பருவமழையால் (Monsoon) நீரைப்பெறும் இந்திய வேளாண்மையில் நீர்மேலாண்மை 5000 ஆண்டுகளாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியர்கள் செய்த முதல் எந்திரம் ஏற்றம் எனலாம்.
சிந்து சமவெளி, சுமேரியா, எகிப்து என்று ஆசியாவின் பழமையான நாகரீகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரம், ஆசிய நாடுகளில் இன்றும் உபயோகத்தில் உள்ளது. ஏற்றத்தில் இரண்டு பாகங்கள் முக்கியமானவை: (1) தாழ்மரம் - இதில் எதிர்எடை (counterweight) பொருந்தியிருக்கும். இதைத் தாழ்த்திக் கிணற்றிலோ, ஆற்றிலோ நீர் சேந்துவர். (2) கொடி -
Rope or pole of a well-sweep; ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு. (W.) (MTL)
மரக்கிளையின் பெயர் சினை. தேரில் நிற்கும் கம்பத்தைச் சினை (அ) கொடிஞ்சி (< கொடி) என்பர். இங்கே, கொடி என்பது ஏற்றத்தின் கொடி. யாழ்ப்பாணத்து மௌனகுரு அருளம்பல சுவாமிகளைப் புகழ்கையில், பாரதியார்
“ஆசை யெனும் கொடிக்கு, ஒரு தாழ்மரமே போன்றான்” என்று ஏற்றத்தின் இரு பிரதான பாகங்களையும் பாடுகிறார்.
ஆசையை ஏற்றத்தின் கொடியாக உருவகித்து, குள்ளச்சாமியைத் தாழ்மரமாக உவமிக்கிறார் பாரதியார். ஏற்றத்தின் கொடியைத் நீர்நிலையில் தாழ்த்துவது தாழ்மரம். அப்போது கொடியில் உள்ள கமலை நீரைப் பருகும். உள்ளக் கமலத்தில் அருள்வெள்ளத்தைப் பருகச் செய்து, ஆசையாகிய கொடியைத் தணிக்கிறார் சுவாமிகள் என்று உருவக அணியாகச் சொல்லியுள்ளார். [Ref. 1]
தேரின் பல பாகங்களில் கொடி என்ற கம்பம் உண்டு. சினை என்று சங்க இலக்கியத்தில் இருக்கும். கொடிஞ்சி/கொடுஞ்சி என்றும் தேர்ச்சினைக்குப் பெயர் உண்டு. கொடி > கொடிஞ்சி (Cf. ஏற்றத்தின் கொடி).
சங்க இலக்கியத்தில் கொடிக்கு ஒரு பொருள்:
----------------------------------------------------------
சங்க இலக்கியத்திலும் பின்னரும், Sterculia என்னும் இனத்து மரங்களுக்குத் தோன்றி என்ற பெயரும், அவற்றின் தோடுகள் அவிழ்ந்து மலராக விளக்குகள் போல மலர்தலும் விரிவாகப் பார்த்தோம். ஸ்டெர்குலியா சாதி மரங்கள் பல. அவற்றுள் சிறப்பானது ஸ்கார்லெட் ஸ்டெர்குலியா என்ற அறிவியற்பெயர் கொண்டது. இலையில்லாத வாதுகளில், பவள நிறத்தில் பூக்கள் மலரும் இந்தத் தோன்றி மரங்களில். இதனை விரிவாக 2000 ஆண்டுகளாகத் தமிழ்ப் புலவோர்கள் பாடியுளர். இலையில்லாத தோன்றிச் சினைகள் “விடுகொடி” என்று பரிபாடலில் இறந்தகால வினைத்தொகையாகப் பாடியுள்ளனர். இலைவிடுத்த கொடி என்னும் விடுகொடி எதிர்வரும் மாதங்களில் இலை தழைத்துவிடும். பிறகு இலை விடுக்கும். இந்த வருடாந்திரச் சுழற்சியில் விடுகொடிப் பருவத்தில் தோன்றிப் பூ சுடர்விளக்கு என்கிறது சங்க இலக்கியம். இந்தத் தோன்றியின் மலர்கள் சேவலின் சூட்டுக்கு (> ஜூட/ஜுட்டு, ஸம்ஸ்கிருதம்) உவமையாகின்றன. காந்தள் பூ அடிப்பாகம் மஞ்சளும், அதன் மேல் சிவப்பும் கொண்டவை. எனவே, தோன்றியைச் செவலின் கொண்டைக்கு உவமை சொல்லினர். காந்தள் அதற்குப் பொருந்தாது என்பது கரதலாமலகம்.
தோன்றி மரமும், சிறுதோன்றியும்:
ஏற்றத்தின் தாழ்மரமும், கொடியும் (Lever & Pole in Counterpoise Water-lift):
------------------------------------------------
பாரதத்தில் ஏற்றத்தின் கொடி, தாழ்மரம் காட்டும் சில ஒளிப்படங்கள் இணைத்துள்ளேன். காண்க. சங்க இலக்கியத்தில் கொடி என்று இப்பொருள் வரும் சில இடங்கள் பற்றி மடலாடல் செய்யலாம்.
நா. கணேசன்
Reference 1: ஹரிமொழி, தாழ்மரமும், கொடியும்
REVIEW OF PUMPS AND WATER LIFTNG TECHNIQUES
தாழ்மரம், கொடி - ஏற்றத்தில்.
மாராட்டிரத்தில் ஏற்றம்:
ஏற்றத்தின் கொடி:
கொடிக் கமலை (கவலை என்பர் சில இடங்களில்)
Counterpoise Water-lift (ஏற்றம்): Lever (தாழ்மரம்), Pole (கொடி)