தமிழ்க் கன்னி

122 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
Dec 5, 2011, 10:27:36 AM12/5/11
to மின்தமிழ், santhav...@googlegroups.com, thami...@googlegroups.com, yavaru...@googlegroups.com
வன்பாக்கம், நாகராஜன், தேவ் போன்றோர்
கன்னி என்னும் சொல் சம்ஸ்க்ருத ’கன்யா’
என்பதில் இருந்து தமிழ் கடன்பெற்றது என்கின்றனர்.

ஆனால், கன்னி என்பது ஒரு அடிப்படையான
தமிழ்வேர் கொண்ட சொல் என்று கருதவும் இடம் இருக்கிறது.
உ-ம்: கன்று/கன்னு. பாவாணர், அருளி, மதிவாணன், ...
என்ன எழுதியுள்ளனர் எனத் தெரியாது. சேசாத்திரி
அவர்கள் பேரா. மதிவாணனைக்
கேட்டுச் சொன்னால் நன்றி உடையேன்.

தமிழ்சொல் ஒன்றும் கன்னி (Cf. கன்னு/கன்று < கல்-/கரு.
பன்றி < பல்- (தந்தம்). அதேபோல், பஃறி < பல்-),
கந்- என்ற ஆரியச்சொல்லும் சேர்ந்துள்ளதா?
கந்- என்னும் ஆரியபாஷை வேருக்கு cognates ஐரோப்பிய,
ஈரான் பாஷைகளில் சொற்கள் உள்ளனவா?
கிடையாதா? தெரிந்தோர் சொல்ல முடியுமா?
கன்று மெலிந்து கன்னட-துளு குடும்பங்களில்
கந்த- என்று ஆண் குழந்தைகளைச் சொல்லிக்
கேட்டுள்ளேன். கன்னிசாமி (ஐயப்ப சாமிகளில்),
கன்னிமாங்காய், ... பயன்பாடும் உள்ளது.
கன்னி விடியல் கணக்கால் ஆம்பல் (ஐங்குறுநூறு)
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய (ஐந்திணை 50)
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர் - பரிபாடல்
கன்னிமை கனிந்த காலத்தார் - பரிபாடல்
கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும் - பரிபாடல்
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் - மணிமேகலை
கன்னியிள வாளைகுதி கொள்ள - தேவாரம்
கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய - தேவாரம்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன - பெரியபுராணம்
கன்னி யிளமேதிக் காற்குளம்பு - நளவெண்பா
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் -
- நாச்சியார் திருமொழி

திருமந்திரம்:
கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி

தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
(கொங்குநாட்டு தெரட்டிச் சீர் இன்றும் உண்டு.
தெருட்டிச்சீர் பற்றி பெரி.சந்திராவுடன் அகத்தியரில்,
இங்கே பழமைபேசி, ... பேசியுள்ளேன். தெருட்டி - அருமையான
பழைய தமிழ்ச் சொல் கொங்கில் இன்னமும் நடைமுறையில்.)

கன்னித்தமிழ் “daughter Tamil"
கன்னிநாடு “daughter (of Pandya) country"
என்று தமிழ் இலக்கியக் கதைகளால் பெயர்
பெற்றது போலும்.

(1) கன்னிநாடு - Pandya country named after Meenakshi

தொல்த்ராவிடருக்கு முக்கியமான பொருளுக்கு
இருசொற்களாம் பெயர் சூட்டும் மரபு உண்டு,
நண்பர் பெரி. சந்திரா அரிய கட்டுரை எழுதி அதை
நிறுவியுள்ளார். ஒரு நல்ல உதாரணம்: கன்னியாகுமரி.

பரிபாடலுக்கு 1000+ ஆண்டுகளுக்கு முன்னமே
பாண்ட்யராஜகுமாரி புராணத்தை தமிழர் கொண்டாடுகின்றனர்.
Even people from Northwest India and Magadha Mandalam has
recorded this fact. See the Hellenistic Greek ambassador to
Maurya emperor's court recording (much analysis is done
by K. Karttunen, Bill Harman, ... have to collect those):

I wrote earlier:
A reference to Pandya's daughter much older than Paripatal:

"Megasthenes, writing c. 300 B.C., refers to the Pāṇḍya country when
speaking of the Indian Heracles:

this Heracles ... had only one daughter. Her name was Pandaea
[Pandaiē], and the country in which she was born, the government of
which Heracles entrusted to her, was called Pandaea after the girl....
Some other Indians tell of Heracles that, after he had traversed every
land and sea, and purged them of all evil monsters, he found in the
sea a new form of womanly ornament... the sea margarita [pearl] as it
is called in the Indian tongue. Heracles was in fact so taken with the
beauty of the ornament that he collected this pearl from every sea and
brought it to India to adorn his daughter ... among the Indians too
the pearl is worth three times its weight in refined gold. (Arrian,
Indica 8,6-13, trans. Brunt 1983: 329-31)"

quoted from
http://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html
(an important paper on Indological view on the megalithic
expansion from north into TN, Lanka. read the meenakshi story,
& the relationship to similar sinhala myths.)

கன்னி என்றால் முதல்பொருள் இங்கே மகள்.
பாண்ட்யராஜகன்யா = மீநாக்ஷி. அவளால்
பாண்டிநாட்டைத் தமிழர்கள் கன்னி நாடு என்பர்.

சிலப்பதிகாரம்:
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.

My question to JLC: what is "kanni" here? One meaning seems to be
kanni = vaiyai, the river of the Pandya country. Compare with the
occurrence of Gangai in the earlier verse. Looks extolling Kaveri
vs. Ganges, Vaikai rivers.

what does Bharati sing in Kuyil paaTTu?
Tamil thaay from Durga concept.
Durga = VindyagirivAsini. was he inspired
by P. SundarampiLLai's ManonmaNiyam
where PS sings Tamil Thaay as an incarnation of Durga
(of course, internalizing the Linguistics dicoveries
of Rev. Caldwell, ...). Vindagiri cuckoo is apt
for Tamil both in varNa and music: Most gods
in old India are black: Krishna, Vishnu, Draupati (called Krishnaa),
Varuna, Siva (painted black - as an aspect of Varuna of
Neythal. I've written more in Makara etymology paper), Manmatha
.....
ஐயர் உரைப்பார்! அடி பேதாய்,இப்பிறவி
தன்னிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக்
கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே.இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும்
நின்னைக் குயிலாக்கி நீ செல்லுந் திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார்.நீயிதனைத் தேர்கிலையோ?’
--- பாரதியார்.

அகத்தியன் பற்றி முதலிலோ ((அ) இரண்டாவதாகவோ)
வரும் இலக்கியம் பௌத்த மணிமேகலை.
அதத்தியன் கன்னி “மகள்” என காவேரி குறிக்கப்படுகிறாள்:
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய - மணிமேகலை.
பௌத்த கண்டவ்யூகம் முதல் நூற்றாண்டிலே சீனத்தில்
மொழிபெயர்ப்பு ஆகிவிட்டது. பொதியில் அவலோகிதன்
சிஷ்யனாக அகத்தியனை ஆக்கியுள்ளனர். இன்று வினோத்
அவலோகிதம் மென்கலன் அளிக்கிறார். தலாய்லாமா
அந்த அவலோகிதன் அவதாரம் - அவர் திபெத் லாசா அரண்மனை
பொதியில் (பொதாலா) எனப்படுகிறது. அவலோகிதன்
சிற்பத்தைப் பார்த்து தமிழ்ச் சைவர்கள் சில நூற்றாண்டு
கழிந்து வடித்தது தக்ஷிணாமூர்த்தி வடிவம். சமணர்களும்
எங்கள் சாமிதான் பொதியிலில் என்று தமிழில் சொல்லி
உளர் (கொங்குவேள் செய்த பெருங்கதை). கட்டுரை
எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

கன்னி என்னும் தமிழ்ச் சொல் கன்று என்பதுடன் தொடர்பு
கொண்டது. மகள் என்ற பொருளில் கன்னிநாடு மீனாட்சியாலும்,
கவேரமுனி புத்ரிக்கு கவேர கன்னி என்பதாலும் தெரிகிறது.

கந்- என்ற வேர் சம்ஸ்க்ருதம், பெர்சியன், ஜெர்மன், ப்ரெஞ்ச்
இருக்கிறதான்னு பார்க்கணும். அண்மையில் இறந்த
மெய்ர்காப்ர், ... என்ன சொல்கின்றனர்?

நா. கணேசன்

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை - ஆழ்வார் etc.,

கன்னி - கன்று (< கல்- (Cf. கரு) ) என நினைக்கிறேன்.
கன்னி மதில் என்றால் என்ன? இங்கே, கன்னி < கல் ‘stone'?

References:
http://groups.google.com/group/mintamil/msg/8eab0ee797c9bb29
http://groups.google.com/group/mintamil/msg/8292941887c5b64a

DEV RAJ

unread,
Dec 5, 2011, 1:35:43 PM12/5/11
to மின்தமிழ்
"கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ்நூல்"
கன்னி - அழிவற்றது எனும் பொருளில் .

>>>> கன்னி மதில் என்றால் என்ன? இங்கே, கன்னி < கல் ‘stone'? <<<<

*கன்னிநன்மா* மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

கன்னி - அழிவில்லாததாய்
நல் - விலக்ஷணமாய்
மா - பெரிதான

(அண்ணன் ஸ்வாமி உரை)

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1025

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை - சாச்வதமான (அழிவற்ற) மதில்களாலே
சூழப்பட்ட திருக்கண்ண
மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய்

http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4605

புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
*கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினான் ஆவி அழிந்தான் அறவுயிர்த்து
நெஞ்சினான் எல்லாம் நினைந்து.
(நள வெண்பா)


*கன்னி இள வாழை கனி ஈவ, கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள, தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள, போதா,
அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட.

(கம்பர்)

*கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய - தேவாரம்
கன்னிக் கிளி - இளங்கிளி (இது ஆண் கிளியாகவும் இருக்கலாம்)


கன்னி எனும் விசேடணம் மொழி, மதிள், பெண் வண்டு,
வாழை மரம், கிளி அனைத்துக்கும் பொருந்துவதைப் பார்க்கும்போது
virginity யைக் குறிப்பதுபோல் தோன்றவில்லை.
கன்னி - இளமை, அழிவின்மை இரண்டையும்
குறிப்பது.

இது வடமொழி 'கன்னி'யுடன் சேர்ந்து குழம்பிப்போய் விட்டது.

கலி - ஒரே சொல் தமிழிலும் உண்டு; வடமொழியிலும்
உண்டு, வெவ்வேறு பொருள்களில்.
அதே போன்றது இது.


இதே பெயர் தமிழில் பெண்பாலரைக் குறிக்கும்போது கட்டாயம் அது
(கந்யா எனும்) வடமொழியின் திரிபாகிறது என்று
பொருள் கொண்டால் குழப்பம் இல்லை.


கன்னி, 4. (p.) Youthfulness, tenderness, juvenility, இளமை. (p. 270)
Unfading, imperishable, eternal youth, freshness, vigor, evergreen,
அழிவில்லாமை.

(வின்ஸ்லோ அகராதி)

முதல் முயற்சியைக் கன்னி முயற்சி என்பது maiden effortன்
தமிழாக்கம். கன்னி ஐயப்பன் இப்பகுப்பில் வருகிறார்

தேவ்

> quoted fromhttp://dakshinatya.blogspot.com/2010/08/parpola.html

N. Ganesan

unread,
Dec 5, 2011, 3:12:09 PM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 7:27 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> கன்று மெலிந்து கன்னட-துளு குடும்பங்களில்
> கந்த- என்று ஆண் குழந்தைகளைச் சொல்லிக்
> கேட்டுள்ளேன்.

கையில் ரத்தம் கன்னிவிட்டால் (கன்றிவிட்டால்)
கந்திவிட்டது என்கிறோம்.

சிறிதாய் (கல்-/கரு) இருப்பது முற்றிப்
பழுக்கின் கனி.

A Jaina poem (SuulaamaNi) with Perumazaip pulavar comm.:

899.

கன்னி மூதெயில் சூழ்கடி காவினுட்
கன்னி தாதைகண் ணார்நக ரிஞ்சியுட்
கன்னி மார்பலர் காக்குங் கடையதோர்
கன்னி மாநகர் கன்னிக் கியற்றினார்.


(இ - ள்.) கன்னி மூதெயில் சூழ் கடி காவினுள் - அழிவில்லாத பழைதாகிய
மதிலாற் சூழப்பட்ட மணமிக்க - அப்பூம்பொழிலின்கண், கன்னி தாதை கண் ஆர்நகர்
இஞ்சியுள் - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய இடமகன்ற அரண்மனை
மதிலின் அகத்தே, கன்னிமார் பலர் காக்கும் கடையது - கன்னியராகிய காவல்
மகளிர்
பலரால் பாதுகாத்தலையுடைய தலைவாயிலையுடைத்தாகிய, ஓர் கன்னிமாநகர் - ஒரு
கன்னிமாடம், கன்னிக்கு இயற்றினார் - சுயம்பிரபைக்கு இயற்றினார்கள், (எ -
று.)

கன்னிமூதெயில் என்றார் ஒருவராலும் ஒருகாலத்தும் தாக்கப்படாத பழைய
திண்மதிலென்றற்கு. அம் மதிலினூடே, கன்னிக்குக் கன்னிமாடம் கண்டனர், என்க.

NG

N. Ganesan

unread,
Dec 5, 2011, 3:35:40 PM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 7:27 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

>
> சிலப்பதிகாரம்:
> திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக்
> கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
> கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
> மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.
>
> மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
> கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
> கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
> மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.
>
> My question to JLC: what is "kanni" here? One meaning seems to be
> kanni = vaiyai, the river of the Pandya country. Compare with the
> occurrence of Gangai in the earlier verse. Looks extolling Kaveri
> vs. Ganges, Vaikai rivers.

Kanni, a river. I think kan2n2i = Vaiyai. see:

3010. அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
*கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி* மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

where does Kann2n2i come from? fr. Meenakshi as the "daughter" of
Pandyas.

எந்தையித் திருக்கூத் தென்று மிந்நிலை நின்றியா வர்க்கும்*
பந்தவெம் பாச நீங்கப் பரிந்தருள்+ செய்தி யென்னச்
*செந்தமிழ்க் கன்னி நாடு* செய்தமா தவப்பே றெய்தத்
தந்தன மென்றான் வேதந் தலைதடு மாற நின்றான்.

NG

N. Ganesan

unread,
Dec 5, 2011, 4:07:10 PM12/5/11
to மின்தமிழ்

On Dec 5, 10:35 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>இதே பெயர் தமிழில் பெண்பாலரைக் குறிக்கும்போது கட்டாயம் அது
>(கந்யா எனும்) வடமொழியின் திரிபாகிறது என்று
>பொருள் கொண்டால் குழப்பம் இல்லை.

I am not sure if kanyA in Sanskrit is not from Dravidian.
what is the kuzappam that you see when people take kanyA
to be ultimately of Dravidian?

N. Ganesan

Hari Krishnan

unread,
Dec 5, 2011, 9:45:07 PM12/5/11
to mint...@googlegroups.com


2011/12/6 DEV RAJ <rde...@gmail.com>

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை - சாச்வதமான (அழிவற்ற) மதில்களாலே
சூழப்பட்ட திருக்கண்ண
மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய்

In my personal opinion கன்னிமதில் should be looked at from the Defence point of view.  When the frontiers are fortified enough to withstand any aggressive ingress, we call it Impenetrable and Impregnable.  கன்னிமதில் has a similar import, IMHO.

--
அன்புடன்,
ஹரிகி.

DEV RAJ

unread,
Dec 5, 2011, 10:06:37 PM12/5/11
to மின்தமிழ்
Impenetrable and Impregnable - தாக்கி அழிக்கவொண்ணாத, அழிவில்லாத


தேவ்

DEV RAJ

unread,
Dec 5, 2011, 10:21:46 PM12/5/11
to மின்தமிழ்
There is absolutety no 'kuzappam', Ganesh ji.
You 've liberty to take all words on earth
to be ultimately of Dravidian.

கலிகன்றி - மங்கை மன்னரின் பெயர்
இதில் உள்ள கலிக்குத் தமிழ் வழியில் பொருள் கூறுங்கள்


dev

N. Ganesan

unread,
Dec 6, 2011, 3:17:51 AM12/6/11
to மின்தமிழ்
On Dec 5, 9:21 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> There is absolutety no 'kuzappam', Ganesh ji.
> You 've liberty to take all words on earth
> to be ultimately of Dravidian.
>

Are you saying I am claiming Sumerian, Korean, English
as descended from Tamil?

Looking at the early instances of kan2n2i in Tamil literature,
it does not appear that the Tamil word, kan2n2i seems
to be borrowed from Sanskrit. In fact, kan- in Sanskrit
with meanings, "little, small" may be from Dravdiian.

On Kan2n2i Tamil = azivillAta Tamil, Kan2n2i matil = azivillAta matil.
These are commenatries by Annan Swami, UVS, ...
It just means "unconconquered or unconsummated" Tamil language or
wall. i.e, unpenetrated, hence virgin, Tamil, wall etc.,

--------

But kan2n2ittamil, given her status as centamiz which is the Tamil
spoken around Madurai - the Pandya realm, may refer to Pandyan
country Tamil. Kan2n2i Naadu is obviously Meenakshi country,
even recoreded by Greek ambassadors to N. India some 2300 years ago.

we say kan2RiviTTatu as kandiviTTatu. In Tulu, Kannada, a male child
is kanda, cognate with Tamil kannu/kanRu. kavEra kan2n2i in
Manimekalai
= kavEra's "daughter". Similarly, Kumbamuni kan2n2i is Tamil
"Agastya's
daughter". kanni has to do with kannu in Tamil.

will check on kan- root in Sanskrit. well, some day.

N. Ganesan

Vinodh Rajan

unread,
Dec 6, 2011, 10:10:50 AM12/6/11
to mint...@googlegroups.com
//will check on kan- root in Sanskrit. well, some day.//

FYI


Etymology

From Proto-Indo-European *ken- (new, fresh), whence also कनीन (kanī́na, young, youthful). Cognates include Latin re-cēns (recent; fresh; young) and Ancient Greek καινός (kainós, new).


--------------------


Please don't say even the Greek & Latin Cognates are borrowing from Dravidian.


I am not even sure.. how can you make an assertion, without even considering the alternatives. 


N. Ganesan

unread,
Dec 6, 2011, 10:14:24 AM12/6/11
to மின்தமிழ்
On Dec 6, 9:10 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> //will check on kan- root in Sanskrit. well, some day.//
>
> FYI
>
> http://en.wiktionary.org/wiki/%E0%A4%95%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%AF%E0...
>
> Etymology
>
> From Proto-Indo-European <http://en.wiktionary.org/wiki/Proto-Indo-European>
>  **ken-<http://en.wiktionary.org/w/index.php?title=Appendix:Proto-Indo-Europe...>
> * (“new, fresh”), whence also कनीन<http://en.wiktionary.org/wiki/%E0%A4%95%E0%A4%A8%E0%A5%80%E0%A4%A8#Sa...>
>  (kanī́na, “young, youthful”). Cognates include Latin re-cēns<http://en.wiktionary.org/wiki/recens#Latin>
>  (“recent; fresh; young”) and Ancient Greek καινός<http://en.wiktionary.org/wiki/%CE%BA%CE%B1%CE%B9%CE%BD%CF%8C%CF%82#An...>

>  (kainós, “new”).
>
> --------------------
>
> Please don't say even the Greek & Latin Cognates are borrowing from
> Dravidian.
>
> I am not even sure.. how can you make an assertion, without even
> considering the alternatives.
>

As I said, I will check.

Obviously, Tamil kanni, kannu, kani, ... do not come from Latin or
Greek.

N. Ganesan

> V

N. Ganesan

unread,
Dec 6, 2011, 10:30:19 AM12/6/11
to மின்தமிழ்

On Dec 6, 9:10 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:

>  **ken-<http://en.wiktionary.org/w/index.php?title=Appendix:Proto-Indo-Europe...>
> * (“new, fresh”), whence also

I don't know if kanni (Tamil) is PIE *ken. I checked in a Russian
database:
PIE ken does not seem to have anything with the Tamil usage of
kan2n2i,
and Sanskrit usage is quite close to Tamil.

Proto-IE: *gʷen-, *gʷnā-
Nostratic etymology: Nostratic etymology
Meaning: woman, wife
Tokharian: A śäṃ, B śana (PT *śänā) 'woman, wife' (Adams 621)
Old Indian: gnā́ f. `a divine female'; jáni-, jánī f. `woman, wife'
Avestan: gǝnā, ɣnā 'Frau, Weib', ǰani-, ǰą̄ni- 'Weib'
Other Iranian: NPers zan
Armenian: kēn, pl. kanai-kh `Gattin', coll. kanani `Frauen'
Old Greek: günǟ́ f. `Weib, Frau', böot. banā́ `id.' (Corinn.), pl.
banē̂kes Hsch. (? < *gʷanai̯k-)
Slavic: *ženā́
Baltic: *gen-ā̂ f.
Germanic: *kwin-ōn-, *kun-ōn- f.; *kwēn-i- f., *kwēn-ō f.
Celtic: *gu̯enā, gen. gu̯nā-s, pl. gen. *gu̯nōm > OIr ben, gen. mn̄a,
pl. gen. ban; ban-: ban-chū `weibl. Hund'; Cymr ben-yw `weiblich',
Corn ben-en `sponsa'
Albanian: zónjë, pl. -a 'lady'
Russ. meaning: женщина, жена

N. Ganesan

N. Ganesan

unread,
Dec 6, 2011, 10:33:35 AM12/6/11
to மின்தமிழ்

On Dec 6, 9:10 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:

> From Proto-Indo-European *ken- (“new, fresh”),

Is this true? If so, what German, French, Russian, Persian, Sanskrit
words from *ken giving rise to meanings: "new, fresh"

Thanks
N. Ganesan

DEV RAJ

unread,
Dec 6, 2011, 12:07:07 PM12/6/11
to மின்தமிழ்
ஆச்சு, இனிமே கன்னி எல்லாக் குழுமத்திலயும்
கவர்ச்சி காட்ட ஆரமிச்சிடுவா

தேவ்

செல்வன்

unread,
Dec 6, 2011, 12:54:58 PM12/6/11
to mint...@googlegroups.com


2011/12/6 N. Ganesan <naa.g...@gmail.com>

Is this true? If so, what German, French, Russian, Persian, Sanskrit
words from *ken giving rise to meanings: "new, fresh"


Cain - beautiful, fair (Welsh)
--
செல்வன்

தாயுடன் தந்தையின் பாதம் என்றும் தலை வணங்காதவன்
நாள் தவறாமல் கோவிலில் சென்று என்ன காண்பான்?
நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ
?





N. Ganesan

unread,
Dec 6, 2011, 1:18:09 PM12/6/11
to மின்தமிழ்

On Dec 6, 9:54 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/12/6 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > Is this true? If so, what German, French, Russian, Persian, Sanskrit
> > words from *ken giving rise to meanings: "new, fresh"
>
> Cain - beautiful, fair (Welsh)

what does this PIE root have to do with Tamil kanni?

> --
> செல்வன்

செல்வன்

unread,
Dec 6, 2011, 1:26:57 PM12/6/11
to mint...@googlegroups.com


2011/12/6 N. Ganesan <naa.g...@gmail.com>

what does this PIE root have to do with Tamil kanni?


Nothing. That was not the question that I answered.

I answered this.


If so, what German, French, Russian, Persian, Sanskrit
> > words from *ken giving rise to meanings: "new, fresh"

N. Ganesan

unread,
Jan 16, 2012, 9:02:42 AM1/16/12
to மின்தமிழ்
On Dec 6 2011, 9:07 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> ஆச்சு, இனிமேகன்னிஎல்லாக் குழுமத்திலயும்
> கவர்ச்சி காட்ட ஆரமிச்சிடுவா
>
> தேவ்
>

தேவ் சார்,

லெக்சிகனில்:
கனுப்பிடி kaṉu-p-piṭi
, n. < கன்னி +. See கன்னிப்பிடி.

கனுப்பொங்கல் kaṉu-p-poṅkal
, n. < id. +. See கன்னிப்பொங்கல்.

கனு என்பது கன்னியின் தெலுங்கு வடிவமா?

கணேசன்

-----------

தினமலர்ச் செய்தி:
> கனுப் பொங்கல்: காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம். தலைப்பைப்
> பார்த்ததும் எங்கே நடக்கிறது அப்படி ஒரு கல்யாணம் என்று கேட்கத்
> தோன்றும். பொங்கலுக்கு மறுநாள் கனுப்பிடி வைத்தல் எனும் ஒரு சம்பிரதாயம்
> சிலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலையில் எழுந்து பெண்கள், மூத்த
> பெண்களிடம் மஞ்சள் கிழங்கைத் தந்து, அதனால் நெற்றியில் தீற்றச் சொல்வர்.
> பின்னர் சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம்
> உள்ளிட்ட ஐந்து அல்லது ஏழுவகை சாதங்களை சிறு சிறு உருண்டைகளாக மஞ்சள்
> இலை, தாமரை இலையில் வைக்கின்றனர். அப்போது, காக்கா பிடி வைச்சேன்.
> குருவிப்பிடி வைச்சேன். காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் கல்யாணம்!
> காக்கை கூட்டம் பிரிந்தாலும் எங்க கூட்டம் பிரியக்கூடாது;
> குருவிக்கூட்டம் பிரிந்தாலும் கூடப்பிறந்தவர்கள் பிரியக்கூடாது என்ற
> வாசகத்தை மந்திரம்போல் சொல்வர். கனுப்பிடி வைத்த பின்னரே நீராடுவர்.
> இப்படிக் கனு வைப்பதால், குடும்ப ஒற்றுமை சிறக்கும்; சகோதரர்களின்
> ஆயுளும் ஆரோக்கியமும் நீடிக்கும் என்பது ஐதிகம்.
>

DEV RAJ

unread,
Jan 16, 2012, 12:10:07 PM1/16/12
to மின்தமிழ்
> கனுப்பிடி kaṉu-p-piṭi
> , n. < கன்னி +. See கன்னிப்பிடி.

எப்போதும் நேர நெருக்கடியில் இருக்கும் ஐயா
எப்படியோ கன்னித் தமிழ்த் தொண்டுக்கு
நேரம் ஒதுக்கி விடுகிறார்.

கனுப்பிடிக்கும் கன்னிக்கும் தொடர்பில்லை.
எல்லா வயதுப் பெண்டிரும், கணவனை
இழந்தோரும், உடன் பிறந்தோர் இல்லாதவரும்
கனுப்பிடி வைக்க வேண்டும்.

அப்பழக்கம் விடாமல் இருக்க வேண்டும் என்பதற்கான
ஏற்பாடாக இருக்க வேண்டும்.

தநுர் மாசம் முழுவதும் ஏதேதோ விவாதங்கள்;
அது முடிந்த பின்னராவது நாச்சியார் விஷயமாக
ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதினேன்


தேவ்

N. Ganesan

unread,
Jan 16, 2012, 12:25:25 PM1/16/12
to மின்தமிழ்

On Jan 16, 9:10 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > கனுப்பிடி kaṉu-p-piṭi
> > , n. < கன்னி +. See கன்னிப்பிடி.
>

Madras Lexicon entry.

May be wrong? I don't know.

~ ng

N. Ganesan

unread,
Jan 16, 2012, 8:48:40 PM1/16/12
to மின்தமிழ்

On Jan 16, 9:10 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > கனுப்பிடி kaṉu-p-piṭi
> > , n. < கன்னி +. See கன்னிப்பிடி.
>
> எப்போதும் நேர நெருக்கடியில் இருக்கும் ஐயா
> எப்படியோ கன்னித் தமிழ்த் தொண்டுக்கு
> நேரம் ஒதுக்கி விடுகிறார்.
>
> கனுப்பிடிக்கும் கன்னிக்கும் தொடர்பில்லை.
> எல்லா வயதுப் பெண்டிரும், கணவனை
> இழந்தோரும், உடன் பிறந்தோர் இல்லாதவரும்
> கனுப்பிடி வைக்க வேண்டும்.
>

லெக்சிகன்:

கன்னிப்பிடி kaṉṉi-p-piṭi
, n. < கன்னி +. Ball of coloured food thrown to feed crows by women
praying for the welfare of their brothers on the day following makara-
caṅkirānti; சங்கி ராந்திக்கு அடுத்தநாள் பெண்கள் தம் உடன்பிறந்தாரு டைய
ஆக்கங்கருதிக் காகங்களுக்கு இடும் சித்திரான்ன பலி.

-----------

கல்-/கன்- small, little.
இது தமிழிலும், வடமொழியிலும் உள்ள பொருள்.
கல்தாழை - சிறுதாழை, கல்+து = கன்று.

கன்னிப்பிடி/கனுப்பிடி - காக்கைக்கு இடும் சிறுபலி.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages