் அவ்வப்போது மின்தமிழிழில் வந்தபோதும் பேசியுள்ளேன். சாதீயம் என்பதைத் தெளிவாக ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொண்டால்தான் அது அகலும். மேல், கீழ் எனும் தரப்பாடு எல்லா நாடுகளிலும் உள்ளது. அதுவொரு மானுடக்குறைபாடு. ஆயின் தீண்டாமை என்பது இந்தியாவில் மட்டுமே வலுவான எண்ணப்போக்காக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நம் தத்துவங்களும், சமயங்களும் துணை போயுள்ளன. பொதுவாக சாதீயம் என்பது ஒரு குழும அடையாளப் பிரச்சனை. ஒரு தேசத்தை விட்டு இன்னொரு தேசம் போகும் போது அதன் தேவை குறைந்து அது வலுவிழந்து விடுகிறது. 

ஜப்பானில் பிறந்து, ஜெர்மனியில் வளர்ந்து, சுவிஸ்ஸில் வேலை செய்யும் என் பெண் அனுப்பிய ஒரு விமர்சனத்தொடுப்பு:

தலித் பிரச்சனை பற்றி விரிவாகப் பேசுகிறது. உலகம் விழித்துக்கொண்டு வருகிறது.

நன்றி.

நா.கண்ணன்

Suba

unread,
Feb 23, 2016, 11:42:11 AM2/23/16
to மின்தமிழ், Dr.Subashini
இக்கட்டுரையின் ஆசிரியர் சன்னா அனுப்பிய   7ம் பதி இன்று வெளியிடப்படுகின்றது.
-சுபா

சேரி சாதி தீண்டாமை.. மூலவரலாறு - 7

சேரி தோற்றத்தில் ஆரிய திராவிட இன மாயைகள் 
கௌதம சன்னா

சேரி உருவான பொதுவான ஒரு போக்கைப் பற்றி பார்த்தபோது இயல்பாகவே ஒரு கேள்வி வாசகர்களுக்கு எழுந்திருக்கலாம். நமது வரலாறுகள் பேசிவரும் திராவிடன், ஆரியன், ஆதிதிராவிடன் என்ற இனங்களைப் பற்றின தகவல்கள் ஏதும் இதுவரை வரவில்லையே என்று தோன்றினால் அது நியாயமே. இந்திய சமூக அமைப்பைப் பற்றி ஆராய்ந்த அத்தனைப் பேரும் எதிர் கொண்ட கேள்விதான் இது என்றால் நாம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. உண்மையில் இத்தொடரை தொடங்கியது முதல் என்னை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வியது. ஏனெனில் மேற்கண்ட இனங்கள் பற்றின கேள்வி நமது ஆய்வெல்லையின் பொருளோடு தொடர்ந்து பயணித்து வருகிறது, அதை இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

19ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய வரலாற்றை ஆராய்ந்த  ஆராய்ச்சியாளர்களை ஒருவித வரலாற்று மயக்கத்தில் ஆழ்த்தியது சேரி என்கிற அமைப்பு என்றால் ஆச்சர்யாமமாக இருக்கும். இந்தியாவை கிராமங்கக்குப் போய் சுற்றிப் பார்க்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆய்வாளர்களுக்கு எளிதில் தெரியும் தோற்றம் எப்படி இருக்கும். ஒரு கிராமத்திற்குள் நுழைந்தால் ஒரு பார்ப்பனச் சேரி அதாவது அக்கரகாரம், அடுத்து இடைச்சாதிகளின் சேரி அதாவது ஊர், கடைசியாக தீண்டத்தகாத மக்கள் குடியிருக்கும் சேரி. இந்த மூன்று பிரிவு சேரிகளுக்குள் நிலவும் உட்சாதிப் பிரிவுகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கும் மெல்லிய குடியிறுப்பு பிரிவுகள் எடுத்த எடுப்பில் தெரியாது. அக்ரகாரத்திற்கு தெற்கே இடைச்சாதிகளின் சேரி அமைந்திருக்கும், அப்படி இருக்க வேண்டியது மனு தர்மத்தில் குறிக்கப்பட்டிருக்கும் விதி. இந்த மூன்று குடியிறுப்புகளும் சேர்ந்துள்ள தொகுப்பிற்குப் பெயர் வடச்சொல்லில் கிராமம். தமிழில் அதற்கு ஊர் என்றுதான் பொருள். சங்க இலக்கியங்களில் ஊர் என்பதும் அதைத்தான் குறித்தது. பின்னாளில் அது திரிந்தது வேறு.

மேலே குறிப்பிட்ட மூன்று சேரிகள் அல்லது குடியிறுப்புகள் தோன்றியதற்கும் இனப்பிரிவுகளுக்கும் என்ன தொடர்பு.. அது எவ்வாறு ஆய்வாளர்களை மயக்கியது அல்லது குழப்பியது என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் முதலில் ஓர் ஆதி இனம் இருந்தது, கொஞ்ச காலத்திற்குப் பிறகு திராவிடர்கள் வந்தார்கள், அவர்களைத் தொடர்ந்து ஆரியர்கள் குடியேறினார்கள். இது ஓர் அடிப்படையான குடியேற்றக் கொள்கை. தொடர்ச்சியாக யவனர்கள், யூதர்கள், அராபியர்கள், மங்கோலியர்கள், ஐரோப்பியர்கள் உள்ளிட்ட குடியினர் குடியேறிய பகுதியாக இந்திய நிலப்பரப்பு உள்ளது.  அப்படியானால் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட அந்த ஆதி இனம் எது..? 

தென்னிந்திய மக்களின் மனித உடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்ட எம். லூயிஸ் லாப்பிக்யூ என்ற ஆய்வாளர் 1906ல் வெளியிட்ட ஆசிய நீக்ரோக்கள்  என்ற நூலில் பின்வருமாறு தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

‘‘..அந்தமான் வாசிகளோடு அல்லது மற்ற நீக்ராய்டு இனத்தவர்களோடு, தொடர்புடையவர்களாக நாம் காண்பது பறையர்களில் தொடங்கித் தொடர்ந்து கலப்பினமாக உருமாறிச் செல்கின்ற ஒரு கூட்டுக் கலவை இனமாக உருவாகியுள்ள இனமே எனக் கூறலாம். காடுகளின் (நீலகிரி மற்றும் ஆணைமலை) எல்லைப்புறங்களிலும், காடுகள் அழிக்கப்பட்ட குன்றுகளிலும் பாதி பறையர் இனக்கூறுகளும், பாதி காட்டுவாசி இனக்கூறுகளும் கொண்ட சாதியினர் காணப்படுகின்றனர். சமூகப்படிநிலை வரையறைகளில் இவர்களைப் பறையரினும் தாழ்ந்தவராக வரையறைப் படுத்துகின்றனர். நீக்ரோ இனப் பண்புகள் தெளிவாகப் படிந்துள்ள குழுக்கள் இவர்களிடையே மிகுதியாக முற்பட்டுத் தோன்றக் காணலாம். சிலபோது முரட்டுத் தன்மை வாய்ந்ததாகவும் இருக்கத்தான் செய்கின்றனது. இப்படி நாம் கற்பனையைத் தொடர்ந்து நீட்டித்துப் பின்னோக்கி இந்திய சாதிகள் வழியே ஆதிகால இனம்வரை (அவனை அவ்வாறு மீட்டுருவாக்கிக் காண ஒரு படிநிலை மட்டுமே பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும்) போனால் அவனே ஒரு நீக்ரோ...
 ..அவனுக்குரிய பொருத்தமான பெயர் என்னவென்று பார்க்கும்போது சமுதாய, மொழியியல் ஆய்வின் பயனாக அமைந்து விட்டதான திராவிடன் என்ற பெயரை அவனுக்கு உரியதாகத் தொடர்புபடுத்திக்  கூறப்பட்டு வந்தாலும், இந்த நீக்ரோ கூறு கொண்டவன் திராவிடர்களுக்கு முற்பட்டவன் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனவே நாம் அவனைத் திராவிடருக்கு முற்பட்டவன் என அழைக்கலாம். அல்லது அவனுக்கு வேறொரு மக்கள் இனத்தவர்களுடைய செல்வாக்கின் தாக்கம் இல்லாததொரு பெயரைத் தர விரும்பினால் அவனை நாம் அழைப்பதற்குரிய பொருத்தமான பெயர் நீக்ரோ பறையன் என்பதாகும்.’’
மேற்கண்ட கருதுகோள் இன அடிப்படையில் அவதானிக்கப்பட்ட கொள்கை, அதைப்போலவே பலர் தமது கருதுகோள்களை உருவாக்கியிருந்தனர். பண்பாட்டு மற்றும் இன அடிப்படையில் அமைந்தவையும் அவ்வாறே இருந்தன என்பது எதேச்சையானதல்ல. பின்வரும் கருத்தில் அதற்கான அடிப்படைகளை காணமுடியும். சென்னை மாநில நிர்வாகக் கையேட்டில் டாக்டர்.சி.மெக்லீன் பின்வருமாறு எழுதுகிறார்: 

தென்னிந்தியாவின் தெளிவான வரலாறு ஆரிய,திராவிட அரசு முறைகளிடையே நல்ல கலப்பு தோன்றிவிட்ட காலத்திற்கு பிறகே தொடங்குகின்றது. அதற்கு முன்னர் மூன்று வரலாற்று உணர்வினை கண்டடையக் கூடியதாக உள்ளது. அவற்றுள் முதலாவது, திராவிடர்களுக்கு முற்பட்ட மண்ணுக்குரிய மாந்தர்களின் காலப்பகுதி. இரண்டாவது, ஆரியர்கள் தங்களுடைய சமயத்தையும் பழக்க வழக்கங்களையும் திராவிடர்கள் மேல் திணிக்கத் தொடங்கிய காலப்பகுதி. தொண்மையான அரசுகள் குலமரபுகளைக் குறிக்கும்...  

..தென்னிந்திய மக்கள் மொழியின் இலக்கணப் பாங்கு திராவிடர்களுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்ததாயிருப்பதோடு அதில் வேற்று மொழிக்கூறுகள் கலந்திருந்தன என்று கூறுவதற்கான தடயங்கள் ஏதும் காணப்படவில்லை. மலைகளிலும் காடுகளிலும் வாழும் பழங்குடிகளும், பறையர்களும் திராவிட மொழிக்குரிய இலக்கணத்தையும் வினை விகுதிகளையுமே பயன்படுத்துகின்றனர்... 
..மிகத் தொண்மை வாய்ந்த இனத்தவரான  திராவிடர்கள் மனித இன ஊக வரலாற்றில் தாழ்வானதொரு இடத்தையே பெறுகின்றனர். ஆஸ்திரேலிய மண்ணுக்குரிய மாந்தர்களோடு அவர்கள் உறவு கொண்டுள்ளனர். அது அவர்கள் தொல்குடியினரோடு உடன் தோன்றிய தொண்மை உடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. 
மேற்கண்ட கருத்தை எளிமைப்படுத்துவதுபோல திரு.ரைஸ் என்ற மானுடவியல் ஆய்வாளரின் கருத்து அமைந்துள்ளது. இந்தியாவில் வந்து குடியேறிய இனங்கள் எவ்வாறு தமது நிலையமர்ந்தார்கள் என்பதற்காக ஒரு தோற்றத்தை சுவைபடத் தருகிறார்.

வெற்றி கொள்ளப்பட்ட குடியிருப்புகளின் பால் (திராவிடர்கள்) ஆரியர்கள் என்ன நடைமுறையை கையாண்டார்களோ, அதே நடைமுறைகளையே பறையர்கள்பால் திராவிடர்கள் மேற்கொண்டார்கள்.

எளிமையாக சூத்திரம் போல அமைந்துள்ள இக்கருத்தை தமது நூலில் அவர் விரிவாக ஆய்கிறார். அவரது முடிவை பின் கண்டவாறு நாம் விளக்கிக்கொள்ளலாம். இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வ குடிகள் பறையர்கள், இவர்களை வந்தேறி திராவிடர்கள் வெற்றிக்கொண்டு அடிமைப்படுத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஆரியர்கள் உள்ளே நுழைந்தனர். ஆரியருக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போராட்டத்தில் திராவிடர்கள் தோற்ற இடங்களில் ஆரியர்கள் அவர்களை தாழ்ந்த நிலையில் வைத்தனர். அதாவது திராவிடர்கள் பறையர்களை எப்படி நடத்தினார்களோ அவ்வாறே திராவிடர்களை ஆரியர்கள் நடத்தினார்கள் என்று ரைஸ் கருதினார்.

மேற்கண்ட மூவரின் முடிவுகளிலும் இருக்கும் பிரச்சனை என்ன..? பறையர்கள் என்பதுதான் பிரச்சனையாக இருக்கும். பறையர்கள் ஒரு சாதியினராக இருக்கும் பட்சத்தில் இது எப்படி இனமாக இருக்க முடியும் என்று தற்கால பார்வையிலிருந்து கேள்வி எழும். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆராய்ந்த பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பறையர் என்பதை ஒரு பொதுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளனர். தீண்டத்தாகதவர்களாக சேரியில் வாழும் மக்கள் அனைவரையுமே அவர்கள் பறையர் என்ற சொல்லினால்தான் குறித்தனர். பறையர் என்ற இனத்திற்குள்தான் அதன் உட்பிரிவுகளும் சாதிகளாக இருக்கின்றன என்று அவர்கள் கருதினார்கள்.

எனவே மேற்கண்ட மூன்று இனப் பிரிவுகளின் அடிப்படையில் இந்திய கிராமத்தின் குடியிறுப்புகளின் அமைப்பு இருக்கிறது என்றால் அது மிக எளிமையான வரலாற்று உண்மையாக மாறி இருக்கும். ஆனால் வரலாற்றின் போக்கு அப்படி இல்லை என்பதும், ஆரிய மற்றும் திராவிட இனக்கொள்கை என்பது இட்டுக்கட்டப்பட்ட ஒரு வரலாற்று புனைவு என்பதும் இப்போது நிறுவப்பட்டுள்ளது. இந்த இனக்கொள்கையை ஆராய்ந்த பண்டிதர் அயோத்திதாசர் ஆரிய இனம் கற்பனையான கதை என்பதை தமது தமிழன் இதழில் தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார். அதே நேரத்தில் திராவிட இனம் என்பது மொழிவழியான பண்பாட்டு இனம் என்பதை வலியுறுத்தினார். 

ஆயினும் நமது நாட்டு ஆய்வாளர்கள் குறிப்பாக தமிழ்நாட்டு ஆய்வாளர்கள், ஆரியர் என்போர் வந்தேறிகள் என்பதை மட்டும் ஏற்றுக்கொண்டு, திராவிடர்கள் என்பவர் ஒரு தனித்த இனம் என்று தொடர்ந்து வாதிட்டு வ்ந்தனர். சிலர் விதிவிலக்காக இருந்தனர், உதாரணத்திற்கு பார்த்தால், 1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம் என்ற நூலின் ஆசிரியரான கனகசபை இது குறித்த வேறு தோற்றத்தை தருகிறார். தமிழகத்தின் மிகப்பழைய குடியினர் வில்லவர், மீனவர் என்றும், இவர்களை நாகர்கள் வெற்றிக்கொண்டு தமது இருப்பை நிலைநிறுத்தினார்கள், தொடர்ந்து தமிழர்கள் தென்னகத்தினுள் நுழைந்தனர், அதற்குப் பின்னரே ஆரியர் உள்ளிட்ட பிற இனத்தவர் தொடர்ச்சியாக நுழைந்தனர் என்று தமது நூலில் கூறியுள்ளார். மேற்கண்ட நூலை மொழி பெயர்த்த க.அப்பாதுரையார் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வம் உடையவர் தமிழர்கள் இம்மண்ணின் ஆதிகுடிகள் என்பதை வலியுறுத்துபவர்.அதனால் தமது மறுப்பை அந்த நூலுள்ளே பதிவு செய்தார்.

கனகசபையின் கருத்துக்கள் எவ்வாறு எதிர் கொள்ளப்பட்டது என்பதை அவரது மொழிபெயர்ப்பாளரே காட்டிவிட்டார். ஆனால் கனகசபை தமது நூலில் புதிய இனப் பட்டியலை தருகிறார் அதன்படி ஆதிகுடிகள், நாகர், தமிழர், திராவிடர், ஆரியர், மங்கோலியர், மிரான்மர், திரையர், வானவர், கோசர் மற்றும் சில இனங்களை சுட்டிக்காட்டுகிறார். இந்த பட்டியலில் இருக்கும் இனங்களின் கலவைதான் இப்போது இந்தியா முழுதும் பரவியுள்ள மக்களினங்கள் என்பது அவரது முடிபு.
இந்தக் கருத்தோட்டங்களின் தாக்கங்களைப் பற்றி ஆய்வது தனியான ஒன்று, ஆனால் நமது கேள்வி என்னவென்றால் இந்த இனங்கள் எல்லாம் உண்மையாகவே இருந்திருந்தால் அவற்றுக்கான தனித்தனி குடியிறுப்புகள் அல்லது சேரிகள் உருவாகியிருக்க வேண்டும், அவை நீண்ட நெடுங்காலம் நிலைத்திருக்க வேண்டும். ஆனால் சில தருணங்களில் அப்படி நடந்திருக்கின்றன. குறிப்பாக தென்னகத்தில் குடியேறிய யூதர்கள் கேரளப் பகுதிகளில் குடியமர்ந்தபோது தனிச் சேரிகளில்தான் குடியமர்ந்தனர். அந்த சேரிகள் தற்போது இல்லை என்று நம்மால் உறுதியாக கூறமுடியும். அதுபோலவே, மொகலாயர்களின் ஆட்சியில் குடியேறியவர்கள் நாடு முழுதும் தமக்கான குடியிறுப்புகளை உருவாக்கிக்கொண்டு தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்பது உண்மைதான், ஆனால் அவ்வாறு குடியேறிய இசுலாமியர்களும் தீண்டத்தாகதவர்கள் வசிக்கும் சேரிக்கு அருகில் தமது குடியிறுப்புகளை உருவாக்காமல், ஊர் பகுதியிலேயே தமது குடியிறுப்புகளை உருவாக்கிக்கொண்டார்கள், மிகுந்த சாதி கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் ஊர் பகுதியின் ஓர் அங்கமாகத்தான்  இசுலாமியர் குடியிறுப்புகள் உருவாயின.

சரி, இந்த பிரச்சினையில் அம்பேத்கரின் கருத்து என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் ஒரு முடிவிற்கு வர முடியும். முதலில் ஆரியர்கள் பற்றி அம்பேத்கரின் கருத்து என்வென்று பார்ததால் அது மற்றவர்களிருந்து வேறுபட்டது. சொல்லப்போனால் எதிரானது என்றுகூடக் கூறலாம். அவர் கூறுகிறார்..

‘ஆரிய இனக்கோட்பாடு மிகவும் அபத்தமானது. அது நீண்ட காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அந்தக் கோட்பாடு உயிர்விடாமல், மக்களிடம் பெரும் பிடிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய ஒரு நிகழ்வுப் போக்குக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் பிராமண படிப்பாளிகடையே இக் கோட்பாடு பெற்றிருக்கும் ஆதரவாகும். இதனை மிகவும் விந்தையான ஒரு நிக்ழ்வுப்போக்கு எனலாம். ஆசிய இனங்களின்மேல்  ஐரோப்பிய இனங்களுக்குள்ள மேன்மையை, மேம்பாட்டை ஒப்புக்கொள்ளும் இந்த ஆரிய இன கோட்பாட்டின் மேல் இந்துக்கள் என்ற முறையில் அவர்கள் நியாயமாக தங்கள் வெறுப்பை காட்டியிருக்க வேண்டும். ஆனால் பிராமண அறிஞர்கள் பதிலாக அதனை தலைமீது தூக்கி வைத்துக்கொண்டு போற்றிப் புகழ்கின்றனர். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. பிராமணர்கள் இரு தேசக் கோட்பாட்டை ஆதரிக்கின்றனர். தங்களை ஆரிய இனத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் பாவிக்கின்றனர். ஏனைய இந்துக்களை ஆரியரல்லாதவர்களின் வழித்தோன்றலாகக் கருதுகின்றனர். ஐரோப்பிய இனங்களுடன் தங்களுக்குள்ள குருதித்தொர்புடைய உறவை நிலைநாட்டிக் கொள்வதற்கும், அந்த இனங்களுக்குள்ள அகந்தையையும், அவர்களது மேம்பட்ட நிலையையும் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த கோட்பாடு பிராமணர்களுக்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக ஆரியர்களை படையெடுப்பாளர்களாவும் ஆரியரல்லாத சுதேசி இனங்களின் மீது வெற்றிவாகை சூடியவர்களாகவும் படம்பிடித்துக் காட்டும் கோட்பாட்டின் இந்தப் பகுதி பிராமணர்களைப் பெரிதும் கவர்கிறது. ஏனென்றால் பிராமணரல்லாதார் மீது தங்களுக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டவும் நியாயப்படுத்தவும் இது துணைப் புரிகிறது. (டாக்டர்.அம்பேத்கர். சூத்திரர் யார் பக்கம் 121-122)

அது அம்பேத்கரின் ஆய்வு முடிவு படி ஆரியர் இனம் என்பதே ஒரு கற்பனை என்பதை உறுதி படுத்துகிறார். அவரது முடிவுபடி அது அரசியல் காரணங்களுக்காக இட்டுக் கட்டப்பட்ட புனைவு. அதேபோல திராவிடர் இனம் என்பதையும் அம்பேத்கர்  மறுக்கிறார். அவரது கருத்துப்படி திராவிட இனம் என்பது ஒன்று இல்லை. தமிழ் என்பதற்கு திராமிள என்கிற வடசொல்லின் திரிபுபடி திராவிட என திரிந்தது. ஆனால் ஆரிய இனம் என்பதை நிலைநிறுத்த இந்த திராவிட இனமும் கட்டமைக்கப்பட்டது. எனவே இரண்டும் வரலாற்றுப் புனைவுகள். அதே நேரத்தில் திராவிட மற்றும் ஆரிய இனங்கள் என்பது பண்பாட்டு அடிப்டையிலான பிரிவுகளே தவிர வேறில்லை. இந்த திராவிட பண்பாட்டு இனத்தின் ஆதி இனம் நாக இனம் என்பதும் அதன் தொடர்பு மொழியாக தமிழ் இருந்தது. சொல்லப்போனால்  இந்தியாவில் ஆரியப் பண்பாடு மற்றும் நாகர் பண்பாடு என்பவை மட்டுமே இருந்தன என்றும், இந்திய வரலாற்றின் இயக்கமே இவ்விரண்டு இனங்களின் போராட்டத்தினால்தான் நிகழ்ந்தன என்று அம்பேத்கர் நிறுவினார்.

அம்பேத்கரின் இந்த ஆய்வு முடிவு அன்றைக்கு கடும் அதிர்ச்சியை அறிவுத் தளத்தில் உருவாக்கியது. கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். ஓர் எளிமையான கொள்கை அடிப்படையில் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் ஆரியர்கள் நுழைந்தனர் என்பது எப்படி நம்ப வைக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஐரோப்பிய ஜெர்மானிய கலப்பாக கருதப்படும் ஆரியர்கள் இந்தியாவிற்கு நுழைய வேண்டுமானால் அவர்கள் இரண்டு வழிகளில் கடந்து வரவேண்டும். ஜெர்மனியிலிருந்து மத்திய தரைக்கடல் கரை மார்க்கமாக  ஸ்பெயின் வழியாக ஆப்பிரிக்க கண்டம் ஓரமாக இஸ்ரேல் வழியாக ஜோர்டான், அரேபிய பாலைவனங்களை கடந்து ஆப்கானிஸ்தான் வழியாக, பாகிஸ்தானிலுள்ள கைபர் போலன் கணவாயை அடைய வேண்டும். மற்றொரு வழி தற்போதை போலந்த், உக்ரேன் வழியாக அரபு பாலைவன நாடான ஈரான் வழியாக, ஆப்கானிஸ்தானத்தில் நுழைந்து, பாகிஸ்தானிலுள்ள கைபர் போலன் கணவாய் வழியாக தற்போதைய வரவேண்டும்.

மாடுகளையும், குதிரைகளையும் மேய்த்துக் கொண்டிருந்த ஆரியர்கள் எந்த நோக்கத்திற்காக படையெடுத்து வந்தார்கள் என்பதை யாரும் அவ்வளவு துல்லியப்படுத்தவில்லை. இவ்வளவு பெரிய பயணப்பாதையை அவர்கள் கடக்கும்போது வழியில் எத்தனையோ ஆபத்துகள் நிறைந்த இயற்கை இடர்களையும் சமுகங்களையும், காட்டுமிராண்டி கூட்டங்களையும் அவர்கள் கடந்து வந்திருக்க வேண்டும். அத்தனை ஆபத்துக்களையும் கடந்து அவர்கள் நுழைந்ததாக கருதப்படும் கி.மு.3500 வாக்கில் இந்தியாவின் எல்லை எதுவாக இருந்திருக்கும். இந்தியா என்கிற நாடே அன்றைக்கு இல்லாதபோது இந்திய எல்லைக்குள் நுழைந்தார்கள் என்று கருதுவது எவ்வளவு அபத்தம். ஆனால் இந்த அபத்தம் இன்றுவரை விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. அதற்குக் காரணம் அதன் பின்னுள்ள அரசியல் மட்டுமே.
அதேபோலத்தான் திராவிட இனம் பற்றின வரலாறும். திராவிட இனம் பற்றின கருத்தாக்கம் தொடக்கக் காலத்தில் ஒரு சாரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை மறுத்து அதில் முதல் அடியை கொடுத்தவர் பண்டிதர். பிறகு தனித்தமிழ் இயக்கவாதிகள் அதை தொடர்ந்தார்கள். ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்றால் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாகவும், திராவிட இனக் கொள்கையை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம், மளையாள மொழிகளை பேசுபவர்களாக இருந்தனர். இவர்களின் அரசியல் போக்கினால்தான் திராவிட இனம் என்கிற கருத்தாக்கமும் வாழ்ந்தது. விளைவாய் வரலாற்றில் கண்டடைய வேண்டிய பண்டைய கால அமைப்புகளின் மீளாய்வை இவை மறைத்து, வெறும் பழம் பெருமைகளை பேசும் நிலைக்கு வரலாற்று அறிவியலை தள்ளிவிட்டது.

எனவே சேரிகள் உருவாக்கத்தில் இனக்கோட்பாடு உதவவில்லை என்றால் எதை நாம் கைக்கொள்வது. இக்கேள்விக்கு விடை அம்பேத்கரின் ஆய்வுகள்தான் உதவுகின்றன. ஆரிய இனம் என்பது இந்தியத் துணைக் கண்டததிற்குள் நுழைந்தது என்று கருதப்படும் காலத்திற்கு முன்பே இங்கு சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது. அது இங்கிருந்த ஆதி குடிகளுக்குள்ளேயே நிலைமர்ந்து வாழ்ந்த குழுவிற்கும், சிதறடிக்கப்பட்ட குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமாக தொடங்கி ஒரு சமுக போக்காக நிகழ்ந்துக்கொண்டிருந்தது.  கிராமத்தின் இரு பிரவுகளாக இருந்த குடியிறுப்புகளுக்குள் எந்தவிதமான பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் அப்போதைக்கு இல்லை. சொல்லப்போனால் சாதி என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்பே சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது.

இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டவை ஆய்வுகள் அடிப்படையில் அமைந்த முடிவுகளைத்தான் என்பதை வாசகர்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். ஆய்வுகளின் தரவுகளை முன்னெடுப்பது இந்த தொடருக்கு சாத்தியமில்லாதது, அது ஒரு தனிப் பிரிவு. அதே நேரத்தில் இதில் குறிக்கப்பட்டிருக்கும் நாகர்கள் என்கிற பண்பாட்டு இனப்பிரிவு குறித்து நமது ஆய்வாளர்கள் அவ்வளாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்திய பண்பாட்டு வரலாற்றின் பல புதிர்கள் இவர்களை மையப்படுத்தி இருக்கின்றன என்பது மணிமேகலை காப்பிய காலத்திலேயே தெரிகிறது. ஆனால் மணிமேகலை உரையாசிரியர்கள் நாகர்களை மனிதர்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டவர்கள் என்று திரித்திருக்கிறார்கள் என்றால் அதன் தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள முடியும். எனவே அதை தனி அத்தியாயமாக பின்னர் பார்ப்போம்.. எனவே.. இதுவரை பார்த்தவைகளை தொகுத்துக் கொண்டால் பின்வரும் முடிவுகளை பெறலாம்.

சேரிகள் உருவாக்கத்தில் இனக்கொள்கை என்பது எவ்வகையிலும் பொருந்தவில்லை.
இந்தியாவில் உள்ள இனக்கொள்கை என்பதே புனைவு

ஆரியர், திராவிடர் என்ற இனக்கொள்கையே மாயை.. புனைவு.

ஆரியர் திராவிடர் என்பது பண்பாட்டு பிரிவுகளே தவிர இனப்பிரிவுகள் அல்ல.
20ஆம் நூற்றாண்டி ஆதிக்க சாதிகளின் அரசியலை உயர்த்திப் பிடிக்கவே இக்கொள்கைகள் முனனிருத்தப்பட்டன.

மேற்கண்ட முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியை தரலாம். ஆனால் வரலாறு அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அந்த அதிர்ச்சிகளையும், வியப்புகளையும் தன்னுள் கரைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும். இப்படி உருவான சேரிகள் எப்படி பல்கிக் பெருகின, அவை எப்படி செயல்பட்டன, எவ்வாறு பரிமாணம் அடைந்தன என்பதை பார்க்க வேண்டும்.

( பார்ப்போம்....)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Suba

unread,
Feb 23, 2016, 12:22:18 PM2/23/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-23 17:42 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:
தென்னிந்திய மக்களின் மனித உடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்ட எம். லூயிஸ் லாப்பிக்யூ என்ற ஆய்வாளர் 1906ல் வெளியிட்ட ஆசிய நீக்ரோக்கள்
​(Les Negres d’Asie, et la race ed general, Revne Scientifique VI July 1906) ​
 
என்ற நூலில் பின்வருமாறு தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

​விடுபட்ட நூல் குறிப்பை வழங்கியிருக்கின்றேன்.

சுபா

Suba

unread,
Feb 23, 2016, 12:26:47 PM2/23/16
to மின்தமிழ், Dr.Subashini
கட்டுரையை மீண்டும் மீள்பதிவு செய்கின்றேன். ஒரு பகுதி விடுபட்டிருந்தது.
-சுபா

சேரி, சாதி, தீண்டாமை-மூலவரலாறு  - 7

சேரி தோற்றத்தில் ஆரிய திராவிட இன மாயைகள் 
கௌதம சன்னா

சேரி உருவான பொதுவான ஒரு போக்கைப் பற்றி பார்த்தபோது இயல்பாகவே ஒரு கேள்வி வாசகர்களுக்கு எழுந்திருக்கலாம். நமது வரலாறுகள் பேசிவரும் திராவிடன், ஆரியன், ஆதிதிராவிடன் என்ற இனங்களைப் பற்றின தகவல்கள் ஏதும் இதுவரை வரவில்லையே என்று தோன்றினால் அது நியாயமே. இந்திய சமூக அமைப்பைப் பற்றி ஆராய்ந்த அத்தனைப் பேரும் எதிர் கொண்ட கேள்விதான் இது என்றால் நாம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. உண்மையில் இத்தொடரை தொடங்கியது முதல் என்னை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வியது. ஏனெனில் மேற்கண்ட இனங்கள் பற்றின கேள்வி நமது ஆய்வெல்லையின் பொருளோடு தொடர்ந்து பயணித்து வருகிறது, அதை இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

19ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய வரலாற்றை ஆராய்ந்த  ஆராய்ச்சியாளர்களை ஒருவித வரலாற்று மயக்கத்தில் ஆழ்த்தியது சேரி என்கிற அமைப்பு என்றால் ஆச்சர்யாமமாக இருக்கும். இந்தியாவை கிராமங்கக்குப் போய் சுற்றிப் பார்க்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆய்வாளர்களுக்கு எளிதில் தெரியும் தோற்றம் எப்படி இருக்கும். ஒரு கிராமத்திற்குள் நுழைந்தால் ஒரு பார்ப்பனச் சேரி அதாவது அக்கரகாரம், அடுத்து இடைச்சாதிகளின் சேரி அதாவது ஊர், கடைசியாக தீண்டத்தகாத மக்கள் குடியிருக்கும் சேரி. இந்த மூன்று பிரிவு சேரிகளுக்குள் நிலவும் உட்சாதிப் பிரிவுகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கும் மெல்லிய குடியிறுப்பு பிரிவுகள் எடுத்த எடுப்பில் தெரியாது. அக்ரகாரத்திற்கு தெற்கே இடைச்சாதிகளின் சேரி அமைந்திருக்கும், அப்படி இருக்க வேண்டியது மனு தர்மத்தில் குறிக்கப்பட்டிருக்கும் விதி. இந்த மூன்று குடியிறுப்புகளும் சேர்ந்துள்ள தொகுப்பிற்குப் பெயர் வடச்சொல்லில் கிராமம். தமிழில் அதற்கு ஊர் என்றுதான் பொருள். சங்க இலக்கியங்களில் ஊர் என்பதும் அதைத்தான் குறித்தது. பின்னாளில் அது திரிந்தது வேறு.

மேலே குறிப்பிட்ட மூன்று சேரிகள் அல்லது குடியிறுப்புகள் தோன்றியதற்கும் இனப்பிரிவுகளுக்கும் என்ன தொடர்பு.. அது எவ்வாறு ஆய்வாளர்களை மயக்கியது அல்லது குழப்பியது என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் முதலில் ஓர் ஆதி இனம் இருந்தது, கொஞ்ச காலத்திற்குப் பிறகு திராவிடர்கள் வந்தார்கள், அவர்களைத் தொடர்ந்து ஆரியர்கள் குடியேறினார்கள். இது ஓர் அடிப்படையான குடியேற்றக் கொள்கை. தொடர்ச்சியாக யவனர்கள், யூதர்கள், அராபியர்கள், மங்கோலியர்கள், ஐரோப்பியர்கள் உள்ளிட்ட குடியினர் குடியேறிய பகுதியாக இந்திய நிலப்பரப்பு உள்ளது.  அப்படியானால் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட அந்த ஆதி இனம் எது..? 

தென்னிந்திய மக்களின் மனித உடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்ட எம். லூயிஸ் லாப்பிக்யூ என்ற ஆய்வாளர் 1906ல் வெளியிட்ட ஆசிய நீக்ரோக்கள்  ​(Les Negres d’Asie, et la race ed general, Revne Scientifique VI July 1906) என்ற நூலில் பின்வருமாறு தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தேமொழி

unread,
Feb 23, 2016, 1:15:29 PM2/23/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Tuesday, February 23, 2016 at 9:26:47 AM UTC-8, Suba.T. wrote:
கட்டுரையை மீண்டும் மீள்பதிவு செய்கின்றேன். ஒரு பகுதி விடுபட்டிருந்தது.

முழு கட்டுரையும்  இன்னமும் கிடைக்கவில்லை சுபா ...

நீளமாக இருந்தால் வெட்டுப்பட்டு விடுகிறது.  எனவே...

[...]
மாடுகளையும், குதிரைகளையும் மேய்த்துக் கொண்டிருந்த ஆரியர்கள் எந்த நோக்கத்திற்காக படையெடுத்து வந்தார்கள் என்பதை யாரும் அவ்வளவு துல்லியப்படுத்தவில்லை.

இந்தவரிக்கு பின்னர் வருவதை  மட்டும் 

சேரி, சாதி, தீண்டாமை-மூலவரலாறு  - 7
சேரி தோற்றத்தில் ஆரிய திராவிட இன மாயைகள் 
கௌதம சன்னா
7 ஆம் பகுதியின் தொடர்ச்சி.... 

என்று குறிப்பிட்டு மட்டும் மீண்டும் பதிவிடுங்கள் 

எழுத்தாளர்களின் கவனத்திற்கு:
எழுத்துகள்:  13,000 (including spaces)
வார்த்தகைகள் :  1,300
வரிகள்: 130 
இதுவே பாதுகாப்பான எல்லையாகத் தெரிகிறது 
இவற்றுக்குள் உங்கள் பதிவுகள் 
(முதல் தலைப்பிலிருந்து ....  இறுதியில் சான்றுகள் உட்பட   முழுவதுமே) அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள் 
அதாவது 8 நிமிடங்களுக்குள் படிக்கக் கூடிய பதிவாக இருக்க வேண்டும்...
(அதற்கு மேல் படிக்க யாருக்கு இங்கே நேரம் இருக்கிறது!!!!)

எல்லை மீறாதீர்கள் .....
மீறினால்  வெட்டிடுவாங்க கூகுள்

..... தேமொழி

Suba

unread,
Feb 23, 2016, 3:15:03 PM2/23/16
to தேமொழி, மின்தமிழ்
ஓ சரி..
2 பதிவுகளாக விடுபட்ட பகுதியை மட்டும் வெளியிடுகின்றேன்.
 
நன்றி

Suba

unread,
Feb 23, 2016, 3:16:04 PM2/23/16
to மின்தமிழ், Dr.Subashini
விடுபட்ட பகுதியை மீண்டும் வெளியிடுகின்றேன்.
-சுபா

அதேபோலத்தான் திராவிட இனம் பற்றின வரலாறும். திராவிட இனம் பற்றின கருத்தாக்கம் தொடக்கக் காலத்தில் ஒரு சாரரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதை மறுத்து அதில் முதல் அடியை கொடுத்தவர் பண்டிதர். பிறகு தனித்தமிழ் இயக்கவாதிகள் அதை தொடர்ந்தார்கள். ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்றால் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாகவும், திராவிட இனக் கொள்கையை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம், மளையாள மொழிகளை பேசுபவர்களாக இருந்தனர். இவர்களின் அரசியல் போக்கினால்தான் திராவிட இனம் என்கிற கருத்தாக்கமும் வாழ்ந்தது. விளைவாய் வரலாற்றில் கண்டடைய வேண்டிய பண்டைய கால அமைப்புகளின் மீளாய்வை இவை மறைத்து, வெறும் பழம் பெருமைகளை பேசும் நிலைக்கு வரலாற்று அறிவியலை தள்ளிவிட்டது.

எனவே சேரிகள் உருவாக்கத்தில் இனக்கோட்பாடு உதவவில்லை என்றால் எதை நாம் கைக்கொள்வது. இக்கேள்விக்கு விடை அம்பேத்கரின் ஆய்வுகள்தான் உதவுகின்றன. ஆரிய இனம் என்பது இந்தியத் துணைக் கண்டததிற்குள் நுழைந்தது என்று கருதப்படும் காலத்திற்கு முன்பே இங்கு சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது. அது இங்கிருந்த ஆதி குடிகளுக்குள்ளேயே நிலைமர்ந்து வாழ்ந்த குழுவிற்கும், சிதறடிக்கப்பட்ட குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமாக தொடங்கி ஒரு சமுக போக்காக நிகழ்ந்துக்கொண்டிருந்தது.  கிராமத்தின் இரு பிரவுகளாக இருந்த குடியிறுப்புகளுக்குள் எந்தவிதமான பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் அப்போதைக்கு இல்லை. சொல்லப்போனால் சாதி என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்பே சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது.

இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டவை ஆய்வுகள் அடிப்படையில் அமைந்த முடிவுகளைத்தான் என்பதை வாசகர்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். ஆய்வுகளின் தரவுகளை முன்னெடுப்பது இந்த தொடருக்கு சாத்தியமில்லாதது, அது ஒரு தனிப் பிரிவு. அதே நேரத்தில் இதில் குறிக்கப்பட்டிருக்கும் நாகர்கள் என்கிற பண்பாட்டு இனப்பிரிவு குறித்து நமது ஆய்வாளர்கள் அவ்வளாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்திய பண்பாட்டு வரலாற்றின் பல புதிர்கள் இவர்களை மையப்படுத்தி இருக்கின்றன என்பது மணிமேகலை காப்பிய காலத்திலேயே தெரிகிறது. ஆனால் மணிமேகலை உரையாசிரியர்கள் நாகர்களை மனிதர்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டவர்கள் என்று திரித்திருக்கிறார்கள் என்றால் அதன் தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள முடியும். எனவே அதை தனி அத்தியாயமாக பின்னர் பார்ப்போம்.. எனவே.. இதுவரை பார்த்தவைகளை தொகுத்துக் கொண்டால் பின்வரும் முடிவுகளை பெறலாம்.

சேரிகள் உருவாக்கத்தில் இனக்கொள்கை என்பது எவ்வகையிலும் பொருந்தவில்லை.
இந்தியாவில் உள்ள இனக்கொள்கை என்பதே புனைவு

ஆரியர், திராவிடர் என்ற இனக்கொள்கையே மாயை.. புனைவு.

