பொங்கல் அன்று வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவதுடன் கூட,
தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று சென்ற வருடம் அறிவித்து திமுக
அரசு நிகழ்த்திய கேடுகெட்ட கலாசாரக் கொலையைக் ஒவ்வொரு வருடமும்
கண்டித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு நம்மை திராவிட அரசியல்
கொண்டு வந்திருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
எலலாக் கோவில்களிலும் (அரசு ஆளுகைக்கு உட்பட்டவை) தமிழ்ப் புத்தாண்டு
சிறப்பு பூஜை என்றெல்லாம் அறிவிப்புகள் இருக்கிறதாமே, உண்மையா?
டிவிகள், பத்திரிகையில் மட்டும் தான் இந்தக் கண்றாவி என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.. கோவிலில் கூடவா? என்ன கொடுமை இது!
தமிழ்மரபு பற்றி மிகுந்த ஈடுபாடு கொண்ட இந்தக் குழுதத்தில் யாருமே இது
பற்றி பெரிதாகப் பேசாதது வியப்பும், வருத்தமும் அளிக்கிறது.
திரிபுகளை ஏற்றுக் கொள்ளும், ஜீரணிக்கும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டு
விட்டோமோ?
தமிழ்ஹிந்துவில் இது பற்றி இன்று வந்திருக்கும் இரு கட்டுரைகளைப்
பார்க்க வேண்டுகிறேன்.
தையில் புத்தாண்டு - தமிழ் மரபன்று! - ஓகை நடராஜன்
http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/
பல அரிய இலக்கியத் தரவுகளுடன் ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதியிருக்கும் ஆய்வுக்
கட்டுரை:
சித்திரையில் தொடங்கும் புது வருடம் - 1 :
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/
சித்திரையில் தொடங்கும் புது வருடம் - 2 :
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
ஜடாயு
இங்கு யாராவது தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி இழை ஆரம்பித்ததை
கண்டீர்களா :-)) ?
V
On Jan 14, 8:30 pm, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
>
> பொங்கல் அன்று வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவதுடன் கூட,
> தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று சென்ற வருடம் அறிவித்து திமுக
> அரசு நிகழ்த்திய கேடுகெட்ட கலாசாரக் கொலையைக் ஒவ்வொரு வருடமும்
> கண்டித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு நம்மை திராவிட அரசியல்
> கொண்டு வந்திருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
>
> எலலாக் கோவில்களிலும் (அரசு ஆளுகைக்கு உட்பட்டவை) தமிழ்ப் புத்தாண்டு
> சிறப்பு பூஜை என்றெல்லாம் அறிவிப்புகள் இருக்கிறதாமே, உண்மையா?
> டிவிகள், பத்திரிகையில் மட்டும் தான் இந்தக் கண்றாவி என்று நினைத்துக்
> கொண்டிருந்தேன்.. கோவிலில் கூடவா? என்ன கொடுமை இது!
>
>
அப்படிக் காணவில்லை - அது உண்மையில் சந்தோஷம் அளித்தது. உறுப்பினர்கள்
தமிழ்மரபு பற்றி அறிந்தவர்கள், அதனை மதிப்பவர்கள் என்பதில் எனக்கு எந்த
சந்தேகமும் இல்லை.
ஆனால் கண்டனங்களையும் காணவில்லை :(( அது தான் வருத்தம்.
அன்புடன்,
ஜடாயு
உண்மையை சொல்லவேண்டுமென்றால் நானே அப்படி ஒரு இழை ஆரம்பிக்க வேண்டுமென்று
இருந்தேன், நல்ல நாளில் பிரச்சினைகளை குறித்து பேசுவானேன் என்று
விட்டுவிட்டேன். :-)
V
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஸ்வர்ணா
*தமிழ் புத்தாண்டு:*
தமிழ் புத்தாண்டு சித்திரை 1,என்று இருந்தது எல்லோருக்கும்
தெரியும்.ஆனால் அரசு
முதன் முறையாக பல இலக்கண , இலக்கிய நூல்களை ஆராய்ந்து தை1'ஐ தமிழ்
புத்தாண்டு
என்று சட்டம் இயற்றிவிட்டது.தை1'ஐ தமிழர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்!
இதில்
புதிதாக முளைத்தது போல் புத்தாண்டு என்று அனைவரும் கொண்டாடினால் அது
சரியாகுமா?
அப்படியென்றால் இதுதான் தமிழின் முதல் புத்தாண்டா?
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/e1a335ff741347c6/263edd7e13d00ed
மீண்டும் மீண்டும் பேசி என்ன பயன் ?
தமிழினியில் ஓர் அருமையான கட்டுரைகூட வெளி வந்தது;
வேளாண் மரபினர் ஒருவர் ஆதங்கத்தோடு எழுதியது
தேவ்
அன்புள்ள ஸ்வர்ணா, கண்டிப்பாக ignore செய்யலாம், அது fringe ஆக, சிறு
வெறுப்புணர்வுக் குழுக்களின் கத்தலாக இருக்கும்போது.
ஆனால், மாநில அரசே இப்படி ஒரு பெரிய திட்டமிட்ட கலாசார அழிப்பை
செய்யும்போது, மெயின்ஸ்டிரீம் சமுதாயத்தில், ஊடகங்களில், செய்தித்
தாள்களில் ஒன்று கூட, மருந்துக்கு ஒன்று கூட இது பற்றி எந்த கண்டனமும்
செய்யாமல், அரசின் திட்டத்திற்கு ஒத்து ஊதிக் கொண்டிருப்பதல்லவா இங்கு
நடக்கிறது?? கம்யூனிஸ்டு கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ கூட இப்படி ஒரு
விஷயத்தை அங்குள்ள அரசுகள் செய்வதற்குத் துணியவில்லை, துணியவும்
செய்யாது.. ஆனால் இங்கு கனஜோராக நடக்கிறது.
இக்னோர் செய்வதால் கண்டிப்பாக இந்த விஷயம் அழியாது - வருடாவருடம்
ஊடகங்கள் மேன்மேலும் பெரிய கூச்சல் போட்டு வெகுஜன தமிழ் மனதில் இது
தான் தமிழ்ப் புத்தாண்டு என்று பதியவைப்பது தான் நடக்கும். இந்த விஷச்
செடியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
// நம் நாட்டில் இது வரை எத்தனையோ இடர்பாடுகள் வந்த போதும் இறைவன்
அருளால் அவை அழிக்கப்பட்டன. //
இறைவன் அருள் என்பது திடீரென்று வானத்திலிருந்து இறங்கி தீமையை
அழிப்பதல்ல. அது உங்கள் மூலம், என் மூலம், நம் அனைவரின் மூலமுமே அந்த
அருள் விளையாட்டைச் செய்கிறது. அல்லவா?
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
On Jan 14, 10:14 pm, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
> ஒரு நல்ல விஷயத்தை பெருகச் செய்ய வேண்டுமானால் அதை பற்றி நிறைய பேச வேண்டும், அலசி ஆராய வேண்டும். ஒரு நல்லதல்லாத விஷயத்தை அழிய செய்ய வேண்டுமானால் அதை முற்றிலும் ignore செய்யலாம். இந்த குழுமத்தில் யாரும் இதைப்பற்றி பேசாததே நல்லதென்று தோன்றுகிறது.
>
> அதிகாரமும் ஆணவமும் “எல்லாம் தெரியும்” என்ற மனப்பாங்கும் இது வரை இந்த உலகில் பெரிதாக எதையும் சாதித்ததில்லை அல்லவா!!
>
> நம் நாட்டில் இது வரை எத்தனையோ இடர்பாடுகள் வந்த போதும் இறைவன் அருளால் அவை அழிக்கப்பட்டன. இதே த்ராவிட ஆட்சியின் கொள்கைகளும் தமிழ் நாட்டை இந்த 75 ஆண்டுகளில் மாற்ற முயன்றும் வெற்றி கொள்ளவில்லை. கொஞ்சம் வழி மாறிப்போனாலும் பொதுவாக வாழ்க்கை விதி கெடவில்லை. இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
>
> ஸ்வர்ணா
>
> ________________________________
> From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.http://in.yahoo.com/
தமிழ் வருடப் பிறப்பு என்பது ஒரு கலாச்சாரச் சடங்குதானே! அது சித்திரையாக
இருந்தாலும் தையாக இருந்தாலும் ஒன்றும் பெரிய விஷயம் என்று
தோன்றவில்லை. எல்லா நடைமுறை விஷயங்களுக்கும் ஜனவரி 1
புத்தாண்டு தினமாகி உறுதிப்பட்டு விட்டதல்லவா? அதைத் தமிழ்நாடு அரசு
மாற்றாத வரையில் சரி.
சித்திரையைக் கோயில்கள் கொண்டாட தையை அரசு கொண்டாட
வியாபாரிகள் மூன்றையும் கொண்டாடுவார்கள்.
ரெ.கா.
--------------------------------------------------------------------------------
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
சித்திரையைக் கோயில்கள் கொண்டாட தையை அரசு கொண்டாட
வியாபாரிகள் மூன்றையும் கொண்டாடுவார்கள்
கௌதம் என்ற நண்பர் நீதிமன்றத்தில் வழக்கேத் தொடர்ந்திருக்கிறார். அரசு
தரப்பில் வாதங்களைக் கொடுக்க ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு
வந்துவிட்டதால், அரசியல் பலம், .............இத்யாதி..உபயோகித்து
அமூலாகத் திட்டமிடபட்டுவிட்டது.
சங்க இலக்கியங்களிலேயே ஆதாரங்கள் இல்லை!
அதுமட்டமா?
“சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை” – என்று சரித்திரத்தைப் புரட்ட
மறுபடியும் ஆரம்பித்தார் கருணாநிதி!
திரு. நரசய்யா ஏதாவது எழுதுவார் என பார்த்த்தேன்!
நான் தினமலருக்கு அனுப்பிய பதிலின் ஒரு பகுதி:
------------------------------------------------------------
சரித்திரம் / வரலாறு என்றாலே கருணாநிதிக்குப் பிரச்சினை வந்துவிடுகிறது!
ஆம், ஏனெப்படி தப்புத் தப்பாக உளறுகிறார் என்று தெரியவில்லை. ஒன்று –
ஒன்றாகப் பார்ப்போம்.
1. 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக்
கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. இல்லை, இதற்கு அத்தகைய
பெயர் இருந்ததாக ஆவணம் 1642 வரை இல்லை. ஜூலை 17, 1642 தேதியிட்டக்
கடிதத்தில் தான் அப்பெயர் காணப்படுகிறது. அதற்கு முன்பு செபடம்பர் 1641ல்
டச்சுக்காரர் ஆவணத்தில் அப்பெயர் காணப்படுகிறது. அதாவது அந்த கோட்டை
ஏற்கெனவே கட்டி முடிக்கப் பட்டுவிட்டது. ஒருவேளை மதிற்சுவர் போன்றது
அந்நாளில் காட்டிமுடிக்கப்பட்டுக்கக்கூடும்! அவ்வளாவேதான்!
2. கோவில்கள் இடிக்கப்பட்ட உண்மையைப் மறைப்பது: இதைவிட முக்கியமானது
எத்தனை கோவில்கள் இக்கோட்டைக் கட்ட இடிக்கப் பாடது என்பதுதான் முக்கியமான
மறைக்கப் படும் உண்மை! இந்த கருணாநிதியும் இரண்டு கோவில்களை இடித்து
விட்டுதான், இந்த புதிய சட்டசபை கட்டுகிறார் என்பதை ஞாபகம் வைத்துக்
கொள்ளவேண்டும்.
“தான்தோனி லிங்கம் என்றால்” என்று நக்கலாக கேட்ட திராவிட நீதிபதி: அந்த
வளாகத்தில் இரண்டு கோவில்கல் இருந்தன. ஒன்று தான்தோனி லிங்கம் கொண்ட
கோவில். அதை இடிக்கக் கூடாது என்று வழக்குத் தொட்ரப்பட்டது.
கருணாநிதிக்கோ இடித்தே தீரவேண்டும் என்ற முடிவு! கோபம் என்றால் கோபம் அது
அந்த நீதிபதியின் மூலமாக வெளிப்பட்டது, ““தான்தோனி லிங்கம்
என்றால்……….ஹ………..அதுவாகவே தோன்றியதா…………….”, எ ன்று கேட்டதாக செய்திகள்
வெளிவந்தன. தமிழ்நெறி என்று பேசும் கருணாநிதிக்கு அன்று
தெரிந்திருக்கவில்லையா?
3. செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது! இது
அப்பட்டமான பொய். “லால் கிலா” எனப்படுகின்ற செங்கோட்டை ஷஜஹானுக்கு முன்பே
இருந்தது! அக்கட்டிடம் முழுக்க ராஜஸ்தான் கட்டிடக் கலை முறையில்
கட்டப்பட்டதாகும். ஒரு வழியில் யானையின் சிற்பம், மற்றொரு வழியில்
இருபக்கமும் யானகளின் சிற்பங்கள், மற்றும் கதவு / நுழைவு வளைவுகளில்
மலர்களின் அலங்காரச் சிற்பங்கள் இவையெல்லாம் ராஜபுதினக் கட்டிடக் கலையை
எடுத்துக் காட்டுகிறது. எப்படி ஆங்கிலக் கொள்ளைகாரர்கள் இர்ந்த
கோட்டையில், இந்த திராவிட அரசியல்வாதிகள் இருந்து ஆட்சி செய்தனரோ, அதே
மாதிரி, ஷாஜஹான் தில்லியைப் பிடித்தவுடன், செங்கோட்டையப் பிடித்துக்
கொண்டான்! அவ்வளவே!
File:Diwan-i-khas, Fatehpur Sikri, India.jpg
www.asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_di..
அதிலுள்ள பிருதிவிராஜ் நுழைவாயில், சரவண அரங்கம், பாடோ அரங்கம், ரங் மஹல்
………..முதலியன முகலாய கலாச்சாரத்தைக் காட்டவில்லை.
http://indianhistoriographymethodology.wordpress.com/wp-admin/post.php?action=edit&post=13
Inlaid pillar and part of canopy in the Diwan-i-Am, the
Hall of Public Audience, Red Fort
திவானி ஃகாஸ், திவானி ஆம் எனப்படுகின்ற இடங்களைப் பார்த்தாலே போதும்
உண்மை விளங்கும். ஆனால் இதை ஷாஜஹான் கட்டினார் என்றால் என்னசெய்வது?
Marble fountain bed, Rang Mahal, Red Fort
இப்படி ஆக்கிரமிப்பாளர்களையே சொந்தக்காரகளாக்கி, அவர்களே கட்டினார்கள்
என்றால் என்ன சரித்திரம் படிக்கிறார்கள் இந்தியர்கள்?
-----------------------------------------------------------------
மேலும் விருப்பம் இருந்தால், இங்கே பார்க்கலாம்:
On Jan 14, 8:34 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
“தான்தோனி லிங்கம் என்றால்” என்று நக்கலாக கேட்ட திராவிட நீதிபதி: அந்த
வளாகத்தில் இரண்டு கோவில்கல் இருந்தன. ஒன்று தான்தோனி லிங்கம் கொண்ட
கோவில். அதை இடிக்கக் கூடாது என்று வழக்குத் தொட்ரப்பட்டது.
கருணாநிதிக்கோ இடித்தே தீரவேண்டும் என்ற முடிவு! கோபம் என்றால் கோபம் அது
அந்த நீதிபதியின் மூலமாக வெளிப்பட்டது, ““தான்தோனி லிங்கம்
என்றால்……….ஹ………..அதுவாகவே தோன்றியதா…………….”, எ ன்று கேட்டதாக செய்திகள்
வெளிவந்தன. தமிழ்நெறி என்று பேசும் கருணாநிதிக்கு அன்று
தெரிந்திருக்கவில்லையா?
2010/1/15 Vedaprakash <vedamved...@yahoo.com>
“தான்தோனி லிங்கம் என்றால்” என்று நக்கலாக கேட்ட திராவிட நீதிபதி: அந்த
வளாகத்தில் இரண்டு கோவில்கல் இருந்தன. ஒன்று தான்தோனி லிங்கம் கொண்ட
கோவில். அதை இடிக்கக் கூடாது என்று வழக்குத் தொட்ரப்பட்டது.
கருணாநிதிக்கோ இடித்தே தீரவேண்டும் என்ற முடிவு! கோபம் என்றால் கோபம் அது
அந்த நீதிபதியின் மூலமாக வெளிப்பட்டது, ““தான்தோனி லிங்கம்
என்றால்……….ஹ………..அதுவாகவே தோன்றியதா…………….”, எ ன்று கேட்டதாக செய்திகள்
வெளிவந்தன. தமிழ்நெறி என்று பேசும் கருணாநிதிக்கு அன்று
தெரிந்திருக்கவில்லையா?அடடா! பழைய ஞாபகங்களைக் கிளறுகிறீர்களே! அந்தக் குட்டியூண்டு கோவிலுக்கு இஷ்டலிங்கேஸ்வரர் ஆலம் என்று <<>>
பெயர். அதற்கு அருகில் ஏ ஐ டபிள்யூ சி பள்ளியில்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்தப் பள்ளியாவது இருக்கிறதா அல்லது அதுவும் பூட்ச்சா?பலிபீடத்தின் மேல் கையை அழுத்தி வைத்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கை வழக்கினால் பாஸ் இல்லாட்டி ஃபெயில் என்றெல்லாம் வேண்டிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. <<<>>>
இஷ்டலிங்கேஸ்வரருக்குப் பக்கத்தில் பாலயோகீஸ்வரர் என்றொரு இளைஞர் தாடிவைத்துக் கொண்டு, நிஷ்டையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றிருக்கும். மூன்றாண்டுகளுக்கு முன்னால் அவருடைய அண்மைய புகைப்படம் ஒன்றை நண்பர் அனுப்பிய போதும், இதோ இப்போது உணர்வதைப்போல்தான் உணர்ந்தேன். (படத்தை இணைத்திருக்கிறேன்.) இவருக்கும் இந்த ஆலயத்துக்கும் எப்படித் தொடர்பு என்பது தெரியவில்லை. இவருடைய இளம்பருவப் படம் அங்கே மாட்டியிருந்தது. இஷ்டலிங்கேஸ்வரர் எப்பலேந்து தாந்தோணி ஆனார்? (நான் படித்தது 1957-58 தொடங்கி 62-63 வரை...அப்ப இந்தப் பெயர் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.)சட்டசபை விரிவடையும்போது சிற்சபை கலைய வேண்டியதுதானே... பள்ளிக்கோடமும் சேத்துதானே போயிடுச்சு?
>>><<<,பெங்களூர் வந்தாலும் சென்னைதமிழ் மோகம் குறையவே இல்ல உங்களுக்கு! அப்பபோ க்கீதா பூட்ச்சான்னுட்டு...:):)
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடடா! பழைய ஞாபகங்களைக் கிளறுகிறீர்களே! அந்தக் குட்டியூண்டு கோவிலுக்கு இஷ்டலிங்கேஸ்வரர் ஆலம் என்று <<>>ஆலயம் தானே?
>>><<<,பெங்களூர் வந்தாலும் சென்னைதமிழ் மோகம் குறையவே இல்ல உங்களுக்கு! அப்பபோ க்கீதா பூட்ச்சான்னுட்டு...:):)
| ஸ்ரீ வேதப் பிரகாஷ் அவர்களே, கோட்டையின் சரித்திரத்தை நன்றாகவே ஆய்வு செய்துள்ளேன். 1. செயிண்ட் ஜார்ஜ் நாளன்று 1640 (23 ஏப்ரல்) சுமாராக சுவர்களுடன் முடிக்ப்பட்டு அப்பெயர் இடப்பட்டது உண்மையே. 2.அந்த இடத்தில் ஒரு கோவிலும் இருக்கவில்லை. ஆகையால் இடிக்கப்பட்டிருக்கமுடியாது 3. இடிக்கப்பட்ட இரண்டு கோவில்கள் இருந்த இடம் இப்போது நீதிமன்றம் இருக்குமிடம். அதற்குப் பதிலாக இடமும், பணமும் கம்பெனி கொடுத்துள்ளது. ஆகையால் இந்த விஷயத்தில் மட்டும் தவறு காண முடியாது. பல வேறு விஷயங்களில் காணமுடியும். உதாரணமாக சென்னை புக் ஃப்பெயரை ஆரம்பித்து வைத்து்ப் பேசுகையில், திரு கருணாநிதி, தன்னால் விருது கொடுக்கப்பட்ட மதராஸ் சரித்திர நூலில் தன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் எம் ஜி ஆர் ஜானகி முதலானோர் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் சொன்னார்! பலர் எனக்குத் தொலை பேசியில் சொல்லி வருத்தப்பாட்டனர். நான் அவர்களுக்கு அது எனது நூலாக இருக்கமுடியாதென்பதை விள்க்கினேன். அவர் குறிப்பிட்ட்து திரு முத்தைய்யா நூலை. ஆனால் அத்லும் தவறு! ஏனெனில் கருணாநிதி பெயர் அந்நூலில் 3 இடங்களில் வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில் “தமிழரின் நூறாண்டுக் கனவு” என்று ஒரு பெரிய பொ்ய் சொல்லப்படுகிறது! ஒரு தமிழனும் அதைப் பற்றிப் பேசியதேயில்லை! பல தமிழ் பத்திரிகைகள் கூட கூறுகின்றன்! ஆகையால் பல இடங்களில் தீர்க்கமாகப் பொய் பேசப்ப்டுவ்து இங்கு சகஜமாகி விட்டது! நரசய்யா --- On Thu, 1/14/10, Vedaprakash <vedamved...@yahoo.com> wrote: |
|
அடடா! பழைய ஞாபகங்களைக் கிளறுகிறீர்களே! அந்தக் குட்டியூண்டு கோவிலுக்கு இஷ்டலிங்கேஸ்வரர் ஆலம் என்று <<>>ஆலயம் தானே?அக்காஙகண்ணு... டைப் பண்ண ஸொல்லோ ய ஸிலிப் ஆய்ட்ச்சி....மண்ணாஷ்ரு... இன்னா?>>><<<<
>>><<<,பெங்களூர் வந்தாலும் சென்னைதமிழ் மோகம் குறையவே இல்ல உங்களுக்கு! அப்பபோ க்கீதா பூட்ச்சான்னுட்டு...:):)அய் தோடா...நாங்க பொறண்டு எய்ந்த புய்தி அவ்ளகாண்டு டைம்ல பூடுண்ற? ஒஙக பெங்களூரு தமிய்னு ஒண்ணு கீதா? ஆமாவா? அப்ப நான் ஒரு கால் டாக்ஸி பண்ணின்டு ஒங்க உள்ளுக்கு வந்து கல்ஸ்கோள்திதீனி..... ஆய்த்தா?>>>><<<<<
(வாணாம்ப்பா... இத்தோட உட்ருரேன்...பெரிய பெரிய ஆளுங்கள்ளாம் பேசிக்கினு இருக்க சொல்லோ வந்து வந்து இப்புடி கூத்தாடிட்டுப் போன அவங்களுக்கு டிஷ்டர்ப்பா இர்க்கும்.... அவங்க மேட்ரு ரொம்ப சீரிசா போய்க்கினு கீது...கோமாலிங்கலுக்கு இங்க வேல இல்ல...டாட்டா...)<<<>>>>>>>>>
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது ஒரு சாதாரண “சடங்கு” அல்ல. இந்த நோக்கில் பார்த்தால், நம் கலாசாரம்,
பண்பாடு, மரபு எல்லாவற்றையும் சாதாரண tokenism சமாசாரங்கள் என்று சொல்லி
விட்டு சும்மா இருந்து விடலாமே!
திமுக மாநில அரசு முனைந்து இப்படி ஒரு மாற்றத்தை சட்டசபையில் கொண்டு
வந்து நிறைவேற்றுகிறது, அதை பிரிவினைவாதம், தனித்தமிழ்வாதம், இந்துமத
விரோதம் பேசும் அனைத்து சக்திகளும் ஆதரித்து கொக்கரிக்கின்றன...
நடுநிலைவாதிகள் என்று என்ணப் படுபவர்கள் ஒருவித உறைநிலையில் அசமஞ்சம்
போன்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உள்நோக்கம் கொண்ட கலாசாரக் கொலை மிகப் பெரிய நீண்டகால இந்துமத,
தமிழ்க் கலாசார அழிப்புத் திட்டத்தின் ஒரு கண்ணி என்பதில் சிறிதும்
சந்தேகமில்லை. தமிழ்க் கலாசாரத்துடன் பிரிக்க முடியாமல்
பின்னியிருக்கும் அகில இந்திய, இந்து தர்ம வேர்களை வெட்டி அந்த இடத்தில்
கிறீஸ்தவத்தை இட்டு நிரப்பத் துடிக்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கம்
தான் இது.. தை முதல் நாளுக்கு நகர்ந்த தமிழ்ப்புத்தாண்டு அப்படியே
ஜனவரி-1க்கும் பின்னர் டிசம்பர்-25க்கும் நகர்ந்து அதற்கெல்லாம்
“இலக்கிய ஆதாரங்கள்” காண்பிக்கப் பட வேண்டிய திசையை நோக்கித் தான்
காய்கள் நடத்தப் படுகின்றன. இதை அறிந்தோ, அறியாமலோ தமிழ் அன்பர்கள்,
அபிமானிகள் என்றூ சொல்லிக் கொள்பவர்கள் மந்தை ஆடுகளாக நம் மரபைக் காவு
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப்புத்தாண்டு என்பதெல்லாம் ஜஸ்ட் ஒரு வியாபார வாய்ப்பு என்றும்
வெறும் சடங்கு என்றும் உதாசீனம் செய்யப் படவேண்டும் என்று தான் இந்த
சதிகாரர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான் முனைந்து அதை எதிர்க்க
வேண்டியது அவசியமாகிறது.
அன்புடன்,
ஜடாயு
> ...
>
> read more »
Conspiracy theoryஇன் மீது பெரும் நம்பிக்கை உள்ளவர் போலும் நீங்கள்.
கிறிஸ்த்துவம் ஏன் இங்கே வருகிறது? இப்போதைய கிறிஸ்த்துவ
நாடுகளிலேயே கிறிஸ்த்துவத்தைக் காப்பாற்ற ஆளில்லை.
இப்போதைய தமிழக அரசின் தமிழ்த் தீவிரத்தால்தான் இந்த புத்தாண்டுக்
கோளாறு நடக்கிறது. அதை நீங்கள் மிகவும் stretch பண்ணுகிறீர்கள்.
ரெ.கா.


Exactly. அதனால் தான் கிறிஸ்தவம் இங்கே வருகிறது. வளர்ந்த, மேற்கத்திய
நாடுகள் தங்களுக்கு தேவையில்லாத toxic wasteஐ காசு கொடுத்து வளரும்
நாடுகளில் கொட்டுவது போலத் தான் இது. அறிவியலாலும், நவீன
சிந்தனைகளாலும் கிறிஸ்தவம் இந்த நாடுகளில் சாகடிக்கப் பட்டு விட்டது.
ஆனால், இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய காலனியத்தின்
விரிவாக்கத்திற்கும், அதிகாரப் பரவலுக்கும் கிறிஸ்தவ மிஷன்கள் மிகப்
பெரும் துணையாக இருந்தன. அதனால் தான் தாங்களே நம்பாத கிறீஸ்தவத்தை
இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள், சீனா ஆகிய இடங்களில் கொண்டு கொட்டுவதற்கு
மேற்கத்திய செல்வந்தர்களும், அங்குள்ள அரசுகளும் ஆதரவளிக்கின்றன.
> இப்போதைய தமிழக அரசின் தமிழ்த் தீவிரத்தால்தான் இந்த புத்தாண்டுக்
> கோளாறு நடக்கிறது. அதை நீங்கள் மிகவும் stretch பண்ணுகிறீர்கள்.
>
> ரெ.கா.
தமிழ்த் தீவிரவாதம் கிறிஸ்தவ மத அடிப்படைவாதத்துடன் கைகோர்த்து
இயங்குகிறது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியும் விஷயம். ஊரறிந்த விஷயம்.
இன்று பல்கலைக் கழகங்களின் எல்லா தமிழ்த்துறைகளும், சமூகவியல், வரலாறு,
நாட்டார் கலைகள் ஆகிய துறைகளும் முழுக்க முழுக்க கிறிஸ்தவ அமைப்புகளின்,
கிறிஸ்தவ வெறியர்களின் பிடியில் தான் உள்ளன. பிராமண வெறுப்பையும்,
இந்துமத வெறுப்பையும் ஊட்டி வளர்த்த திராவிட இயக்கங்கள் இன்று தமிழ்ப்
பண்பாட்டையே கிறிஸ்தவம் என்கிற எதேச்சாதிகார சக்திக்கு காவு கொடுக்கும்
நிலைக்கு தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன.
தை மாத தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்புக்குப் பின்னர் திட்டமிட்ட கிறிஸ்தவ
உந்துதல் நிச்சயம் உள்ளது. அது பற்றிய விவரங்கள் வெளிவர அதிக நாட்கள்
ஆகாது.
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்னைத் தூண்டி விட்டதற்கு நன்றி.
இரண்டு நாட்களாக இருக்கும் பழைய புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள்,
வரைபடங்கள்...........அனைத்தையும் அலசிப் பார்த்து விட்டேன். ஆனால்,
கிடைத்துள்ள விவரங்கள் இப்படிதான் உள்ளன:
1. அனுமதி 22-08-1639 அன்று கொடுக்கப்பட்ட உடனே வேலைகள் ஆரம்பித்து
விட்டன.
Roberts, J: "History of the World.". Penguin, 1994.
Col. D. M. Reid, The Story of Fort St. George, Diocesan Press, Madras,
1945 [குறிப்பாக வரைப்படங்களைப் பார்க்கவும் 1653 லிருந்து
தொடங்குகிறது].
Davison Love, Vestiges of Old Madras, AES, New Delhi.
C. S, Srinivachari, A History of the city of Madras, P. Varadachary &
Co., Madras, 1939.
N. S. Ramaswami, Fort St. George Madras, Tamilnadu State
Archaeological Dept, Madras, 1980, p.33.
2. முதலில் 1639ல் சிறிய கட்டிடமாக ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு
பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டன.
3. வடகிழக்கு பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது -
1640. பண்டகசாலையின் வேலை 01-03-1640 அன்று தொடங்கப்பட்டது. அந்த
கட்டிடத்தின் ஒரு பகுதி 23-04-1639ல் கட்டி முடிக்கப்பட்டது! உடனே அது
"செயின்ட் ஜார்ஜ் நாள்" என்பதால் "செயின்ட் ஜார்ஜ் கோட்டை" என்று
பெயரிட்டார்களாம்!
4. வடமேற்கு பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது -
1642.
5. தென்கிழக்கு பாதுகாப்புச்சுவர் துப்பாக்கிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது
- 1644.
6. கிரீன்ஹில் என்பவன் 1648ல் ஏஜென் டாக வந்ததும் வேலைகளை
முடுக்கிவிட்டான். 1653ல் தான் முழுவதுமாகக் கட்டிமுடிக்கப்பட்டது!
* அப்படியிருக்கும்போது, ஏன் 23-04-1639 தேதி மகத்துவம் வரவேண்டும்?
7. சி. எஸ். ஸ்ரீனிவாசாச்சாரி [pakkam.42] அதனால்தான், "a date which is
too late for the commencement of the work and far too early for the
completion of the substantial part of it", என்று குறிப்பிடுகின்றார்
[மேற்கோள் குறியிட்டுள்ளதால் ஆங்கிலேயர் ஆவணத்திலிருந்து எடுத்தாள்கிறார்
என்று நினைக்கிறேன்]. "இந்த தேதி வேலை ஆரம்பிக்கக் குறிக்க மிகவும்
நேரங்கடந்தது, மற்றும் வேலை முடிக்கக் குறிக்க மிகவும் முன்
தேதியிடப்படுவது" என்று உண்மையை ந்டுத்துக் காட்டுகிறார்.
8. இனி கோவில்கள் - பகோடாக்கள் இருந்த இடத்திற்கு வருவோம். நமது தெலுங்கு
பளையக்காரர்கள் கொடுத்தபோது, எந்த எல்லைகளையும் குறிப்பிட்டுக்
கொடுக்கவில்லை. ஆகவே அவை எங்கிருந்தன என்ற பிரச்சினை இல்லை. உண்மை
என்னவென்றால் ஆங்கிலேயர்கள் கோவில்களை இடித்தனர் என்பதேயாகும். அதனை
நம்மவர்களும் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை, அவர்களும் சொல்லவில்லை.
"இடித்துவிட்டு கட்டினார்கள் என்று குறிப்பிடும்போதுதான்
அறியப்படுகின்றது.
9. சரித்திரத்தில் கணக்கு என்றால் கணக்காகத் தான் பார்க்கவேண்டும்
[இந்தியர்களுக்கு காலக்கணக்கீடு தெரியாது என்பதுதானே சரித்திர
ஆசிரியர்களின் முக்கியமானக் குற்றாச்சாட்டு!].
10. எதற்காகாவது யாதாவது ஒரு பெயரைக் கொடுத்துவிட்டால், அதனை சரித்திர
உண்மை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. அதனால்தான் ராஜபுத்திரர்கள் கட்டிய
கோட்டைகளைக் குறிப்பிட்டேன். அதுவும் ருணாநிதி குறிப்பிட்டதால், உன்மை
சொல்லவேண்டிய அத்தியாவசியம் ஏற்படுகிறது.
11. கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, "சான் தோம்" என்று
பெயரிட்டுவிட்டார்கள். ஆனால் என்னவாயிற்று? உடனே, தாமஸ் அங்கு வந்தான்,
திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லிக் கொடுத்தான், பைபிள் படித்துதான்,
திருவள்ளுவர் திருக்குறள் எழுதினான்.......................என்றெல்லாம்
எழுதி Ph.D வாங்கிவிட்டார்களே? இதையே பாடபுத்தகங்களில் நமது சந்ததியினர்
படிக்கிறார்களே? இதுதான் உண்மையான சரித்திரமா? [ஆமாம் உங்கள்
புத்தகத்தில் இதைப் பற்றி நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று
அறியலாமா?].
12. செயின்ட் ஜார்ஜ் என்பது England's Patron Saint அவ்வளவே! அதை
இந்தியர்கள் மீது திணிப்பதுதான் தவறு. ஆகவே 23-04-1639 அன்று சரித்திர
ரீதியில் நடக்காததை நடந்தது இன்று பேசினால், எழுதினால் நாளை சரித்திரம்
ஆகி, நமது சந்ததியினர் படித்து "கூலித்தன்மையான மனப்பாங்குடன்"தான்
[Collie mentality, as the British / Europeans used to say with grudge
and hatred] இருப்பார்கள்.
வேதபிரகாஷ்
18-01-2009
On Jan 15, 7:19 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> ஸ்ரீ வேதப் பிரகாஷ் அவர்களே,
>
> கோட்டையின் சரித்திரத்தை நன்றாகவே ஆய்வு செய்துள்ளேன்.
>
> 1. செயிண்ட் ஜார்ஜ் நாளன்று 1640 (23 ஏப்ரல்) சுமாராக சுவர்களுடன் முடிக்ப்பட்டு அப்பெயர் இடப்பட்டது உண்மையே.
>
> 2.அந்த இடத்தில் ஒரு கோவிலும் இருக்கவில்லை. ஆகையால் இடிக்கப்பட்டிருக்கமுடியாது
>
> 3. இடிக்கப்பட்ட இரண்டு கோவில்கள் இருந்த இடம் இப்போது நீதிமன்றம் இருக்குமிடம். அதற்குப் பதிலாக இடமும், பணமும் கம்பெனி கொடுத்துள்ளது.
>
> ஆகையால் இந்த விஷயத்தில் மட்டும் தவறு காண முடியாது. பல வேறு விஷயங்களில் காணமுடியும். உதாரணமாக சென்னை புக் ஃப்பெயரை ஆரம்பித்து வைத்து்ப் பேசுகையில், திரு கருணாநிதி, தன்னால் விருது கொடுக்கப்பட்ட மதராஸ் சரித்திர நூலில் தன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் எம் ஜி ஆர் ஜானகி முதலானோர் பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் சொன்னார்! பலர் எனக்குத் தொலை பேசியில்
> சொல்லி வருத்தப்பாட்டனர். நான் அவர்களுக்கு அது எனது நூலாக இருக்கமுடியாதென்பதை விள்க்கினேன். அவர் குறிப்பிட்ட்து திரு முத்தைய்யா நூலை. ஆனால் அத்லும் தவறு! ஏனெனில் கருணாநிதி பெயர் அந்நூலில் 3 இடங்களில் வருகிறது.
>
> சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில் “தமிழரின் நூறாண்டுக் கனவு” என்று ஒரு பெரிய பொ்ய் சொல்லப்படுகிறது! ஒரு தமிழனும் அதைப் பற்றிப் பேசியதேயில்லை! பல தமிழ் பத்திரிகைகள் கூட கூறுகின்றன்!
>
> ஆகையால் பல இடங்களில் தீர்க்கமாகப் பொய் பேசப்ப்டுவ்து இங்கு சகஜமாகி விட்டது!
>
> நரசய்யா
>
> --- On Thu, 1/14/10, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
>
இன்று தம்பு செட்டித் தெருவில் காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆனால்
மராட்டிய வீர சிவாஜி இக்கோயில் விஜயம் செய்த போது கோவில் இன்று
செயின்ட்ஜார்ஜ் கோட்டை இடத்தில் இருந்தது எனப் படித்துள்ளேன், தாங்கள்
விளக்கவும்.
அதே போல் கபாலீஸ்வரர் கோவில் இன்றைய சாந்தோம் ஜெபக்கூட இடத்தில் இருந்தது
எனப் படுகின்றது. தயவு செய்து ஆதாரங்களுடன் விள்க்கவும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காலையில் போட்டது, மாலையில் வருகிறது!
ஏற்கெனவே, புத்தாண்டு பற்றி விளக்கமான கட்டுரையை பதிவு செய்து விட்டேன்.
ஆனால், அதை காணோமே?
On Jan 18, 5:21 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> அன்புள்ள கருப்பையா சாலமன்
>
> இதனை வேறு இழையில் தொடரலாமே. இங்கே புத்தாண்டு பற்றிய கலந்துரையாடல் தொடரலாம்
> இல்லையா?
>
> பென்னேஸ்வரன்
>
> 2010/1/18 karuppaiahsolo...@gmail.com <karuppaiahsolo...@gmail.com>
தமிழ்ப் புத்தாண்டு சித்தரையில்தான் பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்குரிய சான்றுகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன். ஓகை நடராஜன் அவர்களோ, மற்றவர்களோ தக்க சான்றுகளைத் தெரிவித்தால் மகிழ்வேன். நெடுநல்வாடையில் ஒரு பாடலில் உள்ளதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுநல்வாடை முழுவதும் ஒரு பாட்டுதான். அதில் ஒரு பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நெடுநல்வாடையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சித்தரை ஆண்டின் தொடக்கம் என்பதற்கான அடிகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் தரவுகள் கிடைத்த பிறகு மேற்கொண்டு கருத்து அறிவிக்கிறேன்.
- ஆராதி -
<aara...@gmail.com>
| காளிகாம்பாள் கோவில் கோட்டையில் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் சாந்தோம் சர்ச் இருக்குமிடத்தில் நேமிநாதர் கோவில் இருந்த்து. இன்றும் சர்ச் இருக்குமிட்த்தில் அகழ்வாய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட கோவில் தூண்கள் உள்ளன். திருப்புகழில் கபாலீஸ்வரர் கோவிலுள்ள முருகனைக் குறித்துப் பாடுகையில் அருணகிரிநாதர் இவ்வாறு
சொல்கிறார் “கடல் கரை திரையருகே சூழ் மயிலை பதி தனில் உறைவோனே” இது பாடப்பட்ட காலத்தில் சர்ச் அங்கு இருந்திருக்க முடியாது. ஆகையால் கபாலீஸ்வரர் கோவில் அங்கிருந்து இடம் பெயர்ந்தது என்ப்தை அறியலாம். நரசய்யா --- On Tue, 1/19/10, karuppai...@gmail.com <karuppai...@gmail.com> wrote:
|
|
|
|
|
|
|
காளிகாம்பாள் கோவில் கோட்டையில் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் சாந்தோம் சர்ச் இருக்குமிடத்தில் நேமிநாதர் கோவில் இருந்த்து. இன்றும் சர்ச் இருக்குமிட்த்தில் அகழ்வாய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட கோவில் தூண்கள் உள்ளன். திருப்புகழில் கபாலீஸ்வரர் கோவிலுள்ள முருகனைக் குறித்துப் பாடுகையில் அருணகிரிநாதர் இவ்வாறு சொல்கிறார்
“கடல் கரை திரையருகே சூழ் மயிலை பதி தனில் உறைவோனே”இது பாடப்பட்ட காலத்தில் சர்ச் அங்கு இருந்திருக்க முடியாது.ஆகையால் கபாலீஸ்வரர் கோவில் அங்கிருந்து இடம் பெயர்ந்தது என்ப்தை அறியலாம்.
| மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் அடலானே றூரு மடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். |
மயிலைக் கோயில் எங்கே முதலில் இருந்தது, இப்போது ஏன் இங்கே இருக்கிறது என்பன் போன்ற கேள்விகள் மின் தமிழுக்குப் புதிதோ என்னவோ, தமிழகத்தில் அதுவும் சென்னையில் பேசிப் பேசி, எழுதி எழுதி அலுத்துப் போய்விட்டார்கள். 'தி ஹிண்டு' வில் கூட இந்த பிரச்னை விவாதக்களமாக மாறிய நாட்கள் உண்டு. மெட்ராஸ் ம்யூசிங்ஸ் முத்தையா ஹிண்டு வில் எழுதியுள்ளார். அதுவே பிரச்னையாக மாறிப்போனது. 'மதராச பட்டினத்தில்' நம் நரசய்யா அவர்கள் இதைப் பற்றி எழுதியுள்ளார். மயிலைக் கோவில் மிக சமாதான முறையில் மாற்றப்படுவதற்கு உள்ளூர்ப் பெரியவர்கள் ஒப்புக் கொண்டதாகக் கூட வரலாறு சொல்கிறது. (soft transfer).
பொதுவாக பதினான்காம் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் கோயில்கள் சூறையாடப்பட்ட காலம். விஜயநகர அரசு நம்மைக் காப்பாற்றியது. ஆனால் ஐரோப்பியர்கள் காலடி எடுத்த வேளை, மறுபடியும் கோயில்கள் வேறுவிதத்தில் பாதிக்கப்பட்டன. ஐரோப்பியர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள அவர்களுக்கு போர்ப் பாசறையே மயிலை, திருவல்லிக்கேணி கோயில்கள்தான். 17 ஆம் நூற்றாண்டு சென்னை கோவில்களுக்கு போதாத காலம். கடந்த கால நிகழ்ச்சிகள் எல்லா புத்தகங்களிலும் நன்றாகவே பதிக்கப்பட்டுள்ளன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்துப்
பண்பாடு, பாரதக் கலாச்சாரம் எனப் பேசும் நம் நாட்டில் ஆண்டுப் பிறப்பு
மட்டும் மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுமைக்கும் ஒரே
வருடப் பிறப்பு கொண்டாடப் பட்டதற்கு ஏதேனும் சான்றுள்ளதா?
ஆங்கிலப் புத்தாண்டில் எல்லா இந்துக் கோயில்களிலும் பூஜை செய்கிறார்களே
ஏன்? எந்த அரசு ஆணையும் இல்லாமல் ஆங்கிலப் புத்தாண்டன்று இந்திய மக்கள்
வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறார்களே ஏன்?
தமிழ்நாட்டில் என்ன நிலை என்று பார்த்தால் 3 வகையாக ஆண்டுப் பிறப்புக் கொண்டாடப் படுகிறது.
சித்திரையில் ஒரு புத்தாண்டு
தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சேரநாடு என்றழைக்கப்பட்ட கேரளத்திலும்
தென்பாண்டி நாட்டின் சில பகுதிகளிலும் ஆவணி முதல் நாளைப் புத்தாண்டுப்
பிறப்பாகக் கொண்டாகிறார்கள்.
இப்பொழுது தை முதல் நாள் அரசு ஆணைப்படி ஆண்டுப் பிறப்பு.
நடுநெல்வாடையின் அடிகள் சூரியன் மேட ராசியைத் தொடக்கமாகக் கொண்டு வலம்
வருகிறது என்க் கூறுகின்றன. அதனால் அக்காலத்தில் சித்திரையை ஆண்டின்
தொடக்கம் எனக் கூற முடியாது.
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு
பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்.
உலகம் முழுவதும் இரண்டு வகையான மாதக் கணக்கீடுகள் உள்ளன. ஒன்று சூரியனை முதன்மைப்படுத்திக் கணக்கிடுவது. இரணடாவது சந்திரனை முதன்மைப்படுத்திக் கணக்கிடுவது.
தமிழில் உள்ள மாதப் பெயர்கள் எல்லாம் சந்திரனை முதன்மைப்படுத்திக் கணக்கிடும் முறையைக் கொண்டவை.
தனித்தமிழ்க்காக வாழ்ந்த தேவநேயபாவாணர் இதற்கு மாறாகச் சூரியனை முதன்மைப்படுத்தித் தமிழ் மாதப் பெயர்களை வழங்கினார். அவர் மேடம் முதலிய இராசிகளின் பெயர்களைத் தமிழப்படுத்தி மாதப் பெயராக்கினார். மேழம், விடை (காளை என்பது பொருள்), ஆடவை என அவர் பன்னிரண்டு மாதப் பெயர்களை அமைத்தார். அதனையே இன்றும் தனித் தமிழ் அன்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்
என்பது தொல்காப்பியம்.
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே
என்பது நம்பியகப்பொருள்.
ஆவணி முதலா இரண்டி டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே
என்பது தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான திவாகர நிகண்டு.
மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்
என்பது மற்றொரு புகழ்வாய்ந்த சூடாமணி நிகண்டு.
நாம் வாழ்வது அறிவியல் யுகமான 21ஆம் நூற்றாண்டில். விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு இன்றைய தலைமுறைக்குச் சரியான தகவல்களைக் கொண்டு செல்வது நமது கடமை. அரசியல்வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்கிறார்கள் என்றால் அதற்கு நாம் யாரும் துணை போய்விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.
இது தொடர்பாக விரிவாக விவாதிக்க விரும்பினால் தொடரலாம்.
ஆராதி
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
பொங்கல் அன்று வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவதுடன் கூட,
தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று சென்ற வருடம் அறிவித்து திமுக
அரசு நிகழ்த்திய கேடுகெட்ட கலாசாரக் கொலையைக் ஒவ்வொரு வருடமும்
கண்டித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு நம்மை திராவிட அரசியல்
கொண்டு வந்திருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
எலலாக் கோவில்களிலும் (அரசு ஆளுகைக்கு உட்பட்டவை) தமிழ்ப் புத்தாண்டு
சிறப்பு பூஜை என்றெல்லாம் அறிவிப்புகள் இருக்கிறதாமே, உண்மையா?
டிவிகள், பத்திரிகையில் மட்டும் தான் இந்தக் கண்றாவி என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.. கோவிலில் கூடவா? என்ன கொடுமை இது!
தமிழ்மரபு பற்றி மிகுந்த ஈடுபாடு கொண்ட இந்தக் குழுதத்தில் யாருமே இது
பற்றி பெரிதாகப் பேசாதது வியப்பும், வருத்தமும் அளிக்கிறது.
திரிபுகளை ஏற்றுக் கொள்ளும், ஜீரணிக்கும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டு
விட்டோமோ?
தமிழ்ஹிந்துவில் இது பற்றி இன்று வந்திருக்கும் இரு கட்டுரைகளைப்
பார்க்க வேண்டுகிறேன்.
தையில் புத்தாண்டு - தமிழ் மரபன்று! - ஓகை நடராஜன்
http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/
பல அரிய இலக்கியத் தரவுகளுடன் ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதியிருக்கும் ஆய்வுக்
கட்டுரை:
சித்திரையில் தொடங்கும் புது வருடம் - 1 :
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/
சித்திரையில் தொடங்கும் புது வருடம் - 2 :
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
ஜடாயு
ஆராதி,
இந்திய பண்பாடு மற்றும் ஏனைய புத்தாண்டுகள் பறிய உங்கள் கேள்விகள் இப்பதிவுக்குப் புறம்பானவை என்பதோடு இக்கேள்விகளால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரியவில்லை. இப்பதிவு ’தையில் புத்தாண்டு தமிழர் மரபன்று’ என்ற பொருள் பற்றியதே!
//நடுநெல்வாடையின் அடிகள் சூரியன் மேட ராசியைத் தொடக்கமாகக் கொண்டு வலம் வருகிறது என்க் கூறுகின்றன. அதனால் அக்காலத்தில் சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது.//
தெளிவாக மேழத்தில் ஆண்டு தொடங்குகிறது என்று சொல்லும் பாடல் வரிகளை சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது என்று கூறுகிறீர்களே, என்ன குழப்பம்? ஆதவன் மேழத்தில் இருக்கும் காலமே சித்திரை மாதம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்கிறதா?
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்//
நெடுநல்வாடை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்கிறதா?
ஆவணியில் புத்தாண்டு தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தைத் தரும் தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளைத் தந்ததற்கு நன்றி. இவ்வரிகள் தையில் புத்தாண்டு என்ற கருத்தை வலியுறுத்தாதது மட்டுமல்லாமல் தை மாதத்தை ஆண்டின் மையத்துக்கு தள்ளுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக தொல்தமிழ் மரபின் படி புத்தாண்டு சித்திரையா அல்லது ஆவணியா என்ற விவாதம் இருக்கலாமேயன்றி தையில் நிச்சயமாக இல்லை என்று உறுதியாகக் கூறிவிடலாம்.
இன்னொரு சுட்டி: http://groups.google.com/group/minTamil/msg/42c0387e9d8962f8
//நாம் வாழ்வது அறிவியல் யுகமான 21ஆம் நூற்றாண்டில். விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு இன்றைய தலைமுறைக்குச் சரியான தகவல்களைக் கொண்டு செல்வது நமது கடமை. அரசியல்வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்கிறார்கள் என்றால் அதற்கு நாம் யாரும் துணை போய்விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.//
ஓகை நடராஜன்.
இந்துப் பண்பாடு, பாரதக் கலாச்சாரம் எனப் பேசும் நம் நாட்டில் ஆண்டுப் பிறப்பு மட்டும் மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுமைக்கும் ஒரே வருடப் பிறப்பு கொண்டாடப் பட்டதற்கு ஏதேனும் சான்றுள்ளதா?