மூதுரை காட்டும் நெறி - ஆசீவிகம்

907 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
May 16, 2018, 10:23:01 PM5/16/18
to mintamil, N D Logasundaram, தேமொழி

மின் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம்  .

என் முதல் முயற்சியாய் ஒரு கட்டுரை .
உங்களின் பிழை திருத்தத்திற்காக 

மூதுரை காட்டும் நெறி - ஆசீவிகம் 

                  -நரசிங்கபுரத்தான் ஜெய். சுரேஷ்குமார் 

முன்னுரை :
  
           அருந்தமிழ் பெண்பாற் புலவர் ஒளவையார் நீதி நெறி நூல்களுள் ஒன்று மூதுரை. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறியப்படும் இந்நூல் 1906 ஆம் ஆண்டு  பண்டிதமித்திர யந்திரசாலையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.ந .மு .வேங்கடசாமி 1927 உரை எழுதியுள்ளார். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 வெண்பாப்பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.  தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான  நச்சினார்க்கினியரால் மூதுரை எடுத்துக்காட்டியிருப்பது இந்நூலின் பெருமைக்கு சான்றாகும்.  

பாடல்களின் சுருக்க உரை :

கடவுள் வாழ்த்து  : 

                     தும்பிக்கையான் பாதம் பணித்தவருக்கு நல்ல சொல்வன்மையும் ,நல்ல சிந்தனையும் உண்டாகும் .  பெருமை பொருத்திய மலரில் அமர்ந்தவள் அருள் பார்வை கிடைக்கும் .உடம்பு பிணிகளால் வாட்டமுறாது 

பாடல் 1:
ஒருவனுக்கு உதவி செய்தால் அவ்வுதவியை அவன் என்று செய்வான் என ஐயுற வேண்டியதில்லை .
பாடல் 2:
நல்லவருக்குச்  செய்த உபகாரம் என்றும் நிலை பெற்று விளங்கும் . தீயவருக்குச்செய்த உபகாரம் நீர் மேல் எழுத்து போன்றது 
பாடல் 3:
வறுமைக் காலத்து இளமையும் ,முதுமைக்காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன .
பாடல் 4:
மேலோர் வறுமையுற்றாலும் மேலோர்:கீழோர் கலந்து பழகினும் நண்பராகார்
பாடல் 5:
அடுத்ததடுத்து முயற்சி செய்தாலும் முடியும் காலம் வராமல் மேற்கொண்ட காரியங்கள் முடியாது .
பாடல் 6:
மானமுடையவர் ஆபத்து வந்த போது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தைவிடார் 
பாடல் 7: 
ஒருவருக்கு நுண்ணறிவு  ,கற்ற நூலின் அளவாகவும் , செல்வம்  தவத்தின் அளவாகவும் ,குணம் குலத்தின் அளவாகவும் இருக்கும் .
பாடல் 8: 
 நல்லவரைப் பார்ப்பதும் ,அவர் சொல்லக் கேட்டலும் ,அவர் குணங்களைப் பேசுதலும் ,அவரோடு கூடி இருத்தலும்  நன்று .
பாடல் 9:
தீயவரைப் பார்ப்பதும் ,அவர் சொல்லக் கேட்டலும் ,அவர் குணங்களைப் பேசுதலும் ,அவரோடு கூடி இருத்தலும்  தீது .
பாடல் 10:
நல்லார் ஒருவர் இருப்பாயின் அவர் பொருட்டு எல்லோருக்கும் பயன் உண்டாகும் 
பாடல் 11:
மிக்க வல்லமை உடையவருக்கும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்கத் துணை வேண்டும்.
பாடல் 12:
உருவத்தின் பெரியவர் குணத்தில் சிறியவராதலும் ,உருவத்தில் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு 
பாடல் 13:
கல்விஇல்லாதவனும் ,ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் 
காட்டிலுள்ள  மரத்தினும் கடையாவர் .
பாடல் 14:
கல்லாதவன் கற்றவனைப் போல நடித்தாலும் கற்றவன் ஆகான் .
பாடல் 15:
தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும் 
பாடல் 16:
அடக்கமுடையவரது வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்கு தப்பாது கேடுவரும் .
பாடல் 17:
வறுமை வந்த பொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உண்மையான உறவினராவர் 
பாடல் 18:
மேலோர் வறுமையிற்றாலும் மேன்மை குன்றா ,கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலராவார் 
பாடல் 19:
வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும் விதிப்பயன் இன்றி அனுபவிக்க இயலாது 
பாடல் 20:
உடன் பிறந்ருதாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு 
பாடல் 21:
நற்குண நற் செய்கைகளையுடைய மனைவி இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு: இல்லையேல் காடாகும் 
பாடல் 22:
செய்தொழில்கள் ஊழின்படியின்றி அவரவர் நினைத்தபடி முடியா 
பாடல் 23
கோபத்தினால் பிரிந்த கீழோர் எக்காலத்தும் கூடார் .சான்றோர் அப்பொழுதே கூடுவர் .
பாடல் 24
கற்றவரோடு கற்றவரும் ,மூடரோடு மூடரும் நட்பு செய்வர் .
பாடல் 25
வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர் ;வஞ்சனையில்லாதவர் வெளிப்பாடொழுகுவர் .
பாடல் 26
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு , மன்னனைவிட கசடறக் கற்றவன் சிறப்புடையவன் 
பாடல் 27
கல்லாதவர்க்கு கற்றவர் சொல்லும், பாவிகளுக்கு அறத்தினாலும் ,கணவனுக்குப் பொருத்தமிலா மனைவியாலும் துன்பம் உண்டாகும் 
பாடல் 28
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மனவலிமை குன்றார் 
பாடல் 29
சுற்றமும் ,பொருளும் ,அழகும் ,உயர்குலமும் நிலையானவையல்ல 
பாடல் 30
அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வர் .

ஒப்புமைப்பாடல்கள் 

நான்மணிக்கடிகை 

பதினென்கீழ்கணக்கு நூலகளில் ஒன்றான  நான்மணிக்கடிகையின் ஒருபாடல் மூதுரை பாடலுடன் முழுவதும்  ஒன்று படுகின்றது 

              மூதுரையின்  பாடல் 27
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்
           நான்மணிக்கடிகை   பாடல் 85
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள் 

புறநானூறு 
  
 சங்ககால  ஒளவையார்  அதியமான் மீது கோபம் கொண்டு எழுதிய பாடல் மூதுரையின் 26 ம் பாடலுடன் ஒப்புமை பொருளாக அமைந்துள்ளது  
       
 புறநானூறு - பாடல் 206

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே. 

மூதுரையின்  பாடல் 26
மன்னனு  மாசறக்  கற்றோனுஞ்  சீர்தூக்கின்
மன்னனிற்  கற்றோன்  சிறப்புடையன்  -  மன்னற்குத்
தன்தேச  மல்லாற்  சிறப்பில்லை  கற்றோற்குச்
சென்றஇட  மெல்லாம்  சிறப்பு.

திருக்குறள் 

குறள் 151: 
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

மூதுரையின்  பாடல் 30

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

வெற்றிவேற்கை (நறுந்தொகை) 

மூதுரையின்  பாடல் 04
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

வெற்றிவேற்கை  பாடல் (23-27)
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது 
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது 
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது 
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது 
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது

மூதுரை காட்டும் நெறி  
               பொதுவாக கடவுள் வாழ்த்துப் பாடலில் நூலின் ஆசிரியரின் சமயம் அறியப்படும் . ஆனால் சில நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடைச்செருகல் என்பவரும் உண்டு. மூதுரையின் கடவுள் வாழ்த்துப் பாடல் விநாயகக் கடவுளை வணங்குவதாக இது காரும் அறியப்பட்டு வந்துள்ளது.   ஆனால் தும்பிக்கையான் என்ற ஒரு சொல்லைக் கொண்டு இந்நூல் சமயத்தைக் காண இயலாது . ஒளவையார் எழுதியதாக அமைந்துள்ள விநாயகர் அகவல் அத்தகைய எண்ணத்தை விதைக்கின்றது
பிற பாடல்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியரின் உண்மை நெறி அறியப்பட வேண்டும்.மூதுரையின் பாடல்கள் உலகப்பொதுமறை போல் அனைவருக்கும் பொதுவான அறநெறிகளை போதிக்கின்றது .
ஆயினும் .

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்

மேற்காட்டிய 4 பாடல்கள் ஆசீவகர்களின் வினை விதிக்கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது .
வாழ்வில் ஒருவன் ஒரு பொருளைப் பெறுவதோ, ஒரு பொருளை இழப்பதோ, வாழ்வில் எதிர் கொள்ளப்படும் இடையூறுகளோ, சேர வேண்டிய இடத்தைச் சேருவதோ, வாழ்வில் வரும் துக்கங்களோ, சுகங்களோ, இவை மனிதனை விட்டு நீங்குவதோ, பிறப்பதோ, சாவதோ எல்லாம் முன்னரே நியமிக்கப்பட்டப்படி தான் நடக்கும். அதை வேறெந்த வழியிலும் மாற்ற முடியாது.விதியின் வலுவான தாக்கம் மனித வாழ்வில் இருப்பதால், எந்த நிகழ்வுமே மனிதனைப் பாதிக்கக் கூடாது என்பது ஆசீவிகர் கொள்கையாகும் எனும்  முனைவர்  ர. விஜயலக்ஷ்மி அவர்களின் விளக்கம் மூதுரையின் பாடல்களோடு பொருந்தி வருகின்றது. 

ஆசீவிகம் குறித்து ஆய்வு செய்த முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் ஆதிசங்கரன் திருநிலை மற்றும் அறப்பெயர் சாத்தான் குறித்த விளக்கங்கள் மூதுரையின் கடவுள் வாழ்த்து பாடலுடன் பொருந்திப் பார்க்க வேண்டியதாகும் 

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

மாமலராள் - திருநிலை 
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்  எனும் நூலில் ஆதி. சங்கரன்  பின்வரும் விளக்கம் அளிக்கின்றார் 
ஆசீவகச் சின்னங்களுள் மிகப் பரவலாக அறியப்படும் சின்னம் திருநிலை. இருபுறமும் நீரூற்றும் யானைகளுக்கிடையில் மலர் மீதமர்ந்திருக்கும் பெண் ணுருவமே திருநிலையின் பொது வடிவமாகக் கருதப் படுகிறது.ஆசீவக இல்லத்தின் வாயில் திருநிலை என்றும், (நிலை என்ற சொல்லால் வாயிலைக் குறிப்பது இன்னும் வழக்கில் உள்ளது. சிறப்புக்குரிய வாயில் என்ற பொருள் தருவது திருநிலை என்ற சொல்.) இத்திருநிலையில் அமைக்கப்பட்ட இப்பெண்ணுருவம் மாதங்கி என்றும் வழங்கப் படும். மாதங்கி எனும் பெயர் செல்வத்திற்குரியவள் என்றும், செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவள் என்றும் பொருள் படும் . மூதுரையில் வழங்கப்பெறும்  மாமலராள் ,திருவிடந்தை எனும் சொற்கள் மாதங்கியை குறிக்க வாய்ப்பு உண்டு 

தும்பிக்கையான் :
அறப்பெயர் சாத்தான் எனும் அய்யனார் தான் மற்கலி கோசளர் என்பது  முனைவர் க. நெடுஞ்செழியன் "  ஆசீவகமும் ஐயனார் வரலாறும் "எனும் நூலின் முடிவாகும் . இந்தக் கருத்தின் அடிப்படையில் தும்பிக்கையான் என்பது யானையை வாகனமாய் கொண்ட சாத்தனை குறிக்க வாய்ப்பு உண்டு 

முடிவுரை :
 
ஆசீவிகரின் வினைவிதிக்கொள்கையை பின்பற்றி வரும் பாடல்கள் இடம்பெற்று இருந்தாலும் மூதுரை திருக்குறள் போன்று  பொதுவான அறநெறி நூலாகும் .

சான்றாதாரங்கள்: 
1)ஒளவையார் அருளிய மூதுரை ந.மு .வேங்கடசாமி நாட்டார் 
4) ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்  ஆதி. சங்கரன்  
5)  ஆசீவகமும் ஐயனார் வரலாறும்  முனைவர் க. நெடுஞ்செழியன்

தேமொழி

unread,
May 17, 2018, 4:02:35 AM5/17/18
to மின்தமிழ்
மிக நன்று, புதிய கோணங்கள் சிந்திக்க வைக்கின்றன. பாராட்டுகள் 

வினை விதிக் கொள்கைகளும் ஆசீவகர்களும், முனைவர் ர. விஜயலக்ஷ்மி
என்று கட்டுரையின் தலைப்பையும், கட்டுரையாளர் பெயரையும் இணைக்கவும் சுரேஷ். (ஆச்சாரி  என்பது பிழையான குறிப்பு)

ஹார்வர்ட் இருக்கைக்குத் தேர்வு என்ற செய்திகள் வந்தபொழுது நான் அப்பதவிக்குச் சிறப்பு சேர்க்கக் கூடியவர்கள் என்று கருதியவர்களில் இவரும் ஒருவர். 

இவர் குறித்து குழும விவாதம் ஒன்றில் குறிப்பிட நேர்ந்தது

இங்கும் காணலாம் http://siragu.com/?p=4563

..... தேமொழி

நரசிங்கபுரத்தான்

unread,
May 22, 2018, 9:07:03 PM5/22/18
to mintamil

மிக்க நன்றி தேமொழி 
    தங்களின் பாராட்டுக்கள் மற்றுமொரு கட்டுரை எழுத வைத்துள்ளது .
    விரைவில் "ஒளவையார் பாடல்களில் ஊழியல் " 

சான்றாதாரங்கள்:  மாற்றப்பட்டது 
 
3)  வினை விதிக் கொள்கைகளும் ஆசீவகர்களும், முனைவர் ர. விஜயலக்ஷ்மி

Sathivel Kandhan Samy

unread,
May 26, 2018, 11:02:17 PM5/26/18
to மின்தமிழ்
ஆசீவகம் - பொருள் விளங்கவில்லையே!   

kanmani tamil

unread,
May 28, 2018, 7:19:34 AM5/28/18
to mintamil
சமணத்தின் மூன்று வகைகள் :ஜைனம் 
                                                          பௌத்தம் 
                                                          ஆசீவிகம்
இப்படித்தான் நான் புரிந்து வைத்துள்ளேன்.
கண்மணி  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Sathivel Kandhan Samy

unread,
May 28, 2018, 10:33:22 PM5/28/18
to mint...@googlegroups.com
Thanks

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/bxOvpqbLykA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Aranga Mallika

unread,
May 29, 2018, 1:19:58 AM5/29/18
to mint...@googlegroups.com
ஆசீவகம் குறித்து மணிமேகலை நூல் பொருள் ஐந்து அதாவது அறிவைத் தருகிற உயிர் அணுவோடு நான்கு வகை அணுக்களும் அது தீண்டியும் பார்த்தும் உணர்த்திடும்படி ஊழ் கூட்டியவாறு தம்முள் கூடி பின் பிரிந்து நில, நீர், காற்று, தீ அணுவும் என்று கூறப்படும் நால்வகை அணுக்களும் மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் பிரிவதும் கண்டு கொள்வதும் அறிந்து கொள்வது உயிர் என்று ஆசீவகம் கூறுகிறது.
அறிவது உயிர் என அறிக.

Aranga Mallika

unread,
May 29, 2018, 1:19:58 AM5/29/18
to mint...@googlegroups.com
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்ற அவ்வையார் மூதுரை க்கு தாமரை மலர் பொடியொடு தேன் 
கலந்து கொடுத்தால் பேசாத ஊமைப்பிள்ளையும் பேசும் என்ற பொருளும் உண்டு

kanmani tamil

unread,
May 29, 2018, 1:29:01 AM5/29/18
to mintamil

Aranga Mallika <aranga...@gmail.com>

10:49 (4 minutes ago)
to mintamil
///வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்ற அவ்வையார் மூதுரை க்கு தாமரை மலர் பொடியொடு தேன் 
கலந்து கொடுத்தால் பேசாத ஊமைப்பிள்ளையும் பேசும் என்ற பொருளும் உண்டு
On 28-May-2018 5:40 PM, wrote:
ஆசீவகம் குறித்து மணிமேகலை நூல் பொருள் ஐந்து அதாவது அறிவைத் தருகிற உயிர் அணுவோடு நான்கு வகை அணுக்களும் அது தீண்டியும் பார்த்தும் உணர்த்திடும்படி ஊழ் கூட்டியவாறு தம்முள் கூடி பின் பிரிந்து நில, நீர், காற்று, தீ அணுவும் என்று கூறப்படும் நால்வகை அணுக்களும் மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் பிரிவதும் கண்டு கொள்வதும் அறிந்து கொள்வது உயிர் என்று ஆசீவகம் கூறுகிறது.
அறிவது உயிர் என அறிக///

புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது .(ஒரே தொடராக அந்தக் கால உரை.....என்னைப்போல் பிறரும்------ )
கொஞ்சம் சிறிய தொடர்களாக எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் விளக்குங்கள் அரங்க மல்லிகா .
நன்றி ;கண்மணி 

Aranga Mallika

unread,
May 29, 2018, 3:07:09 AM5/29/18
to mint...@googlegroups.com
நிச்சயமாக எளிமைப்படுத்தி எழுதுகிறேன்.
நன்றி

On 29-May-2018 10:59 AM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:

Aranga Mallika <arangamallika@gmail.com>

to mintamil

தேனீ

unread,
May 29, 2018, 10:04:15 PM5/29/18
to மின்தமிழ்
என்னாம்மா சிந்திக்கின்றார்?

இனி ஊமைப் பிள்ளைகளுக்கு இத்தகைய மருத்துவம் செய்து பேச வைத்திடலாமே!

Sathivel Kandhan Samy

unread,
May 31, 2018, 3:17:06 PM5/31/18
to mint...@googlegroups.com
நன்றி.  நூல் பொருள் நுவலியமைக்கு நன்றி. மணிமேகலை மனக்கோணல் தீர்க்கும் நல் மருந்து.  மீண்டும் வாசிக்க ஆர்வமூட்டுகிறது தங்கள் பதிவு.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/bxOvpqbLykA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

இசையினியன்

unread,
May 31, 2018, 10:19:51 PM5/31/18
to மின்தமிழ்
கடவுளே! எனக்கு, ஒன்னுமே புரியமாட்டேங்குது. எல்லாருக்கும் கற்பூரமாய் அவர்களுக்கு விளங்குது. ஆனா எனக்கு மட்டும் வாழைமட்டை மதியாே! கடவுளே...

இசையினியன்

unread,
May 31, 2018, 10:26:32 PM5/31/18
to மின்தமிழ்
விதிவழி என்றால் மூதுரையின் பாடல்கள் பாெருந்துகின்றன. ஆனால் கடவுள் வாழ்த்துப்பாடல் பாெருந்தவே இல்லையே! கடவுள் வாழ்த்து சேர்க்யைாே!

pitchaimuthu2050

unread,
May 31, 2018, 11:18:14 PM5/31/18
to mintamil
விதிவழி என்றால் மூதுரையின் பாடல்கள் பாெருந்துகின்றன. ஆனால் கடவுள் வாழ்த்துப்பாடல் பாெருந்தவே இல்லையே! கடவுள் வாழ்த்து சேர்க்யைாே! 

Tamilvu.org இவ்வாறு பாெருள் தருகின்றனர். இது சமயக்கருத்து திணிப்பாே என்பதுதான் என் கேள்வி!

(பதவுரை) துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி - திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை,பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர் எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு, நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.

விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.

pitchaimuthu2050

unread,
May 31, 2018, 11:23:27 PM5/31/18
to mintamil
திரு தேனீ அவர்களே,

நீண்டநாள் பேசாத குழந்தைகளுக்கு, திக்குவாய்க் குழந்தைகளுக்கு பேச்சு, வார்த்தை நலம் பெற தேனை நுனிநாக்கில் இரண்டு சாெட்டுகள் பேச்சு தெளிவு பெறும் வரை வைக்கும் நடைமுறை வழக்கில் உள்ளது, என்பதையும் தங்களுக்கு அறியத்தருகிறேன்.

ஒரு வேளை தேனை சுவைக்கும் பாேது குழந்தையின் நாக்கு சுழலும், வளையும் இது பேச்சு தெளிவு பெற உதவுகிறது என்பது எனது கணிப்பு.

தாமரை பற்றி அறியேன்.

---

என்னாம்மா சிந்திக்கின்றார்?

இனி ஊமைப் பிள்ளைகளுக்கு இத்தகைய மருத்துவம் செய்து பேச வைத்திடலாமே!

N. Ganesan

unread,
May 31, 2018, 11:57:35 PM5/31/18
to மின்தமிழ்

On Monday, May 28, 2018 at 10:19:58 PM UTC-7, arangamallika wrote:
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்ற அவ்வையார் மூதுரை க்கு தாமரை மலர் பொடியொடு தேன் 
கலந்து கொடுத்தால் பேசாத ஊமைப்பிள்ளையும் பேசும் என்ற பொருளும் உண்டு

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் - மூதுரை.

நா. கணேசன்
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Jun 1, 2018, 8:33:15 AM6/1/18
to mintamil
வணக்கம் ஐயா.

தேன் மருத்துவ குணமுடையது என்பதை அனைவரும் அறிவார்.

நா, சுவை என்னும் ஒரு புலனை மனதிற்குச் சேர்க்கும் கருவி மட்டுமே. சுவைகளை அறிவது நாக்கு அல்ல. அவ்வாறு அறிவது நமது உயிர்.  

பேச்சு என்பது நாவின் தனித்த  செயலல்ல. அதனோடு இதர கருவிகளும் சேர்ந்தே செயல்பட, நுண்ணிய ஒலியை தூல வடிவில் நாம் உணர வழிவகுப்பது மட்டுமே நாவின் செயலாகும்.

ஆகையால் ஒருவனுக்கு நாவின் குறை மட்டுமே ஊமைத்தன்மையை ஏற்படுத்தாது. அகார ஓசை உந்தியிலிருந்து எழும் இடம் முதல் நா வழி வெளியேரும் வரை அனைத்துக் கருவிகளும் ஒன்றுபட செயல்பட வேண்டும். 

இந்த உண்மையறிந்துதான், "தாமரை மலர் பொடியொடு தேன் கலந்து கொடுத்தால் பேசாத ஊமைப்பிள்ளையும் பேசும்" என்னும் பொருள் விளக்கம் 'வாக்குண்டாம்'-இன் கடவுள் வாழ்த்து பாடலுக்குப் பொருந்தாது என்று கூற வந்தேன்.  

திக்குவாய் என்பது ஊமையல்லவே. 

மு. கமலநாதன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/bxOvpqbLykA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

pitchaimuthu2050

unread,
Jun 2, 2018, 12:43:02 AM6/2/18
to mintamil

மூடநம்பிக்கை அறிவியலான கதையை அப்படியே படித்துவிடுங்கள் ஐயா. https://groups.google.com/forum/m/#!topic/mintamil/mq79KVqidp0

---
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/bxOvpqbLykA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages