மணிமேகலையின் காலம்.

681 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Jul 18, 2016, 9:12:01 AM7/18/16
to mint...@googlegroups.com
மணிமேகலையின் காலம்  பற்றிய அண்மைக் காலக் கருத்துகள் எந்த  நூலில் உள்ளன. பகிருங்களேன். 

N. Ganesan

unread,
Jul 18, 2016, 9:30:29 AM7/18/16
to மின்தமிழ், vallamai


On Monday, July 18, 2016 at 6:12:01 AM UTC-7, singanenjan wrote:
மணிமேகலையின் காலம்  பற்றிய அண்மைக் காலக் கருத்துகள் எந்த  நூலில் உள்ளன. பகிருங்களேன். 

கி.பி. ஆறாம் நூற்றாண்டு என பேரா. ஆ. வேலுப்பிள்ளை, பீற்றர் ஷல்க் - 3 தொகுதிகள்.
ஷல்க் டெக்ஸாஸ் வருகிறார் - தமிழ் பௌத்தம் பற்றிய கருத்தருங்கு அக்டோபர் 1-ல் நடக்க உள்ளது.
பேரா. ஆ. வேலுப்பிள்ளை இவ்வுலகில் இல்லை :(
"Between Rejection and Integration: Brahmanical Ideas and Practices in Early Buddhist Texts”
Oliver Freiberger, The University of Texas at Austin

"Does Propagation Digress into Degeneration? Insights into the Legacy of Buddhism in Andhra”
Sree Padma Holt, Bowdoin College

"Buddhism among Tamils”
Peter Schalk, Uppsala University (emeritus)

"The Rise of the Oppressed Tamilan: Iyotheethassar, Tamil Buddhism, and the Movement towards a Casteless South Asia”
Gajendran Ayyathurai, University of Göttingen

"A Civil Religion for Modern India? B.R. Ambedkar, Buddhism and Untouchability”
Johannes Beltz, Museum Rietberg

--------------

சங்கப் பாடல்கள் போலவே, மணிமேகலையில் குமரியம் பெரும்துறை செய்திகள் உள்ளன.
பார்த்தீர்களா? ஆபுத்திரன் காதையில், காசியின் பிராமணத்தி கற்புநெறி இழந்த நிலையில்
பிராயச்சித்தம் செய்ய குமரித் துறையில் தீர்த்தமாட வருகிறாள். அதாவது, சாத்தனார் தரும் குறிப்பு:
காசி (கங்கை)யை விடப் புனிதமானது குமரித்துறை என்பதாம். குமரியும், இராமேச்சரமும்
5000 வருடங்களாக புனிதக் கடலாட்டு தலங்கள்.

இறையனார் அகப்பொருள் காலம் வரை 8-ஆம் நூற்றாண்டு குமரியாறு கதைகள் காணோம்.
சிலம்பு நாவலில் குமரி மாவட்ட புவியியலை சற்று உயர்வுநவிற்சியாக இளங்கோ அடிகள் சொல்கிரார்.
பௌத்தக் கதைகளை எடுத்துக்கொண்டு சைவர்கள் 8-ஆம் நூற்றாண்டில் விரிவு செய்கின்றனர்.

பொதுவாக, ஸூப்பர்நேச்சுரல் (அமானுஷ்ய கிருத்தியங்கள்) கொண்ட தமிழின் முதல் நாவல் இலக்கியம்
சிலம்பை 5-ஆம் நூற்றாண்டு, அடுத்துவந்த மணிமேகலை 6-ஆம் நூற்றாண்டு என்பர்.

இரா. நாகசாமி சிலம்பு மூன்றாம் நூற்றாண்டு என்கிறார். வேதம் (கி மு 5000!!), காளிதாசர், தொல்காப்பியம், குறள் ... போன்றவற்றை
பல நூற்றாண்டுகள் முன்னர் வைத்து இந்தியர்கள் பேசுவர். 

சிலம்பு 3-5 நூற்., மணிமேகலை 6-ஆம் நூற்றாண்டு.

நா. கணேசன்

 

Singanenjam Sambandam

unread,
Jul 18, 2016, 9:42:22 AM7/18/16
to mint...@googlegroups.com
மிக்க நன்றி கணேசன் ஐயா , புவியியல் பார்வையில் மணிமேகலையின் காலம் குறித்து அறிய  சில  செய்திகள் நூலில் காணப் படுகின்றன. அதனால்தான்  கேட்டேன். மிக்க  நன்றி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 19, 2016, 1:45:41 AM7/19/16
to வல்லமை, மின்தமிழ்
On Monday, July 18, 2016 at 10:36:55 PM UTC-7, கண்டன் wrote:

> நான் இரண்டையும் 7 ஆம் நூற்றாண்டில் தான் வைக்கிறேன்.

> கண்டன் 


வையாபுரிப்பிள்ளை 8-ஆம் நூற்றாண்டு என்பதாக நினைவு. 7-8 நூற்றாண்டு எல்லாம் சைவம் கோலோச்ச தொடங்கிவிட்ட காலம்.

எனவே, சிலம்பு 5-ஆம் நூற்.; மணிமேகலை 6-ஆம் நூற். என்ற கோட்பாடு (உ-ம்: சுவெலெபில், ஷல்க், ...)

2016-07-18 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
 நான் இரண்டையும் 7 ஆம் நூற்றாண்டில் தான் வைக்கிறேன்.

கண்டன் 

Singanenjam Sambandam

unread,
Jul 19, 2016, 2:04:03 AM7/19/16
to mint...@googlegroups.com
மணிமேகலை  ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.விரிவாகப் பார்போம் விரைவில் 

--

N. Kannan

unread,
Jul 19, 2016, 5:41:33 AM7/19/16
to மின்தமிழ்
மணிமேகலையின் காலமும், தமிழ்ப் பௌத்தத்தின் காலமும் கொரியத் தமிழ் ஆய்விற்கு மிகவும் முக்கியம். எனவே உங்கள் ஆய்வு முடிவுகளை அறிய ஆவலாயுள்ளேன். மணிமேகலை நான்காம் நூற்றாண்டு என்று வாசித்த ஞாபகம்.

நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Singanenjam Sambandam

unread,
Jul 19, 2016, 6:35:22 AM7/19/16
to mint...@googlegroups.com
அன்பின்  கண்ணன் ஐயா , வணக்கம் . 

தாங்கள் அறியாதது அல்ல மணிமேகலைப் பற்றி  எத்தனையோ  அறிஞர்கள்  ஆய்வு  செய்து எத்தனையோ  கட்டுரைகள் - நூல்கள்   வெளியிட்டுள்ளார்கள். கி.மு. விலிருந்து கி.பி. 12 ஆம்  நூற்றாண்டு வரை இந்த "காலம்" வேறுபடுகிறது. மணிமேகலையில்  காணப்படும் புவியியல் சார்ந்த  நிகழ்வுகள்  அடிப்படையில் கி.பி. ஆறாம் நூற்றாண்டின்  பிற்பகுதி எனத் தோன்றுகிறது. 

N. Ganesan

unread,
Jul 20, 2016, 9:47:09 AM7/20/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Singanenjam Sambandam
On Monday, July 18, 2016 at 11:04:03 PM UTC-7, singanenjan wrote:
மணிமேகலை  ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.விரிவாகப் பார்போம் விரைவில் 

படிக்க ஆவலுடன் இருக்கிறேன். சிலம்பு 5-ஆம் நூற்றாண்டு, பின் ஒரு நூற்றாண்டில் 6-ஆம் நூற்றாண்டு மேகலை எனல் பொருத்தமே.

பௌத்தர்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும், ஆந்திரம், சிங்களம் - இரண்டிடங்களிலும் பௌத்தம் இருந்ததால்,
தமிழக சங்ககால மன்னர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே தான் சங்ககால பிராமி கல்வெட்டுகளில் பௌத்தம் மிகமிகக் குறைவு.
சங்கப் பாட்டிலும் ‘இது பௌத்தம்’ எனக் குறிக்கும் பாடல் இல்லை. சமணம், சமணத்தின் ஒரு பிரிவான ஆஜீவகம் சங்க கால
இலக்கியத்தில் உண்டு. கவிமணியின் ஊர் தேரூர் - தேரரூர், இலங்கை பௌத்தர்கள் வந்த இடம். அங்கே அழகான அவலோகிதன் - தாரா
தம்பதியர் சிலைகள் (பிற்காலச் சோழர் காலம்) உண்டு.

தமிழ்ச் சைவர்கள் பௌத்தத்தில் இருந்து எடுத்த கருத்துகள் பல. அவற்றுள் ஒன்றுதான் கடல்கோள். இதனை விரித்து மூன்று கடல்கோள்,
மூன்று சங்கங்கள், முதல் சங்கத்தின் தலைமை அகத்தியர். அவரே முதல் இலக்கணம் எழுதியவர் என்ற கதைகள் 7-ஆம் நூற்றாண்டில்
ஏற்பட்டன. இறையனார் அகப்பொருள் + அதன் உரை. அந்தக் கால கட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுதும் தென்னக (ஆந்திரா, தமிழ்நாடு, ...)
சைவரும், பௌத்தரும் கடலாடினர். இதற்கான ஸிம்பலாக, அகத்தியர் படிமைகள் தென்கீழ் ஆசியா முழுதும் இருக்கிறது. கல்லாடம்
சங்க இலக்கியம் போல் எழுந்த சைவநூல். திருவிளையாடல் கதைகளில் பாதிக்குப் பக்கம் கல்லாடத்தில் பாடப்பட்டுள்ளன.

திபெத் தலாய் லாமா அவலோகிதன் அவதாரம் என்ப. அவரது பொதால பேலஸ், அவலோகிதனின் பொதியில் மலை இருப்பிடத்தால் எழுந்த பெயர்,
சிலம்பின் நாடுகாண்காதை போல, அதற்கு சில நூற்றாண்டுகள் முன்னரே கண்டவியூகம் என்னும் மகாயான சூத்திரம் எழுதப்பட்டது.
அதில் அவலோகிதனின் வாழிடம் பொதியில் (Potala) மலையாகும். மகாராஜ லீலாசனத்தில் பொதியில் குகையில் இருக்கும்
அவலோகிதன் என்னும் இளைய தெய்வத்தை பௌத்தக் கலைகள் இந்தியா முழுதும், பின்னர் சைனாவிலும் காட்டலாயினர்,
அப்போது சைவர்கள், பல்லவர் காலத்தில், அவலோகிதன் மாடலில், 7-ஆம் நூற்றாண்டில் தட்சிணாமூர்த்தி வடிவம் செய்ய தொடங்கினர்.


’திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என்பது போல, பொதியில் பௌத்தர்களால் பொதலா எனப்படுகிறது.
என்ன காரணம்? தலாய் லாமா அவலோகிதன் என்னும் போத்சத்துவரின் மறு அவதாரம் என்பது திபெத்தியர்கள் கொள்கை.
எனவே அவலோகிதன் வாழும் பொதியில் பொதலா அரண்மனை ஆகியிருக்கிறது:

அவலோகிதனின் சிற்பத்தைப் பார்த்து பின்னால் தமிழ்நாட்டில் பொதிகையில் வாழும் தென்னன் (தட்சிணாமூர்த்தி) வடிவம்
பல்லவர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதிகை அவலோகிதன் வழிபாடும், அதனால் சிவாலயங்களில்
தக்கிணாமூர்த்தி வடிவும் ஏற்பட்டதை விரிவாக எழுதியிருக்கிறேன் (pdf is here):
அக் கட்டுரை அறிமுகம் ‘பொயெட்ரி இன் ஸ்டோன்’ விஜய் தளத்தில் வாசிக்கலாம்:

ஒட்டக்கூத்தர் திருமடம் வீரசைவமடம் கும்பகோணத்தில் உள்ளது. சமாதியும் உண்டு.ஒட்டக்கூத்த முதலியார் கவிச்சக்கிரவர்த்தி பட்டம்சோழப் பேரவையில் பெற்ற போது பாடிய விருத்தங்கள் புகழ் பெற்றவை:

        இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன்
                றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களம்
        திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன்
                திருக்கைப் பங்கயம் சிறக்கத் தந்தன
        படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம்
               பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம்
        கடுக்கக் குண்டலம் கலிக்கச் சங்கினம்
              கவிக்குப் பஞ்சரம் கவிக்கத் தொங்கலே

        பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போய்முடியப்
               பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடையே
        மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால்
               வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா
        முத்துப்பந் தரினிற்குந் குருளைக்கும் சினவேல்
              முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக்
         கொத்தற்கும் சடிலக்குந் தளருக்கும் அல்லாற்
               கூழைத்தண் டமிழற்கேன் கொடியுங் காளமுமே.

கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் குறிப்பிடும் பதுமக்கொத்தன் யார்? அவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?
என்று விரிவாகப் பேசுகிறது என் கட்டுரை (தொடுப்பு மேலே). பொதியமுனி அகத்தியற்கு வலப்புறமாக முருகனும், அவனது அவதாரம் என்று கூத்தர் சொல்லும் சம்பந்தரும் இருக்க, இடப்புறத்தில் பௌத்தர்களின் அவலோகிதனும், அவன் அவதாரமாக தென்னன் (தக்ஷிணாமூர்த்தியும்) இருக்கிறார்கள், அவர்கள் தமிழால் நான் பெருமைப்படுகிறேன், விருதுகள் அடைகிறேன் என்கிறார் கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர். இரண்டாம் குலோத்துங்கன் அரசவையில் கவிச்சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றபோது பாடிய முக்கியமான அவையடக்கப்பாடல்கள் இவை. பதுமக்கொத்தன் என்ற சொல்லை விளக்கியது அடியேன். 

ஆசியா முழுமைக்கும் - ~2 பில்லியன் மக்களுக்கு தமிழ் பௌத்தர்கள் தந்த ‘ஓம் மணிபத்மே ஹூம்’ தாரகமந்திரமாக அவலோகிதன் (குவான்யின்) திகழ்கிறது.
அவலோகிதன் - தட்சிணாமூர்த்தி உறவுகள் போலவே, அதே காலகட்டத்தில் 7-8 நூற்றாண்டுகளில் பௌத்தம் - சைவம் செய்த புராண கதைகள்,
கடல்கோள், குமரியாறு (!!), தமிழின் 3 சங்கங்கள், அதற்கு அகத்தியர் தலைமை, ... அகத்தியர் தமிழுக்கு தலைமை என்பது கற்பனைக் கதாபாத்ரம்
என 1920களிலேயே சென்னைப் பல்கலைப் பேராசிரியர்கள் எழுதிவிட்டனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களை தொடக்கிவைத்த சமணத்தின்
கொடையளிப்பை மறுதலிக்க மற்ற சமயத்தார் முயற்சிகள் இவை. விரிவாக, தனியோர் இழையில் சொல்கிறேன்.

உங்கள் பழைய தினமணிக் கட்டுரைகள் பிடிஎப் செய்ய வேண்டுகிறேன். அதில் இளம்பூரண அடிகள், அடியார்க்குநல்லார் மாத்திர இருப்பதாக
தெரிகிறது. சைவத்தின் பங்கு முக்கியம், இக்கதைகள் தமிழில் தோன்றக் காரணமும் அஃதே. 

பிற பின்,
நா. கணேசன்

இணைப்பு:
பதுமக்கொத்தர் : தமிழகத்தில் அவலோகித போதிசத்வர் - தக்ஷிணாமூர்த்தி வழிபாடு.
சுமார் 20 ஆண்டு முன் எழுதிய கட்டுரை. படித்தருளுக.
padmakottar.pdf

Seshadri Sridharan

unread,
Jul 22, 2016, 3:00:06 PM7/22/16
to mintamil, நா. கணேசன்
2016-07-20 19:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

பௌத்தர்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும், ஆந்திரம், சிங்களம் - இரண்டிடங்களிலும் பௌத்தம் இருந்ததால்,
தமிழக சங்ககால மன்னர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே தான் சங்ககால பிராமி கல்வெட்டுகளில் பௌத்தம் மிகமிகக் குறைவு.
சங்கப் பாட்டிலும் ‘இது பௌத்தம்’ எனக் குறிக்கும் பாடல் இல்லை. சமணம், சமணத்தின் ஒரு பிரிவான ஆஜீவகம் சங்க கால இலக்கியத்தில் உண்டு. 

 சமண பௌத்த நெறிகளை கூர்ந்து ஆராயுங்கால் அவற்றின் ஐம்பெரும் பாதக  எதிர்ப்புக் கொள்கையான பொய், களவு, கொலை, கொள்ளை, பரத்தமை ஆகியவற்றை எதிர்ப்பது என்பது வேந்தர், மன்னர், அரசர் வகுத்த போர் நெறிக்கு எதிரானது என்பதாலேயே வேந்தர், மன்னர், அரசர் என்போர் இந்நெறிகளை ஆதரிக்கவில்லை. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது படையெடுக்கும் அரசர்களது படைகள் வயல்களை கொளுத்துவது, ஊரை எரிப்பது, நகரங்களை தரைமட்டம் ஆக்குவது, பொன் பொருளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு கொள்வது போன்ற வன் செயல்களால்  குழந்தைகள், பெண்கள்,  முதியோர் என ஒட்டுமொத்த குமுகமே பாதிப்படைந்தது நாகரீகமே குலைந்தது. இதைத் கண்டித்தே சமண, பௌத்த மதங்கள் தோன்றின. அதனால் வேந்தர், மன்னர், அரசர் என்போர் இச்சமயங்களை போற்றவில்லை.  சமண சமயம் வணிகர்களின் ஆதரவை பெற்றதால் அரசர்களின் ஆதரவு இன்றி தழைத்தது. சமண பாழி கல்வெட்டுகளில் சேரர், அதியமான் பெயர்கள் மட்டுமே இடம்பெற் மற்றயவை வணிகர்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கின்றன என்பது நோக்கத்தக்கது. வேந்தன் அசோகன் கலிங்கப் போருக்கு பின்பே பௌத்தத்தை தழுவினான் என்பது அரசர் வகுத்த போர்நெறியின் தீங்கை உணர்ந்ததாலேயே என்பது விளங்கும்.  

ஆனால் மேலைய வரலாற்று ஆய்வாளர்கள் இச்சமயங்கள் வேதநெறிக்கு எதிராகத் தோன்றியவை என்று தவறாக சுட்டிவிட்டனர்.  அவர்தம் கூற்று உண்மையானால் சமண பௌத்த சமய கொள்கைகள் வேதநெறி எதிர்ப்புக் கருத்தை அல்லவா கொண்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் அவற்றில் காணோமே!! மாறாக ஐம்பெரும் பாதகம் அல்லவா கண்டிக்கப்படுகின்றன. இக்கால் இருப்பவர்கள் இந்த உண்மையை உணர்ந்து தான்  வேதநெறியார் வேள்விக்காக அதிக அளவில் உழவிற்கு பயனாகும் எருதுகளை கொன்றதால் தான் இச்சமயங்கள் தோன்றின என்று கதை கட்டிவிடுகின்றனர். மேலையர்கள் இந்த தவறான கருத்தால் எல்லா இந்து சமய நூல்களையும் சமண பௌத்த சமய காலத்திற்கு முன்னதாகத் தோன்றியவை என்ற பிழையான கருத்தை வைத்துவிட்டனர். ஆனால் இந்து சமயம் கி.பி. 5  நூற்றாண்டின் பிறகே தோன்றியிருக்க  வேண்டும் என்ற கருத்து வலுப்பெறுவதால் சமண பௌத்த மதங்கள் வேதநெறிக்கு எதிராகத் தோன்றின என்ற கருத்து அடிபட்டுப்போகிறதே.

பண்டன் 

N. Ganesan

unread,
Jul 23, 2016, 11:52:10 PM7/23/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
சர். ஜேம்ஸ் டென்னண்ட் ( https://en.wikipedia.org/wiki/James_Emerson_Tennent ) எழுதிய சிலோன் என்னும் நூலில் இலங்கையில் பல கடல்கோள்கள் ஏற்பட்டுக்
கடலில் ஊர்கள் மூழ்கின்றன என்ற புராணங்கள் இராஜாவளி, மகாவம்சம் போன்ற நூல்களில் முதலில் சொல்லப்படுகிறது என்றார். இதனை
சாலியூர் என்பது கிழக்குக் கடற்கரை, நிற்குன்றம் (= நெற்குன்றம், nelcynda of Greeks)  மேற்குக் கடற்கரை என நிறுவிய வி. கனகசபையும் குறிப்பிட்டார்.
அந்த பௌத்தக் கதைகளைப் பின்னர்ப் பார்ப்போம். இதனைத் தமிழில் அகத்தியர், முதற் சங்கம் போன்ற புராணங்கள் எழுத 8-ஆம் நூற்றாண்டில்
தமிழ்ச் சைவர்கள் பயன்படுத்தலாயினர்.

குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் ஆறாட்டு என்ற உற்சவம் உண்டு. அம்மனை குளத்துக்கோ, ஆற்றுக்கோ எழுந்தருளச்செய்து அபிஷேகம் ஆட்டுதல்.
குமரியம்பெருந்துறைக்கும், சிலோனுக்கும் இடைப்பட்ட கடற்சந்தியை ஆறு என நினைத்தனர் போலும். சுமார் 30 மைல் தான் இடைவெளி தமிழ்நாட்டுக்கும்
இலங்கைக்கும், எனவே ஒரு பெரிய ஆறு என்று கொண்டதில் வியப்பில்லை. குமரியாறு என முதலில் சைவர்கள் இறையனார் அகப்பொருளிலும்,
பின்னர் பேராசிரியர் தொல்காப்பிய உரையிலும் சொல்கிறார். இது குமரியந்துறைதான் என இளம்பூரண அடிகள் விளக்கிவிடுகிறார். பின்னர்
14-ஆம் நூற்றாண்டில் தான் அடியார்க்குநல்லார் 700 காவதம் என்ற செயற்கையான மிக நீண்ட தூரத்தை குமரிதுறையை ஆறாக்கி அதற்கும்
வடபெருங்கோட்டுக்கும் வைக்கிறார். வடபெருங்கோடு என்ன? மேற்குத்தொடர்ச்சிமலை என்கிறார் பாவாணர். வடபெருங்கோடு இமையமலை
என்கிறார் பாரதிதாசன். 

குமரியம்துறையில் நிற்கும் துர்க்கைக்குக் புஷ்பஹாஸி என்ற பெயர் ஏதாவது வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளதா? செங்கண்மால் திருத் தங்கச்சியே (அபிராமி அந்தாதி).

அபிதான சிந்தாமணி, பக். 474

” குமரியாறு 
1. பரத கண்டத்தின் தெற்கிலுள்ள ஆறு. இது கடல்கொள்ளப்பட்டது. இதன் கரையில் புஷ்பஹாஸி என்னும் தெய்வம் எழுந்தருளியிருக்கும். இது கடல் கொள்ளப்பட்ட காலத்து
ஏழ்தெங்கநாடும், ஏழ்பனைநாடும் முதலிய 49 நாடுகள் அழிந்தன. (மணிமேகலை).

2. இந்தியாவின் தென்பாகத்திலிருந்து 2300 வருஷங்களுக்கு முன் கடல்கொள்ளப்பட்டது. இது சந்திரகுப்த தூதராய் அக்காலத்து இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் எழுதிய
குறிப்பால் அறியலாம்.
‘ Megasthenis says that this island (Ceylon) was separated from the main land (India) by a river." Dutt's Civilisation in Ancient India, Part I, Page 219. இதனால் இந்தியாவின் தென்பாகத்தில் குமரியாறு இருந்தது 
என்றறிக.”

குமரித்துறைதான் குமரியாறு என தெளிவுபடுத்தியவர் இளம்பூரண அடிகள் தாம்.  இது இறையனார் அகப்பொருள் கூற்றுகளுக்கு எழுந்த மறுப்புரை ஆகும். ஆனால்,
சைவரான பேராசிரியர் குமரியாறு பற்றி விரிக்கிறார்.

என் வினா: புஷ்பஹாஸி என மணிமேகலையில் சொல்லப்படும் தமிழ்த்தொடர் இருக்கிறதா? அதாவது, ”புதுமலர் ஆகத்தள்” என்பதுபோல ஒரு தொடரால்
கன்யாகுமரி வர்ணிக்கப்படுகிறாளா? அபிதான சிந்தாமணி கூற்றுக்கு ஆதாரம் என்ன?

புஷ்பஹாஸன் என்ற பெயர் விஷ்ணுவுக்கு ஸ்ரீசகஸ்ரநாமத்தில் உண்டு. இத்தொடரை ஆழ்வார்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

நா. கணேசன்

அடியோம் போற்றி ஓவாதே கண்ணிணை குளிரப் புதுமலராகத்தைப் பருக என்கிறார். அடியோமென்றது–இவ்விருப்பைக் காண ஆசைப்பட்டிருக்கிற நாங்களென்றபடி, போற்றி–இவ்விருப்பு இங்ஙனே நித்யமாகச் செல்லவேணு மென்று மங்களாசாஸனம்பண்ணி யென்றபடி.  புதுமல ராகத்தைக் கண்ணிணை குளிரப் பருக–செவ்விப்பூப்போலே ஸுகுமாரமாயிருக்கிற திருமேனியைக் கண்குளிர அநுபவிக்கும்படியாக புஷ்பஹாஸ ஸுகுமாரமான வடிவுக்கு "புது மலராகம்" என்று ஆழ்வார் திருநாமஞ்சாத்துகிறார்.http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4389

‘இவர்கள் இப்படி
  அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்
  திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
  படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்
  புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்
  படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’
  (இரண்டாந்திருவந். 71.) http://www.tamilvu.org/slet/l4100/l4100d16.jsp?pgpass=420&number=348

 ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார்
(ரா. ராகவையங்கார் உரை, நம்மாழ்வாரின் சங்கம்வென்ற அகவலுக்கு) .  http://emperumaanaar.blogspot.com/2009/05/2_25.html

N. Ganesan

unread,
Jul 24, 2016, 1:19:48 AM7/24/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Monday, July 18, 2016 at 11:04:03 PM UTC-7, singanenjan wrote:
மணிமேகலை  ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.விரிவாகப் பார்போம் விரைவில் 


In the 1920's according to Levy, the poetic work about Manimekhala was the focus of a scholarly controversy. The Nyayapravesa by Buddhist master of Indian logic, Dinnaga, was known only in its Chinese and Tibetan translations until a Sanskrit original was found.  Since the second to last canto (the 29th) of Manimekhalai, contains an exposition of syllogisms and sophisms with the same examples as The Nyayapravesa, there began a controversy over which came first.  If the Tamil poet copied from the logician, then he would have to have lived after the 6th century CE, but South Indian scholars claim a 3rd century date for the poem. http://www.khandro.net/nature_water_Manimekhala.htm

---------------

Manimekhala, a Divinity of the Sea

By Sylvain Levi

The Indian Historical Quarterly, Vol.VI, No.4, 1930.12, pp. 597-614
(came out in French in 1937)

Later, S. Levi wrote two more articles in IHQ on Manimekhala goddess in Cambodia
 Sylvain Levi, "On Mani-Mekhala, The Guardian Deity of the Sea", in Ind. His. Quar. Vol. VII, 1931, pp. 173-175.
S. Levi, More on Manimekhala, IHQ, Vol. VII. 1931, pp. 371-376.

மணிபல்லவம் தீவில் (=இலங்கையில் பாண்டுகம்பளம் துளங்குதல் பற்றி விவரித்தபின்னர், மறுகரையில்
குமரியந்துறைக் கன்னியாகுமரியை “மணிமேகலா தெய்வம்” என்று பௌத்த தேவதையாகக்
கொண்டு சாத்தனார் எழுதிச் செல்கிறார். மணிமேகலா தெய்வம் கடலாடுவோரின் தெய்வம்,
கப்பல்களைக் காப்பவள். 

The curse of Indra causing the destruction: 

“வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன்
தன்மகள் பீலி வளை -தான் பயந்த
புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித்,
தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும்,
வணங்கிக் கொண்டவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந்நாள், கூரிருள் யாமத்து,
அடைகரைக் கணித்தா அம்பி கெடுதலும்,
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது
அரைசற்கு உணர்த்தலும், அவனயர் வுற்று,
விரைவனன் தேடி, விழாக்கோள் மறப்பத்-
தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்-
நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த
மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள்-
முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப்,
பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத்
துன்னிய தென்னத் தொடுகடல் உழந்துழி,
எழுநா ளெல்லை, இடுக்கண்வந் தெய்தா
வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட
பான்மையில், தனாது பாண்டு கம்பளம்
தானடுக் குற்ற தன்மை நோக்கி, 
‘ஆதி முதல்வன் போதி மூலத்து
நாத னாவோன், நளிநீர்ப் பரப்பின்
எவ்வமுற் றான்தன தெவ்வந் தீர்’ எனப்
பவ்வத் தெடுத்துப், ‘பாரமிதை முற்றவும்
அறவர சாளவும், அறவாழி உருட்டவும்,
பிறவிதோ றுதவும் பெற்றியள்’ என்றே
சாரணர் அறிந்தோர் காரணங் கூற,
அந்த வுதவிக்கு ஆங்கவள் பெயரைத்
தந்தையிட் டனன்நினைத்; தையல்நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென்பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட் கொப்ப -அவனிடு சாபத்து
நகர்கடல் கொள்ள…
(மணிமேகலை, 29: 3-35)

“மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்” என்பதனை அபிதான சிந்தாமணி “புஷ்பஹாசி” என்று மொழிபெயர்க்கிறது. இந்தப் பெயர்
தின்னாகரின் நியாயப்பிரவேசம் நூலில் இருக்கக்கூடும். ஏனெனில், நியாயப்பிரவேசத்தை அடியொற்றிச் செல்வது மணிமேகலைக் காப்பியம் என்ப.
இதனை ஆழ்வார்கள் பாசுரத்திலும் காணலாம்: புஷ்பஹாஸ எவ்வாறு ஆழ்வார்கள் மொழிபெயர்க்கின்ரனர் என்பதனைப் பார்க்க:

அபிதான சிந்தாமணி, பக். 474

” குமரியாறு 
1. பரத கண்டத்தின் தெற்கிலுள்ள ஆறு. இது கடல்கொள்ளப்பட்டது. இதன் கரையில் புஷ்பஹாஸி என்னும் தெய்வம் எழுந்தருளியிருக்கும். இது கடல் கொள்ளப்பட்ட காலத்து
ஏழ்தெங்கநாடும், ஏழ்பனைநாடும் முதலிய 49 நாடுகள் அழிந்தன. (மணிமேகலை).

2. இந்தியாவின் தென்பாகத்திலிருந்து 2300 வருஷங்களுக்கு முன் கடல்கொள்ளப்பட்டது. இது சந்திரகுப்த தூதராய் அக்காலத்து இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் எழுதிய
குறிப்பால் அறியலாம்.
‘ Megasthenis says that this island (Ceylon) was separated from the main land (India) by a river." Dutt's Civilisation in Ancient India, Part I, Page 219. இதனால் இந்தியாவின் தென்பாகத்தில் குமரியாறு இருந்தது 
என்றறிக.”
 


மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும்

தேமொழி

unread,
Jul 24, 2016, 2:09:54 AM7/24/16
to மின்தமிழ்


On Saturday, July 23, 2016 at 8:52:10 PM UTC-7, N. Ganesan wrote:
சர். ஜேம்ஸ் டென்னண்ட் ( https://en.wikipedia.org/wiki/James_Emerson_Tennent ) எழுதிய சிலோன் என்னும் நூலில் இலங்கையில் பல கடல்கோள்கள் ஏற்பட்டுக்கடலில் ஊர்கள் மூழ்கின்றன என்ற புராணங்கள் இராஜாவளி, மகாவம்சம் போன்ற நூல்களில் முதலில் சொல்லப்படுகிறது என்றார். இதனை 
சாலியூர் என்பது கிழக்குக் கடற்கரை, நிற்குன்றம் (= நெற்குன்றம், nelcynda of Greeks)  மேற்குக் கடற்கரை என நிறுவிய வி. கனகசபையும் குறிப்பிட்டார்.
அந்த பௌத்தக் கதைகளைப் பின்னர்ப் பார்ப்போம்.

ஆம் ...  உண்மையே  எனக்கும் படித்த நினைவுண்டு.

கொரிய இளவரசி விவாதங்கள் வந்த பொழுது அதை மேலும் கொஞ்சம் ஆராய்ந்தேன்.

ஆனால் மகாவம்சம்   குறிப்பிடும் இளவரசி  காலத்தால் முந்தியவர் ... கிமு வில் வாழ்ந்தவர்.

மன்னன் துட்டகாமினி  (கி.மு161 – கி.மு 137)( https://en.wikipedia.org/wiki/Dutugamunu) பற்றிக் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி.... 
அவன் கதையில் வரும் நம்பமுடியாத புராணக் கதைகளை நீக்கிவிட்ட பின்னர் பார்த்தால்  சரித்திர நிகழ்வுகளுடன் பொருந்துவதாகவும், அவன் வாழ்ந்தது பற்றியத் தகவல் சரியாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் எண்ணம்.

மன்னன் துட்டகாமினி சிங்களத்தின் தலை சிறந்த வீரன், சோழ ஆட்சியில் இருந்து சிங்களத்தை மீட்டவன்.  இவன் காலத்தில் சிங்களத்தை ஆண்ட சோழ மன்னன் (சோழ  குல  மன்னர்களில் ஒருவனாக  இவன்  இருக்க வேண்டும்) எல்லாளன் கி.மு 205  கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தவன். 

இந்த எல்லாளனும் சிறந்த வீரனே ... ஆராய்ச்சி மணிக்குக்  காரணமானவன்..  இவனது கதை தேர்க்காலில் தனது மகனைக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கிய சோழனின் கதை. (The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 - 18)

 சோழன்  எல்லாளனை வென்றாலும் துட்டகாமினி அவனது வீரத்தை மெச்சி அவனுக்குச் சிலை வைத்துப்  பாராட்டியவன்.

துட்டகாமினி மன்னனின்  தாய் விகாரமாகாதேவி (205 கி.மு - 161 கி.மு  இவர் கதையில் வருவது ஒரு கடல்கோள் ???).
இளவரசியாக இருந்த பொழுது அவளது தந்தை களணி தீசன் (Kelanitissa who ruled Kelaniya)  ஒரு குற்றமற்ற  பௌத்த துறவியை  கொதிக்கும்  எண்ணெய்க் கொப்பரையில் போட்டுக்   கொன்றதால் கடல் பொங்கிவர (?????) , குறி கூறுபவர்கள் இளவரசியைக் கடலில் தூக்கிப் போட்டால் கடலின் கோபம் அடங்கிவிடும் (?????)  என்று ஆலோசனைக் கூற, ஒரு தங்கத் தோணியில் தவழும் பெண்னழகாக ...  ஒரு  பொன்னாலான படகில் தனது மகளை வைத்து   அப்பா  களணி தீசன் கடலில் போடுகிறார் (இவர்தான் நம் கொரியா அரசியா என அப்பொழுது   எனக்கு ஒரு ஒரு ஐயம் ... ஆனால் இவர் கிமு வில் வாழ்ந்தவர்).  இவர் கடலில் மிதந்து வந்து ரோஹண  பகுதியில் கரை சேர்ந்து அந்த நாட்டு இளவரசன் காவன்தீசன்  என்பவரை மணக்கிறார்.  இவர்களின்  மகனே துட்டகாமினி

ஆக "கிமு  ஒன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில்"  ஒரு கடல்கோள் (அதாவது  ஒரு  சாதாரணப் புயலை மிகைப்படுத்தி கடல்கோள் எனச் சொல்லாமல்   இருந்தால் )  அந்தக் காலகட்டத்தில் ஒரு கடல் கோள் வந்தது பதிவாகியிருக்கக் கூடும் எனக் கொள்ளலாம்



..... தேமொழி

 



 

mukunthan

unread,
Jul 24, 2016, 3:18:33 AM7/24/16
to மின்தமிழ்
பௌத்தமும் தமிழும்  - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  அவர்களின் நூலிலிருந்து..
( https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaiap5 )
5. மணிமேகலை நூலின் காலம்


 மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால், அது பெரியதொரு தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும்  சிலப்பதிகாரமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே பலரின் கொள்கை. ஆயினும் சிலர் மட்டும் ஐயப்பாட்டிற்கிடமான சில ஆதாரங்களைக் காட்டி, இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவர். ஈண்டு,  கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை முதலில் எடுத்துக்காட்டிப் பின்னர், இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவோரின் கூற்று ஆதாரமற்றதென்பதை விளக்குவோம்.

    'மணிமேகலை'யை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும், 'சிலப்பதிகாரத்தை'  இயற்றிய இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே மணிமேகலைக் காவியம் என்பதும் யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அன்றியும் இளங்கோ அடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவனுக்கும் சீத்தலைச் சாத்தனார் உற்ற நண்பர். கன்ணகியின் வரலாற்றினைச் சீத்தலைச்சாத்தனார் சொல்லக் கேட்டுக் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி அவளுக்குக் கோயில் அமைத்த செங்குட்டுவ மன்னன், இலங்கைத் தீவை அரசாண்டிருந்த கஜபாகு (கயவாகு) என்னும் அரசனைப் பத்தினிக் கடவுளான கண்ணகியின் விழாவுக்கு அழைத்திருந்தான். கஜபாகு மன்னனும் இவ்விழாவுக்கு வந்திருந்ததோடு, இலங்கைக்குச் சென்று அங்கும் கண்ணகி வணக்கத்தை ஏற்படுத்தினான். இன்றைக்கும் சிங்களவர் 'பத்தினித் தெய்யோ' (பத்தினி தெய்வம்) என்று கண்ணகியைக் கொண்டாடி வருகின்றனர். பத்தினி தெய்வ வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்திய கஜபாகு வேந்தன் கி.பி. 171 முதல் 193 வரையில் இலங்கையை அரசாண்டான். இவனுக்கு 'கஜபாகு காமினி' என்னும் பெயரும் உண்டு. எனவே, கஜபாகு நண்பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்பட்டது. ஆகவே, மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார்  கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றியிருக்க வேண்டும்.

    மணிமேகலை நூலில் இருபத்தேழாவது காதையில்

        "வேத வியாகனுங் கிருத கோடியும்
        ஏதமில்  சைமினி யெனுமிவ் வாசிரியர்
        பத்து மெட்டு  மாறும் பண்புறத்
        தத்தம் வகையாற் றாம்பகர்ந் திட்டனர் "

என வரும் அடிகளிற், 'கிருதகோடி' என்னும் ஆசிரியரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. "கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் 'போதாயனர்' என்பவர் இயற்றிய உரை. 'பிரபஞ்ச ஹ்ருதயம்' என்னும் சமஸ்கிருத நூலில், மீமாம்சை சாஸ்திரம் முழுவதுக்கும் போதாயனர் என்பவர் ஒரு பாஷ்யம் (விரிவுரை) எழுதினார் என்றும், அந்த உரைக்கு 'கிருதகோடி' என்பது பெயர் என்றும், இந்த உரை மிக விரிவாக இருந்தது பற்றி 'உபவர்ஷர்' என்பவர், அதனைச் சுருக்கி அமைத்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. வேதாந்த சுத்திரத்திற்கு இராமாநுசர் எழுதிய 'ஸ்ரீபாஷ்யம்' என்னும் உரையிலும், போதாயனர் வேதாந்த சூத்திரத்திற்குப் 'பிரம்மசூத்திரம்' என்னும் விருத்தியுரை எழுதினார் என்றும், அந்த விரிவுரையைப் 'பூர்வாசாரியர் சுருக்கமாக அமைத்தார்' என்றும் கூறியிருக்கின்றார். இங்கு இவர் 'பூர்வாசாரியார்' என்று கூறுவது உபவர்ஷரை. இந்த உபவர்ஷர் என்பவர்,  கி.பி. மூன்றாம்  நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது ஆராய்ச்சி வல்லோர் முடிவு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த உபவர்ஷருக்கு, முன் மீமாம்சை சாத்திரத்துக்கு ஒரே ஓர் உரை இருந்ததென்றும், அது போதாயனர் எழுதிய 'கிருதகோடி' என்னும் உரை என்றும், இந்தக் 'கிருதகோடி' உரை எழுதிய போதாயனர் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும்  இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் முடிவு கட்டியுள்ளனர். எனவே, கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற 'மணிமேகலை' அவ்வுரை பெரிதும் வழக்காற்றிலிருந்த   கி.பி. முதலாவது அல்லது  இரண்டாவது  நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பற்றி முற்றும் விளக்கி எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சிச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதனை நன்குணர வேண்டுவோர் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களினால் ஐயமறத் தெளியலாம். (Vedanta Commentators before Sankaracharya by P.V. Kane, Proceedings, Fifth Indian Oriental Conference, Vol II Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

    மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது ஈனயான பௌத்த மதம்; மகாயான பௌத்த மதத்தைப் பற்றி அதில் கூறப்படவில்லை. எனவே, மணிமேகலை மகாயான பௌத்தக் கொள்கைகள் பரவுதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்று விளங்குகின்றது.

