On Thursday, 25 July 2013 17:52:58 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:எத்தனை பேர் இலக்கணம் எழுதி என்ன பயன்?
அரை மாத்திரை ,ஒரு மாத்திரை, இருமாத்திரை ,அளபெடை, குற்றிய லுகரம்
ஒலி பிறக்கும் இடம் எல்லாமும் சொல்லி என்ன யூசும் இல.
என்ன செய்வது சேவியர் சார் ?
உலகின் பெரும்பான்மை மொழியான சீன மொழியிலும்
பத்துக்கும் மேற்பட்ட வட்டாரப் பேச்சுகள். செம்மொழிகளிலும்
காலம்தோறும் செய்யுள் நடையிலும், உரை நடையிலும்
மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. வட்டார வழக்குகள்
தூய தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வைத்திருப்பதையும்
மறுக்க முடியாது. விரிவாக எழுதினால் தேமொழி அவர்கள்
இழை தொடங்கியதன் நோக்கம் திசை மாறும்.
நான் உன்னிப்பாகக் கவனித்த அளவில் தஞ்சை
வட்டாரத்தின் ழகர உச்சரிப்பு, பிற பகுதிகளைக்
காட்டிலும் தெளிவாக உள்ளது
தேவ்