நீலம் - கவிதை

99 views
Skip to first unread message

thaayumaanavan venkat

unread,
Apr 13, 2009, 11:24:04 PM4/13/09
to palsuvai, minTamil, piravakam, therakathal, mallai.thamizhachi, youthful
ஏ..வாசுகி..
கெட்டித்த மேலோட்டை
மென்மையாக்கி
மனதிடை புகுந்த
பார்வை மத்தால்
கனவொரு பக்கமும்
நினைவொரு பக்கமும்
நீயே நின்று
காதலை கடைந்ததன்
முடிவில் திரண்ட
அமிழ்தத்தை
அள்ளி அள்ளி பருகிவிட்டு
ஆலகாலத்தை
எனக்கு தந்துவிட்டுப்போகிறாய்..

ஒற்றை கையால்
கண்டத்தை இறுக்கி
மறுகையால்
நானெழுதிய
கவிதையெங்கும்
பாரித்திருக்கிறது நீலம்.
நுரைத்து வழிகிறது
உனக்கான
காதல் சொட்டும்
வாசகங்கள்.


--
என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்

செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamil
transliterator.(அழகிய தமிழ்மகள்)

என் தமிழோடு கைகுலுக்க
(www.kvthaayumaanavan.blogspot.com)
என் கவிதைகள்
www.kvthaayu.blogspot.com
பல்சுவை குழுமத்தில் உறுப்பினராக
http://groups.google.com/group/palsuvai
படைப்புகள் அனுப்ப
pals...@googlegroups.com

நா.கண்ணன்

unread,
Apr 13, 2009, 11:57:50 PM4/13/09
to மின்தமிழ்
அப்ப்ப்ப்ப்பா!
மூச்சுத்திணற வைக்கும் காதல்!
எப்படி இதையெல்லாம் வார்த்தைப் படுத்தமுடிகிறது?
க.>

On Apr 14, 12:24 pm, thaayumaanavan venkat <thaayumaana...@gmail.com>
wrote:

thaayumaanavan venkat

unread,
Apr 14, 2009, 12:28:12 AM4/14/09
to மின்தமிழ்
மின்தமிழ் வழியாக வியப்படையும் வாழ்த்துக்களால் நீங்களிடும் இடுகைகள்தான்
புதிய புதிய வார்த்தைகளை பதியினிட வைக்கிறது.
மின்தமிழும் கண்ணனின் வாழ்த்துகளும் என் எழுதுகோலின் சிற்குககளை சிலுப்ப
வைக்கிறது என்பதே உண்மை.
Reply all
Reply to author
Forward
0 new messages