    மகாயான பௌத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ஜூனர். இவரும் இவர் மாணவராகிய ஆரியதேவரும் மகாயான மத நூல்களை இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர். நாகர்ஜூனர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படி எனில், கூறுவோம்: 'குமாரஜீவர்' என்னும் ஆசிரியர் கி.பி 399 முதல் 417 வரையில் பௌத்த நூல்களை எழுதினார் என்று சீன தேசத்து நூல்களினின்றும் தெரிகின்றது. இந்தக் குமாரஜீவர் கி.பி. 400 இல் நாகர்ஜூனர் சரிதத்தையும், அவர் மாணவராகிய ஆரியதேவரது சரிதத்தையும் எழுதியிருக்கின்றார்.  எனவே இவரது காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கு முன்பு நாகர்ஜூனர் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். நாகர்ஜூனர் 'சாதவாகன' அரசர்களின் காலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும், சாதவாகன அரசாட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியின் மங்கிவிட்ட படியாலும், நாகர்ஜூனர் அந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அஃதாவது கி.பி.  250 இல் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். ஆசிரியர் கீத் (Prof Keith) என்பவர்,  நாகர்ஜூனர் ஏறக்குறையக் கி.பி 200-இல் வாழ்ந்திருந்தவர் என்று கூறுவதும் இதனை ஆதரிக்கின்றது. எனவே நாகர்ஜூனர்  கி.பி 200-250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது தெளிவாகின்றது. மணிமேகலையில் 'சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை' யில் தமிழ் நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனயான மதத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும் தத்துவங்களையும் உடைய மகாயான மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகர்ஜூனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் காட்டுகிறது. எனவே, மணிமேகலை நாகர்ஜூனருக்கு முன், அஃதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்றப்பட்டதாதல் வேண்டும். இதனைக் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களில் விளக்கமாக காணலாம். (The Buddhism of Manimekalai by Dr. S. Krishnaswami Aiyengar in Buddhist Studies, Edited by B.C. Law; Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

    சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதியை அரசாண்ட பேர் பெற்ற மன்னர். இவர்களைப் பற்றி கூறப்படாதது பற்றி, பல்லவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரத்தை அரசாண்டவன் சோழமன்னன் என்றும், அவன் 'நலங்கிள்ளி' என்பவன் தம்பி 'இளங்கிள்ளி' என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர் முதல் முதல் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி நாலாம் நூற்றாண்டிலென்றும், கி.பி மூன்றாம் நூற்றாண்டு  வரையிலும் சோழர்கள் சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும் 'குமாரவிஷ்ணு' அல்லது 'ஸ்கந்தவர்மன்' என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து காஞ்சிபுரத்தை முதல் முதல் கைப்பற்றினானென்றும் அவன் காஞ்சியைக் கைப்பற்றியது ஏறத்தாழக் கி.பி. 325 ஆம் ஆண்டென்றும் கூறுவர் ஹீராஸ் பாதிரியார் (Studies in Pallava History by Rev. H. Hearas.)

    பல்லவர் காஞ்சியைச் சோழரிடமிருந்து முதல் முதல் கைப்பற்றியது கி.பி. 325 ஆம் ஆண்டில் ஆகையாலும், மணிமேகலையில் கூறப்பட்டுள்ள காஞ்சியை அரசாண்ட மன்னன் சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையாலும், மணிமேகலை இந்த ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், மேலே கூறப்பட்ட கஜபாகுவின் காலத்தையும் செங்குட்டுவன் காலத்தையும், நாகர்ஜூனர் காலத்தையும், கிருதகோடி உரை இயற்றிய 'போதாயனர்' காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் கடைசியில் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றது.

    மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க இன்னும் வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. இனி, இந்த நூல் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் இயற்றப்பட்டதென்று கூறுவோர் காட்டும் சான்றுகளை எடுத்துக்காட்டி, அவை தக்க சான்றுகளல்ல என்பதை விளக்குவோம்.

    1. மணிமேகலையில் 'குச்சரக்குடிகை' என வரும் சொற்றொடருக்கு உரையெழுதிய டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள், ''கூர்ச்சர தேசத்துப் பணி அமைந்த சிறிய கோயில்'   என்று எழுதியிருக்கிறார்கள். இதனை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிலர், ஏனைய ஆதாரங்களையெல்லாம் மறந்துவிட்டு, மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இயற்றப்பட்ட தென்பர். கூர்ச்சரர்  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், கூர்ச்சரரைக் குறிப்பிடுகிறபடியால், மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு  இயற்றப்பட்ட தென்றும் கூறுவர். இந்த ஆராய்ச்சி முடிவை எதிர்த்தும், ஆதரித்தும் 'குச்சரக்குடிகை'க்கு வேறு பொருள் கற்பித்தும் அறிஞர் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் விரியும். ஆனால், இந்த ஆராய்ச்சி ஐயப்பாட்டுக்கு இடமான முடிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். 'குச்சரக்குடிகை தன்னகம் புக்கு' என வரும்   மணிமேகலை அடிகளுக்குக் 'குஞ்சக்குண்டிகை தன்னகம் புக்கு' என்னும் பாடபேதமும் காட்டப்பட்டுள்ளது; (18 ஆம் காதை, 145) இந்தப் பாடபேதம் முதற் பதிப்பில் காட்டப்படவில்லை. எதிர்வாதங்கள் எழுந்த பின்னர், பிற்பதிப்புக்களில் இந்தப் பாடபேதம் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடபேதம் முதற் பதிப்பிலேயே காட்டப்பட்டிருக்குமானால், பல ஆராய்ச்சியாளரின் காலமும் உழைப்பும் வீணாக்கப்பட்டிரா. ஆனால், முதல் பதிப்பின் பாடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் உரையையும் தெய்வவாக்காக கொண்டு, ஆராய்ச்சியாளரிற் சிலர் மணிமேகலை  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என வாதித்தனர். இந்த வாதத்தை V.A. Smith  போன்ற சில மேல்நாட்டு அறிஞரும் நம்பி இடர்ப்பட்டனர். நேர்மையான பாடம் 'குச்சரக் குடிகை'யா அல்லது 'குஞ்சக் குண்டிகை' யா என்பதை முடிவுகட்டிய பின்னரே இந்த ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். இந்த ஐயப்பாட்டைத் தீர்க்காமல், 'கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்'  என்னும் உரையை ஒப்புக்கொண்டு முடிவுகட்டுவது, வழுக்கு நிலத்தில் ஊன்று கோலின்றி நடப்பது போலாகும்.

    இனி 'குச்சரக்குடிகை' என்னும் பாடந்தான் சரியானதென்று ஒப்புக்கொள்வதாயிருந்தாலும், இச்சொற்றொடர்க்கு உரையாசிரியர் காட்டிய பொருள் தவறு என்றும், இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் என்றும் தோன்றுகின்றது. கூர்ச்சரர் கட்டடத்தொழிலில் பேர்பெற்றவர் அல்லர் என்பதை நிலைநாட்டி, இந்த உரையை மறுத்து, டாக்டர் கு. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய Manimekhalai in its Historical Setting  என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். விரிவஞ்சி அதனை ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம்.

    'குடிகை' எனபதற்குச் 'சிறிய கோயில்' என்று எழுதப்பட்டுள்ள உரையும் சரியானதாகத் தோன்றவில்லை. 'குடிகை' என்பதற்கு ஓலையால் வேய்ந்த  குடிசை என்பதே பொருள் எனத்தோன்றுகின்றது. இந்தப் பொருளிலேயே இந்தக் 'குடிகை' என்னும் சொல்
மணிமேகலையில் வேறு இடத்திலும் வந்துள்ளது.

        "தண்டு  மண்டையும் பிடித்துக் காவலர்
        உண்டுகண் படிக்கும் உறையுட் குடிகையும்."

    நகரத்தை இரவு முழுதும் காவல் காத்த காவலாளர் காலையில் ஊண் உண்டு படுத்து உறங்கும் குடிசையை (ஓலையால் வேய்ந்த  குடிசை) இது குறிப்பிடுகின்றது. இதற்குக் குறிப்புரை எழுதியவர், "குடிகை -பர்ணசாலை. 'குடிகா' என்னும் வடமொழிச் சிதைவென்பர். இஃது இக்காலத்து 'குடிசை' என்று வழங்குகின்றது" என்று எழுதியிருக்கின்றார். இந்த உரை மிகவும் பொருத்தமானதே. ஆனால்,   'குச்சரக் குடிகை' என்பதற்குப் பொருள் எழுதியபோது, சிறிய கோயில், அஃதாவது, கட்டடத்தால் அமைந்த சிறிய கோயில் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். ஓரிடத்தில் 'குடிசை; என்றும், இன்னோரிடத்தில் 'கட்டடம்' என்றும் எழுதியிருக்கின்றார். இஃது எவ்வாறு பொருந்தும்?
        "உறையுட் குடிகை யுள்வரிக் கொண்ட
        மறுவில் செய்கை மணிமே கலைதான்"
        
        "உலக வறவியும் முதியாள் குடிகையும்"

என வரும் அடிகளில், 'குடிகை' என்பதற்குக் குடிசை, ஓலையால் வேய்ந்த பர்ணசாலை என்றே பொருள் கொள்ளத் தக்கதாயிருக்கின்றது. சம்பாபதி கோயில் சுடுகாட்டை அடுத்திருந்த ஒரு கோயில். 'உலகவறவி' என்னும் மன்றத்தில் ஒரு புறத்தில் அஃது அமைந்திருந்தது. இந்தக் கோயிலின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இப்பொழுதும் சில கிராமதேவதை கோயில்கள் ஓலைக்கொட்டகையால் அமைந்திருப்பதைக் காணலாம். ஓலையால் கொட்டகை அமைக்கக் கூர்ச்சர தேசத்திலிருந்து தொழிலாளர் வரவேண்டுவதில்லை. எனவே, 'குச்சரக் குடிகை' என்பதே சரியான பாடமாயிருந்தாலுங்கூட, அதற்கு வேறு பொருள் இருக்கவேண்டுமே தவிர 'கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்'  என்னும் பொருள் சிறிதும் பொருந்தாது. ஆகவே, இதை ஆதாரமாகக் கொண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மணிமேகலை எழுதப்பட்டதென்பது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமானதன்று. இதனை மேலும் விளக்கப்புகின் விரியும் என்றஞ்சி இதோடு நிறுத்துகின்றோம்.

    சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது. 'சாவகம்' என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி.  400 இல் சென்ற 'பாஹியன்' (Fa-Hien)  என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற 'இத்-ஸிங்' (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும்,  இத்ஸிங்  என்பவரும்  அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.

    இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R.  இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்:

    முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.

    இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும்.

    மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

    இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும்  இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது.

    பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.

    மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் 'மாதவி','சுதமதி','மணிமேகலை','சித்திராபதி','சங்கதருமன்' முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.

    மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. 'பௌத்தரும் தமிழும்' அதிகாரம் காண்க.

    மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் 'அந்தோனி', 'ஜான்','ஜோசப்' முதலிய பெயர்களையாவது, 'அப்துல்லா','ரஹ்மான்','யூசூப்' முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் 'சாத்தனார்' என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. '(இளம்) போதியார்' என்னும் பெயர் வடமொழி. 'நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)' என்பது வடமொழிச் சிதைவு. 'கோவலன்' என்பது 'கோபாலன்' என்பதன் திரிபு. 'கோதமனார் பிரமனார்','தாமோதரனார்','(சோழன்) நல்லுருத்திரன்','(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார்', 'பிரமசாரி', 'பெருங் கௌசிகனார்', 'பெரும்பதுமனார்' முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு 'மணிமேகலை; காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.

    மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.




N. Ganesan

unread,
Jul 24, 2016, 9:51:47 AM7/24/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sunday, July 24, 2016 at 12:18:33 AM UTC-7, mukunthan wrote:

    பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.


யாடு - யாடவர் எனும் சொல், வடமொழியில் யாதவர் என்று திரிந்து, யது என்ற குலப்பெயர் படைத்தனர். கடம்பு - கதம்ப என்றாதல் போல. காகந்தி (காகம்பி - பவேரு ஜாதகம், சிந்து முத்திரை) என்னும்
பூம்புகாரின் பெயரால் ககந்தன் என்ற சோழ இளவரசன் பெயர் உருவாகிறது. இது போல் உதாரணங்கள் பல காட்டலாம். அதேபோல, பௌராணிகமான தன்மையில், யா மரங்களில் 500+ (Shorea) மரங்கள் விளைகிற தீவுக்கும், அண்டை தீவுகளுக்கும் யாவகம் என்ற பெயரிட்டழைத்தனர் சங்கத் தமிழர்கள். யா மரம் என்றால் என்ன என்று தெரியாத சம்ஸ்கிருத அறிஞர்கள் அதனை யவ த்வீபம் என்று ஆக்கினர்
(யாதவர்  > யது குலம்). யவம் என்பது பார்லி தானியம். யாவக தீவினில் விளையாத பயிர். யாவகம் என்பது மாறி, யா என்னும் மரப்பெயர் சா(ல்), ஆ(ச்சா) என்றெல்லாம் ஆகிற கால கட்டத்தில் எழுதப்பெற்றது மணிமேகலைக் காப்பியம். அதில் யாவகம் என்ற பெயர் சாவகம் என்று மாறிவிட்ட நிலையைக் காண்கிறோம். யா மரப் பெயர் பெருவழக்கில் இருந்த கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பெற்ற சங்க இலக்கிய காலம் அன்று சாத்தனார் காலம் என்பதற்கு மிகப்பெரிய சான்று யா- என்னும் பெயர். Tin bronze ஏற்றுமதி-இறக்குமதி வெகுகாலமாக தென்கிழக்கு ஆசியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிகழ்ந்துள்ளது. கொற்கை, சாலியூர், தொண்டி, நாகை, புகார், நீர்ப்பெயற்று என்ற துறைமுகங்கள் வழியாக. ஆனால், ஃபாஹியன் குறிப்பிட்டிருப்பது போல, பௌத்தம் தென்கிழக்காசியாவிலோ, முக்கியமாக - கிமெர் மக்களின் கம்போதியா தலைநாடாக ஆகாத காலத்தில் - யாவகத் தீவு என்று தமிழர்கள் பெயர் வைத்து அழைத்த காலத்தில், அஃதாவது சங்க காலத்தில் பௌத்தம் அங்கே பரவாத காலம். எனவே கி.பி. 2-ஆம் நூற்றாண்டு அல்ல மணிமேகலை. யாவகம் சாவகம் என்று மாறிய காலத்தில் - கிபி. 5-6 நூற்றாண்டுகளில் எழுதப்பெற்ற நூலிது என்பது என் கருத்து. அதற்கு, சங்கரதேவர் மற்றும் திக்நாகர் இருவர் எழுதிய நியாயப்பிரவேசம் என்னும் 5-ஆம் நூற்றாண்டு பௌத்த நூலைப் பரப்புமுகமாக, 29, 30 காதைகளில் வைத்து சாத்தனார் நூலியற்றியுள்ளதும் கூர்ந்து நோக்கத் தக்கது.
 

    மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் 'மாதவி','சுதமதி','மணிமேகலை','சித்திராபதி','சங்கதருமன்' முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.

    மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. 'பௌத்தரும் தமிழும்' அதிகாரம் காண்க.

    மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் 'அந்தோனி', 'ஜான்','ஜோசப்' முதலிய பெயர்களையாவது, 'அப்துல்லா','ரஹ்மான்','யூசூப்' முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் 'சாத்தனார்' என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. '(இளம்) போதியார்' என்னும் பெயர் வடமொழி. 'நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)' என்பது வடமொழிச் சிதைவு. 'கோவலன்' என்பது 'கோபாலன்' என்பதன் திரிபு. 'கோதமனார் பிரமனார்','தாமோதரனார்','(சோழன்) நல்லுருத்திரன்','(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார்', 'பிரமசாரி', 'பெருங் கௌசிகனார்', 'பெரும்பதுமனார்' முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு 'மணிமேகலை; காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.

    மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.


களப்பிரர், பல்லவர் தமிழ் மன்னர்கள் அல்லர். எனவே, தமிழ்ப் புலவர்கள் முதன் முதலாக காப்பியம் தங்கள் மொழியில் செய்யும் போது தமிழ் அரசர்களைக் காப்பிய நாயகர்கள் காலத்தில் வைத்துப் பாடியுள்ளனர். இதை இந்திய செம்மொழி இலக்கியங்களில் பார்க்கலாம். உ-ம்: காளிதாசர் நாடகங்களில் சில சுங்க அரசர்களின் காலத்தில் நடந்த்தாக எழுதியுள்ளார். அப்படியானால் சுங்க அரசர் காலத்திலா காளிதாசர் வாழ்ந்தார்? காளிதாசர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு. அதுபோல், சீத்தலைச் சாத்தனார் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்பதே சாலும்.

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ஆங்கில நூல்களை அப்படியே தழுவிச் சென்றவர் மயிலை சீனி. வேங்கடசாமி. கி.பி. நூற்றாண்டில் கல்வெட்டுகளில் பௌத்தம் ஒன்றையுமே காணோம். ஏதாவது ஒன்று இரண்டு இருக்கலாம். அதுவு ஐயமே. மேலும், சங்க நூல்களில் பௌத்தம் என்று சொல்லத்தக்க பாடல்களே காணோம். தமிழ் முடியுடை வேந்தர் மூவருக்கும் போட்டியாளர்கள் ஆந்திரரும், சிங்கள ராசாக்களும். அவர்கள் பௌத்தத்திற்குப் பேராதரவு கொடுத்தவர்கள். பௌத்தம் புத்த வசனம் என்ற பாலி மொழியை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இங்கே பரவவில்லை. சமணம் தமிழுக்கு இலக்கியங்களாக, இலக்கணங்களாக, கல்வெட்டுகளாக, கர்நாடகா வழி வந்துவிடுகிறது சங்க காலத்தில். சங்ககாலத்தில் பௌத்தம் தமிழுக்கு வரவில்லை. வடமொழிகளாகவே ஆந்திராவிலும், சிங்களத் தீவிலும் நின்றிருந்த காலம் சங்க காலம். எனவே தான், மணிமேகலை காலம் கிபி 2-ஆம் நூற்றாண்டு அல்ல என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

என் கருத்து: யாவகம் என்று குறிப்பிடாமல் சாவகம் என்று ஜாவா தீவினைக் குறிப்பிடும் நூல் மணிமேகலை பிற்கால நூலே. கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் நியாய பிரவேசத்தை தமிழில் சொல்லவும், ஆந்திரர் போன்றோருடன் வணிகம் தென்கிழக்காசியாவில் பெருகும் காலத்தில் பௌத்தம் பற்றிய செய்திகள் தமிழரிடை பரவிய காலத்தில் எழுந்த காப்பியம் இஃது.

நா. கணேசன்
 

mukunthan

unread,
Sep 10, 2016, 12:49:44 PM9/10/16
to மின்தமிழ்
 பாத்திரம் பெற்ற காதை
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்


உரை:
இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக ;

       இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்-வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15 : 23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோ  ராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொருகாலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.

http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Varahamihira.html
வராகமித்திரரின்  காலத்தை அறிந்து (கிபி 505–587 என விக்கிபீடியா கூறுகின்றது)  , மணிமேகலை அதற்கு முற்பட்டது எனக் கூறமுடியுமா? அறிந்தவர்கள் விளக்கவும்.


நன்றி


Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 8:40:36 AM9/16/16
to mint...@googlegroups.com
மிக நல்ல   கருத்து. இந்த மீனத்திடைநிலை பாடலை ஏன் அப்பா   அடிக்கடி  என்னிடம் சொல்லி  எல்லாமே மாறக் கூடியவை என்பார். 

ஒருமுறை , கரையான் புற்றுகள்  பற்றி ஒரு சிறு  ஆய்வு   செய்தேன்; அப்போது வராஹிமிஹிரரின் , BRIHATSAMHITA படித்தேன்.  நல்ல  நூல்.
 வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.

இந்த செய்தி தங்களுக்கு எங்கே கிடைத்தது என தெரிவித்தால் நானும்  பார்த்து பயனுறுவேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 16, 2016, 9:04:15 AM9/16/16
to மின்தமிழ்


On Friday, September 16, 2016 at 5:40:36 AM UTC-7, singanenjan wrote:
மிக நல்ல   கருத்து. இந்த மீனத்திடைநிலை பாடலை ஏன் அப்பா   அடிக்கடி  என்னிடம் சொல்லி  எல்லாமே மாறக் கூடியவை என்பார். 

ஒருமுறை , கரையான் புற்றுகள்  பற்றி ஒரு சிறு  ஆய்வு   செய்தேன்; அப்போது வராஹிமிஹிரரின் , BRIHATSAMHITA படித்தேன்.  நல்ல  நூல்.
 வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.

இந்த செய்தி தங்களுக்கு எங்கே கிடைத்தது என தெரிவித்தால் நானும்  பார்த்து பயனுறுவேன்.

உவேசா மணிமேகலை உரையில். சம்பந்தரின் கோளறு பதிகத்திலும் அரிசோனன் கேட்ட பாட்டில் 
மணிமேகலை போல் நட்சத்திரம் தொடங்கலாம்.

இந்த இழையில் மேலும் ரெஃபெரென்சஸ் உண்டு:


நா. கணேசன்
 

2016-09-10 22:19 GMT+05:30 mukunthan <muku...@gmail.com>:
 பாத்திரம் பெற்ற காதை
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்


உரை:
இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக ;

       இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்-வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15 : 23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோ  ராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொருகாலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர் பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.

http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Varahamihira.html
வராகமித்திரரின்  காலத்தை அறிந்து (கிபி 505–587 என விக்கிபீடியா கூறுகின்றது)  , மணிமேகலை அதற்கு முற்பட்டது எனக் கூறமுடியுமா? அறிந்தவர்கள் விளக்கவும்.


நன்றி


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mukunthan Pathmanesan

unread,
Sep 16, 2016, 11:39:54 AM9/16/16
to mint...@googlegroups.com
வணக்கம் சிங்கநெஞ்சம் ஐயா,
http://www.tamilvu.org/slet/l3200/l320urai.jsp?id=1200&sid=12006
இவ்விணைப்பில் உள்ளது. பாருங்கள்.

அதர்வண வேதத்தில் கார்த்திகை முதலாக நட்சத்திரங்கள் எண்ணப்பட்டுள்ளன.


இதுபற்றி மேலும் ஏதாவது தெரிந்தால் இங்கே பகிருங்கள்.


நன்றி,
முகுந்தன்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/zlplHfYQ4tE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Sep 16, 2016, 11:56:26 AM9/16/16
to mint...@googlegroups.com
நன்றி முகுந்தன். நிச்சயமாக.

அச்சு வினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.
இந்த 'என்பர் ' தான்  இடிக்கிறது.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mukunthan Pathmanesan

unread,
Sep 16, 2016, 2:32:47 PM9/16/16
to mint...@googlegroups.com

2016-09-16 21:26 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இந்த 'என்பர் ' தான்  இடிக்கிறது.

An Indian Ephemeris, A.D. 700 to A.D. 1799 (1922) Swamikannu Pillai, L.d. Bahadur,diwan.​

https://books.google.lk/books?id=_aA9AQAAMAAJ&q=%22The+astronomers+of+Varahamihira%27s+time+knew+that+Krittika+was+the+first+nakshatra+in+vedic+times%22&dq=%22The+astronomers+of+Varahamihira%27s+time+knew+that+Krittika+was+the+first+nakshatra+in+vedic+times%22&hl=en&sa=X&ved=0ahUKEwidu5bmwZTPAhUDEpQKHWPyB70Q6AEIJjAC
Inline image 1
It is exceedingly probable that the conventional motion of the Sapta Rishis through the nakshatras was made to start like the motions of the planets, with the first nakshtra at the date of 0 Kaliyuga.
That first nakshatra was in all probability Krittika and not Asvini according to the modern usage. The astronomers of Varahamihira's time knew that Krittika was the first nakshatra in vedic times, and in quoting a nakshatra for the Saptarshis in the reign of Yudhishtira, they probably conformed to the ancient usage, rather than to their own  fixation of Asvini as the first nakshatra. If so, Magha would be the eighth nakshatra, beginning from Krittika ; that is, the entry of the Rishis into Magha nakshatra would mean  the beginning of the eighth century reckoned from 0 Kaliyuga, i.e., from 3102 B.C. This takes us to 2402 B.C., which is not very distant from 2448 B.C., the date recorded in Varahamihira's verse.
“ asan maghasu munayah sasati prithivim yudhishthire nripatau shad dvika panchadvyutah éakakalah tasya rajnaéya.”
Reply all
Reply to author
Forward
0 new messages