மணிமேகலையின் காலம் பற்றிய அண்மைக் காலக் கருத்துகள் எந்த நூலில் உள்ளன. பகிருங்களேன்.
"Between Rejection and Integration: Brahmanical Ideas and Practices in Early Buddhist Texts” Oliver Freiberger, The University of Texas at Austin "Does Propagation Digress into Degeneration? Insights into the Legacy of Buddhism in Andhra” Sree Padma Holt, Bowdoin College "Buddhism among Tamils” Peter Schalk, Uppsala University (emeritus) "The Rise of the Oppressed Tamilan: Iyotheethassar, Tamil Buddhism, and the Movement towards a Casteless South Asia” Gajendran Ayyathurai, University of Göttingen "A Civil Religion for Modern India? B.R. Ambedkar, Buddhism and Untouchability” Johannes Beltz, Museum Rietberg
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-07-18 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நான் இரண்டையும் 7 ஆம் நூற்றாண்டில் தான் வைக்கிறேன்.கண்டன்
--
மணிமேகலை ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.விரிவாகப் பார்போம் விரைவில்
ஒட்டக்கூத்தர் திருமடம் வீரசைவமடம் கும்பகோணத்தில் உள்ளது. சமாதியும் உண்டு.ஒட்டக்கூத்த முதலியார் கவிச்சக்கிரவர்த்தி பட்டம்சோழப் பேரவையில் பெற்ற போது பாடிய விருத்தங்கள் புகழ் பெற்றவை:
இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன்
றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களம்
திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன்
திருக்கைப் பங்கயம் சிறக்கத் தந்தன
படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம்
பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம்
கடுக்கக் குண்டலம் கலிக்கச் சங்கினம்
கவிக்குப் பஞ்சரம் கவிக்கத் தொங்கலே
பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போய்முடியப்
பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடையே
மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால்
வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா
முத்துப்பந் தரினிற்குந் குருளைக்கும் சினவேல்
முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக்
கொத்தற்கும் சடிலக்குந் தளருக்கும் அல்லாற்
கூழைத்தண் டமிழற்கேன் கொடியுங் காளமுமே.
கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் குறிப்பிடும் பதுமக்கொத்தன் யார்? அவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?
என்று விரிவாகப் பேசுகிறது என் கட்டுரை (தொடுப்பு மேலே). பொதியமுனி அகத்தியற்கு வலப்புறமாக முருகனும், அவனது அவதாரம் என்று கூத்தர் சொல்லும் சம்பந்தரும் இருக்க, இடப்புறத்தில் பௌத்தர்களின் அவலோகிதனும், அவன் அவதாரமாக தென்னன் (தக்ஷிணாமூர்த்தியும்) இருக்கிறார்கள், அவர்கள் தமிழால் நான் பெருமைப்படுகிறேன், விருதுகள் அடைகிறேன் என்கிறார் கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர். இரண்டாம் குலோத்துங்கன் அரசவையில் கவிச்சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றபோது பாடிய முக்கியமான அவையடக்கப்பாடல்கள் இவை. பதுமக்கொத்தன் என்ற சொல்லை விளக்கியது அடியேன்.
பௌத்தர்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும், ஆந்திரம், சிங்களம் - இரண்டிடங்களிலும் பௌத்தம் இருந்ததால்,தமிழக சங்ககால மன்னர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே தான் சங்ககால பிராமி கல்வெட்டுகளில் பௌத்தம் மிகமிகக் குறைவு.சங்கப் பாட்டிலும் ‘இது பௌத்தம்’ எனக் குறிக்கும் பாடல் இல்லை. சமணம், சமணத்தின் ஒரு பிரிவான ஆஜீவகம் சங்க கால இலக்கியத்தில் உண்டு.
மணிமேகலை ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.விரிவாகப் பார்போம் விரைவில்
சர். ஜேம்ஸ் டென்னண்ட் ( https://en.wikipedia.org/wiki/James_Emerson_Tennent ) எழுதிய சிலோன் என்னும் நூலில் இலங்கையில் பல கடல்கோள்கள் ஏற்பட்டுக்கடலில் ஊர்கள் மூழ்கின்றன என்ற புராணங்கள் இராஜாவளி, மகாவம்சம் போன்ற நூல்களில் முதலில் சொல்லப்படுகிறது என்றார். இதனை
சாலியூர் என்பது கிழக்குக் கடற்கரை, நிற்குன்றம் (= நெற்குன்றம், nelcynda of Greeks) மேற்குக் கடற்கரை என நிறுவிய வி. கனகசபையும் குறிப்பிட்டார்.அந்த பௌத்தக் கதைகளைப் பின்னர்ப் பார்ப்போம்.
பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.
மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் 'மாதவி','சுதமதி','மணிமேகலை','சித்திராபதி','சங்கதருமன்' முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.
மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. 'பௌத்தரும் தமிழும்' அதிகாரம் காண்க.
மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் 'அந்தோனி', 'ஜான்','ஜோசப்' முதலிய பெயர்களையாவது, 'அப்துல்லா','ரஹ்மான்','யூசூப்' முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் 'சாத்தனார்' என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. '(இளம்) போதியார்' என்னும் பெயர் வடமொழி. 'நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)' என்பது வடமொழிச் சிதைவு. 'கோவலன்' என்பது 'கோபாலன்' என்பதன் திரிபு. 'கோதமனார் பிரமனார்','தாமோதரனார்','(சோழன்) நல்லுருத்திரன்','(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார்', 'பிரமசாரி', 'பெருங் கௌசிகனார்', 'பெரும்பதுமனார்' முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு 'மணிமேகலை; காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.
மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
மிக நல்ல கருத்து. இந்த மீனத்திடைநிலை பாடலை ஏன் அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லி எல்லாமே மாறக் கூடியவை என்பார்.ஒருமுறை , கரையான் புற்றுகள் பற்றி ஒரு சிறு ஆய்வு செய்தேன்; அப்போது வராஹிமிஹிரரின் , BRIHATSAMHITA படித்தேன். நல்ல நூல்.வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.இந்த செய்தி தங்களுக்கு எங்கே கிடைத்தது என தெரிவித்தால் நானும் பார்த்து பயனுறுவேன்.
2016-09-10 22:19 GMT+05:30 mukunthan <muku...@gmail.com>:
பாத்திரம் பெற்ற காதை
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
உரை:
இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக ;
இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்-வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15 : 23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோ ராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொருகாலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.
http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Varahamihira.htmlவராகமித்திரரின் காலத்தை அறிந்து (கிபி 505–587 என விக்கிபீடியா கூறுகின்றது) , மணிமேகலை அதற்கு முற்பட்டது எனக் கூறமுடியுமா? அறிந்தவர்கள் விளக்கவும்.நன்றி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlplHfYQ4tE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இந்த 'என்பர் ' தான் இடிக்கிறது.