ஆரியர் திராவிடர் என்பது பண்பாட்டு பிரிவுகளே தவிர இனப்பிரிவுகள் அல்ல.
20ஆம் நூற்றாண்டி ஆதிக்க சாதிகளின் அரசியலை உயர்த்திப் பிடிக்கவே இக்கொள்கைகள் முனனிருத்தப்பட்டன.

மேற்கண்ட முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியை தரலாம். ஆனால் வரலாறு அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அந்த அதிர்ச்சிகளையும், வியப்புகளையும் தன்னுள் கரைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும். இப்படி உருவான சேரிகள் எப்படி பல்கிக் பெருகின, அவை எப்படி செயல்பட்டன, எவ்வாறு பரிமாணம் அடைந்தன என்பதை பார்க்க வேண்டும்.

தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாகவும், திராவிட இனக் கொள்கையை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம், மளையாள மொழிகளை பேசுபவர்களாக இருந்தனர். இவர்களின் அரசியல் போக்கினால்தான் திராவிட இனம் என்கிற கருத்தாக்கமும் வாழ்ந்தது. விளைவாய் வரலாற்றில் கண்டடைய வேண்டிய பண்டைய கால அமைப்புகளின் மீளாய்வை இவை மறைத்து, வெறும் பழம் பெருமைகளை பேசும் நிலைக்கு வரலாற்று அறிவியலை தள்ளிவிட்டது.

எனவே சேரிகள் உருவாக்கத்தில் இனக்கோட்பாடு உதவவில்லை என்றால் எதை நாம் கைக்கொள்வது. இக்கேள்விக்கு விடை அம்பேத்கரின் ஆய்வுகள்தான் உதவுகின்றன. ஆரிய இனம் என்பது இந்தியத் துணைக் கண்டததிற்குள் நுழைந்தது என்று கருதப்படும் காலத்திற்கு முன்பே இங்கு சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது. அது இங்கிருந்த ஆதி குடிகளுக்குள்ளேயே நிலைமர்ந்து வாழ்ந்த குழுவிற்கும், சிதறடிக்கப்பட்ட குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமாக தொடங்கி ஒரு சமுக போக்காக நிகழ்ந்துக்கொண்டிருந்தது.  கிராமத்தின் இரு பிரவுகளாக இருந்த குடியிறுப்புகளுக்குள் எந்தவிதமான பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் அப்போதைக்கு இல்லை. சொல்லப்போனால் சாதி என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்பே சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது.

இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டவை ஆய்வுகள் அடிப்படையில் அமைந்த முடிவுகளைத்தான் என்பதை வாசகர்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். ஆய்வுகளின் தரவுகளை முன்னெடுப்பது இந்த தொடருக்கு சாத்தியமில்லாதது, அது ஒரு தனிப் பிரிவு. அதே நேரத்தில் இதில் குறிக்கப்பட்டிருக்கும் நாகர்கள் என்கிற பண்பாட்டு இனப்பிரிவு குறித்து நமது ஆய்வாளர்கள் அவ்வளாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்திய பண்பாட்டு வரலாற்றின் பல புதிர்கள் இவர்களை மையப்படுத்தி இருக்கின்றன என்பது மணிமேகலை காப்பிய காலத்திலேயே தெரிகிறது. ஆனால் மணிமேகலை உரையாசிரியர்கள் நாகர்களை மனிதர்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டவர்கள் என்று திரித்திருக்கிறார்கள் என்றால் அதன் தீவிரத்தைப் புரிந்துக்கொள்ள முடியும். எனவே அதை தனி அத்தியாயமாக பின்னர் பார்ப்போம்.. எனவே.. இதுவரை பார்த்தவைகளை தொகுத்துக் கொண்டால் பின்வரும் முடிவுகளை பெறலாம்.

சேரிகள் உருவாக்கத்தில் இனக்கொள்கை என்பது எவ்வகையிலும் பொருந்தவில்லை.
இந்தியாவில் உள்ள இனக்கொள்கை என்பதே புனைவு
ஆரியர், திராவிடர் என்ற இனக்கொள்கையே மாயை.. புனைவு.
ஆரியர் திராவிடர் என்பது பண்பாட்டு பிரிவுகளே தவிர இனப்பிரிவுகள் அல்ல.
20ஆம் நூற்றாண்டி ஆதிக்க சாதிகளின் அரசியலை உயர்த்திப் பிடிக்கவே இக்கொள்கைகள் முனனிருத்தப்பட்டன.

மேற்கண்ட முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியை தரலாம். ஆனால் வரலாறு அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அந்த அதிர்ச்சிகளையும், வியப்புகளையும் தன்னுள் கரைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும். இப்படி உருவான சேரிகள் எப்படி பல்கிக் பெருகின, அவை எப்படி செயல்பட்டன, எவ்வாறு பரிமாணம் அடைந்தன என்பதை பார்க்க வேண்டும்.
( பார்ப்போம்....)

Innamburan S.Soundararajan

unread,
Feb 23, 2016, 11:27:14 PM2/23/16
to mintamil, Dr.Subashini
திரு.கெளதம சன்னா அவர்களின் கருத்துக்களில் பலவற்றுடன் என் அனுபவங்களும், கருத்துக்களும் ஒத்துப்போகின்றன. அவர் நேராக பங்கு கொள்ளமாட்டாரா?
--

Tthamizth Tthenee

unread,
Feb 24, 2016, 12:45:13 AM2/24/16
to mint...@googlegroups.com

2016-02-24 9:56 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
சாதி என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்பே சேரி என்கிற அமைப்பு உருவாகிவிட்டது.

​முதன் முதலில் மக்கள் சேர்ந்து வாழ்த் தொடங்கிய போது  எவரால் என்ன வேலைகள் செய்ய முடியும்  என்பது அவரவர் விருப்பத்திற்கேற்ப   தொடங்கியது
ஒரு கிராமம் என்றால்   "கோயில் இல்லா ஊரில்  குடியிருக்க வேண்டாம் " என்னும் சொல்லுக்கேற்ப  ஒரு கோயில் அமைந்தது. அந்தக் கோயிலைச் சுற்றி  குளங்களும் மாட வீதிகளும் அமைந்தன​

கோயிலில்  வேலைபார்க்கும்  அர்ச்சகர்  போன்றோர்  மாட வீதிகளிலும்

திருவீதிப் புறப்பாடு என்பதை நிறைவேற்றக் கூடிய பலம் பொருந்தியவர்கள் அடுத்த  பகுதியிலும்  

கிராமத்து மக்களுக்காக  ஏற்படுத்தப்பட்ட  பள்ளியில் வேலை செய்வோர் அடுத்த பகுதியிலும் இருந்தனர்

அதையடுத்து  வண்ணான்   சவரம் செய்பவர்  வீடுகட்டிக் கொடுக்கும்  கொத்தனார்கள் சித்தாள்கள்  ,  இருந்தனர்,

அதையடுத்து  வயல் வெளியில் வேலை செய்வோர்  அவர்கள் வேலைக்கு உதவியாக அடுத்த பகுதியில் இருந்தனர்

அதை அடுத்து  சுடுகாடு அல்லது இடுகாடு  கிராமத்தின்  எல்லையில் அமைக்கப்பட்டது
அங்கே வேலை செய்வோர்  அதன் அருகே இருந்தனர்

ஆனால் மனிதர்  வேலைத் திறமையை மறந்து  அர்ச்சகர் வேலை  ஆலையங்களில் செய்யும் வேலைகள் செய்வோர்  உயர்ந்தவர் , இடுகாட்டில் வேலை செய்வோர் தாழ்ந்தவர்   என்று எப்போது  மக்களிடையே  மன நிலை மாறுபட்டதோ  அப்போது சேரிகள்  தோன்றின என்று நினைக்கிறேன்

yesu rajan

unread,
Feb 24, 2016, 1:10:11 AM2/24/16
to mintamil
//

ஆனால் மனிதர்  வேலைத் திறமையை மறந்து  அர்ச்சகர் வேலை  ஆலையங்களில் செய்யும் வேலைகள் செய்வோர்  உயர்ந்தவர் , இடுகாட்டில் வேலை செய்வோர் தாழ்ந்தவர்   என்று எப்போது  மக்களிடையே  மன நிலை மாறுபட்டதோ  அப்போது சேரிகள்  தோன்றின என்று நினைக்கிறேன்
//

இந்த விவாதத்தில் பங்கு கொள்ளலாமா ?

அர்சகர் என்பவர் உயர்ந்தவர் என்பது எந்த காண்டெஸ்டில் சொல்லப்பட்டது என அறியவேண்டும்

பிராமணன் என்பது பிரம்மத்தோடு ஒன்றிணைபவர்கள் என்று பொருள்

மொத்த சமூகமும் பிராமணத்துவத்தை அடைய வேண்டும் என்கிற கருது கோளில்தான் சாதி அமைப்பு உருவாக்கப்பட்டது

அதாவது இக உலகத்தின் இன்பம் தூய்த்து வாழ்வது நோக்கம் அல்ல

இந்த பேருலகத்தில் பூமி என்பது இடைதட்டு என்றே கருதப்பட்டது

கர்ம பூமி என்று இதற்கு பெயர்

ஆகையால் இந்த பூமியில் தத்தம் வினைக்கேற்ப சாதியில் பிறந்தவர்கள்

அவர்தம் பணியை பொறுத்து அடுத்த அடுத்த சாதிக்கு மாறிச்செல்வர்

ஆனால் பணியில் ஏற்றத்தாழ்வு இல்லை

கர்மாதான் அவர்தம் பணியை பிறப்பை தீர்மானிக்கிறது

மனிதன் தன் உணர்வை இழந்த ஆத்ம பிடிப்பை இழந்த பின்
இந்த முறைகள் தவறாக தெரிகிறது

வேத ம் உபநிசத்துக்கள் கர்மயோகத்துக்கு பூமியை கைகாட்டுகின்றன

ஆகவே சாதி பிரிவினையை பற்றி ஆய்ந்தரியும் போது

கடவுள் கர்மா , மறுபிறப்பு ஆகியவற்றின் பின்புலம் இல்லாது

வெறுமனே சாதியை எப்படி அணுக முடியும்

யேசுராஜன்

Tthamizth Tthenee

unread,
Feb 24, 2016, 1:23:39 AM2/24/16
to mint...@googlegroups.com

2016-02-24 11:40 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
மக்களிடையே  மன நிலை மாறுபட்டதோ  அப்போது சேரிகள்  தோன்றின என்று நினைக்கிறேன்

Suba

unread,
Feb 24, 2016, 11:52:33 AM2/24/16
to Innamburan S.Soundararajan, mintamil, Dr.Subashini, G Sannah
2016-02-24 5:26 GMT+01:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
திரு.கெளதம சன்னா அவர்களின் கருத்துக்களில் பலவற்றுடன் என் அனுபவங்களும், கருத்துக்களும் ஒத்துப்போகின்றன. அவர் நேராக பங்கு கொள்ளமாட்டாரா?

​பங்கு கொள்வாரே. 
அவரும் உறுப்பினர் தான்.  

​சுபா

G Sannah

unread,
Feb 24, 2016, 1:16:24 PM2/24/16
to Suba, Innamburan S.Soundararajan, mintamil
வணக்கம்..

என்னுடைய கட்டுரைத் தொடர் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். போகிற போக்கில் சொல்லப்படும் கருத்துக்கள் எனது ஆய்வு நோக்கத்தை திசைத்திருப்பிவிடும், எனவே அவற்றிற்கு என்னால் பதில் கூற இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோயில்கள் உருவானப் பிறகுதான் சேரிகள் உருவாகியிருக்கும் என்று ஏசுராசன் அவர்கள் சொன்ன கருத்து பாதி தவறு மீதி உண்மை. சேரிகள் உருவானபோது கடவுள் கருத்து முழுமை பெறவில்லை. ஆனால் கோயில்கள் உருவானபோது  சில குடியிறுப்புகள் உருவானது உண்மை, அதுவும் பெருங்கோயில்கள் காலத்தில்தான். எனவே அதனோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்..
அன்புடன்
சன்னா

G Sannah

unread,
Feb 24, 2016, 1:17:40 PM2/24/16
to Suba, Innamburan S.Soundararajan, mintamil
பெருங்கோயில்கள் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகே என்பதை மனதில் கொண்டால் போதும்

சன்னா

Seshadri Sridharan

unread,
Feb 25, 2016, 10:47:28 AM2/25/16
to mintamil
2016-02-24 23:46 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
கோயில்கள் உருவானப் பிறகுதான் சேரிகள் உருவாகியிருக்கும் என்று ஏசுராசன் அவர்கள் சொன்ன கருத்து பாதி தவறு

கோவில்கள் உருவாவதற்கு முன்னேயே சேரிகள் உருவாகியிருந்தன. சேரிகள் நெய்தலிலோ, முல்லையிலோ, குறிஞ்சியிலோ இருந்திருக்க வாய்ப்பில்லை. மருதத்தில் தான் இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அடிப்படையில் இவர்கள் ஏழைக்கூலிகள். எப்போதும் பண்ணையாரின் கண்காணிப்பில் இருந்தவர்கள் ஏனென்றால் இவர்கள் பண்ணைக் கூலிகள் மட்டும் அல்லர் படையாள்களும் கூட. 

என் முப்பாட்டன் தமக்கு வழங்கப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியில் தம் கூலிகளை குடியேற்றினார். அக்கால்  புறம்போக்கு நிலம் என்பதே கிடையாது. ஏறி குளங்கள் கூட பண்ணையார்களுக்கு சொந்தம். எனவே பண்ணையாரின் அனுமதி இல்லாமல் குடிசை கூட போடா முடியாது.

அவ்வன் 
It is loading more messages.
0 new messages