பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...குறள் மீது ஒரு மீள்பார்வை

1,136 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 13, 2014, 10:43:37 PM9/13/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இம்மாத "தமிழ்த்தேர்" மாத இதழில் வெளியான என் கட்டுரை ... அனைவரின் கருத்துகளையும் அறிய விருப்பம்.

பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் - ஒரு மீள்பார்வை

_______________________________________________________________________________________________________

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். - குறள் 972 [அதிகாரம்: பெருமை]

திருக்குறளின் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முற்படுவோர், உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே  மாதிரியாகப் பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித் தருகிறது என விளக்கம்  தர முற்படுகின்றனர். எக்காலத்திற்கும்... உலகில் எங்கு பிறந்த மக்களுக்கும் பொருந்துகின்ற ஒரு பொது மறையென போற்றப்படும் திருக்குறளின் வழியே வள்ளுவர் இக்கருத்தைத்தான்  முன் வைத்திருப்பாரா என ஆராய்கிறது இக்கட்டுரை. செய்யும் தொழிலால்தான் பெருமை என்று கூறுகிறதா இக்குறள்?

திருக்குறளில் "தொழில்" என்ற சொல் வருவது மொத்தம் எட்டு குறள்களில்.  அக்குறள்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கு மு. வரதராசனார் கொடுத்த விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் "தொழில்" என்ற சொல் என்ன பொருளில் இக்குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிபிடப்பட்டுள்ளது.

தொழில் என்ற சொல் கொண்ட குறள்கள்:

[1]

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்

அனைத்தே புலவர் தொழில் - குறள் 394 [கல்வி]

உரை:

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

தொழில் = "செயல்" என்றப் பொருள் தருகிறது

---

[2]

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் - குறள் 428 [அறிவுடைமை]

உரை:

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

தொழில் = "செயல்" என்றப் பொருள் தருகிறது

---

[3]

குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்

வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 549 [செங்கோன்மை]

உரை:

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்.

தொழில் = "கடமை" என்றப் பொருள் தருகிறது

---

[4]

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 582 [ஒற்றாடல்]

உரை:

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

தொழில் = "கடமை" என்றப் பொருள் தருகிறது

---

[5]

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது

சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 648 [சொல்வன்மை]

உரை:

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிதாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

தொழில் = "ஏவல்" (பணி/கட்டளை) என்றப் பொருள் தருகிறது

---

[6]

நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்

பேணாமை பேதை தொழில் - குறள் 833 [பேதைமை]

உரை:

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

தொழில் = "செயல்" என்றப் பொருள் தருகிறது

---

[7]

காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 1252 [நிறையழிதல்]

உரை:

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

தொழில் = "வேலை" என்றப் பொருள் தருகிறது

---

[8]

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா

செய் தொழில் வேற்றுமையான் - குறள் 972 [பெருமை]

மு.வ உரை:

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

தொழில் = "தொழில்" (வேலை) என்றப் பொருள் கூறுகிறார் மு. வ. 

சாலமன் பாப்பையா உரை:

எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

தொழில் = "செயல்" என்றப் பொருள் கூறுகிறார்  பாப்பையா.

இக்குறள் பெருமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

---

இனி “பெருமை” என்ற ஓர் அதிகாரம் எழுதிய வள்ளுவர், அதில் உள்ள பத்து குறள்கள் வழியே பெருமை பற்றி விளக்குவதைக் காண்போம். குறள்களைத் தொடர்ந்து அவற்றின் உரைகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருக்குறள் அதிகாரம்: "பெருமை":

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல். - குறள் 971

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். - குறள் 972

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர். - குறள் 973

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. - குறள் 974

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல். - குறள் 975

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. - குறள் 976

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின். - குறள் 977

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து. - குறள் 978

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல். - குறள் 979

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும். - குறள் 980

உரை:

ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்லவை செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே. (குறள்: 971)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

நல்ல பண்புகள் (பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (குறள்:973)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது பண்பு நிறைந்த செயலின் தன்மை.

தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.(குறள்: 974)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (குறள்: 975)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (குறள்: 976)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை .

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (குறள்: 977)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (குறள்: 978)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (குறள்: 979)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (குறள்:980)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

இவற்றைத் தொகுத்து வழங்கினால், உற்சாகத்துடன் கூடிய விடாமுயற்சி கொண்ட செயலால் செயற்கரிய செய்தல், சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்தல்நெறி வழுவாத சிறந்த செயல்களைச் செய்தல், பிறரால் இயலாதவற்றை தக்க வழியில் செய்து முடித்தல், நன்மரபைப் பேணும் செயல், நிலை உயரும்பொழுதும் பணிவுகொண்ட செயல், செருக்கற்ற செயல், ஆணவமற்ற செயல், பிறரின் நற்பண்புகளை மட்டும் மதிக்கும் செயல் என அறிய செயல்களை நெறிமுறை வழுவாது செய்து முடித்தலும், செருக்கு தவிர்த்து ஆணவமற்று பிறரை மதிக்கும் செயகள்தாம் மீண்டும் மீண்டும் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது "பெருமை" அதிகாரத்தில் வள்ளுவர்  குறிப்பிடும் பிற குறள்களின் வழி அவர் ஒருவருக்கு "பெருமை" தருவது எது என அறிவுறுத்துகிறார் என ஒப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை "பிறப்பொக்கும்" குறளை மீள்பார்வை செய்தோமானால் ...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். - குறள் 972

என்ற குறளுக்கு பாப்பையா கூறும் "எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்" பொருள்தான் மிகவும் பொருந்தி வருகிறது. 

"எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை" என்ற மு.வ உரை, குறிப்பாக "செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடு"  என்பது பொருந்தவில்லை.  அதாவது இக்குறளில் தொழில் என்பது  "வேலை" என்றப் பொருள் தரவில்லை. அதனால் தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் ஒருவர் சிறப்பு பெறுவதில்லை, ஒருவருடைய நற்செயல்களால் மட்டுமே அவர் சிறப்பு பெறுகிறார் என்பது புலனாகிறது.  

அந்த அதிகாரத்தில் ஏனைய குறள்கள் நற்பண்பு கொண்ட செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பிறப்பொக்கும் என்று தொடங்கும் குறள் மட்டும் ஒருவர் செய்யும் தொழிலினால்  உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றுப் பேச வழியில்லை.  அவ்வாறு பொருள் கொள்ள முற்படுவது வள்ளுவர் வலியுறுத்தும் பொருளுக்கு மாறானப்  பொருளைக் கொள்வதாக அமையும். 

இதனை நாம் மேலும் தெளிவு படுத்தலாம்.  வள்ளுவர் ஒரே கருத்து கொண்ட குறளைஅக்கருத்தை வலியுறுதும் நோக்கில் மற்றொரு பொருத்தமான இடத்திலும், பிறிதொரு அதிகாரத்திலோ அல்லது அதே அதிகாரத்திலோ  வேறொரு குறளாக வடித்திருப்பார்.  குறிப்பாக "மருந்து" அதிகாரத்தில் ஒரே பொருள் கொண்ட குறள்களைக் காணலாம். இது வள்ளுவர்  தமது கருத்தை வலியுறுத்தும் பாங்கு.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. - குறள் 944

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும். - குறள் 947

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (குறள்: 944)

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (குறள்: 947)

என்ற இரு குறள்களின் மையக் கருத்தும் பசித்துப் புசிக்கவே வலியுறுத்துகிறது.

"பெருமை" என்ற அதிகாரம் எழுதிய வள்ளுவர் பெருமை பற்றி அந்த அதிகாரம் தவிர்த்து பிற இடங்களிலும் பெருமை பற்றி குறிப்பிட்டுச் செல்கிறார்.  திருக்குறளில் "பெருமை" என்ற சொல் மொத்தம் 16 குறள்களில் இடம் பெறுகின்றன. இவற்றில் குறள்கள்  974975, 978, 979 ஆகிய நான்கு குறள்களும்  பெருமை அதிகாரத்திலேயே இருப்பதுவும், இவை சற்று முன்னர் பொருள் விளக்கம் நோக்கப்பட்ட குறள்களுமாகும்.  இவற்றைத் விலக்கி, பெருமை என்ற சொல் மற்ற குறள்களில் என்ன பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது என்பதை காண்போம். 

[1]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.      - குறள் 21

 உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பெருமை தருவது: சிறந்த ஒழுக்கம் பெருமை தருகிறது.

---

[2]

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.  - குறள் 22

உரை:

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பெருமை தருவது: ஆசைகளை விட்டு விலகிய ஒழுக்கம் பெருமை தருகிறது.

---

[3]

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.     - குறள் 23

உரை:

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

பெருமை தருவது: அறவழியில் நடப்பது பெருமை தருகிறது.

---

[4]

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.       - குறள் 28

உரை:

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பெருமை தருவது:  பிறருக்கு அறவழியில் வாழ வழிகாட்டும் செயல் பெருமை தருகிறது.

---

[5]

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு. - குறள் 336

உரை:

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

பெருமை: நிலையாமை என்ற பண்பினைக் குறிக்கிறது.

---

[6]

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.    - குறள் 416

உரை:

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

பெருமை தருவது:  நன்மை தரும் சொற்களை கேட்பது  உயர்வை பெருமையைத் தருகிறது.

---

[7]

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.            - குறள் 451

உரை:

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

பெருமை: தீய செயல் செய்யும் மக்களை விளக்கும் பெரியோரின் இயல்பு பெருமை எனக் காட்டப்படுகிறது.

---

[8]

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.   - குறள் 505

உரை:

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

பெருமை தருவது: ஒருவரின் செயல்களே அவருக்கு  உயர்வை பெருமையைத் தருகிறது.

---

[9]

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.  - குறள் 611

உரை:

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பெருமை என்ற சொல் வலிமை, ஆற்றல், சக்தி என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது.

---

[10]

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.            - குறள் 907

உரை:

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

பெருமை தருவது: பெண்ணின் நாணம்  என்ற இயல்பான பண்பு பெருமையைத் தருகிறது.

---

[11]

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.       - குறள் 980

உரை:

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

பெருமை: பெருந்தன்மை என்ற பண்பான செயலைக் குறிக்கிறது.

---

[12]

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல். - குறள் 1021

உரை:

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

பெருமை தருவது: உரிய கடமையைச் செய்யும் செயல் பெருமையைத் தருகிறது.

இங்கு குறிப்பிட்டுள்ள பெருமை என்ற சொல் கொண்ட 12 குறள்களின் வழியாகவும் வள்ளுவர்ஒருவருக்கு பீடு தரும் உயர்வை... பெருமையைத் தருவது அவருடைய நன்னெறி வழி நடக்கும் செயல் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

குறிப்பாக,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

என்ற குறள் பிறப்பொக்கும் குறளின் பொருளையேத் தருகிறது.

