"பார்சுவநாதர்" படத்தில் அவர் சூடியிருப்பதென்ன ஆத்தியா?

390 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 12, 2014, 12:58:29 AM6/12/14
to mint...@googlegroups.com

சுபா வழங்கிய...

 "பார்சுவநாதர்" (Pārśvanātha) படத்தில் அவர் சூடியிருப்பதென்ன ஆத்தி / Athi tree (Ficus glomerata) ?

 காணொளி :http://youtu.be/Xs9MRS3hKiM

பின் குறிப்பு:  மன்னிக்கவும், முன்னர் பிழைகளுடன் இட்ட பதிவை நீக்கிவிட்டு மறு பதிவு இடுகிறேன்.

..... தேமொழி

Dev Raj

unread,
Jun 12, 2014, 2:11:20 AM6/12/14
to mint...@googlegroups.com

இது பாஹுபலி கோமடேச்வரரின் படம்; பார்ச்வநாதருடையதன்று;
ஆத்தி மர வகையைச் சேர்ந்தது; கொடிபோல் படராது

There are 5 monolithic statues of Bahubali in Karnataka measuring more than 20 feet in height.

57 feet at Shravanabelagola in Hassan District in 981 CE
42 feet at Karkala in Udupi District in 1432 CE
39 feet at Dharmasthala in Dakshina Kannada District in 1973 CE
35 feet at Venur in Dakshina Kannada District in 1604 CE
20 feet at Gommatagiri in Mysore District in 12th Century CE

தேவ்
BAhubali.jpg

Prakash Sugumaran

unread,
Jun 12, 2014, 6:32:05 AM6/12/14
to mintamil
காட்டிலிருந்த ஏதோ ஒரு கொடி மேலே படருவது கூட தெரியாமல் தவத்தில் ஈடுபட்ட பாஹுபலி என்பதை சித்தரிக்கும் காட்சி. காலடியில் ஒரு பாம்பு படமெடுத்திருப்பது போன்ற சிற்பம் இருக்கும். மொத்தத்தில் பாஹுபலி ஒரு காட்டில் தவம் இருந்துள்ளார்.. அவ்வளவே.

” மதம் “ என்ற வார்த்தை மதங்களுக்கு பெயராக வைக்கப்பட காரணம் இந்த பாஹுபலி.

மூத்த சகோதரன் பரதனுடன் ஏற்பட்ட மோதலில், அரசாட்சி முறை மீது வெறுப்புற்று, மனித வாழ்வியலில் சமத்துவமும், அமைதியும் ஏற்படுத்தும் புதிய வாழ்வியல் முறையை உருவாக்க முயன்றார். இதற்காக தன் தந்தை உட்பட யாரிடமும் உதவி கேட்டால், அவர்களது காலில் விழுந்து வணங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக தந்தை, தாய், சகோதர, சகோதரிகள் என யாருக்கும் சொல்லாமல் கோபத்துடன் அரண்மனையை விட்டு வெளியேறி கடும் தவத்தில் ஈடுபட்டார்.

( அப்படிப்பட்ட நேரத்தில் ஆத்தி மரத்தை கூடவே கொண்டு செல்வாரா என்ன ? )

எத்தனை முயன்றும் இறுதி தீர்வை எட்ட முடியாமல், தன்னை தானே அளவுக்கு அதிகமாக அவர் துன்புறுத்தி கொள்வதை கண்டு தாங்கி கொள்ள முடியாத, அவரது சகோதரிகள் ப்ராமி, சுந்தரி இருவரும், ரிஷபதேவரும், ஆதிநாதரும், முதல் தீர்த்தங்கரரும், மன்னருமான, தங்கள் தந்தையிடம் சென்று, பாஹுபலிக்கு வழி காட்டி உதவி செய்யுமாறு கேட்டனர்.

அவர்களுக்கு பதில் அளித்த ஆதிநாதர் சொன்னது, ” மதம் பிடித்த யானையின் மேல் நின்று, எதை முயன்றும் பலனில்லை “. இதை பாஹுபலிக்கு சகோதரிகள் தெரிவித்தனர். “ நான் எந்த யானையின் மேல் நிற்கிறேன் ? “, என்று கேட்டு சிந்தனையில் ஆழ்ந்த பாஹுபலிக்கு, தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்தில், ஆணவத்துடனும், தான் என்ற அகந்தையுடனும் தான் செயல்படுவது புரியவந்தது.

உடனே தன் தந்தையிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பிறகு தனக்கு சொந்தமான செல்வங்கள், நிலங்கள், கால்நடைகள் எல்லாவற்றையும் பரதனுக்கு அளித்துவிட்டு, மக்களை நல்வழிபடுத்தும் போதனைகளில் ஈடுபட்டார்.   
 
கோமட்டேஸ்வர் என்றால் கோபமான ஈஸ்வரன் என்று பொருள் உள்ளதோ ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Suba.T.

unread,
Jun 12, 2014, 2:37:01 PM6/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பு தேமொழி,

இப்படத்தில் இருப்பவர் பாஹுபலி - கோமுட்டீஸ்வரர். இந்த உருவச்சிலை இருப்பது மேல் சித்தாமூர் பார்சுவநாதர் ஆலயத்தில். நான் பகிர்ந்து கொண்டபோது பெயரை இணைக்க மறந்து விட்டேன்.

பார்சுவநாதர் பாம்புக்குடையுடன் காட்சியளிப்பார். விரைவில் ஒரு படம் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
தேமொழி

unread,
Jun 13, 2014, 12:18:08 AM6/13/14
to mint...@googlegroups.com

விளக்கமளித்த  திரு. தேவ், பிரகாஷ், சுபா அனைவருக்கும் நன்றி.

நான் பார்சுவநாதர் கோயிலில் சிலை இருந்தால் அது பார்சுவநாதர் சிலை என்று சுலபமாக நினைத்துவிட்டேன் :)))

பிரகாஷ் அளித்த விளக்கங்கள் மேலும் கோமதீஸ்வரர் யார் எனத் தெளிவுபடுத்தியது.

இவரின் சகோதரன் பரதன் பெயரில் அமைந்ததே பாரதத்திற்கு பாரதம் என்ற பெயர் என்பதாக எங்கோ படித்த நினைவு....

..... தேமொழி

On Thursday, June 12, 2014 11:37:01 AM UTC-7, Suba.T. wrote:
அன்பு தேமொழி,

இப்படத்தில் இருப்பவர் பாஹுபலி - கோமுட்டீஸ்வரர். இந்த உருவச்சிலை இருப்பது மேல் சித்தாமூர் பார்சுவநாதர் ஆலயத்தில். நான் பகிர்ந்து கொண்டபோது பெயரை இணைக்க மறந்து விட்டேன்.

பார்சுவநாதர் பாம்புக்குடையுடன் காட்சியளிப்பார். விரைவில் ஒரு படம் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

2014-06-12 6:58 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

சுபா வழங்கிய...

 "பார்சுவநாதர்" (Pārśvanātha) படத்தில் அவர் சூடியிருப்பதென்ன ஆத்தி / Athi tree (Ficus glomerata) ?

 காணொளி :http://youtu.be/Xs9MRS3hKiM

பின் குறிப்பு:  மன்னிக்கவும், முன்னர் பிழைகளுடன் இட்ட பதிவை நீக்கிவிட்டு மறு பதிவு இடுகிறேன்.

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Jun 13, 2014, 1:02:49 AM6/13/14
to mint...@googlegroups.com
ரிஷபதேவருக்கு 12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும்
மஸ்தகாபிஷேகம் - 

அடுத்த நிகழ்ச்சி 2018ல்

தேவ்

Prakash Sugumaran

unread,
Jun 13, 2014, 4:49:50 AM6/13/14
to mintamil
” கோமுட்டீஸ்வரர் “ - இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடலாம் என விளையாட்டாக கூகுளில் தட்டியபோது,

” கோமுட்டா ” என்ற பெயரில் ஜகார்த்தா நாட்டில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன், அந்த நாட்டின் பாதைகளை கம்யூட்டர் மூலம் வழிகாட்டுகிறது.

” கோமடம் “ என்பதில் கோ - அரசன், மடம் - புனிதமான இடம் என் கிறது விக்கிபீடியாவின் ” இந்தியன் பேமிலி நேம்ஸ் ” பக்கம்.

கோமுட்டி செட்டியார் என்ற பெயருக்கு காரணம், பகவத் கீதையில், வைசிய குலத்தவர் விவசாயம், வியாபாரம் மற்றும் கோசம்ரக்‌ஷனம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். இதில் கோசம்ரக்‌ஷ்னம் என்பது பசுக்களுக்கு தங்கள் கை முஷ்டிகளாலேயே உணவளித்து பாதுகாத்தல் என பொருள். கீதையில் இது கோமுஷ்டி என குறிப்பிடப்பட்டு உள்ளது. பிறகு அது மருவி கோமுட்டி செட்டியார் என மாறியதாக காஞ்சி ஃபோரம் குறிப்பிடுகிறது.

மொத்தத்தில் ரிஷப தேவரின் இரண்டாவது பிள்ளையான பாஹுபலி, போர் தொழிலில் இருந்து விலகி, ஆட்சியதிகாரங்களை பரதனுக்கு விட்டு கொடுத்து விட்டு, விவசாயம், வியாபாரம், பசுக்களை பராமரித்து பால் தொழில் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதுடன், அறத்தை போதித்து மக்களுக்கு நல்வழிகாட்டும் (மார்க்கம்) பணியில் ஈடுபட்டார் என்பது தெரியவருகிறது.

இதனை எடுத்துக்காட்டவே, கோமுட்டீஸ்வரர் உருவத்தின் மீது பசுமை ஒரு கொடியாக படர்ந்துள்ளது போல பொறிக்கப்படுகிறது. விலங்குகளின் நண்பன் இவர் என்பதை உணர்த்த காலடியில் பாம்புகள் விளையாடுகின்றன என்பதை நாமாகவே புரிந்து கொள்ள வேண்டியதுதான் :))

//A sect among Hindus is known by the name "Komutti Chettiar". The reason for that name can be explained. Bhagavad Gita says "krishi gorasya vanijyam vaisya karma swabhavajam". This indicates that vaisyas have to do agriculture, trade and gosamrakshanam as their dharma. Gosamrakshanam means feeding cows with their own hand (mushti) with hay or other fodder. As they fed the cows with their mushti (fist), they were originally called 'gomushti', which got corrupted and became 'komutti chettiar', the name used today. The term ‘shreshta’ refers to the best and great person. 'Shreshtas' are people, living frugally by reducing personal expenses, contribute to dharma. Shreshta became 'chettiar'.//

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

N D Logasundaram

unread,
Jun 13, 2014, 5:16:31 AM6/13/14
to mintamil, வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, தமிழ் மன்றம், podhuvan sengai, Sivakumar M A, thamizayam, adi...@shaivam.org, Raji M, resp...@shaivam.org
அன்புள்ள மடலாடருக்கு,

கோம டே சு வரர் உருவம்தான் என இப்போது தெரிய வந்துள்ளது
பற்றி மகிழ்ச்சி நான் வைக்க நினைத்த மடலை நிறுத்திவிட்டேன்
நிற்க ,
நான் இப்போது கேட்க நினைப்பது 

உருவ வடிவமைப்பு கலையில் (ICONOGRAPHY) ஓர் தரம் தாங்கும்
மரபு வேண் டும் எனும் உணர்விற்காகவே பல  சில்ப சாத்திர நூல்கள்
தோன்றின 

அவைகளில் உள்ள சில  மரபுகளில் நான் அறிந்தவை சில 

1) வானம் அல்லது காற்று வெளி என்பதைக்காட்ட சில பறக்கும் பறவைகளை இட்டிருப்பர்,
2) நீருள்ள இடம் என்பதனை நீந்தும் மீன்களால் காட்டுவர்
3) யாளியின் உருவம் மிகப்பெரிது எனக்காட்ட அது தன்  துதிக்கையால் ஓர் யானையை சுழற்றுவதுபோல் காட்டுவர்
4) ஆண் / பெண்தெய்வங்களின் திருவாசிகள்  முறையே லிங்க வடிவாகவும் (Semicircular top )
 கவிழ்ந்த இலை (HEARTS shaped top )வடிவாகவும் அமைப்பர் 

இவ்வழி உருவ வடிவமைப்புக் கலையில் உள்ள பொதுவான மறைமுக காட்டு நிலைகளைப்போல்
  
இந்த கோமடீசுவர உருவத்தில் காட்டப்பட்டுள்ள படரும் கொ டி எதனைக் குறிகின்றது ???

திருவாளர் பானு குமார் அவர்களைப்போல் சமணம் தொடர்புடையவர்தான் பதிலளிக்க வேண்டும்
எனக் கருதாமல் எவராயினும் தங்கள் அறிவினில் பட்டதை வைக்கலாம்

இங்கு காட்டப்பட்டுள்ள படரும்  கொடிகளை/இலைகளை வைத்து  இந்த   தாவரவகை வகையைச்
சார்ந்ததுஎன மிகவும் கூர்ந்த நிலைக்குச் செல்லாமல் பொதுவாக ஏதோ ஒனறினைக்குறி ப்பதாகக் 
கருதுவதைக் கா ட்டலாம். 

முல்லைப்பூ பல்லி னுக்கு  எடுத்துக்காட்டு என்றால் வெண்மை  நிறம் மட்டும் தான பார்க்கவேண்டுமே
அன்றி அதன் மிருதுதுத் தன்மையை பார்க்ககூடாதல்லவா? உவமை நிலை எடுத்துக்காட்டுகள் யாவும் 
ஓர் கருத்தினை நன்கே விளங்க வைக்க வந்ததன்றி முழுதும் கொண்ட கருத்திற்குச் சான்றாக ஆக அல்ல
 என்பதை அறிவீ ர்கள் 

என் கருத்து:

கோ மடேசுவரர் எனும் தெய்வமாயினார் நின்ற நிலையிலேயே பல காலம் தியானத்தில் ஆழ்ந்தார்
(தியான நிலை கோமடசு வர மூர்த்தம்) அதனால்  அவர் மேல்  வளரும் பயிரினங்கள் தங்கள்
 வழி அருகுள்ள  கிடைக்கும் பொருள்கள்  மேல்ப டர்ந்தது என்பதனை  மட்டும் காணவேண்டும்
சிலமுனிவர்கள் காட்டில் தவம் செய்யும் போது  தங்கள் மேல் கரையான் புற்றுகள் கூட வளர்ந்தது
 எனபடித்ததுண்டு அல்லவா// அதற்கு இணையாகவே இதனைக்கான்கின்றேன் அதனால் தான் புற்றில்
 வாழும் பாம்புகள் மட்டும் காணப்படுகின்றன. கீழே புற்று கூட இருக்கின்றது என நினைக்கின்றேன் 
பாதம் அதற்குக்கீழ் படம் காணவில்லை
அதான்று மிகப்பெரிய உருவம் மிகப்பெரிய தெய்வம் எனக்கட்டவே எழுந்தது எனலாம் 

இவ்வழி முன்பு ஒரு மடலில் ஆதிச்சூடி பற்றியதில் வேறு ஒரு கருத்து ஏழுதி இருந்தேன்
 
தீர்தங்காரர்கள் என்றாலும் கௌதம புத்தர் என்றாலும் அவர்களின் காது களின் துளை கள் மிக மிக நீளமாக 
காட்டப்படுகின்றன 

சிவபெருமானின் மூர்த்தங்களில் இடது கா தில்(பனைத்)தோடும் வலது காதில் குழையும் காணப்படும்(தோடு பெண்பாகம்)
மதுரை கேரளம் பகுதிகளில் இன்றும் காதில்  ஓலைகள் என்பர் நீண்டு தொங்கும் சிலவேளை தோளில் கூட இடிக்கும்
 அளவு நீடு விடும் 

அவ் வழி மேல் குறித்த தீர்தன்காரர்களின் புத்தபிரானில் காதுகளில் துளை கள்  மிக நீண்டு காணப்படுவதன் காரணம் என்ன ???
அவர்கள் காதில் ஏதும் அணிவதும் இல்லையே அவ்வாறு இருக்க நீண்ட துளைஏன் ??? 

அன்புடன் 
நூ தா லோ சு 
மயிலை 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Jun 13, 2014, 5:42:35 AM6/13/14
to mintamil
வேட்டை, களவு போன்ற தொழில்களை கைவிட்டு மக்களை விவசாயத்தை நோக்கி திசை திருப்பியவர் என்பதால் கொடிகள் வரையப்பட்டு இருக்கலாம்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது சொல்லாடல். அப்படிப்பட்ட பய உணர்வை வென்றவர் என்பதை வெளிப்படுத்த காலடியில் பாம்புகளை அமைத்திருக்கலாம்.

தவிர ஹரிஹந்த் என்ற பட்டம் எல்லா தீர்த்தங்கரர்களுக்கும் வழங்கப்படுவதல்ல. சித்த தன்மைக்கு முந்தைய நிலை ஹரிஹந்த் எனப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே அப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முதல் முதலில் இப்பட்டம் பெற்றுள்ளவர் பாஹுபலி. ஆங்கிலத்தில் ஹரிஹந்த் என்பதை “ Vanquisher of enemies " என குறிப்பிட்டுள்ளது. அதை மொழி பெயர்த்தால், “ எதிரிகள் முளைக்க “ என அர்த்தம் வருகிறது.

எனில் பாஹுபலி எதிரிகள் உருவாக காரணமானவர் ??

வழக்கமான, போர் அடிப்படையிலான சமூக வாழ்வியல் முறையை மாற்றி, ஆட்சிமுறையை ஏற்படுத்த முயன்றதாலா ?

ஹரிஹந்த் = " Conqueror "  என்றால் வெற்றி வீரன் என பொருள் வருகிறது !!

N. Ganesan

unread,
Jun 13, 2014, 9:31:08 AM6/13/14
to mint...@googlegroups.com
இந்திய பக்தி இயக்கத்தின் தோற்றம் - பூப்பொலி, மலர்சூடல், அபிடேகம் போன்றவை
சிரமண சமயங்களில் இருக்கிறது, முதன்முதலாக இலக்கியங்களிலும், சிறப்ங்களிலும்
இந்தியாவில் பதிவாவது பௌத்தம், சமண சமயங்களிலே என்று ஆனந்த குமாரசாமி
முதல் பல அறிஞர்கள் நூற்றுக்கணக்கான நூல்களில் எழுதியுள்ளனர்.

மத்தகாபிடேகம் அத்தகைய மரபுகளின் ஒரு தொடர்ச்சி.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jun 13, 2014, 9:56:35 AM6/13/14
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, Banukumar Rajendran, podhuvan sengai
On Wednesday, June 11, 2014 9:58:29 PM UTC-7, தேமொழி wrote:

சுபா வழங்கிய...

 "பார்சுவநாதர்" (Pārśvanātha) படத்தில் அவர் சூடியிருப்பதென்ன ஆத்தி / Athi tree (Ficus glomerata) ?

 காணொளி :http://youtu.be/Xs9MRS3hKiM

தேமொழி அவர்களுக்கு,

இக் காணொளியில் காட்டியிருப்பது: அத்திமரம். 

അത്തി മരം (= அத்திமரம்) என்று  யுட்யூப் காணொளியில் 

எழுதியும் உள்ளார்கள். பார்க்கவும்.

அத்திமரம் வேறு; பார்சுவநாததேவரின் கேவலஞான விருட்சம் - ஆத்திமரம் - அன்று.
அயோத்திதாசர் போதிசூடி புத்தரை ஆத்திசூடி என்றார். ஆத்திமரம் போதிமரம் இல்லையாகலால்
அயோத்திதாசர் தவறான பொருள் சொல்லியிருக்கிறார் என்பது வெள்ளிடைமலை.

ஆத்திசூடியாய் பாகல்வண்ண தீர்த்தங்கரர் ஆத்திமரம் சூழ வ்யாபித்து -தாதகிவலயராய்
அமர்ந்திருக்கும் சிற்பங்கள், ஓவியங்கள் பல.
அவற்றில் சில முன்னரே தந்துள்ளேன்:

ஆத்திசூடி அமர்ந்த தேவன் இன்னோர் உதாரணம் - பாருங்கள்:
பாம்பின் தலைகள் - தரணேந்திரன் அவர் தவத்தைக் காத்தமை காட்டுகிறது.
அதன் மேலே ஆத்திமரம் பொன்னாலான விளிம்புடன் காட்டப்படுகிறது.
தீர்த்தங்கரரின் ஞான விருக்ஷம் ஆகையினால் பொன்னேபோல் போற்றுகின்றனர்.
தமிழுக்கு எழுத்துத் தந்தோர் சமணர்கள். பள்ளிக்கல்வி உருவான காலத்தில்
ஆத்திசூடி தேவரைத் தொழுது தொடங்கியுள்ளனர். சோழனுக்கு ஆத்திசூடி
சுவாமியின் அடியார் ஆகிய சமணத் துறவி ஆத்தியை குலமரம் என்று
கொள்ளச் செய்திருக்கலாம். ஆத்தியை சோழனுக்கும், பார்சுவருக்கும்
கூறும் பழைய பாட்டுகள் வீரசோழியத்தில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன.

நா. கணேசன்

Dr. N.Kannan

unread,
Jun 13, 2014, 9:59:03 AM6/13/14
to mint...@googlegroups.com
சமணம் சௌக்கியமாக இருக்கிறது. என்று தெரிகிறது. ஆனால், பௌத்தத்தின் சுவடு கூட இல்லையே! அதிசயமாக உள்ளது!!

க.

N. Ganesan

unread,
Jun 13, 2014, 10:27:13 AM6/13/14
to mint...@googlegroups.com

On Friday, June 13, 2014 6:59:03 AM UTC-7, N. Kannan wrote:
சமணம் சௌக்கியமாக இருக்கிறது. என்று தெரிகிறது. ஆனால், பௌத்தத்தின் சுவடு கூட இல்லையே! அதிசயமாக உள்ளது!!

க.

சமணம் வாழ முக்கியக் காரணம் சளுக்கர், (= சாளுக்ய)  என்னும் வேளிர். கர்நாடக வேந்தராய் சமயப்பொறை இந்தியாவில்
காட்டிய முதல் அரைச குடியினர். இராமானுஜரும் அம்மரபினால் தான் அங்கே போய் வாழ முடிந்தது.
மணவினைத் தொடர்பால் ராஷ்ட்ரகூடர்கள், பின்னர் சோலாங்கி என்று ராஜஸ்தானில் அரசர்கள், அதன் பெண்மணிகள்,
... சமணம் அழிய விடவில்லை. யஷ்வந்த் மல்லையா என்ற கம்ப்யூட்டர் ஸயன்ஸ் பேராசிரியர் கொலராடோவில்
இருக்கிறார். ஹிந்திக்காரர், என் நண்பர். அவர்தான் சோலாங்கி என்னும் பெயர் சாளுக்ய: சாலுங்க என்னும் பெயரின்
மாற்றம் என்று எனக்கு விளக்கினார். 

பௌத்தம் நேரடியாக ஹிந்துயிஸத்துடன் மோதியது. பௌத்தத்தின் கண்டுபிடிப்புகள் பலவும் தத்துவரீதியாய்
ஹிண்டுயிஸம் உள்வாங்கி பௌத்தத்தை ஜீரணித்துவிட்டது. அது நடட்ந்தபின்னர் பிஹாரிலும், வங்கத்திலும்
துருக்கர் சுல்தான்கள் ஆட்சி பௌத்தத்தின் கடைசி blow. எனவே, இந்தியாவில் பௌத்தம் பட்டுவிட்டது.
அயோத்திதாசர் (கோவைக்காரர்) ஊட்டி போன்ற ஊர்களில் பீஃஃப் கறி செய்யும் குசினிச்சேரிகளுக்கு சென்ற
முன்னோர்களை உடையவர். கிறித்துவ பாதிரியார்கள் ஊட்டிய கல்வி அறிவாலும், ஐரோப்பியர்கள்
கண்ட புத்திஸ தொல்லியலாலும் சிங்களத்தில் புத்தம் மறுவாழ்வு கண்டது. அங்கு சென்று கற்கச் சொன்னவர்:
’கர்னல்’ ஆல்காட் (மேடம் ப்லாவட்ஸ்கியும், ‘கர்னல்’ ஆல்காட்டும் சென்னையில் நியோ-புத்திஸ விதை
விதைத்தனர். அயோத்திதாசருக்கு ஆதரவு நல்கியவர் ந்யூ ஜெர்சியில் இருந்து வந்த “கர்னல்” ஆல்காட்தான்.
அயோத்திதாசர் கோலாரில் பௌத்தம் வளர்த்தினார். பின்னர் பாபாசாகிப் அம்பேத்கார் அதை பெரிய
ரிலிஜனாக மாற்றினார். அம்பேத்கார் தலித்களுக்கு பல ஆயிரம் வருஷமாய் இன்னல் இழைக்கும்
ஹிந்துயிஸம் வேண்டாம். ஆனால், மத்யகிழக்கின் கிறித்துவமோ, இசுலாமோ தனக்கு சரிப்படாது.
புத்தரின்  பௌத்தம் மீண்டும் தழைக்க வழிகோலினார். முக்கியமாக மகாராஷ்ட்ர தலித் மக்கள்,
இந்தியாவில் இருந்து எல்லா ஜாதியினரும் (ஆனால், பெரும்பான்மை தலித் மக்கள்) பௌத்தம் 
வளர்த்துவருகின்றனர். புத்தர் ஆரம்பித்த பௌத்தம் 21-ஆம் நூற்றாண்டில் எத்தனை % ஆகிறது என்று பார்க்கணும்.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 13, 2014, 11:35:12 AM6/13/14
to mintamil

வணக்கம் .
பௌத்தம் மாணிக்கவாசகர் காலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது .

ஆனால் திருஞானசம்பந்தர் காலத்தில் சமணம் அழிக்கப்பட்ட வில்லை .
வாதில் தோற்றோர் அவர்களாகவே கழுவேறினர்.

சமணம்

On 13-Jun-2014 7:29 pm, "Dr. N.Kannan" <navan...@gmail.com> wrote:
>
> சமணம் சௌக்கியமாக இருக்கிறது. என்று தெரிகிறது. ஆனால், பௌத்தத்தின் சுவடு கூட இல்லையே! அதிசயமாக உள்ளது!!

>
> க.
>

செல்வன்

unread,
Jun 13, 2014, 4:44:13 PM6/13/14
to mintamil
சமணம் எந்த அளவு பொதுமக்கள் மதமாக இருந்தது என்பது ஆய்வுகுரியது.

உலகில் எந்த நாட்டிலாவது, எந்த காலகட்டதிலாவது எதாவது ஒரு நிலபகுதியில் பெரும்பாலான மக்கள் சைவர்களாக இருந்ததாக வரலாறு உண்டா?

மொத்த தமிழ்நாடும் சைவமாக இருந்திருக்க கூடிய வாய்ப்புகள் என்ன? பூஜ்யம்.

சமுகத்தில் செல்வாக்கு மிக்க சிலர் சமணராக இருந்திருக்கலாம். மற்றவர்கள் அச்சமயத்தை பெருமளவில் பின்பற்றி இருக்கும் வாய்ப்பு குறைவே
--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

Prakash Sugumaran

unread,
Jun 14, 2014, 1:10:35 AM6/14/14
to mintamil
ஆடைகளை துறந்து நிர்வாணமாவது, உச்சகட்ட பரி நிர்வாண நிலை என சமண தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களை கொண்டு முடிவுக்கு வருவது சரியல்ல என்றே தோன்றுகிறது.

ஆடைகள் அணியும் கலாச்சாரம் தோன்றுவதற்கு முன்பு வழிபடப்பட்ட தெய்வ வடிவங்களாக இவர்கள் இருக்கலாம்.

மற்ற சமயத்தவர்கள் காலத்துக்கு ஏற்ப தங்கள் கடவுளர் வடிவங்களை மாற்றி கொண்டது போல இல்லாமல், இவர்கள் அதே வடிவங்களை தொடர்ந்து வழிபட்டு வருகிறார்கள்.

எல்லா சமயங்களிலும் சைவ - அசைவ உணவு வழக்கம் உள்ளது. குறைந்தபட்சம் குறிப்பிட்ட தினங்களில் அசைவம் தவிர்க்கப்படுகிறது.

முழுமையாக அசைவத்தை தவிர்க்கும் ஒரே சமயம் சமணம் மட்டுமே.

தேமொழி

unread,
Jun 14, 2014, 1:52:37 AM6/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///இந்த கோமடீசுவர உருவத்தில் காட்டப்பட்டுள்ள படரும் கொ டி எதனைக் குறிகின்றது ???///

ஆமாம் ....சிற்பக்கலை அடிப்படையில் எதனைக் குறிக்கிறது? எனக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.  
சிற்பக்கலையில் உருவ வடிவமைப்பு கலை என்பது எளியோரும் புரிந்து கொள்ள அமைக்கப்பட்டது எனக் கருதுகிறேன்.  என் போன்றவர்களுக்கு கையில் வேல் வைத்திருப்பவர் முருகன், சூலம் வைத்திருப்பவர் சிவன், வீணை வைத்திருப்பவர் வாணி என்று இது புரிந்து கொள்ள உதவும் முறை.  

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியக் கோடி இருபது போல, ஒவ்வொரு தீர்தங்கரருக்கும் ஒரு மரம் போன்ற குறிப்புகளும் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.  அடியற்ற நிலையில் உள்ள தீர்தங்கரகளை பிறகு எவ்வாறு வேற்படுதி காட்ட இயலும்? 

///தீர்தன்காரர்களின் புத்தபிரானில் காதுகளில் துளை கள்  மிக நீண்டு காணப்படுவதன் காரணம் என்ன ???
அவர்கள் காதில் ஏதும் அணிவதும் இல்லையே அவ்வாறு இருக்க நீண்ட துளைஏன் ???///

இதுவும் ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு கேள்வி.  
அடிப்படையில் அரச குல மக்களாக இருந்தவர் பின்னர் அதனைத் துறந்து துறவறம் மற்கொண்ட பொழுது தங்களது அரச வாழ்வின் எச்சங்களான அணிகலன்களை ... அதாவது மகரநெடுங்குழைக்காதன் போல பெரிய காதணிகள், பாம்படம் போன்ற காதணிகள்  அணிந்திருந்தவர்கள் அணிகலன்களையும் துறந்திடுருக்க வேண்டும்.  

          இங்கு ஒரு மகரநெடுங்குழைக்காதன்

அதனால் "வடிகாது" கொண்டவர்கள் காது அந்த அமைப்பிலேயே நிலைத்து அமைந்து விட்டிருக்கலாம்.  சாதாரண பொதுமக்கள்  அரசகுல மக்கள் போலன்றி கடுக்கன் போன்ற  சாதாரண தோடுகளை அணிந்திருக்கக் கூடும் (பார்க்க : http://nadarhistoricalcentre.blogspot.com/2014/02/blog-post.html#.U5sYgvldUQE).

இது என் கணிப்பே.

தேமொழி

unread,
Jun 14, 2014, 1:56:49 AM6/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///அடியற்ற நிலையில் உள்ள தீர்தங்கரகளை பிறகு எவ்வாறு வேற்படுதி காட்ட இயலும்? //.

ஆடையற்ற  நிலையில் உள்ள தீர்த்தங்கரர்களை  பிறகு எவ்வாறு வேறுபடுத்திக்  காட்ட இயலும்? 

Dr. N.Kannan

unread,
Jun 14, 2014, 2:19:41 AM6/14/14
to mint...@googlegroups.com

Sent from Samsung Mobile

-------- Original message --------
From: Prakash Sugumaran

முழுமையாக அசைவத்தை தவிர்க்கும் ஒரே சமயம் சமணம் மட்டுமே.
+++++
Ecologically, very sound decision. தொலைநோக்குக் கொண்ட பார்வை!

க.

N D Logasundaram

unread,
Jun 14, 2014, 2:24:17 AM6/14/14
to mintamil
ஆடைகளை துறந்து நிர்வாணமாவது, உச்சகட்ட பரி நிர்வாண நிலை என சமண தீர்த்தங்கரர்களின்
திருவுருவங்களை கொண்டு முடிவுக்கு வருவது சரியல்ல என்றே தோன்றுகிறது.

அய்யா சுகுமாரன் நீங்கள் தடம் மாற்று கின் றீர்களே இங்கே  பேசுவது சமணபரிவாண நிலை பற்றி அல்ல
  
இழையில் உள்ள கருத்து தீர்த்தங்கரரின் வடிவ அமைப்புபற்றி  அதனில் உள்ளது அத்தி / ஆத்தி ரம் 
என்பது போல்வன இதனைப்பபற் றிப்பே சுவதில் தவறொன்று மில்லை இதனால் பரிநிர்வாண
நிலைக்கு ஒன்றும் ஆகிவிடாது 

மடல் தொடர்புக்காக சிற்ப கலைகளில் உள்ள மரபுகள் பற்றி அதனைப்பறி உங்களுக்கு தெரிந்தவற்றை
பற்றி பேசங்களேன் 

நிற்க 

இந்த கோ மடீச்வரரின் பாதங்களின் உருவம் நன்றாக ஆய்வுநிலையில் நோக்க வேண்டும் அது 
ஓர் புற்று தானா அ ல்லவா?என்று ஏனெனில் வெளியே தலைநீட்டும் பாம்புகள் காணப்படுகின்றன 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 

Prakash Sugumaran

unread,
Jun 14, 2014, 3:10:59 AM6/14/14
to mintamil
//சுகுமாரன் நீங்கள் தடம் மாற்று கின்றீர்களே//
வணக்கம். நிர்வாண நிலை குறித்த பதிவு தங்களுக்கானது மட்டுமல்ல.

வடிவம் குறித்து அறிய வேண்டுமெனில் சிற்ப சாத்திரத்தை அணுகலாம். உதாரணமாக, சிற்ப சாத்திரப்படி,

பாம்பு - யோகத்தின் அடையாளம்.

யோகத்தை காலடியில் கிடத்தி வைத்திருப்பது ஞானத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்ற நிலை என்பதை குறிக்கும். தோளில் பாம்பிருந்தால் யோகத்தை கொண்டாடுபவர், அவ்வப்போது யோகத்தை வெளிப்படுத்துபவர் என்று பொருள்.

காது நீண்டிருப்பது அதீத ஞானம் அடைந்தவர் என்பதை குறிக்கும்.

( மனித உடலில் இறப்பு காலம் வரை வளரும் தன்மை கொண்ட ஒரே பகுதி காது. வயது முதிர்ந்த நிலையில் கூட முக அமைப்பு சுருங்கும் காது நீண்டு வளரும் )

கைகளில் முத்திரை வைத்திருக்கும் நிலை, விரல்கள் ( குறிப்பாக சுண்டு விரல் ) மார்பில் பதிந்த நிலை ஆகியவை ஞான மார்க்கத்தில் பயணம் செய்வதை குறிக்கும். முழுமையான ஞானத்தை எட்டாதவர், அதற்கான பயணத்தில் இருப்பதை குறிப்பிட, காது குறுகலாக வடிக்கப்பட்டு இருக்கும்.

சிற்ப சாத்திரம் முறைபடுத்தப்படாத காலகட்டத்தை சேர்ந்த சிலைகளாக இருப்பின், சமூகப் பார்வையில் புரிந்து கொள்ள, ஏற்கனவே சொன்னபடி,

வேட்டை, களவு போன்ற தொழில்களை கைவிட்டு மக்களை விவசாயத்தை நோக்கி திசை திருப்பியவர் என்பதால் பசுமையான கொடிகள் வரையப்பட்டு இருக்கலாம்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது சொல்லாடல். அப்படிப்பட்ட பய உணர்வை வென்றவர் என்பதை வெளிப்படுத்த காலடியில் பாம்புகளை அமைத்திருக்கலாம்.

Prakash Sugumaran

unread,
Jun 14, 2014, 3:22:52 AM6/14/14
to mintamil
உள்ளங்கைகள் தொடைகளை நோக்கி இருப்பது அடக்கத்தை குறிக்கும். ஆணவத்தை இழந்த நிலை.

கைகள் தொடைகளை தொடாமல் இருப்பது உயிர்ப்பை குறிக்கும். தொட்டபடி இருந்தால் “ மறைந்த “ என பொருள்.

Prakash Sugumaran

unread,
Jun 14, 2014, 3:48:45 AM6/14/14
to mintamil
காலடியில் இருப்பது புற்று அல்ல - த்வீபம் என்று பொருள்.

த்வீபம் - ஜம்பு தீவு.

அப்போதைய காலத்தில் 3 பட்டங்கள் வழக்கில் இருந்தன.

1) சக்ரவாள சக்ரவர்த்தின் - 4 கண்டங்களில் அறம் நிலைக்க செய்பவன் - உதாரணம் - பரதன்.
2) த்வீப சக்ரவர்த்தின் - ஜம்பு தீவில் அறம் செலுத்துபவன் - ஆதீஷ்வர், பாஹுபலி.
3) சக்ரவர்த்தின் - மேலே உள்ளவர்கள் நியமிக்கும் ப்ரதேச ப்ரதிநிதிகள் - ப்ரஜாபதி.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முக்குடை வழங்கப்படும். அவர்கள் 3 கண்டங்களில் அறம் செலுத்தும் தகுதி படைத்தவர்கள்.

சமண புராணங்களின் படி காந்தாரம் முதல் அங்கம் வரை ஒரு கண்டம். ஹஸ்தினாபுர் முதல் ஆனந்த பர்வதம் வரை ஒரு கண்டம் என தெரிய வருகிறது. மீதி 2 எப்பகுதிகள் என தெரியவில்லை.

Banukumar Rajendran

unread,
Jun 14, 2014, 3:52:20 AM6/14/14
to மின்தமிழ்
On Fri, Jun 13, 2014 at 10:32 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
ரிஷபதேவருக்கு 12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும்
மஸ்தகாபிஷேகம் - 

தேவ் ஐயா, இடபதேவருக்கல்ல அவருடைய மகனுக்கு! :-)

இரா.பானுகுமார்,
சென்னை

அடுத்த நிகழ்ச்சி 2018ல்

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Jun 14, 2014, 5:46:08 AM6/14/14
to mintamil
சிற்ப சாத்திரம் முறைபடுத்தப்படாத காலகட்டத்தை சேர்ந்த சிலைகளாக இருப்பின், சமூகப் பார்வையில் புரிந்து கொள்ள, ஏற்கனவே சொன்னபடி,

வேட்டை, களவு போன்ற தொழில்களை கைவிட்டு மக்களை விவசாயத்தை நோக்கி திசை திருப்பியவர் என்பதால் பசுமையான கொடிகள் வரையப்பட்டு இருக்கலாம்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது சொல்லாடல். அப்படிப்பட்ட பய உணர்வை வென்றவர் என்பதை வெளிப்படுத்த காலடியில் பாம்புகளை அமைத்திருக்கலாம்.

அன்புள்ள சுகுமாரன் 

காட்டப்பட்ட பா ஹுபலி சிற்பம் எந்த காலத்தைச் சார்ந்தது என உங்களால் சொல்ல முடிய வில்லையா?? 

எனினும் இங்கு மேலே உள்ளது நீங்கள் சொல்லும் கருத்துக்கள் உங்கள் மனதில் தோன்றியவை அல்லவா? 

மற்றவை பற்றி நான் கேட்கவில்லை 

நான் வைத்த கருத் து தியான நிலை பாகு பலி ஆழ்நிலை தியானம் கொண்டவர்கள் சலனமில்லாமல் இருப்பார் அதனால்புறச் சூழல் உலகில் என்ன நடக்கின்றது  

 என அறியார் அதனால் அவர்மேல் படரும் கொடி  அவர் தியான நிலையில் சலமில்லாமல் நின்றவர் என்பதனைக் காட்டிகின்றது என வைத்தேன் இதனை நீங்கள மறுகின்றீர்களா? மறுத்தால் எவ்வகையில் மறுப்பு என்பதனை  வைக்க முடியுமா?  

பாமர மக்களுக்கக் உள்ள தல்லாமல் எங்கோ எவரோ நூலிற்குள் எழுதி வாய்த்த விவேக மிக்கவர் களு க்கே அரை குறையாக அறியக்கூடிய தங்கள் சொல்லும்
மேல்தட்டு மக்களின்   அறி வு நிலைக்காக இவ்வித சிற்பங்கள் வடிவமிக்கப்பட்டனவா? 

அப்படி உண்மை என்றால் அவ்வித ஆவணங்களைக் கட்டமுடியுமா? 

அன்புடன் 
நூ தா லோ சு 

மயிலை 

Prakash Sugumaran

unread,
Jun 14, 2014, 8:01:11 AM6/14/14
to mintamil
அன்புள்ள சுகுமாரன் 

//காட்டப்பட்ட பா ஹுபலி சிற்பம் எந்த காலத்தைச் சார்ந்தது என உங்களால் சொல்ல முடிய வில்லையா ?? //

சிற்பம் அமைக்கவென ஒரு சாத்திரம் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் முந்தயவை தீர்த்தங்கர வடிவங்கள். அதே வடிவங்களை சிற்ப சாத்திரம் உருவாக்கப்பட்ட பிறகு, யார் வேண்டுமானாலும் சிற்பமாக செய்ய இயலும். 

// மற்றவை பற்றி நான் கேட்கவில்லை 

நான் வைத்த கருத் து தியான நிலை பாகு பலி ஆழ்நிலை தியானம் கொண்டவர்கள் சலனமில்லாமல் இருப்பார் அதனால்புறச் சூழல் உலகில் என்ன நடக்கின்றது என அறியார் அதனால் அவர்மேல் படரும் கொடி  அவர் தியான நிலையில் சலமில்லாமல் நின்றவர் என்பதனைக் காட்டிகின்றது என வைத்தேன் இதனை நீங்கள மறுகின்றீர்களா? மறுத்தால் எவ்வகையில் மறுப்பு என்பதனை  வைக்க முடியுமா?  //

மேலோட்டமாக சொல்வதெனில் மேலே கொடி படர்வது கூட தெரியாமல் காட்டில் தியானம் செய்தார் என்று சொல்லலாம். ஏற்கனவே அதை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஆனால் ஜைன தத்துவ, மரபு அடிப்படையில் அப்படி சொல்ல முடியாது.

ஜைனம், பவுத்தம் போன்ற தத்துவ மரபுகள் கற்பனையான ஒன்றை எந்த நிலையிலும் ஒப்புகொள்ளாத நஷ்டிக கல்வியின் கிளை தோன்றல்கள். காட்சி என்பதில் மிகுந்த கவனம் செலுத்துபவை. கடவுள் உருவத்தை கூட அப்படி இருப்பார், இப்படி இருப்பார் என்று புனைவதை எதிர்த்து, அரூபமாக வைத்தவை. அதனாலேயே ஜைன கோவில்களில் கடவுள் வடிவங்கள் ஏதுமில்லாமல், தத்துவங்களை எடுத்துரைத்த தீர்த்தங்கரர்களையே வழிபடும் வழக்கம் உருவானது.

சர்ச்களில் சிலுவையும், ஏசுபிரான் உருவமும் வணங்கப்படுவது போல.

” நற்காட்சி “ என்ற தத்துவ அடிப்படையில் மட்டுமல்லாமல், சிற்ப சாத்திரத்திலும் கூட பின்னி பிணைந்த கொடிகளை பசுமைக்கு உருவகமாக கொண்டுள்ளனர். பிற்காலத்தில் அதுவே மலர்கள் மேல் அமர்வது, கைகளில் பூக்களை வைத்திருப்பது, மரங்கள் என வரையப்பட்டது. அவற்றுக்கான அர்த்தங்களும் மாறி மாறி சொல்லப்படுகிறது.

எனவே பாஹுபலி மீது படரும் கொடிக்கு பசுமை என்பது மட்டுமே உருவகம்.

//பாமர மக்களுக்கக் உள்ள தல்லாமல் எங்கோ எவரோ நூலிற்குள் எழுதி வாய்த்த விவேக மிக்கவர் களு க்கே அரை குறையாக அறியக்கூடிய தங்கள் சொல்லும்
மேல்தட்டு மக்களின்   அறி வு நிலைக்காக இவ்வித சிற்பங்கள் வடிவமிக்கப்பட்டனவா? //

இங்கு தங்களால் எழுதப்பட்டுள்ளவற்றையே என்னால் சரிவர விளங்கி கொள்ள முடியவில்லை. பிறகு தத்துவ மரபுகளின் அடையாளங்கள் குறித்து எப்படி ஆராய்வது ? :))

// அப்படி உண்மை என்றால் அவ்வித ஆவணங்களைக் கட்டமுடியுமா? //
உண்மையில் எதற்கு ஆவணம் காட்ட வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

இருந்தாலும் புரிந்த வரையில் ஒரு வித்தியாசத்தை சுட்டி காட்டுகிறேன். இந்து கடவுளர் வடிவங்களில் உள்ள விலங்கு சிற்பங்களுக்கும், ஜைன கோவில்களில் தீர்த்தங்கரர்களுக்கு அருகே வரையப்பட்டுள்ள விலங்குகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அது என்ன என்று விளக்கமளியுங்களேன்.

Dev Raj

unread,
Jun 14, 2014, 4:46:12 PM6/14/14
to mint...@googlegroups.com
On Saturday, 14 June 2014 00:52:20 UTC-7, இரா.பா wrote:
...இடபதேவருக்கல்ல அவருடைய மகனுக்கு! 

தவற்றைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
கோமடேசுவரர் பெயருக்கான காரணமும்
கூறினால் நல்லது

தேவ் 

Dhivakar

unread,
Jun 15, 2014, 2:08:15 AM6/15/14
to மின்தமிழ்
அன்புள்ள தேவ்

கோமடேஸ்வரர் பற்றிய ஜைன தகவல்கள் பல இணையத்தில் உள்ளன. சிலவிதமான தகவல்கள் குழப்பவும் செய்கின்றன.

நான்  விசித்திரசித்தன் நாவல் எழுதும்போது இதற்காக தென் ஆந்திரத்திலும் கர்நாடகத்தில் சிரவணபெலகுலா பகுதிகளுக்கும் சென்றேன். இந்த புதினம் நிறுவன சமயமான சமணம் எப்படி ஏன் தமிழகத்தில் அழிந்தது என்பதைப் பற்றியது.

இதைப் பற்றிக் குறிப்பிடும்போதுதான் கோமதி முனிகளைப் பற்றிய தகவல் தன் ஆந்திரத்தில் கிடைத்தன. இவரைப் பற்றிய புத்தகமும் தெலுங்கில் ‘தெலுகுப் பல்கலைக்கழகம்’ வெளியிட்டுள்ளது. ஆனால் கர்நாடக கோமடேஸ்வரருக்கும் கோமதி முனிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை இப்புத்தகம் தெரிவிக்கிறது.

சாத்வீகமான வகையைச் சார்ந்த சமணத்தின் மதகுருவான கோமதி முனிவர்களின் சீடர்கள் அனைவரும் வணிகர்களே. இவரது காலம் மூன்று நூற்றாண்டு- ஆராம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்பது கணிப்பு. கிருஷ்னை நதி அமராவதி, (தான்யகடகம்) யைச் சார்ந்தவர். இந்த தான்யகடகமும் விஜயபுரி (நாகார்ஜுனசாகர்) இரண்டும் மிகப் பெரிய நகரங்களாக அந்தக் காலத்தில் இருந்தது. அமராவதி ஒரு நதித் துறைமுகம் கூட. 

இவருடைய காலத்தைப் பற்றிப் படிக்கையில் இந்தத் தென் ஆந்திரப்பகுதியில் ஆரம்பகாலத்தில் மதங்கள் எப்படி செயல்பட்டன.. புத்தத்துக்கும் ஜைனத்துக்கும் பற்றிய கருத்து வேறுபாடுகள், ஜைனத்துக்குள்ளேயே இருந்த பிரிவுகள், நிறுவனமயமாக்கப்பட்ட சமணத்தில் உள்ள குறைபாடுகள், மதகுருக்களுக்கும் அரசர்களுக்கும் உள்ள உடன்பாடுகள், ஜைனமதக் கல்வி பற்றிய பரப்புதலில் ஆண் பெண மாணவர், ஆசிரியர்கள் பங்களிப்பு என பல தகவல்கள் கிடைத்தன.

இவையெல்லாம் வரிசைப்படுத்தியே என் புதினம் எழுதப்பட்டது. கோமதி முனியும் ஒரு பாத்திரம்தான். இப்புத்தகத்தில்
அவர் மனமாற்றம் அடைவதாகவும் அவரைச் சார்ந்த வணிகர்கள் வேதகாலக் கோத்திரத்தை ஏற்றுக் கொண்டு கன்யகாபரமேஸ்வரியை வழிபடுதெய்வமாக துதிக்க ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டேன். கோமதியின் சீடர்களே கோமுட்டியர் என மருவியதாகவும் சரித்திரச் சான்றுகள் உள்ளன. 

தென் ஆந்திரத்தில் கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை (முக்கியமாக அரசகுலமான க்ஷத்திரிய, வணிக குலமான வைசியம்) கோத்திரக் குழப்பங்கள் ஏராளமாக இருந்ததற்குக் காரணம் மதங்களும் அவற்றைப் பின்பற்றிய ஆச்சாரியர்களும்தான். பிராம்மணரான நாகார்ஜுனர் பௌத்தத்தில் மாபெரும் ஆச்சாரியராக மாறியவுடன் அவரைப் பின்பற்றிய அரசர்களும் கோத்திரங்களைக் களைந்தனர். பிரகு பௌத்தம் மறைந்து வேதமதம் மீண்டும் தழைத்தபோது வேதியர் ஆச்சாரப்படி கோத்திரம் ஏற்றுக் கொண்டனர்.  வேடிக்கை என்னவென்றால் தாய் வீட்டாரின் கோத்திரம் இங்கு பல மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேதம் இதை அனுமதிக்கிறதா என்பது தெரியவிட்டாலும் ஒரு மன்னன் வேதமதத்தை மேற்கொண்டுவிட்டான் என்பதற்காக இதை ஒரு சலுகையாக கொடுத்திருக்கலாமோ என்னவோ.. பின் சமணம் கொஞ்சகாலம் ஓரிரு இடங்களில் பீடம் ஏறியபோது மீண்டும் கோத்திரங்கள் இடம் மாறின.. பின் அதுவும் மாறிப்போய் வேதமதம் நிலைபெற்றுப் போனது.

ஆக பாரத கலாச்சாரம் சற்று சீரழிவாகப் போனதற்கு மதாச்சாரியர்களும் தாங்களால் இயன்ற கைங்கரியங்களை செய்து கொண்டுதான் இருந்தனர். ஆகையினால் கோமதி முனிவரின் மனமாற்றம் கோமுத்தியர்கள் மீண்டும் வேதமதத்தில் காலூன்ற தாய்க்குலத்தினரின் கோத்திரங்களும் உதவி செய்தன.

திவாகர்

--

Dev Raj

unread,
Jun 15, 2014, 2:54:29 AM6/15/14
to mint...@googlegroups.com
தெளிவு படுத்தியமைக்கு நன்றி, திவாகர் சார்.

பவுத்தர் கோத்திரப் பெயர்களைக் களைவது 
பின்னால் ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம்.
‘கௌதம புத்தர் ’ என்பதில் ‘கௌதம’ என்பதே
ஒரு கோத்திரப் பெயர்தான். முக்கியமான சீடர்
‘மௌத்கலாயநர்’ ‘மௌத்கல’ கோத்திரம்.
மஹா கச்யபரும் அவ்வாறே. பௌத்த மஹாபண்டிதர்
ராஹுலர் ‘ஸங்க்ருதி’ கோத்திரம். 'ராஹுல’
என்பதே சங்கதப் பெயர்தான். பாலி மொழிச்
சொல்லன்று

அன்புடன்
தேவ்

Prakash Sugumaran

unread,
Jun 15, 2014, 3:35:24 AM6/15/14
to mintamil
திவாகர் ஐயா, கோமட்டேஸ்வரர் குறித்த விவரங்களையும் அளித்தால் சிறப்பாக இருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dhivakar

unread,
Jun 15, 2014, 12:57:09 PM6/15/14
to மின்தமிழ்
பிரகாஷ்!

பகுபலி அல்லதுகோமட்டேஸ்வர், ரிஷபநாதர் புதல்வராகவே தகவல்கள் காண்பிக்கின்றன. புராணத் தகவல்கள் பாரதனின் புதல்வராக ரிஷபநாதரை காண்பிக்கின்றன. பரதமன்னனை பாரதக் கண்டத்தை ஆளும் மூத்த முதல் மன்னராக ஜைன சரித்திரம் குறிப்பிடுகிறது. கோமட்டேஷ்வர் இரண்டாவக்து தீர்த்தங்கரர் என்று இன்னொரு தகவல். இவைகளை எல்லாம் இன்றைய ஜைனர்கள்ஏற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கும்போது அவர்கள் வழியே போவதுதான் நல்லது என நினைக்கிறேன். 

தென்னிந்தியாவில் ஜைனம் பத்ரபாஹு எனும் ஜைனமுனிவரால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது. பத்ரபாஹு முனிவரை கோமடீஷ்வர் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. அவர் கர்நாடகத்துக்கு சந்திரகுப்த மௌரியரையும் பச்ன்னிரெண்டாயிரம் வடநாட்டு ஜைனர்களையும், வடநாட்டில் வரப்போகும் பஞ்சத்தைக் காரனம் காட்டி தென்னக கர்நாடகம் அழைத்து வருவதாகத் தகவல் சொல்கிறது. சந்திரகுப்தர் வயதான காலத்தில் கடைசித் தருணத்தில் பிட்சை ஏந்தியதையும் அநாதையாக  இறந்ததையும் அவர்கள் சரித்திரம் சொல்கிறது. ராஜா பிம்பிசாரர் குருவாக இவரைக் காண்பிக்கும் சில தகவல்கள் வரும்போது அவர் மகாவீரரா அல்லது பகுபலிநாதரா எனவும் குழப்பம் வரலாம். ஆனால் ஜைனர் பொதுவாக சொல்லும் வாதமான ரிஷபநாதர் மகனாகவோ இரண்டாம் தீர்த்தங்கரராகவோ இன்று 52 அடி சிலையாக இருக்கும்கோமட்டீஸ்வரரை ஏற்றுக் கொள்வோம்.. நாம் ஏன் சரித்திரத்தைப் போட்டுக் குழப்பவேண்டும் என்றொரு நல்ல எண்ணம்தான்.

நான் மைசூருக்கு அருகே இன்னொரு கோமட்டேஸ்வர் சிலையைப் பார்த்தேன் (12ஆம் நூற்றாண்டு என்கிறார்கள்).. ஏறத்தாழ 16/18 அடி இருக்கும். இந்தச் சிலையும் (சின்ன)  மலையின் மீது உள்ளது. இந்த மலையின் பெயர் கோமட்டிகிரி. இவருக்கும் மஸ்தாபிஷேகம் உண்டு, ஆனால் வருடத்துக்கொருமுறை செய்வார்கள்.

இன்றும் கூட ஜைனர்கள் கோயில்கள் ஏராளமாகக் கட்டிக்கொண்டே வருகிறார்கள். ஆனால் வடநாட்டு சமுதாயம் மட்டுமே இன்றைய ஜைனர்களாக உள்ளனர் என்பது தெளிவான விஷயம்தான். ஒருமிக நல்ல விஷயம் என்ன்வென்றாலின்றைய ஜைனர்கள் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஒருவேளை மனமாற்றத்தால் ஜைன மதத் தத்துவங்களை  ஏற்றுக்கொண்டாலும் மனமாற்றம் கொண்டோர் அவர்களுடன் இணைந்து பயணப்படமுடியுமா என்பது சந்தேகமே.

இன்னொரு விஷயம் - மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட விஷயமாக இருக்கவேண்டும் எனக் கருதுவோர் எந்தமதத்தையும் யார் அனுமதியும் இல்லாமல் யாரோடும் இணையாமல் பின்பற்றமுடியும்

Prakash Sugumaran

unread,
Jun 15, 2014, 1:27:37 PM6/15/14
to mintamil
உண்மை. ஜைன மதத்தில் மத மாற்றம் செய்ய அனுமதி இல்லை. ஜைன இளைஞரை மணக்கும் வேற்று மதத்தை சேர்ந்த பெண் கூட அவர்களது குடும்ப கோத்திரத்திலேயே பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பவுத்த மதத்தில், சங்கத்தில் இணைய விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளை ஏற்று, கடைபிடித்து குருமார்கள் திருப்தி அடைந்தாலும், குடும்பத்தினரின் முழு அனுமதி பெற்ற பிறகே, அவர்களது முன்னிலையில் பவுத்தராக ஏற்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை.

Prakash Sugumaran

unread,
Jun 15, 2014, 1:33:48 PM6/15/14
to mintamil

ரிஷபநாதர், இக்‌ஷ்வாகு வம்சம், காச்யப கோத்ரம், குஷான் - குர்ஸ பழங்குடியினத்தை சேர்ந்த நபி மற்றும் அயோத்தியை சேர்ந்த மாருதேவி ஆகியோரின் புதல்வன். அவரது முதல் மனைவி சுந்தரி என்கிற சுமங்களாவின் பிள்ளைகள் பரத் மற்றும் ப்ராமி. இரண்டாவது மனைவி சுனந்தாவின் பிள்ளை பாஹுபலி. இவர்களோடு மொத்தம் நூறு பிள்ளைகள்.

அயோத்தியை தலைநகராக கொண்டு வட இந்தியாவை பரதன் தலைமையிலும், மும்பையை ( பொடான்பூர் ) தலைநகராக கொண்ட தென்னிந்தியாவை பாஹுபலி தலைமையிலும் ஆட்சி செய்யும் படி ரிஷபநாதர் வழங்கினார். இறுதி காலத்தில் இமயத்துக்கு சென்று விட்டார்.

ஆனால் பாஹுபலிக்கு, கோமட்டேஸ்வர் என்ற பெயர் வழங்க காரணம் என்ன என்பது புரியவில்லை. தமிழகத்தில் உள்ள பல சமண கோயில்களில் அதே பெயரில் பாஹுபலி வணங்கப்படுகிறார் !!

அதேபோல பரதனுக்கு ஏன் கோயில்கள் இல்லை என்பதும் புரியவில்லை.

Nagarajan Vadivel

unread,
Jun 15, 2014, 1:34:31 PM6/15/14
to மின்தமிழ்

2014-06-15 11:38 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
கோமதி முனியும் ஒரு பாத்திரம்தான். இப்புத்தகத்தில்
அவர் மனமாற்றம் அடைவதாகவும் அவரைச் சார்ந்த வணிகர்கள் வேதகாலக் கோத்திரத்தை ஏற்றுக் கொண்டு கன்யகாபரமேஸ்வரியை வழிபடுதெய்வமாக துதிக்க ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டேன். கோமதியின் சீடர்களே கோமுட்டியர் என மருவியதாகவும் சரித்திரச் சான்றுகள் உள்ளன. 

​அயோத்திதாசப் பண்டிதர் கன்யகாபரமேஸ்வரி கதை கண்ணகியாகத் தமிழகத்தில் பரவியது​ என்று குறிப்பிடுகிறார்.  இது ஒரு மேலதிகத் தகவல்

நாகராசன்

Prakash Sugumaran

unread,
Jun 15, 2014, 1:39:29 PM6/15/14
to mintamil
மஹாவீரர், பிம்பிசாரனுக்கு ஆதரவாக ப்ரச்சாரம் செய்ததாக “ ராஹூல் சாங்கித்ரேயன் “ தனது ” சிந்து முதல் கங்கை “ புத்தகத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Jun 15, 2014, 2:16:38 PM6/15/14
to mintamil
நாகராஜன் ஐயா, கண்ணகி கதை தமிழகத்தில் இருந்து வேறு வேறு பகுதிகளுக்கு, வேறு வேறு பெயர்களில் பரவி இருக்கலாம் என சொல்வது சரியாக இருக்கும். ஏனெனில் கண்ணகி பிறந்தது பூம்புகார். நீதி கேட்ட இடம் மதுரை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.

Dev Raj

unread,
Jun 15, 2014, 3:25:24 PM6/15/14
to mint...@googlegroups.com
On Sunday, 15 June 2014 09:57:09 UTC-7, dhivakar wrote:
பகுபலி அல்லதுகோமட்டேஸ்வர், ரிஷபநாதர் புதல்வராகவே தகவல்கள் காண்பிக்கின்றன. புராணத் தகவல்கள் பாரதனின் புதல்வராக ரிஷபநாதரை காண்பிக்கின்றன. பரதமன்னனை பாரதக் கண்டத்தை ஆளும் மூத்த முதல் மன்னராக ஜைன சரித்திரம் குறிப்பிடுகிறது. கோமட்டேஷ்வர் இரண்டாவக்து தீர்த்தங்கரர் என்று இன்னொரு தகவல். 

இரண்டாம் தீர்த்தங்கரர் - அஜித நாதர். அயோத்தியில் இக்ஷ்வாகு வம்சத்தில்
மன்னர் ஜிதசத்ருவின் மகனாகப் பிறந்தவர். முதல் இடம் ரிஷப தேவருக்கு

தேவ்

N. Ganesan

unread,
Jun 15, 2014, 3:25:59 PM6/15/14
to mint...@googlegroups.com

On Sunday, June 15, 2014 11:16:38 AM UTC-7, Prakash Sugumaran wrote:
நாகராஜன் ஐயா, கண்ணகி கதை தமிழகத்தில் இருந்து வேறு வேறு பகுதிகளுக்கு, வேறு வேறு பெயர்களில் பரவி இருக்கலாம் என சொல்வது சரியாக இருக்கும். ஏனெனில் கண்ணகி பிறந்தது பூம்புகார். நீதி கேட்ட இடம் மதுரை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.

நீங்கள் சொல்வது சரியே. கண்ணகியாள்/கர்ணகையாள் கதை 2000 ஆண்டுக்கும் முன்னர் நடந்ததை வஞ்சி (கரூர்) சேரர் குல
இளங்கோ அடிகளார் மூன்று தமிழ் நாடுகளையும் இணைத்து சரித்திரநவீனமாக்கினார்.

கோமுட்டி செட்டியார்களின் கன்யாபரமேசுவரி புராணம் தெலுங்கு சோடர்கள் (சோழர்) காலத்தில் பெண்கேட்டு
மறுத்து அவள் தீப்பாஞ்ச கதை. 

இரண்டு கதைகளின் போக்கும், காலமும் மிக வேறானவை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 15, 2014, 3:43:39 PM6/15/14
to mint...@googlegroups.com

On Sunday, June 15, 2014 9:57:09 AM UTC-7, dhivakar wrote:
பிரகாஷ்!

பகுபலி அல்லதுகோமட்டேஸ்வர், ரிஷபநாதர் புதல்வராகவே தகவல்கள் காண்பிக்கின்றன. புராணத் தகவல்கள் பாரதனின் புதல்வராக ரிஷபநாதரை காண்பிக்கின்றன. பரதமன்னனை பாரதக் கண்டத்தை ஆளும் மூத்த முதல் மன்னராக ஜைன சரித்திரம் குறிப்பிடுகிறது.

பரதன் ரிஷபநாதரின் மூத்தமகன். ரிஷபநாதர் ஆதிபகவன் என்று முதற் குறளில் சொல்லப்படுகிறார்.
அவரது மகன் திருப்பெயரால் பரதக்கண்டம் எனப் பாரதத்திற்குப் பெயர் ஏற்பட்டது.

பரத சக்ரவர்த்தி பற்றிய குறள்: ’ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’

ரிஷபநாதரின் மகன் பாகுபலிக்கு கோமடேசுவரன் என்ற பெயரைப் பார்ப்போம்.

நா. கணேசன்

கோமட்டேஷ்வர் இரண்டாவக்து தீர்த்தங்கரர் என்று இன்னொரு தகவல். இவைகளை எல்லாம் இன்றைய ஜைனர்கள்ஏற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கும்போது அவர்கள் வழியே போவதுதான் நல்லது என நினைக்கிறேன். 

Nagarajan Vadivel

unread,
Jun 15, 2014, 10:51:07 PM6/15/14
to மின்தமிழ்

2014-06-16 0:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
​//​
கண்ணகியாள்/கர்ணகையாள் கதை 2000 ஆண்டுக்கும் முன்னர் நடந்ததை வஞ்சி (கரூர்) சேரர் குல
இளங்கோ அடிகளார் மூன்று தமிழ் நாடுகளையும் இணைத்து சரித்திரநவீனமாக்கினார்.

கோமுட்டி செட்டியார்களின் கன்யாபரமேசுவரி புராணம் தெலுங்கு சோடர்கள் (சோழர்) காலத்தில் பெண்கேட்டு
மறுத்து அவள் தீப்பாஞ்ச கதை. 

இரண்டு கதைகளின் போக்கும், காலமும் மிக வேறானவை
​//

​பித்து: என்ன தத்து நீ எழுதுனது தவறு என்று முனைவர் சொல்றாரே

தத்து: நானா சொன்னேன். அயோத்திதாசர் என்ற அறிஞர் சொன்னார் அது தவறு என்று முனைவர் சொன்னா கேட்டுக்கனும்

பித்து: கார்ணகை கதை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆனால் கன்னகா பரமேஸ்வரியின் கதை 8 ஆம் நூற்றாண்டு என்றும் உண்மை முனைவர் சொல்லுகிறாரே

தத்து உண்மை முனைவர் சொன்னா உண்மைன்னு நம்பி கேட்டுக்கனும் ஆதாரம் கேக்கக் கூடாது.  கேட்டாலும் கிடைக்காது இதுவே உண்மை

பித்து அப்ப இதுக்கு முடிவுதான் என்ன

தத்து:  இந்தக் கண்ணகி கதை இளங்கோவடிகள் எழுதுவதற்குமுன் பல நூற்றாண்டுகள் வாய்மொழிக்கதையாகக் கண்ணகி கூத்தாக நடந்துள்ளது.  வால்பாறையிலும் பாலக்காட்டிலும் வாழ்ந்த பழங்குடியினர் வாய்மொழிக் கதையைக் கேட்டு இந்தக் காவியம் படைக்கப்பட்டது.  காவியம் படைத்த காலம் தெரியாது.  காவியத்தில் பேசப்படும் காவியப்பாத்திரங்கள் உண்மை என்றால் அவர்கள் வாழ்ந்த காலம் எது.  காவியம் மூன்று நாடுகளைப் பற்றியதானாலும் சேர மன்னருக்கே இந்தக்கதை காவியமானதன் பெருமை சேருமா என்ற ஆய்வுக் கேள்விகளை ஆய்வு முனைவர்கள் தவிர்ப்பதற்கே ஏதாவது புதிய தகவல் சொன்னால் உடனே அது தவறு அந்தக் கதை இந்தக்கை அல்ல என்று தீர்ப்புச் சொல்லிவிடுவார்கள்

பித்து: கண்ணகி/கர்ணகை கன்னகை.கன்னிகா பரமேஸ்வரி தமிழ்நாட்டுக்கதை அல்ல என்று எப்படி நீ சொல்லுவாய்

தத்து: தமிழ்நாட்டில் வணங்கப்பட்ட கொற்றவை என்ற அம்பிகை என்ற கிராம தெய்வம் கிராம மக்களுக்கு நன்மை செய்வாள் என்ற நம்பிக்கையில் வணங்கப்பட்ட தெய்வம்.  ஆனால் கண்ணகி என்ற பெண்ணுக்குக் கோட்டம் அமைத்து அவள் சினம் தணிக்க ஆயிரம் பொற்கொல்லர்களைக் காவுகொடுத்தும் அதற்குப்பின்னரும் கண்ணகிக்கு ஆடு கோழி மிருகபலி கொடுத்தும் வணங்கியதாக உருவான கதை தமிழகத்தைச் சேர்ந்ததாக இருக்க முடியாதே.  தமிழகத்தில் கிராம தெய்வங்களுக்கு குறிப்பாகப் பெண் தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் வழக்கம் யாரால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது அதன் காலம் என்ன என்று உண்மை முனைவர்கள் ஆய்ந்தால் அல்லவா உண்மை தெரியும்

பித்து: அப்படியானால் அவர்கள் தத்து பித்து என்று ஆய்வு என்ற பெயரில் பழையதையே நம்பச் சொல்லுகிறார்கள் என்று சொல்லுகிறாயோ

தத்து: ஐயோ நமக்கேன் பொல்லாப்பு.  நான்தான் தத்துப்பித்து அவர்கள் சொன்னாலது உண்மை முனைவர்களின் உண்மை ஆய்வுமுடிவு

பித்து: அப்ப ஆய்வில் புதுத் தகவல்/தரவுகளைத்  தப்பென்று சொல்லிவிட்டால் தத்து பித்துகளை அடக்கிவிடலாமோ

தத்து பித்து

N. Ganesan

unread,
Jun 15, 2014, 11:08:57 PM6/15/14
to mint...@googlegroups.com

On Sunday, June 15, 2014 7:51:07 PM UTC-7, தத்து பித்து wrote:

2014-06-16 0:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
​//​
கண்ணகியாள்/கர்ணகையாள் கதை 2000 ஆண்டுக்கும் முன்னர் நடந்ததை வஞ்சி (கரூர்) சேரர் குல
இளங்கோ அடிகளார் மூன்று தமிழ் நாடுகளையும் இணைத்து சரித்திரநவீனமாக்கினார்.

கோமுட்டி செட்டியார்களின் கன்யாபரமேசுவரி புராணம் தெலுங்கு சோடர்கள் (சோழர்) காலத்தில் பெண்கேட்டு
மறுத்து அவள் தீப்பாஞ்ச கதை. 

இரண்டு கதைகளின் போக்கும், காலமும் மிக வேறானவை
​//

​பித்து: என்ன தத்து நீ எழுதுனது தவறு என்று முனைவர் சொல்றாரே

முனைவர் நாகராஜன் ஐயா,

உண்மை முனைவர் அயோத்திதாசர் ஆராய்ச்சி அருமை.
ஆனால் கன்னகா பரமேஸ்வரியின் கதை 8-ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்களா?
அந்த தேவதை புராணம் சொல்பவர்களே 10-11ஆம் நூற்றாண்டு என்கிறார்களே.
 
இதில் உள்ள கதைக்கும், சிலப்பதிகாரக் கதைக்கும் தொடர்பு என்ன?
அயோத்திதாசர் போன்ற உண்மை முனைவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள்
என்று படித்து ஆராய்வோம். தமிழ் ஆராய்ச்சி பேராசிரியர்கள் 
அயோத்திதாஸ் வழியில் எழுதியுள்ளனரா என்றும் பார்க்கலாம்.

நா. கணேசன்
 
Nagarajan Vadivel

unread,
Jun 15, 2014, 11:45:09 PM6/15/14
to மின்தமிழ்

2014-06-16 8:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உண்மை முனைவர் அயோத்திதாசர் ஆராய்ச்சி அருமை.
ஆனால் கன்னகா பரமேஸ்வரியின் கதை 8-ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்களா?
அந்த தேவதை புராணம் சொல்பவர்களே 10-11ஆம் நூற்றாண்டு என்கிறார்களே.

​அருள் கூர்ந்து இந்தத் தகவல் எந்த ஆய்வுக் கட்டுரையில் ஆய்வு மாநாட்டில் அறிக்கையாக வெளியாகியுள்ளது என்பதைக் கூறுங்கள்

எரிக் மில்லர் என்பவர் திருவனந்தபுரத்தில் எழுதிய கண்ணகி பற்றிய கட்டுரையை வெளியிட்டேனே அவர் முதுவன் பொதுவம் பழங்குடிகளிடம் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை அளித்ததுபோல் ஏதேனும் ஆதாரம் நீங்கள் தரமுடியுமா?

ஆதியிலிருந்து நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள புராணத்தைக் கொண்டு 10-11 ஆம் நூற்றாண்டு என்று சொல்லும் ஆய்வாளர்களை அடையாளம் காட்ட முன்வரவில்லையே

வணிகர்கள் பூம்புகாருக்குப் பல்லவ பூமியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் அவர்கள் சோழ மன்னருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பாண்டிய நாட்டுக்குப் புலம் பெயந்தார்கள் சேராநாட்டுக் குமக அமைப்பில் வணிகர்கள் (வைஷ்யர்கள்) என்ற பிரிவு இல்லை என்ற ஆராய்ச்சித் த்கவல்களை நீங்கள் தக்க ஆவணம் மூலம் தகவில என்று நிறுவுங்கள்.  அப்போதுதான் உண்மை ஆய்வு வளரும்

N. Ganesan

unread,
Jun 16, 2014, 12:05:04 AM6/16/14
to mint...@googlegroups.com

On Sunday, June 15, 2014 8:45:09 PM UTC-7, தத்து பித்து wrote:

2014-06-16 8:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உண்மை முனைவர் அயோத்திதாசர் ஆராய்ச்சி அருமை.
ஆனால் கன்னகா பரமேஸ்வரியின் கதை 8-ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்களா?
அந்த தேவதை புராணம் சொல்பவர்களே 10-11ஆம் நூற்றாண்டு என்கிறார்களே.

​அருள் கூர்ந்து இந்தத் தகவல் எந்த ஆய்வுக் கட்டுரையில் ஆய்வு மாநாட்டில் அறிக்கையாக வெளியாகியுள்ளது என்பதைக் கூறுங்கள்

எரிக் மில்லர் என்பவர் திருவனந்தபுரத்தில் எழுதிய கண்ணகி பற்றிய கட்டுரையை வெளியிட்டேனே அவர் முதுவன் பொதுவம் பழங்குடிகளிடம் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை அளித்ததுபோல் ஏதேனும் ஆதாரம் நீங்கள் தரமுடியுமா?

ஆதியிலிருந்து நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள புராணத்தைக் கொண்டு 10-11 ஆம் நூற்றாண்டு என்று சொல்லும் ஆய்வாளர்களை அடையாளம் காட்ட முன்வரவில்லையே

முனைவர் நாகராஜன் ஐயா,

ஆராய்ச்சியாளர்கள் கன்யாபரமேஸ்வரி புராணம் 16-ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள். 10-11 என்று 
கோமுட்டிசெட்டியார்கள் எழுதினாலும், பெனுகொண்டா தனி ராஜ்ஜியம் விஜயநகர ஆட்சியிலேயே இருந்துள்ளது.

எரிக் முல்லர் மாணவராக இருந்த காலத்தில் எனக்கு எழுதியுள்ளார்.
இன்னொரு செய்தி - ஆய்வில் பயன்படும்.
இப்போது ஜெயகிருஷ்ணன் தமிழ்த்துறை தலைவர் - திருவனந்தபுரத்தில். ஊர்: மூணாறு.
சிலப்பதிகாரம் மூணாறு பகுதிகளில் பழங்குடியினர்களிடம் உள்ள கதைகளை
3 நாள் செமினார் நடந்தது. அந்த விடியோக்கள் எனக்கு தமிழ்ப் பேரா. நாச்சிமுத்து
அனுப்பிவைத்தார். எரிக் முல்லருக்கு தமிழ் தெரியாதே.

16-ஆம் நூற்றாண்டு கன்னகாபரமேசுவரிக்கும், கண்ணகி கதைக்கும் என்ன தொடர்பு 
என்று என்னால் அறியக் கூடவில்லை. ஏதாவது இருந்தால் தாருங்கள்.
கோமுட்டி செட்டியார் புராணத்தில் கண்ணகி பற்றி குறிப்பு இருக்கிறதா? 

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Jun 16, 2014, 12:44:05 AM6/16/14
to மின்தமிழ்
எரிக் முல்லர் மாணவராக இருந்த காலத்தில் எனக்கு எழுதியுள்ளார்.
இன்னொரு செய்தி - ஆய்வில் பயன்படும்.
இப்போது ஜெயகிருஷ்ணன் தமிழ்த்துறை தலைவர் - திருவனந்தபுரத்தில். ஊர்: மூணாறு.
சிலப்பதிகாரம் மூணாறு பகுதிகளில் பழங்குடியினர்களிடம் உள்ள கதைகளை
3 நாள் செமினார் நடந்தது. அந்த விடியோக்கள் எனக்கு தமிழ்ப் பேரா. நாச்சிமுத்து
அனுப்பிவைத்தார். எரிக் முல்லருக்கு தமிழ் தெரியாதே.

இது நல்லாயிருக்கு. நீங்கள் குறிப்பிடும் மேலைநாட்டு ஆய்வாளர்கள் எல்லாம் தமிழ் தெரிந்தவர்களா?

எரிக் மில்லர் பல ஆண்டுகளாகச் சென்னையில்தானே இருக்கிறார்

கண்ணகி நடந்த பாதையில் நடந்துள்ளார் அங்கு வாழும் மக்களிடம் கண்ணகி பற்றி ஆய்வு நடத்தியுள்ளார்

சிலம்பு பற்றி அவர் பதிவு செய்து வெளியிட்ட நூல் இணைப்பில்

தத்து பித்து
--

N. Ganesan

unread,
Jun 16, 2014, 7:58:24 AM6/16/14
to mint...@googlegroups.com

On Sunday, June 15, 2014 9:44:05 PM UTC-7, தத்து பித்து wrote:
எரிக் முல்லர் மாணவராக இருந்த காலத்தில் எனக்கு எழுதியுள்ளார்.
இன்னொரு செய்தி - ஆய்வில் பயன்படும்.
இப்போது ஜெயகிருஷ்ணன் தமிழ்த்துறை தலைவர் - திருவனந்தபுரத்தில். ஊர்: மூணாறு.
சிலப்பதிகாரம் மூணாறு பகுதிகளில் பழங்குடியினர்களிடம் உள்ள கதைகளை
3 நாள் செமினார் நடந்தது. அந்த விடியோக்கள் எனக்கு தமிழ்ப் பேரா. நாச்சிமுத்து
அனுப்பிவைத்தார். எரிக் முல்லருக்கு தமிழ் தெரியாதே.

இது நல்லாயிருக்கு. நீங்கள் குறிப்பிடும் மேலைநாட்டு ஆய்வாளர்கள் எல்லாம் தமிழ் தெரிந்தவர்களா?

முனைவர் நாகராஜன் ஐயா,

எரிக் நல்லா விடியோ எடுப்பார், ஆனால் தமிழ் தெரியாதவர். 
அதனால் குறிப்பிட்டேன்.

சிலம்பு காவியம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து
தமிழகத்திலும், இலங்கையிலும் (பத்தினி என்று சிங்களவர் வழிபடும் தெய்வம்)
நாட்டார் இலக்கியங்களில் இருப்பதை ஆய்ந்து பல நூல்கள்,
கட்டுரைகள் எழுதியுள்ளனர். தமிழ் முனைவர் ஜெயகிருஷ்ணன்
ஆய்வு சிறப்பானது. கண்ணகி கோட்டம் பற்றி புலவர்
செ. ராசு, புலவர் சி. கோவிந்தராசனார் விரிவாக எழுதியுள்ளனர்.
இவ்வாறுள்ள ஆய்வு வெளியீடுகள் தமிழ் தெரியாததால் எரிக் முல்லர்
படிக்கவில்லை. தமிழ் ஆய்வு முனைவோர்களும் எரிக்கும் சேர்ந்தால்
நல்ல பயன் கிட்டும்.

ஜாதி புராணங்கள் மிகப் பிற்காலத்தவை. விஜயநகர பிற்கால
ஆட்சியில் (16-ஆம் நூற்றாண்டு) எழுந்த பெனுகொண்டா கோமுட்டி
செட்டியார் புராணம் - கன்னிகா பரமேசுவரியினது. அதில் அவளுக்கு
திருமணம் ஆகவில்லை. இந்த நூலில் கண்ணகிகதை வருவதுமில்லை.

அதற்கும் 1000 ஆண்டு முன்னெழுந்த இளங்கோ அடிகளின்
முத்தமிழ்க் காப்பியம் கண்ணகி-கோவலன் திருமணத்தை
விரிவாகப் பாடுகிறது. கொங்குவேளிருக்கு முன் 
வஞ்சியில் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த தமிழர் இளங்கோ
அடிகளார். வஞ்சி தற்காலத்தில் கரூர். 

ஆனால், பெனுகொண்டா செட்டியார்கள் தெலுங்கு.
அவர்கள் ஜாதி புராணம் தமிழ்ப்பெண் கண்ணகி வரலாற்றைப்
பறைவதில்லை. அந்த ஜாதிபுராணம் காலத்தால் மிகப்
பிற்பட்டதும் கூட. அதன் ஆசிரியருக்கு சிலப்பதிகாரம்
என்ற நூல் இருப்பது தெரியுமா? - என்பதே சந்தேகம்.

நா. கணேசன்

எரிக் மில்லர் பல ஆண்டுகளாகச் சென்னையில்தானே இருக்கிறார்

Prakash Sugumaran

unread,
Jun 16, 2014, 10:39:08 PM6/16/14
to mintamil
//காவியத்தில் பேசப்படும் காவியப்பாத்திரங்கள் உண்மை என்றால் அவர்கள் வாழ்ந்த காலம் எது//

இதை அறிய வெளிநாட்டு ஆய்வாளர்களும், பேரா.க்களும் எதற்கு ?

மின் தமிழில் வேறு ஒரு இழையில் பாரதப்போர் நடந்த காலம் என ஒஷோவின் புத்தக அடிப்படையில் கிமு 3139 என குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரத கதாபாத்திரங்களின் பிறந்த நாள், நட்சத்திர அடிப்படையிலும் கிட்டதட்ட இதே ஆண்டு என குறிப்பிட்டுள்ளனர்.
 //கி,மு 3139 பாரத புத்தம் நடை பெறுதல்//
எனில் பாரதப்போரில் பங்கேற்க விரும்பாமல் இருதரப்பு படையினருக்கும் உணவளிக்கும் பொறுப்பேற்று ”பெருஞ்சோற்றுதியன்“ என்ற பட்டம் பெற்ற உதியஞ்சேரலின் வாரிசுகள் சிலப்பதிகார கதாபாத்திரங்களாக இடம் பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் 50 ஆண்டு - அதிகபட்சம் 100 ஆண்டு என கணக்கிட்டாலும், கண்ணகி கதை நடைபெற்றது கி.மு. 3179 - 3129.
//வணிகர்கள் பூம்புகாருக்குப் பல்லவ பூமியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் அவர்கள் சோழ மன்னருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பாண்டிய நாட்டுக்குப் புலம் பெயந்தார்கள் சேராநாட்டுக் குமக அமைப்பில் வணிகர்கள் (வைஷ்யர்கள்) என்ற பிரிவு இல்லை //
ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற பெரும் வணிகர்களின் கூட்டமைப்புகள் சோழ, பல்லவ வரலாறுகள் தொடங்குவதற்கு முன்பே இருந்துள்ளன. வணிகர்களை - வைஷ்யர்கள் என்று தமிழ் நூல்கள் குறிப்பிட்டதாகவே தெரியவில்லை.

Nagarajan Vadivel

unread,
Jun 16, 2014, 10:56:54 PM6/16/14
to மின்தமிழ்

2014-06-17 8:09 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற பெரும் வணிகர்களின் கூட்டமைப்புகள் சோழ, பல்லவ வரலாறுகள் தொடங்குவதற்கு முன்பே இருந்துள்ளன. வணிகர்களை - வைஷ்யர்கள் என்று தமிழ் நூல்கள் குறிப்பிட்டதாகவே தெரியவில்லை

​பழங்குடிகள் வாழ்வியல் மரபு அதிக மாற்றமடையாமல் வழக்கில் இருக்கும் பண்புடையது.  அவர்கள் வாழ்வில் வணிகர்கள் வெளியில் இருந்து வந்தவர்களாக்வே இருப்பதை மானுடவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தும்

சேர நாட்டுப் பழங்குடிகள் அமைப்பிலும் வணிகர்கள் வெளியில் இருந்து வந்தவர்களே.  யவனர் சோனகர் யூதர் என்று பல வெளிநாட்டு வணிகர்களும் சேர நாட்டில் வணிகம் செய்தனர்.

யூதர்களைப்பற்றிய ஆய்வு அவர்கள் கி.பி தொடங்குவதற்கு முன்னரே சேர நாட்ட்ல் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகிறது

சிலப்பதிகாரத்தில் மாநாய்க்கன் ​மாசாத்துவன் என்று இரு வகை வணிகர்கள் கடல் வணிகம் தரை வணிகத்தில் ஈடுபட்டிருந்ததையும் அவர்கள் சமண பெள்த்த மதத்தைத் தழுவி இருந்ததையும் தகவல்களாக அறிய முடிகிறது

பழந்தமிழர்கள் பழங்குடி குமுக அமைப்பில் அந்தணர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இருந்ததற்கான ஆய்வு ஆதாரங்கள் இருப்பின் தரலாம்

நாகராஜன்

தேமொழி

unread,
Jun 16, 2014, 11:50:11 PM6/16/14
to mint...@googlegroups.com
///பழந்தமிழர்கள் பழங்குடி குமுக அமைப்பில் அந்தணர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இருந்ததற்கான ஆய்வு ஆதாரங்கள் இருப்பின் தரலாம்////

பாண்டிய மன்னர்  ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மை குறித்து பாடும் பாடலில்....
கீழ் கண்டவாறு கூறுகிறார்....

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே" 
(புறம்-183)

முனைவர். பிரபாகரன், வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று என்று நினைக்கிறார். 

வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான் என்று விளக்க உரை கொடுக்கிறார்.

இது போன்ற விளக்கம் இங்கும் உண்டு:

ஆனால் ...இவ்வாறு இல்லை 

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன் கண்படுமே.

என்ற வரிகள்  குலத்தாழ்ச்சி உயர்ச்சிகளைப் போற்றுவதன்று; அவற்றின் மீது நம்பிக்கை உடையாரும் கல்வியின் காரணமாக அந்நம்பிக்கையைக் கைவிடுவர் என்னும் கருத்துடையது.

என்று விளக்குகிறது ..தமிழ் இணையப் பல்கலை உரை >>> http://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d0114250.htm

இந்தப் பாண்டிய மன்னர் "ஆரியப்படை கடந்தவர்"  என்பதால் இவர் காலத்தில் ஆரியர்கள் காட்டியவேறுபாடுகள் தமிழகத்தில் நுழைந்துவிட்டது எனவே கொள்ளவேண்டும்.

இல்லாவிட்டால் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவர் எழுத வேண்டிய தேவை என்னவாக இருக்கலாம்? இருக்கக்கூடும்?  

திருடினால்தான் திருடுவது தவறு என்று புத்தி புகட்டி எழுதவேண்டி வரும். 
பிறன்மனை விழைந்ததால் அவ்வாறு செய்யாதே என வள்ளுவர்  சொல்லியிருப்பார் என்றால், மக்களிடம் கண்ட வேறுபாடுகளை நீக்க வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்தே போராட்டம் இருந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Jun 17, 2014, 1:50:43 AM6/17/14
to மின்தமிழ்
ஒரே சமயத்தில் சிட்டுக்குருவி மூளை உள்ள என்னால் எவ்வாறு உள்வாங்கமுடியும்.  கொஞ்சம் யோசியுங்கள் கற்றோரே

நாற்பால் என்பது வர்ண அடிப்படையில் அமைந்தது என்றால் கீழ்பால் உள்ளவன் மேல்பாலுக்கு ​உயரவோ கீழ்பால் உள்ளவனிடம் மேல்பாலோர் அணுகவோ இயலாது

இயல்பான உண்மைத்தன்மைத் தகவல்களைத் திசை திருப்புவது உரைகள் என்பது என்னுடைய தாழ்வான கருத்து.  ஒரு மூலப்பொருளுக்குப் பல உரைகள் எழுதுவது உரி ஆசிரியரின் திறமையைக் காட்டலாம் அதுவே உண்மை என்று கருத இயலாது

ஆரியர்கள் என்பார் யார்/ ஒருபக்கம் ஆரியர் படையெடுப்பு என்ற கருத்துரு காணாமல்போய்விட்ட நிலையில் ஆரியர்கள் என்பவர்களே உள் நுழையவில்லை என்று ஒருபுறம் ஆணித்தரமாகச் சொல்லிக்கொண்டு நெடுஞ்செழியன் கடந்த ஆரியப்படை எது என்று எவ்வாறு அடையாளம் காட்ட முடியும்

ஆரியப்படை என்ற படை வேத விற்பன்னர்கள் உருவாக்கியதா அல்லது அவர்கள் முடிசூட்டிய ஆரிய மன்னர்களா அல்லது அராபிய பெர்சியப் படைகளா என்பது தெளிவாகவில்லையே

சங்ககாலத்தில் மேற்குக்கரை வழியாக வந்த முன்குடுமிச் சோழியர்கள் தமிழகக் குமுகத்தில் கலந்து வாழ்ந்தணர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு.  பிற்காலத்தில் கிழக்குக்கரை வழியாக வந்த ஸ்மார்த்த பிராமணர்களே வர்ணாசிரம தர்மத்தை சில மாற்றங்களுடன் தமிழகத்தில் நிலைபெறச் செய்தார்கள் என்று வரலாற்றாசிரியர்கல் குறிப்பிடுகின்றனர்

நாகராஜன்

தேமொழி

unread,
Jun 17, 2014, 2:40:14 AM6/17/14
to mint...@googlegroups.com
///ஆரியப்படை என்ற படை வேத விற்பன்னர்கள் உருவாக்கியதா அல்லது அவர்கள் முடிசூட்டிய ஆரிய மன்னர்களா ///

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் 
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது

சிலப்பதிகாரம்: 2. காட்சிக் காதை, வரிகள் 156 - 159

செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று

சிலப்பதிகாரம்: 4. நீர்ப்படைக் காதை, வரிகள் 5- 9

போன்ற வரிகளில் இளங்கோ கனக, விஜய மன்னர்களைப் போன்ற மன்னர்களை  ஆரிய மன்னர்கள் என்று குறிப்பிடுகிறார்.  
எனவே வடநாட்டில் அப்பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆரிய மன்னர்கள் எனவே நான் கொள்வேன். ஆரியப்படை என்பது அவர்கள் படை என்றுதான் புரிகிறது. 
(பாண்டியர்கள் என்றால் தமிழகத்தின் தென்பகுதியை ஆண்ட  மன்னர்கள் என்பது போல...)
http://ta.wikipedia.org/s/fph ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ...சேரன் செங்குட்டுவனுக்கு முன்னரே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வடதிசையில் ஆரியர்களுடன் போரிட்டு வந்துவிட்டார்.  ஆரியர் என்பது சிலப்பதிகார காலத்தில்  நன்கு தெரிந்த சொல் என்பதும், 

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்....

என்ற வரிகளின் மூலம் வடதிசை ஆரிய மக்களின் வழக்கமான வர்ணபேதங்கள்  தென்திசையிலும் தமிழரிடம் பரவி இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. 
கண்ணகி கதையுடன் தொடர்புடைய இருமன்னர்களும் ஆரியப்படையுடன் போரிட்டவர்கள். அதிலும் முன்வாழ்ந்தவர் பேதங்கள் பற்றி பாட்டெழுதுகிறார்.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Jun 17, 2014, 4:41:24 AM6/17/14
to மின்தமிழ்

2014-06-17 12:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்

​இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்ற கருத்தில் இவ்வகை இலக்கிய ஆதாரங்கள் நம்பகத்தன்மை குறைவானவை என்றே கருதவேண்டும்.  ஆய்வளர்கள் உள்-வெளித் திறனாய்வு மூலம் புனைவுகளையும் கற்பனைகளையும் நீக்க முயற்சி செய்தல் வேண்டும்

இலக்கியத்தில் பல போலிகள் இருக்க இடமுள்ளதால் இலக்கியம் தவிர அகழ்வாராய்ச்சி கல்வெட்டு வாய்மொழி மரபு போன்ற மற்ற வளங்களையும் இணைத்தே ஆய்வு செய்வது அவசியம்

அந்தணர் என்று அழைக்கப்படும் கபிலர் யாத்ததாக மூன்றுவிதமான படைப்புகள் இருந்து எது போலி என்று அடையாளம்காண இடையூறு செய்கிறது

நீங்கள் குறிப்பிட்டதற்கு நேர் எதிராக கபிலர் அகவல்

தென்றிசைப் புலையன் வடதிசைக் கேகி​ற்
பழுதற வோதிப் பார்ப்பா னாவான்
வடதிசைப் பார்ப்பான் தென்திசைக் கேகின்
கடையது கோணிப் புலைய னாவான்

என்று கூறுவதாகக் காழ்ப்புணர்வு இன இகழ்வு அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது

வேதம் கற்றவர் பார்ப்பார் என்ற அடிப்படையில் வட திசையில் புலையன் வேதம் கற்றால் அவன் பார்ப்பான் என்றும் தென்திசைக்கேகும் பார்ப்பான் புலையன் என்றும் கூறுவதும் கல்வி அடிப்படையில் மட்டுமே

நாகராஜன்

Banukumar Rajendran

unread,
Jun 17, 2014, 6:04:15 AM6/17/14
to மின்தமிழ்
On Sun, Jun 15, 2014 at 2:16 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
வால் ஆடக்கூடாது என்று இருந்தேன். :-)

கோமட்ட என்ற கன்னடச் சொல் பெரிய என்று பொருள்படும். கோமட்டேஸ்வரர் என்றால் பெரிய ஈஸ்வரர் என்றே பொருள்.

(நன்றி: நூல் - கோமட்டசாரம், ஆச்சாரிய நேமிசந்திர சித்தார்த்த சக்கரவர்த்தி).

பாகுபலியை தமிழில் அப்பாசாமி என்று அழைப்பர். அப்பாசாமி நைனார், அப்பாவு நயினார், அப்பாதுரை நயினார் என்ற
பெயர்கள் தமிழ்ச் சமணத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள பெயர்கள்.

(உதா: உலகப் புகழ்ப்பெற்றத் தமிழ்ச் சமணரான பேரா.சக்கரவர்த்தி நைனார் அவர்களின் தந்தையார் பெயர் அப்பாசாமி நைனார் என்பதே - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D )

ஏன் பாகுபலிக்கு அப்பாசாமி என்று பெயர்? என்றால்,

அவர் தனது தந்தையான ஆதிபகவன் என்றழைக்கப்படும் ஆதிநாதர் காலத்திலேயே, அதுவும் தந்தை வீடுபேறு அடையும் முன்னர்
வீடுபேறடைந்தார் என்பதனால் அப்பா+சாமி என்றழைக்கப்பட்டார்.

அரஹந்த் என்பது ஐந்து நிலைகளில் இரண்டாவது நிலை. முதல் நிலை சித்த நிலை. இந்நிலைகளை முயன்றால் யார் வேண்டுமானாலும் அடையலாம். சித்த நிலை பெற்றவர்கள் எவ்வுயிரையும் பற்றி கவலைக் கொள்வதில்லை. தன்னூயிர் கடைந்தேத்துவதே நோக்கமாக கொண்டு முயலும் உயிர்கள் சித்த நிலையை சென்றடையும். தீர்த்தங்கர நிலை என்பது அவ்வாறில்லை. தீர்த்தங்கர நிலை என்பது அரஹந்த் நிலையே என்றாலும், உலக உயிர்கள்
உய்ய நற்பாதையைக் காட்டியவர்கள். இவர்கள் என்றும் இருபத்து நால்வர்கள்தாம். இறந்த, நிகழ், வரும் காலங்களிலும் இருபத்துநால்வர்கள்தாம் தீர்த்தங்கர நிலையை எய்த முடியும். (ஏன் இருபத்து நால்வர் என்பது எனக்கு இன்னும் புரிப்படவில்லை. எங்கணும் சரியான விளக்கம் என் பார்வைக்கு
கிடைக்கவில்லை அல்லது யாரும் சொல்லவில்லை). பாகுபலி அறம் உரைத்ததாக யான் எங்கும் படிக்கவில்லை. அவர் அரஹந்த் நிலையடைந்தவரேயன்றி தீர்த்தங்கரர் அல்லர்.

இரா.பானுகுமார்,
சென்னை

தேவ் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 6:57:03 AM6/17/14
to mintamil
கோமட்டா - ஜப்பான் சொலவடை
komatta pii
:
This is an expression that you can use when you are in a deep trouble and want to make fun of yourself or the situation you are in. Grammatically, it should be, "komatta naa," but by changing the end of it from "naa" to "pii" makes it sound less serious.

http://japan-cc.com/slang.htm

Banukumar Rajendran

unread,
Jun 17, 2014, 7:05:32 AM6/17/14
to மின்தமிழ்
அன்பின் பிரகாஷ்,

ஜப்பானியர்கள் komatta என்பதை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். ஆங்கில சொல்வழி பொருள் காணக்கூடாது.
நம்மில் நிறையப் பேர் இம்மாதிரி செய்கிறார்கள். உதாரணமாக, kunda kunda  என்று ஆங்கிலத்தில் படித்துவிட்டு, தமிழில் குண்ட குண்ட என்று
எழுதுவார்கள். குந்தகுந்த என்பதுதான் சரியானது. இல்லையா? இவ்வாறான இரண்டு மொழிகள் சம்பந்தப்படும் போது கிரந்த எழுத்துக்கள்
உதவலாம் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

இரா.பானுகுமார்,
சென்னை

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 7:06:25 AM6/17/14
to mintamil
ஆரியர் - அனாரியர் - அரையாரியர் என்ற பாகுபாடுகள் வட மாநிலங்களிலும் உண்டு.

ஆரியர் - தலைமுறையாக ஆட்சியதிகாரத்தை பெற்றுவரும் அரசர்கள் + அந்தண அமைச்சர்கள் என்ற ஆட்சியமைப்பு கொண்ட முடியாட்சிக்கு எதிரான மக்கள் தலைவர்களின் குழுவால் ஆளப்படும் மக்களாட்சியை முன்னெடுத்தவர்கள்.

அனாரியர் - முடியாட்சி முறை கொண்ட நாட்டில் வசிப்பவர்கள்.

அரையாரியர் - இரண்டு தரப்பினரும் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் ரத்த கலப்பு அடைந்தவர்கள்.

Banukumar Rajendran

unread,
Jun 17, 2014, 7:09:43 AM6/17/14
to மின்தமிழ்
இன்னுமொன்று, ஆங்கிலத்தில் Arihant என்பதை தமிழில் ஹரிஹந்த் என்று எழுதுகிறார்கள். அதுதவறு. அரஹந்த் என்பதுதான் சரியான உச்சரிப்பு. வடநாட்டில் அதை அரிஹந்த் என்று தவறாக உச்சரிக்கிறார்கள். ஹா’னா வில் ஆரம்பிக்கக்கூடாது. அ’னாவில்தான் ஆரம்பிக்கவேண்டும்.

இரா.பானுகுமார்,
சென்னை

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 7:54:17 AM6/17/14
to mintamil
//எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்//

மிகவும் சரி. கோமட்டேஸ்வரர் என்பது  "Ko" வா “Go" vaa ??

" Ko " எனில் உயர்ந்தவன், பசு... “ Go " எனில் ??

” Gomathi - Komathi “ இவற்றில் எது சரி ?

(Ko) கோமட ஈஸ்வரன் ? (Ko) கோமட்ட ஈஸ்வரன் ?? ( GO ) கோமட்ட ஈஸ்வரன் ??? இவற்றில் எது சரியானது ?

Hari Krishnan

unread,
Jun 17, 2014, 7:57:30 AM6/17/14
to mintamil

2014-06-17 17:24 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
மிகவும் சரி. கோமட்டேஸ்வரர் என்பது  "Ko" வா “Go" vaa ??

" Ko " எனில் உயர்ந்தவன், பசு... “ Go " எனில் ??

” Gomathi - Komathi “ இவற்றில் எது சரி ?

(Ko) கோமட ஈஸ்வரன் ? (Ko) கோமட்ட ஈஸ்வரன் ?? ( GO ) கோமட்ட ஈஸ்வரன் ??? இவற்றில் எது சரியானது ?

Bahubali (Sanskritबाहुबली) also called Gomateshwara (Kannadaಗೊಮ್ಮಟೇಶ್ವರ Tuluಗೊಮ್ಮತಾ) was an Arihant. According to Jainism, he was the second of the hundred sons of the first TirthankaraRishabha and king of Podanpur.

தாங்கள் எழுதியிருந்த அனைத்து விவரங்களும் இந்தப் பக்கத்தில், ஆங்கிலத்தில் உள்ளன.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Jun 17, 2014, 7:58:24 AM6/17/14
to mintamil

2014-06-17 17:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
" Ko " எனில் உயர்ந்தவன், பசு... “ Go " எனில்

go எனில் பசு.

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 9:24:53 AM6/17/14
to mintamil
“ Kosaala " என்பதை “ Kosala " என திருத்தி கொள்கிறேன்.

2014-06-17 6:22 GMT-07:00 Prakash Sugumaran <praka...@gmail.com>:
//இந்தப் பக்கத்தில், ஆங்கிலத்தில் உள்ளன// பரதன் வரலாறு, சிற்ப சாத்திரம் உட்படவா ? போகட்டும்.. அடுத்து அஜித நாதன் கதையில் பார்ப்போம். தவிர ரிஷபநாதன் ஏன் ஆதீஷ்வரன் ? பாஹுபலி ஏன் Goமட்டீஷ்வரன் ?

ஹரிகி ஐயா,

Ko maathaa குலம் காக்கும் எங்கள் குலமாதா.. Gomaathaa என உச்சரிக்கப்படவில்லை.

கோயிலில் பசுக்களை கட்டுமிடம் " Gosaala " என்பதை “ Kosaalai ” என தவறாக உச்சரிக்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன். பிறகு “ Kosaala " என்பதே சரி என அறிந்தேன்.

வேதத்தில் koசல நாடு உள்ளது. goசல நாடு என்பது இல்லை.

http://en.wikipedia.org/wiki/Kosala இங்கே.

வாசுதேவ கண்ணன் தூக்கியது Koவர்த்தன (ம் செய்யும்) மலையா ? Goவர்தன் மலையா ?

--

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 9:24:53 AM6/17/14
to mintamil
//இந்தப் பக்கத்தில், ஆங்கிலத்தில் உள்ளன// பரதன் வரலாறு, சிற்ப சாத்திரம் உட்படவா ? போகட்டும்.. அடுத்து அஜித நாதன் கதையில் பார்ப்போம். தவிர ரிஷபநாதன் ஏன் ஆதீஷ்வரன் ? பாஹுபலி ஏன் Goமட்டீஷ்வரன் ?

ஹரிகி ஐயா,

Ko maathaa குலம் காக்கும் எங்கள் குலமாதா.. Gomaathaa என உச்சரிக்கப்படவில்லை.

கோயிலில் பசுக்களை கட்டுமிடம் " Gosaala " என்பதை “ Kosaalai ” என தவறாக உச்சரிக்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன். பிறகு “ Kosaala " என்பதே சரி என அறிந்தேன்.

வேதத்தில் koசல நாடு உள்ளது. goசல நாடு என்பது இல்லை.

http://en.wikipedia.org/wiki/Kosala இங்கே.

வாசுதேவ கண்ணன் தூக்கியது Koவர்த்தன (ம் செய்யும்) மலையா ? Goவர்தன் மலையா ?

On Tue, Jun 17, 2014 at 4:58 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 9:59:24 AM6/17/14
to mintamil
பானுகுமார் ஐயா,

அய்யா வழிபாடு, தாய் வம்சம் என குறிப்பிடப்படும் பெண் தெய்வ வழிபாட்டு காலத்திலேயே தோன்றியது. நைனா என்பது அப்பாவை குறிக்கும்.  நைனாவை தழுவியவர் நைனார் ஆனார். நைனா அப்பாவானார், அப்பாவு ஆனார், ஐயன் ஆனார், ஐயனார் ஆனார், ஐயப்பன் ஆனார்.இப்படி பல வடிவங்கள் பெற்றார்.

இவையெல்லாம் சிறு தெய்வ வழிபாட்டு காலத்திய தளங்கள். சமணம் இதெற்கெல்லாம் பிற்காலத்திய, இதையெல்லாம் உள்வாங்கிய பெரும் மதம். சிறு மதங்களை அரசியல்ரீதியாக கபளீகரம் செய்து வளர்ந்த முதல் மதம் சமணம்.

அதே வழியை பின்பற்றி மற்ற வைதீக மதங்களும் சிறு தெய்வ வழிபாட்டை அழித்து, தங்களை வளர்த்து கொண்டன.

பாஹுபலி வணங்கப்படும் கோவில்களில் தர்ம தேவி வணங்கப்படுவதன் காரணம், ஆண் - பெண் சமம் எனும் அர்த்தனாரீஸ்வர தத்துவம் அப்போதே தொடங்கியதால்தான்.

Hari Krishnan

unread,
Jun 17, 2014, 10:13:09 AM6/17/14
to mintamil
2014-06-17 18:52 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
ஹரிகி ஐயா,

Ko maathaa குலம் காக்கும் எங்கள் குலமாதா.. Gomaathaa என உச்சரிக்கப்படவில்லை.

கோயிலில் பசுக்களை கட்டுமிடம் " Gosaala " என்பதை “ Kosaalai ” என தவறாக உச்சரிக்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன். பிறகு “ Kosaala " என்பதே சரி என அறிந்தேன்.

goSThAnamfn. (%{sth-}) serving as an abode for cows VS. i , 25.
gosthAnan. a station for cattle , cow-pen Hariv. 3397 (cf. %{-SThA4na}.)

வேதத்தில் koசல நாடு உள்ளது. goசல நாடு என்பது இல்லை.

இது வேறு அது வேறு.  கோசலத்தில் உள்ளது koதான்.  இது அதை நிரூபிக்காது.

N. Ganesan

unread,
Jun 17, 2014, 10:13:53 AM6/17/14
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Tuesday, June 17, 2014 6:24:53 AM UTC-7, Prakash Sugumaran wrote:
//இந்தப் பக்கத்தில், ஆங்கிலத்தில் உள்ளன// பரதன் வரலாறு, சிற்ப சாத்திரம் உட்படவா ? போகட்டும்.. அடுத்து அஜித நாதன் கதையில் பார்ப்போம். தவிர ரிஷபநாதன் ஏன் ஆதீஷ்வரன் ? பாஹுபலி ஏன் Goமட்டீஷ்வரன் ?

ஹரிகி ஐயா,

Ko maathaa குலம் காக்கும் எங்கள் குலமாதா.. Gomaathaa என உச்சரிக்கப்படவில்லை.

கோயிலில் பசுக்களை கட்டுமிடம் " Gosaala " என்பதை “ Kosaalai ” என தவறாக உச்சரிக்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன். பிறகு “ Kosaala " என்பதே சரி என அறிந்தேன்.

வேதத்தில் koசல நாடு உள்ளது. goசல நாடு என்பது இல்லை.

ஆதியில் “கோ” என்றுதான் இருந்திருக்கும், பிறகு Go ஆகியிருக்கும்,
ஆரியர் மொழியாகிய சம்ஸ்கிருதம் Go என்று மாட்டைச் சொல்கிறது [1]
ஆனால், உறவுமொழி ஆகிய ஆங்கிலம் cow என்கிறது. 

In sum, kO (கோ)  with unvoiced k- word-initially is the original Indo-European
word for cows, which Sanskrit in India innovated to go & gau, but the original
k- is still retained in English as cow (kau, கௌ in Indic lipi-s).

அன்புடன்,
நா. கணேசன்

[1] மடுத்தல் என்றால் உண்ணல். மடம் என்ற சம்ஸ்கிருதச் சொல்
இதிலிருந்து உருவானது என்று எழுதியுள்ளார் இரா. நாகசாமி.
தினமலரில் வெளியானபோது எனக்கும் மடல் அனுப்பியிருந்தார்.
தினமலர்க் கட்டுரையை மின் தமிழுக்கு அனுப்பியிருந்தேன்.
மடி 'udder of cattle' என்ற சொல்லும் மடுத்தல் என்னும் வினையடியாய்ப்
பிறந்த சொல்லே. பால் இந்தியர்களுக்கு மிக முக்கிய உணவு
(புரோட்டீன் வேணுமே மனிதனுக்கு. எனவே தான் பால் இல்லாமல்
அபிடேகமில்லை.)  எனவே மடியில் பால் தந்தால் மனிதன் மடுக்கிறான்.
எனவே, மாடு என்ற பெயர் பெண்பசுவுக்கு உண்டானது. ஓரேர்
உழவன், அந்தணர் (தமிழின் பழைய அந்தணர்களில் அம்பட்டர்களும்,
அம்பணவர்களும் உண்டு), போன்றோருக்கு காளை எருது போன்றவற்றால்
ஒரு பயனுமில்லை. வண்டியோ, ஏரோ இல்லாத ஸர்வீஸ் இண்டஸ்ட்ரி.
எனவே மாட்டுக்கன்றை (இன்றைய டவுன் தமிழில் பெண்பசு தான்
யூஸ் ஆகும்), சேங்கன்றை (அதாவது காளைக் கன்றை) வேளாண்
உழவுத் தொழிலாளருக்கு அளித்துவிடுவர். இதனை அழகாக
மாணிக்கவாசக சுவாமிகள் பாடுகிறார். சங்கத் தமிழின் ஜர்னலிஸ்ட்
போல சங்க வாழ்க்கையைப் பதிவுசெய்தவர் பரணர். அவர் பாட்டில்
சேங்கன்றை தானம் கொடுப்பதும், அதை உண்பதும் யார் எனப்
பதிவு செய்திருக்கிறார். தமிழின் முதல் ஜர்னலிஸ்ட் பரணர்
பாடல் மருத்திணைக் கிழார்கள் வாழ்க்கையைச் சொல்கிறது:

மடி > மாடு (=பெண்பசு) அதன் பயனால் இருபாலுக்கும் பொதுவாகவும்
வருகிறது. அதே போல, பெண்ணை (< பிளத்தல் என்ற வினையடிப்
பிறக்கும் பெண், பேணுதல் பெண் குழவியைப் பாதுகாத்தலான் பிறந்த
வினைச்சொல்) என்றால் பெண்பனை. ஏற்றை என்றால் ஆண்பனை.
ஆண்பனை சுடுகாட்டிலும், பெண்பனை ஊர்நடுவிலும் இருப்பதை
பழைய வெண்பா பாடுகிறது. பெண்ணை (=பெண்பனை) அதன் பயன்கருதி
பனை என்ற இருபால் பொதுப்பெயராகவும் வருகிறது. மாடு (=பெண்பசு)
இன்று டவுன்களில் இருபால் பொதுப்பெயராகவும் வருதற்போல.

பூவின் நடுவே இருப்பது கண். தாமரை இந்தியாவின் தேசிய மலர்.
இன்று தாமரை சின்னங்கொண்ட கட்சிதான் ஆட்சி. தாமரையை
எடுத்துவிட்டால் இந்தியக் கலைகள் இல்லை என்கிறார் ஆனந்த குமாரசாமி.
தாமரைப் பொகுட்டுக்கு கண் > கர்ண(க) என்று வடமொழியில் பெயர்
உண்டானது. தாமரைக் கண்ணில் (கர்ணகத்தில், அதாவது பொகுட்டில்)
அமர்பவள் கர்ணகீ என்னும் இலக்குமி (துரக்கையின் வடிவங்களில்
இலக்குமி, சரசுவதி முக்கியமானவை). அதனால் கர்ணகை என்று
நாட்டார் பாடல்களிலும், கண்ணகி என்று இளங்கோவும் தான் செய்த
தமிழ் தேசிய நாவலில் பெயர் வைக்கிறார். ஒரே வரியில் இருமுறை
கோவலன் (=கிருஷ்ணன்) மனைவி கண்ணகி இலக்குமியே என்றும்
குறிக்கிறார். கோபமுற்றுப் பாடும்போது துர்க்கை ஆவதும் பாடுகிறார். 
வஞ்சி (கரூர்) ஊர்க்காரரான சமண அடிகள் இளங்கோ தாம் பாடிய
காப்பியத்தில் ‘இவளோ, கொங்கச் செல்வி!’ என்று முதலில் கண்ணகியை
தெய்வம் என வழிபட்டவர்கள் யார் எனும்போது தன் நாட்டு அபிமானம்
தெரிவிக்கிறார். 

தமிழ்ச் சொற்களில் -ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்தாக வரும் சொற்றொகுதிகள்
ஏராளம். பல காட்டியிருக்கிறேன். உ-ம்: நாளகிரி என்னும் யானை (பெருங்கதை)
வடக்கே நாடகிரி. நல்லமலை/நல்லமலை (கருமலை) உள்ள சுவாமி
நாடகிரீசுவரர். பூவின் கண்ணைச் (பொகுட்டை) சுற்றி இருப்பன இதழ்கள்.
அதன் நடுவே உள்ளது கண். அதில் உள்ள nectar கள் எனப்படது.
கண்/கள் - ண்/ள் தொடர்பு விள்-/விண்- போல. (விள்ளு/விண்ணு > விஷ்ணு).
சிந்துசமவெளியில் இலுப்பை (இருப்பை என்பது சங்கம்) பூவின் கண்களைக்
காய்ச்சி சாராயம் எடுத்தனர். எனவே, அதற்கும் கள் என்றே பெயர் அளித்தனர்.
கள் பனங்கள், மட்டும் இல்லை, காய்ச்சப்படும் எந்த ஸ்பிரிட்டும் கள் தான்.
மதுவர்க்கம் யாவும் கள் என்பது பூக்களின் கள் அதன் கண்ணில் (> கர்ணகத்தில்)
இருப்பதால் தான். ஆக, ஒன்றன் பெயர் அந்த இனத்திற்கே பொதுப்பெயர்
ஆவது பல சொற்களில் பார்க்க முடியும்: (1) மாடு (< மடி, மாடு=பெண்பசு)
இருபாற்பெயர் ஆதலும் (2) பெண்ணை (=பெண்பசு) ஏற்றை-பெண்ணை
இருபாலுக்கும் சில சமயங்களில் (3) கள் பூவின் கண்ணின் நெக்டர்,
மதுவகைகள் யாவுக்கும் ஆதல் இந்த phenomenon-கு எடுத்துக்காட்டுகள். ~NG

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 1:23:30 PM6/17/14
to mintamil
// கோசலத்தில் உள்ளது koதான்.  இது அதை நிரூபிக்காது//

ஹரிகி ஐயா,

தமிழகத்தை ஆண்ட அரச வம்சங்களில் இடம் பெற்றுள்ள  “ கோப்பெருந்தேவி “, “கோப்பெருஞ்சோழன்“ போன்ற பெயர்களில் உள்ள “ கோ “, என்பது KO vaa Go vaa ??

தேமொழி

unread,
Jun 17, 2014, 1:35:29 PM6/17/14
to mint...@googlegroups.com

On Sunday, June 15, 2014 10:27:37 AM UTC-7, Prakash Sugumaran wrote:
உண்மை. ஜைன மதத்தில் மத மாற்றம் செய்ய அனுமதி இல்லை. ஜைன இளைஞரை மணக்கும் வேற்று மதத்தை சேர்ந்த பெண் கூட அவர்களது குடும்ப கோத்திரத்திலேயே பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பவுத்த மதத்தில், சங்கத்தில் இணைய விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளை ஏற்று, கடைபிடித்து குருமார்கள் திருப்தி அடைந்தாலும், குடும்பத்தினரின் முழு அனுமதி பெற்ற பிறகே, அவர்களது முன்னிலையில் பவுத்தராக ஏற்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை.

On Tuesday, June 17, 2014 6:59:24 AM UTC-7, Prakash Sugumaran wrote:

அய்யா வழிபாடு, தாய் வம்சம் என குறிப்பிடப்படும் பெண் தெய்வ வழிபாட்டு காலத்திலேயே தோன்றியது. நைனா என்பது அப்பாவை குறிக்கும்.  நைனாவை தழுவியவர் நைனார் ஆனார். நைனா அப்பாவானார், அப்பாவு ஆனார், ஐயன் ஆனார், ஐயனார் ஆனார், ஐயப்பன் ஆனார்.இப்படி பல வடிவங்கள் பெற்றார்.

இவையெல்லாம் சிறு தெய்வ வழிபாட்டு காலத்திய தளங்கள். சமணம் இதெற்கெல்லாம் பிற்காலத்திய, இதையெல்லாம் உள்வாங்கிய பெரும் மதம். சிறு மதங்களை அரசியல்ரீதியாக கபளீகரம் செய்து வளர்ந்த முதல் மதம் சமணம்.

இவையிரண்டும் முரணான கருத்துக்களாக இருக்கிறது, பிரகாஷ்.  
நான் சமண மதத்திற்கு மாற விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுவேனா?  இல்லையா?

..... தேமொழி

Prakash Sugumaran

unread,
Jun 17, 2014, 2:09:54 PM6/17/14
to mintamil
வணக்கம். ஜைன மதத்தில் மதமாற்றம் ஒப்புகொள்ளப்படுவது இல்லை. சிறு தெய்வ வழிபாடுகளை கபளீகரம் செய்வதற்கு முதலில் வழிகாட்டியது சமணம்.

அஷ்டிக கல்வி முறையிலான கற்பனை வாழ்வியலா ? நஷ்டிக கல்வி அடிப்படையிலான நேரடி வாழ்வியலா ? என்ற கேள்விக்கு முன்பு மதமாற்றம் எங்கே வந்தது ?

கொற்றவை, அம்பிகா போன்ற நம்பிக்கை அடிப்படையிலான பெண் தெய்வ வழிபாடுகள் வழக்கொழிந்து போனது சமண மதத்தால். அதுமட்டுமல்ல, ஐயா வழிபாடும், அப்பா வழிபாடும் கூட மறைந்து போனது.

//நான் சமண மதத்திற்கு மாற விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுவேனா?  இல்லையா?//

வாய்ப்பே இல்லை. ஒருவேளை நீங்கள் சமணரை மணந்து கொண்டாலும், உங்கள் பூர்வீகம் என கருதப்படும் கோத்திரம் மாறவே மாறாது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Jun 17, 2014, 2:46:46 PM6/17/14
to mintamil
அன்புள்ள மடலா டருக்கு,

சுகுமாரன் வைத்த து,

வாய்ப்பே இல்லை. ஒருவேளை நீங்கள் சமணரை மணந்து கொண்டாலும், உங்கள் பூர்வீகம் என கருதப்படும் கோத்திரம் மாறவே மாறாது.

இவை நீங்கள் உலக  வாழ்க்கையில் கடைபிடிக்கும் மரபுகள் ஆ னால் 
இந்தியாவில் உள்ள சட்டங்கள் எனும் உலகிற்குள் நீங்கள் எங்கு  நிற்கின்றீர் ??

முதலில் உங்கள் மதம் எது எனும் வினா வினில் நீங்கள் பூர்த்திசெய்யும் சொல் எது? ஜைனம் என்றா?? அல் லது வேறா ???
ஜைனம் என்றால் அதற்கென முகமதியர்கள் போல் கிருஸ் துவர்கலள் போல் தனியாக இந்துக்களுக்கு உள்ள சட்டம்
போல் திரு மண திற்கு ஜைனத்தின ர்கென்று தனி சட்டங்கள் உள்ளனவா?? 

வாணிக உலகில் பெரும் பகுதி உள்ள ஜைனர்கள் HUF எனும் வருமான வரி சட்ட எல்லைக்குள் வருவார்களா வரமாட்டார்களா?? 

அன்புடன் 
நூதலோசு
மயிலை 

தேமொழி

unread,
Jun 17, 2014, 7:01:00 PM6/17/14
to mint...@googlegroups.com

இப்படி அடாவடி செய்யாமல், மூளைச் சலவை செய்யாமல், எங்கள் ஆளைத் திருமணம் செய்யவேண்டும் என்றால் மதம் மாறியே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்காமல், ஆசை வார்த்தை காட்டாமல், அரட்டி உருட்டாமல், மிரட்டி பயமுறுத்தாமல் எப்படித்தான் மதத்தைப் பரப்புவது என்று சமணம் எதிர்பார்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

இதில் அகிம்சை வேறு.  தாவரஉண்ணியாக இருக்க வேண்டும் என்ற வாழ்கைமுறை வேறு. ம்ம்ம். எதுவம் ஆர்வம் மூட்டுவதாக இல்லை. 

இப்படியெல்லாம் அப்பாவித்தனமாக இருந்தால் அடுத்தவர் கழுவில் போடவேண்டாம், கடலில் போடவேண்டாம்.  தானாகவே மதத்தில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்துவிடும்.

Neither active propaganda and nor passive activity...what a hopeless approach!!! 

....தேமொழி
 
On Tuesday, June 17, 2014 11:09:54 AM UTC-7, Prakash Sugumaran wrote:
வணக்கம். ஜைன மதத்தில் மதமாற்றம் ஒப்புகொள்ளப்படுவது இல்லை. சிறு தெய்வ வழிபாடுகளை கபளீகரம் செய்வதற்கு முதலில் வழிகாட்டியது சமணம்.

அஷ்டிக கல்வி முறையிலான கற்பனை வாழ்வியலா ? நஷ்டிக கல்வி அடிப்படையிலான நேரடி வாழ்வியலா ? என்ற கேள்விக்கு முன்பு மதமாற்றம் எங்கே வந்தது ?

கொற்றவை, அம்பிகா போன்ற நம்பிக்கை அடிப்படையிலான பெண் தெய்வ வழிபாடுகள் வழக்கொழிந்து போனது சமண மதத்தால். அதுமட்டுமல்ல, ஐயா வழிபாடும், அப்பா வழிபாடும் கூட மறைந்து போனது.

//நான் சமண மதத்திற்கு மாற விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுவேனா?  இல்லையா?//

வாய்ப்பே இல்லை. ஒருவேளை நீங்கள் சமணரை மணந்து கொண்டாலும், உங்கள் பூர்வீகம் என கருதப்படும் கோத்திரம் மாறவே மாறாது.
2014-06-17 10:35 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Sunday, June 15, 2014 10:27:37 AM UTC-7, Prakash Sugumaran wrote:
உண்மை. ஜைன மதத்தில் மத மாற்றம் செய்ய அனுமதி இல்லை. ஜைன இளைஞரை மணக்கும் வேற்று மதத்தை சேர்ந்த பெண் கூட அவர்களது குடும்ப கோத்திரத்திலேயே பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பவுத்த மதத்தில், சங்கத்தில் இணைய விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளை ஏற்று, கடைபிடித்து குருமார்கள் திருப்தி அடைந்தாலும், குடும்பத்தினரின் முழு அனுமதி பெற்ற பிறகே, அவர்களது முன்னிலையில் பவுத்தராக ஏற்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை.

On Tuesday, June 17, 2014 6:59:24 AM UTC-7, Prakash Sugumaran wrote:

அய்யா வழிபாடு, தாய் வம்சம் என குறிப்பிடப்படும் பெண் தெய்வ வழிபாட்டு காலத்திலேயே தோன்றியது. நைனா என்பது அப்பாவை குறிக்கும்.  நைனாவை தழுவியவர் நைனார் ஆனார். நைனா அப்பாவானார், அப்பாவு ஆனார், ஐயன் ஆனார், ஐயனார் ஆனார், ஐயப்பன் ஆனார்.இப்படி பல வடிவங்கள் பெற்றார்.

இவையெல்லாம் சிறு தெய்வ வழிபாட்டு காலத்திய தளங்கள். சமணம் இதெற்கெல்லாம் பிற்காலத்திய, இதையெல்லாம் உள்வாங்கிய பெரும் மதம். சிறு மதங்களை அரசியல்ரீதியாக கபளீகரம் செய்து வளர்ந்த முதல் மதம் சமணம்.

இவையிரண்டும் முரணான கருத்துக்களாக இருக்கிறது, பிரகாஷ்.  
நான் சமண மதத்திற்கு மாற விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படுவேனா?  இல்லையா?

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jun 17, 2014, 11:02:25 PM6/17/14
to மின்தமிழ்

2014-06-18 4:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
Neither active propaganda and nor passive activity...what a hopeless approach!!

​tamil jains were very clear in their pursuit.  Basically they were teachers.  They migrated to the interior Tamilnadu and chose to live outside the community.  They took the responsibility of educating the people with ethics and morals of Jainism and Buddhism

Let us not mix Jain seers with the followers of Jain teachings.  The followers of Jainism were predominantly trading communities. 

​Isn't it a fact that Kannaki married Kovalan being Jain and Buddhist followers  by passing the religious barrier

Tamil Jainism and Tamil Buddhism were a hybrid outcome selecting the best from these two non-Aryan religions of north to develop a Dravidian religion

Nagarajan

N. Ganesan

unread,
Jun 18, 2014, 12:47:36 AM6/18/14
to mint...@googlegroups.com

On Monday, June 16, 2014 11:40:14 PM UTC-7, தேமொழி wrote:
///ஆரியப்படை என்ற படை வேத விற்பன்னர்கள் உருவாக்கியதா அல்லது அவர்கள் முடிசூட்டிய ஆரிய மன்னர்களா ///

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் 
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது

சிலப்பதிகாரம்: 2. காட்சிக் காதை, வரிகள் 156 - 159

செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று

சிலப்பதிகாரம்: 4. நீர்ப்படைக் காதை, வரிகள் 5- 9

போன்ற வரிகளில் இளங்கோ கனக, விஜய மன்னர்களைப் போன்ற மன்னர்களை  ஆரிய மன்னர்கள் என்று குறிப்பிடுகிறார்.  
எனவே வடநாட்டில் அப்பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆரிய மன்னர்கள் எனவே நான் கொள்வேன். ஆரியப்படை என்பது அவர்கள் படை என்றுதான் புரிகிறது. 
(பாண்டியர்கள் என்றால் தமிழகத்தின் தென்பகுதியை ஆண்ட  மன்னர்கள் என்பது போல...)
http://ta.wikipedia.org/s/fph ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ...சேரன் செங்குட்டுவனுக்கு முன்னரே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வடதிசையில் ஆரியர்களுடன் போரிட்டு வந்துவிட்டார்.  ஆரியர் என்பது சிலப்பதிகார காலத்தில்  நன்கு தெரிந்த சொல் என்பதும், 

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்....

என்ற வரிகளின் மூலம் வடதிசை ஆரிய மக்களின் வழக்கமான வர்ணபேதங்கள்  தென்திசையிலும் தமிழரிடம் பரவி இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. 
கண்ணகி கதையுடன் தொடர்புடைய இருமன்னர்களும் ஆரியப்படையுடன் போரிட்டவர்கள். அதிலும் முன்வாழ்ந்தவர் பேதங்கள் பற்றி பாட்டெழுதுகிறார்.

ஆரியர்கள் - திராவிடர்கள் கலப்பால் உருவான இந்திய பண்பாட்டில் இரு மொழிக்குடும்ப மக்களின் பங்கும் 
உண்டு என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள். 50 ஆண்டுகளாக சங்க இலக்கியத்தை ஆராய்ந்து
மொழிபெயர்த்து வரும் பேரா.ஹார்ட் சங்க இலக்கிய சமுதாயம், சமயம் இவற்றில் ஜாதிபேதம்
பற்றி தமிழின் மிகப் பழைய இலக்கியங்களில் இருந்து எடுத்து விரிவாக எழுதியுள்ளார். வடநாட்டில்
இருந்தது வேதம், உபநிஷத்துகள் போன்றவற்றால் அறிகிறோம். புல்- என்ற வேரில் இருந்து
உருவாகும் புலி, புலை, புலா/புலவு சொற்களை ஆராய்ந்தால் த்ராவிடர் பங்கு அறியலாம்.
புறநானூறு, அகநானூறு மொழிபெயர்த்த பேரா. ஹார்ட் கட்டுரை சங்ககால caste பற்றி
ஆராய்கிறது. தமிழ்ப் பேராசிரியர்களின் சங்க இலக்கிய ஆய்வுகளில் முக்கியமான கட்டுரை இது.

13 ஆண்டுகளுக்கு முன்னர் ஜார்ஜ் ஹார்ட் எழுதினார்:
https://groups.yahoo.com/neo/groups/agathiyar/conversations/topics/14437
<<<
I should like to write a few words here on the subject of 
caste in early Tamil Nadu. 

First of all, I should like to point out that this is an 
extremely contentious subject. It would not be excessive to say it 
is as vexed as that of the origin of the Aryans. There is a school 
of thought, one accepted by most Indians, that caste is the creation of 
the Aryans, who, after creating their monster, proceeded to impose it 
on everyone in South Asia. Tamils have become followers of this 
school with great enthusiasm, as it places the stigma for one of the 
least enlightened features of their society on someone else. Indeed, 
so strongly have some Tamils supported this idea that they have come 
to resemble the inquisition in their zeal: any Tamilian who does not 
accept what they say does not deserve to be called a Tamilian. As a 
VeLLaikkaaran, I am somewhat exempt. While I am not excoriated, it 
is often suggested that I could not really understand what is really 
going on as I do not come from the culture. 

None of this is germane to caste. It has to do with modern 
Indian politics, pure and simple. Whether the Tamils had caste 
before the Aryans is in no way a reflection on the great literature 
and culture they created. Do we blame the Greeks and Romans for 
having slaves when we read the Homer or Virgil? All premodern 
societies had glaring social inequities. None functioned like modern 
welfare states. It would be quite strange if this rule did not apply 
to the Tamils of the Sangam age. 
In my article, I give what I feel (still) is irrefutable 
evidence that caste existed in ancient Tamil Nadu. 
Now, consider the following: 

1. The whole caste system cannot be attributed to the Jains, who did 
not believe in caste. 
2. The caste system is characterized by the multiplicity of groups at 
the bottom. How could this have happened if it was brought and 
imposed by an outside group? 
3. The texts state in clear and unequivo\cal terms that the people at 
the bottom were engaged in funerary practices, in beating drums, in 
working leather, in washing clothes, and in performance. Such words 
as 'of low birth' and 'low one' are applied to such people. Consider 
the following poem (Puram 363): 
Before the grim day comes when on the burning ground 
where thorn bushes grow wound together with spurge 
on that broad site where the biers rise up and a man of a caste 
that is despised picks up the boiled, 
unsalted rice and does not look 
anywhere around him and gives it 
to you so that you accept a sacrifice for which you have no desire 
with its dish the earth itself...
Here, the critical words are 'izi piRappoon iiyap peRRu' (as the one 
of despised birth gives it and you get it). Do you really think that 
by any stretch of the imagination this could mean 'as the one who 
will have a low birth (next time he is reborn)'? 
4. Much is made of the similarity between poli, 'shine' and pulaiyan, 
'despised or polluted person.' These are two different roots. All 
languages have words that appear similar yet are unrelated. NT 
Ramarao can't pronounce the difference between krtaghna and krtajna, 
which have opposite meanings. One can find hundreds of such words 
everywhere in every language -- good and God; day and die; lead 
(metal) and lead (conduct); black and back; read and red; -- one can 
think of literally thousands. The fact is, pul means 'dull' while 
poli means 'shine.' These are totally unrelated, and their 
similarity means nothing. Emeneau and Burrough, who looked at all 
the Dravidian languages (not just Tamil), have said they are 
definitely two unrelated roots. 
5. How about the other Dravidian languages where derivatives of pulai 
mean pollution in some form or another? 
6. Do you really suppose it is credible that a few outsiders -- 
whether Brahmins, Jains, or Martians -- came into Tamil Nadu and 
managed to impose something as complex as the caste system in a few 
centuries? Remember, the caste system is not something that is 
legislated. It reflects and determines the basic structures and 
workings of the culture. Castes do not look outside themselves for 
their identity -- each has its own customs, its own history, its own 
occupations, etc. etc. etc. This sort of thing cannot be legislated, 
and it can't suddenly spring up in 300 years. Sangam literature 
shows it was already well-established. 
7. No Aryan group has anything remotely like caste. Even the early 
Aryans did not. They had a 3-fold division (Brahmins, Ksatriyas, 
Vaisyas), and Sudras only come in at the very end of the Rig Veda. 
It seems obvious to me that this Aryan system was a response based on 
what they found in South Asia when they arrived (see Witzel's 
excellent article for the arrival of the Aryans). Note that even the 
Avestans, who were extremely closely related linguistically and 
culturally to the Rig Vedic Aryans, had nothing remotely resembling 
varna. 
8. My own view? That caste (jati, not varna) is an extremely ancient 
institution, at least 3000 years old, and probably even older, in 
South Asia. Its characteristic features is not Brahmins but dalits. 
It is as much a part of the landscape as the mountains and oceans, 
and it is nearly as old. As a friend of mine once remarked, 'No 
caste, no India.' Sad but true. - George

நா. கணேசன்

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Jun 18, 2014, 3:39:40 AM6/18/14
to மின்தமிழ்
2014-06-17 19:29 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
பானுகுமார் ஐயா,

அய்யா வழிபாடு, தாய் வம்சம் என குறிப்பிடப்படும் பெண் தெய்வ வழிபாட்டு காலத்திலேயே தோன்றியது. நைனா என்பது அப்பாவை குறிக்கும்.  நைனாவை தழுவியவர் நைனார் ஆனார். நைனா அப்பாவானார், அப்பாவு ஆனார், ஐயன் ஆனார், ஐயனார் ஆனார், ஐயப்பன் ஆனார்.இப்படி பல வடிவங்கள் பெற்றார்.

அன்பின் பிரகாஷ்,

நைனா என்பது நயினம் என்பதின் மருவு.  ஈனம் என்பது மாசு என்று பாகதத்தில் பொருள். ந+யின என்பது மாசற்றவன் என்று பொருள். இந்த
சொல் தமிழில் வரும்போது ஆர் விகுதிச் சேர்த்து, நயினார் என்று ஆகியது என்றுப் படித்திருக்கிறேன். இச்சொல்லிருந்து நாயனார் வந்தது என்றும்
படித்திருக்கிறேன். (இது யான் படித்த கருத்தேயன்றி, இதுதான் சரி என்று சொல்லவில்லை). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாகயிருக்கிறது.

இவையெல்லாம் சிறு தெய்வ வழிபாட்டு காலத்திய தளங்கள். சமணம் இதெற்கெல்லாம் பிற்காலத்திய, இதையெல்லாம் உள்வாங்கிய பெரும் மதம். சிறு மதங்களை அரசியல்ரீதியாக கபளீகரம் செய்து வளர்ந்த முதல் மதம் சமணம்.

இக்கருத்தில் எனக்கு உடன்பாடன்று.
 
அதே வழியை பின்பற்றி மற்ற வைதீக மதங்களும் சிறு தெய்வ வழிபாட்டை அழித்து, தங்களை வளர்த்து கொண்டன.

பாஹுபலி வணங்கப்படும் கோவில்களில் தர்ம தேவி வணங்கப்படுவதன் காரணம், ஆண் - பெண் சமம் எனும் அர்த்தனாரீஸ்வர தத்துவம் அப்போதே தொடங்கியதால்தான்.

இவ்வாறெல்லாம் எங்கு படித்தீர்கள் பிரகாஷ். அர்த்தனாரீஸ்வ ”தத்துவம்” என்று சமணத்தில் கிடையாது. தீர்த்தங்கரர்களுக்கு அர்த்தனாரீஸ்வரர் என்ற
விளி உண்டு. அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. இங்கேயே எழுதியிருக்கிறேன். பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

இரா.பானுகுமார்,
சென்னை

N D Logasundaram

unread,
Jun 18, 2014, 5:26:58 AM6/18/14
to mintamil
தமிழ் ச் சொல்லின் ஊ டே  வட மொழியின் ஒலி  வராது 

கோன், கோச்சடையன்,  கோத்தும்பி என்பவற்றுள் உள்ளது போல் 

தொல்காப்பிய பிறப்பியல் நூற்பா  வழி எழுத்துக்கள் யாவும் ஒலி  எழும் பிறப்பிடம் பற்றித்தான் 
எழுதப்படும் க(1) க(2) க(3) க(4)  இவை எல்லாம் பிறக்குமிடம் ஒன்றுதான் ஆ னால் ஒலிகும்போது
வளியை வெளிவிடும் போக்கினைப் பொருத்தது 

உலகிலுள்ள  மொழிகளி ல் 3000 + ஆண்டுகளுக்கு முன்பே எழுத் து இவை இவை இவற்றினை இம்
முறையில் ஒலி க்கவேண்டும் என நா அண்ண ம் உதடு இவற்றின் பயன் கொள்ளும் வகை பற்றிக்
கூறுவது தமிழ் மொழி போல் எங்கும் இல்லை  

பாரிஸ் நகர உலக தர நிர்ணய சாலையில் ஒரு பிளாட்டினம் சட்டத்தில் இரு கோடுகள் இட்டு
இதுதான் மீட்டர்  ஒர் எடைக கல்லை வைத்து இதுதான் கிலோகிராம் என்பதுபோல்
தர நிர்ணயம் மொழியின் எழுத்துக்களுக்கே நூற் பா (சூத்திரம்) வழியில் நாவினை இப்படி மடித்து 
இப்படி வருடி இப்படி இதழ் குவித்து இப்படி வாயைத் திறக்க இவொலி வரும் எனும் வாயால் ஒலிக்கும்
முறையினை கண்ணால்  காணும் எழுத்து வழி  எந்நாளும் மாறாமல் இருக்கும் வழியில் கொடுத்து ள்ளமை
மிக்க சிறப்புடைய   தமிழின்  தனித்தன்மை வேறு உலக மொழிகளில் எங்குமில்லை 
 
நான் என்ன நீங்களும் நன்கே பெருமிதம் கொள்ளலாம்
இதற்கு  ஒருதுளியாவது தயங்குவோர் தமிழரா க மாட்டார்

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை  

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 6:11:35 AM6/18/14
to mintamil
//இவ்வாறெல்லாம் எங்கு படித்தீர்கள் பிரகாஷ்//

எதிலோ படித்து, அதையே ஆதாரமாக சொல்வது பல்கலைகளில் பட்டம் வாங்க வேண்டுமானால் உதவும் :)) புரிதல் என்பது வேறு அல்லவா ?

//இப்படியெல்லாம் அப்பாவித்தனமாக இருந்தால் அடுத்தவர் கழுவில் போடவேண்டாம், கடலில் போடவேண்டாம்.  தானாகவே மதத்தில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்துவிடும்//

இதுதான் உண்மை. சல்லேகணத்தை மறந்து விட்டீர்களே !!

//Neither active propaganda and nor passive activity...what a hopeless approach!!//

தேவையில்லை. ஏனெனில் மதம் என்பது நிறுவனமல்ல.. அது ஒரு அமைதிக்கான வாழ்வியல் :))

//சிறு மதங்களை அரசியல்ரீதியாக கபளீகரம் செய்து வளர்ந்த முதல் மதம் சமணம்.

இக்கருத்தில் எனக்கு உடன்பாடன்று. //

ஒப்புகொண்டே ஆக வேண்டும் பானுகுமார் ஐயா. அடவுக்கு ஒரு காவல் தெய்வம், எல்லைக்கு ஒரு அம்மன், நீதி சொல்ல ஒரு அய்யன், அதை நிறைவேற்ற ஒரு பூதம், குலத்துக்கு ஒரு வழிபாடு, குன்றத்துக்கு ஒரு கடவுள் என ஜீவாதார, வாழ்வாதார அடிப்படையில் பலப்பல நம்பிக்கைகள், சிறு தெய்வங்களாகி, அவற்றையே வழிபட்டு வந்த மக்களை ஒன்று திரட்டி மதத்தின் பெயரால் முதன்முதலில் இணைத்தது சமணம்.

அதை முதன்முதலில் முயற்சி செய்தவரே ஆதீஷ்வரன். போட்டியாளர்கள் விழித்து கொள்ளும் முன் இமயம் முதல் குமரி வரை அந்த மத நிறுவனம் விரைந்து முன்னெடுக்கப்பட்டது.

போட்டியாளர்கள் விழித்த பிறகு இதுபோல பல மத நிறுவனங்கள் உருவாகி, அடிப்படைகள் மறைந்து.. மறந்து போனது. எனவே வாழ்வியல் குழப்பம் ஏற்பட்டு எல்லாமே கேள்விக்குறியாகி விட்டது.

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 6:22:55 AM6/18/14
to mintamil
//வணிகர்கள் வெளியில் இருந்து வந்தவர்களாக்வே இருப்பதை மானுடவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தும்//

வெளியிலிருந்து வணிகர்கள் வந்து வாணிபம் செய்தது சரி. யாருடன், எதை வியாபாரம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறதே ஐயா.

நமது பண்டைய வர்த்தகம் என்பது உள்ளூர் அளவிலும் வேறு வேறு பகுதிகளுக்கு இடையிலேயும், பண்டமாற்று முறை. வெளியில் இருந்து வந்தவர்களும் முதலில் அதையே செய்தனர். பிறகு பொருளுக்கு - பொருள் வணிகம் செய்வது போக்குவரத்துக்கான செலவு அடிப்படையில் லாபமில்லை என்ற நிலையிலேயே வணிகத்தன்மை மாறி இருக்கும். எனவே வணிகப் பொருளுக்கு ஈடாக தங்கம், வெள்ளி என விலை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

இந்த போக்குவரத்தை முதலில் தொடங்கியது வெளியில் இருந்து வந்தவர்களா அல்லது இங்கிருந்து வெளியில் சென்றவர்களா என்பதில் சந்தேகம் உள்ளது.

பட்டுப்பாதை என்ற அடிப்படையில் வெளியே செல்ல தொடங்கியது இங்குள்ளவர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் கடல் வழியில் ??

அதையும் முதலில் சாத்தியமாக்கியது தமிழக கடலோடிகள் என்பதை நமது ஒரிஸ்ஸா பாலு அவர்கள் வந்துதான் நிரூபிக்க வேண்டும் :))

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 6:25:47 AM6/18/14

எப்படியும் வெளியில் இருந்து வந்த வணிகர்கள் இங்கு இருந்திருக்கக்கூடிய வணிகர்களிடம் தான் வணிகம் செய்திருக்க வேண்டும்.

இந்த போக்குவரத்தை முதலில் தொடங்கியது வெளியில் இருந்து வந்தவர்களா அல்லது இங்கிருந்து வெளியில் சென்றவர்களா என்பதில் சந்தேகம் உள்ளது.

பட்டுப்பாதை என்ற அடிப்படையில் வெளியே செல்ல தொடங்கியது இங்குள்ளவர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் கடல் வழியில் ??

அதையும் முதலில் சாத்தியமாக்கியது தமிழக கடலோடிகள் என்பதை நமது ஒரிஸ்ஸா பாலு அவர்கள் வந்துதான் நிரூபிக்க வேண்டும் :))

Banukumar Rajendran

unread,
Jun 18, 2014, 6:48:17 AM6/18/14
to மின்தமிழ்
2014-06-18 15:41 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
//இவ்வாறெல்லாம் எங்கு படித்தீர்கள் பிரகாஷ்//

எதிலோ படித்து, அதையே ஆதாரமாக சொல்வது பல்கலைகளில் பட்டம் வாங்க வேண்டுமானால் உதவும் :)) புரிதல் என்பது வேறு அல்லவா ?

யாதொன்றையும் படிக்காமல் கருத்துக் கூறமுடியாது இல்லையா? எல்லாவிதமான கருத்துக்களையும் படித்துவிட்டு, தனக்கென ஒரு கருத்தை
உருவாக்கிக் கொள்ளலாம்தான். இருப்பினும், அதே சமயம் அதற்கு தக்க சான்று காட்டி தன் கருத்தை நிறுவவேண்டும். இல்லையா?

அதனால் தான் கேட்டேன். எங்கு படித்தீர்கள் என்று. ஒன்றுமில்லை, தாங்கள் எழுதுவது தங்கள் கருத்து என்றுப் புரிந்துக் கொண்டேன். அதனால் தவறொன்றுமில்லை.
 
//இப்படியெல்லாம் அப்பாவித்தனமாக இருந்தால் அடுத்தவர் கழுவில் போடவேண்டாம், கடலில் போடவேண்டாம்.  தானாகவே மதத்தில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்துவிடும்//

இதுதான் உண்மை. சல்லேகணத்தை மறந்து விட்டீர்களே !!

பிரகாஷ்,

இது யான் எழுதியதில்லை. தேமொழியார் எழுதியது என்று நினைக்கிறேன். ஒரே மடலில் அனைவர் கருத்துக்களுக்கும் பதிலுரை
எழுதலாம்தான்.  ஆனால், யார் எழுதியது என்றுக் குறித்துவிட்டு மறுமொழி எழுதினால், படிப்பவர்களுக்கு யார் கருத்து பதிலுரை
எழுதுகிறீர்கள் என்று எளிதில் புரியும்.

//Neither active propaganda and nor passive activity...what a hopeless approach!!//

தேவையில்லை. ஏனெனில் மதம் என்பது நிறுவனமல்ல.. அது ஒரு அமைதிக்கான வாழ்வியல் :))

இதுவும் யான் எழுதவில்லை. தேமொழியார் எழுதியது என்று நினைக்கிறேன்.
 
//சிறு மதங்களை அரசியல்ரீதியாக கபளீகரம் செய்து வளர்ந்த முதல் மதம் சமணம்.

இக்கருத்தில் எனக்கு உடன்பாடன்று. //

ஒப்புகொண்டே ஆக வேண்டும் பானுகுமார் ஐயா.

என் அறிவுக்கு அது சரியென்று படும்வரை யான் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டேன் பிரகாஷ்.

அடவுக்கு ஒரு காவல் தெய்வம், எல்லைக்கு ஒரு அம்மன், நீதி சொல்ல ஒரு அய்யன், அதை நிறைவேற்ற ஒரு பூதம், குலத்துக்கு ஒரு வழிபாடு, குன்றத்துக்கு ஒரு கடவுள் என ஜீவாதார, வாழ்வாதார அடிப்படையில் பலப்பல நம்பிக்கைகள், சிறு தெய்வங்களாகி, அவற்றையே வழிபட்டு வந்த மக்களை ஒன்று திரட்டி மதத்தின் பெயரால் முதன்முதலில் இணைத்தது சமணம்.

என் வரையில் தவறான கருத்து. பிறகொரு நாள் பேசலாம் பிரகாஷ்.

அதை முதன்முதலில் முயற்சி செய்தவரே ஆதீஷ்வரன். போட்டியாளர்கள் விழித்து கொள்ளும் முன் இமயம் முதல் குமரி வரை அந்த மத நிறுவனம் விரைந்து முன்னெடுக்கப்பட்டது.

மாற்றுக் கருத்திருப்பினும், ஒருவாறு ஒப்புக் கொள்கிறேன்.  ஆதீஷ்வரன் இல்லை. ஆதீஸ்வரன்!

போட்டியாளர்கள் விழித்த பிறகு இதுபோல பல மத நிறுவனங்கள் உருவாகி, அடிப்படைகள் மறைந்து.. மறந்து போனது. எனவே வாழ்வியல் குழப்பம் ஏற்பட்டு எல்லாமே கேள்விக்குறியாகி விட்டது.

மாற்றுக் கருத்திருப்பினும், ஒருவாறு ஒப்புக் கொள்கிறேன்.

நன்றி.

இரா.பானுகுமார்,
சென்னை

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 6:48:29 AM6/18/14
to mintamil
// முகமதியர்கள் போல் கிருஸ் துவர்கலள் போல் தனியாக இந்துக்களுக்கு உள்ள சட்டம்
போல் திரு மண திற்கு ஜைனத்தின ர்கென்று தனி சட்டங்கள் உள்ளனவா?? //

ஆங்கிலேயர் வந்த பிறகு, அவர்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில்தான் இந்திய சமுதாயத்தை புரிந்து கொள்வதெனில், ஜைனர்களுக்கு மட்டுமல்ல எந்த மதத்திற்கும் தனித்தனி குடும்ப, சமுதாய சட்டங்கள் இல்லை.

இசுலாமிய சமூகத்தவர் போர்க்கொடி உயர்த்தி வரும் இன்றைய நடப்பு சூழ்நிலையை கூட நாம் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது, நமது புரிதல் மேலதிகமாக குறைந்து, ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாகவே இன்றும் நமது மக்கள் தொடர்வதன் அடையாளம்.

ஆனால் அவரவர் வீட்டில் மணம் செய்து கொடுக்கும் பெண்களின் தாலிக்கொடி அமைப்பில், இந்திய சமுதாயத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். இதில் எந்த சட்டமும் உள்நுழைய முடியாது.

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 7:03:47 AM6/18/14
to mintamil
//அதே சமயம் அதற்கு தக்க சான்று காட்டி தன் கருத்தை நிறுவவேண்டும். இல்லையா?//

படிக்காமல் நான் எழுதியதை, நீங்களே உறுதி செய்துள்ளீர்களே.. :))

//அர்த்தனாரீஸ்வ ”தத்துவம்” என்று சமணத்தில் கிடையாது. தீர்த்தங்கரர்களுக்கு அர்த்தனாரீஸ்வரர் என்ற
விளி உண்டு. அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு.//

நன்றி !!

Banukumar Rajendran

unread,
Jun 18, 2014, 7:13:36 AM6/18/14
to vallamai, மின்தமிழ்
2014-06-13 14:46 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள மடலாடருக்கு,

கோம டே சு வரர் உருவம்தான் என இப்போது தெரிய வந்துள்ளது
பற்றி மகிழ்ச்சி நான் வைக்க நினைத்த மடலை நிறுத்திவிட்டேன்
நிற்க ,
நான் இப்போது கேட்க நினைப்பது 

உருவ வடிவமைப்பு கலையில் (ICONOGRAPHY) ஓர் தரம் தாங்கும்
மரபு வேண் டும் எனும் உணர்விற்காகவே பல  சில்ப சாத்திர நூல்கள்
தோன்றின 

அவைகளில் உள்ள சில  மரபுகளில் நான் அறிந்தவை சில 

1) வானம் அல்லது காற்று வெளி என்பதைக்காட்ட சில பறக்கும் பறவைகளை இட்டிருப்பர்,
2) நீருள்ள இடம் என்பதனை நீந்தும் மீன்களால் காட்டுவர்
3) யாளியின் உருவம் மிகப்பெரிது எனக்காட்ட அது தன்  துதிக்கையால் ஓர் யானையை சுழற்றுவதுபோல் காட்டுவர்
4) ஆண் / பெண்தெய்வங்களின் திருவாசிகள்  முறையே லிங்க வடிவாகவும் (Semicircular top )
 கவிழ்ந்த இலை (HEARTS shaped top )வடிவாகவும் அமைப்பர் 

இவ்வழி உருவ வடிவமைப்புக் கலையில் உள்ள பொதுவான மறைமுக காட்டு நிலைகளைப்போல்
  
இந்த கோமடீசுவர உருவத்தில் காட்டப்பட்டுள்ள படரும் கொ டி எதனைக் குறிகின்றது ???

திருவாளர் பானு குமார் அவர்களைப்போல் சமணம் தொடர்புடையவர்தான் பதிலளிக்க வேண்டும்
எனக் கருதாமல் எவராயினும் தங்கள் அறிவினில் பட்டதை வைக்கலாம்

யான் பதிலளிக்கலாம் இல்லையா ஐயா? :-)

//இந்த கோமடீசுவர உருவத்தில் காட்டப்பட்டுள்ள படரும் கொ டி எதனைக் குறிகின்றது ???//

தவத்தின் ஆழத்தைக் காட்டும் குறியீடு என்பது என் கருத்து. இதற்கு “மறை”யாக வேறுப் பொருள் கொள்ள
முடியவில்லை.

இங்கு காட்டப்பட்டுள்ள படரும்  கொடிகளை/இலைகளை வைத்து  இந்த   தாவரவகை வகையைச்
சார்ந்ததுஎன மிகவும் கூர்ந்த நிலைக்குச் செல்லாமல் பொதுவாக ஏதோ ஒனறினைக்குறி ப்பதாகக் 
கருதுவதைக் கா ட்டலாம். 

சிற்பத்தை வைத்து இது எவ்வகை சார்ந்தது என்று கூறுவது கடினம்தான். ஆயினும், சில வகை மரங்களை
கூறமுடியும் என்று நினைக்கிறேன். குறிப்பாக ஆலமரம். விழுதுகளை வைத்து எளிதில் சொல்லிவிட
முடியும். சிற்பி கைதேர்ந்தவராகயிருந்தால்.

முல்லைப்பூ பல்லி னுக்கு  எடுத்துக்காட்டு என்றால் வெண்மை  நிறம் மட்டும் தான பார்க்கவேண்டுமே
அன்றி அதன் மிருதுதுத் தன்மையை பார்க்ககூடாதல்லவா? உவமை நிலை எடுத்துக்காட்டுகள் யாவும் 
ஓர் கருத்தினை நன்கே விளங்க வைக்க வந்ததன்றி முழுதும் கொண்ட கருத்திற்குச் சான்றாக ஆக அல்ல
 என்பதை அறிவீ ர்கள் 

என் கருத்து:

கோ மடேசுவரர் எனும் தெய்வமாயினார் நின்ற நிலையிலேயே பல காலம் தியானத்தில் ஆழ்ந்தார்
(தியான நிலை கோமடசு வர மூர்த்தம்) அதனால்  அவர் மேல்  வளரும் பயிரினங்கள் தங்கள்
 வழி அருகுள்ள  கிடைக்கும் பொருள்கள்  மேல்ப டர்ந்தது என்பதனை  மட்டும் காணவேண்டும்
சிலமுனிவர்கள் காட்டில் தவம் செய்யும் போது  தங்கள் மேல் கரையான் புற்றுகள் கூட வளர்ந்தது
 எனபடித்ததுண்டு அல்லவா// அதற்கு இணையாகவே இதனைக்கான்கின்றேன் அதனால் தான் புற்றில்
 வாழும் பாம்புகள் மட்டும் காணப்படுகின்றன. கீழே புற்று கூட இருக்கின்றது என நினைக்கின்றேன் 
பாதம் அதற்குக்கீழ் படம் காணவில்லை
அதான்று மிகப்பெரிய உருவம் மிகப்பெரிய தெய்வம் எனக்கட்டவே எழுந்தது எனலாம் 

தங்கள் கருத்து சரியே.

இவ்வழி முன்பு ஒரு மடலில் ஆதிச்சூடி பற்றியதில் வேறு ஒரு கருத்து ஏழுதி இருந்தேன்
 
தீர்தங்காரர்கள் என்றாலும் கௌதம புத்தர் என்றாலும் அவர்களின் காது களின் துளை கள் மிக மிக நீளமாக 
காட்டப்படுகின்றன 

ஐயா, சிற்ப சாத்திரப்படி (படித்த/கேட்ட ஞானம்தான்), சில விதிமுறைகள் உண்டு.

அரச புருஷ இலட்சணத்தின்படி:

1. காதுகள் நீளமாகவும், அகலமாகவும் இருத்தல் அவசியம் - யானை போன்று - அவ்வாறு இருந்தால் மனதிடமும், புத்திக் கூர்மையும்
கொண்டவன் என்று கூறுவர். தேமொழியார் சொல்வதுபோலவும் எடுத்துக்கொள்ளலாம். அரச குலத்தவருக்கு காதில் குண்டலம் இருக்கும்.

2. மார்பில் மரு காட்டப்படவேண்டும் - அவ்வாறு காட்டப்படுவதன் நோக்கம் - இவர் அரசராகவேயிருந்தாலும், அவரும் நம்மை (பாமரர்) போன்று மரு, மச்சம் உடையவர் என்று காட்டுவதற்காக. பாமர சிலைகளில் மரு காட்டப்படுவதில்லை.

3. நிற்கும்போது (கயோத்சர்கம்), கைகள் கால் முட்டிவரை நீண்டுக் காட்டப்படவேண்டும் - அது வீரத்தின் குறியீடு.

எனக்கு தெரிந்தவரை எழுதியிருக்கிறேன். மேலதிகம் தெரிந்தவர்கள் மேலும் விளக்கலாம்.

இரா.பானுகுமார்,
சென்னை (கூடிய விரைவில் பங்களூர் வாசியாக) :-)

சிவபெருமானின் மூர்த்தங்களில் இடது கா தில்(பனைத்)தோடும் வலது காதில் குழையும் காணப்படும்(தோடு பெண்பாகம்)
மதுரை கேரளம் பகுதிகளில் இன்றும் காதில்  ஓலைகள் என்பர் நீண்டு தொங்கும் சிலவேளை தோளில் கூட இடிக்கும்
 அளவு நீடு விடும் 

அவ் வழி மேல் குறித்த தீர்தன்காரர்களின் புத்தபிரானில் காதுகளில் துளை கள்  மிக நீண்டு காணப்படுவதன் காரணம் என்ன ???
அவர்கள் காதில் ஏதும் அணிவதும் இல்லையே அவ்வாறு இருக்க நீண்ட துளைஏன் ??? 

அன்புடன் 
நூ தா லோ சு 
மயிலை 

2014-06-13 9:48 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

விளக்கமளித்த  திரு. தேவ், பிரகாஷ், சுபா அனைவருக்கும் நன்றி.

நான் பார்சுவநாதர் கோயிலில் சிலை இருந்தால் அது பார்சுவநாதர் சிலை என்று சுலபமாக நினைத்துவிட்டேன் :)))

பிரகாஷ் அளித்த விளக்கங்கள் மேலும் கோமதீஸ்வரர் யார் எனத் தெளிவுபடுத்தியது.

இவரின் சகோதரன் பரதன் பெயரில் அமைந்ததே பாரதத்திற்கு பாரதம் என்ற பெயர் என்பதாக எங்கோ படித்த நினைவு....

..... தேமொழி

On Thursday, June 12, 2014 11:37:01 AM UTC-7, Suba.T. wrote:
அன்பு தேமொழி,

இப்படத்தில் இருப்பவர் பாஹுபலி - கோமுட்டீஸ்வரர். இந்த உருவச்சிலை இருப்பது மேல் சித்தாமூர் பார்சுவநாதர் ஆலயத்தில். நான் பகிர்ந்து கொண்டபோது பெயரை இணைக்க மறந்து விட்டேன்.

பார்சுவநாதர் பாம்புக்குடையுடன் காட்சியளிப்பார். விரைவில் ஒரு படம் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா

2014-06-12 6:58 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

சுபா வழங்கிய...

 "பார்சுவநாதர்" (Pārśvanātha) படத்தில் அவர் சூடியிருப்பதென்ன ஆத்தி / Athi tree (Ficus glomerata) ?

 காணொளி :http://youtu.be/Xs9MRS3hKiM

பின் குறிப்பு:  மன்னிக்கவும், முன்னர் பிழைகளுடன் இட்ட பதிவை நீக்கிவிட்டு மறு பதிவு இடுகிறேன்.

..... தேமொழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Dhivakar

unread,
Jun 18, 2014, 8:10:42 AM6/18/14
to மின்தமிழ்
பிரகாஷ்!

//தேவையில்லை. ஏனெனில் மதம் என்பது நிறுவனமல்ல.. அது ஒரு அமைதிக்கான வாழ்வியல் :))//

வாழ்வியல் தத்துவங்களும் சாதாரண மக்களும்

கௌதமபுத்தரும் மகாவீரரும் அந்த இருவரும் மட்டுமே (மதத்தின் மூலம் அல்லது அவர்கள் தத்துவங்கள் மூலம்) அமைதிக்கான வாழ்வியலாக அமைக்க முன்வந்தவர். ஆனால் போகப் போக மதங்கள் நிறுவனமாக்கப்பட்டு விட்டன. நிறுவனங்களுக்குக் கிளைக் கழகங்கள் கூட உண்டு.. ஒரு மதத்தின் நிறுவனம் பிரிந்து பல நிறுவனங்களாக மாறி பல பாதைகளில் செல்ல வழி காட்டத் தொடங்கிவிட்டனர்.

சமண்மதம் தென்னகத்தில் நிறுவனமதம்தான். பௌத்தம், கீழை பாரதம் கீழைக் கடல் பிராந்தியத்தில் நிறுவன மதமாக மாறியது. ஜைன சரித்திரம் படித்தால் இவை புரியும். அவைகள் விலாவாரியாக நிறுவன அதிகாரிகளை விவரிக்கின்றது. 

மேலும் சாதாரண மக்களை இன்றைய காலம் போல சமணம் தாக்கவில்லை. மன்னர் எவ்வழியோ அவ்வழி மக்கள் என்கிற சிம்பிள் தியரியை வைத்து மன்னர்கள் சமணத்துக்கு ஆதரவு தரவே முன் வந்தார்கள். மதம் மாறுவது என்பது அவசியமற்றதாகத்தான் சமண ஆச்சாரியார்கள் அந்தக் காலத்தில் நினைத்திருக்கவேண்டும். நாங்கள் நிறுவனம் வைத்திருக்கிறோம், எங்கள் கொள்கை இது, எங்களுக்கு ஆதரவு கொடு.. இதுதான் ஆச்சாரியர்களின் கட்டளையாக இருந்திருக்கவேண்டும்.

மேலும் வாதங்கள் செய்து வேற்று மதத்துச் சான்றோரை மட்டுமே மதமாற்றத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
இது கூட வாதங்களுக்கான ஒரு சட்ட இயல். சாதாரண மக்கள் அரசனுக்கு கீழ்ப்படிவதை விட மதாச்சாரியார்களுக்குக் கீழ்ப்படிய வைத்தார்கள் என்றே சொல்லலாம். மதாச்சாரியார்கள் என்பதுவர் ஏறத்தாழ மகுடம் சூட்டாத மன்னர். இதில் வேடிக்கை என்னவென்றால் மகுடம் சூட்டிய மன்னர்களுக்கு உள்ள்உம் புறமும் எதிரிகள் உண்டு. மகுடம் சூட்டாத மதாச்சாரியர்களுக்கு வேற்று மதத்தவரே எதிரி.. நாட்டு மன்னன் துணை இருந்தால் அந்த எதிரியும் இல்லை. 

நான் சொல்வது எம்மதத்துக்கும் பொருந்தும். இன்றைய காலத்தில் (400 வருடங்களாக) மட்டுமே சாதாரண பொது மக்களின் மதமாற்றத்துக்கு இத்தனை முனைகிறார்கள். அந்தப் பழைய காலத்தில்  பொதுமக்களைச் சீண்டும் மதத்தலைவர்கள் இருந்திருப்பார்களா என்பது சிந்தனைக்குரிய கேள்வி!!

இன்னமும் சொல்லவேண்டுமெனில் சுல்தான்கள் கூட தென்னகத்தில் படையெடுக்கும்போது மதமாற்றத்துக்கு அதிகமாக முயலவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் சுல்தான்களை கர்நாடக மன்னர்கள் எதிர்த்த போது மன்னர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் குழந்தைகளை இஸ்லாம் மதம் மாற்றி உயிர் பிழைக்கவைத்தார். இப்படிப்பட்ட மதமாற்றங்கள் கூட போர்முனையில்தான். அவுரங்சீப் கூட சிவாஜி மகணைக் கொல்லுமுன் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்தான். இஸ்லாம் மதத்தில் சேர்வதானால் அவனை மன்னிப்பதாக.. ஆனால் அது ஒப்புக்கொள்ளப்படாமல் போர்முனையில் சிவாஜியின் மகன் கொல்லப்பட்டதெல்லாம் சரித்திரம். முஸ்லீம் அல்லாதார் ஹிஜ்ரா வரி கட்டினால் நாட்டுக்கு ஏராளமான வருமானம் என்பதுதான் அவரங்கசீபின் கணக்கு.. நிச்சயம் மதமாற்றத்துக்கான வரி அல்ல அது.

சாதாரண மக்களை யாருமே அந்தக் கால கட்டத்தில் மத்திக்கவில்லை என்பதற்காக எழுதுகிறேன். படிப்பறிவில்லாத பாமரர்களின் எண்ணிக்கை அந்தக் காலத்தில் மதங்களுக்குத் தேவையில்லை. 

Dhivakar

N. Ganesan

unread,
Jun 18, 2014, 8:36:05 AM6/18/14
to mint...@googlegroups.com

2014-06-17 22:53 GMT+05:30 Prakash Sugumaran <praka...@gmail.com>:
தமிழகத்தை ஆண்ட அரச வம்சங்களில் இடம் பெற்றுள்ள  “ கோப்பெருந்தேவி “, “கோப்பெருஞ்சோழன்“ போன்ற பெயர்களில் உள்ள “ கோ “, என்பது KO vaa Go vaa ??

கோப்பெருந்தேவியில் உள்ள kO தமிழ்ச்சொல். அதற்கு gO என்ற ஒலிப்பு இல்லை.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jun 18, 2014, 8:42:20 AM6/18/14
to mint...@googlegroups.com
Definitely, the Shramanic religions like Ajvikism, Jainism and Buddhism have Dravidian religious elements that get asserted for the
first time in Indian religious history. This is a substratum effect. Image worship, pUjA (< pUsal in Tamil) with flowers,
Tantra (in Buddhism), the full development of Karma theory (starts in Upanishads of the forest), ... & so on.
In the Ganges plains such as Bihar, the founders of Jainism and Buddhism spoke in Aryan languages,
call themselves as Aryans, and call the religions as Aryan, even tho' we see many Dravidian substratum elements
in these SamaNa religions attested for the first time.

N. Ganesan

Nagarajan

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 9:36:25 AM6/18/14
to mintamil
இன்றைக்கும் எட்டா கனியாக, பொதுமக்களின் நிறைவேறாத ஆசையாக, மக்களுக்கு இடையேயான நிரந்தர பிரச்சினையாக உள்ள, ஒரு மாபெரும் விஷயத்தை, கிட்டதட்ட 25 நூற்றாண்டுகளுக்கு முன், ஆழமாக சிந்தித்து உணர்ந்து, மிக எளிதில், அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில், இரு வார்த்தைகளில் விளக்கிய தத்துவத்துக்கு சொந்தக்காரர்கள்.. தீர்த்தங்கரர்கள்.

“ வாழு; வாழ விடு ”

இதற்கு மாற்றான, எதிரான, போட்டியான வேறு எந்த மதத்தின் தத்துவமும் நிலைப்பெறவில்லை. வேதங்களும், புராணங்களும், மந்திரங்களும், தந்திரங்களும் இந்த தத்துவத்தின் முன் நிற்கவே முடியவில்லை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Jun 18, 2014, 10:06:19 AM6/18/14
to mintamil
உண்மை திவாகர் ஐயா,

இதில் கவனிக்க வேண்டியது எதுவெனில், மதங்கள், மக்களை குறிப்பிட்ட நெறியோடு, குறிப்பிட்ட பாதைகளில் பயணிக்க வைக்கும் மார்க்கங்கள். அந்த மார்க்கத்தை போதித்தவர்களுக்கும், அவர்களுக்கு பிறகு மார்க்கங்களில் பயணித்தவர்களுமான புரிதல் மாறுபாடு.

தீர்த்தங்கரர்களையும், வேறு பல இந்திய அறத்தலைவர்களையும் போலவே, மேற்கில் அன்பையும், கருணையையும், மன்னிப்பையும் முன்னெடுத்த இயேசு, சமூக சட்டங்களின் அடிப்படையில் சிலுவையில் ஏற்றப்பட்டார். பிறகு அவரது பெயரில் அமைந்த நிறுவனம் அவரது கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட தொடங்கியது.

அவரை தொடர்ந்து அன்பையும், கன்னியத்தையும், தனி மனித ஒழுக்கத்தையும் முன்னெடுத்த நபிகள், இறுதியில் தன்னை காப்பாற்றி கொள்ள கையில் வாளை எடுத்தார் :)) அவரே உருவாக்கிய நிறுவனம் பிறகு அவரது கொள்கைகளுக்கு நேரெதிர் பாதையில் இயங்குகிறது.

இவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதையெல்லாம் அனுபவித்து, உணர்ந்த நமது கடவுளர்கள் மாயாவிகளாக, மறைந்தே வாழ்ந்தனர்.. யாருக்கும் புலப்படாமலேயே மறைந்தனர். தத்துவங்கள் மட்டும் எங்கிருந்தோ வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டன :))

இரண்டுக்கும் காரணம் மனிதர்களுக்குள்ளேயே உள்ள இருவித முதன்மை குணங்கள். 1. சமூக ஆட்சியதிகார அடிப்படையில் விரிவடைந்துள்ளது. 2. மதங்களாக வெளிப்பட்டுள்ளது.

ஒன்றையொன்று வென்று விட முயலும் இந்த இரு குணங்களின் போட்டியில், இந்தியக் கடவுளர்கள் மக்களின் கண்களுக்கு புலனாகாமல் போனது, ஆட்சியதிகாரத்தினால் இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டது, இதையெல்லாம் அறிந்த நபிகள் - மதத்தலைவர்களே, ஆட்சியாளர்களாகும் தீவிர முடிவுக்கு தள்ளப்பட்டது என பல நிகழ்வுகள்.

இவற்றுக்கு எல்லாம் தீர்த்தங்கரர்களால் பல நூற்றாண்டுகள் முன்பாகவே கொடுக்கப்பட்ட இறுதி தீர்வு..

 “ வாழு; வாழ விடு “.

பிரகாஷ்!

//தேவையில்லை. ஏனெனில் மதம் என்பது நிறுவனமல்ல.. அது ஒரு அமைதிக்கான வாழ்வியல் :))//

வாழ்வியல் தத்துவங்களும் சாதாரண மக்களும்

கௌதமபுத்தரும் மகாவீரரும் அந்த இருவரும் மட்டுமே (மதத்தின் மூலம் அல்லது அவர்கள் தத்துவங்கள் மூலம்) அமைதிக்கான வாழ்வியலாக அமைக்க முன்வந்தவர். ஆனால் போகப் போக மதங்கள் நிறுவனமாக்கப்பட்டு விட்டன. நிறுவனங்களுக்குக் கிளைக் கழகங்கள் கூட உண்டு.. ஒரு மதத்தின் நிறுவனம் பிரிந்து பல நிறுவனங்களாக மாறி பல பாதைகளில் செல்ல வழி காட்டத் தொடங்கிவிட்டனர்.

சமண்மதம் தென்னகத்தில் நிறுவனமதம்தான். பௌத்தம், கீழை பாரதம் கீழைக் கடல் பிராந்தியத்தில் நிறுவன மதமாக மாறியது. ஜைன சரித்திரம் படித்தால் இவை புரியும். அவைகள் விலாவாரியாக நிறுவன அதிகாரிகளை விவரிக்கின்றது. 

மேலும் சாதாரண மக்களை இன்றைய காலம் போல சமணம் தாக்கவில்லை. மன்னர் எவ்வழியோ அவ்வழி மக்கள் என்கிற சிம்பிள் தியரியை வைத்து மன்னர்கள் சமணத்துக்கு ஆதரவு தரவே முன் வந்தார்கள். மதம் மாறுவது என்பது அவசியமற்றதாகத்தான் சமண ஆச்சாரியார்கள் அந்தக் காலத்தில் நினைத்திருக்கவேண்டும். நாங்கள் நிறுவனம் வைத்திருக்கிறோம், எங்கள் கொள்கை இது, எங்களுக்கு ஆதரவு கொடு.. இதுதான் ஆச்சாரியர்களின் கட்டளையாக இருந்திருக்கவேண்டும்.

மேலும் வாதங்கள் செய்து வேற்று மதத்துச் சான்றோரை மட்டுமே மதமாற்றத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
இது கூட வாதங்களுக்கான ஒரு சட்ட இயல். சாதாரண மக்கள் அரசனுக்கு கீழ்ப்படிவதை விட மதாச்சாரியார்களுக்குக் கீழ்ப்படிய வைத்தார்கள் என்றே சொல்லலாம். மதாச்சாரியார்கள் என்பதுவர் ஏறத்தாழ மகுடம் சூட்டாத மன்னர். இதில் வேடிக்கை என்னவென்றால் மகுடம் சூட்டிய மன்னர்களுக்கு உள்ள்உம் புறமும் எதிரிகள் உண்டு. மகுடம் சூட்டாத மதாச்சாரியர்களுக்கு வேற்று மதத்தவரே எதிரி.. நாட்டு மன்னன் துணை இருந்தால் அந்த எதிரியும் இல்லை. 

நான் சொல்வது எம்மதத்துக்கும் பொருந்தும். இன்றைய காலத்தில் (400 வருடங்களாக) மட்டுமே சாதாரண பொது மக்களின் மதமாற்றத்துக்கு இத்தனை முனைகிறார்கள். அந்தப் பழைய காலத்தில்  பொதுமக்களைச் சீண்டும் மதத்தலைவர்கள் இருந்திருப்பார்களா என்பது சிந்தனைக்குரிய கேள்வி!!

இன்னமும் சொல்லவேண்டுமெனில் சுல்தான்கள் கூட தென்னகத்தில் படையெடுக்கும்போது மதமாற்றத்துக்கு அதிகமாக முயலவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் சுல்தான்களை கர்நாடக மன்னர்கள் எதிர்த்த போது மன்னர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் குழந்தைகளை இஸ்லாம் மதம் மாற்றி உயிர் பிழைக்கவைத்தார். இப்படிப்பட்ட மதமாற்றங்கள் கூட போர்முனையில்தான். அவுரங்சீப் கூட சிவாஜி மகணைக் கொல்லுமுன் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்தான். இஸ்லாம் மதத்தில் சேர்வதானால் அவனை மன்னிப்பதாக.. ஆனால் அது ஒப்புக்கொள்ளப்படாமல் போர்முனையில் சிவாஜியின் மகன் கொல்லப்பட்டதெல்லாம் சரித்திரம். முஸ்லீம் அல்லாதார் ஹிஜ்ரா வரி கட்டினால் நாட்டுக்கு ஏராளமான வருமானம் என்பதுதான் அவரங்கசீபின் கணக்கு.. நிச்சயம் மதமாற்றத்துக்கான வரி அல்ல அது.

சாதாரண மக்களை யாருமே அந்தக் கால கட்டத்தில் மத்திக்கவில்லை என்பதற்காக எழுதுகிறேன். படிப்பறிவில்லாத பாமரர்களின் எண்ணிக்கை அந்தக் காலத்தில் மதங்களுக்குத் தேவையில்லை. 

Dhivakar

Prakash Sugumaran

unread,
Jun 20, 2014, 2:35:03 PM6/20/14
to mintamil
//புல்- என்ற வேரில் இருந்துஉருவாகும் புலி, புலை, புலா/புலவு சொற்களை ஆராய்ந்தால் த்ராவிடர் பங்கு அறியலாம்.புறநானூறு, அகநானூறு மொழிபெயர்த்த பேரா. ஹார்ட் கட்டுரை சங்ககால caste பற்றிஆராய்கிறது.//

”புல்” லின் வேற்(ர்) சொல் என்ன பேரா.ஐயா ??

பூனை என்பதன் வேர் என்ன ?

N. Ganesan

unread,
Jun 20, 2014, 9:07:09 PM6/20/14
to mint...@googlegroups.com

On Friday, June 20, 2014 11:35:03 AM UTC-7, Prakash Sugumaran wrote:
//புல்- என்ற வேரில் இருந்துஉருவாகும் புலி, புலை, புலா/புலவு சொற்களை ஆராய்ந்தால் த்ராவிடர் பங்கு அறியலாம்.புறநானூறு, அகநானூறு மொழிபெயர்த்த பேரா. ஹார்ட் கட்டுரை சங்ககால caste பற்றிஆராய்கிறது.//

”புல்” லின் வேற்(ர்) சொல் என்ன பேரா.ஐயா ??

வேற்(ர்) சொல்??
 
பூனை என்பதன் வேர் என்ன ?

 யானை, பூனை - வேர்ச்சொல் ஆய்வு எழுதியுள்ளேன். பார்க்கவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 21, 2014, 6:15:38 PM6/21/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, June 18, 2014 2:26:58 AM UTC-7, selvi...@gmail.com wrote:
தமிழ் ச் சொல்லின் ஊ டே  வட மொழியின் ஒலி  வராது 

கோன், கோச்சடையன்,  கோத்தும்பி என்பவற்றுள் உள்ளது போல் 

தொல்காப்பிய பிறப்பியல் நூற்பா  வழி எழுத்துக்கள் யாவும் ஒலி  எழும் பிறப்பிடம் பற்றித்தான் 
எழுதப்படும் க(1) க(2) க(3) க(4)  இவை எல்லாம் பிறக்குமிடம் ஒன்றுதான் ஆ னால் ஒலிகும்போது
வளியை வெளிவிடும் போக்கினைப் பொருத்தது 

உலகிலுள்ள  மொழிகளி ல் 3000 + ஆண்டுகளுக்கு முன்பே எழுத் து இவை இவை இவற்றினை இம்
முறையில் ஒலி க்கவேண்டும் என நா அண்ண ம் உதடு இவற்றின் பயன் கொள்ளும் வகை பற்றிக்
கூறுவது தமிழ் மொழி போல் எங்கும் இல்லை  

பாரிஸ் நகர உலக தர நிர்ணய சாலையில் ஒரு பிளாட்டினம் சட்டத்தில் இரு கோடுகள் இட்டு
இதுதான் மீட்டர்  ஒர் எடைக கல்லை வைத்து இதுதான் கிலோகிராம் என்பதுபோல்
தர நிர்ணயம் மொழியின் எழுத்துக்களுக்கே நூற் பா (சூத்திரம்) வழியில் நாவினை இப்படி மடித்து 
இப்படி வருடி இப்படி இதழ் குவித்து இப்படி வாயைத் திறக்க இவொலி வரும் எனும் வாயால் ஒலிக்கும்
முறையினை கண்ணால்  காணும் எழுத்து வழி  எந்நாளும் மாறாமல் இருக்கும் வழியில் கொடுத்து ள்ளமை
மிக்க சிறப்புடைய   தமிழின்  தனித்தன்மை வேறு உலக மொழிகளில் எங்குமில்லை 
 
இந்திய மொழியியல் நிபுணர்கள் இப்படிப்பட்ட மடல்களைத் தவறான செய்திகள் உடையவை என்கிறார்கள்.
இது சுமார் 40 வருஷக் காலமாக, வடமொழிகளின் ஆழ்ந்த கல்வியை தமிழ்நாடு இழந்துவிட்டதன்
காரணம் என்பர். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஹிந்தியை எதிர்த்ததற்காக
ஆங்கிலம் புகுத்தினார்கள். இன்று கல்விவள்ளல்கள் தொகை அதிகரித்து ஆங்கில மீடியம்
பள்ளிகளில் பெருகிவிட்டது. ஆனால் வழிவழியாக வந்த எழுத்தில் சம்ஸ்கிருதம் படிக்க
வாய்ப்புகள் குறைந்தன. இதனால், தொல்காப்பியர் தான் ஒவ்வொரு எழுத்தும் நாவால்,
அண்ணத்தை வருடி எழுதும் இடங்களை இலக்கணமாக எழுதினார் என்ற பிழைபட்ட கருத்துக்கள்
பரப்பும்நிலை ஏற்படுகிறது. வடமொழி வியாகரணங்களை ஆய்பவர்கள் தொல்காப்பியம்
வடமொழி இலக்கணங்களின் (ஐந்திரம், பாணிநீயம், ...) ஒரு எதிரொளிப்பு (ப்ரதிபலிப்பு) என்பதை
எழுதுகிறார்கள். பேரா. நாகராசன் ஐந்திரன் என்ற இலக்கணகாரரைப் பற்றி எழுதினார்.
ஐந்திரன் என்று அப்படி யாரும் வடக்கே இலக்கணம் செய்வதில்லை என்று குறிப்பிட்டேன்.

முனைவர் ஃழான் ஒரு திருக்குறள் பற்றிக் தனது CTamil list-ல் என்னைக் கேட்டிருக்கிறார்:
”I also wonder what you think the original intended meaning for
Kuṟaḷ 397 was

"யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு?"

yātāṉu nāṭāmā lūrāmā leṉṉoruvaṉ
cāntuṇaiyuṅ kallāta vāṟu?

"How is it that anyone can remain without learning even until his death, when to the learned man every country is his own country, and evry town is his own town?" [translation: கோ. வடிவேலு செட்டியார், 1904]

Did that knowledge include linguistic knowledge? Was the author hinting at the fact that someone who knows Centamiḻ is welcome in any of the 12 "countries" (nilam)?

Was he alluding to the knowledge of Sanskrit?

Did he have another shastra in mind? “

இதற்கான எனது பதிலும் அங்கே இருக்கிறது. சங்க காலத்தில் அம்பட்ட அந்தணர்கள் அதிகம்
பூசாரிகளாய் மைவிடை வீழ்த்துதல் போன்ற நிகழ்த்திப் படையல் செய்தனர்.
பிற்காலத்தில் மங்கல அந்தணர்களாய் ஆமாத்யர்கள் என்ற பெயரில் 
மருத்துவசாலை, மந்திரியாய் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான
கல்வெட்டுச் சான்றுகள் இருப்பதைக் காட்டியுள்ளனர். மாணிக்கவாசகர் குலம் ஆமாத்திய அந்தணர் குலம். அமாத்திய அந்தணர் என்னும் மங்கல அந்தணர்கள் வரலாற்றை விரிவாக ’மாணிக்கவாசகர் மகாசபை’ மாநிலத் தலைவர் நந்தன் என்கிற நாமக்கல் தங்கம் விசுவநாதன் “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று” நூலில் எழுதியுள்ளார். நாமக்கல் நந்தன் கேட்டுக்கொண்டதன் பேரில் எஸ். இராமச்சந்திரன் தலைமையில் கல்வெட்டாய்வாளர்கள் சென்று கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆவுடையார்கோயிலின் 13-ஆம் ஆண்டுத் தோற்றத்தை விளக்கியுள்ளனர். ”மாணிக்கவாசகர் கட்டியதல்ல அக்கோவில்” என்றும் தெளிவுபடுத்தியுளர் (தினமலர், மார்ச் 1, 2014). மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு
- கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் பத்மாவதி போன்றோர் வாசிக்கவேண்டும்.

இன்னும் தமிழ்ப்ராமி தோன்றும் பொருந்தல், கொடுமணல் போன்ற ஊர்களில் மங்கல அந்தணர்கள்
கோவில் திருவிழாக்களிலும் - பலி நிகழ்ச்சியில் -, திருமணங்களிலும், பெரும்பங்கு ஆற்றுகின்றனர். 
இவர்களுக்கு முதலில் தெரிந்தது ப்ராகிருதம் தான். சமஸ்கிருதம் அதன் பின்னரே பரவியது.
தமிழில் முதல் கடன்சொற்களாய் ப்ராகிருதச் சொற்கள் வருவதே இதற்கு நல்ல சான்று. உ-ம்: அமைச்சர்
(not aamaatya).

----------------

ஓரிரு கருத்துக்கள் வைக்க அனுமதிக்கவும் 

பாணினி இலக் கணம் வகுத்தான் என்றால் சமசுகிருதத்தில் அல்ல

 அல்லவே அல்ல.

 பாணினிக்கு சமசு கிருதம் என்பதே தெரியாது

இப்போது வழங்கும் சமசுகிருதம் எனும் ஓர் (அரை) மொழி அக்காலத்தே தோன்றவே இ ல்லை (#)

பாணினி என்பர் இலக்கணம் வகுத்தார் என்றால் அது அப்பகுதியில் வழங்கிய நாட்டு மொழியில்   (ETHNIC / vernacular ) 

என்ன இது?? ”பாணினிக்கு சமசு கிருதம் என்பதே தெரியாது” - புதிய செய்தியாக இருக்கிறதே!

கி. மு. 350-ல் வாழ்ந்த பாணினி வகுத்த இலக்கணப் படி இயங்கினால் தான் சம்ஸ்க்ருதம். மற்றவை வடமொழிகள்
எனலாம், ஆனால் பாணினிக்குள் வரவில்லையெனில் சம்ஸ்கிருதம் ஆகாது.

Pāṇini (पाणिनि) was an Ancient Indian Sanskrit scholar, mainly known for his Sanskrit grammar, particularly for his formulation of the 3,959 rules of Sanskrit morphology, syntax and semantics in the grammar known as Ashtadhyayi (अष्टाध्यायी Aṣṭādhyāyī, meaning "eight chapters"), the foundational text of the grammatical branch of the Vedanga, the auxiliary scholarly disciplines of Vedic religion. The Ashtadhyayi is one of the earliest known grammars of Sanskrit, although he refers to previous texts like the Unadisutra, Dhatupatha, and Ganapatha. It is the earliest known work on descriptive linguistics and generative linguistics, and together with the work of his immediate predecessors (Nirukta, Nighantu, Pratishakyas) stands at the beginning of the history of linguistics itself. His theory of morphological analysis was more advanced than any equivalent Western theory before the mid 20th century, and his analysis of noun compounds still forms the basis of modern linguistic theories of compounding, which have borrowed Sanskrit terms such as bahuvrihi and dvandva. Pāṇini's comprehensive and scientific theory of grammar is conventionally taken to mark the end of the period of Vedic Sanskrit, by definition introducing Classical Sanskrit.

பாணினியின் மொழியியல், ஸம்ஸ்க்ரிருதப் பங்களிப்பு பற்றி சம்ஸ்கிருதப் பேராசிரியர் கட்டுரை:

நா. கணேசன்

Prakash Sugumaran

unread,
Jun 21, 2014, 10:42:28 PM6/21/14
to mintamil
”யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு?"

எனக்கென்னவோ,

வாழ்நாள் முழுவதும் ஒருவன் எதையும் கற்று கொள்ள முடியாதபடி இருக்கக்கூடியது  எந்த நாடு, எந்த ஊர் ?
என்று வள்ளுவர் கேட்பதாகவே தெரிகிறது.

Prakash Sugumaran

unread,
Jul 4, 2014, 1:39:25 AM7/4/14
to mintamil
” கோமட்டீஸ்வரர் “ - இந்த பெயருக்கான காரணம் என்னவாக இருக்கும் என ஏற்கனவே கேட்டிருந்தேன்.

விடை: குஜராத் அருகே கடலில் கலக்கும் கோமதி நதி தீரத்தை ஆண்டவன் - கோமட்டீஸ்வரன்.

பார்ஸ்வநாதன் - கோமதி நதி குஜராத் அருகே கலக்கும் கடலின் வேத காலப் பெயர், ப்ரபாஸ் கடல். கடல் வணிகத்துக்கு பெயர்பெற்ற அந்த துறைமுகத்தில் பாரசீகர்கத்திலிருந்து வந்த பார்சீக்கள் பெரும்பான்மையாக வசித்தார்கள். அந்த பகுதியின் தலைவர் பார்ஸ்வநாதன்.

உலகிலேயே நான் உருவாக்கியுள்ள க்‌ஷேத்திரங்களில் முதன்மையானது, குரு வஷிஸ்ட்டரின் மகளான கோமதி நதி கடலில் கலக்கும் ப்ரபாஸ ஷேத்திரம் என சிவன் - சக்திக்கு தெரியப்படுத்தினார்.
 
இன்னுமொரு சுவாரசியம், இந்த துறைமுகத்தின் இன்னொரு பழைய பெயர் - துவாரகாபுரி.

இதனை ஆண்ட கிருஷ்ணன் தனது குரு சண்டிபாணி குருதட்சிணையாக கேட்டதற்கு இணங்க, அவரது மகனை கடத்தி சென்ற பெரும் எண்ணிக்கையிலான சங்குசர்களை கடலுக்குள் விரட்டி சென்று போரிட்டு கொன்று குருவின் மகனை மீட்டான்.

சங்குசர்களின் தலைவனிடமிருந்து கைப்பற்றிய பஞ்சசாண்யத்தை, தனது அடுத்தடுத்த எதிரிகளை வென்றபோது ஊதி தனது வெற்றியை அறிவித்தான்.

அதே கோமதி நதியின் கரையில் துர்வாசருக்கு பணிவிடை செய்த கண்ணன், அவர் கேட்டு கொண்டதற்கு இணங்க, அரபி கடலை கடந்து சென்று அங்கு சிறை வைக்கப்பட்ட முனி மகராஜ்களை மீட்டான்.

Geetha Sambasivam

unread,
Jul 4, 2014, 3:49:17 AM7/4/14
to மின்தமிழ்
ப்ரபாஸ க்ஷேத்திரம் என்பது இப்போதைய சோம்நாத்/வெராவல்.  துவாரகை அங்கிருந்து பேருந்து, கார்ப் பயணத்தில் நான்கைந்து மணி தூரத்தில் உள்ளது.  கண்ணன் துவாரகையை ஒருபோதும் ஆண்டதே இல்லை.  எந்த நாட்டையுமே ஆளாமல் மன்னன் எனப்படுகிறான். :)))

கண்ணனின் குருவின் பெயர் சாந்தீபனி.  அவர் மகன் புநர்தத்தனைத் தான் நாக கன்னிகளிடமிருந்து கண்ணன் மீட்டு வருவான்.  நாககன்னிகளைக் கண்ணன் மீட்கச் செல்கையிலே சென்ற கப்பலில் தலைவனிடமிருந்து பாஞ்சஜன்யம் என்னும் சங்கைக் கண்ணன் பெறுவதாக ஒரு கூற்று உள்ளது.  

 ரிஷி, முனிவர்களை மீட்பது ஶ்ரீகாலவ வாசுதேவன் என்னும் ஓர் யாதவக் கொடுங்கோல் அரசனின் பிடியிலிருந்து மீட்டு வருவதைக் குறிக்கிறது.  

ப்ரபாஸ க்ஷேத்திரம் குறித்த ஒரு பதிவு

Prakash Sugumaran

unread,
Jul 4, 2014, 6:18:21 AM7/4/14
to mintamil
ப்ரபாஸ க்ஷேத்திரம் குறித்த ஒரு பதிவு//
இது தனிப்பட்ட நபரின் கருத்து. நான் குறிப்பிட்டுள்ளவை.. என் கருத்தல்ல. வேதங்களில் குறிப்பிடப்பட்டவை. தவிர அவற்றிலேயே கோமதி நதி இன்றைய உ.பி., நேபாளம், கங்கையுடன் கலக்கும் கோமதி என பிரித்தாளப்பட்டு உள்ளது.

கண்ணன் துவாரகையை ஆண்டதே இல்லை !! என்பதற்கு ஏதேனும் சான்று !!?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Jul 4, 2014, 6:20:36 AM7/4/14
to mintamil
//உலகிலேயே நான் உருவாக்கியுள்ள க்‌ஷேத்திரங்களில் முதன்மையானது, குரு வஷிஸ்ட்டரின் மகளான கோமதி நதி கடலில் கலக்கும் ப்ரபாஸ ஷேத்திரம் என சிவன் - சக்திக்கு தெரியப்படுத்தினார்//

இதுவும் புராணத்தில் குறிப்பிடப்பட்டதே..

Geetha Sambasivam

unread,
Jul 4, 2014, 7:21:36 AM7/4/14
to மின்தமிழ்
கோமதி நதி சோம்நாத்திலும் ஓடுகிறது. :)  சோம்நாத் தான் பிரபாஸ க்ஷேத்திரம்.  என்னுடைய கருத்து அல்ல அது.  நானும் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்தே சொல்லி இருக்கிறேன். 

கண்ணன் ஒருக்காலும் துவாரகையை ஆண்டது இல்லை. ஒரு பாசத்தாலும் கண்ணன் மேல் உள்ள அளவு கடந்த அன்பாலும் மக்கள் அவனை துவாரகையை ஆண்டதாகச் சொல்ல அப்படியே நேர்ந்துவிட்டது.  இதற்கான ஆதாரங்கள் பாகவதம், பாரதம், ஹரி வம்சம் போன்றவற்றில் கிடைக்கும்.

Suba.T.

unread,
Jul 4, 2014, 7:49:00 AM7/4/14
to மின்தமிழ், Subashini Tremmel
நான் தமிழகத்தில் இருந்த சமயம் தொடங்கப்பட்ட ஒரு இழை. அவ்வப்போது பார்த்தேன். மிக நல்ல உரையாடல்கள். முழுதும் வாசித்து விட்டு என் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Prakash Sugumaran

unread,
Jul 4, 2014, 3:52:50 PM7/4/14
to mintamil

கீதாம்மா, சோமநாதர் கோவில் வேத காலத்துக்கு ரொம்பவும் பிற்பட்ட வரலாறு. அக்கோவிலுக்கு வேறு பல வரலாறுகளும் உள்ளன. நிறைய இடைசெருகலுகளும் உள்ளன. கஜினி முகம்மது காலத்துக்கு முந்தையது. 

//Parvati, who had been listening to the tale with rapt attention, became even more curious to know about Prabhas kshetra. So she requested Lord Shiva to shed more light on the other important aspects of this sacrosanct place. Lord Shiva, continuing with his description of Prabhas kshetra, said- ' This sacrosanct place has temples of three deities on it's three sides. To its east is situated a grand temple of Surya Narayan while there is a magnificent temple of Madhav to it's west. In the same way there is a beautiful temple of goddess Bhavani to the north of Prabhas kshetra and towards it's south lies the ocean. This holy place is spread in the area of five yojans and is divided in three major areas- Maheshwar, Vaishnav and Brahma. There are about one crore temples related with different deities in Vaishnav and Brahma kshetras while Maheshwar kshetra contains one and half crore temples. As the name implies, each area has been named after one God forming the Trinity. Anybody who has the good fortune of living in the central part of Prabhas kshetra becomes absolved of all his sins even if he has committed most abhorrent sins. The significance of this holy place can be understood by the fact that a man born there does not take a second birth and attains salvation. One whom scholars of the Vedas call 'Kaalagni Rudra' is famously known as Bhairav in Prabhas kshetra.

SOMNATH LINGA

Emphasizing on the significance of Someshwar linga and its deep association with the Vedas, Lord Shiva told Parvati-' The divine Someshwar linga exists since time immemorial and will remain for eternity. This revelation descended on me while I was engrossed in a deep state of meditation. Someshwar Linga has deep association with the Vedas and it enhances their sanctity by establishing itself in each of them at different periods of time during the day. During morning time Someshwar linga establishes itself in the Rigveda, during noon in the Yajurveda, during afternoon in the Sama veda and during evening time it establishes itself in Atharva veda.

DIFFERENT NAMES OF SOMNATH

Parvati curiously asked Lord Shiva about the reason why Somnath was known by so many different names. Lord Shiva said- ' Since the time this divine linga first manifested itself very few blessed souls had the knowledge of it's existence. Brahma has a life span of one kalpa at the end of which even he ceases to exist giving way to his successor- a new Brahma. In the same manner this divine Linga acquires a new name at the end of each kalpa. The present kalpa is seventh in order as six kalpas have already passed. The name of the present Brahma is Shatanand and this divine Linga is presently famous by the name of Somnath. Similarly it was famous as Mrityunjay during the time of Brahma named Virinchi. During second kalpa this Linga was famous as Kalagnirudra and the name of Brahma was Padmabhu. The third kalpa had Swayambhu as Brahma and the Linga was famous as Amritesh. The name of the fourth Brahma was Parmeshthi in fourth kalpa and the linga was famous as Annamay. In the same way the names of the fifth and sixth Brahma were Surajyeshtha and Hemagarbha respectively and the names of the Linga during their periods were Kritiwas and Bhairav Nath respectively.'

Lord Shiva also revealed to Parvati that the next kalpa- eighth in order would have Chaturmukh as Brahma and the divine Linga would be known as Pran Nath.Goddess Parvati then asked Shiva about the exact location of the Linga in Prabhas Kshetra. Lord Shiva told her that the sacrosanct place of Prabhas Kshetra was situated between the plains of two rivers Vajrini and Nyankumati. He also told her that the eternal Linga was not very far from the sea coast. Dwelling at length about the good fortunes of those living in Prabhas kshetra, Lord Shiva told her-' Anybody who does not abandon this holy place despite his hardships and troubles is certain to attain to my abode. One who has the good fortune of dying at Prabhas kshetra attains salvation. There will be prevalence of sins in Kaliyuga. As a result of this people would experience all sorts of hurdles and problems in their lives. To minimize their sorrows and to lessen their miseries, I have personally instructed Ganesh not to abandon this place even for a moment. Of all the Lingas present on the earth, Somnath is specially dear to me.'//

Prakash Sugumaran

unread,
Jul 4, 2014, 3:54:21 PM7/4/14
to mintamil
//கண்ணன் ஒருக்காலும் துவாரகையை ஆண்டது இல்லை//

:) தொடங்கிய பிறகு இறுதியை கண்டே ஆக வேண்டும்.

Prakash Sugumaran

unread,
Jul 4, 2014, 3:57:47 PM7/4/14
to mintamil
http://en.wikipedia.org/wiki/Somnath

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிர்லிங்கத்தின் வரலாறு மிகவும் நெடியது.. ஆனால் 18 முறை படையெடுத்து, கஜினி கோவிலை உடைத்தபோது இருந்த லிங்கம் வேறு.

Geetha Sambasivam

unread,
Jul 4, 2014, 9:13:01 PM7/4/14
to மின்தமிழ்
அவரவர் கருத்து அவரவருக்கு.  நான் கூறியவையும் ஆதாரங்களோடு கூடியவையே.  அந்தப் புத்தகம் சென்னையில் ஒரு நண்பரிடம் இருந்து வாங்கியது.  நான் தற்சமயம் ஶ்ரீரங்கத்தில் இருப்பதாலும் புத்தகம் இல்லாததாலும் ஆதாரங்களைக் காட்ட முடியாது. எழுதியவரும் சாமானியர் அல்ல.  திரு கே.எம். முன்ஷி அவர்கள் எழுதிய புத்தகம்.  
Reply all
Reply to author
Forward
0 new messages