அன்னப் பறவை - பாலையும் நீரையும் பகுத்துண்ணும்

2,123 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 17, 2011, 12:25:31 PM4/17/11
to மின்தமிழ், santhav...@googlegroups.com
அன்னப் பறவை - பாலையும் நீரையும் பகுத்துண்ணும்
-------------------------------------------------------------------

> கொஞ்சம் மாத்தி யோசிப்போமா? அன்னம் என்றால் சோறு.
> பாலையும் நீரையும் கலந்து பால்சோறு செய்கிறீர்கள். ஒரு
> அரை மணிநேரம் கழித்துப் பார்த்தால், பால் முற்ற
> உறிஞ்சப்பட்டிருக்கும். நீர் தனியாகப் பிரிந்து, கலத்தின்
> ஓரத்துக்கு வந்திருக்கும்.
>
> எதுக்கு இதைப் போய் பறவை ஆக்கறது? எப்பவும்
> கண்ணுக்கு முன்னால நடக்கற ஒரு விஷயந்தானே!
> --
> அன்புடன்,
> ஹரிகி.
2003 மடல்:
http://www.treasurehouseofagathiyar.net/24300/24334.htm
2008:
https://groups.google.com/group/mintamil/msg/1361ec878bee0dfe

இன்னும் சற்றே ஆழ நோக்கலாம்.

ஆனால், இந்தப் பேரைத் தமிழர்கள் சங்க காலத்திலேயே
ஆக்கியிருக்கிறார்கள். (1) தூவியின் வண்ணத்தாலும்,
இந்த அரிய இமயப் பறவை - (2) ஹம்சத்தின் தன்மை
என்று வடமொழி இலக்கியங்கள் பாலும், நீரும்
பகுக்கும் என்று புகழ்வதாலும் அப்படிப்
பேர் வைத்தார்கள் போலும். அனிச்சம் போல,
அன்னமும் வடசொல். தமிழில் இமயப் புள்ளுக்கு
ஆகி வந்திருக்கிறது. சிந்து சமவெளிக் கால
தொன்மக் கதையா?

மா - மயல், கருமை (இருள்) இரண்டு பொருளும்
வருவதுபோல் விஷ்ணுவை மாயன் என்றழைப்பதுபோல்,
இந்த அரிதான பறவைக்கு (பலரும் பார்த்ததில்லை,
ஆனால் இலக்கிய வழி கேட்டுப் பெயர் தந்துள்ளனர்).
அனிச்ச மரம் போலத்தான் அன்னப் பறவை.
இரண்டும் நேரிலே கண்டது என்பதை விட,
கவிஞர்களின் மனோரதம் ஊர்ந்து ஹிமாலய உலாவில் கண்டது;
வடமொழி இலக்கியங்கள் வாயிலாகத் தமிழுக்கு வருவது.
(1) மோப்பக் குழையும் அனிச்சம் ( < அனிச்சை, வடசொல்) - குறள்
(2) அனிச்சமும், *அன்னத்தின் தூவியும்* - குறள்

வெகுகாலமாக, இந்தியாவில் இலக்கியத்தில்
இருக்கும் இந்த எண்ணக்கரு ஏன் உற்பத்தி ஆனது?
இது, வடமொழி நூல்களில் ஹம்சத்தை ஆராய்ந்தால்
தெரியும். வால்மீகியில் இருப்பதாக குக்கூ - மீராவின்
நூல்பிற்சேர்க்கை சொல்கிறது. ஆனந்தலஹரி 38 பாருங்கள்:
http://sowndharyalahari.blogspot.com/2008/08/37-38.html
வீரை கவிராஜ பண்டிதர் எப்படி மொழிபெயர்த்துள்ளார்னு
பார்க்கணும்.

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து - நாலடி 135 (சமண முனிவர்கள்)

கம்பன் - ஒற்றுக்கேள்விப் படலம் - யுத்தகாண்டம்:

பேர்வுறு கவியின் சேனைப் பெருங் கடல் வெள்ளம் தன்னுள்,
ஓர்வுறும் மனத்தன் ஆகி, ஒற்றரை உணர்ந்து கொண்டான்,
சோர்வுறு பாலின் வேலைச் சிறு துளி தெறித்தவேனும்,
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான்; 24

அன்னப் பறவை அயிரை மீனை குமரியில் மாந்தி
வடக்கே இமயமலைக்குப் பறப்பதைச் சங்க இலக்கியம் குறிக்கிறது.

கலித்தொகை இமயமலையில் அன்னங்கள் நீங்காதிருப்பன
என்கிறது. “மடநடை மாயின மந்தி யமையத்
திடன் விட்டு இயங்கா இமையத்து ஒருபால்
இறைகொண்டிருந்தன்ன நல்லாரைக் கண்டேன்”.

நச்சினார்க்கினியர்: ”அதுகேட்ட தலைவன், யான் கண்டது
கேள்; அன்னங்கள் தன்னிடத்தை விட்டுப் போகாத
இமயமலையில் ஒருபக்கத்தே அழகிய விசும்பிலே
இரைகவர்ந்த இளைப்பால் ஓய்ந்து பறக்கும்
மடப்பத்தை உடைத்தாகிய நடையினையுடைய
அன்னத்திரள் அந்திக்காலத்தே தங்குதல் கொண்டிருந்த
தன்மையவாக, துறை தன்னிடத்தே கொண்டு உயர்ந்த
மணற்குன்றிலே நல்லார், தம்முடனே அமர்ந்த ஆயத்தாருடனே
பொருந்தி நிறைந்திருக்கின்றதனைக் கண்டேனென்றான்.”

கலித்தொகை அன்னப்புள் என்புருகி மிக்க
அன்போடு புணர்தலால் அதன் தூவிக்கு
மென்மை பிறக்கும் என்கிறது. அன்னப்பேடை
புணர்ச்சியால் உருகி உதிர்த்த வயிற்றின் மயிர்
எஃகிப் பெய்த அணை பற்றியும் பேசுகிறது.

கொங்குநாடு தந்த சீவக சிந்தாமணிக்கு உரையிட்ட
நச்சினார்க்கினியர் சொல்கிறார்:
” காரன்ன முண்மையின் வெள்ளன்னம் என்றார்”.
காரன்னம் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம்:
http://en.wikipedia.org/wiki/Black_swan
http://ibc.lynxeds.com/species/black-swan-cygnus-atratus

இமயமலை அன்னநிற யாக் (கவரிமா) மற்றும் அன்னப்பறவை
பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மலையில் துள்ளி விளையாடின
என்கிறது நெடுநல் வாடை.

” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை.”

இந்த அரிய உயிரினங்களை ஏன் பாண்டியன்
வளர்த்துவதாக நெடுநல் வாடை ஆசிரியர்
பாட வேண்டும்? வித்துவான் செ. வேங்கடராமச் செட்டியார்
(1960, தமிழில் விலங்கினங்கள் - இதைத் தேடவேண்டும்.
தகவல்: புதுவை ஞானம் வலைப்பதிவு.)

”நெடுமயிர் எகினம் என்றது கவரி மானினை. ஏற்றை - ஆண் கவரி, உகளுதல் -
துள்ளுதல். கவரியும் அன்னமும் பனிமலையில் வாழும் இயல்பினவாதலின்
பிறந்தவிடத்துத் தொடர்பால் பாண்டியன் அரண்மனை முன்வாயிலில் அவை இரண்டும்
நட்பு கொண்டு துள்ளி விளையாடுகின்றன. இவை தமிழ் நாட்டில் காணப்படாதவை.
இவற்றைக் கொணர்ந்து அரண்மனையில் வளர்த்து விளையாடச் செய்ததற்குத் தக்க
காரணம் உண்டு.

மயிர் நீப்பின் வாழாத மானமுடையது கவரிமான். பாலும் நீரும் கலந்து வைத்த
வழியும் நீர் நீக்கிப் பாலுண்ணும் இயல்பினது அன்னப்பறவை குறை வேண்டியும்
முறை வேண்டியும் அரண்மனைக்குச் செல்லும் குடிமக்கள் இத்தகைய கவரிமானையும்
அன்னப்பறவையையும் காண்பார்கள். பாண்டியன் தனது மரபுக்கு இழுக்கு வருவதாக
இருந்தால் மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் போல உயிர் நீப்பன் என்ற
கருத்தை உணர்வார்கள். நீர் நீக்கிப் பாலுண்ணும் அன்னம் போல மன்னவனும்
பொய் வழக்கை அறிந்து நீக்கி மெய் வழக்கறிந்து முடிவு கூறுவான் என்பதையும்
உணர்வார்கள்.

இவ்வாறு மன்னவனின் மாண்புகளை உய்த்து உணர வேண்டியே அன்னமும் கவரியும்
அரண்மனையில் வளர்க்கப்பட்டன எனலாம். இத்தகைய கருத்துடன் வளர்ப்பதாதான்
போக்கமில் புலவர்நக்கீரனார், அரண்மனையின் முன்வாயிலுக்கு அடையாக அன்னமும்
கவரியும் துள்ளி விளையாடுவதைக் கூறியுள்ளார் என்க.”

ஆக, அன்னம் என்ற வடசொல்லால் ஆன இமயமலைப் பறவை
குறித்த கருத்துக்களை வட, தென் மொழி இலக்கியங்களில்
மேலும் ஆராய இடமுண்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 17, 2011, 1:48:04 PM4/17/11
to மின்தமிழ்
மறைந்து போன தமிழ் நூல்கள் என்ற தலைப்பில் ம்யிலை சீனிவேன்ங்கடசாமி
அவர்கள் எழுதிய
ஒரு நூல் நினைவுக்கு வருகிறது அந்த வரிசையில் சேர்க்கத்தக்க ஒரு நூல்
பழைய புத்தகக்டையில் எனக்குக் கிடைத்தது.பல பக்கங்களைக்
காணவில்லை.படித்தபோது தமிழில் விலங்கினங்கள் பற்றி தொ¦Ìகௌக்கப்பட்ட
நல்லதொரு நூலாக இருக்கும் போல இருக்கிறது.கிடைத்த பக்கங்களை உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.இந்த நூலினை திரு.செ.வேங்கடராமச்
செட்டியார், தமிழ் விரிவுரையாளர்,ஆராய்ச்சிப் பகுதி அண்ணமலைப் பல்கலைக்
கழகம் எழுத முத்ற்பதிப்பு 1960 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. மறு
பதிப்பு வந்ததா என்பது தெரியவில்லை. உரிமை ஆசிரியருக்கே எனவும் விற்பனை
உரிமை பாரி நிலையம் 59 , பிராட்வே – சென்னை 1
எனவும் தெரிய வருகிறது.

அன்னம் பக்கம் 97)

________

இது பெருமைசான்ற பறவையாகும். நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பினது.இதி
பெரும்பாலும் பனி மிக்க இடத்தில் வாழும் தன்மையுடையது.பிற்கால
இலக்கியங்களில் புலவர்கள் தமிழ் நாட்டில் மிகுதியாக அன்னங்கள்
வாழ்ந்ததாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள் பழந்தமிழ் இலக்கியங்களில்
அவ்வாறு பேசப்படவில்லை. காரணம் , அவை பனி மிக்க இடத்தில் வாழும்
இயல்புடையதாலும் , தமிழ்நாட்டில் மிகு பனியிலதாதலும் ஆகும்.அன்னம்
அழகுமிக்க மெல்லிய பறவயாக இருத்தலின் நம் நாட்டு மன்னர், தம்முடைய
எழில்மிக்க அதனைக் கொணர்ந்து வளர்த்த்ப் பழக்கியிருக்கின்றனர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் கவரி மானும்
அன்னமும் துள்ளி
விளையாடிக்கொண்டிருந்த் வனப்பை நெடுநல்வாடை யுணர்த்துகின்றது.

” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை

குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை.” என்பது காண்க.

நெடுமயிர் எகினம் என்றது கவரி மானினை. ஏற்றை _ ஆண் கவரி, உகளுதல்
துள்ளுதல்


கவரியும் அன்னமும் பனிமலையில் வாழும் இயல்பினவாதலின் பிறந்தவிடத்துத்

தொடர்பால் பாண்டியன் அரண்மனை முன்வாயிலில் அவை இஅண்டும் நட்பு கொண்டு
துள்ளி விளையாடுகின்றன. இவை தமிழ் நாட்டில் காணப்படாத்வை. இவற்றைக்


கொணர்ந்து அரண்மனையில் வளர்த்து விளையாடச் செய்ததற்குத் தக்க காரணம்
உண்டு.

மயிர் நீப்பின் வாழாத மானமுடையது கவரிமான். பாலும் நீரும் கலந்து வைத்த
வழியும் நீர் நீக்கிப் பாலுண்ணும் இயல்பினது அன்னப்பறவை குறை வேண்டியும்
முறை வேண்டியும் அரண்மனைக்குச் செல்லும் குடிமக்கள் இத்தகைய கவரிமானையும்

அன்னப்பறவையையும் காண்பார்கள்.பாண்டியன் தனது மரபுக்கு இழுக்கு வருவதாக


இருந்தால்மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் போல உயிர் நீப்பன் என்ற
கருத்தை உணர்வார்கள். நீர் நீக்கிப் பாலுண்ணும் அன்னம் போல மன்னவனும்
பொய் வழக்கை அறிந்து நீக்கி மெய் வழக்கறிந்து முடிவு கூறுவான் என்பதையும்
உணர்வார்கள்

þவ்வாறு மன்னவனின் மாண்புகளை உய்த்து உணர வேண்டியே அன்னமும் கவரியும்


அரண்மனையில் வளர்க்கப்பட்டன எனலாம்.
இத்தகைய கருத்துடன் வளர்ப்பதாதான் போக்கமில் புலவர்நக்கீரனார்,
அரண்மனையின் முன்வாயிலுக்கு அடையாக அன்னமும்
கவரியும் துள்ளி விளையாடுவதைக் கூறியுள்ளார் என்க.

தலைவியைப் பிரிந்திருந்த தலவன் மீண்டு வ்ந்து தலைவியோடு கூடிய
மகிழ்ச்சிக் கூடலுக்கு இக்காதல் மிக்க அன்னப்பறவையின்
புணர்ச்சியை உவமை கூறியுள்ளார் நல்லஞ்துவனா என்ற நல்லிசைப் புலவர்.

” மென்னடைப் பேடை துணைதரத் தற்சேர்ந்த
அன்னவான் சேவற் புணர்ச்சி போல் ” (கலி-147) என்பது காண்க.

இதனால் அன்னப்பறவை காதலுணர்ச்சி மிக்கது என்பது விள்ங்கும். இவ்வன்னங்கள்
மனமகிழ்ந்து கூடும் அன்புறு புணர்ச்சிக்
காலத்தில் உதிர்கின்ற அவற்றின் மெல்லிய தூவியைச் சேர்த்துவைத்து
செல்வச்சிறப்புடைய மன்னவர் மாண்புக்கேற்ப மெல்லிய
நல்லணையமைப்பதுண்டு. இதனை :

” துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டு ” (நெடுநல்)
என நகீரர் நவின்றிருத்தலால் அறியலாம்.இயற்கையாக உதிரும் தூவியை விடத்
துணை புணர் அன்னங்கள் என்பு நெகிழ்ந்து
புல்லுங்கால் உதிர்கின்ற தூவி, மென்மையிற் சிறத்தலின் அவற்றாலாய அணையே
மிகச் சிறந்த்தாக மதிக்கப்பட்டது.

கடலில் வளரும் சங்கினை பெண் அன்னம் என்று கருதி ஆண் அன்னம் மருண்டு
மிதிக்கும் செயலை,

” அன்னந் துணை செத்து மிதிக்கும்
தன்கடல் வளை ” (ஐங்_106)

என்ற அடிகள் விளக்குகின்றன. அன்னத்தின் கால்கள் குறியன என்பதைக் ‘
குறுங்காலன்னம் என்ற சொற்றொடர்
விளக்குகின்றது.

அன்னம் வெள்ளை நிறமுடையது என்பதே பலர் நம்பிக்கை.வெள்ளன்னம் இருப்பது
போலக் கருப்பு அன்னமும் உண்டு
காரன்னத்தைப்பற்றித் தமிழ் நூல்களில் பெரும்பாலும் கூறப்படவில்லை
என்பதுண்மை. ஆயினும் சிந்தாமணியில்
வெள்ளன்னம் என்ற தொடரை விளக்க வந்த நச்சினார்க்கினியர்,


” காரன்ன முண்மையின் வெள்ளன்னம் என்றார்”

என எழுதியுள்ளார்.கயிலாய யாத்திரை சென்று வந்தவர்களும் மானச மடுவில்
காரன்னமும் வெள்ளன்னமும் இருப்பதாகக்
குறிப்பிடுகிறார்கள். பிசிராந்தையார் என்னும் பெருந்தகைப் புலவர்,
அன்னச்சேவல் ஒன்று குமரியும் பெருந்துறையில்
அயிரை என்னும் மீனை மாந்தி விட்டு வடதிசை நோக்கிச் செல்லும் காட்சியைக்
கூறியுள்ளார். ( ப்ற நா – 67).
இதனால் அன்னப் பறவை மீனையும் உண்ணும் என்பதுணரலாம். ( தொடரும்)

தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்.
http://puthuvaignanam.wordpress.com/2009/06/02/406/

N. Ganesan

unread,
Apr 17, 2011, 1:50:21 PM4/17/11
to மின்தமிழ்
கொங்குநாடு தந்த சீவக சிந்தாமணிக்கு உரையிட்ட
நச்சினார்க்கினியர் சொல்கிறார்:
” காரன்ன முண்மையின் வெள்ளன்னம் என்றார்”.
காரன்னம் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம்:
http://en.wikipedia.org/wiki/Black_swan
http://ibc.lynxeds.com/species/black-swan-cygnus-atratus

தலீபின் காரன்னத் தேற்றம் - பல லட்சம் பிரதிகள்
விற்றுத் தீர்ந்தது:
http://en.wikipedia.org/wiki/Black_swan_theory

“Black Swan Events were characterized by Nassim Nicholas Taleb in his
2007 book (revised and completed in 2010), The Black Swan. Taleb
regards almost all major scientific discoveries, historical events,
and artistic accomplishments as "black swans"—undirected and
unpredicted. He gives the rise of the Internet, the personal computer,
World War I, and the September 11 attacks as examples of Black Swan
Events.[2]

The term black swan was a Latin expression—its oldest known reference
comes from the poet Juvenal's characterization of something being
"rara avis in terris nigroque simillima cygno" (6.165).[3] In English,
this Latin phrase means "a rare bird in the lands, and very like a
black swan." When the phrase was coined, the black swan was presumed
not to exist. The importance of the simile lies in its analogy to the
fragility of any system of thought. A set of conclusions is
potentially undone once any of its fundamental postulates is
disproved.”

குக்கூ - மீரா நூலில் பிற்சேர்க்கை

மீரா நம் மீரா. . . .

கவிஞர் தமிழ்நாடன்

பக்த மீராவை பாரதத்திற்கு மறு அறிமுகம் செய்வித்தவர் அண்ணல் காந்தி. நம்
கவிஞர் மீராவைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தவர் அறிஞர்
அண்ணா. கல்லூரி மாணவர் மீரா கவிஞர் மீரா என்று அண்ணாவின் வாய்வழி
அறியப்பட்டதும், அக்கால மேடைகளில் சங்கப் புலவர்களோடு, புரட்சிக்கவி
பாரதிதாசனோடு மீராவும் மேற்கோள் ஆனார். மீராவின் படைப்புப் புதுமை
குறித்து ஆய்வுரைகள் நிறைய
இதழ்களிலும், பல்கலைக் கழகங்களிலும், பாரதி வழி பாரதிதாசன் போல மீராவழி
மீராதாசன் என்றொரு கவிஞர்.

மதுரைத் தியாகராசர் கல்லூரி மாணவர் மீராவின் கனவுகளில் ஒன்று பெங்குவின்
நிறுவனம் போலப் புத்தகங்கள் வெளியிடுவது. அவரின் இளமைக்கனவு
அன்னத்தின் வழி நனவாயிற்று. மீரா, அப்துல் ரகுமான், அவர்களது
அணுக்கத் தோழர்கள் ஆகியோரின் கூட்டமைப்புப் பதிப்பகம் அன்னம்.
பெங்குவின் பறவையின் தமிழ் வடிவமே அன்னம். அன்னம் வால்மீகி
காலத்திலிருந்து பாலை அருந்தித் தண்ணீரைத் தள்ளி
விடுமாம். இது சாத்தியமா, தண்ணீரே பாலாய்ப் போன நம் காலத்தில்.
என்றாலும் மீராவின் அன்னம் பால் போலும் நல்ல கவிதை நூல்கள் பலவற்றை
வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சில திரட்டுப்பால்.

Zஈனத் Xஏவியர்

unread,
Apr 17, 2011, 1:53:07 PM4/17/11
to mint...@googlegroups.com
அன்னத்தின் தூவி அதன் மென்மைகாக படுக்கையில் மெத்தையாக்கி இருக்கலாம்
 
அது மாதர் அடிக்கு நல்ல படாபறைனு  காதலன் கற்பனைக்கிறார்.


 
17 ஏப்ரல், 2011 1:48 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Zஈனத் Xஏவியர்
 
புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல.

devoo

unread,
Apr 17, 2011, 1:53:48 PM4/17/11
to மின்தமிழ்
>> அன்னம் என்ற வடசொல்லால் ஆன இமயமலைப் பறவை....<<

அந்நம் - உணவு (அத் - to eat) ; அந்ந: - ஆதவன்
இவ்வட சொல் பறவையைக் குறிக்காது.

ஹம்ஸம் - இமய மலைப்பறவை
ஹம்ஸ ஸந்தேச காவ்யத்தில் ஸ்வாமி தேசிகன்
இராமபிரான் பிராட்டியிடம் அன்னத்தைத் தூது அனுப்புவதாக
விவரிப்பார்.

நன்மை தீமைகளைப் பிரித்தறியும் தன்மையை
‘நீர க்ஷீர விவேகம்’ என்பர்


தேவ்

> காரன்னம் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம்:http://en.wikipedia.org/wiki/Black_swanhttp://ibc.lynxeds.com/species/black-swan-cygnus-atratus

N. Ganesan

unread,
Apr 17, 2011, 1:57:06 PM4/17/11
to மின்தமிழ்

On Apr 17, 12:53 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >> அன்னம் என்ற வடசொல்லால் ஆன இமயமலைப் பறவை....<<
>
> அந்நம் - உணவு (அத் - to eat) ;  அந்ந:  - ஆதவன்
> இவ்வட சொல் பறவையைக் குறிக்காது.
>

வடமொழியின் அன்னம் அதன் நிறத்தாலும், பால்சோற்றில்
நீரைப் பகுக்கும் தன்மையாலும் தமிழில் ஹம்சத்திற்கு
அன்னம் என்றே பெயர் இட்டனர் என்பது என் கருத்து.

க.

> > காரன்னம் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம்:http://en.wikipedia.org/wiki/Black_swanhttp://ibc.lynxeds.com/species...


>
> > இமயமலை அன்னநிற யாக் (கவரிமா) மற்றும் அன்னப்பறவை
> > பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மலையில் துள்ளி விளையாடின
> > என்கிறது நெடுநல் வாடை.
>
> > ” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
> > குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை.”
>
> > இந்த அரிய உயிரினங்களை ஏன் பாண்டியன்
> > வளர்த்துவதாக நெடுநல்
>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

karuannam annam

unread,
Apr 17, 2011, 2:04:47 PM4/17/11
to mint...@googlegroups.com
கவிஞர் மீராவின் பதிப்பகத்தின் பெயர் 'அகரம்' என நினைவு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2011/4/17 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Apr 17, 2011, 2:11:49 PM4/17/11
to மின்தமிழ்

On Apr 17, 1:04 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> கவிஞர் மீராவின் பதிப்பகத்தின் பெயர் 'அகரம்' என நினைவு.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
>

முதலில் அன்னம் வைத்திருந்தார்.

அன்னம் விடுதூது - என்ற பத்திரிகை, நூல்களை
அறிமுகம் செய்ய நடத்தினார்.

> 2011/4/17 N. Ganesan <naa.gane...@gmail.com>

Raja sankar

unread,
Apr 17, 2011, 10:39:14 PM4/17/11
to mint...@googlegroups.com
தேவ்,

இந்த நியாயம் வாத்து உணவு உண்ணும் முறையில் இருந்து வந்திருக்கலாம்.

வாத்து குளத்தில் இருக்கும் நீரை அப்படியே அலகில் எடுக்கும். உள்ளே இருக்கும் நீர் அலகில் இருக்கும் ஓட்டைவழியாக வழிந்தோடி விடும். மிச்சம் இருப்பதை அப்படியே உண்னும்.

கொங்கில் பேச்சு வழக்கில் இந்த நியாய முறை உண்டு. நல்லதை விட்டு விட்டு கெட்டதை மட்டும் எடுத்துக்கொள்பவனை பன்னாடை என திட்டுவார்கள்.

பன்னாடை என்பது வடிகட்டி ஆக பயன்படும். ஆக இந்த பெயர்.

ராஜசங்கர்



2011/4/17 devoo <rde...@gmail.com>

N. Ganesan

unread,
Apr 18, 2011, 8:39:27 AM4/18/11
to மின்தமிழ்

> ” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
> குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை.” - நெடுநல்வாடை

இதுபோன்ற அடிகள் - சிலம்பிலிருந்து:
நாடுகாண் காதை:

*ஏழகத் தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும் *
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,

தகர், கவரிமா, அன்னம் தாவுத் திரிவன
என்று முன்பு கருதினர்.

ஏழகம் < மேழகம் (மேஷம்).
ஏழகத்தகர் - வருடைக் கிடாய்.

தகர் > Tahr (ஆங்கிலத்திற்கு தமிழின் கொடை ஆகுமிது.):
http://en.wikipedia.org/wiki/Himalayan_Tahr
http://en.wikipedia.org/wiki/Nilgiri_Tahr

-------------------------

NaRRiNai poem describing semi-mythical bird, Annam taking food
from Cape Comorin to Himalayas for their young. The chicks of
the fabulous Annam kept as pets by Celestial nymphs.

நற். 356

356. குறிஞ்சி

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் 5
அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை- வாழி, என் உள்ளம்!- ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே?

நிலந்தாழ் மருங்கு - நாவலந்தீவின் தென்கோடி ஆகிய குமரிமுனை

”அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
[...]
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவைஆயின்,” - புறம் 67 நோக்குக.

”அன்னப்பறவை இமயத்து உச்சியில் அரமகளிர் கையில்
உள்ள தம் பார்ப்புகட்கு கடலகத்துள்ள இரையைக்கொண்டு
சென்று கொடுக்கும் என்றது, யாமும் தமர்வயிற்பட்ட
நமது காதலி நிமித்தமாக வேற்றுநாட்டுச் சென்று
பொருளீட்டி உள்ளமும், அந்தணரும் சான்றோரும்
துணையாகக்கொண்டு சென்று மீண்டு எய்தி வருந்தா
நின்றேம் என்பதாம்.” - உவேசா.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 18, 2011, 8:47:46 AM4/18/11
to மின்தமிழ்

On Apr 17, 9:39 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> தேவ்,
>
> இந்த நியாயம் வாத்து உணவு உண்ணும் முறையில் இருந்து வந்திருக்கலாம்.
>
> வாத்து குளத்தில் இருக்கும் நீரை அப்படியே அலகில் எடுக்கும். உள்ளே இருக்கும்
> நீர் அலகில் இருக்கும் ஓட்டைவழியாக வழிந்தோடி விடும். மிச்சம் இருப்பதை
> அப்படியே உண்னும்.
>

Yes. However, this is filtering out solids from fluid.

nIra-kSiira vivekam of Hamsa (or Annam in Tamil) is
separation of one fluid from another - milk from water,
that happens when milk "Annam" is prepared as Hariki
alwyas explains.

NG

N. Ganesan

unread,
Jun 29, 2011, 8:56:36 AM6/29/11
to மின்தமிழ்

On Apr 17, 12:57 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> வடமொழியின் அன்னம் அதன் நிறத்தாலும், பால்சோற்றில்
> நீரைப் பகுக்கும் தன்மையாலும் தமிழில் ஹம்சத்திற்கு
> அன்னம் என்றே பெயர் இட்டனர் என்பது என் கருத்து.
>

அன்பின் ஹரிகி,

பால்சோறு செய்யும் போது அன்னம் பாலை முழுக்க
இஞ்சிவிடுகிறதைப் பலமுறை எழுதியுள்ளீர்கள்.
அதை அடிப்படையாய் வைத்து, ‘அன்னம்’ என்ற
பெயரை இதனால் தான் ஹம்சத்திற்கு தமிழ்ச் சங்கப்
புலவர் (பாண்டியன் அவையில்?) கொடுத்தனர் என்றேன்.

பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை மேலோட்டமாய்ப்
பார்த்தேன். ஓர் அதிசயம். பாவாணர் அன்னம் - வடசொல்
என்கிறார். பொதுவாகவே, தமிழிலி இர்ந்து பிறந்தது வடமொழி
என்ற கோட்பாடுடைய அவர், அன்னம் வடசொல் என்பது
சிந்தையைக் கவர்ந்தது.

பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை,ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்.
டிசம்பர் 2000.

22 குறள்களுக்கு வடசொற்களுக்கு தனித்தமிழ்ச் சொற்களே
போதும் என்று காட்டுகிறார்.

பக். 660,

“திருக்குறட்கு வடசொல் தேவையில்லை.

[...]

அன்னம்

அனிச்சமு மோதிமத் தூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம் 1120 “

[...]

அன்னம் வடசொல் என்று பாவாணரே சொல்லிவிட்டார்.
உங்கள் த்யரிதான் ஹம்சத்துக்கு தமிழ்ப் பெயராக
வடசொல்லைப் பயன்பட வைத்தது போலும்.

என்னைக் கேட்டால், அனிச்சமும் வடசொல்லே.

Both aniccam flower and annam bird are semi-mythical.

நா. கணேசன்


seshadri sridharan

unread,
Jun 29, 2011, 9:04:02 AM6/29/11
to mint...@googlegroups.com
நில் > நிற்றம் > நித்தம் > நிச்சம் என்பது மாறாது நிலைத்த உண்மை
என்பார் அருளி. இதுவே நிஜம் ஆனது, இதாவது நிலைத்தது என்ற பொருளில்.
அநிச்சம் என்றால் தொட்டவுடன் நிலைத்தன்மையை இழக்கும் மலர் என்பார் அருளி.

சேசாத்திரி

N. Ganesan

unread,
Jun 29, 2011, 5:50:18 PM6/29/11
to மின்தமிழ்

On Jun 29, 8:04 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நில் > நிற்றம் > நித்தம் >  நிச்சம் என்பது மாறாது நிலைத்த உண்மை
> என்பார் அருளி. இதுவே நிஜம் ஆனது, இதாவது நிலைத்தது என்ற பொருளில்.
> அநிச்சம் என்றால் தொட்டவுடன் நிலைத்தன்மையை இழக்கும் மலர் என்பார் அருளி.
>
> சேசாத்திரி
>

இது சென்னை அகராதியை ஒட்டிச் செல்கிறது:
அனிச்சம் aṉiccam , n. prob. a-nitya. Flower supposed to be so
delicate as to droop or even perish when smelt; மோந்தால் வாடும் பூ
வகை. மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90).

நித்யம் < நில்- என்கிற முயற்சி.

ஆனால், அநிச்சா (அ + இச்சா) - Without Desire/Wish.
யோசித்து தானே உடலில் நிகழும் செயலை அனிச்சைச்
செயல் என்கிறோம். அத்துடன் தொடர்புடையதா?
என முனைவர் ராஜம் வினவினார்.

அது பொருத்தமாகப் படுகிறது.

அன்புடன்,
நா. கணேசன்

> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post


> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

MANICKAM POOPATHI

unread,
Jun 29, 2011, 9:36:41 PM6/29/11
to mint...@googlegroups.com
நண்பர் ஈனத்தேவியர் சொல்வதும் உண்மைதான்..!

அஞ்ஞம் என்றால்..
காலடித் தாமரை புண்ணாகாமல்..
அஞ்சி நடக்கும்  நடை மறந்த அன்னக் கொடியினை 
அமைதி கொள்வாயே என்று தாலாட்டுவாரே .. கவியரசர்..?

அந்தப் பொருளிலும் வரும்..  மற்றபடி ...
அன்னம்  என்பது  ஒரு பன்மொழிச் சொல் ஆகும்...?

எள்/நாகம்  போன்று புள்ளினத்தில்..
கார் வண்ணம் (துரு நீறு)   கொண்டது  அன்னம்..?
<http://news.bbc.co.uk/2/hi/science/nature/1113719.stm>

இன்றைக்கெல்லாம் இருந்தும் இல்லாதிருக்கும்.. "கவரி மா"
அது நீந்தி வரும் அழகே அழகு என்பார்கள்..?

அடுத்தது.. அன்னப்பறவை (Anserinae Black Swan )

அம்சம் = ஆடாமை அசையாமை
ஆடாமல் அசையாமல் பட்டும் படாமல்
நனைந்தும் நனையாமல் நீந்த வல்லது..?  uropygial (Wax) gland)

பஃகி இனங்கள் பலவற்றினைப்  போல்..
இன்றைய இந்திய வானில் அருகிப் போனாலும்..
தொலை தூர இந்து மாக்கடலோரம்
அன்னப்  பறவைகளைக் காணலாம்...

அண்ணம் என்பது வேறு../
அண்ணாக்கு/அண்ணார்ந்து பார்த்தல்= மேலே பார்த்தல்
அண்ணமார் : மூத்தோர் ( சங்கன் + தங்கலான்)

மிக்க நன்றி...!

அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்
_________________________________


2011/4/17 Zஈனத்  Xஏவியர் <raju.ra...@gmail.com>:

Hari Krishnan

unread,
Jun 29, 2011, 11:41:20 PM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/29 N. Ganesan <naa.g...@gmail.com>

அன்பின் ஹரிகி,

பால்சோறு செய்யும் போது அன்னம் பாலை முழுக்க
இஞ்சிவிடுகிறதைப் பலமுறை எழுதியுள்ளீர்கள்.
அதை அடிப்படையாய் வைத்து, ‘அன்னம்’ என்ற
பெயரை இதனால் தான் ஹம்சத்திற்கு தமிழ்ச் சங்கப்
புலவர் (பாண்டியன் அவையில்?) கொடுத்தனர் என்றேன்.

ணாச்சி,

அன்னம், சோறு என்பதைக் குறிக்கும் என்பது என் தனிப்பட்ட ஊகம்.  அது பொருத்தமாகவும் இருக்கவே அதை அவ்வப்போது சொல்லி வருகிறேன்.  பொருத்தம் இல்லை என்று சுட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்னுடைய ஊகம் உங்க சொல்லாராய்ச்சிக்கு அடிப்படையா!  வாழ்ந்தது போங்க!  ஒங்ககிட்ட கர்ச்சீஃபைக் குடுத்தா, இதான் வேட்டின்னு முடிவுக்கு வந்துருவீங்க போல இருக்கே!  யப்பாடீ!  திருப்பூருக்குப் பக்கத்து ஊருக்காருக்கிட்ட சாக்குரதயாத்தாஞ் சாமி இருக்கோணும்! :))

(இதைச் சொல்லும் போது, ‘ஊகமோ டாய்க வென்றான்’ -- சீவகனுக்குக் கொடுக்கப்படும் உணவை, மனிதக் குரங்குக்குக் கொடுத்துவிட்டு, ஆய்ந்து அதன் பிறகே சீவகனுக்குக் கொடுக்கவும் என்ற காந்தருவதத்தையார் இலம்பகம் (?) நினைவுக்கு வந்தது.  ஊகம்=குரங்கு. [அதனால, என் தனிப்பட்ட ஊகம் என்றால், என் தனிப்பட்ட குரங்குன்னு பொருள்கொள்ளாதீங்கப்பேய்!] சீவக சிந்தாமணி வலையில் எங்காவது கிடைக்கிறதா?)

Hari Krishnan

unread,
Jun 29, 2011, 11:59:06 PM6/29/11
to mint...@googlegroups.com


2011/6/30 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

அஞ்ஞம் என்றால்..
காலடித் தாமரை புண்ணாகாமல்..
அஞ்சி நடக்கும்  நடை மறந்த அன்னக் கொடியினை 
அமைதி கொள்வாயே என்று தாலாட்டுவாரே .. கவியரசர்..?

அம்மென் இணர அன்னங்காள்! அடும்புகாள்!
நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்.....


என்ற மாதவிப் பேச்சு (சிலம்பு) மறக்க மாட்டேங்குதே. :)

karuannam annam

unread,
Jun 30, 2011, 12:41:49 AM6/30/11
to mint...@googlegroups.com
 சீவக சிந்தாமணி வலையில் எங்காவது கிடைக்கிறதா?)

அன்புடன்,
ஹரிகி.
 
வணக்கம் ஹரிகி சார். சீவகசிந்தாமணி பெருமழைப் புலவர் சோமசுந்தனார் உரையுடன் Tamil vu தளத்தில் ஒருங்குறியில் நூலகம் என்ற சுட்டியில் கிடைக்கிறது.
அந்த தளத்தை சரிபார்த்துவிட்டு எழுதலாம் என்று ராண்டமாகச் சென்று பார்த்ததில் கீழ்குறித்த இரண்டு பாடல்கள் ஒரே சொல் வந்தது பிடித்திருந்ததால் பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட

கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றி

கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்

கண் ஆடு யானை அவர் கை தொழச் சென்று புக்கான்

 
 
 
 
(இ - ள்.) கண்ணாடி அன்ன கடிமார்பன் - கண்ணாடி போன்ற வரைவினையுடைய மார்பனான சீவகன்; சிவந்து நீண்ட கண் ஆடி வென்று - சிவந்து நீண்ட கண்கள் எல்லோரிடமும் உலவி வென்றி கொண்டு; களம் கண்டு - போர்க்களத்தைப்

பார்வையிட்டு; நியமம் முற்றி - களவேள்வி முதலியன முடித்து; கள்நாடி வண்டு பருகும் கமழ் மாலை - தேனையாராய்ந்து வண்டுகள் பருகும் மணங்கமழ் மாலை தூக்கப் பெற்ற; மூதூர்க்கண் ஆடு யானையவர் - பழம்பதியிலே வெற்றியையுடைய யானையையுடையவர்; கைதொழச் சென்று புக்கான் - கைகுவித்து வணங்கப் போய்ச் சேர்ந்தான்.

   (வி - ம்.) கண்ணாடி, தன்னைச் சேர்ந்தவர் செயலாலே இருக்கு மாறுபோல, இம் மார்பும் தன்னைச் சேர்ந்த மகளிர் செயலாயே இருத்தலின், 'கண்ணாடி அன்ன மார்பன்' என்று இன்பச் சிறப்புக் கூறினார்; 'கையும் காலும் தூக்கத் தூக்கும் - ஆடிப்பாவை போல - மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே' என்றாற்போல; கண்ணாடிபோல முதுகு காட்டாத மார்பன் என்பாரும் உளர்; பகைவர் வீரத்தின் அழகை விளக்கும் மார்புமாம்.

( 1 )
 2328 கூடார மாட மயில்போலக் குழீயி னாரே.
கூடார மாலைக் குவிமென்முலைக் கோதை நல்லார்
கூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக்
கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்ன

   (இ - ள்.) கூடுஆர் புலியும் முழைக் கோளரி ஏறும் அன்ன - கூட்டிற் பொருந்திய புலியும் குகையில் விளங்கிய சிங்க வேறும் போன்ற; கூடார் மெலியக் கொலைவேல் நினைந்தானை ஏத்தி - பகைவர் தேயக் கொல்லுதற்குரிய வேலை ஏந்த எண்ணிய சீவகனைப் பாராட்டி; கூடு ஆரம் மாலைக் குவி மென்முலைக் கோதை நல்லார் - பொருந்திய முத்துமாலையை அணிந்த குவிந்த மென்முலையையும் கோதையையும் உடைய மகளிர்; கூடாரம் மாடம் மயில்போலக் குழீஇயினார் - கூடாங்களிலும் மாடங்களிலும் மயில்போலத் திரண்டனர்.

   (வி - ம்.) 'கூட்டுப் புலியும் முழைக் கோளரியும் போன்ற பகைவர் என்றது சூரபன்மனையும் ஒழிந்த அவுணரையும்' என்றும், 'வேல் நினைந்தான்' முருகன் என்றும், ஈண்டு அம் முருகனைப் போன்ற சீவகனைக் குறிப்பதாகவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வுவமை கட்டியங்காரன் முதலியோர்க்குத் தகாதென்றெண்ணி மேலும், 'முருகன் என்று சீவகனுக்கு ஒருபெயர் கூறினார், 'திருமால் போந்தான்' (சீவக. 2369) என்று மேலும் கூறுவர்' என்பர்.

   கூடாரம் - கூடகாரம்; நெற்கூடுகள்.

( 2 )

 

 


 

N. Ganesan

unread,
Jun 30, 2011, 8:20:08 AM6/30/11
to மின்தமிழ்

On Jun 29, 10:41 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/6/29 N. Ganesan <naa.gane...@gmail.com>

:)

அன்னம் வடசொல் எனப் பாவாணரே குறிப்பது முக்கியமாகத்
தெரிந்தது. அதனால் சொன்னேன்.

இன்னொன்று: சீவக சிந்தாமணி கொங்குநாட்டு நூல் என உவேசா
எழுதியுள்ளார்கள். திருப்பூருக்குப் பக்கம் எழுதப்பட்டட்து
என்கிறது புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம் (மதுரைப்
பல்கலை, முனைவர் பட்ட ஆய்வேடு). அச்சிலும் வந்த நூல்.

அன்புடன்
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages