வழக்குத் தமிழ்ச் சொற்கள் - குதிர்

202 views
Skip to first unread message

ஆராதி

unread,
Oct 18, 2010, 8:09:54 PM10/18/10
to tamilmanram, mintamil
தமிழ்மன்றம் / மின் தமிழ் அன்பர்களே

பல்வேறு அருமையான புழங்கு தமிழ்ச் சொற்கள் மறைந்து வருகின்றன. தமிழ்மன்றம்/ மின்தமிழ் அன்பர்கள் நினைத்தால் இச்சொற்களைக் காப்பாற்ற மிகப்பெரிய உதவி செய்ய முடியும்.  செயலோ எளிது.

வாரம் ஒரு தலைப்பு என்று வரையறை ஏற்படுத்திக் கொண்டு அவரவர்களுக்குத் தெரிந்த அத்தலைப்புத் தொடர்பான வழக்காற்றுத் தமிழ்ச் சொற்களைத் தெரிவிக்க  வேண்டும். அடுத்த வாரம் வேறு தலைப்பு. இவ்வாறு முடிந்த வரை சொற்களைக் காப்பாற்றும் பணியைச் செய்யலாம். யார் வேண்டுமானாலும் தலைப்பைப் பரிந்துரை செய்யலாம். சொற்களை வழங்கலாம். தொகுக்கும் பொறுப்பையும் வாராவாரம் தலைப்பிடும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒரு வாரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தலைப்புத் தொடர்பான சொற்களைச் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் தலைப்பு மட்டும் வாராவாரம் மாறும். சரியா? என்ன முயன்று பார்க்கலாமா? இதற்கு முன் தானியங்களைச் சேகரிக்கும் அமைப்பிற்கு உரிய பெயர் தமிழ் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

///குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்களின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.///- செல்வமுரளி

///நல்ல இடுகை.  குதிர் எங்கள் வீட்டில் முன்னர் இருந்திருக்கிறது. சின்னதும் பெரியதுமாய் இரண்டு
இருந்தன. குதிரைவிட சற்று பெரிதாக ஒன்று இருக்கும். அதைக் களஞ்சியம் என்று சொல்வோம்./// - ந.இளகோவன்

குதிர் =  தொம்பை (நெல் தொம்பை என்பது தென்னார்க்காட்டு வழக்கு)

அன்புடன்
ஆராதி

Geetha Sambasivam

unread,
Oct 18, 2010, 9:06:23 PM10/18/10
to mint...@googlegroups.com
பத்தாயத்தை விட்டுட்டீங்களே?? :(

2010/10/19 ஆராதி <aara...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

360.gif

S.Krishnamoorthy

unread,
Oct 18, 2010, 11:04:49 PM10/18/10
to mint...@googlegroups.com
குதிர் என்ற சொல் அநேகமாக அனைத்துத் தென் மாவட்டங்களிலும் பயன்படுத்தப்படும் புழங்குசொல்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு சொல் “அம்பாரம்”.  பெரிய ஜமீன் பண்ணைகளில் இரண்டு மூன்று ஆட்கள் உயரம் வைக்கோல்புரியைச் சுற்றிச் சுற்றி அனுமன் இராவணன்முன் தன் வாலால் அமைத்த சிம்மாசனம் போல் சேமிக்கப்படுவதை “அம்பாரம்” என்பார்கள்.
வழிப்போக்கன்

2010/10/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

N. Ganesan

unread,
Oct 18, 2010, 11:52:36 PM10/18/10
to தமிழ் மன்றம், mint...@googlegroups.com
> குதிர் = தொம்பை (நெல் தொம்பை என்பது தென்னார்க்காட்டு வழக்கு)

ஆராதி ஐயா, முடிகிறபோது நானும் இவ்விழையில் பங்கெடுக்கிறேன்.

தூம்பு - தூம்பை/தும்பை - தொம்பை என்று பேச்சில் வருகிறது.

தூம்பு போல் உள்ள உறுப்புகளைப் பெற்றவை: தும்பி (தும்பிக் கை யானைக்கும்,
வண்டுக்கும்
உண்டு).

இன்னொரு பெயர்: ஆம்பல் (யானை, வண்டு) காம்பு + அல், சொல்முதல் க் கெட்டு
ஆம்பல் ஆகியிருக்கலாம்.

பிற பின்,
நா. கணேசன்

coral shree

unread,
Oct 19, 2010, 3:08:41 AM10/19/10
to mint...@googlegroups.com
குதிர் போல வளர்ந்திருக்கிறாய் என்று திட்டும் போது சொல்வது வழக்கு.......

2010/10/19 ஆராதி <aara...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Take life as it comes!                                                          Pavala Sankari,
All in the game na !                                                             Erode.
                                                                                         Tamil Nadu.
                                                                                         India.

coral shree

unread,
Oct 19, 2010, 3:12:05 AM10/19/10
to mint...@googlegroups.com
நல்ல முயற்சி அய்யா. சுவையான தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.......நானும் இதில் பங்கெடுக்கத் தயாராக உள்ளேன். நன்றி.

2010/10/19 ஆராதி <aara...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Jana Iyengar

unread,
Oct 19, 2010, 4:15:21 AM10/19/10
to mint...@googlegroups.com
'We are from Vizhuppanur [near Srivilliputtur]. In our homes [Iyengar
household] we use some paribhashai that is not used elsewhere. For
instance we call the kitchen as 'tirumappadi' may be an abused version
of 'tirumadaipalli' the name given to temple kitchen. another useage
is ARuvAyiDuthu, meaning finished. When a particular food item, for
instance, is finished before everyone has parttaken in this term is
used. Yet another word is 'AyalkiRatu meaning 'it is very spicy'. When
one bites a raw chilly this term could be used. Mind you, Iyengars are
the ones using almost chaste Tamizh. When I get time I would write
about many other words in use in our community.
Jana Iyengar

2010/10/19 coral shree <cor...@gmail.com>:

--
Jana

Geetha Sambasivam

unread,
Oct 19, 2010, 4:57:04 AM10/19/10
to mint...@googlegroups.com
பலராமன் நல்லா "ஓங்குதாங்கா" வளர்ந்திருந்தான். அதே கண்ணனைப் பார்த்தாலோ நிதானமான உயரம், அளவான பருமன், செதுக்கி வைத்தாற்போன்ற முகம், கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த அதரங்கள், ஒளி வீசும் நீல நிறத்தோடு காட்சி அளித்தான். யசோதா அம்மாவுக்குக் குழந்தையை மற்றப் பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடா இருந்தது. சின்னக் குழந்தைக்குச் "சீர் தட்டாமல்" பார்த்துக்கணும். தூக்கும்போது "உறம் விழாமல்" கவனமா இருக்கணும். சீர் தட்டினால் அந்த வாடைக்குக் குழந்தை துவண்டு போயிடும். உறம் விழுந்தால் தாய் மாமனின் வேட்டியில் குழந்தையைப் போட்டுவிட்டு, நாலு மூலையையும் எதிர் எதிரே இருவர் பிடித்துக் கொள்ளக் குழந்தையைக் கிடத்தி இருக்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் உருட்ட, அந்தப் பக்கம் இருப்பவர் இந்தப் பக்கம் உருட்ட ஒரு அரை மணி நேரத்தில் வேகவேகமாய்க் குழந்தையை உருட்டி உறத்தை நீக்க வேண்டும். அப்புறம் தான் குழந்தை பாலே குடிப்பான். அது மட்டுமா??

ஓய்வெடுக்குமிடமான "பட்டாசாலை"யில் குழந்தையை விட்டால், தவழ்ந்து, தவழ்ந்து அவன் "கூடத்துக்கு"ப் போயிடுவான். அப்படியே வாசல் "ரேழி"க்குப் போய் அங்கே இருக்கும் "குலுக்கை"க்குப் பின்னால் போயிட்டால் கஷ்டம். பூச்சி, பொட்டு நடமாடும் இடம். கண்ணன் இப்போ ஆங்கிலம் பேசப் போறான் பாருங்க. அங்கிருந்து கேட்வாசலில், நடுசெண்டருக்குப் போய்க் குழந்தை உருள ஆரம்பிச்சதுனா புழுதி எல்லாம் ஒட்டிக்கும்.

யசோதை யோசித்தாள். இந்த நந்தனுக்கு "வாக்கப்பட்டு" இத்தனை வருஷம் கழிச்சுக் குழந்தை பிறந்திருக்கான். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சணும்னு பார்க்கிறாங்க. இருந்தாலும் உடனே கொடுத்திடக் கூடாது. கொஞ்சம் "பிரியக்கால்" பண்ணிட்டுக் கொடுக்கணும்.

"வெள்ளெனெ" எந்திரிச்சு, பெறத்தாலே போயிட்டு வந்து பார்த்தாக்க இந்தக் கண்ணன் "உண்டக்கட்டி" அத்தனையும் எடுத்துவச்சுக்கிட்டு "அருவாக்கி" இருக்கான். அன்னிக்கு "நெம்ப" கோவம் வந்து "எருக்கம் மிளாறு" எடுத்து அடிக்கலாமானு யோசிச்சேன். அவன் சிரிப்பைப் பார்த்துட்டு மனசு மாறிடுச்சு. எத்தனை "தியாலம்" உட்கார்ந்து யோசிச்சாலும் இந்தக் கண்ணனைக் கோவிக்க மனசு வரலை. "ஊடால" இந்த பலராமனும் சேர்ந்துக்கிறான். அன்னிக்கு ரோகிணி பலராமனுக்கு ஒரு
"நிமிட்டாம்பழம்" கொடுத்துட்டா போலிருக்கு. "கம்மாய்க்கர"யிலே சொல்லிட்டு இருந்தா. நான் அதெல்லாம் சொல்லறதில்லை. கண்ணனை "உக்கி போட"ச் சொன்னாலே மனசு கேட்கலை. அவனும் என்ன "சொணை கெட்டவனா" சும்மா "திருப்பாட்டு" கேட்க. சரி, சரி, இதெல்லாம் யோசிச்சா மண்டை காய்ஞ்சிடும். மழை விட்டு "உச்சி வெரிக்கட்டும்" நாளைக்குப் "பிழைச்சுக் கிடந்தா" சோறு "தப்பாய்" இருந்தா "நீச்சுத் தண்ணி" குடுக்கணும், கண்ணனுக்கு. உடம்புக்குக் குளுமை அது!



அருஞ்சொற்பொருள் :)))))))))))



ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமா

சீர் தட்டறது= வேற்று வாடை ஒத்துக்காமல் போவது

உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது

கூடம்= இப்போ ஹால்

பட்டாசாலை=ஓய்வெடுக்குமிடம், சாப்பிடுமிடம்

குலுக்கை= நெல் குதிர்

கேட் வாசல்
நடு செண்டர்
வாக்கப்பட்டு= வாழ்க்கைப் பட்டு

பிரியக்கால்=பிகு பண்ணுவது
வெள்ளென= விடிகாலை

எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

பெறத்தாலே = பின் பக்கம்
துட்டி =துக்கம்

கலாவலியான= கிண்டல் பேச்சுக்கள்
தியாலம்=மணி

உண்டக்கட்டி= சோற்றுருண்டை

ஊடால= இடையிலே, நடுவிலே

நிமிட்டாம்பழம் =கிள்ளுதல்,
கலரு குடிங்க
நீச்சுத் தண்ணி - நீராகாரம்
கேஸ் பெட்டி
உக்கி போடுதல்= தோப்புக்கரணம் போடுதல்
கம்மாய்= ஏரிக்கரை
சொணை கெட்டவன்=சுரணை இல்லாதவன்
உச்சி வெரிக்கிறது=மழை விட்டு வானம் வெளுத்தல்
திருப்பாட்டு=திட்டு

அருவாக்கறது=தீர்ப்பது
தப்பாய் இருத்தல் = மிச்சம் இருந்தால்

பிழைச்சுக் கிடந்தா= நாளை

இது மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் புழங்கும் பொதுவான வழக்குச் சொற்கள்.  இதைத் தவிரவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அடையாளம் உண்டு!

2010/10/19 ஆராதி <aara...@gmail.com>
தமிழ்மன்றம் / மின் தமிழ் அன்பர்களே

பல்வேறு அருமையான புழங்கு தமிழ்ச் சொற்கள் மறைந்து வருகின்றன. தமிழ்மன்றம்/ மின்தமிழ் அன்பர்கள் நினைத்தால் இச்சொற்களைக் காப்பாற்ற மிகப்பெரிய உதவி செய்ய முடியும்.  செயலோ எளிது.


அன்புடன்
ஆராதி

--

N. Ganesan

unread,
Oct 19, 2010, 7:53:50 AM10/19/10
to மின்தமிழ்

On Oct 19, 3:15 am, Jana Iyengar <iyengar.j...@gmail.com> wrote:
> 'We are from Vizhuppanur [near Srivilliputtur]. In our homes [Iyengar
> household] we use some paribhashai that is not used elsewhere. For
> instance we call the kitchen as 'tirumappadi' may be an abused version
> of 'tirumadaipalli' the name given to temple kitchen. another useage
> is ARuvAyiDuthu, meaning finished. When a particular food item, for
> instance, is finished before everyone has parttaken in this term is
> used. Yet another word is 'AyalkiRatu meaning 'it is very spicy'. When
> one bites a raw chilly this term could be used.

அழல்கிறது என்பது அயல்கிறது என்றானதோ?
வாழப்பழம் - வாயப்பயம் ஆவதுபோல்.
மிளகாய் தின்றதால் நாக்கு அழலுகிறது.

> Mind you, Iyengars are
> the ones using almost chaste Tamizh. When I get time I would write
> about many other words in use in our community.
> Jana Iyengar
>

> 2010/10/19 coral shree <cora...@gmail.com>:


>
>
>
>
>
> > நல்ல முயற்சி அய்யா. சுவையான தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.......நானும்
> > இதில் பங்கெடுக்கத் தயாராக உள்ளேன். நன்றி.
>

> > 2010/10/19 ஆராதி <aaraa...@gmail.com>

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send


> >> email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > Take life as it comes!
> >    Pavala Sankari,
> > All in the game na !
> >     Erode.
>
> >             Tamil Nadu.
>
> >             India.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post


> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> Jana- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Oct 19, 2010, 7:55:34 AM10/19/10
to மின்தமிழ்

On Oct 19, 2:08 am, coral shree <cora...@gmail.com> wrote:
> குதிர் போல வளர்ந்திருக்கிறாய் என்று திட்டும் போது சொல்வது வழக்கு.......
>

குறுக்கே வளர்தலைக் குறிக்கும்.

tirumalainumbakkam

unread,
Oct 20, 2010, 12:25:59 AM10/20/10
to மின்தமிழ்
ஆக்கங் கெட்ட = இச்சொல்லை நம்மிற் பலர் கேட்டிருப்போம், இதன் துல்லியமான
பொருள் தெரிந்திருக்கா விட்டாலும்... வசையாகத் திட்டுவதற்கு இச்சொல்
பயன்படுகிறதுகுமரி, நாஞ்சில் வட்டாரங்களில். மதுரை மாவட்டத்திலும் இது
புழக்கத்திலுண்டு. ஆக்கம் என்பது இங்கு ஆகூழ் (அதிட்டம்) என்ற பொருளில்
வருகிறது. ஆகூழ் இல்லா.. எனப் பொருள் படும்.

மட்டுப் படுதல் (செட்டிநாடு)= புரிய மாட்டேங்குது.. "இந்த விதயம்
மாத்திரம் நமக்கு மட்டு படுதில்ல அய்யா..!" இது சிவகங்கை, காரைக்குடி
பக்கத்து வழக்கு. இதை ஒத்த 'மட்டுக்கட்டுதல்' = அடையாளம் காணுதல், இனங்
காணுதல், கண்டுபிடித்தல் என்ற பொருள்களில் ஈழத்தின் பெரும்பகுதி
களிலும் , தமிழகத் தென் மாவட்டங்களிலும் ஆளப்படுகிறது: "என்ன தம்பி,
நீங்க சொக்கநாயகம் மவன் ஆரவமுதனா? மட்டுக் கட்டல, மன்னிச்சுக்கோங்க!"


புறட, புறடை = கப்சா, புருடா, பொய். இது கொங்கு நாட்டில் ஆளப்படும்
சொல்.
--------------------------------------------------------------------------------------------------------
பழமொழி:

சூட்டுக் கோலைத் தந்தவன், ஆற்றுக் கோலையுந் தருவான்.


கட்டத்தை, சோதனையைக் கொடுத்தவன் (இறைவன்), அதை ஆத்துறதுக்கு, அதிலிருந்து
நாம மீண்டு வெளிய வர ஒரு வழியையுங் காட்டுவான்.

ஈழத்தில், குறிப்பாக அதன் வடமேற்குப் பைதிரங்களில் சொல்லப் படும் பழமொழி,
சொலவடை இது

tirumalainumbakkam

unread,
Oct 20, 2010, 1:19:48 AM10/20/10
to மின்தமிழ்
படுத்தடி = அபாண்டம், "இப்படி படுத்தடியா சொல்றியே என்னப்பத்தி" ; செட்டி
நாட்டு வழக்குச் சொல்.

திருவாத்தான் = உகுளி, ஏதாவது செய்யப் போய் அதை தலைகீழாக முடித்து
வருபவன், கோமாளி; "திருவாத்தான் கெளம்பீட்டான்டா.." , கொங்கு, தென் தமிழக
வழக்கு...


பழமொழி:

அரியதரம் கொண்டு போற நாய்க்கு அங்கொரு செருப்படி இங்கொரு
விளக்குமாத்தடி.

இரண்டு பக்கமும் கோள் மூட்டி, அவர் கதையை இவர்க்கும் இவர் கதையை
அவர்க்கும் சொல்லி சண்டை முடிந்து வைக்கும் ஆளுக்கு அங்கும் ஒரு அடி,
இங்கும் ஒரு அடி கிடைக்கும் என்பது பொருள்... ஈழத்திற் சொல்லப் படும்
பழமொழி இது!

பிறகு, புறவு, பொறவு = அப்புறம், பின்னாடி, பின்னால், பிற்பாடு

தென் தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் ஆளப்படும் சொல்!

--
--
Please visit my profiles at Bhoothatha-Blogspot<http://
thatachariyar.blogspot.com> OR MinTamil-Forum<http://groups.google.com/
group/mintamil/browse_thread/thread/78f57bd278809361>

வினோத்-VINOTH

unread,
Oct 20, 2010, 2:52:05 AM10/20/10
to mint...@googlegroups.com


2010/10/20 tirumalainumbakkam <tnke...@gmail.com>


பழமொழி:

சூட்டுக் கோலைத் தந்தவன், ஆற்றுக் கோலையுந் தருவான்.


எலக்ரானிக் சாதனங்கள் பழுதுபார்க்கும் இடங்களில் ஈயத்தை உருக்க மின்சாரத்தில் வைத்தால் சூடாகும் ஒரு கோல் இருக்கும்.
அதை நாங்க சூட்டு கோல் என்போம்

இதே போல பயன் உள்ள கோல்கள் பழங்காலத்தில் வேறு ஏதாவது இருந்திருக்குமா. முக்கியமா சிலை வடிக்கும் இடம் அல்லது உலைகளில்???



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth


வினோத்-VINOTH

unread,
Oct 20, 2010, 2:58:19 AM10/20/10
to mint...@googlegroups.com


2010/10/20 tirumalainumbakkam <tnke...@gmail.com>



அரியதரம் கொண்டு போற நாய்க்கு அங்கொரு செருப்படி இங்கொரு
விளக்குமாத்தடி.


அரியதரம் என்பது இலங்கையில் அரிசியால் செய்து பொரித்து எடுக்கப்படும்  ஒரு உணவுப்பொருள்

அதை களவாடும் நாய்க்கு வேறு என்ன கிடைக்கும்

Subashini Tremmel

unread,
Oct 21, 2010, 3:38:44 PM10/21/10
to mint...@googlegroups.com
திரு. ஆராதி அவர்களே,
 
பயனுள்ள நல்ல தொடர். தொகுத்து வைத்து நானும் வாசிக்கின்றேன்.
 
அன்புடன்
சுபா

2010/10/19 ஆராதி <aara...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages