சிறுதோன்றி ஆறு (செறுதோணி)

111 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 16, 2020, 10:56:41 PM5/16/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai
கோவை அருகே சிறுவானி ஆறு உள்ளது. சேரர்களுக்கு வானவன் என்று பெயர். வானி ஆறு ஒன்று பாயுமிடம் பொன்வானி பொன்னானி வட்டம். சங்க இலக்கியத்தின் வானி யாறு காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இப்பொழுது  பவானி ஆகிவிட்டது. கபிலர்மலை என்னும் நன்றா குன்றின் அருகே உள்ளது எனவே, நண்ணாவூர் எனக் கல்வெட்டுக்களில் (< நன்றாவூர்). திரு நணா எனத் தேவாரத்தில் நண்ணாவூர்.

தாமான் தோன்றி என்று கரூர் அருகே ஒரு மலை. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88)

கேரளாவில் சிறுதோன்றி என்ற மலையும், ஆறும் உள்ளது. சுள்ளிப் பேரியாற்றில் கலக்கும் உபநதி சிறுதோன்றி ஆறு. இன்று செறுதோணி என அழைக்கப்படும் ஆறு. தோன்றி வேறோர் இடத்திலும் இருப்பதால் சிறுதோன்றி என்ற பெயர் வந்திருக்கலாம். வானி - சிறுவானி போல.  தோன்றி தாவரத்தால் பெறும் பெயர்.

நா. கணேசன்

செறுதோணி ஊர் https://en.wikipedia.org/wiki/Cheruthoni

இடுக்கி மாவட்டத்திலுள்ள இந்த செறுதோணி அணை கேரளாவிலுள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது பெரியார் ஆற்றின் முக்கிய ஆறான செறுதோணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 3135 அடி . உயரம் 453 அடி . 1976 ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. குறவன் மலையின் ஒருபுறம் இடுக்கி அணையும் மறுபுறம் செறுதோணி அணையும் உள்ளது.

அணை பலவீனமாக இருக்கிறது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானக் குற்றச்சாட்டு என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர் நீதி மன்றத்தில் அளித்துள்ள கீழ்க்கண்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
"முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும் அணையின் பாதுகாப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும், இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும்' என்று அவர் கேரள அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

N. Ganesan

unread,
May 17, 2020, 1:14:15 PM5/17/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, panchav...@gmail.com
வானி என்றும் மரம் உண்டு. குறிஞ்சிப்பாட்டிலே வருகிறது. வானி யாறு காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இதே பவானி பெயர் சரஸ்வதி/வைசம்பால்ய என்னும் வானி யாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது. விந்து பிந்து (விந்து > இந்து ‘Soma, moon, drop'; விடங்கர் > இடங்கர், ...) ஆவது போல், வவானி >பவானி. சீந்து (> ஈந்து) மரத்தால், சிந்து மாகாணம், சீ- சீழம் (> ஈழம்) போன்ற நாடுகள் பெயர்பெற்றன.

தோன்றி, சிறுதோன்றி - போன்றவை தாவரப் பெயர்கள் எனக் குறிப்பிட்டேன். அவை என்னவாக இருக்கும்? ஆராய்வோம். பொதுவாக, தாவரத் தமிழ்ப்பெயர்கள் பற்றி எழுதினோர் காந்தள், தோன்றி, கோடல் எல்லாம் ஒன்று என அண்மை யாண்டுகளில் எழுதியுள்ளனர். ஆனால், குறிஞ்சிப்பாட்டு (கபிலர்) தனித்தனியாகக் குறிக்கும் இந்தத் தாவரங்கள் வெவ்வேறு எனக் கொள்ளலாம். இதனைப் பி. எல். சாமியும் குறிப்பிட்டுள்ளார். தோன்றி மலையில் தாவும் மான்கள் இருந்ததால், தாமான் தோன்றி என்று சேரர் தலைநகர் வஞ்சி (கரூர்) அருகே இருந்த கோக்கள் பாடப்பெற்றுள்ளனர். தோன்றிக் கோமான், அவன் மலை:

திரு. இரா. பஞ்சவர்ணம் (பண்ருட்டி நகராட்சித் தலைவர், விவசாயி) தாவரங்களைப் பற்றி ஆய்பவர்.
திரு. பஞ்சவர்ணம் அவர்கள் அழகாக காந்தள், தோன்றி, கோடல் பற்றி ஆராய்ந்து அவற்றின் தனித்தனியான அறிவியற் பெயர்களைக் கூறியுள்ளார்:
“இந்த தோன்றியை, மேற்கண்ட காந்தளோடு சேர்த்து இரண்டும் ஒன்றென்று கொண்டனர் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஆயின் இரண்டும் ஒன்றன்று. காந்தள் பூ இதழ்கள் உடைந்த கை வளையல் போன்றும் மேலும் நுனியில் சிவப்பும் அடியில் மஞ்சளுமாக இருநிறம் பெற்றுத் திகழும். தோன்றிப் பூ ஒரே நிறத்துடன் முழுவதும் சிவப்பாக விளக்குச் சுடர் போல் தோன்றும். முன்னது காந்தள் (Gloriosa superba); பின்னது தோன்றி (Firmiana colorata). எனவே இரண்டும் வெவ்வேறானவை என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. இரண்டும் தாவரவியல் அடிப்படையில் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்தவை என்பதும் அறியப்பட வேண்டுவதாம்.”

குறிஞ்சிப் பாட்டு ~ தும்பைதுழாஅய்சுடர்ப்பூந் தோன்றி  - 90
பஞ்சவர்ணம் ஐயா குறிப்பிடும் தோன்றி, காந்தள் தாவர வேறுபாடுகள் முக்கியமானவை. அதனால், குறிஞ்சிப்பாட்டிலும், தண்டி அலங்காரத்திலும் காந்தளும், தோன்றியும் வேறுபடுத்தப் படுகின்றன. தண்டி அலங்கார மேற்கோள் வெண்பாத் தருகிறேன்.
     "அவிழ்ந்தன தோன்றி, அலர்ந்தன காயா,
     நெகிழ்ந்தன நேர்முகை முல்லை, - மகிழ்ந்துடன்
     விண்டன கொன்றை, விரிந்த கருவிளை,
     கொண்டன காந்தள் குலை"
ஓவ்வொரு பூவும் பூக்கும் விதத்தை அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல், குலைகொள்தல் என விளக்கிய நயம் காண்க.

காந்தள் கைவிரல்கள் குவித்த குலையாக இருப்பவை.
தோன்றி மலர்கள் கொத்தாக இருந்து பின் அவிழ்ந்து மலர்பவை. பருத்தி வெடித்துப் பஞ்சை அவிழ்ப்பது போல் தோன்றிக் காய்கள் வெடித்துக் கொட்டைகளைப் பரப்பும். இதனால், தோன்றியை மலப்பருத்தி என்பர் இன்றும் நாட்டுப்புறங்களில். மலைப்பருத்தி தோன்றிக்கு மிக நல்ல பெயர். சென்னைப் பல்கலைப் பேரகராதி:
மலப்பருத்தி mala-p-parutti (p. 3101) மலப்பருத்தி mala-p-parutti , n. < id. +. Coral-flowered ordure tree, 1. tr., Sterculia colorata; நீண்ட மரவகை. (L.)
தோன்றி என்னும் பெயர் பருத்திபோல குமிழாக இருந்து, பருத்தி பஞ்சாக அவிழ்வதுபோல், அவிந்து தோன்றுவதால் “தோன்றி” எனப் பெயர்பெற்றிருக்கிறது.
" The genus Sterculia was named after the Latin god Sterculius. Stercus means dung. This name was given to this genus because of the foul-smelling flowers and leaves of some Sterculia species." பீநாறி என துர்நாற்றம் உடைய மரங்களாகத் தோன்றி மரங்களைத் தமிழர் அழைப்பர்.
தோன்றி மரங்கள் தமிழ்நாட்டில் இருந்து மலேசியா அண்மைக்காலத்தில் கொண்டுசென்றுளர். தோன்றியில் பல குருவிகளும் கள் (nectar) உண்ணும். Solomon Raju, Purnachandra Rao, Ezradanam. Bird-pollination in Sterculia colorata Roxb. (Sterculiaceae), a rare tree species in the Eastern Ghats of Visakhapatnam and East Godavari Districts of Andhra Pradesh. Current Science, Vol. 87, No. 1, 10 July 2004.
முல்லைப்பாட்டு (86) தோன்றி என்பதற்குத் தோன்றிப்பூ என்று உரைதந்தார் நச்சினார்க்கினியர்.
நாச்சியார் திருமொழியில் இந்த ஸ்கார்லெட் பூக்கள் கொண்ட தோன்றி மரத்தின் மேல் பூப்பதைப் பார்த்ததும்,
விஷ்ணுவின் கரத்தில் உள்ள செஞ்சுடர் ஆழி என்னும் சுதர்சன சக்கரம் நினைவுக்கு வருகிறது:
மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத முதல்வன் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள் கிற்றிரே

காந்தள் போல மஞ்சள் வண்ணம் அடியிலும், மேலே சிவப்புமாக
இருக்காது இந்தத் தோன்றி மலர்களில். தோன்றிப்பூவின் செந்நிறத்தை,
சேவலின் சூட்டுக்கு உவமை காட்டுவது இதனாற்றான்.
'குவியினர் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்" - மதுரைக் கண்ணங்கூத்தனார்
'கொய்ம்மலர் தோன்றிபோல் சூட்டுடைய சேவலும்" - திருத்தக்க தேவர், சிந்தாமணி.

தோடு ஆர் தோன்றி       நப்பூதனார்
ஆய்இதழ்த் தோன்றி       கழார்க் கீரனெயிற்றியனார்
தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக் - 96 - பெரும்பாண்
இங்கே, தோன்றிக் குடும்பத்தின் வேறுமரம்: https://www.ifoundbutterflies.org/nectar-plants/914/Sterculia-foetida
தோடுகள் கொண்ட தோன்றிப் பூக் காண்க. பீநாறி மரவகைகள் எனத் தமிழர் அழைப்பர்.

தோன்றிக் குடும்பத்தைச் சார்ந்த இன்னொரு மரமும் “தொண்டி” (< தோன்றி) என அழைக்கப்படுகிறது.
இப்பெயரை, சைய மலை ஆகிய ஆனைமலைக் காடுகளில் வசிக்கும் காடர்கள் மொழியில் பயன்படுத்துகின்றனர்.
தொண்டி³ toṇṭi , n. perh. தோன்று-. [M. toṇḍi.]  Bloody drop ordure tree, l. tr., Sterculia guttata; மரவகை. Kāṭar.

சிறுதோன்றி என்னும் மரு-தோன்றி
------------------------------------------------
செறுதோணி என்னும் மலையாளச்சொல்லின் செந்தமிழ் சிறுதோன்றி என்பதாகும். தோன்றி மரம் சாணம்போன்ற துர்நாற்றம் கொண்ட பூக்கள், சிலமரங்களில் இலைகள் இருப்பதால் அறிவியலில் ஸ்டெர்குலியா என்றழைப்பர். ஆனால், நறுமணம் கொண்ட தோன்றித் தாவரமும் தொல்தமிழர் அறிவர். எனவே, நறுமணங் குறிக்க, மருதோன்றி எனப் பெயரிட்டுள்ளனர். இது ஒரு புதர்ச் செடி. எனவே, சிறுதோன்றி. சிறு என்ற அடை பலசொற்களில் வரும்: தும்பி என்பது Bumblebees, Carpenterbees போன்றவை. எனவே, சிறுதும்பி = Dragonfly. இதுபோல், நூற்றுக்கணக்கான சொற்கள் சிறு- என்ற அடையில் தொடங்கும். அதுபோன்றது சிறுதோன்றி (henna shrub). இது மருதோன்றி என்னும் தாவரம். சிவப்பான பூக்களைக் கொண்டனவும், வெண்மையான பூக்களைக் கொண்டனவுமாக மருதோன்றி புதர் (சிறுமரம், shrub or small tree) இருக்கின்றன. https://en.wikipedia.org/wiki/Lawsonia_inermis
சிவப்பாக உள்ள மருதோன்றிக்குப் பவளக்குறிஞ்சி என்றும் பெயர். குருதி என்னும் சொல்லுடன் தொடர்புடையது குரண்டம். இது வடமொழிக்குப் பெயர்ந்து குருவிந்தம் என்றாகும். பவளக்குறிஞ்சி என்னும் சிறுதோன்றி மரப்பூவின் நிறம் கொண்ட
அலுமினம் ஆக்சைடுக்கு ஆங்கிலப்பெயர் ஆனது. https://en.wikipedia.org/wiki/Corundum
https://www.etymonline.com/word/corundum குருதி :: குருந்தம் :: corundum. சிறுதோன்றி சிறுமரப் பூவின் நிறம். எனவே, இந்த செறுதோணி பவளக்குறிஞ்சி, குரவகம் (< குருதி) என்பதும் உண்டு. மகரசகா என்று மன்மதனின் தோழனாகவும், ஐவணம்/அழவணம் என்றும் சிறுதோன்றிக்குப் பெயர் உண்டு.

மருதோன்றி என்ற சொல் மருதோணி, மருதூணி, மருதாணி என்றெல்லாம் பேச்சுத்தமிழில் திரிகிறது.
மாமேன் அடிச்சாரோ பிள்ளைக்கு
மருதோணி கம்பொடச்சி
பேரேன் அடிச்சாரோ
பேரேந்தி கம்புவெட்டி

சிறுதோன்றி (மருதோன்றியின் சிவப்புப் பூக்கள்):
சிறு- தோன்றியின் பூக்கள் அவிழ்தலை நோக்க, சிறுதோன்றி மலை, ஆறு, ஊரின் பெயர் வெளிச்சமடைகிறது.

NG

N. Ganesan

unread,
May 17, 2020, 10:36:38 PM5/17/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, panchav...@gmail.com
தோன்றி மரம் பற்றிய முக்கிய இலக்கியச் செய்திகள்:

கனகமாலையார் இலம்பகம்(சிந்தாமணி)

குறிஞ்சி யெல்லையி னீங்கிக் கொடிமுல்லை மகண்மொழிந் தாடச்
செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க் கொன்றையஞ் செல்வதற்குக் குரவ
மறிந்து பாவையைக் கொடுப்பத் தோன்றி யஞ்சுட ரேந்து
நிறைந்த பூங்குருந் துகுதே  னீர்பெய் தார்த்தன சுரும்பே. 410
கோவை இளஞ்சேரன் உரை:
“ மண நிகழ்ச்சியில் முல்லை நீங்கா இடம் பெற்றது. மணமகளை முல்லை மலர் மாலையால் ஒப்பனை செய்தனர். முல்லைக் சூட்டுசூட்டியும் கூந்தல் பின்னலை முல்லைத் தொடரால் ஒப்பனை செய்தும், மணமகனுக்கு முல்லைத் தாரை அணிவித்தும், குஞ்சியில் முல்லைத் தொடரைச் சுற்றியும், காதில் முல்லை மலரைச் செருகியும் மணவறையை முல்லைத் தொடர்களால் அழகுசெய்தும் மண விழாவை முல்லை விழாவாகவே ஆக்கினர். மாந்தர் குடும்பத் திருமணம் மட்டுமென்ன? மலர்க்குடும்பத்தில் ஒரு திருமணம் : மணமகன் : மாலையாகப் பூத்த கொன்றைப் பூ; மணமகள் : குரவம் பாவை; விளக்கு: தோன்றி மலர்; நீர்வார்த்தது: குருந்த மலர் வாழ்த்திசை: சுரும்பு. இந்தத் திருமணத்தைப் பேசி முடித்தது யாரென்று நினைக் கின்றீர்கள்? மாந்தரினத்தில் இவ்வேலையைச் செய்யும் முல்லை மலர்தான் பெண்பேசிச் சென்று திருமணத்தை நிறைவேற்றிய தாம்.”(தோன்றி மூலத்தில் உள்ளவாறே வைத்துள்ளேன்.)

ஔவை சு. து. உரை: ”மகண்மொழிந்தாட - மகட்பேசிச் செல்லுதலால். பைந்தார்க்கொன்றை - கொன்றை மாலைபோல மலர்வதால், பைந்தார்க் கொன்றையென்றார். குராமரத்தின் பூந்துணர் பாவையெனப்படுதலின் "பாவை கொடுப்ப" என்றார். தோன்றி - தோன்றிமரத்தின் ஒளிதிகழும் வெண்பூ. குருந்து - குருந்தமரம். தேன்நீர் - தேனாகிய நீர். சுரும்பு தேனீர்பெய்து ஆர்த்தன என்க.”  இளஞ்சேரன் போலன்றி, தோன்றி மரம் என்பது அருமை. ஆனால், அம்மரத்தின் பூக்கள் சிவந்தவை, தீப்போன்ற நிறம். Scarlet sterculia எனும் தோன்றி மரத்தை ஔவை சு.து. கண்டதில்லை போலும். ஔவை உரையில் ”தோன்றிமரத்தின் ஒளிதிகழும் செம்பூ” எனல் சரி.

”தோன்றி மலர் செந்நிறமானது. அம்மலருக்கு விளக்கும் பவழமும், கோழிச்சேவலின்றலைக்கு அம்மலரும் உவமையாகக்கூறப்படுகின்றன. இவற்றை, (அ) "விடுகொடிப் பிறந்த மென்றகைத் தோன்றி, பவழத் தன்ன செம்பூத் தாஅய்" (ஆ) "கார்க்கேற், றெரிவனப் புற்றன தோன்றி" (இ) "நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட, தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப், புலமெலாம் பூத்தன தோன்றி" (ஈ) "வான்றோன்றி, வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநாடு" (உ) "மரகதத் தண்டிற் றோன்றி விளக்கெடுப்ப" (ஊ) "தோன்றி தோன்றுபு புதல் விளக்குறாஅ" (எ) "ஒண்சுடர்த் தோன்றி" (ஏ) "தோன்றி யொண்பூ வன்ன, தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்" என வருவனவற்றால் அறிக. “ (இ. வை. அனந்தராமையர், கலித்தொகை)

தோன்றி மரம் பூக்கும் காலத்தே இலைகளை வாதுகளில் இருந்து முற்றிலும் உதிர்த்துவிடும். சிவப்புப்பூ மாத்திரம் அதன் கொடிகளில் இருக்கும். (கொடி = கொடிஞ்சி, சினை, இலையற்ற மரக்கிளை.) “தோன்றி வில் விளக்கே பூக்கும் விதர்ப்பநாடு” (பாரதம்). இங்கே, வில் என்பது ”விடுகொடி” என்று பரிபாடலில் உள்ளது. அதாவது இலை விடுத்த கிளை.
பரிபாட்டில் நல்லந்துவனார்,
  .....             ”கணவிரி, காந்தள்
தாய தோன்றி தீயெனமலரா” – பரி.: 20--21 எனவும், கேசவனார்
”நீரயற் கலித்த நெறிமுகைக் காந்தள்
வார்குலை அவிழ்ந்த; வள்இதழ் நிரைதொறும்
விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி
பவழத் தன்ன செம்பூத் தாஅய் பரி , 4. 3:16 எனவும், நப்பண்ணனார்
”கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்
...
உருவமிகு தோன்றி, ஊழ்இணர் நறவம் ” -பரி 19: 76-7 8 எனவும்
காந்தளையும் தோன்றியையும் வெவ்வேறு மலர்களாகக் கூறியுள்ளவாறு போல
நப்பூதனார். ”கோடற் குவிமுகை அங்கை அவிழ
தோடார் தோன்றி குருதி பூப்ப” -முல்லைப். 95-96 என்பர்.

தோன்றி மரமும், பூவும் - வர்ணனை:
வள்இதழ் நிரைதொறும்
விடுகொடிப் பிறந்த மென்தகைத் தோன்றி
பவழத் தன்ன செம்பூத் தாஅய்” பரி , 4. 3:16
பவழம் போன்ற பூக்கள் மரம் முழுதும் அலங்கரிக்கும். அப்போது, தோன்றிமரக் கிளைகளில் இலை உதிர்ந்திருக்கும்.
இலையற்ற வாதுகளை “விடுகொடி” எனக் கூறுகிறார். கொடி என்பதற்கு 20+ பொருள் தமிழில் உண்டு.
ஹரிகி “ஆசை என்னும் கொடி” பாரதியார் வரிக்குப் பொருள் கூறியுள்ளார்: http://tamilonline.com/thendral/article.aspx?aid=4528

பரிபாடலில் விடுகொடி. இலை விடுத்த தோன்றிமரச் சினை.
”கொடி என்னும் கருத்துப்பொருளில் சினை, வள்ளி, கொடி எனும் சொற்கள் புறநானூறு, பதிற்றுப்பத்துப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கொடி - பதி.ப. 40-5;43-23;44-10, புறம் 37-3;77-3;120-11
சினை - பதி.ப. 30-4;39-12;41-9, புறம். 11-4;36-8;45-2”

வாங்க சினை பொலிய ஏறி - வளைந்த கொடிஞ்சி பொலிய ஏறி;. அகம் 7-13. சினை அல்லது கொடிஞ்சி =தேரில் இலையில்லாத கம்பம்.
கொடி = Rope or pole of a well-sweep; ஏற்றத்தின் கோல் அல்லது கயிறு.
நாணைக் கோக்கும் தண்டம் = கோதண்டம் = வில். (இலை இருக்காது).
தோன்றி மர விடுகொடியில் செம்பூ (பரிபாடல்) = வில்லில் பூக்கும் விளக்கு (பாரதம்.)
விடுகொடி தோன்றி மரத்தில் (Important note: 'viTukoTi' is neither a flag nor a creeper).

N. Ganesan

unread,
May 21, 2020, 9:52:01 PM5/21/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tuesday, May 19, 2020 at 5:34:32 AM UTC-5, வேந்தன் அரசு wrote:
சிறுவாணி சரி. ஈரோடு மாவட்டத்தினரும் பவானி என அழைப்பதேன்.

சிறுவானி என்பதே சரி. பலர் எழுதியுளர். தும்பி-சிறுதும்பி, தோன்றி-சிறுதோன்றி, ... போல வானி-சிறுவானி நதிகளின் ஜோடி. வானி காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இது பவானி ஆகியுள்ளது.
வானி என்றும் மரம் உண்டு. குறிஞ்சிப்பாட்டிலே வருகிறது. வானி யாறு காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இதே பவானி பெயர் சரஸ்வதி/வைசம்பால்ய என்னும் வானி யாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது. விந்து பிந்து (விந்து > இந்து ‘Soma, moon, drop'; விடங்கர் > இடங்கர், ...) ஆவது போல், சீந்து (> ஈந்து) மரத்தால், சிந்து மாகாணம், சீ- சீழம் (> ஈழம்) போன்ற நாடுகள் பெயர்பெற்றன. சீமாறு என்பது வழக்கு. சீத்தலை என்னும் ஊரில் இருந்தவர் சாத்தனார். 25+ ஆண்டாய் எழுதிவருகிறேன்.

ஔவையார் சேரமன்னர் வரலாறு நூலில் வானி என்ற பெயரை நன்கு விளக்கியுள்ளார். பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கே உள்ள வடபெருங்கோட்டில் (Cf. cilampu) உற்பத்தியாகும் நதிகள் பல வானி எனப்பெயர்பெறும். கர்நாடகாவில் வானியாறு ஹோனவாறு (சாராவதி) ஓடுகிறது. தக்க்ஷிண-உத்தர கன்னட மாவட்டங்களைப் பிரிப்பது இவ் வானியாறு. வானவன் என்னும் சேரனால், மலை பெயர்பெற்றது. வானசாஸ்திரத்தை வடக்கே இருந்து கொணர்ந்தவர்கள் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பாரதப்புழையின் பழைய பெயர் பொன்வானி. கடலருகே பொன்னானி (=பொன்வானி) தாலுக்கா உள்ளது. பொன்வானி ஆறு மலையில் இருந்து பாலக்காடு அருகே கலக்கிறது. கங்கர் நாட்டில் கீழ்ப் பூவானி ஓடுகிறது. இது இப்போது கெப்பானி ஆகிவிட்டது. வானிக்கு பூவானி என்றும் பெயருண்டு. கோபி வட்டாரத்தில் மலையில் இருந்து இறங்குவது. இது காவேரியில் வவ்வானி (பவானி) ஊரில் கலப்பது. வானவாசி என்பது பாசி = கிழக்கு, வானமலைக்கு கிழக்கே உள்ள அரசர்கள் என்ப.

நா. கணேசன்

தேமொழி

unread,
May 21, 2020, 10:10:26 PM5/21/20
to மின்தமிழ்

On Thursday, May 21, 2020 at 6:52:01 PM UTC-7, N. Ganesan wrote:
On Tuesday, May 19, 2020 at 5:34:32 AM UTC-5, வேந்தன் அரசு wrote:
சிறுவாணி சரி. ஈரோடு மாவட்டத்தினரும் பவானி என அழைப்பதேன்.

சிறுவானி என்பதே சரி. பலர் எழுதியுளர். தும்பி-சிறுதும்பி, தோன்றி-சிறுதோன்றி, ... போல வானி-சிறுவானி நதிகளின் ஜோடி. வானி காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இது பவானி ஆகியுள்ளது.
வானி என்றும் மரம் உண்டு. குறிஞ்சிப்பாட்டிலே வருகிறது. வானி யாறு காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இதே பவானி பெயர் சரஸ்வதி/வைசம்பால்ய என்னும் வானி யாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது.

"சரஸ்வதியாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது" 
மறையும் இடம் 
Vinashana  
என்று அழைக்கப்படுகிறது. 

N. Ganesan

unread,
May 22, 2020, 7:58:00 AM5/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu, panchav...@gmail.com
கரூர் அருகே இருப்பது வெங்கால நாடு. வெக்காலி மரத்தால் வரும் பெயர். இதே வெக்காலி மரம் தான் வெங்காலூர் > (இன்றைய) பெங்களூர். இதுபற்றிக் கல்வெட்டுக்களுடன் விளக்கி விரிவாக எழுதியுள்ளேன்.

வானி யாறு பாயும் நாடு பூவானி நாடு என்பது பழம்பெயர். பெருங்கோடு என்னும் வான மலையில் பிறக்கும் நதி. பூவானி நாட்டைப் பூவாணி நாடு என்பதும் உண்டு. சிறுவானி > சிறுவாணி என்பது போல.

                                                                   பூவாணியநாடு

17.

*

தாரைகச் சுளிகாடை யாம்பேட்டை வனவாசி
                 சார்ந்தசின் னப்பனூருந்
தங்குதோப் பூருடன் கோனேரி பட்டியுஞ்
                சாற்றிடைப் பாடிதுளசை
ஆரோம லூர்கருப் பூர்நங்கை வல்லிவெள்
                ளாறுமேச் சேரிமுப்பை
யரசறா மணியமர குந்திசூ ரப்பள்ளி
              யணிகொங்க ணாபுரமுடன்
வீரமிகு சோழபாண் டியுநடுவ னேரியு மேவுசித்
                             தூருதேவூர்
     மிக்கபூ லாம்பட்டி பக்கநா டதிவலிமை
                மிஞ்சுறு பெரும்பாலையாம்
பேரிலகு மிருபத்தா றூரோடு மேன்மைமொழி
                பெற்றநதி களும்வரைகளும்
     பேசரிய சிற்பமமர் கோயிலுங் கட்டிபுகழ்
                   பெருகுபூ வாணியநாடே.

தாரமங்கலம் ஓமலூர் கொங்கணாபுரம்
கச்சுளி கருப்பூர் சோழபாண்டி
காடையாம்பேட்டை நங்கைவல்லி நடுவனேரி
வனவாசி வெள்ளாறு சித்தூர்
சின்னப்பன்பட்டி மேச்சேரி தேவூர்
தோப்பூர் முப்பை-சமுத்திரம் பூலாம்பட்டி
கோனேரிப்பட்டி அரசறாமணி பக்கநாடு
இடைப்பாடி அமரகுந்தி பெரும்பாலை.
துளசம்பட்டி சூரப்பள்ளி  

                                        - ஆக ஊர்கள் - 26

     பூவாணிய நாட்டின் வடக்கு எல்லையான பெரும்பாலையே
அதிகமானது இராஜமாநகரமான தடூர் (தருமபுரி) நாட்டுக்குத்
தென்எல்லை ஆம்.

                மற்றொருவகை

                   வெண்பா

18.

*

நங்கைவல்லி நாடு நணியபக்க நாடுடனே
தங்குபெரும் பாலையெனச் சார்நாடுந் - தங்குபுகழ்ப்
பூவா ணியநாடுட் பூத்தனவென் றோதினார்
பாவாண ருள்ளம் பரிந்து.

     பூவாணிய நாட்டினுள் நங்கைவல்லி நாடு (இதை வஞ்சிநாடு என
வழங்கினதுண்டு) பக்கநாடு - (இதை வெள்ளாறு நாடு என்பாருமுளர்)
பெரும்பாலைநாடு எனச்சில ஊர்கள் சேர்ந்ததாய்ச் சிறுசிறுநாடு ஆகப்
பிளவு கொண்டும் வழங்கப்பட்டுள்ளது.

On Monday, October 24, 2016 at 7:26:58 AM UTC-7, DEV RAJ wrote:
2016-10-22 9:53 GMT-04:00 DEV RAJ <rde...@gmail.com>:
ஆக்ரமணம்  தமிழில் ஆக்கிரமிப்பு ஆனது;
இதற்கான தூய தமிழ் வடிவம் என்ன ?
 
On Saturday, 22 October 2016 20:01:11 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
வவ்வுதல்

ஓரு பொருளைக் கையோடு கவர்ந்து எடுத்துச் செல்வதற்கும், நிலம் - வீடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதற்கும்
‘வவ்வுதல்’  ஒரே சொல் பொருந்துமா ? இலக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா ?

ஆக்கிரமித்தல் என்பதற்குப் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. கைப்பிடித்தல், பற்றுதல், கவர்தல், கைக்கொள்ளல், ....
அவனது நிலத்தைக் கையேறிவிட்டான் என்பது கொங்குநாட்டு வழக்கு. கையேறல் = ஆக்ரமித்தல்.

வௌவுதல் - நல்ல சொல். ஆக்கிரமிப்புக்கு. கூட்டமாகச் சென்று ஒருமரத்தைக் கையேறும் பறவை: வௌவால்/வவ்வால்.
கிளையைக் கைப்பற்றித் தொங்குவது, எனவே, வவ்வால்.

வானி நதியைக் காவேரி கைப்பற்றும் இடம்: வவ்வு+வானி = வவ்வானி. இது Bhavani (பவானி).
இதே போல, சரஸ்வதி (வைசம்பால்ய) நதி ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி தான்.
வவ்வானி என்ற பெயர் பழையதாக இருக்கலாம்.
(cf, வண்டி/பண்டி - வளைவு சக்கரம் உடைய வாஹனம். > bhaNDa or bhANDa - வளைந்த பாத்திரம். அதுபோல் வௌவானி > bhavAni).

NG
 
N. Ganesan

unread,
May 22, 2020, 8:19:33 AM5/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Thu, May 21, 2020 at 9:10 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
> "சரஸ்வதியாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது"
> மறையும் இடம்  Vinashana   என்று அழைக்கப்படுகிறது. 
அதாவது, விநாசநம். பாவங்கள் தீருமிடம். சரஸ்வதி மறையுமிடத்திற்கு பவானி என்பது பெயர் என மஹாபாரதத்திலே உள்ளது. அர்ஜுனன் மஹாபாரதப் போர் முடிந்தபின் பாவங்களுக்கு கழுவாயாக, தீர்த்த யாத்திரை மேற்கொள்கிறான். தன் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்குமிடம் சரஸ்வதி மறையும் பவானி. வவ்வு வானி > வவானி > பவானி. இதனை பிமல் சரண் லா அவர்களின் நூலில் 1980-களில் படித்தேன். 21 ஆண்டு முன்னர் அந்த ரெஃபெரன்ஸுடன் எழுதின மடல்:

VAIZAMBA_LYA_

<<<
Prof. Witzel noted that the Sarasvati River was also called vais'amba_lya_.
Some thoughts and queries:
1. What are the textual references where this synonym
is used? (I couldn't get access to Witzel 1999)
>>>

Dear Dr. Kalyanaraman,

Greetings.

Witzel, Substrate languages in OIA, EJVS, 1999, p. 11
"and note that the SarasvatI still has a similar name, Vai'sambhalyA
(with many variants, always a sign of foreign origin, in the
Brahmana texts: TB 2.5.8.6, -bhAlyA, -pAlyA, -bAlyA Ap'SS 4.14.4,
-bhAlyA BhAr'sikSA; cf. also RV vi'spAla?), which is to be derived
from something like *visambAz/*visambAL, ..."

We know that ta. vicumpu, pronounced as visumbu, means the "sky".
The river could be "vicumpAL" ("sky river", spoken out as
"visumbAL"). This gets support from the place name on the banks of
Sarasvati river, bhavAnipura where  Sarasvati re-emerges from sand
(B. C. Law, 1968, Mountains and Rivers of India). Note tamil "vAn2"
is "sky". This Dr. "vAn" is in the "bhavAnipura" on the Sarasvati.
Compare this info with the river, vAn2i ("sky  river") in Erode
district which is referred to in Sangam texts. This "vAn2i" river in
Tamil Nadu is sanskritized as "bhavAni", and now there is an
irrigation dam called bhavAnisAgar.  Note that the "descent of a
river from sky" is celebrated always, the "Ganga's descent" in
Mahabalipuram, the huge monolithic relief sculpture of the Pallavas.

> From Dravidian visumbAL to Sanskrit vai'sambAlyA is rather common:
Dr. miiN AL ("fisherman") becomes "mainAla" (Prof. Witzel's same
paper). Settlements of "vEL" people is called in the RV as
"vailasthAna". Sangam texts refer to "vEL"s whose leader, Krishna
of Dvaraka, moving southward.

F. Southworth gives a Dravidian etymology for Sindhu as *kIndu/sIndu.
The Indus valley civilization, before the Aryans moved into South
Asia (No horses before 1700 BC), could have been called more like
"sIndu-visumbAL" culture.

Regards,
N. Ganesan

On Thursday, May 21, 2020 at 6:52:01 PM UTC-7, N. Ganesan wrote:
On Tuesday, May 19, 2020 at 5:34:32 AM UTC-5, வேந்தன் அரசு wrote:
சிறுவாணி சரி. ஈரோடு மாவட்டத்தினரும் பவானி என அழைப்பதேன்.

சிறுவானி என்பதே சரி. பலர் எழுதியுளர். தும்பி-சிறுதும்பி, தோன்றி-சிறுதோன்றி, ... போல வானி-சிறுவானி நதிகளின் ஜோடி. வானி காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இது பவானி ஆகியுள்ளது.
வானி என்றும் மரம் உண்டு. குறிஞ்சிப்பாட்டிலே வருகிறது. வானி யாறு காவிரியை வவ்வும் இடம் வவ்வானி. இதே பவானி பெயர் சரஸ்வதி/வைசம்பால்ய என்னும் வானி யாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது.
விந்து பிந்து (விந்து > இந்து ‘Soma, moon, drop'; விடங்கர் > இடங்கர், ...) ஆவது போல், சீந்து (> ஈந்து) மரத்தால், சிந்து மாகாணம், சீ- சீழம் (> ஈழம்) போன்ற நாடுகள் பெயர்பெற்றன. சீமாறு என்பது வழக்கு. சீத்தலை என்னும் ஊரில் இருந்தவர் சாத்தனார். 25+ ஆண்டாய் எழுதிவருகிறேன்.

ஔவையார் சேரமன்னர் வரலாறு நூலில் வானி என்ற பெயரை நன்கு விளக்கியுள்ளார். பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கே உள்ள வடபெருங்கோட்டில் (Cf. cilampu) உற்பத்தியாகும் நதிகள் பல வானி எனப்பெயர்பெறும். கர்நாடகாவில் வானியாறு ஹோனவாறு (சாராவதி) ஓடுகிறது. தக்க்ஷிண-உத்தர கன்னட மாவட்டங்களைப் பிரிப்பது இவ் வானியாறு. வானவன் என்னும் சேரனால், மலை பெயர்பெற்றது. வானசாஸ்திரத்தை வடக்கே இருந்து கொணர்ந்தவர்கள் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம். பாரதப்புழையின் பழைய பெயர் பொன்வானி. கடலருகே பொன்னானி (=பொன்வானி) தாலுக்கா உள்ளது. பொன்வானி ஆறு மலையில் இருந்து பாலக்காடு அருகே கலக்கிறது. கங்கர் நாட்டில் கீழ்ப் பூவானி ஓடுகிறது. இது இப்போது கெப்பானி ஆகிவிட்டது. வானிக்கு பூவானி என்றும் பெயருண்டு. கோபி வட்டாரத்தில் மலையில் இருந்து இறங்குவது. இது காவேரியில் வவ்வானி (பவானி) ஊரில் கலப்பது. வானவாசி என்பது பாசி = கிழக்கு, வானமலைக்கு கிழக்கே உள்ள அரசர்கள் என்ப.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d778f041-4096-414d-a7ff-403527846e47%40googlegroups.com.

தேமொழி

unread,
May 22, 2020, 11:50:59 AM5/22/20
to மின்தமிழ்
சரி .. ஒன்று செய்யலாம் முனைவர் கணேசன் .     

Searching for Saraswati, Irfan Habib
இது நான் படித்த,  சரஸ்வதி மறையும் இடம் குறித்த,  கட்டுரைகளில்  ஒன்று. 

மேலும் மிஷல் தனினோ வின் நூலிலும்,  மிக விரிவாக சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும்  செய்திகள் உள்ளது. 
இந்த மின்னூல் என்னிடம் உள்ளது. 
சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு / Sarasvati Oru Nadhiyin Maraivu
மிஷல் தனினோ / Michel Danino
Kizhakku Pathippagam, Apr 1, 2012 

Searching for Saraswati, Irfan Habib  << இக்கட்டுரையின் செய்தியை,   சுட்டி கொடுக்க, வெட்ட ஒட்ட  எளிது என்பதாலும்.... 
இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு வரலாற்று ஆய்வாளரின் கட்டுரை என்பதாலும் இங்கு கொடுக்கிறேன்.

இது நான் எழுதிய விளக்கமல்ல. நான் படித்து அறிந்து கொண்டது 

Searching for Saraswati
Irfan Habib
APRIL 17, 2015

[..]

The Rigveda in its River Hymn (X. 75.5) puts Saraswati without any adjectives between the Yamuna and Shutudri (Sutlej). This suits the present Sarsuti. The Panchavimsha Brahmana and other early texts speak of the Saraswati’s disappearance at Vinashana, which means that it did not then join the Ghaghar, but ran in a more southerly direction, probably running past Sirsa (medieval name: Sarsati), the place obviously named after the river itself. Vinashana lay presumably further south within Haryana. The Manusmriti, 2.17, proclaimed the zone of Saraswati and Drishadvati (Chautang?) as the holy land of Brahmavarta; and so the course of Saraswati, as described above, would make Brahmavarta correspond exactly to Haryana.
[..]

இது போல நீங்களும் நீங்கள்  குறிப்பிடும் 

/// இதே பவானி பெயர் சரஸ்வதி/வைசம்பால்ய என்னும் வானி யாறு ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது. ///

என்பது எங்கு கிடைத்தது என்று குறிப்பிடுங்கள். 

நீங்களே எழுதும் விளக்கங்கள் தவிர்த்துவிடுங்கள். 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 22, 2020, 12:00:39 PM5/22/20
to மின்தமிழ்
மேலும் Irfan Habib அவர்களின் கருத்து,
சரஸ்வதி எனக் குறிப்பிடப்படுவது ஆறுகளின் பொதுவான பெயர். 
சரஸ் என்பது வடமொழியில் நீர் நிலைகளைக் குறிக்கும் ஒரு சொல், பெண்பால் வடிவமாகக்  கூறப்படுகிறது. 

N. Ganesan

unread,
May 22, 2020, 12:35:25 PM5/22/20
to மின்தமிழ், vallamai
On Fri, May 22, 2020 at 10:51 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சரி .. ஒன்று செய்யலாம் முனைவர் கணேசன் .     

உங்களிடம் நான் 21 ஆண்டுக்கு முன் கொடுத்துள்ள ரெஃபெரென்ஸ் நூல் இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த நூலில் பார்க்கலாம். மஹாபாரதம் போன்றவை உதவும்.

மிஷல் தனினோ கோவையில் தான் இருக்கிறார். அவர் நூலைப் பார்த்துள்ளேன்.
நானும் அவரும் மடலாடியதும் உண்டு. சிலவற்றைத் திருத்தியுள்ளார்.

> இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு வரலாற்று ஆய்வாளரின் கட்டுரை

இது இர்ஃபானா? அவர் ஸம்ஸ்கிருதம் அறிந்தவரா?

நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7409cadf-cb5e-448a-87fd-d277c7240e52%40googlegroups.com.

தேமொழி

unread,
May 22, 2020, 1:04:04 PM5/22/20
to மின்தமிழ்

On Friday, May 22, 2020 at 9:35:25 AM UTC-7, N. Ganesan wrote:
On Fri, May 22, 2020 at 10:51 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சரி .. ஒன்று செய்யலாம் முனைவர் கணேசன் .     

உங்களிடம் நான் 21 ஆண்டுக்கு முன் கொடுத்துள்ள ரெஃபெரென்ஸ் நூல் இருக்கும் என நினைக்கிறேன்.

ஐயோ !!!!!!!!!!!  இதென்ன வம்பு!!! 
21 ஆண்டுக்கு முன்  நான் உங்களை அறிந்திருக்கவில்லையே 

அந்த நூலில் பார்க்கலாம். மஹாபாரதம் போன்றவை உதவும்.

நீங்கள் சொன்னால், நீங்கள்தான் தேடி மேற்கோள் கொடுக்க வேண்டும். 
நீங்கள் சொல்வதற்கு  நான் ஏன்  தேட வேண்டும்?

மிஷல் தனினோ கோவையில் தான் இருக்கிறார். அவர் நூலைப் பார்த்துள்ளேன்.
நானும் அவரும் மடலாடியதும் உண்டு. சிலவற்றைத் திருத்தியுள்ளார்.

> இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு வரலாற்று ஆய்வாளரின் கட்டுரை

இது இர்ஃபானா? அவர் ஸம்ஸ்கிருதம் அறிந்தவரா?

Irfan Habib

விரைவில் சாந்தினிபீ  இவரது சரஸ்வதி குறித்த முழுக்கட்டுரையும் தேடி எடுத்து பகிர்வதாக வாட்சப் உரையாடலில் கூறினார்கள், கிடைத்தவுடன் நான் இங்கு பகிர உள்ளேன். 
 
நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 22, 2020, 1:19:40 PM5/22/20
to மின்தமிழ், vallamai
On Fri, May 22, 2020 at 12:04 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Friday, May 22, 2020 at 9:35:25 AM UTC-7, N. Ganesan wrote:
On Fri, May 22, 2020 at 10:51 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சரி .. ஒன்று செய்யலாம் முனைவர் கணேசன் .     

உங்களிடம் நான் 21 ஆண்டுக்கு முன் கொடுத்துள்ள ரெஃபெரென்ஸ் நூல் இருக்கும் என நினைக்கிறேன்.

ஐயோ !!!!!!!!!!!  இதென்ன வம்பு!!! 
21 ஆண்டுக்கு முன்  நான் உங்களை அறிந்திருக்கவில்லையே 

21 ஆண்டுக்கு முன் எழுதியுள்ள மடலில் ரெஃபெரன்ஸ் பாருங்கள்.
சாந்தினி பீ,  தவத்திரு சித்பவானந்தரின் சாரதா வித்யாலய பழைய மாணவி.
இர்ஃபானுக்கு சம்ஸ்கிருத அறிஞரா என அறிய ஆவல்.

NG

நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0bbea9c-8a0f-464e-8921-e6db9808a7af%40googlegroups.com.

தேமொழி

unread,
May 22, 2020, 1:29:15 PM5/22/20
to மின்தமிழ்
அதில் ....

ராஜஸ்தானில் மணலில் மறையும் இடமும் பவானி என அழைக்கப்படுகிறது  

இந்த வரி எங்கு இருக்கிறது 

நா. கணேசன்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages