தமிழில் அன்னப்பறவை என்று ஒன்று இருந்துள்ளது.
அது பாலையும் தண்ணீரை யும் கலந்துவைத்தால் பாலை மட்டும் குடிக்கும் என்று
நமக்குத்தெரியும்.
எப்படி, எந்த அனுகு முறையில் அன்னப்பறவை பாலை மட்டும் குடிக்கும்.
எதேனும் விஞ்ஞானக்கருத்து உள்ளதா.
அன்புடன்
துரை.மணிகண்டன்
Osmosis சவ்வூடு பரவுதல் எனும் முறையில் பாலிலிருந்து நீரை
எடுக்கமுடியும். condensed milk தயாரிக்கும் முறையில் பல்வேறு வகையான
சவ்வுகள் (membranes) பயன்பாட்டில் உள்ளன.
ஆனால், உண்மையில் அன்னம் அவ்வாறு செய்கிறதா என்று தெரியாது. ஆனால்
உயிரியல் விநோதங்கள் எத்தனையோ! அதில் இதுவும் ஒன்றாக இருக்க
வாய்ப்புள்ளது.
க.>
ஆனால், உண்மையில் அன்னம் அவ்வாறு செய்கிறதா என்று தெரியாது. ஆனால்
உயிரியல் விநோதங்கள் எத்தனையோ! அதில் இதுவும் ஒன்றாக இருக்க
வாய்ப்புள்ளது.
க.>
அப்படியா! அரிசி நீரை உறிஞ்சும், பார்த்திருக்கிறேன். சமைத்த அரிசி
(சோறு) பாலை மட்டும் உறுஞ்சும் என்பதும் உயிரியல் விநோதம்தான்!
க.>
அப்படியா! அரிசி நீரை உறிஞ்சும், பார்த்திருக்கிறேன். சமைத்த அரிசி
> --
(சோறு) பாலை மட்டும் உறுஞ்சும் என்பதும் உயிரியல் விநோதம்தான்!
க.>
> தோய்ந்த பிறகு தயிருக்கு மேலேயேகூட ஒரு நீர்ப்படலம் கோத்துக் கொள்வதில்லையா.
> வினோதமாக இருந்தால் பரீட்சை செய்து பார்த்துவிட்டால் போகிறது.
தயிர் உறைவது பலவகையான நுண்ணுயிர்களால் (பாக்டீரியா). அவை பொதுவாக
பாலிலுள்ள புரத, கொழுப்பு மூலக்கூறுகளை மாற்றுகின்றன. நீரை ஒன்றும்
செய்வதில்லை. எனவே பால் கெட்டிப்படுகிறது (உயிர்வேதிமச் செயலால்). நீர்
மிஞ்சுகிறது.
> பால்சாதம் கலந்து கொஞ்சநேரம்--சுமார் ஒருமணிநேரம்--வைத்திருங்கள. பாலில்
> தண்ணீர் கலந்திருக்குமானால், அந்தத் தண்ணீர், சோற்றின்மேல் தனியாக நிற்கும்.
> பால், சோறோடு கலந்தது கலந்தபடி அப்படியே இருக்கும்.
>
சோறு பாலை மட்டும் உறுஞ்சுவதை எப்படி விளங்கிக்கொள்வது என்று
தெரியவில்லை. பிள்ளையார் பால் குடித்த போது பல்வேறு வகையில் அது புரிந்து
கொள்ளப்பட்டது (absorption, movement in pores etc.) சோறு பாலை
உறுஞ்சுவது அவ்வகையான ஓர் உறுஞ்சுதலா (molecular sieving).
க.>
எனும் வள்ளுவ சூத்திரம் மிகவும் பொருள் பொதிந்தது.
உலகின் உயிர்த்தோற்றத்திற்குக் காரணியே நீர்தான். நீரின்றி உயிர்
அமையாது. உடலை எரித்தால் எஞ்சுவது பிடி சாம்பல்தான். மிச்சமெல்லாம்
நீர்தான் :-)
அரிசி/சோறு இவையுள்ளும் நீர் உண்டு. எனவே, "உயிர்ச்சத்துக்களை மட்டும்
அன்னம் உறிஞ்சிக்கொண்டு வெறும் சத்தில்லாத தண்ணீரை மட்டும் விடுகிறது
என்று கொள்ளலாமே".
கொள்ளமுடியாது, சாரி. புளியோதரை கெமிஸ்ட்டிரி வேறே :-))
க.>
2008/12/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> பாலில் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால் அன்னம் அதோடு கலந்து விடுகிறது, தண்ணீரில்
> உயிர்ச்சத்துக்கள் இல்லாததால் அதை மட்டும் வெளிவிடுகிறது
> உயிர்ச்சத்துக்கள் மட்டும் தான் ஒன்றோடு ஒன்று கலக்கும்
> அல்லது,
>
நீரின்றி அமையாது உலகு , வள்ளுவர் கூறியது உண்மைதான்
ஏன் உணவின்று அமையாது எனக் கூறவில்லை ?
உடம்பில் உள்ள ஐந்து கோசத்தில் , ( இருப்பதாக சித்தரியல் கூறுகிறது )
முதலில் உள்ளது அன்ன மய கோசம் , அது உணவால் ஆனது ,
அடுத்து உள்ளது மனோ மய கோசம், இது நீரால் ஆனது ,
எனவே மனிதன் உணவின்றி சில நாட்கள் இருக்கலாம் .
ஆனால் நீரின்றி ஒருநாள் இருக்க முடியாது . மேலும்
மனம் நிலவுடன் சம்பந்தப்படுத்தப் படுகிறது .
ஜோதிடமும் சந்திரன் மனோ காரகன் என்கிறது .
சந்திரன் வலிமையுடம் , முழுவதும் ஒளிரும் போது
கடலை கவர்கிறது . அலைகள் உயர்கின்றன .
மனிதனின் மூளையை சலனப்படுத்துகிறது .
மிருகங்களில் இந்த பாதிப்பு இல்லை ஏன் எனில்
மிருகங்களுக்கு மனது கிடையாது
மனிதனின் காதலைத்தூண்டுகிறது , ஆங்கிலத்திலும்
lunatic என்பது மனம் பாதித்தவர்களுக்கு பெயர் .
மனம் நிலவுடன் சம்பந்தப்படுத்தப் படுகிறது , சூரியன் உயிருடன் சம்பந்தப்படுத்தப் படுகிறது
மேலும் இன்னும் அறிஞர் பலர் ஆய்வு தேவை .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்
நீரின்றி அமையாது உலகு!
எனும் வள்ளுவ சூத்திரம் மிகவும் பொருள் பொதிந்தது.
--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com
> ஆனால், உண்மையில் அன்னம் அவ்வாறு செய்கிறதா என்று தெரியாது. ஆனால்
> உயிரியல் விநோதங்கள் எத்தனையோ! அதில் இதுவும் ஒன்றாக இருக்க
> வாய்ப்புள்ளது. //
***********************************************************************************************************
ராஜ ஹம்ஸம் எனும் அரிய பறவை இருந்ததாக இலக்கியங்களில் பார்க்கிறோம்.
அதற்குப் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.
சகோரம் எனும் பக்ஷி முழுநிலவின் கிரணங்களைப் பருகி வாழுமாம்.
சாதகப் புள் மழை நீர் நிலத்தில் விழுமுன் பாய்ந்து சென்று பருகும்.
இவை கவி மரபு கூறும் பறவைகள்.
‘சாதகம் போல் நினதருளே பார்த்திருப்பன் அடியேனே‘ என்று
எப்போதும் இறையருளை எதிர்பார்த்திருப்பர் அடியார்கள்.
அன்னப் பறவை பகுத்தறிவின் (விவேகத்தின்) சின்னம்.
சாதாரண ஹம்ஸம் (அன்னம்) சாரத்தை க்ரஹிப்பது போல் ஞானியர்
உலகியலைத் துறந்து பரம்பொருளைப் பற்றி அதில் நிலைத்திருப்பர்.
அதனால் அவர்களுக்கு ‘பரம ஹம்ஸர்’ என்று பெயர்.
குருகைக் காவலப்பனை மற்றவர்கள் 'எம்பெருமானை நினைப்பதற்கு
எங்களுக்கு ஒரு விரகு சொல்லுங்கள்' என்று கேட்க, குருகைக் காவலப்பன்,
’எம்பெருமானை மறப்பதற்கு எனக்கு நீங்கள் ஒரு விரகு சொல்ல மாட்டீர்களோ?'
என்றாராம். (விரகு – வழி)
நாலாயிரமும் உலகிற்குக் கிடைக்க வழிகோலிய ஸ்ரீ நாதமுனிகளின் சீடர்
குருகைக் காவலப்பன்.
’விஸ்மர்த்தும் நைவ சக்நும:’ என்றனர் கோபியர்; அவர்கள் கண்ணபிரானை மறக்க
வழிதேடினர்.
ஸ்ரீ ராமக்ருஷ்ணரும், பகவான் ரமணரும் நவ யுகத்தின் பரம ஹம்ஸர்கள்.
உலகியலில் முழுக்க ஆழ்ந்து விட்ட நம் போல்வாருக்கு இறைவனின்
‘சரண கமலாலயத்தை அரை நிமிட நேரம்’ மட்டுமாவது மனம் பொருந்தி நினைக்க
முடிவதில்லை.
தேவ்
சார் ஈதெல்லாம் உடாசு! சோம்பேறிகளின் பேச்சு. மயில் காட்டிற்கு போய்
பார்த்தால் விளங்கிவிடும். எங்கு பால் வித்தியாசம் இருக்கிறதோ அங்கு கலவி
உண்டு.
க.>
மடக்கு நாற்காலி போல் பிரபஞ்சம் அமைந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
ஒன்றிலிருந்து ஒன்று என்று விரிகிறது. ஒன்றுக்குள் ஒன்று என்று
அடங்குகிறது. அன்னமயமாக உலகு உள்ளது என்று வேதம் சொல்கிறது. எல்லாமே
அன்னம்தான். ஒன்று ஒன்றுக்கு அன்னம். கடைசியில் உலகமே அவனுக்கு அன்னம்
"உலகம் உண்ட பெருவாயா!" என்று ஆழ்வார் பாடவில்லையா? இப்படி அன்னத்தை
நம்பி வாழும் நாம் அன்னத்தை விடும் போது மனத்தில் லயிக்க
வேண்டியிருக்கிறது. இது பற்றி யோகாநந்த பரமஹம்சர் தனது நூலில் விரிவாக
எழுதியுள்ளார். மனது ஒடுங்கும் போது அதற்கும் ஓர் புகலிடம்
வேண்டியுள்ளது. இப்படியே ஒடுங்கி, ஒடுங்கி இறுதியில் இறைவனில் ஒடுங்க
வேண்டியுள்ளது. ஜப்பானிய விசிறிபோல் அவனிலிருந்து விரிகிறது பிரபஞ்சம்,
மீண்டும் அவனிடமே ஒடுங்குகிறது.
அதில் நீங்கள் சுட்டியபடி மனது நிரம்பிய வாழ்வாக இருப்பதால் உலக வாழ்வை
நோக்கி, "நீரின்றி அமையாது உலகு" என்று சொல்கிறார் எனப்பார்ப்பதும்
அழகுதான்.
க.>
தேவ்:
நல்லவேளை பகவர்களை அனுப்பி வைத்தான் இறைவன். அவர்கள் மூலமாக,
நினைக்கமுடியவில்லையே! நினைக்கமுடியவில்லையே! என்றேனும் நினைக்கவைக்கும்
அவன் லீலையை என்னென்பது?
இப்படிச் சொல்லிவிட்டு..திருவாய்மொழியைத்திறந்தேன்:
பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே!
என்ன ஆச்சர்யம் பாருங்கள் !!
வள்ளுவன் சொல்லும் அறவாழி அந்தணன் யார்? என்று நம்மாழ்வார் விளக்குவது
சுகுமாரனுக்குப் பிடிக்கும் ;-)
க.>
இது கற்பனை என்றாலும் கருத்தரிப்பதில் உள்ள
பல விசித்திரங்களை (அதாவது புணர்ந்து கருத்தரிக்கும்
நமக்கு விசித்திரம்; ஆனால் அந்த உயிரிகளுக்கு
வழக்கம்தான்) உயிரியல் கண்டு அறிவித்திருக்கிறது.
புணராமலேயே கருத்தரிப்பவை உள்ளன.
கருவைஇச் சுமக்கும் ஆணினமும் உள்ளது.
ரெ.கா.
On Dec 12, 12:00 am, "Tthamizth Tthenee" <rkc1...@gmail.com> wrote:
> மயில்கள் புணர்வதில்லை
> ஆண்மயிலின் கண்களில் ஒரு திரவம் சுரக்குமாம்
> அந்த திரவத்தை உண்டு பெண்மயில் கர்ப்பம் தரிக்குமாம்
>
> இன்னும் இது போல எவ்வளவொ தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது,
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> On 12/11/08, devoo <rde...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > // Dec 9, 11:46 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
>
> > > ஆனால், உண்மையில் அன்னம் அவ்வாறு செய்கிறதா என்று தெரியாது. ஆனால்
> > > உயிரியல் விநோதங்கள் எத்தனையோ! அதில் இதுவும் ஒன்றாக இருக்க
> > > வாய்ப்புள்ளது. //
>
> > ***********************************************************************************************************
>
> > ராஜ ஹம்ஸம் எனும் அரிய பறவை இருந்ததாக இலக்கியங்களில் பார்க்கிறோம்.
> > அதற்குப் பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் ஆற்றல் இருந்திருக்கலாம்.
> > சகோரம் எனும் பக்ஷி முழுநிலவின் கிரணங்களைப் பருகி வாழுமாம்.
> > சாதகப் புள் மழை நீர் நிலத்தில் விழுமுன் பாய்ந்து சென்று பருகும்.
> > இவை கவி மரபு கூறும் பறவைகள்.
>
> -
**********************************************************************
இலக்கியங்களில் கற்பனை மிகுதி என்றாலும் அவற்றில் இடம் பெறும்
அனைத்தும் கற்பனை என்று ஒதுக்கிவிடக் கூடாது.
உயிரியல், தாவர இயல் வினோதங்கள் எண்ணற்றவை.
வாளை மீன் போன்ற ஒரு மீன் இரவு காலத்தில் நிலத்தில்
மேய்ந்து இரைதேடிவிட்டு நீருக்குள் பாய்ந்து செல்வதை
ஏதோ ஒரு channel ல் பார்த்தேன்.
ஆப்பிரிக்கக் காடுகளில் உயிர்க்கொல்லித் தாவரங்கள் உள்ளன.
ஸரஸ்வதி நதியும், துவாரகை நகரமும் கற்பனை என்றனர்
ராஹுல ஸாங்க்ருத்யாயன் கோஷ்டியினர்.
அறிவியல் அவற்றைப் பொய்ப்பித்து விட்டது.
தேவ்
இதுவரை உண்மையில் அன்னப்பறவை என்று உண்டா? என்று இவர்களிடம்தான்
கேட்கவேண்டும். ஏதோ ஒருவகை வாத்து என்று தெரிகிறது.
பாலையும், தண்ணீரையும் பிரிப்பது கொஞ்சம் 'உடாஸ்' போலத் தெரிகிறது.
ஆயினும் அன்னத்தின் இலக்கிய ஆட்சியைக் கண்டு நாம் மகிழ்வது உண்மை ;-) அது
த்மிழனின் உருவக அணியாக இருக்கலாம், அல்லது தொன்ம விலங்காக இருக்கலாம்!
யாழி போல்!
கண்ணன்
2008/12/12 Kannan Natarajan <thar...@gmail.com>:
ஒவ்வொரு கோயிலிலும் உள்ள சிற்ப்பங்களில், அது எந்த நூற்றாண்டு சிற்பம்
ஆனாலும் , யாழி தவறாமல் இடம் பெறும்.
அதை ஊன்றிப பார்த்தால் அதன் விசித்திரமான உருவகமும் , அது தொன்ம விலங்காக இருப்பது மட்டுமல்ல .
அது சில தத்துவ விளக்கங்களை , யோகா பயிற்ச்ச்யின் முத்திரைகளை விள்ளகுவதாக பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு குரு மாதிரி விளங்கிய
சித்தர் ஒருவர் கூறினார் .அன்றைய நிலையில் மேலும் விளக்கம் கேட்டு புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இல்லை .!
ஆனால் விலங்குகளில் , ஆணும் ,பெண்ணும் கலந்த அர்த்தனாரிசுவர உண்டு .
மீன்களில் இன்னும் நாம் காணாத விந்தை பல உண்டு .
மகர மீன் என பண்டைய ஒரு குறிப்பு உண்டு .
தேவ் குறிப்பிட்ட சகோதர பறவை , அன்றில் ,
அனிச்சம் பூ , மயிர்நீப்பின் வாழா கவரிமான் ,
காண்டேகரின் க்ரவஞ்ச பறவை ,,
புனுகுப்பூனை , கடலில் அம்பர் வெளியிடும் மீன்கள் ,
கஸ்துரி மான் ,வலம்புரி சங்கு , நட்ச்சத்திர ஆமைகள் ,
அதன் வீரியம் , இன்னும் பல .
பலவித விந்தைகள் உள்ள மரங்கள் ,
மாடு போல் கத்தும் மரம் உண்டு , ஆளை கண்டதும் பதுங்கிக் கொள்ளும்
மூலிகை உண்டு .
தொட்டால் வாடும் இலைகள் உண்டு , மரங்கள் உண்டு
குறிப்பிட்ட நட்ச்சத்திர ஒளியை பெற்று பின் வாயை மூடிக்கொண்டு ,
முத்துகளை வளர்க்கும் சிப்பிகள் ,
இன்னும் எத்தனையோ , விந்தைகள் நாம் வாழும் உலகிலே
நம்மை சுற்றி உள்ளன .
நாம் எப்போது முழுமை பெறுவது .! எபோது இவைகளை ஆய்ந்து
உண்மை உணர்வது .
சங்க கால மன்னர்கள் எதிரி வருவதை தெரிவிக்கும் சக்தி வாய்ந்த
ஒரு மரத்தை வளர்த்து வந்துள்ளனர் எனப் படித்த நினைவு
உள்ளது .
இவ்வாறு பல செய்திகள் உள்ளது அன்னத்தை தவிர .!
இதில் அன்ன நடையை நடையை பற்றி பாடல்கள் வேறு !
சில கோயில்களில் அன்னப பறவை சிற்ப்பங்கள் கிடைக்ககூடும் என நினைக்கிறேன் . பார்த்ததாகவும் நினைவு .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
பறவை இயலை Ornithology என்பார்கள்.
நம்மைப பொறுத்தவரை சங்க கால பாடல்களில் கிடைக்கும் செய்திகளை நாம் இதுவரை சரித்திர ஆதாரமாக எடுத்துக் கொள்ள்கிறோம்.
எனவே அவர்களின் சில நம்பிக்கைகளையும் தெரிந்து கொள்ளவது தவறில்லை .
அது இப்போது அவ நம்பிக்கையாக தோன்றக் கூடும் , ஆனால் அவர்தம் வாழ்க்கை முறையைத தெரிந்துகொள்ள உதவும் .
பல்யானை குட்டுவன் அகப்பால் கோட்டையை அழித்தான் ,
உன்ன மரத்தை வெட்டிச்சாய்த்தான்.
உன்னமரம் தன் இலைகளை உதிர்த்து மன்னனுக்கு நேரவேருக்கும்
தீங்கை முன் கூட்டியே அறிவிக்கும் மரம் .
அத தீக் குறியையும்பகைத்து வெற்றி பெற்றான்
என ஒரு செய்தி சங்க கால தமிழக வரலாறு என மயிலை சீனி வேங்கட சாமீ
எழுதிய ஒரு நூலில் கிடைக்கிறது .
இந்த செய்திக்கும் ,
"ஊழையும் உப்பக்கம் " காணும் குறளுக்கும் எதாவது தொடர்பு இருக்குமா ?
அந்த சங்க கால உன்ன மரம் பற்றி தற்ப்பொதைய செய்தி உள்ளதா ?
அறிஞர்கள் விளக்கினால் நல்லது .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
அன்புடன்
துரை.மணிகண்டன்.