எனவே, பிறப்பொக்கும் குறளுக்கு, "பிறப்பில் அனைவரும் சமமாக இருந்தாலும், ஒரே போன்று பிறந்தாலும் ஒருவரை பெருமை மிக்க இடத்திற்கு உயர்வடையச் செய்வது அவர் செய்யும் செய்கையே என்ற விளக்கமே பொருந்துகிறது.   ஒருவர் செய்யும் அருஞ்செயல்கள் அவருடைய  மதிப்பை உயர்த்துவதையும், தாகாத செயல்கள் அவர் புகழை சிறுமை படுத்துவதையுமே”  வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

ஒருவர் செய்யும் ஊழியத்திற்கும் பெருமைக்கும் தொடர்பில்லை, மக்கள் மனதில் இக்கருத்திற்கு  மாறான பிழையான எண்ணங்கள் பதிந்திருந்தாலும்... உண்மையில் நற்செயல்களே அவர் எத்தொழில் செய்தாலும்   ஒருவருக்குப் பெருமையைச் சேர்க்கும். ஒருவருடைய குடிபிறப்பினாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பெருமை வருவதில்லை.  அவரது நற்செயல்களே பெருமை தரும்.

செய்யும் தொழிலால் வேறுபாடு காண்பிப்பது வர்ணாஸ்ரமம், அதனால் செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது  நான்கு வர்ண குண என்பது ஆரியர் மரபு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்ல வரும் வள்ளுவன் இங்கு  நான்கு வர்ண குண வேறுபாடுகளைக் குறிக்கவில்லை. அது ஒருவர் குணநலனைக் குறிக்கும். ஒருவரது செய்கையேஅவருக்கு உயர்வையும் பெருமையையும் அளிக்கும் என்பது பெருமை அதிகாரத்தில் வள்ளுவர் குறிக்கும் பிற குறள்களின் பொருளுடன் ஒப்பிட்டுக் காண்கையில் தெளிவாகிறது.  

இக்குறள் காலப்போக்கில் நான்கு வர்ண உயர்வு தாழ்வினை நம்புபவர்கள், அதனால் வரும் பலனை விரும்புபவர்கள் மூலம் மாற்றுப் பொருள் கொடுக்கும் நிலையினை அடைந்திருக்கிறது.  வள்ளுவர் சொல்ல நினைக்காத கருத்தை மக்கள் மனதில் திணிக்க மிகத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 12:14:05 AM9/14/14
to mint...@googlegroups.com
//செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது  நான்கு வர்ண குண என்பது ஆரியர் மரபு. //

இந்தக் கருத்துடன் எனக்கு உண்டன்பாடு இல்லை.  வர்ண குணம் என்பது மாந்தரின் மனப்பாங்கு என்றுதான் "கீதை"யில் கண்ணன் உரைக்கிறார்.  இதில் உயர்வு தாழ்வு என்பது வர்ணத்தால் இலை.  

வர்ணம் -- வண்ணம் என்பது மன நிலைப்பாடு.  அதையேதான் கீதையும் வற்புறுத்துகிறது.  தனது மனப்பாங்குக்கு ஏற்புடைய கடமையை ஆற்றவேண்டும் என்றும் உரைக்கிறது.  எங்கு உயர்வு தாழ்வு இல்லையோ, அங்கு பாகுபாடு எப்படி ஏற்படும்?

ஒரே பொய்யை நூறு தடவை சொன்னால் உண்மை ஆகிவிடாது.  நீங்கள் சாதி உணர்வையும், "வண்ண" மனப்பாங்கையும் குழப்பிக்கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்றே எனக்குப் படுகிறது.  இதில் ஆரியரென்ன, திராவிடர் என்ன?  நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லி கட்டுரையை நிறைவு செய்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.  "ஆரிய மாயை"யை திருக்குறள் விளக்கத்தில் புகுத்தத்தான் வேண்டுமா?

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:06:17 AM9/14/14
to mint...@googlegroups.com
///ஒரே பொய்யை நூறு தடவை சொன்னால் உண்மை ஆகிவிடாது.  நீங்கள் சாதி உணர்வையும், "வண்ண" மனப்பாங்கையும் குழப்பிக்கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்றே எனக்குப் படுகிறது.  இதில் ஆரியரென்ன, திராவிடர் என்ன?  நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லி கட்டுரையை நிறைவு செய்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.  "ஆரிய மாயை"யை திருக்குறள் விளக்கத்தில் புகுத்தத்தான் வேண்டுமா?////

அதாவது "ஆரியமாயையை"  நான் புகுத்துகிறேன் ...!!!!!!!!!!!  இது எனக்குத் தேவைதான்.  

போகட்டும் நீங்கள் புதியவர்... உங்களுக்கு என்னைப் பற்றியோ ... 

அல்லது இந்தக் குழுமத்தினர் சிலர் "பிறப்பொக்கும்" குறளை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என அறியவோ வாய்ப்பில்லை.

ஆனால் மிகச் சமீபத்தில் சிலர் எழுதிய கருத்தை பார்த்த பிறகுதான் எனக்கு இந்தக் கட்டுரையை  எழுதும் எண்ணமே தோன்றியது.

உங்களுக்கு "வர்ணாசிர தர்மத்தை" தான் இக்குறள் விளக்குவதாக என்னியிருக்கும் சிலர் வந்து பதிலளிக்கக்கூடும்.

மாற்று வழியாக "பிறப்பொக்கும்" என்பதை மின்தமிழ் குழுமத்தில் தேடி நீங்களும் இதைப் பற்றியக் கருத்துக்களைப் படித்துக் கொள்ளலாம். 

நானே சுட்டியையும் கொடுக்கிறேன்....

..... தேமொழி

<p class="MsoNormal" style="margin-bottom:0i
...

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:07:31 AM9/14/14
to mint...@googlegroups.com
என்னியிருக்கும் >>>  எண்ணியிருக்கும் 

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 2:23:33 AM9/14/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி அவர்களுக்கு,

நான் என்றுமே திருக்குறளையும், "" குழப்பிக்கொண்டதே கிடையாது.  அது வேறு, இதுவேறு.  உங்கள் கட்டுரையின் இறுதியில்தான் வர்ணாஸ்ரமத்தையும், ஆரியர் மரபையும் குறித்திருக்கிறீர்கள்.  அது உங்களது அருமையான கட்டுரைக்குத் தேவை இல்லாத "குடலின்" ஒரு பகுதியாத்தான் தென்பட்டது.  நீங்களாகவே அதை ஏன் குறிப்பிடவேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது.  அந்தக் குறிப்பில்தான் எனக்கு உடன்பாடு இல்லை.  அதைதான் நான் எழுதினேன்.

திருக்குறளைப் பற்றி நீங்கள் எழுதும்போது, தேவை இல்லாத ஆரிய/திராவிட/தமிழ பிரிவினை பற்றிய குறிப்புகள்  எதற்கு? 

எங்கு பார்த்தாலும், தமிழ் என்றால் நாத்திகம் (இந்துக் கடவுள் எதிர்ப்பு), இந்து சமய எதிர்ப்பு, ஒரு சாதியினர் எதிர்ப்பு, ஆரிய/திராவிட/தமிழ் பிரிவினை என்று படித்துப் படித்து அலுத்துப் போய் விட்டது.  

தமிழின் மேல் ஆழ்ந்த பற்று உள்ளவன் நான்.  தமிழில் இருக்கும் அரும் பெரும் பொக்கிஷங்களையும், அதன் பெருமைகளையும், தமிழ் பேசுவோரை இணைக்கும் பணியையும் நான் காண விரும்புகிறேன்.

மாறாக, தமிழரிடம் பிரிவினையைத் தூண்டும் விதமாக முத்தாய்ப்பு வைப்பதைத்தான் உடன்பாடு இல்லை என்று சொல்கிறேன்.

நான் புதியவனாக இருக்கலாம்.  ஆயினும், நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்து  நான் சிறுவனாக இருந்ததில் இருந்து கேட்டு அலுத்துப்போன கூற்றே!

நீங்கள் கருத்து கேட்க விரும்பி எழுதினீர்கள்.  என் கருத்தைப பதிவு செய்தேன்.  இனிய, சுவையான பானகத்தைப் பருகி வரும்போது, கடைசியில் நாக்கில் குத்திய முள்ளாகத்தான் இருந்தது, நீங்கள் எழுதிய ////செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது  நான்கு வர்ண குணம்  என்பது ஆரியர் மரபு. // என்ற சொற்றொடர்.  என்னைப் பொருத்தவரையில், உங்களது அருமையான, பொருட்செறிவு மிக்க கட்டுரைக்கு அது தேவையே இல்லை.

இது என் கருத்துதான்.  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 2:25:04 AM9/14/14
to mint...@googlegroups.com
நான் என்றுமே திருக்குறளையும், "பகவத் கீதை"யையும்  குழப்பிக்கொண்டதே கிடையாது.  --  பகவத் கீதை விட்டுப்போய் விட்டது.

Innamburan S.Soundararajan

unread,
Sep 14, 2014, 2:28:18 AM9/14/14
to mint...@googlegroups.com
அதானே!

தேமொழி

unread,
Sep 14, 2014, 2:58:15 AM9/14/14
to mint...@googlegroups.com

மிக்க நன்றி திரு அரிசோனன், நீங்கள் கட்டுரையைப் படித்து உங்கள் கருத்தினைப் பதிந்தற்கு எனது நன்றி.  

///திருக்குறளைப் பற்றி நீங்கள் எழுதும்போது, தேவை இல்லாத ஆரிய/திராவிட/தமிழ பிரிவினை பற்றிய குறிப்புகள்  எதற்கு? ///

நானும் கட்டுரை எழுதிய நோக்கத்தை  விளக்க உங்களுக்கு சுட்டியும் கொடுத்திருந்தேன்.  உதவவில்லை எனத் தெரிகிறது.

அதனால் தேவை ஏற்பட்டதை அடுத்து எழும்பிய கட்டுரை என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.  

உண்மை கசப்பதில் வியப்பில்லை. 

kill the messenger, shoot the whistle-blower போன்ற  எதிர்வினையை எதிர்பார்க்காமல் கட்டுரையை  எழுதி நான் இங்கு பகிர்ந்து கொள்ளவில்லை.

மீண்டும் நன்றி.

..... தேமொழி

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல்</s

...

radius.consultancy

unread,
Sep 14, 2014, 3:56:47 AM9/14/14
to mint...@googlegroups.com
ஆரியமாயையின் களமும் தளமும்வேறு

பிறப்பால் ஒற்றுமை என்பது   பொது விதி

சாதியும் வர்ணமும் சமுக அரசாளுமைக்கும் குமுகம் கட்டுப்பாட்டுக்கான செயல்முறைக

நாரியரும் ஆரியரும் நரசூரியரும் ஆரியமாயையின் ஆதிகத்துக்கத்துக்கு அப்பால் 

இந்திரன் 

Sent from my iPhone

தேமொழி

unread,
Sep 14, 2014, 4:11:02 AM9/14/14
to mint...@googlegroups.com
கவிதையும் எழுதத் தொடங்கி விட்டீர்களா!!!!!!!

அப்படியானால் ஒவ்வாமை  இனி இருக்காதல்லவா?

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பேராசிரியரே.

Banukumar Rajendran

unread,
Sep 14, 2014, 6:38:50 AM9/14/14
to மின்தமிழ், vallamai
தேமொழியாரே! அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

இதனையொட்டி என்னுடையக் கட்டுரை ஒன்று, பகிர்வுக்கு.
http://banukumar_r.blogspot.in/2011/10/blog-post_24.html

இரா.பானுகுமார்,
பெங்களூர்

--

வேந்தன் அரசு

unread,
Sep 14, 2014, 7:59:52 AM9/14/14
to vallamai, மின்தமிழ்
நல்ல ஆய்வுதான்,

நீங்க செய்கை என்பது நடத்தைக்கு சமனா சொல்லுறீங்க

ஆனால் வெறுமனே தொழில் என்னாமல் செய்தொழில் என்றார் என்பதையும் கவனிக்கணும்.
செய்ததொழில், செய்கின்ற தொழில், செய்யபோகும் தொழில்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சி. ஜெயபாரதன்

unread,
Sep 14, 2014, 8:23:42 AM9/14/14
to vallamai, mintamil
​எட்டாவது வகுப்பு படித்து  பின்தள்ளப்பட்ட சேவகன் ஒருவன், முதன் மந்திரியானால் நிச்சயம் முன்னிடம் தரப்படுவான் அவையோர் முன்பு.

புதுக்குறள்.

பிறப்பொக்கும் மானிடர்க்கு வேலை உயர்வு
சிறப்பளிக்கும் என்றே நீ செப்பு.  

சி. ஜெயபாரதன்.  ​

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 14, 2014, 8:47:37 AM9/14/14
to மின்தமிழ்

2014-09-14 13:41 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கவிதையும் எழுதத் தொடங்கி விட்டீர்களா!!!!!!!

அப்படியானால் ஒவ்வாமை  இனி இருக்காதல்லவா?

கண்ணைச்
​ சுத்துதடா சாமீ.  பாரதிக்கு ரதம் இழுத்தவர்களுக்கு சப்போர்ட்டாகச் சில கவிதைகளை பின்னூட்டம் இட்டபோது இந்த வரிகள் பாரதியாரின் பாடலில் படித்தேன்.  அதை எடுத்துப்போட்டால் நான் கள்வனா கவிஞனா என்பதை நீங்களே முடிவு செய்யவும்

ஒவ்வாமையும் உங்கள் கண்டுபிடிப்புதான். 

நான் அந்த இழையில் பங்குபெற்றபோது நாட்டு நடப்பைச் சொல்லி ஈற்றடி வைத்து ஒரு வெண்பாவை யாத்தபின் அதற்கு ​
உரை
​ எழுதுவது அதற்கப்புறம் ஒரு விமரிசனம் செய்வது அதற்குப்பின் ஒருமித்த கருத்து ஏற்படாமல் அது ஒது முரண்பாட்டில் முடிவது என்ற நாலு படிகளைச் சொல்லி கவிஞர்களை பாட்டுக்கு விளக்க உரை அளிக்குமாறு கேட்டேன்.  அதற்கப்புறம் ஒரு விமரிசனம் செய்தேன்.  அதனடிப்படையில் ஒரு முரண்பாடும் தோன்றி என்னை அவ்விழையில் தலையிடக்கூடாது என்று தடையும் செய்தார்கள். நானும் அந்த மடலாடல் குழுவில் பங்குபெறுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன்.  இதுதானா ஒவ்வாமை.  நீங்க நீங்கதான் பாதில் சொல்லனும்

நமக்குத் தொழில் கவிதை என்று தொழில்ரீதியாக மார் மற்றும் தொடைதட்டும் கவிஞர்களுக்குத்தான் பிறப்பொக்கும் என்ற கருத்தில் ஒவ்வாமை இருப்பதாக நான் நினைக்கிறேன்

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:17:03 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நன்றி பானுகுமார்.  உங்கள் கட்டுரையும் சமணநூல்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி ஒப்பிட்டு விளக்கியபின்னர் 

கருமமே கட்டளைக் கல் என்ற குறளின் ஒற்றுமையைக் காட்டி முடிக்கப்பட்டுள்ளது எனக்கு வியப்பாக இருந்தது.

.... தேமொழி

<p class="MsoNor
...

Kaviri Maindhan

unread,
Sep 14, 2014, 1:24:06 PM9/14/14
to Groups, vallamai

பெருமை பற்றி அருமையான கட்டுரை.. ஆய்ந்தறிந்து குறள்மூழ்கி கொண்டெடுத்த முத்துக்களா? தமிழ்த்தேருக்கு நீங்கள் தந்துவைத்தச் சீரா? எதில் கையை வைத்தாலும் ஒரு கை பார்ப்பது உங்கள் பாணியா? எதிர்த்துவரும் கருத்துக்களையும் அலசி விடைபகர்வது உமது திறமா? தெளிவான சிந்தனையும் தீர்க்க தரிசனமும் ஆளும் பொருள் அத்தனையிலும் காட்டுவது தேமொழியா?  இத்தனையும் ஒருவரால் இயலுமா என்கிற வியப்பிலே இங்கே நான்.. காவிரிமைந்தன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:24:30 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
born with silver spoon ஒருவரிடம் மீண்டும் பிரதமர் பதவி போகாமல் 

தேநீர் கலக்கிய தேக்கரண்டியுடன் இருந்தவர்  பிரதமரானது, ஒபாமாவை உயர்ந்த பதவியில் பார்த்த பொழுது  கிடைத்த அதே மகிழ்ச்சியை மீண்டும் கிடைக்க வைத்தது. 

நன்றி ஐயா.

.....தேமொழி

On Sunday, September 14, 2014 5:23:42 AM UTC-7, jayabarathans wrote:
​எட்டாவது வகுப்பு படித்து  பின்தள்ளப்பட்ட சேவகன் ஒருவன், முதன் மந்திரியானால் நிச்சயம் முன்னிடம் தரப்படுவான் அவையோர் முன்பு.

புதுக்குறள்.

பிறப்பொக்கும் மானிடர்க்கு வேலை உயர்வு
சிறப்பளிக்கும் என்றே நீ செப்பு.  

சி. ஜெயபாரதன்.  ​
2014-09-14 7:59 GMT-04:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நல்ல ஆய்வுதான்,

நீங்க செய்கை என்பது நடத்தைக்கு சமனா சொல்லுறீங்க

ஆனால் வெறுமனே தொழில் என்னாமல் செய்தொழில் என்றார் என்பதையும் கவனிக்கணும்.
செய்ததொழில், செய்கின்ற தொழில், செய்யபோகும் தொழில்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:30:21 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///வெறுமனே தொழில் என்னாமல் செய்தொழில் என்றார் என்பதையும் கவனிக்கணும்///

நல்லதொரு வாதம் வேந்தே ... அதனால்தான் நானும் தொழில் என்பதும் கருமம் என்பதும் பற்றி ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  

பாப்பையா தரும்  உரை விளக்கம் பக்கம் சாய்ந்துவிட்டேன் நான்.

நன்றி வேந்தே.

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 14, 2014, 1:30:23 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Sunday, September 14, 2014 10:17:03 AM UTC-7, தேமொழி wrote:
நன்றி பானுகுமார்.  உங்கள் கட்டுரையும் சமணநூல்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி ஒப்பிட்டு விளக்கியபின்னர் 

கருமமே கட்டளைக் கல் என்ற குறளின் ஒற்றுமையைக் காட்டி முடிக்கப்பட்டுள்ளது எனக்கு வியப்பாக இருந்தது.

.... தேமொழி

சமண சமயஞ் சார்ந்த திருவள்ளுவ தேவர் குறளை விளக்குமுகத்தான், பானுகுமார் சொல்கிறார்:
”இதனையே குறள் மேலும் விரித்து,

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
 
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக் 
கருமமே (செயல், தொழில்) காரணம்.

என்றும் கூறுவதைக் காணலாம்.

இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும், 
சமுதாயமும் வேறு வேறாம்!!” 
-----------

கொங்குநாடு கர்நாடகத்துக்கும், பாண்டிநாட்டுக்கும் இடையே அமைந்தது.
சிந்தாமணி, சிலம்பு (வஞ்சி கருவூர் இளவரசர் இளங்கோ அடிகள்), அடியார்க்குநல்லார், பவணந்தி, ...
எல்லாம் பிறந்த நாடு. அங்கே மன்னர்கள் மனு நீதி வையில்லாமல், திருக்குறள் வழியே
ஆட்சி செய்கிறோம் என்று அறிவித்தனர். புலவர் செ. இராசு கட்டுரை:
மேலும்,

இதைத்தான் மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளை விளக்கியுள்ளார்கள்:
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி?

மயிலை சீனி வேங்கடசாமியார் உரை இணையப் பல்கலையில்
மனோன்மணீயதிற்கு இருக்கிறது. படித்துப் பார்க்கவும்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:38:11 PM9/14/14
to mint...@googlegroups.com
///அதை எடுத்துப்போட்டால் நான் கள்வனா கவிஞனா என்பதை நீங்களே முடிவு செய்யவும்///

எனக்குத் தெரிந்து கவிதை எழுதுபவர்களுக்கு பொய் சொல்வதற்கும் திருடுவதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் அதையே செய்து ஆய்வாக சமர்பித்தால் யாரும் ஒப்புக்கொள்வதில்லை. ஏனிந்த ஓரவஞ்சனை?

பொல்லாத கருணையற்ற உலகம் இது பேராசிரியரே. 

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 14, 2014, 1:49:51 PM9/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
அன்பின் காவிரிமைந்தன்,

எழுத்தை நார்மல் ஸைசிலும், கறுப்பு நிறத்திலும் அனுப்புங்களேன்.
கண்ணுக்கு குளுமையாய் இருக்கும்.

நன்றி,
நா. கணேசன்
<p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.0001pt;li
...

N. Ganesan

unread,
Sep 14, 2014, 1:50:59 PM9/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Sunday, September 14, 2014 10:49:47 AM UTC-7, N. Ganesan wrote:
அன்பின் காவிரிமைந்தன்,

எழுத்தை நார்மல் ஸைசிலும், கறுப்பு நிறத்திலும் அனுப்புங்களேன்.
கண்ணுக்கு குளுமையாய் இருக்கும்.

நன்றி,
நா. கணேசன்

அதாவது,

Nagarajan Vadivel

unread,
Sep 14, 2014, 1:51:41 PM9/14/14
to மின்தமிழ்
2014-09-14 23:08 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மற்றவர்கள் அதையே செய்து ஆய்வாக சமர்பித்தால் யாரும் ஒப்புக்கொள்வதில்லை. ஏனிந்த ஓரவஞ்சனை?

பொல்லாத கருணையற்ற உலகம் இது பேராசிரியரே. 
கவிஞர்கள்
​ பொதுவாக prior art என்ற பொதுத் தளத்தில் ஒரே கருத்துருவைப் பல்வேறு கோணங்களில் சொற்சிலம்பம் ஆடுவதை மக்கள் திருட்டு என்றும் பொய் என்றும் சொல்வதில் தயக்கம் உள்ளது

அமெரிக்காவில் பேரசிரியர்களுக்கு fair copying என்று மற்றவர்கள் கருத்தை எடுத்துப் பயன்படுத்த உரிமை உள்ளது

மதஎசுஇந்திரன்​

தேமொழி

unread,
Sep 14, 2014, 1:55:59 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

கட்டுரை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கவிஞரே.  

உங்கள் பாராட்டிற்கும், என் கட்டுரை தமிழ்த்தேரில் இடம் பெற வாய்ப்பளித்தமைக்கும் மிக்க நன்றி.

"நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்"

என்ற வரிகள் என்றும் என்னைக் கவர்ந்த வரிகள் :)))

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 14, 2014, 1:59:40 PM9/14/14
to mint...@googlegroups.com
ஆம். நீங்கள் போட்டோக்கள், வலைப்பதிவுகள் எடுக்கும் செய்திகள் அதன் வலைத்தொடுப்பும் கொடுத்தால் சிறப்பு.
உ-ம்:

பாரதி மறைவுதினத்தன்று வெளியிட்ட வலைப்பதிவு இது:

நா. கணேசன்
 
மதஎசுஇந்திரன்​

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 14, 2014, 2:00:16 PM9/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தேமொழி, Kaviri Maindhan
>
>
> On Sunday, September 14, 2014 10:49:47 AM UTC-7, N. Ganesan wrote:
>>
>> அன்பின் காவிரிமைந்தன்,
>>
>> எழுத்தை நார்மல் ஸைசிலும், கறுப்பு நிறத்திலும் அனுப்புங்களேன்.
>> கண்ணுக்கு குளுமையாய் இருக்கும்.

>தமிழ்த்தேருக்கு நீங்கள் தந்துவைத்தச் சீரா? எதில் கையை
> வைத்தாலும் ஒரு கை பார்ப்பது உங்கள் பாணியா? எதிர்த்துவரும் கருத்துக்களையும்
> அலசி விடைபகர்வது உமது திறமா? தெளிவான சிந்தனையும் தீர்க்க தரிசனமும் ஆளும்
> பொருள் அத்தனையிலும் காட்டுவது தேமொழியா? இத்தனையும் ஒருவரால் இயலுமா
> என்கிற வியப்பிலே இங்கே நான்.. காவிரிமைந்தன்

Thiru Kaviri mainthan karuththu manathiRkuk kuLumaiyaaka irukkiRathu.
Thirumiku Themozi vazka!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Sep 14, 2014, 2:13:00 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட சொ வி  ஐயாவிற்கும், திரு. கணேசனுக்கும் மிக்க நன்றி.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 14, 2014, 2:38:07 PM9/14/14
to மின்தமிழ்

2014-09-14 23:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆம். நீங்கள் போட்டோக்கள், வலைப்பதிவுகள் எடுக்கும் செய்திகள் அதன் வலைத்தொடுப்பும் கொடுத்தால் சிறப்பு.

இணையத்தில்
​ வெளியான தகவல் மீண்டும் இணையத்தில் வெளியாகும்போது கூகிள் தேடல் மூலம் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.  ​

மதஎசுஇந்திரன்

N. Ganesan

unread,
Sep 14, 2014, 3:31:33 PM9/14/14
to mint...@googlegroups.com
தகவலுக்கு நன்றி.
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 14, 2014, 3:43:40 PM9/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Sunday, September 14, 2014 11:00:18 AM UTC-7, THEETHARAPPAN R wrote:

பிறப்பொக்கும் குறளுக்கு உரை ஆசிரியர்கள் குளப்பிவிட்டாலும் தாங்கள் சரியான பார்வையில் அணுகி விளக்கம் சொன்னது அருமை! அதற்கு  வலு சேர்க்கும் வகையில் ஒரு குறள் உள்ளது. அது "மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்"

நன்றி, தீத்தாரப்பன் அவர்களே. "இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி’ என்றார் ஔவை.

அப்போதிருந்த தீண்டாமைக்கு - இழிகுலத்தார் பற்றி வரும் சங்கப் பாடல்களைப் படித்தாலும் 
இந்திய சாதியமைப்பை விளங்கிக் கொள்ளலாம்  - மாற்றாக கல்வியே அன்றும்,
இன்றும் உதவுகிறது. அம்பேத்கார், காந்தி, பூலே, அயோத்திதாசர், பாரதியார், பெரியார், ... வாழ்க்கையின்
பாடம் படிக்கலாம் - வள்ளுவர் போலவே பாண்டியன் நெடுஞ்செழியன் சொல்கிறான்.

கற்கை நன்றே!
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

நல்ல குறள்! தேமொழி அவர்களுக்கு உதவும்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் 
கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 4:03:42 PM9/14/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,
//நானும் கட்டுரை எழுதிய நோக்கத்தை  விளக்க உங்களுக்கு சுட்டியும் கொடுத்திருந்தேன்.  உதவவில்லை எனத் தெரிகிறது.//

நீங்கள் கொடுத்திருந்து சுட்டியை முழுவதும் படித்துவிட்டுத்தான் எனது கருத்தைப் பதிவு செய்தேன்.  

//அதனால் தேவை ஏற்பட்டதை அடுத்து எழும்பிய கட்டுரை என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். //

அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.  சதுரங்க விளையாட்டில் gambit உண்டு.  அந்த gambitதான் உங்கள் கட்டுரைக்கு சிலர் எழுதிய கருத்து.  அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

பலர் பவிதமான கருத்தைத் தெரிவிப்பர் .  ஒருசிலர் வேண்டுமென்றே "மனுநீதியைத்" தாக்குவர்.  மனுநீதி இக்காலத்திற்குச சற்றும் பொருந்தாதது என்று பலகோடிநூறாயிரம் தடவை ஒப்புக்கொண்டாலும் அவர்களுக்கு நிறைவு இருக்காது. ஆரியர்/திராவிடர்/தமிழர்/நாத்திகர்/இந்து/வைதிக /தமிழ்ச் சமயம்/ என்று திரிக்காமல் அவர்கள் மனது நிறைவு எய்யாது.  செத்த பாம்பை பலகோடிநூறாயிரம் தடவை அடித்தாலும் அவர்கள் உள்ளம் உவகை கொள்ளது.  அந்த "ஆரிய மாயை gambit"க்குள் சிக்கிவிட்டீர்களே என்ற ஆதூரம்தான் எனக்கு. 

நாம் தமிழகத்தைவிட்டு வந்துவிட்டோம்.  இங்கு தமிழராக இணைவோம்.  நம்மை ஏன் நாமே கூறு போட்டுக்கொள்ள வேண்டும்?  இங்கு நம்மில் பெரும்பாலோனோர், இனம்/மொழி/சமயம்/நிறம் இவற்றைத் தாண்டி நிற்கிறோம்.  இந்த அமெரிக்க மண்ணில் வெகு நாள் இருந்த நாம் இன்னும் "ஆரிய மாயை"க்கு ஆட்படலாமா?  நம்மை நாமே கூறு போடலாமா?  இதை எந்த மொழிக்காரர்கள் செய்கிறார்கள், தமிழனைத் தவிர?

தாங்கள் எழுதி இருந்தது அருமையான "திருக்குறள் விளக்கக் கட்டுரை".  அது தேனோடு பால் கலந்தது.  அதில் ஒரு சிலர் உப்பைக் கலந்தாலும், தாங்கள் தடுக்கவேண்டும் என்றே விரும்பினேன்.  அதை நீங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எழுதாதது என் தவறுதான்.

திருக்குறள் திருக்குறளாகவே இருக்கட்டும்.  அதன் பெருமையைப் பேசுவோம்.  "வள்ளுவன் தன்னை பாருக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பெருமிதம் கொள்வோம். உலகுக்கே "வேதமாக" (இவ்விடம் நான் உயர்வுக்காக வேதம் என்றே சுட்டினேன்.  விவிலிய வேதம், இசுலாமிய வேதம் என்பதுபோல) தேவை இல்லாத இடைச் செருகல்கள், வெறுப்பை உமிழும் சொற்றொடர்கள் வேண்டாம். அது திருக்குறள் விளக்கத்துடன் வேண்டாம் என்றுதான் எழுதினேன்.

பிரிவினை வாதம் நிறைய மேடைகளில் பேசப்படுகிறது.  அங்கு பேசலாமே!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

N. Ganesan

unread,
Sep 14, 2014, 4:20:02 PM9/14/14
to mint...@googlegroups.com, vallamai

On Sunday, September 14, 2014 1:03:42 PM UTC-7, oruarizonan wrote:

 அன்பின் அரிசோனன்,

நல்ல கருத்து. மேலை நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் இருந்து
நாம் ஆராய்ச்சி நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சுமேரியன், சிந்து, ஹிந்து,
இசுலாம், கிறிஸ்துவம், ... என்று எல்லா சமயங்களையும் ஆராய்கின்றனர்.
காய்தல் உவத்தல் இன்றி ஆராயும்போது தமிழ்ச் சமண நூல்களாக
குறள், நாலடி, சிலம்பு, சிந்தாமணி, ... பற்றி ச. வையாபுரிப்பிள்ளையவர்கள்,
எல்லிஸ், ... என்று எத்தனையோ பேராசிரியன்மார் எழுதிச் சென்றுள்ளனர்.
தமிழ்ச்சமணம் வலைப்பதிவில் இரா. பானுகுமார் பெரிய பட்டியலே 
கொடுத்துள்ளார். பாருங்கள்.

நாம் பழங்கால கல்வெட்டு, நூல்களை ஆராயும் நிலையில் இந்திய
சாதி அமைப்பு, அப்போதைய சமயம் எல்லாம் தெரிகிறது, இன்றைய
விஞ்ஞானம், வசதிகள் அன்றில்லை. அப்போது கடவுள் பற்றி
4000 வருஷம் முன்னாடி, 2000 வருஷம் முன்னாடி, ... என்ன நினைத்தனர்
என்று படிக்கிறோம். நாற்பால், இழிகுலம், ... அவர்கள் செய்த தொழில்
எல்லாம் இருக்கிறது இந்தியாவின் இரு செம்மொழிகளிலும் (=வட, தென் மொழிகள்)
அதைப் படிக்கலாம். ஆராயலாம். ஆனால் இன்றைய நிலைக்கு
அன்றய சமய, சாதிக் கருத்துக்கள் ஒவ்வாதவை என்பது நீங்களும் அறிவிக்கிறீர்கள்.
நன்றி. சில அரசியல்வாதிகள் சங்க காலத்தில் சாதியே இல்லை என்று
எழுதுவதும் பார்த்திருக்கிறேன். எல்லா நல்லதும் தொல்தமிழ், திராவிட மக்கள்
கொடுத்தது இந்தியாவில். ஆனால், கெட்டது என்றால் எங்களுக்கு சம்மந்தமில்லை.
ஆரியர் தான் சாதி கொடுத்தனர் என்றால் நம்பமுடிகிறதா? 

ஒழுக்கமாக வேத, ஆகம பாட சாலைகளில் கிரந்தம், தமிழ், நாகரி சொல்லிக்
கொடுத்து வளரும் குழந்தைகள் தமிழ்நாட்டின் பெருங்கோவில்களில்
ஓமம் வளர்த்தலாமா? யாகம் செய்யலாமா? அருச்சனை புரியலாமா?
- இது பற்றி செய்யலாம் என்று சிகாகோ பேரா. செல்வன் சொல்கிறார்.
தங்கள் கருத்தறிய அவா.

அன்புடன்
நா. கணேசன்

தேமொழி

unread,
Sep 14, 2014, 4:40:53 PM9/14/14
to mint...@googlegroups.com
திரு. அரிசோனன்,

இந்த ஆரியமாயை என்ற வட்டத்தில் இருந்து வெளிவந்து கட்டுரையை கொஞ்சம் வேறு கோணத்தில் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை நடந்திருப்பது......

1. இலக்கியத்தில் ஒரு பகுதி இருக்கிறது, அதைப்படிதவர் ஒருவர் அதற்கு அவர் புரிந்து கொண்ட  கோணத்தில் ஒரு பொருள் சொல்கிறார்

2. அந்த விளக்கத்தையும் அதே இலக்கியத்தையும்  படிக்கும் வேறு ஒருவர்  மற்றொரு கோணம்தான் சரியாக இருக்க வேண்டும் என்று கொண்ட எண்ணத்தினால் மறுத்து மாற்று  விளக்கம் தருகிறார்.

கவனித்துப் பார்த்தால் ....

அந்த  இலக்கிய ஆசிரியர்  கூறிச் சென்றது இதுதான்  என ஒருவரும்...

இல்லை இல்லை நான் படித்துப் பார்த்ததில்  எனக்கு இப்படி பொருள் வருகிறது என்று மற்றவர் மறுத்துக் கூறியக் கருத்தும்தான் இந்த இழை.

///பிரிவினை வாதம் நிறைய மேடைகளில் பேசப்படுகிறது.  அங்கு பேசலாமே!///

மேலும் என் கருத்தைக் கூறியதற்காக  என்னைப் பிரிவினைவாதி என்று நீங்கள் சொல்லும் கோணத்தையும் நான் மறுக்க வேண்டிய நிலையில்தான் இருகிறேன்.

அனால் உங்களுக்கு அப்படிதான் தோன்றுகிறது என்றால் அப்படியே கருதலாம் அது உங்கள் உரிமை. 

..... தேமொழி

...

Suba.T.

unread,
Sep 14, 2014, 4:47:03 PM9/14/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-09-14 22:03 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
​...

பலர் பவிதமான கருத்தைத் தெரிவிப்பர் .  ஒருசிலர் வேண்டுமென்றே "மனுநீதியைத்" தாக்குவர்.  மனுநீதி இக்காலத்திற்குச சற்றும் பொருந்தாதது என்று பலகோடிநூறாயிரம் தடவை ஒப்புக்கொண்டாலும் அவர்களுக்கு நிறைவு இருக்காது.

​இதற்கு வேறொரு காரணமும் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். ஒரு சிலர் சர்வ சாதாரணமாக மனு நீதியை மனித குல சமூகத்தின் சட்டம் போல பாவித்து சாதாரண உரையாடல்களில் பேசுவதும் நடக்கின்றது. ஆக​ அதுவும் நடப்பதால் இதுவும் நடக்கின்றது என்றே கொள்ள்த் தோன்றுகின்றது.

சுபா

Suba.T.

unread,
Sep 14, 2014, 4:48:40 PM9/14/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-14 22:20 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

- இது பற்றி செய்யலாம் என்று சிகாகோ பேரா. செல்வன் சொல்கிறார்.

​யார் இந்த சிக்காகோ பேராசிரியர் செல்வன்? அறியத் தந்தால் உதவும்.

சுபா

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 4:51:04 PM9/14/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,

///பிரிவினை வாதம் நிறைய மேடைகளில் பேசப்படுகிறது.  அங்கு பேசலாமே!/// என்றுதான் சொன்னேனே தவிர, உங்களைப் பிரிவினைவாதி என்று சொல்லவில்லை.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 5:13:54 PM9/14/14
to mint...@googlegroups.com
உயர்திரு கணேசன் அவர்களே,

//ஒழுக்கமாக வேத, ஆகம பாட சாலைகளில் கிரந்தம், தமிழ், நாகரி சொல்லிக்
கொடுத்து வளரும் குழந்தைகள் தமிழ்நாட்டின் பெருங்கோவில்களில்
ஓமம் வளர்த்தலாமா? யாகம் செய்யலாமா? அருச்சனை புரியலாமா?
- இது பற்றி செய்யலாம் என்று சிகாகோ பேரா. செல்வன் சொல்கிறார்.
தங்கள் கருத்தறிய அவா.//

தமிழ் ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் அருச்சனை புரிய சைவர்கள் காமிக ஆகமத்தைக் கற்கவேண்டும்.  வைணவர்கள் பாஞ்சராத்திர ஆகமத்தைக் கற்கவேண்டும்.  தமிழ் மறைகளான தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்களை ஓத அறிந்திருக்க வேண்டும்.  இவையே அப்பணிக்கான தேவைகள், தகுதிகள். (qualifications)  அப்படிக் கற்றுத்  தேர்ந்த  யாரும் வேள்வி செய்யலாம், அருச்சனை புரியலாம் என்றுதான் நானும்  எண்ணுகிறேன்.  

கோவில் கருவறையில் நுழைந்து கடவுளர்களுக்கு அருச்சனை புரியும்போது அனைவரும் அந்த அருச்சகர்களை உயர்வாகப் போற்றுகிறார்கள்.  எனவே, அவர்கள் அந்த நிலையைக் கருத்தில் கொண்டு அறமுடன்  ஒழுகவேண்டும்.  பொருளீட்டும் தொழில் என்று நினைக்காமல், இறைவனின் திரு உருவத்தைத்  தொட்டு பூசை செய்யும் நாம் அப்பழுக்கு இல்லாமல்  நன்னடத்தையுடன் ஒழுகவேண்டும்.  அனைவரும் இன்புற்றிருக்க இறைவனை மனமுருகி வேண்டவேண்டும்.

இது மிகவும் முக்கியம்.  இதுவே அறநிலைப்பாடு .

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Sep 14, 2014, 5:18:29 PM9/14/14
to mint...@googlegroups.com

மிக்க நன்றி திரு. அரிசோனன்

[இது கூட ஓர்எடுத்துக்காட்டுதான் ....ஒருவர் சொல்வதை மற்றவர் வேறு கோணத்தில் புரிந்து கொள்வது...இழைக்குப் பொருத்தமே :)]

..... தேமொழி

...

N. Ganesan

unread,
Sep 14, 2014, 5:38:51 PM9/14/14
to mint...@googlegroups.com

On Sunday, September 14, 2014 2:13:54 PM UTC-7, oruarizonan wrote:
உயர்திரு கணேசன் அவர்களே,

//ஒழுக்கமாக வேத, ஆகம பாட சாலைகளில் கிரந்தம், தமிழ், நாகரி சொல்லிக்
கொடுத்து வளரும் குழந்தைகள் தமிழ்நாட்டின் பெருங்கோவில்களில்
ஓமம் வளர்த்தலாமா? யாகம் செய்யலாமா? அருச்சனை புரியலாமா?
- இது பற்றி செய்யலாம் என்று சிகாகோ பேரா. செல்வன் சொல்கிறார்.
தங்கள் கருத்தறிய அவா.//

தமிழ் ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் அருச்சனை புரிய சைவர்கள் காமிக ஆகமத்தைக் கற்கவேண்டும்.  வைணவர்கள் பாஞ்சராத்திர ஆகமத்தைக் கற்கவேண்டும்.  தமிழ் மறைகளான தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்களை ஓத அறிந்திருக்க வேண்டும்.  இவையே அப்பணிக்கான தேவைகள், தகுதிகள். (qualifications)  அப்படிக் கற்றுத்  தேர்ந்த  யாரும் வேள்வி செய்யலாம், அருச்சனை புரியலாம் என்றுதான் நானும்  எண்ணுகிறேன்.  

கோவில் கருவறையில் நுழைந்து கடவுளர்களுக்கு அருச்சனை புரியும்போது அனைவரும் அந்த அருச்சகர்களை உயர்வாகப் போற்றுகிறார்கள்.  எனவே, அவர்கள் அந்த நிலையைக் கருத்தில் கொண்டு அறமுடன்  ஒழுகவேண்டும்.  பொருளீட்டும் தொழில் என்று நினைக்காமல், இறைவனின் திரு உருவத்தைத்  தொட்டு பூசை செய்யும் நாம் அப்பழுக்கு இல்லாமல்  நன்னடத்தையுடன் ஒழுகவேண்டும்.  அனைவரும் இன்புற்றிருக்க இறைவனை மனமுருகி வேண்டவேண்டும்.

இது மிகவும் முக்கியம்.  இதுவே அறநிலைப்பாடு .

100% சரி. ஹிந்துமதம் தழைக்க இந்தியாவில் நிலைக்க இதுவே வழி.
இழிகுலம், உயர்குலம் என்பதெல்லாம் எல்லா தொழில்களிலும் போய்விட்டது.
சிறந்த அந்தணர்கள் எல்லா குலத்திலிருந்தும் தமிழகப் பெருங்கோவில்களில்
பணி செய்தல் வேண்டும். இரு செம்மொழிகளும் அறிதல் மிக அத்தியாவசியமானது.

பணிவன்புடன்,
நா. கணேசன்

<span lang="

...

N. Ganesan

unread,
Sep 14, 2014, 5:43:00 PM9/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Sunday, September 14, 2014 11:13:02 AM UTC-7, தேமொழி wrote:

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட சொ வி  ஐயாவிற்கும், திரு. கணேசனுக்கும் மிக்க நன்றி.

..... தேமொழி

மடலாட்டில் வந்திருந்த ஓரிரு வரிகளைத் தான் படித்தேன்.
உங்கள் முழுக் கட்டுரையும் படிப்பேன்.

நா. கணேசன் 

தேமொழி

unread,
Sep 14, 2014, 6:10:01 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இது கொஞ்சமும் சரியில்லை ...

பானுகுமார் கொடுத்த சுட்டியை மட்டும் தொடர்ந்து சென்று அவர் கட்டுரையைப் படிக்க முடிந்தது என் கட்டுரையைப் படிக்க நேரமில்லையா?

:((

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 14, 2014, 6:21:33 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Sunday, September 14, 2014 3:10:01 PM UTC-7, தேமொழி wrote:
இது கொஞ்சமும் சரியில்லை ...

பானுகுமார் கொடுத்த சுட்டியை மட்டும் தொடர்ந்து சென்று அவர் கட்டுரையைப் படிக்க முடிந்தது என் கட்டுரையைப் படிக்க நேரமில்லையா?

:((

..... தேமொழி

I am sorry. Just now finished reading. I like your conclusion on this important KuRaL.
Thanks,
N. Ganesan

Themozhi wrote: "எனவேபிறப்பொக்கும் குறளுக்கு, "பிறப்பில் அனைவரும் சமமாக இருந்தாலும்ஒரே போன்று பிறந்தாலும் ஒருவரை பெருமை மிக்க இடத்திற்கு உயர்வடையச் செய்வது அவர் செய்யும் செய்கையே என்ற விளக்கமே பொருந்துகிறது.   ஒருவர் செய்யும் அருஞ்செயல்கள் அவருடைய  மதிப்பை உயர்த்துவதையும்தாகாத செயல்கள் அவர் புகழை சிறுமை படுத்துவதையுமே”  வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

ஒருவர் செய்யும் ஊழியத்திற்கும் பெருமைக்கும் தொடர்பில்லைமக்கள் மனதில் இக்கருத்திற்கு  மாறான பிழையான எண்ணங்கள் பதிந்திருந்தாலும்... உண்மையில் நற்செயல்களே அவர் எத்தொழில் செய்தாலும்   ஒருவருக்குப் பெருமையைச் சேர்க்கும். ஒருவருடைய குடிபிறப்பினாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பெருமை வருவதில்லை.  அவரது நற்செயல்களே பெருமை தரும்.

செய்யும் தொழிலால் வேறுபாடு காண்பிப்பது வர்ணாஸ்ரமம்அதனால் செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது  நான்கு வர்ண குண என்பது ஆரியர் மரபு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்ல வரும் வள்ளுவன் இங்கு  நான்கு வர்ண குண வேறுபாடுகளைக் குறிக்கவில்லை. அது ஒருவர் குணநலனைக் குறிக்கும். ஒருவரது செய்கையேஅவருக்கு உயர்வையும் பெருமையையும் அளிக்கும் என்பது பெருமை அதிகாரத்தில் வள்ளுவர் குறிக்கும் பிற குறள்களின் பொருளுடன் ஒப்பிட்டுக் காண்கையில் தெளிவாகிறது. 

இக்குறள் காலப்போக்கில் நான்கு வர்ண உயர்வு தாழ்வினை நம்புபவர்கள்அதனால் வரும் பலனை விரும்புபவர்கள் மூலம் மாற்றுப் பொருள் கொடுக்கும் நிலையினை அடைந்திருக்கிறது.  வள்ளுவர் சொல்ல நினைக்காத கருத்தை மக்கள் மனதில் திணிக்க மிகத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது."

rajam

unread,
Sep 14, 2014, 6:57:36 PM9/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
அன்புள்ள தேமொழி,

வணக்கம். இதில் நுழையவேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும் சில அரைத்த மாவு அரைபட்ட கருத்துகளுக்கு மாற்றுச் சிந்தனையும் உண்டு என்பதைத் தெரிவிக்க வேண்டியே இந்த என் பதிவு. 

தேமொழீ, மிக நல்ல கட்டுரை, பாராட்டு! எந்த மாதிரிக் குளவிக்கூட்டைக் குத்தியிருக்கிறீர்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்! ;-)

என் சொந்தக் கருத்தை இப்போது சொல்ல விருப்பமில்லை. ஆனால், இந்தக் கட்டுரையை நீங்கள் விரிவுபடுத்த நினைக்கும்போது வேறு சில கருத்துகளையும் உட்கொள்ளுவது நல்லது என்று நினைக்கிறேன்.

1. "செய்தொழில்" என்ற தொடரின் பொருள் என்ன என்று கொள்வதில்தான் கருத்து வேறுபாடு இருப்பதுபோல் என் இலக்கண மண்டைக்குத் தோன்றுகிறது. இங்கே "தொழில் (certain type of labor/task)" என்பதைச் "செய்கை (action/performance/deed)" என்று கொண்டால் ... "செய்" என்ற சொல்லடை வீணன்றோ? "செய்யும் செய்கை" ???

1a. வேந்தன் ஐயா சொல்வதையும் [செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும் தொழில்] கருத்தில் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. சொற்பஞ்சம் இல்லாத வள்ளுவன் "செய்யும் செய்கை" என்ற பொருளிலா "செய்தொழில்" என்ற தொடரைப் பயன்படுத்தியிருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

2. கையோடு கையாக, இளம்பூரணர் சொன்னதையும் பார்த்துவிடவும். இந்தக் குறளுக்கு அந்த நோக்கத்திலும் பொருள் சொல்லலாம். (இது என் கருத்து இல்லை, இளம்பூரணர் சொன்னது!)

'பிறப்பு, குடிமை' என்றவற்றைக் குறித்து இளம்பூரணர் சொல்வது: 

பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.”

“குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பு என்பது ஒன்று உண்டு என்று கூறினார் ஆகலின்.” 

சுருக்கமாகச் சொன்னால் ... "பிறப்பு" என்பது ஒரு குலத்துக்குள்ளே பிறக்கும் பிறப்பு. "சிறப்பு" என்பது அந்த அந்தக் குலத்துக்குள்ளே அந்த அந்த மக்கள் செய்யும் தொழிலின் வேற்றுமையால் உண்டாகும் சிறப்பு. 

(மேலும் விளக்கத்துக்கு என் வலைப்பூவில் உள்ள பதிவையும் பார்க்கலாம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html) 

பின் குறிப்புகள்: 

இந்தக் குறிப்புகளுக்கும் வள்ளுவனுக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ தெரியவில்லை, ஆனாலும் எனக்கு மட்டுமே தெரிந்த சில நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். தொடர்பில்லை என்றால் புறக்கணித்துவிடவும். நன்றி.

(i) பண்டைத்தமிழ்ச் சொற்களான கிளைகுலம், குடி, திணைபிறப்பு, சாதி, ... இன்னொத்த சொற்களின் துல்லியமான பயன்பாட்டை 'மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்' எவரும் துல்லியமாக அறிந்து தம் கட்டுரைகளை எழுதவில்லை என்பது என் துணிபு. கிடைக்கும் கட்டுரைகள் எல்லாம் நுனிப்புல் மேய்வின் அசைபோடுதலே. வெளிப்படையாகச் சொல்கிறேன் ... அதுபற்றி இன்னும் என் நண்பர் ஜார்ஜ் ஹார்ட்-உடன் வாதாடுகிறேன். முதலில் 'புலைத்தியைத் தீட்டுத்துணி துவைப்பவள்' என்றார். அதை மறுத்துச் சான்று காட்டிக் கட்டுரை எழுதினேன். பிறகு ... ஆம், I'm willing to admit that there's no mention of menstruation என்று அவரே ஒத்துக்கொண்ட பின் இணயத்தில் அந்தத் 'தீட்டுச் சத்தம்' அடங்கியிருக்கிறது!

(ii) அதே-போல ... ''மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்'களுக்கு 'சாதி' என்பதற்கும் 'தீண்டாமை' என்பதுக்கும் வேறுபாடு தெரியுமா என்பது ஐயம்

தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.(குறள்: 974)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (குறள்: 975)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (குறள்: 976)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை .

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (குறள்: 977)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (குறள்: 978)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (குறள்: 979)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (குறள்:980)

இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

இவற்றைத் தொகுத்து வழங்கினால், உற்சாகத்துடன் கூடிய விடாமுயற்சி கொண்ட செயலால் செயற்கரிய செய்தல், சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்தல்நெறி வழுவாத சிறந்த செயல்களைச் செய்தல், பிறரால் இயலாதவற்றை தக்க வழியில் செய்து முடித்தல், நன்மரபைப் பேணும் செயல், நிலை உயரும்பொழுதும் பணிவுகொண்ட செயல், செருக்கற்ற செயல், ஆணவமற்ற செயல், பிறரின் நற்பண்புகளை மட்டும் மதிக்கும் செயல் என அறிய செயல்களை நெறிமுறை வழுவாது செய்து முடித்தலும், செருக்கு தவிர்த்து ஆணவமற்று பிறரை மதிக்கும் செயகள்தாம் மீண்டும் மீண்டும் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது "பெருமை" அதிகாரத்தில் வள்ளுவர்  குறிப்பிடும் பிற குறள்களின் வழி அவர் ஒருவருக்கு "பெருமை" தருவது எது என அறிவுறுத்துகிறார் என ஒப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை "பிறப்பொக்கும்" குறளை மீள்பார்வை செய்தோமானால் ...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். - குறள் 972

என்ற குறளுக்கு பாப்பையா கூறும் "எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்" பொருள்தான் மிகவும் பொருந்தி வருகிறது. 

"எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை" என்ற மு.வ உரை, குறிப்பாக "செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடு"  என்பது பொருந்தவில்லை.  அதாவது இக்குறளில் தொழில் என்பது  "வேலை" என்றப் பொருள் தரவில்லை. அதனால் தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் ஒருவர் சிறப்பு பெறுவதில்லை, ஒருவருடைய நற்செயல்களால் மட்டுமே அவர் சிறப்பு பெறுகிறார் என்பது புலனாகிறது.  

அந்த அதிகாரத்தில் ஏனைய குறள்கள் நற்பண்பு கொண்ட செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பிறப்பொக்கும் என்று தொடங்கும் குறள் மட்டும் ஒருவர் செய்யும் தொழிலினால்  உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றுப் பேச வழியில்லை.  அவ்வாறு பொருள் கொள்ள முற்படுவது வள்ளுவர் வலியுறுத்தும் பொருளுக்கு மாறானப்  பொருளைக் கொள்வதாக அமையும். 

இதனை நாம் மேலும் தெளிவு படுத்தலாம்.  வள்ளுவர் ஒரே கருத்து கொண்ட குறளைஅக்கருத்தை வலியுறுதும் நோக்கில் மற்றொரு பொருத்தமான இடத்திலும், பிறிதொரு அதிகாரத்திலோ அல்லது அதே அதிகாரத்திலோ  வேறொரு குறளாக வடித்திருப்பார்.  குறிப்பாக "மருந்து" அதிகாரத்தில் ஒரே பொருள் கொண்ட குறள்களைக் காணலாம். இது வள்ளுவர்  தமது கருத்தை வலியுறுத்தும் பாங்கு.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. - குறள் 944

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும். - குறள் 947

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (குறள்: 944)

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (குறள்: 947)

என்ற இரு குறள்களின் மையக் கருத்தும் பசித்துப் புசிக்கவே வலியுறுத்துகிறது.

"பெருமை" என்ற அதிகாரம் எழுதிய வள்ளுவர் பெருமை பற்றி அந்த அதிகாரம் தவிர்த்து பிற இடங்களிலும் பெருமை பற்றி குறிப்பிட்டுச் செல்கிறார்.  திருக்குறளில் "பெருமை" என்ற சொல் மொத்தம் 16 குறள்களில் இடம் பெறுகின்றன. இவற்றில் குறள்கள்  974975, 978, 979 ஆகிய நான்கு குறள்களும்  பெருமை அதிகாரத்திலேயே இருப்பதுவும், இவை சற்று முன்னர் பொருள் விளக்கம் நோக்கப்பட்ட குறள்களுமாகும்.  இவற்றைத் விலக்கி, பெருமை என்ற சொல் மற்ற குறள்களில் என்ன பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது என்பதை காண்போம். 

[1]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.      - குறள் 21

 உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பெருமை தருவது: சிறந்த ஒழுக்கம் பெருமை தருகிறது.

---

[2]

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.  - குறள் 22

உரை:

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பெருமை தருவது: ஆசைகளை விட்டு விலகிய ஒழுக்கம் பெருமை தருகிறது.

---

[3]

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.     - குறள் 23

உரை:

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

பெருமை தருவது: அறவழியில் நடப்பது பெருமை தருகிறது.

---

[4]

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.       - குறள் 28

உரை:

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பெருமை தருவது:  பிறருக்கு அறவழியில் வாழ வழிகாட்டும் செயல் பெருமை தருகிறது.

---

[5]

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு. - குறள் 336

<p class="MsoNormal" style="margin-bottom:0in;margin-bottom:.
...

Oru Arizonan

unread,
Sep 14, 2014, 8:20:38 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
உயர்திரு ராஜம் அவர்களே,

//பண்டைத்தமிழ்ச் சொற்களான கிளை, குலம், குடி, திணை, பிறப்பு, சாதி, ...
இன்னொத்த சொற்களின் துல்லியமான பயன்பாட்டை 'மேலைநாட்டுப் பல்கலைக்கழகப்
பேராசிரியர்கள்' எவரும் துல்லியமாக அறிந்து தம் கட்டுரைகளை எழுதவில்லை
என்பது என் துணிபு. //
//''மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்'களுக்கு 'சாதி' என்பதற்கும்
'தீண்டாமை' என்பதுக்கும் வேறுபாடு தெரியுமா என்பது ஐயம். //

மேலைநாட்டுப் பல்கலைகழகப் பேராசிரியர்களை விட்டுவிடுங்கள், தமிழர்
பலருக்குமே (நான் உள்பட) அது தெரியாது என்பதைச் தங்கள் சுட்டியில்
படித்து அறிந்துகொண்டேன்.

உங்கள் கட்டுரை மிகவும் அருமையாகவும், தெளிவாகவும், நடுநிலையோடும்,
அறிவுறுத்தும் வண்ணமும் இருந்தது. இன்று உங்கள் கட்டுரையின்மூலம் அறிவு
பெற்றேன்.

அறிவு கொடுக்கும் ஆசான் உயர்ந்தவரே! அதனால் நீங்கள் உயர்ந்து
நிற்கிறீர்கள். உங்களை வணங்குகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

On 9/14/14, rajam <ra...@earthlink.net> wrote:
> அன்புள்ள தேமொழி,
>
> வணக்கம். இதில் நுழையவேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும் சில அரைத்த மாவு
> அரைபட்ட கருத்துகளுக்கு மாற்றுச் சிந்தனையும் உண்டு என்பதைத் தெரிவிக்க
> வேண்டியே இந்த என் பதிவு.
>
> தேமொழீ, மிக நல்ல கட்டுரை, பாராட்டு! எந்த மாதிரிக் குளவிக்கூட்டைக்
> குத்தியிருக்கிறீர்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்! ;-)
>
> என் சொந்தக் கருத்தை இப்போது சொல்ல விருப்பமில்லை. ஆனால், *இந்தக் கட்டுரையை
> நீங்கள் விரிவுபடுத்த நினைக்கும்போது வேறு சில கருத்துகளையும் உட்கொள்ளுவது
> நல்லது* என்று நினைக்கிறேன்.
>
> 1. "*செய்தொழில்*" என்ற தொடரின் பொருள் என்ன என்று கொள்வதில்தான் கருத்து
> வேறுபாடு இருப்பதுபோல் என் இலக்கண மண்டைக்குத் தோன்றுகிறது. இங்கே "தொழில்
> (certain type of labor/task)" என்பதைச் "செய்கை (action/performance/deed)"
> என்று கொண்டால் ... "செய்" என்ற சொல்லடை வீணன்றோ? "செய்யும் செய்கை" ???
>
> 1a. வேந்தன் ஐயா சொல்வதையும் [செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும்
> தொழில்] கருத்தில் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. சொற்பஞ்சம் இல்லாத
> வள்ளுவன் "செய்யும் செய்கை" என்ற பொருளிலா "செய்தொழில்" என்ற தொடரைப்
> பயன்படுத்தியிருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
>
> 2. கையோடு கையாக, இளம்பூரணர் சொன்னதையும் பார்த்துவிடவும். இந்தக் குறளுக்கு
> அந்த நோக்கத்திலும் பொருள் சொல்லலாம். (இது என் கருத்து இல்லை, இளம்பூரணர்
> சொன்னது!)
>
> 'பிறப்பு, குடிமை' என்றவற்றைக் குறித்து இளம்பூரணர் சொல்வது:
>
> “*பிறப்பாவது* அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர்,
> நுளையர் என்றாற்போல வரும் *குலம்*.”
>
> “குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின்
> அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். ‘பிறப்பொக்கும்
> எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ எனப் பிறரும்
> குலத்தின்கண்ணே சிறப்பு என்பது ஒன்று உண்டு என்று கூறினார் ஆகலின்.”
>
> சுருக்கமாகச் சொன்னால் ... "பிறப்பு" என்பது ஒரு குலத்துக்குள்ளே பிறக்கும்
> பிறப்பு. "சிறப்பு" என்பது அந்த அந்தக் குலத்துக்குள்ளே அந்த அந்த மக்கள்
> செய்யும் தொழிலின் வேற்றுமையால் உண்டாகும் சிறப்பு.
>
> (மேலும் விளக்கத்துக்கு என் வலைப்பூவில் உள்ள பதிவையும்
> பார்க்கலாம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html)
>
>
> பின் குறிப்புகள்:
>
> இந்தக் குறிப்புகளுக்கும் வள்ளுவனுக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ தெரியவில்லை,
> ஆனாலும் எனக்கு மட்டுமே தெரிந்த சில நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்வதில்
> தவறில்லை என்று நினைக்கிறேன். தொடர்பில்லை என்றால் புறக்கணித்துவிடவும். நன்றி.
>
> (i) பண்டைத்தமிழ்ச் சொற்களான *கிளை*, *குலம்*, *குடி*, *திணை*, *பிறப்பு*,
> *சாதி*, ... *இன்னொத்த சொற்களின் துல்லியமான பயன்பாட்டை 'மேலைநாட்டுப்
> பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்' எவரும் துல்லியமாக அறிந்து தம் கட்டுரைகளை
> எழுதவில்லை என்பது என் துணி*பு. கிடைக்கும் கட்டுரைகள் எல்லாம் நுனிப்புல்
> மேய்வின் அசைபோடுதலே. வெளிப்படையாகச் சொல்கிறேன் ... அதுபற்றி இன்னும் என்
> நண்பர் ஜார்ஜ் ஹார்ட்-உடன் வாதாடுகிறேன். முதலில் 'புலைத்தியைத் தீட்டுத்துணி
> துவைப்பவள்' என்றார். அதை மறுத்துச் சான்று காட்டிக் கட்டுரை எழுதினேன். பிறகு
> ... ஆம், I'm willing to admit that there's no mention of menstruation என்று
> அவரே ஒத்துக்கொண்ட பின் இணயத்தில் அந்தத் 'தீட்டுச் சத்தம்' அடங்கியிருக்கிறது!
>
> (ii) அதே-போல ...* '**'மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்'களுக்கு 'சாதி'
> என்பதற்கும் 'தீண்டாமை' என்பதுக்கும் வேறுபாடு தெரியுமா என்பது ஐயம்*.
>
>
>
> On Saturday, September 13, 2014 7:43:41 PM UTC-7, தேமொழி wrote:
>>
>> இம்மாத "தமிழ்த்தேர்" மாத இதழில் வெளியான என் கட்டுரை ... அனைவரின்
>> கருத்துகளையும் அறிய விருப்பம்.
>>
>>
>>
>> பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா?
>>
>> பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் - ஒரு மீள்பார்வை
>>
>> _______________________________________________________________________________________________________
>>
>>
>>
>> *பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா *
>>
>> *செய்தொழில் வேற்றுமை யான். - குறள் 972 [அதிகாரம்: பெருமை]*
>>
>>
>>
>> திருக்குறளின் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்குப் பொருள் விளக்கம்
>>
>> தர முற்படுவோர், உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே மாதிரியாகப்
>> பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித்
>> தருகிறது என விளக்கம் தர முற்படுகின்றனர். எக்காலத்திற்கும்... உலகில் எங்கு
>>
>> பிறந்த மக்களுக்கும் பொருந்துகின்ற ஒரு பொது மறையென போற்றப்படும்
>> திருக்குறளின் வழியே வள்ளுவர் இக்கருத்தைத்தான் முன் வைத்திருப்பாரா என
>> ஆராய்கிறது இக்கட்டுரை. செய்யும் தொழிலால்தான் பெருமை என்று கூறுகிறதா
>> இக்குறள்
>> ?
>>
>>
>>
>> திருக்குறளில் "தொழில்" என்ற சொல் வருவது மொத்தம் எட்டு குறள்களில்.
>> அக்குறள்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கு மு. வரதராசனார்
>> கொடுத்த விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் "தொழில்" என்ற சொல்
>> என்ன பொருளில் இக்குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும்
>> குறிபிடப்பட்டுள்ளது.
>>
>>
>>
>> *தொழில் என்ற சொல் கொண்ட குறள்கள்: *
>>
>> [1]
>>
>> உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
>>
>> அனைத்தே புலவர் தொழில் - குறள் 394 [கல்வி]
>>
>>
>>
>> உரை:
>>
>> மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி
>> நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
>>
>>
>>
>> தொழில் = "*செயல்*" என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [2]
>>
>> அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
>>
>> அஞ்சல் அறிவார் தொழில் - குறள் 428 [அறிவுடைமை]
>>
>>
>>
>> உரை:
>>
>> அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு
>> அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
>>
>>
>>
>> தொழில் = "*செயல்*" என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [3]
>>
>> குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
>>
>> வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 549 [செங்கோன்மை]
>>
>>
>>
>> உரை:
>>
>> குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி,
>> அவற்களுடைய
>> குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்.
>>
>>
>>
>> தொழில் = "*கடமை*" என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [4]
>>
>> எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
>>
>> வல்லறிதல் வேந்தன் தொழில் - குறள் 582 [ஒற்றாடல்]
>>
>>
>>
>> உரை:
>>
>> எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக்
>> கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
>>
>>
>>
>> தொழில் = "*கடமை*" என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [5]
>>
>> விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
>>
>> சொல்லுதல் வல்லார் பெறின் - குறள் 648 [சொல்வன்மை]
>>
>>
>>
>> உரை:
>>
>> கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிதாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம்
>> விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
>>
>>
>>
>> தொழில் = "*ஏவல்*" (பணி/கட்டளை) என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [6]
>>
>> நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
>>
>> பேணாமை பேதை தொழில் - குறள் 833 [பேதைமை]
>>
>>
>>
>> உரை:
>>
>> தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை,
>> நன்மை
>> ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
>>
>>
>>
>> தொழில் = "*செயல்*" என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [7]
>>
>> காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
>>
>> யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 1252 [நிறையழிதல்]
>>
>>
>>
>> உரை:
>>
>> காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை
>> நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
>>
>>
>>
>> தொழில் = "*வேலை*" என்றப் பொருள் தருகிறது
>>
>> ---
>>
>> [8]
>>
>> பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
>>
>> செய் தொழில் வேற்றுமையான் - குறள் 972 [பெருமை]
>>
>>
>>
>> மு.வ உரை:
>>
>> எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின்
>> உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
>>
>> தொழில் = "தொழில்" (வேலை) என்றப் பொருள் கூறுகிறார் மு. வ.
>>
>>
>>
>> சாலமன் பாப்பையா உரை:
>>
>> எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால்
>> மட்டுமே பெருமை வரும்.
>>
>> தொழில் = "செயல்" என்றப் பொருள் கூறுகிறார் பாப்பையா.
>>
>>
>>
>> *இக்குறள் பெருமை என்ற அதிகாரத்தில் வருகிறது.*
>>
>> ---
>>
>>
>>
>>
>>
>> இனி *“பெருமை” *என்ற ஓர் அதிகாரம் எழுதிய வள்ளுவர், அதில் உள்ள பத்து
>> இவற்றைத் தொகுத்து வழங்கினால், *உற்சாகத்துடன் கூடிய விடாமுயற்சி கொண்ட
>> செயலால் செயற்கரிய செய்தல், சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் செயல்களைச்
>> செய்தல், நெறி வழுவாத சிறந்த செயல்களைச் செய்தல், பிறரால் இயலாதவற்றை தக்க
>> வழியில் செய்து முடித்தல், நன்மரபைப் பேணும் செயல், நிலை உயரும்பொழுதும்
>> பணிவுகொண்ட செயல், செருக்கற்ற செயல், ஆணவமற்ற செயல், பிறரின் நற்பண்புகளை
>> மட்டும் மதிக்கும் செயல் என அறிய செயல்களை நெறிமுறை வழுவாது செய்து
>> முடித்தலும், செருக்கு தவிர்த்து ஆணவமற்று பிறரை மதிக்கும் செயகள்தாம்
>> மீண்டும் மீண்டும் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. *
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>

--
*பணிவன்புடன்,*
*ஒரு அரிசோனன் *

Nagarajan Vadivel

unread,
Sep 14, 2014, 9:37:01 PM9/14/14
to மின்தமிழ்

2014-09-15 1:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆம். நீங்கள் போட்டோக்கள், வலைப்பதிவுகள் எடுக்கும் செய்திகள் அதன் வலைத்தொடுப்பும் கொடுத்தால் சிறப்பு.

என்னிடத்தில்
​ உள்ள தரவிறக்கப்பட்ட புகைப்படத் தொகுப்புகள் மின் நூல்கள் மற்றும் முனைவர் ஆய்வுக் கட்டுரைகளுக்கு வலைத் தொடுப்பு கொடுப்பது இயலாது.

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Sep 15, 2014, 2:46:00 AM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி ராஜம் அம்மா .

.... தேமொழி

amachu

unread,
Sep 15, 2014, 6:19:23 AM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Monday, September 15, 2014 4:27:36 AM UTC+5:30, rajam wrote:

1. "செய்தொழில்" என்ற தொடரின் பொருள் என்ன என்று கொள்வதில்தான் கருத்து வேறுபாடு இருப்பதுபோல் என் இலக்கண மண்டைக்குத் தோன்றுகிறது. இங்கே "தொழில் (certain type of labor/task)" என்பதைச் "செய்கை (action/performance/deed)" என்று கொண்டால் ... "செய்" என்ற சொல்லடை வீணன்றோ? "செய்யும் செய்கை" ???

1a. வேந்தன் ஐயா சொல்வதையும் [செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும் தொழில்] கருத்தில் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. சொற்பஞ்சம் இல்லாத வள்ளுவன் "செய்யும் செய்கை" என்ற பொருளிலா "செய்தொழில்" என்ற தொடரைப் பயன்படுத்தியிருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

2. கையோடு கையாக, இளம்பூரணர் சொன்னதையும் பார்த்துவிடவும். இந்தக் குறளுக்கு அந்த நோக்கத்திலும் பொருள் சொல்லலாம். (இது என் கருத்து இல்லை, இளம்பூரணர் சொன்னது!)

'பிறப்பு, குடிமை' என்றவற்றைக் குறித்து இளம்பூரணர் சொல்வது: 

பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வரும் குலம்.”

“குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பு என்பது ஒன்று உண்டு என்று கூறினார் ஆகலின்.” 

சுருக்கமாகச் சொன்னால் ... "பிறப்பு" என்பது ஒரு குலத்துக்குள்ளே பிறக்கும் பிறப்பு. "சிறப்பு" என்பது அந்த அந்தக் குலத்துக்குள்ளே அந்த அந்த மக்கள் செய்யும் தொழிலின் வேற்றுமையால் உண்டாகும் சிறப்பு. 

(மேலும் விளக்கத்துக்கு என் வலைப்பூவில் உள்ள பதிவையும் பார்க்கலாம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html) 

மறப்பினும் முன்வந்து நிற்கும் வள்ளுவரின்
ஓத்துக் கொளலாகும் குறள் :)))))))))))

--

ஆமாச்சு

PRASATH

unread,
Sep 15, 2014, 6:55:42 AM9/15/14
to vallamai, மின்தமிழ்
:)))

ஶ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Sep 15, 2014, 9:20:47 AM9/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Monday, September 15, 2014 4:25:40 PM UTC+5:30, பிரசாத் வேணுகோபால் wrote:
:)))

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

குடிக்கு குடி ஒழுக்கத்தை சொல்றாரா வள்ளுவர் :)

நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
வில்லாண்மை யாக்கிக் கொளல்

-------------

குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு

செய்யறதே குடி தானாம் :)

-------------------------------------------------------------

--

ஆமாச்சு

தேமொழி

unread,
Sep 15, 2014, 3:37:12 PM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Sunday, September 14, 2014 4:59:52 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
///நீங்க செய்கை என்பது நடத்தைக்கு சமனா சொல்லுறீங்க

ஆனால் வெறுமனே தொழில் என்னாமல் செய்தொழில் என்றார் என்பதையும் கவனிக்கணும்.
செய்ததொழில், செய்கின்ற தொழில், செய்யபோகும் தொழில்.///

On Sunday, September 14, 2014 3:57:36 PM UTC-7, rajam wrote:
////வேந்தன் ஐயா சொல்வதையும் [செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும் தொழில்] கருத்தில் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. சொற்பஞ்சம் இல்லாத வள்ளுவன் "செய்யும் செய்கை" என்ற பொருளிலா "செய்தொழில்" என்ற தொடரைப் பயன்படுத்தியிருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.///

செய்த தொழில், செய்கின்ற தொழில், செய்யும் தொழில்  என்ற அடிப்படையில்தான் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.   :)))

..... தேமொழி

Message has been deleted

தேமொழி

unread,
Apr 22, 2020, 3:34:00 AM4/22/20
to மின்தமிழ்
உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன் இசையினியன், தெரிந்து கொள்வோம் 

On Wednesday, April 22, 2020 at 12:25:59 AM UTC-7, இசையினியன் wrote:
எல்லாரையும் படித்தேன். 
  • ஆனால், ஏழு வரிக்கு எங்கு எங்கு சென்று. 
  • அவர்களின் ஏழாமையை (பேச்சு வழக்கு) காண்கிறேன்.  
  • குறளுக்குரிய பொருளைத் தெளிவாக யாரும் கூறவில்லை. அவரவர் பொருளை குறித்து விட்டீர்கள் 
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages