குடதிசை மருங்கில்: சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்

208 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 19, 2014, 6:52:10 PM5/19/14
to mint...@googlegroups.com
ref: http://www.vallamai.com/?p=30356

குடதிசை மருங்கில்: சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்

ஆசிய நாடுகளின் கலைபொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் அமெரிக்க அருங்காட்சியகங்கள் பல.  ஒரு சிறிய ஊரின், ஒரு சிறிய நூலகத்திலும் குறைந்தது ஒரு பத்து  ஆசியக் கண்டத்தின் கலைப் பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

பெருநகர் அருங்காட்சியகங்களில்  ஆசியக் கலைப் பொருட்களுக்கென்றே சிறப்பாகத் தனிப்பட்ட பகுதிகளும் ஒதுக்கப் பெற்றிருக்கும்.  ஆண்டிற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கருத்தினைத் தேர்வு செய்து, அதற்குப்  பொருத்தமான கலைப் பொருட்களை விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்து பார்வையாளர்கள் காண இந்த அருங்காட்சியகங்கள் வழி செய்வதும் உண்டு.

ஆசியக் கலைப்பொருட்களை மட்டுமே கொண்டு தனிச் சிறப்பு மிக்க “ஆசியக் கலை அருங்காட்சியங்கள்” இருப்பது இரு பெரு நகர்களில். அவைகள் அமைந்திருப்பது  வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலும். இப்பகுதியில் அதிக அளவில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் பலர் வாழ்வது அதற்கு முக்கிய காரணம்.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்

பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் இருக்கும் ஆசியக் கலைப் பொருட்கள் பெரும்பாலும் தூரக்கிழக்கு நாடுகளான சீனா, ஜப்பான் நாடுகளைச் சார்ந்த கலைப் பொருட்களாகவோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தவையாகவே இருக்கும்.  ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடிபுகுந்தோரில் பெரும்பாலும் இந்நாடுகளைச் சார்ந்தவர்களாகவே அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். தெற்காசிய நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கலைப்பொருட்கள் மற்ற ஆசிய நாட்டு கலைப்பொருட்களை விட குறைவாகவே இடம் பிடித்திருக்கும்.  ஆசியநாட்டு வழி வந்தவர்களில் தெற்காசியப்பகுதியினைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்ற ஆசிய நாட்டினரைவிட எண்ணிக்கையிலும் அமெரிக்காவில் குறைவு.

இந்த நிலைக்கு மாறாக அதிக  இந்தியக் கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக்  கலை அருங்காட்சியகத்தில் மட்டும்தான். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ‘ஆவ்ரி ப்ரெண்டேஜ்’ (Avery Brundage) என்பவர்.

இவர் 1959 இல் சான்  ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார்.  ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பது. அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த  ஆசியக்  கலை அருங்காட்சியகம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார்.  அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்து, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.

சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.  அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான்  ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம்.

மீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார்.  அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ  பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் மனம் உவந்து நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை.  இவரது முயற்சியால் இன்று அமெரிக்கா மட்டுமல்ல உலகிலேயே  அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது  சான் ஃபிரான்சிஸ்கோவின் ஆசியக்  கலை அருங்காட்சியகம்.  இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு  வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.

இங்கிருக்கும் கலைப்பொருட்கள்;
(1) சீனா
(2) ஜப்பான்
(3) கொரியா
(4) தென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோஸ், வியட்நாம், பிலிப்பின்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா)
(5) தெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா)
(6) இமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேபாள், பூட்டான், மங்கோலியா)
(7) பாரசீகம் மற்றும் மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்த்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)
என்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப் படுத்தப் பட்டுள்ளன.

சிறிய மரகதக் கற்கள் முதற் கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.

இவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும்  வகையில் இடம் பெற்றுள்ளன. அவை:
(1) புத்தமதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
(2) ஆசிய நாடுகளுக்கிடையே ஆன கலாச்சார மற்றும் வணிக  பரிவர்த்தனைகள்
(3) ஆசிய நாடுகளில் இடம்பெறும்  நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும் ஆகும்.

இந்தியாவினைக் குறிக்கும் சிறப்பு கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்:
மேவார் அரச பரம்பரையின் கலைப்பொருட்கள் [Princes, Palaces, and Passion: The Art of India’s Mewar Kingdom (2007)]
இந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India's Royal Courts (2011)]
ஓவியர் சஞ்சய் பட்டேலின் இந்தியக் தெய்வங்களின் ஓவியங்கள் [Deities, Demons, and Dudes with 'Staches: Indian Avatars by Sanjay Patel (2011)]

இந்த ஆண்டில்:
இந்திய தெய்வங்களின் கற்சிலைகள் [Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum (2012)]
போன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும்  சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக்  கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.

(தொடரும்)

Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

Suba.T.

unread,
May 20, 2014, 2:49:01 AM5/20/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிக அருமையான பதிவு. அருங்காட்சியகத்திற்கும் நல்ல அறிமுகமாக அமைந்திருக்கின்றது. நான் வர வாய்ப்பமைந்தால் கட்டாயம் வந்து பார்ப்பேன்.
-சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
தேமொழி

unread,
May 22, 2014, 7:34:43 PM5/22/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
நன்றி சுபா....இந்த அருங்காட்சியகம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..

..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 22, 2014, 7:46:14 PM5/22/14
to mint...@googlegroups.com
குறிப்பு: 
இங்கு கீழே கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளைத்தான் ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு அருங்காட்சியகமும் வழங்குகிறது.

வெளிநாட்டினர் இச்சிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் தகவல் என்ன என்பதற்காக அருங்காட்சியகத்தினர்  தந்த குறிப்புகளையே இங்கு மொழி பெயர்த்து வழங்கியுள்ளேன்.  இது இந்தியர் பெரும்பாலோருக்கு  மிகவும் அடிப்படைத் தகவலாகவும் இருக்கலாம்.
____________________________________________________________________________

குடதிசை மருங்கில்: சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்

குடதிசை மருங்கில் – 2 

இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:

உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின்  ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை  இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சி சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் முதல் இந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் வரை பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.  இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின்  காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள்.  வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.

அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்

இந்து மதக் கோயில்களில்  எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக்  காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.

இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக்  கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள்.  எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம்  இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக்  கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக  அத்தெய்வத்தை  வழிபடுபவர்கள்.

இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும்  உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள்.  தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை.  கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.

பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.

பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார்.  சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பர்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில்  கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.

கணேசா:

இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023

கணேசர் தடைகளை நீக்கும் கடவுள்.  எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார்.  உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக  வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.

கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது  கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார்.  உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார்.  பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது.  யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.

(தொடரும்)

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

நன்றி: வல்லமை   http://www.vallamai.com/?p=30905

Suba.T.

unread,
May 23, 2014, 2:26:33 AM5/23/14
to மின்தமிழ், Subashini Tremmel
​மிக அருமை.  மொழி பெயர்ப்பு விரிவான தகவல்களைத் தெருகின்றது.
இதனை பகுதி பகுதியாக இங்கு வெளியிட்டு, வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கும் நன்றி குறிப்பிட்டு மின் தமிழ் மேடையில் இணைக்கலாமே தேமொழி.
சுபா

Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

நன்றி: வல்லமை   http://www.vallamai.com/?p=30905

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 23, 2014, 9:22:34 PM5/23/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அப்படியே செய்யலாம் சுபா.

இரண்டு நாட்களுக்கு ஒன்றாகப் பதிவிட்ட பின்னர் மின்தமிழ் மேடையில் இணைகிறேன், மிக்க நன்றி.

அன்புடன்

..... தேமொழி

On Thursday, May 22, 2014 11:26:33 PM UTC-7, Suba.T. wrote:

​மிக அருமை.  மொழி பெயர்ப்பு விரிவான தகவல்களைத் தெருகின்றது.
இதனை பகுதி பகுதியாக இங்கு வெளியிட்டு, வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கும் நன்றி குறிப்பிட்டு மின் தமிழ் மேடையில் இணைக்கலாமே தேமொழி.
சுபா

Source:
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

நன்றி: வல்லமை   http://www.vallamai.com/?p=30905

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 28, 2014, 2:33:38 AM5/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

குடதிசை மருங்கில் – 3

இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
(தொடர்ச்சி)

பிரம்மா:

அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்).  படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின்  வெளிபிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக,  கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்பவடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செதுக்குவது இயலாத செயலாகும்.

அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

விஷ்ணு:

அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத்  தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார்.  அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது  அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவைகளும் ஆகும்.

அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தை சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தை  தங்கள் தலையில் மகுடமாக தரிதுள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாக சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப்  பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.

இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

சிவன்:

அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும்  பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்கு காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யம்  சிவன், தனது  காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.   உலகில் தோன்றும் மனிதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது  தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும்.  சமஸ்கிரதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும்.

அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

ஹரிஹரன்:

அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்கு காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்படுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருபதாகக் காட்டப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது.
அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

(தொடரும்)

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:

http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum

Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

நன்றி: வல்லமை http://www.vallamai.com/?p=31139

Suba.T.

unread,
May 28, 2014, 3:00:37 AM5/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஒவ்வொரு சிலைக்கும் அருங்காட்சியகம் தந்திருக்கும் விளக்கமும் அதற்கான உங்களின் தமிழ் மொழிபெயர்ப்போடு கூடிய விரிவாக்க விளக்கமும் சிறப்பாக உள்ளது தேமொழி.. பகிர்வு நன்றி.
சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Thiagarajan

unread,
May 28, 2014, 5:04:38 AM5/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

அற்புதம், அருமையான தமிழாக்கம். நேரில் சென்று காண்பது போன்ற உணர்வு,  

தியாகு

Dev Raj

unread,
May 28, 2014, 1:28:12 PM5/28/14
to mint...@googlegroups.com
படங்களும் , தேமொழி அவர்களின் விவரிப்பும் மிக அருமை.

தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
May 28, 2014, 1:45:52 PM5/28/14
to mintamil
அருமை!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

On Wed, May 28, 2014 at 10:58 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
படங்களும் , தேமொழி அவர்களின் விவரிப்பும் மிக அருமை.

+1

தேமொழி

unread,
Jun 18, 2014, 3:12:15 AM6/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

குடதிசை மருங்கில் – 4

இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
(தொடர்ச்சி)

எங்கெங்கு காணினும் சக்தியடா

பார்வதி

அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

அழகுத் தெய்வமாகக் காட்டப் படும் பார்வதி, இந்துமதப் பெரும் கடவுள் சிவனின் மனைவி, யானைத் தலையினையை உடைய கணேசர் மற்றும் வீரமிகு போர்க் கடவுள் கந்தனின் அன்னையும் ஆவார். கருணை வடிவான தெய்வமான பார்வதியே உக்கிரம் நிறைந்த துர்காவாகவும், காளியாகவும் காட்சி கொடுப்பார்.  நான்கு கரங்களுடன் வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ள பார்வதி சிலையின் கையில், பெரும்பாலும் இடம் பெறும் வடிவங்களில் இரண்டு; ஒன்று அழகையும் தெய்வீகத் தன்மையையும் காட்டும் தாமரை மலர், மற்றொன்று இறையாண்மையை உணர்த்தி அருள் வழங்கும் ருத்திராட்ச மாலை. பெரிய கண்களையும், நிறைந்த வடிவுடைய மார்பையும், குறுகலாகத் துவங்கி பிறகு அகண்டு கால்களுடன் இணையும் இடையையும் கொண்டு,  பண்டைய இந்தியாவின் பெண்களின் அழகு எனக்குறிப்பிடப்படும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வதியின் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

இந்து தெய்வம் பார்வதி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 13 – 15 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S4+L2012.0801.036

துர்கை

அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

துர்கை என்னும் பெண் தெய்வம், இந்துமத ஆண் தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை ஏந்தி, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்த எருமை வடிவ அரக்கனை (மகிஷாசுரன்) கொன்றழித்தவர். இங்கு காட்டப்பட்டுள்ள சிலையில் துர்கை தனது வாகனமான சிங்கம் அருகிருக்க, தப்பிக்க முயலும் எருமை அரக்கனின் முகத்தை ஒரு கையினால் அழுத்தி, மறு கையில் உள்ள சூலாயுதத்தை அரக்கனின் முதுகில் செலுத்தித் தாக்குவதாகக் காட்டப் பட்டுள்ளது.  துர்கையின் குணம் எளிதில் மதிப்பிட முடியாதது. கோபத்துடன்,  இணையில்லா ஆற்றலுள்ள வீரப் பெண்ணாக துர்கா சித்தரிக்கப் பட்டாலும், முகபாவம் அமைதியும் சாந்தம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டது இதனை விளக்கும். துர்கை அரக்கனைக் கொன்று அடைந்த வெற்றி ஒவ்வொரு ஆண்டும் அறுபது நாட்களுக்கு விழாவாக இன்றும் கொண்டாடப் பட்டு வருகிறது.

அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

மகிஷாசுர வதம் செய்யும் இந்து தெய்வம் துர்க்கை, இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியினைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 10 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S7+L2012.0801.025

திரிபுரசுந்தரி

அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

திரிபுரசுந்தரி என்று வழங்கப்படும் அழகியப் பெண் தெய்வம் இந்துமதப் புராணத்தில் செல்வமாகக் குறிப்பிடப் படும் உடல், ஆன்மா, முக்தி நிலை ஆகிய மூன்றிற்கும் உரிய தெய்வம். புராண இலக்கியங்களில் பார்வதியின் சக்தி வாய்ந்த பத்து வடிவங்களில் ஒரு வடிவமாக திரிபுரசுந்தரி குறிக்கப் படுகிறார். அத்துடன் திரிபுரசுந்தரி, காளியின் உறுதியும், துர்கையின் அழகும் அருளும் ஒருங்கிணைந்த  குணத்தை உடைய தெய்வமாகச்  சித்தரிக்கப் படுகிறார். இப்பண்புகளைக் குறிக்கும் வகையில் ஒரு கையில் பாசக் கயிற்றையும், மறு கையில் யானையை அடக்கும் அங்குசத்தையும் ஏந்தி, அணிகலன்கள் பல அணிந்து தாமரை மலராசனத்தில் அமர்ந்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

இந்து தெய்வம் திரிபுரசுந்தரி , தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 15 – 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S17+L2012.0801.028

காளி/சாமுண்டி

அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

அச்சுறுத்தும் வகையில் பல கரங்களுடன் காட்சி தரும் இந்தப் பெண் தெய்வத்தின் கரம் ஒன்றில் மண்டை ஓட்டாலனப்  பாத்திரமுள்ளது, சிதைந்துவிட்ட மற்ற கரங்களில் கொலைத்தொழில் செய்யத் தேவையான பிற ஆயுதங்களும்  இருந்திருக்கக் கூடும்.  இரு ஆண் அரக்கர்கள் (சண்ட முண்ட  அரக்கர்கள்) வீரப் பெண் தெய்வம் துர்கையை அழிக்க அனுப்பப் பட்டார்கள். அவர்களைக் கண்டு “கோபம் கொண்ட அவள் முகம்  மையைப் போன்ற  கருமை கொண்டது. அவளது நெரிந்த புருவங்களில் இருந்து பயங்கரமான  முகத்தை உடைய காளி தோன்றினாள். அவள் கபால முனை கொண்ட தண்டாயுதத்துடன், புலித்தோலை ஆடையாக அணிந்து, வறண்ட தோலுடனும்,  எட்டுத்திசையும் அவளது கர்ஜனயால் அதிர, திறந்த வாயின் வழி துருத்திய நாக்குடன் கோரத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாள்.”**

** மேற்கோளாகக் கொடுக்கப் பட்டிருப்பது 1500 அண்டுகள் பழமையான “தேவி மகாத்மியம்” என்ற இந்துமத இலக்கியத்தின் சாரம்.  இவ்வரிகள், வித்யா தேஹிஜியா எழுதிய, “தேவி: சிறந்த பெண் தெய்வம்” (Devi:the great goddess) என்ற 1999 ஆண்டு வெளியான நூலில் இடம் பெற்ற தாமஸ் பி. கோபர்ன் அவர்களின் மொழி பெயர்ப்பு வரிகள்.

அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

இந்து தெய்வம் சாமுண்டி, மத்திய இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 10 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B61S15+L2012.0801.026

(தொடரும்)

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:

http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum

Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013

All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

நன்றி: வல்லமை http://www.vallamai.com/?p=31497

தேமொழி

unread,
Jun 18, 2014, 3:17:05 AM6/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

சென்ற பகுதியை வாசித்து கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் சுபா, திருவாளர்கள். தியாகராஜன், தேவ், சொ.வி. ஐயா ஆகியோருக்கு நன்றிகள்.

அன்புடன்
..... தேமொழி

துரை.ந.உ

unread,
Jun 18, 2014, 3:21:01 AM6/18/14
to வல்லமை, Groups
​பிக முக்கியமான பதிவு ... நன்றி அக்கா ​

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 18, 2014, 4:11:27 AM6/18/14
to vallamai, Groups
அழகான சிற்பங்களின் படங்கள். அருமையான குறிப்புக்கள்.

தமிழகத்தின் பெரும்பாலான சிவன்கோவில்களில் கொலுவீற்றிருக்கும் அம்மன் சிற்பங்களின் திருவுரு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பார்வதி சிற்பமாகும்.
இரண்டு ஐயங்கள்.
1.கையில் உள்ள மலர் தாமரை, அல்லி, நீலோற்பவம் என்று பல சொல்லக்கேட்டிருக்கிறேன். பதிவில் தாமரை என அறிகிறேன். எந்த மலர்?
2.சிலையில் பூணூல் அணியப்பட்டுள்ளதைக் காண்கிறேன். முப்புரி நூல் பெண்கள் அணியும் வழக்கமிருந்ததா? அல்லது தெய்வ உருவங்களுக்கு மட்டுமா? அல்லது சிலையில் இருப்பது பூணூல் அன்றி வேறா?
நன்றி.

தேமொழி

unread,
Jun 26, 2014, 12:39:22 AM6/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

[இப்பதிவுடன் இப்பகுதி நிறைவு பெறுகிறது, படித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்] 

குடதிசை மருங்கில் – 5

இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
(தொடர்ச்சி)

சூர்யா

அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாக சூரியனைக் குறிப்பவர். இங்கு காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. சூரியாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூரியாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூரியாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாக காட்டப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இறைவிகள்

அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

சிதைவிற்கு முன் இந்தக் கற்பாளத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

கருடன்

அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

கருடன் என்னும் புராணக் கடவுளுக்கு மனித உடலும், பறவையின் உடலமைப்பினைப் போல இறகுகள், அலகு, காலில் கூர் நகங்களும் அமைந்திருக்கும். கருடனுக்கு சூரியக் கதிர்களின் சக்தியும், நாகங்களை அழிக்கும் சக்தியும் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது. இந்திரனின், மரணத்தை நீக்கும்தேவாமிர்தத்தைக் காக்கும் இரு நாகங்களைக் கருடன் கொன்றழித்ததாகவும் கருதப் படுகிறது. பெரும்பாலும், எட்டு நாகங்களை அணியாக அணிந்து, பணிவுடன் மண்டியிட்டு, கரம் கூப்பிய வடிவுடன் கருடனின் உருவம் அமைக்கப் பட்டிருக்கும். ஆதிகால விஷ்ணுவின் கோயில்களின் முன்புறத் தூண்களில் கருடனின் உருவம் செதுக்கப் பட்டிருக்கும். கருடனை விஷ்ணுவின் வாகனமாக இந்துமத வேதங்கள் குறிப்பிடுகிறது.

அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

இந்து தெய்வம் தீரமிகுந்த பறவை-மனித வடிவுடைய கருடன்,  இந்தியாவின் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

ஆகஸ்ட் 25, 2012 இல் துவங்கிய “இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்னும் இந்த  சிறப்புக் கண்காட்சி பிப்ரவரி 25, 2013  ஆம் தேதிவரை ஸான் ஃபிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதால் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு கண்காட்சியைக் காண ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது.

இந்த சிறப்புக் கண்காட்சியைப் பற்றிய இக்கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது. படங்களுடன் கட்டுரையை வெளியிட இசைவளித்த ஆசிய அருங்காட்சியகத்தினருக்கு, குறிப்பாக அருங்காட்சிய அதிகாரி அமீலியா பன்ச் (Amelia Bunch) அவர்களுக்கு நன்றி.

[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

Source:

தேமொழி

unread,
Jun 26, 2014, 12:47:38 AM6/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
அன்பு சொ.வி. ஐயா,

பார்வதியைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமளவுக்குத் தகவல்கள் அறிந்த பார்வதி (ராமச்சந்திரன்) வந்து பதில் சொன்னாலே உண்டு.  
மற்றொருவர் கீதா.  எனக்கு சிலைகளை ரசிக்கத் தெரிந்த அளவிற்கு புராண, ஆன்மீகத் தகவல்கள் தெரியாது.

அன்புடன்
..... தேமொழி

தேமொழி

unread,
Jun 26, 2014, 12:48:48 AM6/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
பதிவை வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சொ வி ஐயா.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 26, 2014, 1:31:02 AM6/26/14
to vallamai, mintamil, பார்வதி இராமச்சந்திரன்., Geetha Sambasivam
அரிய பதிவு. விரும்பிப் படித்தேன் திருமிகு தேமொழி. பிறிதொரு சமயம் வாய்ப்பமைந்தால் இது போன்று ஒரு பதிவு தொடருங்கள்.
1.சப்த கன்னியர் என்று அழைக்கப்படும் சிலைகளைப் பல இடங்களில் பார்த்துள்ளேன். அவர்களுக்கு இணையான 2.ஆண்கடவுளரையும் அவர்தம் வாகனங்களையும் இப்பதிவின் மூலம் அறிகிறேன்.
சூரியன் சிலைகளை ஆலயத்தில் நுழைந்ததும் உட்பிரகாரத்தில் காண்பதுண்டு. ஆடை அமைப்பார்த்திருக்கிறேன். இனிமேல் கூர்ந்து பார்ப்பேன்!
3.கருட பகவானின் பணிவு கண்கொள்ளாக் காட்சி.
பாரத நாடு பழம்பெரும் நாடு; நீரதன் புதல்வர் என்ற பாரதியின் வரிகள் நினைவை நிறைக்கின்றன.
நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-06-26 10:18 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பதிவை வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சொ வி ஐயா.

On Wednesday, June 25, 2014 9:47:35 PM UTC-7, தேமொழி wrote:
அன்பு சொ.வி. ஐயா,

பார்வதியைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமளவுக்குத் தகவல்கள் அறிந்த பார்வதி (ராமச்சந்திரன்) வந்து பதில் சொன்னாலே உண்டு.  
மற்றொருவர் கீதா.  எனக்கு சிலைகளை ரசிக்கத் தெரிந்த அளவிற்கு புராண, ஆன்மீகத் தகவல்கள் தெரியாது.

வேந்தன் அரசு

unread,
Jun 26, 2014, 6:25:25 AM6/26/14
to vallamai, mintamil, பார்வதி இராமச்சந்திரன்., Geetha Sambasivam
தேமொழி இந்த படங்களை நீங்களாக பதிந்தீர்களா?

26 ஜூன், 2014 1:30 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jun 26, 2014, 10:32:02 AM6/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

கட்டுரையில் காணும் படங்கள் நான் எடுத்த படங்கள் இல்லை வேந்தே.   
அவையாவும் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வமான படங்கள்.  
பார்வையாளர்களுக்கு வழங்கிய விளக்க உரை கையேடுகளில் இருந்த படங்களும் தகவல்களும் கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன.   
அருங்காட்சியக வலைதளத்திலும் இவை வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்புகளையும் படங்களையும் என் கட்டுரைக்குப் பயன்படுத்த அனுமதி கேட்டு அருங்காட்சியகத்திற்கு மின்னஞ்சல் எழுதினேன்.
நான் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார் 

அமீலியா பன்ச் என்ற அருங்காட்சியக அதிகாரி. 

உயர்தர படங்களை அனுப்புகிறேன் என்றார். 
நான் தேவையில்லை இது இணையப்பதிவிற்காக, உங்கள் தளத்தில் இருந்தே எடுத்துக் கொள்கிறேன், எனக்கு அதற்கு மேல் தேவையில்லை என்று கூறி, கட்டுரைகள் முடித்த பின்னர் அவருக்கு மீண்டும் கட்டுரைகளின் சுட்டிகள் கொடுத்து தகவல் அளித்தேன்.  

கட்டுரையில் இடம் பெறும் அனைத்துப் படங்களும் கிடைக்குமிடம் இங்கே:

கீழே அவரது அனுமதி கடிதம்:

On Thu, Jan 10, 2013 at 6:24 PM, Amelia Bunch <ABu...@asianart.org> wrote:
Dear Jothi,

I'm so sorry it's taken me this long to respond! Things get a little off track at the holidays.

Of course you are welcome to use the images on our website. Let me know which you're interested and I'll send you higher resolution versions as well as the image caption to use.

Thank you and sorry again!

Best,
Amelia

Amelia Bunch

Asian Art Museum
200 Larkin Street  |  San Francisco, CA  |  94102
T:  
415.581.3713 |  F:  415.581.4714  | E:  abu...@asianart.org
Facebook  |  Twitter  |  Flickr  |  YouTube  |  Pinterest  |  Blog   

பின்னர் அவரும் ...
இவற்றை நூலாக வெளியிட விரும்பினால் கீழுள்ள தகவல்களுடன் மற்றொரு அருங்காட்சியக அதிகாரியைத்   தொடர்பு கொண்டு அனுமதி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று எழுதினார்,  அந்தத் தகவல்கள்:
1)     accession number and title or description of the object to be reproduced :
2)     description of the intended use :
3)     title of the publication :
4)     publisher :
5)     author :
6)     publication date :
7)     print run : 
8)     deadline to receive materials :
9)     indicate language/s of publication and distribution rights being sought :
10)    indicate image requirements and/or preferences, if any : 

To:
Jessica Kuhn
Image Services Coordinator
Asian Art Museum
200 Larkin Street
San Francisco, CA 94102
p 415.581.3572 | f 415.581.4716
jk...@asianart.org
www.asianart.org 

தேமொழி

unread,
Jun 26, 2014, 10:33:58 AM6/26/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

உங்கள் பாராட்டிற்கு நன்றி சொ.வி. ஐயா.  மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எழுதுவேன்.

..... தேமொழி

Rajagopalan V

unread,
Jun 26, 2014, 11:28:28 AM6/26/14
to mint...@googlegroups.com

திருமதி தேமொழி, திரு வினை தீர்த்தான் அவர்களுக்கு, 

 1. வணக்கம். 

2. இந்தப் பதிவின் பின்னணிக்  கட்டுரையை அளிக்க முடியுமா? தாங்கள் இருவரும் எதைப் பற்றி  எழுதுகிறீர்கள் என்பது அடியேனுக்குப் புரியவில்லை. 

 அடிக்கடி இப்படிப் பட்ட மின்னச்சல்கள் வருகின்றன.  அவற்றைத் திறக்க முடியவில்லை.மின் தமிழில் அடியேன் உறுப்பினன் தான். இதற்கு வேறு  ஏதாவது  தனித் தகுதி இருக்க வேண்டுமா? தெரிவித்தால் நன்றியுடையவனாயிருப்பேன்.

ராஜகோபாலன், வெ.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 26, 2014, 12:13:59 PM6/26/14
to mint...@googlegroups.com, v_raj_...@yahoo.com

நன்றி திரு. ராஜகோபாலன்...

கட்டுரைகளின் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
                                                              குடதிசை மருங்கில் – 1 http://mymintamil.blogspot.com/2014/06/1.html
                                                              குடதிசை மருங்கில் – 2 http://mymintamil.blogspot.com/2014/06/2.html
                                                              குடதிசை மருங்கில் – 3 http://mymintamil.blogspot.com/2014/06/3.html
                                                              குடதிசை மருங்கில் – 4 http://mymintamil.blogspot.com/2014/06/4.html
                                                              குடதிசை மருங்கில் – 5 http://mymintamil.blogspot.com/2014/06/5.html

///அடிக்கடி இப்படிப் பட்ட மின்னச்சல்கள் வருகின்றன.  அவற்றைத் திறக்க முடியவில்லை.மின் தமிழில் அடியேன் உறுப்பினன் தான். இதற்கு வேறு  ஏதாவது  தனித் தகுதி இருக்க வேண்டுமா? தெரிவித்தால் நன்றியுடையவனாயிருப்பேன்.///

மின்னஞ்சல்கள் தொல்லை கொடுத்தால் கீழ்காணும் சுட்டியைச் சொடுக்கி  இணையத்தின் வழியாகவும் மின்தமிழ் மடல்களை படிக்கலாம். 
முயன்று பாருங்கள். சுட்டியை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்...

..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Jun 26, 2014, 12:16:58 PM6/26/14
to Groups, v_raj_...@yahoo.com
​வாழ்க அக்கா

அரும்பெருஞ்செயல் ... நன்றி​

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 26, 2014, 12:32:58 PM6/26/14
to mint...@googlegroups.com, v_raj_...@yahoo.com

      நன்றி துரை

.....  தேமொழி

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jun 26, 2014, 9:13:32 PM6/26/14
to வல்லமை, மின்தமிழ்
///1.கையில் உள்ள மலர் தாமரை, அல்லி, நீலோற்பவம் என்று பல சொல்லக்கேட்டிருக்கிறேன். பதிவில் தாமரை என அறிகிறேன். எந்த மலர்?
2.சிலையில் பூணூல் அணியப்பட்டுள்ளதைக் காண்கிறேன். முப்புரி நூல் பெண்கள் அணியும் வழக்கமிருந்ததா? அல்லது தெய்வ உருவங்களுக்கு மட்டுமா? அல்லது சிலையில் இருப்பது பூணூல் அன்றி வேறா?////

இந்த மடலை இப்போது தான் பார்க்கிறேன்!.. தேமொழியின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றி.. திரு.சொ.வி. ஐயா அவர்களின் கேள்விகளுக்கு, நானறிந்த வரையில் பதில்கள் கீழே..

1.பார்வதி தேவியின் திருக்கரத்தில் உள்ள மலர் நீலோத்பலம்...(சிற்ப சாஸ்திரப்படி)பெரும்பாலும் இடக்கரத்திலேயே மலர் அமைந்திருக்கும்.. இதற்கான காரணங்கள்.. 

அ) நீலோத்பலம் அறிவின் அடையாளமாகக் குறிக்கப்படுகின்றது.. அம்பிகையை வழிபடுவோர் மெய்யறிவு பெறுவர்..

ஆ)அம்பிகையின் இடக்கண் சந்திரன். நீலோத்பலம் சந்திரன் ஒளியால் மலரும்.. உயிர்களின் அறிவு, அம்பிகையை வழிபட,  மலர்ந்து விளங்கும்.

இ) நீலோத்பல மலரில் உமாதேவியார் வாசம் செய்வதாக ஐதீகம்.

இது தவிர, வாஸ்து ரூப முத்திரையாக, மலரைப் பிடித்திருப்பது போல்(அபிநயம்) திருக்கரங்கள் அமைப்பதும் உண்டு..

2.சிலையில் இருப்பது பூணூல் தான். பெண் தெய்வங்களுக்கு முப்புரி நூல் உண்டு.. பெரும்பாலான விக்கிரகங்களில் பார்த்திருக்கிறேன்.. குறிப்பாக பார்வதி தேவியின் சிலையில் இந்த அமைப்பு இருக்கிறது. இது, 'த்விஜ' எனப்படும் இரு முறை பிறக்கும் நிலையைக் குறிப்பதாக அமைகிறது..பழங்காலத்தில், பெண்கள், நித்திய கர்மானுஷ்டானங்கள், வேதம் ஓதுதல் முதலியவற்றிலிருந்து விலக்கப்படவில்லை..ஆகவே, அக்காலத்தை ஒட்டி, இவ்வாறு அமைத்ததாகக் கொள்ளலாம்.. சரஸ்வதி பூஜை முதலான பூஜைகளில், அம்பிகைக்கு வஸ்திரம், ஆபரணம் முதலியவற்றோடு, பூணூல் அணிவித்து பூஜிக்கும் வழக்கமிருக்கிறது. இங்கே கர்நாடகாவில், இப்போதும், குறிப்பிட்ட சில இனப் பெண்கள், பூணூல் அணிகின்றனர்..

திரு.சொ.வி.ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-06-26 10:17 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​  
​       
​         

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 27, 2014, 12:03:02 AM6/27/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சிறப்பான விளக்கம் திருமிகு பார்வதி. விவரம் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.
நீலோத்பலம் மலர் அல்லி மலரா? வேறா?

நீலோத்பலம், அல்லி, குமுதம் பற்றி இணையப் படம், தகவல் அளிக்கத் திருமிகு
தேமொழியைக் கேட்டுக்கொள்கிறேன்.

--

Hari Krishnan

unread,
Jun 27, 2014, 12:28:43 AM6/27/14
to vallamai, மின்தமிழ்

2014-06-27 9:32 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
சிறப்பான விளக்கம் திருமிகு பார்வதி. விவரம் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.
நீலோத்பலம் மலர் அல்லி மலரா? வேறா?

திருவண்ணாமலை சுத்தானந்தா ஆசிரமத்தில் நான் எடுத்த நீலோத்பல மலரின் புகைப்படம்:

Inline images 1

Inline images 2
மேலும் சில:
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. லு

வேந்தன் அரசு

unread,
Jun 27, 2014, 7:24:41 AM6/27/14
to vallamai, மின்தமிழ்
பொதுவாக படங்களை பார்த்தால் அதன் கோல் அளவு என்ன என தெரியலே (ஸ்கேல்).

அதனால் படம் பதிபவர்கள்  சிலையின் முழு பரிமானம் உணர்த்த ஏதேனும் செய்யணும்.

26 ஜூன், 2014 10:31 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 27, 2014, 2:16:30 PM6/27/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
நீலோத்பல மலரின் படங்களும் பிறபடங்களும் விளக்கஙளும் அருமை. “நீங்கள்
இரசிகனய்யா” என்ற சொற்கள் எண்ணத்தில் எழுகின்றன!

நன்றி
சொ.வினைதீர்த்தான்.

On 6/27/14, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

தேமொழி

unread,
Jun 30, 2014, 2:11:27 AM6/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

///நீலோத்பலம் மலர் அல்லி மலரா? வேறா? ///

சொ.வி. ஐயா,

பொதுவாக வழக்கில் .....

நீலோத்பலம்/நீலோற்பலம் என்பதை பெரும்பாலும் நீலத்தாமரைக்கும், நீலஅல்லிக்கும் மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் நீலோற்பலம் என்பது அல்லி குடும்பத்தைச் சார்ந்தது ...தாவரயியல் படி.

அல்லியும் தாமரையும் முற்றிலும் வேறு வேறு குடும்பங்கள். 

Nelumbonaceae(family) என்பது தாமரைக் குடும்பம் 

Nymphaeaceae (family) என்பது நீரல்லிக் குடும்பம் 

______________________________________________________________

///நீலோத்பலம், அல்லி, குமுதம் பற்றி  இணையப் படம், தகவல்////

படத்தில் இருப்பது  நீலோற்பலம்/நீலஅல்லிமலர் (Nymphaea nouchali  இதன் மறு பெயர் Nympheae Stellata)

இது இலங்கையின் தேசியமலர் (ஆனால் இலங்கை தவறான படத்தை வெளியிட்டதாக சர்ச்சை, இதை திரு. கணேசன் மின்தமிழில் குறிப்பிட்டிருக்கிறார்)

நீலோத்பலம்/நீலோற்பலம்

______________________________________________________________

அல்லி (வெள்ளை அல்லி/ ஆம்பல்)

Nymphaea lotus அல்லது Nymphaea dentata

______________________________________________________________

செவ்வல்லி 

குமுதம்(சமஸ்கிரதம்)

Nymphaea rubra (red water lily)

உண்மையில் இதைத் தேடும் முயற்சியில் நான் மிகவும் மலைத்துப் போனேன். 

Nymphaeaceae (family) என்பது நீரல்லிக் குடும்பம்  மலர்கள் ஒவ்வொன்றிற்கும்  தமிழ்ப் பெயர்கள் உள்ளது.  

தெரிந்து கொண்ட செய்திகளை காடுரையாக எழுத எண்ணம்.

அன்புடன்

..... தேமொழி

தேமொழி

unread,
Jun 30, 2014, 2:12:24 AM6/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
உண்மை வேந்தே...
சுபா செய்வது போல ஒரு பேனாவை வைக்கலாம்.

..... தேமொழி'

Suba.T.

unread,
Jul 11, 2014, 2:59:13 AM7/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-06-26 6:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

[இப்பதிவுடன் இப்பகுதி நிறைவு பெறுகிறது, படித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்] 

குடதிசை மருங்கில் – 5

இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
(தொடர்ச்சி)

சூர்யா

அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாக சூரியனைக் குறிப்பவர். இங்கு காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. சூரியாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூரியாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூரியாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாக காட்டப் பட்டுள்ளது.

அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

இறைவிகள்

அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

சிதைவிற்கு முன் இந்தக் கற்பாளத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.
அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

​அருமையான கட்டுரைத் தொடர் தேமொழி. அருங்காட்சியகத்தின் பல சேகரிப்புக்களை விரிவாக விளக்கியுள்ளது கட்டுரையின் அனைத்து பகுதிகளும்.​

​சப்த மாதாக்களைத் தென்னிந்திய கோயில்களில் காண்பதை  விட சற்றே​ மாறுபட்ட வடிவத்தில் இந்த வடிவம் அமைந்திருக்கின்றது. இங்கு குறிப்பிடப்படும் ஆண்டுகள் கி.பி தானே? 

சுபா

தேமொழி

unread,
Jul 11, 2014, 3:11:59 AM7/11/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

On Thursday, July 10, 2014 11:59:13 PM UTC-7, Suba.T. wrote:

​அருமையான கட்டுரைத் தொடர் தேமொழி. அருங்காட்சியகத்தின் பல சேகரிப்புக்களை விரிவாக விளக்கியுள்ளது கட்டுரையின் அனைத்து பகுதிகளும்.​

​சப்த மாதாக்களைத் தென்னிந்திய கோயில்களில் காண்பதை  விட சற்றே​ மாறுபட்ட வடிவத்தில் இந்த வடிவம் அமைந்திருக்கின்றது. இங்கு குறிப்பிடப்படும் ஆண்டுகள் கி.பி தானே? 

ஆம் சுபா,  தகவலை உறுதிப்[படுத்திக் கொண்டேன்.  

அனைத்து சிலைகளும் கி.பி. / பொது ஆண்டு சிலைகளே 

  1. The Hindu deity Brahma c. 1000 - 1200
  2. The Hindu deity Vishnu with Lakshmi and Sarasvati c. 1100 - 1200 
  3. The Hindu deity Surya flanked by Pingala and Danda c. 600 - 700 
  4. The Hindu deity Shiva as divine teacher 1300 - 1400
  5. The Hindu deity Durga killing the buffalo demon 900 - 1000 
  6. The Hindu deity Ganesha c. 1200 - 1300
  7. The Hindu deity Parvati 1300 - 1500
  8. The Hindu deity Tripurasundari c. 1500 - 1700
  9. Four of the seven Mother Goddesses c. 750 - 800
  10. The Hindu deity Chamunda c. 1000 - 1100
  11. The heroic man-bird Garuda c. 900 - 1100
  12. The Hindu deity Harihara c. 900–1100

பாரட்டிற்கு நன்றி சுபா.

..... தேமொழி

Suba.T.

unread,
Jul 11, 2014, 3:13:04 AM7/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 8:59 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
2014-06-26 6:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

[இப்பதிவுடன் இப்பகுதி நிறைவு பெறுகிறது, படித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்] 

குடதிசை மருங்கில் – 5
​..

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

​சப்தமாதாக்கள் பற்றி  இன்னொரு விஷயமும் குறிப்பிட வேண்டும். ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. 

மேல் சித்தாமூர் சமண மடத்தில் சப்த மாதாக்களுக்காக ஒரு மாபெரும் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. படத்தை தனி இழையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா 

தேமொழி

unread,
Aug 10, 2014, 1:09:03 AM8/10/14
to mint...@googlegroups.com

இந்த வரிசையில் வெளிவந்த என்னுடைய மற்றொரு கட்டுரையையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
________________________________________________________________________________________________ 

நன்றி சிறகு: http://siragu.com/?p=14656

திரைகடலோடிய தமிழ்ச்செல்வங்கள்

தேமொழி 

Jul 26, 2014

பிற நாட்டு அருங்காட்சியகங்களில் நம் நாட்டு கலைப்பொருட்கள் இருந்தாலும் அதை நாம் சென்று பார்த்து மகிழும் வாய்ப்புகள் நமக்குக் குறைவு. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு முறையும் முன்னேறிவிட்ட இக்காலத்தில் இக்குறை நீக்கப்பட்டுள்ளது. பல உலகப்ப்புகழ் பெற்ற அருங்காட்சியகங்கள் தங்களிடம் உள்ள கலைப்பொருட்களை மிகத் தெளிவான படங்களாக எடுத்து, அந்த கலைப்பொருட்களைப் பற்றிய தகவலையும் இணைத்து தரவுகளாக உருவாக்கி வைத்துள்ளன. நாமும் நம் கணினி மூலம் இணைய வழியாக அந்த அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் தேடி அவைகளைக் கண்டு மகிழலாம். ஒருவகையில் இது சற்றே குறைதீர்க்கும் வழிதான் என்றாலும் நேரில் காண்பது போல இருக்காது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகமான “ரைய்க்ஸ் மியுசியம்” [டச்சு மொழி உச்சரிப்பு] (Rijksmuseum of Netherlands in Amsterdam, Netherlands; in English Rijksmuseum means State Museum) பல இந்தியக் கலைப்பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளது. இவைகளைப் பற்றிய தகவல்களும் அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது (https://www.rijksmuseum.nl/).

நெதர்லாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியகங்கள் பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் சிறப்பு பெற்றவை. ஆம்ஸ்டெர்டாம் நகரில் “ரைய்க்ஸ் மியுசியம்” கலைக்கும் வரலாற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவ்வகைப் பொருட்களை உள்ளடக்கியது. பிரெஞ்சு நாட்டின் “லூர்வ்” (The Louvre) என்ற அரச அருங்காட்சிகத்தைப் போலவே தங்கள் நாட்டிற்கும் ஒரு தேசிய அருங்காட்சியகம் உருவாக்க விரும்பிய நெதர்லாந்து அரசு, 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் திட்டமிட்டு, 1800 ஆம் ஆண்டில் துவக்கபட்டது இந்த அருங்காட்சியகம். முதலில் ஓவியங்கள் மட்டுமே கொண்டிருந்த இந்த அருங்காட்சியகம் பிற்காலத்தில் பலவகை கலைப் பொருட்களையும் சேகரிக்கத் தொடங்கியது. பல மன்னர்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்ப பல கட்டடங்களுக்கு அருங்காட்சியகத்தை மாற்றிய பின்னர், தேவையின் பொருட்டு ஒரு தனிக்கட்டட்டம் கட்டப்பட்டு, தற்பொழுது இருக்கும் இடத்தில் 1885ஆம் ஆண்டு முதல் இயங்கி வருக்கிறது.

அருங்காட்சியகம் கொண்டுள்ள கலைப்பொருட்களில் உலகின் பல்வேறு நாடுகளின் கலைப்பொருட்களும் அடங்கும். “ரெம்பிரான்ட்” (Rembrandt), ஃபிரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals), and “யோஹான்னெஸ் வெர்மீர்”Johannes Vermeer” போன்ற புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. சேகரிப்பில் உள்ள ஒரு மில்லியன் கலைப்பொருட்களின் காலம் பொது ஆண்டு 1200 – 2000 வரை ஆகும். இவற்றில் 8,000 கலைப்பொருட்கள் அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. “ஏஷியன் பெவிலியன்” (Asian pavilion) என்ற தனிப்பகுதியில் ஆசிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“ரைஸக்ஸ் மியுசியம்”இணையதளத்தின் தேடுபொறியில் “தமிழ்” (Tamil) என்ற சொல்லில் தேடினால் (https://www.rijksmuseum.nl/en/search?q=tamil&f=1&p=1&ps=12&imgonly=True) கிடைக்கும் ஒன்பது கலைப்பொருட்களைப் பற்றிய படங்களும் தகவல்களும் தொகுத்து இங்கே வழங்கப்படுகிறது. இவற்றில் எட்டு உலோகம், கல் மற்றும் மரம் கொண்டு படைக்கப்பட்ட   தமிழகச் சிலைகள். மரப்பலகையில் செதுக்கப்பட்ட இலங்கையில் இருந்து பெறப்பட்ட சிற்பம் ஒன்றும் இணையத்தேடல் வழியாகக் கிடைக்கிறது. இந்த இலங்கையின் மரச் சிற்பத்தில் தமிழ் எழுத்துக்களில் “சங்கரமூர்த்தி ஆசாரி” என்று சிற்பத்தினைச் செதுக்கிய சிற்பியின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: சிலைகளைப் பற்றிய தகவலாக இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டக் குறிப்புகள் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வமான குறிப்புகளின் மொழிபெயர்ப்பு.

0-rijksmuseum tamil

[1] சிவா நடராஜன்:

ஆக்கவும் அழிக்கவும் திறன் கொண்ட, சக்திவாய்ந்த சிவன் ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜர் உருவில் தோற்றமளிக்கிறார். அழகிய வேலைப்பாடுகளுடன் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட இந்த நடராஜர் சிலை விழாக்காலங்களில் உலா செல்லும் உற்சவமூர்த்தியாகும். இச்சிலையைச் சுமந்து செல்ல சிலையின் அடியில் உள்ளபீடத்தில் உள்ள வளையங்களின் வழியே கழிகளை நுழைக்கத் துளைகள் உள்ளன. நடராஜரின் காலடியில் அவர் அறியாமையை அழிப்பதை உணர்த்த அறியாமையின் குறியீடான குள்ள அரக்கனை மிதித்து நடனமாடுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அழல் சூழ்ந்த அண்டத்தில் நடனமாடுவதைக் குறிக்கும் வகையில், நான்கு கைகளையும், விரிந்து பரந்த சிகையலங்காரத்துடன் ஒற்றைக்காலைத் தூக்கி சிவன் நடனமாடுவதாகக் காட்டினாலும்   சமநிலையில் இருக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

1-rijksmuseum tamil

தலைப்பு: சிவா நடராஜன் (Shiva Nataraja)

அடையாள எண்: AK-MAK-187

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 153.0cm × w 114.5cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1100 – 1200

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.677

[2] அரக்கனைக் கொல்லும் துர்க்கை:

மரத்தேரின் ஒரு பகுதியான இருக்ககூடும் என நம்பப்படும் அரக்கனைக் கொல்லும் துர்க்கை கடவுளின் புடைப்புச் சிற்பம்

2-rijksmuseum tamil

தலைப்பு: அரக்கனைக் கொல்லும் துர்க்கை (Durga killing a demon)

அடையாள எண்: AK-RAK-1987-9

ஆக்கப் பொருள்: மரம்

அளவுகள்: w 25.5 cm × d 15 cm

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1750 – c. 1800

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.914

[3] பிறைசூடிய சிவன்:

வலது கையினால் ‘அச்சம் தவிற்க’ என்ற அபய முத்திரையையும், இடது கரத்தினால் ‘அருள் வழங்கும்’ வரத முத்திரையையும் காட்டும் சிவன், மற்ற இரு பின்கரங்களிலும் மானையும் மைழுவையும் ஏந்தி இருப்பதாக இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருக்கும் ஈசனின் சிலைகள் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும்.

3-rijksmuseum tamil

தலைப்பு: பிறைசூடிய சிவன் (Shiva with the Moon in his Hair)

அடையாள எண்: AK-MAK-1291

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 40 cm × w 24 cm × d 10.5 cm

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1000 – c. 1200

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.910

[4] நந்தி:

பலதெய்வ வழிபாடுடைய இந்து மதத்தில் தெய்வங்கள் தங்கள் பண்புகளை ஒத்த விலங்குகளை ஊர்திகளாகக் கொண்டிருப்பர். சிவனின் ஊர்தியான காளை சிவனின் ஆற்றலையும் ஆண்மையையும் குறிக்கும் ஊர்தியாகும். கடவுளை சுமக்கும் நந்தி அந்த தகுதியைக் காட்டும் வகையில் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சாம்பல் வண்ண மணற்பாறையில் செதுக்கப்பட்ட இந்த நந்தி, கோயிலில் மூலவரை நோக்கி சிறுமண்டபத்தில் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்திருக்கலாம்.

4-rijksmuseum tamil

தலைப்பு: நந்தி (Recumbent bull)

அடையாள எண்: AK-MAK-520

ஆக்கப் பொருள்: மணற்பாறை (sandstone)

அளவுகள்: h 63.0cm × w 64.0cm × d 29.0cm × w 140kg.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1000 – 1100

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.2190

[5] கணேசா :

வெற்றியைத்தரும் கணேசர் மிகவும் புகழ் பெற்ற இந்துக்கடவுளும், கோயிலில் நுழையும் பொழுது முதலில் வணங்கப்படும் கடவுளுமாவார். எச்செயலையும் செய்யும் முன்னர் அவர் வணங்கப்படுவார், காட்டாக பயணம் அல்லது வணிகம் போன்றவைகளைத் துவக்கும் பொழுது அவரை வணங்கிவிட்டே அவை தொடங்கப்பெறும். கணேசரின் கையில் உள்ள மோதகம் அவரது அடங்காப்பசியையும் நல்வாய்ப்பையும் குறிக்கும். அவரது வலது காலடியில் அவரது ஊர்தியான மூஞ்சுறு காட்டப்பட்டுள்ளது. ஒரு சதுர மேடையில் இரட்டைத்தாமரை இருக்கையில் அமர்ந்திருக்கும் கணேசர், தனது நான்கு கரங்களில் அவரது வழக்கமான கொழுக்கட்டை, அவருடைய உடைந்த தந்தம், பாசக்கயிறு, மழுஆயுதத்துடனும் அவருக்கே உரிய சிறப்புமிக்க மகுடமணிந்த யானைத் தலையுடனும், அவரது வழக்கமான அணிகலங்களுடனும் காட்சி அளிக்கிறார்.

5-rijksmuseum tamil

தலைப்பு: கணேசா (Ganesha)

அடையாள எண்: AK-RAK-2013-1

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 9.5cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1600 – c. 1699

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.519080

[6] இராமருக்கு முடிசூட்டும் விழா :

[குறிப்பு: இச்சிலையைப் பற்றிய குறிப்புகள் எதையும் அருங்காட்சியகம் வழங்கவில்லை. ]

6-rijksmuseum tamil

தலைப்பு: இராமருக்கு முடிசூட்டும் விழா (Relief with a depiction of the enthroned King Rama)

அடையாள எண்: BK-VBR-530

ஆக்கப் பொருள்: No details

அளவுகள்: h 15.4cm × w 10.1cm × d 3.2cm

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1700

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.368110

[7] கருப்பண்ணசாமி:

இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்டு வணங்கப்படும் சிவன், திருமால் போன்ற இந்துக்கடவுள்களுடன், பற்பல வட்டாரங்களில் வணங்கப்படும் நாட்டுப்புற தெய்வங்களும், சிறுதெய்வங்களும் பலதெய்வ வழிபாட்டில் அடங்குவர். கருப்பு, கருப்பர் அல்லது கருப்பண்ணசாமி என அழைக்கப்படும் நாட்டார் குலதெய்வமான கருப்பண்ணசாமி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கிராமப்புறத்தில் வாழும் மக்களால் வணங்கப்படுபவர். ஐயனாரின் உதவியாளராகக் கருதப்படும் கருப்பண்ணசாமி, கிராமங்களின் காவல் தெய்வமாவார். நிமிர்ந்து நிற்கும் இவர் தனது வலது முழங்காலை சற்றே வளைத்து நின்று, வலது கையில் உயர்த்திப் பிடித்த அரிவாளுடனும், இடது கையில் ஊன்றிய கோலுடனும், இடைக்கச்சையில் வாளின் உறையுடனும், அதனருகில் அதைக் கண்காணிக்கும் கிளியுடனும் காட்சி அளிக்கிறார். அச்சமூட்டும் கருப்பண்ணசாமிக்கு குருதியும் இறைச்சியும் பலிகொடுக்கப்பட்டுச் சமாதானப்படுத்தப்படுவார். அதற்குப் பதிலாக அவர் வயல்வெளிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பார். கருப்பண்ணசாமி தனது வலது கையில் ஏந்தியிருக்கும் அரிவாள் அவர் பாதுகாப்பளிப்பவர் என்பதையே குறிக்கிறது.

7-rijksmuseum tamil

தலைப்பு: கருப்பண்ணசாமி (Karuppannasamy)

அடையாள எண்: AK-MAK-1736

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 14cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1600 – 1700

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

இணையச்சுட்டி: https://www.rijksmuseum.nl/en/collection/AK-MAK-1736

[8] சிவா நடராஜா:

நடனமாடும் நாட்டிய அரசர் நடராஜனின் திருவுருவம் சிவனின் புகழ் பெற்ற ஒரு திருவடிவம். தமிழகத்தின் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அளவில் சிறிய இந்த வெண்கலச் சிலை, அருங்காட்சியகக் காட்சியில் மையமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெரிய சிலையைப் போல ஒரு கோயிலில் வைத்து வணங்கப் பாடாது, வீடொன்றின் தனி வழிபாட்டறையில் வைத்து வணங்கப் பெற்றிருகலாம். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை தமழகத்தை ஆட்சி செய்த புகழ்பெற்ற சோழப் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்டச் சிலை இது.

8-rijksmuseum tamil

தலைப்பு: சிவா நடராஜா (Shiva Nataraja)

அடையாள எண்: AK-MAK-189

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 10.8cm × w 7.0cm × d 3.9cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1200 – c. 1300

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.679

[9] ரதி மன்மதனின் மரச்சிற்பம்:

இது செவ்வக மரப்பலகையில் செதுக்கப்பட்டுள்ள ரதி மன்மதனின் புடைப்புச் சிற்பம்.   இரு சதுர தளங்களில் இடது பக்கம் காதலின் கடவுளான மன்மதனும், வலது பக்கத்தில் சிற்றின்ப தெய்வமான ரதியும் முறையே தங்களது கிளி மற்றும் அன்ன வாகனகங்களில் காட்சி அளிக்கிறார்கள். சிற்பத்தின் விளிம்புகள் கோர்த்த மணிச்சரம் பாதிக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கப் பட்டிருக்கிறது. மேற்பகுதியில் “சங்கரமூர்த்தி ஆசாரி” என்ற பெயர் பொறிக்கப் பட்டுக்ள்ளது. இதுபோலப் படைப்புகளில் தங்கள் பெயரைப் பொறிக்கும் வழக்கம் தமிழத்தில் மிகவும் அரிது, தென்னிந்திய வழக்கத்தில் இல்லாத ஒன்று.

(குறிப்பு: இது ஸ்ரீலங்கா பகுதியில் இருந்து பெறப்பட்ட தமிழர் படைப்பு என்பது இக்கட்டுரையில் முன்னரே குறிபிடப்பட்டுள்ளது)

9-rijksmuseum tamil

9-rijksmuseum tamil-1

தலைப்பு: ரதி மன்மதனின் மரச்சிற்பம் (Panel with Kama and Rati)

அடையாள எண்: AK-MAK-1730

ஆக்கப் பொருள்: மரப்பலகை

அளவுகள்: h 5cm × w 12cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1700 – 1800

இடம்: ஸ்ரீலங்கா

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.475009

இச்சிற்பங்களைப் பற்றி அருங்காட்சியகம் கொடுத்துள்ள தகவலைத் தவிர மேலதிகத் தகவல் தெரிந்தோர் அதனை அருங்காட்சியகத்தின் கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் (inform more details: collec...@rijksmuseum.nl), குறிப்பாகப் பட எண் 6 இல், ராமரின் மகுடம் சூட்டும் விழா குறிப்பற்றுபார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகத் இருக்கிறது, விவரம் தெரிந்தோர் கொடுத்து உதவலாம். அச்சிலையில் கடவுளின் அவதாரமாக அறியப்படும் அயோத்தியின் அரசர் ராமர், அரசியார் சீதையுடனும், தனது மூன்று இளவல்களில் இருவர் சாமரம் வீச, மற்றொரு இளவல் வெண்குடை ஏந்த, அவருடைய குருக்களான வசிட்டர், மற்றும் விசுவாமித்திரர் முன்னியிலையில் பட்டமேற்று அருள் புரிகிறார். அவரது வலது காலை அவரது தீவிர பக்தன் அனுமன் தாங்க, பிற வானரப்படைகளும், பக்தர்களும் வணங்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. படத்தில் பார்வைக்கு சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகவும் தெரிகிறது, ஆனால் உறுதியாகக் கூற இயலவில்லை .

“ரைய்க்ஸ் மியுசியம்” கொண்டிருக்கும் கலைப்பொருட்களின் சிறப்பு என்னவெனில், இந்த அருங்காட்சியின் கலைப்பொருட்கள் யாவும் காப்புரிமை நீக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலையார்வலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அருங்காட்சியகத்தின் “ரைய்க்ஸ் ஸ்டூடியோ” (Rijksstudio) என்ற அமைப்பில் தங்களை உறுப்பினர்களாக ஆக்கிக்கொள்பவர்கள் அருங்காட்சியகம் வழங்கும் மேன்மையுடன் மிகத்தெளிவான படப்பிடிப்புடன் சேகரிக்கப்பட்டுள்ள படங்களை மற்றவர்களுடன் தடையின்றிப் பகிர்ந்து கொள்ளலாம், தங்களுக்கும் தரவிறக்க்கிக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கலைப்பொருட்களை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழே தொகுத்து ஆராயலாம். எடுத்துக்காட்டாக, இக்கட்டுரையில் தமிழகத்தின் தொடர்பான கலைப்பொருட்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளது போலவே, இந்தியக் கலைப்பொருட்கள், ஆசியச் சிற்பங்கள், வெண்கலச் சிற்பங்கள், சிவன், பார்வதி, திருமால், துர்க்கை, புத்தர், இந்துக் கடவுள்கள், குறிப்பிட ஓர் ஓவியரின் ஓவியங்கள், தாமரை, சிங்கம், விலங்குகள், பறவைகள் எனக் கற்பனையின் எல்லையைத் தொடும் வரை வகைபிரித்து ரைஸக்ஸ் ஸ்டூடியோ தளத்திலும் தொகுக்கலாம். மற்ற “ஃபேஸ்புக்”, “ட்விட்டர்”, “பின்ட்டெரெஸ்ட்” (Facebook, Twitter, Pinterest ) போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

get rijks museum

get rijks museum2

தரவிறக்கிய படங்களை நமது விருப்பம் போல அவற்றை முழுமையாகவோ, அல்லது அவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டும் தெரிவு செய்தோ எப்படியும் பயன்படுத்தலாம். நமது ஆடைகளிலும், சுவரொட்டிகளும், கைபேசி மேலுரைகளிலும் அச்சிட்டுக் கொள்ளலாம் இப்படங்களைக் கொண்டு உருவாக்கும் பொருட்களை ரைய்க்ஸ் ஸ்டூடியோ தளத்திலும் காட்சிப்படுத்தலாம்.

மற்றொரு குறிப்பிடத்தக்க தமிழக வரலாற்று ஆவணங்கள் இருப்பதும் நெதர்லாந்தின் அருங்காட்சியகத்தில்தான். *நெதர்லாந்தின் தேசிய நூலகங்களில் ஒன்றான லெய்டன் ( Leiden) நகரத்தில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தில் இரு தமிழகச்செப்பேடுகள் உள்ளன. இவை புகழ்பெற்ற சோழர்கால “ஆனைமங்கல செப்பேடுகள்” ஆகும். லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதால் இவை லெய்டன் செப்பேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் அளவில் பெரியசெப்பேடு முதலாம் இராஜராஜனது காலத்தில் வெளியிடப்பட்டது. இராஜராஜ சோழ மன்னர் ஆனைமங்கலம் என்ற ஊரை, நாகப்பட்டினத்தில் பௌத்தவிகாரம் எடுப்பதற்காகக் கடாரத்து மன்னன் சூளாமணிபன்மனுக்குத் தானமாகக் கொடுத்ததால் இது ஆனைமங்கலம் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. அளவில் சிறிய செப்பேடு முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டுள்ளது. இச்செப்பேடு மொத்தம் 3 ஏடுகளையும் 52 வரிகளையும் கொண்டுள்ளது. [2] இச்செப்பேட்டில் உள்ள செய்திகள் தன்னார்வத் தொடர்கள் தட்டச்சி வழங்க, அவை ப்ராஜெக்ட் மதுரை வலைதளத்தில் (http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0329.html) பதிவேற்றப் பட்டுள்ளது. முன்னாள் அரசு தொல்லியல் துறை இயக்குனர், நடன காசிநாதன் அவர்களின் நூலும் ஆனைமங்கல செப்பேடுகளின் செய்திகளைத் தொகுத்து வழங்குகின்றது.

சான்றுகளும் குறிப்புகளும் :

[1] National Gallery of Australia removes statue after smuggling scandal, Andrew Taylor

Arts reporter, The Sydney Morning Herald March 27, 2014,

http://www.smh.com.au/entertainment/art-and-design/national-gallery-of-australia-removes-statue-after-smuggling-scandal-20140326-35iuv.html

[2] http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/leighton.html

*ஹாலண்டு நாடு என்று பொது வழக்கில் குறிப்பிடுவதும் உண்டு, ஆனால் ஹாலண்டு என்பது நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதியே, இந்தியாவில் என்பதற்கும் தமிழகத்தில் என்று சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு போன்றது இது.

Reply all
Reply to author
Forward
0 new messages