கன்னித்தமிழ்

523 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Dec 7, 2011, 2:49:05 PM12/7/11
to ra...@earthlink.net, mint...@googlegroups.com
திருவாட்டி இராஜம்
இது உங்கள் வினா
நேற்று (கலிபோர்னியாவில் நவம்பர் 2, 2011) திரு கண்ணன் நடராசன் அவர்கள் மின்தமிழில் இட்ட ஒரு பதிவு தினமணியில் வெளிவந்த சாமி சிதம்பரனார் அவர்களின் கட்டுரை. அந்தக் கட்டுரையில் தமிழின் புகழ் பாடப்பட்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியின் பொருளை வினவினேன். அது தொடர்பாக இந்தப் புதிய இழையைத் தொடங்குகிறேன்.
முன் குறிப்பு
---------------
தமிழ் மொழிமேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் அன்பை/காதலை/காமத்தை/மதிப்பை/பெருமிதத்தைப் பற்றி யாரும் ஐயுறத் தேவையில்லை; ஐயுற்றால் வம்பு! :-)
கேள்விகள்
---------------
1. "கன்னித்தமிழ்" என்ற சொல்லாட்சியை யார் எப்போது எங்கே முதன் முதலில் பயன்படுத்தினார்கள், நினைவில் இருக்கிறதா? (இதற்கு விடை முன்பு ஒருமுறை மின்தமிழிலோ அல்லது CTamil-இலோ சொல்லியிருந்தேன்.)
2. பாரதியாரே "எங்கள் தாய்" என்ற பாடலில் "கன்னி" "தாய்" என்ற இரண்டு பொருளையும் சேர்த்துப் பயன்படுத்தியிருப்பார். அதையும் பார்க்கவும். 
3. "கன்னி"க்கும் "தாய்க்கும்" என்ன தொடர்பு? 

4. பிறமொழிச் சொற்கள் கலவாத தமிழ்தான் "கன்னித்தமிழ்" என்றால் .... மணிமேகலை போன்ற காப்பியங்களைக் கிழித்து எறிந்துவிடவேண்டும்; அவை தமிழ்க் காப்பியங்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதைச் செய்யத் தயாராக இருக்கிறோமா?
5. எவை "பிறமொழிச் சொற்கள்" என்று உறுதியாக நிறுவிக்காட்ட எத்தனைப்பேருக்கு மொழியறிவின் ஆழம் இருக்கிறது? ளெனக்குத் தெரியும் என்று களத்தில் இறங்குகிறவர்கள் எந்த அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள்? அதைப் பற்றித் தெளிவாகச் சொல்லுகிறார்களா?

எல்லாவற்றிற்கும் மேலாக ...
6. "கன்னித்தமிழ்" என்று சொல்வதினால் என்ன பயன் பெறுகிறோம்?
பின் குறிப்பு
---------------
பிற நூல்களிலிருந்து ஒத்தி ஒட்டி ஆடும் விளையாட்டு வேண்டாம். இங்கே படித்துப் பயன்பெறுகிறவர்களின் நேரத்தைக் கருதி, உங்கள் கருத்துகளைச் சுருக்கமாகவும், நேரிடையாகவும், நக்கல்/கிண்டல் இல்லாமலும் பகிர்ந்துகொண்டால் .... இளைய தலைமுறைக்கு நல்லது.
நன்றியுடன்,
ராஜம்
-------------------------
வினா 1 
என் கருத்து (விடை)
கன்னித் தமிழ் எனும் சொல்லாட்சியை முதல்
முதலில் பயன்கொண்டவர் அமித சாகரர்
யாப்பருங்கல  ஆசிரியர் நன்கே அறிவீர்கள்
 அவர் தம் காரிகையின் அவை அடக்கத்தில்
 

                       தேனார் கமழ்தொங்கல் மீனவன்கேட்பத் தெண்ணீர் அருவிக்

                       கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ்நூல்

                       யானா நடாத்துகின்றேன் என்றுஎனக்கே நகைதருமால்

                       ஆனா அறிவின் அவர்கட்கு என்னாம்கொல் என்ஆதரவே

 

இதனில் கன்னித் தமிழ் என்றால் அழிவிலாதது என்னும் பொருளில்
இருக்கவேண்டும் ஏனென்றால் அவர் காட்டுவது அகத்தியரை
 

                குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர்

                                                                   (சூடாமணி நிகண்டு 135)

                கன்னி பெண், அழிவிலாமை, கட்டிளமைக்கும் பேரே

                                                                   (சூடாமணி நிகண்டு 298)

                குமரி அழிவில் கன்னியைக் கூறும்

                                                                   (பிங்கள நிகண்டு 937)

               இவையும் அதனை உறுதி செய்கின்றன
     

                கன்னி விடலை காளை மீளி

                        இன்நகை எயிற்றி எயினர் எயிற்றியர்

                        மறவர் மறத்தியர் புறவு பருந்து எருவை

                        கழுகு செந்நாய் கல்கெழுகுறும்பு

                        குழிஅறும்கூவல் குரா அமராஅ

                        உழிஞ்சில் பாலை ஓமை இருப்பை

                        வழங்குகதிக்கொண்டன செழும்பதிகவர்ந்தன

                        பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம்

                        பகல்சூறைஆடல் பாலைக் கருப்பொருளே

                    21 அகப்பொருள்விளக்கம் -  

            பாலைக் கருப்பொருட்க ளை நிரலிடும்கால்

                  பெண்பால் பெயர்தனை கன்னி என்னே வைக்கின்றது

            மற்ற இன்நகை எயிற்றி மறத்தியர்

                  என்பவையும் பெண்பால் சொற்களே அறிவீர்கள்
 
                கன்னி என்னும் சொல்லை மிகச் சரியாக கூர்ந்து புரிந்து கொள்ள 
                 கிடைக்கும் சொற்களை நிரலிட்டேன் காண்க  
 

கனைக்கும் அதிகுரல் கார்வானம் நீங்க

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து        75

ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து

மாஇருந் திங்கள் மறுநிறை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்க

புரிநூல் அந்தணர் பொலம்கலம் ஏற்ப

வெம்பா தாக வியல்நில வரைப்(பு)என        80

அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்

முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட

பனிப்புலர்பு ஆடி பருமணல் அருவியின்

ஊதை ஊர்தர உறைசிறை வேதியர்

நெறிநிமிர் நுடங்கு அழல்பேணிய சிறப்பின் 85 பரிபாடல் 11

- - - - - - - - - - - - - - - - - - - -

இன்ன பண்பின் நின் தைந் நீராடல்

மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட       135

கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம

இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்

மறு முறை அமையத்தும் இயைக

நறு நீர் வையை நயத் தகு நிறையே

- - - - - - - - - - - - - - - - - - - -             140   பரிபாடல் 11

 

- - - - - - - - - - - - - - - - - - - -

மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்

பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்

கன்னிமை கனிந்த காலத்தார் நின்

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்

- - - - - - - - - - - - - - - - - - - -       90    பரிபாடல் 19

 

கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்

தாமரை போல மலரும் ஊர

பேணா ளோநின் பெண்டே

யாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே 68    ஐங்குறுநூறு

 

மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்

பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில்பயிலும்

கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய

கண்ணின் வருந்தும்என் நெஞ்சு        48    திணை மொழி 50

 

யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோடு

ஏனை ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்

எண்ணனாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான் வைசிர

வண்ணனாய் வாழ்வான் வகுத்து             48    ஏலாதி

 

ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை

ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற

அழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்ற

மொழிந்தார் முதுநூலார் முன்பு              71    சிறு பஞ்சமூலம்

 

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை

உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து

உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்

ஏதிலான் துய்க்கப் படும்               274   நாலடியார்

 

அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய

மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து

நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்

பெறுமா றரிய பொருள்                     70    திரிகடுகம்

 

- - - - - - - - - - - - - - - - - - - -

மன்னும் மாலை வெண்குடையான்

வளையாச் செங்கோல் அதுஓச்சிக்

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்

மன்னும் மாதர் பெருங்கற்(பு)என்று

அறிந்தேன் வாழி காவேரி                   3     சிலம்பு

- - - - - - - - - - - - - - - - - - - -             7 கானல் வரி

 

- - - - - - - - - - - - - - - - - - - -

கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி

      நறுஞாழல் கையில் ஏந்தி             சிலம்பு 7

- - - - - - - - - - - - - - - - - - - -             கானல் வரி

 

- - - - - - - - - - - - - - - - - - - -

பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தல்

கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்துத் 110

தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி             சிலம்பு

- - - - - - - - - - - - - - - - - - - -             11 காடுகாண் காதை

 

- - - - - - - - - - - - - - - - - - - -

எட்டுஇரு நாளில் இவ்இராகுலன் தன்னைத்

திட்டிவிடம் உணும் செல்உயிர் போனால்

தீஅழல் அவனொடு சேயிழை மூழ்குவை           9-50

ஏது நிகழ்ச்சி ஈங்குஇன்(று) ஆதலின்

கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய

தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப்பு எய்துதி

அணிஇழை நினக்குஓர் அருந்துயர் வருநாள்         மணிமேகலை

மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி              பீடிகை கண்டு

- - - - - - - - - - - - - - - - - - - -             பிறப்புணர்ந்த காதை

 

- - - - - - - - - - - - - - - - - - - -

தங்கா வேட்கை தனைஅவண் தணித்ததூஉம்

கேட்டும் அறிதியோ வாள்திறல் குருசில்

கன்னிக் காவலும் கடியின் காவலும்

தன்உறு கணவன் சாவுறின் காவலும்               மணிமேகலை

நிறையின் காத்துப் பிறர்பிறர்க் காணாது            18-100 உதயகுமரன்

- - - - - - - - - - - - - - - - - - - -             அம்பலம் புக்க காதை

 

- - - - - - - - - - - - - - - - - - - -

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்          25

தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்

கன்னி ஏவலின் காந்த மன்னவன்            

இந்நகர் காப்போர் யார்என நினைஇ

- - - - - - - - - - - - - - - - - - - -

நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி

மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்        100

தருமதத்தனும் தந்தையும் தாயரும்                மணிமேகலை

- - - - - - - - - - - - - - - - - - - -             22. சிறை செய் காதை

 

- - - - - - - - - - - - - - - - - - - -

மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோல்

கன்னியர் கைவிளக்(கு) ஏந்தக் காவலன்

பொன்இயல் வளநகர் பொலியத் தோன்றினார்

- - - - - - - - - - - - - - - - - - - -             சூளாமணி

- - - - - - - - - - - - - - - - - - - -

அன்னமெல் நடையவர் பரவ வால்துகில்

கன்னியர் கவரிகால் எறியக் காவலன்

முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்

- - - - - - - - - - - - - - - - - - - -             சூளாமணி

 

- - - - - - - - - - - - - - - - - - - -

ஆகு பொன்அறை மேல்அரு வித்திரள்

நாக கன்னியர் ஆடலின் ஞால்கைம்மா

வேக மும்மத வெள்ளம் அளாவிய

- - - - - - - - - - - - - - - - - - - -             சூளாமணி

 

- - - - - - - - - - - - - - - - - - - -

கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை

காசறு வனப்பினோர் கன்னி ஏதுவால்

ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்

- - - - - - - - - - - - - - - - - - - -             சூளாமணி

 

- - - - - - - - - - - - - - - - - - - -

பொன்நகர் புக்கனன் பொழுதும் சென்றது

கன்னிதன் பெருமையும் கருமச் சூழ்ச்சியும்

அன்னமென் நடையவட்(கு) அறியக் கூறினான்

- - - - - - - - - - - - - - - - - - - -             சூளாமணி

 

- - - - - - - - - - - - - - - - - - - -

மின்அவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்

கன்னிநின் அருளினே கருதப் பட்டனள்

மன்னவர் அருளிலர் ஆயின் மக்களும்

- - - - - - - - - - - - - - - - - - - -             சூளாமணி

 

அண்டம் ஈன்றுஅளித்த கன்னி முனிவாக             கல்லாடம் 4

    

அண்டப்பெருந்திரன்அடைவுஈன்றுஅளித்த               கல்லாடம் 6

 

சென்னி மலைஈன்ற கன்னி விற்பிடிப்ப                 கல்லாடம் 26

 

தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர்                  கல்லாடம் 27

 

அடைவு ஈன்றளித்த பிறைநுதல் கன்னியடும்        கல்லாடம் 28

 

அளவாக் கன்னியர் அவருள்                                 கல்லாடம் 29

 

கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி    கல்லாடம் 42

 

சூரரக் கன்னியர் உடல்பனி செய்யும்                     கல்லாடம்42

 

கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை          கல்லாடம் 61

 

பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும்         கல்லாடம் 68

 

குலமலைக் கன்னியென்(று) அருள்குடி இருக்கும்  கல்லாடம் 69

 

நீரர மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு                  கல்லாடம் 76

 

கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை        41 விக்கிரமசோழனுலா

 

                            - கன்னி                                         136 விக்கிரமசோழனுலா

மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து

 

மடநடை அன்னப் பெடைபெறக் கன்னி                   140 விக்கிரமசோழனுலா

 

கன்னியும் நன்மதையும் கங்கையும் சிந்துவும்       215 விக்கிரமசோழனுலா

 

பொன்னி வளநாடு பூஞ்சிலையும்-கன்னித்           337 விக்கிரமசோழனுலா

 

கடப்பன கன்னி மானேக்கியும் அன்னம்                   272 குலோத்துங்கசோழனுலா

 

கன்னிப் பனந்தோடு காதிற்கும்-சென்னி                          339 குலோத்துங்கசோழனுலா

 

கன்னிக்கும் கங்கைக்கும் காவலனைச்-சென்னியை   232 இராசராசசோழனுலா

                                                                                                            இராசேந்திரசோழனுலா

கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்-சொன்னமயில்  32 நளவெண்பா

 

அன்னம்போய்க் கன்னியர் அருகணைய-நன்னுதலும்  46 நளவெண்பா

 

மேவுமிளம் கன்னிபால் மீண்டேகும்-பாவில்          76 நளவெண்பா

 

காவல் கடந்தெங்கள் கன்னிமாடம் புகுந்தாய்         84 நளவெண்பா

 

கன்னியான் ஆகில் கடிமாலை-அன்னந்தான்          149 நளவெண்பா

 

கன்னி மணமாலை கைக்கொண்டான்-உன்னுடைய    156 நளவெண்பா

 

காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்    166 நளவெண்பா

 

கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை      187 நளவெண்ப

 

கன்னி இளமேதிக் கால்குளம்பு-பொன்னுரைத்த             201 நளவெண்பா

 

கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது    311 நளவெண்பா

 

கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும்                    334 நளவெண்பா

 

கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்                   363 நளவெண்பா

 

கண்டவேந்தர் கொண்மின்கள் என்னும்

      கன்னிக் கடுவாயே                                              5 நந்திக்கலம்பகம் // கடுவாய் =ஒர்பறை

 

காலைப் பொழுதின்எழு கன்னியர்தம்                   80 நந்திக்கலம்பகம்

 

இயம்பிடும் எம்கன்னி செஞ்சொல்                          85 நந்திக்கலம்பகம்

 

தூவடிவேல்மன்னன் கன்னித்துறை சுரும்பார்குவளை 3 பாண்டிக்கோவை

 

அரண்கொண்டதென்னன்கன்னிப்பெருமான் வரோதயன்37 பாண்டிக்கோவை

 

மன்ஏர்அழிய மணற்றிவென்றான் கன்னிஆர்துறைவாய்43 பாண்டிக்கோவை

 

ஒளிமன்னும்முத்தக்குடைமன்னன்கன்னிஉயர்பொழிலே44பாண்டிக்கோவை

 

ஒன்னாரைவெண்மாத்துவென்றான்கன்னிவீழ்பொழில்வாய்46 பாண்டிக்கோவை

 

கழல்நெடுமாறன்கன்னிக் கொந்தாடுஇரும்பொழில்வாய்      74 பாண்டிக்கோவை

 

குலமன்னன் கன்னிக்குலை வளர்பெண்ணை         82பாண்டிக்கோவை

 

ஓடும்திறம் கொண்டகோன் கன்னிக்கானல் உறை     96 பாண்டிக்கோவை

 

வென்றான் வியன்கன்னி அன்னம்தன் மென்பொடை  97 பாண்டிக்கோவை

 

வெறிகமழ் பூம்கன்னிக்கானல் விளையாட்டு         109 பாண்டிக்கோவை

 

தோணிதானை சிதைவித்தகோன் கன்னித்தென்துறை 112 பாண்டிக்கோவை

 

அவியவைவேல் கொண்டகோன் கன்னிவார்துறைவாய்128 பாண்டிக்கோவை

 

இலங்குஇலைவேல் மன்னன் கன்னிஅம்கானலின்வாய் 137 பாண்டிக்கோவை

 

அடைகுன்றம் ஏறஎன்றோன் கன்னிஈர்ம் பொழில்வாய்      168 பாண்டிக்கோவை

 

வேல்மன்னன் கன்னிஅன்னாள் பொன்அணிவான்     169 பாண்டிக்கோவை

 

புகலேபுரியஎன்றான் கன்னிஅன்னாய் புலம்புஉறுநோய் 210 பாண்டிக்கோவை

 

பரவும் கழல்மன்னன் கன்னியம்கானல் பகலிடம்நீ    230 பாண்டிக்கோவை

 

சினத்து உரும்ஏந்தியகோன் கன்னித் தாழ்துறைவாய்  234 பாண்டிக்கோவை

 

படுத்தான் பராங்குசன் கன்னிஅம்கானல் பறவைகளே 239 பாண்டிக்கோவை

 

ஏமாண்சிலையவன் கன்னிநல்நீர் கொண்ட ஈர்முகிலே 246 பாண்டிக்கோவை

 

கண்ணிவேந்தரைஆற்றுக்குடி கன்னிவாகைகொண்டே 259 பாண்டிக்கோவை

 

கழுதுபடியக்கண்டான் கன்னிஅன்னமின்நேரிடையாய்  276 பாண்டிக்கோவை

 

புடைமணியானையினான் கன்னிஅன்னாள்பொருகயல் 278 பாண்டிக்கோவை

 

கைஆர்சிலைமன்னன்கன்னிநல்நீர்கொடைகார்முகிலே306 பாண்டிக்கோவை

 

கன்னிக்கு சிவானந்தக் கனிக்கு முத்துக் கம்பைக்கும் 2 திருநள்ளாற்றுப்புராணம்

 

கன்னிமதி நிடதநாடாள்வைஎன நளற் குறுதிக் கழறி  11 திருநள்ளாற்றுப்புராணம்

 

மிக்கதோர் கன்னியீச்சரமு(ம்) மேவியே                   120 திருநள்ளாற்றுப்புராணம்

 

அம்புசை நேத்திரவதி சீர்அடையே கன்னி           173 திருநள்ளாற்றுப்புராணம்

 

கன்னியர்ஆகிய மாயையில் அவர்கடப்பாரே         224 திருநள்ளாற்றுப்புராணம்

 

கன்னித் திங்கள் பிதிர்கள்தம் காலமாம்                   281 திருநள்ளாற்றுப்புராணம்

 

கன்னிவிடலை காளை மீளி இன்நகைஎயிற்றிஎயினர்   21 அகப்பொருள்விளக்கம்

 

கறைவேல் காளையும் கன்னியும் காண்ப           119 அகப்பொருள்விளக்கம்

 

குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் 135 சூடாமணி நிகண்டு

 

கன்னி பெண்ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே  298 சூடாமணி நிகண்டு

 

கன்னிப் புன்னை அன்னம் துன்னும்                           தொல் நச்சி. உரை

 

கன்னிஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட               தொல் நச்சி. உரை

 

 

பன்னிரு திருமுறை திவ்யப் பிரபம்ந்தம் 22 K+ பாடல்களைப்

பார்த்தால்  நூற்றுக் கணக்கில் வருவதால் விடுத்தேன்
வேண்டுமென்றால் தொகுக்கின்றேன்
 
ஒரே ஒரு பகுதி மட்டும் பெரிய   புராணம் ழான் அவர்கள் குறிப்பிட்டதால்
கன்னி நாடு
ஈங்கு கன்னிநாடு பாண்டிய நாட்டைதான் தெளிவாகக் குறிக்கின்றது
இதனில் கன்னி மீண்டும் அழிவின்மை என்னும் பொருளிலேயே
வருகின்றது   எனலாம்.
 
என்கருத்து முதல் சங்கம் இடைச்சங்கம் என இரு கால கட்டத்திலும்
இருந்து பிறகு கடைச் சங்க காலத்திலும் பிழைத்து  அழிவில்லாமல்
இருப்பது என்னும் பொருளில். ஏனைய கட்டழகு இளமை கன்னிஆறு
ஓடுவது கன்னிதுறை உடையது  போன்ற பண்புகள்  பொருந்தா.
  
படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் 12.1755
நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்  12.2503
கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் 12.2511
கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட 12.2549
கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை 12.2643
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம் 12.2760
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான 12.3828
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் 12.4189
                   மேலும் கன்னிமதில் என்னும் சொல்தொடர் பல உள்ளன
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன 12.1760
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் 12.1900
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து 12.2007
கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ 12.2431
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த 12.2652
கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை 12.2794
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார் 12.3437
காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து 12.4022
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 12.௪௦௫௨
இவற்றில் கட்டழகு எனும் பொருள் பொருந்தும் ஏனெனில்
அழகு எனும் பண்பு காட்டுவது பாவின் இயற்கை
கட்டழகு என்றால் சீர்  குலையாமல் அதாவது எது  எது எப்படி 
இருக்கவேண்டுமோ அப்படி குறை ஏதும்  இல்லாமல்
 
 I hope the triangulated / pin pointed meaning of the word can be deduced
 
By age and wealth of a Language multiple facets for a single word will devolop
It cannot be avoided and we have to contextually understand it with complete nutrality
There are name of a river as Kanni and even the zodiac sign kanni being met with
 
வினா # 2
கன்னித் தாய் என்றபோது கட்டழகு  மிக்க மகவீன்றவள் (fertility)  எனக்
கொள்ளலாம்
தாய் இது பற்றி வேறு ஒரு இழையில் முன்பு குறிதுள்ளதாக நினைவு
 
தை என்பது வயிற்றைக் குறிக்கும் சிறுத்தை எனும் விலங்கின்  வயிறு
அடிப்பகுதி அளவில் சிறுத்து  காண்பதால்  அவ்வாறு பெயரிட்டிருக்கவேண்டும்
தையலாள் தையல் நாயகி  எனும் சொற்கள்வயிற்றி லிருந்து தோன்றியது
என நினைக்கிறேன்  
 
தை யிலிருந்து தாய் பிறந்திருக்கும்  தை மாதம் ஒருகாலத்தில் ஓரிரு நாட்கள்
கூடிய (வயிறு பெருத்த) மதமாகவோ அல்லது ஆண்டினுக்கு நடுவண் அமையும்
மதமாகவோ இருக்கலாம்
Due to ovality in periferal path of the earth there is an defference of days for same angular motion
 
வினா # 3
கன்னி என்றால் மணமாகாத அல்லது பயனுக்கு இதுவரை வராத ஆனால்
சரியாக முதிர்ந்த  (குமரி)  என்னும் பொருளி சில இடங்களில் கொள்ளும்  படி உள்ளது
 
வினா # 4 
பிற மொழிக்  கலப்பில்லாமல் என்னும் பொருள் முற்றிலும் பொருந்தவே பொருந்தா
மணமாகாத என்னும் கருத்திலிருந்து அதற்கு இணைபோல்  தோன்றி இருக்க வேண்டும்
 
வினா # 5
பயன்
எல்லா பண்படைக்கும் உள்ள பயன்தான் அன்றி வேறென்ன
 ====================
மேலும் தாங்கள் நினைப்பது போல் இச்சொல் தமிழுக்கு புறம்பானது இறக்குமதி யானது அல்ல
 
நான் பலயிடங்களில் நேரத்தில் நடுவு நிலைமையிளுந்தும் பார்க்க நினைத்தாலும் மனதிற்குப்படுவது 
வடமொழினுக்காக வாதிடுபவர்கள்
இச்சொல் வடமொழியில் உள்ளது என சொல்லிவிட்டால் போதும் அதுதான் பழமையனது ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்னும் மேதாவித் தனத்தை வற்புறுத்துவது காரணங்களைக்  காட்டுவது இல்லை இச்சொல் எங்கே இப்பொருளில் 
வந்துஉள்ளது  அதன் கால கட்டம் என்ன என்பதி எல்லாம் வைப்பதில்லை கேட்கக் கூடாது என்று போலிச் ஆன்மீக
தலைவர்கள் சாமியார்கள் சொல்வதைப்போ; இதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது என பச்சையாகவே தப்பித்துக்
கொண்டு  ஓட நினைப்பார்கள் காரண காரியங்களால் உறுதிப் படுத்தாமல் வேதாந்தமகவே கொள்ளவேண்டும்
சிதாந்தம்மாக அள வையின் படி (logic) நிற்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கே உறுதியாகத் ஏதும் தெரியாது ஆனால்
வடமொழிக்காக தங்கள் DNA உந்துதலால் வாதிடுவார்கள்  
 
உதாரணத்திற்கு  
வடமொழியில் றன்னகரம் இல்லையே கன்னி என்பது எப்படி வரும் என்றால் தமிழ் படுத்தும் போது அப்படி மாறிவிட்டது
என்பார்கள்  எங்கே உங்கள் சொல்லை காட்டு எங்கே எந்த எந்த நூலில்  எப்பெப் பொருளில் வந்துள்ளன   அதன் கால  கட்டம் யாதென்றால்
தெரியாது முழிப்பார்கள்
 
வடமொழியில் இரு நகரங் கள் இல்லை ஆயினும் தமிழுக்கு இணையாக எழத வேண்டும் என்றால் முடியாது ஏனென்றால்
அம்மொழியின் ஒலியியல்  அமைப்பு  அப்படி ஒலி உண்டு வரிவடிவம் இல்லை இடம் பற்றி ஒலிக்கவேண்டும் ஆங்கிலத்திலும்
தமிழிலும் ஏன் உலக  மொழிகள் அனைத்திலும் வேறுஒரு மொழியின் ஒலிகளை எல்லாம்  எழுத முடியாதது மட்டுமல்ல ஒலியிருக்கும்
வேறுபடுத்தி எழுத வரிவடிவம் கொள்ளவில்லை எனும் நிலை
 
 
மேலும் தேவையின் பால் தொடரலாம்
அன்புடன்
நூ த லோ சு  
 

Jean-Luc Chevillard

unread,
Dec 7, 2011, 3:09:01 PM12/7/11
to mint...@googlegroups.com, N D Logasundaram, ra...@earthlink.net
Dear NDLS and VSR,

I have two questions.

*(1)*
When you write "கன்னித் தமிழ்நூல்",
why do you think that it has to be factored as
"'(கன்னித் தமிழ்)நூல்" [(AB)C]
rather than as
"
கன்னித் (தமிழ்நூல்)" [A(BC)] ?
((I wonder))

*(2)*
Is not the Cūṭāmaṇi Nikaṇṭu quotation (see below)
a strong argument
for the geographical interpretation
to be preferred to the theological/mystical interpretation?
<QUOTE>
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர்

(சூடாமணி நிகண்டு 135)

</quote>

Cheers

-- jlc (Paris)

                $

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Dec 7, 2011, 6:15:29 PM12/7/11
to மின்தமிழ்
ஐயா நூதலோசு

திருவாட்டி இராஜம் உங்கள் கேள்விகளை பார்த்தால், பதில் சொல்லலாம். அது
நிற்க, இது பொது அரங்கானதால் உங்கள் கருத்துகளை அலசுகிறென்


>On Dec 7, 8:49 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:

> மேலும் தாங்கள் நினைப்பது போல் இச்சொல் தமிழுக்கு புறம்பானது இறக்குமதி யானது
> அல்ல
>
> நான் பலயிடங்களில் நேரத்தில் நடுவு நிலைமையிளுந்தும் பார்க்க நினைத்தாலும்
> மனதிற்குப்படுவது
> வடமொழினுக்காக வாதிடுபவர்கள்
> இச்சொல் வடமொழியில் உள்ளது என சொல்லிவிட்டால் போதும் அதுதான் பழமையனது
> ஏற்றுக்கொள்ளவேண்டும்
> என்னும் மேதாவித் தனத்தை வற்புறுத்துவது காரணங்களைக்  காட்டுவது இல்லை இச்சொல்
> எங்கே இப்பொருளில்
> வந்துஉள்ளது  அதன் கால கட்டம் என்ன என்பதி எல்லாம் வைப்பதில்லை கேட்கக் கூடாது
> என்று போலிச் ஆன்மீக
> தலைவர்கள் சாமியார்கள் சொல்வதைப்போ; இதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது என
> பச்சையாகவே தப்பித்துக்
> கொண்டு  ஓட நினைப்பார்கள் காரண காரியங்களால் உறுதிப் படுத்தாமல் வேதாந்தமகவே
> கொள்ளவேண்டும்
> சிதாந்தம்மாக அள வையின் படி (logic) நிற்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கே
> உறுதியாகத் ஏதும் தெரியாது ஆனால்
> வடமொழிக்காக தங்கள் DNA உந்துதலால் வாதிடுவார்கள்

கன்னி என்பது நீங்கள் சொல்வது போல் பல இடங்களில் பல பொருள் கொண்டு
இருக்கலாம்.

கன்னி என்பதன் பரவலான , பாமரருக்கும் அறிந்த அர்த்தம் ; பெண், இளம்பெண்,
கல்யாணமாகாதவள், ஆணுடன் உடல் உறவு இல்லாதவள். இந்த அர்தத்தில் வரும்
கன்னிதான் சமஸ்கிருத கன்யா என்பதன் திரிதல். உதாரணமாக கன்னியப்பன்,
கன்னியாக்குமரி, கன்னித்தமிழ் போன்ற சொற்களில் இந்த ( பெண், இளம்பெண்,
கல்யாணமாகாதவள், ஆணுடன் உடல் உறவு இல்லாதவள்) என்ற பொருளில்தான்
வருகிறது.

மெட்ராஸ் லெக்சிகானில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள்::


8. கன்று kaṉṟu : (page 829)

tree; இளமரம். கருப்புரக்கன்று (சீவக. 1267). 3. Anything insignificant,
trifle, particle; சிறுமை. (திவா.) 4. Bracelet; கைவளை. கன்றணிகரத்தெம்
மன்னை (சீகாளத். பு. கன்னி. 147).

கன்றுக்குட்டி kaṉṟu-k-kuṭṭi
, n. < கன்று +. Calf; பசு எருமைகளின்

--------------------------------------------------------------------------------
9. கன்னி kaṉṉi : (page 832)

kaṉṉāṉ
, n. < கன்¹. [M. kannān.] Brazier, bell-metal worker, one of the
divisions of the Kammāḷa caste; செம்புகொட்டி. (திவா.)

கன்னி kaṉṉi
, n. < kanyā. [T. K. kanne, M. kanni.] 1. Virgin, maiden, young
unmarried woman; குமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7,
மன்னுமாலை.).

--------------------------------------------------------------------------------
10. கன்னி kaṉṉi : (page 832)

(சிலப். 7, மன்னுமாலை.). 2. Youthfulness, tenderness, juvenility,
virginity; இளமை. கன்னிப் புன்னை (திருக்கோ. 177). 3. Freshness; புதுமை.
கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900). 4. State of being earliest in time;
முதன்முதலான நிகழ்ச்சி. கன் னிப்போர். 5. Imperishable state; அழிவின்மை.
கன்னிமா மதில்சூழ் கருவூர்


--------------------------------------------------------------------------------
11. கன்னிக்காய்ச்சல் kaṉṉi-k-kāyccal : (page 832)

17. Mussell-shell creeper. See காக்கணம். (திவா.)

கன்னிக்காய்ச்சல் kaṉṉi-k-kāyccal
, n. < கன்னி +. [M. kannikāccal.] Scorching rays of the September sun;
hot September; புரட் டாசிமாதத்தில் காயும் வெயில்மிகுதி.

--------------------------------------------------------------------------------
12. கன்னிகழி-தல் kaṉṉi-kaḻi- : (page 832)

, n. Black nightshade. See மணித்தக்காளி. (மலை.)

கன்னிகழி-தல் kaṉṉi-kaḻi-
, v. intr. < கன்னி +. To pass from maidenhood to married state;
மணம்புரியப்பெறுதல்.

கன்னிகாதானம் kaṉṉikā-tāṉam


--------------------------------------------------------------------------------
13. கன்னிகாதானம் kaṉṉikā-tāṉam : (page 832)

கன்னிகாதானம் kaṉṉikā-tāṉam
, n. < kan- yakādāna. Giving away a virgin in marriage, one of
muppattiraṇṭaṟam, q.v.; கன்னி யை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும்
அறம். (பிங்.)

கன்னிகாமடம்


--------------------------------------------------------------------------------
14. கன்னிகுமரி kaṉṉi-kumari : (page 832)

கன்னிகாரத்து ... ஒருத்தி தோன்றி (சிலப். 11, 110).

கன்னிகுமரி kaṉṉi-kumari
, n. < கன்னி +. See கன்னயாகுமரி. கன்னி குமரிமுதற் றீர்த்தமெல் லாம்
(திருக்காளத். பு. கடவுள்வா. 16).

--------------------------------------------------------------------------------
15. கன்னிகுமரி kaṉṉi-kumari : (page 832)

தோன்றி (சிலப். 11, 110).

கன்னிகுமரி kaṉṉi-kumari
, n. < கன்னி +. See கன்னயாகுமரி. கன்னி குமரிமுதற் றீர்த்தமெல் லாம்
(திருக்காளத். பு. கடவுள்வா. 16).

கன்னிகை¹


--------------------------------------------------------------------------------
16. கன்னிச்சவ்வு kaṉṉi-c-cavvu : (page 833)

the lotus; தாமரைக்கொட்டை. 2. Flower bud; பூவின்மொட்டு.

கன்னிச்சவ்வு kaṉṉi-c-cavvu
, n. < கன்னி +. Virginal membrane stretched across the external
orifice of the vagina, hymen; கன்னிமை நீங்குதற்குமுன் யோனியை மூடியுள்ள
சவ்வு. (W.)

--------------------------------------------------------------------------------
17. கன்னிப்பிடி kaṉṉi-p-piṭi : (page 833)

bluish-green, attaining at least 1 ft. in length, Caranx atropus;
கடல்மீன்வகை.

கன்னிப்பிடி kaṉṉi-p-piṭi
, n. < கன்னி +. Ball of coloured food thrown to feed crows by women
praying for the welfare of their brothers on the day following makara-
caṅkirānti; சங்கி ராந்திக்கு அடுத்தநாள் பெண்கள் தம்

--------------------------------------------------------------------------------
18. கன்னியாபுத்திரன் kaṉṉiyā-puttiraṉ : (page 834)

கன்னியாபுத்திரன் kaṉṉiyā-puttiraṉ
, n. < id. +. Son of an unmarried woman; கன்னி பெற்ற மகன்.

கன்னியாமடம் kaṉṉiyā-maṭam
, n. < id. +. Convent, nunnery. See
=========================================
”வடமொழினுக்காக வாதிடுபவர்கள்..” என்ற சொல்லாடல்கள் சிரிப்பைதான்
வரவழிக்கின்றது. எந்த மொழிக்கும் அதற்காக “வாதிடுபவர்கள்” தேவையில்லை.
நீங்கள் உலகை ”வடமொழினுக்காக வாதிடுபவர்கள்..” “தமிழுக்காக
வாதிடுபவர்கள்..” என பிரிப்பதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.

பல சொற்கள் பிராகிருதம் வழியாக தமிழுக்கு வந்துள்ளன. சமஸ்கிருத ந்யா ,
ஶ்யா போன்ற கூட்டொலிகள் பிராகிருத / தமிழில் ன்னி , ச்சி என மாறுகிரன.
இது ஒரு சிறிய சாம்பிள்தான். இப்படி பல இருக்கிறன. இதை மொழியியலாளர்
regular sound change என்பர். சொற்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு
மொழிக்கு போகும் போது regular மாற்றங்களுடன் செல்கிறன, அதனால்
சம்ஸ்கிருதத்தில் இரு நகரங் கள் இல்லை என்பது இவ்விடத்தில் சரியில்லை.
(தற்போது தமிழில் இரு நகரங் கள் இல்லை என்பது வேறு விசயம்).

உங்கள் கருத்தான கன்னி சமஸ்கிருத மூலம் என சொல்வது DNA உந்துதலால்
ஏற்படுவது இன்னும் வேடிக்கையாக உள்ளது. இந்த புரட்சிகரமான கருத்தை எந்த
விஞ்ஞானியும் வைத்ததில்லை, நீங்கள் முதல் முதலாக DNA க்கும்,
“மொழிக்காக” வாதிடுவதையும் ஒரே கோட்டில் பார்ப்பது பெரும் விஞ்ஞான
புரட்சி. நிச்சயம் நோபல் பரிசு தகுதியுள்ள கருத்து.

வகொவி

N. Ganesan

unread,
Dec 7, 2011, 8:11:23 PM12/7/11
to மின்தமிழ்

On Dec 7, 5:15 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> இந்த அர்தத்தில் வரும்
> கன்னிதான் சமஸ்கிருத கன்யா என்பதன் திரிதல். உதாரணமாக கன்னியப்பன்,
> கன்னியாக்குமரி, கன்னித்தமிழ் போன்ற சொற்களில் இந்த  ( பெண், இளம்பெண்,
> கல்யாணமாகாதவள், ஆணுடன் உடல் உறவு இல்லாதவள்) என்ற பொருளில்தான்
> வருகிறது.
>

மாரியப்பன், காளியப்பன் என்பதுபோல் கன்னியப்பன்.

கன்னி - குமரிக்கு அன்பன், சத்த மாதர் கன்னிமார் அடியார் எனப் பொருள்.

ஆயிமுத்து, மாரிமுத்து, காளிமுத்து, கன்னிமுத்து - அம்மன் பெயர்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 7, 2011, 8:24:38 PM12/7/11
to மின்தமிழ்

On Dec 7, 2:09 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> *(2)*
> Is not the Cūṭāmaṇi Nikaṇṭu quotation (see below)
> a strong argument
> for the geographical interpretation
> to be preferred to the theological/mystical interpretation?
> <QUOTE>

> *குமரி கற்றாழை* *கன்னி* *கொற்றவை காளி*க்கும் பேர்


>
> (சூடாமணி நிகண்டு 135)
>
> </quote>
>
> Cheers
>
> -- jlc (Paris)
>

கன்னி கொற்றவை காளிக்கும் பேர்.

கன்னி துர்க்கை பழையோள் என்கிறது திருமுருகு.

கொஞ்சம் பழமையைப் பார்ப்போம்.
ஒரு 4200 வருஷம் தான் ஆச்சு.
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கன்னிநாடு எந்தக் கன்னி பேரால் ஏற்பட்டது? என்பதை
ஆராயவும்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Dec 7, 2011, 8:26:52 PM12/7/11
to mint...@googlegroups.com
கன்னி என்ற சொல் தமிழிலும் சமஸ்கிரிதத்திலும் (ஏன் அண்ட சராசரத்திலும்) இருப்பதாக நிறுவியாயிற்று.  இப்போது எழுப்பப்படும் கேள்வி கன்னி என்பது தமிழ்ச் சொல்லா அல்லது சமஸ்கிரிதத்தில் இருந்து இரவல் பெற்றதா என்பதே.
இந்த இரு மொழிகளில் கன்னி என்பதன் வேர்ச் சொல் சமஸ்கிரிதத்தில் மட்டும் இருந்து தமிழில் இல்லாமல் கன்னி என்ற சொல் பயன்பாட்டில் வழக்கில் இருந்தது என்று நிறுவினால் மட்டுமே கன்னி ஒரு தமிழ்ச் சொல் அல்ல என்று நிலை நாட்ட முடியும்
அதன்பின் சமஸ்கிரிதத்தில் வேர்ச்சொல் இல்லாமல் கன்னி என்ற சொல் வழக்கில் இருந்தால் அது தமிழில் இருந்து இரவல் பெற்றது என்ற பொருள்
இரண்டு மொழிகளிலும் வேர்ச் சொல் இருந்தால் அது இரண்டு மொழிகளிலும் இரவல் பெறாமல் தனின் தனியே உருவானதாகக் கொள்ளலாம்
இதற்கான முடிவைச் சென்னைப் பல்கலக்கழகச் சொல்லகரமுதலியைக்கொண்டு நிறுவ முயலுவது சரியல்ல.  அது தமிழ் பேச்சுக் குழுவால் பயன்படுத்தப்பட்ட பட்டியல் மட்டுமே.  வேர்ச் சொல் ஆராய்ச்சிக்குப் பயன்படாது
சமஸ்கிரிதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும்ம் புலமை வாய்ந்தவர்கள் ஆய்ந்து முடிவு சொல்லட்டும்
நாகராசன்

2011/12/8 N. Ganesan <naa.g...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 7, 2011, 9:31:07 PM12/7/11
to mint...@googlegroups.com
அன்புடை நூதலோசு ஐயா
கணினிசார் சொல்நிரலியை உருவாக்கும்  உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது.  மின் ஆக்கம் செய்யப்பட்ட இலக்கிய வளங்களில் இருந்து சில ஆய்வுக் கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்க இது உதவும்.  1990-களின் இறுதியில் காசி ராஜா ட்ரஸ்ட் கருடபுராணத்தை மின் ஆக்கம் செய்து அதில் கையாளப்பட்ட சொற்கள் வரிசைப் படுத்தப்பட்டு அது எவ்வாறு மற்ற மொழிகளில் உள்ள வளங்களுடன் ஒத்துப் போகிறது என்றூ ஆய்வு செய்ததை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது
ஆங்கில இலக்கியத்தில் கவி பைரனின்  கவிதைக்கும் ஷெல்லியில் கவிதைக்கும் உள்ள ஒப்புமை தாக்கத்தை கணினியில் இருவரது படைப்புகளையும் உட்புகுத்தி ஒரு குறிப்பிட்ட சொல் எவ்வாறு பயன் படுத்தப் பட்டுள்ளது என்று ஆய்வு செய்துள்ளார்கள்
நீங்கள் இங்கே கன்னி என்ற சொல்லுக்கான கனினிவழி நிரலியைத் தொகுத்துள்ளீர்கள்.  அதைப் படித்து அதனால் பெறப்படும் தகவல் என்ன என்பதை சுட்டிக் காட்டினால் இது ஒரு ஆய்வின் முடிவாக அமையும்
நாகராசன்

2011/12/8 N D Logasundaram <selvi...@gmail.com>

--

விஜயராகவன்

unread,
Dec 8, 2011, 3:12:20 AM12/8/11
to மின்தமிழ்
On Dec 8, 2:26 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> இதற்கான முடிவைச் சென்னைப் பல்கலக்கழகச் சொல்லகரமுதலியைக்கொண்டு நிறுவ
> முயலுவது சரியல்ல.  அது தமிழ் பேச்சுக் குழுவால் பயன்படுத்தப்பட்ட பட்டியல்
> மட்டுமே.  வேர்ச் சொல் ஆராய்ச்சிக்குப் பயன்படாது


பரோ & எமனோவின் திராவிட எடிமாலஜிகல் டிக்ஷனரியின் அடிப்படை உறுதுணை
சென்னை லெக்சிகாந்தான். உலக அலவில் தமிழ் பற்றிய ஆய்வுகளில் செ.லெ. பேர்
அடிபடாமல் போகாது.

“தமிழ் பேச்சுக் குழுவால் பயன்படுத்தப்பட்ட பட்டியல் மட்டுமே“ என்பது
இன்னும் புதிராக பேசுகிறீர்கள்.


லெக்சிகானை விட மிகச்சிறந்த அகராதி வரும்வரை லெக்சிகாந்தான் தமிழ்
சொற்களில் அதாரிடி - உங்களுக்கு அந்த உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும்.


வகொவி

N D Logasundaram

unread,
Dec 8, 2011, 4:50:07 AM12/8/11
to mint...@googlegroups.com
திரு  N கணேசன்
 கன்னிநாடு பற்றி
என் இடுகையையிலேயே முழுதும் உள்ளது
பக்கம் மிகப்  பெரிதாகி விட்டபடியால் மடல் பக்கம் முழுதும் கட்டாமல்
வேண்டுமானால் தொடர சொடுக்கினால் காட்டும்படி உள்ளது  
 
சேக்கிழார் பெரியபுராணத் திலிருந்து  8 வரிகள் மற்றும் விளக்கம் காண்க
 
கன்னித் தமிழும் அதே அழிவில்லாது நிற்பது என்னும் பொருளில் உள்ளதையும் காட்டியுள்ளேன்
 
 
==============
 
ஒரே ஒரு பகுதி மட்டும் பெரிய   புராணம் ழான் அவர்கள் குறிப்பிட்டதால்
கன்னி நாடு
ஈங்கு கன்னிநாடு பாண்டிய நாட்டைதான் தெளிவாகக் குறிக்கின்றது
இதனில் கன்னி மீண்டும் அழிவின்மை என்னும் பொருளிலேயே
வருகின்றது   எனலாம்.
 
என்கருத்து முதல் சங்கம் இடைச்சங்கம் என இரு கால கட்டத்திலும்
இருந்து பிறகு கடைச் சங்க காலத்திலும் பிழைத்து  அழிவில்லாமல்
இருப்பது என்னும் பொருளில். ஏனைய கட்டழகு இளமை கன்னிஆறு
ஓடுவது கன்னிதுறை உடையது  போன்ற பண்புகள்  பொருந்தா.
  
படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் 12.1755
நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்  12.2503
கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் 12.2511
கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட 12.2549
கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை 12.2643
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம் 12.2760
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான 12.3828
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் 12.4189
                   
அன்புடன்
நூ த லோ சு
மயிலை

 
 
 
2011/12/8 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 8, 2011, 6:50:16 AM12/8/11
to மின்தமிழ்

On Dec 8, 3:50 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> திரு  N கணேசன்
>  கன்னிநாடு பற்றி
>

கன்னி சொற்கள் பற்றி நான் தொகுத்தது இங்கே:
http://groups.google.com/group/mintamil/msg/a48915e885789485
பார்த்தீர்களா? என அறிய அவா.
அவ்விழையில், கன்னிநாடு என்பது யாரால் என்றும் விளக்கியுள்ளேன்.

வடுகப்பிள்ளை என்பது மாணிக்கவாசகர் என்று முடிவு செய்துவிட்டீர்களா?
கிரந்தம் தேவநாகரி பிளாக்கில் தான் இருக்க வேண்டும் என்று
அண்மையில் யுனிகோட் குழுவில் எழுதிக்கொண்டிருந்தீர்கள்.
தேவ் சார் உடன்படுகிறாரா? என்று கேட்கணும்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 8, 2011, 7:25:39 AM12/8/11
to மின்தமிழ்

On Dec 8, 3:50 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:

> ஒரே ஒரு பகுதி மட்டும் பெரிய புராணம் ழான் அவர்கள்

> குறிப்பிட்டதால் கன்னி நாடு ஈங்கு *கன்னிநாடு பாண்டிய
> **நாட்டைதான்* தெளிவாகக் குறிக்கின்றது


> இதனில் கன்னி மீண்டும் அழிவின்மை என்னும்
>பொருளிலேயே வருகின்றது எனலாம்.

Not really, when we look at Tamils' history or the genesis of
Indian religion in Indus valley. Kanni worship has a hoary
tradition in India and in Pandya country. All the pAvai poems
- whether it's Jaina, Vaishnava, Shaiva, ... - they all worship
this Kanni only. See Bhagavatha puranam.

N. Ganesan

N. Ganesan

unread,
Dec 8, 2011, 7:33:47 AM12/8/11
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com
On Dec 7, 7:26 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> கன்னி என்ற சொல் தமிழிலும் சமஸ்கிரிதத்திலும் (ஏன் அண்ட சராசரத்திலும்)
> இருப்பதாக நிறுவியாயிற்று.  இப்போது எழுப்பப்படும் கேள்வி கன்னி என்பது
> தமிழ்ச் சொல்லா அல்லது சமஸ்கிரிதத்தில் இருந்து இரவல் பெற்றதா என்பதே.
> இந்த இரு மொழிகளில் கன்னி என்பதன் வேர்ச் சொல் சமஸ்கிரிதத்தில் மட்டும்
> இருந்து தமிழில் இல்லாமல் கன்னி என்ற சொல் பயன்பாட்டில் வழக்கில் இருந்தது
> என்று நிறுவினால் மட்டுமே கன்னி ஒரு தமிழ்ச் சொல் அல்ல என்று நிலை நாட்ட
> முடியும்
> அதன்பின் சமஸ்கிரிதத்தில் வேர்ச்சொல் இல்லாமல் கன்னி என்ற சொல் வழக்கில்
> இருந்தால் அது தமிழில் இருந்து இரவல் பெற்றது என்ற பொருள்
> இரண்டு மொழிகளிலும் வேர்ச் சொல் இருந்தால் அது இரண்டு மொழிகளிலும் இரவல்
> பெறாமல் தனின் தனியே உருவானதாகக் கொள்ளலாம்
> இதற்கான முடிவைச் சென்னைப் பல்கலக்கழகச் சொல்லகரமுதலியைக்கொண்டு நிறுவ
> முயலுவது சரியல்ல.  அது தமிழ் பேச்சுக் குழுவால் பயன்படுத்தப்பட்ட பட்டியல்
> மட்டுமே.  வேர்ச் சொல் ஆராய்ச்சிக்குப் பயன்படாது
> சமஸ்கிரிதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும்ம் புலமை வாய்ந்தவர்கள் ஆய்ந்து
> முடிவு சொல்லட்டும்
> நாகராசன்
>

இன்னும் தமிழ் அறிஞர்கள் இச்சொல்லைப் பார்க்கணும்.

வினோத் ராஜன் கொடுத்த ஹிந்தி வலைவரியின் செய்தி அரதப் பழசு.
Uhlenbeck டிக்ஷனரியில் 1899-ல் எழுதிய செய்தி. அதை மெய்ர்காப்ர் ஏற்று
எழுதினார். மறுத்து இந்தோ-இரானியன் வார்த்தை. அதற்கு மேல்
வேறெங்கும் இல்லாச் சொல் எனப் பேராசிரியர் பர்ரோ 1983-லிலேயே
கட்டுரை எழுதிவிட்டார்.

மாயா, தந்து போன்ற சம்ஸ்க்ருத-பாரசீக வார்த்தைகளுடன் சேர்த்த
வேண்டிய சொல் கன்யா என்பது எனக் கருதுகிறேன். இது ஒரு
ஸ்பெஷல் ஸெட். கன்- “little, small" இப்பொருள்கள்தான்
இந்தோ-இரானியனில். அது ஏன்? தமிழோடு இருந்த தொடர்பா?
என விளங்கவில்லை.

மாயை (மயங்கு), தந்து (தனது), கன் (<கல்-) - தமிழ்.
பாரசீகத்திலும், அதனால் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது புதிர்தான்.
Early Persian interaction with India (i.e., Indus)
some thing like crocodile word in Baloch of Iran
a borrowal from Sindh??
முதலில் இந்த ஸெட்டில் அடங்கிய வார்த்தைகள் என்ன?
எனத் தொகுக்கணும். முக்கியமான ஒன்று: கன்னி:கந்யா
என அடியேன் எண்ணுகிறேன்.

கன்னி தமிழில் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பெற்ற சொல்
அல்ல என்பது தெளிவு. கல்- ‘ஸ்மால், லிட்ல்’ தமிழின்
வேர். உதாரணம்: சிறு தாழை = கல்தாழை (கற்றாழை)
- சமணர் தொகுத்த சூடாமணி நிகண்டு. அந்தக்
கல்(=சிறு)தாழைக்கும் கன்னி (< கல்-) எனப் பெயர்.
போர்மகள் கொற்றி கன்னி = சிறுமி, மகள்.
அச் சின்னஞ் சிறுபெண்ணை, கன்னியை 4200 வருஷம்
முந்தைய இந்தியக் கலையில் காணலாம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

போர்மறவர் ஈட்டியால் சண்டையிடும் போது (இரட்டைக்
கொண்டை மறவர் எனக் காட்டும். மெஸோபோடாமிய
கலையில் இது உண்டு) இடையில் நிற்கிறாள் சின்னஞ்சிறு
சிறுமியாய் கொற்றவை/துர்க்கை.
http://4.bp.blogspot.com/_TqVEWBx7H0U/SZWJUkj6WvI/AAAAAAAAAUo/qkOadGTWhak/s1600-h/Indus2.gif

எனக்கு யுட்யூபில் சீர்காழியார் பாடல் ‘சின்னஞ்சிறு பெண்போலே’
பெற்றுத்தாருங்கள். தில்லைக்காளி பற்றி அவர் சகலை
உளுந்தூர்ப்பேட்டையார் இயற்றியது என நினைக்கிறேன்.

அவளோடு தொடர்புடைய சத்தகன்னியரையும்
தங்க வண்ணத்தில் கொடுத்துள்ள 4000+ யாண்டு இந்திய
கலையுன்னதத்தில் கண்டருளுக.
கன்னிமார் எழுவர் - கீழ் அணியில்:
http://3.bp.blogspot.com/_TqVEWBx7H0U/R49YuA3ByyI/AAAAAAAAACU/eZnNDQdDZdM/s1600-h/seal.jpg

தென்னிந்தியாவிலே அவளைக் குமரி முனையிலும்,
மதுரையிலும் காணலாகும். அவள் நாடு கன்னிநாடு
என்று தமிழ் இலக்கியமெங்கும் படிக்க முடியும்.

சிலப்பதிகாரத்தில் காவிரி கங்கையுடனும், கன்னியாற்றுடனும்
ஒப்பிடப்படுகிறாள். கன்னியாறு = கன்னிநாட்டு வையை
எனக் கருதலாம்.

மேலும்,
http://groups.google.com/group/mintamil/msg/a48915e885789485

நா. கணேசன்

பன்றி, பஃறி - மூலவேர் பல்- ‘தந்தம்’.
அதுபோல் கன்னி, கன்று(கன்னுக்குட்டி) - இவையெல்லாம் < கல்-/கரு.
சின்னஞ்சிறு கொப்புளம் கன்றுவதை/கன்னுவதை/கந்துவதை (= புடைப்பதை)
பார்க்கிறோம்.

கல்தாழை (கற்றாழை) = சிறுதாழை.

கன்னிமதில் = கல்களால் செய்த வலிமை வாய்ந்த மதில். இதில் கன்னி (<கல்- )
= ஸ்டோன்.

N D Logasundaram

unread,
Dec 8, 2011, 3:00:16 PM12/8/11
to mint...@googlegroups.com


2011/12/8 விஜயராகவன் <vij...@gmail.com> wrote
 ஐயா நூதலோசு

திருவாட்டி இராஜம் உங்கள் கேள்விகளை பார்த்தால், பதில் சொல்லலாம். அது
நிற்க, இது பொது அரங்கானதால் உங்கள் கருத்துகளை அலசுகிறென்
>On Dec 7, 8:49 pm, N D Logasundaram <
selvindl...@gmail.com> wrote:

=========================================
”வடமொழினுக்காக வாதிடுபவர்கள்..”  என்ற சொல்லாடல்கள் சிரிப்பைதான்
வரவழிக்கின்றது. எந்த மொழிக்கும் அதற்காக “வாதிடுபவர்கள்”  தேவையில்லை.
நீங்கள் உலகை ”வடமொழினுக்காக வாதிடுபவர்கள்..”  “தமிழுக்காக
வாதிடுபவர்கள்..” என பிரிப்பதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை
.
 
திருவாளர் வகொவி அவர்களே
  உங்களைப்போன்றோரைதான் வடமொழிக்காக வாதிடுபவர்கள் என்றேன்
  கன்னி எனும் சொல்லை வடமொழியிலி ருந்து வந்ததா எனக் யாராவது கேட்டார்களா?
     ஏன் வடமொழிச்சொல் பற்றி மடலில் இணைக்க நினைகின்றீர்கள் ?? அதைத் தான்
     வடமொழினுக்காக வாதிடுபவர்கள் என்றேன் அய்யா
 
     कन्य: (கந்யஃ)  எனும் சொல் பற்றி பேசுபவர்கள் அதிலிருந்து வந்தது இதிலிருந்து
     திரிந்தது  என வெறும் மடல் சொற்களாக வைத்துவிடாமல் எதாவது ஒரு அல்லது பல  
     நூலில் நூற்களில் இப்படி உள்ளது இப் பொருள்களில் உள்ளன  இந்த நுல்கள் இந்த
     காலத்தைச்   சேர்ந்தவை   மற்றும் அச்சொல் பார்த்துதான் இவ்வகையில் வந்துள்ளது
     என விளக்கவேண்டுமே அன்றி வகொவி சொல்கிறார் என்றால் போதுமா அய்யா ??
     சான்று களைப்  பற்றி தூரதேநின்று காட்டுதல் போதாது கண்முன் வைக்கவேண்டும்
     அல்லவா ??
பல சொற்கள் பிராகிருதம் வழியாக தமிழுக்கு வந்துள்ளன. சமஸ்கிருத ந்யா ,
ஶ்யா போன்ற கூட்டொலிகள் பிராகிருத / தமிழில் ன்னி , ச்சி என மாறுகிரன.
இது ஒரு சிறிய சாம்பிள்தான். இப்படி பல இருக்கிறன.  இதை மொழியியலாளர்
regular sound change என்பர். சொற்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு
மொழிக்கு போகும் போது regular  மாற்றங்களுடன் செல்கிறன, அதனால்
 
இவ்வரியை ப் பாருங்கள் கூறவந்தது கன்யா பற்றி ஆனால்
இது ஒரு சிறிய சாம்பிள்தான். இப்படி பல இருக்கிறன என வேறு
பொதுவான கருத்தினைக்  காட்டினால்  எவ்கையில் தர்கமாகும்?
 
சம்ஸ்கிருதத்தில்  இரு நகரங் கள் இல்லை என்பது இவ்விடத்தில் சரியில்லை.
இது என்ன புதுக் கருத்து வகொவி அவர்களே
ஏதோ மனதிற்கு வந்ததை எழுதிவிடிவீர்களோ
இவ்விடத்தில் சரி இல்லை என்றால் எப்படி?
எவ்விடத்தில் சரியாகும் அய்யா ??
சங்க காலத்திலிருந்து   அசோகரின்  கல்வெட்டிலிருந்து இன்றுவரை
வடமொழியில்  ஒரு நகரம் தன் உண்டு னகரம் கிடையாது
நீங்கள் வடமொழி படிக்கும் போது இருந்தது இப்போதுதான் இல்லை என்கிறீர்களா ??
அல்லது அப்போதுதான் இல்லை இப்போதுதான் உண்டு என்கிறீர்களா ??
இருந்தால் அந் ந கரத்தை எப்படி எழுதுவீர்கள் ?? வரி வடிவம் என்ன ?
தமிழில் மாற்றொலி யாக ख  ग  (etc) ஒலிபபதைப்போல் ஒலிநிலையில்  உண்டு என்கிறீர்களா ?
 
(தற்போது தமிழில் இரு நகரங் கள் இல்லை என்பது வேறு விசயம்).
அது என்ன வேறு விஷயம்
இது இ து இதைதான் குசும்பு என்பார்கள் பிராமணர்கள் மிக அதிகமாக  வாழும்
பகுதியாகிய எங்கள் மயிலையில் சீண்டிவிட்டு என்ன செய்கிறான் பார்ப்போமே
என்னும் ஒருவிதக் கள்ளத்தனம் இது .
எதையாவது எழுதி விட்டல் அதைப்பற்றி எதிராளி மாய்ந்து மாய்ந்து  பதில்
எழுதிக்கொண்டு நிற்கட்டுமே  பிறகு எதாவது வந்தால் அதற்கும் மீண்டும் மீண்டும்
திசை திருப்பிக் கொண்டு   செல்வோமே எனும் எண்ணம் வகொவி  எனக்கு வயது
71 மக்கு வயது என்ன வயதாகிறது   எனத்தெரியாது 71தந்தை வயது
கூட ஆகலாம் அக்ரகாரத்துக்  கன்றுக் குட்டிக் கதை மிகநன்றாக அறிந்தவன்
அக்கிரகாரத்துக் கழுதை அல்ல அதை  பெரியவர் ஒருவர் எழுதி படமாகக்
கூட எடுத் தார்கள்
 
இம்மாத்திரி  விளையாட்டுப் பிள்ளைபோல்  எதையோ எழுதி திரு வாட்டி ராஜம்
அம்மையாரை வெளி ஏற்றி னீர்கள்   தமிழ் பற்றி மடலாடலில் பலரும் தத்தம் கருத்தை
எழுதி வைப்பதி எப்படியாவது தடுத்துவிடும் முயற்சியில் இருக்கிறீர்கள்    எனத் தோன்றுகிறது
 
நாகராஜன் அவர்களை ஒர்குழுவாக சேர்ந்து விளையடிநீர்கள் சேஷாத்ரி என்பவரியும்
இதே சூத்திரத்தை பயன் படுதிநீர் கணேசன் அவர்களையும் விடவில்லை

உங்கள் கருத்தான கன்னி சமஸ்கிருத மூலம் என சொல்வது DNA உந்துதலால்
ஏற்படுவது இன்னும் வேடிக்கையாக உள்ளது. இந்த புரட்சிகரமான கருத்தை எந்த
விஞ்ஞானியும் வைத்ததில்லை, நீங்கள் முதல் முதலாக DNA க்கும்,
“மொழிக்காக”  வாதிடுவதையும் ஒரே கோட்டில் பார்ப்பது பெரும்
விஞ்ஞான புரட்சி.  நிச்சயம் நோபல் பரிசு தகுதியுள்ள கருத்து =. வகொவி
குழந்தைகளைப் போல் வேடிக்கை பார்க்காமல் DNA  என்றால் என்ன எனத்
தெரிந்துகொண்டு பிறகு பதில் அளியுங்களேன்  பிறகுதான் பரிசு பற்றி பேச தகுதி ஏற்படும்.
 
நூ  த லோ சு
மயிலை

விஜயராகவன்

unread,
Dec 8, 2011, 4:05:37 PM12/8/11
to மின்தமிழ்
On Dec 8, 9:00 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:

>
> > திருவாளர் வகொவி அவர்களே
>
>   உங்களைப்போன்றோரைதான் வடமொழிக்காக வாதிடுபவர்கள் என்றேன்

நூதலோசு ஐயா

நான் ஒரு மொழிக்கும் வாதாடவில்லை; மொழிக்கு வாதாடுவது என்பது என்னைப்
பொருத்த வரை ஒரு பொருளும் இல்லாதது.

இங்கு நாம் ஒரு சில சொற்களை அலசுகிறோமே தவிர “மொழிக்காக” இல்லை. எந்த
மொழிக்கும் யாரும் வாதாட தேவையில்லை.

நான் தமிழில் எழுதுவதால் (நான் எழுதுவது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்)
நான் தமிழை “ஆதரிக்கிறேன்” என கூருவதில் பொருள் உண்டு.


ஒரு மொழியை “ஆதரிக்கும்” ஒரே வழி அதை பயன்படுத்துவது.

>
> >   கன்னி எனும் சொல்லை வடமொழியிலி ருந்து வந்ததா எனக் யாராவது கேட்டார்களா?
>
>      ஏன் வடமொழிச்சொல் பற்றி மடலில் இணைக்க நினைகின்றீர்கள் ?? அதைத் தான்
>      வடமொழினுக்காக வாதிடுபவர்கள் என்றேன் அய்யா

அதைத்தான் சொல்கிறீர்களா??? ஏதோன்னு நினைச்சேன். உங்கள் சிந்தனை கோடு
புரியுது.

கன்னி என்பதன் பொருளை virgin , unmarried girl என தமிழர்கள் பொதுவாக
புரிந்து கொண்டுள்ளனர் என்பது நிதர்சனம். அது சமச்கிருதத்திலேயும் அதே
பொருளில் வருது. அதனால் அப்படி இணைப்பதில் தவறில்லை.

>
>      कन्य: (கந்யஃ)  எனும் சொல் பற்றி
> பேசுபவர்கள் அதிலிருந்து வந்தது இதிலிருந்து
>      திரிந்தது  என வெறும் மடல் சொற்களாக வைத்துவிடாமல் எதாவது ஒரு அல்லது பல
>      நூலில் நூற்களில் இப்படி உள்ளது இப் பொருள்களில் உள்ளன  இந்த நுல்கள் இந்த
>      காலத்தைச்   சேர்ந்தவை   மற்றும் அச்சொல் பார்த்துதான் இவ்வகையில்
> வந்துள்ளது
>      என விளக்கவேண்டுமே அன்றி வகொவி சொல்கிறார் என்றால் போதுமா அய்யா ??
>      சான்று களைப்  பற்றி தூரதேநின்று காட்டுதல் போதாது கண்முன் வைக்கவேண்டும்
>      அல்லவா ??


ஒரு முக்கிய சான்று அகராதி - அதைத்தான் முன்வைத்தேன் . அகராதியாளர்கள் -
மெட்ராஸ் லெக்சிகான் - ஏற்கனெவே நீங்கள் சொல்லும் பணியை செய்து
விட்டனர். நான் ஒரிஜினல் தமிழ் ஆய்வாளன் இல்லை , அகராதி அல்லது மற்ற
ஆய்வாளர்களை நம்பிக்கொண்டு இருக்கிறேன். அதே சமயம் நல்ல ஆய்வுகளையும்,
போலி ஆய்வுகளையும் என்னால் பிரிக்க முடியும்.

> (தற்போது தமிழில் இரு நகரங் கள் இல்லை என்பது வேறு விசயம்).
> அது என்ன வேறு விஷயம்
> இது இ து இதைதான் குசும்பு என்பார்கள் பிராமணர்கள் மிக அதிகமாக  வாழும்
> பகுதியாகிய எங்கள் மயிலையில் சீண்டிவிட்டு என்ன செய்கிறான் பார்ப்போமே
> என்னும் ஒருவிதக் கள்ளத்தனம் இது .


இதில் என்ன கள்ளத்தனம் இருக்கு????? நீங்கள் சம்ஸ்கிருதத்தில் தான் ந / ன
மாறுதல் இன்மை போலவும், தமிழில் வேற்றுமை இருக்கின்ரதாகவும்
சொல்கிறீர்கள். ”தமிழ்” என்பது ஒரு லேபல் , அது தொல்தமிழ், தற்கால
எழுத்துத்தமிழ், பேச்சுத்தமிழ் போன்ற பல தனி மொழிகளை போர்த்தி ஒன்றாக
மாயம் காட்டுகிரது. தற்கால பேச்சுத்தமிழில் ந / ன வேற்றுமை இல்லை; இதை
பல ஆய்வாளர்கள் சொல்லிவிட்டார்கள், இங்கேயே பல இதழ்களில் பார்த்துள்ளோம்.
உண்மையை சொல்வது கள்ளத்தனத்தின் நேர் எதிர்.

>
> இம்மாத்திரி  விளையாட்டுப் பிள்ளைபோல்  எதையோ எழுதி திரு வாட்டி ராஜம்
> அம்மையாரை வெளி ஏற்றி னீர்கள்


இதில் ஒரு உண்மையும் இல்லை. ராஜம் தான் ஆரம்பித்த இதழ்/ கேள்விகளுக்கு
தொடர்பாக சீரியஸ் பதில் வராமல் இருந்ததால் எழுத நிறுத்தி விட்டார்.
நான்தான் அவர் கேள்விகளை சீரியசாக எடுத்து பதில் சொல்ல பார்த்தேன்.

தமிழ் பற்றி மடலாடலில் பலரும் தத்தம் கருத்தை
> எழுதி வைப்பதி எப்படியாவது தடுத்துவிடும் முயற்சியில் இருக்கிறீர்கள்    எனத்
> தோன்றுகிறது

நான் எப்படி எவர் எழுதுவதையும் தடுக்கமுடியும், நான் இந்தக் குழு
மாடரேடர் கூட இல்லை.


இனிமேல் தடுத்த நிறுத்த வேண்டும் என்றால் Virtual Auto வைத்தான்
சிந்திக்க வேண்டும்.


> நாகராஜன் அவர்களை ஒர்குழுவாக சேர்ந்து விளையடிநீர்கள் சேஷாத்ரி என்பவரியும்
> இதே சூத்திரத்தை பயன் படுதிநீர் கணேசன் அவர்களையும் விடவில்லை


நாகராஜன் யார் சூத்திரத்திற்க்கும் மசிபவர் அல்ல. சேஷாத்ரி யார் என
எனக்கு தெரியாது. கணேசன் - குழுவையே சுண்டு விரலில் ஆட்டுகிறார் , யாரும்
கணேசரை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.


>
> உங்கள் கருத்தான கன்னி சமஸ்கிருத மூலம் என சொல்வது DNA உந்துதலால்
> ஏற்படுவது இன்னும் வேடிக்கையாக உள்ளது. இந்த புரட்சிகரமான கருத்தை எந்த
> விஞ்ஞானியும் வைத்ததில்லை, நீங்கள் முதல் முதலாக DNA க்கும்,
> “மொழிக்காக”  வாதிடுவதையும் ஒரே கோட்டில் பார்ப்பது பெரும்
> விஞ்ஞான புரட்சி.  நிச்சயம் நோபல் பரிசு தகுதியுள்ள கருத்து =. வகொவி
> குழந்தைகளைப் போல் வேடிக்கை பார்க்காமல் DNA  என்றால் என்ன எனத்
> தெரிந்துகொண்டு பிறகு பதில் அளியுங்களேன்  பிறகுதான் பரிசு பற்றி பேச தகுதி
> ஏற்படும்.
>
> நூ  த லோ சு
> மயிலை


உங்கள் அறிவுரைக்கு நன்றி

வகொவி

விஜயராகவன்

unread,
Dec 8, 2011, 5:40:57 PM12/8/11
to மின்தமிழ்
சமஸ்கிருதத்தை ஒரு பக்கம் வையுங்கள். க்ரியாவின் தற்கால அகராதிப் படி


கன்னி பெ. 1: திருமணமாகாத இளம் பெண்; unmarried young woman; maiden. 2:
கன்னிகழியாத பெண்; virgin. 3: திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்பவள்;
spinster. 4: (சோதி.) கன்னியின் உருவத்தைக் குறியீடாக உடைய ஆறாவது ராசி;
sixth constellation of the zodiac having the figure of a maiden as its
sign; Virgo.

கன்னிகழி வி. (-கழிய, -கழிந்து) (ஒரு பெண் கணவனுடன் கூடித் தன்) கன்னித்
தன்மை நீங்குதல்; consummate (a marriage, said of women.).

கன்னிகாதானம் பெ. பெண்ணை ஒருவருக்கு (தாரைவார்த்துக் கொடுத்து) திருமணம்
செய்வித்தல்; giving one's daughter in marriage.

கன்னிகாமடம் பெ. (அ.வ.) கிறித்தவப் பெண் துறவிகள் வசிப்பதற்கான இடம்;
nunnery; convent for nuns.

கன்னிகாஸ்திரீ பெ. (அ.வ.) கிறித்தவப் பெண் துறவி; nun.

கன்னிகை பெ. (அ.வ.) காண்க: கன்னி, 1.

கன்னித் தன்மை பெ. (கன்னியின்) உடலுறவு கொள்ளாத தன்மை; virginity.

கன்னிமாடம் பெ. (அ.வ.) அரச குலத்தைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் வசிக்கும்
மாளிகையின் பகுதி; part of the palace where the royal maidens live.

கன்னி முயற்சி பெ. (ஒரு துறையில் ஒருவருடைய) முதல் முயற்சி; maiden
attempt. இந்தக் கட்டுரை என் கன்னி முயற்சி.

கன்னிமை பெ. (அ.வ.) கன்னித் தன்மை; virginity; maidenhood.

மேடைகளிலோ, தற்கால எழுதிலோ `கன்னித்தமிழ்’` என சொல்லும்போது virgin
Tamil அதாவது மத்த மொழிகளால் தாக்கம் செய்யப்படாத தமிழ், என்ற
பொருளில்தான் சொல்கிறனர்.


இதைத்தான் திருவாட்டி ராஜம் விவாதிக்கப்பார்த்தார்கள்.

வகொவி

naa.g...@gmail.com

unread,
Dec 8, 2011, 6:28:21 PM12/8/11
to சந்தவசந்தம், mintamil

On Dec 8, 6:55 am, devoo <rde...@gmail.com> wrote:
> கன்னித் தமிழே வருக !
> உன் வருகையை முன்னரே எதிர்பார்த்தேன்.
>
> சீர்காழியாரின் பாடல் -
http://www.youtube.com/watch?v=bEH4G1A8P8I
>
> கன்னி எனும் சொல்லின் பரவலான ஆளுமை
> வியக்க வைக்கிறது
>
> தேவ்
>

நனிநன்றி ஐயா! பாவித்துக் கொள்ள அவா.

கீதா அம்மா சொல்வதுபோல் உங்கள் மடல்கள்
பல செய்திகளைத் தருவன. நன்றி.
இந்த நூற்றாண்டு, தமிழறிஞர்கள் குறிப்பிட்ட
வீரமாமுனிகள் எத்தனை காவியம்
தரமுடியும் என்று காட்டவல்லது.

கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
தெரிகிறதே. தனித்தமிழ் நாட்டாரிடம் தெரிந்துகொள்வோம்.

வேண்டும் தமிழ்க்கன்னி அருள்!
நா. கணேசன்

DEV RAJ

unread,
Dec 9, 2011, 12:21:23 AM12/9/11
to மின்தமிழ்
On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

>>> கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல


தெரிகிறதே.<<<

கணேசர் உண்மையில் கவலைப்படுகிறாரா ?
அல்லது கவன ஈர்ப்புச் செய்கிறாரா ?

தனித்தமிழ் குறைந்து விடுமோ என்று இப்போது கவலைப்படும் கணேசர்
ஒரு முறை க்ரந்தம் பரவலாகி எல்லா சாதியினரும் வள்ளுவம் காட்டும் வழியில்
அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் அழுத்தமாகச் சொன்னவர்.
அப்போது அவர் தமிழ் அர்ச்சனை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அன்றாடம் ஏதாவது டாபிக் கிடைத்தால் போதும் எனும் நோக்கமாகவும்
இருக்கலாம். தமிழ் இணையம் எனும் ஸர்வகலாசாலையின்
பீடாதிபதியான அவரை யார் கேள்வி கேட்க முடியும் ?


தேவ்

On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

N. Ganesan

unread,
Dec 9, 2011, 8:38:07 AM12/9/11
to மின்தமிழ்
On Dec 8, 11:21 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
> wrote:
>
> >>> கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
>
> தெரிகிறதே.<<<
>
> கணேசர் உண்மையில் கவலைப்படுகிறாரா ?
> அல்லது கவன ஈர்ப்புச் செய்கிறாரா ?
>
> தனித்தமிழ் குறைந்து விடுமோ என்று இப்போது கவலைப்படும் கணேசர்
> ஒரு முறை க்ரந்தம் பரவலாகி எல்லா சாதியினரும் வள்ளுவம் காட்டும் வழியில்
> அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும்  அழுத்தமாகச் சொன்னவர்.
> அப்போது அவர் தமிழ் அர்ச்சனை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
>
> அன்றாடம் ஏதாவது டாபிக் கிடைத்தால் போதும் எனும் நோக்கமாகவும்
> இருக்கலாம். தமிழ் இணையம் எனும் ஸர்வகலாசாலையின்
> பீடாதிபதியான அவரை யார் கேள்வி கேட்க முடியும் ?
>
> தேவ்
>

ஸ்ரீ தேவ் ஸார்,

இணைய முதலி என்றீர்கள். நான் முதலியா என்று எல்லோருக்கும் தெரியும் :)

கன்னித்தமிழ் அர்ச்சனை இணையத்தில் எப்படி
இருக்குமோ எதிர்காலத்தில்? பொறுத்திருந்து
பார்க்க வேண்டிய சமாச்சாரம்.

கன்னித்தமிழ் அர்ச்சனைக்கு தேவைப்படும்
ஓர் எழுத்தை தமிழுக்கு அளிக்க உதவியது
கடையேன் பெற்ற பேறு. தமிழுக்கு கிடைத்த
ஒரு கன்னியெழுத்து அஃது.
http://nganesan.blogspot.com/2008/01/sha.html
http://nganesan.blogspot.com/2009/05/tamil-om-windows7.html

தமிழ் (இன்றும் யாழ்ப்பாணத்தார் தமிழில் உள்ளது) ஓம்
எவ்வாறு வைதிகம், சமணம், பௌத்தம், சீக்கியம்
என்று எல்லா சமயங்களிலும் சென்றது என விளக்கும்
ஸம்ஸ்க்ருத அறிஞர் கட்டுரை. இதை எழுதியபோது
எத்தனை இன்னல்கள் வெள்ளை சம்ஸ்க்ருத அறிஞர்
கொடுத்தனர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
தமிழ்/த்ராவிட வார்த்தை ஒன்று சம்ஸ்க்ருதம் பெற்றது
என்று நிறுவுவது அத்தனை சுலபம் அன்று எனக்
கற்றுக்கொண்டேன்.
http://www.scribd.com/doc/15050686/Parpola-Om

கந்- என்ற வேருக்கு small, little என்ற பொருள்தான்.
அது இந்தியா-பாரசீகம் தவிர வேறெங்குமில்லை.
எனவே தமிழோடு தொடர்புடையது என்று சொல்ல
முடியும் அறிஞரவையில் என எண்ணுகிறேன்.
இதுவரை யாரும் இக்கருத்தை முன்வைத்ததில்லை,
ஏனெனில் வெள்ளை சம்ஸ்க்ருதவாதிகள் தமிழறியார்.

கன்னித்தமிழ் அர்ச்சனை உதாரணம்,
உங்களைப் போல எனக்கு சம்ஸ்க்ருதம் விளக்கம்
சொல்லும் மதுரை ராஜரத்னபட்டர் Alzhemer's வந்து
போய்விட்டார். எனக்கு பெரிய இழப்பு. அவரது அண்ணன்
தங்கம் பட்டர்தான் எனக்கு தெரிந்த மூத்தவர்.
இவர்கள் வீடுகளில் இருந்து சைவாகமங்கள்
பாண்டிச்சேரி நிறுவனம் சென்றன. சிவாச்சார்யர்களே
ராமேஷ்வரத்தில் இருந்து தாய்லாந்துபோய்
திருவெம்பாவை, திருப்பாவை க்ரந்தத்தில் எழுதினோர்.
தங்கம் பட்டர் இப்போது மறவன்புலவு ஐயா மேற்கொண்ட
முயற்சி பற்றிக் கேட்டு வாழ்த்து தெரிவித்தார்.
த்ராவிட எழுத்துக்கள் எ, ஒ, ற, ழ,ன எழுதலாமா ஐயா
என்றபோது ’அத்னால் என்ன? நிச்சயமாகச் செய்யலாம்’
என்றார். எதிர்காலத்தில் ஆர்ய-த்ராவிட பாஷைகளை
தங்கம் பட்டர் போன்றோர் ஆசியால் நல்லபடி செய்ய
முடியும் என்று தோன்றுகிறது. கன்னித்தமிழ் அன்னை
அருள் வேண்டும்!

தமிழ்க்கன்னிக்கு கன்னித்தமிழ் அருச்சனை:
http://nganesan.blogspot.com/2011/04/meenakshi-tamil-archanai.html

ழான் பிள்ளையார்சுழி பற்றிக் கேட்டார். எழுதுங்களேன்.
நா. கணேசன்

> On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>

DEV RAJ

unread,
Dec 9, 2011, 9:46:56 AM12/9/11
to மின்தமிழ்
On Dec 9, 6:38 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> இணைய முதலி என்றீர்கள்.....<


'முதலி' ஓர் அழகிய வைணவ பரிபாஷை.

'உடையவர் ஶ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகள்'
என்றால் அச்செயலில் மூதலித்த அந்த பாக்யவான்கள் என்று பொருள்.
நம் துர்பாக்யம் அன்பர் மோகனரங்கன் 'பரிபாஷை'
தொடரை நிறுத்தும்படி ஆகிவிட்டது.

தமிழ் இணையச் செயல்பாடுகளில் மூதலித்துவரும் தங்களை
அச்சொல்கொண்டு அழைப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.
உங்கள் எழுத்தைப் பலரும் கூர்ந்து படித்துவருவதாக
நீங்களே எழுதியுள்ளீர்கள்.

தமிழ் அர்ச்சனை பற்றி நீங்கள் எழுதியவற்றில் உடன்படுவதோ,
மாறுபடுவதோ ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் அர்ச்சனையில் பல
நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆலய வழிபாட்டில்
ஈடுபடும் பக்தர்களின் விருப்பமே நிறைவேறும்
என்பதிலும் ஐயமில்லை; தனித்தமிழ் என்று
கொடி உயர்த்துவதில் பலனில்லை.

ஈரோடு 'ஆர்த்ர கபாலீச்வரர்' ஆலயத்தில் வழிபாடு முழுவதும்
தமிழில். மகிமாலீசுவரர் ஆலய வழிபாட்டை நான் உன்னித்துக்
கவனித்ததில்லை. அதிலும் அப்படியே என நினைக்கிறேன்.
இங்கும் ஈரோடு அன்பர்கள் உள்ளனர்.

சென்னை கபாலீசுவரர் ஆலயத்தில் அர்தஜாம பூஜை
முடிந்ததும் தமிழ் முழக்கம்தான்; அன்பர்கள் மனமொன்றி
ஈடுபடுகின்றனர்.

எதுவும் இயல்பாக நடைபெற்றால்தான் நிலைபெற்று
நிற்கும். புரட்சி என்று தொடங்கினால் புஸ்வாணமாகும்;
மலர்ச்சியாக முகிழ வேண்டும்.

அம்பிகைக்கான அழகிய தமிழ்ப்பெயர்களை நான்
வியந்தே வந்துள்ளேன்; 'அஞ்சொலாள்' அபயாம்பிகை
ஆனதை நான் ஒப்பவில்லை. 'ஆர்க்காடு' ஆற்காடாகி
ஷடரண்யமானதையும் ஒப்பவில்லை, அது வ மொ
என்னும் காரணத்துக்காக. மயிலை லோகசுந்தரம் அவர்கள்
அதில் ஒரு தெளிவைத் தந்தார்.

சாயம் பூசுவதற்கும், பட்டி மன்றத்திற்கும் மட்டுமே தலைவர்கள்
நம்மைப் பழக்கி விட்டனர்; உங்களைப் போன்ற
இணைய முதலிகளாவது வீண் கவன ஈர்ப்புகளில் ஈடுபடாமல்
அப்போக்கை மாற்ற முயல வேண்டும் என்பதே எம் பேரவா.
இதையும் இப்போது புதிதாகச் சொல்லவில்லை.

தவறாக எழுதியிருப்பின் மன்னிக்க


தேவ்

On Dec 9, 6:38 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Dec 8, 11:21 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
> > wrote:
>
> > >>> கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
>
> > தெரிகிறதே.<<<
>
> > கணேசர் உண்மையில் கவலைப்படுகிறாரா ?
> > அல்லது கவன ஈர்ப்புச் செய்கிறாரா ?
>
> > தனித்தமிழ் குறைந்து விடுமோ என்று இப்போது கவலைப்படும் கணேசர்
> > ஒரு முறை க்ரந்தம் பரவலாகி எல்லா சாதியினரும் வள்ளுவம் காட்டும் வழியில்
> > அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும்  அழுத்தமாகச் சொன்னவர்.
> > அப்போது அவர் தமிழ் அர்ச்சனை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
>
> > அன்றாடம் ஏதாவது டாபிக் கிடைத்தால் போதும் எனும் நோக்கமாகவும்
> > இருக்கலாம். தமிழ் இணையம் எனும் ஸர்வகலாசாலையின்
> > பீடாதிபதியான அவரை யார் கேள்வி கேட்க முடியும் ?
>
> > தேவ்
>
> ஸ்ரீ தேவ் ஸார்,
>
> இணைய முதலி என்றீர்கள். நான் முதலியா என்று எல்லோருக்கும் தெரியும் :)
>
> கன்னித்தமிழ் அர்ச்சனை இணையத்தில் எப்படி
> இருக்குமோ எதிர்காலத்தில்? பொறுத்திருந்து
> பார்க்க வேண்டிய சமாச்சாரம்.
>
> கன்னித்தமிழ் அர்ச்சனைக்கு தேவைப்படும்
> ஓர் எழுத்தை தமிழுக்கு அளிக்க உதவியது
> கடையேன் பெற்ற பேறு. தமிழுக்கு கிடைத்த

> ஒரு கன்னியெழுத்து அஃது.http://nganesan.blogspot.com/2008/01/sha.htmlhttp://nganesan.blogspot.com/2009/05/tamil-om-windows7.html


>
> தமிழ் (இன்றும் யாழ்ப்பாணத்தார் தமிழில் உள்ளது) ஓம்
> எவ்வாறு வைதிகம், சமணம், பௌத்தம், சீக்கியம்
> என்று எல்லா சமயங்களிலும் சென்றது என விளக்கும்
> ஸம்ஸ்க்ருத அறிஞர் கட்டுரை. இதை எழுதியபோது
> எத்தனை இன்னல்கள் வெள்ளை சம்ஸ்க்ருத அறிஞர்
> கொடுத்தனர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
> தமிழ்/த்ராவிட வார்த்தை ஒன்று சம்ஸ்க்ருதம் பெற்றது
> என்று நிறுவுவது அத்தனை சுலபம் அன்று எனக்

> கற்றுக்கொண்டேன்.http://www.scribd.com/doc/15050686/Parpola-Om

DEV RAJ

unread,
Dec 9, 2011, 9:55:38 AM12/9/11
to மின்தமிழ்
முதலி, s. The first, முதல்வன்.

வின்ஸ்லோ

> > ஒரு கன்னியெழுத்து அஃது.http://nganesan.blogspot.com/2008/01/sha.htmlhttp://nganesan.blogspot...


>
> > தமிழ் (இன்றும் யாழ்ப்பாணத்தார் தமிழில் உள்ளது) ஓம்
> > எவ்வாறு வைதிகம், சமணம், பௌத்தம், சீக்கியம்
> > என்று எல்லா சமயங்களிலும் சென்றது என விளக்கும்
> > ஸம்ஸ்க்ருத அறிஞர் கட்டுரை. இதை எழுதியபோது
> > எத்தனை இன்னல்கள் வெள்ளை சம்ஸ்க்ருத அறிஞர்
> > கொடுத்தனர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
> > தமிழ்/த்ராவிட வார்த்தை ஒன்று சம்ஸ்க்ருதம் பெற்றது
> > என்று நிறுவுவது அத்தனை சுலபம் அன்று எனக்
> > கற்றுக்கொண்டேன்.http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
>
> > கந்- என்ற வேருக்கு small, little என்ற பொருள்தான்.
> > அது இந்தியா-பாரசீகம் தவிர வேறெங்குமில்லை.
> > எனவே தமிழோடு தொடர்புடையது என்று சொல்ல
> > முடியும் அறிஞரவையில் என எண்ணுகிறேன்.
> > இதுவரை யாரும் இக்கருத்தை முன்வைத்ததில்லை,
> > ஏனெனில் வெள்ளை சம்ஸ்க்ருதவாதிகள் தமிழறியார்.
>
> > கன்னித்தமிழ் அர்ச்சனை உதாரணம்,
> > உங்களைப் போல எனக்கு சம்ஸ்க்ருதம் விளக்கம்
> > சொல்லும் மதுரை ராஜரத்னபட்டர் Alzhemer's வந்து
> > போய்விட்டார். எனக்கு பெரிய இழப்பு. அவரது அண்ணன்
> > தங்கம் பட்டர்தான் எனக்கு தெரிந்த மூத்தவர்.
> > இவர்கள் வீடுகளில் இருந்து சைவாகமங்கள்
> > பாண்டிச்சேரி நிறுவனம் சென்றன. சிவாச்சார்யர்களே
> > ராமேஷ்வரத்தில் இருந்து தாய்லாந்துபோய்
> > திருவெம்பாவை,
>

> ...
>
> read more »

Nagarajan Vadivel

unread,
Dec 9, 2011, 10:39:18 AM12/9/11
to mint...@googlegroups.com
ஐயா கணேசனார்
இணைய முதலி மட்டுமல்ல.  ஓம் குறியீட்டை அறிமுகப்படுத்தி கணேசர் கணினி எழுத்துக்கும் முதலி.
நாகராசன்

2011/12/9 DEV RAJ <rde...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 9, 2011, 11:04:29 AM12/9/11
to மின்தமிழ்

On Dec 9, 9:39 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> ஐயா
> கணேசனார் இணைய முதலி மட்டுமல்ல.  ஓம் குறியீட்டை அறிமுகப்படுத்தி கணேசர் கணினி
> எழுத்துக்கும் முதலி.
> நாகராசன்

தேவ் ஸார்,

என் போன்ற தமிழ் மாணவர்களுக்கு தமிழ் ஐ.டி., யுனிகோட், எப்படி தமிழ்
எழுத்தை கணினியில் எழுதணும் என்பதெல்லாம் இங்கும், இண்பிட்டிலும்
சொல்லித் தருபவர்கள் நாகராஜ் போன்ற பேராசிரியர்கள் ஆவர்.

2011-ல் கன்னித்தமிழ் அர்ச்சனை நன்கு நடைபெற்றதைக் காணும்
பாக்கியம். 2012-ஐ எதிர்நோக்கி வாழ்வோம்.

யாரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினு மேயெங்கள் தாய்! - இந்தப்
பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாளெங்கள் தாய்! - மகாகவி பாரதியார்

வாழி அக் கன்னித்தமிழ்!
நா. கணேசன்

>

> >http://nganesan.blogspot.com/2008/01/sha.htmlhttp://nganesan.blogspot...

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

DEV RAJ

unread,
Dec 9, 2011, 11:25:38 AM12/9/11
to மின்தமிழ்
On Dec 9, 8:39 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> ஐயா கணேசனார்
> இணைய முதலி மட்டுமல்ல. ஓம் குறியீட்டை அறிமுகப்படுத்தி கணேசர் கணினி
> எழுத்துக்கும் முதலி.


ஆம் ஐயா,

கணேசரின் ஆர்வமும், ஆய்வு முனைப்பும் பாராட்டத்தக்கவை.
இலக்கியம் தவிரப் பிற துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
அவர் 'மரபுச் செல்வர்' பட்டம் பெற்றபோதும் அவ்வைபவத்தில்
பங்கேற்று மனநிறைவடைந்தேன்.

எனது எழுத்துப் பிழைகளை அவர் சுட்டிக்காட்டியதை
இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
'கட்டாயம்' எனும் சொல்லின் நுட்பத்தை அவர்
அழகாக எடுத்துக் காட்டினார். அவர்தம்
அருந்தொண்டு தொடர்வதாக.

சில முரண்களை ஒப்புக்கொள்ளாமல் அவர் விடாப்பிடியாகக் குழுமங்களில்
முற்செலுத்துவது மனச் சோர்வைத்தருகிறது. அவரைக் குறித்து எழுதியதில்
பிற அறிஞர்களும் தேவையின்றி மனம் வருந்த நேர்ந்தது.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரையும் 'மூவர் முதலிகள்' அல்லது
'தேவார முதலிகள்' என்பர்


தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages