அன்பின் தேமொழி,
இதுவரை நீங்களும், கண்மணியும் எழுதிய மடல்கள் முழுதும் படித்துப் பார்த்தேன்.
என்னால், அம் மடல்களில் இருந்து வஞ்சி மாநகரம் மேலைக்கடற்கரையில்
சூர்ணீ (சுருளி/சுள்ளி) பேரியாற்றின் கழிமுகத்தில் சங்க காலத்தில் இருந்ததாகத்
தெரியவில்லை.
புனல்வாயில் என்பதன் பொருளை பதிற்றுப்பத்தில் இருந்தும் பிற இடங்களில்
இருந்தும் காட்டியுள்ளேன். வைதேகி ஹெர்பர்ட் ஹார்வர்டு தமிழ்ப் பீடம் அமைய
உதவியவர். அவர் புனல் வாயில் வஞ்சி என்ற பத்துப்பாட்டு (சிறுபாண்) எவ்வாறு
மொழிபெயர்க்கிறார் என்று நோக்குக.
இராசசிம்மன் மழகொங்கம் அடிப்படுத்தினான். கங்கர்களை வென்றவன்.
அதியமான்கள், கங்கர்களை அடக்கியபின், வஞ்சி மாநகருக்கு
கங்க, அதியர் ராஜ்யத்தில் இருந்து போர்ப்படையோடு வடக்கே இருந்து
திரும்பி வஞ்சி மாநகருக்கு வந்திருக்கலாம். வஞ்சி மூதூரின் சேர மன்னன்
தன் படையை அனுப்பி அங்கே போர் நடந்திருக்கிறது. பார்க்க ஈழத்
தமிழறிஞர் தம்பிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தமிழகம் பற்றிய
பழைய சரித்திரம். BTW, அதில் ஒரு தமிழக வரைபடம் இருக்கிறது.
அதில் வஞ்சி மாநகரம் முசிறி அருகே காணோம். முசிறி தான் இருக்கிறது.
ராமன் நம்பூதிரி, சொர்ணா நளபாடு போன்ற கேரள தேசத்தார் எழுதும் குழப்பங்களால்
வஞ்சி சூர்ணீ நதிக்கரையில் என்று சிலர் வரைபடங்கள் போடுகின்றனர்.
அது சங்க இலக்கிய ஆய்வுகளின் முடிவுக்கும், தொல்லியல் சான்றுகளுக்கும்
எதிரானது. சுக சந்தேசத்தில் ராமன் நம்பூதிரி எழுதும் செய்திகள் இல்லை
என்பதும் கவனங் கொள்ளத் தக்கன. கோகில சந்தேசத்திலும் (உத்தண்ட சாஸ்திரிகள்
இயற்றினது.)
வஞ்சி மாநகரம் மேலைக் கடற்கரையில் அஞ்சைக்களம் என்றால்
15-20 பக்கக் கட்டுரையாக தந்தால் ஆராயலாம். எந்தக் குழுவிலும்.
உதாரணமாக, வல்லமை குழுமத்திலும் வஞ்சி மேலைக் கடற்கரையில்
இருந்தது சங்க காலத்தில் சேரர்கள் தலைநகராக என்று மின்தமிழ்,
வல்லமை போன்ற குழுமங்களில் பேசுவோம். இரு குழ்க்களில்
இருப்போரும் படித்தால் உண்மை என்ன என தெரிந்துகொள்வார்கள்.
மலையாளிகள் அஞ்ஞைக்களம், தமிழில் அஞ்சைக்களம் என்பர்.
இதன் பெயர்க்காரணம் ஆராய்ந்து கூறியுள்ளேன். இதற்கும்,
வஞ்சி மாநகரின் ஊர்ப்பெயருக்கும் ஒரு தொடர்பும் காணோம்.