குடியரசுத் தலைவர் விருதுக்கு தமிழ் அறிஞர்களை புறக்கணிப்பது ஏன்?

29 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 1, 2019, 2:32:22 AM6/1/19
to mint...@googlegroups.com

presidential award.jpg



The Presidential Award of Certificate of Honour to Sanskrit, Pali, Prakrit, Arabic, Persian, Classical Oriya, Classical Kannada, Classical Telugu and Classical Malayalam Scholars and Maharshi Badrayan Vyas Samman for young scholars in the same field

Department: 
Higher Education

File Upload: 
PDF icon presidential_awards_en.pdf

Validity: 
Tuesday, 30 April 2019
Message has been deleted

K R A Narasiah

unread,
Jun 2, 2019, 10:40:41 AM6/2/19
to mint...@googlegroups.com
தமிழுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெலியிட வேண்டாம். ஒரு தொல்காப்பியர் விருது (5இலட்சம்) இரண்டு குறள் பீடம் விருதுகள் (5 இலட்சம் ஒவ்வொன்றுக்கும்) இளைஞர் விருதுகள் (5 ஒரு இலட்சம் ஒவ்வொன்றுக்கும்) 
இவையெல்லாம் ஜனாதிபதி விருதுகளே. 
There is a presidential awards Committee for that constituted by the Min of HRD.
Narasiah

On Sun, Jun 2, 2019 at 7:26 PM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
ஏன் என்பதற்குப் பதிலளித்தால்.

அட இத பத்தியும் பேசாத MP, MLA, Chief Minister என இருக்கும் வரை அவர்கள் அப்படித்தானே இருப்பார்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/97b90fb4-3ced-4bc4-8dc8-37c4f113dc78%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 2, 2019, 12:03:45 PM6/2/19
to மின்தமிழ்


On Sunday, June 2, 2019 at 7:40:41 AM UTC-7, naras...@gmail.com wrote:
தமிழுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெலியிட வேண்டாம். ஒரு தொல்காப்பியர் விருது (5இலட்சம்) இரண்டு குறள் பீடம் விருதுகள் (5 இலட்சம் ஒவ்வொன்றுக்கும்) இளைஞர் விருதுகள் (5 ஒரு இலட்சம் ஒவ்வொன்றுக்கும்) 
இவையெல்லாம் ஜனாதிபதி விருதுகளே. 

எனது மொழி பெயர்ப்பில் பிழை எனவே வைத்துக் கொள்வோம் ஐயா.
நான் கீழுள்ள விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அரசு தளத்திற்குச் சென்று மெய்யா எனப் பார்த்துவிட்டுத்தான் குழுமத்தில் பகிர்ந்தேன்.

IMG-20190601-WA0054.jpg




 
There is a presidential awards Committee for that constituted by the Min of HRD.

நீங்கள் இங்கு குறிப்பிடும் "அதே முறையில்" அதிலும்  "presidential award"   என்றுதான் உள்ளது.

F. No. 11-1/2019-Skt.II

இந்த அறிவிப்பு குறித்துத்தான் கூறியுள்ளேன்.







 
Narasiah

On Sun, Jun 2, 2019 at 7:26 PM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
ஏன் என்பதற்குப் பதிலளித்தால்.

அட இத பத்தியும் பேசாத MP, MLA, Chief Minister என இருக்கும் வரை அவர்கள் அப்படித்தானே இருப்பார்கள்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 2, 2019, 8:22:57 PM6/2/19
to மின்தமிழ்

source - https://www.dinamani.com/tamilnadu/2018/may/01/குடியரசுத்-தலைவர்-விருதுகள்-தமிழ்-மொழி-புறக்கணிக்கப்படவில்லை-தமிழக-அரசு-விளக்கம்-2910736.html

குடியரசுத் தலைவர் விருதுகள்: தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்

Published on : 01st May 2018

குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில், தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை விளக்கம் அளித்துள்ளது.

'தமிழ் மொழி தவிர்க்கப்பட்டிருப்பது ஏன்?' என்ற தலைப்பில் 'தினமணி'யில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இந்தச் செய்திக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:-
தமிழ்மொழிக்கு மட்டுமே 2004-ஆம் ஆண்டில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் வழியாக செயல்பட்டு வந்த தமிழ்ப் பிரிவு பிரிக்கப்பட்டு சென்னையில் தமிழுக்கென தனி நிறுவனமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற பெயரில் 2008-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கி வரும் இந்த நிறுவனத்தால் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் அறிஞர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் 66 விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

மகரிஷி விருதுக்கு இணையானது: தமிழகத்தில் தமிழுக்கென செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று, மத்திய அரசால் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பிற மொழிகள் ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகும். மேலும், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அராபிக், பாரசீகம் போன்ற மொழிகளுக்கு இவ்வாறு தனி நிறுவனம் அந்தந்த மாநிலங்களில் தன்னாட்சி அளிக்கப்பெற்று அமைக்கப்படவில்லை.

மாறாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கிளை அலுவலகங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தமிழைத் தவிர பிற மொழிகளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் பெற விளம்பரம் வெளியிடுகிறது.

'தினமணி' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுக்கு நிகராக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் தொல்காப்பியர் விருதும், குறள்பீட விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் விருதுகள்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வழியாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய தேர்வுக் குழுவால் விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடுகின்றன.
 
தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

2016-17-ஆம் ஆண்டு விருதுகளுக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வுக் குழு நியமிக்கப்பட்டு, விருதாளர்களை தேர்ந்தெடுக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது மட்டுமின்றி, தன்னாட்சி அளிக்கப்பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவதால், குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறையின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமொழி

unread,
Jun 3, 2019, 12:07:45 AM6/3/19
to மின்தமிழ்
தனிமடல் செய்தி:
குடியரசுத் தலைவர் விருதுகள்: தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்
-நல்ல செய்தி

இது தமிழக அரசு தந்த விளக்கம்.

மத்திய அரசின் அறிக்கையில்   தமிழுக்கு விரிவு படுத்தினோம் என்பதைக் காண இயலவில்லை.

ஆகவே அது வேறு இற்கு வேறு என இருக்கவே வாய்ப்புள்ளது 

F. No. 11-1/2019-Skt.II   என்ற திட்டத்தில்  "தமிழ் இல்லை" என்பது அறிக்கையின்படி மறுக்க முடியாத ஒன்று.

1958 - சமஸ்கிருதம், அரபி, பாரசீகம்
1996 - விரிவாக்கம் :  பாலி/பிராகிருதம்
2016- விரிவாக்கம் :  ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் 

இதில் எந்த ஆண்டு விரிவாக்கத்தில் தமிழ் சேர்க்கப்பட்டது என  உள்ளது?
இல்லை என்றால் அது வேறு திட்டம்... இது வேறு திட்டம் என்பது அறிக்கை தரும்  முடிவு.

கேள்வி: வேறு திட்டத்தில் பிற மொழி அறிஞர்கள் சிறப்பு செய்யப்படுகிறார்களா?
Reply all
Reply to author
Forward
0 new messages