10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

139 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 28, 2021, 3:26:34 PM9/28/21
to மின்தமிழ்
10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை அறிவித்தது தமிழக அரசு.   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் செம்மொழி தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையில் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

[செய்தி வெளியீடு எண்: 802    -  நாள்: செப்டெம்பர்  28, 2021] 

செய்தி வெளியீடு:

முத்தமிழறிஞர் கலைஞர்  கருணாநிதியின் பெரு முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கென தனித்தன்மையுடன் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற கருணாநிதியின் கனவினை நிறைவேற்ற, மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006-ல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டது. 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் முதல்வர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் தோராயமாக 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்நிலத்தினைச் சமன் செய்ய ரூ.1.45 கோடி நிதி வழங்கப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கருணாநிதி, தமது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதியினை வழங்கி கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை அந்நிறுவனத்தில் நிறுவினார். அவ்வறக்கட்டளையின் வாயிலாக செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பினை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே உயரிய விருதாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படும்.

அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது, பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8-வது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:

1. 2010 - முனைவர் வீ.எஸ். இராஜம், 
(Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania) .

2. 2011 - பேராசிரியர் பொன். கோதண்டராமன் 
(முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

3. 2012 - பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி 
( முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

4. 2013 - பேராசிரியர் ப. மருதநாயகம் 
(முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)

5. 2014 - பேராசிரியர் கு. மோகனராசு 
(முன்னாள் பேராசிரியர்& தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

6. 2015- பேராசிரியர். மறைமலை இலக்குவனார் 
( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி)

7. 2016 - பேராசிரியர் கா. ராஜன் 
( முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்)

8. 2017 - பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
(Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany).

9. 2018 - கவிஞர் ஈரோடு தமிழன்பன் 
( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை).

10. 2019 - பேராசிரியர் கு.சிவமணி 
( முன்னாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை).

2010 முதல் 2019 வரையிலான கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் 30.08.2021 அன்று நடைபெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 8-வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு விளம்பரம் வெளியிடவும் ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டுப் பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கான பணிகள் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துரை, சென்னை - 9 

---

தேமொழி

unread,
Sep 28, 2021, 3:35:57 PM9/28/21
to மின்தமிழ்
💐🏆💐🥇💐💐🏆💐🥇💐

dr rajam.jpg

ராஜம் அம்மாவிற்கு  வாழ்த்துகள்  

💐🏆💐🥇💐💐🏆💐🥇💐

Jean-Luc Chevillard

unread,
Sep 29, 2021, 2:32:13 AM9/29/21
to mint...@googlegroups.com, தேமொழி
Congratulations and best wishes to my colleague and friend, Dr V.S. Rajam, on the occasion of her receiving an award.

அன்புடன்

-- Jean-Luc (ழான்)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b6584383-a0fa-40f3-a7f0-7de3ca69ea78n%40googlegroups.com.


P1180385.JPG

Jean-Luc Chevillard

unread,
Sep 29, 2021, 2:42:52 AM9/29/21
to mint...@googlegroups.com, தேமொழி
P.S.
Here are more pictures taken when she was staying with me in Pondicherry in Spring 2011,
and was working at the time on the edition of Henrique Henriques grammar,
which later became Harvard Oriental Series volume N°76
(Jeanne Hein & V.S. Rajam)


++++++++++++++++++++

Congratulations and best wishes to my colleague and friend, Dr V.S. Rajam, on the occasion of her receiving an award.

அன்புடன்

-- Jean-Luc (ழான்)



On 28/09/2021 21:35, தேமொழி wrote:
💐🏆💐🥇💐💐🏆💐🥇💐

--
P1180446.JPG
P1180448.JPG
P1180376.JPG
P1180392.JPG

தேமொழி

unread,
Sep 29, 2021, 2:47:09 AM9/29/21
to மின்தமிழ்
நன்றி பேரா ழான்   💐

தேமொழி

unread,
Sep 29, 2021, 2:55:15 AM9/29/21
to மின்தமிழ்
மீள்பதிவு:  
Aug 6, 2016

காணொளி:

பதிவு:


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில்  தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில்   ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட  அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,
  1. Reference Grammar of Classical Tamil Poetry 
  2. The Earlier Missionary Grammar of Tamil
  3. சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..

இவரது The Earlier Missionary Grammar of Tamil நூல் ஹார்வர்ட்  பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தின் வெளியீடாக வந்தது என்பது பெருமைக்குறிய செய்தி.

இந்த விழியப் பேட்டியில்,
  • தாம் வட அமெரிக்காவிற்கு வந்த காலகட்டத்தில்  பல்கலைக்கழகத்தில் போதனா மொழியாக எவ்வகையில் தமிழ் மொழியின் நிலை இருந்தது.
  • ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராக வந்து தனது கல்வியையும் அமெரிக்காவில் தனது கல்வியைத் தொடர்ந்த  தகவல்கள்
  • வட அமெரிக்காவில் எவ்வகையில் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆசிரியர் அல்லது பேராசிரியர் நியமனம் அமைகின்றது.. 
என்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.

தொடர்ச்சியாக,
தனது முதல் நூலான Reference Grammar of Classical Tamil Poetry என்ற நூலைப் பற்றியும் அதன் ஆய்வுச் சிறப்பையும் விளக்குகின்றார்.

இவரது  The Earlier Missionary Grammar of Tamil பற்றி விவரிக்கும் போது 
16ம் நூற்றாண்டு தமிழ் இலக்கண முயற்சிகள்
தன்னை ஒத்த பாதிரிகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற நோக்கில் பாதிரியார் அன்றிக்கு அடிகளார் 1547 - 1549 வரை பரதவ மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய Arte da Lingua Malabar  என்ற இலக்கண நூல் பற்றியும்,  இந்த நூல் உருவான வரலாற்றையும் இதனை முடிப்பதற்குள் ஏற்பட்ட சிரமங்களையும் சுவைபட விளக்குகின்றார்.

இவரது கடந்த  ஆண்டு படைப்பாக, மணற்கேணி வெளியீடாக சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற.. என்ற நூல் வெளிவந்தது. 
இந்த நூலில் சங்க இலக்கியத்தில் இக்காலத்தில் இருக்ககூடியதாக உள்ள சாதி என்பது வழக்கில் இருந்தமைக்கான  சாத்தியமில்லை எனும் தனது ஆய்வுச் சான்றுகளை விளக்குகின்றார்.

வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்புக்களோடு இந்த நேர்க்காணல் முடிகின்றது.

ஏறக்குறை 1 மணி நேர விழியப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2016/08/blog-post.html
யூடியூபில் காண: ​https://www.youtube.com/watch?v=WFCaCT6Xa9A&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

வீடியோ பதிவில் உதவி: முனைவர் தோமொழி 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

தேமொழி

unread,
Sep 29, 2021, 2:57:53 AM9/29/21
to மின்தமிழ்
இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகை என்று விக்கி சொல்கிறது https://ta.wikipedia.org/s/n6h

இவ்விருது இந்தியாவிலேயே உயரிய விருதாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.
[செய்தி வெளியீடு எண்: 802    -  நாள்: செப்டெம்பர்  28, 2021] 

குறிப்பு: 
பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா (பின்லாந்து அறிஞர்) சிந்துவெளி எழுத்துச் சிக்கலுக்குத் திராவிடத் தீர்வை அளித்துச் செம்மொழித் தமிழுக்குச் செய்த பங்களிப்புக்காக...    
2009ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.
2010 முதற்கொண்டு 2019 வரை இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது 
முனைவர் ராஜம் அம்மாவை   எவ்வளவு காலம்  கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள் !!!

தொல்காப்பியர் விருது
குறள்பீடம் விருது
இளம் அறிஞர் விருது
போன்ற செம்மொழி விருதுகள்,  ஆண்டுக்கு 7 தமிழ் அறிஞர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய விருதுகள்  நடுவண்  அரசின் பொறுப்பில் வருகிறது. 
பாஜாக அரசு அதற்காக முயற்சியை 2016 க்குப் பிறகு புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது. 
இது  புறக்கணிப்பு  என்று  கூறினால், தமிழ் புறக்கணிப்பு என்பது அறியாமையாக இருக்கலாம் அல்லது அறிந்து கொண்ட அரசியலாக இருக்கலாம். 
ஆனால் "புறக்கணிப்பு என்பது பொய்" என்று  தமிழ் வளர்ச்சித்துறை சொல்லி கம்பளத்திற்கு அடியில் கூட்டித்  தள்ளிவிட்டதாகவும்  தெரிகிறது 

விருது பெற்றோர் பட்டியல் இங்கு - 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தளத்தில் 
இது குறித்த விவாதம் மின்தமிழில் முன்னர் நடைபெற்றது 


இதற்கான எளிமையான சுருக்கமான விளக்கம்: 
மொழியரசியல்    

K R A Narasiah

unread,
Sep 29, 2021, 3:01:35 AM9/29/21
to mint...@googlegroups.com
Congratulations to Dr. Rajam, who richly deserves this award
Narasiah

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 30, 2021, 4:17:45 AM9/30/21
to mintamil, rajam
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய இராஜம் அம்மாவுக்கு செம்மொழி விருது கிடைத்தது குறித்து மட்டிலா மkiழ்ச்சி. தக்கவருக்குக் கிடைத்த விருது! நீண்ட நாட்களாக தக்கவரான அம்மையாருக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய அங்கீகாரம். 

மின்தமிழ் குழுமத்தின் மூலம் அறிமுகம் ஏற்பட்டு என் மீதும் குடும்பத்தார் மீதும் பேரன்பு காட்டிய பெருந்தகையாளர் நம் திருமிகு இராஜம் அம்மா. நாமே பெற்ற விருது போல உணர்கிறேன்.

அவரை உளமார வாழ்த்திப் பெருமைகொள்கிறேன்.

நன்றி
சொ.வினைதீர்த்தான் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja Paramasivam

unread,
Sep 30, 2021, 11:56:42 AM9/30/21
to mint...@googlegroups.com
ராஜம் அம்மாவுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்




mayakunar

unread,
Sep 30, 2021, 9:05:45 PM9/30/21
to மின்தமிழ்
உயர்  திருமதி ராஜம் அம்மையாருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .நீண்ட ஆயுளை அளிக்க இறைவனை வேண்டுகிறேன் .
கோபாலன் 

தேமொழி

unread,
Oct 1, 2021, 12:35:08 AM10/1/21
to மின்தமிழ்
semmozhi award.jpg

இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்த கேட்டுக் கொள்கிறோம். 
உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களும் , உயர் ஆய்வாளர்களும், இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாகவார்கள்.
---

தேமொழி

unread,
Oct 1, 2021, 12:38:45 AM10/1/21
to மின்தமிழ்
semmozhi award2.jpg
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Dr. Mrs. S. Sridas

unread,
Oct 2, 2021, 10:41:07 PM10/2/21
to mint...@googlegroups.com
முனைவர் தேமொழி அவர்களுக்கு,

வணக்கம்.
முனைவர் ராஜம் அவர்களுடைய நூல் முதலாம் பதிப்பு முடிந்து விட்டதை அறிகிறேன். அடுத்த பதிப்பு அல்லது வேறு ஒழுங்குகள் பற்றிய செய்தி ஏதாவது உண்டா?
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 5, 2021, 3:30:31 AM10/5/21
to மின்தமிழ்
எந்த நூலைக்  குறிப்பிடுகிறீர்கள்?
1.
A Reference Grammar of Classical Tamil Poetry: 150 B.C.-Pre-Fifth/Sixth Century A.D (Memoirs of the American Philosophical Society) (Memoirs of the American ... of the American Philosophical Society) Hardcover – July 1, 1992

2. 
சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற
வீ எஸ் ராஜம் (ஆசிரியர்)

Dr. Mrs. S. Sridas

unread,
Oct 5, 2021, 7:01:44 PM10/5/21
to mint...@googlegroups.com
முனைவர் தேமொழி அவர்களுக்கு

நன்றி. நான், A Reference Grammar of Classical Tamil Poetry: 150 B.C.-Pre-Fifth/Sixth Century A.D, என்னும் நூலைத் தான் கேட்டிருந்தேன். கிடைக்குமா என்று முயன்று பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



Reply all
Reply to author
Forward
0 new messages