சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில் இல்லை.
அதன் நலம் பாராட்ட, சங்கதம் என்னும் ஊடாடி தேவையும் இல்லை. [நம்மூரில்
சங்கதப் பெயர்கள் மிகுந்தது களப்பாளர் காலத்திலும், அதற்குப் பின்னாலும்
தான்.] சிலம்பில் ஆசிரியர் கூற்றாகச் சில சமயக் கருத்துக்கள் (குறிப்பாக
செயினம், ஆசீவகம்) இருக்கின்றன என்றாலும், விண்ணவமும் சேர்த்து மற்ற
சமயங்களின் செய்திகள் கதையோட்டத்தில் தன்னேர்ச்சியாய்த்தான் சொல்லப்
படுகின்றன. விண்ணவப் பின்புலம் சிலம்பிற்குக் கிடையவே கிடையாது, அது
சொல்ல வந்த மையக் கருத்து செயினமா, ஆசீவகமா என்பதில் வேறுபாடே ஒழிய, அதன்
தலைமாந்தருக்கு விண்ணவச் சாயல் கொண்டு வருவது முற்றிலும் கற்பிதம்.
வள்ளுவரைப் பல சமயத்தாரும் தங்களவர் என்று சொல்ல முயன்று, குறளில்
விளக்கம் காண்பதுபோல், இங்கு நாக. கணேசன் விண்ணவச் சாயலுக்கு முயலுகிறார்
என்றே தோன்றுகிறது. இனி என் மறுப்பு இங்கே [நாலைந்து பகுதிகளாய்
அனுப்புகிறேன்.] மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் உரையாடலாம்.
முதலில் முழுமை கருதி அவர் மடலை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்.
___________________________________________
கர்ணகம் என்றால் தாமரைப் பொகுடு, பெண்பாலில் கர்ணகீ என்றாகும்.
இலக்குமிக்கு ஒருபெயர் என்பதை ஆனந்த குமாரசாமி நூல்களில் அறிந்தேன்.
மஹாபாரதம், பாகவதம்
காவியங்களில் கர்ணகம் என்ற சொல் உள்ளது. மோனியர்-வில்லியம்ஸின் வடமொழி
அகராதியிலும் இச்சொல் இருக்கிறது. பாலக - பாலகீ, தேவக - தேவகீ என்பதுபோல்
கர்ணகீ (= ஸ்ரீ)
வடசொல். தமிழில் கண்ணகி என்று மருவும். காப்பியக் கண்ணகி பெயரை
அலர்மேல்மங்கையுடன் தொடர்புபடுத்தியவர் முதன்முதலாக மு. ராகவையங்கார்
ஸ்வாமி. அவரது ஆராய்ச்சித் தொகுதியில் பார்க்கலாம். கர்ணகீ > கண்ணகி -
எவ்வாறு? 10 ஆண்டுகளுக்கு முன் சில உதாரணங்கள் கொடுத்தேன்:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R4239
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R14635
அப்போது, இந்திய/மொழியியலார் ஆஸ்கோ பார்ப்போலா குறிப்பிட்டார்:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9906&L=INDOLOGY&P=R4492
”The Prakritic consonant assimilation may be due to a substratum
influence of Dravidian originally spoken in North India: when people
speaking a language with few or very simple consonant clusters speak
another language with complicated consonant clusters such as Sanskrit,
this is what tends to happen. I think the Tamil assimilation provides
a parallel showing that this is indeed a likely hypothesis.”
மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி தெய்வம் ஆனாள் என்கிறது சிலம்பு.
அம்மலைத் தொடர்களில் வாழும் மமைவாசிகள் (உ-ம்: முதுவர்) பலரும்
கண்ணகியைக் கர்ணகி என்றுதான் வழிபடுகின்றனர். மூத்தாந்தரை கர்ணகி அம்மன்
கோவில்: பாலைக்காட்டில் கர்ணகி கோவில் பிரசித்தமானது.
http://en.wikipedia.org/wiki/Valliya_Aarattu_-_Karnaki_Amman_Temple
http://palakkad.nic.in/tourism.htm
தெருக்கூத்து நாடகங்களில் ’கோபாலஞ்செட்டியாரும், கர்ணகை அம்மாளும்
மதுரைக்குச் சென்ற கதை’ என்று காலங்காலமாக நடிக்கப்படுகின்றன. பார்க்க:
வன்னியகுலம் வீரபத்திர நாயகர் (செட்டிபட்டி), கோவிலன் வட்டப்பாரையில்
வதைபட்ட கோவிலன் - கர்ணகி நாடகம். சென்னை,107 பக்கம்,1912. மேலும், (அ)
தாயம்மாள் அறவாணனின் களப்பணித் தொகுப்பு:
http://www.viruba.com/final.aspx?id=VB0000817
கண்ணகி மண்ணில், இன்றைய பூம்புகாரில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களும்,
கதைகளும், கர்ணகி கதைப்பாடல்களும் கள ஆய்வில் நேர்முகமாகத் திரட்டியவை.
2003, 248 பக்கம்.
(ஆ) தி. நடராசன், கோவலன் கர்ணகை கதை, 1979, மதுரை.
சமண சமயத்தைச் சேர்ந்த இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில
பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப்
படைத்திருக்கிறார் எனலாம். சமணர்களின் இராமாயணம் சற்றே மாறுபடும், அதுபோல
சிலம்பு கிருஷ்ண சம்பந்தமான பெயர்களை வைத்து எழுதப்பட்ட ஒரு ’நாவல்’.
கண்ணகி சமணசமயஞ் சார்ந்த செட்டிகுலப் பெண்திலகம் என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக
நாவலர் குறிப்பிடுவார். எஸ். வையாபுரிப்பிள்ளை சிலம்பைச் சமணக் காப்பியம்
என்பார்கள்:
http://groups.google.com/group/minTamil/msg/7172ac747da6267e
கோவலன் (> கோபாலன்), மாதவி (குருக்கத்தி - வசந்தமல்லி என்னும் கொடி.
முல்லைவகையுள் ஒன்று. தமிழில் முல்லைக்கு மாற்றாகப் பயன்படும் மலர்,
முல்லைநில கோபியருள் ஒருத்தி), மாதவி - மாதவனின் காதற் பரத்தை. முல்லை
என்பதை மாதவி என்று வடமொழியில் மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்:
திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத் தாது
மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி -
அப்பர் தேவாரம்.
கண்ணகி < கர்ணகீ, தாமரைப்பொகுடு - இலக்குமி (ஸ்ரீ) வாழிடம்.
பத்மேஸ்திதாம், பத்மவர்ணாம், பத்மானனே, பத்ம ஊரு, பத்மாக்ஷி, பத்ம
ஸம்பவே, பத்மப்ரியே, பத்மினீ, பத்ம ஹஸ்தே, பத்மாலயே, பத்மதலாயதாக்ஷீ,
பத்மபத்ராயதாக்ஷீ, பத்மாசனஸ்த விபுல கடீதடீ,
கமலாசனஸ்தாம்.....கனகதாராவில் ”ஸரஸிஜநிலயே, ஸரோஜஹஸ்தே......” கம்பனில்
“செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை”.
தமிழ்த்தாயின் முன்னோடி கண்ணகியே.இளங்கோவின் ஊர் கரூர் (வஞ்சி) ஆகலாம்,
சேரர்கள் கொல்லி காவலர்கள். சங்ககால வஞ்சி = கரூர் தான். கண்ணகி
சோழநாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் நீதி கேட்டு, சேர நாட்டில் தெய்வம்
ஆனாள் என்று தேசிய உணர்வை ஊட்டப் பாடியிருக்கிறார். ஆனால் அதில் பல பழைய
நாட்டுப் புறக் கதைகளை
இணைத்து இந்தக் காவியம் (தமிழின் முதற் காவியம்) செய்து தந்துள்ளார்
என்று நினைக்கிறேன். “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான
“கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக்
குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி
உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” (S.
V. Rajadurai)
http://nmuralitharan.blogspot.com/2006/09/blog-post_12.html
சிலம்பின் கதைமாந்தரின் பெயர்களில் கிருஷ்ணாவதாரப் பின்புலம் பற்றி
சிலம்பின் நான்கு உதாரணங்களும், அதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில்
ஒன்றும் காட்டுவாம்.
(1) கண்ணகி இலக்குமியின் வடிவமானவள்:
-----------------------------------
புகார்க் காண்டம், மங்கல வாழ்த்து
கண்ணகியின் குலமும் நலமும்
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
*போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்*,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.
தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு கண்ணகி வடிவை
யொக்குமென்றது அற்புதமான இடம். இளங்கோ கண்ணகியை திருமாமகளின் வடிவம்
என்பது இந்து சமயத்தில் அவதாரம் என்று சொல்வர்.
(2) பாற்கடல் கடைந்த போது பிறந்த இலக்குமி (கண்ணகி)
--------------------------------------------
சந்திரனின் உடன்பிறப்பு என்பது.
--------------------------
மனையறம் படுத்த காதை
கண்ணகியின் நலத்தைக் கோவலன் பாராட்டுதல்
”தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை:
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக - திரு நுதல் ஆக என”
இளம்பிறை சிவபெருமான் அணிந்ததே. ஆனால் உன் உடன்பிறப்பு ஆனமையால் மகாதேவன்
உன் திரு நுதல் ஆக்கினான். பிறை திருவொடு பாற்கடலிடைப் பிறத்தலின் இவளைத்
*திருமகளாக மதித்து* இங்ஙனம் கோவலன் கூறினான் என்பது சிலம்பின் உரை.
கன்னட நாடு (Mme. Frere, Old Deccan days) கண்ணகி சந்திரா என்ற பெயரில்
வழிபடப்படுகிறாள்.
மாதவியை முல்லை என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். இலங்கையில் (R.
Gombrich) கண்ணகிக்குப் பெயரும் சந்திரா. பூரணை என்பதும் சந்திரனால்
கண்ணகியைக் குறித்த சொல்.
பௌர்ணமியன்று கண்ணகிவிழா நடக்கிறது. கம்பம் - தேக்கடி மங்கலாதேவி கோட்டம்
சோழர் கல்வெட்டில் ஸ்ரீபூரணகிரி என்று அழைக்கப்படுகிறது.
தேவர்களால் தொழப்படுகின்ற இளம்பிறை, சிவன் தனது சடையில் எடுத்துச்
சூடியதால் சிறப்புற்றது; ஆயினும், திருமகளோடு பாற்கடலிலிருந்து
தோன்றியதால் திருமகளின் மறுவடிவமாகிய கண்ணகியின் உடன்பிறப்பாகின்ற
உயர்வும் அடைந்தது எனச் சிலப்பதிகாரம் (2:38-40) குறிப்பிடுகின்றது.
(3) கண்ணபிரானும், கோவலன் முன்சென்ம வரலாறுகளும்.
---------------------------------------------
சிலப்பதிகாரத்தில் சக்திவாய்ந்த மதுராபதி (கொற்றவை வடிவினள்)
கண்ணகிக்குப் பின்புறமாகத் தோன்றி கோவலன் கொலையுண்ட காரணத்தை முன்சென்மச்
செயலாகப் பேசுகிறது. இதில் கோவலன் - கண்ணபிரான் தொடர்புகள் விளக்கமாய்ச்
சுட்டிக் காட்டப்படுகின்றன.
மதுரையைக் கண்ணகி தீயழல் மடுத்த அழற்படுகாதையின் பின் நிகழும்
கட்டுரைகாதையில் அர்த்தநாரீசுவரராகத் தோன்றும் மதுராபதித் தெய்வம்
கண்ணகியின் முன் வர அஞ்சி அவள் பின்புறத்தே தோன்றி “நங்கையே! தோழியே!”
என்று அழைத்தது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். தீயின் வெம்மையைப்
பொறாமல் மதுராபதித் தெய்வம் தோன்றியது கண்ணகி இருக்குமிடத்தில். ஆனால்
உடனே அவள் முன்தோன்றவில்லை.
அந்த மதுராபதித் தெய்வத்தின் கோலம் என்ன? சடையில் பிறைநிலா சூடிய சிவன்
ஒரு பாகம்; குவளைமலர் போலும் கருங்கண்களும் தூயஒளிவீசும் முகமும் உடைய
பார்வதி ஒருபாகம். இடப்புறம் பார்வதியாக நீலநிறம் இருப்பினும் வலப்பாகம்
பொன்னிறம் போன்ற சிவன் மேனி. இடக்கையில் பொற்றாமரையை ஏந்தினாலும்
வலக்கையில் அழகிய சுடர்விடும் வளைந்த வாள். வலக்காலில் வீரக் கழலைக்
கட்டியிருந்தாலும் இடக்காலில் சிலம்பொலிக்கிறது. [கட்டுரை காதை: 1-10]
“சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி;
...
இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியள்;
இடக்கைப் பொலம்பூந் தாமரை ஏந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்;
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள்”
அத்தகைய கடவுளர்க்கெல்லாம் கடவுள் ஆகிய அர்த்தநாரீசுவரக் கோலம் கொண்ட
மதுராபதி கொற்கையும் குமரியும் குற்றாலம் என்னும் பொதியில் மலையும் ஆளும்
பாண்டியர் குலத்தெய்வமும் ஆவாள். ஆயினும் கண்ணகியின் முன்னால் உடனே
தோன்றவில்லை. மதுராபதித் தெய்வத்திற்குக் கண்ணகியின் சீற்றத்தைக் கண்டு
அச்சம் கலந்த மரியாதை. எனவே பின்புறம் இருந்து பேசுவது தகுதிக்கு
ஒவ்வாதது ஆனாலும் கண்ணகியின் மேல் உள்ள மதிப்பினால் தன்னைத் தாழ்த்திக்
கொள்கிறது மதுராபதி. ஆதலால் ஒருமுலை இழந்தவளும் இலக்குமிகரம் விளங்கும்
பெரிய பத்தினியும் துன்பத்தால் சுழலும் அழகிய முகமும் தேர்ந்த
அணிகலன்களும் உடைய நங்கையாகிய கண்ணகியின் முன்னால் நில்லாமல் அவள்
பின்னிலையில் தோன்றியது மதுராபதி. [கட்டுரை காதை: 14-16]
“ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றி”
அதற்கு உரையெழுதிய ந.மு.வெங்கடசாமி நாட்டார் அவர்கள் “கற்புடைத் தெய்வம்
ஆகலானும் வெகுளியோடு இருந்தனள் ஆகலானும், அவள் முன்னர்த் தோன்றாது
பின்னர்த்
தோன்றினாள்” என்று கூறுகிறார். தோன்றிய அந்த மதுராபதி கண்ணகியை “நங்கையே
கேள் என் கவலையை!” என்று அழைக்கிறது. அதைக் கேட்டுக் கண்ணகி தன்
திருமுகத்தைப் பின்புறம் திருப்பி “யார் நீ என்பின் வருகிறாய்? என்னுடைய
பெரிய துன்பத்தை நீ அறிவாயா?” என்று கேட்கிறாள்.
கோவலன் முன்சென்மத்தில் பணியாளாக இருந்தது வசு, குமரன் என்னும் இரு
பங்காளி மன்னர்களிடையேயாம்.
”வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
[...]
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய வேந்தர்” (கட்டுரை காதை, 139, 142-144).
வசுவின் குமரன் வாசுதேவ கிருஷ்ணன் ஆயிற்றே!
வசு, குமரன் என்னும் அரசர்ளின் அடியான்
கோவலன் என்றது கிருஷ்ண பரமாத்மாவைப்
பூடகமாய்ச் சுட்டியதென்க. கண்ணனையே
விஷ்ணுவாக வழிபடல் தேவாரத்தில் கூடக்
காணலாம். (1) கோவலன், நான்முகன்
நோக்க ஒணாத குழகன் (தேவா. 3.101.9)
(2) கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக்
குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
(தேவா. 6.3.10).
”முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன் அக் கோவலன்”
(கட்டுரை காதை, 152-154).
’குடவல இடவல கோவல காவல’ - பரிபாடல்.
மதுராபதித் தெய்வம் கோவலனின் முந்தைய பிறப்பில் அவனுக்குப் பெயர் பரதன்
என்கிறது. தசாவதாரங்களில் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்திற்கு
முன்னால்தானே. பரதன் ராமனின் தம்பி. பலராமன்-சங்கர்ஷணனின் தம்பி
கிருஷ்ணன்-கோவலன். வசு என்னும் மன்னற்குக் கோத்தொழில் செய்யும் பரதன்
ஒருவனை ஒற்றன் எனக் கருதிக் கொலைகுற்றம் சாட்டி அழித்ததால், அத் தீவினை
காரணமாக, அந்தப் பரதன் பின்னாளில் பூம்புகாரின் கோவலன் ஆகப் பிறந்தான்
என்னும்போது, பழைய இதிஹாசப் பெயர்களை இணைக்கிறார் அல்லவா?
சேர மன்னன் குலசேகர ஆழ்வாரும் கண்ணன் ஆகிய கோவலன் குணங்களைப் பாடுகிறார்.
மூன்று உதாரணங் காட்டுவாம்.
(அ) கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக்
கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால்
மருவி மனம் வைத்து, மற்றொருத்திக்கு
உரைத்து, ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னைப்
புணர்தி; அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே
வளர்கின்றதால் உன்தன் மாயை தானே
(ஆ) ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதியோடே
நீமிகு போகத்தை நன்கு உகந்தாய்
(இ) என்னை வருக எனக் குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
மற்று என்னைக் கண்டு உறழா நெகிழ்ந்தாய்.
இதுபோலவே கோவலன் பண்பை சிலம்பு (5:200-201) பேசுகிறது:
“குரல் வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல”.
(4) திருமா உண்ணி - கண்ணகி என்னும் பத்தினித் தெய்வம்
---------------------------------------------
திருமா மகள் = இலக்குமி.
திருமாமகள் கேள்வா! - நம்மாழ்வார்
நா வீற்று இருந்த புல மா மகளோடு நன் பொன்
பூ வீற்று இருந்த திருமாமகள் புல்ல - சிந்தாமணி
தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் - மணவாளமாமுனி
இதுபோலவே, திருமாமகள் எனும் பதத்தில் உள்ள ’மகள்’ என்னும் சொல்லின்
பகரியாக (substitute) திருமா பத்தினி, திருமாமணி என்பார் இளங்கோ.
”ஒருமுலை குறைத்த திருமா பத்தினி” - சிலம்பின் கட்டுரை காதை.
”இவளோ,
கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒருமா மணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப” (வேட்டுவவரி).
’திருமா உண்ணி’ நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf.
உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது
இன்றைய மலையாளம்.
(5) மணிமேகலை கண்ணகியை வழிபடல்:
---------------------------------------------
கோயில் கொண்ட கண்ணகி சிலையை மாதவியின் மகளான மணிமேகலை வந்து வணங்கி
நின்றாள் என்றும், கண்ணகி மணிமேகலைக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார்
என்றும் சாத்தனார் எழுதிய மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. அதிலும்
சிலம்பில் இருப்பதுபோல, மதுராபதித் தெய்வம் கோவலனின் முன்னோன் பெயர்
பரதன் என்றுள்ளது. பத்தினி கண்ணகியைத் தாய் என வணங்கும் மணிமேகலையின்
முற்பிறப்பில் பெயர் என்ன தெரியுமா? ”இலக்குமி!” என்று குறிக்கிறாள்
சுதமதி. கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தம் காப்பியத்தில் கண்ணகி
என்னும் சமணச்சி மகள் மணிமேகலையைத் (முற்பிறப்பில் மேகலை பெயர் இலக்குமி)
புத்த பிக்ஷுணியாகப் படைத்தார்.
முடிபுரை:
----------
சிலப்பதிகாரம் இயற்றிய சேரகுலதிலகர் இளங்கோ அடிகள் கண்ணகியை இலக்குமியின்
வடிவமாகப் பிறந்தவள் என்றும், அவள் கணவனுக்குக் கண்ணபிரான் பெயராகிய
கோவலன்
என்று சூட்டித் தன் ஒப்பற்ற முத்தமிழ்க் காப்பியத்தைச் செய்து தமிழர்க்கு
வழங்கியுள்ளார். தமிழகத்தில் கர்ணகி/கண்ணகி 1000 வருடம் முன்னர்
திருமாமகளாகவே பார்க்கப்பட்டதால்
அவளுக்குத் தனிக்கோயில்கள் ஏற்படவில்லை போலும். கிராமப்புறக் கோயில்களாக
இலக்குமி கோயில்கள் இல்லாமையால், இளங்கோ அடிகள் மறைந்த பல நூற்றாண்டுகள்
கழிந்தபின் கண்ணகி பத்தினித் தெய்வத்தின் சில எச்சங்கள் மாரியம்மைக்கும்,
பகவதி கோவில்களிலும் ஏறியுள்ளன. ஆனால், இளங்கோ அடிகளின் ஆதி
காப்பியத்தில் ஏனைத் தெய்வங்களைவிட கண்ணகிக்கும் இலக்குமிக்குமான
ஒப்பீடுகளே மிகுதியாக உள்ளன.
நா. கணேசன்
மார்ச் 9, 2009
________________________________________
அன்புடன்,
இராம.கி.
இனி இராம.கி..யின் மறுப்பு.
திரு.நா.க. கூறும் கர்ணக என்ற சொல்லிலிருந்தே தொடங்கலாம். மோனியர்
வில்லியம்சு அகரமுதலி pericarp of a lotus என்று பொருள் தந்து, இந்தச்
சொல்லாட்சி மகா பாரதத்திலும், பாகவத புராணத்திலும் இருப்பதைக் கூறும்.
[வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றில் இந்தச் சொல்லாட்சி கிடையாது போலும்.]
பாகவத புராணம் என்பது தெற்கே இருந்து எழுதப் பட்டதாகவே பலரும்
சொல்கிறார்கள். அதன் காலம் கி.பி. 650 - 1000 க்குள் இருக்கக் கூடும்.
சில அறிஞர்கள் பாகவதத்தின் ஆசிரியர், நாதமுனி காலத்தவர் என்றும்,
தென்னாட்டின் ”பத்தி” இயக்கச் சாரத்தைச் சங்கதத்தில் பதியவே, பாகவதம்
எழுந்தது என்றும், அதன் நடை வேத நடைபோற் தொனித்தாலும், மற்ற சான்றுகளை
வைத்துப் பார்க்கையில், அது வேத காலத்தில் எழ வாய்ப்பில்லை என்றும்
சொல்லுகிறார்கள். (Daniel Sheridan, The Advaitic Theism of the
Bhagavata Purana, South Asia Books, 1986) தென்னாட்டில் எழுந்த நூலில்
தென்னிந்தியச் சொல்லாட்சிகள் பலவும் ஊடுறுவப் பெரிதும் வாய்ப்புண்டு.
அடுத்து, பாரதக் கதை கி.மு. 800 களில் இருந்தே துணைக் கண்டம் எங்கணும்
சிறிது சிறிதாகப் பரவி யிருந்தாலும், மகா பாரதத்தின் முதற் பதிப்பு
பெரும்பாலும் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், இன்றைக்கும் இருக்கும்
வடிவில் இறுதிப் பதிப்பு வந்தது கி.பி. 4 ஆம் நூற்றாண்டு என்றும் தான்
அறிந்தவர் சொல்லுகிறார்கள். அதாவது 800 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாய்
இடைச்செருகல்கள் இருந்திருக்கின்றன. [விக்கிபீடியா அப்படித்தான்
சொல்லுகிறது.]
”கர்ணக என்ற சொல் சங்கதத்துள் எப்போது வந்தது?” என்று கேட்டால், கி.மு.
800-ல் இருந்து கி.பி.400-க்குள் எப்பொழுது வேண்டுமானாலும்
வந்திருக்கலாம் என்றே சொல்ல முடியும். அதே பொழுது, அச்சொல்லைக்
கேட்டவுடனேயே, வடமொழி என்று எப்படி உறுதியாய்க் காட்டுகிறார்கள் என்று
எனக்குப் புரியவில்லை. தமிழென்று வந்தால் ஆயிரம் சான்றுகளைக் கேட்கிறோமே?
(அப்படிக் கேட்பதில் கொஞ்சங் கூடத் தவறில்லை.) அதே அளவிற்கு வடமொழிச்
சான்றுகளைத் துழாவுகிறோமா என்றால் இல்லை. ஏன் அமைதியாக இருக்கிறோம்?
உரியவர்களைக் கேள்வி கேட்கலாமே? வேண்டுமானாற் சொல்லுகிறேன், உங்கள்
காதைக் கொடுங்கள், ”மோனியர் வில்லியம்சில் தாமரைப் பொகுட்டைக் குறிக்கும்
கர்ணகா என்ற சொல்லிற்கு வேரை அடையாளம் காட்டவில்லை.”]
கருணிகை என்ற சொல்லைத் தமிழ் அகரமுதலிகள் ”பூவினிற் கொட்டை, தாமரைப்
பொகுட்டு, காயின் நெற்று” என்ற பொருள்களில் பதிவு செய்திருக்கின்றன.
பூவினிற் கொட்டை, காயின் நெற்று ஆகியவை சங்கதத்தில் இல்லாப்
பொருட்பாடுகள். [சூரிய காந்திப் பூவின் நடுவில் இருப்பதும் கருணிகை
தான்.] இவற்றை ஓர்ந்துபார்த்தால், சொல்லின் வேர் தெற்கே இருப்பதற்கே
வாய்ப்பு உண்டு என்று புரியும். குல்>குரு>கரு என்ற சொற்பிறப்பில்
கருத்தல் என்ற வினை வித்துதற் பொருளைச் சுட்டும். கருத்தலின் பெயராய்க்
கருணம்> கரணம் என்பது அமையும். கருத்தல் = செய்யுதல் என்ற பொருளில்
கரணியம், கருமியம் என்ற தமிழ்ச்சொற்கள் “காரண - காரியங்களைக்”
குறிக்கும். நெற்றும் கூட ஒரு விதையே. கொட்டை என்பது விதைகளைக் கொண்டது.
தாமரை மலரின் இதழ்கள் காய்த்து விழுந்த பின்னும், தாமரைப் பொகுட்டு
புதலில் (=தாவரம்) நிலைத்து நிற்கும். பின்னால், முதிர்ச்சியடைந்த
பொகுட்டில் குழிவுகள் ஏற்பட்டு, உள்ளிருக்கும் முற்றிய, கரும் பழுப்பு
(black brown) நிறம் பெற்ற விதைகள், குழிவில் இருந்து கொஞ்சம்
கொஞ்சமாய்ப் பிரிந்து, பொகுட்டு தண்டோடு வளைந்து கீழ்நோக்கித் தொங்கும்
போது, நீருக்குள் விழுந்து மண்ணில் நால்ந்து கொள்ளும். கருணிகை என்பது
விதையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கொட்டை. அது தாமரையிலும் உண்டு.
கை என்பது குறுமைப் பின்னொட்டு (Diminutive suffix) [காட்டு: குடி>
குடிகை> குடிசை]
இதே போலக் கன்னுதல்>கன்னித்தல் கருத்தலைக் குறிக்கும். கன்னித்தல்
பழுத்தலைக் குறிப்பது இதன் தொடர்ச்சிதான். கனி என்ற சொல் இதன் வழி
பிறக்கும். கன்னித்தலைச் சங்கதம் ஜனித்தல் என்று உள்வாங்கும்.
கன்னுதல்>கன்னித்தலில், ககரம் போக்கி, ஈனுதல், ஈனித்தல் என்பவை எழுந்து
பிள்ளை பெறுதலைக் குறிக்கும். கன்னிகை என்ற சொல் பிள்ளை ஈனக் கூடிய
பெண்ணை மட்டும் அல்லாமல், விதைதரும் தாமரை மொட்டையும் குறிக்கும் என்றே
தமிழ் அகரமுதலிகள் பதிவு செய்கின்றன. இங்கும் கை என்பது குறுமையைக்
குறிக்கும் ஈறு.
மொத்தத்தில் கருணிகை, கன்னிகை ஆகிய இரண்டுமே அகரமுதலிகளில் பதிவுற்ற நல்ல
தமிழ்ச் சொற்கள். இவை இரண்டிற்கும் சங்கதத்தில் வேர் தேடிக்
கொண்டிருந்தால் கிடைக்காது.
சரி, நிகண்டுகளையும் பார்ப்போமா? தாமரைக் கொட்டையின் பெயராகச் சூடாமணி
நிகண்டு ”பொகுட்டு, கன்னிகை” என்பவற்றைத் தரும். கண்ணிகை/கண்ணகி என்ற
சொல் அங்கு இல்லை. திவாகரம் 833 ஆவது நூற்பா, ”பொகுட்டே, பூவினுள் கொட்டை
ஆகும்” என்று குறிக்கும். பொகுட்டு, தாமரைக்கு மட்டும் விதப்பானது அல்ல,
இந்த நூற்பாவின் பாட வேறுபாடாய், ”பொகுட்டே கன்னிகை, பூவினுட் கொட்டை”
என்றும் சொல்லப் பட்டிருக்கும். இது போக, திவாகரத்தின் 835 ஆம் நூற்பா,
முகை, நனை, கலிகை, முகிழ், சினை, கோரகம்,
நகை, கன்னிகை, போகில், அரும்பு, மொட்டே
என்றும் சொல்லும். ஆகக் கன்னிகை என்பது பொதுவாய் மொட்டைக் குறிக்கும்;
தாமரைக்கென விதந்து சொல்லப் பட்டது அல்ல.
சரி, ஒரு பேச்சுக்குக் கர்ணி என்பது சங்கதம் என்றே கொள்ளுவோமே!.
இப்பொழுது, கர்ண என்பதைத் தமிழில் எப்படி எழுதுவீர்கள், கன்னன் என்றா,
கண்ணண் என்றா? சத கர்ணி என்பதை ”நூற்றுவர் கன்னராய்” ஆக்கிய இளங்கோ,
”கன்னகி” என்னாமல், ”கண்ணகி” என்று எழுதுவாரோ? உருப்படியான, இலக்கணம்
தெரிந்த, இருமொழி இடையாட்டம் புரிந்த, ஓர் இலக்கியவாதி என்று கூடவா
இளங்கோவடிகளை நாம் ஏற்க மாட்டோம்? கர்ண என்பது மூலமானால், ஓரிடத்தில்
கன்னர், இன்னோரிடத்தில் கண்ணகி என்பது எப்படி? ஏதோ ஒன்று, உதைக்கிறது
இல்லையா? எனவே, முதற் கருதுகோள் (கர்ணக - சங்கதச்சொல்) தவறு தானே?
கண்ணகிக்கு மூலமாய்க் கர்ணகியைச் சொல்லி, தாமரை மொட்டைக் கொண்டுவந்து,
அது இலக்குமியைக் குறிக்கும் ஸ்ரீ என்று சுற்றி வளைத்துத் தொடுத்து,
விண்ணவக் குறியீட்டை ஏன் இங்கு சுட்ட வேண்டும்? உலகையே கண்ணன் மூலம்
பார்க்க விழையலாம் தான். இருந்தாலும், ஒரு வரைமுறை இல்லையா? நம் உகப்பை
இளங்கோவின் மேல் ஏற்றினால் எப்படி?
இலக்குமி என்பவள் செல்வத்திற்கான குறியீட்டைக் குறிப்பவள். அந்தக்
குறியீடு விண்ணவத்திலும் உண்டு. செயினம், ஆசீவகம் ஆகியவற்றிலும் உண்டு.
[ஆசீவகனான மாநாய்கனுக்கு இலக்குமி ஒன்றும் வேண்டாத தெய்வம் இல்லை.
ஆசீவகம், செயினம் ஆகியவற்றின்படி, இலக்குமியும் ஓர் இயக்கி தானே?
செயினனான மாசாத்துவனுக்கும் இலக்குமியின் பெயர் ஏற்கமுடியாதது இல்லை.
கோவலனின் சமயத்தை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அவன்
காதற்கிழத்தியும், மகளுமோ புத்தசமயம் புகுகிறார்கள். அந்தக் குடும்பம்
சமயப் பொதுமை கொண்டது. இப்படி இருந்தும் விண்ணவச் சார்பை ஏன் கொணர
வேண்டும்? “நாவல்” எழுதுபவராய் இருந்தால் எல்லோரையும் ஒரு சமயத்தவராய்க்
காட்டிப் புகழ் பாடியிருக்கலாமே?] இன்றைக்கும் கூட விண்ணவனை வணங்காத, அதே
பொழுது சிவ வழிபாட்டில் பெரிதும் ஆழ்ந்த நகரத்தார் வீடுகளில் பாடுவார்
முத்தப்பரின்
காடுவெட்டிப் போட்டு கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு.
என்ற செல்வ நிலைப்புப் பாட்டு, இலக்குமியை வேண்டியே சொல்லித் தரப்படும்.
அது தெரியாத அகவை மூத்தோர் இருக்க மாட்டார்கள். இலக்குமி, அலர்மேல் மங்கை
(அலமேலு என்று சுருக்கிச் சொல்லுவார்கள்) என்ற பெயர்கள், வழிவழியாய்
வந்து, நகரத்தாரிடம் பரவலாகப் புழங்குபவை. இவை விண்ணவத்தால்
தூண்டப்பட்டவை அல்ல. எனவே
போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதேத்தம் வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர் மன்னுங் கண்ணகி என்பாள் மன்னோ?
- மங்கல வாழ்த்துப் பாடல் (26-29)
என்று மங்கல வாழ்த்துப் பாடலில் வருவது வியப்பே இல்லை. ”போதில் ஆர் திரு”
என்பது ”அலர்மேல் மங்கை” தான். ஆனால் ஒப்புமையை ஒப்புமையாய்ப்
பார்க்காமல், கண்ணகியை அலர்மேல் மங்கையின் அவதாரம் என்பது உயர்வு
நவிற்சியாய், உங்கள் பொருளை இளங்கோவின் மேல் ஏற்றிச் சொல்லும்
தற்குறிப்பேற்ற அணியாய்த் தோன்றவில்லையா?
இந்த மங்கல வாழ்த்துப்பாடல் அடிகளில், வந்திருந்த மாதர்கள்
சொல்கிறார்களாம்: “இவள் அலர்மேல் மங்கையின் வடிவம் போல இருக்கிறாள்,
அருந்ததியின் திறம் கொண்டவளாய் இருக்கிறாள்”. இத்தோடு மங்கல வாழ்த்தில்
நிறுத்தவில்லை. ”சாலியொருமீன் தகையாளை (51)”, ”அங்கண் உலகின் அருந்ததி
அன்னாளை (63)” என்றும் இளங்கோ சொல்லுகிறார். மொத்தம் மூன்று தடவை
அருந்ததிக்கு இணையாக வைக்கிறார். உடனே அருந்ததியின் அவதாரம் என்று
சொல்லலாமா? கண்ணகி இலக்குமியின் அவதாரம் என்பது உண்மையானால், எந்தப்
புலவராவது, (அல்லது எந்த ஆழ்வாராவது) வேறொரு ஒப்புமையை ஊடே செய்வார்களோ?
அது விண்ணவ மரபாகுமோ? அப்படி இருக்கிறது என்றால் என்ன பொருள்? கண்ணகி
அவதாரமில்லை; அவள் வெறும் மாந்தப் பெண். அவளை மற்றோரோடு ஒப்பிடுவது
பொதுப் பழக்கம், அவ்வளவு தான். அதற்கு மேல் வரிப் பிளந்து பொருள் கொள்வது
ஏன்?
இன்னொன்றும் சொல்ல வேண்டும். இலக்குமி ஒளியின் வடிவம்; பொன்னிறத்தவள்.
அதனாற்தான் பெருமாள் கோயிலில் தாயாரின் திருமுன் பொற்சுண்ணம்
தருகிறார்கள். தாயார் திருமுன் பொற்சுண்ணமும், ஆண்டாள் திருமுன்
குங்குமமும் கொடுப்பதைத் தலைகீழாய்ச் செய்யும் முட்டாள்ப் பட்டர்கள்
இன்று மிகுந்து போனது வேறு கதை. இங்கு வேண்டாம்.) பொதுவாய் மஞ்சள் என்பது
தமிழரிடையே மங்கலத்தின் அடையாளம். எந்த நிறத்தாளும் மஞ்சள் பூசிக்
கொண்டால், இலக்குமியின் களை, அழகு, வந்து விடுவதாக நம்மவர்கள்
நம்புவார்கள்.”மஞ்சள் பூசி, இலக்குமி மாதிரி இருக்கிறாள்” - எத்தனை முறை
பெண்கள் வாய்களில் கேட்டிருப்போம்? ஆனால் கண்ணகி மஞ்சள் நிறத்தவளா
என்றால் இல்லை. மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் நிறம் தெளிவாகச்
சொல்லப் படுகிறது.
மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞை நின்
சாயற்கு இடைந்து தண்காண் அடையவும் (53-54)
மேலே உள்ள சாயல் எனும் சொல் நிறத்தைக் குறிக்கிறதா என்று புரிய இரண்டு
அடிகளையும் சேர்த்துப் படித்து ஓர்ந்து பாருங்கள். சாயலின் மற்ற
பொருட்பாடுகள் இங்கு வர வாய்ப்பே இல்லை. கண்ணகியின் சாயலைப் பார்த்து
”மாயிரும் பீலி மணிநிற மயில்” ஒன்று, இடங்கிக் கொண்டு காட்டிற்குப்
போனதாம். அப்படியென்றால் என்ன பொருள்? கண்ணகி கருப்புத் தான். ஆனால் அழகு
கொழித்து ஈர்க்கும் கருப்பு. (கருப்புத்தான் எனக்குப் புடிச்ச
கலரு......என்ற திரைப் பாட்டு நினைவுக்கு வருகிறதா?) அதைப் பார்த்து
மணிநிற மயிலே வெட்கப் பட்டு காட்டிற்கு ஓடிவிட்டதாம். இது போகக் காடுகாண்
காதையில் ”புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்” என்ற 199 ஆம்
அடியில் அவள் காட்டுமயிலின் சாயல் கொண்டவள் என்றே சொல்லப் படுகிறாள்.
ஆண்மயில் தான் நீல நிறங் காட்டும். பெண்மயில் கருப்புத்தான் ஐயா? [ஆனால்
முழுக் கருப்பு அல்ல.]
எங்கள் ஊர்ப்பக்கம் இப்படி ஈர்க்கும் கருப்பை மாநிறம் என்பார்கள்.
மாநிறம் என்பது அட்டக் கருப்பில்லை. ஆனால், வைத்த கண் வாங்காமல், ஒரு
கணம் பார்க்க வைக்கும் கருப்பு. சற்று மஞ்சளோடும் கருப்பு. மாங்கொழுந்து
பார்த்திருப்பீர்களே? கருப்பு, புகர், குரால், சிவப்பு, மஞ்சள் எல்லாம்
கொஞ்சமாய்க் கலந்த நிறம். அது தான் மாநிறம் என்று சுருக்கமாய்ச் சொல்லப்
படுகிறது. கண்ணகி நிறம் அதுவாய் இருக்கவே வாய்ப்புண்டு. [இலக்குமி
அவதாரங்களில் பொன்னிறம் இல்லாமல் ஏதும் உண்டோ? அவளுக்கு மாங்கொழுந்து
நிறம் சுட்டுவார்களோ? [எட்டு இலக்குமி வடிவுகளிலும் கூட 4 பொன்னிறம், 1
தளிர் நிறம், ஒன்று மஞ்சள், ஒன்று வெள்ளை, ஒன்று செந்தாமரை என்றே
காட்டுவர்.]
சிலம்பின் புகார்க் காண்டத்தில் மூன்று தலைமாந்தரிடையும் நிறம் பற்றிய
தமிழரின் உளச் சிக்கல் உள்ளூர நிலவுகிறது. கண்ணகி மாநிறம், கோவலன்
செவ்வை, மாதவி வெளிறிய சிவப்பு. அதற்குரிய சான்றுகளைக் கீழே தருகிறேன்.
அன்புடன்,
இராம.கி
On Mar 20, 3:42 pm, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> அண்மையில் திரு. நா.கணேசன் ”கண்ணகி, கோவலன், மாதவி” பெயர்களுக்குச்
> சங்கதப் பின்புலம் காட்டி, ”இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில
> பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப்
> படைத்திருக்கிறார்" என்று மின்தமிழ் குழுமத்தில் எழுதியிருந்தார்.
> "இப்படியும் பார்க்க இயலுமா?" என்று வியந்து போனேன். பிற்காலத்தவர்
> (மு.இராகவையங்கார்) கருத்தை, முதலாசிரியர் மேல் ஏற்றிக் கூறி,
> சிலம்பிற்கு விண்ணவச் சாய்வை திரு. நா.க. ஏன் கொணர்கிறார் என்பதும், ”மைய
> நீரோட்டமில்லாததை நடுமைப் படுத்துவது ஏன்?” என்றும் எனக்குப்
> புரியவில்லை. நான் புரிந்த அளவில் நா,க, கூறும் பெயர்க் காரணங்கள் ஏற்க
> முடியாதவை.
>
இராமகி wrote:
> [இலக்குமி
> அவதாரங்களில் பொன்னிறம் இல்லாமல் ஏதும் உண்டோ? அவளுக்கு மாங்கொழுந்து
> நிறம் சுட்டுவார்களோ? [எட்டு இலக்குமி வடிவுகளிலும் கூட 4 பொன்னிறம், 1
> தளிர் நிறம், ஒன்று மஞ்சள், ஒன்று வெள்ளை, ஒன்று செந்தாமரை என்றே
> காட்டுவர்.]
இலக்குமியின் நிறங்களில் ஒன்றாக ஒளிவாய்ந்த கருப்பையும்
சொல்வதுண்டு. சம்ஸ்கிருத இலக்கியங்களில் இருந்து Prof. Jan Gonda
எழுதியுமிருக்கிறார்.
’மா’ என்றே இலக்குமிக்குப் பெயர் உண்டு. மால் (திருமால்), மாநிறம், ...
பெருமாளுக்கு மா-லோலன் எனப் பெயர். மா - லக்ஷ்மி.
உங்கள் தொடரை எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
அன்புடன்,
நா. கணேசன்
இன்னும் சில குறிப்புகள்:
(a) In Indian literature - two lotuses are used as substitutes - one
is blue
lotus, the other is red lotus. For example, Padmapani painting in
Ajanta
holds a blue lotus, where as usually Padma refers to red lotus.
(b) In sangam literature, the official wife, (probably a cross-cousin
from Dravidian
kinship) is blue lotus (nilotpala, ...) & often dark in color, and who
has roots
to the land and village. The parattai, often fickle-minded (lola,
sanjala) and brought in
to the Land-lord (Uuran) by brokers such as paaNans, pulaittis amd
viRalis, is often
compared with (red) lotus.
etc.,
NG
இப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது,
கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம்
எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும்
இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள்
மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று
பெயரிட்டார்கள். [இன்றுங் கூடக் கண்ணாத்தாள், கண்ணம்மை என்ற பெயர்கள்
நகரத்தாரிடையே பெரிதும் புழக்கமானவை. நாட்டரசன்கோட்டைக் கண்ணாத்தாள்
கோயில், கண்ணகியை நினைவூட்டுவதாகவே ஓர் ஐதீகம் உண்டு.]
கண்ணகி என்ற சொல்லை மூன்று வகையில் பிரிக்கலாம்.
1. கண் + அகி = கண்ணகி. அகுதல் = உள்ளாதால். (அகம் என்ற பெயர்ச்சொல்
அகுதல் வினையில் இருந்து எழுந்ததே. உள்ளுதலில் இருந்து உள்ளம் போல இங்கு
கொள்ள வேண்டும். விதப்பான கண்ணைப் பொதுமைச் சொல்லால் குறிப்பிடும்
வழக்கம் தமிழில் உண்டு. ”காளைன்னா அவந்தாய்யா காளை! கண்ணுன்னா அவள் கண்ணு
மாரி வருமா?”
2. இரண்டாம் முறையில் கண் + நகி என்று பிரிக்கலாம். நண்பர் வேந்தன் அரசு
இதைக் காட்டியிருந்தார். நகுதல் என்பது மலர்தலாகும். சிரித்தலையும்
குறிக்கும். இங்கே கண் மலர்ந்தவள் என்று பொருள் கொள்ளும். இளங்கோ பல
இடத்தும் மலர்க் கண்ணி என்று சொல்லுவார்.
3. மூன்றாம் முறையில் ”கண்ணை” என்ற எழுத்துவழக்குச் சொல் (நக்கண்ணை என்ற
சங்கப்புலவர் பெயர் நினைவுக்கு வருகிறதா?) பேச்சுவழக்கில் கண்ணகி என்று
முதலில் ஆகிப் பின் எழுத்து வழக்கிலும் ஏற்கப் பட்டிருக்கலாம்.
[புவ்வுதலில் கிளர்ந்த சொல் புவ்வு>பூ என்று செந்தமிழில் ஆயிற்று. ஆனால்
தென்பாண்டி நாட்டுப் பேச்சுவழக்கில் பூவு என்றே பலுக்குவர். இப்பொழுதோ,
உரைநடையில், மாந்தர் உரையாட்டுக்களைச் சுட்டும் வட்டாரத் தமிழாய் ”பூவு”
அப்படியே எழுதப்படுகிறது. இப்படி உகரம் கூடச் சேர்வதை euphonic vowels
என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது பலுக்க எளிமையாக்கும்
உயிர்கள். இதனூடே உடம்படு மெய்களும் சேர்வது உண்டு (இங்கே வகரம் சேர்வது
போல). அண்ணா, அண்ணாவி ஆவது இதுபோலத்தான். பூதம்>பூதகி ஆவதும் இதே
முறைதான். பூதம், வட சொல் அல்ல. bhuutha என்று தவறாகப் பலுக்காத வரை அது
தமிழ் தான்.]
மேலே கூறிய மூன்றிலும் ”கண்ணகி”யின் அடிப்படைக் கருத்து கண் என்பதே.
”கண்ணால் பெயர் பெற்றவள் கண்ணகி”. இதன் சான்றுகளைச் சிலம்பில் இருந்தே
பார்க்கலாம்.
இன்னொரு செய்தி. கண்ணகி என்ற பெயர் சிலம்பிற்கு முன்னேயும்,
புறநானூற்றின் பின்புலத்திலேயே, பயிலுகிறது. புறம் 142-147 வரை உள்ள
பாட்டுக்களில் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார்
ஆகியோர் பரத்தையின் பால் புறத்தொழுக்கம் கொண்ட பேகனை மனைவி கண்ணகியோடு
சேர்ந்து வாழும்படித் தெருட்டியிருப்பார்கள். கண்ணகி என்ற பெயரை
பெருங்குன்றூர் கிழார் “அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை” என்று
பெயர்ப்பொருளால் உணர்த்தியிருப்பார். ஆகக் கண்ணகி என்ற பெயர் குறைந்தது
2100 ஆண்டுகளுக்கு முந்திய பழமை வாய்ந்தது; கர்ணகி என்று வடபுலப்
பலுக்கலுக்கும் முந்தியது.
சிலம்பிலும் கண்ணகியின் பெயர்ப்பொருள் பலவிடத்தும் வெளிப்படும். மனையறம்
படுத்த காதை - 11 ஆம் அடியில் ”கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்”
என்று இளங்கோவடிகள் பேசுவார். ”பெருத்த மலர் போன்ற கண்”. ”பெருத்த கண்”
என்ற பெயரின் வடமொழியாக்கம் நகரத்தாரிடையே இன்றும் புழங்கும் பெயரான
விசாலாட்சி யாகும். [காசிக்குப் போய் விசாலாட்சியை வணங்குகிறோம் இல்லையா?
சாலாட்சி, சாலா என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும்.] மேலே கயல் மலர்க்
கண்ணி என்று கொண்டால் அது மீனாட்சியைக் குறிக்கும். [மீனாட்சியும்
நகரத்தாரிடையே பெரிதும் புழங்கும் பெயர் தான்.] கயமலர்க் கண்ணி,
கயல்நெடுங் கண்ணி, கருந்தடங் கண்ணி, கருங்கயற் கண்ணி, நெடுங்கயற் கண்ணி,
தடம்பெருங் கண்ணி போன்ற பெயர்களும், அதன் மடக்குகளும் (permutations),
பிணைப்புகளும் (combinations) விசாலாட்சிக்கும், மீனாட்சிக்கும் பல்வேறு
விதமாய்ப் பொருந்தும் பெயர்கள் தான். இவற்றைச் சமயப் பெயர்கள் என்று
கொள்ளாமல், கண்ணை விதப்பதாகவே கொண்டால், ”கண்ணகி”யின் பொருட்பாடு
விளங்கும். அதே மனையறம் படுத்த காதையில் கண்ணகியின் நலம் பாராட்டும்
கோவலன்,
அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது (49-52)
என்கிறான்: ”செவ்வேள் தன் நெடுவேலை இரண்டாக்கி, உன் செவ்வரி படர்ந்த
மழைக்கண்ணாய் ஆக்கினனோ?” ஆகக் கண்ணகியின் கண்தான் எல்லோரையும் ஈர்த்தது,
கோவலனையும் சேர்த்து. இது போன்று, கண்ணைப் பாராட்டிக் கொற்றவையின்
உறுப்பாக்குவது தமிழின் நெடிய திணைமரபு. [கொற்றவைத் தோற்றம் அல்லவா
கண்ணகி கொள்ளப் போகிறாள்?]
அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில்,
திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரிய
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள் நுதல் திலகம் இழப்ப
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப 52-56
என்ற வரிகளிலும் கண்ணகியின் கண் ”செங்கயல் நெடுங்கண்” என்று
சிறப்பித்துப் பேசப்படுகிறது. [இங்கே ”திங்கள் வாள்முகம் சிறுவியர்
பிரிய” என்பது ஒளிர்கிற நிலவைப் போன்ற கண்ணகியின் முகம் வியர்வதைக்
குறிக்கிறது; ”திங்கள் வாள்முகம்” என்றவுடன் நம்மையறியாமல் பலரும் பூரணை
நிலவையே நினைக்கிறோம். மாறாகத் திங்களின் இடைப்பட்ட மதியை எண்ணுவது
நல்லது. அதாவது சற்றே கருத்த, புள்ளி புள்ளியாய் வியர்வை படர்ந்துள்ள
ஒளிமுகம். அடுத்து, மாநிறத்தாரின் நெற்றி, அடர்பவள நிறத்தைக் காட்டுவது
இயற்கை. மறந்து விடாதீர்கள், மாநிறம் என்பது முற்றிலும் கருப்பல்ல. அது
ஒரு கலவை நிறம். தமிழரில் 100க்குத் 90/95 பேர் மாநிறம் தான். இந்த 5/10
வெள்ளை/சிவப்பால் தான் இத்தனை கூத்தும்.]
நாடுகாண் காதையில் ”கயல்நெடுங்கண்ணி (76)” என்று வரும். காடுகாண்
காதையில் ”கருந்தடங் கண்ணி (166)” என்று வரும். வேட்டுவ வரியில் 16 ஆம்
பாட்டில், வேட்டுவப் பெண்ணிற்கும் கூடக் “கயமலர் உண்கண்ணாய்” என்ற
விவரிப்பு வரும். அடைக்கலக் காதையில் கவுந்தி கண்ணகி பற்றி மாதரிக்குச்
சொல்லியது ”கருந்தடங் கண்ணி (128)” என அமையும். கொலைக்களக் காதையில்
மாதரி இல்லம் நீங்கி கோவலன் மதுரைக்குள் போகும் போது, கண்ணகியை விட்டுச்
செல்வதை ஆசிரியர் ”கருங்கயல் நெடுங்கண் காதலி” (94) என்று சொல்லுவார்.
துன்ப மாலையில் ”என் கணவன் கள்வனோ?” என்று சூரியனிடம் கேட்கையில், வானில்
எழுந்த குரல்:
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மதராய்
ஒள்ளெரி யுண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் (52-53)
என்று விடையிறுக்கும். ஊர்சூழ்வரியில், இறந்து கிடந்த கோவலன் அருகிற்
கண்ணகி அழுது, ஆர்ப்பரித்த பின்னால் நடப்பதை ஆசிரியர்,
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையார்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் (72-75)
என்றே சொல்லுவார். வாழ்த்துக் காதையில் செவிலித்தாய் கூற்றும்,
மடம்படு சாயலாள் மாதவி தன்னைக்
கடம்படான் காதற் கணவன் கைப்பற்றிக்
குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த
தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்
தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர் - 3
என அமையும்.
ஆகக் கண்ணால் விதந்தவள் கண்ணகி ஆனாள்.
சிலம்பு தவிர்த்த பல்வேறு கண்ணகி-கோவலன் கதைகள், கூத்துக்கள்,
நாட்டுப்புறப் பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை வேறொரு இடத்தில்
பார்க்கலாம். வால்மீகி இராமாயணத்திற்கு மாறாக எத்தனை இராமயணக் கதைகள்
விதம்விதமாய் எழுந்திருக்கின்றன? சீதையை இராவணன் மகளாகச் சொல்லும்
இராமாயணம் கூட இருந்திருக்கிறது. அது போலக் கண்ணகியைப் பாண்டியன் மகளாய்
உருவகிக்கும் கதைகளும் உண்டு. [சிலம்பிலே கூட வாழ்த்துக் காதையில்,
"தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில் நல்விருந்து ஆயினன்; நான் அவன்தன்
மகள்” என்று ஒரு வாசகம் வரும். அவற்றையெல்லாம் இங்கு பேசமுற்பட்டால்
கட்டுரை பெரிதும் நீளும். [வேண்டுமானால் இன்னொரு முறை பார்க்கலாம்.]
திரு.நா.க.வின் மடலில் உள்ள வேறு புள்ளங்களுக்கு (points) என்
மறுமொழிப்பை இத்தொடரின் முடிவில் தருகிறேன். அதற்கு முன், கோவலனின்
பெயர்க்காரணம் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
உங்கள் கருத்துகளுக்கு (மேல நீலத் தாமரை என்பதற்குச் சேர்த்து) இந்தக்
கட்டுரைத் தொடர்முடிவில் மறுமொழிக்கிறேன். இன்னும் கோவலன், மாதவி ஆகிய
பெயர்க்காரணங்கள் சொல்லிப் பின் சிலம்பு அல்லாத கோவலன் - கண்ணகி கதைகள்
பற்றிச் சொல்லி, அப்புறம் இவற்றிற்கு வரவேண்டும்.
நாட்கள் சில ஆகலாம், பொறுத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
> > NG- Hide quoted text -
>
> - Show quoted text -
“சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில் இல்லை”
என்று தெளிவாகத்தானே கூறியிருக்கிறேன். ”அத்தகைய காப்பியம்” என்றதற்கு
“அது போன்ற கதையை, நெறிமுறையை, உள்ளடக்கத்தை,” என்றே பொருள்.
சிலம்பு தமிழரைப் பற்றிய காப்பியம், தமிழரால் எழுதப் பட்ட காப்பியம்.
தமிழருக்கான காப்பியம் - இந்த மூன்றும் போதாதா, அதைத் தமிழர் காப்பியம்
என்று சொல்ல?
”மேலே நான் என்ன சொல்ல வேண்டும், நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?”
என்று புரியவில்லை.
அன்புடன்,
இராம.கி..
//சிலம்பில் ஆசிரியர் கூற்றாகச் சில சமயக் கருத்துக்கள் (குறிப்பாக
செயினம், ஆசீவகம்) இருக்கின்றன என்றாலும், விண்ணவமும் சேர்த்து மற்ற
சமயங்களின் செய்திகள் கதையோட்டத்தில் தன்னேர்ச்சியாய்த்தான் சொல்லப்
படுகின்றன.//
//சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில்
இல்லை.//
//சிலம்பு தமிழரைப் பற்றிய காப்பியம், தமிழரால் எழுதப்பட்ட காப்பியம்.
*தமிழருக்கான காப்பியம்* //
பெருமதிப்பிற்குரிய ஐயா,
சமணம்,பவுத்தம்,வேதநெறி (நாத்திகம்,உலகாயதம் உட்பட)
எல்லாச் சிந்தனைகளும் பாரதம் முழுமைக்கும் பொதுவானவை.
*தமிழருக்கான காப்பியம்*
ஒரு காப்பியத்தை மிக உயர்வாகச் சொல்லிவிட்டு அது ஒரு மொழியினருக்கானது
மட்டுமே என்றும் கூறுவது முரணாகத் தெரியவில்லையா ?
பிறர்தம் போற்றுதலும் அதற்குத் தேவையில்லை என்று நாமே
வரம்பு கட்டலாமா?
‘தென்னாடுடைய சிவனே போற்றி!
தென்னாட்டவர்க்கு மட்டும் இறைவா போற்றி!!’
என்று கூறுவதுபோல் உள்ளது.
தேவ்
புத்த பிக்ஷுணி குண்டகேசியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு
இயற்றப்பட்டது.
On Mar 20, 5:30 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
இந்த மொழிவெறித்தனம் எங்கு போய் முடியுமோ !!!
யாம் அறியோம் பராபரமே !!!
On Mar 20, 5:30 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
இந்தச் சிந்தனைகள் உலகெங்கும் தெரிந்து கொள்ள வேண்டியவை தான்.
> *தமிழருக்கான காப்பியம்*
>
> ஒரு காப்பியத்தை மிக உயர்வாகச் சொல்லிவிட்டு அது ஒரு மொழியினருக்கானது
> மட்டுமே என்றும் கூறுவது முரணாகத் தெரியவில்லையா ?
ஒரு மொழியினருக்கு மட்டுமே என்று எங்கே
சொல்லியிருக்கிறேன்.?” :தமிழருக்கான காப்பியம்” என்பதற்குப்
பொருள் :தமிழருக்கு மட்டுமே என்பதில்லையே?
> பிறர்தம் போற்றுதலும் அதற்குத் தேவையில்லை என்று நாமே
> வரம்பு கட்டலாமா?
நான் எங்கே வரம்பு கட்டினேன்?
இல்லாததைத் தேடிக் கொண்டிருந்தால் கிடைக்குமோ?
அன்புடன்,
இராம.கி.
On Mar 20, 8:58 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> குண்டலகேசி வடநாட்டு புத்த பிக்ஷுணியின் வாழ்க்கையை ஒட்டிய காவியம்
> என்பதால் ”தமிழ்” ஐம்பெருங்காப்பியங்களிலிருந்து அதை நீக்கி ”தனித்தமிழ்
> ” ஐம்பெருங்காப்பியம் ஒன்றை உருவாக்காமல் இருந்தால் சரி !!!!
>
> இந்த மொழிவெறித்தனம் எங்கு போய் முடியுமோ !!!
>
> யாம் அறியோம் பராபரமே !!!
குண்டல கேசி (சில பாட்டுக்களே கிடைத்த ஒரு நூல்.) தமிழில் உள்ள
காப்பியம் என்றுதான் சொல்லுவேன். இங்கே சிலம்பில் வரும் தலைமாந்தர்களின்
பெயர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். குண்டலகேசி இங்கு
பேசுபொருள் அல்ல.
“தனித்தமிழ் ஐம்பெருங்காப்பியம்” என்று எங்கே, எந்த நூலகத்தில்
இருக்கிறது?” என்று ”பெரியவர்கள்” சொன்னால் தேடிப் போய் படித்துத்
தெரிந்து கொள்கிறேன். என்னைப் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு அதெல்லாம்
தெரியாது.
“இதில் மொழிவெறித்தனம் எங்கே வந்தது?” என்று புரியவில்லை. எனக்கு
உன்மத்தம் இல்லை. நான் வெறி தரும் பொருட்களைச் சுவைப்பவனும் இல்லை.
இந்தக் குழுமத்தில் எழுதக் கூடாது என்பது தான் மேலே உள்ள உங்கள்
வாசகங்களுக்குப் பொருள் என்றால், அதை மட்டுறுத்தர் சொல்லட்டும்.
அன்புடன்,
இராம.கி.
> On Mar 20, 5:30 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
>
>
>
> > On Fri, 2009-03-20 at 03:42 -0700, இராமகி wrote:
>
> > > சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில் இல்லை.
>
> > இப்படி தமிழர் காப்பியம் அப்படி அல்லாத காப்பியமென்று உண்டானெனே எனக்கு
> > ஐயமுண்டு.
>
> > தமிழர் காப்பியம் என்றகிறபோது வேறு சில அப்படி அல்ல என்று தாங்கள் ஏதோ
> > ஒன்றை வேறுபடுத்திக் காட்ட இங்கே முயல்கிறீர்களா? அப்படீன்னா அவையென்ன?
>
> > --
>
> > ஆமாச்சு- Hide quoted text -
“தனித்தமிழ் ஐம்பெருங்காப்பியம்” என்று எங்கே, எந்த நூலகத்தில்
இருக்கிறது?” என்று ”பெரியவர்கள்” சொன்னால் தேடிப் போய் படித்துத்
தெரிந்து கொள்கிறேன். என்னைப் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு அதெல்லாம்
தெரியாது.
உங்கள் கருத்தோடு உடன்படுவேன். ”ஐம்பெரும், ஐஞ்சிறும்” என்பது ஏதோ ஒரு
முறையில் வகைப்பாடு என்று கொள்ளுவோம். கம்பனை இதில் விடுத்தது புரியாத
கதை தான். இந்த வகைப்பாடு எப்பொழுது எழுந்ததோ, தெரியவில்லை.
அன்புடன்,
இராம.கி.
(அ)
கண்ணன் என்ற சொல் “கண்” என்ற சொல்லில் இருந்தா? :)
அவர் கண்ணும் கயமலர்/கயப்பூ (முக்கியமாய்த்
தாமரை/பத்மம் (red or blue lotus) போலத்தானே இருக்கிறது?
இலக்கியச் சான்றுகளும் உண்டே. ராஜீவ நயனன், அரவிந்த லோசனன்,
செந்தாமரைக்கண்ணன், ...
ஆனால் ”கண்ணன்” கண்ணிலிருந்தா? இல்லை. கண்ணன் < கிருஷ்ணன் (via Prakrit).
கண்ணன் கண் பத்மம் என்றாலும் கண்ணன் வடசொல் தான் (< கிருஷ்ணன்).
அதுபோல், கர்ணகி:கண்ணகி.
(ஆ) பழனிக்காரன் பேகனின் மனைவி கண்ணகி
இலக்குமியின் மறுபெயர்.
”அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை”
மழைக் கண் - முகிலில் இருந்து மழைநீர் சுரந்து புரப்பது
போல், அருளைச் சுரக்கும் கண்கொண்ட திருமகள்.
*மா* என்றால் இலக்குமி, அவள் *அரிவை* = தாமரைப்
பொகுட்டில் வாசம் செய்பவள். லக்ஷ்மி போன்றவள்
கண்ணகி (< கர்ணகி), பேகன் மனைவி. சங்க இலக்கிய காலத்தில்
இலக்குமியைத் தமிழர் அறிவரா? என்றால் ’அறிவர்’
என்பது பதில்.
கிருஷ்ணாவதாரம் இளங்கோ அடிகள் நன்கறிந்தவர்தானே,
அதுபோல.
(இ) இலக்குமி ஆகிய கண்ணகியை மிக அழகாக
இளங்கோ அடிகள் சுட்டுமிடம்,
மனையறம் படுத்த காதை - 11 ஆம் அடியில்
”கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்”.
- பத்மாக்ஷியாகிய கர்ணகையும், கண்ணபிரான் போன்ற கோவலனும்
- இவ்வரியை முன்னர் குழுக்களில் காட்டியும் இருக்கிறேன்
(ஆங்கிலத்திலா (உ-ம்: இந்தாலஜி குருப்ஸ்), தமிழிலா
என்று நினைவில்லை).
கயம் என்றால் குளம், நீர்நிலை. கயப் பூ (அ) கய மலர்
என்றால் நீர்ப் பூ (aquatic flower). கயமலர்
என்றால் பத்மத்தைச் சிறப்பாகக் குறிக்கும்.
(like denotes PC means Bill Gates' MS
product, search engine means Google,
photocopy means Xerox specially,
in Indian culture, aquatic flower esp.
signifies padmam).
பெண்ணின் கண்களுக்குப் பதும மலர் உவமை மரபுண்டு,
’கயமலர் உண் கண்ணாய்’ - குறிஞ்சிக்கலி
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற் கூம்புவாரை (நாலடி, 215).
கயமலர் = நீர்ப் பூவாகிய பதுமம்.
’கயமலர்க் கண்ணி’ என்பது ஸ்ரீ ஸூக்தத்திலேயே
இலக்குமியை விளிக்கும் பத்மாக்ஷி எனப்படுகிறாளே,
அதன் தமிழ்ப்பதம்.
Padmaanane, padma-uruh, *padmaakshi* padma sambhave
(Sri Suuktham)
பத்மலோசனி, பத்மாக்ஷி, கமலநயனி - லக்ஷ்மிக்குப் பழம்பெயர்கள்
அல்லவா? இலக்குமியின் அப்பெயர்கள் பெண்குழந்தைகளுக்கு தமிழர்
இட்டிருக்கிறார்கள். இத் தொல்தமிழ் மரபு வடமொழிக்குப் போயிருக்கலாம்.
”கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்”
சிலம்பு, மனையறம் படுத்த காதை - 11
கோவலன் - கண்ணகி தம்பதியர் இராச் சேர்க்கையின் போது
அந்நிகழ்வை திருமால், திருமாமகளுடன் ஒப்பிடுதல் என்பது மிகப்
பழைய பாரத இலக்கிய மரபு. அவ்வழியில்
இளங்கோ பாடிச் செல்கிறார்.
ஓர் உதாரணம் தருகிறேன்:
நாஸ்திக (லோகாயத) நூலாகிய காராணை விழுப்பரையன்
மடலிலே மறுபிறப்பு, ஆன்மா, மதங்கள் மறுக்கப்பபடுகின்றன.
ஆனால் அந்நூலாசிரியர் செயங்கொண்டாரும் கூட,
காதலன் - காதலி புணர்ச்சியைப் பேசும்போது பழைய இந்திய மரபான
பெருமாள் - திருமகள் போல என்றே குறிக்கிறார்.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
”போதகத்தின் வெண்மருப்புப் பொற்கால் மணிக்கட்டில்
மீதடுத்த பஞ்ச சயனத்து மீதேறி
ஓதம் உலவும் ஒருபாற் கடல்துயின்ற
*சீதரனும், செய்ய திருமகளும்* போலத்தங்
காதல் மகளிர் உடனிருந்து கைவந்த
சாதாரி நல்யாழின் தந்திரிகை யால்தடவி
வாதாரிக் கா,மா எனுமளவில் மாரனுந்தன்
போதின் புதுவாளி கோத்துப் புதுக்கரும்பின்
கோதண்டம் வாங்கிக் கொடும்போர் தொடங்குதற்குப்
பாதி வழிவந்தான் என்று பசுந்தென்றல்
தூதுவரத், தண்நறும் துந்துமிபோல் வண்டார்ப்பச்
சீதளவெண் திங்கள் குடைக்கீழ்ச் சிலையனங்கன் 180”
தம்பதியர் வாசிக்கும் முல்லைப்பண் (சாதாரி)
மங்கலப்பண் ஆகையினால்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இன்று பொருத்தியுள்ளனர்.
(ஈ) கண்ணுடையம்மன் பள்ளு பார்த்திருக்கிறேன்.
கண்ணுடையம்மன் என்பது மாரியம்மனுக்கு ஒருபெயர்.
மாரி வரலாற்றைப் படித்தால் தெரியும்.
இங்கு கண் என்பது ஒருவகையான eupehemism,
அகலிகையால் இந்திரன் ஆயிரம் கண்ணுடையான்
ஆனானே. (ஆயிரங்) கண்ணுடையம்மன் என்பது
அவள் கதையில் கண் = பெண்ணுறுப்பு.
ஆயிரம் கண்ணுடையாள், இந்திரன் உடலில்
ஆயிரம் கண் ஏற்பட்டது என்னும் தொன்மக் கதைகளில்
இதன் விரிவைக் காணலாம்.
(உ) கண் என்றதும் கண்ணை வைத்து வியாக்கியானம்
சொல்ல முற்படுதல் இயல்பு. ஆனால், வடமொழி,
தென்மொழி, பண்டைப் பாரத தொடர்மரபுகள்
பார்த்தால் கண்ணன்:கிருஷ்ணன், கர்ணகை:கண்ணகி,
கண்ணுடையம்மன் - 1000 கண் என்றால் எதைக்
குறிக்கிறது இந்திய இலக்கியங்களில் என்று சிந்தித்ததன் விளைவு,
எனக்குச் சிலம்பின் கதைநாயகர்களின் பெயர்ப் பின்புலம்
விளங்கிற்று,
பழைய Dravidian substratum வடக்கே சிந்து சமவெளியில்
நிறைய இருக்கிறது. அதை ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ
பார்ப்போலா வழியாக ஆராயின் சிறப்பு. வட இந்தியா - தமிழ் நாடு
தொடர்புகளை விளக்கும் பார்ப்போலா கட்டுரை (அனைவரும் இதன் பிடிஎஃப்
இணைப்பைப் படிக்க என் பரிந்துரை உண்டு):
http://groups.google.com/group/minTamil/msg/8b700a0f756a40ab
மதுராபதித் தெய்வம் (கொற்றவை) கண்ணகியிடம்
கிருஷ்ணாவதார தொடர்பை விளக்கினமை பற்றி
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
These are just some of my notes,
my humble request: please do not
put any of my mail in this thread
in minTamil anywhere else.
பிற பின்,
நா. கணேசன்
சிந்தில் கொற்றவை (வடக்கே கோட்டாவீ (Cf. கோட்டை) எனப்பட்டவள்):
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
(விரிவாக்கணும், நேரமின்மையால் நிற்கிறது).
மொழி வெறி?
மன்னிக்க வேண்டும் சான்றோர்களே
ஒரு கருத்தைத் திரும்பச் திரும்பச் சொல்லிவிட்டால் மட்டும் அது உண்மையாகி விடாது.
எது மொழி வெறி? யாரிடம் மொழி வெறி என்று சிந்தியுங்கள்.
மின் தமிழ் / தமிழ் மரபு / தமிழ் உலகம்/ தமிழ் நாடு/ ஒரிசா/வங்காளம்/செர்மனி/பிரான்சு/இரசியா/மலேசியா/ சீனா/ கொரியா/ சப்பான்/ ’இந்தி’யா என்று பெயருக்குப் பின் மொழி இருந்தால் அது மொழி வெறி தானே? ஏன் தமிழ்/அல்லது மற்ற மொழி என்ற அடை மொழியை சேர்க்கின்றனர், சிந்தியுங்கள்.
குத்துப் பாட்டும் நம் மக்களின் மரபுதான். அதற்காக.....
மற்றவன் மனைவியை மதிப்பது பெருந்தன்மை. தன் மனைவியை மதிப்பது காதலின்-அன்பின் வெளிப்பாடு.
தன் மனைவி போல் மற்றவர் மனைவியைப் பார்க்கலாகாது, பார்க்கவும் கூடாது. அதன் பெயர் வெறி, அன்பு/ காதல் அல்ல.
தன் மனை இருக்க பிறன் மனை நோக்குவது தான் ’வெறி’. தன் மனை நோக்குவதை ‘வெறி’ எனும் சான்றோகள் மீண்டும் சிந்தியுங்கள். தன் மனை நோக்குவது ’வெறி’யல்ல. அன்பு-காதல்-காமத்தின் வெளிப்பாடு. அது தவறு/வெறி என்று கூறுவது முரண்பாடு.
அன்பு கூர்ந்து தமிழ் பற்றி எழுதும் போது ’வெறி’ என்று ’கதை’க்காதீர்களேன். மீண்டும் மீண்டும் இப்படியே ‘கதை’ப்பது உண்மை அறிய மறுக்கும் பிடிவாதம் என்று உங்களுக்கு இன்னுமா தோன்றவில்லை?
மீண்டும் வேண்டுகிறேன். அன்பு கூர்ந்து ”அன்பு-காதல்-காமத்தின் வெளிப்பாடு” என்று உணருங்களேன் சான்றோர்களே.
அன்புடன்
.கவி.
Subject: [MinTamil] Re: கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 1 |
இராம.கியின் பின்புலம் வணிகர் குல குமுகாயத் தொன்மங்களை நன்கு அறிந்திருத்தல்.
நா.கணேசனின் பின்புலம், ஐரோப்பிய ஆய்வுகளின், இந்திய சிந்துசமவெளி
ஆய்வுகளின் அடிப்படை.
கண்ணன் தமிழகத்திற்கு புதியவனே இல்லை. நாம் வேண்டுமானால் ஓரங்கட்டலாம்.
வள்ளுவன், இளங்கோ என்று சங்கம் முழுவதும் பரவிக்கிடக்கும் தடயங்கள்.
யாராவது சுதர்சனம் கிருஷ்ணமாச்சாரியாரின் சங்ககாலத்தில் வைணவம் நூலை
இங்கு மின்பதிப்பாக்கினாலோ அல்லது அந்த நூலிலிருந்து தரவுகள் தந்தாலோ
இவ்விழைக்கு உரம் சேர்க்கும்.
இராம.கியின் முன்னைய ஆய்வுகளில் இந்திய மனிதப்பரப்பு தென்னகத்திலிருந்து
கிளம்பியிருக்க வாய்ப்புண்டு என்று சொல்லியிருக்கிறார். அது தற்போதைய
டி.என்.ஏ ஆய்வுகளுடன் ஒத்துப்போகிறது.
சரி, கட்டுரை மேலும் நம்மை எங்கு இட்டுச்செல்கிறது எனப்பார்ப்போம்.
தேவ் சொல்வது போல் தத்துவம் என்று வந்துவிட்டால் சமணம், பௌத்தம், ஆசீவகம்
என்பதை இந்திய முழுமைக்கும் பொதுவானவையாகவே உள்ளன. அதில் தமிழனின்
பங்களிப்பு என்ன என்று அறிவது சுவையுள்ளது.
க.>
2009/3/21 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்பிற்குரிய ஹரிகி,
உங்கள் கருத்தோடு உடன்படுவேன். ”ஐம்பெரும், ஐஞ்சிறும்” என்பது ஏதோ ஒரு
முறையில் வகைப்பாடு என்று கொள்ளுவோம். கம்பனை இதில் விடுத்தது புரியாத
கதை தான். இந்த வகைப்பாடு எப்பொழுது எழுந்ததோ, தெரியவில்லை.
தேவ்
இராமதாசன் wrote:
> N. Ganesan wrote:
> // ஆனால் ”கண்ணன்” கண்ணிலிருந்தா? இல்லை. கண்ணன் < கிருஷ்ணன் (via
> Prakrit). கண்ணன் கண் பத்மம் என்றாலும் கண்ணன் வடசொல் தான் (< கிருஷ்ணன்).
> அதுபோல், கர்ணகி:கண்ணகி.//
>
> கர்ணன் திரியாது
திரியும்.
>தமிழிலும் அப்படியே தானே வழங்கப் பெறுகிறது?
கர்ணனை மாற்றாமல் வைத்திருக்கும் நாம் கர்ணகியை கண்ணகியாக மாற்றியிருப்போம்
என்று தோன்றவில்லை.
--
ஆமாச்சு
Hari Krishnan wrote:
> 2009/3/21 இராமதா சன் <rama...@amachu.net>
>
> > On Sat, 2009-03-21 at 21:45 +0530, இராமதாசன் wrote:
> > > கர்ணன் திரியாது தமிழிலும் அப்படியே தானே வழங்கப் பெறுகிறது?
> > >
> > > கர்ணனை மாற்றாமல் வைத்திருக்கும் நாம் கர்ணகியை கண்ணகியாக மாற்றியிருப்போம்
> > > என்று தோன்றவில்லை.
> >
> > ஆனால் வர்ணம் என்பது வண்ணம் என்று மாறியிருப்பதை வைத்து பார்த்தால் சரியாய்
> > இருக்குமோ?
>
ஆம். கர்ணிகா என்றாலும் தாமரைப் பொகுட்டு தான்
(Cf. deepaa:deepikaa).
கண்ணிகை - தாமரைப் பொகுட்டு < கர்ணிகா (சென்னைப் பேரகராதி).
On Sat, 2009-03-21 at 21:45 +0530, இராமதாசன் wrote:
Hari Krishnan wrote:
>
> வில்லி முதல் பாரதி வரை கருணன் என்றும் கன்னன் என்று வேறுவேறு வடிவங்களில்
> பயன்படுத்தியிருக்கிறார்கள்.
>
முக்கியமான கடவுளாக கண்ணன் (< க்ருஷ்ண, கண்ஹ)
பாரதத்தில் இருப்பதால் கர்ணன் கண்ணன் என்றால் குழப்பம் ஆகும்.
அதனால் கன்னன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர்.
கண்ண பரமாத்மா இதிஹாசத்தில் இருப்பதால், கண்ணனை விடுத்து
பகரியாய் கன்னன்.
Loss of cerebrals என்னும் கோட்பாடு: அள்ளக்கை:அல்லக்கை,
புள்ளாங்குழல்:புல்லாங்குழல், காராணை:காரானை, கடம்பு:கதம்ப (kadamba
flower).
நா. கணேசன்
வேந்தன் அரசு wrote:
> 2009/3/21 இராமதா சன் <rama...@amachu.net>
>
> > On Sat, 2009-03-21 at 21:45 +0530, இராமதாசன் wrote:
> > > கர்ணன் திரியாது தமிழிலும் அப்படியே தானே வழங்கப் பெறுகிறது?
> > >
> > > கர்ணனை மாற்றாமல் வைத்திருக்கும் நாம் கர்ணகியை கண்ணகியாக மாற்றியிருப்போம்
> > > என்று தோன்றவில்லை.
> >
> > ஆனால் வர்ணம் என்பது வண்ணம் என்று மாறியிருப்பதை வைத்து பார்த்தால் சரியாய்
> > இருக்குமோ?
>
>
> வர்ணத்துக்கு நிறம்தான் தமிழ்.
>
வண்ணம் (< வர்ணம்) என்பதும் தமிழில் நிறம் என்று பொருள்படும்.
- சில ஆயிரம் ஆண்டுகளாய்
> கைவண்ணம் இங்கே கண்டேன் கால் வண்ணம் அங்கே கண்டேன்.
>
> வண்ணம் = திறமை
>
> நும் பெருமை என்பது கெடுமோ?
> வண்ணம் எவனோ என்றனிர் செலினே!
>
> வண்ணம் = how are you?
>
> யானும் அவ்வண்ணமே கோரும்.
>
> வண்ணம் = அவ்வாறே
>
> கர்ணன் = கன்னன்
> கர்ணம் = கன்னம்
>
கிருஷ்ணன் > கண்ணன் வடசொல்லை முழுதுமாக
வியாபிப்பதாலே, கர்ணனை கண்ணன் என்றால் குழப்பம்.
அதற்காக, கன்னன் என்ப.
வர்ணம் : வண்ணம்/வன்னம் ஆவதுபோல்,
கர்ணம் : கண்ணம்/கன்னம் என்றாகும்.
Loss of retroflexes:
அள்ளக்கை:அல்லக்கை, தெள்ளவாரி:தெல்லவாரி, கடம்பப்பூ:கதம்பப்பூ, ....
அதுபோல், வண்ணம்:வன்னம், கண்ணம்/கன்னம், ...
அன்புடன்,
நா. கணேசன்
>
அன்புள்ள திரு. வேந்தன் அரசு
இது அம்பும் அல்ல, உங்களை நோக்கி வீசப்பட்டதும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை.
ஏனெனில் நாம் வாலி<--இராமர்-->இராவணர் யுத்தமும் நடத்தவில்லை தானே :)
இது அம்பென்று நோக்கினால், தமிழ்க் மொழி காதலர்களை, குறை கூறும் பிற மொழிக் காதலர்களை நோக்கி எறிந்ததாகத்தான் கொள்ள வேண்டும், தங்களை நோக்கியதாக அல்ல.
தன் மனைவி மேல் கொள்ளும் காமம் மிகுந்து காதலாகவும், காதல் மிகுந்து அன்பாகவும் மாறுவதால் தான் நாம் பெரும்பாலோர் ஒரே துணையுடன் வாழ்கிறோம்.
தன் மொழி மேல் கொள்ளும் காமம் மிகுந்து காதலாகவும், காதல் மிகுந்து அன்பாகவும் மாறுவதால் தான் நாம் பெரும்பாலோர் ஒரே மொழியை விட இயலாமல் அதன் துணையுடன் வாழ்கின்றோம்.
மொழிக் காமம் என்பது இயல்பு நிலை. நூற்றுக்கு தொன்னூறு சதவிதம் அன்பர்கள் மொழிக் காமத்திலே ஈடுபடுவர், அவருக்கு மொழி/எழுத்து என்பது சொல் விருத்திக்கான ஒரு நிலை அவ்வளவே.
அதை மீறி மொழியின் மீது காதல், அன்பு கொள்ளும் போது, அதை வெறி என்பது ஏற்புடையதாகாது தானே.. அதையும் பிறன் மனை நோக்கி தன் மனையைத் தவறாக நோக்குதல் தவறாகாதா? |
|
அன்புடன்
.கவி.
|
அன்புள்ள கணேசன் ஐயா
தொடர்பில்லாமல் ‘மொழி வெறி’ குறித்த சிந்தனைகள் இந்த இழையில் வருவதால் இத்தொடரின் கருத்துக்கள் திசை மாறுகின்றன. இழையைத் தொடக்கியவரின் சிந்தனைகளை வழி மாற்றம் செய்வது தவறு என்பது என் கருத்தும். தேவ் ஐயாவும் இதையே கூறினார் என்று நினைக்கின்றேன்.
தங்களின் இழையை ஒட்டிய சிந்தனையாயின் தலைப்பை மாற்றாமல் அனுப்புகின்றேன்.
அன்புடன்
|
From: N. Ganesan <naa.g...@gmail.com> |
NG
On Mar 21, 1:59 pm, "Va.Mu.Se. Kavi Arasan" <kaviara...@yahoo.com>
wrote:
> அன்புள்ள கணேசன் ஐயா
>
> தொடர்பில்லாமல் ‘மொழி வெறி’ குறித்த சிந்தனைகள் இந்த இழையில் வருவதால் இத்தொடரின் கருத்துக்கள் திசை மாறுகின்றன. இழையைத் தொடக்கியவரின் சிந்தனைகளை வழி மாற்றம் செய்வது தவறு என்பது என் கருத்தும். தேவ் ஐயாவும் இதையே கூறினார் என்று நினைக்கின்றேன்.
>
> தங்களின் இழையை ஒட்டிய சிந்தனையாயின் தலைப்பை மாற்றாமல் அனுப்புகின்றேன்.
>
> அன்புடன்
> .கவி.
> --- On Sat, 3/21/09, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
இராமகி wrote:
> அன்பிற்குரிய கணேசன்,
>
> உங்கள் கருத்துகளுக்கு (மேல நீலத் தாமரை என்பதற்குச் சேர்த்து) இந்தக்
> கட்டுரைத் தொடர்முடிவில் மறுமொழிக்கிறேன். இன்னும் கோவலன், மாதவி ஆகிய
> பெயர்க்காரணங்கள் சொல்லிப் பின் சிலம்பு அல்லாத கோவலன் - கண்ணகி கதைகள்
> பற்றிச் சொல்லி, அப்புறம் இவற்றிற்கு வரவேண்டும்.
>
> நாட்கள் சில ஆகலாம், பொறுத்துக் கொள்ளுங்கள்.
>
ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கிறேன்.
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா என்றது:
’குடவல இடவல கோவல காவல’ - பரிபாடல்
மாதவி - கிருஷ்ணனின் மனைவி என்கிறது அகராதி.
நா. கணேசன்
கண்ணகி (கர்ணகி) - கோவலன் (கிருஷ்ணன்) - சிலம்பின் நாயக, நாயகியர்
பெயர்ப் பின்புலம்
http://groups.google.com/group/minTamil/msg/2a35cdf42efcc856
வெ. சு. சுப்பிரமணியாச்சாரி,
(அ) சிலப்பதிகார ஆராய்ச்சி,
ஆனந்தபோதினி, 1947, 166 ப.
Ravcakip S. Vaiyapurip Pillai elutiya munnuraiyutan
Vitvan Ve. Cu. Cuppiramaniya Accariyar elutiyatu.
(ஆ) சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்,
1951, சென்னை: பகலவன் பாசறை.
ஒருநாள் பார்க்கணும்.
-----------
கண்ணகி (கர்ணகி) - கோவலன் (கிருஷ்ணன்) - சிலம்பின் நாயக, நாயகியர்
பெயர்ப் பின்புலம்
http://groups.google.com/group/minTamil/msg/2a35cdf42efcc856
அன்புடன்,
நா. கணேசன்
பொதுவாக தமிழ் இணைய உலகில், தப்பித்தவறி இது சமஸ்கிருத மூலத்தில் இருந்து
வந்தது என்று ஏதைவது சொன்னாலே, காலங்காலமாக அது தமிழாகவே அறியப்பட்டு
வந்தாலும் அதை முற்றிலும் விலக்குவதே தொன்று தொட்ட மரபாக இருந்து
வருகிறது. (சமஸ்கிருதத்துக்கு மட்டும் தான் ஏனோ இப்படி..)
அதையே இங்கு குறித்தேன். எவரேனும் இந்த இடுகையை படித்து, அது போல ஏதாவது
செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் :) தான் எழுதினேன்.
மீண்டும் எவரையேனும் தனிப்பட்டு கூறியதாக கருதினால் மன்னிக்கவும்..
நன்றி
On Mar 20, 8:58 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> குண்டலகேசி வடநாட்டு புத்த பிக்ஷுணியின் வாழ்க்கையை ஒட்டிய காவியம்
> என்பதால் ”தமிழ்” ஐம்பெருங்காப்பியங்களிலிருந்து அதை நீக்கி ”தனித்தமிழ்
> ” ஐம்பெருங்காப்பியம் ஒன்றை உருவாக்காமல் இருந்தால் சரி !!!!
>
> இந்த மொழிவெறித்தனம் எங்கு போய் முடியுமோ !!!
>
> யாம் அறியோம் பராபரமே !!!
>
> On Mar 20, 5:30 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
>
> > On Fri, 2009-03-20 at 03:42 -0700, இராமகி wrote:
>
> > > சிலம்பு, ஒரு தமிழர் காப்பியம், அத்தகைய காப்பியம் சங்கதத்தில் இல்லை.
>
> > இப்படி தமிழர் காப்பியம் அப்படி அல்லாத காப்பியமென்று உண்டானெனே எனக்கு
> > ஐயமுண்டு.
>
> > தமிழர் காப்பியம் என்றகிறபோது வேறு சில அப்படி அல்ல என்று தாங்கள் ஏதோ
> > ஒன்றை வேறுபடுத்திக் காட்ட இங்கே முயல்கிறீர்களா? அப்படீன்னா அவையென்ன?
>
> > --
>
> > ஆமாச்சு
நா, கணேசன்
------------
Sheth's Prakrit dictionary gives kaNNa both for Sanskrit karNa 'ear'
and for KarNa of the Mahaabhaarata. Best regards, Asokan
வேந்தன் அரசு wrote:
> கணேசர்
>
> “அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட
> பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று ”
>
> வர்ணம் என்பது வருணம் என்றே தமிழாக்கப்பட்டுள்ளது
>
> ஏற்கனவனே வண்ணம் என்ற சொல்லும் தமிழில் இருப்பதால், வண்ணம் என்ற சொல்லும்
> வர்ணத்தை சிறுபான்மை பயனாகி இருக்கு
>
> கண்ணன், கன்னன் போன்ற குழப்பம் நேராமல் இருக்க வன்னம் என்றுதானே தமிழாகி இருக்க
> வேண்டும்.
>
வெளியார்முன் வான் சுதை வண்ணங் கொளல் (குறள், 714).
(வண்ணம் < வர்ணம்).
மணிவர்ணன் - ஆழ்வார்கள் மணிவண்ணன் ஆக்கியிருக்கின்றனர்.
மணி = நீல நிறம் (நீலம் < நீர். கடல்வண்ணம்).
வத்தநாட்டு வண்ணக்கம்மரும், கொங்குவேளிர் செய்த பெருங்கதை,
உஞ்சைக். 58, 44. வண்ணக்கம்மர் = painter.
கொங்கிலே வண்ணக்கர் என்ற குலமுண்டு - வர்ணகர் - நாணய பரிசோதகர்.
வண்ணக்கன் சாத்தனார் (நற்றிணை)
வண்ணகம் vaṇṇakam
, n. < varṇaka. 1. Elaborate eulogy; வருணித்துப் புகழ்கை (தொல். பொ.
452, உரை.)
வேந்தன் அரசு wrote:
> ஏற்கனவனே வண்ணம் என்ற சொல்லும் தமிழில் இருப்பதால், வண்ணம் என்ற சொல்லும்
> வர்ணத்தை சிறுபான்மை பயனாகி இருக்கு
>
அப்போது இரண்டு வண்ணமும் வித்தியாசமாகத் தெரியலை போலும்.
மணிவண்ணன் என்பது வெண்மையைக் குறிப்பது.
நாரணன் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறான்.
கண்ணன்/இராமனாக அவதாரங்கள் எடுத்தபோது நீலம்/பச்சை/கருப்பு.
க.>
kaviarasan Va.Mu.Se. wrote:
> அன்புள்ள வினோத்
>
> பௌத்தமும், சமணமும், சமசுகிருதத்தில் எழுதப் படவிலை என்று தாங்கள்
> அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.
>
மகாயான பௌத்தம் முழுக்க சமசுகிருதத்தால் எழுதப்பட்ட நூல்களே.
ஏராளமான நூல்கள் பௌத்தத்திற்காகக் காஞ்சியில் ஸம்ஸ்கிருதத்தால்
எழுதப்பட்டன. பல சீனா, திபெத், ஜப்பானில் கிடைக்கின்றன.
சமண நூல்கள் பலவும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.
Just FYI only.
நா. கணேசன்
அடுத்து, கோவலன் என்னும் பெயரைப் பார்ப்பதாகச் சொன்னேன். காப்பியம்
எங்கணும் கோவலன் என்ற பெயரே, ஒரே ஒரு இடத்தைத் தவிர, பயிலப் படுகிறது;
அந்தப் புறனடை அடைக்கலக் காதையில் 93-94 ஆம் வரிகளில் மாடலன் சொல்வதாக
வருகிறது.
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவ (93-94)
இங்கே ”மாமணிக் கொழுந்து” என்பது கண்ணகியைக் குறிக்கிறது. “விருத்த
கோபால” என்பதற்கு ”அறிவால் முதிர்ந்தவனே” என்று உரையாசிரியர்கள் பொருள்
தருகிறார்கள். ”அறிவு என்பது இந்த வரிகளின் ஊடே எப்படி வந்தது?” என்று
புரியவில்லை. ”அறிவு” என்ற கருத்தைத் தவிர்த்துப் பார்த்தால், அதோடு
”விருத்த கோபால” என்பது இளங்கோவின் சொல்லாட்சியெனில், ”கோவலன் கிழவன்,
கண்ணகி இளையோள்” என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால்,
கண்ணகியைக் காட்டிலும் 4 அகவை மூத்தவனை ”விருத்த கோபால” என்று இளங்கோ
சொல்லுவானோ?
”மணிமேகலைக்குப் பெயரிட்ட போது, கோவலன் கொடுத்த கொடை, தானங் கேட்ட
பார்ப்பனனை யானை இடற முயன்ற போது, கோவலன் காப்பாற்றியது, ’இனி நீயே
பிழைத்துக் கொள், என்னை நாடி நிற்காதே’ என்று ஒரு பார்ப்பனன் தன்
மனைவிக்குக் கொடுத்த வடமொழி வாசக ஓலையைக் கோவலன் வாங்கிக் கொண்டு
பார்ப்பனிக்குப் பணங் கொடுத்துக் காப்பாற்றியது” என்று மூன்று கொடை
நிகழ்ச்சிகளைக் கூறிய மாடலன், அதைத் தொடர்ந்து மேலும் கொடைநலம்
பாராட்டாது, “அறிவு முதிர்ந்த கோபால” என்று சொல்லுவது ”இடம், பொருள்,
ஏவற்” பொருத்தம் இல்லாது தோற்றுகிறது.
அதிலும் பார்ப்பனியைக் காப்பாற்றும் நிகழ்ச்சிக்கு முன்னால், அவள் கணவன்
தவிக்க விட்டு ஓலை கொடுத்த கதை, ”பஞ்ச தந்திரத்தில்” வருகிற, கற்றோர்
பலரும் அறிந்திருக்கக் கூடிய, அன்றையப் பொதுக் கதை. அதைக் பிய்த்துக்
கொண்டு வந்து, இங்கு ஒட்டி, பார்ப்பனியைக் கோவலன் காப்பாற்றுவதாகச்
சொல்லுவது இளங்கோவின் நம்பகத் தன்மையை பெரிதும் குலைக்கிறது. ”வேறொரு
பொதுக் கதையைக் கொண்டு வந்து அதை முடிப்பித்தவன் தன் கதைத் தலைவன்” என்று
பொருந்தச் சொல்லுவது இளங்கோவின் எழுத்து நேர்மைக்குப் பொருந்துமா?
[கதையைச் சொல்லுவது தவறில்லை. ”அந்தக் கதையைத் தன் தலை மாந்தனே
முடித்தான்” என்பது பெரும் இழுக்கு.] இந்த வரிகள் ”இளங்கோவின் வரிகள்
தானா?” என்று நம்மை வியக்கவும், மருளவும் வைக்கின்றன. ஒருவேளை
கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலைச் சிறப்பிக்கும் முகமாக இராமனின்
முடிசூட்டு விழவில் ”வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி” என்று கம்பன் பாராட்டியது போல், பொதுக்கதையைக்
கோவலனோடு ஒட்டிவைத்துக் கோவலனின் கொடையை இளங்கோப் பாராட்டினானோ, என்னவோ?
அல்லது இப்படி ஒரு கதையைக் கோவலனோடு ஒட்டியது இளங்கோ அல்லாத பின்னொருவர்
இடைச்செருகலா? [அழற்படுகாதையில் இது போன்ற பிற்காலச் சாதிக் குமுகாய
வழக்குகளைப் புகுத்திய அளவிறந்த இடைச்செருகல்களை வேங்கடசாமி நாட்டார் தன்
உரையில் குறிப்பிடுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.] மொத்தத்தில்
”விருத்த கோபால” என்ற விளி இளங்கோவோடு பொருத்தமில்லாத படி தொங்கி
நிற்கிறது.
கோவலன் முன்னால் செய்த கொடைச் செய்திகளைக் கூறும் இடத்தில்,
”கொடைமடத்தில் சிறந்த கோவலனே!” என்று கூறுவதில் பொருளிருக்கிறது. அதை
விடுத்து, “அறிவு முதிர்ச்சி” என்ற பொருளில் ”விருத்த கோபால” என்று
சொல்வது, ஏதோ இடறல் என்றே தோற்றுகிறது. ஒருவேளை, ஏட்டுப் படி
எடுக்கையில், ஏற்பட்ட முறை தெரியா இடைச்செருகலாய்க் கூட அது இருக்கலாம்.
அன்றேல், ஓரோவழிப் பார்ப்பனர் வழக்காயும் இருக்கலாம். பொது வழக்கில்,
கோபாலன் என்பது இளங்கோவின் பயன்பாட்டாய் இருந்தால், காப்பியத்தில் வேறு
எங்கணும் அதைப் பயன்படுத்தாதது நமக்கு வியப்பையே அளிக்கிறது.
இத்தனைக்கும் யாப்பு தவறாமல் ”கோவல” என்றே அங்கு இளங்கோ பயின்றிருக்க
இயலும் நிலையில், ஏன் ”கோபால” என்று பயன்படுத்தினான்? அதன் தேவை என்ன? -
என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. [கோபால என்பதை சிலம்பு அல்லாத மற்ற
”கோவலன் - கண்ணகி ஆக்கங்கள்” பயன் படுத்தியிருப்பதைப் பின்னால்
பார்ப்போம்.]
{இங்கு ஓர் இடைவிலகல். ஓரெழுத்து, ஈரெழுத்தை மாற்றி, எத்தனை சிவன்
கோயில்களின் இறைவன், இறைவி பெயரை சங்கதமாக்கி ”அம்புலிமாமா கதை”
பின்னியிருக்கிறார்கள்? திரு. நா. கணேசனுக்குத் தெரியாததா, என்ன?
மயிலாடுதுறை அஞ்சொலாளை, ஓரெழுத்து மாற்றம் கொடுத்து, அஞ்சலாள் ஆக்கிப்
பின் ”அபயாம்பிகை” என்று மொழிபெயர்த்ததை அவரும் தமிழ் கூறு நல்லுலகிற்கு
எடுத்துரைத்திருக்கிறாரே? நானும் சிலவற்றை இங்கு சொல்ல விழைகிறேன்.
தில்லையில் இருக்கும் நடவரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு
வாக்கில், பழைய திரு மூலத்தானத்திற்கு அருகில் இருந்த சிறிய அம்பலம். அதை
அந்நாளிற் சிற்றம்பலம் என்றே சொன்னார்கள். பின்னால் காலப்போக்கில்,
பேரரசுச் சோழர் ஆதரவில் அது பேரம்பலம் ஆயிற்று, பொன்னம்பலமும் ஆயிற்று.
[தீட்சிதர்கள் இப்பொழுது சொந்தம் கொண்டாடுவதைத் தூக்கியெறியுங்கள்.
தில்லைக்”கோயில்” பேரரசுச் சோழரின் பெரும்பணி.] சிற்றம்பலம்>
சித்தம்பரம்> சிதம்பரம் என்று ஆக்கிப் பின் சித் + அம்பரம் என்று
பிரித்து ”ஞான ஆகாசம்” என்று பொருள் சொல்லி, அங்கே ஆகாச பூதம் இருப்பதை
நுழைத்து, எப்படியெல்லாம் இன்று புது விளக்கம் சொல்லப் படுகிறது? ஊற்றுகை
(origin) என்னவோ சிற்றம்பலம் தான், எவ்வளவு முயன்றாலும் சிதம்பரம்
இல்லை.
கோடிக்கரைக்கு அருகில் மரை மான்கள் உலவிய மரைக்காட்டை ஓரெழுத்துத்
திரிவில் மறைக்காடாக்கி, வேதாரண்யம் என்று மொழிபெயர்த்து, என்னவொரு கதை?
நாவல் மரக்காட்டுக்குள் இருந்த நாதரை நாவல்கா நாதர் என்று சொல்லுவது
இயல்பான முறை. அதைச் சரியாகத் தான் ”ஜம்புகேஸ்வர” என்று வடமொழியில்
மொழிபெயர்த்தார்கள். பின்னால் பேச்சுவழக்கில் மடைத்தேற்ற (metathesis)
முறையில் திருநாவல்கா> திருவாநல்கா> திருவானக்கா> திருவானைக்கா என்றாகிப்
பின் ”ஆனை வந்தது, நீரூற்றி வழிபட்டது, இறைவன் மகிழ்ந்து போனார்” -
என்றெல்லாம் விளக்கம் சொல்லுவது இன்னும் ஒரு கதை.
ஐம்பூதங்களின் வடிவில் இலிங்கத்தைப் பார்க்கும் தொன்மத்தில் கால்
(>காற்று) என்பதற்கான தலம் திருக் காலத்தி. இதையும் ஓரெழுத்துத் திரிவில்
திருக் காளத்தி ஆக்கி அதை ஸ்ரீ + காளம் + அஸ்தி என்று பிரித்து,
”சிலந்தி, பாம்பு, யானை முதலிய மூன்றும் வழிபட்ட இடம்” என்று பொருந்தச்
சொன்னது இன்னொரு கதை.
வேல மரங்கள் மிகுத்துக் கிடந்த காடு திரு வேற்காடு. அதில் இருந்த நாதர்
வேற்காட்டு நாதர். (ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால், விருது பட்டி
விருது நகர் ஆனது போல்) [லகர/தகரப் போலியில்] வேலக்காட்டை வேதபுரியாக்கி,
வேதம், வேலமரங்களாய் வந்து வழிபடும் ஈசர் என்று பொருள் சொல்லி -
இப்படியும் ஒரு கதை.
ஆகக் கதை, கதையெனப் பல தலங்களிலும் இறைவன், இறைவி, இடங்களின் பெயர்கள்
திரிந்து கொண்டே போகின்றன. எல்லாம் அடிப்படைச் சொல்லின் ஓரிரு
எழுத்துக்களை மாற்றி அமைத்துக் கொண்டு அமைந்தவை. இது போன்ற காட்டுக்களைக்
காட்டிக் கொண்டே போகலாம். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கோபாலன்>கோவலன்
என்னும் பொருத்தமும், அதுவும் ஒரேயொரு எடுகுறிப்பை நம்பி.}
இனிக் கோவலன் என்ற சொல்லை மாட்டோடு தொடர்புறுத்தும் பொருளுக்கு வருவோம்.
தமிழில் ஆயர் என்பவர் இடையர், கோவலர், அண்டர் என்று மூன்று விதமாய்
பிரிக்கப் படுவர். இதில் கோவலர் என்பது மாட்டைக் குறித்துக் கீழே உள்ளது
போலவே தமிழில் அமையும்.
கோ>கோவு (பசு மாடு)>கோவல் (மாட்டு மந்தை) + அர்
இங்கே முகன்மையானது மந்தை என்னும் பன்மைப் பொருள். ”மாட்டு மந்தை
வைத்திருக்கிறவன், மாட்டு மந்தைக்குச் சொந்தக் காரன்” என்ற ஒரு பொருளை
”கோவலன்” என்ற தமிழ்ச் சொல் காட்டும். கோவலர் என்பது கோவலனின் பன்மை.
இந்தப் பொருளில் ஆனால் பன்மையில் மட்டுமே, தன் காப்பியம் எங்கணும் இளங்கோ
பயன்படுத்துகிறான். [அதே பொழுது கோவலன் என்ற சொல்லிற்கு இது மட்டுமே
பொருளல்ல.] கோபால என்னும் வடமொழிச் சொல் சற்று நுண்ணிய அளவில் வேறுபடும்.
மாட்டைப் “பரிபாலிக்கிறவன்” கோபாலன். இங்கே மந்தை இருக்கலாம்; இல்லாமலும்
போகலாம்; வெறும் ஒற்றை மாடு கூட இருக்கலாம். ஆனாலும் ”கோவலன், கோபாலன்”
என்ற இரண்டையும் ஒன்றிற்கொன்று சமனாகப் ”பத்திக்” காலத்தில் இருந்து
பலரும் பாவித்து இருக்கிறார்கள். [சங்க காலத்தில் நானறிந்த வரை கோவலன்
என்ற சொல்லே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. கோபால என்ற சொல்
புழக்கத்தில் இல்லை. ஏதேனும் புறனடை இருந்தால் தெரிவியுங்கள். “விருத்த
கோபால” என்பது இளங்கோவின் சொல்லாட்சியானால், தமிழிலக்கியத்தில் அதுவே
முதல் சொல்லாட்சியாய் இருக்க வாய்ப்புண்டு.] கோவலன் = மாட்டு மந்தைக்குச்
சொந்தக் காரன் என்ற பொதுப்பொருளை ஆயர்பாடிக் கண்ணனுக்கு ஏற்றியது,
பொதுப்பெயரை தனியாளுக்கு விதப்பாய்ச் சொல்லும்
பழக்கத்தால் என்றும், கோவலன் என்ற சொல் கண்ணனுக்குப் பகரியாய் வந்தது
பொருள் நீட்சியில் என்றும் உணர்க.
[கண்ணன் என்பது க்ருஷ்ணன் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து எழுந்தது என்று
ஒரு கருத்து இங்கு எழுந்தது. ஆடிப் போனேன். இப்படியாகத்தான்
சொற்பிறப்புக்கள் பார்க்கப் படுமானால், நான் இந்தக் கட்டுரைத் தொடர்
எழுதுவதில் பொருளில்லை. ”எல்லாமே சங்கதத்தில் இருந்து கடன்பெற்றது;
தமிழில் ஒன்றுமே இல்லை” என்று ஏற்றுக் கொண்டு நான் போய் விடலாம்.
”கருப்பன்” என்னும் சொல் தமிழா, இல்லையா? ”கருவேல மரம்” தமிழா, இல்லையா?
அடுக்கிக் கொண்டே போகலாம் கல் என்னும் வேரில் இருந்து கருமைப் பொருளில்
ஆயிரக் கணக்கில் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. (கல் எனும் வேரிற் பிறந்த
சொற்களைப் பற்றி நான்கு பெரும் பொத்தகங்களே போட்டிருக்கிறார் பேரா.
கு.அரசேந்திரன்.) அவற்றை எல்லாம் அப்புறம் வடமொழி என்று சொல்லவேண்டும்.
(கல் என்னும் வேரில் இருந்து கல்>கரு>கருநன்>கண்ணன் என்று பெயர்
எழுந்ததாகத்தான் தமிழ்ச் சொற்பிறப்பு சொல்லுகிறது. உருநம்>உண்ணம் என்பது
போல. உண்ணம் = உருமம் என்னும் வெய்யில் வேளை, மத்திய உண்ணம் =
மத்தியாண்ணம் என்ற கலப்புச்சொல்லில் உண்ணம் என்ற தமிழும் இருக்கிறது.)
கருத்தவன் தன் நிறத்தைச் சொல்லிக் கொள்ளத் தன்மொழியில் சொல்லில்லாமல்
இருந்தான் என்றால், பிறகு என்ன சொல்லி தன்னை அழைத்துக் கொண்டான்? 65000
ஆண்டு இங்கே தெற்கு முனையில் குப்பை கொட்டியிருக்கிறானே? ”க்ருஷ்ண” என்று
சொல்லை கி.மு.1200-1500ல் தெரிந்து கொள்ளும் வரை இவன் ஊமையாய் இருந்தானா?
- என்றெல்லாம் மாந்தவியல், மொழியியல் சார்ந்து கேள்வி எழுகிறது.
பொதுவாய் உரையாடுவதில் ஓர் அடிப்படைச் சமதளம் இருக்கவேண்டும் என்று நான்
நினைக்கிறேன். “நீ தடுக்கில் பாய்ந்தால் நான் கோலத்தில் பாய்வேன்” என்பது
உரையாடலுக்கு அழகல்ல. தமிழைச் செம்மொழி என்று சொல்லிவிட்டு, பின்னால்
எல்லா வேரும் வடமொழியில் இருந்து பெற்றது என்றால் அப்புறம் செம்மொழி
என்பதற்குப் பொருளில்லை. நான் நிற்கும் இருக்கையை நீங்கள்
பிடுங்குகிறீர்கள் என்று பொருள். அந்த நிலையில் நான் பேசிக்
கொண்டிருப்பதில் பொருளில்லை. "நீ வாங்கியதெல்லாம் கடன்” என்று
சொல்லிவிட்டு, “போனால் போகிறது, வேண்டுமானால் என்கீழ் அடிமையாய் இருந்து
கொள்” என்பது போல் இருக்கிறது. நண்பரே! ”கண்ணன்<க்ருஷ்ண என்பது போன்ற
கூற்றுக்களை இனித் தவிர்க்கலாம். காட்டு விலங்காண்டி நிலையில், குறிஞ்சி,
முல்லையில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அறிவும், அதற்கான சொற்களும்
தமிழில் 3800 ஆண்டுகளுக்கு முன் ஆதிச்ச நல்லூர் பழந்தமிழனுக்கு
இருந்திருக்க வேண்டும் என்று ஒப்புவது நம்மை முன்கொண்டு செல்ல உதவும். We
have to acknowledge some basic intelligence to our old Thamizan.]
”கோவலன் என்பது பொதுவாய்ச் செல்வந்தனைக் குறிக்கும். ஏனென்றால் மாடு
என்றால் செல்வம்” என்ற கருத்து மிகவும் தட்டையாய் இருக்கிறது. செல்வன்
என்ற சொல் இருக்கிற போது கோவலன் = செல்வன் என்று மாசாத்துவன் பெயரிடுவது
சற்று சாத்தாரமாய்த் தெரிகிறது
(சாத்தாரன்>சாத்தாரனம்>சாத்தாரணம்>சாதாரணம். இந்த விளக்கம் நீலகேசியில்
இருக்கிறது. ஏதோ ஒரு இடுகையில் சொன்னேன். சட்டென ஏதென்று நினைவிற்கு
வரவில்லை. சுருக்கமாய் சாத்தாரம் என்றே சொல்லலாம்.)
இனிக் கோவலனின் பொருளுக்கு வருவோம். விண்ணவன் கண்ணனின் மேல் கொண்ட
ஈடுபாடு காரணமாய்க் கோவலன் என்ற பெயரிட்டான் மாசாத்துவான் என்றால்,
அதுவும் நகரத்தார் பழக்கம் அறியாதவர் கூற்று என்றே சொல்லுவேன். ஒரு 100,
150 ஆண்டுகளுக்கு முன்னால் வரை, சிவநெறி அல்லாத, அல்லது ஊர்க் காவற்
தெய்வங்கள் அல்லாத, பெயரைப் பிள்ளைகளுக்கு இடமாட்டார்கள். அதோடு
அவர்களின் சமயக் குருவின் (சிவ நெறியாளர்) சொல்லை மீறி அவர்கள்
இருந்ததில்லை. பாண்டியநாட்டிற்கு (சுந்தர பாண்டியன் காலம், பேரரசுச்
சோழன் விசயாலயனுக்குச் சற்று முன்னால்) வந்த காலத்தில் இருந்தே
சிவநெறியில் தான் இருந்தார்கள். பத்தி இயக்கத் தொடக்கத்தில் பல்லவர்/
பாண்டியர் காலத்தின் தொடக்கத்தில் சிவநெறிக்கு வந்திருக்கலாம்.
அதற்குமுன் சோழநாட்டில் இருந்தபோது சமணம், ஆசீவகம், புத்தம் என்று
பலநெறிகளில் இருந்திருக்கிறார்கள். பத்தி இயக்கம் தமிழகம் எங்கணும்
மக்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது. [அதை இன்றளவும் நன்கு ஆய்ந்து
அறிந்தோம் இல்லை. தொடவும் மறுக்கிறோம், தயங்குகிறோம். வென்றவர்கள் வரலாறு
எழுதி வைத்ததால் உண்மை தெரியப்படாமலே போகிறது.] பத்தி இயக்கம்
இவர்களையும் புரட்டியது. அப்படிச் சிவநெறிக்கு மாறிய இவர்கள் ஒரு
காலத்தும் விண்ணவ நெறியைத் தங்கள் சமயமாக 100, 150 ஆண்டுகளுக்கு முன்
பின்பற்றினார்கள் என்பதற்கு இதுவரை சான்றுகள் இல்லை. இப்பொழுது கோவலன் /
கோபாலன் என்பதை வைத்து ஒரு முயற்சி நடக்கிறது. [இன்றுங் கூட சமண, ஆசீவகப்
பழக்கங்களும், பெயர்களும், மரபுகளும் விட்டகுறை, தொட்டகுறையாய்
நகரத்தாரிடையே இருக்கின்றன. விண்ணவ சமயம் போற்றத் தொடங்கியது கடந்த 100,
150 ஆண்டுகளில் தான். அதுவும் சிவநெறியை ஒருபக்கம் வைத்துக் கொண்டே தான்
நடக்கிறது.]
இனி கோவலன் என்ற பெயருக்கும், கூடவே மாசாத்துவான், மாநாய்கன் என்ற
பெயர்களுக்கும் காரணங்களைக் காண்போம்.
மாசாத்துவான் என்பது இயற்பெயர் அல்ல. பட்டப் பெயர். மாநாய்கன் என்பதும்
இயற்பெயர் அல்ல, பட்டப் பெயர். இயற்பெயரைச் சொல்லாமல், பட்டப் பெயர்
வைத்து ஊருக்குள் அழைப்பது இன்றைக்கும் நகரத்தார் இடையே பழக்கம்.
”சேந்தனைய்யா வீடு, மாத்தளையார் வீடு, கொரட்டியார் வீடு” என்றெல்லாம்
அந்தப் பழக்கம் உண்டு. மாசாத்துவான் என்பதற்கு ”பெரிய வணிகன்” என்று
பொருள். சால்தல் = இதற்கு இதைச் சேர்த்தல், பொருத்துதல் என்று பொருள்
அதாவது பண்டமாற்றுச் செய்தல். இதன் பொருள் நீண்டு விலை சொல்லுதல்,
விற்றல் என்று தொடர்ச்சியாய் அமையும். (இந்தையிரோப்பியத்தில் sale என்று
சொல்லுகிறோமே, அது இதற்கு இணையானது.) சால்தலைச் செய்வது சாத்து. அது
ஓராளையும் குறிக்கும், ஒரு கூட்டத்தையும் குறிக்கும். சாத்து என்பது
சேர்த்து வழியாக வடபுலத்தில் சேத் ஆகும். சேத், செட்டி என்பதும் தொடர்பு
கொண்டவை தான். சாத்தன் சாலும் தொழிலைச் செய்பவன்,
வணிகன். மாசாத்தன் = பெரும் வணிகன். ”அதோ! அங்கே புகார்
பட்டினப்பாக்கத்தில் தெரிகிறதே! அது யார் வீடு தெரியுமா? மாசாத்தன்
வீடு”. அவன் இயற்பெயர் என்னவென்று கடைசிவரை இளங்கோ தெரிவிக்கவில்லை.
அடுத்தது மாநாய்கன். நாவுதல் = நீரைத் தள்ளுதல். அது துடுப்பாலும்
இருக்கலாம், கையாலும் இருக்கலாம். நாவிப் போகும் கலம் நாவாய். கடலோடுவது
பற்றிய தமிழ்ச் சொற்களை நான் இங்கு அடுக்கினால் அது விரியும். அதற்கு இது
இடமல்ல. நாவிகன்>நாய்கன் = கடலோடி, மாநாய்கன் = பெரும் கடலோடி, பெரும்
நாவாய்களுக்குச் சொந்தக்காரன். மாநாய்கனின் இயற்பெயரும் சிலம்பில்
கிடையாது.
மாநாய்கன், மாசாத்தன் இருவருமே வணிகர்கள் (traders) என்று நாம்
நினைத்துக் கொள்கிறோம். கிடையாது. ஒருவன் வணிகன். இன்னொருவன் வணிகம்
செய்யக் கப்பல் கொடுத்துப் பொதினம் செய்கிறவன். இருவரும் பொதினர்கள்
(business men). ஒருவன் சமணத்தில் இல்லறத்தான்; இன்னொருவன் ஆசீவகத்தில்
இல்லறத்தான். இந்தப் பொதினர்களைத் தான் பரதர் என்று சிலம்பும் சங்க
இலக்கியமும் அழைக்கின்றன. [பரதர் வேறு, பரதவர் என்னும் fishermen வேறு.]
[உரைசால் சிறப்பிற் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் -
மனையறம் படுத்த காதையின் தொடக்க வரிகள். அரசருக்கு முடியெடுத்துக்
கொடுக்கும் உரிமை பெற்றவர்கள் என்பது நகரத்தாரிடம் இருக்கும் தொன்மம்.]
சரி, மாசாத்துவான் என்ன வணிகம் செய்தான்? உப்பு, கூலம், மணி, மாணிக்கம்,
முத்து, .... இப்படி பல்வேறாய்க் கிடைக்கும் கற்கள் இது போன்று எது
வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இவர்கள் உள்நாட்டு வணிகராயும்
இருந்தார்கள், ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகர்களாயும் இருந்தார்கள்.
ஓரோவழி சிலம்பைப் படித்தால், கோவலன் ஏற்றுமதி இறக்குமதியில் தான்
இருந்திருப்பதாய்த் தோற்றுகிறது. அவன் தந்தை உள்நாட்டு வாணிகனாய்
இருந்திருக்க வேண்டும்,. ஏனென்றால் கவுந்தியடிகள் ”மதுரைக்கு உள்ளே
போனால், இவன் தந்தையைத் தெரியாத வணிகன் யாரும் இருக்க மாட்டார்” என்று
மாதரிக்குச் சொல்கிறாள். கண்ணகியே கூடத் தன் மாமனாரைத் தான்
நெடுஞ்செழியன்முன் சொல்லித் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.
மாசாத்துவான் தமிழக உள்நாட்டு வணிகருக்கும், வேந்தருக்கும் கூட நன்றாய்த்
தெரிந்தவனாய் இருந்திருக்கவேண்டும். அதே பொழுது, கோவலன் இவர்களோடு
தொடர்பில்லாத இறக்குமதியாளர், ஏற்றுமதியாளரோடு தொடர்புற்று இருந்திருக்க
வேண்டும். அவனை மதுரை உள்ளூர் வணிகரோ, அரச அலுவரோ அறியாமல்
இருந்திருக்கலாம். கோவலன் புகாரின் இறக்குமதி, ஏற்றுமதியாளரின் முன்னம்
மீண்டும் விழிக்க வெட்கப் பட்டு மதுரைக்கு (உள்நாட்டு வணிகம் செய்ய)
விழைந்து வருகிறான். வந்து சிலம்பு, மாணிக்கம் என்று தந்தையின்
வணிகத்துள் போக முயல்கிறான்.
அப்படியானால், கோவலன் என்ற சொல்லின் பொருள் தான் என்ன என்று கேட்டால்,
கோவல் என்ற வினைச்சொல்லோடு அன் என்பதைச் சேர்த்தே நான் பொருள்
சொல்லுவேன்.
பாவல் + அன் = பாவலன் (பா-வல், பா-தல் = பாப் புனைதல்)
காவல் + அன் = காவலன் (கா-வல், கா-த்தல் = காப்பாற்றுதல்;)
ஏவல் + அன் = ஏவலன் (ஏ-வல், ஏ-தல் = கட்டளையிடுதல்)
நாவல் + அன் = நாவலன் (நா-வல், நாவு-தல் = நவிலுதல்)
இரவல் + அன் = இரவலன் (இர-வல், இர-த்தல் = இரவுதல்)
அதே போல கோ-வல் என்பது to govern, to administer என்று இருந்திருக்கலாம்.
ஏனென்றால் சிலம்பில் கோவலின் பெயர்ச்சொல்லாய்க் கோத்தொழில் என்ற சொல்
மூன்று இடங்களில் வந்திருக்கிறது. கோத்தொழிலாளர் என்பவர் bureaucrats. கோ-
த்தல் = இணைத்தல், சேர்த்தல், ஒழுங்கு படுத்தல், to compose, compile,
arrange, reduce to order, to systematise. கோ-த்தல் என்பது கோ-வல்
என்றும் மேலே உள்ளது போல் அமையலாம்.
மேலே சொன்ன மூன்று இடங்களைப் பார்ப்போம். முதலில் காடுகாண் காதை
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியல்நிலம் போல 60-61
அரசின் அலுவலரோடு அரசன் முரண்பட்டு அரசாண்மை இழந்த நாட்டைப் போல (You
see, even a king cannot go against bureaucrats, it can spoil the
govenance of a country.)
இரண்டாவது கட்டுரை காதை
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடுசிறைக் கோட்டத்து இட்டனர் ஆக (100-103)
வார்த்திகனைக் அரசன் ஏவல் செய்வது பற்றி, இளைய அரசதிகாரிகள் (junior
bureaucrats) ”அரசநீதி இல்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவன்” என்று
கூறி கள்வரை இடும் சிறைக்கோட்டத்தில் இட்டனர் ஆக.
மூன்றாம் சொல்லாட்சிதான் மிக முகன்மையானது. கட்டுரை காதையில் 152-154 ஆம்
அடிகளில்
”முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வான்
பரதன் என்னும் பெயரெனக் கோவலன்”
என்று சொல்லுவதை ஆழ்ந்து படித்தால் ஒரு நகைமுரண் சட்டென்று புலப்படும்.
முற்பிறப்பில் கோவலனின் தொழில் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வது =
governance, bureaucracy, administration. இப்பிறப்பில் அவன் தொழில்
பரத்தல் (to say, to sell for a price) செய்வது. பரத்தல் என்றவுடன்
இந்தக் காலத்தில் பொருள் தெரியாமற் தடுமாறலாம். ஆனால் மலையாளம்
தெரிந்தால் குழப்பம் வராது. பரயுதல் என்று இன்றும் மலையாளத்தில்
சொல்கிறோமே! “விலை எந்தா, பரயு” ஒன்றை பரத்தியே நாம் வாங்கவும்,
விற்கவும் செய்கிறோம். This is nothing but business.
ஆக இப்பிறப்புத் தொழிற்பெயர் முற்பிறப்பில் இயற்பெயராயிற்று.
முற்பிறப்புத் தொழிற்பெயர் இப்பிறப்பில் இயற்பெயராயிற்று. It is as
simple as that. இந்த மூன்று வரிகளில் இளங்கோவே பெயர்முடிச்சை அவிழ்த்து
விடுகிறான். அதனால் தான் நகைமுரண் என்று சொன்னேன். [முற்பிறப்பு என்பது
சமணத்திலும் ஆசீவகத்திலும் ஏற்கப் படக் கூடியதே.]
கோவலனின் நிறம் பற்றிச் சொல்லுவதாய்க் கூறியிருந்தேன். அது மங்கல
வாழ்த்துப் பாடலில் அறிமுகப் படுத்தும் போதே சொல்லப் படுகிறது.
மண் தேய்த்த புகழினான் மதிமுக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பாள் மன்னோ? (36-39)
இசை பாடும் பெண்கள் தங்கள் ஆயத்தில் பாராட்டும் செவ்வேளாய் கோவலன்
நிறத்தை உணர்த்துகிறார்கள்.
ஆகச் சிவந்தவன் மாநிறத்தவளைக் கட்டிக் கொள்கிறான். இதில் உள்ள ”நிறப்
பலக்குமம் (colour complexity)” பின்னால் மாதவியைப் பார்க்கும் போது
வெளிப்படுகிறது.
இனி மாதவிக்கு வருவோம்.
அன்புடன்,
இராம.கி..
On Mar 21, 9:29 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3
இராமகி wrote:
> கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 4
>
> அடுத்து, கோவலன் என்னும் பெயரைப் பார்ப்பதாகச் சொன்னேன். காப்பியம்
> எங்கணும் கோவலன் என்ற பெயரே, ஒரே ஒரு இடத்தைத் தவிர, பயிலப் படுகிறது;
> அந்தப் புறனடை அடைக்கலக் காதையில் 93-94 ஆம் வரிகளில் மாடலன் சொல்வதாக
> வருகிறது.
>
> திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
> விருத்தகோ பால நீயென வினவ (93-94)
>
> இங்கே ”மாமணிக் கொழுந்து” என்பது கண்ணகியைக் குறிக்கிறது. “விருத்த
> கோபால” என்பதற்கு ”அறிவால் முதிர்ந்தவனே” என்று உரையாசிரியர்கள்
> பொருள் தருகிறார்கள்.
விருத்த- என்ற முன்னொட்டு வழியில், பண்டை மரபில், அவதாரமாக
என்ற பொருளில் வடமொழி இலக்கியங்களில் உண்டு.
திருத்தகு மாமணி - ஸ்ரீதேவி போன்ற கண்ணகி/கர்ணகியுடன்
செல்லும் பண்டைமரபினனான கோபாலன் (கோவலன்),
உதாரணமாக - தொல்காப்பியர், விருத்த-காப்பியர்.
காப்பியர் என்னும் குடிப்பிறந்தவர். விருத்த கோபாலன் = கோவலன்
மிகப்பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோ அடிகள்.
> இனி கோவலன் என்ற பெயருக்கும், கூடவே மாசாத்துவான், மாநாய்கன்
> என்ற பெயர்களுக்கும் காரணங்களைக் காண்போம்.
>
இரண்டும் வடமொழிப் பெயர்கள்.
மஹாசார்த்தவான் - பண்டங்களை ஏற்றி விற்கும் வண்டி வாஹனங்கள்
நிரம்ப உடையவன்.
நாய்கன் - நாவிகன் = கடலோடும் கப்பல்கள் கொண்டவன்.
ஏராளமான வடமொழிக் கல்வெட்டுகளில் உள்ள பெயர்.
நாவிக = Navy man , ஓர் இந்தோ-ஐரோப்பியச் சொல்.
அன்புடன்,
நா. கணேசன்
ரெ.கா.
சமணத்திலும், ஆசீவகத்திலும் தீவலம் செய்து
மணவினை நிகழுமோ?
”சாந்தினர்,புகையினர்....
இடித்த சுண்ணத்தர்,விளக்கினர்,கலத்தினர்,விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர்...” (மங்கல வாழ்த்துப்பாடல்)
‘நிதியும், நற்சுண்ணமும், நிறைகுட விளக்கமும்’
ஏந்துவது மறைமுடிவு சுட்டும் வழக்கமன்றோ?
தேவ்
சமணத்திலும், ஆசீவகத்திலும் தீவலம் செய்து
மணவினை நிகழுமோ?
.....
‘நிதியும், நற்சுண்ணமும், நிறைகுட விளக்கமும்’
ஏந்துவது மறைமுடிவு சுட்டும் வழக்கமன்றோ?
இன்னும் சில சம்ஸ்கிருத: பிராகிருத மாற்றம் தருகிறேன்:
(Comparative Dictionary of Indo-Aryan languages)
கண்ணகி < கர்ணகி போல்.
பர்ண > பண்ண ‘இலை’
கர்ண > கண்ண ‘கர்ணன், காது’.
சூர்ண > சுண்ண ‘பொடி’. (cf, கீர்ண > கிண்ண)
வர்ண > வண்ண
கண்ணகி (சிராவக (சமண) நோன்பினள்) - கோவலன்
(விருத்த கோபாலன், தமிழில் தொல் கோவலன்.
விருத்த - பழைய/தொன்மையான/புகழ்பெற்ற முன்னோன்.
விருத்த-காத்யாயனர். காப்பியக் குடியில் புகழ்வாய்ந்தோன்
விருத்த-காப்பியன் (தொல்காப்பியன்).
சிலம்பில் தந்தையர் பெயர்கள் மஹாநாய்கன், மஹாநாவிகன்
- எல்லாம் வடசொற் பெயர்கள் என்று முன்னரே பார்த்தோம்.
சிலம்பு, கடலாடுகாதை
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும், 135
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கம்மியர் < கர்மகாரர் (ஆசாரிகள்).
வண்ணம் < (பல) வர்ணப் பொடிகள்
சுண்ணம் < சூர்ணம்
நா. கணேசன்
நீங்க சொல்லலாம்! எடுக்கும் ;-)
(-;க;-)
’நிதியும் ,நற்சுண்ணமும், நிறைகுட விளக்கமும்’
இதற்கு மூலமான ‘சதம் மாலாஹஸ்தா: ......... ’
என்று பட்டியலிட்டுச் சான்று கூறினால் கூக்குரல் கிளம்பும்.
தேவ்
என்னைக் கேட்டால் இவற்றிற்கு ஒப்பான (சமமான, சாம்யமான) தரவுகள் வடமொழியிலும் இருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்கு அது மூலம் என்றோ அதற்கு இது மூலம் என்றோ இராமாயண மகாபாரதங்களுக்கு வேண்டுமானால் ஐயமின்றிக் கூற இயலும்; மற்றவற்றிற்கு இயலாது.
'இறைவனே வழியும் பேறுமாக இருக்கிறான்' என்று வைணவம் சொல்வதும் 'நானே வழியும் ஜீவனுமாக இருக்கிறேன்' என்று ஏசுநாதர் சொல்வதும் ஒப்பானவை என்று சொல்வது சரி; ஒன்றிலிருந்து மற்றொன்று வந்தது என்னலாகுமா?
இவற்றிற்கு ஒப்பான (சமமான, சாம்யமான) தரவுகள் வடமொழியிலும் இருக்கின்றன
என்று வேண்டுமானால் சொல்லலாம்.//
உபநிஷத் காலத்தால் முற்பட்டது;
சிலம்பின் ஆசிரியர் மறைநெறியை ஏற்கிறரோ,
இல்லையோ; அக்கால வழக்கத்தில் இருந்ததை
மறைக்காமல் விவரிக்கிறார். நாம் கூறும் பொருள்
மூல நூற்கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைதல் வேண்டும்.
அதுதான் என்நோக்கம்.வரிந்து கட்டிக்கொண்டு விவாதம் செய்வது
என் நோக்கமன்று. நீங்கள் சொல்வதுபோல் சமமான தரவு என்றும் கொள்ளலாம்.
கட்டாயம் திருவாய்மொழிக்கு முற்பட்டது மறை என்பதை நீங்கள்
ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தேவ்
மஹா+ஸ+அர்த்தவாந் என்று பிரித்தால் தத்புருஷ ஸமாஸமாகிறது; இரண்டாம்
வேற்றுமை உ.ப.உ.தொ.தொகை.
‘ஸார்த்தா: ஸ்வைரம் ......’ என்று தொடங்கும் வரி வணிகத்துறை சார்ந்த
இச்சொல்லின் பொருளை உறுதி செய்வதாக உள்ளது.
இது ரகுவம்சத்தில் காணப்படுகிறது.
வாணிபம் மிக உயர்ந்த நிலையில் இருந்ததற்குச் சான்று
கூறும் பெயர்.
’கண்ணகி’ எனும் பெயர் கொண்டு இலக்குமியை எங்கும் வைணவ பக்தி
இலக்கியங்களில் சுட்டியிருப்பதாகத் தெரியவில்லை.
ஒப்பீடுதான் அன்பர்களே! எதையும் நிறுவும் நோக்கம் இல்லை.
தேவ்
.
:-) நன்றி தேவ் ஐயா. இது போன்ற ஒப்பீடுகளை நிறைய தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்பன்,
குமரன்
அன்புள்ள திரு. தேவ்அன்பு கூர்ந்து ஒப்பீடுகளை அளியுங்களை, அறியாதோர் அறிந்து கொள்ள உதவும்.தமிழை மட்டும் கீழே இறக்காதீர்கள்.அதற்குத் தான் ஒரு பெருங்கூட்டமே உள்ளதே, ‘தமிழ்க் காவலர்கள்’ என்ற போர்வையில் :)தங்களைப் போன்ற அறிவாளிகள் அந்த சிறுமைக் கூட்டத்தில் சேர்வதால் இழப்பு தமிழுக்கே..
அடுத்தது மாதவி. இவள் புகார்க் காண்ட முக்கோணத்தின் மூன்றாம் முனை, அதோடு
காப்பியத்தையே கிடுக்கும் முனை. இவள் பெயர்க் கரணியம் சொல்ல இரண்டு
பகுதிகள் ஆகும்.
பழந்தமிழிலக்கியம் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ சற்று
வேறுபட்டது.] இந்தச் சொல்லிற்கு இரண்டு பொருட்பாடுகள் உண்டு. முதற்
பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும்.
நாட்டம், நாட்டியம், நாடகம், நட்டம், நட்டணம், நடனம், நடம், நடை, கூத்து,
தூக்கு, தாண்டவம், படிதம் எனப் பல்வேறு சொற்களும் தமிழில் வேர் கொண்டவை.
மற்றை நாட்டியங்களைப் பார்க்கப் பரத்தையின் நாட்டியம் விதப்பான
கூறுகளையும், ஒழுங்குகளையும் கொண்டதால் (இவற்றை சிலம்பின் அரங்கேற்றக்
காதை விவரிக்கும்.), பரத்தை நாட்டியம்> பரத்த நாட்டியம்>பரத நாட்டியம்
ஆயிற்று என்பார் சொல்லாய்வர் பேரா. ப.அருளி. நாட்டியக் கலை,
தெற்கிருந்து, வேத நெறிக்கு மாறானவர்களால், வளர்த்தெடுக்கப் பட்டது என்றே
பல வல்லுநரும் கருதுகிறார்கள். [சங்க காலத்தை ஒட்டி எழுந்த
ஸ்ம்ருதிகளும், சங்கத வியாகரண நூல்களும் நாட்டியத்தையும், அதைக்
கற்றவர்களையும், இழிவு படுத்தியே கூறின. குடிலனின் அர்த்த சாற்றமும்
அப்படித்தான் கொள்ளுகிறது. (பரதக் கலைக்களஞ்சியம் - கலைமாமணி எஸ்.என்.
ஸ்ரீராமதேசிகன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், 2001).]
பின்னால், வடபுலத்து எழுந்த சமயப்பூசலால், வேதநெறியாளர் தெற்கே நகர்ந்து,
(இப்படித் தெற்கு நகர்ந்தது மூன்று முறையாவது நடந்திருக்க வேண்டும்
என்பார் வரலாற்று ஆசிரியர் ந.சுப்பிரமணியம். (The Brahmin in the Tamil
Country, Ennes Publications, 1989) இங்கிருந்த அரசர், வணிகரைச்
சார்ந்து, வேத நெறி பரப்பியபோது, தென்னக நடைமுறைகளுக்கு ஏற்பத் தங்கள்
கொள்கைகளில் சில மாற்றங்கள் கொண்டு வர நேர்ந்தது. அவற்றில் ஒன்று
பரத்தையர் பற்றிய கருத்து. அரசர், வணிகருக்குப் பாங்கராய், அரச/பரத
அதிகாரத்திற்கு நயன்மை (நீதி) சொல்பவராய், பார்ப்பனர் ஆன பின்னால், அரசர்/
வணிகர் - பரத்தையர்/கிழத்தியர் ஆகியோர் இடையாட்டத்திலும், இங்கிருந்த
புலவர்/பாணரைப் போல, இடைப்பாங்கராய் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.
”தலைமாந்தரிடையே ஊடலும், பிரிவும் நடந்து, வருத்தம் தொடர்ந்த நிலையில்,
அரசர்/வணிகர், பரத்தையர்/கிழத்தியர் என இருசாராரும் ஒரு காலத்தில்
பார்ப்பனரையே யோசனைக்காக நாடியிருக்கிறார்கள். [இன்றுங் கூட சோதியம்,
கோயிலிற் பரிகாரம் என்று பலரும் பார்ப்பனரை நாடுகிறார்களே, அதைப்போல.]
சிலம்பில் தலைமாந்தரிடையே நடந்த அத்தனை ஆட்டங்களிலும், பார்ப்பனரே
பாங்கராய் வருவது குறிப்பிடத் தக்கதாகும். இந்த வழமையைப் பார்த்தால்,
வேதநெறித் தாக்கம் அரசர் - பரதரிடம் அதிகம் இருந்திருக்க வேண்டும் என்றே
சொல்ல வேண்டியிருக்கிறது. ”நடுகற்களுக்கும், இறையுருக்களுக்கும்
முன்னிகழும் வேலன் [இன்று வேளார் எனப்படும் குயவர்கள்] வெறியாட்டம்-
படையலைக் காட்டிலும், விரிவாய், அலங்காரமாய், புகைமருட்டிற் செய்யப்படும்
பார்ப்பன வேள்விகளும், இனம்புரியாத மொழியில் சொல்லப்படும் மந்திரங்களும்
தமக்கு மேலும் நல்லதைச் செய்மோ?” என்று உயர்சாதியர் நம்பத் தொடங்கிய
காலத்தில், ஏற்கனவே தமிழ்க் குமுகாயத்தின் பூசாரிகளாய் இருந்த தமிழ்
மறையோர்-அறிவரின் தாக்கம் கொஞ்சங் கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. இந்தப்
போட்டியில், தம்மை நிலைத்துக் கொள்ளும் முகமாய், தம்மோடு முரண்பட்டுக்
கிடந்த தமிழகக் கலை, பண்பாடு / பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, வேதநெறியாளர்
நெகிழ்ந்து கொடுக்க முனைந்தனர். ஏற்கனவே பரத்தைக் கூத்தோடு முரண்பட்டு,
ஸ்ம்ருதிகள், வியாகரணங்கள் செய்த இகழ்வை ஒதுக்கி வைத்து, சமனிலைக்கு
நகர்ந்து வந்து ”பரத முனிவர் வடக்கிருந்து வந்தார், அவரே நாட்டியத்திற்கு
முதலில் சாற்றம் எழுதினார்” என்று புதுக்கதை எழுப்பியது இப்படி
நிகழ்ந்ததே. பரத்தை நாட்டியக் கலை வடமொழித் தோற்றம் கொண்டதும், நாளடைவில்
அக்காலப் பரத்தையருக்கு வடமொழி அறிவு தேவைப்பட்டதும், பார்ப்பனரே
இடையாட்டங்களில் இருந்ததும், இயல்பாய் ஏற்பட்டது.
”பரத்தை”யின் இரண்டாம் பொருள்: முறையான வரைவை மீறிப் பரவுவதால்
(=பழகுவதால்), பரத்தை. [”வரைவின் மகளிர்” என்ற புதுச்சொல்லை வள்ளுவர்
உருவாக்குவார்.] இங்கே மாதவி பொதுப் பரத்தையல்ல. இற்பரத்தை (concubine).
[இந்தக் காலத்தில் வேடிக்கையாய்ச் சொல்லப்படும் சின்ன வீடு.] சிலம்பை
ஆழ்ந்து படிக்காத பலரும் மாதவி இற்பரத்தை என்று உணருவதில்லை. ”அவள்
விலைமகள்” என்று சொல்லியே நிலைப்பாடு கொள்வார்கள். ஆனால், காப்பியம்
முழுவதும் ”தான் கோவலனின் காதற் கிழத்தி, ”இற்கிழத்தி இன்னொரு பக்கம்
இருக்கிறாள்” என்ற முழு உணர்வோடு மாதவி செயற்படுவாள். [கண்ணகியும்
பொருபொருத்த மரியாதையோடு, மாதவியை நடத்தியிருக்க வேண்டும் என்றே
காப்பியத்தின் வாயிலாய்ச் சுற்றி வளைத்து உணருகிறோம். அதே பொழுது, காதற்
கிழத்திக்கு மகள் பிறந்ததும், தனக்கு மகவில்லாமற் போனதும், கண்ணகியை
உறுத்தியிருக்கலாம்.]
இனி மாதவியின் பெயர்க் கரணியத்திற்கு வருவோம்.”வானுலக அரம்பையர்
செய்கையோடு பொருந்திய பிறப்பு” எனச் சொல்லி ”பெருந்தோள் மடந்தை; பூ
அவிழும் சுருட்டை மயிர், மாதவி எனும் பெயர்” என்ற
விவரிப்போடு,”ஆட்டக்காரி” யாய் அரங்கேற்ற காதையில் இவள் அறிமுகப்
படுத்தப் படுகிறாள். ”ஆடல், பாடல், அழகு” என மூன்றிலும் குறைபடாமல், 5
அகவையிற் தண்டியம் பிடித்து, பன்னிரண்டாம் ஆண்டில், சூழ்கழல்
மன்னர்க்குக் காட்டல் வேண்டி, நாட்டிய அரங்கேறுகிறாள். “தலைக்கோல் எய்தி,
தலையரங்கு (=வேந்தனின் அரங்கு) ஏறி, விதிமுறைக் கொள்கையால், ஆயிரத்தெண்
கழஞ்சும் பெறுகிறாள். பின் அதை மாலையாக்கி, நகர நம்பியர் திரியும்
மறுகில், பகர்வனர் (பகர்ச்சி = price) போலும் பான்மையில், கூனி கை
கொடுத்து, நிறுத்துகிறாள். இதற்கு அப்புறம்,
“மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கோவலன் தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தென்
என்று முடிகிறது காதை. ஆடல், பாடல், அழகு எனத் தொடங்கிய பொதுவிவரிப்பு
பின்னால் காப்பியத்துள் விதப்பாய்ப் பெருகுகிறது. முதலில் வருவது
மேல்வரும் கண் விவரிப்பே. “பெரிய, மலர்போன்ற, நெடுங்கண்ணை உடையவள்” என்று
சொல்லும் போது, ”கண்ணகிக்குச் சொன்ன அதே உவமையா?” என்று நமக்குத்
தோன்றும். “மாமலர் நெடுங்கண் மாதவி” என்னும் விவரிப்பு 3.170, 6.174,
8.16, 8.118 ஆகிய இடங்களிலும் வரும். ”மாநெடுங் கண்” என்பது
கண்ணகிக்கும், மாதவிக்கும் ஒன்றேபோல் இருந்த சிறப்புப் போலும்.
ஒருத்தியிடம் இருந்து இன்னொருத்திக்குத் தாவும் போது, இருவருக்கும்
இடையான ஒப்புமைதானே, முதலில் பார்க்க வைக்கும், இல்லையா? மற்ற அழகுக்
கூறுகள் அதற்குப் பின்னால் ஈர்த்ததால், கோவலன் மாதவியோடு பல காலம்
இருந்து கொள்கிறான். முடிவில் முழுதாக மயங்கி அயர்கிறான். அந்த மயக்கம்,
மாதவி என்னும் பெயரிலேயே, தொடங்குகிறது.
முல் என்னும் வேர் ”கூடல், குவிதல், கலத்தல், கலங்கல், காணல், பொருத்தல்,
மூடல், பற்றல், ஒன்றல், உறழ்தல், திரளல்” ஆகிய துறைகளைச் சார்ந்து
சொற்களை உருவாக்குவதைப் பாவாணர் தம் “முதற்றாய் மொழி” யில் விளக்குவார்.
கலத்தற் துறையிலிருந்து கலங்கற் துறை பிறக்கும். கலக்கத்திற்கு ஏதுவாகப்
பல பொருள்கள் கலத்தல், கலங்கலாகும். கலங்கலைக் குழம்பு என்றும் நாம்
சொல்லுகிறோம் அல்லவா? கலங்கலின் அடுத்த நிலை மயக்கம்.
முல்> முள்> முய> முயங்கு> மயங்கு> மயக்கம் என்ற வளர்ச்சி இங்கு
நினைக்கற் பாலது. முயங்கலில் இருந்து மயங்கல் வருவது நுணுகிய வளர்ச்சி.
மயக்கம் பல்வேறாகும். ஒரு வேற்றுமையுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற்
கலத்தல் வேற்றுமை மயக்கமாகும். ஒரு திணைப்பொருள் மற்றொரு திணை நிலத்திற்
கலத்தல் திணை மயக்கமாகும். மெய்ம்மயக்கம், காதல் மயக்கம், குடி மயக்கம்
என வெவ்வேறு மயக்கங்களை நாம் அறிவோம் இல்லையா? இனி,
முல்>மல்>மல>மல-த்தல் = மயங்குதல். [”கண் மலந்து கிடக்கிறதே?
அடிபட்டதோ?”]
மல> மலங்கு>மலக்கு> மலக்கம் = மயக்கம் [”என்ன ஆயிற்று, இப்படி மலங்கிக்
கிடக்கிறாள்?”]
மலங்கு>மதங்கு>மதக்கம் = மயக்கம் [”நல்ல குடி போலிருக்கிறது, மதக்கம்
தலைக்கு ஏறிருச்சு”. மதக்குதல் = மயக்குதல்]
மல> மலை> மலை-த்தல் = மயங்குதல் [”என்ன மலைச்சு நிக்குறீங்க, உறுதியோடு
இருந்தா, செய்ஞ்சுடலாம்”]
மல>மலம்>மதம் = மயக்கம் [”யானைக்கு மதம் பிடித்திருக்கிறது”.]
மல்>மால் = மயக்கம், காதல், பித்து [பெரிய திருமொழி 2.7.7 -இன் இரண்டாம்
வரி: ”மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்யவல்ல என் மைந்தா!” மால் செய்தல் =
மயக்கம் செய்தல்.]
மால்>மாலம் = மயக்கும் வித்தை, பொய்நடிப்பு (”அவளைப் பார்த்தியா?
கள்ளி.... எல்லாம் நடிப்பு, மாய்மாலம்”)
மால்>மாலை = இரவும் பகலும் கலக்கும் அந்தி வேளை; ஒளி மயங்கும் நேரம்.
[பிற்பகல் 6-இல் இருந்து 10 மணிவரை. நம்மில் பலரும் பிற்பகல் 4 மணிப்
பொழுதை, மாலை என்று சொல்லித் திரிகிறோம். பழந்தமிழர் புரிதலின் படி அது
தவறு. பிற்பகல் இரண்டில் இருந்து ஆறு மணி வரை உள்ள பகற்பொழுதுக்கு
”எற்பாடு” என்று பெயர் (எல் - சூரியன்.- படும் நேரம் எற்பாடு). அந்தச்
சிறுபொழுதின் பெயரையே தொலைத்துவிட்டு, இந்தக் காலத்தில் பிறசொற்களைக்
கடன்வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் சொல்ல முற்படுபவரை,
மொழிவெறியர் என்ற குற்றமும் சாட்டுகிறோம்.]
மதம்>மத்தம் = பித்து, மயக்கம்; உன்மத்தம் என்பது கடும் பித்து;
உன்மத்தம்>ஊமத்தை
மத்து>மத்தன்>மதன் = மயக்கம் [நற்றிணை 97.5]
மல= மத>மது = கள், தேன் [பலரும் ’மது’வை வடசொல் என்றே எண்ணிக்
கொள்கிறார்கள். அது நல்ல தமிழ். ’மது’ வடசொல்லெனில், மேலே சொன்ன ’மல்’
வேர்ச்சொற்கள் எல்லாம் தமிழென்று சொல்லவியலாது. மொழியியலில், பொதுவாய்
இணைச்சொற்களின் கூட்டம், வேர், வளர்ச்சி, சொல்லாட்சிக் காலம், ஆகியவை
பார்த்தே ”ஒரு சொல் இயற்சொல்லா, அன்றிப் பிறசொல்லா?” என்று ஆய்கிறோம்.
தமிழ்ச் சொல்லைத் தனியே பார்த்து வடசொல்மூலங் காட்ட விழைவோர், அவக்கரம்
(=அவசரம்) காட்டாது, சற்று பொறுத்து, சீரான நடைமுறையைக் கொண்டால் உண்மை
புரியும். அதற்கு மேல் சொல்ல என்னிடம் ஏதும் இல்லை.]
மது>மத்து>மட்டு = கள், தேன்
மத>மதி = மயக்கந் தரும் நிலவு [மேலைச் சிந்தனையிலும் luna வை lunacy யோடு
தொடர்பு படுத்துவதைப் பார்த்தால், மதியின் பொருள் புரிபடும். பூரணை
நிலவு, மனவெழுச்சிக்குத் தூண்டுதலாய் இருப்பதாய்த்தான் அறிவியல்
கூறுகிறது.]
மதி>மாதம் = நிலவை வைத்து கணிக்கப் படும் காலச் சுழற்சி. [குறிலிற்
தொடங்கும் சொல், நெடிலாய் நீண்டு, இன்னொரு சொல் புதுக்குவது தமிழுக்கும்
உண்டு, வடமொழிக்கும் உண்டு.]
மது>மதுர்>மதுரி மதுரித்தல் = இனித்தல்; கள்ளில் இருந்து களித்தல்
ஏற்படுவது போல், இங்கு மதுரில் இருந்து மதுரித்தல் ஏற்படுகிறது.
மதுர்>மதுரம்>மாதுரம் [அதி மதுரம் என்பது சித்த மருத்துவத்தில் உள்ள
இனிப்பான, நறுமணப் பூண்டு வகை.]
மாதுர்>மாதர் = காதல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம், உரியியல், 322,
“மாதர் வண்டொடு கரும்பிசைத்தது என்றக்கால் காதல் வண்டு என்பதாம்” என்று
இளம்பூரணர் எடுத்துக்காட்டு தருவார்; காதலும் களிப்பு, மயக்கம் தானே?
மதுவில் இருந்து பிறந்த ”மாதர்” எனும் சொல் அப்படித்தான் காதலைக்
குறிக்கிறது.]
மது>மதுகம் = இலுப்பை ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது
பழமொழி. கரும்பு விளையா இடத்தில், இலுப்பைப்பூவை இனிப்பாய்ச் சேர்த்துக்
கொள்ளும் வழக்கம் உண்டு. இந்தக் காலம் போல, வெல்லம், சர்க்கரை, கற்கண்டு
பெறமுடியாக் காலத்தில், இலுப்பை மரங்கள் பாலை நிலத்தில் பெரிதும்
இருக்கும். இலுப்பைப் பூ இனிப்பிற்குப் பகரியாய் அமைவது இப்படியே.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் இலுப்பை மரங்கள் மிகுதி. இப்பொழுது
குறைந்துவிட்டன. காரைக்குடி இருவாய் நிலையத்திற்கு (Railway) மிக அருகில்
இலுப்பைக்குடி என்ற ஊர் உண்டு. (நகரத்தாரின் ஒன்பது குலக்கோயில்களில்
இதுவும் ஒன்று.) சில சிவத்தலங்களின் தலமரமாய் இலுப்பை இன்றும் உண்டு.
(வைத்தீசுவரன் கோயிலுக்கு அருகில் ”பழமண்ணிப் படிக்கரை” என்னும்
”இலுப்பைப் பட்டு”, கொங்குநாட்டில் ”கொடிமாடச் செங்குன்றூர்” எனும்
”திருச்செங்கோடு”, ஆகிய தலங்களில் இலுப்பையே தலமரம் ஆகும்.) மதுசத்
துருமம், மதுத் துருமம், மதுத் தூரு என்ற கலவைச் சொற்களும் இலுப்பை
மரத்தையே குறிக்கும். மதுகம்> மதுவம்> மாதவம் = இலுப்பை [மதக்கும்
(=இனிக்கும்,களிக்கும்) பூவைத் தரும் மரம் மாதவம்.] மதுக என்னும் பெயர்
சங்கதத்திலும் உண்டு. மாதுகம், மாதூகம், மாவகம் என்ற திரிவுகளும் உண்டு.
மதுக என்ற பெயரைக் கேட்கும் பலரும் உடனே ”சங்கதம் முதல், தமிழ் பின்”
என்றே சொல்ல முற்படுகிறார்கள். கொஞ்சம் ஆய்ந்து பார்த்தால், உண்மை
புலப்படும். Madhuca Indica என்பது இதன் புதலியற் பெயர்.
காய்ந்த இலுப்பைப் பூவை நீரில் ஊறவும், பின் நொதிக்கவும் வைத்துக்
கிடைக்கும் மதுவை இன்றும் நடு இந்தியாவில் பழங்குடியினர்
குடிக்கிறார்கள். மதுவிற்குரிய எல்லாக் குணமும், நொதித்த இலுப்பைப்பூ
நீருக்கு உண்டு. வெறியத்தின் (alcohol) செறிவு வேண்டுமானால்
மாறியிருக்கலாம். இலுப்பைப்பூவை, கரடி, முள்ளம்பன்றி, மான் ஆகியவை
விரும்பிச் சாப்பிடுமாம். கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ,
அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள
வைக்குமாம். மதுகம், மாதவம் என்ற பெயர்கள் இலுப்பைக்கு ஏற்பட்டது நொதித்த
இலுப்பைச் சாறு மயக்கம் தரும் கரணியம் பற்றியேயாகும்.]
ஆக, மயக்கம் கொடுக்கும் பூவைத் தருவது மாதவம்; காம மயக்கம் தருபவள்
மாதவி. பரத்தையர் குலத்தில் காமப் பெயர் வைப்பது முற்றிலும் பொருத்தமே.
அதுவும் மாதவியை வைத்துப் பெரும்பொருள் சேர்க்க நினைத்த சித்திராபதி,
தன்மகளுக்கு மாதவி எனப் பெயர்வைத்தது முற்றிலும் இயல்பானதே.
சரி, மாதவி என்ற பெயரின் சொற்பொருள் புரிகிறது; ஆனால் அது குறிக்கும்
பருப்பொருள் தான் என்ன? இலுப்பைப் பூவா என்றால் இல்லையென்றே
சொல்லவேண்டும். இங்கே குருக்கத்தி என்னும் வேறொரு பூ பருப்பொருளாகிறது.
குருக்கத்தியை வாயிற் போட்டு குதப்பினாலும், இலுப்பையைப் போல் இன்சுவை
கிடைக்கத்தான் செய்யுமாம். ”குருக்கத்திப்பூ ஊறிய நீரையும் நொதிக்க
வைத்து மதுவாக்கலாமா?” என்றால் எனக்குத் தெரியாது. நாட்டுப்புறத்துப்
பட்டறிவுகளைத் தொகுத்தோர், அல்லது சித்த மருத்துவக்காரர், என யாரோ தான்
சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை கிடப்பது மாதவியின் பெயர்க்காரண
ஆய்விற்கு மேலும் அணி சேர்க்கும்.
இன்றையப் புதலியல் (botany) குருக்கத்தியை Hiptage benghalensis (Linn.)
என்று சொல்லும்; இதற்குப் பகரியாய், Hiptage madablota Gaertn. Kurz,
Gaertnera racemosa Roxb என்றும் கூடப் பெயர் சொல்லுகிறார்கள்.
குருக்கத்தியில் செடி, கொடி என இருவகையுண்டு. “தமிழ்நாட்டுத் தாவரங்கள்”
என்ற நூலில் திரு. ச.சண்முகசுந்தரம் [படிக்க வேண்டிய நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம், 2002) இதை மாதவிக் குருக்கத்தி என்று சொல்லும். நமக்கு
முகன்மையான குருக்கத்திப் பூக்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு விவரிப்பார்.
”குருக்கத்திப் பூக்கள் மார்ச்சு தொடங்கி செப்டம்பர் வரையிலும் கொனைகளில்
[=இலை, தழை, பூங்கொத்து ஆகியவை முடிவுறும் நுனிப் பகுதி] அல்லது
கட்கத்தில் [=தண்டிற்கும் அதனின்று தோன்றும் கிளை மற்றும் இலைக்கும்
இடையே உள்ள சந்து மூலை] கொத்துக்களாய்ப் பூக்கும். இந்தப் பூக்களின்
குறுக்களவு 0.5 முதல் 0.75 அங். வரை இருக்கும். பூவின் 5 இதழ்களில் 4
வெண்மையாகவும், ஒன்று மட்டும் வேறு (சிவப்பு மற்றும் மஞ்சள்)
நிறத்துடனும், நறுமணத்துடன் இருக்கும். ”குருக்கத்தி எல்லா
மலைக்காடுகளிலும் சிறப்பாக ஓடைகளின் அருகில், (சமவெளித் தோட்டங்களில்
வளர்ப்பாக) 4500 அடி வரையில் காணப்படும்”
மருத்துவர் தாமோதரனாரின் “செந்தமிழ்ச் சித்தர்களின் மருத்துவ அகராதி”
”குருக்கத்திப் பூவை உட்கொண்டால் சிர ரோகம், தாகம், சிலேட்டுமம்,
பல்விஷம், பித்தம், விரணம் ஆகியவை போகும்” என்று சொல்கிறது. கூடவே
குருக்கத்திப்பூ கைப்பும், மதுரமும் சேர்ந்து இருக்கும் என்று அதன் சுவை
பற்றி அறிகிறோம். பூவின் வளர்ச்சியைப் பொறுத்து, மதுரச் சுவை கூடும்,
குறையும் போலும். பூங்கொடிப் பதிப்பகத்தின் “மூலிகைக் களஞ்சியம்” என்னும்
நூலில் மருத்துவர் திருமலை நடராசன், பூவின் சுவை சிறிது கைப்பும், சிறிது
இனிப்பும் கொண்டதாகவே சொன்னாலும், இந்தப் பூவை இனிப்பெனவே
வகைப்படுத்துவார். குருக்கத்திப் பூவை உட்கொண்டால்,
”குளிர்ச்சியுண்டாக்கும், இளைப்பாற்றும்” என்றும் சொல்லப் படுகிறது. மேலே
மருத்துவர் தாமோதரனார் சொன்ன நோய்கள், ”குருக்கத்திப்பூவை குடிநீரில்
இட்டு ஊறவைத்துக் குடித்துவரக் குணமாகும்” என்றும் அறிகிறோம்.
இந்திய மொழிகளில் அதிகமான குருக்கத்திப் பெயர்கள் தமிழிலேயே உண்டு.
”குருவும் கெழுவும் நிறனா கும்மே” என்பது தொல்காப்பியம் உரியியல் 786
ஆம் நூற்பா. அகரமுதலிகளிற் குருவிற்கு வெள்ளையும், சிவப்பும் விதப்பான
பொருளாய்ச் சொல்லப் படும். வெளியே பூஞ்சையும் (pink), சிவப்பும்
வரிக்கோலம் போட, உட்பக்கம் முற்றிலும் வெள்ளையிற் துலங்கி, ஓரிதழில்
மட்டும் மஞ்சட் தெறிப்புக் காட்டும் இந்தப் பூவின் அழகும், நறுமணமும்
யாரையும் கவரும். அந்த கவின் நிறமே ”குருகு” என்னும் பெயரைப் பூவிற்குக்
கொடுத்தது போலும். [வெள்நாரையைக் குருகு என்பதையும் இங்கே எண்ணிப்
பார்க்கலாம். செங்கால் நாரை மனம் கவரும் இல்லையா?]
பூக்களைப் பற்றி மேலே பார்த்த நாம் இலைகளின் சிறப்பையும் தெரிந்து
கொண்டால், பின்னால் இலக்கியச் சான்றுகளை அடையாளம் காணமுடியும்.
குருக்கத்தி இலைகள் 4 முதல் 7 அங். வரை பெரிதாக, மண்டிலமாக (மண்டிலம்
என்பது இலைவடிவம் பற்றிய கலைச்சொல். கோள்களின் பாதையை ஒத்த இருமுனை கொண்ட
நீள்வட்டம்.) முரப்பாக (முரப்பு என்பது தொடுவதற்குத் தோலின் பதத்தில்
கடிதாக என்று பொருள்.), மேனி வறியதாக, மேற்புறம் பளபளப்பாக, தண்டில்
இருந்து கணுவாய்களின் [கணுவாய் = ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட இலைகள்
இணையப்பெற்ற கொப்பின் பகுதி] இருபக்கம் இரட்டையாய் முளைவிட்டுத்
தோன்றும். இந்த விவரிப்பையும் ச.சண்முகசுந்தரத்தின் நூலிற் காணலாம்.
[கிட்டத்தட்ட அ.தி.மு.க. வின் இரட்டையிலைச் சின்னம் போல இதை எண்ணிக்
கொள்ளலாம்.] குருக்கத்தியின் இளங்குருத்து இலைகள் இளஞ் சிவப்பு நிறத்திற்
தொடங்கி முதிர்ச்சியடையும் போது கொஞ்சங் கொஞ்சமாய் பச்சைக்கு மாறும்.
எனவே குருக்கத்தி இலைகள் தளிர்ப்பதும் பூத்தல் என்றே பழந்தமிழ்
இலக்கியங்களிற் சொல்லப் படுகிறது.
அன்புடன்,
இராம.கி
On Mar 23, 5:01 pm, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> கண்ணகி,கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 4
குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து
அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை
ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம்
அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை
இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம்
பாட்டின் 5-9 அடிகள்
..................................................மதனின்
துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தியென
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே!
என அருமையான காட்சியொன்றை விவரித்துச் செல்லும். மேலே மதன் (= மயக்கம்)
என்பதைப் பார்த்தோம் இல்லையா? முதிர்ந்த பச்சை இலைப் பின்புலத்தில்,
”மயக்கும் துய்த்தலை இதழோடு (=பஞ்சு போன்ற தூய வெள்ளை நிறம்)
காட்சியளிக்கும் குருக்கத்தியையும், பித்திகைப் பூவையும் (=பிச்சிப்பூ,
சிறு செண்பகம்) கலந்து வண்டுகள் சூழும் வட்டிலில் வைத்துக் கொண்டு “பூ
வாங்கலையோ, பூவு?” என்று கூவிப் போகிறாளே, அந்த உழத்தி!” என்று தலைவி
சொல்கிறாளாம். ”துய்த்தலை இதழப் பைங் குருக்கத்தி” - என்ன அருமையான
தொடர்!
இன்னொரு செய்தியையும் சங்க இலக்கியம் சொல்கிறது. எந்த ஒரு
அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்கா போலும். பரிபாடல் 15
ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று
வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம். இனி நான்மணிக்
கடிகையின் 38 ஆம் பாட்டு,
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.
என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை
தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது.
இதே செய்தியைக் கார்நாற்பது 27 ஆம் பாடல்,
.
முருகியம் போல் வானம் முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவு எண்ணி
உள்ளாது அகன்றார் என்று ஊடியாம் பாராட்டப்
புள்ளியுள் பாயும் பசப்பு.
என்று சொல்லி “குறிஞ்சிப்பறை போல வானம்முழங்க, இடியிடிக்க, மழை கொட்ட,
காட்டில் இளஞ்சிவப்புக் குருகிலை பூத்ததை” அறிவிக்கும். திணைமொழி
ஐம்பதின் 30 ஆம் பாடலோ,
அருவி அதிரக் குருகிலை பூப்பத்
தெரியா இனநிறை தீம்பால் பிலிற்ற
வரிவளைத் தோளி வருவார் நமர்கொல்
பெரிய மலந்தது இக் கார்.
என்று சொல்லி, ”அருவி அதிர, இளஞ்சிவப்புக் குருகிலை பூத்துப் போகும்”
என்று உரைத்துக் கார்கால மலர்ச்சியை வியக்கும். இதே திணைமொழி ஐம்பதின் 21
ஆம் பாட்டோ,
அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கமழ் கோடல் துடுப்பீனக் காதலர்
வந்தார் திகழ்கநின் தோள்.
என்று சொல்லி, காயாம்பூ மலர்வதையும், ஒளிரும் பெண்களின் முறுவலைப் போல
இளஞ்சிவப்புப் குருகிலை பூப்பதையும், குளிர்ந்த, நறுமணம் பொருந்திய வெண்
காந்தள் பூப்பதையும் உரைத்து, “உன் காதலர் வந்து விட்டார், இனி உன்
தோள்கள் திகழட்டும்” என்று தோழியின் கூற்றைப் பதிவு செய்யும். இதனினுஞ்
சிறப்பான பதிவு, தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங்
கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-379 ஆம் வரிகளில் வரும்.
குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்
”குட்டையான அடிமரம் கொண்ட கரிய காஞ்சி மரத்தைச் சுற்றி, நெடிய
குருக்கத்திக் கொடி முதிர்ந்த பச்சை இலைகளோடு படர்ந்திருக்கிறது, முன்னே
சொன்னது போல் பூவின் வெளிப்புறத்தில் வரிவரியாய் பூஞ்சை நிறம்
படர்ந்திருக்கும் பூக்கள் உதிர்ந்து, கீழே காஞ்சியின் நிழல் படியும்
ஆற்றுமணல் நீர்முகத்தில், கிடக்கின்றன. இந்தக் காட்சி எப்படி
இருக்கிறதாம். இடியாப்ப வணிகர் பாகொடு பிடித்த இடியாப்ப வட்டம் பாலில்
மிதக்கக் காட்சியளிக்கும் கரிய அகலைப் போன்று இருக்கிறதாம். கூடவே
திருவெஃகாவின் கிடந்த திருக்கோலத் திருமாலையும் இங்கு நினைவு
கொள்ளுவார்.
இந்த விவரிப்போடு குருக்கத்தி பற்றிய எல்லா இணையதளங்கள், பொத்தகச்
செய்திகள் ஆகியவை ஆர்வத்தோடு குறிப்பிடும் காளிதாசனின் சாகுந்தல
விவரிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் மாமரத்தின் மேல் சுற்றியிருக்கும்
குருக்கத்தி, காதலனின் மேல் தழுவியிருக்கும் காதலி போல்
தோற்றமளிக்கிறதாம். குருக்கத்திக் கொடியை மாமரத்திற்கு மணஞ் செய்வதாய்
முனிபுங்கவர்கள் உருவகஞ் செய்வார்களாம். துசியந்தனைச் சகுந்தலை சந்தித்த
பின்னால், ”என் மகளே. நான் தேடிக் கொண்டிருந்த ஆண்மகனை நீ காதலனாகப்
பெற்றாய், குருக்கத்திக் கொடிக்குச் சாய்ந்து கொள்ள, எழிலான மாமரத்தைத்
தோளாக ஆக்கி மணஞ்செய்து கொடுப்பேன்” என்று கண்வ முனிவர் சொன்னாராம்.
[குருக்கத்தி என்றால் சகுந்தலையும், காளிதாசனும் இடைவிடாது இவர்கள்
சொல்லுவதை நான் குறையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு 200/300
ஆண்டுகளுக்கு முந்திய பெரும்பாணாற்றுப் படையும், கடியலூர் உருத்திரங்
கண்ணனாரும் திருவெஃகா விவரிப்பும் எத்தனை பேருக்குத் தெரிகிறது,
சொல்லுங்கள்? குருக்கத்திக் கொடி, மாமரத்தை மட்டும் சுற்றிக் கொள்ளாது.
காஞ்சி மரத்தையும் சுற்றிக் கொள்ளும். ஏன், அருகில் வேறு மரங்கள்
இருந்தாலும் சுற்றத்தான் செய்யும். ஆனாலும் பாருங்கள் தொன்மம்,
காளிதாசன், வடமொழி ...நாவலந்தீவில் இதுவே பழக்கமாயிற்று. .என்ன
சொல்லுவது? [தமிழருக்கோ, தாழ்வு மனப்பான்மை மிகுந்து கிடக்கிறது. எதையும்
பேச மாட்டேம் என்கிறோம்.]
இனிக் குருகின் மற்ற தமிழ்ப்பெயர்களைப் பார்ப்போம். குருகு என்னும்
பெயரைப் பெண்ணாக்கிக் குருக்கத்தி என்று சொல்வது சொல்வளர்ச்சியின்
அடுத்தநிலை. ”குடந்தைக் கிடந்த கோவே! குருக்கத்திப்பூச் சூட்ட வாராய்”
என்று சாரங்கபாணியைப் பெரியாழ்வார் (நாலா. 2.7.7) அழைப்பார். ”குருங்கு,
குருந்து, குருந்தை” என்ற சொற்கள் குருகின் திரிவு. [குருந்தம் என்னும்
வேறொரு மரம் மாணிக்கவாசகரோடு திருப்பெருந்துறைத் தொடர்பு கொண்டது; அதனை
இதனோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.] குருங்கொடி, குருதக் கொடி என்பவை
குருகில் கிளைத்த வேறு சொற்கள். ”குரிஞ்சான், சிறு குரிஞ்சான்” ஆகியவை
இன்னும் மேலெழும் திரிவுகள். ”குருகுக் கோதை” என்பது குருக்கத்தியைப்
பெண்ணாக்கும் இன்னொரு சொல் உத்தி, கோதை மாதவி என்பது இரட்டை வழக்கு.
மாதவி பற்றி ஏற்கனெவே சொல்லிவிட்டேன். குருக்கத்திப்பூ தன் அழகால்,
மணத்தால், நிறத்தால், சுவையால் மயங்க வைப்பது. பூ ஊறிய நீர் நொதித்த
பின்னால் மது மயக்கம் ஊட்டியதா என்பதைப் புதல்வேதியல் (Phytochemistry)
மூலம் தான் சொல்லமுடியும். ஏதேனும் ஆய்வுகள் இருந்தால் தெரியப்
படுத்துங்கள். பழம் அறிவைப் புதுப்பிக்கும் தேவை நெடுகவே உண்டு.
குருக்கத்தி மார்ச்சு மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில
இடங்களில் பெப்ருவரியிலேயே வெள்ளெனப் பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப்
பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில்
பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம்
காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள். [முல்> மல்>
மல்லி> மல்லிகை = வெள்ளை நிறப்பூ. முல்லை என்னும் விதப்புப் பெயரையும்,
மல்லிகை என்னும் பொதுப்பெயரையும் குழப்பிக் கொண்டு ஒரு சிலர் சொல்லுவது
உண்டு. முல்லையும் மல்லிகையும் மாறி மாறிப் பகரியாய் நாட்டு வழக்கில்
உண்டு என்றாலும், மல்லிகை என்னும் பொது மலரினத்தில் முல்லை என்பது ஒரு
விதப்பான வகை என்பதை மறக்கக் கூடாது. முல்லையின் மொட்டு, முல்லிக் கொண்டு
(முனைந்து கொண்டு) இருப்பதால் முல்லை ஆயிற்று. அதை ஊசிமல்லிகை என்று
நாட்டுப் புறங்களிற் சொல்லுவதும் இதையே உணர்த்தும். முல்லை என்னும்
சொல்லில் வெள்ளை என்னும் பொருள் கிடையாது.] வசந்த கால மல்லிகை என்பது
குருக்கத்தியைப் போல முதற்பெயரல்ல. இன்னொன்றை ஒப்பிட்டு எழும் இரண்டாம்
வழிப் பெயர். வசந்த கால மல்லிகையைச் சுருக்கி வசந்தி, பின் நீட்டி
வாசந்தி என்ற பெயர்களும் குருக்கத்தியையே குறிக்கின்றன.
புண்டரம், புண்டரவம் என்பவை வெள்நீற்று நிறத்தை ஒட்டி எழுந்த சொற்கள்.
புடம்> புண்டம்> புண்டரம்> புண்டரவம் என்று விரியும். புடம்போடுதல்
என்பது எரித்து நீறாக்குதலைக் குறிக்கும். வாலாகினி என்பது வால் என்னும்
வெள்ளை நிறத்தில் எழுந்த சொல். வெள்நலங் கொடி என்பதன் பொருள் வெள்ளிடை
மலை. நான் சொல்ல வேண்டியதில்லை. எருக்கம் பூவும் வெள்ளை நிறந்தான்,
எருக்கம் பூவிற்கு ஒப்பிட்டு எருக்கத்தி என்ற சொல்லும் குருக்கத்தியைக்
குறிக்கும்.
அடுத்த சொல் சோகை நீக்கி. இதைப் பார்த்துத்தான், ”குருக்கத்திப்பூவில்
ஏதோ ஒரு போதைப் பொருள் இருக்கக் கூடுமோ?” என்று தோன்றுகிறது.
புதல்வேதியல் (Phytochemistry) தான் இதற்கு விடை சொல்லவேண்டும்.
குருக்கத்திப்பூவில் ஈர்க்கும் வேதிகள் (chemicals) இருப்பதால் தான்
காமுகம், காமகாந்தம் என்ற சொற்கள் ஏற்பட்டனவா என்பதும் ஆய்விற்கு
உரியது.
அடுத்த வரிசைச் சொற்கள், குருக்கத்தி இணர்களாய் (=கொத்துக்களாய்)
இருப்பதை வைத்து எழுந்த சொற்களாகும். கொத்து>கத்து>கத்தி>கத்திகை, அதித்த
கத்திகை அதிகத்தியாகும். மூக்கொலி ஏற்பட்டு அதிகாந்தியும் ஆகும்.
சுருங்கிப் போய் அதிகம் என்றும் அமையும். இனி மிகுந்த மயக்கத்தைக்
கொடுப்பதால் அதிமத்தம், அதிகமாலி.
மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் முத்தகம், பின்
அதிமுத்தம், அதிமுத்தகம்.
இன்னும் ”அயந்தனைச் சிந்தூரமாக்கி, கரிப்பாக்குக் கொடி, நாகரி, நாகரு,
பன்றிமொத்தை” என்ற சொற்களும் சித்த மருத்துவ அகரமுதலிகளில் இருக்கின்றன.
பெயர்க் கரணியம் நான்அறிந்தேன் இல்லை.
குருக்கத்தியின் பெயர்களை இதுவரை விரிவாகப் பார்த்தோம். ”மாதவி என்ற
பெயர் குருக்கத்தியையே குறிக்கிறது என்று எப்படி அறுதியிட்டுக்
கூறுமுடிகிறது?” எனில் நாம் சிலம்பில் புறஞ்சேரியிறுத்த காதைக்குப்
போகவேண்டும்.
மதுரையின் புறத்திருந்த பார்ப்பனச்சேரிக்கு வந்த சேர்ந்தபின்,
கண்ணகியையும், கவுந்தியையும் முள்வேலி சூழ்ந்த காவலில் இருக்கச் செய்து,
ஒரு நீண்ட பாதையில் போய் அங்கிருந்த நீர்நிலையில் கோவலன் காலைக்கடன்
கழிக்க முற்படுகிறான். இதே நீர்நிலைக்கு, ”வருந்துயர் நீக்கு” எனச்
சொல்லி மாதவி ஓலை கொடுத்து அனுப்பிய கோசிகனும் வந்து சேருகிறான். கோசிகன்
கோவலனை ஏற்கனவே பார்த்திருக்க வேண்டும். ஆனால் கோவலன் கோசிகனை அறியான்
போலும். மனத் துயரம், புகாரில் இருந்து மதுரைக்கு நடந்த உடலயர்ச்சி,
ஊதுலைத் துருத்தி போன்ற பெருமூச்சு, அழுக்கான மெய், உடை என எல்லாம்
சேர்ந்து, கோவலனின் தோற்றுருவை மாற்றிய கரணியத்தால், கோசிகனால் கோவலனைச்
சட்டென்று அடையாளம் காணமுடியவில்லை. உறுதிசெய்து கொள்ளும் முகத்தான்,
கோவலன் கேட்குமாறு ஓர் உரையாடலைத் தான் சாய்ந்திருக்கும் குருக்கத்திக்
கொடியோடு கோசிகன் எழுப்புகிறான்.
”கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்று இவ்
அருந்திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே
வருந்தினை போலுநீ மாதவி!” என்று ஓர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக்
கோசிக மாமணி கூறக் கேட்டே (48-53)
என்று புறஞ்சேரியிறுத்த காதையில் வரிகள் வரும். ”குருக்கத்திக் கொடியே!
கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாதவி போன்று, இந்தக் கொடிய வேனிலில்
மலர் களைந்து நீயும் வருந்தினாயோ?” என்று பாசிலைக் குருக்கத்தியின்
பந்தரில் சாய்ந்து கோசிக மாமணி கூறக் கேட்டான்.” இங்கே “பாசிலைக் குருகு”
என்ற சொல்லாட்சி “பைங்குருக்கத்தி” என்ற சங்க இலக்கியச் சொல்லாட்சியை
அப்படியே ஒத்திருப்பதைப் பார்க்கலாம். மாதவி என்ற பரத்தைப் பெயரையும்,
குருக்கத்தி என்ற கொடிப்பெயரையும் அப்படியே இங்கு பொருத்திச் சொன்ன
பிறகும் நண்பர் நா. கணேசன் மாதவிக்கு எப்படி முல்லையைப் பின்புலமாய்ச்
சொல்லுகிறார் என்று புரியவில்லை [அதுவும் கிட்டத்தட்ட 8, 9 ஆண்டுகளாக
அவர் இந்த ஒப்புமையைப் பல்வேறு குழுமங்களில் சொல்லுகிறார்.]
கோவலன் ~ க்ருஷ்ணன், கண்ணகி<கர்ணகி ~ இலக்குமி என்ற முன்முடிவுடன் வந்து
சேரும் நண்பருக்கு, மாதவியை முல்லைக்கு ஒப்பிடுவது ஒருவேளை இயல்பாகத்
தெரிகிறது போலும். ஆனால் மாதவி என்ற சொல் முல்லையைக் குறிக்கிறதா?
[மோனியர் வில்லியம்சு வடமொழி அகரமுதலி மாதவி என்ற சொல்லால்
குருக்கத்தியையே குறிக்கிறது. பெருவாரியான இலக்கியக் குறிப்புக்களும்
அப்படியே இருக்கின்றன. முல்லை என்று குறிப்பது யாரோ செய்த தவறான குறிப்பு
என்றே நான் எண்ணுகிறேன். ”முல்லை என்பதை மாதவி என்று வடமொழியில்
மொழிபெயர்ப்பதுண்டு. உதாரணம்: திருமுருகன்பூண்டி = மாதவிவனம். முல்லைத்
தாது மணங்கமழ் முருகன்பூண்டி (சுந்தரர்) முல்லைப் புறவம் முருகன்பூண்டி -
அப்பர் தேவாரம்” என்ற கணேசனாரின் கூற்றுக்கு என் மறுப்பு இதோ.
முல்லையையும் முருகன்பூண்டியையும் சுந்தரர், அப்பர் ஆகியோர் இணைத்துச்
சொல்லியிருக்கிறார்கள், உண்மை [அப்பர் ஆறாம் திருமுறை 700 ஆம் பாடல் பொது
- வெவ்வேறு தலங்களைக் கோத்துச் சொல்லும் திருத்தாண்டகம் “முல்லைப் புறவம்
முருகன்பூண்டி”; சுந்தரர் ஏழாம் திருமுறை திருமுருகன் பூண்டி பற்றிய 499
ஆம் பாடல் “முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்”.] இது ஒரு
பக்கம். அதே பொழுது முல்லை என்பதை மாதவி என்று யாரோ
மொழிபெயர்த்திருக்கிறார்கள் -. இது இன்னொரு பக்கம். ஆனால் சுந்தரரும்,
அப்பரும் முருகன் பூண்டியை மாதவிப் புதலோடு இணைத்திருக்கிறார்களா,
என்றால் இல்லை.
நண்பர் நாக. கணேசனுக்குத் தெரிந்த ஒப்பீட்டையே இங்கு பார்ப்போம்.
தேவாரத்தில் மயிலாடுதுறை இறைவி அஞ்சொலாள் என்று சொல்லப்படுகிறாள். (சில
பதிப்புக்களில் அஞ்சலாள் என்றும் இருக்கிறாள்.) - இது ஒரு பக்கம்,
அஞ்சலாள் என்பதை அபயாம்பிகை என்று யாரோ மொழிபெயர்த்திருக்கிறார்கள் - இது
இன்னொரு பக்கம் இதைப் பார்த்த நா.க. ”இரண்டும், இரண்டும் நாலு” என்று
நகர்ந்து போனாரா? இல்லையே? ”இன்னின்ன பதிப்புக்களில் அஞ்சொலாள்,
இன்னின்னவற்றில் அஞ்சலாள். அஞ்சொலாள் என்பது இந்தக் கரணியங்களால் சரி.
எனவே இங்கே எழுத்துத் திரிவு நடந்திருக்கிறது. அஞ்சொலாளை அபயாம்பிகை
என்று பிணைத்தது தவறு” என்று சொல்லவில்லையா? அது போலத்தான், இங்கும்.
அவிநாசியில் இருந்து 5. கி.மீ. தொலைவுள்ள முருகன் பூண்டியின் தல
வரலாற்றில் ஒரு தொன்மச் செய்தி வருகிறது. ”துர்வாசர் என்ற முனிவர்
கற்பகவுலகில் இருந்து மாதவிச் செடியை (குருக்கத்தியை) இங்குக் கொண்டு
வந்தார். எனவே மாதவி வனம்.” [பக்கம் 793-795, திருமுறைத் தலங்கள் -
பு.மா. ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 2001 - அருமையான
விவரமான நூல்] எனவே மாதவி வனம் என்ற காரணப் பெயர் குருக்கத்தியை வைத்தே
வந்திருக்கிறது. முல்லையை வைத்து அல்ல. குருக்கத்தியும், முல்லையும் ஒரே
ஊரில் பூத்துக் கிடந்த காலம் போய், தேவாரக் காலத்தில் குருக்கத்தி அருகி,
முல்லை பெருகிப் பூத்திருக்கலாம். அதனால் அப்பரும், சுந்தரரும்
முல்லையையே சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். தேவார காலத்திற்குப்
பிற்பட்ட யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) முன்னால் இருந்த குருக்கத்திப்
பெருமையை அறியாமல், முல்லைக்கும் மாதவிக்கும் முடிச்சுப்
போட்டிருக்கிறான். அதை உண்மையென்று எண்ணி நா. கணேசன் போன்றவர்கள் தவறான
அடையாளங்களில் மயங்கிப் போகிறார்கள்.
திருக்கருகாவூர் (தஞ்சையில் இருந்து 20 கி.மீ. கும்பகோணம் போகும் வழியில்
ஆவூருக்கு அருகில் உள்ள ஊர்) முல்லைவனம் என்றும், கூடவே மாதவிவனம் என்று
மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அதே பொழுது முதலாம் இராசராசனின்
கல்வெட்டில் “நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர்”
என்று இந்தத் தலம் குறிக்கப் படுவதைப் பார்த்தால் ஆவூர்க் கூற்றத்தில்
உள்ள குருகு + ஆவூர் = குருகாவூர்>கருகாவூர் என்றாகியிருக்கும் பட்டுமை
(possibility) தெரிகிறது. இந்தத் திரிவு தேவார காலத்திற்கு முன்னேயே
ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பட்டுமை மற்ற சான்றுகளால் உறுதி செய்யப்
படவேண்டும்.
இன்னுமொரு கோயில் திருவாரூருக்கு அருகில் உள்ள நன்னிலம் பெருங்கோயில்.
இங்கே ”வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்” ஆகியவை தலமரங்களாய்
இருந்ததாகவும், இப்பொழுது வில்வம் மட்டுமே உள்ளதாகவும் சொல்லப் படுகிறது.
ஆனாலும் ஊருக்கு மதுவனம் என்ற பெயர் இருக்கிறது. மதுவுக்கும்
குருக்கத்திக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தால், சற்று ஓர்ந்து பார்க்க
வைக்கிறது. என்றாலும் முடிவிற்கு வர அதிகத் தரவுகள் வேண்டும். [ஆனாலும்
முல்லை இங்கு சற்றும் சொல்லப் படவே இல்லை.]
முடிவாக, மாதவி = குருக்கத்தியின் இணை பல்வேறு கூறுகளில் வெளிப்படுவதால்,
பிறந்த போது “வெளிறிய சிவப்பு அல்லது பூஞ்சை நிறத்தவளாய்” மாதவிப்
பெண்ணாள் இருந்திருக்க வேண்டும், எனவே ”நிறத்தையும் பார்த்துக்
குருக்கத்தியை நினைத்து மாதவியென்று பெயரிட்டார்களோ?” என்றும் சொல்லத்
தோன்றுகிறது. முல்லைத் திணையில் குருக்கத்திப்பூ விதப்பானது. முல்லைத்
திணையில் காதல் வயப்படும் பெண்டிருக்கு குருக்கத்தி நினைவு வராமற் ஓகாது.
மயக்கம் தருபவள் என்னும் பொருளும் மாதவி என்னும் பெயருக்கு அணி
சேர்க்கிறது. இளஞ்சிவப்புக் குருகிலை, ஒலி ஆரவாரத்தில் சட்டென்று
பூப்பது, தளிர்ப்பது, எனப் பல புதலியற் செய்திகளும் இதையே
குருக்கத்தியைப் பரத்தைப் பெண்ணுக்கு ஒப்பிட்டு நினைவூட்டுகின்றன.
இனி அடுத்த பகுதியில் முடிப்புச் செய்திகளுக்கும், திரு.நா. கணேசனின்
குறிப்புக்களுக்கு விடை சொல்லும் மொழிகளுக்கும் வருவோம்.
அன்புடன்,
இராம.கி.
மாதவி என்று பெயரிருந்தால் தவம் செய்ய வேண்டுமா என்ன?!
மஹா - மா
முதலில் வந்தது எது ? கோழியா ? முட்டையா ? :-)
மொழிவெறி என்று சொல்லுபவர்கள் சொல்லட்டுமே? அதற்குரிய மறுமொழியை நாம்
சொல்லுவோம்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 21, 6:32 pm, "Va.Mu.Se. Kavi Arasan" <kaviara...@yahoo.com>
wrote:
> மொழி வெறி?
>
> மன்னிக்க வேண்டும் சான்றோர்களே
>
> ஒரு கருத்தைத் திரும்பச் திரும்பச் சொல்லிவிட்டால் மட்டும் அது உண்மையாகி விடாது.
>
> எது மொழி வெறி? யாரிடம் மொழி வெறி என்று சிந்தியுங்கள்.
>
கண்ணனை யாரும் ஓரங் கட்டவில்லை. அவனைப் பற்றிய கதைகள், தொன்மங்களைச்
சரிவரப் புரிந்து கொள்ளுவதே முகன்மையானது. “சங்க காலத்தில் வைணவம்” என்ற
நூல் நான் படித்ததில்லை. கிடைத்தால் நன்றாக இருக்கும்.
கட்டுரைத் தொடர் இன்னும் ஒரு பகுதியோடு முடியவேண்டும். அதில்
நாட்டுப்புறத் தரவுகள் பற்றிச் சொல்லவேண்டும். அதோடு நா. கணேசனின்
கருத்துக்களில் மாறுபடுவைக்கு மட்டும் விடையிறுக்க வேண்டும்.
ஆசீவகம் என்ற மெய்யியலில் தமிழனின் பங்கு மிகப் பெரியது. அந்த மெய்யியலை
இழுத்துமூடி அதன் கருத்துக்களை மற்ற மெய்யியல்கள் தங்களுக்கு இயைந்த
வகையில் உள்வாங்கிக் கொண்டன. ஆசீவகத்தில் தமிழரின் பங்கு பற்றி
வெங்காலூர் குணாவும், பேரா. க.நெடுஞ்செழியனும் பெரிதும்
கருத்துரைத்திருக்கிறார்கள்.
என்னுடைய பங்களிப்பிற்கு இன்னும் பலநாட்கள் ஆகும்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 21, 6:35 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> உங்கள் இருவரின் ஆய்வும் மிக சுவாரசியமான தகவல்களைத்தருகின்றன.
>
> இராம.கியின் பின்புலம் வணிகர் குல குமுகாயத் தொன்மங்களை நன்கு அறிந்திருத்தல்.
>
> நா.கணேசனின் பின்புலம், ஐரோப்பிய ஆய்வுகளின், இந்திய சிந்துசமவெளி
> ஆய்வுகளின் அடிப்படை.
>
சொல்லம்புகள் வரட்டும். ஆனால் இன்னொரு கன்னத்தையும் காட்ட வேண்டுமா,
என்ன?
அன்புடன்,
இராம.கி.
On Mar 21, 7:23 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> ஹீ ஹீ
>
> கருத்துகள் வற்றி விடும்போது இது போன்ற சொற்கள் அம்புகளாக ஏவப்படும்
>
> என்னை ஒருவர் அங்கனம் சாடும் போது அதை எனக்கு வெற்றி என்றே கருதுவேன்
>
> 2009/3/21 Va.Mu.Se. Kavi Arasan <kaviara...@yahoo.com>
>
>
>
>
>
> > மொழி வெறி?
>
> > மன்னிக்க வேண்டும் சான்றோர்களே
>
> > ஒரு கருத்தைத் திரும்பச் திரும்பச் சொல்லிவிட்டால் மட்டும் அது உண்மையாகி
> > விடாது.
>
> > எது மொழி வெறி? யாரிடம் மொழி வெறி என்று சிந்தியுங்கள்.
>
> > மின் தமிழ் / தமிழ் மரபு / தமிழ் உலகம்/ தமிழ் நாடு/
> > ஒரிசா/வங்காளம்/செர்மனி/பிரான்சு/இரசியா/மலேசியா/ சீனா/ கொரியா/ சப்பான்/
> > ’இந்தி’யா என்று பெயருக்குப் பின் மொழி இருந்தால் அது மொழி வெறி தானே? ஏன்
> > தமிழ்/அல்லது மற்ற மொழி என்ற அடை மொழியை சேர்க்கின்றனர், சிந்தியுங்கள்.
>
> > குத்துப் பாட்டும் நம் மக்களின் மரபுதான். அதற்காக.....
>
> > மற்றவன் மனைவியை மதிப்பது பெருந்தன்மை. தன் மனைவியை மதிப்பது
> > காதலின்-அன்பின் வெளிப்பாடு.
>
> > தன் மனைவி போல் மற்றவர் மனைவியைப் பார்க்கலாகாது, பார்க்கவும் கூடாது. அதன்
> > பெயர் வெறி, அன்பு/ காதல் அல்ல.
>
> > தன் மனை இருக்க பிறன் மனை நோக்குவது தான் ’வெறி’. தன் மனை நோக்குவதை ‘வெறி’
> > எனும் சான்றோகள் மீண்டும் சிந்தியுங்கள். தன் மனை நோக்குவது ’வெறி’யல்ல.
> > அன்பு-காதல்-காமத்தின் வெளிப்பாடு. அது தவறு/வெறி என்று கூறுவது முரண்பாடு.
>
> > அன்பு கூர்ந்து தமிழ் பற்றி எழுதும் போது ’வெறி’ என்று ’கதை’க்காதீர்களேன்.
> > மீண்டும் மீண்டும் இப்படியே ‘கதை’ப்பது உண்மை அறிய மறுக்கும் பிடிவாதம் என்று
> > உங்களுக்கு இன்னுமா தோன்றவில்லை?
>
> > மீண்டும் வேண்டுகிறேன். அன்பு கூர்ந்து ”அன்பு-காதல்-காமத்தின் வெளிப்பாடு”
> > என்று உணருங்களேன் சான்றோர்களே.
>
> > அன்புடன்
> > .கவி.
>
> > Subject: [MinTamil] Re: கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 1
> > To: "மின்தமிழ்" <minT...@googlegroups.com>
>
> > இந்த மொழிவெறித்தனம் எங்கு
> > போய் முடியுமோ !!!
>
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> If truth is God then God is on my side.- Hide quoted text -
>
> - Show quoted text -
> பொதுவாக தங்களது இருபிறப்பி விளக்கங்கள் போன்றவற்றை படித்ததால் ஏற்பட்ட
> தாக்கம் என்று நினைக்கிறேன். மறுபடியும் அப்படி எதையாச்சும்
> தொடங்கட்டீங்களோன்னு கேட்டுட்டேன். உங்களது வலைபதிவுகளை அவ்வப்போது பார்க்க
> நேரிட்டதால் ஏற்பட்டது. பின்னர் அத்தகைய விளக்கங்களை இங்கே தாங்கள தர
> நேரிட்டால் அப்போது கேட்கிறேன்.
மீண்டும் எனக்குப் புரியவில்லை. எதையோ, உங்கள் மனத்துள்
எண்ணியிருக்கிறீர்கள். ஆனால் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அது உங்கள்
உகப்பு. ”வருமீன் உள்ளளவும் வாய்திறந்து நிற்குமாம் கொக்கு” என்ற
பொருள்பட ஒரு சொலவடை உண்டு. அப்படி ”இவன் வாயில் இருந்து ஏதேனும்
சிக்காதா?” என்று பார்க்கிறீர்கள் போலும். காத்திருங்கள்.
சிலம்பிற் சொல்லப்பட்டிருக்கும் பல விழாக்கள் (எல்லாமல்ல), பண்பாடுகள்
(எல்லாமல்ல), பழக்க வழக்கங்கள் (எல்லாமல்ல) விதப்பான தமிழர் நடைமுறைகள்
என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். மாற்றுக் கருத்து இருந்தால்
விதப்பான எடுத்துக் காட்டுக்களோடு இங்கே எடுத்துவையுங்கள். பேசுவோம்.
உங்களுடைய தற்சார்பான கருத்துக்களுக்கு நான் மறுப்புச் சொல்ல முடியுமோ?
அன்புடன்,
இராம.கி.
>
> மற்றபடிகண்ணகிகுறித்த இவ்விவாதம் சுவாரஸ்யம்..
> ஆமாச்சு
கண்ணகி பற்றிய என்னுடைய வாதத்தில் இருந்த ஒரு கூற்று இதுவே:
இளங்கோ எனும் இலக்கிய ஆசிரியர் தான் கையாளும் பெயர்களில் சீர்மை
(consistency) என்பதை ஏரணத்தோடு பின்பற்றியிருப்பார் என்று கொண்டால், சத
கர்ணியை ”நூற்றுவர் கன்னர்” என்று கொண்டவர் ”கர்ணகி”யைக் ”கன்னகி” என்றே
சொல்வார். காப்பியத்தில் கண்ணகி என்றே சொல்லியிருப்பதால், கர்ணகி என்னும்
முதற் கருதுகோள் தவறு.
அன்புடன்,
இராம.கி.
On Mar 21, 9:15 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
> N. Ganesan wrote:
>
> // ஆனால் ”கண்ணன்” கண்ணிலிருந்தா? இல்லை. கண்ணன் < கிருஷ்ணன் (via
> Prakrit). கண்ணன் கண் பத்மம் என்றாலும் கண்ணன் வடசொல் தான் (< கிருஷ்ணன்).
> அதுபோல், கர்ணகி:கண்ணகி.//
>
> கர்ணன் திரியாது தமிழிலும் அப்படியே தானே வழங்கப் பெறுகிறது?
>
ரெ.கா.
(நானும் படிக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள)
மீண்டும் சொல்கிறேன்:
மொழியியலில், பொதுவாய் இணைச்சொற்களின் கூட்டம், வேர், வளர்ச்சி,
சொல்லாட்சிக் காலம், ஆகியவை பார்த்தே ”ஒரு சொல் இயற்சொல்லா, அன்றிப்
பிறசொல்லா?” என்று ஆய்கிறோம். தமிழ்ச் சொல்லைத் தனியே பார்த்து
வடசொல்மூலங் காட்ட விழைவோர், அவக்கரம் (=அவசரம்) காட்டாது, சற்று
பொறுத்து, சீரான நடைமுறையைக் கொண்டால் உண்மை புரியும். அதற்கு மேல் சொல்ல
என்னிடம் ஏதும் இல்லை.
அன்புடன்,
இராம.கி.
On Mar 21, 9:24 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
> On Sat, 2009-03-21 at 21:45 +0530, இராமதாசன் wrote:
> > கர்ணன் திரியாது தமிழிலும் அப்படியே தானே வழங்கப் பெறுகிறது?
>
> > கர்ணனை மாற்றாமல் வைத்திருக்கும் நாம் கர்ணகியை கண்ணகியாக மாற்றியிருப்போம்
> > என்று தோன்றவில்லை.
>
> ஆனால் வர்ணம் என்பது வண்ணம் என்று மாறியிருப்பதை வைத்து பார்த்தால் சரியாய்
> இருக்குமோ?
>
> --
>
> ஆமாச்சு
அன்பிற்குரிய வேந்தன் அரசு,
சொல்லம்புகள் வரட்டும். ஆனால் இன்னொரு கன்னத்தையும் காட்ட வேண்டுமா,
என்ன?


அதிகாரம் நல்ல தமிழ்.
நான் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும், ஒருபானை சோற்றிற்கு ஒரு சில
பதம் என்ற நோக்கில் ஒரு சில மற்றும் இங்கே அடுக்குகிறேன்.
அட்டுதல் = ஒன்றுதல், சேருதல், சார்தல், கூடுதல், பெருகுதல், மிகுதல்,
நெருங்குதல், பிடித்துக் கொள்ளுதல், பற்றுதல்
அட்டுக் கரி /அட்டக் கரி = ஏனத்தில் பிடித்துக் கொண்ட கரி, மிகுந்த
கருப்பு.
அட்டம் = நெருக்கம்
அட்டிகை = முத்து, மணி, பவளம் போன்றவற்றைச் சேர்த்து வைத்துக் (அட்டி
வைத்துக்) கட்டியது
அட்டியல் = ஒன்றிற்குள் ஒன்றாய் சேர்த்து வைக்கும் கலங்கள்.
அட்டுதல் = ஓட்டுதல், ஒன்றாக்குதல். தமிழிய மொழிகள் அத்தனையிலும் இதன்
இணைச்சொற்கள் உண்டு.
அட்டை = ஒட்டிக் கொண்டு வாழம் உயிரி.
அடகு = ஒன்றைப் பிடித்துக் கொள்ளல்
அடர்தல் = செறிதல் (ஒரே இடத்தில் சேருவதால், கூடுவதால், ஏற்படும் நிலை)
அடுக்குதல் = ஒன்றோடு ஒன்று அடுத்தல் (=சேர்த்தல்)
அடைதல் = சேருதல்
.............
அண்டுதல்.....
அண்ணுதல்........
அத்துதல் = அப்புதல், சார்தல்,
அத்து = உருபுப் புணர்ச்சியில் மகர மெய்யீற்றுப் பெயர்ச்சொல்லிற்கும்,
வேற்றுமையுருபிற்கும், இடையில் சாரியையாக வரும் இணைப்பிடைச்ச்சொல்.
மரத்து வேர், பட்டினத்துப் பிள்ளை, குன்றத்திருந்தான், எல்லாவிடத்தும்
அத்து என்பது இணைப்புச் சொல்லாக வருவதை ஆழ்ந்து கவனியுங்கள்.
அதனம் = அதிகம், மிகுதி, மிகை
அதித்தல் = மிகுதல்
அதைத்தல் = மிகுதல்
அதிக்கம் = மேன்மை
அதிகடம் = மிகுந்த மதம், இங்கு யானையைக் குறிக்கிறது.
அதிகத்தி = குருக்கத்தி
அதிகம் = குருக்கத்தி, கொத்துக் கொத்தாகப் பூப்பூக்கும் கொடி., மிகுதி,
அதிகரித்தல் = மிகுதல், அதிகப்படுதல் (மீமிசைச்சொல்), மிகப் பெருகுதல்
அதிகாரம் = அதிகரித்தலில் விளைந்த பெயர்ச்சொல்.
..........
........
சிலம்பு + அதிகாரம் = சிலம்பதிகாரம் = சிலம்பாற் பெரிதும் விரிந்த கதை.
”அட்டுதல், அண்டுதல், அண்ணுதல், அத்துதல், அந்துதல்” எனப் பல
வினைச்சொற்கள், அவற்றின் திரிவுகள் வழியாகக் கிளைத்த சொற்கள்
ஆயிரத்திற்கும் மேல் தமிழிற் தேறும். அதிகரித்தல் தமிழில்லை என்றால்,
இந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவையையும் தூக்கியெறியலாம். எந்தச் சொல்லையும்
தமிழில்லை என்று தூக்கு எறிவதும், வடசொல் மூலங் காட்டுவதும் மிக எளிது.
ஆனால் இது தமிழ் என்று சொல்வதற்கு ஆராய்ச்சி வேண்டும். [ஒரு கோப்பை பாதி
நிறையாதது என்று நொகைப் பார்வை (negative outlook) கொள்வதைக் காட்டிலும்,
பாதி நிறைந்தது என்று பொதிவுப் பார்வை (positive outlook) கொள்ளுவது
நல்லது.]
நான் ”அதிகாரம்” பற்றிச் சொல்லுவதில் உங்களுக்கு நம்பிக்கையில்லை
என்றால், ஏதேனும் ஒரு தமிழ் - தமிழ் அகரமுதலியை எடுத்து இந்த வரிசைச்
சொற்களைப் பொறுமையாகப் பார்த்து அவற்றின் ஊடே இருக்கும் பொது இழைப்
பொருளை அறிந்து கொள்க. உண்மை உங்களுக்கே புலப்படும்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 22, 7:35 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
> இராமகி எழுதியது:
>
> மேலும் இத்தறி ஒரு சொல் வடமொழி வந்ததா? தமிழா? என்பதைப் பற்றியது. தமிழர்
> காப்பியம் சிலப்பதிகாரம். ஆகையால் வடமொழியிலிருந்து ஒரு சொல் அதற்குள் புக
> வாய்ப்பில்லை என்பது தங்கள் ஆய்வின் அடிப்படை உளவியலா?
>
> நீங்கள் அப்படி எங்கும் சொல்லவில்லை. அப்படியில்லையென்றால் சரி.
>
> உண்டுன்னா பேரே பிரச்சனை,
>
> சிலம்பு + அதிகாரம் ---> அதிகாரம் எந்த மொழி?
>
> --
>
> ஆமாச்சு
அதிகாரம் = அதிகரித்தலில் விளைந்த பெயர்ச்சொல்.
..........
........
சிலம்பு + அதிகாரம் = சிலம்பதிகாரம் = சிலம்பாற் பெரிதும் விரிந்த கதை.
பாகதம், பாலி போன்ற மொழிகளில் உள்ள எழுத்து வழக்கத்தை அரைகுறையாய்ச்
சொன்னால் எப்படி?
தமிழில் ங், ஞ், ண், ந், ன் என்று இருப்பது போல் இந்த மொழிகளில் ஐந்து
ஒலிகள் வாரா.
ங், ஞ்,ண்,ந் என 4 ஒலிகளே வரும். றன்னகரம் தமிழில் மிகுந்த நாட்பட்டே
ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழெழுத்து அரிச்சுவடியில் அது கடையில் வைக்கப்
பட்டிருப்பதே அதை உணர்த்துகிறது.
எனவே, நாம் கன்னன் என்பதை அவர்கள் கண்ண என்றும் (சங்கதம் கர்ண என்றும்),
நாம் கண்ணன் என்பதைக் கண்ஹ என்றும் (சொல் முடிவில் ஒரு காற்றொலி வரும்.
இதையே சங்கதம் க்ருஷ்ண என்றும்) எழுதுவார்கள். இது எல்லா இடங்களிலும்
சீர்மையாய் அமையும். அந்தந்த மொழியின் சீர்மை அததற்கு. அதை விடுத்து
பாகதத்தை வைத்து தமிழுக்கு வரையறை சொல்லுவது வாலறுந்த நரியைப் பார்த்து
அதுவே அழகு என்று சொல்லி, நம் வாலையும் அறுத்துக் கொள்ள முற்படலாமோ?
இன்னொரு மொழியைப் பார்த்து நாம் ஏன் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்?
நம் அலங்காரம் நமக்கு இல்லையா?
அதே பொழுது ”நம் மொழியைக் கையாளும் போது ஓர் ஒழுங்கு முறை இருக்க
வேண்டும், அது இந்தச் சொற்களின் வரிசையில் இருக்கிறது” என்றே
நினைக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 22, 10:17 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> கண்ண எனும் பிராகிருதச் சொல் காதுக்கும், கர்ணனுக்கும் ஆன சொல்லா?
> என்ற கேள்விக்கு நண்பர் பேரா. ஆஸ்கோ பார்ப்போலாவின் மறுமொழி.
>
> நா, கணேசன்
>
> ------------
> Sheth's Prakrit dictionary gives kaNNa both for Sanskrit karNa 'ear'
> and for KarNa of the Mahaabhaarata. Best regards, Asokan
வண்ணம், வரணம் போலவே ”திண்ணை, திரணை” என்ற ஒரு பொருட் சொற்களை ”வடமொழி
வரலாறு” என்னும் பொத்தகத்தில் எடுத்துக் கூறி, இதில் ”நெல்லை வழக்கு ஏன்
சரியானது?” என்றும் விளக்குவார். பல்வேறு சொற்களின் சரியான
தமிழ்ப்பலுக்கல் பல்வேறு வட்டாரங்களில் உள்ளது. எல்லாவற்றிலும் நெல்லை
வழக்கே சரியென்று கொள்ள முடியாது. வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபட்ட
சொற்கள் விதப்பாய்க் காப்பாற்றப் பட்டு ஒலிக்கப் படுகின்றன. இதனால் தான்
வட்டார வழக்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறோம்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 22, 10:42 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கணேசர்
>
> “அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட
> பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று ”
>
> வர்ணம் என்பது வருணம் என்றே தமிழாக்கப்பட்டுள்ளது
>
> ஏற்கனவனே வண்ணம் என்ற சொல்லும் தமிழில் இருப்பதால், வண்ணம் என்ற சொல்லும்
> வர்ணத்தை சிறுபான்மை பயனாகி இருக்கு
>
> கண்ணன், கன்னன் போன்ற குழப்பம் நேராமல் இருக்க வன்னம் என்றுதானே தமிழாகி இருக்க
> வேண்டும்.
>
> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
திடிரென்று தொன்மங்களைக் கொண்டுவந்தால் எப்படி? ஒவ்வொரு ஊழியிலும் நாரணன்
வெவ்வேறு வண்ணங்களில் வருவான் என்பது விண்ணவ விளக்கம். அது நம்பிக்கையின்
பால் ஏற்கப் படும் விளக்கம்.
சொற்பொருள் விளக்கத்தின் படி, மணிவண்ணன் என்னும் சொல் நீலம், கருப்பு
நிறங்களைக் கொண்டவன் என்றே குறிக்கிறது.
அன்புடன்,
இராம.கி.
On Mar 23, 11:16 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> 2009/3/23 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
>
>
> > மணிவர்ணன் - ஆழ்வார்கள் மணிவண்ணன் ஆக்கியிருக்கின்றனர்.
> > மணி = நீல நிறம் (நீலம் < நீர். கடல்வண்ணம்).
>
> மணிவண்ணன் என்பது வெண்மையைக் குறிப்பது.
> நாரணன் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறான்.
> கண்ணன்/இராமனாக அவதாரங்கள் எடுத்தபோது நீலம்/பச்சை/கருப்பு.
>
> க.>
தங்கள் பின்னூட்டிற்கு நன்றி. முடிந்தவரையில் உருப்படியாக எழுதவேண்டும்
என்றே முயல்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 23, 6:56 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> ஆக்ககரமான உரையாடலால் தமிழையும், வாசிக்கும் எங்கள்
> உள்ளங்களையும் செழுமைப்படுத்தும் உங்களுக்கு
> என் வணக்கம்.
>
> ரெ.கா.
>
அருமை. மலைப்பூட்டும் வரைவுகள்.
பரத்தைக்குச் சொல்லப்பட்ட விளக்கங்கள் இப்போதுதான்
புதிதாகப் படிக்கிறேன். வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி.
பரத நாட்டியத்துக்கு பரத முனியின் நாட்டிய சாஸ்த்திரம்தான்
மூலம் என்றுதான் எல்லா நாட்டியப் பள்ளிகளிலும் தியரி
பகுதியில் சொல்லித் தரப்படுகிறது.
பரத்தையிலிருந்து பரதம் வந்ததென்றால், பரத முனி அந்தப்
பெயரில் எழுதி அந்தப் பெயரை கொடுத்ததாகச் சொல்லப்படுவது
தற்செயலான ஒற்றுமையா?
தமிழில் பரத நாட்டியக் கலைக்கான டெக்னிக்கல் நூல்கள் தோன்றாமல்
போனது ஏன்?
உங்கள் குவிமையத்திலிருந்து விலக வேண்டாம். விரும்பும்போது
விளக்கினால் போதும்.
ரெ.கா.
On Mar 29, 11:06 pm, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5
>
> அடுத்தது மாதவி. இவள் புகார்க் காண்ட முக்கோணத்தின் மூன்றாம் முனை, அதோடு
> காப்பியத்தையே கிடுக்கும் முனை. இவள் பெயர்க் கரணியம் சொல்ல இரண்டு
> பகுதிகள் ஆகும்.
>
இம்மடலை இப்போதுதான் பார்க்கிறேன்.
-----------
மணி = கருமை. (பிங்கலந்தை நிகண்டு).
முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண். 148).
நீலத் தாமரை கரிய, ஒளி பொருந்திய வர்ணத்தது.
கண்ணின் மணி - கண்மணி - கருப்பு வட்டமானதால்
தான் இப்பெயர்.
கண் மணி. கருமணியிற் பாவாய் (குறள், 1123).
ஆழ்வார்களில் கருமணி = விஷ்ணு.
குறளில் மணி கடலின் நிறத்துக்கு உவமையாக வரும்.
அதுபோல்,
நீடுநீர் மணிநீரும் (சீவக. 2418).
நா. கணேசன்
> > க.>- Hide quoted text -
On Apr 1, 5:47 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> பரத்தைக்குச் சொல்லப்பட்ட விளக்கங்கள் இப்போதுதான்
> புதிதாகப் படிக்கிறேன். வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி.
>
பரத்தை என்பது சங்க இலக்கியச் செய்யுளில் இருக்காது.
பிற்காலத்தில் ஏற்பட்ட கொளுக்களிலும், உரையிலும்
இருக்கும். எனவே, அது வடசொல் மூலமானது
என்று காட்டுவர். உ-ம்: பரஸ்த்ரீ. பரகீயம், ஸ்வகீயம் என்றெல்லாம்
வைணவத்தில் தத்துவம் விரிந்துள்ளது.
There are differences between para (as in para-strii) and bharatam.
அதிகாரம், வர்ணனை - தமிழா? வடசொற்களா? என்று உங்கள் முடிவுக்கு
விட்டுவிடலாம்.
நா. கணேசன்
On Mar 31, 10:09 pm, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> அன்பிற்குரிய கண்ணன்,
>
> கண்ணனை யாரும் ஓரங் கட்டவில்லை. அவனைப் பற்றிய கதைகள், தொன்மங்களைச்
> சரிவரப் புரிந்து கொள்ளுவதே முகன்மையானது. “சங்க காலத்தில் வைணவம்” என்ற
> நூல் நான் படித்ததில்லை. கிடைத்தால் நன்றாக இருக்கும்.
>
> கட்டுரைத் தொடர் இன்னும் ஒரு பகுதியோடு முடியவேண்டும். அதில்
> நாட்டுப்புறத் தரவுகள் பற்றிச் சொல்லவேண்டும். அதோடு நா. கணேசனின்
> கருத்துக்களில் மாறுபடுவைக்கு மட்டும் விடையிறுக்க வேண்டும்.
>
> ஆசீவகம் என்ற மெய்யியலில் தமிழனின் பங்கு மிகப் பெரியது. அந்த மெய்யியலை
> இழுத்துமூடி அதன் கருத்துக்களை மற்ற மெய்யியல்கள் தங்களுக்கு இயைந்த
> வகையில் உள்வாங்கிக் கொண்டன. ஆசீவகத்தில் தமிழரின் பங்கு பற்றி
> வெங்காலூர் குணாவும், பேரா. க.நெடுஞ்செழியனும் பெரிதும்
> கருத்துரைத்திருக்கிறார்கள்.
>
> என்னுடைய பங்களிப்பிற்கு இன்னும் பலநாட்கள் ஆகும்.
>
ஐயா,
வெங்காலூர் குணா, க. நெடுஞ்செழியன் நூல்பெயர் பட்டியல் தரமுடியுமா?
நான் அவற்றை வாங்கிப் படித்துப் பார்க்கிறேன்.
நன்றி,
நா. கணேசன்
> அன்புடன்,
> இராம.கி.
>
> On Mar 21, 6:35 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
>
>
>
> > உங்கள் இருவரின் ஆய்வும் மிக சுவாரசியமான தகவல்களைத்தருகின்றன.
>
> > இராம.கியின் பின்புலம் வணிகர் குல குமுகாயத் தொன்மங்களை நன்கு அறிந்திருத்தல்.
>
> > நா.கணேசனின் பின்புலம், ஐரோப்பிய ஆய்வுகளின், இந்திய சிந்துசமவெளி
> > ஆய்வுகளின் அடிப்படை.- Hide quoted text -
இதற்கு விடை கொடுத்திருந்தேனே.
கண்ணன் < கர்ணன், பண்ண < பர்ண ‘இலை’ இரண்டும் பிராகிருதத்தில்
உள்ள சொற்கள் தாம்.
கண்ணன் என்னும் பெயர் கண்ணபிரானைக் குறிக்கப் பயன்படுத்துவதால்,
கன்னன் (< கண்ணன் < கர்ணன்) என்றால் புரிந்துகொள்ள வசதி, குழப்பம்
ஏற்படாது
என்று மகாபாரதத்தில் (உ-ம்: வில்லிபாரதம்). ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், கண்ணகி < கர்ணகி என்று வேறொன்றும் இல்லையாதலால்
தாமரைப் பொகுட்டில் வதியும் திருமா மகளின் பெயரைத் தமிழ் ஏற்றுள்ளது.
ஒப்புமைக்காக, பண்ணக < பர்ணக என்று பிராகிருதத்தில் உள்ள சொல்,
பன்னக(சாலை) என்று தமிழில் பெருவாரியாகப் புழங்கும்.
பண்ணல், பண்ணன், ... தமிழின் பண்ணுதல் என்ற வினையடியாய்
ஏராளமான சொற்கள் ஏற்கெனவே தமிழில் உள்ளதால்
வித்தியாசம் காட்ட பன்ன என்று தமிழ் எடுத்துள்ளது.
புள்ளாங்குழல்:புல்லாங்குழல், பொள்ளாப்பிள்ளையார்:பொல்லாப்பிள்ளையார்,
அள்ளைக்கை:அல்லக்கை, ... என்பதுபோல் (கர்ணன் > ) கண்ணன்:கன்னன்,
பர்ணகம்:பண்ணகம் > பன்னகம் ஆகியுள்ளது.
கணேசன்
> On Mar 21, 9:15 pm, இராமதாசன் <ramada...@amachu.net> wrote:
>
>
>
> > N. Ganesan wrote:
>
> > // ஆனால் ”கண்ணன்” கண்ணிலிருந்தா? இல்லை. கண்ணன் < கிருஷ்ணன் (via
> > Prakrit). கண்ணன் கண் பத்மம் என்றாலும் கண்ணன் வடசொல் தான் (< கிருஷ்ணன்).
> > அதுபோல், கர்ணகி:கண்ணகி.//
>
> > கர்ணன் திரியாது தமிழிலும் அப்படியே தானே வழங்கப் பெறுகிறது?- Hide quoted text -
On Apr 1, 12:51 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபட்ட
> சொற்கள் விதப்பாய்க் காப்பாற்றப் பட்டு ஒலிக்கப் படுகின்றன. இதனால் தான்
> வட்டார வழக்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறோம்.
>
தொல்காப்பியரே தென்கோடித் தமிழகத்தார் என்பர்,
செந்தமிழ் ஒலிப்புகள் பல மதுரைக்குத் தெற்கேயும், ஈழத்திலும்
வழங்குகின்றன. இதில் ஒரு சிறப்பான அம்சம் க்,ச் எழுத்துக்களின்
*voiceless fricatives* ஒலிப்பு. சகரத்திற்கு -s- வழக்கில் வந்துவிட்டது.
தி ஹிந்து போன்றவையின் தாக்கத்தால் இன்னும் ககரத்திற்கு
-h- இன்னும் உயர்மட்டங்களில் ஏறவில்லை,
ஓம் என்பதன் திராவிட மூலம் காண யாழ் தமிழ் எவ்வளவு
உதவுகிறதோ, உவன், உவள், உது என்னும் சங்க வழக்கின்
பழமை இன்னும் ஈழத்தமிழில் எவ்வாறு வாழ்கிறதோ,
அது போலவே ககரத்தின் ஹகர ஒலிப்பு (voiceless fricative) தெளிவாக
ஈழத்தில் இருக்கிறது.
இதை நல்ல செந்தமிழ்ப் பாடல்களில் கேட்கலாம்.
நா. கணேசன்
On Apr 1, 6:09 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Apr 1, 12:57 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>
>
>
>
>
> > அன்பிற்குரிய கண்ணன்,
>
> > திடிரென்று தொன்மங்களைக் கொண்டுவந்தால் எப்படி? ஒவ்வொரு ஊழியிலும் நாரணன்
> > வெவ்வேறு வண்ணங்களில் வருவான் என்பது விண்ணவ விளக்கம். அது நம்பிக்கையின்
> > பால் ஏற்கப் படும் விளக்கம்.
>
> > சொற்பொருள் விளக்கத்தின் படி, மணிவண்ணன் என்னும் சொல் நீலம், கருப்பு
> > நிறங்களைக் கொண்டவன் என்றே குறிக்கிறது.
>
> > அன்புடன்,
> > இராம.கி.
>
> > On Mar 23, 11:16 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
>
> > > 2009/3/23 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>
> > > > மணிவர்ணன் - ஆழ்வார்கள் மணிவண்ணன் ஆக்கியிருக்கின்றனர்.
> > > > மணி = நீல நிறம் (நீலம் < நீர். கடல்வண்ணம்).
>
> > > மணிவண்ணன் என்பது வெண்மையைக் குறிப்பது.
> > > நாரணன் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு வண்ணங்களில் வருகிறான்.
> > > கண்ணன்/இராமனாக அவதாரங்கள் எடுத்தபோது நீலம்/பச்சை/கருப்பு.
>
> இம்மடலை இப்போதுதான் பார்க்கிறேன்.
>
> -----------
>
> மணி = கருமை. (பிங்கலந்தை நிகண்டு).
>
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் - குறள்.
மணிநீர் = கருநீர்.
நீலம் < நீரம்.
> முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண். 148).
> நீலத் தாமரை கரிய, ஒளி பொருந்திய வர்ணத்தது.
>
> கண்ணின் மணி - கண்மணி - கருப்பு வட்டமானதால்
> தான் இப்பெயர்.
> கண் மணி. கருமணியிற் பாவாய் (குறள், 1123).
>
> ஆழ்வார்களில் கருமணி = விஷ்ணு.
>
> குறளில் மணி கடலின் நிறத்துக்கு உவமையாக வரும்.
> அதுபோல்,
> நீடுநீர் மணிநீரும் (சீவக. 2418).
>
> நா. கணேசன்
>
>
>
> > > க.>- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
செயினத்திலும், ஆசீவகத்திலும் தீவலம் செய்யும் மணவினை நிகழாதுதான்.
மங்கல வாழ்த்துப் பாடலில் நிகழ்வது பார்ப்பனர் வழித் திருமண முறையும்
கலந்த கலவை முறை. கதை நாயகனும், நாயகியும் உயர்சாதியினர் ஆன காரணத்தால்,
அன்றையத் தாக்கத்தின் படி, பார்ப்பனர் சடங்குகளும் அவரிடையே கலந்தே
வரும். ஆனால் சடங்குகள் எல்லாமே பார்ப்பனர் வழக்கல்ல.
சமண சமயங்களின் இல்லறத்தார்கள் சாவக நோன்பிகள் எனப் படுவார்கள். பொதுவாக
இவர்கள் ஒரேயொரு சமயத்தை மட்டும் பின்பற்றி நெறி காப்பவர்கள் அல்ல.
சமணர்களிற் துறவோர் மட்டுமே நெறித்தூய்மை காப்பவர்கள். இவருக்கு மாறாகப்
பல்வேறு நெறிகளின் தாக்கம் தொடர்ச்சியாய் சாவகநோன்பிகளிடம் இருக்கத்தான்
செய்தது.
இன்றுங் கூடத் தமிழகத்தில் ”இந்தத் தாக்கம் எதனின்று” என்று தெரியாமல் பல
வழக்கங்கள் இருக்கின்றன. [இன்றுங் கூட திருப்பதி, அழகர் கோயில்,
வைத்தீசுரன் கோயில், இன்னும் பல்வேறு கோயில்களில், மொட்டையடிக்கிறோமே?
சிவநெறியிலோ, விண்ணவ நெறியிலோ எந்த ஆகமத்திலோ, மொட்டையடிக்கச்
சொல்லியிருக்கிறதா? இல்லையே? ஆனாலும் பெருவாரியான தமிழர்கள்
மொட்டையடிக்கிறார்களே, அது எதனால் என்று நினைக்கிறீர்கள்? ஒரு 1500-2000
ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு விரவிப் பரவியிருந்த சமண மதங்களால் தான்.]
நான் இது போன்று பல்வேறு பழக்கங்களைச் சொல்ல முடியும். அவற்றையெல்லாம்
விரிக்கின் பெருகும், எனவே விடுக்கிறேன்.
நானே, அடிப்படையிற் சிவநெறியாளன். என் குருவின் போதனை கேட்டு, மந்திரம்
சொல்லிப் பூசை செய்வது சிவனை நோக்கியே இருக்க வேண்டும். ஆனாலும்,
அவ்வப்போது, பெருமாள் கோயில்களுக்கு விரும்பிப் போகிறேன். எங்கள்
குடும்பத்தின் இட்ட தெய்வமாக திருக்கண்ணபுரம் சௌரிராசனைக்
கும்பிடுகிறேன். மனம் தடுமாறினாற் காப்பிற்காகத் திருப்பல்லாண்டும்
சொல்லுகிறேன். இதுபோல விண்ணவ நெறியில் இருக்கும் எத்தனையோ பேர், இன்று
சிவன் கோயிலுக்கும் போகிறார்கள்.
சமயப் பொறை என்பது தமிழகத்தில் ஒரு ஆயிரம் ஆண்டுகளாய்த் தான் சொல்லப்
பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு என்றால், ஒரே வளாகத்தில் “சிவா-விஷ்ணு
கோயில்கள்” கட்டுவது வரைப் பெருகிப் போயிற்று. [ஆனால், பத்தி இயக்கத்து
முந்தியும், பத்தி இயக்கத்தாலும், ஒரு 400 ஆண்டுகளாவது, இந்த நாட்டிற்
சமயப்பொறை இல்லாமல், வெட்டு, கொலைகள் நடந்து, 2 1/2 சமயங்களைச்
சாய்த்திருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. செயினம் மட்டுமே
திருவண்ணாமலைக்கு அருகில், பாதிக் குற்றுயிராய்ப் பிழைத்தது.]
இத்தனை ஏன், ஆகமக் கோயில்களிற் தொழுவதை ஏற்கக் கூடாத அல்லிருமைக்
காரர்கள் (அத்வைதிகள்) கூடக் கோயிலுக்குப் போகிறார்கள் இல்லையா? இந்தக்
காலத்தில் சிவ/விண்ணவ நெறியில் பிறந்தவர் சில போது, கிறித்துவக்
குறுக்கையத்திற்குப் (church) போய், மாதா உருவின் முன்னால் மண்டியிட்டு
மன அமைதி கொள்வதில்லையா? அது போலப் பிறந்தது ஒரு மதமென்றாலும், இன்னொரு
மத வழிமுறையின் படி திருமணம் செய்து கொள்வது இல்லையா?
அதுபோல எடுத்துக் கொள்ளுங்கள். காப்பியம் நடைபெற்ற காலத்தில், எல்லா
மதங்களும் இங்கு போட்டி போட்டுக் கொண்டு நாவலோ, நாவல் என்று கூவிக்
கொண்டிருந்த காலம். [நா. பா.வின் மணிபல்லவம் படித்திருக்கிறீர்களா, இந்த
நாவலோ நாவலில் அவர் புதினம் தொடங்கும்.] [வேத நெறியாளரின் தாக்கம்
பற்றிச் சொன்னால், இங்கு பலர் மனம் புண்படக் கூடும். எனவே
தவிர்க்கிறேன்.]
மாசாத்துவானும் மாநாய்கனும் சாவகநோன்பிகள், அதே பொழுது பரதர்கள்.
அரசரும், பரதரும் பார்ப்பனரைப் பெரிதும் நாடிய காலம் ஆகையால், இவர்கள்
வீட்டுத் திருமணத்தில் பார்ப்பனச் சடங்குகள் ஒருசில கலந்திருக்கின்றன.
குறிப்பாக “மாமுது பார்ப்பார் மறைவழி காட்டிட தீவலம் செய்யும்” சடங்கு
இருந்தது. ஆனால் திருமணத்தில் அது முகன்மைச் சடங்கல்ல. அதற்கு நான்கு
வரிகள் முன்பாக,
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணியெழுந்தது
என்று இரண்டு வரிகள் வருகின்றன பாருங்கள், அதன்படி ”முற்றத்துள்
(=வளவிற்குள்) முரசு இயம்புகிறது. முருடு அதிர்கிறது. சங்கு
முழங்குகிறது. வெண்குடைகள் அரசன் எழுந்தது போல் வந்து மணமக்களுக்கு
அருகில் வந்து நிற்கின்றன. அங்கு சுற்றி இருந்தவர்களிடம் வாழ்த்துப் பெற
தாலித் தாலமும் எழுகிறது.
அடுத்த இரண்டு வரிகள் திருமணம் நடக்கும் பொழுதைக் குறிக்கின்றன.
[இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்வரை தமிழர் திருமணம் இரவில் தான்
நடந்தது. மற்ற தக்கண மாநிலங்களில் நாட்டுப் புறங்களில் திருமணங்கள்
இன்றும் இரவிலேயே நடைபெறுகின்றன. இந்த 150 ஆண்டுகளில் தான் திருமணங்கள்
பகலுக்கு மாறி “இராகு காலம், யம கண்டம், நல்ல நேரம்” என்று
சோதியக்காரர்களின் கூத்தாகித் தடுமாறுகின்றன. அந்தக் காலத்தில் முழுத்தம்
என்பது உரோகிணி நாள்காட்டு என்றைக்குப் பூரண நிலவோடு சேர்கிறதோ,
அன்றைக்கே, அப்பொழுதே அமையும். சிலம்பிலும் அப்படித்தான் நடக்கிறது. ]
இதற்கு அப்புறம் இரண்டு வரிகளில் நான் முன் சொன்ன கலப்பு வழக்கம்,
பார்ப்பனர் சடங்கு, வருகிறது.
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கள் நோன்பென்னை?”
இதற்கு அடுத்துத் தான் நீங்கள் சொன்ன வரிகள்:
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்ந்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னார்
காதலற் பிரியாமல் கவுவுக்கை ஞெகிழாமல்
தீதறுக என ஏத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார். ......
இந்த வரிகளில் வேதநெறி வழக்கத்தை எங்கு பார்த்தீர்கள் என்று எனக்குப்
புரியவில்லை. மேலே சொன்ன செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாலித்
தாலம் முற்றத்தில் சுற்றி வருகிறது. அதற்கு அப்புறம் இளங்கோ என்னும் கதை
நெறியாளர் ஒரு வெட்டு; ஒரு ஒட்டு. சுற்றியிருக்கும் பெண்களைப் பற்றிய
நீண்ட விவரிப்பு. முடிவில் மேலே உள்ள வரிகளில் கடைசி வரியில் வரும்
“மங்கல நல் அமளி ஏற்றினார்”. அவ்வளவுதான் திருமணம் முடிந்து போயிற்று.
தேர்ந்த காட்சி விவரிப்பாளர் இளங்கோ.
மங்கல நல் அமளி ஏற்றுவதை மணைவரைச் சடங்கு என்று எங்கள் பக்கம்
சொல்லுவார்கள். மணமகளின் கழுத்தைச் சுற்றித் மங்கல அணி என்னும் திருவைப்
பூட்டுவதால் இது திருப்பூட்டு எனப்படும். அமளி = மணை என்று இந்தக்
காலத்தில் சொல்லப்படும். தீவலம் சுற்றுவது அல்ல. “கன்னிகாதானம்”
என்பதெல்லாம் கிடையாது. திருப்பூட்டினால், திருமணம் முடிந்தது. அவள்
இவனுக்கு மனைவியானாள்.
இனி மேலேயுள்ள பெண் விவரிப்பு வரிகளின் விளக்கம்.
விரையினர் என்பது நறுமணம் பூசிக் கொண்டோர்
மலரினர் = மலர்கள் வைத்துக் கொண்டோர்
விளங்கு மேனியர் = ஒளி பொங்கும் மேனியர்
உரையினர் = சள சள என்று பேசிக் கொண்டிருப்போர்
பாட்டினர் = மங்கலப் பாட்டுப் பாடுவோர்கள்
ஒசிந்த நோக்கினர் = ,கூட்டத்தின் இடையே, கிடைக்கும் வெளியில் தங்கள் தலை
சாய்த்து மணமக்களைக் காணும் நோக்கினர்
சாந்தினர் = சந்தனம் பூசியோர்
புகையினர் = அங்கு எரிந்து கொண்டிருக்கும் அகிற்புகையை உள்ளுக்குள்
இழுத்துக் கொள்வோர்
தயங்கு கோதையர் = திருமணம் பற்றித் தயங்கி வெட்கிக் கொண்டு இருக்கும்
பெண்கள்
ஏந்திள முலையினர் = திருமணம் பற்றித் தயங்காது வெட்கங் கொள்ளாது
தம்முலையை ஏற்றிக் காண்பிக்கும் இளைய பெண்கள்,
இடித்த சுண்ணத்தர் = இடித்த பொற் சுண்ணத்தைப் பூசிக் கொண்ட, திருமணம் ஆன
பெண்கள்
விளக்கினர் = பல்வேறு விளக்கினை ஏந்தியவர்கள்
கலத்தினர் = சீர்வரிசைகளைக் கலங்களில் கொண்டிருப்போர்
விரிந்தபாலிகை முளைக்குட நிரையினர் = பல்வேறு கூலங்களையும்,
பருப்புக்களையும் முளைவிட வைத்து பாலிகை பிடித்துக் குடங்களில்
வைத்திருக்கும் வரிசையினர். [இன்றும் அம்மன் கோயில் விழாக் காலங்களில்
”முளைப்பாலிகை” (முளைப்பாரி” என்று பேச்சுவழக்கில் சொல்லுவார்கள்)
விடுவது வழக்கம். தென்பாண்டி நாட்டில் இன்றும் உண்டு. சோழநாட்டில் அன்று
இருந்திருக்க வேண்டும்.. இன்றும் நகரத்தார் திருமணத்தில் முளைப் பாலிகை
இல்லாமல் திருமணம் இல்லை.]
முகிழ்த்த மூரலர் = புன்முறுவல் பூத்த பெண்மக்கள்
போதொடு விரிகூந்தற் பொலன் நறுங்கொடி அன்னார் = விரிந்த கூந்தலில்
பூவைத்துக் கொண்ட, அழகிய பொற்கொடி போன்றவர்கள்
மேலே சொன்ன அத்தனையாலும் பல்வேறு மங்கலப் பெண்களை இளங்கோ விவரிக்கிறார்.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் மங்கலப் பெண்களே மங்கல நாளில் வாழ்த்துக்
கூறமுடியும். சிலம்பில் மங்கலப் பெண்கள் சொல்லுகிறார்களாம்
“உன் காதலனைப் பிரியாதே;
கவ்வும் கைகளை நெகிழ்த்தாதே;
தீமையை விலக்கு”
என்று ஏத்தி அங்கு எல்லோரும் எடுத்துக் கொடுத்த அரியையும், மலரையும்
சேர்த்துத் தூவி, மங்கல நல் அமளி ஏற்றினார்கள்.
மேலே சொன்ன ”மாமுது பார்ப்பான் ....” என்ற இரண்டு வரிகளைத் தவிர்த்து
வேறு எங்கும் பார்ப்பனர் சடங்கு கிடையாது. இன்னும் சொன்னால், பழைய
அகநானூற்றின் திருமண நிகழ்ச்சிகளின் சிலவற்றோடு இணைகள் தெரிகின்றன.
அன்புடன்,
இராம.கி.
On Mar 23, 11:20 pm, devoo <rde...@gmail.com> wrote:
> Mar 23, 5:01 pm, இராமகி
> //மாநாய்கன், மாசாத்தன் இருவருமே வணிகர்கள். ஒருவன் சமணத்தில்
> இல்லறத்தான்; இன்னொருவன் ஆசீவகத்தில்
> இல்லறத்தான்.//
>
> சமணத்திலும், ஆசீவகத்திலும் தீவலம் செய்து
> மணவினை நிகழுமோ?
> ”சாந்தினர்,புகையினர்....
> இடித்த சுண்ணத்தர்,விளக்கினர்,கலத்தினர்,விரிந்த பாலிகை
> முளைக்குட நிரையினர்...” (மங்கல வாழ்த்துப்பாடல்)
> ‘நிதியும், நற்சுண்ணமும், நிறைகுட விளக்கமும்’
> ஏந்துவது மறைமுடிவு சுட்டும் வழக்கமன்றோ?
>
> தேவ்
Sudhdhnanda Barathi's english rendering:
Verse 984
Penance is that goodness which refrains from killing. Perfection is that goodness which refuses to tell others' faults.
Pope's translation:
The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise. narasiah --- On Thu, 4/2/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote: |
நன்றி திரு. நரசைய்யா
தங்களின் மேலான ஆலோசனைகளை ஏற்று, இனியாகிலும் தமிழில் எழுத முயல்பவரைக் குறை கூறாமல் “தனித் தமிழர்”, “மொழி வெறியர்” என்ற இனம் பிரிக்காமல் இருக்க முயல்வார்கள் எனவே நம்புவோமாக.
அன்புடன்
.கவி.
அன்புள்ள திரு. கண்ணன்
நீங்கள் என் மடலைப் படிப்பதில்லை போலும்.
“எழுதாதே”, ”மறுமொழி கூறாதே” என்ற தோனியிலேயே உங்கள் மடல்கள் மீண்டும் மீண்டும் அமைவது சரியா என்பது உங்களின் தமிழன்புப் பார்வைக்கே சமர்ப்பணம்.
உங்களுக்கு மறுமொழி மடலிலேயே உள்ளது, உங்களுக்காக மீண்டும்
“இராமாயணம், மகாபாரதம், என மீண்டும் மீண்டும் விவாதிக்கும் போது, அது வெறியல்ல,
ஆனால் தமிழ் என்று எழுதினால் வெறி, தமிழ் என்றாலே உங்களின் தவறான நோக்கு ஏன்?”
கண்ணனன்பகலா
.கவி.
”வ்ருத்த கோபாலன்” என்ற விளி "குறிப்பிட்ட இடத்தில் பொருந்தாது" என்று
சொல்லியிருந்தேன். கூடவே "ஒரு பஞ்சதந்திரக் கதையை வெட்டியொட்டித் தன்
நாயகனுக்கு இளங்கோ பொருத்துவாரா? அது எழுத்துத் திருட்டு இல்லையா?
மீறியும் இருக்கிறதென்றால், அவை இளங்கோவின் வரிகள் தாமா?” என்ற
நம்பாமையையும் தெரிவித்திருந்தேன். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு,
எங்கிருந்தோ ”வ்ருத்த காத்யாயன” என்ற விளியைப் பிடித்து வந்து, அதே போல
”வ்ருத்த காப்பிய” என்று சொல்லி, தொல்காப்பியனை முடிச்சுப் போட்டு,
உங்கள் உகப்பிற்கேற்பச் செய்திகளை வளைத்துக் கொள்கிறீர்களே? இது ஞாயமா?
(”வ்ருத்த காப்பிய” என்ற கலப்பு வழக்கைக் காட்டிலும், ”வ்ருத்த காவ்ய”
என்பதுதான் சங்கதத்திற்கு உகந்தது என்பார்கள்.) தொல்காப்பியன்
பெயர்க்கரணியம் பற்றி என்றோ முன்னவர்கள் செய்து முடித்த உரையாட்டுக்களைத்
திருப்பிக் கொண்டுவந்து இங்கு போடுவது தேவையா?
14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியர், எவ்வளவோ நல்ல உரைகளைத்
தந்திருக்கிறார். உண்மைதான். கூடவே, ”வேண்டாத இடங்களிலெல்லாம் ’வேதத்தை
வலிந்து நுழைப்பதால், அவர் எடுத்துக் கொண்ட நூலின் தடத்தை மாற்றி வேறு
எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவாகிறது.” என்று புலவர் இரா. இளங்குமரன்
(தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம்.) சொல்லுவார். மற்ற
உரையாசிரியர்களையும், நச்சினார்க்கினியர் உரைக்குள்ளேயே வரும்
முரண்பாடுகளையும், கொண்டு, இந்தத் தடம்மாறலைப் புரிய வைக்க
வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? இங்கிருப்போருக்காகத்
”தொல்காப்பியனுக்கு நச்சினார்க்கினியம் தந்த பெயர்க்கரணியம் ஏன்
பொருந்தாது?” என்பதை நச்சினார்க்கினியரை வைத்தே சொல்லுகிறேன்.
தொல்காப்பியப் பாயிரம் என்பது தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர்
பனம்பாரனார் எழுதியது என்று சொல்வார்கள். அதன் கடையேழு வரிகள்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே
என்று அமையும். இந்த 7 வரிகளுக்கு பார்க்காமல், [அது நீளும்], கடைசி
இரண்டின் பொருளை மட்டும் பார்த்தால், “தொல்காப்பியன் என்னும் தன்பெயரை
பெரும்புகழ் கொள்ளும்படி வெளிக்காட்டி தவக்கோலம் பூண்டவன்” என்று
அமையும். அதாவது, ”தொல்காப்பியன் எனும் பெயர், நூலுக்கு முந்தையது.”
எனவே, ஆசிரியனின் பெயரை வைத்து நூலுக்குப் பெயர் சொல்லுகிறார்கள்; நூலின்
பெயர் வைத்து ஆசிரியனுக்குச் சொல்லவில்லை. “படிமையோன் = தவசி”. அதாவது,
நூல் எழும் போது, தொல்காப்பியர் ஒரு துறவி.
இங்கே நச்சினார்க்கினியர் ”தொல்காப்பியன் பழைய காப்பியக் குடியில்
உள்ளோன்” என்று சொல்லி குலப்பெயர்க் கரணியம் காட்டுவார். அதாவது,
”காப்பியக் குடி” என்ற ஒன்று இருந்ததாம். அதிற் பிறந்ததால்
“தொல்காப்பியன்” என்று பெயர் பெற்றாராம்.
”பனம்பாரனார் கூற்றில் இல்லாத குல விளக்கத்தை நச்சினார்க்கினியர்
எங்கிருந்து பெற்றார்?” என்று தெரியவில்லை. [நச்சினார்க்கினியர் கொடுத்த
“நிலந்தரு திருவிற் பாண்டியன் (இவனை மாகீர்த்தி என்றே
நச்சினார்க்கினியார் அழைப்பார்) 24000 ஆண்டுகள் ஆண்டான்” என்ற உரையையும்,
”வேத வியாசரின் வேதத்தை நாலாய்ப் பகுப்பதற்கும் முன்னால் தொல்காப்பியர்
நூல் எழுந்தது” என்ற உரையாட்டுக்களையும் தூக்கியெறியும் இரா.இராகவ
ஐயங்கார் தமிழ்வரலாறு முதற்றொகுதியிலும் (பக் 255-257), மு.இராகவ
ஐயங்கார் தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சியிலும் (பக்.2-3),
“தொல்காப்பியன் காப்பியக்குடியோன்” என்பதை மட்டும் அழுத்தந்
திருத்தமாய்ப் பிடித்துக் கொள்வார்கள். இவற்றை பேரா. க.வெள்ளைவாரணனார்
(தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம் - பக்.17-23) ஆழமாக
மறுத்திருப்பார். இரு இராகவ ஐயங்கார்களின் பழைய வாதத்தைத் தான் திரு.
நா.கணேசன் இங்கு கொண்டு தந்திருக்கிறார். அதற்கு மாறாக நச்சரின் மூலத்தை
தருக்க முறையில் ஆழமாய்ப் படித்திருக்கலாம்.]
குடியும் கோத்திரமும்(=குலம்) ஒருபொருட் சொற்கள் என்றே அறிந்தோர்
சொல்வார்கள். பார்ப்பனர் கோத்திரங்களில் காவ்ய என்ற ஒரு கோத்திரம்
இருந்தது/இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் ”தமிழ்நாட்டில்
அவர்கள் எங்கிருந்தார்கள்? இப்பொழுது எங்கிருக்கிறார்கள்?” என்பது
தெரியவில்லை. ”அதோடு தொல்காப்பியனை தாங்கள் போற்றும் பெரிய முனிபுங்கவராக
காவ்ய கோத்திரத்தினர் ஏற்கிறார்களா?” என்றும் தெரியவில்லை. தொல்காப்பியர்
காப்பியக் குடி என்று சொல்லும் நச்சினார்க்கினியர், இன்னோர் இடத்தில்
வேறொரு கதை சொல்லுகிறார். அந்தக் கதையின்படி ’தொல்காப்பியரின்’ குலம்
வேறொன்றாய் ஆவதால், ’காப்பியக்குடி’ என்னும் வகைப்பாடு முரணாவே
தெரிகிறது. அந்த இன்னொரு கதை,
மேலே பாயிரத்தில் வரும் ”அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து” என்பதை
விளக்கும் முகமாக, ”அகத்தியரையும், அவர் மனைவி உலோபமுத்திரையையும்,
தொல்காப்பியரையும் சேர்த்து” வரும். நச்சினார்க்கினியர் தந்தபடியே அந்தக்
கதையைக் கீழே தருகிறேன்.
-------------------------------------------
அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, ‘நீ தொல்காப்பியன் செய்த நூலைக்
கேளற்க’ என்று கூறுதலானும், தொல்காப்பியனாரும் பல்காலஞ் சென்று ‘யான்
செய்த நூலை நீர்கேட்டல் வேண்டும்’ என்று கூறுதலானும், இவ்விருவரும்
வெகுளாமல் இந்நூற்குக் குற்றங் கூறிவிடுவல் எனக் கருதி அவர்கூறிய
கடாவிற்கெல்லாம் விடை கூறுதலின் ‘அரில் தபத் தெரிந்து’ என்றார்.
அவர் கேளன்மின் என்றற்குக் காரணம் என்னையெனின், தேவரெல்லாங் கூடி யாஞ்
சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே
ஆண்டிருத்தற்குரியரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவருந் தென்றிசைக்கட்
போதுகின்றவர், கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர்
யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்
கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார்
உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப்
போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதிணெண்மரையும்,
பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து,
காடுகெடுத்து நாடாக்கிப், பொதியின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற்
பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித், திரணதூமாக்கினியாராகிய
தொல்காப்பியனாரை நோக்கி, ‘நீ சென்று குமரியாரைக் கொண்டுவருக’ எனக்கூற,
அவரும் ’எம்பெருமாட்டியை எங்கனம் கொண்டுவருவல்’ என்றார்க்கு, ‘முன்னாகப்
பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டுவருக’வென, அவரும் அங்ஙனம்
கொண்டுவருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத்,
தொல்காப்பியனார் கட்டளை யிறந்து சென்று ஒரு வெதிர்ங்கோலை முறித்து நீட்ட,
அதுபற்றி யேறினார்; அது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையுந்
தொல்காப்பியனாரையுஞ் ‘சுவர்க்கம் புகாப்பிர்’ எனச் சபித்தார். ‘யாங்கள்
ஒரு குற்றமுஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானுஞ்
சுவர்க்கம் புகாப்பீர்’ என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர்
வெகுண்டாராதலின் ‘அவன் செய்த நூலைக் கேளற்க’ என்றாரென்க.
-------------------------------------------------
இந்தக் கதையின் உள்ளடக்கத்திற்குப் போகாமல், நமக்குத் தேவையானவற்றை
மட்டும் அலசுவோம். நச்சினார்க்கினியர் இந்தக் கதையில் சொல்கிறபடி
“தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி” என்பதும், ‘அவர்
யமதக்கினியின் மகனாவார்’ என்பதும் மேலே புலப்படுகிறது. ’யமதக்கினி’
என்பதை ’ஜமதக்னி’ என்று சங்கதத்தில் கூறுவர். அதோடு, ஜமதக்னியைப்
பரசுராமரின் தந்தையாக வடமொழித் தொன்மம் கூறும்.
பொதுவாய் பார்ப்பனர் தம் சரியான அடையாளம் சொல்லும் போது, ”இந்தக்
கோத்திரத்தைச் சேர்ந்த, இந்த சூத்திரத்தைப் பின்பற்றும், இந்த வேதத்தின்
இந்த சாகையைப் பாராயணம் செய்யும், இன்னின்ன முனிபுங்கவர்களைக் குலப்
பெரியவர்களாகக் கொண்ட இன்னான்” என்று சொல்ல வேண்டும் என்பார்கள். இதில்,
கோத்திரம் என்பது ஒரு முதல்முனிவரைப் பின்பற்றிய கூட்டம். கோத்திரங்களில்
இருந்து கணங்களும், அவற்றில் இருந்து துணைக் கணங்களும் பிரியும். இந்தக்
காலப் பார்ப்பனர் வழக்கில், கணம், துணைக்கணங்களையும் கூட கோத்திரங்கள்
என்றே சேர்த்துச் சொல்லுகிறார்கள். அதனாலேயே, முதலில் இருந்த எட்டு முதற்
கோத்திரங்கள் அல்லாமல், இந்தக் காலத்தில் மிகுதியான கோத்திரங்களை
அடையாளங் காட்டுகிறார்கள். [2500 ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வளவு
கோத்திரங்கள் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் எட்டு அல்லது அதற்குச்
சற்று மேற்பட்டே கோத்திரங்கள் இருந்திருக்க முடியும். ”அப்பொழுது எத்தனை
கோத்திரங்கள் இருந்தன?” என்றெல்லாம் ஆய்வுகளை யாருஞ் செய்ததாய்த்
தெரியவில்லை. [இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் பார்ப்பனரின் பங்களிப்பு
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இருந்தாலும், அவர் வரலாற்றை சீர்மை,
ஒத்திசைவோடு ஆய்வு செய்வது இந்நாள் வரை குறைவாகவே இருக்கிறது.
(’வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது’ என்று உரிமை பேசிக்கொண்டு
மெய்யியலில் மட்டுமே ஆழ்ந்திருக்காமல், வரலாற்று அடிப்படையான செய்திகளை
ஆய்ந்து, பதிவுசெய்வது பல புரிதல்களிற் தெளிவு ஏற்பட வகை செய்யும். ஆனால்
அவை எல்லாம் செய்யப் படாமலே, போய்க்கொண்டிருக்கின்றன. கோத்திரங்களின் கால
வளர்ச்சி, எந்தச் சூத்திரங்கள் எந்தெந்தக் காலங்களில் எங்கு பரவின,
பார்ப்பனரின் பரவலை அடையாளம் காணுதல், போன்ற புலனங்களில் அகண்ட ஆய்வுகள்
நடந்த மாதிரித் தெரியவில்லை.]
ஜமதக்னி என்னும் இயற்பெயர் கொண்டவர் முதல்முனிவர் இல்லை. அவர் ப்ரிகு
என்னும் முதல்முனிவர் வழி வந்தவர். ப்ரிகு முனிவரின் கோத்திரத்தைப்
பார்கவ கோத்திரம் என்று சொல்லுவார்கள். பரசுராமரோடு சேர்த்து 4 பேர்
ஜமதக்னிக்குப் புதல்வர் என்று அபிதான சிந்தாமணி கூறும். அதையே 7 பேர்
என்று விக்கிப்பீடியாவில் குறிக்கிறார்கள். எது உண்மையாக இருந்தாலும்,
அந்தப் பெயர்களில் ’திரணதூமாக்கினி’ என்ற பெயரைக் காண முடிவதில்லை.
இந்தப் பெயரும் கதையும் நச்சினார்க்கினியரில் மட்டுமே இருக்கிறது என்பது
குறிப்பிட வேண்டியது. பார்கவ கோத்திரத்தில் இருந்து எழுந்த கணங்கள், உப
கணங்களில் ’காவ்ய’ என்ற ஒன்று இருந்ததாயும் தெரியவில்லை. பார்கவ
கோத்திரத்தில் ஜமதக்னியும் ஒரு பெரிய முனிபுங்கவர் என்றே வடமொழி மரபுகள்
தெரிவிக்கின்றன.
ப்ரிகு என்னும் முனிவரின் மகனாக அசுரர்களின் குலகுருவான சுக்ரரைச்
(=சுக்ராச்சாரியார்) சொல்லுவார்கள். சுக்ரருக்குக் கவிஞன் என்னும்
பொருளில் ‘காவ்ய’ என்ற விளிப்பெயர் இருந்ததாம். [இதை வரலாற்று ஆசிரியர்
நா. சுப்பிரமணியனும் “The Brahmin in the Tamil Country" என்ற நூலில்
உறுதி செய்வார்.] ஆனால் அது இயற்பெயர் அல்ல. அவருடைய கவித் திறமைக்காக
ஏற்பட்ட பட்டப்பெயர். வேண்டுமானால், ‘சுக்ர பார்கவா’ என்ற பெயரை ’காவ்ய
பார்கவா’ என்று விழைவால் சொல்ல முடியும். ஆனால் காவ்ய என்னும்
குடிப்பெயர் சுக்ரருக்குப் பின்னால் ஏற்பட்டதாகச் சொல்வதற்குச் சான்றுகள்
ஏதும் இல்லை. ஜமதக்னி என்பவர் சுக்ரருக்கும் பின்னால் எழுந்தவர்
(எப்பொழுது என்று தெரியவில்லை.). இவரையும் ஜமதக்னி பார்கவா என்றே
குலப்பெயர் சேர்த்துக் கூறமுடியும். அதே போல திரணதூமாக்னி பார்கவா என்றே
இவர் மகனைச் சொல்ல முடியும். திரணதூமாக்னி காவ்யா என்ற பெயர் எங்கும்
பதிவு செய்யப் படவில்லை. நச்சினார்க்கினியரின் ஒரு கூற்றுப்படி
தொல்காப்பியர் என்பவர் இயற்பெயர் தெரியாத ஒரு ”காவ்யா”. இன்னொரு கதையின்
படி ”திரணதூமக்னி பார்கவா” இதில் எது உண்மை, எது முரண் என்று எப்படிச்
சொல்வது? பார்கவா கோத்திரம் தொன்மையுள்ள கோத்திரம் தான். அப்படியானால்
’தொல்பார்கவா’ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் ’தொல்காப்பியர்’
என்றே தமிழிலக்கியத்தில் அறியப்படுகிறாரே? அது எப்படி?
காப்பியனைக் காவ்யக்குடியிலும் தேடாமல், பார்கவக் குடியிலும் தேடாமல்,
இது போன்ற கதைகளை ஒருசேர ஒதுக்குவதே இப்போது எடுக்கக் கூடிய முடிவாகும்.
காப்பியனின் பெயர்க் காரணத்தை வடமொழியில் தேடிக் கொண்டிருப்பது பயனில்லாத
வேலையென்றே தோன்றுகிறது. தொலைத்தது வேறு எங்கோ இருட்டில் என்னும் போது,
ஒளிவெள்ளம் இருக்கும் இடத்தில் தேடுவது அறிவிற்கு உகந்ததாய்
இருக்கமுடியுமோ? [அதுவும் ”வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு
புணர்ந்த சொல்லாகும்மே” என்று எழுத்தைக் கூடப் புகவிடாது காத்தலைக் கூறிய
தொல்காப்பியனை வடநாட்டில் அடையாளங் காண முற்படுவது பலனில்லாத செயல். அதே
பொழுது தமிழ்க் குமுகாயத்தில் இருந்த சில வடபாற் கூறுகளையும் அவர் பதிவு
செய்திருக்கிறார் என்பதையும் நாம் நேர்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.]
இனி தொல் என்னும் அடைமொழிக்கு வருவோம். கபிலர் என்றும், தொல்கபிலர்
என்றும் இருவேறு புலவர்கள் சங்க இலக்கியத்தில் அறியப்படுவார்கள். [கபிலர்
என்பதும் ஒரு குலப் பெயரே]. ”தொல்கபிலர்” என்பவர் சாங்கியக் கொள்கையைச்
சொன்ன கபிலர் என்று கூடச் சில ஆய்வுகள் இப்பொழுது எழுகின்றன. ஆனாலும்
தொல் என்னும் முன்னொட்டு குலப்பெயருக்கு முன்னாலே தான் சொல்லப் படும்.
இயற்பெயருக்கு முன்னால் வராது. [ஏனென்றால் அது பொருத்தமில்லை.] காவ்ய
என்னும் பெயர் குலப்பெயராய் இருக்க வழியில்லை என்பதை மேலே பார்த்தோம்.
பார்கவ என்பதே குலப்பெயர். காவ்ய என்பது சுக்ரருக்கு இருந்த பட்டப்பெயர்.
(இயற்பெயர் அல்ல). பிறகு எப்படி ”வ்ருத்த காவ்ய” என்று வரும்?
இதே போல கோவலன் என்பது இயற்பெயர். அது குலப்பெயரல்ல. மாசாத்துவான்
என்பதும் பட்டப்பெயர். பின்னெப்படி “வ்ருத்த கோபால?” என்று ஆகும்?
[வ்ருத்த கோபாலனுக்கு வேறொரு விளக்கம் வேண்டுமானால் சொல்லலாம். விருத்த
என்னும் வடசொல்லுக்கு பெருத்த என்ற பொருள் உண்டு. (குண்டு மல்லிகை என்பது
வ்ருத்த மல்லிகை என்று சொல்லப் படும். இதே போன்ற பெயரடையை மற்ற மலர்களை
ஒட்டியும் பார்த்திருக்கிறேன்.) மாடலன் கோவலனுக்கு மிகத் தெரிந்த
பார்ப்பனனாய் இருந்தால் உரிமை எடுத்துக் கொண்டு ”பெருத்த கோவலனே” என்ற
பொருளில் பார்ப்பனர் வழக்கில் ‘வ்ருத்த கோபால’ என்றழைக்கலாம். அல்லது
’பெருத்த கோவல’ என்றே இருந்து ‘விருத்தகோ பால’ என்று ஏடெழுதியோர்
மாற்றியிருக்கலாம். கிடைத்ததைக் கொண்டு ’தொல்கோவலன்’ எனப் பொருள் கொள்வது
தவறென்று மட்டுமே உறுதியாய்ச் சொல்ல முடியும். மற்றபடி சொல்ல மேலும்
தரவுகள் வேண்டும்.
இனி அடுத்து அதே நச்சினார்க்கினியர் “நான்மறை” என்பதற்கு விளக்கம்
சொல்லுமுகமாக,
-----------------------------------
நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் ‘நான்மறை’ என்றார். அவை
தைத்திரியமும், பௌடிகமும், தலவகாரம், சாமவேதமுமாம். இனி இருக்கும்,
யசுவும், சாமமும், அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது. இவர்
இந்நூல் செய்த பின்னர், வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர்
உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின்
----------------------------------
என்று சொல்லியிருப்பார். அதாவது வேத வியாசர், இருக்கு, யசுர், சாமம்,
அதர்வணம் என்று பிரிப்பதற்கு முன்னால் தொல்காப்பியம் ஏற்பட்டுவிட்டது.
அவர் காலத்தில் தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமவேதம் என்பதே
நான்மறைகளாகும். இது உண்மையென்றால், தொல்காப்பியர் இருக்கிற்கும்
முந்தியவர் என்றாகிறது. இதை நண்பர் நா. கணேசன் ஏற்பாரா? [வையாபுரியார்
ஏற்கவில்லை. கி.பி.500 - க்கு அருகில் தொல்காப்பியரை வைப்பார்.
’முற்போக்கு’த் தமிழறிஞர் அந்தக் காலமே சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
ஒருபக்கம் காப்பியக்குடி என்றும் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கம் கி.பி.
500க்குத் தள்ளும் முரண்பட்ட போக்கே வடமரபு விழையோருக்கும்
’முற்பட்டோருக்கும்’ இருந்தது/இருக்கிறது.]
ஒரு உரையாசிரியர் 4 செய்திகளைக் கூறுகிறார். அதில் 3 பிழையானது என்று
தருக்கத்தின் மூலம் முடிவு கொள்கிறோம். அப்பொழுது 4 வது செய்தியைச்
சட்டென்று அணைத்துக் கொள்வோமோ? வேறு எங்காவது இதற்கு ஒத்திசைவாய்
செய்திகள் இருக்கின்றனவா என்று பார்ப்போம் இல்லையா? நாலில் மூன்றை
ஒதுக்குவேன். ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் அது எனக்குப்
பிடிக்கிறது என்றால் எப்படி? இத்தனை ஏன்? நச்சினார்க்கினியரின் முந்தைய
உரையாசிரியரான 13 ஆம் நூற்றாண்டுப் பேராசிரியரே தொல்காப்பியர்
அகத்தியரின் மாணவர் என்ற கதையை ஏற்றவரில்லை. ”அகத்தியர்க்கு மாணவர்
தொல்காப்பியர் என்று கொள்வார் ‘நான்கு வருணத்தொடு பட்ட சான்றார்’
என்றும், அவ்வாறு கொள்ளார் ‘வேத வழக்கொடு மாறு கொள்வார்’ ’’என்றும்
பேராசிரியர் சொல்வார். ஆக இந்தக் கேள்வி குறைந்தது 700 ஆண்டுகள்
இருந்திருக்கிறது. நா. கணேசனின் கூற்று இதில் ஒரு தொடர்ச்சி அவ்வளவு
தான்.
முடிவில் தொல்காப்பியனை தமிழோடு வைத்து இப்படித்தான் புரிந்து
கொள்கிறோம். அவன் தமிழின் தொல்காப்புகளை (old traditions) இயம்பியவன்.
அவன் நூல் தொல்காப்புக்களை இயம்பும் நூல். (தொல்காப்பியன் ஒரு
பட்டப்பெயர்.) இந்தப் பொருள் பாயிரத்தோடும் பொருந்துகிறது. அவனுக்குப்
பின்னால் ஏற்பட்ட புகழையும் பொருத்துகிறது. அவனுடைய இந்தப் பெயர்
பின்னால் “காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன்” என ஊரொடு
தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக்
காப்பியப்பெயருடன் இயற்பெயர் தொடர்ந்தும் பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இக்கட்டுரையில் புலவர் இரா. இளங்குமரனுக்கு நான் பெரிதும்
கடன்பட்டிருக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
On Mar 24, 5:44 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> இராமதாசன்:
>
>
> கண்ணகி (சிராவக (சமண) நோன்பினள்) - கோவலன்
> (விருத்த கோபாலன், தமிழில் தொல் கோவலன்.
> விருத்த - பழைய/தொன்மையான/புகழ்பெற்ற முன்னோன்.
> விருத்த-காத்யாயனர். காப்பியக் குடியில் புகழ்வாய்ந்தோன்
> விருத்த-காப்பியன் (தொல்காப்பியன்).
>
> நா. கணேசன்