அலங்கு என்பது என்ன?

384 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2014, 10:20:43 AM12/11/14
to mintamil

சங்க்ச் சொல்வளம் என்ற தலைப்பில் பாண்டியராஜா ஐயா அலங்குதல் என்ற சொல்லுக்குப் படங்களுடன் விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அவ் விளக்கம் எனக்குப் பொருத்தமாகத் தோன்றாததால் புதிய ஆய்வு முயற்சியினை மேற்கொண்டு புதிய கட்டுரை ஒன்றை வடித்துள்ளேன்.

அதன் சுட்டி இதோ கீழே:

http://thiruththam.blogspot.in/2014/12/blog-post.html

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
மனமோ வயிறோ கெட்டுப் போனால்
மகிழ்ச்சி தொலைந்து போகும் - அதனால்
நல்லதை மட்டுமே நினைப்போம் ! - உயிர்க்கு
நல்லதை மட்டுமே உண்போம் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Seshadri Sridharan

unread,
Dec 11, 2014, 9:01:38 PM12/11/14
to mintamil
அப்படியானால் ''அலங்காமல் குலுங்காமல் நடந்து போ'' என்ற மக்கள்வழக்கு எதைக் குறிக்கிறது. குலுங்குதலைத்தனே!!

சேசாத்திரி 

2014-12-11 20:50 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

சங்க்ச் சொல்வளம் என்ற தலைப்பில் பாண்டியராஜா ஐயா அலங்குதல் என்ற சொல்லுக்குப் படங்களுடன் விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அவ் விளக்கம் எனக்குப் பொருத்தமாகத் தோன்றாததால் புதிய ஆய்வு முயற்சியினை மேற்கொண்டு புதிய கட்டுரை ஒன்றை வடித்துள்ளேன்.

அதன் சுட்டி இதோ கீழே:

http://thiruththam.blogspot.in/2014/12/blog-post.html

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.m/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2014, 11:37:31 PM12/11/14
to mintamil
ஐயா

அலுங்காமல் குலுங்காமல் என்பதையே ஆடாமல் அசையாமல் என்றும் கூறுவார்கள்.

இவ்வாறு ஏன் நடக்க வேண்டும்?

சாதாரணமான சமயங்களில் இப்படி நடப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் முழுவதும் நீர் / பால் போன்ற திரவம் நிரம்பிய ஒரு பெரிய பாத்திரத்தினை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நடக்கும்போது மிகக் கவனமாக அதிராமல் நடக்க வேண்டும். அதற்காகத் தான் ' அலுங்காமல் குலுங்காமல் நடந்து போ' என்று கூறினார்கள்.

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Pandiyaraja

unread,
Dec 12, 2014, 1:37:47 AM12/12/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
மிக்க நன்றி திரு.சரவணன். தங்கள் கட்டுரையை ஆழ்ந்து படித்தேன். என்னுடைய மறுப்புக்கட்டுரையையும் தர முடியும். ஆனால் ஆய்வு என்பது பொது உரிமை. எத்தனையோ பெரும் மேதைகளின் கூற்றையே மறுத்து நான் பொருள் தந்துள்ளேன். அப்படியிருக்க இந்தச் சிறியேனின் கருத்து முடிவான கருத்து அல்ல என்பதுவும் தெரியும். மாற்றி யோசிப்பது நல்லது. முடிவுகளைப் படிப்போரிடம் விட்டுவிடலாம்.
மீண்டும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Dec 12, 2014, 1:49:43 AM12/12/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
நீங்கள் காட்டும் வழி அனைவரும் பின்பற்ற வேண்டிய வழி ஐயா, மாற்று ஆய்வுக் கோணத்திற்கு ஆதரவு அளித்து ஊக்குவிக்கும் நீங்கள் பண்பிற்கும்  இலக்கணம் வகுக்கிறீர்கள்.

உங்களிடம் தமிழ் இலகியதையும்விடவும்  கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது.  உங்களை ஆசிரியராகப் பெற்றவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள் ...நன்றி.

..... தேமொழி

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 12, 2014, 1:58:08 AM12/12/14
to mintamil
ஐயா

தயவுசெய்து உங்கள் மறுப்புக் கட்டுரை எதுவானாலும் ஆதாரங்களுடன் வெளியிடுங்கள்.

அதற்குத் தான் எல்லோரும் காத்திருக்கிறோம்.

மின் தமிழில் ஆரோக்கியமான விவாதம் களை கட்டட்டும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

Pandiyaraja

unread,
Dec 12, 2014, 3:34:04 AM12/12/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா!
இரண்டையும் படித்து ஒப்பிட்டவர்கள் தங்கள் கருத்தையும் சொல்லட்டுமே. கொஞ்சம் பொறுத்திருப்போம்.
நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 12, 2014, 9:14:46 AM12/12/14
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
On Friday, December 12, 2014 12:04:04 PM UTC+3:30, Pandiyaraja wrote:
மிக்க நன்றி ஐயா!
இரண்டையும் படித்து ஒப்பிட்டவர்கள் தங்கள் கருத்தையும் சொல்லட்டுமே. கொஞ்சம் பொறுத்திருப்போம்.
நன்றி,
ப.பாண்டியராஜா

அலங்கு என்ற சொல் பற்றி உங்கள் இழையில் கொஞ்சம் சொல்லியுள்ளேன்.
அலை- என்ற சொல்லின் விரிவு அலங்கு (தன்வினை) / அலக்கு (பிறவினை)
உலங்கு/உலக்கு < உலை-, 
வணங்கு/வணக்கு < வளை-, 
திரங்கு/திரக்கு < திரை-, 
அணங்கு/அணக்கு (=அணுங்கு/அணுக்கு) < அழு-/அணு-
அணு என்னும் பெயர்ச்சொல் வடமொழிக்கு த்ராவிடமொழி தந்தது.
அழுங்கல் = அணுங்கல். (கிறித்துவநூல்களில் ஒன்று, கித்தெரியம்மாள் அழுங்கல் அந்தாதி).
அணுங்கு (அ) அழுங்கு = Indian pangolin http://en.wikipedia.org/wiki/Indian_pangolin

இது கிடக்க.
....

அலங்காரம் : சொல்லாய்வு
> அலங்காரம் என்னும் சொல் உண்மையில் பூக்களால் ஆன மாலை
>அணியினையே ( அலங்கு + ஆரம் ) ஆதியில் குறித்துவந்தது. நாளடைவில் 
> வேறு அணிகளையும் குறிக்கப் பயன்படலாயிற்று. 

அலை- என்னும் வினையடியாகப் பிறக்கும் அலங்குதல் என்னும் சொல்லுக்கும்
அலங்காரம் என்னும் சொல்லுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

அலங்காரம் = alaMkAram, ala + kaaram. 
மலர்- > அலர்-, சொன்முதல் ம் கெட்டது. மலர் என்ற சொல்லில் இருந்து மாலை.
வடமொழியில் மாலா என்றானது. அதுபோல், அலர்- அல- என்று அலங்காரத்தில்
இருக்கிறது. காரம் kR- 'to do' என்னும் இந்தோ-ஈரானிய வேர். வேலைக்காரன்,
பால்காரன், உறவுக்காரன் என்னும் சொற்களில் உள்ள -காரன் தான் அலம்காரம் என்பதிலும்
இருக்கிறது. அலர்களைக் கொண்டு செய்யும் சுவடிப்பு/சோடிப்பு (> ஜோடித்தல்/ஜோடனை) 
தான் அலங்காரம்.

பரத முனிவரின் நாட்யசாஸ்திரத்தில் வரும் அபிநய முத்திரை ஒன்றும் உதாரணத்திற்குத்
தருகிறேன். அலபத்ம முத்திரையில் அலரின் இதழ்கள் போல் விரல்கள் விரித்துக் காட்டப்படும்.

அலபத்மா முத்ரை (அல- < அலர் என்னும் தமிழ்ச்சொல்லும்) 3 படங்கள் இணைப்பில்.

நா. கணேசன்

Pandiyaraja

unread,
Dec 15, 2014, 5:10:31 AM12/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

அன்புடை சரவணன் அவர்களுக்கு,

தங்கள் மடலிலிருந்து சில பகுதிகளைத் தெரிந்தெடுத்து அவற்றுக்கு என் மறுமொழியை அளித்திருக்கிறேன். தங்கள் கூற்று சிவப்பு எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளது.

 சினை என்பதற்கு மரக்கிளை என்ற பொருளில் அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்றும், கழை என்பதற்கு மூங்கில் என்ற பொருளில் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்றும் உரை இயற்றியுள்ளனர். இவை இங்கு பொருந்துமா எனில் பொருந்தாது. காரணம்,

சாதாரணமாக சிறுகாற்று வீசும்போது மரத்தில் உள்ள இலைகளும், பூக்களும் அசையுமேயன்றி கிளைகள் அசையாது.

சிறு காற்று என்று எப்படிக் கொண்டீர் எனத் தெரியவில்லை. அடிக்கிற காற்று பெருங்காற்றாக இருக்கவேண்டாம். சாதாரணக் காற்றில்கூட மரத்தில் சினைகள் அசைவதைப் பார்த்ததில்லையா?

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

படமே தந்திருந்தேன் – இலவமரத்தில் சினைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என. காற்றில் அவை ஆடமாட்டா என்று எப்படிக் கொண்டீர் ஐயா?

அதைப்போல சிறுகாற்றில் மூங்கில் இலைகள் அசையுமே ஒழிய மரம் அசையாது.

மீண்டும் சிறுகாற்று எனக் கொண்டிருக்கிறீர். சாதாரணக் காற்றில் மூங்கில் மரங்கள் ஆடுவதை என் கல்லூரி வளாகத்திலேயே பார்த்திருக்கிறேன்.

மேலும் இவற்றின் அசைவினைப் பற்றி இப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

சங்கப் புலவர்கள் எதையும் தேவை இல்லாமல் குறிப்பிடமாட்டார்கள். அவர்கள் காட்சியை உயிரோட்டமாகக் காட்டுவதற்காகவே அவற்றை அசைவற்ற புகைப்படமாகக் காட்டாமல் அசைவுள்ள விழியமாகக் காட்டுகிறார்கள்.

ஓவியத்தில் அசைவைக் காட்டமுடியாது. ஆனால், குறும்படத்தில் காட்டமுடியும் அல்லவா? ஒரு மரம் எப்போதும் கற்சிலை போல் அசைவற்று இருக்காது. வெயில் காலங்களில் சில நேரங்களில் புழுக்கம் அதிகமாயிருக்கும்போது, நாமே கூறுவோம்,”பாருங்கள், ஒரு இலை கூட அசையவில்லை” என்று. அந்நிலை வேறு சாதாரணமாக மரங்கள் ஆடிக்கொண்டும் அசைந்துகொண்டும்தான் இருக்கும். அதனை அப்படியே புலவர் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார்.

எனவே அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்று பொருள் கொள்வதும் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. இச் சொல்லின் மூலம் சினை மற்றும் கழையுடன் தொடர்புடைய வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முனைந்துள்ளனர் என்பது தான் உண்மை. அதைப் பற்றிக் கீழே காணலாம். 

சரி, அலங்குகழை வேண்டாம். இவற்றைப் பாருங்கள்:

துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் - நற் 28/7
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் - ஐங் 220/2
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் - கலி 41/3
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் - அகம் 27/2
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் - அகம் 72/11

எனவே மூங்கில் மரங்கள் காற்றில் ஆடும், அசையும், அலங்கும், துயல்வரும்.

அலங்கு சினையும் அலங்கு கழையும்:

அலங்கு சினை மற்றும் அலங்கு கழையில் வருகின்ற அலங்குதல் என்னும் வினை குறிக்கும் பொருள் பூத்தல் என்பதாகும். அதாவது,

அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்றும்
அலங்கு கழை என்பது பூத்த மூங்கில் என்றும் பொருள்படும்.

பூ என்பது எப்படி பூக்கும் செயலையும் (வினைச்சொல்) பூவையும் (பெயர்ச்சொல்) குறிக்கிறதோ அதைப்போல
அலங்கு என்பதும் பூக்கும் வினை மற்றும் பூப்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுகிறது.

பொதுவாக மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்திருப்பதில்லை. மரங்களின் பூக்கும் பருவம் பல காரணங்களால் வேறுபடுகின்றது. மரங்கள் பூத்திருக்கும் சமயம் அது பார்ப்போரின் கண்களை ஈர்த்து சிந்தையைக் கவர்கிறது. இதனால் தான் மரங்கள் பூத்திருக்கும் நிலையினை பல பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர். மேலும் மரங்கள் பூக்கும் பருவம் சங்க காலத்தில் மிக இன்றியமையாத நிகழ்வாகக் கருதப்பட்டது. தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் இன்னின்ன மரங்கள் பூக்கும் காலத்திற்கு முன் திரும்பிவிடுவதாகக் கூறிச் செல்வதைப் பல சங்கப் பாடல்களில் காணலாம். மரங்கள் பூக்கும் நிகழ்வினைக்  குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட பல சொற்களுள் ஒன்று தான் அலங்கு என்பதாகும். இதற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

ஆதாரங்கள்:

அலங்கு என்பது பூத்தலைக் குறிக்கும் என்பதைக் கீழ்க்காணும் பாடல்கள் நேரடியாகவே உணர்த்துகின்றன.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4

பூ உடை அலங்கு சினை என்று கூறுவதில் இருந்து, அலங்கு சினை என்பது பூக்களை உடைய மரக்கிளையே என்பது தெளிவாகிறது. மேலும்,,

அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்கிறீர்கள். எனில், பூ உடை அலங்கு சினை என்பது பூவை உடைய பூத்த சினை என்று ஆகாதோ? பூத்த சினையில் பூக்கள் இருக்கும். பூ உடைய சினை பூத்துத்தான் இருக்கும். எனவே பூ உடை பூத்த சினை என்பது கூறியது கூறல் ஆகாதோ?

அலங்கு சினை என்பது ஆடும் சினை எனக் கொண்டால்,

பூ உடை அலங்கு சினை என்பதிலிருந்து, ‘பூ இல்லாது அலங்குகின்ற சினை இருக்கலாம்’, ‘பூ இருந்தும் அலங்காத சினை இருக்கலாம்’ என்று கொள்ளலாம். எனவே பூவை உடையதாய் ஆடிக்கொண்டிருக்கும் சினையே பூ உடை அலங்கு சினை.

அலங்கு சினை என்பது பூத்த சினை எனக் கொண்டால், பூ உடை அலங்கு சினை என்பதிலிருந்து, ‘பூ இல்லாது பூத்த சினை’ என்றோ, பூ இருந்தும் பூக்காத சினை என்றோ கொள்ளமுடியுமா? எனவே பூ உடையதாய்ப் பூத்த சினை என்று கொள்வதே முரண் அன்றோ?

இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17

என்ற பாடல்களில் மரங்கள் பூத்திருக்கும் நிலை நேரடியாகக் கூறப்பட்டுள்ளதுடன், அலங்கு எனும் சொல்லுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளதில் இருந்து அலங்கு என்னும் சொல் பூத்தலையே குறிப்பது தெளிவு.

இவற்றிலும் அதே கூறியது கூறல் தொடர்கிறது. ஒரு சினையில் ஒரு புதுப் பூ இருக்கிறது என்று சொன்னாலேயே அந்த சினை பூத்திருக்கிறது என்றுதானே பொருள்! அப்படியிருக்க அலங்கு சினை புதுப்பூ என்பது ஏன்?

இவைதவிர இன்னொரு ஆதாரத்தையும் கீழே காணலாம்.

அலங்கல் என்னும் சொல்லுக்குப் பொருள் பூமாலை என்று அகராதிகள் கூறுகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 
அலங்கல் alakal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

வின்சுலோ அகராதி:
அலங்கல், (p. 40) [ alngkl, ] s. A sprout, தளிர். 2. A garland, a wreath, பூமாலை.

இந்த அலங்கல் என்னும் சொல்லானது அலங்கு என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அலங்கல் என்பது அலங்கினால் அதாவது பூக்களால் ஆன மாலையைக் குறிப்பதில் இருந்து அலங்கு என்பது பூ / பூத்தலைக் குறிப்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

ஒரு நற்றிணைப் பாடலைப் பாருங்கள்:

பரல் தலைபோகிய சிரல் தலைக் கள்ளி

மீமிசைக் கலித்த வீநறு முல்லை

ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்

வன்கை இடையன் எல்லிப் பரீஇ

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை

மறுகுடன் கமழும் மாலை – நற் 169/6-9

பரல் மிக்க பாலைநிலத்தில் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவை போன்ற தலையை உடைய கள்ளியின் மேலே படர்ந்து தழைத்த முல்லையின் நறுமலரை ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையை உடைய இடையன் இரவிலே கொய்து வெளிய பன்ங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற மாலையின் நறிய மனம் தெருவில் ஒருங்கு கமழா நிற்கும் இந்த மாலை அம் பொழுதினிலே” என்பார் பின்னத்தூரார்.

துரு என்பது செம்மறியாடு. அது கூட்டம் கூட்டமாகத் திரியும். வெள்ளாடு போல தனித்து மேயாது. அவற்றை வழிநடத்திச் செல்லும்போது தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே செல்லும். என்னே இத ஆடு தலை துரு என்கிறார் புலவர் , அலங்கு சினைப் பலவு என்பது போல. The motion indicates that this is a lively picture. தொடலை என்பது பூ, இலை, தழை ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை. இதைக் கழுத்தில் போட்டவாறு இடையன் மேய்க்கும்போது அம் மாலை கழுத்தில் ஆடிக்கொண்டே இருக்கும் அல்லவா! எனவேதான் இதனை அலங்கல் அம் தொடலை என்கிறார். Here too, the motion indicates that this is a lively picture. அலங்கல் என்பது தனித்து மாலை என்ற பொருளையும் தரும். ஆனால் அவ்விடங்களிலும் அது ஆடுகின்ற மாலையைத்தான் குறிக்கும்.

பொதுவாகப் புலியின் மேனியை வேங்கை மலருக்கு ஒப்பிடுவார்கள். புலி குட்டி போட்டிருக்கிறது. அதன் குட்டிகள் சும்மாவா இருக்கும். அங்குமிங்கும் துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றன. அது எப்படியிருக்கிறதாம்: வேங்கைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அங்குமிங்கும் அசைவதுபோல் இருக்கிறதாம்.

கருங்கால் வேங்கை

அலங்கம் அம் தொடலை அன்ன குருளை – நற்றிணை 383/1,2

இங்கும் அலங்கல் அம் தொடலை வருவதைக் காணுங்கள்.

வெறும் தார் மார்பன், கோதை மார்பன், மாலை மார்பன் என்னாமல் அலங்கல் மார்பன் என்னும்போது அங்கே action is also indicated.

எனவே, மதிப்பிற்குரிய சரவணன் அவர்களே, கருத்துகள் எப்போதும் மாறுபடலாம். அவரவர் போக்கு அவருக்கு. அவரவர் நோக்கு அவருக்கு. நம் கருத்தை முன்வைத்துவிட்டோம். தமிழுலகம் சிந்திக்கட்டும். எனவே நாமே மீண்டும் மீண்டும் வாதிட்டுக்கொள்வதில் பொருள் இல்லை.

ஒன்று செய்யலாம். நல் நிலையிலுள்ள தமிழறிஞர்கள் தம் ஆய்வாளர்களிடம் இதை விட்டுவிடலாம். ஒரு பல்கலைக்கழகத்துப் பதிவாளராயிருக்கும் காளையான தமிழறிஞர், கல்லுரி முதல்வராகச் சந்திர முகத்துடன் மோகனப் புன்னகை புரிபவர் ஆகியோர் இதனைத் தம் தமிழ்த்துறை மாணவருக்குத் தலைப்பாகக் கொடுத்து வாதிடச் செய்யலாம்.

எனவே தயவுசெய்து இதற்குப் பதில் இங்கு எழுதவேண்டாம். எழுதினாலும் அதற்குப் பதில் நான் எழுதப் போவதில்லை.

ஆய்வாளர்கள் முடிவுசெய்யட்டும்.

மிக்க நன்றி,

அன்புடன்,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 15, 2014, 5:30:32 AM12/15/14
to mintamil, vallamai, housto...@googlegroups.com
வணக்கம் ஐயா.
பல எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ஐயா.
இதற்குமேல் இதில் ஏதும் ஐயம் தோன்ற வாய்ப்பில்லை.

2014-12-15 15:40 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

ஒன்று செய்யலாம். நல் நிலையிலுள்ள தமிழறிஞர்கள் தம் ஆய்வாளர்களிடம் இதை விட்டுவிடலாம். ஒரு பல்கலைக்கழகத்துப் பதிவாளராயிருக்கும் காளையான தமிழறிஞர், கல்லுரி முதல்வராகச் சந்திர முகத்துடன் மோகனப் புன்னகை புரிபவர் ஆகியோர் இதனைத் தம் தமிழ்த்துறை மாணவருக்குத் தலைப்பாகக் கொடுத்து வாதிடச் செய்யலாம்.

ஐயா அவர்களின் வேண்டுகோளை ஏற்று இப்பொருளை வரும் வியாழவட்டத்தின் விவாதப் பொருளாக வைத்து மாணவர்களை ஆய்ந்தறியச் செய்திட முயற்சிக்கிறேன்.
மற்றபடி,
மாணவர்கள் அவர்களுக்கான பாடத்திட்டங்களைப் (குறிப்பாகத் தொல்காப்பியம், சொல்லதிகாரம்) படித்துத் தேர்ச்சி பெற்றாலாலே போதும் என்கின்றனர்.  காமராசர் பாணியில் சொல்வதென்றால், “பார்ப்போம்“.

அன்பன்
கி.காளைராசன்

Pandiyaraja

unread,
Dec 15, 2014, 8:42:35 AM12/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, kalair...@gmail.com
மிக்க நன்றி, காளை அவர்களே.
மேற்கண்ட விளக்கத்தில் நிறைய பிழைகள் உள்ளன என்பதைக் கண்டேன். மதியத் தூக்கக் கலக்கம். சீக்கிரம் தூங்கச் செல்லவேண்டும் என்ற அவசரம் வேறு. தயைசெய்து அனைவரும் மன்னியுங்கள்.
நன்றி,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 15, 2014, 9:13:40 AM12/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Monday, December 15, 2014 2:10:31 AM UTC-8, Pandiyaraja wrote:

ஒரு நற்றிணைப் பாடலைப் பாருங்கள்:

பரல் தலைபோகிய சிரல் தலைக் கள்ளி

மீமிசைக் கலித்த வீநறு முல்லை

ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்

வன்கை இடையன் எல்லிப் பரீஇ

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை

மறுகுடன் கமழும் மாலை – நற் 169/6-9

பரல் மிக்க பாலைநிலத்தில் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவை போன்ற தலையை உடைய கள்ளியின் மேலே படர்ந்து தழைத்த முல்லையின் நறுமலரை ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையை உடைய இடையன் இரவிலே கொய்து வெளிய பன்ங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற மாலையின் நறிய மனம் தெருவில் ஒருங்கு கமழா நிற்கும் இந்த மாலை அம் பொழுதினிலே” என்பார் பின்னத்தூரார்.

துரு என்பது செம்மறியாடு. அது கூட்டம் கூட்டமாகத் திரியும். வெள்ளாடு போல தனித்து மேயாது. அவற்றை வழிநடத்திச் செல்லும்போது தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே செல்லும். என்னே இத ஆடு தலை துரு என்கிறார் புலவர் , அலங்கு சினைப் பலவு என்பது போல. The motion indicates that this is a lively picture. தொடலை என்பது பூ, இலை, தழை ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை. இதைக் கழுத்தில் போட்டவாறு இடையன் மேய்க்கும்போது அம் மாலை கழுத்தில் ஆடிக்கொண்டே இருக்கும் அல்லவா! எனவேதான் இதனை அலங்கல் அம் தொடலை என்கிறார். Here too, the motion indicates that this is a lively picture. அலங்கல் என்பது தனித்து மாலை என்ற பொருளையும் தரும். ஆனால் அவ்விடங்களிலும் அது ஆடுகின்ற மாலையைத்தான் குறிக்கும்.

பொதுவாகப் புலியின் மேனியை வேங்கை மலருக்கு ஒப்பிடுவார்கள். புலி குட்டி போட்டிருக்கிறது. அதன் குட்டிகள் சும்மாவா இருக்கும். அங்குமிங்கும் துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றன. அது எப்படியிருக்கிறதாம்: வேங்கைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அங்குமிங்கும் அசைவதுபோல் இருக்கிறதாம்.

கருங்கால் வேங்கை

அலங்கல் அம் தொடலை அன்ன குருளை – நற்றிணை 383/1,2

இங்கும் அலங்கல் அம் தொடலை வருவதைக் காணுங்கள்.

வெறும் தார் மார்பன், கோதை மார்பன், மாலை மார்பன் என்னாமல் அலங்கல் மார்பன் என்னும்போது அங்கே action is also indicated.

அலங்கல் என்பது அசையும் மாலைக்கு ஆகிவருதலால் தொழிலாகுபெயர்.

அலங்கல் மாலை, அலங்கல் கோதை, அலங்கல் தொடலை, அலங்கல் கண்ணி, ... என்று வருவது அலைத்தலால்தான்.
அலைக்கும் தொழிலால் அலங்கல் என்பதே மாலைக்கு ஒரு தொழிலாகுபெயர் ஆகிவிட்டது.

“அலங்கல் மாலை” = அசையும் மாலை
சீவக சிந்தாமணி:
பிறங்கு இணர் அலங்கல் மாலை - விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை

கம்பன்:
நறைகமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்- தேன்
மணம் மிகுந்து அசைகின்ற  மலர்  மாலை சூடிச் செறிந்து மணம் வீசும்
குடுமியினையுடைய   ஆடவர்கள்

மாருதி அலங்கல் மாலை  மணி அணி  வயிரத்தோள்   மேல்
வீரனும்
  -  அனுமனுடைய  அசைந்தொளிரும்  இயல்பினவாகிய  மலர்
மாலையும்  மணிகளும்  அணிந்த திண்ணிய தோளின் மேல்  வீரனாகிய
இராமனும்; 

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 15, 2014, 11:21:10 PM12/15/14
to mintamil
2014-12-15 15:40 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் - நற் 28/7
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் - அகம் 27/2

பாடல்களில் கூறியது கூறலும் உண்டு என்பதற்கு நீங்கள் காட்டிய மேற்காணும் இரண்டு பாடல்களே சாட்சி.

கழை = மூங்கில் = வெதிர்.

ஆடுகழை வேறு அலங்குகழை வேறு.

N. Ganesan

unread,
Dec 16, 2014, 8:55:57 AM12/16/14
to mint...@googlegroups.com

On Monday, December 15, 2014 8:21:10 PM UTC-8, வேந்தன் சரவணன் wrote:

2014-12-15 15:40 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் - நற் 28/7
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் - அகம் 27/2

பாடல்களில் கூறியது கூறலும் உண்டு என்பதற்கு நீங்கள் காட்டிய மேற்காணும் இரண்டு பாடல்களே சாட்சி.

கழை = மூங்கில் = வெதிர்.

ஆடுகழை வேறு அலங்குகழை வேறு.

ஆம். இதைத்தான் பேரா. பாண்டியராஜா குறிப்பிட்டார்:
எனவே மூங்கில் மரங்கள் காற்றில் ஆடும், அசையும், அலங்கும், துயல்வரும். ”

N. Ganesan

unread,
Dec 16, 2014, 8:00:17 PM12/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஜெயபாரதனின் குற்றாலம் X நயாகரா கவிதை வாசித்த்தும், அரிசோனனுக்காக குற்றாலவளம்
இணையத்தில் உள்ளதா? - என தேடினேன். நல்லவேளை, கிடைத்தது:

அப்போது இன்னொன்றும் தேடினேன்:
அலங்கல் = அலங்குதல் என்னும் தொழிலால் பிறக்கும் பெயர்ச்சொல். அசையும் மாலை எனப் பொருள்.
இதனால், அலங்கல் = தொழிலாகுபெயர் என்றேன். இப்படி யாராவது சொல்லியிருக்கின்றனரா? - எனத்
துழாவியபொழுது முதலில் சொன்ன பண்டிதர் வை. மு. கோ. என்றறிந்து மகிழ்ந்தேன்.

அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும். 
அலங்கல் - தொங்கியசைதல்; மாலைக்குத் தொழிலாகுபெயர். 

அழகரந்தாதி, அரங்கத்தந்தாதி - இரண்டிலும் விளக்கியுள்ளார் புலவர்.

நா. கணேசன்

On Monday, December 15, 2014 2:10:31 AM UTC-8, Pandiyaraja wrote:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 16, 2014, 11:15:12 PM12/16/14
to mintamil

2014-12-17 6:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும். 

தொங்கி அசைவது மாலை மட்டும் தானா?

இலைகள், ஆடைகள், பூக்கள், மெல்லிய கிளைகள், சிறுகனிகள் இன்னும் பல.

இவைகள் தொங்கி அசைவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?

இவைகட்கு ஏன் அலங்கல் என்று பெயரில்லை?

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 16, 2014, 11:25:54 PM12/16/14
to mintamil
திரு. பாண்டியராஜா ஆடுகழையும் அலங்கு கழையும் ஒன்று என்று கூறினார்.

நான் தான் இவ் இரண்டும் வேறு என்றேன்.

அலங்கு கழை என்பது குட்டை ரகம். இவை 10-15 அடி உயரம் வரை வளரும். இவை பூப்பதை நம்மால் காண முடியும் .

ஆடுகழை என்பது உயரமான ரகம். மலைஜாதி வகை. இவை 40-70 அடி உயரம் வரை வளரும். இவை பூப்பதைக் காண்பது அரிதான செயலாகும். ஏனென்றால் உயரம் ஒரு காரணம். இவற்றின் மேல் பகுதியில் காற்று வீசும்போது இம் மரங்களின் மேல்மட்டச் சிறுகிளைகள் பேயாட்டம் ஆடும். இதை  வெளியில் இருந்து பார்க்கும்போது காணமுடியும். இதைத்தான் ஆடுகழை, துயல் கழை என்று புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்புடன்,

தி.பொ.ச.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Dec 17, 2014, 8:56:26 AM12/17/14
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, December 16, 2014 8:15:12 PM UTC-8, வேந்தன் சரவணன் wrote:

2014-12-17 6:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும். 

தொங்கி அசைவது மாலை மட்டும் தானா?

இலைகள், ஆடைகள், பூக்கள், மெல்லிய கிளைகள், சிறுகனிகள் இன்னும் பல.

இவைகள் தொங்கி அசைவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?

இவைகட்கு ஏன் அலங்கல் என்று பெயரில்லை?

அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆனால் மனிதர்களின் தோளில் தொங்கும் அலங்கல் என்று வரும்போது மாலை எனப் பொருள்.

ஒருத்தல் என்றால் solitaire. விலங்குகளில் காட்டுமாடு (ஆமா என சங்க இலக்கியம்), யானை, பன்றி, ...
இடத்திற்கு தகுந்தாற்போல் ஒருத்தல் எந்த விலங்கு எனக் காட்டும். வைரத்தில் ஒருத்தல் என்றால்
தனிச் சிறப்புடையது என்று பொருள். அங்கே விலங்கு ஆகாது.

கருக்கல் என்றால் சமையலில் தீயில் கருக்குவது.
ஆனால், வானத்தில் கருக்கல் என்றால் மேகம்.
அதுபோல, தோளில் அலங்கல் என்றால் அலையும்/அசையும் மாலை.

அலை- என்ற சொல்லின் விரிவு அலங்கு (தன்வினை) / அலக்கு (பிறவினை)
உலங்கு/உலக்கு < உலை-, 
வணங்கு/வணக்கு < வளை-, 
திரங்கு/திரக்கு < திரை-, 
அணங்கு/அணக்கு (=அணுங்கு/அணுக்கு) < அழு-/அணு-
அணு என்னும் பெயர்ச்சொல் வடமொழிக்கு த்ராவிடமொழி தந்தது.
அழுங்கல் = அணுங்கல். (கிறித்துவநூல்களில் ஒன்று, கித்தெரியம்மாள் அழுங்கல் அந்தாதி).
அணுங்கு (அ) அழுங்கு = Indian pangolin http://en.wikipedia.org/wiki/Indian_pangolin
அணங்கு/அணுங்கு - வருத்துவது. தமிழர் சமயம் பற்றிச் சங்க இலக்கியத்தில் உள்ள மிக முக்கியமான சொல்.

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 17, 2014, 9:17:16 AM12/17/14
to mintamil

2014-12-17 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றன

ஆதாரங்கள்?

N. Ganesan

unread,
Dec 17, 2014, 9:20:37 AM12/17/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

On Wednesday, December 17, 2014 5:56:27 AM UTC-8, N. Ganesan wrote:

On Tuesday, December 16, 2014 8:15:12 PM UTC-8, வேந்தன் சரவணன் wrote:

2014-12-17 6:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும். 

தொங்கி அசைவது மாலை மட்டும் தானா?

இலைகள், ஆடைகள், பூக்கள், மெல்லிய கிளைகள், சிறுகனிகள் இன்னும் பல.

இவைகள் தொங்கி அசைவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?

நானும் பார்த்திருக்கிறேன். தமிழின் எல்லாக் காலத்திலும் புலவர்களும்
பார்த்திருக்கிறார்கள். பாடியும் இருக்கிறார்கள். “அலங்கல்” = அலைத்தல்/அசைதல்.

அலங்கல் = அலைத்தல்/அசைதல். நீங்கள் சொல்லும் எல்லாப் பொருள்களும் அசைதலை அலங்கல் [ஒரு பொருள்}
என்று பாடுவது புலமைமரபு. ஓர் உதாஹரணம் காட்டுகிறேன்:

அகநானூறு 262-ஆம் பாடல் பார்ப்போம்

அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு          25

23-7. பரு அரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்என - பருத்த அரையிற் கிளைத்த அசையும் அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவற்றொழிய, புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு - தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்தடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல, 

N. Ganesan

unread,
Dec 17, 2014, 9:22:23 AM12/17/14
to mint...@googlegroups.com

On Wednesday, December 17, 2014 6:17:16 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:

2014-12-17 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றன

ஆதாரங்கள்?

N. Ganesan

unread,
Dec 17, 2014, 9:31:55 AM12/17/14
to mint...@googlegroups.com

On Wednesday, December 17, 2014 6:17:16 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:

2014-12-17 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றன

ஆதாரங்கள்?

குறுந்தொகை 79

பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்க லுலவை யேறி 
பொரிதாள் ஓமை - பொரிந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை - காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில், ஏறி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 17, 2014, 9:48:09 AM12/17/14
to mintamil
அலங்கல் உலவை = பூக்களை உடைய மரக்கொம்பு.

நான் கேட்டது அலங்கல் இலை, அலங்கல் கனி, அலங்கல் ஆடை போன்று எங்கெங்கே வந்துள்ளது?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Dec 17, 2014, 9:51:12 AM12/17/14
to mint...@googlegroups.com

On Wednesday, December 17, 2014 6:48:09 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:
அலங்கல் உலவை = பூக்களை உடைய மரக்கொம்பு.

இல்லை. நான் இந்த உதாரணம் கொடுத்த்தற்குக் காரணம் உண்டு,
பூ இல்லாத உலவை என்று காட்டத்தான்  கொடுத்தேன்.

உலவை என்றால் காய்ந்துபோன கொம்பு.
உலர்ந்து காய்ந்து வற்றியகொம்பில் பூ எங்கே இருக்கும்?

N. Ganesan

unread,
Dec 17, 2014, 9:55:56 AM12/17/14
to mint...@googlegroups.com
> நான் கேட்டது அலங்கல் இலை, அலங்கல் கனி, அலங்கல் ஆடை போன்று எங்கெங்கே வந்துள்ளது?

”சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை”
(ப-ரை.) தோழி---, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை
Reply all
Reply to author
Forward
0 new messages