இராசசிம்மன் சேரர் வஞ்சிப் போர் - சின்னமனூர்ச் செப்பேடு

113 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 27, 2018, 9:06:49 PM3/27/18
to மின்தமிழ், vallamai

>
> அதன் பெயர் என்ன?
>

NG >கரூரில் உள்ள குன்று பெருமாள் கோவில் கொண்டுள்ளது. அருகே தான்
சாரதா வித்தியாலயம் என்னும் பெண்கள் கல்லூரி உள்ளது.

சேரர்கள் கல்வெட்டுக் கொண்ட புகழூரில் ஆறுநாட்டார் மலை
கரூர் அருகே தான். கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு.

Themozhi wrote:
> இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.
>அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.

கரூர் வஞ்சி என்று ஒரு ஊர் தான் சங்க இலக்கியத்தில் உள்ளது.
அது சேரர் தலைநகர் என்கிறது சங்க இலக்கியம்.

இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்குப் புரியவில்லை.

> கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு என்று  காவிரிக்கு வடக்கே கொல்லிமலை அருகே கொண்டு சென்றீர்கள் என்றால் நான் மற்றொரு பாடலுக்கு கேட்ட விளக்கம் மீண்டும் வந்துவிடும்.

கரூருக்கு கொல்லிநகர் என்றால்  கரூர் காவேரிக்கு வடக்கே என்பது பொருள் அல்ல.

சேரருக்கு கொல்லி மலையின் முக்கியத்துவம் சொல்கிறது. பாண்டியர்க்குப் பொதியம், சோழர்க்கு நேரிமலை, சேரர்க்குக் கொல்லி.




>"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"
>என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

> அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


> "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
>(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

> காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
> இதனை  காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
>சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

> (இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
> அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


>பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 


இல்லை. வித்துவக்கோட்டு அக்கிரகாரம் போன்றவை, அபய பிரதான ரெங்கநாதர் கோவில்
சேரர் வஞ்சியின் முக்கிய இடங்கள். அன்யோந்யத்துடன் வித்துவக்கோட்டு அம்மானை
கொங்கர் கோன், கொல்லிநகர்க்கு இறை என்று தன்னைக் குறிப்பிடும் குலசேகர ஆழ்வார்
பாடியும் இருக்கிறார். அரண்மனை இருந்த இடங்கள் இவை. இவை கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இன்றும் உள்ள தலம்.

எனவே, வஞ்சி மூதூர் காவேரிக்கு வடகரையில் ராஜசிம்மன் காலத்தில் இருந்தது
என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை. 

பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன்
சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்:

கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் - பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்

காவிரிக்கு வடகரையில் நின்று சேரனது தலைநகரைப்
தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன். காவிரிக்கு
வடகரையில் போர் நடைபெற்றுள்ளது.

சேரர் வஞ்சியும் சிலாசாஸன வழக்கும்,
மு. இராகவையங்கார்.
இவற்றுள், கொடும்பையில் அடைந்த வெற்றிக்குப்பின் அப்பாண்டியன் ‘பொன்னி வடகரையில், வஞ்சி கனற்பட விழித்தான்’ என்று கூறியது, காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைத் தீப்பட நோக்கினன் என்றவாறாம்.” 

விரிவாக, இராஜசிம்மன் செப்பேட்டை ஆராய்ந்து எழுதியுள்ளார் பேராசிரியர் மு. ரா.

பாரதியார் மு.ரா. அவர்களுக்கு எழுதிய கடிதம்:

நா. கணேசன்



தேமொழி

unread,
Mar 27, 2018, 10:24:21 PM3/27/18
to மின்தமிழ்
On Friday, March 23, 2018 at 9:52:23 PM UTC-7, N. Ganesan wrote:


On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:

இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.

அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.


மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்
வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறு
எல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்
அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.


-----

மின்தமிழ் › இராசசிம்மன் சேரர் வஞ்சிப் போர் - சின்னமனூர்ச் செப்பேடு

(aka --- இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்குப் புரியவில்லை.)


-----

இதற்கு  எனது பதிலின் விளக்கம்:
வஞ்சி என ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் இருந்தன எனக் கூறுவோர் யாவரும் 
கொங்கு கரூர் என்பது வஞ்சிநகர்  என்ற கூற்றை மறுத்ததில்லை....

அவ்வாறு சொல்வோர் எவரும் முன்வைப்பது குடவஞ்சி என்ற மேற்குக்கரை வஞ்சிநகர்  ஒன்றுக்கு இலக்கியத்தில் பொருள் காட்ட இயலும் என்றுதான்  கூறுகிறார்கள் என்பது  பொருள்.

எனது பதிலை நான் கூறியது போல 
மற்றவர் கூறியதையும் இங்கு தொகுக்கிறேன்...உங்கள் புரிதலுக்காக ...

----


On Thursday, March 22, 2018 at 8:14:59 AM UTC-7, இராம.கி wrote:
இந்த மடலிலேயே உங்கள் திருகல் வேலையைக் காட்டுகிறீர்களே? நான் கொங்கு வஞ்சியை இல்லையென்றா சொன்னேன்? கொங்குவஞ்சி போகக் குடவஞ்சி என்று இன்னொன்று இருக்கிறதென்று சொன்னேன். அதைக் கூடக்குறைச்சல் இல்லாது சொல்ல உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள். உங்களோடு எப்படி உரையாடுவது? “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!” என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு இருக்கும் நேரம், காலம், பொறுமை எல்லாம் என்னிடம் கிடையாது. இதைப் பலமுறை பேசியாகிவிட்டது. சலித்துப் போய்விட்டது.
 
நானறிந்தவரை குறைந்தது இரண்டு வஞ்சிகள் ஒரேபொழுதில் உண்டு.  அவ்வளவு தான்.

-----


On Friday, March 23, 2018 at 6:50:40 AM UTC-7, kanmanitamilskc wrote:
இப்போது நம் முன்னே இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது.
ஆறு எது என்பதன்று .
கொங்கு வஞ்சியை பதிற்று .30 ம் பாடலோடு ஒப்பிட்டுக் காட்டச் சொன்னேன் .அதிலிருந்து நழுவ வேண்டாம். 

-----

 அதாவது வஞ்சி நகர் குறித்த உங்கள் கோணத்திற்கு மாற்றுக் கோணங்கள் கொண்ட மற்றவர் என்ன வலியுறுத்தினார்களோ  அதையே நானும் என் சொற்களில் கூறியுள்ளேன்.


இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை. அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.
என்ற என் சொல்லை நீங்கள் வேறுவிதத்தில் பொருள்  கொண்டதாகப் புரிந்ததால் விளக்கம் அளிப்பதற்கு கடமைப் பட்டுள்ளதாக எண்ணி இங்கு அளித்தேன்.

குறிப்பு:
இந்த விளக்கம் அடுத்த இழையிலும் பதியப்படும். 


..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 27, 2018, 10:59:16 PM3/27/18
to மின்தமிழ்
2018-03-27 19:24 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, March 23, 2018 at 9:52:23 PM UTC-7, N. Ganesan wrote:


On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:

இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.

அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.


மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்
வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறு
எல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்
அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.


-----

[...[
 
 அதாவது வஞ்சி நகர் குறித்த உங்கள் கோணத்திற்கு மாற்றுக் கோணங்கள் கொண்ட மற்றவர் என்ன வலியுறுத்தினார்களோ  அதையே நானும் என் சொற்களில் கூறியுள்ளேன்.


இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை. அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.
என்ற என் சொல்லை நீங்கள் வேறுவிதத்தில் பொருள்  கொண்டதாகப் புரிந்ததால் விளக்கம் அளிப்பதற்கு கடமைப் பட்டுள்ளதாக எண்ணி இங்கு அளித்தேன்.

சங்க காலத்தில்  பல வஞ்சி மாநகரங்கள் இருந்தன என்று மாற்றுக்கோணம் இருக்கலாம். சங்க இலக்கியத்தில் சான்றுகள் ஏதும் இல்லை.

ராசசிம்மன் காவேரிக்கு வடகரையில் சேரப் படையுடன் போரிட்டது சின்னமனூர்ச் சாசனத்தில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதைத் தான் மு. ராகவையங்கார் தெளிவுபடுத்தியுள்ளார்.

நா. கணேசன்
 

குறிப்பு:
இந்த விளக்கம் அடுத்த இழையிலும் பதியப்படும். 


..... தேமொழி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 28, 2018, 10:02:13 AM3/28/18
to மின்தமிழ், vallamai
அன்பின் தேமொழி,

இதுவரை நீங்களும், கண்மணியும் எழுதிய மடல்கள் முழுதும் படித்துப் பார்த்தேன்.
என்னால், அம் மடல்களில் இருந்து வஞ்சி மாநகரம் மேலைக்கடற்கரையில்
சூர்ணீ (சுருளி/சுள்ளி) பேரியாற்றின் கழிமுகத்தில் சங்க காலத்தில் இருந்ததாகத்
தெரியவில்லை.

புனல்வாயில் என்பதன் பொருளை பதிற்றுப்பத்தில் இருந்தும் பிற இடங்களில்
இருந்தும் காட்டியுள்ளேன். வைதேகி ஹெர்பர்ட் ஹார்வர்டு தமிழ்ப் பீடம் அமைய
உதவியவர். அவர் புனல் வாயில் வஞ்சி என்ற பத்துப்பாட்டு (சிறுபாண்) எவ்வாறு
மொழிபெயர்க்கிறார் என்று நோக்குக.

இராசசிம்மன் மழகொங்கம் அடிப்படுத்தினான். கங்கர்களை வென்றவன்.
அதியமான்கள், கங்கர்களை அடக்கியபின், வஞ்சி மாநகருக்கு
கங்க, அதியர் ராஜ்யத்தில் இருந்து போர்ப்படையோடு வடக்கே இருந்து
திரும்பி வஞ்சி மாநகருக்கு வந்திருக்கலாம். வஞ்சி மூதூரின் சேர மன்னன்
தன் படையை அனுப்பி அங்கே போர் நடந்திருக்கிறது. பார்க்க ஈழத்
தமிழறிஞர் தம்பிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தமிழகம் பற்றிய
பழைய சரித்திரம். BTW, அதில் ஒரு தமிழக வரைபடம் இருக்கிறது.
அதில் வஞ்சி மாநகரம் முசிறி அருகே காணோம். முசிறி தான் இருக்கிறது.

ராமன் நம்பூதிரி, சொர்ணா நளபாடு போன்ற கேரள தேசத்தார் எழுதும் குழப்பங்களால்
வஞ்சி சூர்ணீ நதிக்கரையில் என்று சிலர் வரைபடங்கள் போடுகின்றனர்.
அது சங்க இலக்கிய ஆய்வுகளின் முடிவுக்கும், தொல்லியல் சான்றுகளுக்கும்
எதிரானது. சுக சந்தேசத்தில் ராமன் நம்பூதிரி எழுதும் செய்திகள் இல்லை
என்பதும் கவனங் கொள்ளத் தக்கன. கோகில சந்தேசத்திலும் (உத்தண்ட சாஸ்திரிகள்
இயற்றினது.)

வஞ்சி மாநகரம் மேலைக் கடற்கரையில் அஞ்சைக்களம் என்றால்
15-20 பக்கக் கட்டுரையாக தந்தால் ஆராயலாம். எந்தக் குழுவிலும்.
உதாரணமாக, வல்லமை குழுமத்திலும் வஞ்சி மேலைக் கடற்கரையில்
இருந்தது சங்க காலத்தில் சேரர்கள் தலைநகராக என்று மின்தமிழ்,
வல்லமை போன்ற குழுமங்களில் பேசுவோம். இரு குழ்க்களில்
இருப்போரும் படித்தால் உண்மை என்ன என தெரிந்துகொள்வார்கள்.

மலையாளிகள் அஞ்ஞைக்களம், தமிழில் அஞ்சைக்களம் என்பர்.
இதன் பெயர்க்காரணம் ஆராய்ந்து கூறியுள்ளேன். இதற்கும்,
வஞ்சி மாநகரின் ஊர்ப்பெயருக்கும் ஒரு தொடர்பும் காணோம்.

kanmani tamil

unread,
Mar 29, 2018, 2:03:44 AM3/29/18
to mintamil
மேற்கரை வஞ்சி அஞ்சைக்களம் அன்று என பலமுறை கூறியாயிற்று. அது 8கி.மீ.அளவுக்கு அகன்று விட்ட கழியால் இன்று காணக் கிடைக்கவில்லை.
கண்மணி  
Reply all
Reply to author
Forward
0 new messages