Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Members: 53
Language: English
Group categories:
Other
More group info »
பல்சுவையகம்
New since last time: 144 messages


பல்சுவை


பயனை நோக்கி பயணப்படும் மடலாடற்குழுமம்




குழுமத்தினர் அனைவருக்கும் வெங்கட்.தாயுமானவனின் பணிவான வணக்கங்கள்..,

இதுநாள்வரை(பிப்ரவரி-2009) தனிக்குழுமமாக செயல்பட்டுவந்த "பல்சுவை குழுமம்"- தமிழ் இணைய உலகிற்கு அழகி எனும் தமிழ் மென்பொருளை தந்து கோடானுகோடி தமிழ் உள்ளங்களில் நீங்கா இடம்கொண்ட திரு.விஷி அவர்கள், எனக்கு விருப்பம் இருப்பின், பல்சுவையை பொதுக் குழுமமாக்கி மேற்கொண்டு அதன் பணியை தொடரும் அரும்பொறுப்பை ஏற்கலாம் என்று பரிந்துரைத்தார்.
இது என் தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்த வாய்ப்பாக கருதாமல் - தமிழ் இணைய ஆர்வலர்கள் அனைவருக்கும் கிடைத்த வாய்ப்பாக கருதி ஏற்றுக்கொண்டேன்.

இனி பல்சுவை நம்முடையது- பல்வேறுபட்ட சுவையினால் இதை அழகு செய்யும் பொறுப்பு நம்முடையது.பயனும்,பலனும் உள்ளதான படைப்புகளால் பல்சுவையை அழகுசெய்வோம்.

ஊறுபடுத்தாத தமிழில் - நல்விளைவுகளை நோக்கி நம் எழுதுகோல்கள் சிந்திக்கட்டும்.செயல்படட்டும்.

ஒரு தாய் தன் சேய்க்கு தரும் பாலானது எப்படி பல்சுவையையும் தன்னுள்கொண்டு - உடலையும்,உள்ளத்தையும்,உயிரையும் வளர்க்குமோ, அம்மாதிரியான படைப்புகள் நம்மிடமிருந்து சுரக்கட்டும்.

கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்,படித்தவை,கேட்டவை.பார்த்தவை,வாழ்வில் நேரடியாக அனுபவித்தவை இவற்றிலெல்லாம் எதை இந்த சமூகத்திற்கு பயனுள்ளது என கருதுவீர்களோ அதையெல்லாம்..படையிலிட்டு, பகிர்ந்து. இன்விளைவை சுவைப்போம்.







நன்றி..! வணக்கம்..!

தமிழ் 'அழகி'யோடு

செந்தமிழை செழுந்தமிழாக்க(www.free.azhagi.com ) 



 

  






 





Report this group   XML       Send email to this group: palsuvai@googlegroups.com
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google