”[9] ரதி மன்மதனின் மரச்சிற்பம்:
இது செவ்வக மரப்பலகையில் செதுக்கப்பட்டுள்ள ரதி மன்மதனின் புடைப்புச் சிற்பம். இரு சதுர தளங்களில் இடது பக்கம் காதலின் கடவுளான மன்மதனும், வலது பக்கத்தில் சிற்றின்ப தெய்வமான ரதியும் முறையே தங்களது கிளி மற்றும் அன்ன வாகனகங்களில் காட்சி அளிக்கிறார்கள். சிற்பத்தின் விளிம்புகள் கோர்த்த மணிச்சரம் பாதிக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கப் பட்டிருக்கிறது. மேற்பகுதியில் “சங்கரமூர்த்தி ஆசாரி” என்ற பெயர் பொறிக்கப் பட்டுக்ள்ளது. இதுபோலப் படைப்புகளில் தங்கள் பெயரைப் பொறிக்கும் வழக்கம் தமிழத்தில் மிகவும் அரிது, தென்னிந்திய வழக்கத்தில் இல்லாத ஒன்று.
(குறிப்பு: இது ஸ்ரீலங்கா பகுதியில் இருந்து பெறப்பட்ட தமிழர் படைப்பு என்பது இக்கட்டுரையில் முன்னரே குறிபிடப்பட்டுள்ளது)
தலைப்பு: ரதி மன்மதனின் மரச்சிற்பம் (Panel with Kama and Rati)”
காதல் கடவுள் காமதேவன் வாகனம் கிளி என்பது மிகப் பிற்காலம். மன்மதனின் வாகனம் மகரம். இது விடங்கர்/இடங்கர் (Gharial) என்னும் முதலை இனம். மகரத்தின் வாய் சிற்பத்தில் கூர்ந்து நோக்கவும். 4200 ஆண்டுகளாய் இன்னமும் விடங்கர்/இடங்கர் (Gharial) வாய் காட்டிக்கொண்டுள்ளது. இதனால் விடங்கர்/இடங்கர் லிங்க விடிவாக சிந்து சமவெளி மக்கள் தொழுதுவந்தனர். வேதம் சிசுனதேவ வழிபாட்டினர் என்று இலிங்க வழிபாட்டைச் சொல்வது இந்த விடங்கர்/இடங்கர் வழிபாட்டைத் தான். பல ஆய்வுக் கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அவ் வெளியீடுகளில் காணலாம்.
இவ்விழையில் இந்தியாவில் விடங்க/இடங்கர் எண்ணிக்கை அருகிப் போக, சங்க கால இலக்கியங்களில் ஒரு ஸப்ஸ்டிட்யூட் ஆக (substitute of Gharial's long-snout) சுறவக்கோட்டினை வருணனுக்கு சின்னமாகக் கொள்வதும் காண்போம். வருணன் தொல்காப்பியத்தில் நெய்தல் திணைத் தெய்வம். பின்னாளில் சிவபெருமானோடு ஒன்றிவிடுகிறான்.
நா. கணேசன்
மகர இடங்கர் (< விடங்கர்) வாகனத்தில் மன்மதன்: (2300 ஆண்டுக்கு முந்தைய ஆதிகால மகரங்களின் முகம் இருக்கிறதை நோக்கவும்).
படம் நன்றி: தேமொழி அவர்கள், மின்தமிழ் இழை:
https://groups.google.com/d/msg/mintamil/LIA8nBeAw_Q/ZZQ_jCO7ZhIJ
It is time that scholars become aware about faulty etymologies and faulty identifications proposed by NG.I intend to take up later in Tamil a article on ”முதலை, மகரம், கராம், இடங்கர் and விடங்கர்”.
இவ்விழையில் இந்தியாவின் மூன்று முதலை இனங்கள் பற்றியும், அவற்றிற்கான தமிழ்ப் பெயர்கள் - சங்க இலக்கியம்முதலை, இடங்கர், கராம் என புறநானூறு 37, மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு என மூவகைச் சாதிகள் என்றுநச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார் - திராவிட மொழிப் பெயர்கள், அவற்றின் சிந்துநாகரீகம் தொட்டு சங்ககாலம் வரைவழிபடப்பட்ட வரலாறு போன்றவை ஆய்விதழ்களில் கட்டுரைகளும், செம்மொழி மாநாடு (கோவை), 16-ஆம்உலக சம்ஸ்கிருத மாநாடு (ஜூன் 2015) தாய்லாந்திலும் விரிவாகவும் ஆராய்ந்து வெளியிட உள்ளேன்.முதலைகள் வழிபாடு முண்டா மொழிகள் இனத்தவரிடமோ, மத்ய ஆசிய மக்களிடமோ இல்லாததமிழ்/த்ராவிட ஜனங்களுக்கே உரித்தான சிந்துசமவெளிக் காலம் முதல் சங்க காலம் முடிய இருந்த வழிபாடுஆகும்.மகரம் என்றால் முதலை என சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னமே விளக்கிய அறிஞர்களுக்கு எம் நன்றி.ஆனந்த குமாரசாமி, ... முதலில் காம தேவனுக்கு வாகனம் ஆகிய விடங்கர் (> இடங்கர்) அழகானசிற்பம் காண்போம். கிழக்கு இந்தியாவில் நகர் என்று அழைக்கப்படும் விடங்கர் எவ்வாறு வருணன்,காமனுக்கு வாகனம் ஆகியது எனவும் பார்ப்போம்.
”நெய்தல் | |
28. | கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய் முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா வண்டல் வார்கரை மாமக ரக்குழாம் கண்டு நின்று கனலுங் கழியெலாம். |
(இ - ள்.) கழிஎலாம்-நீர்க்கழிகளில் எல்லாம்; கெண்டை அம்சினை மேய்ந்து-கெண்டைமீன்களையும் அவற்றின் அழகிய முட்டைகளையுந் தின்று; கிளர்ந்துபோய்-செருக்கிச் சென்று; முண்டகம் துறை சேர்ந்த முதலைமா-நீர்முள்ளி நிறைந்த நீர்த்துறையை அடைந்த முதலைகள்; வண்டல் வார்கரை-வண்டலையுடைய நீண்ட கடற்கரையோரங்களிலுள்ள; மாமகரம் குழாம் கண்டு-பெரிய சுறாமீன்களின் கூட்டத்தைப்பார்த்து; நின்று கனலும்-அஞ்சாது எதிர்த்து நின்று சினக்கும். (எ - று.) ”கெண்டை அம்சினை - கெண்டை மீன்களின் அழகிய முட்டைகளை. மேய்ந்து - தின்று. கிளர்ந்துபோய் - களித்துச்சென்று. முண்டகத்துறை - தாழை மலர்ந்துள்ள நீர்த்துறை. முண்டகம் - தாழை. கழிமுள்ளி கடல்முள்ளி என்றலும் ஆம். “மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானல்” (மதுரைக். 96): “வண்டுபட மலர்ந்த தண்ணறுங்கானல். முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் (புறம். 24). முதலையை விலங்கென்றல்: மா- விலங்கு: “சேர வொன்றையொன்று முன்தொடர்ந்து சீறிடங்கர்மா” “இடங்கர்மாப் பொருத போரில்” (கம்ப. 6.4: 113). ‘நெய்தற்கு மா சுறாவும் முதலையும்” (இறைய.) அடியார்க்குநல்லார் விலங்கு என்பதை மறுப்பார்: ‘முதலையும் சுறாவும் மாவென்பார். “கெண்டை யஞ்சினை ... முதலைமா ... கனலும் கழியெலாம்” எனக் காட்டுவார் உளராயினும், ‘அவை மீனெனப்படுவ வல்லது மாவெனப் படா” (சிலப். பதிகம்.)” [...] | |
On Saturday, May 2, 2015 at 10:53:41 AM UTC-7, N. Ganesan wrote:16th World Sanskrit Conference, Bangkok, Thailand, June 2015:Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu
Abstract: This article is about some aspects of Indian religion in the Post-Harappan period providing a link to the Indus Valley Civilization seen in its Bronze Age seals. The meaning of the anthropomorphic axes found in the Indo-Gangetic doab plains of the Second Millennium BC as a ritual symbol of a Makara (crocodile) godwill be presented. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is recently coming to light (A. Parpola, 2011). When this Crocodile cult disappears and gets forgotten in North India, it appears as large monolithic sculptures in the megalithic South. An interpretation of the Tamil Brahmi inscription at Tirupparaṅkuṉṟam, near the ancient Pandyan capital Madurai, discovered by History department, Pondicherry University will be offered as mentioning the crocodile god and his spouse. The Aśvamēdhā sacrifice on the banks of a Water Tank done for a crocodile as evidenced in Pāndyan Peruvaḻuti and Chera coins. Graffiti symbols from Sāṇūr and Sūlūr cāṇūr as linguistic sign for the crocodile deity, and the crocodile couple as seen in Adichanallur burial urn (500 BCE) along with the battle-axe bearing great god in Sangam poetry will be used to illustrate the prevalence of the crocodile based religion until the Early Sangam period. The first stone sculpture made in south India at such places as Mottur, Udaiyanatham, - monumental in size, over ten feet tall -, in the Iron Age will be linked to the earlier metallic Anthropomorphic Axes in the Yamuna-Gangetic doab, found in many Post-Harappan Ochre Colored Pottery sites of North India. The lecture will include etymology of Dravidian names such as ViTaGkar, Nakar, Ghaṛiāl, Makara, Karā for the three species of Indian crocodiles. Finally, an interpretation of Gudimallam VitaGkar (Lingam) as VaruNa, instead of earliest Siva Linga, is offered. In the subsequent periods like Pallava, development of Tantric Saivism includes the tantric term ViTaGkar applied more broadly for the forms of Siva like in the naked Bhiksatana episode, and Somaskanda.
வாழ்த்துகள் ...உங்களுக்காக இரு படங்கள் இங்கே
You can read the crocodile and manmatha in 19th ceylon woodwork here,On Saturday, May 2, 2015 at 3:15:49 PM UTC-7, தேமொழி wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.